SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

Bigg Boss Tamil 9: டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்! - 2, 3 வது இடங்கள் யாருக்கு?!

அக்டோபர் முதல் வாரத்தில் இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 9 வது சீசனின் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. சில நிமிடங்களூக்கு முன் நிறைவடைந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின் படி வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற திவ்யா கணேஷ் பிக்பாஸ் சீசன் 9 ன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்குத் தேர்வாகியிருந்த இருபது பேரில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமாவர்களாக இருந்தனர். எனவே வைல்டு கார்டு மூலம் அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேர் சில தினங்களுக்கு பிறகு நிகழ்ச்சிக்குள் சென்றனர். Bigg Boss Tamil 9 அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறினர். இன்னொரு புறம் யாரும் எதிர்பாராத அதிரடியாக சிறப்பாக விளையாடி வந்த கமருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டதும் நிகழ்ந்தது. மேலும் பணப்பெட்டி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார், டைட்டில் வெல்வார் என மக்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் இந்நிலையல் சீசனின் கிரான்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்த சபரி, விக்ரம், திவ்யா கணேஷ், அரோரோ ஆகிய நால்வருடனும விஜய் சேதுபதி கடந்த நூறு நாள் அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் நான்கு பேரில் 4வது மற்றும் 3வது இடம் பிடித்தவர்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. divya ganesh கடைசியாக மிச்சமிருந்த திவ்யா கணேஷ் மற்றும் சபரி இருவரில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இரண்டாவது இடம் பிடித்தார் சபரி. விஜய் சேதுபதி திவ்யா கணேஷ் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்த எபிசோடை நாளை, ஞாயிறு அன்று காணலாம். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் டைட்டில் வென்றிருக்கிறார். இதற்கு முன் முன் சீசன் 7 ல் வைல்டு கார்டு மூலம் சென்ற அரச்சனா டைட்டில் வென்றது நினைவிருக்கலாம்.

விகடன் 17 Jan 2026 11:15 pm

அஜித் Vs விஜய்.. எந்தெந்த திரைப்படங்களில் யாருக்கு வெற்றி? வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் சினிமாவில் நடித்த தொடங்கிய முதலிலிருந்து இவர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியாகி மோதிய திரைப்படங்களின் வெற்றி யாருக்கு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி – Draw பூவே உனக்காக vs கல்லூரி வாசல் – விஜய்...

தஸ்தர் 17 Jan 2026 8:11 pm

அஜித் குமாரை சந்தித்து பேசிய விக்னேஷ் சிவன் நயன்தாரா..வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கப் போகும் படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.ஆனால் தற்போது அஜித் கார் ரேசில் அதிகம் கவனம் செலுத்தி...

தஸ்தர் 17 Jan 2026 7:40 pm

‘ஜனநாயகன்’படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’

‘ஜனநாயகன்’ படக்குழு கோர்ட்டில் வாதம்..கெட்ட நோக்கத்துடன் தணிக்கை வாரியம்’ விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஜனவரி 9-ந்தேதி வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறுஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பு குழு தரப்​பில் உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜன​நாயகன்’ படத்தை...

தஸ்தர் 17 Jan 2026 6:51 pm

ரஜினியின் ‘தலைவர்-173’படத்தில் தனுஷ்?

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் தனுஷ்? சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடித்திருப்பதை உறுதி செய்துவிட்டார் விஜய் சேதுபதி. ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறாரோ அவர் என பேசப்பட்ட நிலையில் கவுரவத் தோற்றத்தில் வருவதாக கூறியிருக்கிறார். பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்ததும் ரசிகர்களுக்கு தனுஷ் நினைவு...

தஸ்தர் 17 Jan 2026 6:44 pm

ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்?

ஏ.ஆர்.ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு இசையமைத்தது ஏன்? வால்மீகி எழுதிய ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. மேடை நாடகம் முதல் 3டி தொழில்நுட்பம் வரை ராமாயண கதை தலைமுறைகளை கடந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவ்வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்...

தஸ்தர் 17 Jan 2026 6:06 pm

‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம் நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு...

தஸ்தர் 17 Jan 2026 6:02 pm

Soori: பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல! - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில் சூரி தந்த பதில்!

நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார். அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்திய சூரியை சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு பதில் ஒன்றைக் கொடுத்து சூரி மறுபதிவிட்டிருக்கிறார். நடிகர் சூரி அந்தப் பதிவில் அவர், தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை, அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதைத் தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல. அதைப் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும், இல்லைன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை. எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின்… — Actor Soori (@sooriofficial) January 17, 2026 இதையடுத்து சூரியை விமர்சித்துப் போட்ட பதிவைப் பதிவிட்டிருந்தவரே நீக்கி சூரியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சூரி, தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான். வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலைப் பயன்படுத்திப் பிரச்சினை உருவாக்குவது சரியானது அல்ல. அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பைக் கெடுக்கும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு. அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக் குறிப்பிட்டு ரிப்ளை கொடுத்திருக்கிறார்.

விகடன் 17 Jan 2026 4:46 pm

விஜய், அஜித், சூர்யா... இந்தாண்டிலும் வரிசை கட்டி நிற்கும் ரீரிலீஸ் படங்கள்!

விஜய்யின் 'கில்லி' ரீ ரிலிஸ், தமிழ் சினிமா ரீ ரிலிஸில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ ரிலீஸ் வரிசைகட்ட ஆரம்பித்தன. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மறுவெளியீட்டுக்கு வரிசை ரெடியாகி வருகின்றன. மௌனம் பேசியதே நூறாண்டு கால தமிழ் சினிமா எத்தனையோ டிரெண்ட்களை பார்த்திருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்த்திராத டிரெண்ட் ரீ ரிலீஸ் டிரெண்ட். ஒரு சமயத்துல திடீரென சிவாஜியின் 'வசந்த மாளிகை' வெளியாகும்.. உடனே போட்டியாக எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை திரையிடுவார்கள். இரண்டையுமே அதனதன் ரசிகர்கள் மட்டுமே பார்த்துவிட்டு கடந்திருப்பார்கள். பழைய படங்களை இந்த தலைமுறைகளும் அறிந்து கொள்ளும் விதமாக ரீரிலீஸ் படங்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் 'தெறி' அஜித்தின் 'மங்காத்தா', மாதவனின் 'தம்பி', சூர்யாவின் 'மௌனம் பேசியதே' என பல படங்கள் மறு வெளியீட்டிற்கு வரிசை கட்டுகின்றன. மாதவன் இந்த பொங்கலுக்கு விஜய்யின் 'ஜன நாயகன்' வெளியாகாததால், 'தெறி' படத்தை பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், கார்த்தி, ஜீவா படங்களும் வெளியாகவே, குறைந்த அளவிலான திரைகளே கிடைக்கும் என்பதால் 'தெறி' ரீரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர். அஜித்தின் 'மங்காத்தா' ரீரிலீஸ் பேச்சு சில வருஷங்களாகவே இருந்து வந்தது. ஆனால் சரணின் 'அட்டகாசம்' வெளியானது. இப்போது 'மங்காத்தா'வை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர். அஜித் சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடித்த 'தம்பி' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 20வது ஆண்டையொட்டி 'தம்பி'யை ரீரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். ''தம்பி'யில் இயக்குநர் சீமான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறேன். அதனால் தான் வேறொரு பரிமாணத்தை கொடுக்க முடிந்தது'' என மாதவனின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தான் சூர்யாவின் 'அஞ்சான்' படத்தை ரீரிலீஸ் செய்திருந்தனர். இந்நிலையில் அமீரின் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான 'மௌனம் பேசியதே'வையும் ரீரிலீஸ் செய்ய உள்ளனர். 20 ஆண்டுகளை கடந்து விட்ட 'மௌனம் பேசியதே' பாடல்களுக்காகவும் பெயர் பெற்றதோடு, இயக்குநராக அமீருக்கும் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படமானது. இந்த போட்டியில் வெள்ளி விழா நாயகன் ராமராஜனின் 'கரகாட்டக்காரன்' படமும் மீண்டும் திரையை தொடவிருக்கிறது. இப்போது டிஜிட்டலைஸ்டு செய்துவிட்டனர். தகுந்த நேரத்தில் படத்தை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். ராமராஜன், கனகா ரீ ரிலீஸ் படங்கள் போட்டி போடுவதால் சின்ன பட்ஜெட் படங்களின் இயக்குநர்கள் கலக்கத்தில் உள்ளனர். ''சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களில் ஒரு ஷோ மட்டுமே கொடுக்கறாங்க. அதுவும் ஆடியன்ஸுக்கு வசதி இல்லாத நேரத்தில் ஷோக்களை போடுறாங்க. ஒரு படம் நல்ல படம் என்று பெயர் எடுப்பதற்குள் அந்த படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கிடுறாங்க. இப்படியொரு நிலை இருக்கும் சூழலில், பழைய படங்களையே தேடித் தேடி திரையிட்டால், சின்ன பட்ஜெட் படங்கள் பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான். எங்க மீதும் கருணை காட்டுங்க!'' என்ற குரல்களும் வழக்கம் போல ஒலிக்கத்தான் செய்கிறது.

விகடன் 17 Jan 2026 3:02 pm

BB Tamil 9 Day 103: த்தூ.. த்தூ.. துப்பி சண்டை! - சாண்டி, கவின்; குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா!

இந்த எபிசோடில் சாண்டி + கவின் என்ட்ரி, ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. சீசன் 3-ல் நிகழ்ந்த ஜாலியான சம்பவங்கள் நினைவில் வந்து போயின.  திவாகர் அபாண்டமாக வார்த்தைகளை இறைக்கிறார் என்பது தெரிந்தும், வினோத் மற்றும் பிரவீன்ராஜ் திவாகரை provoke செய்வது தொடர்கிறது. இதன் விளைவுகள் பார்க்க ரசிக்கும்படியாக இல்லை.  BB TAMIL 9 DAY 103 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 103 ‘இன்னமும் மூன்றே நாட்கள்’ என்கிற countdown அறிவிப்பு வெளியே இருக்க, ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது.   காலையிலேயே திவாகரை ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார் வினோத். “ஹேப்பி மாட்டுப் பொங்கல். அதை குளிக்க வெச்சு கூப்பிட்டுட்டு வாங்க.. கொம்புல கட்ட ரிப்பன்லாம் ரெடியா?” என்று பிரவீன் ராஜூம் இதில் இணைந்து கொண்டார். கலையிடம் ஜாடையாக சொல்வது போல இந்தக் கிண்டல் நிகழ்ந்தது.  பொறுத்துப் பார்த்த திவாகர், வெறி கொண்ட வேங்கையாக பாய்ந்து வந்தார். திவாகரை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலையில் துண்டு போட விரும்பும் தயாரிப்பாளர்கள் இந்தக் காட்சியை அவசியம் பார்க்க வேண்டும்.  ‘புலி உறுமுது. இடி இடிக்குது’ பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக வேகமாக வந்த திவாகர், கையை ஓங்கி “மதுரைக்காரன் அடி எப்படி இருக்கும்ன்னு தெரியும்ல. அவ்ளதான் பார்த்துக்க’ என்று மிரட்ட ‘அய்யோ.. பயமா இருக்குதுப்பா’ என்கிற மாதிரி வினோத் பாவ்லா செய்தார். பிக் பாஸ் வேறு உள்ளே புகுந்து ‘திவாகர் மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று சொல்லி திவாகரின் ஆக்ஷன் மோடில் தண்ணீர் ஊற்றினார்.  மக்களைக் கூட்டி அமர வைத்தார் பிக் பாஸ். (இதற்கே எத்தனை நேரம் ஆயிற்றோ?!) நகைச்சுவை முடிந்த பிறகு ஆக்ஷன் வர வேண்டுமே? ‘முரண்பாடுகளின் தொகுப்பு’ என்று லேபிள் ஒட்டி வீடியோவை ஒலிபரப்ப ஆரம்பித்தார்.  BB TAMIL 9 DAY 103 சண்டைக் காட்சி வீடியோவின் நடுவிலேயே சண்டை! நியாயமாக இந்த வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால், ஒட்டு மொத்த சீசனின் பெரும்பாலான பகுதியை நாள் கணக்கில் ஓட்ட வேண்டும். இந்த சீசனில் அத்தனை சண்டைகள். என்றாலும் அதில் முக்கியமான ஆக்ஷன் காட்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினார்கள். நீண்ட நாள் கழித்து தலைவி பாருவின் அலப்பறையைப் பார்த்த அவரது ரசிகர்கள் கண்கலங்கி நெகிழ்ந்திருப்பார்கள்.  ‘நட்பு’ வீடியோவில் என் முகம் ஒருமுறை கூட வரவில்லை என்று கலங்கிய திவ்யாவிற்கு பெரிய ஆறுதல். ‘சண்டை’ வீடியோவில் பல முறை வந்தார். தான் சண்டையிட்ட காட்சிகளைப் பார்த்து ரம்யா வெட்கத்தில் தலைகுனிந்தார். வீட்டில் பாரு இருந்திருந்தால் இன்னமும் ரகளையாக இருந்திருக்கும்.  மக்கள் சண்டை வீடியோ வைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் ஒரு சண்டை வந்ததுதான் காமெடி. திவாகருக்கும் ரம்யாவிற்குமான ஒரு சண்டை டிவியில் ஒளிபரப்பான போது, ‘வாத்தியார்’ படத்தைப் பார்த்து கத்தும் ரசிகன் மாதிரி ‘திவாகரை அப்படியே லெஃப்ட்ல ஒண்ணு போடு ரம்யா’ என்கிற மாதிரி வினோத் குஷியாக கத்த, திவாகருக்கு கோபம் வந்து பீப் வார்த்தைகளை இறைத்தார். வினோத் பதிலுக்கு துப்புவது போல் காட்ட, அதற்கு பதிலடியாக திவாகரும் துப்ப, பாவம் சம்பந்தமேயில்லாமல் பக்கத்திலிருந்த பிரஜினின் மீது எச்சி பட்டு விட்டது. ‘த்தூ.. த்தூ..’ சண்டையில் மாட்டிக் கொண்டது பிரஜன். BB TAMIL 9 DAY 103 திவாகர் - வினோத் - த்தூ.. த்தூ.. துப்பி சண்டை வீடியோ முடிந்ததும் பிரஜின் இந்த ‘எச்சி’ சண்டையைப் பற்றி ஆவேசமாக பஞ்சாயத்து எழுப்ப திவாகருக்கும் பிரஜனுக்கும் முட்டிக் கொண்டது. “நாம இன்னிக்கு சாயந்திரம் போயிடுவோம். ஃபைனலிஸ்ட் கொண்டாட்டமா இருக்கட்டும். நாம் என்ன விதைக்கிறோமோ, அதுதான் வரும்” என்றெல்லாம் பிரஜன் உபதேசம் செய்ய ‘ஊத்தப்பம்’ காமெடி மாதிரி “அதை அவன் கிட்ட சொல்லு” என்று சுருக்கமாக எதிர்கொண்டார் திவாகர்.  பெரும்பாலான சமயங்களில் வினோத் வம்பிழுப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. திவாகர் அதற்கு ஓவர் ரியாக்ட் செய்கிறார். உக்கிரமான சண்டையின் நடுவே ‘ப்ரோ.. ஆப்பிள் ஒண்ணை அவன் கையில் கொடுத்தா கம்முன்னு இருக்கப் போறான்.. இதுக்கு ஏன் டென்ஷன் ஆவறீங்க?” என்று வினோத் சண்டையைக் கலைத்தது காமெடி.  பிரஜன் திவ்யா நட்பைப் பற்றி சான்ட்ரா பொசசிவ் ஆனாரா என்று அவர்களுக்குள் ஒரு மினி பஞ்சாயத்து ஆரம்பித்தது. “வியானாவும் ரம்யாவும் இதைப் பத்தி சொன்னாங்கள்ல..” என்று பிரஜன் ஆரம்பிக்க “ஆமாம். அவங்க சொல்லித்தான் தெரியும். வேணுமின்னா அவங்களையே கூப்பிடலாம்” என்று திவ்யா தொடர “நேரா கேட்டா ஒத்துக்க மாட்டாங்க” என்று பிரஜன் மறுக்க.. இந்தப் பஞ்சாயத்து அதற்குள் அணைந்து போனது. வாசலில் பாட்டு சத்தம் கேட்டதுதான் காரணம்.  திவ்யாவிடம் மிகவும் அனுசரணையாக பிரஜன் நடந்து கொண்டதற்கு சந்தேகப்பட்டு சான்ட்ரா வெடித்த காட்சிகளை நாமே பார்த்தோம். பிறகு ஏன் இதை மழுப்ப நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாவம் பிரஜன். சான்ட்ரா ஏற்படுத்தி வைத்திருக்கும் கறைகளை கழுவியே அவரது காலம் முடிந்து விடும் போலிருக்கிறது.  BB TAMIL 9 DAY 103 சாண்டி - கவின் என்ட்ரி - குருநாதா சிஷ்யா நாஸ்டால்ஜியா பக்தியும் தியானமும் கலந்த பாணியில் ‘குருவே சரணம்’ என்கிற பாடல் ஒலித்த போது யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘குருநாதா சரணம்’ என்று வந்த போது பிடித்து விட்டார்கள். வந்தவர் சாண்டி. தனது சிஷ்யனை நீண்ட காலம் கழித்துப் பார்க்கும் செல்லக் கோபத்தில் தோப்புக் கரணம் போட வைத்தார் பிக் பாஸ். பிறகுதான் ‘சிஷ்யா’ என்று அழைத்தார். “உங்கள் வெற்றியைப் பார்த்து பெருமை’ என்று பெருமிதம் கொண்டார்.  சபையைக் கூட்டி அமர வைத்த சாண்டியால், திவாகரின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘வாயை மூடி தொண்டைக்குள் சிரிப்பதுதான் உங்களுக்கான டாஸ்க்’ என்றாலும் அடுத்த சில நிமிடங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டார் திவாகர். “அடுத்த படத்துல வில்லனா நடிக்கறேன். அதுக்கான டிப்ஸ் நீங்கதான் தரணும்” என்று சாண்டி கிண்டலடித்ததை சீரியஸாக எடுத்துக் கொண்டு தலையாட்டினார் திவாகர்.  ‘பணப்பெட்டியை எடுத்தது யாரோட முடிவு. நல்ல விஷயம்தான். ஆனா அவசரப்பட்டுட்டியே குமாரு’ என்று வினோத்திற்கும் ஒரு கிண்டல். “என்னங்கய்யா பண்ணீங்க.. என் குருநாதனை.. கதறி எனக்கு வாய்ஸ் நோட்டு அனுப்பறாரு” என்ற சாண்டி, “நடன வடிவமைப்பாளனாக இருந்த என்னை நடிகனாக்கி அனுப்பியது பிக் பாஸ் வீடுதான். தமிழ், மலையாளம், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல நடிக்கறேன்’ என்றது சிறப்பு.  “வினோத் + திவாகர் காம்போவை மக்கள் ரசிக்க ஆரம்பிச்சாங்க.. ஆனா நீங்களே அதுல குச்சியை விட்டு கலைச்சிட்டீங்க” என்று சாண்டி சொன்னது உண்மை. சாண்டியைத் தொடர்ந்து கவின் என்ட்ரி. (எத்தனை முறை வருவாரோ?!). அவரும் அதே மாதிரியான அட்வைஸை தந்தார். “உங்க காமெடி ஒர்க்அவுட் ஆகணும்னா give and take policy இருக்கணும்” என்று சொன்னார் கவின். (நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்ட அதே விஷயம்). BB TAMIL 9 DAY 103 “நீங்க சீசன்3-ல வந்து மாட்டியிருக்கணும்.. ஒண்ணு  நான் சீக்கிரம் எலிமினேட் ஆகியிருப்பேன். உங்களைத் துரத்தியிருப்பேன்” என்று திவாகரிடம் சாண்டி சொன்னது சுவாரசியம். சாண்டியும் கவினும் இணைந்து நடிக்கப் போகின்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.  இறுதிப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், பயண வீடியோ ஆகியவற்றைக் காண்பித்து ஊக்க உரை தந்து அனுப்புவது பிக் பாஸின் வழக்கமான சடங்கு. முதல் நபராக விக்ரமிற்கு இது நிகழ்ந்தது. “உங்களுக்கு பெருமை சேர்ப்பேன். பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வருவேன்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் விக்ரம்.  இது முடிந்ததும் வீட்டிற்குள் நுழைந்து சென்டிமென்ட்டாக ஆரம்பித்து “அப்படியெல்லாம் சீனே இல்ல. மூடிட்டு படுங்கடா” என்று டிவிஸ்ட் தந்தது ஜாலியான காட்சி.  இன்னமும் இரண்டு நாள். வெற்றியாளர் யார் என்று தெரிந்து விடும். ஆனால் அந்த பரபரப்பும் ஆர்வமும் துளியும் இல்லாத சீசன் இது மட்டும்தான்.! 

விகடன் 17 Jan 2026 2:49 pm

Vaa Vaathiyaar: கிரெடிட்டை உண்மையான படைப்பாளிகளுக்குக் கொடுங்க - 'ஏஸ்'பட இயக்குநர் குற்றச்சாட்டு

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வா வாத்தியார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஏஸ்' போன்ற படங்களின் இயக்குநரான ஆறுமுகக்குமார் `வா வாத்தியார்' படம் `துக்ளக் தர்பார்' போல இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், வா வாத்தியார் படத்தில் `துக்ளக் தர்பார்' (விஜய் சேதுபதி படம்) படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. துக்ளக் தர்பார் அதற்கு முறையான கிரெடிட்டை அசல் படைப்பாளிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும். நாம் அனைவரும் நண்பர்களே என்றாலும், நேர்மை மிக முக்கியமான ஒன்று எனப் பதிவிட்டிருக்கிறார். வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி!

விகடன் 17 Jan 2026 12:25 pm

சென்சார் ரொம்ப முக்கியம்.. இயக்குனர் நலன் குமாரசாமி பேச்சு.!!

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வா வாத்தியார் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் பிறகு சென்சார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சென்சார் ரொம்ப முக்கியம் ஆனால்...

தஸ்தர் 17 Jan 2026 11:48 am

ஸ்ருதி மீனாவிடம் உதவி கேட்கும் ரோகினி, முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை காலில் க்ரிஷ் பாட்டி விழா மறுபக்கம் ரோகினி மீனாவையும் ஸ்ருதியையும் சந்தித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியிடம் மீனா ரோகிணி இங்கு வந்தது வெறும் டிரஸ் எடுக்குறதுக்காக மட்டுமல்ல ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்லுகிறார் மன்னிப்பு கேட்க வந்திருப்பார்களோ என்றும் சுத்தி கேட்க மீனா இல்லை என்று தலையாட்டிவிட்டு அமைதியாக சென்று...

தஸ்தர் 17 Jan 2026 11:29 am

Magenta – Official Teaser

Magenta – Official Teaser , Shanthnu , Anjali Nair ,Bharath Mohan , Brand Blitz Entertainment

தஸ்தர் 17 Jan 2026 11:28 am

மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம் - பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பாலிவுட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். “பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக எனக்கு செவி வழிச் செய்தி வந்தது. ஆனால், என் முகத்துக்கு நேராக எதுவும் நடக்கவில்லை. ஏ.ஆர் ரஹ்மான் நான் வேலைக்காக யாரையும் தேடிச் செல்வதில்லை. எனது வேலையில் உள்ள நேர்மை எனக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும் என்று நம்புகிறேன். பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. பாலிவுட்டில் நான் இசையமைத்ததற்கு முன்பாக எந்தத் தென்னிந்திய இசையமைப்பாளரும் இசையமைத்தது இல்லை. இளையராஜா சில படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் அதைத் தாண்டி வேறு யாரும் இசையமைக்கவில்லை. அதனால் புதிய அனுபவமாக இருந்தது. 90-களில் 'ரோஜா', 'பம்பாய்', 'தில் சே' போன்ற படங்கள் புகழ்பெற்றாலும், 'தால்' திரைப்படம்தான் வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் என்னுடைய இசையைக் கொண்டு சேர்த்தது. நான் அப்போது இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக நமக்குத் தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால், இந்தி கற்பது கடினமாக இருந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இயக்குநர் சுபாஷ் கய் என்னிடம், 'உனது இசை எனக்குப் பிடிக்கும், ஆனால் நீ இங்கே நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் நீ இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார். அதற்கு நான், 'சரி, நான் இந்தி கற்கிறேன். அதைவிட ஒரு படி மேலே சென்று, இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன்” என ஏ.ஆர். ரஹ்மான் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால் - 'சாவா' படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

விகடன் 17 Jan 2026 10:15 am

'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் அலிபாக் நகரில் 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். மும்பையின் தென்பகுதியில் இருந்து படகு மூலம் அலிபாக்கிற்குச் செல்ல முடியும். அலிபாக்கில் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் நிலத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். தற்போது நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு அலிபாக் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் அடுத்தடுத்து இருந்த 5 ஏக்கர் கொண்ட இரண்டு நிலங்களை ரூ.37.9 கோடிக்கு விராட் கோலி தம்பதி விலைக்கு வாங்கியிருக்கின்றனர். விராட் கோலி தம்பதி இதற்கான பத்திரப் பதிவு ஜனவரி 13ம் தேதி நடந்துள்ளது. இதற்கு விராட் கோலி தம்பதி முத்திரை தீர்வைக் கட்டணமாக ரூ.2.27 கோடி செலுத்தி இருக்கின்றனர். சோனாலி அமித் ரஜபுத் என்பவரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். 2022ம் ஆண்டு ஏற்கனவே இதே கிராமத்தில் 8 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை ரூ.19 கோடிக்கு விராட் கோலி தம்பதி வாங்கினர். சமீப காலமாக அலிபாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அவர்கள் அதிக அளவில் இங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். 2023ம் ஆண்டு, ஷாருக்கானின் மகளான நடிகை சுஹானா கான், அலிபாக்கில் மூன்று பிளாட்களை (2.79 ஏக்கர்) ரூ.25.5 கோடிக்கு வாங்கினார். அலிபாக்கில் தென்னந்தோப்பு, பண்ணை வீடு உட்பட ஏராளமான சொத்துகள் ஷாருக்கானுக்கு இருக்கின்றன. நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் அலிபாக்கில் அதிக முதலீடு செய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அவர்கள் எவர்ஸ்டோன் குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜக்கி என்பவரிடமிருந்து ரூ.22 கோடிக்கு அலிபாக்கில் உள்ள மாப்கான் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார்கள். இதற்கு முன்பு 2021ம் ஆண்டு அலிபாக்கில் கடற்கரையையொட்டிய 6 ஏக்கர் நிலம் ரூ.80 கோடிக்கு விற்பனையானது. கொரோனா காலத்தில் அதிகமானோர் அலிபாக்கில் நிலம் வாங்க ஆரம்பித்தனர். 34 கோடியில் பிரமாண்ட வீடு; விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினரின் ’அலிபாக் வில்லா’ பற்றி தெரியுமா?

விகடன் 17 Jan 2026 9:15 am

Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால் - 'சாவா'படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார். 'சாவா' நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும். 'சாவா' பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தைக் காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன். 'இப்படத்திற்கு நான் ஏன் தேவை?' என அதன் இயக்குநரிடம் கேட்டேன். 'நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்குத் தேவை' என்று சொன்னார் என ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்திருக்கிறார். A R Rahman: ``இந்தியாவில் VR மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம்...'' - ஏ.ஆர். ரஹ்மான்

விகடன் 17 Jan 2026 8:56 am

Netflix: 'சூர்யா 46', 'கர', 'டயங்கரம்' - களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைன்அப்; என்னென்ன படங்கள் தெரியுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2026-ல் வெளியாகும் படங்களில், எந்தெந்தப் படங்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்றிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறது. இவ்வாண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமம் நெட்பிளிக்ஸ் கைகளில்தான் இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதைப் பார்ப்போமா... Suriya 46 சூர்யா 46 & சூர்யா 47: இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான 'சூர்யா 46' படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து 'ஆவேஷம்' இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. பராசக்தி பின்னணி: Pachaiyappan Collegeன் ரியல் கெத்து இதுதான் - Hindi Impostion எதிர்ப்பு வரலாறு 'கர' & டி55: 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர' திரைப்படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியும் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து 'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55வது படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. இப்படத்தை முதலில் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியன் தயாரிப்பதாக பூஜை போடப்பட்டது. ஆனால், இப்போது இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. Dhanush - Kara மார்ஷல்: 'டாணாக்காரன்' தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் 'மார்ஷல்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. கல்யாணி ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. வா வாத்தியார் விமர்சனம்: சூப்பர்ஹீரோ வாத்தியார், 'நம்பியார்' நாயகன் கார்த்தி! ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்: 'டிக்கிலோனா' பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடிக்கும் படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. அத்தோடு ரவி மோகன் தயாரித்து இயக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். VJ Siddhu movie - Dayangaram வேல்ஸ் தயாரிக்கும் படங்கள்: வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் 'டயங்கரம்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அத்தோடு விஷ்ணு விஷால் நடித்து வரும் 'கட்டா குஸ்தி 2' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. தனுஷின் 'கர', 'டயங்கரம்', 'கட்டா குஸ்தி 2' என வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. வித் லவ்: 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் 'வித் லவ்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதைத் தாண்டி 'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் உரிமத்தையும், அர்ஜுன், அபிராமி ஆகியோர் நடிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 28வது படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?

விகடன் 17 Jan 2026 8:10 am

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS விஜய் நடிப்பில் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தை கே.வி.என். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஜனவரி 9-ந்தேதி ரிலீஸ் செய்ய அறிவித்தார்கள். ஆனால், படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காமல் இருந்ததுடன், மறு ஆய்வு குழுவுக்கு படத்தை பரிந்துரை செய்தது தணிக்கை வாரியம். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஜனநாயகன் படத்தை...

தஸ்தர் 16 Jan 2026 8:58 pm

ஹீரோவாகிறார் தேவி ஸ்ரீபிரசாத்…‘எல்லம்மா’படத்தின் மூலம் அறிமுகம்!

ஹீரோவாகிறார் தேவி ஸ்ரீபிரசாத்… ‘எல்லம்மா’ படத்தின் மூலம் அறிமுகம்! இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை தொடர்ந்து, தேவி ஸ்ரீ பிரசாத்தும் நாயகனாக அறிமுகமாகிறார். வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இதன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தேவி ஸ்ரீபிரசாத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தில் நாயகனாக நடிக்க நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா...

தஸ்தர் 16 Jan 2026 8:46 pm

அருள்நிதியின் “அருள்வான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அருள்நிதியின் “அருள்வான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ‘அருள்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி...

தஸ்தர் 16 Jan 2026 8:42 pm

கென் கருணாஸின் ‘யூத்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கென் கருணாஸின் ‘யூத்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு கருணாஸின் மகன் கென் கருணாஸின் படம் பற்றிப் பார்ப்போம்.. பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கென் கருணாஸ், சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்துக்கு ‘யூத்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு...

தஸ்தர் 16 Jan 2026 8:20 pm

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தில் நடிக்க வேண்டும்.. சிவகார்த்திகேயன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பது தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சமீபகாலமாகவே நான் ரொம்ப சீரியசான படங்களில் நடித்து விட்டேன். இதனால் அடுத்ததாக...

தஸ்தர் 16 Jan 2026 8:12 pm

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வலம் வருபவர் விஜய் சேதுபதி இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி எதுவும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ட்ரெயின் காந்தி டாக்கீஸ் அரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் அவரே தகவலை வெளியிட்டு இருந்தார். இப்படி...

தஸ்தர் 16 Jan 2026 7:54 pm

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த வருடம் தொடங்கி உங்களை முன்னிட்டு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 1. கிங் 2. ராமாயனா 3. ஜனநாயகன்...

தஸ்தர் 16 Jan 2026 5:42 pm

பராசக்தி படத்தில் நடிக்க அதர்வா வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இன்று இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று...

தஸ்தர் 16 Jan 2026 5:11 pm

`விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்'- கார்த்தி

நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை' சார்பாக ஆண்டுதோறும் உழவர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டுக்கான 'உழவர் விருதுகள் 2026'கான விழா சென்னையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு துணை நிற்கவும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களை கெளரவப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் இந்த அமைப்பு. விழாவில் இந்த அமைப்பில் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், மருத்துவர் கு. சிவராமன் உள்பட பலரும் உள்ளனர். ''சினிமாவைத் தாண்டி நெருக்கமாக ஏதேனும் ஒரு துறையில் செயல்பட வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனை எழுந்தபோது, 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் விவசாயியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகே பிறகே 'உழவன் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை தொடங்கினோம்.'' என்று கார்த்தியும் சொல்லியிருக்கிறார். இந்த விழாவில் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும், ஓவியருமான சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் என திரையுலக பிரமுகர்களும் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் சிறந்த விவசாயி விருது – கோவில்பட்டியைச் சேர்ந்த திருமதி பழனியம்மாள், சிறந்த வேளாண் பங்களிப்பு விருது – மதுரையைச் சேர்ந்த திரு. பாமயன், சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது – வேலூர் மக்கள் நலச்சந்தை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது – திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது – குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டதுடன், வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், குப்பை மேலாண்மையின் அவசியம், விவசாயத்தில் பெண்களின் பங்கு, சிறு குறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளின் தேவை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. விழாவின் ஹைலைட்டாக கார்த்தி பேசினார் “நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம். நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்று பேசியிருக்கிறார். கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து, 'சர்தார் 2', 'மார்ஷல்' ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

விகடன் 16 Jan 2026 4:31 pm

Devi Sri Prasad: ஒரு புதிய பயணம் தொடங்குகிறது - நடிகராக அறிமுகமாகும் தேவி ஶ்ரீ பிரசாத்!

தமிழ், தெலுங்கு என இத்தனை வருடங்களாக இசையில் பெரும் ஹிட்களை அடுக்கியவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத். மியூசிக் என்பதைத் தாண்டி சில படங்களில் கேமியோ செய்து நடிகர்களுடன் நடனமும் அவர் ஆடியிருக்கிறார். தற்போது முழுமையாக நடிப்பின் பக்கம் அவர் இறங்கியிருக்கிறார். Devi Sri Prasad கதாநாயகனாக அவர் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், டோலிவுட் இயக்குநர் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா (Yellamma)' படத்தில்தான் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் கமிட்டாகியிருக்கிறார். அப்படத்தின் முன்னோட்ட காணொளி இன்று வெளியாகியிருக்கிறது. நடிகராக அறிமுகமாவது குறித்து இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், தேவி தெய்வத்தின் (அவர் இசையமைப்பாளராக முதலில் அறிமுகமான படத்தின் பெயர் இது) ஆசீர்வாதத்துடன் எனது இசை அறிமுகம் தொடங்கியது. அது எனக்கு அனைவரது இதயங்களிலும் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. அது உங்கள் குடும்பத்தில் என்னை ஒருவராக ஆக்கியது. நீங்கள் மழை போல அள்ளித் தரும் அன்புக்காக எப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன். THEN.. with the Blessings of “DEVI” (Goddess), my Musical Debut started and earned me an Eternal place in all your Hearts & made me one among ur Families..❤️ Iam always Grateful to each and Everyone of you for all the Love You have been showering on me always NOW.. AGAIN..… — DEVI SRI PRASAD (@ThisIsDSP) January 15, 2026 இப்போது மீண்டும் எல்லம்மா தெய்வத்தின் (அவர் நடிகராக அறிமுகமாகும் படத்தின் பெயர்) ஆசீர்வாதத்துடன், ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் இதயங்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்கும் ஒரு தெய்வீக வாய்ப்பு. எல்லோரும் எனக்கு இன்னும் அதிக அன்பும் ஆசீர்வாதமும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது மிகவும் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. எனப் பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 16 Jan 2026 2:09 pm

BB TAMIL 9 DAY 102: தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்; என்டர்டெயினர் வினோத்! பிக் பாஸ் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடில் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை.  வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள். BB TAMIL 9 DAY 102 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 102 ‘சாப்பாடு தருவதில் ரம்யா பாரபட்சமாக நடந்து கொண்டார்’ என்கிற புகாரை வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பதிவு செய்து கொண்டிருந்தார் திவாகர். (‘இவருக்கு இதுதான் வேலை!) அதைக் கேட்டு ஓடி வந்த ரம்யா, “நான் அப்படிச் செய்யலை. நீ எப்படி வேணா வெச்சிக்கோ. வாய் இருக்குன்னு இஷ்டத்திற்கு பேசாத” என்று சீறினார்.  ஒருவரிடம் இணக்கமாக பேசி விட்டு அடுத்த கணமே எப்படி உக்கிரமாக சண்டை போட திவாகரால் முடிகிறது என்பது தெரியவில்லை. பாருவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்து அவ்வப்போது சண்டைகளை உற்பத்தி செய்து காமிராக்களுக்கு தீனி போடுகிறார். பண்டிகைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தந்த பி்க் பாஸ், பிறகு கேட்ட கேள்விதான் காமெடியானது. ‘பொங்கல் வைக்கத் தெரியும்ல?’ - “கிச்சடி செஞ்சு வெச்சிடாதீங்க” என்று கிண்டலடித்தார் வினோத். ஒருவழியாக விளம்பரப்படம் மாதிரி பொங்கல் பொங்கி வந்தது.  அடுத்த நடந்த கோலப் போட்டியின் போது ‘ஓரே கண்டிஷன், அதுல மாடு இருக்கணும்’ என்று காமெடி செய்தார் பிக் பாஸ். “ஒண்ணும் பிரச்சினையில்ல. வாட்டர் மெலன் படத்தை வரைஞ்சுட்டா போதும்” என்று வினோத் கிண்டல் செய்ய ‘காக்கா வினோத்’ என்று இறங்கினார் திவாகர்.  BB TAMIL 9 DAY 102 தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்  இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து நடந்த சண்டையும் தரக்குறைவான வார்த்தைகளும் உருவக்கேலிகளும் முகம் சுளிப்பதாக இருந்தது. தன்னை யாராவது ஒரண்டை இழுத்தால் திவாகர் அதற்கு பதிலடி தருவதில் தவறில்லை. ஆனால் மிகவும் தரம் இறங்கி தனிப்பட்ட தாக்குதலில் பேசுகிறார். அதற்கு வருந்துவதாக தெரியவில்லை.  சேது சார் அனுப்பிய பொங்கல் உணவு வந்தவுடன் மக்கள் உற்சாகமடைந்தார்கள். ‘இன்னிக்கு பண்டிகைல்ல. கவுச்சி இருக்காது’ என்றார் வினோத். உண்ட மயக்கத்தில் திவாகர் அசந்து விட “சாப்பிடற மிஷினை ஆன் பண்றான். அது ஓடிட்டே இருக்கு. அப்புறமா தூங்கப் போயிடறான்’ என்று வினோத் கிண்டலடிக்க, திவாகரிடமிருந்து பீப் செய்யப்பட்ட வார்த்தைகள் கிளம்பின.  “என்னோட கவுண்ட்டருக்கு அவங்க பயப்படறாங்க”என்று பெருமையடித்துக் கொண்டார் திவாகர். வினோத்துடன் இணைந்து கொண்டு பிரவீன்ராஜூம் திவாகரை கிண்டலடிக்க ஆரம்பித்தார். “குரங்கு வேணும் மாமா.. அதை பிடிச்சு தாங்க ஆமா” என்று திவாகரை ஜாடையாக அவர் கிண்டலடிக்க, தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினார் திவாகர். “உன் மனைவி மேல சந்தேகப்பட்ட. உன் மூஞ்சியைப் பாரு. யாரு உன் கூட இருப்பா” என்பது மாதிரியெல்லாம் திவாகர் இறங்கியது அநாகரிகம்.  திவாகர் மீது உருவக்கேலி செய்யப்படுவது உண்மைதான். அவர் அதை புகாராக எடுத்துச் செல்லலாம். அல்லது பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் அதையே பதிலடியாக தரலாம். ஆனால் ஒரு டாஸ்க்கில் நெகிழ்வாக சொல்லப்பட்ட தனிப்பட்ட தகவல்களையெல்லாம், சண்டை சமயத்தில் ஆயுதமாக பயன்படுத்துவது தரக்குறைவான செயல். இதை மிகவும் சாதாரணமாகச் செய்கிறார் திவாகர்.  BB TAMIL 9 DAY 102 பிக் பாஸ் வீட்டில் அதிகமாக  காமெடி செய்தவர் வினோத்  “நீங்க ரெண்டு பேரும் பண்றது நல்லாவேயில்ல. எங்களுக்கெல்லாம் அசௌகரியமா இருக்கு. உடனே நிறுத்துவங்க” என்று விக்ரம் கண்டித்தது சிறப்பு. கெமி உட்பட மற்றவர்களும் இதை கண்டித்தார்கள். கயிறு இழுக்கும் போட்டி அடுத்தபடியாக நடந்து ‘ஜல்லிக்கட்டு’ அணி வெற்றி பெற்றது.  பிக் பாஸ் ஒளிபரப்பிய வீடியோ. வீட்டில் நிகழ்ந்த ‘fun moments’. இதில் வினோத் அடித்த டைமிங் கமெண்ட்டுகள் ரகளையாக இருந்தன. இந்த நோக்கில் பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவராக வினோத் இருப்பார். இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சரியாக அடுத்த டாஸ்க்கை வைத்தார் பிக் பாஸ்.  ‘இந்த வீட்டில் உங்களை அதிகம் சிரிக்க வைத்த நபர் யார் என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். இதில் வினோத்திற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததில் ஆச்சாியமில்லை. சபரிக்கும் சில வாக்குகள் கிடைத்தன. அரோவின் பெயரையும் சொன்னார்கள். விக்ரமின் பெயரைச் சொன்னார் சுபிக்ஷா.  கடைசியில் எழுந்த வந்த வினோத் “வாட்டர் மெலன் இல்லாட்டி இந்த காமெடி நிகழ்ந்திருக்காது. அவர்தான் என்னை அதிகம் சிரிக்க வைத்தவர்’ என்று சொன்னது நன்று. ஆனால் திவாகரோ “நான் ஹீரோ மெட்டீரியல்ப்பா.. காமெடியன்ல சேர்க்காதீங்க” என்று வழக்கம் போல் அலப்பறை செய்தார். ‘ஒண்ணுமில்லை. இதுவே காமெடிதான்” என்று வீட்டை கலகலக்க வைத்தார் வினோத்.  ‘நான்தான் வீட்டின் முதல் போட்டியாளர்’ என்று திவாகர் அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கம். இதைப் பற்றி அரோ அடித்த கமெண்ட் “ஆமாம்.. புது வீடு கட்டும் போது முதல்ல மாட்டைத்தான் உள்ளே விடுவாங்க”.. (செமல்ல?!) பிக் பாஸ் தரும் கவுண்ட்டர்களும் நகைச்சுவை நிரம்பியவை என்று நினைவுகூர்ந்தார் பிரவீன்ராஜ்.  “ஒன்பது வருஷமா நடக்கற சீசன்ல நான் முதன்முறையா சிரிச்சது வினோத் அடிச்ச கமெண்ட்டிற்குத்தான்” என்று பிக் பாஸ் சொன்னது சிறப்பு. (தாய்லாந்து).  BB TAMIL 9 DAY 102 இரட்டையர் காமெடியர்களில் ஒருவர் கீழிறிங்குவது அவசியம் “காமெடிக்கு acceptance முக்கியம்” என்று திவாகருக்கு சபரி சொன்னது சிறப்பு. திவாகரையும் வினோத்தையும் கவுண்டமணி- செந்தில் காமெடி ஜோடிக்கு இணையாக சொல்கிறார்கள். ஒருவகையில்தான் அது சரியாக வரும்.  எந்தவொரு இரட்டையர் காமெடியாக இருந்தாலும் ஒருவர் மேலே நிற்க, இன்னொருவர் அதற்கு அடிபணிந்தால்தான் அந்த நகைச்சுவை பலனளிக்கும். கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கியதால்தான் அந்த நகைச்சுவை புகழ்பெற்றது. (எட்டி உதைப்பதெல்லாம் நகைச்சுவையா என்கிற கேள்வி வேறு டிபார்ட்மெண்ட்!). ஒரு காலத்தில் இளையராஜாவின் பாடல்களும், கவுண்டமணி - செந்தில் காமெடியும் இல்லாத படமே கிடையாது. இவை இரண்டும் இருந்தால் அந்தப் படத்தின் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் கிடைத்து விடும்.  ஆனால் ஒரு முறை செந்திலை சிலர் ஏற்றி விட்டதாகச் சொல்கிறார்கள். “நீங்கள் இருப்பதால்தான் கவுண்டமணிக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. தனியாக வந்து விடுங்கள்” என்று. செந்திலும் அது போல் வெளியே வந்தார். ஆனால் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. கவுண்டமணியோ தனி ஆவர்த்தனத்திலும் ஜொலித்தார். பிறகு செந்தில் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைந்தார் என்று ஒரு தகவல் இருக்கிறது.  BB TAMIL 9 DAY 102 ஆக, இரட்டையர் காமெடியில் ஒருவர் கேலியை ஏற்றுக் கொள்வது அவசியம். சோஷியல் மீடியா புகழ் கோபி சுதாகர் வீடியோக்களையும் பாருங்கள். ஒருவர் தவறு செய்து விட்டு விழிக்க, இன்னொருவர் கிண்டலடித்து அடிப்பார். அப்போதுதான் சிரிக்க முடியும்.  ஆனால் இந்த acceptance திவாகரிடம் இல்லை. அவர் தன்னை சூப்பர் ஸ்டாராக கற்பனை செய்து கொண்டு அந்த உலகில் வாழ்கிறார். எனவே செந்திலாக மாறுவதற்கு அவருக்கு வாய்ப்பேயில்லை.!

விகடன் 16 Jan 2026 2:05 pm

தமிழ்செல்வி கர்ப்பத்திற்கு யார் காரணம்? மூப்புதாய் சொன்ன அருள்வாக்கு –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் வெளிநாட்டில் இருந்து சிலர் பொங்கல் கொண்டாடுவதற்கு ராஜாங்கம் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். அவர்களை ராஜாங்கம் குடும்பத்தினர் அன்பாக வரவேற்று கவனித்தார்கள். பின் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ராஜாங்கம், கார்- தங்க காசுகளை பரிசாக கொடுத்தார். பின் இதை தமிழ்ச்செல்வி- சேது பெயரில் கொடுக்க சொன்னார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்தார்கள்.நடன கலைஞர்களை வீட்டிற்கு வரவைத்து ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டம் என்று ராஜாங்கம் வீடு […] The post தமிழ்செல்வி கர்ப்பத்திற்கு யார் காரணம்? மூப்புதாய் சொன்ன அருள்வாக்கு – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Jan 2026 12:42 pm

Chiranjeevi: படம் பார்த்த அந்த ஜோடி விவாகரத்து முடிவை மாற்றியிருக்கிறார்! - சிரஞ்சீவி

சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் வெங்கடேஷும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 'சங்கராந்திக்கு வஸ்துன்னம்' திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்திருந்தது. Mana Shankara Vara Prasad Garu Film படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து பேட்டியளித்திருக்கிறார்கள். அந்தப் பேட்டியில் விவாகரத்துப் பெறும் மனநிலையில் இருந்தவர்கள், இப்படத்தைப் பார்த்தப் பிறகு சேர்ந்து வாழத் தொடங்கியிருப்பதாக சிரஞ்சீவி அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சிரஞ்சீவி பேசுகையில், அனில் ரவிபுடி அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டையில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்பது உண்மைதான். படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியை தங்கள் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருக்கிறது. Chiranjeevi இப்போது அவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். படம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 16 Jan 2026 12:01 pm

கடைக்கு பாண்டியன் வைத்த பெயர் என்ன தெரியுமா? கோபத்தில் வானதி –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நீங்களும் ஒரு பெண்ணை காதலியுங்கள். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள் என்று கிண்டல் அடித்தார். சோழன், இப்ப அதற்கு மட்டும்தான் குறைச்சல் என்று புலம்பி கொண்டிருந்தார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு நிலா- சோழன் இருவரும் வந்து விட்டார்கள். அப்போது வானதி கொடுத்த கிப்ட் பார்த்து சோழன் வழக்கம் போல கிண்டல் செய்கிறார். நிலா வேண்டாம் என்று சொல்லியும் சோழன் கேட்காமல் கேலி செய்து கொண்டிருந்தார். வானதியின் முகம் மாறிவிட்டது. […] The post கடைக்கு பாண்டியன் வைத்த பெயர் என்ன தெரியுமா? கோபத்தில் வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Jan 2026 11:54 am

அழுது நாடகம் ஆடும் சிந்தாமணி, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை முத்து காப்பாற்ற, சிந்தாமணியும் ரோகிணியும் போட்ட திட்டம் நிறைவேறி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கண்டிப்பா நம்ம மனோஜ்க்கு நல்ல படிச்ச பொண்ணு அழகான பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்ல சரி உங்க இஷ்டம் என சொல்லிவிட்டு குடும்பத்தினர் சென்று விட்டார்கள்.முத்துவும் நானும் சவாரிக்கு கிளம்புறேன்பா என்று...

தஸ்தர் 16 Jan 2026 9:51 am

குடும்பத்தின் முன் அவமானப்பட்டு நிற்கும் தமிழ்செல்வி, மூப்புத்தாய் சொல்வது என்ன? சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கருப்பன், போட்டியில் தோற்றுவிட்டதாக சொல்லி தமிழ், காவியா, தனத்திடம் பணம் வாங்கினார். இதை கவனித்த தாமரை, என்ன பந்தயம் என்று கேட்டார். கருப்பன், நாங்கள் கொடுக்கும் கரும்பை தின்றுவிட்டு தண்ணீர் குடிக்கணும் என்றார். உடனே அந்த பந்தயத்திற்கு தாமரை, சித்ரா இருவரும் ஒத்து கொண்டு எல்லா கரும்பையும் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தார்கள். பின் எரிச்சல் தாங்க முடியாமல் இருவரும் கத்தினார்கள். அங்கிருந்து கருப்பன் எஸ்கேப் ஆகி விட்டார். […] The post குடும்பத்தின் முன் அவமானப்பட்டு நிற்கும் தமிழ்செல்வி, மூப்புத்தாய் சொல்வது என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 16 Jan 2026 9:10 am