நெற்செய்கையை தயார்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
தேசியத் தேவையாகக் கருதி, அநுராதபுரம் மாவட்டத்தில் உடனடியாகப் பெரும்போக நெற்செய்கையைத் தொடங்குவதற்கு தயாராகுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து நேற்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், பயிர்ச் சேதங்களுக்காக நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இதனை உரியவர்களுக்கு மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் […]
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி ; விசாரணை தீவிரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சியை பொது சுகாதார ஆய்வாளர்கள் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனர். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பேரிடர் மேலாண்மை மையத்தின் ஹாட்லைனில் (1926) பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த இறைச்சி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட கால்நடை பண்ணை பொது சுகாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, இறைச்சி இருப்பு சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார […]
வங்காள விரிகுடாவில் புதிதாக உருவான காற்றுச் சுழற்சி ; யாழ் பல்கலைக்கழக நிபுணர் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி வானிலை எதிர்வுகூறலொன்றை விடுத்து, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் […]
சென்னை மாநகராட்சியில் திமுகவின் மெகா ஊழல்? - குற்றம் சாட்டும் கராத்தே தியாகராஜன்
லண்டனில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழன்
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நபர் ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லண்டனிலுள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த 32 வயதான ஜெயந்தன் இராமச்சந்திரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி […]
கேட்டி பெர்ரி ஜஸ்டின் ட்ரூடோவுடன் இன்ஸ்டாகிராமில் இணைந்தனர்
பாடகி கேட்டி பெர்ரி மற்றும் முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜப்பான் பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதை அடுத்து, இருவரும் அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளனர். ஒரே படத்தில் பெர்ரியும் ட்ரூடோவும் செல்ஃபி எடுக்க சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கன்னங்கள் தொடுகின்றன. மற்றொரு படத்தில்இந்த ஜோடி சுஷியை (உணவு) பார்ப்பதைக் காட்டுகிறது. பெர்ரி அல்லது ட்ரூடோ இருவருமே தங்கள் உறவு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இருவரும் ஒன்றாக இருக்கும் பல படங்கள் பல மாதங்களாக ஊகங்களாக வளர்ந்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெர்ரியின் இசை நிகழ்ச்சியில் ட்ரூடோ கலந்து கொண்டது, பாப் நட்சத்திரத்துடனான காதல் பற்றிய வதந்திகளைத் தூண்டியது.
பாரிஸ் லூவ்ரே நீர் கசிவு நூற்றுக்கணக்கான வரலாற்று புத்தகங்களை சேதப்படுத்தியது
பிரான்சின் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களின் ஒரு பெரிய தொகுப்பு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட நீர் கசிவின் விளைவாக சேதமடைந்ததை உறுதிப்படுத்தினர். இந்தக் கசிவு எகிப்திய தொல்பொருள் துறை அமைந்துள்ள அருங்காட்சியகத்தின் மோலியன் பிரிவைப் பாதித்தது. நவம்பர் 26 அன்று கண்டுபிடிக்கப்பட்ட கசிவினால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் 300 முதல் 400 படைப்புகள் சேதமடைந்துள்ளதாக துணை நிர்வாகி பிரான்சிஸ் ஸ்டீன்பாக் கூறினார். வரலாற்று புத்தகங்களை மிகவும் பயனுள்ளவை ஆனால் எந்த வகையிலும் தனித்துவமானவை அல்ல என்று ஸ்டீன்பாக் விவரித்தார். இந்த சேதத்தால் எந்த பாரம்பரிய கலைப்பொருட்களும் பாதிக்கப்படவில்லை என்று ஸ்டீன்பாக் கூறினார். இந்த கட்டத்தில் இந்த சேகரிப்புகளில் ஈடுசெய்ய முடியாத மற்றும் உறுதியான இழப்புகள் எதுவும் இல்லை என்று மேலும் கூறினார். சேதமடைந்த புத்தகங்கள் உலர்த்தப்பட்டு, மீட்டெடுக்க ஒரு புத்தகக் கட்டுபவரிடம் அனுப்பப்பட்டு, பின்னர் அலமாரிகளுக்குத் திரும்ப அனுப்பப்படும் என்று ஸ்டெய்ன்பாக் கூறினார். சனிக்கிழமை சிறப்பு ஆன்லைன் இதழான La Tribune de l'Art இல் வெளியிடப்பட்ட சம்பவம் குறித்த ஒரு கட்டுரையில் அந்தக் கூற்றுக்கள் நேரடியாக மறுக்கப்பட்டன . சில புத்தகப் பிணைப்புகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும், கட்டிட மேம்பாடுகள் மற்றும் சேகரிப்பைப் பாதுகாப்பதற்கான பிற நடவடிக்கைகளுக்காக எகிப்தியத் துறையின் பலமுறை கோரிக்கைகளை அருங்காட்சியக நிர்வாகிகள் புறக்கணித்ததாகவும் அந்தக் கட்டுரை மேலும் குற்றம் சாட்டியது.
கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக, தனது தாய் இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலக சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இது குறித்து, மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (வயது: 46) என்பவரிடம் சதீஷ் பலமுறை கேட்டும், அவர் இழுத்தடித்து வாரிசு சான்றிதழ் வழங்காமல் இருந்து வந்துள்ளார். லஞ்சம் வாங்கி கைதான பிரபு ( 46) சதீஷ் காரணம் கேட்டபோது, சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3000 லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சதீஷ் இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய மூவாயிரம் ரூபாய் நோட்டுகளை சதீஷிடம் கொடுத்தனர். அதை அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சதீஷ் வழங்கினார். அப்போது, மூவாயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் தருணத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிரபுவை கையும் களவுமாக பிடித்தனர். வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஒருவர் ரூ.3000 லஞ்சம் கேட்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவர்கள் விடுதலை
நைஜீரியாவில் கடந்த மாதம் ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 100 பள்ளி மாணவர்களை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் இணை கல்வி உறைவிடப் பள்ளியில் இருந்து நவம்பர் 21 அன்று துப்பாக்கி ஏந்தியவர்களால் 315 மாணவர்களும் ஊழியர்களும் கடத்தப்பட்டதாக நைஜீரியா கிறிஸ்தவ சங்கம் (CAN) தெரிவித்துள்ளது . அடுத்த சில மணிநேரங்களில் ஐம்பது மாணவர்கள் தப்பித்து வந்தனர். இன்னும் சிறைபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் 165 மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. விடுவிக்கப்பட்ட 100 பள்ளி மாணவர்களும் தலைநகர் அபுஜாவை அடைந்துவிட்டதாக ஐ.நா. வட்டாரம் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. அவர்கள் திங்கட்கிழமை நைஜர் மாநிலத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் திருப்பி அனுப்பப்பட்டதை ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சண்டே டேர் AFP இடம் உறுதிப்படுத்தினார். 100 குழந்தைகளின் விடுதலை குறித்து ஒளிபரப்பாளர் சேனல்ஸ் டெலிவிஷன் உட்பட உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்த விடுதலை இராணுவ பலத்தின் விளைவாக ஏற்பட்டதா அல்லது பேச்சுவார்த்தையின் விளைவாக ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எந்தக் குழு பொறுப்பு என்பதும் தெரியவில்லை. குழந்தைகள் விடுதலை குறித்து தங்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று நைஜர் மாநில அதிகாரிகளும், கேன்சஸ் தேசிய பாதுகாப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன. நைஜீரிய அரசாங்கமும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
Digestion: ஜீரணப் பிரச்னை; வராமல் தடுக்க மருத்துவர் கு.சிவராமன் கம்ப்ளீட் வழிகாட்டல்!
''சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள். செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்'' என்கிற சித்த மருத்துவர் சிவராமன், ஜீரணத்தை சீராக்க வழிமுறைகளையும் சொல்கிறார். Digestion * ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு. * காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும். Digestion * மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும். * அதிக காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும். * ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது. * சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். * அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. Digestion * எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும். * புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும். * காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது. * துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம். * வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம். அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். Digestion * காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம். * மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும். * இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும். Digestion * கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும். Health: வேக வேகமாக சாப்பிட்டா ஆயுள் குறையுமா? - டாக்டர் விளக்கம்! * சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும். * சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற உதவுபவை. * தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்! Stomach Health: இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க... எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது!
Surya 47: சூர்யா, நஸ்ரின், நஸ்லென் - படத்தின் பூஜை க்ளிக்ஸ் | Photo Album
kasi tamil sangamam - அரசியலா அக்கறையா? | Unsung Hero of Bhopal Gas Tragedy | Digital Arrest
பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு
பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை முறியடித்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசிராபாத் பகுதியில் தண்டவாளத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை (ஐஇடி) அடையாளம் தெரியாதவர்கள் வைத்ததாக டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த சட்ட அமலாக்க முகமைகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் வெடிக்கும் சாதனத்தை அவர்கள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதற்கிடையில், பெஷாவரில் இருந்து குவெட்டா செல்லும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் […]
38 நோயாளிகளிடம் அத்துமீறிய பிரித்தானிய மருத்துவர்; அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தகவல்
பிரித்தானியாவில் மருத்துவராக பணியாற்றிவந்த ஒருவர், 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமைச் சேர்ந்த நத்தானியேல் ஸ்பென்சர் (38) என்னும் மருத்துவர், 2017 முதல் 2021வரையிலான காலகட்டத்தில், 13 வயதுக்கு குறைவான பிள்ளைகள் முதல் 38 நோயாளிகளிடம் அத்துமீறியுள்ளார். அவர் மீது, பாலியல் தாக்குதல், வன்புணர்வுக் குற்றச்சாட்டுகள், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகளிடம் அத்துமீறியது உட்பட 45 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் மருத்துவராக பணி புரிய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள […]
வெள்ளத்தால் சிதைந்து போன குடும்பத்துக்கு எருமைமாட்டால் வந்த மற்றுமொரு பேரிடி
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டில் இருந்து பொருட்களை சேகரிக்க முயன்றபோது நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை எருமை மாடு தாக்கியதில் உயிரிழதுள்ளார். 30 ஆம் திகதி, தனது வீட்டிற்கு அருகில் எருமைமாடு தாக்கியதில் தெஹியட்டகண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மனம்பிடிய மகந்தோட்டையைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். சமீபத்தில் தனது வீடு […]
டொலருக்கு பை-பை –மீண்டும் BRICS நாணய வதந்தி., கியோசாக்கி எச்சரிக்கை
அமெரிக்க எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ராபர்ட் கியோசாக்கி (Robert Kiyosaki) மீண்டும் அமெரிக்க டொலர் குறித்து அபாய மணி அடித்துள்ளார். BRICS நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தங்கத்தை ஆதாரமாகக் கொண்டு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தும் என்கிற வதந்தி மீண்டும் கிளம்பியுள்ள நிலையில், டொலர் வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய இழப்பை சந்திப்பார்கள் என அவர் எச்சரித்துள்ளார். BRICS நாணய வதந்தி கியோசாக்கி, “BRICS நாடுகள் ‘Unit’ எனப்படும் தங்க ஆதார நாணயத்தை அறிவித்துள்ளன. இதனால் […]
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரா? ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை வைக்கும் எந்திரமா?-பாஜக கேள்வி
எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தி ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும் எந்திரமா என்று பாஜக உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி உள்ளனா்.
கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்
கொல்லத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசமாகின. கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள அஷ்டமுடி ஏரியில் நங்கூரமிட்டிருந்த மீன்பிடி படகுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மேலும் பரவாமல் இருக்க உள்ளூர் மக்களும் தீயணைப்புப் படையினரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதற்கட்ட தகவலின்படி, சுமார் 10 படகுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று […]
வங்கி அதிகாரிக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; உயிரை பறித்த உலக்கை
பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வந்தார். குடும்ப தகராறு குடும்ப தகராறு அதிகரித்தபோது, மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் […]
யார் இந்த பீட்டர் எல்பெர்ஸ்? இண்டிகோ ஏர்லைன்ஸில் இவருடைய பங்களிப்பு என்ன?
தற்போது இண்டிகோ சந்திக்கும் வரலாறு காணாத விமான ரத்து மற்றும் தாமத நெருக்கடிக்கு, விமானிகள் பற்றாக்குறையை முன்கூட்டியே திட்டமிடாததே காரணம். இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டொனால்ட் டிரம்ப் பெயரில் சாலை! எந்த மாநிலத்தில் தெரியுமா?
இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் சாலை பெயரிடப்பட உள்ளது. இது எந்த மாநிலத்தில் என்று விரிவாக காண்போம்.
நாடு கடத்தல் சட்டம் என்றால் என்ன? சட்டவிரோதமான குடியேற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன?
இந்த மசோதாவின் கீழ், விதிகளை மீறி இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த குடியேற்ற பணியகத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இருக்கும், மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்
16+ வயதினர் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்த தடை! ஆஸ்திரேலியாவில் அமலான புதிய சட்டம்
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்து புதிய சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை விரிவாக காண்போம்.
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!
மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில், வரவேற்பு வளைவுக்கு… The post மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! appeared first on Global Tamil News .
பவானி சட்டமன்றத் தொகுதி.. அதிமுக வாக்குப் பிளவு திமுகவுக்குச் சாதகமா? தவெகவின் புதிய பரிமாணம்!
பவானி தொகுதியில் நெசவுத் தொழில், காவிரி மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் என ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அ.தி.மு.க-வுக்கு புதிய சவால்களையும், பவானியில் மும்முனைப் போட்டிக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.
ராணுவ தளபதி குறித்து விமர்சனம்: இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம்
இஸ்லமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால், இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் சிறைக்குள் சென்று இம்ரான்கானை சந்தித்தார். அதன்பிறகு, சிறையில் இருந்தபடியே வெளியிட்ட அறிக்கையில் ராணுவ தளபதி அசிம் முனீரை இம்ரான்கான் கடுமையாக விமர்சித்திருந்தார். அசிம் […]
நுவரெலியாவை சுத்தப்படுத்த வந்த குழுவிற்கு இரவில் நேர்ந்த அசம்பாவிதம்
நுவரெலியா நகரத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட குழுவினரை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிதீவிர வானிலை காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகரிலுள்ள பொது இடங்களையும், நகரத்தையும் சுத்தப்படுத்துவதற்காக களுத்துறை பிரதேசத்திலிருந்து வந்த குழுவினர் பயணித்த பேருந்தே நேற்று (06) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து களுத்துறை பகுதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்னர் இவர்கள் நுவரெலியாவுக்கு சென்று சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். தமது பணி நிறைவடைந்த பிறகு, நுவரெலியாவிலிருந்து ரதெல்ல குறுக்குப்பாதை வழியாக களுத்துறை நோக்கிப் பேருந்து […]
உதவிப்பொருட்களுடன் 2 விமானங்களில் அமெரிக்க படையினர் சிறிலங்கா வருகை
சிறிலங்காவில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, உதவிப் பொருட்களுடன், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளன. இந்த விமானங்களில், அமெரிக்க விமானப்படையின் 36வது அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த விமானப்படை வீரர்களும், சிறிலங்கா வந்துள்ளனர். பேரிடர் முகாமைத்துவ மையத்தால் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு – தங்குமிடப் பொருட்கள், தண்ணீர்,
சென்னையில் மாடுகள் அட்டகாசம்.. கட்டுப்படுத்த மாநகராட்சியின் புதிய திட்டம்!
சென்னை மாநகராட்சி, சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக, புதிய கால்நடை வளர்ப்பு மையங்களில் மாடுகளைப் பராமரிக்க தன்னார்வலர்களையும் தொண்டு நிறுவனங்களையும் அழைத்துள்ளது.
பிரித்தானியாவில் வாடகைக்கு கணவர்கள்? எழுந்த சர்ச்சை.. உண்மை இதுதான்
பிரித்தானியாவில் Husband 4 Hire என்ற சேவை வாடகைக்கு கணவர்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வைரலாகியுள்ளது. தனிப்பட்ட உறவுக்காக வாடகைக்கு உலகின் சில நாடுகளில் பலதார மணம் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், லாட்வியா மற்றும் பிரித்தானியாவில் வாடகைக்கு விடப்படும் கணவன் என்ற சேவை உள்ளது. உண்மையில் இது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகும். தனிப்பட்ட உறவுக்காக துணையை வாடகைக்கு எடுப்பதாக இந்த சேவையை பிற நாடுகளில் தவறாக புரிந்துகொள்கின்றனர். அதாவது, வீட்டுப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைக்குதான் […]
மலையக தமிழ் உறவுகளிற்கு நிதி உதவ புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் ஆள்ளிவீசிவருகின்றன.ஆனால் நிஜயத்தில் உண்மை எவ்வாறு இருக்கின்றது. இந்த 2 ரூபாய் நாணயத்தின் கீழ் ஒரு மலையக தமிழ் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டுள்ளது, அவளை தோண்டி எடுத்து ஒரு கண்ணியமான அடக்கம் செய்ய யாரும் இல்லை. அவளுடைய குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் வந்து அவளைப் பார்க்கிறார்கள். நவலப்பிட்டியில் உள்ள அதே பகுதியில் ஒரு குழந்தை மற்றும் ஒரு கர்ப்பிணித் தாய் உட்பட 13 உயிர்கள் பலியாகின. தோண்டி எடுக்கப்பட்ட சில உடல்கள் துணியால் சுற்றப்பட்டு ஆழமற்ற கல்லறைகளில் புதைக்கப்பட்டன. 200 ஆண்டுகளாக நமது பொருளாதாரத்தை தங்கள் கைகளால் பிடித்துக் கொண்ட மக்களின் நிலை இதுதான். மலையக சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நிலமற்ற நபருக்கும் பாதுகாப்பான இடங்களில் நிலம் மற்றும் வீட்டுவசதி வழங்கப்படும் வரை நாம் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடாதுஎன பதிவிட்டுள்ளார் களப்போராளியொருவர்.
கோவா தீ விபத்தில் 25 பேர் பலி.. இதுவரை 4 ஊழியர்கள் கைது.. கோவா முதல்வர் தகவல்!
கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாகவே பெரும்பாலானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் வடக்கில் கன மழை எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா - இது மிக வலுவான ஈரப்பதன் கொண்ட கீழைக் காற்றுக்களுடன் இணைந்துள்ளது. ஏற்கனவே இலங்கையின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று காணப்படுகிறது. இந்தக் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்காக நகர்ந்து இலங்கைக்கு தெற்காக தெற்கு வங்காள விரிகுடா பகுதியை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைத்து நிலம் தன்னுடைய நிரம்பல் நிலையை எட்டியுள்ளது. எனவே அந்த பிரதேசங்களில் தொடர்ச்சியாக 50 மி.மீ. க்கு மேற்பட்ட மழை கிடைத்தால் அப்பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே மேற்குறிப்பிட்ட (09.12.2025 முதல் 13.12.2025) தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். அத்தோடு மலையகத்தின் சில பகுதிகளில் இக் கனமழை நிலச்சரிவு நிகழ்வுகளைத் தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அன்புக்குரிய இலங்கை மக்கள் அனைவரும் எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை கனமழை மற்றும் அதனோடு இணைந்த மண்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். துறைசார் அதிகாரிகள் இது தொடர்பாக ஆராய்ந்து உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் மக்களை விழிப்பூட்டுவது சிறந்தது. குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாண மக்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தை சற்று குறைவாகப் பேணுவது சிறந்தது. அத்தோடு எதிர்வரும் 15.12.2025 அன்று மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க விமானப்படை மீண்டும் இலங்கையில்?
இறுதி யுத்தகாலத்தில் இலங்கைக்கு உதவிய இமொரிக்க விமானப்படை மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளது. இலங்கையில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால பொருட்களை - தங்குமிடம் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவி, உணவு மற்றும் மருத்துவ உதவி - கொண்டு செல்வதற்கு உதவியாக அமெரிக்கா விமானப்படையின் C-130J Super Hercules விமானங்கள் மற்றும் விமானப்படை குழுவினர் இன்று (07) இலங்கை வருகை தந்துள்ளனர். இவர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து செயற்படவுள்ளனர்என தெரிவித்துள்ளார் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜுலி சங்.
யாழில் திடீர் பணக்காரர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த விசேட அதிரடிப் படை
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். தேடுதல் அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனொரு கட்டமாக குறித்த நபரின் […]
வெளிநாட்டில் ஜெலென்ஸ்கிக்கு உயிர் பயம் காட்டிய ட்ரோன்கள்: தீவிர விசாரணை முன்னெடுப்பு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானம் டப்ளினில் தரையிறங்கியதும், திடீரென்று ட்ரோன்கள் வட்டமிட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கை சமீபத்திய மாதங்களில் விமான நிலையங்கள் மற்றும் மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் திடீரென்று வட்டமிடுவது ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. இந்த ட்ரோன் செயல்பாடுகளுக்கு பின்னால் ரஷ்யாவின் நடவடிக்கை இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளும், ஜோ பைடன் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் […]
ஆசியாவில் கண்டத்தில் மிகச்சிறிய நாடு.. அதுவும் இந்தியாவில் - எங்கு இருக்கு தெரியுமா?
ஆசியாவில் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் மிகச்சிறிய நாடு எது தெரியுமா? அந்த குட்டி எங்குள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இண்டிகோ சேவை பாதிப்பு.. இதுவரை ரூ.610 கோடி REFUND.. விரைவில் சீராகும் சேவை!
இண்டிகோ விமான நிறுவனம், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பயணிகளின் உடமைகளை ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராமர் கோவிலுக்கு மார்க்கெட் இல்ல..’’ இப்போது முருகனை பயன்படுத்தி அரசியல் - பாஜகவை சாடிய சீமான்!
ராமர் தொடர்பான விவாதங்கள் குறைந்து வரும் நிலையில், இப்போது முருகன் வழிபாட்டை அரசியல் நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்
NATO நீர்பரப்பில் புடினின் கோஸ்ட் கப்பல் நுழைந்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான “shadow fleet” எனப்படும் மறைமுக எண்ணெய் கப்பல்களில் ஒன்றான Kairos என்ற மிகப்பெரிய டாங்கர், கருங்கடலில் கட்டுப்பாடின்றி மிதந்து, NATO நீர்பரப்பில் நுழைந்தது. இந்த கப்பல், கடந்த நவம்பர் 29-ஆம் திகதி துருக்கி கடற்கரைக்கு அருகில், உக்ரைன் பயன்படுத்திய Sea Baby drone தாக்குதலுக்கு உள்ளானது. 1,49,000 டன் எடையுடைய, 899 அடி நீளமுள்ள இந்த கப்பல், ரஷ்யா எண்ணெய் தடைகளை […]
பிளவுபட்ட அதிமுகவை சரிசெய்ய பாஜக தேவை! டிடிவி தினகரன் சொன்ன அந்த வார்த்தை...
தவெக தலைவர் விஜய் தலைமையில் வலுவான கூட்டணி தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்ப்பார்ப்பு
நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (7) காலை பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பிற இடங்களில், பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று திணைக்களம் கணித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும். இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடைய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கைவரிசையை காட்டிய இளைஞன் கைது
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க மாவத்தையில் வசிக்கும் 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த 32 வெளிநாட்டுப் புறாக்கள் கடந்த ஒக்டோபர் […]
அணையா விளக்கும் மீட்டும் உடைப்பு
யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது. இந்நிலையில், குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்பின் அணையா விளக்கு தூபியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைதினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது. இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். தலைசிறந்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர் 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சர் பதவி இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ,ஊடகவியலாளராகவும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும்பணியாற்றினார். இராசதுரை […]
தீடீரென சந்தித்த சங்கும் வீடும்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், சி.ரவீந்திரா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கையில் டிட்வா புயல் பாதிப்பு.. ஆபரேஷன் சாகர் பந்து.. இந்திய ராணுவத்தில் 1,250 பேருக்கு சிகிச்சை!
இலங்கையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் உதவி செய்து வருகிறது. கள மருத்துவமனை ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்து உள்ளது.
அணையா விளக்கு மீண்டும் உடைத்தெறியப்பட்டது
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை அணையா விளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது. குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்பின் அணையா விளக்கு தூபி அன்றைய தினமே மீண்டும் நிறுவப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி விஷமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.
யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு –இருவர் ஆபத்தான நிலையில்!
யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்! யாழ். பண்ணை கடலில்… The post யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்! appeared first on Global Tamil News .
யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு - இருவர் ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் , மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். நான்கு இளைஞர்களையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பள்ளி,கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய கொடூரன்; போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்த காவல்துறை
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 22 வயதான பிரவீன். கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்த இவன் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்திருக்கிறான். Rep image இந்த நிலையில், 18 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாகச் சொல்லி கர்ப்பமடையச்செய்திருக்கிறான். 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணின் வற்புறுத்தலின் பேரில் வீட்டிற்குத் தெரியாமல் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறான். இந்தநிலையில் தான் இவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் பரிசோதனை மேற்கொள்ள செய்ததில் பள்ளி சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கைதான பிரவீன் ஊட்டியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அன்றைய தினமே சிறுமிக்கு பிரசவமும் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரவீனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஏர்போர்ட்-கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் என்ன ஆச்சு? ஒப்புதல் கிடைக்க காத்திருப்பா?
சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் நிலை என்ன என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. அதை விரிவாக காண்போம்.
வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,120 கோடி சொத்து முடக்கம்
புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்தது. பின்னர் இந்த முதலீடு வாராக் கடன்களாக மாறின. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூலமாக அனில் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனங்களுக்கு வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அனில் அம்பானியின் 18 சொத்துக்களை அமலாக்கத் துறை தற்போது முடக்கியது. இவற்றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். […]
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான பைனல் வாய்ப்பு மிகவும் கடினமாக இருக்கும்.
‘டித்வா’புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! !
‘டித்வா’ புயல் அனர்த்தத்தின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக, அமெரிக்காவின் வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J… The post ‘டித்வா’ புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! ! appeared first on Global Tamil News .
``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு
இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அதிலும், நியூசிலாந்திடம் 3-0 எனவும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 எனவும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. அணித் தேர்வில் கம்பீர் அதிகமாக தலையிடுவதாலும், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஐ.பி.எல் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வதாலும், பேட்டிங்கோ பவுலிங்கோ அந்தந்தப் பிரிவின் நிபுணர்களைக் (ஸ்பெஷலிஸ்ட் ப்ளேயர்களை) தேர்வு செய்யாமல் ஆல்-ரௌண்டர்களைத் தேர்வு செய்வதாலும்தான் சொந்த மண்ணில் இவ்வாறு மோசமாக டெஸ்ட் தொடர்களை இழக்க நேர்கிறது என கம்பீருக்கு மீது விமர்சனங்கள் குவிந்தன. கவுதம் கம்பீர் - அஜித் அகர்கார் இத்தகைய விமர்சனங்களுக்கிடையிலும் டெஸ்ட் தோல்விகளுக்கு, “சாம்பியன்ஸ் டிரோபியும், ஆசியக் கோப்பையும் வென்றதும் இதே கம்பீர்தான்” என சம்பந்தமே இல்லாமல் வைட் பால் தொடர்களை ஒப்பிட்டார் கம்பீர். அவர் சொன்னதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த இரண்டு தொடர்களும் துபாயில் நடந்தவை. இவ்வாறான சூழலில்தான் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், “சொந்த மண்ணில் நமது டெஸ்ட் அணி இவ்வளவு பலவீனமாக இருப்பதை நான் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ரெட் பால் (Red Ball) ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் இதுதான் நடக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா ஒரு ரெட் பால் ஃபார்மட் ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பார்த் ஜிண்டால் இந்த நிலையில், நேற்று தென்னாப்பிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற கையோடு, டெல்லி அணியின் இணை உரிமையாளரைப் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார் கம்பீர். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “முடிவுகள் (டெஸ்ட் தொடரில்) எங்களுக்கு சாதகமாக வராததால் நிறைய பேச்சுகள் வந்தன. ஆனால் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் இல்லை (கில்); இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் பேட்டிங் செய்யவில்லை. இதைப் பற்றி யாரும் பேசவில்லை.” `என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் எந்த சாக்குபோக்கும் கூறாததால், உண்மையை யாரும் பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. அணி ஒரு மாற்றத்தில் (Transition) இருக்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஃபார்ம் பேட்ஸ்மேனான, 7 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தவரான கேப்டனை இழந்தால் முடிவுகள் கடினமாத்தான் இருக்கும். India Cricket Team Captain Shubman Gill ஏனெனில் ரெட் பால் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லை. யாரும் அதைப் பற்றி பேசவில்லை. பிட்ச் பற்றி என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், கிரிக்கெட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களெல்லாம் சில விஷயங்களைச் சொன்னார்கள். IND vs SA: கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல - ஏபிடி சொல்லும் காரணம் என்ன? ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார். இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் நம் வரம்புக்குள் வர எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கம்பீர் - Gautam Gambhir கம்பீரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் வெறும் 124 ரன்கள் டார்கெட்டை அடிக்கக் கூட 7 போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த கேப்டன்தான் வேண்டுமா? அவர் மட்டும் இந்திய அணியில் வீரரா மற்றவர்கள் எல்லாம் வெறுமனே அணியில் இருக்கிறார்களா?' என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. முன்னதாக, 2018-ல் கொல்கத்தா அணி கம்பீரை ஏலத்தில் விட்டபோது பார்த் ஜிண்டாலின் டெல்லி அணி ரூ. 2.80 கோடிக்கு எடுத்து அணியின் கேப்டனாக்கியது. ஆனால், கம்பீர் தலைமையில் டெல்லி அணி மோசமாக ஆடியதால் பாதியிலேயே தொடரிலிருந்து விலகியதோடு தனது சம்பளத்தையும் கம்பீர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா இவ்வாறு மோசமாகத் தோல்வியடையும்போது கேள்வியே எழுப்பக்கூடாது என்பது என்று கம்பீர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?
இலங்கை தமிழ் அரசுக் கட்சி –ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் […]
லோக்சபா கேள்வி: தமிழகத்தில் இருந்து வெளிநாடு சென்றோர் விவரம்! மத்திய அரசு விளக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றவர்கள் விபரம் குறித்து தமிழக எம்.பி. மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்; திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக கலைஞர் நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண். மு.க.ஸ்டாலின் பாசக்காரர்களான மதுரைக்காரர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாமதுரைக்கு வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில்தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், கடந்த கால தி.மு.க. ஆட்சிகளில் மதுரைக்காக நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். தி.மு.க. அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மதுரையை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நிகழ்ச்சிதான் இது. ஒரு லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியும், 2 இலட்சத்து 58 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். இதுவரை நாம் நடத்தி இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அரசு விழா இந்த விழாதான். அமைச்சர் மூர்த்தியின் பிரம்மாண்ட ஏற்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்; வியக்கிறேன். இந்த அரசு விருது விழாவை சித்திரை திருவிழாபோல் ஆக்கியுள்ளார். தன் துறைகள் மூலம் தமிழ்நாட்டு கருவூலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தந்து நல்ல பெயர் பெற்ற மூர்த்தி, இன்றைக்கு இது அரசு விழாவா அல்லது மாநாடா என்று சொல்லக்கூடிய வகையில் மதுரை மக்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அதேபோல், இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆற்றலும், அறிவும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்; சிறந்த இறைப்பற்றாளர். அதே நேரத்தில், கடவுளின் பெயரில் வெறுப்பை விதைக்கக் கூடியவர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் சரியாகப் பயன்படுத்தி பதிலடி கொடுப்பவர். அவருக்கும் பாராட்டுக்கள். மதுரை விழாவில் கடந்த கால அவல ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஒட்டுமொத்த இந்தியாவும் - ஏன், உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முற்போக்கான, முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களை கடந்த நான்கு ஆண்டு காலங்களில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 400 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். அதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 31 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை விழாவில் நலத்திட்ட உதவி காலை உணவுத் திட்டத்தில் 59 ஆயிரத்து 394 பள்ளிக் குழந்தைகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 8 இலட்சத்து 60 ஆயிரம் நபர்களும் பயனடைந்துள்ளனர். “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் நபர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டங்களில் மூன்று இலட்சம் மாணவ–மாணவிகளும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 75 ஆயிரத்து 597 பேரும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 22 ஆயிரத்து 766 நபர்களும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் 86 ஆயிரத்து 130 பேரும் பயனடைந்துள்ளார்கள். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம். ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் 341 குழந்தைகளை பாதுகாத்துள்ளோம். மேலும், 4 ஆயிரத்து 196 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பயனாளிகள் உள்ளார்கள் என்று பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால், இந்த ஒரு நிகழ்ச்சி போதாது. ஒவ்வொரு நாளும் இத்தனை லட்சம் மக்கள் பயனடைவது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெரிச்சலிலும் ஆற்றாமையிலும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையையும் நாங்கள் முறியடிப்போம், சிதைப்போம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த பாச்சா எதுவும் பலிக்காது. மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நான் ஒரு ட்வீட் செய்திருந்தேன். மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிரூபிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு முன்பு 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல். மதுரையையும் அதைச் சுற்றி இருக்கின்ற பகுதிகளையும் நல்ல தரமான, உயர்தர வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும், என்றார். முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் பயன்படுத்திக் கொள்கிறார்.. நயினார் குற்றச்சாட்டு!
வடபழனியில் தமிழக பாஜக சார்பில் சம்பந்தி போஜனம் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு குறித்தும், தீபம் ஏற்றும் விவகாரம் குறித்தும் விமர்சித்தார்.
வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கும் அரசு! –எதிர்க்கட்சித் தலைவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை அரசு ஊக்குவிப்பதாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அப்துல் சமாத் யாகூப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பாதுகாப்பு முப்படைகளின் தலைவர் (சிடிஎஃப்) பதவி வகிக்கும் ஜெனரல் சையத் ஆசிம் முனீரின் பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளது அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ). பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் நிறுவனத் தலைவருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் […]
அன்புமணி ராமதாஸ் எடுத்த முடிவு! மாவட்ட பொறுப்புகளுக்கு 12 முக்கிய நிர்வாகிகள் நியமனம்
அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமகவில் மாவட்ட பொறுப்பாளர்களாக 12 முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம்.
வீடு முற்றுகை யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்றைய… The post வீடு முற்றுகை! appeared first on Global Tamil News .
இண்டிகோ நிறுவன அதிகாரிக்கு Show Cause Notice.. விமான சேவை பாதிப்பால் நடவடிக்கை!
இண்டிகோ விமான சேவை தொடர்ந்து ரத்தாகி வருகிறது. இதனால் DGCA, இண்டிகோ அதிகாரிக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி, 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு உள்ளது.
தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்!
TWEES Scheme: பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கும் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.12.25)… The post வீட்டில் சங்கு! appeared first on Global Tamil News .
புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி
video link- https://fromsmash.com/Gm1ujAO_G~-dt நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் அணுசரனையுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முதற்கட்டமாக அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உலருணவுப் பொருட்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை மருதமுனை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபையின் […]
வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய… The post வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு! appeared first on Global Tamil News .
உயிரைப் பறித்த உடற்பயிற்சி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் 55 வயதான நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்ற நபர் கடந்த மாதம் 1 ஆம் திகதி பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார். […]
வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை!
வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியது.… The post வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை! appeared first on Global Tamil News .
பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் கைப்பற்றப்பட்ட பழைய பொருட்கள் அழிப்பு
பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு இன்று (6) நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரபலமான ஒரு உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட பழுதடைந்த 144 சம்சா, 4 kg பிசைந்த மாவு, 8 kg சோறு உட்பட பல பழைய பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன. குறித்த உணவகத்தில் உணவைப் பெற்றுக் கொண்ட தாய் மற்றும் மகள் […]
சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி வேதனை!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த மழை எப்போது ?டிசம்பரில் மீண்டும் புயல் உருவாகிறதா? – ஹேமச்சந்தர் முக்கிய தகவல்
தமிழகத்தில் அடுத்ததாக எப்போது மழை பொழியும்? எந்த எந்த மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும்? அடுத்த வாரம் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதா? — இவை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பியது மின்சாரம்
video link- https://fromsmash.com/0spo3OdntH-dt அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது . மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பத்தை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பின் மீள் நிர்மாணத்தை தொடர்ந்து இன்று (06)பிற்பகல் அப்பகுதிகளுக்கான மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது. மின்சார […]
‘அ’– அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி!
‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! மலையக அரங்க வரலாற்றில் ஒரு… The post ‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! appeared first on Global Tamil News .
`பால் பவுடருக்கு பதில் க்யூப்' - ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' - என்ன சிறப்பு?
வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய 'கியூப்' வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக 'ஃபார்முலா மில்க்' பவுடர் வடிவத்தில் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்துவது சில நேரங்களில் சவாலான விஷயமாக இருக்கும். குறிப்பாக நள்ளிரவு 2 மணி அல்லது 3 மணிக்குக் குழந்தை பசியால் அழும்போது, தூக்க கலக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் சரியான அளவில் பவுடரை அளந்து, வெதுவெதுப்பான நீரில் கலக்குவது சிரமமாக இருக்கும். பல நேரங்களில் பவுடர் கீழே சிந்திவிடும் அல்லது அளவுகள் மாறிவிடும். இதனால் ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான 'மெய்தி' (Meiji), பவுடருக்குப் பதிலாகத் திட வடிவிலான 'கியூப்'களை உருவாக்கியுள்ளது. பார்ப்பதற்குச் சர்க்கரைத் துண்டுகள் போலவே இருக்கும் இவை, தண்ணீரில் போட்டவுடன் உடனடியாகக் கரைந்துவிடும் தன்மையுடையவையாக உள்ளது. milk representative image இது எப்படி வேலை செய்கிறது? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின்படி, ஒருவர் இந்த கியூப்களை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்குகிறார். ஒரு கியூப் என்பது 40 மி.லி பாலுக்குச் சமம். அதாவது ஒரு கியூபை பாட்டிலில் போட்டு, தேவையான அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஆட்டினால் போதும், பால் தயாராகிவிடும். ஸ்பூன் கணக்கு, சிந்தும் கவலை, அளவு போன்ற எந்தப் பிரச்னையும் இதில் இல்லை என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. View this post on Instagram
மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! -டிசம்பர் 9 முதல் மிகக் கனமழை வாய்ப்பு! வானிலை ஆய்வு: கிருபா இராஜரெட்ணம்,… The post மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! appeared first on Global Tamil News .
FJ என்ன அமுக்கப் பார்க்கிறார் என்ற பாரு: கேமுக்காக ஒரு பெண்ணை யூஸ் பண்றார்னு பொங்கிய ஆதிரை
பிக் பாஸ் 9 போட்டியாளரான எஃப்.ஜே. மீது சக போட்டியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஆதிரை புகார் சொன்னதை பார்த்தவர்களோ அந்த தகுதி உங்களுக்கு இல்லை என்கிறார்கள்.
உக்ரைனில் ரஷியா ட்ரோன் மழை! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தாக்குதல்!
உக்ரைனில் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் சனிக்கிழமை(டிச. 6) தாக்குதல்களைத் தொடுத்தது. வெள்ளிக்கிழமை (டிச. 5) நள்ளிரவில் தொடங்கிய ரஷியாவின் தீவிர வான் வழி தாக்குதல்கள் சனிக்கிழமை(டிச. 6) அதிகாலை வரை நீடித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களில் மக்களுக்கு ஏர் சைரன் மூலம் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷியாவிலிருந்து அனுப்பப்பட்ட 653 ட்ரோன்கள் மற்றும் 51 ஏவுகணைகளில் 585 ட்ரோன்களையும் 30 ஏவுகணைகளையும் இடைமறித்து செயலிழக்கச் செய்திருப்பதாகவும் […]
மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் கரையை கடந்து கனமழை கொடுத்தது. இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால்
அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும் –டிடிவி தினகரன்
அ.ம.மு.க., பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் த.வெ.க.வில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள்
மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் ‘தமிழ்நாடு வளர்ச்சி’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- * ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை சென்றிருந்தார். இன்று காலையில் மதுரையில் மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன்
``திருமணம் ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. ஆனால், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அன்று திருமணம் நடக்கவில்லை. அதே அன்று பலாஷ் முச்சாலுக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இன்ஸ்டா ஸ்டோரி முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின் இதன் பின், இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி இருந்தன. ஸ்டோரி இந்த நிலையில், திருமணம் நின்றது குறித்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி மந்தனா. அதில், சில வாரங்களாக, என்னை குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்போது நான் பேச வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். நான் ஒரு பிரைவெட் நபர். என்னுடைய விஷயங்களையும் அப்படி வைக்கவே நினைக்கிறேன். ஆனால், எனது திருமணம் ரத்தாகி விட்டது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன். ஸ்மிருதி மந்தனா இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள நினைக்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரையும் ஒரு விஷயம் இயக்குகிறது என்று நான் நம்புகிறேன். அப்படி எனக்கு என்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது மிக முக்கியம். எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன். கோப்பைகளை வெல்லுவேன். இது தான் என்னுடைய லட்சியம் என்று குறிப்பிட்டுள்ளார். 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
திமுக கூட்டணியில் அடிமை சாசனம்..உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் -ஆர்.பி.உதயகுமார்!
மத்தியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் திமுக கூட்டணியில் இருந்தபோது அடிமை சாசனம் செய்த வரலாற்றை உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து உள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் நிலநடுக்கம் –ரிகடர் அளவில் 7 ஆக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250
வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில்,
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்

23 C