SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

வெறி நாய் கடிக்கும் - ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 260

வெறி நாய்க்கடிக்கும் ஆணுறுப்புக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது என்கிற, சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் அதுபற்றி இங்கே விளக்குகிறார். ரேபிஸ் வைரஸுக்கும் ஆணுறுப்புக்கும் என்னத் தொடர்பு? பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். ’’வெறி நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசிப்போட வேண்டுமென்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி போடாதவர்கள் மரணமடையும் முன்னர் அவர்களுடைய ஆணுறுப்பில் கடுமையான விறைப்புத்தன்மை இருக்கும். இதற்கு பிரையாப்பிசம் (Priapism) என்று பெயர். பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். இவருடைய ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் இருக்கும் என்பதால், அவருடைய பெயரால் இந்தப் பிரச்னை அழைக்கப்படுகிறது. ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி நாய் கடித்திருக்கும். வளர்ப்பு நாய்தானே என்றோ அல்லது நாய்க்கு ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருக்கிறதே என்றோ, அலட்சியமாக விட்டிருப்பார்கள். இவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி, ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் இருப்பதுதான். ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கிச் சாப்பிடலாமா? - காமத்துக்கு மரியாதை - 259 ஒன்றிரண்டு ஊசி மட்டும் போட்டதோடு நிறுத்திவிட்டார். நான் ராயப்பேட்டை மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, ரோட்டில் படுத்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொத்த பேரையும் வெறி நாய் ஒன்று கடித்துவிட்டது. அந்தக் காலத்தில் நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போட வேண்டும். தினமும் மொத்தக் குடும்பத்தினரும் ஊசிப் போட்டுக்கொள்ள வருவார்கள். ஆனால், அந்த குடும்பத்தலைவன் மட்டும் ஒன்றிரண்டு ஊசி மட்டும் போட்டதோடு நிறுத்திவிட்டார். விசாரித்ததில் வேலைக்கு சென்றுவிட்டார் என்றார்கள். கடைசியில் அவர் மட்டும் அந்த குடும்பத்தில் இறந்துபோனார். இப்படி ரேபிஸ் வந்து இறப்பவர்களுக்கு, முதலில் ஆணுறுப்பில் தொடர்ந்து விறைப்புத்தன்மை இருக்கும். வளர்ப்பு நாயோ அல்லது தெரு நாயோ, எது கடித்தாலும் காலதாமதம் செய்யாமலும் அலட்சியம் செய்யாமலும், உடனே தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 2 Oct 2025 7:54 pm

Doctor Vikatan: மன அழுத்தம், மனப் பதற்றம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க டெஸ்ட் உள்ளதா?

Doctor Vikatan: சாதாரண வருத்தம் தொடங்கி, மன அழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் பிரச்னைகள் பலருக்கும் இருக்கின்றன. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவோ, குணப்படுத்தவோ மருத்துவ சிகிச்சைகள் உள்ளனவா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சுபா சார்லஸ் மன வருத்தம், மனப் பதற்றம், மனக் குழப்பம்,  பரபரப்பு என மனநலம் தொடர்பான பிரச்னைகள் பலவிதம். இவற்றை அறிகுறிகளை வைத்து மட்டும்தான் கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ் ரே, ஸ்கேன்  மாதிரி எந்தச் சோதனையிலும் கண்டுபிடிக்கவே முடியாது. நியூரோகெமிக்கல் சமநிலையின்மையே (Neurochemical Imbalance) இதற்கான முக்கிய காரணம். நியூரோகெமிக்கல் சமநிலையின்மை என்பது, நமது மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு (நியூரான்கள்) இடையே தகவல்களைக் கடத்தும் வேதிப்பொருள்களின் (Chemical Messengers) அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வைக் குறிக்கிறது. இந்த வேதிப்பொருள்களை நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (Neurotransmitters) என்று அழைக்கிறோம்.   மனதை வாட்டும் அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்னைகளை வேறுவிதமாக அணுகலாம். குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். சிரித்துக்கொண்டும், பேசிக் கொண்டும், துள்ளிக்கொண்டும் இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. ஆனால், அதைக் கட்டுப்படுத்தி, ஒரே இடத்தில் உட்கார வைத்து, பிஞ்சிலேயே மன அழுத்தத்துக்கான விதையை ஊன்றுகிறோம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் பெரியவர்களுக்கு உடற்பயிற்சி. இவற்றின் மூலம்தான் மூளையின் நியூரோகெமிக்கல் சமநிலையின்மையை சரிப்படுத்த முடியும். குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். மன அழுத்தம், ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறு: ஓர் உற்சாக பயணமே உங்களுக்கு மாமருந்து! வாழ்தல் இனிது பழங்கள் சாப்பிடுவதை எல்லோரும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். பழங்களில் 'ஃபீல் குட் ஃபேக்டர்ஸ்' எனச் சொல்லப்படுகிற செரட்டோனின் போன்ற கெமிக்கல்கள் உள்ளன. அவை மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுத்தும். மனிதனை சமூக விலங்கு என்றே சொல்கிறோம். அவனைச் சுற்றி நிறைய உறவுகளும் நட்புகளும் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் கலந்து பேசி, பழகும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  வெயில் படாத பகுதியிலேயே இருப்போருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. வெயில் வெளிச்சம் தொடர்ந்து பட்டுக்கொண்டிருந்தாலே மன அழுத்தம் பாதியாகக் குறையும். கட்டுப்படுத்த முடியாத மன அழுத்தம் என்றால் மனநல மருத்துவரை அணுகி கவுன்சலிங்கும், தேவைப்பட்டால் மருந்துகளும் எடுத்துக்கொள்ளலாம்.   உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 2 Oct 2025 9:00 am

இத்தனை நன்மைகள் செய்யுமா நீவுதல் சிகிச்சை? விளக்கும் இயற்கை மருத்துவர்!

’’வெகுஜன வழக்கில் நீவுதல் சிகிச்சையானது `மசாஜ்’ என்று அழைக்கப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே நீவுதல் சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது. மெசபடோமியர்கள் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தியிருக்கின்றனர். கிரேக்க நாட்டிலும் இந்தச் சிகிச்சை முறை பிரதானமாக இருந்துள்ளது. உடல் சோர்வைப் போக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சிகிச்சை, பிற்காலத்தில் மூட்டு மற்றும் தசைகளைப் பலப்படுத்தப் பயன்பட்டது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் நீவுதல் சிகிச்சை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்தன. இன்று உலகம் முழுவதும் 100 விதமான நீவுதல் சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன’’ என்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா. நீவுதல் சிகிச்சை நமக்குச் செய்யும் நன்மைகளை அவர் பட்டியலிடுகிறார். நீவுதல் சிகிச்சை சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். * நீவுதல் சிகிச்சை என்பது அணுக்கள் மற்றும் திசுக்களைப் புதுப்பித்து, வலி மற்றும் நோயில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. * சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்துடிப்பைச் சரி செய்யும். மூட்டு வலி, இடுப்பு வலி குணப்படுத்தும்! * என்டோர்பின் ஹார்மோன்களைச் (endorphin hormone) சுரக்கச் செய்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்; இதனால், மன அழுத்தம் குறையும். * மூட்டு வலி, இடுப்பு வலி, வாதநோய் உள்ளிட்ட மூட்டு தொடர்பான எல்லாப் பிரச்னைகளையும் இதன்மூலம் குணப்படுத்த முடியும். நீவுதல் சிகிச்சை மாதவிடாய் வலியை சரிசெய்யும்! * நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு நெஞ்சுப்பகுதியில் கொடுக்கப்படும் நீவுதல் சிகிச்சை நல்ல தீர்வைக் கொடுக்கும். * சிறுநீரகப் பிரச்னைகளை இதன்மூலம் குணப்படுத்த முடியும். உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நீரையும் தேவையற்ற உப்புச்சத்துகளை வெளியேற்றவும், மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலியைச் சரி செய்யவும் நீவுதல் சிகிச்சைப் பயன்படும். சிறப்புக் குழந்தைகளுக்கு பலன் தரும் * க்ரானியோ சேக்ரல் (cranio sacral) நீவுதல் சிகிச்சை தலைமுடி வளரவும் தண்டுவடப் பிரச்னைகளைச் சரிசெய்யவும் பயன்படுகிறது. * மூளையில் உள்ள நிணநீர் ஓட்டத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரிசெய்யும். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், ஹைபர் ஆக்டிவிட்டியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சை பலன் தரும். நீவுதல் சிகிச்சை தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். * மனித உடலில் லிம்ப் (Lymph) என்ற ஒருவகை திரவத்தை வெளியேற்றும் ஓட்டப்பாதை இருக்கும். அதுதான் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். இதற்கு லிம்பாடிக் (Lymphatic) நீவுதல் சிகிச்சை பெரிதும் உதவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கும். காசநோய், புற்றுநோய் வராமல் தடுக்கலாம்! * லிம்ப் திரவம் வெளியேறாமல் தேக்கமடைவதால் ஏற்படக்கூடியதே நெறிகட்டுதலும் வலியும். லிம்பாடிக் நீவுதல் சிகிச்சைமூலம் இதைக் குணப்படுத்தலாம். லிம்ப் திரவம் சரியாக வெளியேறாவிட்டால் நாளடைவில் காசநோய் (டி.பி), புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. ஆகவே, தொடக்க நிலையிலேயே இந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் விளைவுகளைத் தடுக்கலாம். Reflexology massage வீக்கம், சுளுக்கு, தசைப்பிடிப்பு சரிசெய்யும்! * தசைகள், திசுக்கள், மூட்டு இணைப்புகளில் வரக்கூடிய பிரச்னைகளைச் சரிசெய்ய மயோஃபேஷியல் (myofascial) நீவுதல் சிகிச்சை உதவும். இது வீக்கம், சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்றவற்றைச் சரிசெய்யும். * பொலாரிட்டி நீவுதல் சிகிச்சை (Polarity Massage) என்பது உடலுக்குச் சக்தி தரக்கூடியது. மார்பக ஆரோக்கியம்: பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? ரிஃப்ளெக்சாலஜி நீவுதல் சிகிச்சை! * கால் பாதங்கள், உள்ளங்கால்களில் முக்கியப் புள்ளிகள் உள்ளன. இவற்றைத் தூண்டும் பணிக்கு ரிஃப்ளெக்சாலஜி நீவுதல் சிகிச்சை (Reflexology massage) உதவும். இதன்மூலம் நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் சிறப்பாக இயங்கும். ரோல்ஃபிங் நீவுதல் சிகிச்சை! * தசைகளை இழுத்து, இயல்பாக்க ரோல்ஃபிங் நீவுதல் சிகிச்சை (Rolfing massage) அளிக்கப்படும். நாய், பூனை போன்ற விலங்கினங்கள் தூங்கி எழுந்ததும் கைகால்களை நெட்டி முறிக்கும். இதுவும் ஒருவகை ரோல்ஃபிங் நீவுதல் சிகிச்சை. பொதுவாக கூன் விழுதல், கைகால் பிறழ்தல், முகம் கோணலாவது போன்ற பிரச்னைகளைச் சரிசெய்ய இந்த நீவுதல் சிகிச்சை உதவும். Health: தினமும் தலைக்கு எண்ணெய் வெச்சே ஆகணுமா?

விகடன் 2 Oct 2025 7:16 am

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது? -ராஜா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இது சர்க்கரைநோய் குறித்த புரிந்துணர்வு இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரிகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு. அதுவும் அந்த நபர், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கக்கூடிய நபராக இருந்தால் இது இயல்பாக நடக்கும். நீரிழிவு பாதித்த ஒரு நபர், அதிக அளவிலும் அடிக்கடியும் சிறுநீர் கழிப்பது ஏன் என்பதை கவனிக்க வேண்டும்.  அவர் சாதாரண நபரைவிடவும் அதிக முறை சிறுநீர் கழிக்க வாய்ப்பு உண்டு. அதற்கு 'கிளைக்கோசூர்யா' (Glycosuria) என்று பெயர். உடலில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும்போது, அந்த குளுக்கோஸானது, செல்களுக்குள் உள்ள நீரை எல்லாம் வெளியே எடுத்து, அதிக அளவில் சிறுநீரை உருவாக்குவதால்தான், சர்க்கரைநோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது.  ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருக்காது. Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் காலையில் டீ உடன் பிஸ்கட் சாப்பிடலாமா? கிளைக்கோசூர்யா என்ற நிலை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் 'பாலியூரியா' (Polyuria) என்ற நிலையை உருவாக்கும்.  நீரிழிவு பாதித்த ஒருவர், தன் ரத்தச் சர்க்கரை அளவை எந்த அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பது இதில் முக்கியம்.  ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருக்காது. அப்படி கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது, சராசரியாக ஒரு நாளைக்கு 6 முறை சிறுநீர் கழிக்கும் நிலையானது, 12 முறையாக மாறலாம். இரவிலும் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கலாம். சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதேபோல சிறுநீர்ப் பையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும், அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறலாம். ஆண்களைப் பொறுத்தவரை புராஸ்டேட் பாதிப்பு இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி வெளியேறலாம். எனவே, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றுபவர்கள், அதற்கான காரணத்தை மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு, சரியான சிகிச்சையைப் பின்பற்றுவதே சரி. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

விகடன் 30 Sep 2025 9:00 am

`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' - பரிந்துரை செய்யும் நிபுணர்

''பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண் குழந்தைகளுக்கோ இப்படிச் சிறப்பு உணவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், பதின்பருவத்தை எட்டியவுடன், ஆண் குழந்தைகளுக்கான உணவையும் அம்மாக்கள் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டும்'' என்கிறார் டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார். Foods for Teenage boys உயரம், எடை - ஈடுகொடுக்கும் உணவு அடுத்த தலைமுறைக்கான உயிரணுக்களின் உற்பத்தி உடலில் ஆரம்பிக்கும் பருவத்தில், ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில் அம்மாக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் அவர்கள் திடீரென்று அதிகமாகச் சாப்பிடத் தொடங்குவார்கள். அடிக்கடி `பசி, பசி' எனச் சாப்பிடக் கேட்பார்கள். அவர்கள் பருவமடையும் வளர்ச்சியை எட்டுவதே இதற்குக் காரணம். இந்த மாற்றங்கள் 12 வயதில் தொடங்கி 18 வயதுவரை தொடரும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்கள் தோன்றும். 12 வயதில் சுமார் 40 முதல் 50 கிலோ எடையில் இருக்கும் ஆண் குழந்தைகள், அடுத்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 70 முதல் 80 கிலோ எடையை அடைந்திருப்பார்கள். உயரத்திலும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவார்கள். ஐந்து அடியில் இருந்து சுமார் ஆறு அடி உயரத்தை எட்டுவார்கள். இந்த உடல் வளர்ச்சிகளுடன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். Foods for teen age boys எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் ரத்த உருவாக்கத்துக்கு, இந்த வளர்ச்சிப் பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். சரியான ஊட்டச்சத்து கிடைக்கத் தவறினால், அவர்களின் முழுமையான வளர்ச்சி பாதிக்கப்படும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இந்தப் பருவத்தில் சத்துகள் மிகுந்த உணவுகளைக் கொடுக்கத் தவறினால் பின்னாளில் மலட்டுத்தன்மைகூட ஏற்படும். என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்? பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க 2,500 கலோரி உணவு தேவைப்படும். அதுவே விளையாட்டில் அதிகம் பங்கேற்கும் ஆண் குழந்தைகளுக்கு 3,000 - 4,000 கலோரி உணவு தேவைப்படும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின், மினரல் என அனைத்துச் சத்துகளும் சரிவிகித அளவில் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சிறுதானியங்கள் மாவுச்சத்து ஆண் குழந்தைக்குத் தேவைப்படும் எனர்ஜியை அளிக்கும் மாவுச்சத்து, அனைத்து வகை தானியங்களிலும் கிடைக்கும். அரிசி, கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கும் சாதம், ரொட்டி, அடை, தோசை, உப்புமா ஆகிய மாவுச்சத்து உணவுகளை, தினமும் மூன்று அல்லது நான்கு வேளைகளுக்குக் கொடுக்கலாம். Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா? கொழுப்புச்சத்து பதின்பருவ ஆண் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கும் ஹார்மோன் தேவைகளுக்கும், நல்ல கொழுப்புச்சத்தை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றில் இருந்து நல்ல கொழுப்பு கிடைக்கிறது. சமையலுக்கு உபயோகிக்கும் எண்ணெய், பால், தயிர் மற்றும் அசைவ உணவுகளிலும் கொழுப்புச் சத்து உள்ளது. இவற்றைக் குறிப்பிட்ட அளவில் உணவில் சேர்க்க வேண்டும். Fish food for teen age boys ’’உணவு கொடுக்கப் போறப்போ சின்னப் பசங்கள கூட்டிட்டுப் போவோம்; ஏன்னா...’’ - இது மதுரை மனிதாபிமானம்! புரதச்சத்து உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து மிகவும் முக்கியம். பதின்பருவ ஆண் குழந்தையின் எடை கூடவும், எலும்பு, தசை வளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியம். இது பருப்பு வகைகள், சுண்டல், பால், தயிர், சீஸ் (பாலாடைக்கட்டி), முட்டை,  மீன், பிற அசைவ உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் கிடைக்கிறது. தினமும் ஒரு கப் சுண்டல், ஒரு கப் பருப்பு, 300 - 500 மில்லி பால் அல்லது தயிர், இவற்றுடன் முட்டை அல்லது மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சைவம் எனில், பருப்பின் அளவை அதிகப்படுத்த வேண்டும். Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா? வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் ஆண் குழந்தையின் வளர்ச்சியை முழுமையடையச் செய்ய, பலவிதமான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அவசியம். முக்கியமாக கால்சியம், அயோடின் மற்றும் இரும்புச்சத்து. காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகளிலிருந்து இந்தச் சத்துகளைப் பெறலாம். கால்சியம் அதிகமாகக் கிடைக்க பால், தயிர், பருப்பு வகைகள், கொட்டை வகைகளை அதிகம் உணவில் சேர்க்கலாம். இரும்புச்சத்துக்கு கீரை, கொட்டை வகைகள், முட்டை மற்றும் அசைவ உணவுகளைக் கொடுக்கலாம். உணவில் சில தவறுகள்... * ஆண் குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆரோக்கிய உணவின் அவசியம் குறித்து அறியாமல் இருக்கும் அம்மாக்கள், `நூடுல்ஸ் செஞ்சு தர்றேன் சாப்பிடு', `பிரெட் வாங்கிட்டு வந்து சாப்பிடு' என்று அவர்களின் பசிக்கு நல்லுணவு கொடுப்பதிலிருந்து தவறுகிறார்கள். இதனால், உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் கிடைக்காது. மேலும், தேவையற்ற உப்பு, கொழுப்பு உடலில் சேரும். உடல்பருமன் முதல் பலவிதமான பாதிப்புகளுக்கும் ஆளாவார்கள். ஆண் குழந்தைகளுக்கு வளர்ச்சியில் இருந்து தன்னம்பிக்கை வரை இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்க வேண்டியது அவசியம். * பெரும்பாலான சிறுவர்கள் காய்கறி, பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதனால் வைட்டமின், மினரல் சத்து குறைபாட்டுக்கு ஆளாகின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். உடல்பருமன் அடைவார்கள். சோர்வாகக் காணப்படுவார்கள். கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றலும் பாதிக்கப்படும். எனவே, காய்கறிகளும் பழங்களும் மிகவும் அவசியம்.

விகடன் 30 Sep 2025 6:58 am

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா? பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் 'இல்லை' என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன. தரையில் படுப்பது நல்லதா, கெட்டதா என்பது அவரவர் வயது, உடல்நிலை, எப்படிப் படுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொறுத்து மாறுபடும். பொதுவாக, வெறும் தரையில் படுக்கும்போது, தரையின் குளிச்சியின் காரணமாக கால்கள் மரத்துப்போகும். கடினமான தரைப்பகுதி என்றால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு நரம்பு அழுத்தம் ஏற்படலாம். இதுவும் கால்களை மரத்துப்போக வைக்கும். தரை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்போது, நம் உடலில் உள்ள சூடு, தரையோடு கனெக்ட் ஆகும். அப்போதும் மரத்துப்போவது சீக்கிரமே நடக்கும். இந்தக் காரணங்களுக்காக, நீரிழிவு உள்ளோரை வெறும் தரையில் படுக்க வேண்டாம் என அறிவுறுத்துவோம். முதுகுவலி உள்ளவர்கள், ஏற்கெனவே சயாட்டிகா போன்ற பிரச்னை உள்ளவர்கள் போன்றோர் குஷன் இல்லாமல் படுக்கும்போது  அவர்களது வலி அதிகரிக்கக்கூடும். வெறும் தரையில் படுக்கும்போது கவனிக்க வேண்டியவை மரத்துப்போவது என்ற பிரச்னையை ரத்த ஓட்டம் குறைதல் என் கணக்கில் புரிந்துகொள்வதால்தான், வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகும் என்று சொல்கிறார்கள். உண்மையில், ரத்தம் சுண்டிப்போவதில்லை. ஆனால், மரத்துப்போவது நிச்சயம் நடக்கும். எனவே, எப்போதும் மெலிதான படுக்கை அல்லது கனமான போர்வையை விரித்து அதன் மேல் படுத்தால் மேற்குறிப்பிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முதுகுவலி உள்ள சிலருக்கு தரையில் படுக்கும்படி அறிவுறுத்துவோம். அப்போதும் வெறும் தரையில் படுக்காமல், இப்படி ஏதேனும் விரிப்பின் மேல்தான் படுக்கச் சொல்வோம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: கழுத்து வலி உள்ளவர்கள் தலையணை இல்லாமல் உறங்க வேண்டுமா?

விகடன் 29 Sep 2025 9:00 am

Doctor Vikatan: சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயம்; சுவைக்கா, ஆரோக்கியத்திற்கா?

Doctor Vikatan: பல வீடுகளிலும் வெங்காயம் என்பது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வெங்காயத்தில் சல்பர் தவிர வேறு சத்துகள் இருக்கின்றனவா, வெங்காயத்தைச் சுவைக்காகச் சேர்த்துக்கொள்கிறோமா அல்லது அதில் உண்மையிலேயே மருத்துவ குணங்கள் உள்ளனவா, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டில் எது பெஸ்ட்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் வெங்காயத்தை வெறும் சுவைக்காகவோ, மணத்துக்காகவோ மட்டும் சமையலில் சேர்ப்பதில்லை. அதற்கென பிரத்யேக மருத்துவக் குணங்கள் இருப்பதை மறுக்க முடியாது. வெங்காயத்தில் நார்ச்சத்து மிக அதிகம். தவிர அதில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி தன்மையானது, உடலில் புண்கள் வந்தால் ஆற்றுவதற்கு உதவும். பொட்டாசியம் சத்தும், வைட்டமின் சி சத்தும் இதில் அதிகம். ஃபோலேட் எனப்படும் இரும்புச்சத்தும் இதில் உண்டு. சின்ன வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்கும் ஊட்டச்சத்துகளில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. எந்த வெங்காயமாக இருந்தாலும் அதைச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிலுள்ள வைட்டமின் சி சத்து வீணாகிவிடும். எனவே, வெங்காயத்தை பச்சையாக சாலடாக சாப்பிடுவதுதான் சிறந்தது. எந்த வெங்காயமாக இருந்தாலும் அதைச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிலுள்ள வைட்டமின் சி சத்து வீணாகிவிடும். வெங்காயத்துக்கு ரத்தம் உறைதலைத் தடுக்கும் பிளட் தின்னிங் தன்மையும் உண்டு. வெங்காயத்தில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ், புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. புற்றுநோய் சிகிச்சையில் இருப்போருக்கு, குறிப்பாக, பேலியேட்டிவ் கேர் சிகிச்சையில் இருக்கும்போது அவர்களுக்கு வெங்காயம் சேர்த்த உணவுகள், சாலட் போன்றவை கொடுப்பது சிறந்தது. வெங்காயத்தில் உள்ள கிளிசரைடு எனப்படும் சத்தானது, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலில் பூஞ்சைத்தொற்று ஏற்படாமல் காக்கும். அதனால்தான் பொடுகு உள்ளவர்களுக்கு, இன்ஃபெக்ஷன் பாதித்தவர்களுக்கெல்லாம் வெங்காயச் சாறு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்தால், மார்பகங்கள் தளர்ந்து போகுமா?

விகடன் 27 Sep 2025 9:00 am

எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?

’’இது காய்ச்சல் காலம். வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப் போற நேரத்துல, இந்த மாதிரி காய்ச்சல் வர்றது வருஷம்தோறும் வழக்கமா நடக்குற விஷயம்தான். அதனால யாரும் பயப்படத் தேவையில்லை’’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு, தற்போது பலரையும் படுத்திக்கொண்டிருக்கும் காய்ச்சலின் அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பேசுகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவ மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா. Seasonal Fever சுவாசப்பாதை தொற்று..! ’’பருவ காலம் மாறுகிற இந்த நேரத்துல சுவாசப்பாதையில தொற்று ஏற்படுத்துற சில வைரஸ்கள் பரவ ஆரம்பிக்கும். இதனால சளி, இருமல், தும்மல், மூக்கொழுதல், மூக்கடைப்பு என்று பிரச்னைகள் வரிசைக்கட்டி வர ஆரம்பிக்கும். சுவாசப்பாதை தொற்றுங்கிறதால பள்ளிக்கூடங்கள்ல, வேலைபார்க்கிற இடங்கள்ல, கூட்டமா இருக்கிற இடங்கள்ல ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு சுலபமா பரவவும் ஆரம்பிச்சுடும். இதனால ஒரு அவுட் பிரேக் சூழல் வந்து, எல்லாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வந்த பிறகு, அப்படியே அடங்கிடும். இந்த நேரத்துல, இன்ஃப்ளுவன்சா ஏ, ஹெச்1 என்1, ஹெச்3 என்2 வைரஸ்களும் அட்டாக் பண்ண ஆரம்பிக்கும். கூடவே கொசுவால வர்ற சிக்கன் குனியா, டெங்கு மாதிரியான காய்ச்சல்களும் வர ஆரம்பிக்கும். Seasonal Fever அறிகுறிகள்..! சுவாசப்பாதை தொற்று வந்திருந்தால், காய்ச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, கழுத்துல ரெண்டு பக்கமும் நெறி கட்டுறது ஆகியவை இருக்கும். காய்ச்சல் வந்த 48 மணி நேரம் நல்லா ஓய்வு எடுக்கணும். நிறைய தண்ணி குடிக்கணும். கஞ்சி, பழச்சாறு மாதிரி நீர் ஆகாரங்கள் நிறைய எடுத்துக்கணும். காய்ச்சல் அடிக்கிறப்போ சிறுநீர் சரியா போகணும். இந்த விஷயத்துல எல்லாருமே கவனமா இருக்கணும். திடீரெனப் பரவும் காய்ச்சல்... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! எச்சரிக்கைகள்..! எச்சரிக்கைகள் என்று பார்த்தீங்கன்னா மூணு நாளைக்கு மேல விடாம காய்ச்சல் அடிச்சாலும், மூச்சுத்திணறல் இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் போயிடனும். ஏன்னா, சுவாசத்தொற்று வர்றதுனால நுரையீரல்ல நிமோனியா தொற்று ஏற்படலாம். குழந்தைகளும் சரி, வளர்ந்தவங்களும் சரி, எதுவுமே சாப்பிட முடியாம சோர்வா இருப்பாங்க. சிலருக்கு சிறுநீர் சரியா போகாது. இந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் போயிடணும். அங்கு பரிசோதனைகள் மூலம் வந்திருக்கிறது நிம்மோனியான்னு தெரிஞ்சுதுன்னா அதற்கான சிகிச்சைகளை கொடுக்க ஆரம்பிப்பாங்க. நிம்மோனியா விஷயத்துல ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை ரொம்ப கவனமா பாத்துக்கணும். முதியவர்கள்ல சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல்ல பிரச்னை இருக்கிறவங்களும் கவனமா இருக்கணும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Dengue: மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்... Do's & Don'ts..! மருத்துவர்களின் வழிகாட்டல்! காய்ச்சல் சரியானதும்... காய்ச்சல் சரியானதும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்க ஆரம்பிக்கணும். காய்கறி சூப், அசைவ சூப், பழங்கள் சாப்பிட்டு காய்ச்சலால பலவீனமான உடம்பை தேத்தணும். மத்தபடி இந்த காய்ச்சல் சம்பந்தமா யாரும் பயப்பட தேவையில்லை. இது சாதாரணமா வருஷாவருஷம் வந்து போற காய்ச்சல்தான்’’ என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

விகடன் 27 Sep 2025 6:54 am

ராமநாதபுரம்: நாய் கடித்து வாலிபர் உயிரிழப்பா? முன்னெச்சரிக்கையாக 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி

ராமநாதபுரம் அண்ணா நகர் குருவிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ பிரகாஷ் (17). இவர் ராமநாதபுரத்தில் உள்ள கறிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வேலை முடித்து வீடு திரும்பிய இவரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது. ஆனால் அதற்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ராஜ பிரகாஷ் இந்நிலையில் அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கம் ஏற்படவே ராமநாதபுரம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குத் தனி அறையில் தங்கி சிகிச்சை பெற வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர் ராமநாதபுரம் திரும்பி விட்டார். 'நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டாலும் ரேபிஸ் தொற்று ஏற்படுமா? - விளக்கும் அவசரக்கால சிகிச்சை நிபுணர் இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன் ராஜ பிரகாஷ் இறந்த நிலையில் அவரது உடலை குடும்பத்தினர் எரியூட்டினர். இதனால் நாய்க் கடிக்கு உள்ளாகி இறந்த ராஜ பிரகாஷ் ரேபிஸ் நோய் தாக்கி இறந்தாரா என்பதை சுகாதாரத் துறையினரால் உறுதி செய்ய முடியவில்லை. ராஜ பிரகாஷ் இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா நகரில் வசிக்கும் மக்களின் அச்சத்தினைப் போக்க, ராஜ பிரகாஷ் வீடு அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் 127 பேருக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. தெரு நாய்க் கடிக்கு உள்ளான வாலிபர் ரேபிஸ் நோய் தாக்கத்தினால் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மபி: உன் நாய் என் பூனையைக் கடிக்குது - ஒன்று சேர்த்து வைத்த பிராணிகளால் விவாகரத்து கோரும் தம்பதி

விகடன் 26 Sep 2025 11:49 am

``பீர்க்கங்காயும் அதன் தோலும்'' - மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!

''பார்க்க கரடு முரடாக இருந்தாலும் சுவையிலும், அது தரும் ஆரோக்கியத்திலும் பீர்க்கங்காயை அடித்துக்கொள்ள முடியாது. நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இதை வாரத்தில் மூன்று நாள்கூட சாப்பிடலாம். பீர்க்கங்காயின் தோலில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அதையும் தவிர்க்க வேண்டாம். அது துவர்ப்புத் தன்மை நிறைந்தது என்பதால், சமையலில் அப்படியே பயன்படுத்த முடியாது. துவையலாக செய்து சாப்பிடலாம்'' என்கிற டயட்டீஷியன் அம்பிகா சேகர், பீர்க்கங்காயின் மருத்துவ குணங்களையும், அதன் தோலை எப்படி துவையல் செய்வது என்பதையும் விளக்குகிறார். பீர்க்கங்காய் பலன்கள்: • பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், இதய பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட மிகவும் நல்லது. தவிர, உடலில் தாது உப்புக்களின் சமநிலையின்மை ஏற்படாமல் தடுத்து, உடலை தேவையான நீர்ச்சத்துடன் பராமரிக்கும். • இதிலுள்ள வைட்டமின் பி, சி செரிமானத்தை எளிதாக்கும். • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பீர்க்கங்காய் மிகவும் நல்லது. காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, பருப்புடன் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொடுக்கலாம். • பீர்க்கங்காயின் சுவைக்காக சிலர் அதை ஊறுகாயாகச் செய்து சாப்பிடுவதுண்டு. ஊறுகாயாகச் சாப்பிடும்போது சத்துகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றாலும்கூட, கலோரிகள் அதிகரிக்கும். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், அவர்களும் பீர்க்கங்காய்த் தோல் துவையலைச் சாப்பிடலாம். பீர்க்கங்காயும் அதன் தோலும்; மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்! • சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக இது செயல்படும் என்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் பாதித்தவர்களும், அதிலிருந்து மீண்டுகொண்டிருப்பவர்களும்கூடத் தயக்கமின்றி இதைச் சாப்பிடலாம். • கர்ப்ப காலத்தில் வாந்தி உணர்வு ஏற்படுபவர்கள், பீர்க்கங்காயைத் தவிர்ப்பது நல்லது. • சர்க்கரைநோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு, உணவில் உப்பு குறைவாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவதுண்டு. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ எனப் பழகியவர்களுக்கு, உப்பு குறைவாகச் சாப்பிடுவது அதிக சிரமத்தைக் கொடுக்கும். மனதளவில், முழுமையாகச் சாப்பிட்ட திருப்தியே அவர்களுக்கு ஏற்படாது. ஆனால், பீர்க்கங்காய்த் தோல் ரெசிபியில் இந்தப் பிரச்னை கிடையாது. காரணம், பீர்க்கங்காயின் தோல் பகுதி உப்புச்சுவை கொண்டது. அதனால், ரெசிபியில் உப்பு குறைவாகச் சேர்த்தாலும் மாற்றம் எதுவும் தெரியாது. பீர்க்கங்காய்த் தோல் துவையல் பீர்க்கங்காய்த் தோல் துவையல் தேவையானவை: பீர்க்கங்காய்த் தோல்: ஒரு கப் உளுத்தம்பருப்பு: ஒரு டேபிள்ஸ்பூன் தனியா: அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய்: 4 தேங்காய்த்துருவல்: ஒரு டீஸ்பூன் புளி: எலுமிச்சை அளவு கறிவேப்பிலை மற்றும் உப்பு : தேவையான அளவு Dates: பேரீச்சம் காய், பாய், பழம்... ஆரோக்கிய பலன்கள் என்னென்ன..? செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு, பீர்க்கங்காய்த் தோல் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கும்போதே, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். தோல் நன்கு வதங்கியதும் புளி, துருவிய தேங்காயைச் சேர்த்து அரைக்க வேண்டும். அரைக்கும்போது, குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தவும். பீர்க்கங்காய் தோல் துவையலில், பீர்க்கங்காயின் தோல் பகுதியை மட்டுமே வதக்குவதால், அதிலுள்ள அனைத்துச் சத்துகளும் அழியாமல் முழுமையாகக் கிடைக்கும். குறிப்பு பீர்க்கங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து வாங்குங்கள். அடர் பச்சை நிறத்திலுள்ள காயை வாங்குவது சிறப்பு. சில காய்களில், அடிப்பகுதி மட்டும் அடர்த்தியாக இருக்கும். அப்படியில்லாமல், காய் முழுவதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்து வாங்கவும். காயின் மேலுள்ள நரம்புகளின் நிறத்தைப் பார்த்து வாங்க வேண்டும். அது வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தாலோ, காயின் காம்புப் பகுதி வறண்டிருந்தாலோ அந்தக் காய் முற்றல் என்று அர்த்தம். அதை வாங்க வேண்டாம். பீர்க்கங்காய்த் தோலைச் சுத்தம் செய்யும்போது, கடினமான நரம்புள்ள தோல் பகுதிகளை அப்புறப்படுத்தவும். தோல் பகுதியைக் கழுவிய பிறகே சமையலுக்குப் பயன்படுத்தவும். Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும் ஒரு காய்!

விகடன் 26 Sep 2025 9:49 am

Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்தால், மார்பகங்கள் தளர்ந்து போகுமா?

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே மார்பகங்கள் பருத்துக் காணப்படும். உடல் பருமன் இருப்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். எடையைக் குறைத்தால் மார்பகங்கள் தளர்ந்துபோகும் என்பது உண்மையா? அதனால் என் தோற்றமே மாறிப்போகுமா? தளர்ச்சியைச் சரியாக்க அறுவை சிகிச்சைதான் தீர்வா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த,   ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்   ஷீபா தேவராஜ் எடைக்குறைப்பு என்பது ஒட்டுமொத்த உடல் சம்பந்தப்பட்டது. உடலில் எங்கெல்லாம் கொழுப்பு இருக்கிறதோ, எடையைக் குறைக்கும்போது அங்கெல்லாம் கொழுப்பு குறைவது இயல்பு. மார்பகங்களும் அப்படித்தான். மார்பகங்கள் என்பவை சதைப்பகுதிகளால் ஆனவை. எனவே நீங்கள் சரியான பயிற்சிகளைச் செய்து, கொழுப்பைக் குறைக்கும்போது அவற்றின் அளவும் குறையும். மார்பக அளவுகளைக் குறைக்கவோ, கூட்டவோ என பிரத்யேகப் பயிற்சி எதுவும் இல்லை. தளர்ந்துபோன மார்பகத் தசைகளை எடை நிர்வாகத்தின் மூலம் ஓரளவு சரிசெய்யலாம். முதல் வேலையாக சரியான நிபுணரின் வழிகாட்டுதலோடு எடையைக் குறைத்து, பாஸ்ச்சரை சரிசெய்து, உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றத் தொடங்கினாலே உடலளவில் உறுதியாக உணர்வீர்கள். எடையைக் குறைத்து, பாஸ்ச்சரை சரிசெய்து, உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றத் தொடங்கினாலே உடலளவில் உறுதியாக உணர்வீர்கள். எடை அதிகரிப்புக்கான காரணம் அறிந்து, அதைக் குறைப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும். உங்களுடைய உணவுப்பழக்கம் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். முடிந்தால் ஃபிட்னெஸ் பயிற்சியாளரை நேரில் அணுகி, உங்களுக்கான எடைக்குறைப்புத் திட்டத்தை அமைத்துக்கொடுக்கச் சொல்லி, இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உணவும் உடற்பயிற்சிகளும் முறைப்படுத்தப்பட்டாலே, உங்களுடைய உடலமைப்பு சரியாகும். அவசரப்பட்டு அறுவைசிகிச்சை  முடிவுகளை எடுக்காதீர்கள். அதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். மார்பகங்களைத் தளரவிடாமல் உறுதியாக வைக்கவென்றே பிரத்யேக உள்ளாடைகள் உள்ளன. அவற்றையும் முயற்சி செய்யுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?

விகடன் 26 Sep 2025 9:00 am

ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கிச் சாப்பிடலாமா? - காமத்துக்கு மரியாதை - 259

டாக்டர்கள் பரிந்துரை செய்யாமல் ஆண்மைக்கான மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாமா? அப்படிச் சாப்பிட்டால் என்ன பிரச்னை வரும்? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கி சாப்பிடலாமா? வாங்குவதும் தவறு; கொடுப்பதும் தவறு. ''ஆண்மைக்கான மாத்திரைகள் எல்லாமே 'ஷெட்யூல் ஹெச் மருந்து லிஸ்ட்டில் (schedule h drugs list) இருப்பவை. டாக்டருடைய பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் இந்த மாத்திரைகளை வாங்குவதும் தவறு; விற்பதும் தவறு. ஆனால், நம் நாட்டில் இது எதுவுமே தவறில்லை என்பதுபோல தான் நடந்துகொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் டாக்டருடைய பரிந்துரை இல்லாமல் ஷெட்யூல் ஹெச் மருந்து லிஸ்ட்டில் இருக்கிற மருந்துகளை வாங்க முயன்றால் கைது செய்துவிடுவார்கள்'' என்றவர், இந்த மாத்திரைகள் டாக்டருடைய பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றி ஓர் உதாரணத்துடன் விளக்கினார். `ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே' மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257 உதாரண சம்பவம் ''ஓர் இளைஞர். புதிதாக திருமணமானவர். அவர் நன்றாக செக்ஸ் செய்ய வேண்டும் என்று, நண்பர்களின் ஆலோசனையைக் கேட்டோ அல்லது அவராகவோ ஆண்மைக்கான மாத்திரையை வாங்குகிறார். நீண்ட நேரம் செக்ஸ் செய்யவோ அல்லது நல்ல விறைப்புத்தன்மைக்காகவோ இந்த மாத்திரையைக் கொடுக்கிறார்கள். அவரும் ஒரு மாத்திரையைச் சாப்பிட்டு விட்டு செக்ஸ் செய்கிறார். அன்று அவர் விருப்பப்பட்டப்படியே செக்ஸ் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இவை ஆபத்தான சுய இன்பங்கள்; எச்சரிக்கும் பாலியல் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 258 இதனால் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா..? முதல் பாயிண்ட், அவருக்கு அந்த மாத்திரைக்கான தேவையே இருந்திருக்காது. இரண்டாவது பாயிண்ட், மறுநாள் அவர் அதே மாத்திரையைச் சாப்பிடாமல் உறவுக்கு முயற்சி செய்ய மாட்டார். ஏனென்றால், அந்த மாத்திரை சாப்பிடாமல் தன்னால் உறவுகொள்ள முடியாது என்கிற பயம் அவருக்குள் வந்துவிடும். அதனால், அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வார். கூடவே, மாத்திரை இல்லாமல் தன்னால் மனைவிக்குத் திருப்தி அளிக்க முடியாது என்கிற குற்றவுணர்ச்சியும், தனக்கு ஆண்மையில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை யும் வந்துவிடும். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், இந்த மாத்திரைகள் எளிதாக கிடைப்பதுதான். தவிர, ஆண்கள் முதலிரவைப் பரீட்சை போல நினைக்காமல், திருமணம் என்கிற நீண்ட பயணத்தில், செக்ஸை இயல்பான விஷயமாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

விகடன் 25 Sep 2025 4:20 pm

Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத் தருமா?

Doctor Vikatan: சித்த மருந்துகள்  தயாரிப்பில்  உலோகங்கள் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை. இப்படி உலோகங்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் எந்த அளவுக்கு உடலுக்குப் பாதுகாப்பானவை? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் சித்த மருந்துகளைப் பொறுத்தவரை பல விஷயங்களில் இருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படும். அப்படிப் பார்த்தால் அடிப்படையில், மூலிகைகள், அடுத்து  தாதுப்பொருள்கள் என்று சொல்லக்கூடிய உலோகங்கள், பிறகு விலங்கினங்களிடம் இருந்து பெறப்படும் பொருள்கள் என எல்லாவற்றிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுவதுண்டு. சித்த மருந்துகளைப் பொறுத்தவரை மூலிகைகள்தான் அடிப்படை.  'வேர்ப்பாரு தழைப்பாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரு' என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு.  அதாவது முதலில் மூலிகைகளை முயற்சி செய்து பாருங்கள்... அவற்றில் பலன் கிடைக்காதபோது உலோகங்களை முயற்சி செய்து பாருங்கள் என்பது இதன் அர்த்தம். சித்த மருந்துகளில் உலோகங்கள் பயன்படுத்துவது உண்டு என்றாலும், பலரும் நினைக்கிற மாதிரி, மருந்துகளுக்குள் நேரடியாக உலோகங்களைப் புகுத்திக் கொடுக்க மாட்டார்கள். இங்குதான் சித்த மருத்துவ தத்துவமும் அறிவியலும் உண்மையாகிறது. மருந்துகளுக்கு உலோகங்களைப் பயன்படுத்தும்போது அது பலகட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, புடம் போடுவது, எரிப்பது போன்றவை. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் உலோகத்தின் தன்மை மாறும்.  இதன் பின்னணியில் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. அதன் பிறகுதான் அது மருந்தாகவே உருவாகும்.  சித்த மருந்து ஓர் உலோகத்தைச் சுத்திகரிப்பது எப்படி, அதை நானோ துகள்களாக, பற்பமாக மாற்றுவது எப்படி என பல கட்டங்கள் நடைபெறும். பெரும்பாலும் உலோகங்களை வைத்துச் செய்யப்படும் மருந்துகள், பற்பம் அல்லது செந்தூரமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த மருந்துகளை தேன் கலந்தோ, கஷாயத்துடனோ சாப்பிட வேண்டியிருக்கும். உலோகம் என்பது தனியே இருக்கும்போது அதன் தன்மைகள் வேறாக இருக்கும். அதுவே மருந்தாக மாறும்போது வேறு தன்மைகள் பெறும். அதனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல், உடலுக்கு நல்லதை மட்டுமே தரும். அதுதான் சித்த மருந்துகளின் சிறப்பே. கேன்சர் போன்ற பெரிய நோய்களுக்குக்கூட செந்தூரம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவது, அவர்களது ஆயுளை நீட்டிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.  பல வருடங்களுக்கு முன்பே, ஹெச்ஐவி நோய்க்கு செந்தூர மருந்துகள் கொடுத்து சோதிக்கப்பட்டுள்ளன. பெரு மருந்துகள் எனப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் இப்படி உலோகங்கள் பயன்படுத்திச் செய்யப்படுபவையாக இருக்கும். எனவே, அவை பாதுகாப்பானவைதான். பயம் வேண்டாம்.    உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: வயதான அப்பாவுக்கு வருடம் முழுக்க சளி, இருமல்; சித்த மருத்துவம் உதவுமா?

விகடன் 25 Sep 2025 9:00 am

பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்

மாதவிடாய் நாள்களின் அவதிகள் அதிகரிக்க, அந்த நாள்களில் உண்ணும் சில உணவுகளும் காரணமாகலாம். வலியிலிருந்து விடுபட, தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் டயட்டீஷியன் நித்யஸ்ரீ. Periods pain Vs fatty foods கொழுப்பு உணவுகள். உடலில் வாயு உற்பத்தியை அதிகரிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, மன அழுத்தம் அதிகரிக்கலாம். அடிவயிற்றில் வலியை ஏற்படுத்துவதுடன், வயிற்றுப்போக்கையும் உண்டாக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள். உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள். உடலில் வாயு உற்பத்தியை அதிகரிப்பதுடன், மாதவிடாய்க்கால வலியையும் தீவிரமாக்கும். Periods pain Vs Salty foods மசாலா உணவுகள். வறுத்த, அதிக மசாலா சேர்த்த உணவுகள் அழற்சிப் பிரச்னையை அதிகப்படுத்தும். மாதவிடாய்க்கால வலியைத் தீவிரமாக்கும். சர்க்கரை உணவுகள். உடலில் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால், மனநலனில் மாற்றங்கள் ஏற்படும். பதற்றம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி சமச்சீரற்று இருக்கும். Periods pain Vs Coffee காபி. இதிலுள்ள கஃபைன், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயத்துடிப்பின் இயல்பு மாறலாம். பதற்றமும் அடிவயிற்றுப் பகுதியில் வலியும் அதிகரிக்கும். Sex during periods: மாதவிடாயின்போது உறவு... 100% பாதுகாப்பானதா..? காமத்துக்கு மரியாதை - 149 குளிர்பானங்கள். இவற்றின் கார்பனேட்டட் தன்மை, வாயு உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் மாதவிடாய்க்கால வலி அதிகமாகும். Periods pain Vs Cool drinks Periods: பீரியட்ஸ் வலி ஏன் வருகிறது? ; அந்த வலியை வராமல் தடுக்க முடியுமா? | சந்தேகங்களும் தீர்வும்! உப்பு, மசாலா, எண்ணெய்க் குறைவான உணவுப்பொருள்களை சாப்பிட்டால், மாதவிடாய் வலி வராது.

விகடன் 25 Sep 2025 6:35 am

இளமையையும், அழகையும் குறைக்குமா சர்க்கரை? டயட்டீஷியன் சொல்வது என்ன?

’’சர்க்கரை விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அழகு தொடங்கி ஆரோக்கியம் வரை பல பிரச்னைகளை சர்க்கரை ஏற்படுத்தும்’' என எச்சரிக்கிறார் டயட்டீஷியன் சுஜாதா. சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை. சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை. ’’ `ஒருவர் நாளொன்றுக்கு ஐந்து டீஸ்பூன் வரை சர்க்கரை பயன்படுத்தலாம்’ என்று அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். அதிகமாகச் சேர்த்துக்கொண்டால், அதிலுள்ள குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உடலில் சேர்ந்து தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கார்பனேட்டட் பானங்கள், குளிர்பானங்கள், பேக்கரி உணவுகள் என நாம் அன்றாடம் சாப்பிடும் பல்வேறு உணவுகளில் சர்க்கரை மறைந்திருப்பதைப் பலரும் அறிவதில்லை. எவ்வளவு சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்திலேயே பசியா..? * அளவுக்கு மீறி சர்க்கரை சேர்த்துக்கொள்ளும்போது, பசி உணர்வு அதிகரிக்கும். சர்க்கரையிலிருக்கும் ஃப்ரக்டோஸ்தான் அதற்குக் காரணம். ‘எவ்வளவு சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்திலேயே பசி எடுக்கிறது’ என்பவர்கள், சர்க்கரையின் அளவை கவனிக்க வேண்டும். அடிக்கடி செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டாலும், உணவில் சர்க்கரையின் அளவை கவனிக்க வேண்டும். இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியா..? இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியா..? * அதிகப்படியான சர்க்கரை, சரும ஆரோக்கியத்துக்கான `கொலாஜென்’ மற்றும் `எலாஸ்டின்’ போன்ற புரதங்களின் தரத்தைக் குறைக்கும். இதனால் சருமம் பொலிவிழந்து தளர்ச்சியடையும். இளம் வயதில் சருமத்தில் தளர்ச்சியை உணர்ந்தால் சர்க்கரையின் அளவை உடனடியாகக் குறைக்க வேண்டும். ''என் பையனோட பாக்கெட்ல காய்கறிகள்தான் இருக்கும்!'' - நடிகை ஶ்ரீஜா பகிரும் Healthy Habits பற்களில் அடிக்கடி பிரச்னையா..? * தினமும் அளவுக்கதிகமாக சர்க்கரை சேர்த்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். பற்களில் அடிக்கடி பிரச்னையா..? Palm Sugar: அது எலும்பை அரிக்கும்; இது எலும்பை வலுவாக்கும்! | health tips அடிவயிற்றுப் பகுதி பருத்துவிட்டதா..? * அதிக அளவு சர்க்கரையால் உடலின் பல பகுதிகளில் கெட்ட கொழுப்பு சேரும். இதனால், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகள் பருத்து, தொப்பை ஏற்படலாம்.

விகடன் 24 Sep 2025 6:33 am

பாராசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் வருமா? - ட்ரம்ப் கருத்தும், நிபுணர்கள் மறுப்பும்!

பாராசிட்டமால் அல்லது அசட்டாமினோபென் என அழைக்கப்படும் மாத்திரை, உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி, காய்ச்சல் குறைப்பு மருந்து ஆகும். சமீபத்தில் இந்த மருந்து குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. ட்ரம்ப் பேசியதென்ன? கர்ப்பமாக இருக்கும் பெண்கள் 'டைலெனால்' மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற அவர், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம் பிரச்னை ஏற்படுவதுடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார். paracetamol டைலெனால் என்பது அமெரிக்காவில் பாராசிட்டமாலுக்கு வழங்கப்படும் ஒரு பிராண்ட் பெயர் ஆகும் (இந்தியாவில் டோலோ போல). ட்ரம்ப்பின் இந்தக் கூற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் அறிவியலுக்கு முரணாக பேசுவதாக விமர்சித்துள்ளனர். ட்ரம்ப்பின் கருத்து பொறுப்பற்றது 'அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கல்லூரி'யின் தலைவர், ட்ரம்பின் கருத்துக்களை பொறுப்பற்றது மற்றும் தீங்கு விளைவிக்கும் மற்றும் குழப்பமான செய்தி என விமர்சித்துள்ளார். குழந்தை மருத்துவரும் முன்னாள் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானியுமான, டாக்டர் சௌமியா சுவாமிநாதன் என்.டி.டி.வி தளத்துக்கு அளித்த பேட்டியில், பாராசிட்டமாலை ஆட்டிசத்துடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை. எனக் கூறியுள்ளார். டாக்டர் சௌமியா சுவாமிநாதன் மேலும், பாராசிட்டமாலை அதிகப்படியாக எடுத்துக்கொள்வது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளும்போது எந்த பாதிப்பும் வராது எனக் கூறியுள்ளார். பராசிட்டமால்: தீங்கை விட பலன்கள் அதிகம் பாராசிட்டமாலால் வரும் பாதிப்புகளை விட பலமடங்கு அதிகமான பலன்களை பெறுவதனால் அதைப் பயன்படுத்துவதுதான் அறிவார்ந்த தேர்வு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் கூட்டமைப்பு (FIGO), பாராசிட்டமாலை பாதுகாப்பான மருந்துகளில் ஒன்று எனக் கூறுவதுடன் அதன் பயன்பாட்டைப் பரிந்துரைக்கிறது. அமெரிக்க அதிபரின் கருத்தால் பொதுமக்கள் அச்சப்பட அவசியமில்லை என்கின்றனர் நிபுணர்கள். Trump: நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக அவதூறு வழக்கு; ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு கேட்கும் ட்ரம்ப்!

விகடன் 23 Sep 2025 5:10 pm

சுபான்ஷு சுக்லா: விண்வெளியில் மருத்துவ எமர்ஜென்சி வந்தால் எப்படி சிகிச்சை கொடுக்கப்படும்?

பூமியில் உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்ல முடியும், சிசிச்சை பெற முடியும். ஆனால், விண்வெளியில் உடல்நிலை பாதித்தால், விண்வெளி வீரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கான பதிலைக் கடந்த ஜூன் மாதம், இந்தியா சார்பில் விண்வெளி சென்று வந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தருகிறார். விண்வெளியில் ஆம்புலன்ஸ், மருத்துவமனை, எமர்ஜென்சி ரூம் கிடையாது. அப்போது எப்படி விண்வெளி வீரர்கள் மருத்துவ எமர்ஜென்சிகளில் இருந்து பிழைக்கிறார்கள்? விண்வெளி வீரர்கள் சி.பி.ஆர் எப்படிச் செய்வோம் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றார் சுபான்ஷு சுக்லா விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது... தொடர் ஒத்திகை விண்வெளியில் மருத்துவ எமர்ஜென்சி என்பது பூமியில் ஏற்படுவதுப்போல இருக்காது. அங்கு மருத்துவமனை எதுவும் இல்லை என்பதால் விண்வெளி வீரர்களே தங்களுடைய சொந்த மருத்துவர்களாகவும், செவிலியர்களாகவும் தங்களை ட்ரெயின் செய்துகொள்ள வேண்டும். அவர்கள் பல மணிநேரம் செய்த ஒத்திகைகள் மற்றும் சில திறமையான நுட்பங்களை நம்பியே அங்கு வாழ்வும், மரணமும் இருக்கிறது. விண்வெளியில் டாக்டர்கள், நர்ஸ்கள் யார்? சுக்லா: விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது, உதவி வராது என்பது நமக்கு தெளிவாகத் தெரியும். அங்கு மருத்துவமனை இருக்காது, எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீசியன்கள் இருக்கமாட்டார்கள். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை மிக வேகமாக நீங்கள்தான் உறுதி செய்ய வேண்டும். சூழலைப் பொறுத்து, நீங்கள் டாக்டராகவோ, நர்ஸாகவோ, சப்போர்ட்டிங் ஸ்டாபாகாவவோ மாற வேண்டும். எதற்கும் நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 'எது வேண்டுமானாலும் நடக்கலாம்?' என்கிற பட்டியலில் முதலில் இருப்பது, 'மெடிக்கல் எமர்ஜென்சி'தான். நாங்கள் தொடர்ந்து ஒத்திகை செய்துகொண்டே இருப்போம் என்றார். விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது... Health: உங்க பசி உண்மையானதா, போலியானதா? எப்படிப் பயிற்சி எடுப்பீர்கள்? Mannequin (மனித உருவ பொம்மை) வைத்துதான் பயிற்சி எடுப்போம். விண்வெளி சிகிச்சையில் ட்விஸ்ட் இருக்கிறது. ரத்த அழுத்தம் குறைந்தால், பூமியைப் போலவே, அங்கேயும் நரம்புகள் பாதிப்படையும். ஆனால், விண்வெளி நிலையத்தில், விண்வெளி வீரர்களுக்கு எலும்பு மஜ்ஜைகள் மூலம் மருத்துகளை ஏற்றுவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும் There’s no ambulance in space. No hospital. No ER. So how do astronauts survive medical emergencies? How we do CPR is going to blow your mind!!!! Medical emergencies in space are unlike anything on Earth. With no hospital around the corner, astronauts train to become their own… pic.twitter.com/eJVUO4Srh9 — Shubhanshu Shukla (@gagan_shux) September 22, 2025 விண்வெளி நிலையத்தின் கூரை மேல் CPR அங்கே ஒருவருடைய மார்பை அழுத்தி சிகிச்சை தருவது என்பது எளிதானது அல்ல. ஜீரோ புவியீர்ப்பில் இருவருமே மிதந்துகொண்டு இருப்பார்கள். அதனால், மார்ப்பைக் கீழே அழுத்த முடியாது. எனவே, தலைகீழாகப் புரட்டி, விண்வெளி நிலையத்தின் கூரையில் உங்களது கால்களை உறுதியாக ஊன்றி, சிகிச்சை தர வேண்டும் என்றார். ஜீரோ புவியீர்ப்பில், கூரை மேல் நின்றுகொண்டு, தலைகீழாக ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதை யோசித்து பாருங்கள். விண்வெளியொல் சுபான்ஷு சுக்லா மருத்துவ பயிற்சியின் போது... Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்! விண்வெளி மருத்துவம் என்பது அறிவியல் மற்றும் களரி போன்ற கலைகளுக்குச் சமமானதாகும். சி.பி.ஆர் என்பது சுவர் புஷ்-அப்ஸ் போன்றதாகும். மருந்துகள் எலும்பு மஜ்ஜைகள் மூலம் உள்ளே செல்கின்றன. மேலும் ஒவ்வொரு பயிற்சிகளும் உயிர் வாழ்வதற்கான பயிற்சி ஆகும். விண்வெளி காட்டுத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார். விண்வெளியில் உடல்நல பிரச்னை ஏற்பட்டால் என்ன ஆகும்? | FAQ விண்வெளியில் உடல் நல பிரச்னை ஏற்பட்டால்  உடனடி உதவி கிடைக்குமா? இல்லை. விண்வெளியில் மருத்துவ அவசர நிலைகள் ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. அங்கு இருப்பவர்களே மருத்துவ கடமைகளை ஏற்றுக் கொள்கிறார்கள். விண்வெளி வீரர்கள் மருத்துவப் பயிற்சி பெறுகிறார்களா? ஆம். விண்வெளி வீரர்கள் மருத்துவ அவசர உதவி பற்றிய பயிற்சிகளை mannequinகளைப் பயன்படுத்தி பலமுறை செய்கிறார்கள். Cardiac arrest ஏற்பட்டால் என்ன செய்கிறார்கள்? CPR செய்கிறார்கள்; Automated External Defibrillator (AED) மூலம் இதயத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயல்கிறார்கள். சூழல் மாறுபாடு (microgravity) இந்தச் சிகிச்சைகளை எப்படிச் சிக்கலாக்குகிறது? மாறுபாடு காரணமாக மார்பை அழுத்தி சிகிச்சை அளிப்பது (chest compressions) சவாலாக இருக்கும். Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

விகடன் 23 Sep 2025 12:54 pm

கறிவேப்பிலை பயன்கள் : கேச வளர்ச்சி, கட்டுக்குள் சர்க்கரை, கல்லீரலுக்குக் காவல் - விரிவான தகவல்கள்

கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை; ஆனால், அத்தகைய கறிவேப்பிலையை நாம் உண்ணாமல் ஒதுக்கி வைப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், நீர்மோர் சகலத்திலும் கறிவேப்பிலை இடம் பெற்றிருந்தாலும் உணவு உண்ணும் போது ஒதுக்கி வைக்கும் அளவுக்கு கறிவேப்பிலை என்றாலே பலருக்கும் கசக்கிறது. `உணவே மருந்து’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறிவேப்பிலை. அதனால்தான் நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தினார்கள். `இது மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது; தாதுஉப்புகள், வைட்டமின்கள் நிறைந்தது என்பதே மருத்துவர்களின் வாதம். மணம் நிறைந்த, மகத்துவம் மிகுந்த கறிவேப்பிலையில் உள்ள சத்துகளையும், மருத்துவக் குணங்களையும் பார்க்கலாம். கறிவேப்பிலை `ப்ளீஸ் என்னை தூக்கிப் போடாதீங்க!' கறிவேப்பிலை - மூலிகை ரகசியம் - 3 அட, இவ்வளவு சத்துகளா... கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன. மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. கொழுப்புச்சத்து 100 கிராமுக்கே 0.1 கிராம் என்ற அளவில்தான் உள்ளது. வயிற்றுக்கோளாறுகள் வராது... கறிவேப்பிலையில் உள்ள கார்பாசோல் அல்கலாய்டு (Carbazole Alkaloids) வயிற்றுப்போக்கைத் தடுக்கக்கூடிய ஆன்டி- டயாரியல் (Anti-Diarrheal properties) பண்பைக் கொண்டுள்ளதாக பல ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. இதனால், கறிவேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து, அதை பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை மைய அரைத்துச் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் அருந்தலாம். ஆயுர்வேதத்தில் இது, வயிற்றுக்கோளாறுகளை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஜூஸாக மிக்ஸியில் அடித்து, அதனுடன் எலுமிச்சைப்பழச் சாற்றைக் கலந்து குடிக்கலாம் அல்லது அரைத்த கறிவேப்பிலையை மோருடன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இது செரிமானத்தை அதிகரிப்பதுடன், வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். அஜீரணம், பசியின்மையையும் போக்கும். நீரிழிவு உணவு 360 டிகிரி - 10 - இலை முதல் ஈர்க்கு வரை... மருந்தாகும் கறிவேப்பிலை! சர்க்கரைநோயாளிகளுக்கு வரப்பிரசாதம்! கறிவேப்பிலை ஆன்டி - கிளைசிமிக் வகை உணவு என்பதால், ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இதனால், சர்க்கரைநோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை ( LDL-low density lipoprotein) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலான ஹெச்.டி.எல்லை (HDL - High Density Lipoprotien) உயர்த்த உதவுகிறது. கறிவேப்பிலையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால், இது அனீமியா எனப்படும் ரத்தச்சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும். கல்லீரலின் காவலன்! கறிவேப்பிலையில் லுகேமியா (Leukemia), புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தடுக்கும் பீனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் (Carbazole Alkaloids) நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் கல்லீரல் செல்கள் அழிவைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் பாதிப்பைக் குறைக்கும். மேலும், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். இது ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிவதைக் குறைப்பதால், ரத்தம் ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருக்கும். கல்லீரல் அஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை கண் ஆரோக்கியம் காக்கும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டினாய்டுகள் (Carotenoids) கார்னீயா பாதிப்பைக் கட்டுப்படுத்தும். பார்வை இழப்பு, மாலைக்கண் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும். முடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலையை எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி நன்றாக வளரும். கருமையாக வளரும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம். கறிவேப்பிலை – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) 1. கறிவேப்பிலையை நாம் சாப்பிடாமல் ஒதுக்குவதன் காரணம் என்ன? பலருக்கு கறிவேப்பிலை வாயில் கசப்பாகத் தோன்றுவதால் உணவு உண்ணும் போது ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால், உண்மையில் அதில் நிறைய சத்துக்கள் உள்ளன. 2. கறிவேப்பிலையில் என்னென்ன சத்துகள் உள்ளன? கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் A, B, C, E, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃபிளேவனாய்டுகள் ஆகியவை உள்ளன. கூடவே இரும்பு, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. 3. கறிவேப்பிலை வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்துமா? ஆம். கறிவேப்பிலையில் உள்ள Carbazole Alkaloids வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தைத் தடுக்க உதவுகிறது. இதை ஜூஸாகவோ, மோர் கலந்த பேஸ்டாகவோ எடுத்தால் செரிமானத்தையும் மேம்படுத்தும். 4. சர்க்கரை நோயாளிகளுக்கு கறிவேப்பிலை நல்லதா? ஆம். கறிவேப்பிலை ஒரு ஆன்டி-கிளைசிமிக் உணவு . இது இரத்தத்தில் குளூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதேசமயம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது. 5. கறிவேப்பிலை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு எப்படித் துணைபுரிகிறது? கறிவேப்பிலையில் உள்ள பீனால் மற்றும் கார்பாசோல் ஆல்கலாய்டுகள் புற்றுநோயைத் தடுக்கும். வைட்டமின் A & C கல்லீரல் செல்களை பாதுகாக்கும். கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். 6. கறிவேப்பிலை கண் ஆரோக்கியத்திற்கு உதவுமா? ஆம். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் A மற்றும் கரோட்டினாய்டுகள் பார்வை இழப்பு, மாலைக்கண் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். பார்வைத்திறனை அதிகரிக்கவும் உதவும். 7. முடி வளர்ச்சிக்காக கறிவேப்பிலை பயன்படுத்த முடியுமா? முடியும். கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சைச் சாறை அரைத்து தலைமுடிக்கு தேய்த்து குளித்தால் பொடுகு, பேன் தொல்லைகள் குறையும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகப் பயன்படுத்தினால் தலைமுடி கருமையாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.

விகடன் 23 Sep 2025 12:37 pm

Doctor Vikatan: மன அழுத்தத்துக்கான சைக்யாட்ரிக் மருந்துக்கு மாற்றாகுமா ‘அமுக்கரா சூரணம்’?

Doctor Vikatan: அமுக்கரா சூரணம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுமா, இதை யார் சாப்பிடலாம், யார் தவிர்க்க வேண்டும்? மன அழுத்தத்துக்கான ஆங்கில சைக்யாட்ரிக் மருந்துகளுக்கு பதில் இதை எடுப்பது பாதுகாப்பானது என்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். அமுக்கரா சூரணம் என்பது மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய மிகச் சிறந்த மருந்து. அடிப்படையில், மன அமைதியைக் கொடுக்கக்கூடிய மனநல மருந்துகளில் முக்கியமானதும்கூட. ஒருவர் தீவிரமான மனநல பிரச்னைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றால், திடீரென அதை நிறுத்திவிட்டு, சித்த மருந்துகளுக்கு மாற வேண்டாம். ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கும் ஆங்கில மருந்துகளோடு, சித்த மருந்துகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த மருத்துவமாக எடுத்துக்கொள்ளும்போது, ஆங்கில மருந்துகளின் அளவு குறைய வாய்ப்பு உண்டு. ஆரம்பகட்ட மனநல பிரச்னைகள் என்றால், சித்த மருந்துகளை, குறிப்பாக அமுக்கரா சூரணம் எடுத்துக்கொள்ளலாம். Doctor Vikatan: சர்க்கரை நோயை சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா? அதுவே ஆரம்பகட்ட மனநல பிரச்னைகள் என்றால், சித்த மருந்துகளை, குறிப்பாக அமுக்கரா சூரணம் எடுத்துக்கொள்ளலாம். தீவிர மனநல பாதிப்பில் வெறும் அமுக்கரா சூரணம் மட்டுமே உதவும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இருக்க மாட்டார். சித்த மருத்துவத்திலும் சரி, ஆயுர்வேதத்திலும் சரி, 'காம்பினேஷன் டிரக்ஸ்' என்ற கான்செப்ட்டில் புதிய புதிய மருந்துகளைக் கலந்து நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுவதுண்டு.  அவற்றில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் சரி, மன அமைதியைக் கொடுப்பதற்கும் சரி,  அமுக்கராவைக் கொடுக்கிறார்கள். இதிலுள்ள வித்தனலாய்டு (Withanolide) எனப்படும் ஆல்கலாய்டுதான், மன அழுத்தம் குறைத்து மன அமைதியைத் தருகிறது. மன அழுத்தத்துக்கு மருந்தாகுமா அமுக்கரா சூரணம்? பெரியவர்கள் தாராளமாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்குத் தாம்பத்திய உறவின்போது வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் அமுக்கரா மருந்துக்கு உண்டு. உடல் மெலிந்தோர், பலவீனமானோர், சோர்வுற்ற குழந்தைகள், (10 வயதுக்கு மேல்)  இதை ஊட்ட மருந்தாகவும் எடுத்துக்கொள்ளலாம்.  பாலில் அரை டீஸ்பூன் அமுக்கரா சூரணம் கலந்து குடிக்கலாம். அமுக்கரா சூரணம் எடுப்பதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், எந்த மருந்தையும் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுப்பதுதான் பாதுகாப்பானது, சரியானதும்கூட. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 23 Sep 2025 9:00 am

மன அழுத்தம் நமக்கு நன்மைகளும் செய்யுமா? விளக்கும் நிபுணர்!

இயற்கையாகவே மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த அழுத்தம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் உந்து சக்தியுடன் செய்ய முடியாது. மன அழுத்தம் எவ்வாறு ஒருவரை பாதிக்கிறது? அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா; பெண்களா என்று சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம். மன அழுத்தம் மன அழுத்தம் நல்லதா? சாதாரணமாகவே மனதில் அழுத்தம் இருப்பதினால்தான் தினமும் காலையில் எழுந்து வேலைக்குப் போக வேண்டும்; பள்ளிக்குப் போக வேண்டும் என்று கிளம்பிச் செல்கிறோம். குடும்பத் தலைவிகள் காலையிலிருந்து பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்புவது, வீட்டில் இருக்கும் வேலைகளைப் பார்ப்பது போன்று மன அழுத்தத்தை மோட்டிவேஷனாக மாற்றி வேலையைச் செய்கிறார்கள். மன அழுத்தம் இருப்பதினால்தான் எந்த ஒரு விஷயத்தையும் கவனத்துடனும் விழிப்புணர்வோடும் செய்கிறோம். அன்றாட வேலையைச் சரியாகச் செய்வதற்கு மன அழுத்தம் ஓர் உந்துசக்தியாக உள்ளது. என்னதான் மன அழுத்தம் உந்து சக்தியாக இருந்தாலும் அதற்கும் ஓர் அளவு உண்டு. மன அழுத்தத்தின் அளவு அதிகமாகும்போது ஒரு மனிதனுடைய உடல்நலம், மனநலம், உணர்வு சார்ந்த நலம் ஆகிய அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம் மன அழுத்தத்தின் அறிகுறிகள் பதட்டம், மனச்சோர்வு நிலை, அதிகமாகக் கோபப்படுதல், அதிக எரிச்சல் அடைதல், ஒரு நேரம் சந்தோஷமாக இருத்தல் மற்றும் மற்றொரு நேரம் கோபம், அழுகை, வாழ்க்கையின் மீது விரக்தி ஆகியவை ஆண், பெண் இருபாலருக்குமான மன அழுத்த அறிகுறிகள். மன அழுத்தம் நிர்வகிக்கப்படுதல் மன அழுத்தம் ஏற்படும்போது உடலில் எபினெஃப்ரின் மற்றும் கார்டிசோல் (Epinephrine and cortisol) என இரண்டு வகையான ஹார்மோன்கள் சுரக்கும். இவை ஒரு மனிதனை விழிப்புடன் இருக்க மற்றும் தூண்டுதலோடு வேலையைச் செய்ய வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஹார்மோன்கள். காலையில் எழுந்திருக்கும்போது கார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். மனிதன் வேட்டையாடி சமூகமாக இருந்த காலம்தொட்டு இந்த எபினெஃப்ரின் மற்றும் கார்டிசோல் அதிகாலை நேரத்தில் அதிகமாக சுரந்து, அதிகாலை நேரத்தில் எழுந்து விலங்குகளை வேட்டையாட இந்த ஹார்மோன்கள் உதவியாக இருந்தன. மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளின் படிப்பு, கணவரைக் கவனித்துக் கொள்ளுதல், கணவருடைய மற்றும் தன்னுடைய தாய் தந்தையைக் கவனித்துக் கொள்ளுதல், இதற்கிடையில் தன்னைக் கவனித்துக் கொள்ள மறப்பதால் ஆரோக்கியப் பிரச்னைகள் என அதிகம் மன அழுத்தத்துக்கு பெண்கள் ஆளாகிறார்கள். எப்போது பிரச்னையாகும்? எந்நேரமும் எபினெஃப்ரின் மற்றும் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும் நபருக்கு ரத்த நாளங்கள் சுருங்கும்; ரத்த அழுத்தம் அதிகமாகும். வளர்சிதை மாற்றங்கள் அதிகமாகி சாப்பிடுவதற்குத் தூண்டுதல் ஏற்படும். உடலுக்கு நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள். கூடவே ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், பிசிஓஎஸ் போன்ற பிரச்னைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. நாளடைவில் இதய நோய், சிறுநீரகம், கல்லீரல் நோய் மாதிரியான பிரச்னைகளுக்கு மன அழுத்தம் ஆரம்பப் புள்ளியாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மன அழுத்த ஹார்மோன்; மகிழ்ச்சி ஹார்மோன்! கார்டிசோல் மற்றும் எபினெர்ஃபின் ஹார்மோன்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது ஒரே மாதிரியாகத்தான் தூண்டப்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு மன அழுத்தத்தைச் சமாளிக்கக்கூடிய ஆக்ஸிடோஸின் ஹார்மோன், இயற்கையாகவே மூளையில் இருந்து சுரக்கிறது. இந்த ஆக்ஸிடோஸின் ஹார்மோன் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாகச் சுரக்கிறது. கூடவே பெண்களுக்கான ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் இரண்டும் மன அழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசாலுக்குச் சமமாகச் சுரந்து மன அழுத்தத்தைச் சமாளிக்க வைக்கும். என்றாலும், ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக மன அழுத்தத்தைக் கொடுக்கும்போது இந்த மெக்கானிசம் பாதிக்கப்படுகிறது. மகிழ்ச்சி ஹார்மோன் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போது என்ன செய்வார்கள்? பெண்கள் மன அழுத்தத்தைச் சந்திக்கும்போது அழுவதற்கு யோசிக்கவே மாட்டார்கள். தவிர, அவர்களின் மன அழுத்தத்திற்கான காரணத்தையும், வலிகளையும் மனதிற்கு நெருங்கியவர்களிடம் எடுத்துக்கூறி பேசிவிடுவார்கள். இதன் மூலமாக மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆண்கள் பேசுவதில்லை. இதுவே ஆண்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அதிகமாகப் பேசுவதில்லை. அதற்கு பதிலாக யாரிடமும் நடந்தவற்றை எண்ணி விவாதிக்காமல் அந்த இடத்திலிருந்து விலகிச் செல்வதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அந்த நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவது, வெளியூர் செல்வது, ட்ரிப் போவது போன்றவற்றைச் செய்ய விரும்புகிறார்கள். மன அழுத்தம் அதிகமான அழுத்தத்தை சந்திப்பது பெண்கள்தான்! ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் தான் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். குடும்பத்தில் ஏற்படுகின்ற பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரம்பித்து, குடும்பம் சார்ந்த கடமைகள், உறவுகள் ஆகியவற்றை சரியான நிலைமையில் பாதுகாக்க ஆண்களைவிட பெண்கள்தான் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். Valentine's Day: ஹார்மோன் சுரந்தா சொல்லியனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன்..! பணிபுரியும் இடத்திலும்... மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளின் படிப்பு, கணவரை கவனித்துக் கொள்ளுதல், கணவருடைய மற்றும் தன்னுடைய தாய் தந்தையை கவனித்துக் கொள்ளுதல், இதற்கிடையில் தன்னை கவனித்துக் கொள்ள‌ மறப்பதால் ஆரோக்கியப் பிரச்னைகள் என அதிகம் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இந்தக் கால பெண்களுக்கு பணிபுரியும் இடத்திலும் பல பிரச்னைகள் வரும். இதனாலும் அவர்களுக்கு அதிக மன அழுத்தம் வருகிறது. டாக்டர் ஃபரூக் அப்துல்லா Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்..! தங்களுக்காக வாழ முடியவில்லை பெண்கள், தங்களுக்காக வாழ முடியவில்லை என்ற எண்ணம் ஏற்படும்போது அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். ஆண்கள் கல்வி, வேலை, பதவி என சிறப்பாக செயல்படும்போது, தங்களால் அவ்வாறு செயல்பட முடியவில்லை என்பதாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். சரி செய்தல் ஒரு வேலையை கண்டிப்பாக செய்தாக வேண்டும் மற்றும் வேலையில் நூறு சதவீதம் துல்லியத்தன்மையை எதிர்பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, வேலையை முடிந்த அளவுக்குச் செய்யலாம். நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, சராசரியான 7-8 மணி நேர உறக்கம், யோகா, தியானப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் ஆகியவற்றைப் பின்பற்றலாம். செடிகள் வளர்ப்பது, தோட்டக்கலைக்கு நேரம் ஒதுக்குவது போன்ற செயல்களை மேற்கொள்ளும்போது மன அழுத்தம் குறையும். தேவையற்ற விஷயங்களுக்கு நோ சொல்வது... மீ டைம் கடைப்பிடித்தல், அதாவது 24 மணி நேரமும் பிறருக்காக யோசிப்பதைத் தவிர்த்துவிட்டு தங்களுக்காக நேரம் ஒதுக்கிச் செயல்களைச் செய்வது, நண்பர்களிடம் உரையாடுவது, பிடித்த வேலைகளைச் செய்வது, தேவையற்ற விஷயங்களுக்கு நோ சொல்வது, மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வேலைகளைத் தவிர்த்துவிட்டு வேறு வேலைகளைச் செய்வது, தேவைப்பட்டால் மனநல மருத்துவரை அணுகுவது ஆகியவை பெண்களை மன அழுத்தத்தில் இருந்து காக்கும்.

விகடன் 23 Sep 2025 7:52 am

Doctor Vikatan: ஒரு பக்கம் கொசுத்தொல்லை; மறுபக்கம் வீஸிங் - கொசுவிரட்டிக்கு என்னதான் மாற்று?

Doctor Vikatan: நாங்கள் வசிக்கும் பகுதியில் கொசுத்தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, இரவில்... இதற்காக மாலை 5 மணிக்கெல்லாம் கொசுவத்திச் சுருள் ஏற்றிவைக்கிறோம். அதைத் தாண்டி, இரவு படுக்கும்போது மின்சாரத்தில் இயங்கும் லிக்விட் கொசுவிரட்டியும் பயன்படுத்துகிறோம். ஆனால், என் அப்பாவுக்கு வீஸிங் இருப்பதால், இவை எதுவுமே ஏற்றுக்கொள்வதில்லை. அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை வருகிறது. கொசுக்களிலிருந்தும் தப்பிக்க வேண்டும், வீஸிங்கும் வரக்கூடாது என்றால் என்னதான் செய்வது... மூலிகை கலந்த கொசுவிரட்டிகள் பாதுகாப்பானவையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி நுரையீரல் மருத்துவர் திருப்பதி மாசு என்பது வெளிப்புறத்தில் இருந்து வருவதை மட்டும் குறிப்பதில்லை. வீட்டுக்குள்ளிருந்தும் மாசு பாதிப்பு ஏற்படலாம்.  அதை 'இண்டோர் பொல்யூஷன்' என்கிறோம். இண்டோர் ஏர் பொல்யூஷன் என்பது சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அடுப்பெரிப்பதில் தொடங்கி பல விஷயங்கள் வாயிலாகப் பாதிக்கக்கூடியது. குறிப்பாக, இந்த வகை மாசானது, சிஓபிடி (Chronic Obstructive Pulmonary Disease ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பு கொண்டவர்களுக்கு நோய் பாதிப்பைத் தீவிரப்படுத்தக்கூடியது. இது மட்டுமன்றி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஊதுவத்தி, சாம்பிராணி, கொசுவத்திச் சுருள் போன்றவையும் இதே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே. இவற்றைப் பயன்படுத்தும்போது புகை வருகிறது. இவற்றில் கெமிக்கல்தான் பயன்படுத்தியிருப்பார்கள். கொசுவத்திச் சுருள், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை வெளியிடும் புகை மற்றும் ரசாயனங்கள், சிகரெட் புகைக்கு இணையான ஆபத்து கொண்டவை. கொசுவத்திச் சுருள், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவை வெளியிடும் புகை மற்றும் ரசாயனங்கள், சிகரெட் புகைக்கு இணையான ஆபத்து கொண்டவை. இவற்றின் வாடையும் ஆஸ்துமாவைத் தூண்டக்கூடும். வீஸிங் பிரச்னை உள்ளவர்களுக்கு இவை ஆகவே ஆகாது. வீஸிங், ஆஸ்துமா நோயாளிகள் வீட்டை தூசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எந்த அளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் வாசனையையும் புகையையும் கிளப்பக்கூடிய சாம்பிராணி, ஊதுவத்தி, கொசுவத்தி, ரூம் ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியதும். பலரும் கொசுவத்திச் சுருள்தான் புகையை வெளியிடும், திரவ வடிவிலான கொசுவிரட்டியும் மேட் வடிவிலானதும்  பாதுகாப்பானவை என நினைக்கிறார்கள். இவையும் கொசுவத்திச் சுருள் போன்றவைதான். மிக முக்கியமாக இவை எவையுமே விளம்பரங்களில் காட்டுவது போல கொசுக்களைக் கொல்லப் போவதில்லை. கொசுக்களை வெளியே தள்ள முயலும், அவ்வளவுதான்.  கொசுக்களிடமிருந்து தப்பிக்க கதவுகள், ஜன்னல்களுக்கு நெட் பொருத்துவதுதான் மிகப் பாதுகாப்பான முறை. கொசுக்களிடமிருந்து தப்பிக்க கதவுகள், ஜன்னல்களுக்கு நெட் பொருத்துவதுதான் மிகப் பாதுகாப்பான முறை. வேறு வழியே இல்லை, கொசுவிரட்டி உபயோகித்தே ஆக வேண்டும் என்பவர்கள்,  திரவ வடிவிலான கொசுவிரட்டியை உபயோகிக்கலாம்.  அதை ஆன்செய்துவிட்டு தூங்கக்கூடாது. மலை 6 முதல் இரவு 10 மணி வரை ஆன் செய்துவிட்டு, பிறகு  அணைத்துவிட்டே தூங்க வேண்டும். நொச்சி இலை, வேப்பிலை என ஆர்கானிக் பொருள்களே ஆனாலும் அவற்றைக் கொளுத்தும்போது வெளிவரும் புகையானது ஆஸ்துமா, வீஸிங் நோயாளிகளுக்கு நல்லதல்ல. பிரச்னை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. எனவே, மூலிகை கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதிலும் கவனம் அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   Doctor Vikatan: ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் நுரையீரலை பாதிக்குமா?

விகடன் 22 Sep 2025 9:00 am

Doctornet: சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு; உதவிக்கரம் நீட்டும் 'டாக்டர் நெட்'இயக்கம்

சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு செப்டம்பர் 21 2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை டாக்டர் நெட் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. டாக்டர்நெட் இந்தியா, தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் தக்க விழிப்புணர்வு கிடைக்காத மக்களுக்கும் மருத்துவ வசதிகளை அணுகுவதற்கு, இலாப நோக்கமற்ற அமைப்பாகச் செயல்படுகிறது. டாக்டர்நெட், 600-க்கும் மேற்பட்ட அனுபவமுடைய சேவை நோக்கம் கொண்ட மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து, அரசு காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது மானியங்களின் கீழ் மருத்துவமனைகளில் ஆலோசனை/சிகிச்சை பெறுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டுகிறது. Doctornet சந்திப்பு டாக்டர்நெட்டின் முக்கிய பலம், சிகிச்சை காலத்தில் வழங்கப்படும் உணர்வுப்பூர்வமான ஆதரவாகும். சுகாதார சேவைகளைப் பின்தங்கிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனம் DoctorNet India, கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் 2,500க்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்து வருகிறது. “அனைவருக்கும் சுகாதாரம்” என்ற பார்வையுடன் செயல்படும் இந்நிறுவனம், 25க்கும் மேற்பட்ட அடிப்படை சுகாதார மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவமனைகள், உளவியல் நிபுணர்களின் தன்னார்வப் பங்களிப்புடன் கிராமப்புற மக்களுக்கு (80%) சிகிச்சை ஆலோசனைகள் வழங்கி வருகிறது. Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்? கோவிட் காலத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தொலைப்பேசி மருத்துவ ஆலோசனை மற்றும் மனநலம் சார்ந்த சேவைகள் வழங்கப்பட்டதுடன், கர்ப்பிணிப் பெண்கள், புற்றுநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மனப்பூர்வ ஆதரவும் வாழ்வாதார ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன. சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ள DoctorNet India, சுகாதார சேவைகளில் தமிழகத்தில் சுகாதார சமத்துவத்திற்கு முக்கிய பாலமாகத் திகழ்கிறது. Doctornet சந்திப்பு சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பு, பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு சிறிய ஆக்டிவிட்டியுடன் தொடங்கியது. பின்னர், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவர்களுடைய கேர் டேக்கர் தங்கள் எண்ணங்கள், மற்றவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களைப் பகிர்ந்து கொண்டனர். Health Insurance: மருத்துவக் காப்பீடு பாலிசி எடுக்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய விதிமுறைகள்! அதைத் தொடர்ந்து, சிறுநீரக நோயாளிகளுக்கான பரஸ்பர உதவிக் குழு சந்திப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிறுநீரக நிபுணர் டாக்டர் மதுசங்கர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் – இது இரண்டையும் ஒப்பிடுகையில் ஏன் மக்கள் பெரும்பாலும் அறுவை சிகிச்சை காட்டிலும் டயாலிசிஸ் தேர்வு செய்கிறார்கள் என்பதற்கு மூன்று காரணங்களாகத் தக்க விழிப்புணர்வில்லாமை, செலவில் ஏற்படும் வேறுபாடுகள், சிறுநீரகம் கிடைக்காமை போன்றவற்றைக் கூறினார். Doctornet சந்திப்பு மேலும், 'இந்த இரண்டின் மூலம் வாழ்நாளை நீட்டித்த பிறகு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக எவ்வாறு வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வது நம்முடைய கையில்தான் இருக்கிறது. எனவே காலத்தில் நம் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும்' என்பன குறித்து விரிவாகப் பேசினார். எளிமையான முறையில் வழங்கிய அவரது விளக்கங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு எளிதில் புரிந்தன. நிகழ்ச்சி, கடினமான காலங்களில் உதவியவர்களுக்குப் பங்கேற்பாளர்கள் நன்றி தெரிவித்த நெகிழ்ச்சியான நன்றி அமர்வுடன் முடிவடைந்தது. Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விகடன் 22 Sep 2025 8:45 am

அழகு முதல் ஆரோக்கியம் வரை; சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காதீங்க!

வெளிநாட்டிலிருந்து தினம் ஓர் உணவு நம்மூருக்கு வருகிறது. ஆனாலும் நம்மூர் சாதம் வடித்த கஞ்சிக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. இரண்டு வெங்காயம் அல்லது கொஞ்சம் துவையலோடு கஞ்சி இருந்தால் வரம். “கஞ்சி என்பது வெறும் ஆகாரம் மட்டுமல்ல... ஆரோக்கிய பானமும்கூட. முகப்பொலிவு, கூந்தல் பராமரிப்புக்கும்கூட உதவும்’’ என்கிறார் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ். சாதம் வடித்த கஞ்சியின் ஆரோக்கிய பலன்கள் சாதம் வடித்த கஞ்சியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? ''சாதம் வடித்த கஞ்சியில் மாவுச்சத்து அதிகம். புரதச்சத்தும் சிறிதளவு இருக்கிறது. அதே நேரம், தவிடு சேர்ந்த அரிசியில் வடித்த கஞ்சியில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, இனோசிட்டால், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. சிவப்பரிசி, கைக்குத்தல் அரிசி சாதத்தில் செய்யப்பட்ட கஞ்சியில், வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. சாதம் வடித்த கஞ்சியைப் புளிக்கவைத்து மறுநாள் சாப்பிட்டால், அது கூடுதல் நன்மைகளைத் தரும். யாரெல்லாம் சாதம் வடித்த கஞ்சியை அருந்தலாம்? திரவ உணவாக இருப்பதால் மென்று சாப்பிட வாய்ப்பில்லாமல் அப்படியே விழுங்குவோம்; அது மிக விரைவாக செரிமானமாகிவிடும். மென்று சாப்பிட முடியாதவர்கள், விழுங்க முடியாதவர்கள், முதியோர், குழந்தைகள் மற்றும் உடல்நலமில்லாதவர்கள் மட்டுமே சாதம் வடித்த கஞ்சியை அருந்த வேண்டும். உடனடி எனர்ஜி கிடைக்கும். சாதம் வடித்த கஞ்சியும் அழகும்... சாதம் வடித்த கஞ்சியும் அழகும்... ரசாயனம் தெளிக்கப்படாத, இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசியில் வடித்த கஞ்சியைத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகும். இந்தக் கஞ்சியை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சாதாரண நீரில் கழுவினால் முகம் பளபளப்பாகும். சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story இதில் கவனமாக இருங்கள்..! ஆரோக்கியமான உடல்நலத்தோடு இருப்பவர்கள் கஞ்சி குடித்ததும், அதற்கேற்ப உடல் உழைப்பு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கொழுப்பு சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! யார் சாதம் வடித்த கஞ்சியைக் குடிக்கக்கூடாது? 'கிளைசெமிக் இண்டெக்ஸ்’ அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மட்டும் கண்டிப்பாக கஞ்சியைத் தவிர்க்க வேண்டும். பருமனாக இருப்பவர்களும் கஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.'' சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 21 Sep 2025 8:34 am

Doctor Vikatan: நடிகர் ரோபோ சங்கரை பாதித்த மஞ்சள் காமாலை பயங்கர நோயா? - தீர்வு என்ன?

Doctor Vikatan: மஞ்சள் காமாலை தீவிரமாகி, நடிகர் ரோபோ சங்கர் இறந்திருக்கிறார். மஞ்சள் காமாலை பாதிப்பில் உயிரிழக்கும் நபர்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது அவ்வளவு பயங்கர நோயா... வராமல் தடுக்க, வந்த பின் குணப்படுத்த என்ன வழி? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நோய்களில் எதுவும் சாதாரணமானதோ, பயங்கரமானதோ கிடையாது. சாதாரண இருமல், சளி, காய்ச்சல்கூட மிகத் தீவிரமான நோயாக மாறலாம். மிகத் தீவிரமான நோய்கள், சில சமயங்களில் சாதாரணமாக கடந்து போகலாம். இரண்டுமே நம் உடலியக்கம் சார்ந்தவை. நடிகர் ரோபோ சங்கர், தனக்கு மஞ்சள் காமாலை பாதித்தது குறித்து பல இடங்களில் பேசியிருக்கிறார். மஞ்சள் காமாலையை ஆங்கிலத்தில் 'ஹெப்படைட்டிஸ்' ( Hepatitis) என்று சொல்வோம். வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் இந்த பாதிப்பில், ஹெப்படைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ என பல வகைகள் உள்ளன. இவற்றில் ஹெப்படைட்டிஸ் ஏ பாதிப்புதான், பரவலாக காணப்பட்டது. அதுதான் நாம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய மஞ்சள் காமாலை பாதிப்பு.  இது குடிநீர் சுத்தமாக இல்லாததால் பாதிக்கக்கூடியது. உடல் மெலிவது, வாந்தி வருவது, பசியின்மை, கண்களும் நகங்களும் மஞ்சளாக மாறுவது போன்ற அறிகுறிகளைக் காட்டும்.  இந்த வகை பாதிப்புக்கு இன்று தடுப்பூசி வந்துவிட்டது. பெரும்பாலானவர்கள் அதைத் தவறாமல் போட்டுக்கொள்கிறார்கள். உடல் மெலிவது, வாந்தி வருவது, பசியின்மை, கண்களும் நகங்களும் மஞ்சளாக மாறுவது போன்ற அறிகுறிகளைக் காட்டும். ஹெப்படைட்டிஸின் மற்ற பிரிவுகள் ரத்தம் மூலம் பரவக்கூடியவை. உதாரணத்துக்கு, ஹெப்படைட்டிஸ் பி பாதித்த ஒருவருக்குப் பயன்படுத்திய அதே ஊசியை இன்னொருவருக்கும் பயன்படுத்தும்போது அவருக்கும் அந்த நோய் பரவும். இந்த பாதிப்புக்கும் தடுப்பூசி இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் எல்லோருக்கும் இந்தத் தடுப்பூசியும் போடப்படுகிறது. அதேபோல மருத்துவத் துறையில் முன்களப் பணியாளர்களாக வேலை செய்வோருக்கும் இந்தத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெப்படைட்டிஸ் சி, டி, இ போன்றவை பாதித்தால், குணப்படுத்துவது மிகமிக சிரமம். இவற்றுக்கான மருந்துகளும் குறைவு. இவற்றை எல்லாம் தாண்டி, இன்னொரு வகை பாதிப்பும் உண்டு. அது 'ஆல்கஹாலிக் ஹெப்படைட்டிஸ்' (Alcoholic hepatitis) எனப்படும். குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு வரக்கூடிய பிரச்னை இது. குடிப்பழக்கம் அதிகரித்து வருவதால், இந்த பாதிப்பும் இன்று பலரையும் பாதிப்பதைப் பார்க்கிறோம்.  அதனால் ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ் (Alcoholic liver disease) எனப்படும் இந்த பாதிப்பும் இப்போது பரவலாகி வருகிறது. இது தீவிரமானால், நாளடைவில் 'சிரோசிஸ்' (Cirrhosis) எனப்படும் கல்லீரல் சுருக்க நோயை ஏற்படுத்தலாம்.  குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு வரக்கூடிய பிரச்னை இது. Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பது ஏன்... எப்போது சரியாகும்? இந்த பாதிப்பு வந்துவிட்டால், ரிவர்ஸ் செய்யவே முடியாது. சிரோசிஸ் பாதித்தால், கல்லீரல் தொடர்பான பிற பாதிப்புகளும் தாக்கலாம். உதாரணத்துக்கு, Hepatitis encephalopathy என்ற பாதிப்பு வரலாம். இதில் மூளையின் செயல்பாடுகள் குறையும். வலிப்பு வரலாம். மல்ட்டி ஆர்கன் ஃபெயிலியர் எனப்படும் உடலின் பிற உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். அதேபோல, சிரோசிஸ் பாதித்தவர்களுக்கு hepatocellular carcinoma எனப்படும் கல்லீரல் புற்றுநோய் தாக்கும் ரிஸ்க்கும் உண்டு. எனவே, சாதாரண மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் வரை கொண்டு போகலாம். அடுத்தது கல்லீரலில் கொழுப்பு படியும் 'ஃபேட்டி லிவர்' பாதிப்பு. இது நாளடைவில், 'நாஷ்' (Non-alcoholic steatohepatitis -NASH) பிரச்னையை ஏற்படுத்தலாம். நீரிழிவு உள்ளோர், உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர், உணவுப்பழக்கம் முறையற்று இருப்போர் போன்றோருக்கு ஃபேட்டி லிவர் பாதிப்பு வரலாம். ஃபேட்டி லிவர், நாளடைவில், நாஷ் பாதிப்பாக மாறும். அது சிரோசிஸ் அல்லது புற்றுநோய் பாதிப்புகளில் கொண்டுவிடலாம்  என ஆய்வுகள் சொல்கின்றன. கல்லீரல் பாதிப்பு குடல் நலம் 29: குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பது ஏன்? எனவே, மஞ்சள் காமாலை வந்தால் பச்சிலை வைத்தியம் செய்வது, மூலிகை ஜூஸ் குடிப்பது  போன்றவை உதவாது. மஞ்சள் காமாலை என்பது பல பிரிவுகளை உள்ளடக்கியது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவித அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். அது எந்த வகை பாதிப்பு என்பதை முறையான மருத்துவரிடம் ஆலோசித்து, சரியான சிகிச்சையை எடுப்பதுதான் பாதுகாப்பானது. அலட்சியம் காட்டினால், ஆபத்து என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 20 Sep 2025 9:00 am

Vitamin Tale: நம்ம உடம்புக்குள்ள இருக்கிற ஓர் இளவரசியோட கதை இது!

எத்தனையோ கதைகளைப் படிச்சிருப்பீங்க. ஒரு வைட்டமினோட கதையைப் படிச்சிருக்கீங்களா..? இன்னிக்கு ஒரு வைட்டமினோட கதையை சொல்லப் போறோம். அதுவோர் அழகான பிங்க் நிற இளவரசி. இந்தக் கதையை சொன்னவர் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் பாசுமணி. இனி கதைக்குள்ள போவோமா..? Vitamin Tale பிங்க் நிறத்துல அவ்ளோ அழகாக இருக்கும்! அந்த அழகான இளவரசியோட பேரு வைட்டமின் பி 12. முழுப்பேர் கோபாலமின். இந்த உலகத்துலேயே மிக அழகான மெட்டல் இந்த கோபாலமின்தாங்க. பிங்க் நிறத்துல மாணிக்கம் மாதிரி அவ்ளோ அழகாக இருக்கும். நம்மளோட ரெண்டு முன்னோர்கள் வைட்டமின் பி 12-ஐ உற்பத்தி பண்றாங்க. ஒண்ணு நட்சத்திரங்கள். இன்னொண்ணு பாக்டீரியாக்கள். நாம நட்சத்திரங்கள் பக்கமா போயிடுவோம். அதுதாங்க மிகப்பெரிய த்ரில்லர் கதை! ஏதோவொரு காலத்துல சில நட்சத்திரங்கள் உப்பி உடையுறப்போ, வெளிப்பட்ட துகள்கள்லதான் கோபால்ட் அப்படிங்கிற தனிமம் இருந்துச்சு. எப்படி தங்கம் ஒரு குறிப்பிட்ட அளவுதான் மண்ணுல இருக்குதோ, அதே மாதிரி இந்த கோபால்ட்டும் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருக்கும். மண்ணுல வளர்ற புல்லுல, தாவரங்கள்ல இந்த கோபால்ட்டும் இருக்கும். ஆடு, மாடு மாதிரி தாவரங்களைச் சாப்பிட்டு உயிர் வாழுற உயிர்கள், அவற்றுல இருக்கிற கோபால்ட்டை எடுத்து கோபாலமினை உற்பத்தி பண்ணும். அந்த கால்நடைகளோட பாலையோ அல்லது இறைச்சியையோ அல்லது அதுங்களோட ஈரலையோ நாம சாப்பிடுறது மூலமா நமக்கு கோபாலமின் கிடைக்குது. இந்தளவுக்கு பொக்கிஷமா கிடைக்கிற பி 12- ஐ நம்ம உடம்பு கிரகிக்கப் படுற பாடு இருக்கே... அதுதாங்க ஒரு மிகப்பெரிய த்ரில்லர் கதை. Vitamin Tale இளவரசியோட பயணம் வைட்டமின் பி 12-ங்கிற இளவரசி நம்ம உணவுல இருக்கிறப்போ, பள்ளிப் பருவத்துல இருக்கிறா. இந்த இளவரசி நம்ம இரைப்பைக்குள்ள போகணும்னா, நம்ம உமிழ்நீர்ல இருக்கிற 'ஆர் ஃபேக்டர்' அப்படிங்கிற ஒரு பள்ளிப்பருவத் தோழனோட உதவி வேணும். ஏன் தெரியுமா..? இரைப்பைங்கிற அமில தொழிற்சாலைக்குள்ள அரைச்ச உணவுகள்ல இருக்கிற வைட்டமின் பி 12 இளவரசி, அதுல இருந்து பிரிஞ்சி தனியா அம்போன்னு நிற்பா. தனியா நிற்கிற பி 12 இளவரசியோட கையை இந்த 'ஆர் ஃபேக்டர்'-ங்கிற விளையாட்டுத்தோழன் பிடிச்சிக்கிட்டா தான், இளவரசியோட பயணம் தொடரும். இல்லைன்னா, இளவரசியோட வாழ்க்கை அந்த இடத்துலேயே முடிஞ்சிடும். தோழன் 'ஆர் ஃபேக்டர்' இரைப்பைக்குள்ள தன்னோட தோழன் 'ஆர் ஃபேக்டரோட' பாதுகாப்புல இருக்கிற பி 12 இளவரசி, கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் கழிச்சி, அவனோடவே சேர்ந்து சிறுகுடலோட ஆரம்ப பகுதிக்கு வருவா. இந்த இடம் பி 12-ஓட கல்லூரிப்பருவம். அங்க சிறுகுடலைவிட பல பல கோடிக்கணக்குல பாக்டீரியா வில்லன்கள் இருக்கும். அங்க போயிட்டா பி 12 இளவரசி கதை முடிஞ்சு போச்சி. இங்கதான் ட்விஸ்ட்டே. மறுபடியும் தனியா நிற்பா இளவரசி. இந்த இடத்துல வேற சில ஆபத்துகள் காத்திருக்கும் பி 12 இளவரசிக்கு. கணையத்துல சுரக்கிற நீர் இவளை அழிச்சிடலாம். பித்த நீர் சுரந்து வர்றதால சூழ்நிலை மாறலாம். இந்தப் போராட்டத்துல, தன்னோட பள்ளிப்பருவ தோழனை இழந்து மறுபடியும் தனியா நிற்பா பி 12 இளவரசி. இளவரசியும், பெஸ்ட்டியும் மீட் பண்ணியிருக்க மாட்டாங்க. இந்த நேரத்துல பெஸ்ட்டி ஒருத்தர் வருவார். அவர் பேரு இன்டென்சிவ் ஃபேக்டர். இவரும் ஓர் இன்ட் ரஸ்ட்டிங் கேரக்டர்தான். இரைப்பையில இருக்கிற அமிலங்கள் உணவுல இருக்கிற பி 12-ஐ பிரிச்செடுக்கும் இல்லியா..? அதே அமிலங்கள்ல இருந்து உற்பத்தியானவர்தான் இந்த பெஸ்ட்டி. ஆனா, இரைப்பையில இருக்கிறப்போ பி 12 இளவரசியும், இந்த பெஸ்ட்டியும் ஒருத்தரையொருத்தர் மீட் பண்ணியிருக்க மாட்டாங்க. சில படங்கள்ல ஹீரோ, ஹீரோயின் பக்கத்து பக்கத்து வீட்லேயே இருப்பாங்க. ஆனா, பாதி படம் வரைக்கும் மீட் பண்ணியிருக்க மாட்டாங்க. அந்த மாதிரி வெச்சுக்கலாம். ஆனா, இவர் பெஸ்ட்டி. Vitamin Tales இளவரசியை சாப்பிட கோடிக்கணக்குல வில்லன்கள் இருக்கும். சரி, இரைப்பையில இருந்து சிறுகுடலோட ஆரம்ப பகுதிக்கு இளவரசி வருவான்னு மேலே இருக்கிற பத்தியில சொல்லியிருந்தேன் இல்லியா..? 7 முதல் 8 மீட்டர் நீளம் இருக்கிற சிறுகுடல்ல எக்கச்சக்க சுரப்புகள் நடக்கும். கூடவே, ஸ்கேட்டிங் மாதிரி சும்மா சர்ரு சர்ருன்னு ஏகப்பட்ட அலைபாயல்கள் வேற இருக்கும். கூடவே பி 12 இளவரசி கிடைச்சா சாப்பிட்டு ஏப்பம் விடுறதுக்கு கோடிக்கணக்குல வில்லன்கள் வேற இருக்கும்க. எல்லாம் பாக்டீரியாக்கள் தாங்க. இத்தனை ஆபத்துகள்ல இருந்தும் பி 12 இளவரசியைக் காப்பாத்துறது இந்த பெஸ்ட்டிதான். இப்படியே இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா கையைப் பிடிச்சிக்கிட்டு சிறுகுடலோட கடைசிப்பகுதி வரைக்கும் போவாங்க. இங்க தான் செம்ம க்ளைமேக்ஸ் இருக்கு..! Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! இளவரசியை மட்டும் அது கண்டுக்கவே கண்டுக்காது. உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மாதிரியான சத்துகளை தன்னோட ஆரம்ப பகுதியிலேயே சிறுகுடல் எடுத்துக்கும். ஆனா, அழகான, அரிதான இந்த பி 12 இளவரசியை மட்டும் அது கண்டுக்கவே கண்டுக்காது. சிறுகுடலைத் தாண்டி பெருங்குடல்ல பி 12 இளவரசி குதிச்சிட்டா, இதுவரைக்கும் பட்ட கஷ்டம் எல்லாமே வீணா போயிடும். ஏன்னா, அதுவோர் உப்புக்கடல். அங்க சிறுகுடலைவிட பல பல கோடிக்கணக்குல பாக்டீரியா வில்லன்கள் இருக்கும். அங்க போயிட்டா பி 12 இளவரசி கதை முடிஞ்சு போச்சி. இங்கதான் ட்விஸ்ட்டே. Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா? 'வாங்க இளவரசி'னு உள்ளே கூப்பிடும். சிறுகுடலோ கடைசிப்பகுதியில பி 12-க்காகவே காத்துக்கிட்டிருக்கிற இன்னொரு ரெசப்டார், தன்னோட கதவுகளைத் திறந்து 'வாங்க இளவரசி. உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம்'னு உள்ளே கூப்பிடும். தன் பெஸ்ட்டியோட அதுக்குள்ளே நுழையும் பி 12. ஆனா, இளவரசிக்கூட அதுக்கு மேல டிராவல் பண்ற வாய்ப்பு பெஸ்ட்டிக்கு கிடையாது. பெஸ்ட்டியை உடல் அழிச்சிடும். அங்க 'டிரான்ஸ்கோபாலமைன்' அப்படிங்கிற ஒரு ஹீரோ இருப்பார். அவர்கூட கைகோத்துக்கிட்டு ரத்தத்துல பயணம் பண்ணி, கல்லீரலுக்கு வந்து சேருவாங்க பி 12 இளவரசி. இதுக்கப்புறம் கல்லீரல் இளவரசியை பத்திரமா சேமிச்சு வெச்சுக்கிட்டு, மூளைக்கும், ரத்த செல்களை உற்பத்தி செய்ய எலும்பு மஜ்ஜைக்கும் அனுப்பும். ஸோ, நட்சத்திர வெடிப்புல ஆரம்பிச்சு நம்மோட கல்லீரல் வரைக்கும் வந்து சேர பி 12 இத்தனை கஷ்டங்களை சந்திக்குது. அது நமக்கு சத்தா கிடைக்க நம்ம உடம்பு அதைவிட படாத பாடு படுது. இதுதான் பி 12 இளவரசியோட கதை. இந்த இளவரசி இருக்கிற உணவுகளை சாப்பிடுங்க; ஆரோக்கியமா இருங்க. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 20 Sep 2025 6:45 am

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

ம னித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல். நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, பொருத்தி மறுவாழ்வு பெற முடியும். இவ்வளவு சிறப்புகளை உடைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் கல்லீரல் சிகிச்சை மருத்துவர் விவேக். விலா எலும்பின் வலதுபுறத்தில் 1.2 முதல் 1.5 கிலோவரையிலான எடையுடன் கல்லீரல் அமைந்திருக்கும். இதில் 50 சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும். மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிற்று வீக்கம், ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். 50 சதவிகிதத்துக்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தானே சரிசெய்துகொள்ள கல்லீரல் போராடும். மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கல்லீரலின் வேலை என்ன? உ டலில் 500 வகையான வேலைகளை இது செய்கிறது. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்துதான் சுரக்கின்றன. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துகளைச் சேகரித்துவைக்கும் தன்மை கல்லீரலுக்கு உண்டு. சில நேரங்களில் உணவுகளைத் தவிர்க்கும்போதும் உண்ணாவிரதம், நோன்பு இருக்கும்போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை, சேமித்துவைத்திருக்கும் சத்துகளிலிருந்து அளித்து ஈடுசெய்யும். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்வதால் கல்லீரலை, `பெரிய தொழிற்சாலை’ என்றே குறிப்பிடலாம். கல்லீரலை பாதிக்கும் நோய்கள் ந ம் நாட்டில் 100 சதவிகித கல்லீரல் நோயாளிகளில் 75 சதவிகிதம் பேருக்கு மது குடிப்பதால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. `ஹெபடைட்டிஸ்’ வைரஸ்களால் (Hepatitis A,B,C,D,E) `கல்லீரல் அழற்சிநோய்’ (Hepatitis), `கல்லீரல் கொழுப்புநோய்’ (Fatty Liver Disease), கல்லீரல் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தாமிரத்தை வெளியேற்ற முடியாதநிலையான `வில்சன் நோய்’ (Wilson’s Disease), இரும்புச்சத்து அதிகமாகச் சேரும் ‘அயர்ன் மெட்டபாலிஸம்’ (Iron Metabolism) எனக் கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் இருக்கின்றன. காசநோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டாலும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. சில வகை விஷங்களும் கல்லீரலைக் கடுமையாக பாதிக்கும். கல்லீரல் அழற்சி நோய் பொ துவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு, `கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் பரவும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும். அதேபோல ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் இ ந்த இரண்டு வைரஸ்களும் அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுவழியாகப் பரவக்கூடியவை. மஞ்சள்காமாலை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும். இந்த வைரஸ் தாக்குதலால் `கல்லீரல் செயலிழப்பு’ (Acute Liver Failure) அரிதாகவே ஏற்படும். பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் ஈ-க்கு தடுப்பூசி கிடையாது. ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் ஹெ படைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப் போடுவது, ஒரே ஊசியைக்கொண்டு பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். பா திக்கப்பட்ட தாயிடமிருந்தும் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு வைரஸ்களும் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றவே முடியாது. கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூல காரணமாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ்கள் இருக்கின்றன. இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இந்த இரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி கிடையாது. கல்லீரல் சுருக்கம் (Cirrhosis) க ல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் அதிகரிக்கும்போது கல்லீரலிலிருக்கும் செல்கள் செயலிழந்துவிடும். அந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டு கல்லீரலை இழுக்க ஆரம்பிக்கும். இதனால் அது சுருங்கத் தொடங்கும். இதுதான் கல்லீரல் சுருக்கநோய். கல்லீரல் சுருக்கத்துக்கு முந்தையநிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த நிலையில் உடல் சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். `ஃபைப்ரோ ஸ்கேன்’ மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். கல்லீரலில் சுருக்கம் தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் கொழுப்புநோய் க ல்லீரலின் உள்ளே கொழுப்பு அதிகமாகப் படிவதால் ஏற்படுவது கல்லீரல் கொழுப்புநோய். ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள். போதிய உடற்பயிற்சி இல்லாததால், சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறி கல்லீரலுக்குள் சேரும். கொழுப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அதில் வீக்கம் ஏற்படும். இது `நாஷ்’ (Nonalcoholic Steatohepatitis - NASH) என்று அழைக்கப்படுகிறது. இ ந்தியர்கள் பெரும்பாலும் அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்ட உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இந்த உணவுகளிலிருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி கல்லீரலில் படியும். கல்லீரலைப் பரிசோதித்து, அதில் வீக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், கல்லீரலிலுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் பாதிப்புகள் சரியாக வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும். கல்லீரல் புற்றுநோய் இ ந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் 15 நோய்களின் பட்டியலில் கல்லீரல் புற்றுநோய் 8-வது இடத்தில் இருக்கிறது. கல்லீரலில் ஏதாவது ஒரு மூலையில் புற்றுநோய் தோன்றும். இதைத் தொடக்கநிலையிலேயே கண்டறிவது மிகவும் கடினம். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் நோய் முற்றியநிலையில்தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஏற்கெனவே கல்லீரலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்க 70 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேனும் செய்ய வேண்டியது அவசியம். அதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும். வில்சன் நோய் ம னிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளும் உலோகங்களும் மிகவும் அவசியம். ஆனால், இவை தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். உலோகங்களின் அளவு அதிகரிக்கும்போதும் வெவ்வேறு பாதிப்புகள் உண்டாகும். உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பே `வில்சன் நோய்.’ முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன். அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது. நா ம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மூலம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்’ (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். இந்தப் புரதம் சரியான அளவு சுரக்காவிட்டால் கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் தாமிரம் ஆங்காங்கே தங்கிவிடும். கல்லீரலில் தாமிரம் அதிகமாகச் சேரும்போது மஞ்சள்காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்கோத்தல், கால்வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். க ல்லீரல் செயலிழப்பு 10, 15 வயதிலேயே ஏற்பட்டால் அதற்கு வில்சன் நோய்தான் மூல காரணமாக இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம் உருவாவதற்கு முன்னரே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம். பிரச்னை தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாற்றிப் பொருத்தப்படும் புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்’ சரியாகச் சுரந்து, தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும். அயர்ன் மெட்டபாலிஸம் சி லருக்குப் பிறக்கும்போதே மரபணு பிரச்னைகளால் இதயம், கணையம், கல்லீரல், மூட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர ஆரம்பித்துவிடும். இதைத்தான் `அயர்ன் மெட்டபாலிஸம்’ என்கிறோம். அதனால் இதயம், கணையம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய் ஆகியவை ஏற்படும். சருமம் கறுத்துப்போதல், கால் மற்றும் வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புச்சத்து அதிகமாகச் சேர்வதைத் தடுக்க `டிஃபெராக்ஸமைன்’ (Deferoxamine) என்ற மருந்து பரிந்துரைக்கப்படும். இந்தப் பிரச்னையால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்டகால இடைவெளிகளில் குறிப்பிட்ட அளவு ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். கல்லீரல் மாற்று சிகிச்சை எப்போது அவசியம்? பி ரச்னைக்கான அறிகுறிகள் வெளியே தெரிந்தாலே 50 சதவிகிதத்துக்கும் மேல் கல்லீரல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இத்தனை சதவிகிதம் பாதிப்புக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. ரத்த வாந்தி, வயிற்றில் நீர்க்கோத்தல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் பிரச்னையால் சிறுநீரகம் பாதிப்படைவது (Hepatorenal Syndrome) மற்றும் நுரையீரல் பாதிப்பு (Pulmonary Syndrome) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். `மெல்டு ஸ்கோர்’ ஒ ரு நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையைக்கொண்டு கல்லீரல் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். அது `மெல்டு ஸ்கோர்’ (Meld Score - Model for End Stage Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் வரம்பு 6 - 40வரை இருக்கும். அதில் நோயாளியின் மதிப்பெண் 15-ஐத் தாண்டிவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றி விகிதம் 90 சதவிகிதமாக இருக்கிறது. மூ ளைச்சாவு அடைந்த நபரிடம் தானம் பெற்று அல்லது உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. உயிருடன் இருப்பவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்து, ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே கல்லீரலை தானம் பெற முடியும். தானம் அளிப்பவர்களிடமிருந்து 65 சதவிகிதம் கல்லீரல் பெறப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்படும். கல்லீரல் தானம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மூன்று வாரங்களிலேயே கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். மஞ்சள்காமாலை ம ஞ்சள்காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், பித்தக்குழாயில் புற்றுநோய், கணையத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் அடைத்துக்கொள்வோருக்கும், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கும், காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். மதுப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், விஷம் உட்கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படலாம். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மஞ்சள்காமாலை பாதிப்பு உறுதிசெய்யப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு! ர த்த செல்கள் உடைவதால், பிறந்த குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு `போட்டோதெரபி’ (Phototherapy) எனப்படும் ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் பாதிப்பு சரியாகவில்லையென்றால் `பைலரி அட்ரீசியா’ (Biliary Atresia) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடலில் கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேற ஒரு குழாய் உண்டு. அதை, `பித்தக்குழாய்’ என்போம். அந்தக் குழாய் குடலில் சென்று இணையும். சில குழந்தைகளுக்கு கல்லீரலின் உள்ளே இருக்கும் பித்தக்குழாய் சரியாக வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், வெளியே இருக்கும் பித்தக்குழாய் வளர்ச்சியடையாமல் காணப்படும். இதனால் கல்லீரலுக்குள்ளேயே பித்தம் தங்கிவிடும். க ல்லீரலிலிருந்து குடலுக்குப் பித்தம் வெளியேற்றப்படாது என்பதால், குழந்தையின் மலம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், ‘ஹைடா ஸ்கேன்’ (HIDA Scan) செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு குழந்தை பிறந்து 100 நாள்களுக்குள் கல்லீரலுக்கு வெளியே இருக்கும் பித்தக்குழாயை குடலுடன் இணைக்கும் `கசாய்’ (KASAI) என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தை பிறந்து 100 நாள்கள் தாண்டிவிட்டன அல்லது கசாய் சிகிச்சை பலனளிக்கவில்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. மதுப்பழக்கமும் கல்லீரலும்! இ யல்பாகவே கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை உண்டு. அதனால் மது அருந்தும்போது அதை மருந்தாகக் கருத்தில்கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்திவிடும். அளவுக்கு மீறிக் குடிக்கும்போது கல்லீரலிலுள்ள செல்கள் அழிந்துபோகும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த நிலையை `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Alcoholic Liver Disease) என்கிறோம். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். கல்லீரல் கொழுப்புநோயைப்போலவே `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தால் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். அப்போது அழிந்துபோன செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்கி கல்லீரல் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பைக் கல்லீரலுக்கு வழங்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஒரு துளிகூட மது அருந்தாமல் தவிர்த்தால், ஆரோக்கியமான கல்லீரலைத் திரும்பப் பெறலாம். சோஷியல் டிரிங்கிங் மே ற்கத்திய நாடுகளில் வார இறுதி நாள்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் (சோஷியல் டிரிங்கிங்) உண்டு. மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிலும் பரவி, அதேபோல மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைவிட இந்தியர்கள் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் இந்தியர்களிடையே கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நகரத்திலுள்ள பெண்களையும் மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். தவிர்க்க வேண்டியவை கா ர்போஹைட்ரேட் நிறைந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, மைதா போன்ற உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற பதார்த்தங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். கல்லீரல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது வேறு பாதிப்புகளுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவற்றைச் சாப்பிட வேண்டும். இரவில் தாமதமாகச் சாப்பிடுவது கல்லீரலை பாதிக்குமா? கல்லீரல் கொழுப்புநோய் வருவதற்கான முக்கியக் காரணமே இரவில் தாமதமாகச் சாப்பிடுவதுதான். ‘காலையில் அரசனைப்போலவும், இரவில் பிச்சைக்காரனைப்போலவும் சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இரவில் எளிதாகச் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு வருமா? கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகையோர் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களாகவோ, உடற்பயிற்சி செய்யாதவர்களாகவோ இருந்தால் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் கொழுப்புநோய் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவையே கல்லீரலைப் பாதுகாக்கும் வழிகள். கீழாநெல்லி வேர் மஞ்சள்காமாலையை குணப்படுத்துமா? `மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி வேர் மருந்து’ என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் கீழாநெல்லி வேர் என்பது ஆதரவு மருந்தாகத்தான் (Supportive Medicine) வழங்கப்படுகிறது என்பதால் அதைச் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கீழாநெல்லி மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய மருந்துகளில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால், அவை கல்லீரலை பாதிக்கும். கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள்! பு ரொக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்: இவற்றை `குரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று குறிப்பிடுவார்கள். இவற்றில் `குளூக்கோசினோலேட்’ (Glucosinolate), சல்ஃபர் (Sulfur) போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன. இவை கொழுப்பைக் குறைப்பதுடன், கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, நொதிகளை அதிகம் சுரக்கவைக்கும். முட்கள் நிறைந்த பேரிக்காய்: முட்கள் நிறைந்த பேரிக்காய் கல்லீரலை பலப்படுத்தி நோய்கள் வராமல் காக்கும். இதில் ‘பெக்டின்’ (Pectin) எனும் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் `எல்.டி.எல்’ (LDL Cholesterol) எனும் கெட்ட கொழுப்பையும், மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும். அவகேடோ: அவகேடோவில் `குளூட்டதியோன்’ (Glutathione) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும். திராட்சை : சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் கல்லீரலைப் பாதுகாக்கக்கூடியவை. இவற்றிலுள்ள `ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol) எனும் வேதிப்பொருள் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைத் தடுக்கும். நிறைய விதைகளுள்ள திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது. நார்த்தம்பழம்: நார்த்தம்பழத்தில் `நாரின்ஜெனின்’ (Naringenin) எனும் வேதிப் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. கல்லீரலின் உள்ளே படியும் கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கவும் இது உதவும். பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய்: கல்லீரலைப் பாதுகாப்பதில் பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ‘மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் (Monounsaturated Fatty Acid) அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இவற்றிலுள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும். பூண்டு: வெள்ளைப்பூண்டில் `அலிசின்’ (Allicin) எனும் வேதிப் பொருள் உள்ளது. `செலினியம்’ (Selenium) தாதுவும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடல் எடையைக் குறைக்கும். கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கி, நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். மீன்: மீன்களில் `ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ (Omega 3 Fatty Acid) அதிகம் உள்ளது. இது உடலில் எங்கே நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அவற்றை வெளியேற்ற உதவும். கல்லீரல் வீக்கம், அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். மீனை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். காபி: காபியிலுள்ள `கஃபைன்’ (Cafeine), `பாராஸான்தைன்’ (Paraxanthine) எனப்படும் வேதிப்பொருளையும், `காவியோல்’ (Kahweol), `கேஃப்ஸ்டோல்’ (Cafestol) அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இவை மூன்றும் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ஹெபடைட்டிஸ் டி’ வைரஸ்! ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் டி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு, டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்று வைரஸ். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும். ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இணை, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸைத் தடுக்கலாம். - கிராபியென் ப்ளாக்உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள். உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

விகடன் 19 Sep 2025 6:35 pm

மஞ்சள் காமாலை : எதனால் ஏற்படுகிறது, குணப்படுத்துவது எப்படி? - விரிவான தகவல்கள்

க ல்லீரல்... மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கும். ஏறக்குறைய, பாதியளவு பாதிக்கப்பட்ட பின்னர்தான் இதன் பாதிப்பே வெளியில் தெரியவரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை.   ``கல்லீரல் ஒழுங்காகச் செயல்படாததால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை, கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடுவதால் வரக்கூடியது என, இரண்டுவிதமான காமாலைகள் உண்டு என்கிறார் மருத்துவர் விவேகானந்தன். பித்தம் ``கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும். பித்தப்பைக் கல், பித்தப்பைப் புற்றுநோய், பித்தக்குழாய் புற்றுநோய், கணையப் புற்றுநோய், குடலின் முதற்பகுதியான டியோடினம் (Duodenum) பகுதியில் புற்றுநோய் போன்ற பாதிப்புகளால் பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடும். அப்படிப் பாதிக்கப்படும்போது காமாலை உண்டாகும். கல்லீரலில் இருக்கிற செல்கள் செயல்படாததால் வரக்கூடிய மஞ்சள் காமாலையை 'ஹெப்பட்டோ செல்லுலர் ஜான்டிஸ் (Hepatocellular jaundice)' என்று சொல்வார்கள். இதை 'மெடிக்கல் ஜான்டிஸ்' என்றும் அழைக்கலாம். இது வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் கிருமிகளின் பாதிப்பு, மது அருந்துதல் போன்ற காரணங்களால் வரலாம்.  சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் பூச்சி மருந்து குடிப்பார்கள். அவர்களுக்கும் வரலாம். டி.பி போன்ற பாதிப்புகளுக்கு மாத்திரை சாப்பிட்டு கல்லீரல் பாதிப்படைந்தவர்களுக்கும் இந்த வகை காமாலை வரும். நம் நாட்டைப் பொறுத்தவரை, வைரஸ், மது, கொழுப்பு சார்ந்த ஈரல் நோய்கள், சில மாத்திரை மருந்துகளால் இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.  மஞ்சள் காமாலை 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும், கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். பாதிப்பு அதிகமாகிவிட்டால் பித்தப்பை உப்புக்கள் தோலில் படிந்து அரிப்பு உண்டாகும்.  மஞ்சள் காமாலை குறித்து நம் மக்களிடத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை. 'ஹெப்படைட்டிஸ்' வைரஸ் கிருமித் தொற்றால் உருவாகக்கூடிய மஞ்சள் காமாலையால் அதிகமான மக்கள் உயிரிழக்கிறார்கள். இது எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களைவிட அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டதட்ட 90 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.  மஞ்சள் காமாலை பாதிப்பு இருக்கும் பலர், அதை அறியாமல் வெறும் உடல் சூடுதான் என்று கவனிக்காமல் இருந்துவிடுகிறார்கள். வெயிலால், உடல் சூட்டால் சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் ஒரு நாளில் சரியாகிவிடும். கண்கள் மஞ்சளாக மாறாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசோனிக் பரிசோதனைகளின் மூலமாக இதைக் கண்டறிய முடியும். Liver functioning test 'ரத்தப் பரிசோதனையின் மூலமாக, பாதிப்பு எவ்வளவு இருக்கிறது', 'கல்லீரல் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது' (Liver functioning test) என்பதைக் கண்டறியலாம். அதுதவிர, எந்த வகை என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.  ஹெப்படைட்டிஸ்-ஏ அல்லது இ வைரஸ் பாதிப்பால் உருவாகும் மஞ்சள் காமாலை  ஒருவாரத்தில் சரியாகிவிடும். சி - வைரஸ் பாதிப்பு என்றால் குறைந்தது மூன்று மாதங்களாவது மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஹெப்படைட்டிஸ்- பி வைரஸ் பாதிப்பு என்றால் ஒரு வருடத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் வாழ்நாள் முழுவதும்கூட சாப்பிட வேண்டிய சூழல்வரும். மது அருந்தியதால் உண்டான மஞ்சள் காமாலை என்றால் மது அருந்துவதை நிறுத்தினால் நான்கிலிருந்து ஆறு மாதத்துக்குள் சரியாகிவிடும். கொழுப்பு காரணமாக உருவான மஞ்சள் காமாலை என்றால் அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, உடற்பயிற்சிகள் செய்தால் பாதிப்பைக் குறைக்க முடியும். கல்லீரலுக்குத் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இருந்தாலும், அது பாதிக்கப்பட்டிருக்கும்போது மேலும் பாதிப்பை அதிகரிக்கக்கூடிய எந்தச் செயலையும் செய்யாமல் இருக்க வேண்டும். முறையான மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றினால் மஞ்சள் காமாலை பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்கிறார் மருத்துவர் விவேகானந்தன்.

விகடன் 19 Sep 2025 6:10 pm

தினமும் நெல்லிக்காய் சாறு குடிக்கலாமா? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

` ஒ ரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த `ஒரு நாளைக்கு ஒன்று' பழக்கம் நெல்லிக்காய்க்கும் பொருந்தும். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல் நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்'... ஆனால், எந்த உணவாக, காயாக, பழமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உட்கொள்ளக் கூடாது. `தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துவது நல்லதல்ல' என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளியிடம் கேட்டோம்... ``அளவுக்கு மீறி எதையுமே சாப்பிடக் கூடாது. நெல்லிக்காய்ச் சாறும் அப்படித்தான். இப்படிக் குறிப்பிட்டு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. வெறும் நெல்லிக்காய் என்றால், ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுவோம். ஆனால், அதை ஜூஸாக்க வேண்டுமென்றால், நான்கு முதல் ஐந்து நெல்லிக்காய்களாவது தேவைப்படும். நான்கு, ஐந்து நெல்லிக்காயை ஒரே நேரத்தில் உட்கொள்வது, அதையும் தினமும் ஜூஸாக அருந்துவது பிரச்னைகளை ஏற்படுத்துவதில் ஆச்சர்யமில்லை. அப்படி என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? பார்க்கலாம்... * நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து நிறைந்தது. பொதுவாகவே, வைட்டமின் சி அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், அதிகளவு உட்கொள்ளும்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். அசிடிட்டி பிரச்னை இருப்பவர்களுக்கு, இது மேலும் தொந்தரவை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இதை தவிர்ப்பதே நல்லது. * இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் மற்றும் குடல் பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும். என்றாலும், அளவுக்கதிகமாக உட்கொண்டால் மலம் கடினமாகி பிரச்னையை ஏற்படும். அதிலும், தண்ணீரைக் குறைவாகக் குடிப்பவர்களுக்குப் பிரச்னையின் தீவிரம் அதிகமாக இருக்கும். * சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களும் நெல்லிக்காயை ஊறுகாயாகச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அதில் பதப்படுத்துவதற்கான உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த உப்பிலிருக்கும் சோடியம், பாதிப்பைத் தீவிரப்படுத்தும். * இதில் டையூரிடிக் (Diuretic) தன்மை இருக்கிறது. இது, தோலிலுள்ள ஈரத் தன்மையை வற்றச் செய்யும் தன்மைகொண்டது. அதிகளவு நெல்லிக்காயை ஜூஸாக அருந்தினால், உடல் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு இதனால் உடல் எடையும் குறையலாம். * நெல்லிக்கு உடல் சூட்டைக் குறைத்து, குளிர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. இதை, பழம் அல்லது சாறு என எப்படி உட்கொண்டாலும் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்கள் தீவிரமடையும். * நெல்லிகாய் அதிகமாகச் சாப்பிடுபவர்கள், அதிகளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துவது நல்லது. இல்லையென்றால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வு, முதிர்ச்சியான தோற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். * ஏதோ ஒரு நோய் பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருபவர்கள், நெல்லிக்காய் சாப்பிட்டால் அது எதிர்வினையை ஏற்படுத்தும். குறிப்பாக, இதயப் பிரச்னை இருப்பவர்கள், நெல்லிக்காயைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. * நெல்லிக்காய், லேசான தலை சுற்றலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. எனினும், உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தாது. தொடர்ச்சியாக தினமும் நெல்லிக்காய்ச் சாறு அருந்துபவர்களுக்குத் தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம். எப்போதாவது நெல்லிக்காய் சாப்பிட்டு அதனால் தலைசுற்றல் ஏற்பட்டால் பிரச்னையில்லை. ஆனால், தினமும் அருந்தி, இந்தப்  பாதிப்புகள் ஏற்பட்டால் , மருத்துவ ஆலோசனை பெற்று பிரச்னையை முதல்நிலையிலேயே சரிசெய்துவிட வேண்டும். ஆக, நெல்லிக்காயின் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென்றாலும், தொடர்ச்சியாக அதை அதிகமாகவோ, சாறாகவோ உட்கொள்ளக் கூடாது. எனவே, தொடர்ச்சியாக தினமும் நெல்லிச்சாறு அருந்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது’’ என்கிறார் அனிதா பாலமுரளி.  

விகடன் 19 Sep 2025 5:33 pm

Doctor Vikatan: வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா?

Doctor Vikatan: ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா, எந்த மாதிரி பயிற்சிகள் செய்வோர் புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும்?யாரெல்லாம் தவிர்க்க வேண்டும், வே புரோட்டீன் என்பது எல்லோருக்கும் ஏற்றதா, இது தவிர்த்து வேறு என்ன புரோட்டீன் சாப்பிடலாம்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர் புரோட்டீன் பவுடர் அல்லது சப்ளிமென்ட் என்பது எல்லோருக்கும் தேவைப்படுவதில்லை. ஒருவருடைய தினசரி உணவுத்தேவையே அதைப் பூர்த்தி செய்துவிடும் பட்சத்தில் தனியே புரோட்டீன் பவுடரோ, சப்ளிமென்ட்டோ அவசியமில்லை. அதாவது ஒருவரது தினசரி உணவில் சிக்கன், முட்டை, மீன், பருப்பு வகைகள், டோஃபு போன்றவை  போதுமான அளவு இடம்பெற்றால், புரதக் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. உணவுகள் தாண்டி, புரோட்டீன் சப்ளிமென்ட்டும் எடுக்க வேண்டாம். சிலருக்கு  சரியான நேரத்துக்கு, சரியாகச் சாப்பிட முடியாமல் போகலாம். சாப்பிடாமலேயே இருப்பதற்கு பதில், புரோட்டீன் பவுடர் குடிப்பது அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும்.  அதேபோல சைவ உணவுக்காரர்கள், வீகன் உணவுப்பழக்கமுள்ளோருக்கெல்லாம் உணவின் மூலம் போதுமான புரோட்டீன் கிடைக்காதபோதும், புரோட்டீன் பவுடர் உதவும். பாடி பில்டர்களுக்கும் இது அவசியமாகலாம்.  வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா? Doctor Vikatan: அதிக புரோட்டீன் உணவுகள் ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துமா? ரெகுலராக ஜிம் செல்பவர்களுக்கு, மஸுல் பில்டிங் செய்வோருக்கு, கொழுப்பைக் குறைத்து, தசை அடர்த்தியைத் தக்கவைக்க நினைப்போருக்கெல்லாம் வே புரோட்டீன் தேவைப்படலாம். ஏதேனும் உடல்நலக் கோளாறிலிருந்து மீண்டவர்களுக்கும், அடிபட்டு குணமானவர்களுக்கும் இந்தப் புரதம் நிச்சயம் உதவியாக இருக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு புரதத் தேவை குறைவாகவே இருக்கும் என்பதால் அவர்கள் இவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். வே புரோட்டீன் என்பது பாலில் இருந்து பெறப்படுவது. எனவே, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் எனப்படும் பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வே புரோட்டீனை பரிந்துரைக்க மாட்டோம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே, எந்தவிதமான புரோட்டீன் சப்ளிமென்ட்டையும் எடுத்துக்கொள்வது சிறந்தது. புரோட்டீன் பச்சைப் பட்டாணியிலிருந்து பெறப்படும்  Pea protein        இவர்களுக்கான சிறந்த மாற்றாக இருக்கும். அதே போல ஹெம்ப் புரோட்டீன், சோயா புரோட்டீன் என  நிறைய ஆப்ஷன்கள் உள்ளன.  அசைவ உணவுக்காரர்களுக்கு பெரும்பாலும் உணவின் மூலமே போதுமான புரோட்டீன் கிடைத்துவிடும். சைவ உணவுக்காரர்களுக்கு புரத உணவுகளே இல்லை என அர்த்தமல்ல. பருப்பு வகைகள், பனீர், டோஃபு என புரதம் அதிகமுள்ள உணவுகளைத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்?

விகடன் 19 Sep 2025 9:00 am

இவை ஆபத்தான சுய இன்பங்கள்; எச்சரிக்கும் பாலியல் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 258

எப்போதும் ’சுய இன்பம் நல்லதுதான். இதனால் அவர்களுடைய உடலுக்கு எந்த பாதிப்பும் வராது’ என்பார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ். அவர், ஆண், பெண் இருவருக்குமான ஆபத்தான செயல்களால் சிக்கலுக்கு ஆளாகி அவரிடம் சிகிச்சை வந்தவர்கள் பகிர்ந்தவற்றைத் தொகுத்து இந்தக் கட்டுரையில் எச்சரிக்கிறார்.  ஆபத்தான சுய இன்பங்கள் ஆணுறுப்பு துண்டாகலாம்.  ஆபத்தான சுய இன்பங்களை ஆண்கள் அதிகம் செய்கிறார்கள். கண்ணாடி பாட்டிலை ஆணுறுப்பில் மாட்டும் போது கண்ணாடி உடைந்து ஆணுறுப்பு துண்டாகலாம்.  சிலர் ஆணுறுப்பில் கம்பியை சொருகியும் பிளாஸ்டிக் குச்சிகளை சொருகியும் சுய இன்பம் அடைய முயற்சி செய்வார்கள்.  ஆணுறுப்பு கழுத்து நெரிக்கப்பட்டதுபோல இருக்கும். சிலர் விரலில் இருக்கிற மோதிரத்தை ஆணுறுப்பில் மாட்டி சுய இன்பம் செய்வார்கள். சிலர் மெட்டல் வளையங்களை வைத்தும் இப்படி செய்வார்கள். இப்படி செய்யும் போது ஆணுறுப்பு விறைப்பு அடைந்த நிலையில் மோதிரத்தை கழட்ட முடியாது. மோதிரம் மாட்டி இருப்பதால் ஆணுறுப்புக்கு வந்த ரத்த ஓட்டம் திரும்ப முடியாமலும் விறைப்பு தன்மையும் குறையாமலும் இருக்கும். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து கூட இன்னும் விறைப்பு தன்மை குறையவில்லை என வருவார்கள். ஆணுறுப்பு கழுத்து நெரிக்கப்பட்டதுபோல இருக்கும். மோதிரத்தை கட் செய்தால் தான் ஆணுறுப்பை காப்பாற்றவே முடியும்.  சுய இன்பம் கூச்சத்தையும் மன உளைச்சலையும்... இதே போன்ற ஆபத்தான சுய இன்பங்களை பெண்களும் செய்கிறார்கள். உடையக்கூடிய கண்ணாடி பொருள்களை வைத்து செய்வது... ஏதோ ஒரு காய்கறி, உதாரணத்துக்கு கேரட், கத்தரிக்காய், வாழைக்காய், வெள்ளரிக்காய் என்று காய்கறிகளை வைத்து சுய இன்பம் செய்வது என முயற்சி செய்யும் போது காய்கறி உடைந்து உறுப்புக்கள் மாட்டிக்கொண்டால் எமர்ஜென்சியாக மருத்துவரை பார்க்க நேரிடும். அது அவர்களுக்கு கூச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256 சிறுநீரகத்தொற்று சில பெண்கள் சின்னச் சின்ன மெட்டல் உருண்டைகளை பெண்ணுறுப்புக்குள் போட்டு விடுவார்கள். இது அவர்களுடைய சிறுநீரக பைக்குள் போய் விழுந்து எப்போதும் சிறுநீரகத்தொற்றுடனே அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.  `ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே' மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257 ஒரு எமர்ஜென்சி நிலை... உச்சகட்டம் போலவே சுய இன்பமும் நல்ல விஷயம்தான். அதனால் எந்தக் கெடுதலும் வராதுதான். என்றாலும் இப்படி வினோதமான ஆபத்தான முறைகளில் ஈடுபடாதீர்கள். அது, உங்களுக்கு நீங்களே தீங்கு செய்து, ஒரு எமர்ஜென்சி நிலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.  சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 18 Sep 2025 6:53 pm

நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்

வி ரல்களுக்கு அழகுசேர்ப்பது நகம். அது பெயர்ந்தாலோ, அடிபட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. அதோடு, கை கால்களின் அழகும் பாதிக்கப்பட்டுவிடும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து சின்னதாக ஒரு கல் தடுக்கினால், ஒரு கனமான பொருள் விழுந்தால் நகம் பெயர்ந்துவிடும் அல்லது அதில் அடிபடும். இந்தச் சூழலில் என்னென்ன சிகிச்சைகள் செய்யலாம், எப்படிப் பராமரிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்... நகம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்களிருந்தாலும், அடிபடுவதுதான் மிக முக்கியக் காரணம். இது மட்டுமில்லாமல், எந்த வலியும் இல்லாமல் நகம் ஒடிந்து, தானாகவே விழுவதும் (Onycholysis) உண்டு. இதற்கு பூஞ்சைத்தொற்று (Fungal Infection), சொரியாசிஸ் (Psoriasis) போன்ற பிரச்னைகளும் காரணமாகின்றன. அடிபடுதல்! சாலை விபத்துகள், கனமான பொருள் காலின் மேல் விழுதல், விளையாடும்போது அடிபடுவதாலும்கூட நகம் பெயர்ந்துவிடலாம். அடிபட்டதில் நகத்துக்கு அடியில் பாதிப்புகள் இருந்தால், அங்கே ரத்தம் தேங்கி உறைந்து, பின்னர் கறுத்துப்போய்விடும். சாலை விபத்துகளில் அல்லது பெரிய அளவில் அடிபட்டு நகம் பெயர்ந்திருந்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது. நகத்தில் சின்னதாக ஏற்படும் பாதிப்புகளுக்கு வீட்டிலேயே சில சிகிச்சைகளைச் செய்து சரிசெய்துவிடலாம். விமானத்தை இழுத்து வந்த யானைகள் : அந்தக் காலத்து யானைக் கதைகள் - ஆச்சர்ய வரலாறு நகத்தில் அடிபட்டால் செய்யவேண்டியவை என்னென்ன? * அடிபட்ட இடத்தைச் சோப் போட்டு, சுத்தமான நீரில் கழுவவும். * அடிபட்ட கால் அல்லது கைப் பகுதியை உயர்த்தி வைத்துக்கொள்ளவும். * நகத்தில் கட்டுப்போட்டு ரத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவும்.   * விரலிலிருந்து பெயர்ந்த நகத்தை ட்ரிம் (Trim) செய்யவும் அல்லது வெட்டிவிடவும். * நகம் பெயர்ந்த இடம் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். * அடிபட்ட நகம் மீண்டும் வளர்வதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை அதே இடத்தில் மேலும் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். (Fungal Infection) நகத்தின் அடிப்பகுதியில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டாலும், அது பெயர்ந்துகொள்ளும். அதை குணப்படுத்துவதும் கடினம். முதியவர்கள், சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு அடிபட்டால், நகத்தில் பூஞ்சைத்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பூஞ்சைத்தொற்றுக் காரணமாக நகம் பெயர்வதற்கான சில அறிகுறிகள்... * நகம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்துக்கு மாறும். * நகத்தின் நுனிப்பகுதி வீக்கமடையும். * சிலருக்கு அந்த இடத்தில் சீழ் வடியவும் வாய்ப்பு உண்டு.   * நகம் மிக எளிதாக உடையும் தன்மையிலிருக்கும்.   இதை குணப்படுத்த பூஞ்சைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அறுவைசிகிச்சைகூட செய்யவேண்டி வரலாம். பூஞ்சைத்தொற்றிலிருந்து தப்பிக்க சில வழிகள்... * நகத்துக்கு அடியில் மண் அல்லது தூசிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும். * வளரும் நகங்களை முறையாக அவ்வப்போது வெட்டி விடவும். * கால்களை ஈரமில்லாமல் அவ்வப்போது உலர்வாக வைத்துக்கொள்ளவும். * கை, கால் நகத்தில் அடிபட்டால் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். சொரியாசிஸ் சொரியாசிஸ், நீண்ட காலத்துக்கு நோய்தடுப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டால் உண்டாவது. சிலருக்கு வரும் சொரியாசிஸ் நகங்களையும் பாதிக்கலாம். இந்த நோயில் நகத்துக்கு அடியிலிருக்கும் தோல் செல்கள் இறந்துபோவதால், நகம் தனியாகப் பிரிந்து, சில நாள்களில் விழுந்துவிடும். சொரியாசிஸுக்கு சிகிச்சை செய்துகொள்வதோடு, நகங்களை அவ்வப்போது வெந்நீரில் நனைப்பது அதைக் காப்பாற்ற உதவும். நகத்தை எப்போது நீக்குவது? நகம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும்போது அதை முழுமையாக நீக்க முயற்சிக்கக் கூடாது. அது வளரும்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கும். அப்போது, விடுபட்ட பகுதியை மட்டும் நீக்கி, பெயர்த்துக்கொண்டுவரும் நகத்தின் முனைப்பகுதியை மென்மையாக்கிவிட வேண்டும். மேலும் அதோடு அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெயர்ந்த நகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால் அங்கே நோய்தொற்று ஏற்பட்டு, காயத்தை ஆறவிடாமல் தடுத்துவிடும். நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள்... * சீழ் வருதல் * காய்ச்சல் * அதிகமாக வலித்தல் * வீக்கம், சிவந்துபோதல். நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டால், நகத்தை முழுமையாக இழக்கவும் நேரிடலாம். எனவே நகங்களை முறையாக வீட்டில் பராமரிப்பது சிறந்தது. Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?

விகடன் 18 Sep 2025 11:13 am

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?

Doctor Vikatan:  நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன். அவர்களது தோற்றமே நீரிழிவு வந்ததைக் காட்டிக் கொடுக்கிறதே, அது ஏன். நீரிழிவு வந்தால் ஆரோக்கியமான தோற்றம் சாத்தியமில்லையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நீரிழிவு என்பது உடலியக்கம் சார்ந்த (Metabolism)  ஒரு குறைபாடு.  டைப் 1 மற்றும் டைப் 2 என நீரிழிவில் இரண்டு வகை உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உடல் எடை குறைவது இருக்கும். இவர்களது உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் அல்லது அந்தச் சுரப்பு அறவே இருக்காது. உடலிலுள்ள செல்கள், திசுக்கள் சரியாக இயங்க வேண்டும் என்றால், அவை குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள வேண்டும். குளுக்கோஸானது செல்களுக்குள் நுழைவதற்கான வாயில்தான் இன்சுலின். இது சுரக்கவே இல்லை என்றாலோ, குறைவாகச் சுரந்தாலோ, குளுக்கோஸ் உள்ளே போகாது. அதன் விளைவாக செல்களுக்கு தேவையான எனர்ஜி கிடைக்காது. வெளியில் இருந்து வரும் உணவிலிருந்து எனர்ஜி கிடைக்காதபட்சத்தில், உடலில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு மற்றும் தசை அடர்த்தியையும் எனர்ஜிக்காக உண்ண ஆரம்பிக்கும்.  அதுபோன்ற நிலையில்தான் டைப் 1 நீரிழிவாளர்கள், உடல் மெலிந்து காட்சியளிப்பார்கள். நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன்? டைப் 2 நீரிழிவில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் (insulin resistance) என்ற நிலை வரும். அதாவது இதை இன்சுலின் எதிர்நிலை என சொல்லலாம். முதலில் உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அது இல்லாத நிலையாக மாறும். இந்த வகை நீரிழிவிலும், முதலில் சொன்னதுதான் நடக்கும். அதாவது செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் தசைகளை உடல் ஆற்றலாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும்.  நீரிழிவாளர்கள் உடல் மெலிந்து காணப்பட, நீர்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். அதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும். சருமம் வறண்டு, சுருங்கிப் போவதாலும் மெலிந்து காணப்படுவார்கள். ரத்தச் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருப்பது, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, நல்ல கொழுப்பு, நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம் போன்றவற்றைப் பின்பற்றும்போது ஆரோக்கியான தோற்றத்துடன் இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     Doctor Vikatan: நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா?

விகடன் 18 Sep 2025 9:00 am

Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்'சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்

''மலட்டுத்தன்மைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இன்றைய தலைமுறையினரிடம் அதிகரிக்கும் தவறான உணவுப்பழக்கம்தான் முக்கியக் காரணம். அது, ஆண்களின் பாலியல் ஹார்மோனான `டெஸ்டோஸ்டீரான்’ சுரப்பை பாதித்து, தந்தையாகும் வாய்ப்பு குறையக் காரணமாக இருக்கிறது’’ என்கிறார் டயட்டீஷியன் கற்பகம். டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் முக்கியத்துவம் பற்றியும், அதன் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள் பற்றியும் விளக்குகிறார் அவர். Men' Health “ஆண், பெண் இருவர் உடல்களிலும் டெஸ்டோஸ்டீரான் இருக்கிறது. இது, அட்ரீனலின் சுரப்பி மற்றும் விரைப்பைகளிலிருந்து சுரக்கிறது. பெண்களிடம் மிகவும் குறைவாகவும், ஆண்களிடம் அதிகமாகவும் காணப்படும் இந்த ஹார்மோன்தான் ஆண்களுக்குத் தனித்துவமான குரலைத் தருகிறது; முகத்தில் தாடி, மீசையை வளரச் செய்கிறது; தலைமுடி வளரவும், விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் காரணமாகிறது. அதனால்தான் இந்த ஹார்மோனை 'ஆண் பாலியல் ஹார்மோன்’ என்கிறது மருத்துவம். ஆணின் விந்தணு உற்பத்தி, தசை அடர்த்தி, எலும்புகளின் ஆரோக்கியம், ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி போன்ற பல்வேறு பணிகளிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது. வயது அதிகரிக்கும்போது இந்த ஹார்மோன் சுரப்பது குறையத் தொடங்கிவிடும். சிலருக்கு இளம் வயதில் தவறான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதாலும் டெஸ்டோஸ்டீரான் சுரப்பது குறையத் தொடங்கும். இதனால், ஆண்களுக்கு விரைப்புத்தன்மை அடைவதிலும், விந்தணு உற்பத்தியிலும் குறைபாடு ஏற்பட்டு தாம்பத்ய உறவில் பிரச்னை ஏற்படும். அத்துடன் எலும்பு மற்றும் தசைகள் வலிமை இழப்பது என வேறு பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். Men' health கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின் டி, மக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகள் உள்ள உணவுகள் டெஸ்டோஸ்டீரான் சுரப்பை ஊக்கப்படுத்தும். அதிகப்படியான உடல் பருமன், அதிக மன அழுத்தம் போன்றவற்றால் இந்த ஹார்மோன் சுரப்பு குறையும். குறிப்பாக, 'கார்டிசால்’ ஹார்மோனின் அளவு உடலில் அதிகரித்தாலும், இதன்் அளவு குறைந்துவிடும். இதன் அளவை அதிகரிக்க உதவும் சில உணவுகளை ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டும். மாதுளை: மாதுளையிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும். மாதுளையை ஜூஸாக்கி அருந்துவதைவிட அப்படியே பழமாகச் சாப்பிடுவது நல்லது. சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிலுள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை கார்டிசால் அளவைக் குறைத்து, டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கச் செய்யும். Balance diet மீன்: மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் டி நிறைவாக உள்ளன. இவற்றை அடிக்கடிச் சாப்பிட்டு வரலாம். முட்டை: முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருக்கிறது. இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பைத் தூண்டக்கூடியது. ஆண்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. நட்ஸ்: பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் துத்தநாகச் சத்து அதிகம் உள்ளது. அத்துடன் இவற்றிலுள்ள சாச்சுரேட்டடு, மோனோ அன்சாச்சுரேட்டடு கொழுப்புகள் டெஸ்டோஸ்டீரான் உற்பத்திக்கு உதவக்கூடியவை. கீரை வகைகள்: கீரைகளில் டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கும் மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, வாரம் இரண்டு முறையாவது கீரை உணவுகளைச் சாப்பிட வேண்டும். பூசணி குறைந்து வரும் 'Y' குரோமோசோம் ஜீன்கள்... ஆண் இனமே இல்லாமல் போகுமா?! - ஆய்வு முடிவு சொல்வதென்ன?! பால்: பாலில் கால்சியம் மட்டுமன்றி வைட்டமின் டி சத்தும் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலிமையடையும்; ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் குறைபாடு நீங்கும். பூசணி விதைகள்: பூசணி விதைகளில் துத்தநாகச் சத்து நிறைந்திருக்கிறது. அவ்வப்போது இதை வறுத்து ஸ்நாக்ஸ்போலச் சாப்பிடலாம். Health: பருவமடையும் ஆண் குழந்தைகளின் உடலில் நிகழும் 8 மாற்றங்கள்! தவிர்க்க வேண்டியவை... தினமும் 6 முதல் 8 மணி நேரம்வரை தூக்கம், 30 நிமிட உடற்பயிற்சி, மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துதல், 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். துரித உணவுகள், பிளாஸ்டிக் கன்டெய்னர் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 18 Sep 2025 7:11 am

IKIGAI : ஜப்பானியர்கள் போல நாமும் 100 ஆண்டு வாழலாமா?

நூறு வயது வரை வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இந்த ஆசை, ஜப்பானில் இருக்கிற ஒகினாவா (Okinawa) தீவு மக்களை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக நிஜமாகிக்கொண்டே இருக்கிறது. உலகளவில் நூறு வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிற ஐந்து நீல மண்டலங்களில், ஜப்பானில் இருக்கிற 'ஒகினாவா' தீவும் ஒன்று. அதென்ன நீல மண்டலம்..? உலகளவில், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழும் மக்கள் அடங்கிய பகுதி 'நீல மண்டலங்கள்' என குறிப்பிடப்படுகிறது. Japanese' 100 years secret கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர்! ஜப்பானில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3-வது திங்கட்கிழமையன்று 'முதியோர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட முதியோர் கணக்கெடுப்பின்படி, ஒகினாவா தீவில் 99,763 பேர் நூறு வயதை கடந்து வாழ்வதாக 'தி வயர்' பத்திரிகை தெரிவிக்கிறது. இந்த முதியவர்கள், தங்கள் வேலையை தாங்களே செய்துகொள்கிற அளவுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி. அந்த ரகசியத்தின் பெயர் இகிகை (ikigai) சரி, அப்படி என்னென்ன செய்து இந்தத் தீவைச் சேர்ந்தவர்கள் நூறு வயதைக் கடந்தும், ஆரோக்கியமாகவும் வாழ்கிறார்கள்..? இதே கேள்வி ஹெக்டர் கார்சியா (Hector Garcia) மற்றும் பிரான்செஸ்கோ மிராலஸ் (Francesc Miralles) என்கிற இரண்டு எழுத்தாளர்களும் எழுந்தது. அந்தத் தீவில் தங்கி, அங்கிருக்கும் மூத்த குடிமக்களுடன் பேசி, அவர்களுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கேட்கிறார்கள். அவர்களும் அதை வெளிப்படுத்துகிறார்கள். அந்த ரகசியத்தின் பெயர் இகிகை (ikigai). ஜப்பானிய மொழியில் 'iki' என்றால் வாழ்தல். 'gai' என்றால் அர்த்தம். அதாவது, ஒகினாவா தீவு வாழ் மக்கள் வாழ்வதற்கான அர்த்தம் தெரிந்து வாழ்வதுதான், அவர்களுடைய இந்த நீண்ட ஆயுளின் ரகசியம் என்பது தெரிந்திருக்கிறது. அந்த 'இகிகை' வாழ்க்கை முறையை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்கள். அதன் பெயர் 'The Japanese secret to a long and happy life.' The Japanese secret to a long and happy life அந்த ரகசியம் * நீங்கள் வாழ்வதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அர்த்தத்தை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். அர்த்தமுள்ள வாழ்க்கை ஆயுளையும் தரும். இதுதான் 'இகிகை'யின் அடிப்படை. * உங்கள் தட்டில் இருக்கிற உணவில் 80 சதவிகிதம் மட்டுமே உண்ணுங்கள். அதாவது, நீங்கள் சாப்பிட விரும்புவதில் 80 சதவிகிதம் மட்டும் உண்ணுங்கள். வயிற்றை நிரப்பாதீர்கள். பதற்றமில்லாமல் வாழுங்கள்..! * எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். வயது அதிகமானவர்கள், பெரும்பாலும் சுறுசுறுப்பாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவர்களுடைய சுறுசுறுப்பே அவர்களுடைய நீண்ட ஆயுளுக்குக் காரணம். * உங்கள் வாழ்க்கையை பதற்றமில்லாமல் நிதானமாக கையாளுங்கள். அது உங்கள் வாழ்க்கை மீது உங்களுக்கே நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். அது உங்கள் வாழ்க்கைக்கு அதிக அர்த்தத்தைச் சேர்க்கும். முதல் பாயிண்ட்டில் சொன்னதுபோல, அர்த்தமுள்ள வாழ்க்கை ஆயுளையும் தரும். இனிகை வாழ்க்கை முறையில் இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. Japanese' 100 years secret Radio Taiso என்கிற உடற்பயிற்சி * இதுவோர் உடற்பயிற்சி. பெயர் Radio Taiso. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு ரேடியோ உடற்பயிற்சி நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதால்தான் இதற்கு இந்தப் பெயர். 'Taiso' என்றால் ஜப்பானிய மொழியில் உடற்பயிற்சி என்று அர்த்தம். 1928-ம் வருடம் ஜப்பானிய மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த உடற்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர் விளக்கம் இந்த உடற்பயிற்சி உடலின் அனைத்து முக்கியமான தசைகளுக்கும் வலுவை அளிக்குமாம். ஒகினாவா தீவில் இருப்பவர்கள் மட்டுமல்ல, ஜப்பானில் இருக்கிற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தினமும் இந்த உடற்பயிற்சியை செய்கிறார்கள். வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே செய்யப்படுகிற இந்த உடற்பயிற்சியும் ஒகினாவா மூத்தவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். Radio Taiso என்று டைப் செய்தால், யூ டியூபில் வீடியோக்கள் கொட்டுகின்றன. Japanese' 100 years secret 102 வயதில் மலையேற்றம்; Guinness World Record-ஐ சாத்தியப்படுத்திய ஜப்பான் நாட்டு முதியவர்! நண்பர்கள் சூழ் வாழ்வு * நல்ல நண்பர்கள் சூழ இருப்பதும் நீண்ட ஆயுளைத்தரும் என்கிறது ஒகினாவா மக்களின் வாழ்க்கை. தங்கள் கிராமங்களில் இருக்கிற நண்பர்களுடன் ஓய்வு நேரத்தை பேசியும், விளையாடியும் கழிப்பார்களாம். இந்த வகை மகிழ்ச்சி நீண்ட ஆயுளைத்தரும் என்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி ஒன்றும் உறுதிபடுத்தியிருக்கிறது. * சிரியுங்கள்... மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியானவற்றையும் உங்களுக்குத் தந்தவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். * இறந்த காலத்தைக் குறித்து வருத்தப்படாமல், எதிர்காலத்தைக் குறித்து அச்சம்கொள்ளாமல் நிகழ்காலத்தைக் கொண்டாடி வாழுங்கள். நாமும் 100 வயது வாழ முயற்சி செய்வோமா..? இவையனைத்துமே நம் வீட்டுப் பெரியவர்களும் சொன்னவைதானே..! நம் பாட்டனும், பாட்டியும்கூட இப்படித்தானே வாழ்ந்தார்கள் என்று தோன்றுகிறதல்லவா..? ஆம், இவைதான் ஜப்பானியர்களின் 100 வயதைக் கடந்த ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியம். இன்றைக்கு அவற்றையெல்லாம் மறுபடியும் 'இகிகை' என்ற ஜப்பானிய வார்த்தையில் காலம் நமக்கு நினைவூட்டுகிறது. அவற்றை முடிந்தவரை பின்பற்றி, வாழ்வியல் நோய்கள் அண்டாமல், நாமும் 100 வயது வாழ முயற்சி செய்வோமா..? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 17 Sep 2025 4:01 pm

Doctor Vikatan: கழுத்தில் படிந்திருக்கும் கருமை, நீரிழிவின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: என் வயது 26. கடந்த சில வருடங்களாக எனக்கு கழுத்தைச் சுற்றி கருமையான படலம் இருக்கிறது. நான் அது சருமம் தொடர்பான பிரச்னை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது நீரிழிவின் அறிகுறியாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா, கழுத்தில் ஏற்பட்ட கருமைக்கு என்ன காரணமாக இருக்கும், என்ன தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா கழுத்தில் கரும்படலம் ஏற்படும் பிரச்னை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். கழுத்தில் சங்கிலி அணிவதால் ஏற்படுவதாகவும், அழுக்கு என்றும் நினைத்துக்கொண்டு மிகவும் ஆக்ரோஷமாகத் தேய்த்துக கழுவுவதையெல்லாம் செய்கிறார்கள்.  சிலருக்கு  கழுத்து மட்டுமன்றி, முழங்கை மூட்டுகள், கால் மூட்டுகள், முகம்,  நெற்றி போன்ற இடங்களிலும் கரும்படலம் வரலாம். கழுத்தில் ஏற்படும் இந்தக் கருமை பிரச்னைக்கான காரணம், அழுக்கோ, சங்கிலி அணிவதோ இல்லை. சருமம் தடித்துப் போவதுதான் காரணம்.  இதை 'அகன்தோசிஸ் நைக்ரிகன்ஸ்' (Acanthosis nigricans) என்று சொல்வோம்.  சருமம் தடிமன் ஆவதால் அந்தப் பகுதியில் நிறமும் மாறுகிறது. சிலருக்கு இது 'ப்ரீ டயாபட்டீஸ்' எனப்படும்  நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, நீங்கள் சர்க்கரைநோய்க்கான பரிசோதனையைச் செய்துபார்த்து இதை உறுதிசெய்துகொள்ளலாம். அதிக மாவுச்சத்து, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்பு அதிகம் சாப்பிடுவோர், துரித உணவுகள் சாப்பிடுவோருக்கு இந்தப் பிரச்னை பரவலாக பாதிப்பதைப் பார்க்கலாம். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வருவதைப் பார்க்கலாம்.  கழுத்தில் படிந்திருக்கும் கருமை... நீரிழிவின் அறிகுறியா? Doctor Vikatan: விடாமல் தொடரும் அரிப்பு... ப்ரீ டயாபடீஸ்தான் காரணமா? புறத்தோற்றம் சம்பந்தப்பட்டது என்பதால், சரும மருத்துவரை அணுகி, இதற்கான க்ரீம் மற்றும் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கும்படி பலரும் கேட்பதுண்டு. ஆனால், அவற்றையெல்லாம்விட முக்கியம் வாழ்க்கை முறை மாற்றமும், எடைக்குறைப்பும்தான். ஆரோக்கியமான சரிவிகித உணவுகளைச் சாப்பிடும்போதும், அதிகப்படியான எடையைக் குறைக்கும்போதும் இந்த பாதிப்பு குறைவதையும் கழுத்தின் நிறம் மாறுவதையும் பார்க்கலாம். பெரியவர்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சரிபார்த்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளைச் செய்ய வேண்டும். நீரிழிவு, உடல் பருமன் போன்ற எதுவும் காரணமில்லை என்ற பட்சத்தில், சரும மருத்துவர், இந்தப் பிரச்னைக்கு வேறு சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?

விகடன் 17 Sep 2025 9:00 am

சீரகத்தண்ணீர் &தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத்துவர் விளக்கம்!

சோஷியல் மீடியாவில் 'டீடாக்ஸ் வாட்டர்' என்றாலே, வெள்ளரி, எலுமிச்சை, புதினா சேர்த்து அழகான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குடிப்பதுதான் ட்ரெண்டிங். இதையே தயாரிப்பதுபோல வீடியோ போட்டால் லைக்ஸ் பிச்சுக்கும். சரி, அன்றாட வாழ்க்கையில் எல்லா நாளும் இந்த டீடாக்ஸ் வாட்டரை தயாரிக்க முடியுமா என்றால், வாய்ப்புக் குறைவு. இதற்கு என்ன தீர்வென்று திருவாரூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ர. ரெங்கராஜ் அவர்களிடம் கேட்டோம். சீரகத்தண்ணீர் ''உங்க சமையலறையிலேயே சீரகம், கொத்தமல்லி (தனியா)ன்னு ரெண்டு மருத்துவரை வெச்சுக்கிட்டு, ஏன் மருந்தைத் தேடி அலையுறீங்க..? சீரகத் தண்ணி, கொத்தமல்லித் தண்ணி குடிச்சாலே பாதி பிரச்னைகள் பறந்து போயிருமே. சீரகமும், கொத்தமல்லியும் வாத, பித்த, கப தோஷத்திலிருந்து உடலைச் சமநிலையில் வைப்பதற்கு உதவி செய்யும் இரண்டு சமனிகள் என்று சொல்லலாம். வயது வரம்பு இல்லாமல் பெரியவர்களிலிருந்து இருந்து சிறியவர்கள் வரைக்கும், கர்ப்பிணிப் பெண்கள் எல்லாருமே சீரகத் தண்ணீர், கொத்தமல்லி அருந்தலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துறது, உடல் சூட்டைக் குறைக்கிறது, வயிறு பிரச்னைகளைச் சரி செய்யுறதுன்னு இந்த ரெண்டு தண்ணியும் செய்யாத வேலையே இல்லை. இதுமட்டுமில்லாம, வாயில் வர்ற புண்கள், துர்நாற்றம் இரண்டுக்குமே இது ஒரு சரியான தீர்வு. கொத்தமல்லித்தண்ணீர் சிறுநீரகப் பிரச்னை இருக்கிறவங்க மருத்துவரை கேட்டுவிட்டு கொத்தமல்லி தண்ணீர் குடியுங்க. சீரகத் தண்ணீர் இதுக்கும் ஒரு படி மேல..! எல்லாருமே எடுத்துக்கலாம். எந்த மருந்தா இருந்தாலுமே தொடர்ந்து 48 நாள் எடுத்துக்கணும், பிறகு 30 நாள் இடைவேளை விட்டு திருப்பி எடுத்துக்கணும். `குளிர்காலத்திலும் இருவேளை குளியல் அவசியம்... ஏன் தெரியுமா?' - விளக்கும் இயற்கை மருத்துவர்! எப்படி தயாரிப்பது..? சீரகத் தண்ணியையும், கொத்தமல்லித் தண்ணியையும் ரெண்டு முறையில குடிக்கலாம். ஒண்ணு, கஷாயமா காய்ச்சிக் குடிக்கிற முறை. இன்னொண்ணு மருத்துவ பயன்பாட்டுக்கு. மருத்துவ பயன்பாட்டுக்கு: 15 கிராம் சீரகம் அல்லது 15 கிராம் கொத்தமல்லி எடுத்து அதுல 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது 2 டம்ளர் அளவுக்கு வற்றி வரும் வரை காய்ச்சி குடிக்கலாம். 3 வயசுல இருந்து 5 வயது வரைக்கும் இருக்கிற குழந்தைகள், 15 முதல் 30 மில்லி வரைக்கும் அருந்தலாம். 5 வயசுக்கு மேல் இருக்கிறவங்களுக்கு 50 முதல் 100 மில்லி வரை கொடுக்கலாம். இதற்கு ஒரு சித்த மருத்துவரோட ஆலோசனை ரொம்ப முக்கியம். சித்த மருத்துவர் ர. ரெங்கராஜ். சீரகத்தில் இத்தனை நன்மைகளா? அல்சர் முதல் மைக்ரேன் வரை... `சீரகம்' சீர் செய்யும் 9 பிரச்னைகள் கஷாயத்துக்கு... 10 கிராம் சீரகம் அல்லது கொத்தமல்லியை ஒரு லிட்டர் தண்ணீர்ல போட்டு 100 மில்லி மட்டும் ஆவியானதும் குடிக்கலாம். பக்க விளைவுகள் இல்லாதது என்றாலும், ஏற்கெனவே இவற்றை குடிச்சி பழகினவங்க அப்படியே ஃபாலோ பண்ணலாம். முதல்முறை குடிக்கவிருக்கிறவங்க, ஒரு சித்த மருத்துவரோட ஆலோசனையைக் கேட்டு குடிக்க ஆரம்பிக்கலாம்'' என்கிறார் சித்த மருத்துவர் ர. ரெங்கராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 17 Sep 2025 6:57 am

Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு, அதிகபட்சமாக எத்தனை ஸ்டென்ட்வரை பொருத்தலாம்?

Doctor Vikatan: இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், அதிகபட்சம் எத்தனை ஸ்டென்ட் வரை பொருத்திக் கொள்ளலாம். ஸ்டென்ட் பொருத்திக் கொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஆபத்து இல்லை என அர்த்தமா, அவர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்போது, சில அடைப்புகளை ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட்டிங் சிகிச்சைகள் மூலம் சரிசெய்ய முடியும்.  ரத்தக்குழாய்களின் அளவு மற்றும் அவற்றில் ஏற்பட்ட அடைப்பின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து ஸ்டென்ட் பொருத்தப்படும். பொதுவாக ஒன்று முதல் அதிகபட்சம் நான்கு ஸ்டென்ட் வரை பொருத்துவதுதான் சகஜம். ஆனால், சில நபர்கள், பைபாஸ் அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ள மாட்டோம் என்ற மனநிலையில் உறுதியாக இருப்பார்கள்.  அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான ஸ்டென்ட் பொருத்தப்பட வேண்டி வரலாம். ஒரே சமயத்தில் இல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்களையும் பார்க்கலாம். எனக்குத் தெரிந்து ஒரு நபருக்கு 12 ஸ்டென்ட் வரை பொருத்தப்பட்டதையும் பார்த்திருக்கிறேன்.  ரத்தக்குழாயில் அடைப்பு என்பது மீண்டும் மீண்டும் வரும் பிரச்னை. ஸ்டென்ட் பொருத்துவதன் மூலம், அந்த நபருக்கு ரத்தக்குழாயில் அடைப்போ, மாரடைப்போ வராது என்று சொல்லவே முடியாது. இதயநலம் அந்த ஆபத்துகளைத் தவிர்ப்பது என்பது நம் கையில்தான் உள்ளது. ரத்தச் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.  புகை மற்றும் மதுப்பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.  உணவு, உடற்பயிற்சி, உறக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.  இதயநலம் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானால், சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். அதன் மூலம் ரிஸ்க்கை ஓரளவு குறைக்க முடியும். மற்றபடி, இதற்கான நிரந்தர தீர்வு என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, வாழ்வியலில் அக்கறை செலுத்துவதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  Doctor Vikatan: 60 வயது கணவருக்கு ரத்தக்குழாய் அடைப்பு, 20 வயது மகனுக்கும் டெஸ்ட் அவசியமா?

விகடன் 16 Sep 2025 9:00 am

Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர் விளக்கம்

தினமும் 10 ஆயிரம் அடி நடந்தால் ஆரோக்கியமாக இருப்போம் என்று நாமெல்லாரும் நம்பிக் கொண்டிருக்க, ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் 'Interval Walking போங்க. நல்லாயிருப்பீங்க' என்கிறார்கள். அதென்ன Interval Walking? ஈரோடைச் சேர்ந்த விளையாட்டு மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்யா விக்னேஷ் கோபிநாத் விளக்குகிறார். Japanese Walking ''ஒரு நாளில் 10,000 அடிகள் நடப்பதற்கு குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் தேவைப்படும். ஜப்பானிய Interval Walking-ஐ சிரமமின்றி குறைந்த நேரத்தில் செய்யலாம். பலனை எடுத்துக்கொண்டால், அதே அல்லது அதற்கும் மேல் கிடைக்கும். Interval Walking என்றால் என்ன? இடைவெளி நடைப்பயிற்சி என்பதுதான் இதன் அர்த்தம். இந்த நடைப்பயிற்சியில் 3 நிமிடம் வேகமாக நடக்க வேண்டும். அடுத்த 3 நிமிடம் சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி மாற்றி மாற்றி 5 முறை நடக்க வேண்டும். அதாவது, ஒரு முறைக்கு முதல் 3 நிமிடம் வேகமாகவும், அடுத்த 3 நிமிடம் சாதாரணமாகவும் நடக்க வேண்டும். இதுபோல 5 முறை செய்ய வேண்டும். இதை செய்வதற்கு மொத்தம் 30 நிமிடம் ஆகும். ஒரு வாரத்தில் 5 அல்லது 6 நாள்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். முதன் முதலில் ஆரம்பிக்கும்போது, 2 முறை (12 நிமிடம்) மட்டும் செய்யலாம். உடல் பழகிய பிறகு மெதுவாக 5 முறை வரை கூட்டிக்கொள்ளலாம். Interval Walking பலன்கள் என்னென்ன..? 'இடைவெளி நடைப்பயிற்சி' தொடர்பாக ஜப்பானில் நடைபெற்ற ஆராய்ச்சிகள், இது தரும் நன்மைகளை பட்டியலிட்டிருக்கின்றன. * உடல் எடை குறைதல் * ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த கட்டுப்பாடு * தசை வலிமை * வளர்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரித்தல் * இதய ஆரோக்கியம் மேம்படல் * நினைவாற்றல், கவனிக்கும் திறன் அதிகரித்தல் * நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாதல் * நல்ல மனநலம் மற்றும் நல்ல தூக்கம் ஜப்பானிய 'இடைவெளி நடைப்பயிற்சி' யாருக்கெல்லாம் ஏற்றது? * இளைஞர்கள் முழுமையாக 5 முறை செய்யலாம். * நடுத்தர வயதில் இருப்பவர்கள், முதியவர்கள் ஒருநாளைக்கு 2 அல்லது 3 முறை செய்ய தொடங்கலாம். * சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப் பயனுள்ள நடைப்பயிற்சி இது. ஆனால்,லோ சுகர் பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. * கர்ப்பிணிப்பெண்கள், மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டும். Interval Walking கவனிக்க வேண்டியவை... * திடீரென அதிக வேகத்தில் தொடங்கக்கூடாது. முதலில் வார்ம் அப் அவசியம். * இந்த நடைப்பயிற்சியை செய்கையில் உடலில் எங்காவது வலி ஏற்பட்டால் உடனே நிறுத்த வேண்டும். * உடலில் தண்ணீர்ச்சத்து அவசியம். நடைப்பயிற்சியின்போது நீர்ச்சத்து குறைந்தால் மயக்கம் வரலாம், கவனம். பிஸியான வாழ்க்கையிலும் செய்யலாம் ! 'எனக்கு 30 நிமிடம் நடக்க நேரம் கிடைப்பதில்லை' என்பவர்கள், காலை 15 நிமிடம், மாலை 15 நிமிடம் என பிரித்தும் செய்யலாம். அப்படி செய்தாலும் பலன் ஒரே மாதிரிதான் கிடைக்கும். காலையில் செய்யும் போது நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும். மாலையில் செய்யும் போது மன அழுத்தம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் வரும். டாக்டர் சத்யா விக்னேஷ் கோபிநாத் Walking: எங்கு, எப்படி, எத்தனை நாள்; எவ்வளவு நேரம்; 8 வாக்கிங்; பின்னோக்கி நடத்தல்-A to Z தகவல்கள்! உணவில் கவனம்! நடைப்பயிற்சி செய்பவர்கள், புரதம் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான மாவுச்சத்து மற்றும் காய்கறிகள் அவசியம். அதிக எண்ணெய் உணவுகள், ஜங்க் உணவுகள் தவிர்க்கவும். நடைப்பயிற்சிக்கு முன்பும் பின்பும் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். Pregnancy Health: கர்ப்பிணிகள் ஜிம்முக்கு போகலாமா; உடற்பயிற்சி செய்யலாமா? நீண்ட கால பலன்கள்! * 3 முதல் 6 மாதங்களில் எடை குறைவது தெளிவாக தெரியும். * ஒரு வருடத்தில் இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு, உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஆனால், தொடர்ச்சியாக நடந்தால் மட்டுமே பலன் தரும். அதுதான் உடல் நலனுக்கு உண்மையான சாவி'' என்கிறார் டாக்டர் சத்யா விக்னேஷ் கோபிநாத். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 16 Sep 2025 7:14 am

Doctor Vikatan: உப்பை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதா, இந்துப்பு சிறந்ததா?

Doctor Vikatan: என்னுடைய அலுவலக நண்பர், தினமும் உப்பில்லாத உணவுகள்தான் கொண்டு வருவார். அவர்கள் வீட்டில் பெரும்பாலும் உப்பில்லாத சமையல்தானாம்.  தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்துப்பு உபயோகிப்பதாகவும், அதுதான் ஆரோக்கியமான நடைமுறை என்றும் சொல்கிறார். உப்பை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் எல்லோருக்கும்  அவசியமானதா, ஆரோக்கியமானதா... ரெகுலர் உப்புக்கு பதில் இந்துப்பு பயன்படுத்துவது சரியானதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்      ஸ்பூர்த்தி அருண் உப்பு நம் உடலுக்கு மிகவும் முக்கியம். அதே நேரம் அதன் அளவு அதிகரிக்கும்போது ரத்த அழுத்தம், இதய பாதிப்பு என நிறைய பிரச்னைகள் வரலாம். இதற்கெல்லாம் பயந்துகொண்டு சிலர் உணவில் உப்பே சேர்ப்பதில்லை. அதுவும் தவறனாது. சோடியம் என்ற உப்பானது நம் உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்து. அதை அறவே தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அளவோடு சேர்த்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த சோடியமானது, நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் இயல்பிலேயே இருக்கும்.  உணவின் மூலம் கிடைக்கும் உப்புச்சத்து குறித்து நாம் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. உடலில் சோடியம் அளவு அதிகரிக்காது என குழப்பிக்கொண்டு நிறைய பேர் வழக்கத்தைவிட அதிக அளவில் இந்துப்பை சேர்த்துக்கொள்கிறார்கள். Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என்பது உண்மையா? எனவே, அதைத் தாண்டி நாம் அளவுக்கதிமாக உப்பு சேர்க்கும்போதுதான் பிரச்னையாகிறது. சோடியம் குறைபாட்டால் தசைகள் மற்றும் நரம்புகள் தொடர்பான பாதிப்புகளும் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். பொதுவாக 1.5 முதல் 2 கிராம் அளவைவிட குறைவாக உப்பு சேர்த்துக்கொள்வது பாதுகாப்பானது. உப்பே வேண்டாம் என யாருக்கும் அறிவுறுத்துவதில்லை. சிலருக்கு குறை ரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் இருப்பதாகச் சொல்லும்போது நிறைய தண்ணீர் குடிக்குமாறும், அதில் சிட்டிகை உப்பு சேர்த்துக் குடிக்கும்படியும் அறிவுறுத்துவோம். அது நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். உப்பை அறவே தவிர்ப்பது சரியானதல்ல. அளவோடு இருக்கும்போது எதுவும் ஆபத்தாவதில்லை. பிங்க் ஹிமாலயன் சால்ட் எனப்படும் இந்துப்பு ஆரோக்கியமானது என நினைத்து நிறைய பேர் இன்று உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  சாப்பாடு சுத்திகரிக்கப்படாத கல் உப்பை போல இந்துப்பிலும் கூடுதலாக சில தாதுச்சத்துகள் இருக்கும். அதைவைத்து அது ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அது உப்பே இல்லை, அதை எடுத்துக்கொள்வதால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்காது என குழப்பிக்கொண்டு நிறைய பேர் வழக்கத்தைவிட அதிக அளவில் இந்துப்பை சேர்த்துக்கொள்கிறார்கள்.  உங்களுக்கு விருப்பமானால் இந்துப்பு பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் 98 சதவிகிதம் சோடியம் உள்ளதுதான் என்பதை மறக்க வேண்டாம். அதனால் அதையும் பரிந்துரைக்கப்பட்ட அளவுதான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 15 Sep 2025 9:00 am

PCOS: ஈஸியா பிசிஓஎஸ்-ஸை கன்ட்ரோல் பண்ணலாம்! - வழிகாட்டும் சீனியர் டயட்டீஷியன்!

எங்கோ ஒருசிலருக்கு இருந்த பிசிஓஎஸ் இப்போது பல இளம் பெண்களுக்கும் இருக்கிறது. உடல் பருமனில் ஆரம்பித்து குழந்தையின்மை வரைக்கும் பிசிஓஎஸ்ஸினால் வருகிற பிரச்னைகள் எக்கச்சக்கம். இதற்கு ஒரே வழி பிசிஓஎஸ்ஸை கட்டுக்குள் வைப்பதுதான். அதற்கு என்னென்ன சாப்பிட வேண்டும் என சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சீனியர் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். PCOS தினையும் கம்பும்... ’’பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசியைக் குறைத்துவிட்டு சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பிசிஓஎஸ் இருப்பவர்கள் தினை, கம்பு இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால், இந்த சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம். உங்களுக்கு பிடிக்கும் என்றால் பார்லிகூட சாப்பிடலாம். கேழ்வரகை தவிர்த்து விடலாம். சிலர் கேழ்வரகு சாப்பிடுவார்கள். ஆனால், கேழ்வரகு மாவில் தோசை, கஞ்சி ஆகியவை செய்து சாப்பிடும்போது அதிலும் மாவுச்சத்து அதிகமாக இருக்கும். அதனால், கேழ்வரகை தவிர்த்து விடலாம். பிசிஒஎஸ் இருப்பவர்கள் தினை அல்லது கம்பு சாப்பிடுவதற்கு முன்னால் அவற்றை வெறும் வாணலியில் வறுத்து, அரைத்து பயன்படுத்தலாம். அல்லது ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைத்து பயன்படுத்தலாம். அல்லது முளைக்கட்டி பயன்படுத்தலாம். pcos மாவுச்சத்து கட்டுப்பாடு தேவை இந்த சிறுதானியங்களில் புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவற்றுடன் நார்ச்சத்தும் நிறைவாக இருப்பதால் குறைந்த அளவுதான் சாப்பிட முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் மாவுச்சத்தை அதிகம் எடுத்துக்கொள்ள முடியாது. நீரிழிவு போலவே பிசிஓஎஸ் பிரச்னைக்கும் மாவுச்சத்து கட்டுப்பாடு தேவை என்பதால், நான் மேலே சொன்ன முறையில் சிறுதானியங்களை சாப்பிடவும். தினமும் தேங்காய் சட்னி தவிர்த்து விட்டு... தினை அல்லது கம்பை ஊற வைத்து இட்லி, தோசைக்கு செய்வது போலவே உளுந்தையும் ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைத்து தோசையாக சுட்டு காலை வேளைகளில் சாப்பிடலாம். உடன் தினமும் தேங்காய் சட்னி தவிர்த்து விட்டு புதினா சட்னி, தக்காளி சட்னி, கறிவேப்பிலை சட்னி என்று சாப்பிடலாம். சிறுதானிய தோசை ரவை அல்லது சேமியா சாப்பிடக்கூடாது. பிசிஒஎஸ் இருப்பவர்கள் சம்பா கோதுமை ரவையை தாராளமாக சாப்பிடலாம். ஆனால், வழக்கமான ரவை அல்லது சேமியாவை சாப்பிடக்கூடாது. சம்பா கோதுமை ரவையுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும்போது மாவுச்சத்து குறைந்து நார்ச்சத்து அதிகரிக்கும். இது பிசிஓஎஸ் இருப்பவர்களுக்கு உடல் எடை கூடாமல் தடுக்கும். சிகப்பு அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி முற்பகல் 11 மணிக்கு மோர் குடிக்கலாம். பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை சாப்பிடலாம். மதிய நேரத்தில் சிகப்பு அரிசி அல்லது கறுப்பரிசி அல்லது கைக்குத்தல் அரிசி மூன்றில் ஏதோ ஒன்று உங்கள் தட்டில் கால் பாகம் இருக்க வேண்டும். அடுத்த கால் பாகம் பருப்பு, சாம்பார், சுண்டல், சிக்கன், முட்டை, மீன் போன்ற புரத உணவுகள் இருக்க வேண்டும். மீதமுள்ள பாதி தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். அசைவம் சமைக்கையில் பொரித்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிட வேண்டும். கிரேவியிலும் எண்ணெய் குறைவாக இருப்பது நல்லது. green vegetables பெண்களை அதிகம் பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்... எப்படி எதிர்கொள்வது? #PCOSAwarenessMonth பச்சை நிற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளைப் பொறுத்தவரை நாட்டு காய்கறிகள், பச்சை நிற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பிசிஓஎஸ் உடன் தைராய்டும் இருந்தால் முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புராக்கோலி ஆகியவற்றை எப்போதாவது சாப்பிடலாம். கேரட்டை தவிர பூமிக்கு கீழே விளைகிற மற்ற கிழங்கு வகைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. Health: சினைப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்கும் `குமரிப்பக்குவம்’ - வீட்டிலேயே செய்யலாம்! | pcod நாட்டு சர்க்கரையைக்கூட தவிர்க்க வேண்டும். இவர்களும் சர்க்கரையை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, நாட்டு சர்க்கரையைக்கூட தவிர்க்க வேண்டும். டீ, காபி குடிக்கும்போது சற்றுக் கூடுதலாக பால் விட்டு அருந்தினால் சர்க்கரை போடாவிட்டாலும் சுவையாக இருக்கும். இந்த உணவுமுறையை பின்பற்றி வந்தால், உடல் பருமன் இருந்தால் குறையும். உடல் உறுப்புகளில் இருக்கிற வீக்கமும் குறையும். கூடவே, பிசிஓ எஸ்-ஸும் கட்டுக்குள் வரும்’’ என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 15 Sep 2025 6:36 am

Doctor Vikatan: 50+ தாண்டியும் பீரியட்ஸ், மெனோபாஸ் தள்ளிப்போவது பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: என் சித்திக்கு 50 வயதாகிறது. என் அம்மாவின் தங்கை அவர். என் அம்மாவுக்கு 50 வயதில் பீரியட்ஸ் நின்று மெனோபாஸ் வந்துவிட்டது. சித்திக்கு இன்னும் தொடர்கிறது. ஆனால், பீரியட்ஸ் சுழற்சி முறைதவறி வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை மெனோபாஸுக்கான சராசரி வயது 51. ஆனால், இதை பல விஷயங்கள் பாதிக்கலாம். சில பெண்களுக்கு சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம். புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு இப்படி சீக்கிரமே மெனோபாஸ் வரலாம்.  மெனோபாஸுக்கு முந்தைய நிலையை 'பெரிமெனோபாஸ்' என்று சொல்வோம்.  சிலருக்கு இது 40 வயதில் ஆரம்பிக்கலாம்.  இன்னும் சிலருக்கு  30 வயதின் இறுதியில் கூட ஆரம்பிக்கலாம்.  மெனோபாஸின் பிரதான அறிகுறியாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும். சினைமுட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் என இரண்டுவித ஹார்மோன்கள் சுரக்கும். இதில் ஈஸ்ட்ரோஜென் என்பது பிரதான பெண ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவானது பெரிமெனோபாஸ் காலத்தில் சமநிலையின்றி அதிகரிக்க ஆரம்பிக்கும். அதாவது உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும்.  மெனோபாஸ் Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்? இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம்  அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால், அந்த நாள்களில் அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராது. இத்தகைய மாற்றமானது டீன் ஏஜின் இறுதியிலும், இனப்பெருக்க வயதின் இறுதியிலும் நடக்கும் இயல்பான விஷயம். உடல் சூடாவது, தூக்கமின்மை, வெஜைனா பகுதியில் வறட்சி போன்று மெனோபாஸுக்கான அறிகுறிகள், பெரிமெனோபாஸ் காலத்திலேயே சிலருக்கு ஆரம்பிக்கும். 12 மாதங்களுக்கு தொடர்ந்து பீரியட்ஸே வரவில்லை என்றால் ஒரு பெண் மெனோபாஸை அடைந்துவிட்டார் என எடுத்துக்கொள்ளலாம். முறைதவறிய மாதவிலக்கானது 7 நாள்கள் இடைவெளியில் வந்தால் ஒருவர் பெரிமெனோபாஸின் ஆரம்பநிலையில் இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம்.  அதுவே அந்த இடைவெளியானது 60 நாள்கள் என நீடித்தால்  அந்தப் பெண்  மெனோபாஸ் நிலையில் இருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாம். மெனோபாஸுக்கான அறிகுறிகளுடன் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, எலும்புத் தேய்மானம் போன்றவையும் வரலாம். கேன்சர் சிகிச்சையில் இருந்தாலோ, கர்ப்பப்பையை அகற்றிவிட்டு சினைப்பைகள் மட்டும் இருக்கும் நிலையிலோகூட சராசரி வயதுக்கு முன்பே மெனோபாஸ் வரலாம்.  கர்ப்பப்பையை அகற்றியதால் மாதவிடாய் நின்று போயிருக்கும். ஆனால், சினைப்பையில் உள்ள ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் அவர்களுக்கு சப்போர்ட்டை கொடுத்துக் கொண்டிருக்கும். இவர்களுக்கு சராசரி வயது வரை சினைப்பைகள் இயங்காது என்பதால் வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே மெனோபாஸ் ஆகலாம்.  மாதவிடாய் குடும்ப பின்னணியில்  எல்லோருக்கும் இள வயதிலேயே மெனோபாஸ் வந்திருந்தால் உங்கள் சித்திக்கும் அப்படி வர வாய்ப்புகள் உண்டு. பெரி மெனோபாஸ் காலத்தில் உங்கள் சித்திக்கு அதிக ப்ளீடிங் இருந்தால், அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின் மாற்றும் அளவுக்க அதிகமாக இருந்தாலோ, 7 நாள்களுக்கு மேல் ப்ளீடிங் தொடர்ந்தாலோ, இரண்டு பீரியட்ஸுக்கு இடையில் ப்ளீடிங் இருந்தாலோ, 21 நாள்களுக்கு முன்பாக பீரியட்ஸ் வந்தாலோ, அடிவயிற்றில வலி இருந்தாலோ மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் சரியாக இருக்கும். மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது, உங்கள் சித்தியும் மெனோபாஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. கவலை வேண்டாம்.  உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விகடன் 14 Sep 2025 9:00 am

Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

ஒவ்வாமை ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஒன்று, அடுக்குத்தும்மல். அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்; ஒவ்வாமையைத் தவிர்ப்பது எப்படி..? விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாலகுமார். தூசி தவிர்த்தால், தும்மல் குறைக்கலாம் வைப்பர் பொருத்திய ஹெல்மெட் 1. காற்று மாசுபாடு, போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், வைப்பர் பொருத்திய ஹெல்மெட்டுகளைப் (Wiper Helmet) பயன்படுத்தலாம். போர்வைகளை வெந்நீரில் அலசலாம். 2. படுக்கை விரிப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாய்ப்பிருந்தால், போர்வைகளை வெந்நீரில் அலசலாம். வாரம் ஒரு முறை படுக்கைகளையும் திரைச்சீலைகளையும் கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும். Sneezing தலைமுடி, நீங்கள் அணிந்த செருப்பு அல்லது ஷூவில்... 3. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது உங்கள் துணி, தலைமுடி, நீங்கள் அணிந்த செருப்பு அல்லது ஷூவில் ஒளிந்திருக்கும் ஒவ்வாமையைத் தூண்டும் ஒட்டுண்ணிகள் உங்களுக்குப் பிரச்னையைத் தரலாம். எனவே, வீடு திரும்பியதும் வியர்வை அடங்கும்வரை ஓய்வெடுக்க வேண்டும். அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும். Walnuts: மருத்துவ குணங்கள், சத்துகள் மிகுந்தது; உலர்ந்த வால்நட், ஊறவைத்த வால்நட் - எது பெஸ்ட்? அழுக்குத்துணிகள்! 4. அறைகளில் அழுக்குத்துணிகளைச் சேமித்து வைப்பது ஒவ்வாமைக்கு வழிவகுக்கும் என்பதால், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. செருப்பு, ஷுக்களை வீட்டின் உள்ளே கொண்டுவரக் கூடாது. Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக்கிறதா? `மாஸ்க்’ அணிந்துசெல்வது நல்லது. 5. வீட்டைவிட்டு வெளியே செல்லும் நேரங்களில், `மாஸ்க்’ அணிந்துசெல்வது நல்லது. இவை தவிர, எத்தகைய சூழல் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி, தொடர்ச்சியான தும்மலைத் தருகிறது என்பதைக் கண்டறிந்து, முடிந்தவரை அதைத் தவிர்க்க வேண்டும். தேவையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்னரே, மருத்துவரின் ஆலோசனையுடன் ஒவ்வாமைத் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்வது நல்லது. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR ைன

விகடன் 14 Sep 2025 7:06 am

Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது கடுமையான தலைவலி; என்ன கரணம், தீர்வு உண்டா?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி ஒரு வருடமாகிறது. கடந்த சில மாதங்களாக தாம்பத்திய உறவின் போது கடுமையான தலைவலியை உணர்கிறேன்.  சிறிது நேரத்தில் அது சரியாகிறது என்றாலும், இந்த வலியை நினைத்தால் தாம்பத்திய உறவே பயத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய தலைவலிக்கு என்ன காரணம், தீர்வுகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீங்கள் குறிப்பிடும் இந்தத் தலைவலி எல்லோருக்கும் வருவதில்லை. அதே சமயம், நீங்கள் பயப்படுகிற அளவுக்கு பிரச்னைக்குரிய ஒன்றும் இல்லை. இந்த வகை தலைவலியானது, சிலருக்கு தாம்பத்திய உறவுக்கு முன்பும் வரலாம், சிலருக்கு தாம்பத்திய உறவுக்குப் பிறகும் வரலாம். இன்னும் சிலருக்கு உறவின் போதான உச்சக்கட்டத்தின் போதும் வரலாம்.   இதற்கு 'ஆர்கஸம் ஹெட்டேக்' (Orgasm headache) என இன்னொரு பெயரும் உண்டு.  இந்தத் தலைவலி, சில நிமிடங்கள் தொடங்கி, சில மணி நேரம் வரை நீடிக்கலாம். தாம்பத்திய உறவின் போது கழுத்து மற்றும் தலைப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் வழக்கத்தைவிட அதிக டென்ஷனுக்கு உள்ளாவதுதான் இந்த வகை தலைவலிக்கு பிரதான காரணம்.  தாம்பத்திய உறவின் போது இயல்பாகவே ரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கலாம். அதுவும் தலைவலியை ஏற்படுத்தலாம். உங்களுக்கு ஏற்கெனவே மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளதா என்று தெரியவில்லை. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும் தாம்பத்திய உறவின்போது,  தலைவலி தூண்டப்படலாம். உறவுக்கு முன்பும் பிறகும் நிறைய தண்ணீர் குடியுங்கள். உறவின் நடுவில் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டால், உடனடியாக தாம்பத்திய உறவை நிறுத்த வேண்டும். உறவை நிறுத்தியதும் தலைவலி குறையும் வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி இப்படி தலைவலி வருகிறது என்றால் மருத்துவ ஆலோசனை பெறவும்.  மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகளை உறவுக்கு முன்பே எடுத்துக்கொள்ளலாம். தாம்பத்திய உறவு என்பது கிட்டத்தட்ட உடற்பயிற்சி போன்றதுதான் என்பதால், அந்த நேரத்தில்  உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதன் காரணமாகவும் தலைவலி வரும். எனவே,  உறவுக்கு முன்பும் பிறகும் நிறைய தண்ணீர் குடியுங்கள்.  இவற்றை எல்லாம் கடந்து, தலைவலியோடு வாந்தி, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொண்டால், உடனே மருத்துவரை அணுகுவதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Doctor Vikatan: தாம்பத்திய உறவின் போது வலி; சிசேரியனால் ஏற்பட்ட பாதிப்பு.. தீர்வு உண்டா?

விகடன் 13 Sep 2025 9:00 am

பாலில் நீர் ஊற்றினால், ஈரலை அலசினால் வைட்டமின் B12 வீணாகிவிடுமா?

செல்போனை எந்த நேரத்தில் ஓப்பன் செய்தாலும், வைட்டமின் பி 12 குறைபாடு, அதன் அறிகுறிகள், தீர்வுகள் என ரீல்ஸாக கொட்டுகிறது. பி 12 வைட்டமின் நீரில் கரையக்கூடிய வைட்டமின். அப்படியென்றால், பி 12 நிறைந்த பாலில் தண்ணீர் கலந்தாலோ, ஆட்டு ஈரலை நீரில் அலசினாலோ அவற்றில் இருக்கிற வைட்டமின் கரைந்து போய்விடாதா? சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நோய் நிபுணர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம். B Vitamins கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை... ’’வைட்டமின் ஏ.டி.ஈ. மற்றும் கே ஆகிய நான்கும் கொழுப்பில் கரையக்கூடியவை. நம் உடலின் செல்களில், செல்களின் சுவர்களில் கொழுப்பு இருக்கிறது. இதனால், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை நம்முடைய உடம்பு அதிகமாகச் சேர்த்து வைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. இதன் விளைவாக, உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி மூளையில் அழுத்தம் அதிகமாகி, கண் பார்வை பாதிக்கப்படலாம்; தோல் வறண்டு போகலாம். பி 12 போல நீரில் கரையும் வைட்டமின்கள் உடலுக்கு அதிமுக்கியமான வைட்டமின்கள்கூட அளவுக்கு மீறினால் பிரச்னை தருவதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அதனால்தான், இந்த வகை வைட்டமின் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையைப் பெற்று சாப்பிட வேண்டும் என்கிறோம். ஆனால், பி 12 போல நீரில் கரையும் வைட்டமின்கள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகத் தங்கி விஷத்தன்மையை ஏற்படுத்தாது. Mutton Liver Recipe ஒவ்வொரு செல்களுக்கும் பொதிந்திருக்கிறது. பாலில் அதிகமாகத் தண்ணீர் சேர்ப்பதாலோ அல்லது ஈரலை நீரில் சுத்தம் செய்வதாலோ பி 12 வீணாகாது. ஏனென்றால், இந்த வைட்டமின் பால் மற்றும் ஈரலின் ஒவ்வொரு செல்களிலும் பொதிந்திருக்கிறது. அதனால், பி 12 எப்படியும் நம் உடலுக்குள் சென்றுவிடும். நம்முடைய உடல்தான், அது அதிகமாகும்போது உடலில் இருக்கிற நீரில் கரைத்து வெளியேற்றிவிடும். Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! பி 12 மாத்திரையை நீண்ட காலம் சாப்பிடுபவர்கள்.. நீங்கள் பி 12 ஊசி போட்டுக்கொள்கிறீர்கள் என்றால், அதன் வீரியம் உங்கள் உடலில் எத்தனை காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்து மாதத்துக்கு ஓர் ஊசியோ அல்லது மூன்று மாதத்துக்கு ஓர் ஊசியோ போட்டுக்கொள்ளலாம். பி 12-ஐ மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அது மல்ட்டி வைட்டமின் மாத்திரையிலோ அல்லது பி காம்ப்ளெக்ஸ் மாத்திரையிலோ கலந்துதான் வரும். அதனால், பி 12 மாத்திரையை நீண்ட காலம் சாப்பிடுபவர்கள், வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு போட்டுக்கொண்டாலே போதும். ஊசியாகப் போட்டுக்கொள்ளும்போது, பி 12 நிச்சயம் உடலில் சேர்ந்துவிடும். மாத்திரையாகப் போடும்போதும் உடலில் சேர்ந்துவிடும் என்றாலும், பி 12 குறைபாட்டின் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், ஒருமுறை இதற்கான இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கலாம். Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' - வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும். பி12 வைட்டமினை ஊசியாக எடுத்துக்கொண்டாலும் சரி, மாத்திரையாக எடுத்துக்கொண்டாலும் சரி, ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை. உடல் அது தேவைக்கு உறிஞ்சியதுபோக, மீதத்தைச் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும்’’ என்கிறார் டாக்டர் பாசுமணி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 13 Sep 2025 7:08 am

Doctor Vikatan: 15 வயது மகளுக்கு தைராய்டு, கவனச் சிதறலை ஏற்படுத்தும் உடல்பருமன்; எடை குறையுமா?

Doctor Vikatan: என் மகளுக்கு 15 வயதாகிறது. சமீபத்தில் அவளுக்கு தைராய்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து வருகிறது. அதை நினைத்து அவளால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளது உடல் எடையைக் குறைக்க வாய்ப்பு உண்டா... எப்படிப்பட்ட பயிற்சிகள் தேவை... உணவுப்பழக்கம் எப்படி இருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் பதின்ம வயதில் உடல் பருமன் கூடுகிறது என்றால்,  உடனே அவர்களுக்குக் கொடுக்கும் உணவின் அளவைக் குறைக்க நினைப்பதைவிட, கலோரி கணக்கீட்டில் கவனம் செலுத்துவது முக்கியம். அதாவது எந்தெந்த உணவுகளில் சத்துகள் அதிகம், எவற்றில் குறைவு, அவற்றின் மூலம் கிடைக்கும் கலோரிகள் எத்தனை என்று தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு உடற்பயிற்சியைக் கட்டாயமாக்குங்கள். வாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் அவரை தீவிரமாக ஈடுபடுத்தலாம். தற்காப்புக் கலைகளான கராத்தே, சிலம்பம் போன்ற பயிற்சிகளைக் கூட கற்றுத் தரலாம். ஷட்டில் காக், பேட்மின்ட்டன் போன்றவற்றை விளையாட ஊக்கப்படுத்தலாம். வாய்ப்பிருந்தால் குடும்பத்தாரும் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடலாம்.  சோறு, இட்லி, தோசை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்களின் அளவைக் கூட்டலாம். ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறிகள், பழங்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸும் இடம் பெற வேண்டும்.  வாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தலாம் இப்படி உணவுப்பழக்கத்தை முறைப்படுத்திய பிறகு மாதந்தோறும் உடல் எடையை செக் செய்து கொண்டே வர வேண்டும். எடையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  எந்த உணவையும் வேண்டாம் என சொல்லிக் குழந்தையைக் கட்டுப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ கூடாது. அவரவருக்குப் பிடித்த உணவுகளை குறைந்த அளவில் சாப்பிட அனுமதிப்பதுதான் சரியே தவிர, அறவே கூடாது என்று சொல்லத் தேவையில்லை. பொதுவாக இனிப்புகள், சாக்லேட், கேக் போன்ற உணவுகளால்தான் உடல் எடை அதிகரிக்கும். அவற்றின் அளவைக் குறைத்து, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுத்துப் பழக்கலாம்.  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றுடன், தைராய்டுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் முறையாக எடுத்துக்கொண்டாலே போதுமானதாக இருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Doctor Vikatan: தைராய்டு இருந்தால் வாய் துர்நாற்றம் வருமா?

விகடன் 12 Sep 2025 9:00 am

Lotus: தாமரைத்தண்டு இத்தனை ஆரோக்கியம் நிறைந்ததா? டயட்டீஷியன் விளக்கம்!

தாமரை விதையைப் போலவே அதன் தண்டையும் சமைத்து உண்ணலாம். அதன் ஆரோக்கியப் பலன்கள் குறித்து சொல்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர். ‘’கொடி வகையைச் சேர்ந்த தாமரைத்தண்டில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் சத்துகளும், வைட்டமின் பி, ஈ, கே உள்ளிட்ட ஊட்டச்சத்துகளும் உள்ளன. கலோரி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. தாமரைத்தண்டு மற்ற தாவரங்களைவிட வைட்டமின் சி சத்து மிக அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். மிருதுவான சருமத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் உதவும். எலும்புக் குறைபாடுகளைச் சரிசெய்யவும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்கவும் தாமரைத்தண்டு உதவும். உடலின் ரத்த ஓட்டத்தை இது சீராக்கும். ரத்தச்சோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை தாமரைத்தண்டு சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணி பெண் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கால்சியம், இரும்புச்சத்து தேவைப்படும். அவர்களுக்கு தாமரைத்தண்டை உலரவைத்து வற்றல் செய்து கொடுப்பது வழக்கம். வாழைத்தண்டு கூட்டு செய்வதுபோல, தாமரைத்தண்டையும் கூட்டு செய்து சாப்பிடலாம். ஆனால், துவர்ப்புச் சுவை காரணமாகப் பலர் இதை விரும்ப மாட்டார்கள். அவர்கள் தாமரைத்தண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். பஜ்ஜி வடிவில் உட்கொண்டாலும், தாமரைத்தண்டிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்தில் எந்தக் குறையும் இருக்காது. தாமரைத் தண்டை மெலிதாகச் சீவி, பஜ்ஜி செய்து பரிமாறினால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். தாமரை பஜ்ஜி சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள், மலச்சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. தாமரைத்தண்டில் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதால், இது மலச்சிக்கலை ஏற்படுத்தாது. ஆனால், இதய நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு, `ஷாலோ ஃப்ரை’ (Shallow Fry) எனப்படும் குறைந்த அளவு எண்ணெயில் பொரித்துக் கொடுக்கலாம். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! தாமரைத்தண்டு பஜ்ஜி எப்படிச் செய்வது? தேவையானவை: தாமரைத்தண்டு : ஒன்று (ஃப்ரெஷ்) கடலை மாவு : 50 கிராம் அரிசி மாவு : 50 கிராம் மைதா : ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு : தேவையான அளவு பெருங்காயத்தூள் : சிறிதளவு எண்ணெய் : 50 கிராம் மஞ்சள்தூள் : சிறிது தாமரைத்தண்டு பஜ்ஜி ''என் பையனோட பாக்கெட்ல காய்கறிகள்தான் இருக்கும்!'' - நடிகை ஶ்ரீஜா பகிரும் Healthy Habits செய்முறை முதலில் தாமரைத்தண்டை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து ஊறவைக்கவும். இப்படிச் செய்வதால் தண்டிலுள்ள துவர்ப்புத் தன்மை நீங்கிவிடும். அரிசி மாவு, மைதா, கடலை மாவு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிறகு மாவுக் கலவையில் தாமரைத்தண்டை முக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்தால், பஜ்ஜி தயார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 12 Sep 2025 6:33 am

Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 8 வயதாகிறது. அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் என பாதிக்கப்படுகிறாள். அவளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லையோ என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்... எப்படிப்பட்ட உணவுகள் கொடுக்கலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் சரிவிகித உணவு குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவுப்பழக்கத்தை அறிமுகம் செய்துவிட்டால், அப்போதிலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தி சீராக இருக்கும். ஓர் உணவில் எல்லாவிதமான ஊட்டச்சத்துகளும் இருக்க வேண்டும், சரியான அளவில் இருக்க வேண்டும். அதுதான் சரிவிகித உணவு. அந்த வகையில் பிரதானமாக இடம்பெற வேண்டியவை முழுத்தானியங்கள், சிறுதானியங்கள் போன்றவை. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என எல்லாவற்றிலும் முழுத்தானியங்கள் இருக்க வேண்டும். அவற்றில் நார்ச்சத்தும் ஓரளவு இருக்கும். இது குடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.  புரதச்சத்து அடுத்தது, குழந்தைகளின் உணவில் புரதச்சத்து நிறைய இருக்க வேண்டும். புரதச்சத்துதான், உடலின் நோய் எதிர்ப்புக்கான செல்களை வளர்க்க உதவும்.  சிக்கன், மீன், முட்டை என அசைவ உணவுகளிலும், பால், பால் பொருள்கள், பருப்புகள் போன்ற சைவ உணவுகளிலும் புரதச்சத்து அதிகமிருக்கும்.  அடுத்தது குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகள், பழங்கள் கொடுத்துப் பழக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா, கேரட், புரொக்கோலி போன்றவற்றை அதிகம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு நிறைய காய்கறிகள், பழங்கள் கொடுத்துப் பழக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும். Doctor Vikatan: 2 வயதுக் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல்... ஆன்டிபயாட்டிக் பலன் தராதது ஏன்? தேவையான சத்துகள் தினமும் குறிப்பிட்ட அளவு பால் குடிக்க வேண்டும். அது வைட்டமின் டி மற்றும் கால்சியம்  தேவைக்கு உதவும். நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு, துத்தநாகச் சத்து போன்றவை உள்ளதால் அவற்றையும் சிறு வயதிலிருந்தே கொடுத்துப் பழக்க வேண்டும்.  இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளான இஞ்சி, மஞ்சள், துளசி போன்றவற்றை சமையலில் சேர்க்கலாம். குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். அதற்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அடிக்கடி வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். புரோபயாடிக் உள்ள யோகர்ட் போன்றவற்றையும் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். வெறும் உணவுகளால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக ஏற்படுத்திவிட முடியாது.  நல்ல தூக்கம், தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி போன்றவற்றையும் முறைப்படுத்துங்கள். இன்னும் சொல்லப் போனால், அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஏற்படாமலிருக்க சுகாதாரம் குறித்தும்  கற்றுக் கொடுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 11 Sep 2025 9:00 am

செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா'வரை உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

ஒருகாலத்தில் புகையும் மதுவும் மெதுவான விஷம் என்று சொன்னோம். இப்போது அந்தப் பட்டியலில் மொபைல் போனும் சேர்ந்துவிட்டது. மெதுவான விஷம் என்பதற்கு காரணம், அவை உடனே கொல்லாது. ஆனால், மனதையும் உடலையும் மெள்ள மெள்ள ஆட்டிப்படைக்கும்'' என்று எச்சரிக்கிற சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர். நித்யா ராகவி, அதுபற்றி விரிவாகப் பேசினார். Smart phone usage ''மொபைல் நம் தோழமையா; எதிரியா? மொபைல் போன் நம் காலத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அது நம்மையும், தொலைவில் உள்ள நம் அன்புக்குரியவர்களையும் உடனடியாக வீடியோ அழைப்பு மூலம் இணைக்கிறது. ஆனால், எந்தவொரு சக்திவாய்ந்த கருவியையும் போலவே, அதன் தாக்கமும், நாம் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. வாழ்க்கையை எளிதாக்கும் அதே சாதனம், அதிகமாகப் பயன்படுத்தப்படும்போது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். உண்மை என்னவென்றால், மொபைல் முற்றிலும் நண்பனோ அல்லது எதிரியோ அல்ல. அது இருபுறமும் கூர்மையான முனைகள் கொண்ட வாள் போன்றது. கவனத்துடன் பயன்படுத்தும்போது, அது நமக்கு அதிகாரம் அளிக்கிறது. கட்டுப்பாட்டை இழக்கும்போதோ, நம் நல்வாழ்வை கெடுக்கிறது. ஹார்மோனில் ஏற்படும் மாற்றம்..! மொபைல் போனில் வரும் ஒவ்வொரு அறிவிப்பும் மூளையில் உள்ள டோபமைன் (dopamine) எனும் ஹார்மோனை தூண்டுகிறது. காலப்போக்கில், மூளை இந்தத் தூண்டுதலுக்காக ஏங்கத் தொடங்குகிறது. அதனால், தேவையில்லாமல்கூட செல்போனை எடுத்து நம்மை சரிபார்க்கத் தூண்டுகிறது. இதனால், நாம் நம் வேலைகளில் முழுமையான ஈடுபாட்டைக் கொடுக்க முடியாமல் போகிறது. Hormones இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருந்து மொபைலை பயன்படுத்துவதால் மெலடோனின் (melatonin) எனும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இதனால் தூக்கம் கெட்டு, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை அதிகரித்து, சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விடுகிறது. 'நோமோபோபியா' வரலாம்! மொபைல் பயன்பாடு கட்டாயமாக மாறும்போது, அது நடத்தைச் சார்ந்த போதைப்பழக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறது எனலாம். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய மொபைல் இல்லையென்றால் அமைதியின்மை, பயம், பதட்டம் அல்லது எரிச்சலை உணர்வார்கள். இது 'நோமோபோபியா' (Nomophobia) எனும் நோய் நிலை ஆகும். Smart phone அதிகம் பாதிக்கக்கூடியவர்கள்..! தற்போதுள்ள கல்வி முறை பெரும்பாலும் மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற மின்சாதனப் பொருள்களைச் சார்ந்ததாகவே உள்ளது. இதனால், மாணவர்கள் தங்கள் கல்விக்கும், பல புதிய செய்திகளை அறியவும் மொபைல் போனையே அதிகம் நம்பியிருக்கிறார்கள். தவிர, இரவு நேர மொபைல் போன் பயன்பாடு காரணமாக தூக்கமின்மை, அதன் விளைவாக பள்ளிக்கூடத்தில் கவனமின்மை ஏற்படுகிறது. இதனால் கல்வியில் நினைவாற்றலும், செயல்திறனும் குறைந்து மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அளவுக்கு மீறிய செல்போன் பயன்பாடு காரணமாக, சமூகத்துடன் இணைந்து பழகுதல், உரையாடல், நட்பு என வாழ்வின் உன்னதமான பல விஷயங்களை அவர்கள் இழந்துக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கம்..! மொபைல் போனிலேயே அதிக நேரத்தைச் செலவிடும்போது, குடும்பத்தினருடன், நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் பேசுவது குறைகிறது. பேச்சுக் குறையக் குறையப் புரிந்துணர்வும் இணக்கமும் குறையும். குறிப்பாகத் தம்பதியர் நடுவில் செல்போன் ஏற்படுத்துகிற பிரச்னை அதிகமாக இருக்கிறது. மனநல மருத்துவர் டாக்டர். நித்யா ராகவி. சமீபத்திய ஆய்வுகள் சொல்வது என்ன..? 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு முடிவு, உலகளவில் கிட்டத்தட்ட 25 சதவிகித இளம் பருவத்தினர் அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில், கல்லூரி மாணவர்களில் சுமார் 35-40 % பேருக்கு, அதிகமான மொபைல் பயன்பாடு காரணமாக படிப்பு மற்றும் மனநிலை பாதிக்கும் அளவுக்கு நிலைமை கடுமையாக உள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவைத் தவிர, இரவு நேரத் தொலைபேசி பயன்பாடு உள்ளவர்களுக்கு மோசமான தூக்கத்தரம், அதிக மனச்சோர்வு, பதற்றம் இருப்பதை அதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து கண்டறிந்து தெரிவித்து வருகின்றன. Health: இந்தப் பிரச்னைக்கு உங்க ஹேண்ட்பேக்கூட காரணமா இருக்கலாம்! சர்க்கரைப் போன்றது செல்போன்..! உடலில் சர்க்கரையின் அளவு மிதமாக இருந்தால் ஆரோக்கியம். அதிக அளவில் சென்றால் தீங்கு. அது போலவே செல்போனை மிதமான அளவில் பயன்படுத்தி செய்திகளை அறிந்துகொள்ளும்போது நன்மை அளிக்கிறது. அதுவே, அதிக அளவில் பயன்படுத்தும்போது அடிமைத்தனத்தை உண்டு பண்ணுகிறது. Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும் இந்த தாக்கத்திலிருந்து எப்படி வெளிவருவது..? சமூக ஊடகங்கள் அல்லது பொழுதுபோக்கு பயன்பாடுகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல். சாப்பாட்டு மேசை, படுக்கையறை மற்றும் படிக்கும் இடத்திலிருந்து மொபைலை தள்ளி வைத்தல். தூக்கத்திலிருந்து எழுவதற்கு மொபைலுக்கு பதிலாக அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துதல். தேவையற்ற செயலிகளின் (Apps) அறிவிப்புகளை (Notifications) நிறுத்தி வைத்தல். செயலிகளின் (Apps) டைமர்களைப் பயன்படுத்தி அதிக நேரம் மொபைலில் செலவிடுவதைத் தவிர்த்தல். புத்தகங்களை வாசித்தல், பாடல்களைக் கேட்டல், விளையாடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற செயல்களால் நாம் மெதுவாக இத்தாக்கத்திலிருந்து வெளிவரலாம்'' என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் நித்யா ராகவி. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 11 Sep 2025 6:57 am

`ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே'மூணும் முக்கியம் ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - 257

'' இது எய்ட்ஸ் அதிகரித்துவிட்ட காலகட்டம். முன் எப்போதையும்விட ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாகப் பார்க்கிறேன். காரணம் ஹேப்பி எண்டிங் என்ற பெயரில் ஆங்காங்கே கிடைக்கிற செக்ஸ் வாய்ப்புகள். ஹெச்.ஐ.வி தொற்று தவிர்க்கப்பட வேண்டுமென்றால், தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் '' என்கிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார். தாம்பத்தியம் ஃபோர் பிளே ''ஒரு தம்பதியரிடையே தாம்பத்திய உறவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், ஃபோர் பிளே, பிளே, ஆஃப்டர் பிளே ஆகிய மூன்று விஷயங்கள் மிக மிக முக்கியம். தாம்பத்திய உறவுக்கு முந்தைய ஃபோர் பிளே எரிச்சல், வலி இல்லாத தாம்பத்திய உறவு நிகழ்வதற்கு உதவும். 'ஃபோர் பிளே'வில் கணவன், மனைவி இருவருமே பங்கு பெற வேண்டுமா என்றால், ஆமாம். இதைக் கற்றுக்கொண்டுதான் செய்ய வேண்டும். Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing பிளே அடுத்தது பிளே . அதாவது, தாம்பத்திய உறவு. இதில் இருவரும் உச்சக்கட்டம் அடைவதுதான் முக்கியம். பெண்ணைத் திருப்திப்படுத்துவது தொடர்பாக ஆணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கணவனை எப்படித் தூண்டுவது என்பது மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்கள் மோட்டார் ஸ்விட்ச் போடுவதுபோல உச்சக்கட்டம் அடைந்துவிடுவார்கள். ஆனால், பெண் அடையும் உச்சக்கட்டம் என்பது விமானத்தில் இருக்கிற ஸ்விட்ச்களைப் போன்றது. அவர்களின் உடலில் உச்சக்கட்டம் அடைவதற்கான பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றைத் தூண்டாமல் பெரும்பாலான பெண்களால் வெறும் செக்ஸ் மூலமாக மட்டுமே உச்சக்கட்டம் அடைய முடியாது. இதுதான் உண்மை. யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256 ஆஃப்டர் பிளே. மூன்றாவதாக, ஆஃப்டர் பிளே. இருவருமே உச்சக்கட்டம் அடைந்திருக்க வேண்டும். ஒருவேளை அது நிகழவில்லை என்றால் ஆஃப்டர் பிளே கட்டாயம். ஃபோர் பிளே தெரிந்த அளவுக்கு பலருக்கும் ஆஃப்டர் பிளே பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் சொல்கிறேன். இந்த நேரத்தில் ரொமாண்டிக்காகப் பேசுதல், கூந்தலை வருடுதல், அணைத்தல், தழுவுதல் போன்று செய்யலாம். காமசூத்ரா கொடுத்த நாட்டில், முறையான செக்ஸைப்பற்றி தெரியவில்லையென்றால், அது விவாகரத்தில் முடிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. தவிர, தம்பதியரிடையே உறவு சரியாக இருந்தால், மூன்றாவது நபர் குறுக்கீட்டால் எதுவுமே செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 10 Sep 2025 6:00 pm

Doctor Vikatan: தினசரி தலைக்குக் குளிக்க வேண்டுமா, வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா?

Doctor Vikatan: ஆண்கள் தினமும் தலைக்கு குளிக்கிறார்கள். பெண்களும் தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா... வெறும் தண்ணீரில் குளித்தால் போதுமா... ஷாம்பூ தேவையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா தினமும் தலைக்குக் குளிப்பது என்பது நிச்சயமாக நல்ல விஷயம்தான். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். தினமும் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு போகும், முடி உதிரும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருமே, வாரத்தில் மூன்று முறையாவது தலைக்குக் குளிக்க வேண்டியது அவசியம். சிலர் தினமும் ஷாம்பூ உபயோகித்து தலைக்குக் குளித்தால் பிரச்னை என்ற எண்ணத்தில் வெறுமனே தலைக்குக் குளிப்பார்கள். அது தவறு. இன்னும் சொல்லப் போனால் ஷாம்பூ இல்லாமல் தலைக்குக் குளிக்காதீர்கள். அதே சமயம், மைல்டான  ஷாம்பூ உபயோகித்து அது முடியிலிருந்து முழுமையாக நீங்கும்படி நன்றாக அலசிக் குளித்துவிட வேண்டும். வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்வது என்பது நல்ல விஷயமே இல்லை. வெறும் தண்ணீரில் அலசும்போது, தண்ணீர், தலையில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் எல்லாம் சேர்ந்து, முடியில் பிசுபிசுப்பு ஏற்படும். மண்டைப்பகுதியின் பிஹெச்  அளவை மாற்றி, கூந்தலின்  ஆரோக்கியத்தையே கெடுத்துவிடும். எனவே, மைல்டான ஷாம்பூ உபயோகிப்பதுதான் சரியானது. வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்வது என்பது நல்ல விஷயமே இல்லை. Doctor Vikatan: தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமா... எந்த ஷாம்பூ நல்ல ஷாம்பூ? ஹெல்மெட் பயன்பாடு, வாகனம் ஓட்டுவது, வெளியே அலைகிற வேலை, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற காரணங்களால் ஆண்களுக்கு தலைமுடி சீக்கிரமே அழுக்காகும். அவர்களுக்கு தினமும் தலைக்குக் குளிப்பது அவசியமாகிறது. அதுவே, கூந்தலின் நீளம் கருதி, தினசரி தலைக்குக் குளிப்பது பெண்களுக்கு சாத்தியமில்லை என்பதால், வாரத்தில் மூன்று நாள்களாகக் குறைத்துக்கொள்ளலாம். அவர்களும் தினமும் தலைக்குக் குளிக்க முடியும் என்று நினைத்தால் அதைச் செய்வது  சிறப்பானதுதான். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 10 Sep 2025 9:00 am

அடிக்கடி நெட்டி முறித்தால் கை விரல்கள் பலவீனமாகுமா?

வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்களில் 'நெட்டி முறிக்கும்’ வழக்கம் பலருக்கும் இருக்கும். சிலர் இதை ‘சொடக்கு எடுத்தல்' என்றும் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது, எழும் சத்தம் தான் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி கிடைத்த உணர்வை ஏற்படுத்துகிறது. அடிக்கடி நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல என்கிற எலும்பியல் மருத்துவர் ஆசிக் அமீன், அதுபற்றி விவரிக்கிறார். நெட்டி முறித்தல் நெட்டி முறிக்கும்போது அந்த சத்தம் எப்படி வருகிறது? விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே ‘சைனோவியல்’ (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் செயல்படுகிறது. நீண்டநேரம் அசையாமலிருந்தால், குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்துவிடும். நெட்டி முறிக்கும்போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்குச் சத்தம் வெளிப்படுகிறது. நெட்டி முறித்தல் தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால், தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்குச் சத்தம் அதிகமாக இருக்கும். நெட்டி முறிக்கும்போது ஏற்படும் இந்தச் சத்தம்தான், பலரை மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டுகிறது. நெட்டி முறித்தல் அடிக்கடி சொடக்கு எடுத்தால் அல்லது நெட்டி முறித்தால் என்ன ஆகும்? சைனோவியல்தான் நம் கை மற்றும் கால் விரல் இணைப்புகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் ஒத்திசைவாகச் செயல்பட உயவு திரவமாகச் செயல்படுகிறது.  அடிக்கடி நெட்டி முறிக்கும்போது இந்தத் திரவம் குறைகிறது. மேலும், கை விரல்களில் டென்டன், லிகமென்ட், கேப்ஸ்யூல் என மூன்று அமைப்புகள் உள்ளன. அடிக்கடி ஒருவர் நெட்டி முறிக்கும்போது இவை மூன்றும் வலுவிழந்து விரல்கள் பலவீனமடையக்கூடும். Health: வலி போக்கும் 6 எண்ணெய்கள்..! ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி கை விரல்களில் சொடக்கு எடுத்துக்கொண்டே இருந்தால், கைகளில் பிடி வலிமையின்றிப் போவது, முழங்கை வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சொடக்கு எடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட, குறிப்பிட்ட அந்தப் பகுதியை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்தவேண்டியது அவசியம். நெட்டி முறிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், கைகளுக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்யலாம். Health: பெண்கள் ஏன் கட்டாயம் எள் துவையல் சாப்பிட வேண்டும்? நெட்டி முறிப்பதற்கு பதில் ஓய்வு எடுக்கலாம். தொடர்ந்து டைப் செய்வது போன்று ஒரே மாதிரியான வேலையைக் கைகளுக்குக் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் விரல்களில் நெட்டி முறிப்பதற்கு பதில், விரல்களுக்கு அவ்வப்போது இரண்டு நிமிடம் ஓய்வு எடுக்கலாம். தவிர, எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த பால், முட்டை, கேழ்வரகு, கீரைகள், எள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால், நீண்ட நேரம் வேலை செய்தாலும் கை விரல்கள் வலிக்காது. நமக்கும் விரல்களில் நெட்டி முறிக்கவோ அல்லது சொடக்கு போடவோ தோன்றாது'' என்கிறார் டாக்டர் ஆசிக் அமீன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 10 Sep 2025 6:33 am

Doctor Vikatan: விபத்துக்குப் போட்ட TT ஊசி; நாய்க்கடிக்கும் அதுவே போதுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் முன்பு சிறிய விபத்து ஏற்பட்டது. உடனே டிடி ஊசி போட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் நாய் கடித்தது. அதற்கும் டிடி ஊசி போடச் சொன்னதால் போட்டுக் கொண்டேன். ஆனால் அதன் பிறகுதான், ஏற்கெனவே டிடி போட்டதால் மறுபடி தேவையில்லை என்று சிலர் சொன்னார்கள். டிடி ஊசி என்பது என்ன? அதை எப்போதெல்லாம், எந்த இடைவெளியில் போட்டுக் கொள்ள வேண்டும்? இருமுறை போட்டதால் எனக்கு ஏதேனும் பிரச்னை வருமா? டிடி ஊசியே, நாய் கடிக்கும் போது போதுமானதா? பதில் சொல்கிறார்: சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி டிடி  என்பது  டெட்டனஸ் டாக்ஸாயிடு (Tetanus Toxoid) என்பதன் சுருக்கம். டெட்டனஸ் என ஒரு நோய் உண்டு. தமிழில் அதை 'ரண ஜன்னி' என்று சொல்வார்கள்.  சற்றே மோசமான அந்த நோயை ஏற்படுத்தும் கிருமியை வரவிடாமல் தடுப்பதுதான் டிடி ஊசியின் வேலை. இந்தக் கிருமிகள், துருப்பிடித்த ஸ்டீல், கரடுமுரடான மேற்பரப்புகள்,  மண் தரையிலுள்ள தூசு போன்றவற்றில் அதிகமிருக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் துருப்பிடித்த இடங்களில் பட்டு அடிபட்டால் உடனே டிடி ஊசி போடச் சொல்லி அறிவுறுத்துகிறோம். அப்படித் தடுப்பூசி போடுவது உண்மையிலேயே பாதுகாப்பானது. விபத்து ஏற்பட்டு விழுந்ததும் டிடி ஊசி போட்டுக்கொண்டதாகச் சொல்கிறீர்கள், அதில் தவறில்லை. பொதுவாக மருத்துவர்கள், 2 வருடங்களுக்கொரு முறை டிடி ஊசி போட்டுக்கொண்டால் போதும் என்றே சொல்வோம். அதுவே, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றோருக்கெல்லாம் ஆறு மாதங்களுக்கொரு முறை டிடி ஊசி போட்டுக்கொள்ளச்  சொல்வோம். அதாவது எங்கேயாவது அடிபட்ட நிலையில், அதற்கு முன் டிடி ஊசி போட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டால், மறுபடி ஒரு டோஸ் டிடி ஊசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது என்றே அறிவுறுத்துவோம். நாய்க்கடிக்கு 'ஏஆர்வி' எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின் (Anti-Rabies vaccine) தான் போட வேண்டும். Doctor Vikatan: நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா, அசைவ உணவைத் தவிர்க்க வேண்டுமா? நாய்க்கடிக்கு டிடி ஊசி போட வேண்டிய அவசியமில்லை. நாய்க்கடிக்கு 'ஏஆர்வி' எனப்படும் ஆன்டி ரேபிஸ் வாக்சின் (Anti-Rabies vaccine)  தான் போட வேண்டும். சமீபகாலமாக பெரும் பிரச்னையாக உருவெடுத்துவரும் நாய்க்கடி பிரச்னைக்கு, எந்த மருத்துவமனையிலாவது டிடி ஊசி போட்டால், அது வேண்டாம் என்று சொல்லி ஆன்டி ரேபிஸ் தடுப்பூசி போடும்படி கேளுங்கள். இது எல்லா  அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் போடப்படும். நாய்க்கடிக்கான தடுப்பூசியைப் போடத் தவறினால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ரேபிஸ் நோய் வராமல் தடுக்க ஏஆர்வியும், ஒருவேளை கடி மிகவும் மோசமாக இருந்தால், இம்யூனே குளோபுலின் ஊசியும் போட வேண்டியிருக்கும். பல பேர், இது போல நாய்க்கடிக்கு வெறும் டிடி ஊசியை மட்டும் போட்டுக்கொண்டு உயிரிழக்கும் சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். எனவே, கவனமாக இருக்கவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

விகடன் 9 Sep 2025 9:00 am

Doctor Vikatan: மார்பகங்களில் உருளும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்யலாமா?

Doctor Vikatan: என் தோழி இப்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறாள். திடீரென மார்பகங்களில் கட்டி மாதிரி உருள்வதாகச் சொல்கிறாள். அதே சமயம், கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான டெஸ்ட் எடுப்பதே ஆபத்து என பயப்படுகிறாள். கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்வது பாதுகாப்பானதா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க சிகிச்சை மருத்துவர் எஸ்.பி. ராஜ்குமார் கர்ப்பகாலத்திலும் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யலாம். ஆனால், தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில்  முக்கியமான  சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில், கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய பாதுகாப்பான புற்றுநோய்ப் பரிசோதனைகள் பற்றி தெரிந்துகொள்வோம். மார்பக மருத்துவ பரிசோதனை (Clinical Breast Exam) மார்பக மருத்துவ பரிசோதனை, இதில் மருத்துவர், மார்பகத்தில் கட்டிகள் உள்ளனவா என்று பரிசோதனை செய்வார். பெண்களும் தாங்களாகவே சுய மார்புப் பரிசோதனை (Self-Breast Exam) செய்து, கட்டிகள் உள்ளனவா என கண்டுபிடிக்கலாம். இந்தப் பரிசோதனைகள் கர்ப்ப காலத்தில் முற்றிலும் பாதுகாப்பானவை. அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) அடுத்தது மார்புப் பகுதிக்கான அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) சோதனை. இது கட்டிகளை மதிப்பீடு செய்யவதற்கான பரிசோதனை. ஒலியலைகளைப் பயன்படுத்துகிறது என்பதால், இந்தச் சோதனை பாதுகாப்பானது. இதில் கதிர்வீச்சு இல்லை. Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக மாறுமா? மேமோகிராம் (Mammogram) மூன்றாவதாக மேமோகிராம் (Mammogram) சோதனை. கர்ப்ப காலத்தில் மிகமிக  அவசியமென்றால் மட்டும் மேற்கொள்ளப்படும். இதில் கதிர்வீச்சு இருக்கும். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதியில் 'லெட் ஷீல்டு'  (lead shield) எனப்படும் கடினமான  உலோக ஷீல்டை வைத்து பாதுகாப்பு அளிக்கப்படும். மிகமிக அவசியம் என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிற இந்தச் சோதனை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கப்படுகிறது. கடைசியாக  பயாப்சி (Biopsy) பரிசோதனை. கட்டிகள்  இருந்தால் பயாப்சி சோதனை செய்யப்படும். இதுவும் பாதுகாப்பானதுதான். CT scan, PET scan கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய சோதனைகள்: அதிக கதிர்வீச்சு உள்ளதால்  சிடி ஸ்கேன் (CT scan)   மற்றும் பெட் ஸ்கேன் (PET scan)  ஆகியவை கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்படுகின்றன. மிக மிக அவசர நிலைமையில் மட்டுமே செய்யப்படும். கர்ப்பத்தில் மார்பகங்கள் இயற்கையாகவே மாற்றமடையும் என்பதால், அந்தக் காலத்தில் கட்டிகளைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம். சி.டி ஸ்கேன் எப்படி இருப்பினும், மார்பகங்களில்  கட்டி, வலி, வடிவம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் கர்ப்பத்துடன் தொடர்பில்லாத எந்தப் பரிசோதனைக்குச் சென்றாலும், முதலில் மருத்துவரிடம் நீங்கள் கர்ப்பமாக உள்ளதைச் சொல்ல மறக்காதீர்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

விகடன் 6 Sep 2025 9:00 am

Seasonal Fevers: பரவிக் கொண்டிருக்கும் காய்ச்சல்கள்; வராமல் தடுக்க, வந்தால் மீள மருத்துவர் ஆலோசனை!

'திடீர் காய்ச்சல்; உடல் அனலாய் கொதிக்கிறதே' என பக்கத்தில் இருக்கிற கிளினிக் போனால், காய்ச்சல் வந்தவர்களால் கிளினிக் நிரம்பி வழிகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நள்ளிரவுகளில் 24 மணி நேர மருத்துவமனைகளுக்கு செல்வதையும் பார்க்க முடிகிறது. மழையும் வெயிலும் மாறி மாறி வந்தால் காய்ச்சலும் வந்துவிடும். வருடத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போதும் ஊரெங்கும் காய்ச்சல், இருமல், சளித்தொல்லை என ஆரம்பித்துவிடும். தற்போதும் காய்ச்சல் காலம் ஆரம்பித்துவிட்டது. தற்போது என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன; வராமல் எப்படித் தடுப்பது; அறிகுறிகள்; தீர்வுகள் என்ன என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம். Seasonal Fever என்னென்ன காய்ச்சல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன? ''தமிழ்நாட்டில் பருவநிலை மாறும்போது வைரஸ் தொற்றுப்பரவும். விளைவாக காய்ச்சலும் வரும். தற்போது இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸ், அடினோ வைரஸ், ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ் (Respiratory syncytial virus), கொரோனா வைரஸ், சின்னம்மை வைரஸ், மம்ப்ஸ் எனப்படும் கூகைக்கட்டு அம்மை வைரஸ், மீசில்ஸ் எனப்படும் தட்டம்மை வைரஸ் ஆகியவை சுவாசப்பாதை வழி எளிதாகப் பரவுகின்றன. கூடவே, ஆங்காங்கு பன்றிக்காய்ச்சலும், டெங்குவும்கூட இருக்கிறது. இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ்..! இதில் இன்ஃபளூயன்சா மற்றும் அடினோ வைரஸ் வகையினால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வைரஸ்களால் பாதிக்கப்பட்டால், 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சலடிக்கும். இதனுடன் தசைவலி, கடுமையான உடல் சோர்வு, சுவாசத்தொற்றுகளான தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் இருமல் வருவது, தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஆகிய பிரச்னைகளும் வரும். Seasonal Fever இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள்! இன்ஃப்ளூயன்சா மற்றும் ரெஸ்பிரேட்டரி சின்ஸிடியல் வைரஸ்கள், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு, குறிப்பாக ஒரு வயதுக்கும் குறைவான சிசுக்களுக்கு தீவிர நுரையீரல் தொற்றாக வெளிப்படலாம், கவனம். ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு அதீத காய்ச்சலுடன் தீவிர நுரையீரல் தொற்றும் ஏற்பட்டால், அது நிம்மோனியா. பொதுவாக மூச்சு விடும்போது வயிற்றுப்பகுதி தசைகள் மேலே இழுக்காது. ஆனால், நிம்மோனியா வந்த குழந்தைகளுக்கு நெஞ்சுப்பகுதி தசைகள் சோர்வடைந்துவிடுவதால், வயிற்றுப்பகுதி தசைகளும் சேர்ந்து வேலை செய்யும். இதனால், குழந்தை குழந்தை மூச்சு விடுவதற்கு திணறும். இழுத்து இழுத்து மூச்சு விடும். இந்த நிலையில், குழந்தையின் மேல் சட்டையை நீக்கி, ஒரு நிமிடத்துக்கு 20 முதல் 40 முறைக்கு மேல் மூச்சு விடுகிறதா என கவனியுங்கள். அப்படியிருந்தால் குழந்தைக்கு 'நிம்மோனியா தொற்று இருக்கிறது; மூச்சுத்திணறல் பிரச்னையும் இருக்கிறது' என்று அர்த்தம். உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மம்ப்ஸ் இந்த வைரஸும் இருமல், தும்மல் வழியாகவே பரவும். இந்தத் தொற்றில் காய்ச்சலுடன் கழுத்தின் இருபுறமும் காதுகளுக்குக் கீழ் நெறிகட்டிக் கொண்டு வீக்கம் ஏற்படும். இது பெரும்பாலும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படுகிறது. Seasonal Fever மீசில்ஸ் எனும் தட்டம்மை இது மிக மிக எளிதாக சுவாசப்பாதை வழியாக பரவும். இந்தத் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இருமல், சளி, சிவந்த கண்கள், உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும், வாயினுள் நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போல வரும். இந்த நோய் வராமல் தடுப்பதற்காகத்தான் 9 மாத முடிவிலும் 16 முதல் 24 மாதங்களிலும் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட வேண்டும் என்கிறோம். பன்றிக் காய்ச்சல்! இந்த நேரத்தில் பன்றிக்காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சற்று தீவிரத்துடன் வரலாம். இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இதை போட்டுக்கொள்ளலாம். காய்ச்சல் டெங்கு காய்ச்சல்! பருவமழை பொழியும் காலங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். விளைவு டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை, காய்ச்சல் ஆரம்பிக்கும்போதே 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கடும் உடல்வலி, சோர்வு, சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, கண்களுக்குள் வலி, மூட்டுகளில் வலி ஆகியன இருக்கும். காலதாமதம் செய்யாதீர்கள்! டெங்குவைப் பொறுத்தவரை முதல் மூன்று நாள்கள் காய்ச்சல் இருந்து சரியாகும். அதன்பிறகுதான் சோர்வு, தூக்கம், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் குளிர்ந்துபோதல் போன்ற அறிகுறிகளைக் காட்டும். உடனே மருத்துவமனை சென்றுவிட வேண்டும். இல்லையென்றால், தட்டணுக்கள் குறைந்து உடலெங்கும் சிவப்பு புள்ளிகள், பல் ஈறுகளில் ரத்தம் வருதல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல் என உயிராபத்து வரை ஏற்படலாம். இவையெல்லாம் என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அதனால், டெங்கு காய்ச்சல் விஷயத்தில் சற்று காலதாமதம் செய்யாதீர்கள். டெங்கு டெங்கு வராமல் தடுக்க இது வராமல் தடுக்க, வீட்டைச்சுற்றி நன்னீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைங்களுக்கு உடல் முழுக்க மறைக்கிறபடி ஆடை அணிவியுங்கள். கொசுவலைக்குள் தூங்க வையுங்கள். பெரியவர்களும் இதையே ஃபாலோ செய்யுங்கள். டெங்குவும் சுவாசப்பாதைத் தொற்றும் டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு, சுவாசப்பாதை வழியாக பரவுகிற வைரஸ் தொற்றும் ஏற்பட்டால் தீவிரமான காய்ச்சல் ஏற்படும். இவர்கள் காலதாமதம் செய்யாமல் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். Protein வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி..? இந்த சீசனில் பரவும் வைரஸ் தொற்றுகள் இருமுவது மற்றும் தும்முவது மூலமே பரவுகின்றன. அதனால், தொற்று ஏற்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிருங்கள். இதன் மூலம் தொற்று பிறருக்குப் பரவுவதைத் தடுக்கலாம். அப்படியே செல்ல வேண்டிய சூழல் வந்தால், மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். கொரோனா வுக்கு செய்ததைப்போலவே இந்த நேரத்திலும் கைகளை சோப் அல்லது சானிட்டைஸர் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வருகிற மழைக்கால காய்ச்சல்... காரணங்களும் தீர்வுகளும்! என்ன சாப்பிட வேண்டும்? பருவ மழை பொழிய ஆரம்பித்தவுடனே புரதச்சத்து நிரம்பிய முட்டை, மாமிசம், மீன், நட்ஸ், பயறு, கடலை, சோயா போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புசக்தியை நமக்குத் தரும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Dengue: மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்... Do's & Don'ts..! மருத்துவர்களின் வழிகாட்டல்! கட்டாயம் இதை பின்பற்றுங்கள் பொதுவாக சீசனல் வைரஸ் காய்ச்சல் என்பது ஒரு வார காலம் வரை இருந்து, பின்னர் தானாக குறையும். பெரும்பாலும் உயிர் ஆபத்து ஏற்படாது. அதற்காக, எந்த காய்ச்சலாக இருந்தாலும் கைவைத்தியம் செய்துகொண்டு வீட்டிலேயே இருக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை நாடுங்கள். காய்ச்சல் வந்தால், உடலில் நீர்ச்சத்துக் குறையும் என்பதால் நிறைய நீர் அருந்துங்கள். தேவையென்றால், கொதிக்க வைத்து ஆறிய நீரில் ஓ.ஆர்.எஸ் கலந்து அருந்துங்கள். முக்கியமாக ஓய்வெடுங்கள்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா. டேக் கேர் மக்களே..! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 6 Sep 2025 7:39 am

Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும்

வேலைப்பளு காரணமாக, இன்றைக்கு பலரும் வார நாள்களில் குறைவாக தூங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். இவர்கள் ரீல்ஸ் பார்த்து தூக்கத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் அல்ல. இவர்கள் வேலை காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருபவர்கள்... இவர்கள் ஆஃபீஸ் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து அங்கும் சமைத்தல், துவைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என அடுத்த ஷிஃப்ட் வேலை செய்பவர்கள். இப்படிப்பட்ட வேலைப்பளுவுடன் இருக்கிற ஆண்களாலும், பெண்களாலும் காலையிலும் சற்று நேரம் கூடுதலாக தூங்க முடியாது. அடுத்த நாள் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இதனால், இவர்களுக்கு வரக்கூடிய ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன; வாரநாள்களில் குறைகிற தூக்கத்தை வாரயிறுதிகளில் ஈடுகட்டினால் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன.? தூக்கவியல் மருத்துவர் என். ராமகிருஷ்ணன் விளக்குகிறார். Weekend Sleep வார நாள்களில் தூக்கக்குறைவால் அவதிப்படுகிறார்கள்! ''பெரியவர்கள் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்கூட வார நாள்களில் தூக்கக்குறைவால் அவதிப்படுகிறார்கள். நம்முடைய உடலுக்கு தூக்கம் என்பது உணவு, தண்ணீர், காற்று போலவே அத்தியாவசியம். ஆனால், இன்றைய காலத்தில் வேலைப்பளு, படிப்பு தரும் அழுத்தம், தொழில் சுமைகள் காரணமாக வார நாள்களில் பலருக்கும் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. அதனால்தான், பலரும் வாரயிறுதியில் தூங்கி, உடல் சோர்வை சரிசெய்ய முயற்சி செய்வார்கள். இதையே வாரயிறுதி தூக்கம் ‘Weekend Sleep’ என்று நாம் குறிப்பிடுகிறோம். 8 மணி நேரம், இருட்டு அறை, பகல் தூக்கம், கனவுகள்.. தூக்கம் தொடர்பான சந்தேகங்கள், தீர்வுகள்! தூக்கக் கடன்! பொதுவாக தொடர்ந்து தூக்கம் குறையும்போது ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய், பக்கவாதம் போன்ற வாழ்வியல் நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 7 - 8 மணி நேர தூக்கம் அவசியம். ஒருநாளைக்கு தூங்க வேண்டிய நேரத்தைவிட குறைவாக தூங்கினால், உதாரணமாக தினமும் 5 மணி நேரம் தூங்குபவர்கள் 2 மணி நேரம் தூக்கக் கடனாளியாக மாறுகிறார்கள். இந்த 5 மணி நேர தூக்கம் ஐந்து நாட்கள் தொடர்ந்தால், தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 10 மணி நேரம் தூக்கக் கடன் இருக்கும். இந்த 10 மணி நேரத்தை பூர்த்தி செய்வதற்கு வாரயிறுதி தூக்கம் உதவியாக இருக்கும். Weekend Sleep Sleep: ஆழ்ந்து தூங்க என்ன செய்ய வேண்டும்? - தூக்கம் தொடர்பான A to Z தகவல்கள்! | In-Depth வாரயிறுதி தூக்கம் ஏன் அவசியம்? ஆய்வு ஒன்றில் (யூகே பயோபேங்க் - UK Biobank) 90,903 பேரை, சுமார் 14 ஆண்டுகள் கண்காணித்ததில், வாரயிறுதிகளில் அதிகமாக தூங்கியவர்களுக்கு, குறைவாக தூங்கியவர்களைவிட இதய நோய் ஏற்படும் ஆபத்து 20% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இது அனைவருக்கும் பொதுவானது அல்ல. வார நாள்களில் குறைவான நேரம்‌ தூங்குபவர்கள், வாரயிறுதியில் நன்கு தூங்கி, இதய நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். வார நாள்களில் நன்றாக உறங்குபவர்கள், வாரயிறுதியிலும் 10 மணி நேரம் தூங்க வேண்டிய அவசியமில்லை'' என்று முடித்தார் டாக்டர் என். ராமகிருஷ்ணன். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 5 Sep 2025 6:48 am

Doctor Vikatan: தினமும் 3 லிட்டர் தண்ணீர் பரிந்துரை; குடித்தால் வாந்தி உணர்வு - தீர்வு என்ன?

Doctor Vikatan:  ஒவ்வொருவரும் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சிலர், காலையில் எழுந்ததுமே சொம்பு நிறைய தண்ணீர் குடிப்பதைப் பார்க்கிறோம். ஆனால், சிலருக்கு வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலோ, அளவுக்கு அதிகமாக குடித்தாலோ வாந்தி உணர்வு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்வது... தண்ணீர் தேவையை எப்படி பேலன்ஸ் செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் மனித உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது தண்ணீர். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும். உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது தலைச்சுற்றல், மயக்கம், களைப்பு, தலைவலி போன்றவை வரலாம். உடலில் நீர்வறட்சியால் சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படும். தண்ணீர் குடித்ததும் தலைவலி குணமாவதை உணர்வார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டு போகும், உதடுகள் வெடிக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். எனவே, தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிப்பதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பது நல்லது. நீங்கள் குறிப்பிட்டதுபோல, வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டல், வாந்தி உணர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, புதினா இலைகளுடன் குடிக்கலாம். நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோர் ஆக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம். சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்துவதும் செரிமானத்திற்கு நல்லது. உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தண்ணீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்து புதினா இலைகள் சேர்த்துக் குடிக்கலாம். சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நீர்வறட்சியைத் தவிர்க்கும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதய நோயாளிகளும், மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். மற்றபடி, குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும். தண்ணீர் குடிப்பதை நினைவில் வைத்துக்கொண்டு , குறிப்பிட்ட இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்ததும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.      Myths and Facts: வெள்ளரி- இஞ்சி- புதினா ஊறவைத்த நீர்... உடலை detox செய்யுமா?

விகடன் 4 Sep 2025 9:00 am

Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?

பிறந்தநாள் விழா, திருமணம், அலுவலகக் கொண்டாட்டம் என கிட்டத்தட்ட எல்லா நிகழ்விலும் கேக், பிஸ்கட், சாக்லேட் போன்ற பேக்கரி ஐட்டம்ஸ் தவறாமல் இடம்பெயர்கின்றன. அதிக சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் நிரம்பியிருப்பதால், பேக்கரி ஐட்டம்ஸை அடிக்கடி உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தி, நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்குமா என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம். Bakery Foods பேக்கரி உணவுப் பொருள்களை அடிக்கடி சாப்பிட்டால் நீரிழிவு வருமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு முன்னால், நீரிழிவு என்றால் என்ன, இன்சுலின் என்றால் என்ன என்பதை சிம்பிளாக சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் பேக்கரி உணவுகளை ஏன் அடிக்கடி சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு புரியும். நீரிழிவு நோய் என்றால் என்ன? இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று, உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் தேவையான ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவ்வாறு போதுமான அளவு குளுக்கோஸ் செல்களுக்கு கடத்தப்படாமல் இருக்கும் நிலையே நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய். இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்கு கடத்துவதற்கு இன்சுலின் தேவை. இன்சுலின் குறைந்தாலோ, அல்லது இன்சுலின் செல்களில் சென்று சேர்க்கக்கூடிய இன்சுலின் ரிசெப்டர்களின் அளவு குறைந்தாலோ, அல்லது அவை வேலை செய்யாவிட்டாலோ, நீரிழிவு ஏற்படும். diabetes இன்சுலின் என்றால் என்ன? நாம் உணவு உண்ணும்போது அதில் உள்ள மாவுச்சத்து செரிமானமடைந்து குளுக்கோஸாக மாறுகிறது. அந்த குளுக்கோஸ் இரத்தத்தில் கலந்து, உடலின் செல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. இன்சுலினின் முக்கியப் பணி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்குள் கடத்துவதுதான். நீரிழிவின் வகைகள்..! இரத்தத்தில் இன்சுலின் அளவு குறையும்போது, செல்களுக்கு குளுக்கோஸ் கடத்தப்படாமல், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இது டைப் 1 நீரிழிவு. சிலருக்கு இன்சுலின் சரிவர சுரந்தாலும் அல்லது அதிகமாக சுரந்தாலும், இன்சுலின் செல்களில் சென்று வேலை செய்யக்கூடிய இன்சுலின் ரிசெப்டர்கள் (Insulin receptors) சரிவர இயங்காமல் இருந்தால், ஏற்படுவது டைப் 2 நீரிழிவு. Bakery Items பேக்கரி உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால்... நாம் சாதாரணமாக உட்கொள்ளும் உணவில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும். அவை செரிமானமாகி, உடலுக்கு அத்தியாவசியமான குளுக்கோஸாக குடலில் உறிஞ்சப்படுகின்றன. நாம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது, அவை உடலுக்கு தேவையான குளுக்கோஸாக மாற சிறிது நேரம் எடுக்கின்றன. அப்போது உடலில் நிலையான குளுக்கோஸ் உறிஞ்சப்படும்; அதற்கேற்றபடி உடலில் இன்சுலின் உற்பத்தியாகும். இவை அனைத்தும் சாதாரணமாக நம் உடலில் நடைபெறும் இயல்பான செயல்கள். எப்போதாவது என்றால் பிரச்னை இல்லை! மாறாக, நாம் பேக்கரி உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போது, அவற்றில் உள்ள டைசாக்கரைடுகள் (Disaccharides) மற்றும் மோனோசாக்கரைடுகள் (Monosaccharides) எனப்படும் சிம்பிள் சுகர் வேகமாக செரிமானமாகி, இரத்தத்தில் உடனடியாக கலந்துவிடும். இதனால் இரத்தத்தில் திடீரென குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அந்த அதிகமான குளுக்கோஸை செல்களுக்குள் கடத்துவதற்கு இன்சுலின் உற்பத்தியும் அதிகரிக்கும். இது ஒருவேளை நடந்தால் பிரச்னையில்லை; ஆனால் தொடர்ந்து பேக்கரி உணவுகளை சாப்பிட்டால், இரத்தத்தில் திடீரென குளுக்கோஸ் அளவு அதிகரித்து, அதனால் இன்சுலின் உற்பத்தி அளவும் அதிகரிக்கும். உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், குளுக்கோஸ் வழக்கமான அளவு மட்டுமே செல்களுக்குள் செல்லும். இதுவே நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். டாக்டர் ராஜேஷ். `டிப்ரெஷன்தான் வில்லன்!' நீரிழிவு நோயாளிகளை டிப்ரெஷன் எப்படி பாதிக்கிறது? தினமும் பேக்கரி உணவுகள் சாப்பிட்டால்... தினமும் பேக்கரி உணவுகள் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்பவர்களுக்கும், உடல் உழைப்புக்கான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும், சாதாரண வளர்சிதை மாற்றம் மூலமாகவே எனர்ஜி எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இவற்றை எதையும் செய்யாமல் இருப்பவர்களுக்கும், சில மரபுவழி காரணங்களாலும், அதிக உடல் எடை அல்லது மெட்டபாலிக் சிண்ட்ரோம் கொண்டவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதேபோல், எண்ணெய் மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? பேக்கரி உணவுகளுக்குப் பதில் வேறு என்னென்ன சாப்பிடலாம்? பேக்கரி உணவுகளுக்குப் பதிலாக காய்கறிகள், பழங்கள், சாலட், ஃபைபர் பிஸ்கட்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதிக இனிப்புகளை அடிக்கடி சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உட்கார்ந்த இடத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் சிஸ்டம் ஒர்க் செய்பவர்கள், பேக்கரி உணவுகளைச் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை கொடுப்பதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். ஒரு நாளில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் நல்லது. பேக்கரி உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது உடலுக்கு கேடு செய்யாது; நீரிழிவு நோயும் வராது,'' என்கிறார் டாக்டர் ராஜேஷ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 4 Sep 2025 7:04 am

யாரெல்லாம் வெளியிடங்களில், புதுநபரோட செக்ஸ் பண்ணக்கூடாது! | காமத்துக்கு மரியாதை - 256

''வீடு தாண்டி வெளியிடங்களில், புதுநபர்களோட செக்ஸ் வைத்துக்கொள்வது சகஜமாகிக்கொண்டே இருக்கிறது. இதெல்லாம் இப்போதுதான் இருக்கிறதா என்றால், இது எல்லா காலத்திலும் இருந்ததுதான். ஆனால், பார்ட்டி, மது, போதை, பாதுகாப்பில்லாமல் புதுநபர்களுடன் செக்ஸ் என இப்போது அதிகரித்திருக்கிறதை அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செக்ஸ் புதுநபர்களுடன் ஏன் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது? 'ஒரு த்ரில்லுக்காக, ஒரு சேஞ்சுக்காக புது இடத்துல புது நபரோட செக்ஸ் வெச்சுக்கிட்டேன் டாக்டர். எனக்கு ஏதாவது பால்வினை நோய் வந்திடுமா' என அச்சப்படுபவர்கள் ஒருபக்கம்... இன்னொருபக்கம் தாம்பத்திய வாழ்க்கை போரடித்துவிட்டதால், வெளியிடங்களில், புதுநபருடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள். இது எந்தளவுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதை அறியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்'' என்கிற சென்னையைச் சேர்ந்த டாக்டர் காமராஜ், வெளியிடங்களில், புதுநபர்களுடன் யாரெல்லாம் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது; ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதை விளக்கினார். இடங்களை மாற்றுங்கள். செக்ஸ் சுவாரஸ்யமாக இருக்கும்! ''ஒரே அறைக்குள்ளே ஒரே மாதிரி செக்ஸ் செய்தால், தம்பதியருக்குள் எத்தனை காதல் இருந்தாலும் போரடித்துவிடும். அதனால், ஒருநாள் பெட்ரூமில், இன்னொரு நாள் ஹாலில், இன்னொரு நாள் பாத்ரூம் ஷவருக்கு கீழே என இடங்களை மாற்றுங்கள். செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். அல்லது புது இடங்களில், ஹோட்டல் அறைகளில் செக்ஸ் செய்யும்போது தம்பதியருக்கு த்ரில்லாக இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். த்ரில்லுக்காக, மாற்றத்துக்காக புது நபர்களுடன் செக்ஸ் கொள்வது பாதுகாப்பு கிடையாது. தாம்பத்தியம் அதிகப்படியான எக்சைட்மென்ட் காரணமாக... நடுத்தர வயதுகளில் இருப்பவர்கள் அல்லது வயதானவர்கள் அல்லது ஏற்கெனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் புது இடங்களில், புது நபர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான எக்சைட்மென்ட் காரணமாக மனப்பதற்றமும், இதயத்துடிப்பு அதிகரிப்பும் ஏற்படலாம். இதனால், முதல்முறை ஹார்ட் அட்டாக் வருவதற்கோ அல்லது ஏற்கெனவே வந்தவர்களுக்கு இரண்டாவது முறை ஹார்ட் அட்டாக் வருவதற்கோ வாய்ப்பிருக்கிறது. வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்தால் குழந்தை பிறக்காதா? -நிபுணர் பதில் | காமத்துக்கு மரியாதை -254 முழுமையாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்பதற்காக... ஒருசிலர், இப்படி வெளியிடங்களில் புது நபருடன் உறவுகொள்வதில் எந்தப் பின்னடைவும் வந்துவிடக்கூடாது; அந்த அனுபவத்தை முழுமையாக என்ஜாய் செய்துவிட வேண்டும் என்பதற்காக, வயாகரா மாத்திரை எடுத்துக்கொள்வார்கள். இது சிலருக்கு பிரச்னையாகி என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். Sexual wellness: ஆண்கள் தங்கள் உறுப்பில் மசாஜ் செய்யலாமா? - காமத்துக்கு மரியாதை 255 | Jelqing சிலருக்கு அரிதிலும் அரிதாக... தவிர, ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக எங்கோ ஒருசிலருக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது மனப்பதற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது அவர்களுக்கு உடனே டாய்லெட் செல்கிற அளவுக்கு அசெளகர்யத்தைக் கொடுக்கும். சிலருக்கு அரிதிலும் அரிதாக ஹார்ட் அட்டாக்கும் வரலாம். அதனால், வெளியிடங்களில், புதுநபர்களுடன் செக்ஸை தவிர்ப்பதே நல்லது'' என்கிறார் டாக்டர் காமராஜ். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 3 Sep 2025 6:00 pm

Doctor Vikatan: 10 வயது குழந்தைக்கு மலச்சிக்கல்; காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என்னுடைய 10 வயதுக் குழந்தைக்கு  மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வர என்ன காரணம், அதை எப்படிச் சரிசெய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் உணவுப்பழக்கம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது மிகவும் சகஜமாகப் பார்க்கிற விஷயமாக இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம், அவர்களது உணவுப்பழக்கம். நார்ச்சத்து அறவே இல்லாத அல்லது நார்ச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பாதிப்பு வரும். காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவை குழந்தைகளின் தினசரி உணவுப்பட்டியலில் இல்லை என்றால், அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். பால், தண்ணீர் குடிக்கும் அளவு பொதுவாகவே குழந்தைகளுக்கு அம்மாக்கள் நிறைய பால் கொடுப்பது வழக்கம். அதாவது தினமும் 300 முதல் 400 மில்லி பால் கொடுக்கிறார்கள்.  அதைவிட அளவு தாண்டும்போது, அதுவும் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு காரணமாகலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்கும். தண்ணீர் தவிர்த்து, சூப், ஜூஸ் போன்றவற்றையும் அதிகம் குடிக்க மாட்டார்கள்.  உடலில் நீர்ச்சத்து குறையும்போது அதுவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.  பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும். Doctor Vikatan: நீண்ட நாள்களாகத் தொடரும் மலச்சிக்கல்.. மூலநோயாக மாறுமா, தீர்வு என்ன? குழந்தைகளுக்கு கொடுக்கும் சப்ளிமென்ட்டுகளும் சில நேரங்களில் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு டாய்லெட் டிரெய்னிங் மிக முக்கியம்.  பள்ளிக்கூடங்களில்  கழிவறை பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். இயற்கை உபாதையை அடக்குவதாலும் மலச்சிக்கல் வரலாம். எனவே, குழந்தைகளின் உணவில் போதுமான நார்ச்சத்து இருக்க வேண்டும். ஆப்பிள், கொய்யா போன்று தோலுடன் சில பழங்களைக் கொடுக்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக்க வேண்டும். ஏசி அறையில் இருந்தாலோ, குளிர் காலத்திலோ தாகம் எடுக்காது. அந்தத் தருணங்களில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுத்து, அதை காலி செய்யப் பழக்கலாம். பால் கொடுக்கும் அளவைக் கண்காணிக்க வேண்டும். அது அளவுக்கு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 3 Sep 2025 9:00 am

Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் மருத்துவர்

பள்ளிக்கூடத்தில் அமீபா என்கிற ஒரு செல் உயிரியைப் பற்றி நாம் எல்லோருமே படித்திருப்போம். அதன்பிறகு உயிரியல் மாணவர்கள் அதைப்பற்றி விளக்கமாகப் படித்திருப்பார்கள். அதற்கு மேல் அமீபா பற்றி நாம் யாருமே யோசித்திருக்க மாட்டோம். ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் கேரளாவில் தொடர்கிற 'மூளை தின்னும் அமீபா' பற்றிய செய்திகளாகவே இருக்கிறது. சென்ற வருடம் 9 பேர் இந்த அமீபா தொற்று காரணமாக கேரளாவில் மரணமடைந்தார்கள். இந்த வருடம் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. Brain Eating Amoeba ஏன் இந்தப் பெயர்? இது 'நிக்லேரியா ஃபவுலேரி' ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை 'பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்' (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை 'மூளை தின்னும் அமீபா' என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள். எங்கெல்லாம் இருக்கும் மூளை தின்னும் அமீபாக்கள்? வாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல் 15 மைக்ரோமீட்டர் வரையான அளவில் இந்த அமீபா காணப்படுகிறது. பொதுவாக இவை வெதுவெதுப்பான நன்னீரில் அல்லது அழுக்கான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், குறிப்பாக குறைந்த அளவு நீர் மட்டம் கொண்ட நீர்நிலைகளில் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல், முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் வாழக்கூடும். சுத்தமற்ற வெதுவெதுப்பான நீர்நிலைகள்தான் ‘மூளைத் தின்னும் அமீபா’ வாழ்வதற்கு ஏற்ற இடம். 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்கூட இந்த அமீபா உயிர்வாழ முடியும். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குழாய்த் தண்ணீர், நீச்சல் குள நீர் மற்றும் உப்புக் கடல் நீரில் இந்த அமீபா வாழ முடியாது என்று ApolloHospital.com தெரிவிக்கிறது. Brain Eating Amoeba மனிதர்களுக்குள் எப்படி நுழைகிறது? மூளைத் தின்னும் அமீபா மனிதர்களுக்குள் எவ்வாறு நுழைகிறது? அது நுழைந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே பகிர்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா. அறிகுறிகள்..! இந்த அமீபாக்கள் வாழும் நீர்நிலைகளில் மூழ்கி குளிக்கும்போது, அந்த நீர் மூக்குக்குள் சென்று விடும். அப்படி சென்றுவிட்டால், மூக்கின் உள்ளே உள்ள ‘கிரிப்ரிஃபார்ம் பிளேட்’ (Cribriform Plate) எனப்படும் எலும்பில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகள் வழியாக, அது மூளை நோக்கி செல்கிறது. இதன்பிறகு, தீவிரமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை ஆரம்பமாகும். அடுத்த பத்து நாள்களுக்குள், மூளை காய்ச்சலின் அறிகுறிகளான பின்கழுத்து இறுக்கம், தலைச்சுற்றல், வலிப்பு, கவனமின்மை, மூர்ச்சை, கோமா, இறப்பு ஆகியவை நிகழ்ந்துவிடும். Brain Eating Amoeba கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம்! மூளைத் தின்னும் அமீபா தொற்று அரிதானது என்பதாலும், இதன் அறிகுறிகள் ‘பாக்டீரியா’ எனும் மற்றொரு ஒற்றைச் செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சலைப் போன்றே இருப்பதாலும், பிரச்சினைக்குக் காரணம் மூளைத் தின்னும் அமீபாதான் என்பதை கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம். இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களைத் தின்று முடிப்பதற்கு முன்பே விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் இந்த அமீபா தொற்று ஏற்பட்டால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. இதற்கு சிகிச்சை இருக்கிறதா, பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பதையும் அவர் விளக்கினார். தமிழ்நாட்டில் ஒரு நபரை காப்பாற்றியிருக்கிறார்கள்! மூளைத் தின்னும் அமீபா தொற்று, பாக்டீரியா தொற்று போலத் தோன்றினாலும், பாக்டீரியா கொல்லிகள் என அழைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு (Antibiotics) அடங்காது. இதற்கு, கோவிட் காலத்தில் ஏற்பட்ட கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு பயன்படுத்திய ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ (Amphotericin B) சிகிச்சை பயனளிக்கிறது. இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உடனடியாகக் கணித்து, மூளைத் தண்டுவட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ சிகிச்சையை வழங்கினால், பாதிக்கப்பட்டவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 47 வயதான ஒரு நபரை இந்த முறையில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர் . அமீபா சரியான எண்ணிக்கை தெரிவதற்கு வாய்ப்பில்லை! வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இதுவரை உலகளவில் 500-க்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 50-க்கும் குறைவான நபர்கள் இறந்ததாக மருத்துவ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், மூளைத் தின்னும் அமீபாவால் இறந்தவர்களை ‘மூளைக்காய்ச்சலால் இறந்தவர்கள்’ எனப் பதிவுசெய்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை நமக்குத் தெரியாமல் போகும். Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! பொது நீர்நிலைகளில் குளிக்காமல் இருங்கள்! மற்றபடி, இந்த அமீபா தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. அசுத்தமான தண்ணீர் குடிப்பதாலும் பரவாது. நீர்நிலைகளிலும், நீச்சல் குளங்களிலும் குளிக்கும் அனைவருக்கும் இந்த அமீபா தொற்று ஏற்படுவதில்லை. மிக அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது; அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் அமைகிறது. அதனால், இந்த அமீபா குறித்து அச்சம்கொள்வதைவிட, பொது நீர்நிலைகளில் மூழ்கி குளிப்பதைத் தவிர்க்கவும். நீச்சல் குளங்கள் முறையாக குளோரினேட் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொண்ட பிறகே அதற்குள் இறங்குங்கள். நீச்சல் பயிற்சி செய்யும் போது nose clip (நோஸ் க்ளிப்) அணிந்துகொள்ளுங்கள். டாக்டர் ஃபரூக் அப்துல்லா Brain & ChatGPT: AI நம் மூளைக்கு நண்பனா; எதிரியா..? ஆய்வு முடிவும், மருத்துவர் விளக்கமும் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால்... ஒருவேளை, இந்த விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று 'பொது நீர்நிலையில் எத்தனை நாள்களுக்கு முன்னால் குளித்தீர்கள்' என்பதை தெரியப்படுத்துங்கள். உடனடியாக நோயைக் கண்டறிந்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

விகடன் 3 Sep 2025 6:55 am