McDonald's: '40 ஆண்டுகளாக எங்களுடன்' - இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ. 35 லட்சம் பரிசளித்த நிர்வாகம்
அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald's) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கன் சிங் என்ற இந்திய வம்சாவளி நபர், கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து மெக்டொனால்ட்ஸில் பணியாற்றி வருகிறார். இவருடைய இந்த நீண்ட கால சேவையைப் பாராட்டி அந்த உணவக நிர்வாகம் அவருக்கு ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரின் 40 ஆண்டு கால உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் 40,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 35.5 லட்சம் ரூபாய்) வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது. McDonalds பர்கன் சிங் தனது தந்தையுடன் இணைந்து மெக்டொனால்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் மேஜைகளைச் சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது மற்றும் சமையலறையில் உதவிகள் செய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். அதன்பின்னர் வேலையின் மீது அதிக கவனம் செலுத்தி, கடையின் அனைத்து செயல்பாடுகளையும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில மாதங்களிலேயே அவரது திறமையைப் பார்த்து நிர்வாகம் அவருக்கு 'ஸ்விங் மேனேஜர்' (Swing Manager) என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கிறது. இந்த உணவகத்தின் உரிமையாளரான லின்சே வாலன் இது குறித்து கூறுகையில், பர்கன் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டார். அவர் தனது தந்தையுடன் இங்கே வேலைக்குச் சேர்ந்தார். இன்று நான் நான்கு மெக்டொனால்ட்ஸ் கிளைகளை நிர்வகித்து வருகிறேன். அதில் பர்கன் ஒரு முக்கிய தூணாக இருக்கிறார் என்று பெருமிதமாகக் கூறியிருக்கிறார். வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan
`புது ருசி, புது அனுபவம்' - சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' - என்ன விலை தெரியுமா?
உலகம் முழுவதும் காபி பிரியர்கள் விதவிதமான சுவைகளில் காபி குடித்திருப்பார்கள்., ஆனால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை காபி, கேட்பவர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பீஜிங்கில் 'கரப்பான் பூச்சி காஃபி' (Cockroach Coffee) என்ற காஃபி விற்பனைக்கு வந்துள்ளது. பொதுவாக காபியின் மீது சாக்லேட் பவுடர் அல்லது கிரீம் தூவி அலங்கரிப்பார்கள். ஆனால், பீஜிங்கில் உள்ள ஒரு பிரபலமான கடையில் (Insect Museum) விற்கப்படும் இந்த காஃபியில், கரப்பான் பூச்சி தூவப்படுகிறது. கேட்பதற்கே விசித்திரமாக இருக்கும் இந்த காபியின் விலை ஒரு கப்புக்கு 45 யுவான் (இந்திய மதிப்பில் இது சுமார் 520 ரூபாய்) ஆகும்.. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' இதை குடித்த வாடிக்கையாளர்கள் இதன் சுவை குறித்து கூறுகையில் இது வழக்கமான காஃபி சுவையில் இல்லாமல், கருகிய வாசனையுடனும், லேசான புளிப்பு சுவையுடனும் இருக்கிறது, என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த கடையின் ஊழியர் ஒருவர் கூறுகையில் நாங்கள் ஒரு பூச்சி அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறோம். எனவே எங்கள் தீம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு உணவு வகைகளை வழங்க நினைத்தோம். அதனால் தான் இந்த கரப்பான் பூச்சி காஃபியை அறிமுகம் செய்தோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். கரப்பான் பூச்சிகள் என்றாலே நோய்களை பரப்பக்கூடியவை என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால், இந்த காபியில் பயன்படுத்தப்படும் பூச்சிகள் உண்பதற்கேற்ற வகையில் பிரத்யேகமாக வளர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுவதாக கடையின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் - இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

30 C