`ராகுல் காந்தி இல்லையென்றால் இந்தியாவை விற்றுவிடுவார்கள்!'– பாஜகவை சீண்டிய காங்கிரஸ் எம்.பி
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், ``புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த ஐந்து மாதங்களாக இலவச அரிசியை வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்திற்கான கூலி 350 ரூபாய். ஆனால் இங்கு பயனாளிகளுக்கு 320 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது. தற்போது நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும். புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி வந்ததில் இருந்து ஆண்டுக்கு 2,000 பேர் என மொத்தமாக 10,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர். ஆனால் வெறும் 2,400 பேருக்குத்தான் இவர்கள் வேலை கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாகத்தான் 12 நாட்கள் பாதயாத்திரை நடத்த இருக்கிறோம். முதல் கட்டமாக 21.01.2026 அன்று தொடங்கும் இந்தப் பாத யாத்திரையை 23 தொகுதிகளில் நடத்த இருக்கிறோம். பிரதமர் மோடியை எதிர்க்கும் துணிச்சல் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே இருக்கிறது. அவர் மட்டும் இல்லையென்றால் அவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்கள் என்றார். புதுச்சேரி: ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி... - ரங்கசாமி மீது காங்கிரஸ் எம்.பி., தாக்கு
NDA கூட்டணி: நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம் - வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமமுக தலைவர் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாகப் போராடியது. ஒருகட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அமமுக-வைப் போட்டியிட வைக்கத் தீர்மானித்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். என்.டி.ஏ கூட்டணி அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமமுக: அண்ணாமலை இருந்தவரை கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை- TTV தினகரன் சொல்வது என்ன? மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
`மாப்பிள்ளை'அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?
வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது. ``அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை, அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இனைந்திருக்கிறேன். தேர்தல் வருவதால் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ்ஸை விட்டு விலகி வந்துள்ளேன். எனக்கு தனிப்பட்ட முறையில் அதிமுக-வில் இருந்து அழைப்பு வந்தது. அதை நான் நிராகரித்து விட்டேன். தஞ்சாவூரில் இணைப்பு விழா நடக்க உள்ளது என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு தெரிவித்துள்ளார் வைத்திலிங்கம். அன்பில் மகேஸ், வைத்திலிங்கம் வைத்திலிங்கம் சேர்வது முடிவான பின்னரும், அது அரசியல் களத்தில் பேசு பொருளாக ஆக வேண்டும் என்பதற்காக வைத்திலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் திமுக-வில் இணைவதை தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியை இறுதி செய்ய பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்திருக்கும் இந்த நாளில், இணைப்பை செய்திருக்கிறார்கள். அன்பில் போட்ட ஸ்கெட்ச் ; செந்தில் பாலாஜி அழுத்தம்! அன்பில் போட்ட ஸ்கெட்ச்சுக்கு, செந்தில் பாலாஜி அழுத்தம் கொடுக்க டெல்டாவின் முகமாக அறியப்பட்ட வைத்திலிஙம் விக்கெட் தற்போது திமுகவிற்குள் விழுந்திருக்கிறது. என்ன நடந்தது, ஏன் வைத்திலிங்கம் தி.மு.க-விற்கு சென்றார் என டெல்டா அரசியலில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து டெல்டா மாவட்டங்களில் அரசியல் தெரிந்த சிலரிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் நின்று வந்த வைத்திலிங்கம் கூட்டணியில் சீட் பெற்றும் மாற்று சின்னத்தில் நிற்பதை விரும்பவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. சில காரணங்களால் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், வைத்திலிஙத்திற்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு நீடித்தது. ஒ பன்னீர் செல்வம் அதிருப்தியில் இருக்கும் வைத்திலிங்கத்தை தவெக-வுக்கு இழுப்பதற்கு செங்கோட்டையன் முயன்றார். உங்கள் கண்ட்ரோலில் சில மாவட்டங்களை தருகிறோம் என்றெல்லாம் பேசப்பட்டது. கிட்டதட்ட செங்கோட்டையன் அழைப்பை ஏற்கும் மனநிலையில் வைத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜனநாயகன் படப்பிரச்னை, சிபிஐ விசாரணை போன்றவற்றால் விஜயிடமிருந்து சிக்னல் வருவதற்கு தாமதமானது. மறுபக்கம், வைத்திலிங்கமும் அமைச்சர் அன்பில் மகேஸ் மனைவியும் நெருங்கிய உறவினர்கள். நிகழ்ச்சிகளில் வைத்திலிங்கம், அன்பில் மகேஸை பார்த்தால் மாப்பிள்ளை என்று தான் அன்பிலை அழைப்பாராம். தீவிர அதிமுக விசுவாசி டு திமுக இந்த உறவை பாலமாக்கி வைத்தியை திமுக-வுக்கு இழுப்பதற்கான முயற்சியை அன்பில் மகேஸ் மேற்கொண்டார். அதற்கான தேவையும் இருந்ததாக சொல்கிறார்கள். தஞ்சாவூரில் குறிப்பாக ஒரத்தநாட்டில் ஆளுமை மிக்க நிர்வாகிகள் திமுகவில் இல்லை என தலைமை கருதியது. வைத்திலிங்கம் மூலம் இதை சரி செய்வதற்கே அவருக்கு வலை விரிக்கப்பட்டதாம். தஞ்சாவூரில் விவசாயிகளை திரட்டி விழா எடுத்த வைத்திலிங்கம், `பொன்னியின் செல்வி' என்ற பட்டத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கினார். அந்த அளவிற்கு ஜெயலலிதா விசுவாசியாக இருந்தார். ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்தார். அந்த சமயத்தில் பேராவூரணியில் நடந்த கூட்டம் ஒன்றில், வைத்திலிங்கத்திற்கு சவால் விட்டார் ஸ்டாலின். தீவிர அதிமுக விசுவாசியாக இருந்தவர் வைத்தி. வைத்திலிங்கம் இவை திமுக-வுக்கு சென்றால் தனக்கு சங்கடத்தை உருவாக்கும் என கருதியவர் மனக்குழப்பத்தில் இருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி, `ஒரு வேளை நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ-வாகத்தான் இருப்பீர்கள், எங்க பக்கம் வாங்க அமைச்சர் தருகிறோம். முதல்வரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்' என அவர் மனதை கரைத்துள்ளார். அதன் பிறகு வைத்திலிங்கத்தை சந்தித்த அன்பில் மகேஸ், போன் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வைத்தியை பேச வைத்து தயக்கத்தை போக்கியுள்ளார். அப்போது, ``அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை தருகிறோம் என்பது தங்களுக்கு தெரியும், நீங்கள் தைரியமாக வாருங்கள், உங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றாராம். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்! அதன் பிறகே திமுகவில் இணையும் முடிவை தீர்க்கமாக எடுத்தாராம். கடந்த பத்து நாட்களாக திரைமறைவில் நடந்தவை இன்று பொதுவெளியில் அரங்கேறியுள்ளது. தன் மகன் பிரபு உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவி, ஒரத்தநாடு தொகுதியில் சீட், ஆட்சி அமைத்தால் அமைச்சர் என பல்வேறு டிமாண்ட் வைத்தி தரப்பில் வைக்கப்பட்டதாம். இதற்கு திமுக தலைமை ஓகே சொன்னதாம். ஆனாலும் வைத்தி இணைவது முதல்கட்ட நிர்வாகிகள் பலருக்கே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளனர் திமுக தலைமை. நேற்று இரவு தான் முக்கிய நிர்வாகிகளுக்கு சொல்லியுள்ளனர். நல்ல நேரத்திற்குள் இணைய வேண்டும் என விரும்பியதால் காலை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அறிவாலயம் வந்து விட்டார்களாம். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆனால் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் அறிவாலயம் செல்வதற்கு தாமதமாகி விட்டதாம். ஸ்டாலின் காத்திருக்கிறார் என அவருக்கு தகவல் சொல்லப்பட்டதும் அரக்க பரக்க ஓடியவர் ட்ராபிக்கில் சிக்கி கொண்டேன் என தாமதத்திற்கு காரணம் சொன்னாராம் சந்திரசேகரன். இணைப்பு வைபவம் முடிந்ததும் தன் ஆதரவாளர்களை தஞ்சாவூரில் நடைபெறும் இணைப்பு விழாவில் சேர்ப்பதற்கான பணிகளில் மூழ்கி விட்டார் வைத்தி என்கிறார்கள். 'எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... அறிவாலயம் போகும் வைத்திலிங்கம்?' - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்டா! ``வைத்தி எடுத்திருக்கும் முடிவால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சொல்லப்போனால் எங்களுக்கு ரூட் கிளியர் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்கள் அதிமுகவினர். வைத்திலிங்கம் திமுக-விற்கு சென்றதை விரும்பாத ஆதரவாளர்களை மீண்டும் அதிமுகவில் இழுப்பதற்கான பணிகள் நடக்கிறது. தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடப்பதற்கு முன் அவரது ஆதரவாளர்கள் பலரை அதிமுகவில் இணைத்து வைத்திக்கு அதிர்ச்சி தரக்குடிய நிகழ்வை நிகழ்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார் என்கிறார்கள்.!
அதை செந்தில் பாலாஜி நிரூபித்தால், அரசியலை விட்டு விலகி விடுகிறேன் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர், தான்தோன்றிமலை பழைய நகராட்சி அலுவலகம் அருகில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி, தி.மு.க அரசுதான் கதவணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததாகப் பேசி வருகிறார். அ.தி.மு.க அரசு திட்டத்தை அறிவித்தவுடன் ரூ. 420 நிதியை ஒதுக்கீடு செய்தது. தி.மு.க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது என்று செந்தில் பாலாஜி நிரூபித்தால், தமிழக அரசியலை விட்டு நான் விலகி விடுகிறேன். தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசுவதெல்லாம் பொய்யாக உள்ளது. அதனை மக்கள் நம்ப மாட்டார்கள் எதிர்வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராகி விட்டார்கள் என்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும், யார் யாருடன் போட்டி என தெரியும் - விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில்
``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர். அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். என்.டி.ஏ கூட்டணி எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை. அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!

'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்
என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். டிடிவி பியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம் ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்' என்றார். NDA டிடிவி தினகரன் பேசுகையில், 'மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.
Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?
முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் 'அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்' என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் 'பாதுகாப்பு' மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல. ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்? கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம். புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது. கிரீன்லேண்ட் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும். இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம். இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம். அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம். அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு 'பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக' பார்க்கிறார். கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் 'மிஸ்' செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. NATO ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth கிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..! தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது. அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர். இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரம்ப் கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம் இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள். Davos அஜென்டா தற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 'இது எதுவரை போகும்?' என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

`லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணை, மனைவியாக அங்கீகரிக்க உரிமை' - மதுரை ஐகோர்ட் உத்தரவு சொல்வதென்ன?
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். இருவருடைய காதலையும் பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை. இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இதையடுத்து பெண் மாயமானதாக பெண்ணின் தந்தை புகாரளித்ததால் பெண்ணை அவரின் வீட்டில் ஒப்படைத்தார் பிரபாகரன். கலப்புத் திருமணம் செய்துகொண்டால், இருவரையும் கொன்றுவிடுவோம் என பிரபாகரனின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பிரபாகரன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் உறவு வைத்து விட்டு ஏமாற்றியதாக பிரபாகரன் மீது அந்த பெண் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி கூறியதாவது, “மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார். லிவ் இன் ரிலேஷன்ஷிப் தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது. பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. நீதிமன்றம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனைவியாக அங்கீகரிக்கப்பட உரிமை உண்டு. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதற்காக அவர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிய வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.
OPS-ன் காலதாமதம்... திமுக தமிழ்நாட்டிற்குத் தேவை - திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் சொல்வது என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கட்சி மாறுதல், கூட்டணி மாறுதல், கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றுக்கு இனி பஞ்சமிருக்காது. அதில் ஒருவர்தான், இன்று திமுகவில் இணைந்துள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கம். அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா Vs ஓ.பன்னீர்செல்வம் என்கிற நிலை வந்தபோது, இவர் ஓ.பி.எஸ்ஸை டிக் செய்தார். வைத்திலிங்கம் ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி பின்னர் ஓ.பி.எஸ் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் இணைந்தபோதும், ஓ.பி.எஸ்ஸிற்குத் தூணாகவே நின்றார். இ.பி.எஸ், ஓ.பி.எஸிக்குத் தலைமைச் சண்டை வந்து இருவரும் பிரிய, அப்போது ஓ.பி.எஸ்ஸுடனேயே தொடர்ந்தார். ஆனால், இப்போது திமுகவில் சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம். இன்று காலை சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ஒரத்தநாடு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் இவர். அடுத்தது, அறிவாலயம் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்துள்ளார். அதன் பின், அவர் பேசியதாவது... அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செய்து வருகிறார் முதலமைச்சர். அதிமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தோற்றுவித்த தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். தேர்தல் விரைவில் வருகிறது. முடிவுகளைச் சீக்கிரம் எடுக்க வேண்டும். ஆனால், அது கால தாமதமானது. அதனால், ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE அதிமுக சுதந்திரமாகச் செயல்படவில்லை. சர்வாதிகரமாகச் செயல்படுகிறது. ஓ.பி.எஸ் திமுகவில் இணைவாரா என்பது குறித்து அவரைத்தான் கேட்க வேண்டும். என்னைத் தனிப்பட்ட முறையில், அதிமுகவில் இணைய அழைத்தார்கள். ஆனால், அதிமுக ஒட்டுமொத்தமாக ஒன்றாக இணைந்தால்தான், அதிமுகவில் சேருவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு இப்போது தேவை திமுக என்று பேசியுள்ளார். மருது அழகுராஜ், அன்வார் ராஜா, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் வரிசையில் தற்போது வைத்திலிங்கம். அடுத்து யாரோ?
தூத்துக்குடி தொகுதி: முட்டிமோதும் நிர்வாகிகள்; கூட்டணி முடிவில் அதிமுக? - ஜாலியில் அமைச்சர் தரப்பு!
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். தூத்துக்குடி தி.மு.கவின் முகமாகவும், மக்கள் மத்தியில் நன்கு பரிட்சியமானவர் என்பதால் வரும் தேர்தலில் மீண்டும் தி.மு.க சார்பில் மீண்டும் கீதா ஜீவனே போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் உள்ளுர் உடன்பிறப்புகள். அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி தொகுதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளும் அடங்குவதால், அமைச்சரின் தம்பியும் மாநகராட்சி மேயருமான ஜெகனின் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு உள்ளிட்டவைகளும் கீதாஜீவனுக்கு ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., த.மா.கா., ஐ.ஜே.கே., புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணியை உறுதி செய்துள்ளன. அ.தி.மு.க சார்பில் இத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் நேர்காணலும் நடந்து முடிந்துள்ளது. முந்தைய தேர்தலில், தி.மு.க வேட்பாளரான கீதா ஜீவனுக்கு எதிராக இத்தொகுதியில் அ.தி.மு.கவின் கூட்டணிக்கட்சியான த.மா.கா சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவரான எஸ்.டி.ஆர் விஜயசீலன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை தி.மு.க.,.வுக்கு எதிராக அ.தி.மு.கவே போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனராம். தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.கவில் வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். செல்லப்பாண்டியன் ஆனால், இவருக்கு தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் சவாலாகவே உள்ளனர். இந்த சவாலை அவரால் எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சுதாகர், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர். ரமேஷ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூ மணி, சுகந்தன் மற்றும் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவசாமி வேலுமணி உள்ளிட்டோரும் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகின்றனர். இவர்களில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், சுதாகர், பிரபு, ஆண்ட்ரூமணி, சிவசாமி வேலுமணி ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. செல்லப்பாண்டியனுக்கு சீட் கொடுத்தால் சண்முகநாதனின் ஆதரவாளர்கள், வெற்றிக்காக எந்த அளவிற்கு களப்பணி ஆற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், சண்முகநாதன் தனது ஆதரவாளரை களமிறக்கவும் முயன்று வருகிறார். சண்முகநாதன் அதே நேரத்தில் செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களும் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் கடந்த முறை போல கூட்டணிக்கட்சிகளான பா.ஜ.க அல்லது த.மா.காவிற்கு ஒதுக்கிவிடலாமா எனவும் யோசிக்கிறார்களாம். அதிமுக கூட்டணியில் நிலவும் இந்த குழப்பங்களில், திமுக நிர்வாகிகள் தொகுதியில் ஜாலியாக வலம் வருகிறார்களாம்.!
`துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02
(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம் .) ‘வாவ்’ வியூகம் - 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் வகுக்கும் வியூகங்கள் பல ரகங்கள். ஆனால், சில நேரங்களில் ‘அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத் தான் இருக்குது’ என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிகழும் சில சம்பவங்கள் ஒரு கட்சிக்கு லாபகரமாக மாறும். அதுவும் குறிப்பாக சில களேபரங்களோ, சில அசம்பவிதங்களோ தேர்தல் முடிவுகளைத் திருப்பிப் போடும் தீர்ப்புகளைத் தந்த வரலாறு தமிழக அரசியலில் உண்டு. அப்படியாக அனுதாப அலைகளால் மாறிப் போன திமுக, அதிமுகவுக்கான மக்கள் தீர்ப்பு பற்றிய குவிக் ஃப்ளேஷ்பேக் இது... துப்பாக்கியால் ஒரு திருப்புமுனை.! 1967 தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திருக்கவிருந்தது. அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் படு பிஸியாக இருந்தன. பிப்ரவரியில் தேர்தல் நடத்த அட்டவணை வெளியாகியிருந்தது. ஜனவரியில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக சிறப்பு மாநாட்டில் எம்ஜிஆர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நிதியாக ரூ.1 லட்சத்தை வழங்குவதாக அவர் மேடையில் அறிவித்தார். அதற்கு மேடையில் அண்ணா ஒரு சுவாரஸ்ய பதிலளித்து ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார். “எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது” என்று அண்ணா பேச, கரகோஷம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து அண்ணா, “இந்தத் தேர்தலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர் முகத்துக்கே முப்பதாயிரம் வாக்குகள் விழும்” என்றார். எம்ஜிஆர் - அண்ணா ஜனவரி 1, 2 தேதிகளில் ஒரு பிரம்மாண்டக் கூட்டம் மூலம் திமுக மாஸ் காட்ட ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் ஒரு பிரச்சார நிகழ்ச்சி நடந்தது. அதில் பெரியார் கலந்து கொண்டார். அப்போது, அண்ணா, எம்ஜிஆரை பெரியார் விமர்சித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அதே மேடையில் உரையாற்றிய எம்.ஆர்.ராதாவும், கோபம் தெறிக்க எம்ஜிஆரை விமர்சித்ததாக தகவல். தொடர்ந்து நடந்த ஒரு சம்பவம்தான் தமிழக அரசியல் வரலாற்றின் இன்னொரு திருப்புமுனை. ஆம், 1967 ஜனவரி 12 - தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றைய தினம்தான் எம்ஜிஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. அதன்பின்னர் சிகிச்சை, விசாரணை, கைது, வழக்கு என நடந்ததெல்லாம் இன்று நீட்டி எழுதினால் ஒரு ஓடிடி சீரிஸுக்கான கதை ஆகிவிடும். அந்த அளவுக்கு அதன் பின்னணியில் பல விவரங்கள், சூட்சமங்கள் உண்டு. அதுவும் குறிப்பாக எம்ஆர் ராதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ‘எம்ஜிஆரை சுட்டதேன்?’ என்பது தொடர்பாக இருக்கும் விவரங்கள் மட்டுமே அத்தனை நுணுக்கமானவை. அந்தத் துப்பாக்கிச் சூட்டால் தமிழகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொள்ள, மருத்துவமனையில் இருந்தபடி எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார். அவர் மருத்துவமனையில் கழுத்தில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக திமுக மாநிலம் முழுவதும் ஒட்டியது. எம்ஜிஆர் அந்தத் தேர்தலில் செயின்ட் தாமஸ் தொகுதியில் போட்டியிட்டார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்... மருத்துவமனையில் இருந்ததால் எம்ஜிஆர் தொகுதிக்கு நேரில் பிரச்சாரத்துக்கு வரவே இல்லை. ஆனால், அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். இந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எம்ஜிஆர் சுடப்பட்டதால் உருவான அனுதாப அலையும். இதையெல்லாம் விட மிக முக்கியமானது, 1967-க்குப் பின்னர் காங்கிரஸால் தமிழகத்தில் இதுவரை ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. கூட்டணியில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1967 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு என தனித்த உத்திகள் இருந்திருக்கலாம். இந்தி திணிப்பு போன்ற பிரச்சினைகளால் அதிருப்தி அலையும் கூட இருந்திருக்கலாம். அதில் மிக முக்கிய பங்காற்றியது, எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை. திமுகவுக்கு அன்று வெற்றியைத் தேடித்தந்தது மட்டுமல்ல, எம்ஜிஆரின் அரசியலுக்கு மிகப் பெரிய அடித்தளம் இட்டதும் அந்த அனுதாப அலை என்றால் அது மிகையாகாது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 1980 தேர்தலும் எம்ஜிஆர் வென்ற இதயங்களும்..! 1977-ல் அதிமுக முதன்முதலில் ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் முதல்வரானார். அந்த ஆட்சி 1982 வரை நீடித்திருக்க வேண்டும். ஆனால், 1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கு வழிகோலியது. தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர் முதல்வரான பின்னர் இட ஒதுக்கீட்டுக்கான ‘கிரீமீ லேயர்’ முறையை அறிமுகப்படுத்தியிருந்தார். அதாவது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற அவர்களது பெற்றோரின் வருட வருவாய் ரூ.9000-க்குள் இருக்க வேண்டுமென அறிவித்தார். இதற்கு திமுக, தி.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தமிழக அரசியலில் இது பெரிய விவகாரமாகவும் உருவெடுத்தது. இதை முன்வைத்து திமுக செய்த பிரச்சாரம் 1980 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது எனலாம். அந்தத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கூட்டணி போட்டியிட்டது. திமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. 1980 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எம்ஜிஆருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. அதன்பின்னர் மாநிலத்தில் அவர் கொண்டுவந்த சில நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவந்தார். அதில் ஒன்றுதான் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான கிரீமி லேயர் வருமான வரம்பு நீக்கம். இந்த ஒரு திருத்தத்தால் உருகிப்போய் தி.க, எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தது. கூடவே, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் தனது ஆட்சி கலைக்கப்பட்டது சதியென்று மக்கள் மத்தியில் பதியவைத்தார். விளைவு, எம்ஜிஆர் மக்கள் இதயங்களை வென்றார். அது தேர்தலில் பிரதிபலித்தது. அதிமுக தனித்து 129 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் 32 இடங்களைக் கைப்பற்றின. எம்.ஜி.ஆர் எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை, திமுகவை ஆட்சி அரியணையில் அமர்த்திய காரணங்களுள் ஒன்றாக இருக்க, ‘துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன்’ என்று எம்ஜிஆர் முன்னெடுத்த பிரச்சாரப் பேரலை அனுதாப அலையாக மாறி மீண்டும் 1980-ல் எம்ஜிஆரை ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் தங்கள் தலைவன் வாடினாலும் வாக்களிப்பார்கள், அவன் உரிமைக் குரல் எழுப்பினாலும் வாக்களிப்பார்கள். இது வாக்களிப்பியலில் ஒரு ‘டிசைன்’. அடுத்தடுத்த அனுதாப அலைகள்..! மத்தியிலும், ஒரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரு மிகப் பெரிய அனுதாப அலை வீசியது என்றால், அது 1984-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி இந்திரா காந்தி படுகொலை நடந்தது. அப்போது ராஜீவ் காந்தி உடனடியாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் தனது பலத்தை நிரூபிக்க விரும்பியதால், நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 414 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி என்ற மிகப் பெரிய ஆளுமை அவரது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட அனுதாப அலை, ராஜீவ் காந்திக்கு மக்கள் அங்கீகாரத்தைத் தந்தது. 1984 நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அப்போது தமிழகத்திலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமென்று அதிமுக முக்கியப் புள்ளிகள் விரும்ப, அப்போது அதிமுகவுடன் நட்பு பாராட்டிய ராஜீவ் காந்திக்கு தகவல் சென்றது. ராஜீவ் காந்தியும் அதற்கு ஆவன செய்ய, ஆட்சி கலைக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவிட்டார். முதல்வர் மாநிலத்தில் இல்லாதபோது, வேறு ஏதும் சட்டம், ஒழுங்கு இல்லாத போது ஆட்சி கலைக்கப்பட்டதற்காக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.ஜி.ஆர் ஆனால், எல்லாவற்றையும் மீறி தமிழக சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. 1984 டிசம்பர் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக - காங்கிரஸ் கட்சி இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்த எம்ஜிஆர் இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இன்றைக்கு மட்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை. எல்லாக் காலத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு 1984 தமிழகத் தேர்தலும் ஒரு வரலாற்று சாட்சி. காரணம், எம்ஜிஆருக்காக வேட்புமனு அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இருந்தபோதும் எம்ஜிஆரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றிருந்தது. எங்கே ஒர்க் அவுட் ஆனது அனுதாப அலை? எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் மட்டுமே அனுதாப அலை மேலோங்கிவிடவில்லை. எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பின. அதன் வீரியத்தைப் புரிந்துகொண்ட அதிமுக, எம்ஜிஆரைப் பற்றிய ஒரு வீடியோவை அமெரிக்காவில் உருவாக்கி, தமிழகத் திரையரங்குகளில் திரையிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்தது போல ‘வெற்றித் திருமகன்’ என்று பெயரிடப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ, பல பிரிண்டுகள் போடப்பட்டு திரையிட்டப்பட்டது. நம் சம காலத்தில் ஜெயலலிதா டிவி பார்ப்பது போல் நாம் பார்த்த ஃபோட்டோக்களைப் போல் அன்று திரையரங்குகளில் காட்டப்பட்ட வீடியோவில், எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் அமர்ந்திருப்பது, உணவு அருந்துவது, இரட்டை இலையைக் காண்பிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்ற காட்சிகள் நாடாளுமன்றம் மற்றும் தமிழகத் தேர்தல் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 19-ம் தேதி எம்ஜிஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அது வெற்றிகரமாகவே நடந்தது. ஒரு பக்கம் இந்திரா காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை, மறுபக்கம் எம்ஜிஆர் சிகிச்சையில் இருப்பதால் எழுந்த அனுதாப அலை. இரண்டும் சேர்ந்து அனுதாப சுனாமியாகி மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்தது. அதை கிட்டத்தட்ட எல்லோரும் கணித்தே இருந்தனர். ஆனால், ‘அனுதாப அலை’களை வாக்குகளாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும் சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கும் சாட்சியாக நிற்கிறது அதிமுக. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். (வியூகங்கள் தொடரும்.!) அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01

`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!
என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி, 'இன்னா செய்தாரை ஒறுத்தல் என பொதுக்குழுவிலேயே பேசியிருந்தேன். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. கட்சியின் நலனையும் தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அம்மாவின் ஆட்சி அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். பியூஸ் கோயலை சந்தித்தப் பிறகு இன்னும் விரிவாக பேசுகிறேன்' என்றார். டி.டி.வி. தினகரன் இன்னும் சில நிமிடங்களில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார் டிடிவி. பிரதமர் மோடி 23 ஆம் தேதி தமிழகம் வரும் சூழலில் வேகவேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது பாஜக.
Jana Nayagan தேர்தலுக்கு முன்பு வெளிவருமா? | NDA கூட்டணியை உறுதிசெய்த TTV?| | STALIN RN RAVI DMK
காங்கிரஸ்: கண்ணாம்மூச்சி ஆடும் டெல்லி; தமிழ்நாட்டில் பிளான் B - ஸ்கெட்ச் யாருக்கு?!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சலசலப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாடு வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி அதே நேரம், பா.ஜ.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க. இருக்கிறதா இல்லையா என்றக் குழப்பம் இருப்பதுபோல, தி.மு.க. கூட்டணிக்குள் காங்கிரஸ் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை. அதற்குக் காரணம், மாணிக்கம் தாக்கூரில் தொடங்கி, திருச்சி வேலுசாமி வரை பலரும் தி.மு.க-வை விமர்சித்ததும், ஆட்சி - அதிகாரத்தில் பங்கு கேட்டதும், தவெக ஆதரவு நிலைப்பாடு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பொங்கல் விழாவுக்குக் கூட முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததன் மூலம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தினார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. கூட்டணிக்குள் உரசல்? ஆனால், பொங்கலுக்குப் பிறகு டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுத்த செல்வப் பெருந்தகை, ``கூட்டணி குறித்து யாரும் வெளியே பேசக்கூடாது என்பது தலைமையின் உத்தரவு” எனச் பாந்தமான குரலில் கூறிவிட்டு கடந்து சென்றுவிட்டார். நேற்று(20-01-2026) சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், ``திமுக இன்னும் எங்களைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும்” எனக் குறிப்பிட்டிருந்தார். செல்வப்பெருந்தகை - ஸ்டாலின் இதன் அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியேயும், கூட்டணிக்குள்ளும் உரசல்போக்கு நீடிப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் காங்கிரஸுக்குள் என்னதான் நடக்கிறது..? காங்கிரஸின் 'பிளான் பி' என்ன? என்பதை அறிந்துகொள்ள ஊடகவியலாளர் குபேந்திரனைத் தொடர்புகொண்டோம். டெல்லி ஆலோசனைக் கூட்டம்! நிதானமாக பேசத் தொடங்கியவர், பல்வேறு அம்சங்களாக இந்த விவகாரத்தை அணுகினார். ``டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்னைகளையும், கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தையும் டெல்லி தலைமைக்குச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக பதவியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க ஆதரவு என்றும், இளம் தலைவர்கள் தவெக ஆதரவு என்றும் பேசிக்கொண்ட தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மனநிலை தி.மு.க ஆதரவு நிலைப்பாடுதான் என்பதை அவரது செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால், பதவியில் இல்லாத தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் 'வெறும் 25 எம்.எல்.ஏ, 10 எம்.பி. சீட்டுக்காக தி.மு.க-விடம் கட்சியை அடகு வைப்பதா? நாம் இன்னும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்' என விரும்புகிறார்கள். ஊடகவியலாளர் குபேந்திரன் மேலும், `த.வெ.க-வுடன் கூட்டணி வைத்தால் 70 - 80 சீட் வரை கிடைக்கும். குறைந்தது விஜய் பிரபல்யத்தை வைத்து 45 - 50 இடங்களில் வெல்ல முடியும்' என நம்புகிறார்கள். காங்கிரஸின் இளம் நிர்வாகிகளின் விருப்பம் தவறு என நம்மால் கூற முடியாது. ஆனால் அவர்களின் விருப்பம், அரசியலில் பலிக்குமா? என்பதுதான் இப்போது நம்மிடம் இருக்கும் விடை தெரியாத கேள்வி. காங்கிரஸ் குமுறல் திமுக-வின் விசிக ஆதரவு தி.மு.க. கூட்டணிக்குள் காட்டும் வேறுபாடு, காங்கிரஸுக்கு பெரும் பொருமலாக இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அதன் எம்.எல்.ஏ, எம்.பி-களுக்கும் தி.மு.க. அரசு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. முக்கியமாக தகவல் ஆணையம், சட்ட ஆணையம் போன்ற வாரியப் பதவிகளை திருமாவளவன் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வழங்குகிறது. ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஒரு நகராட்சி துணைத் தலைவர் பதவிகூட இல்லை. கோயம்பேடு, மாதாவரம் போன்ற பகுதிகளில் ஒரு பெட்டிக்கடை உரிமம் வாங்குவதற்குக் கூட தி.மு.க தரப்பில் உரிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற குமுறல் இருக்கிறது. சத்தியமூர்த்தி பவன் தொண்டர்கள் குறைவாக இருக்கும் கட்சி என்பதால், சில இடங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. - எம்.பி.கள் தி.மு.க தலைவர்களால் தர்மசங்கடத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடே, கீழ்மட்ட நிர்வாகிகளின் தி.மு.க. எதிர்ப்பு மனநிலையாக இருக்கலாம். காங்கிரஸ் அஸ்திரம் இது ஒரு பார்வை... இன்னொரு பக்கம் தி.மு.க-விடமிருந்து அதிக இடங்களைப் பெற, தவெக எனும் 'பிளான் பி' திட்டம் ஒரு அஸ்திரமாக இருக்கும் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம். அதனால்தான் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்களைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள் எனக் கருதுகிறேன். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இவர்களே கூட இப்படியான கருத்தைப் பேசத் தூண்டிவிட்டிருக்கலாம். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவில், `தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கலாம், தொகுதிப் பங்கீட்டின் போது கூடுதல் இடங்களைக் கேட்கலாம். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்கலாம். கொடுத்தால் பெற்றுக்கொள்வோம்' என்ற மனநிலைக்கு வந்திருப்பதாகத் தகவல். ஸ்டாலினிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளும் ராகுலின் இந்த முடிவுக்கு காரணம் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் அரசியல் களத்தில் பலமாக இல்லை என்ற யதார்த்தம் ராகுலுக்குத் தெரியும். அதே நேரம், தி.மு.க 25 தொகுதிகளையும் கொடுத்து, அதில் 17 இடங்களில் வெற்றிபெறவும் வைக்கிறது. அதாவது, தொகுதியும் கொடுத்து, அந்தத் தொகுதியில் வெற்றிபெற வேட்பாளருக்கு எல்லா உதவிகளையும் செய்கிறது. ஸ்டாலின் திமுக செய்யும் உதவி? வட மாவட்டத்தில் ஒரு பெண் எம்.பி. வெறும் சில ஆயிரங்களை எடுத்துக்கொண்டு தேர்தல் களத்துக்குச் சென்றார். ஆனால், தி.மு.க வைட்டமின் `ப' -வை கோடிகளில் செலவு செய்து வெற்றிபெற வைத்தது. தமிழ்நாட்டில் 9 எம்.பி. சீட் கொடுத்து, அந்த வேட்பாளர்களை வெற்றிபெறவும் வைக்கிறார்கள். மத்திய மண்டலத்தில் இருக்கும் ஒரு பெண் எம்.பி.-யையும் அதே போல் வெற்றி பெற வைக்கிறார்கள். இவ்வளவு ஆதரவுடன் செயல்படும் கூட்டணியை, தி.மு.க-வால் அதிகாரத்துக்கு வந்தவர்களால் எப்படி நிராகரிக்க முடியும்? உண்மையில் காங்கிரஸ் வலிமையாக இருக்கிறது என்றால், 5 தொகுதியில் மட்டும் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறட்டும். அதிகபட்சம் கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றிபெறலாம். மதுரை, திருச்சி, சிவகங்கையில் கூட அவர்களால் வெல்வது கடினம்தான். எனவே, தி.மு.க கூட்டணி காங்கிரஸுக்கு அவசியம். காங்கிரஸ் வளர்ச்சி முக்கியம் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் 'டெல்லியில் இருக்கும் தலைவர்களுடன் தொடர்பு இருந்தால் போதும், ஏதாவது பதவியில் ஏறிவிடலாம்' என்ற எண்ணத்தால் அவர்கள் கட்சி வளர்ச்சியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதுதான் காங்கிரஸ் செய்துகொண்டிருக்கும் முக்கியத் தவறு. ஆரம்பக்கட்டத்தில், நகராட்சித் துணைத் தலைவர், துணை மேயர், பஞ்சாயத்து துணைத் தலைவர் போன்ற பதவிகளைக் கைப்பற்றியிருந்தால், கட்சி வளர பெரிதும் உதவியிருக்கும். அதற்கு காங்கிரஸ் தலைமை களத்துக்கு வரவேண்டும். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் கூட, டெல்லியில் யாருக்கு செல்வாக்கு அதிகமோ அவர்களைத்தான் தேர்வு செய்வார்கள். போட்டியிடும் தொகுதியில், மக்களிடம் யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என கவனிப்பதில்லை. பிறகு எப்படி கட்சி வளரும்? தவெக விஜய் விஜய்யின் அடையாள பிம்பத்தை வைத்து தவெக கூட்டணியில் வெற்றிபெற விரும்பும் காங்கிரஸ், முதலில் விஜய்க்கு உறுதியான வாக்கு சதவிகிதம் என்ன என்பது குறித்து அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்களுக்காக, ராகுல் காந்தி ஜனநாயகன் படத்துக்காக குரல் கொடுக்கலாம். ஆனால், அது வாக்குகளாக மாறுமா என்பதுதான் இங்கு சந்தேகம். இரண்டும் வெறும் பிம்பம் அண்ணாமலை - விஜய் விஜய் போல 2024 தேர்தலில் பா.ஜ.க. அண்ணாமலை என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தது. அவர் பிரசாரத்தில் 'தென்தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் இனி இருக்காது' என ஆக்ரோஷமாக பேசினார். அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து பெரும்பாலான ஊடகங்கள் 'கோவையில் 2 - 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றிபெறுவார்' என்றது. அந்தத் தேர்தலில் அண்ணாமலை என்ற பிம்பம் எப்படி கட்டமைக்கப்பட்டது தெரியுமா? `கவுண்டர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் அண்ணாமலைதான் என முடிவு செய்துவிட்டார்கள்' என பிரசாரம் செய்யப்பட்டது. அண்ணாமலைக்காக மட்டும் ஐடி விங்கில் 15000 பேர் வேலை பார்த்தார்கள். தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவருக்கும் இவ்வளவு பேர் வேலை பார்த்தது இல்லை. அண்ணாமலை பிரசாரத்துக்காக வீடு வீடாகச் சென்றார்கள். 'வென்றாலும், தோற்றாலும் 100 நாளில் கோவையின் தொழில்துறையை மாற்றிக்காட்டுவேன்' என சவால் விட்டார். இத்தனைக்குப் பிறகும், 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை படுதோல்வியைச் சந்தித்தார். இதேபோலதான் விஜய் என்ற பிம்பமும் கட்டமைக்கப்படுகிறது. தேர்தல் முடிவுதான் அவரின் பிம்பம் உண்மையா இல்லையா என்பதைச் சொல்லும். அதுவரை காத்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் 'மக்கள் அரசியலை' காங்கிரஸ் கீழ்மட்டத் தொண்டர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. இந்திய அளவில் பா.ஜ.க. மூன்று முறை மத்தியில் ஆட்சிக்கு வருகிறது. காங்கிரஸ் கோட்டை, கம்யூனிஸ்ட் மாநிலம் எனக் கூறப்படும் கேரளாவில் கூட ஒரு பா.ஜ.க. எம்.பி. வந்துவிட்டார். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி 15 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனாலும், தமிழ்நாடு பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்குக் கூட இடமளிக்கவில்லை. ஸ்டாலின், ராகுல் காந்தி எனவே, காங்கிரஸ் முதலில் களத்தில் இறங்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையைத் தவிர சாமானிய மக்களுக்கு தமிழ்நாட்டின் வேறு எந்த காங்கிரஸ் தலைவரைத் தெரியும்? எத்தனைப் பிரச்னைகளுக்கு தனித்து நின்று போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது காங்கிரஸ்? எனவே, காங்கிரஸ் களப்பணி - கட்சிப்பணிக்கான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். என்றார் தெளிவாக..! காங்கிரஸ்: ``கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என தலைமை வேதனையோடு தெரிவித்தது - செல்வப்பெருந்தகை
”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுப் பேசினார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். அ.தி.மு.க., 5 அற்புதமான தேர்தல் அறிக்கைகளை கொண்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றவுடன், அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கிலும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்ற திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார். கருப்பு அட்டை, சிகப்பு அட்டை, சீனி அட்டை என்ற பாகுபாடே இல்லாமல் ரேசன் அட்டை இருந்தால் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். டெல்லியில் அ.தி.மு.க வைத்துள்ள கூட்டணியால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும். மகளிருக்கு மட்டும் தற்போது இலவசப் பேருந்து பயணத்திட்டம் உள்ளது. பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில் இலவசப் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இனிமேல் ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசப் பேருந்துகளில் பயணித்து சினிமாவிற்கு செல்லலாம். ஊர் சுற்றலாம். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்தும் அவரது சுய சிந்தனையில் உதித்த திட்டங்கள். யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும். அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் மேடை ஏறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லோரும் துப்பாக்கி போல் ஓரணியில்தான் நிற்போம்” என்றார். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்

Greenlandக்காக EU உடன் மோதும் Trump - காத்திருக்கும் ஆபத்து என்ன? | Trade War | Decode
ஹோட்டலிலிருந்து வீடு திரும்பிய சிவசேனா கவுன்சிலர்கள்; மேயர் பதவிக்கு டெல்லியில் பேச்சுவார்த்தை!
மும்பை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இப்போது மேயர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. தங்களுக்கு 2.5 ஆண்டுகள் மேயர் பதவியைக் கொடுக்கவேண்டும் என்று சிவசேனா கூறி வருகிறது. ஆனால் மேயர் பதவியைப் பகிர்ந்து கொள்ள பா.ஜ.க தயாராக இல்லை. இதையடுத்து சிவசேனா கவுன்சிலர்களை பா.ஜ.க அடியோடு தன் வசம் எடுத்துக்கொள்ளும் அபாயம் இருந்தது. எனவே தனது கட்சி கவுன்சிலர்களை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த சில நாட்களாகத் தங்க வைத்திருந்தார். தற்போது பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளிநாடு சென்று இருக்கிறார். அவர் வந்த பிறகுதான் மேயர் பதவி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடையும். பட்னாவிஸ்-ஷிண்டே பட்னாவிஸ் வரும் 24ம் தேதிதான் மும்பை திரும்புகிறார். எனவே ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த கவுன்சிலர்கள் அனைவரும் அவர்களது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில், ''பா.ஜ.க மற்றும் சிவசேனா கவுன்சிலர்களின் மொபைல் போன்களை ஒட்டுக்கேட்டு அவர்களை பா.ஜ.க தங்களது கண்காணிப்பில் வைத்திருக்கிறது. முதல் முறையாக மேயர் பதவி டெல்லியில் முடிவு செய்யப்படுகிறது'' என்று தெரிவித்தார். அதேசமயம் சிவசேனா மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மும்பை மேயர் பதவி தொடர்பாக டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் 100வது பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டு தங்களுக்கு மேயர் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். டெல்லியில் மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் ஷெவாலேயைச் சந்தித்து பேசினார். மேயர் பதவி கிடைக்கவில்லையெனில் நிலைக்குழுத் தலைவர் பதவியையாவது கொடுங்கள் என்று சிவசேனா கோரி வருகிறது. மேயர் பதவியை விட நிலைக்குழுத் தலைவர் பதவி அதிக அதிகாரம் கொண்டது ஆகும். மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

'எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... அறிவாலயம் போகும் வைத்திலிங்கம்?' - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்டா!
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டா அதிமுக-வில் வலம் வந்தவர். சோழமண்டல தளபதி என்றே இவரை அதிமுகவினர் அழைத்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்ந்தார். பின்னர் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை உருவானது. தினகரன் தரப்பு, எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்போது வைத்திலிங்கம் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெல்லமண்டி நடராஜன் உட்பட பத்துக்கு மேற்பட்டவர்களை தினகரன் பக்கம் செல்லவிடாமல் தடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் வராமல் அரணாக இருந்தார். வைத்திலிங்கம் இதைதொடர்ந்து தி.மு.க ஆட்சி அமைந்தது. அதிமுகவிற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதைக் கடுமையாக எதிர்த்த நிலையில் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. ஓபன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து வெளியேறி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி, கட்சியை நிர்வகிக்க இரட்டை தலைமை வேண்டும் என்றும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வந்தனர். எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து வந்த வைத்திலிங்கம் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார். '2025 டிசம்பருக்குள் ஒருங்கிணைப்பு நிகழ்ந்து விடும். அது நடந்தால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்' என்றார். இந்நிலையில் உடல்நிலை சிகிச்சை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வைத்திலிங்கம் வெளியில் தலைகாட்டுவதைக் குறைத்து கொண்டார். அவர் திமுக-வில் இணையப்போவதாக வந்த செய்திகளை அவரது தரப்பு மறுத்தது. சமீபத்தில், நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் உரிமை மீட்புக் குழு, உரிமை மீட்புக் கழகம் என மாற்றப்பட்டது. அதில் கூட ஒருங்கிணைப்பு கருத்தை முன் வைத்த வைத்தவைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இந்தச் சூழலில் சென்னையில் இருந்த வைத்திலிங்கம் பொங்கல் பண்டிக்கைக்கு தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த அவரை அவரது ஆதரவாளர்கள் சந்தித்தனர். பொங்கல் அன்று சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் இருந்தவரை திமுக நிர்வாகிகள் சிலர் சந்தித்து பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். இது அரசியல் வட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கம் திமுகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இந்த முறை வைத்திலிங்கம் தரப்பு மற்றும் அவரது உதவியாளரான ராஜா உள்ளிட்ட யாரும் இதை ஆணித்தரமாக மறுக்கவில்லை. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம் இந்நிலையில், மறைந்த எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவில் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்..ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாட்டை வைத்தி செய்தார். அவருடைய ஆதரவாளர்களை இதற்கு வரச்சொல்லி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஊரில் இருந்தும் வைத்திலிங்கம் மாலையிடச் செல்லாமல் தவிர்த்தார். அவரது ஆதரவாளர்கள் மட்டும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இது அரசியல் மட்டத்தில் உற்று கவனிக்கப்பட வைத்தி திமுகவிற்குள் அடைக்கலமாவது உறுதியாகி விட்டது என்றனர். ஒரத்தநாடு இந்தச் சூழலில் வைத்தி உடனடியாக சென்னை கிளம்பினார். வைத்தியைச் சுற்றி இருப்பவர்கள் யாருடைய போனையும் எடுக்கவில்லை. அவரது மூத்த மகன் பிரபு நாங்கள் திமுகவிற்குச் செல்ல மாட்டோம், லோக்கலில் எங்களுக்கு எதிர்ப்பு அரசியல் செய்யக்கூடியவரால் இது போன்ற வதந்தி கிளப்பி விடப்படுகிறது என்றார். திமுகவில் சேரும் தகவல் வெளியில் கசிந்து விட்டால் வெளிப்படையாகச் சேரும் போது போதிய கவனமும், பரபரப்பும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் மறுத்து வந்தனர். இந்நிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைவது உறுதி என்கிறார்கள். இன்று காலை 11.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து அறிவாலயம் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகச் சொல்லப்படுதால் டெல்டா அரசியல் பரபரனு தகிக்கிறது. ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம் இது குறித்து சிலரிடம் பேசினோம், ''திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக இருந்து கட்சியைக் கட்டு கோப்பாக வைத்திருந்தார். மறைந்த முதல்வர் கருணாநிதியால் சோழமண்டல தளபதி என அழைக்கப்பட்டவர் கோ.சி.மணி. வயது மூப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவர் மாவட்ட செயலாளர் பதவில் இருந்து எடுக்கப்பட்டார். அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஒருங்கிணைந்த தஞ்சாவூரில் மாவட்ட செயலாளர் ஆனார். சில காரணங்களால் ஸ்டாலினின் குட்புக்கில் பழநிமாணிக்கத்தால் இடம் பெற முடியவில்லை. கோ.சி.மணிக்குப் பிறகு டெல்டாவில் பெயர் சொல்ல கூடிய வகையில் யாரும் வளரவில்லை. தஞ்சாவூரில் ஆளுமையான நிர்வாகி திமுகவில் இல்லாததால் உட்கட்சி பூசல் அதிகரிப்பதாக தலைமை கருதியது. சீனியரான துரை.சந்திரசேகரன் கமிஷன் வாங்குவதை தவிர நமக்கு எதுக்கு வம்புனு எதிலும் பட்டும்படாமலும் ஒதுங்கி நிற்பார். இதனால் ஒரு வெற்றிடம் இருப்பதாக தலைமை கருதியது. இந்தச் சூழலில் வைத்திலிங்கத்தை திமுகவிற்குள் இழுக்க அமைச்சர் அன்பில் மகேஸ் மூலம் தூண்டில் போடப்பட்டது. அன்பில் மகேஸ் மனைவியின் ஊரும் தெலுங்கன்கடிக்காடு என்பதாலும், ஏற்கனவே இவர்கள் உறவினர்கள் என்பதாலும் இந்த மூவ் ஈசியாக அமைந்தது. “கோஷ்டிப்பூசலில் திணறும் டெல்டா அ.தி.மு.க...” - சரிவிலிருந்து மீட்பாரா எடப்பாடி! சாதரணமாக இருந்த என்னை உச்சாணி கொம்பில் உட்கார வைத்தவர் அம்மா ஜெயலலிதா, அவரது விசுவாசியான என்னால் எப்படி திமுகவிற்கு வர முடியும் எனக் கேட்டு தவிர்த்திருக்கிறார் வைத்தி. அப்போது, செந்தில்பாலாஜியும் வந்துருங்கண்ணே உங்களுக்கான மரியாதை தரப்படும் எனச் சொன்னது அவரை யோசிக்க வைத்தது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் தரப்புக்கு கட்சியில் இடம் இல்லைனு திட்டவட்டமாக கூறியது வைத்தியைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஒரத்தநாடு தொகுதியில் 2021ல் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வருகிறார் வைத்தி. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டது இப்படியே போனால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என நினைத்தார். எம்.பி தேர்தலில் ஓ.பி.எஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டதை போன்ற நிலையையும் அவர் விரும்பவில்லை. வைத்திலிங்கம் இதனால் அன்பில் மகேஸ் வீசிய வலையில் சிக்கி விட்டார். தனக்கு மட்டும் நல்லது நடந்தால் போதாது, தன்னையே நம்பியிருக்கும் தீவிர விசுவாசிகளான வெல்லமண்டி நடராஜன், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன், தஞ்சாவூரில் முன்னாள் துணை மேயர் மணிகண்டன், சண்முகபிரபு, சாமிநாதன், செல்லத்துரை, நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் ஆகியோருக்கும் எதவாது செய்ய வேண்டும் என நினைத்தார். முதலில் திமுகவில் சேர்வதைத் தப்பான முடிவுண்ணே, நாம் பேசாம அமைதியாக இருந்துடலாம் என்று பலரும் சொல்லியுள்ளனர். 'நானும் குழப்பமான மனநிலையில்தான் இருந்தேன். ஆனால் நம்மை தூசியாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும், எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும். அரசியலில் இதெல்லாம் சகஜம்' என அவர்களைச் சமாதானம் செய்திருக்கிறார் வைத்தி. 'மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ் இதில் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன், நாஞ்சில் சத்தியராஜ் உள்ளிட்டோர் வைத்தியுடன் செல்வதற்குச் சம்மதித்து விட்டதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் அதிமுகவில் இணைய பேசி வருகின்றனர். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர், வரும் தேர்தலில் தனக்கு மற்றும் தன்னை சேர்ந்தவர்களுக்கு என மூன்று சீட் கேட்டிருக்கிறார். வைத்தியின் வருகையை அமைச்சர் கே.என்.நேரு தரப்பு எதிர்த்துள்ளது. வெல்லமண்டி நடராஜனுக்கு மவுசு இல்லாத பட்சத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டுள்ளனர். அவர்களைச் சமாதானம் செய்த தலைமை, வைத்தியிடம் உங்களுக்கு சீட், அமைச்சர் பதவி தருவதாகக் கூறி டீல் பேசி முடிக்கப்பட்டதாம். அண்ணா அறிவாலயம் இன்று காலை 11.30 மணியளவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வைத்திலிங்கம் அதன் பிறகு அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோரும் செல்ல இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேற்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு மத்திய மாவட்ட செயலாளரான துரை.சந்திரசேகரன், எம்.பி முரசொலி உள்ளிட்டோரை திரும்பி வரச்சொல்லி திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வர பாதியில் மீண்டும் சென்னை திரும்பி விட்டனர். இதனால் வைத்தி அறிவாலயத்தில் அடைக்கலமாவது உறுதி என்றனர். `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு
CBI விசாரணை, வதந்திகள்! TVK பதில் பேசாதது ஏன்? | Journalist Sivapriyan Interview | Vikatan TV

``ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கு தி.மு.க-வினர் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``சட்டமன்றத்தில் இருந்து 3-ஆவது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. மோதல் போக்கு காரணமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரைச் சட்டப்பேரவைக்கு அழைக்காத நிகழ்வுகள் நடைபெற்றன. ஆளுநர் ரவி பொய்களின் தோரணம் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை பொய்களின் தோரணம். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தொடர்ச்சியான அவருடைய சட்டமன்ற உரைகளைப் பார்த்தாலே அரசியல் செய்யத்தான் வந்திருக்கிறார் என்பது புரியும். ஆளுநர் ரவி 2022-ஆம் ஆண்டு ஆளுநர் ரவி எந்தச் சண்டித்தனமும் செய்யவில்லை. அதன்பிறகுதான் தன்னுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். 2023-ஆம் ஆண்டு உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. மக்கள் அறிவார்கள்! 2024-ஆம் ஆண்டு உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது. தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனப் புதுக்கதை எழுதினார் ஆளுநர் ரவி. உரையை வாசிக்காமல் அமர்ந்தார். 2025-ஆம் ஆண்டு முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும். எழுப்பி, அவையிலிருந்து உரையை வாசிக்காமல் போனார். இப்போதும் அதே பல்லவிதான். அதற்கு காரணம் என்ன? என்பதை மக்கள் அறிவார்கள். பிரதமர் மோடி பங்கேற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற போது தேசிய கீதம் பாடப்படவில்லை. அப்போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். ஆளுநர் அவர்களே.. அரசியல் செய்வதாக இருந்தால் மக்கள் பவனுக்குள் இருந்து செய்யாமல், கமலாலயத்திற்குச் சென்று செய்யுங்கள். ராஜ்பவன் பெயரை மக்கள் பவன் என மாற்றினால் மட்டும் போதுமா? பெரும்பான்மை மக்களின் குரலை எதிரொலிக்க வேண்டாமா? ’அரசியலமைப்பு கடமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது’ என்கிறது ஆளுநர் மாளிகை. மாநில அரசின் உரையைத்தான் ஆளுநர்கள் படிக்க வேண்டும் என்பதும் அரசியலமைப்பு கடமைதான். அதனை அலட்சியம் செய்துவிட்டு, அரசியலமைப்பு பற்றியெல்லாம் பாடம் எடுக்க ஆளுநருக்கு அருகதை இல்லை. ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிடுகிறது என்றால், ஒன்றியத்தில் இருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ வரிசையில் ஆளுநர் பதவியையும் பயன்படுத்தி பாஜக அல்லாத மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அபத்தங்களும், அவதூறுகளும், அரைகுறைத்தனமும் கொண்ட ஆளுநர் ரவியின் அறிக்கை அவருக்குத் தமிழ்நாட்டின் மீது இருக்கும் வெறுப்பு முற்றிப் போய்விட்டிருப்பதையே காட்டுகிறது. ஸ்டாலின் - ஆளுநர் ரவி உச்சநீதிமன்றத்தால் பல்வேறு நேரங்களில் அரசியலமைப்புக்கு விரோதமாகச் செயல்படுகிறார் எனக் குட்டு வாங்கிய பெருமைக்குரியவர் இந்தியாவிலேயே ஆளுநர் ரவி மட்டும்தான். இந்தியா முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்றத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் ஆளுநர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் ஆளுநர் உரை எனும் நடைமுறையை நீக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சூளுரைத்துள்ளார்; இனி இந்தக் குரல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒலிக்கும், ஆளுநர்களின் அத்துமீறலை ஒழிக்கும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம்
திருப்பரங்குன்றம் : அவர்களுக்கு அரசியலில் இடமில்லை.! - பாஜக தலைவராக பதவியேற்ற நிதின் நபின்
பாஜக-வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிதின் நபின் இன்று (ஜன.20) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடனேயே தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார். பிரதமருக்கு நன்றி! பதவி ஏற்ற பிறகு பேசிய நிதின் நபின், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு இவ்வளவு உயரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளீர்கள். இதற்காக உங்கள் முன் தலைவணங்குகிறேன். பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி, நிதின் நபின் நீங்கள் நாட்டிற்கு சேவை செய்வதற்கு அயராது பாடுபடுவதை நாங்கள் சாதாரண தொண்டராக இருந்து கவனித்து வருகிறோம். இன்றைய தருணம் எனக்கு ஒரு உறுதிப்பாட்டின் தருணம். இன்று நான் பதவி மட்டும் ஏற்கவில்லை. கட்சியின் சித்தாந்தம், மரபுகள் மற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த தருணத்தில் எனது மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பரங்குன்றம் விவகாரம் சமீபத்தில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்ததை நாம் பார்த்தோம். இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் செய்வதை பார்த்து வருகிறோம். நீதிபதியை பதவி நீக்கம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். சோமநாதர் பெருமையை பற்றி பேசும் போதும், அதனை திருவிழாவாக பெருமையுடன் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் தூண் அரசியலில் இடம் இல்லை... இத்தகைய மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
ஜனநாயகன்: தணிக்கை வாரியம் vs தயாரிப்பு நிறுவனம் - இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன?
நடிகர் விஜய்-ன் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக சென்சார் சான்று வழங்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்சார் போர்டு தரப்பில், ``படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு முடிவு செய்தது குறித்து பட நிறுவனத்துக்கு ஜனவரி 5-ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. 6-ம் தேதி சான்று கோரி பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல், மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யாத நிலையில், மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. #CBFC மேலும், ``14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அது இடைக்கால முடிவு. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரமுடியாது. இதற்கிடையில் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்து பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ``ஜனநாயகன் வழக்கைப் பொறுத்தவரை, இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து வாரிய தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய 20 நாட்களில் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பின் மூன்று நாட்களில் அந்த குழு படம் பார்க்க வேண்டும். மறு ஆய்வு குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என சென்சார் போர்டு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஜனநாயகன் தொடர்ந்து பட தயாதிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ``படம் 9 ம் தேதி வெளியிட முடிவு செய்ததால் அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி முன் முறையிடப்பட்டது. படத்துக்கு எதிரான புகார் தங்களுக்கு வழங்கப்படவில்லை. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்டது அதுசம்பந்தமான உத்தரவு வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தார். ``படத்தை பார்வையிட்ட குழுவினர், படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும். மாறாக வீட்டுக்கு சென்று விட்டு நான்கு நாட்களுக்கு பின் புகார் அளிக்க முடியாது. சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளையே நீக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்ட காட்சிகள் முன்னதாகவே நீக்கப்பட்டு விட்டன. சான்று வழங்குவது தொடர்பாக தகவல் தெரிவித்து விட்டால் இரண்டு நாட்களில் சான்று வழங்க வேண்டும் என, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ``தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த அன்றே மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் தரவில்லை. ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை எனில் ஓடிடி தளம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ``விசாரணையின் போது, சென்சார் போர்டு தங்கள் நடவடிக்கைக்கு ஆதரவாக பதிலை எடுத்து வைக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது வணிகம் எனும் போது தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் ரிலீஸ் தேதியை எப்படி அறிவிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞர், ``ஏற்கனவே 22 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. படம் ரிலிஸ் தேதி அறிவிக்க சான்று பெறும் வரை காத்திருக்கும் நடைமுறை இங்கு இல்லை. பாலிவுட்டிலும் படங்கள் வெளியீட்டு தேதி சான்று பெறும் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். ஜனநாயகன்: `அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு' - தள்ளிப்போகும் ஜனநாயகன் ரிலீஸ்? | Live Updates

`இனி என் தலைவர் நிதின் நபின்'எனக் கூறும் பிரதமர் மோடி; 45வது வயதில் பாஜக தலைவர்! - யார் இவர்?
பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவராக இன்று பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இப்பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ``உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.கவிற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட கட்சியின் முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி நிதின் நபின் தான் எனது தலைவர். நான் சாதாரண கட்சி தொண்டன்''என்று தெரிவித்தார். 45 வயதில் பா.ஜ.கவுக்கு தலைவராக நிதின் நபின் பா.ஜ.கவில் தலைவர் பதவியை ஏற்ற இளம் தலைவர் என்ற பெயரை பெறுகிறார். இந்த ஆண்டு தமிழ் நாடு உட்பட முக்கிய மாநில சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் நிதின் நபின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் நிதின் நபின் பா.ஜ.க வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கட்சி தலைவர் பதவிக்கு நிதின் நபின் தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. நிதின் நபினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதரவு கொடுத்தனர். கட்சியின் 12-வது தலைவராக பதவியேற்றுள்ள நிதின் நபின் பீகாரில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். 2006-ம் ஆண்டு நபின் கிஷோர் காலமானதை தொடர்ந்து நிதின் நபின் அரசியலுக்கு வந்தார். தனது தந்தையின் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் கட்சியில் 20 ஆண்டு அனுபவம் கொண்டவர். அதோடு கட்சியின் மூத்த தலைவர்களை அனுசரித்து செல்லகூடியவர். மேலும் நிதின் சத்தீஷ்கர் உட்பட சில மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்து பா.ஜ.கவை வெற்றி பெறவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
`6.6% டு 7.3%: நினைத்ததை விட வேகமாக வளரும் இந்தியாவின் GDP; ஆனாலும் ஒரு சிக்கல்' - IMF அறிக்கை
2025-26 நிதியாண்டின் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது சர்வதேச நாணய நிதியம். அந்தக் கணிப்பை இப்போது 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அந்த அமைப்பு. சர்வதேச நாணய நிதியத்தின், 2026-ம் ஆண்டின் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை கூறுவதாவது... இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நினைத்ததை விட, மூன்றாவது காலாண்டில் அதிகமாக இருந்தது. நான்காவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் வலுவாக இருந்து வருகிறது. சர்வதேச நாணய நிதியம் | IMF ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth ஆனாலும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தற்காலிக காரணிகள் மட்டுப்பட்டால், இந்த வளர்ச்சி 6.4 சதவிகிதமாக 2026-27 ஆண்டில் குறையலாம் உலக அளவிலான வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அது நிலையாக தொடரும். 2026-ம் ஆண்டு 3.3 சதவிகித வளர்ச்சியையும், 2027-ம் ஆண்டு 3.2 சதவிகித வளர்ச்சியும் இருக்கும். உலக அளவிலான வளர்ச்சியை தற்போது வர்த்தக கொள்கைகளில் நடக்கும் மாற்றங்கள் குறைக்கின்றன. ஆனாலும், தென் அமெரிக்கா மற்றும் ஆசியா தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐயில் முதலீடு செய்வதால், வளர்ச்சி வேகத்தின் குறைவு சமன் செய்யப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பும், மத்திய அரசின் கணிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. 2025 - 26 நிதியாண்டின் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE
ஷிண்டேயுடன் கருத்துவேறுபாடு, உத்தவுடன் பேச்சு? - மும்பை மேயர் பதவியும் சூடுபிடிக்கும் அரசியலும்!
மும்பை மாநகராட்சிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. ஆனால் மும்பையில் மேயர் பதவியை பிடிக்க 114 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்து மும்பை மேயர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்த இருக்கின்றன. ஆனால் மேயர் பதவியை தங்களது கட்சியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் மும்பையில் மேயர் பதவியை பிடிக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கிறது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கவுன்சிலர்கள் உத்தவ் தாக்கரே கட்சிக்கு சென்றுவிடக்கூடும் என்ற அச்சம் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஏற்பட்டு இருக்கிறது. உத்தவ் தாக்கரே எனவே தனது கட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த சில நாள்களாக தங்க வைத்து ஏக்நாத் ஷிண்டே பாதுகாத்து வருகிறார். அவர்கள் ஹோட்டலை விட்டு எப்போது வருவார்கள் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை. உத்தவுடன் பட்னாவிஸ் பேச்சுவார்த்தையா? ஏக்நாத் ஷிண்டே மேயர் பதவியை தங்களது கட்சிக்கு 2.5 ஆண்டுகள் கொடுக்க வேண்டும் என்று கோரி வருகிறார். எனவே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மேயர் பதவி தொடர்பாக உத்தவ் தாக்கரேயுடன் மொபைல் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''உத்தவ் தாக்கரேயுடன் நான் போனில் பேசியதாக வந்த செய்தியில் உண்மை இல்லை. அது ஒரு வதந்தி. அதோடு சிவசேனா(ஷிண்டே) மேயர் பதவியில் 2.5 ஆண்டுகள் கேட்பதாக வந்த செய்தியிலும் உண்மை இல்லை. அதுவும் ஒரு வதந்தியாகும். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்தித்தோம். நான் மும்பை திரும்பியவுடன் யார் மேயர் என்பது குறித்து முடிவு செய்யப்படும். மேயர் பதவி அல்லது வேறு எந்த பதவி தொடர்பாகவும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. மும்பையில் 3 எஞ்சின் அரசு பதவியேற்க இருக்கிறது. அதற்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். மும்பை, புனேயில் கட்டமைப்பு திட்டங்கள் முழு வேகத்தில் அமல்படுத்தப்படும். அதோடு மும்பை அருகில் 3-வது மும்பை உருவாக்கப்படும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இது குறித்து கூறுகையில், ''மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.க-வுடன் கருத்து வேறுபாடு இல்லை'' என்றார். வரும் 23-ம் தேதிக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டே டெல்லி செல்கிறார். டெல்லியில் பா.ஜ.க தலைவர்களை சந்தித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண இருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே மும்பையில் மேயர் தேர்தல் வரும் 31ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்பு வரும் 22ம் தேதி மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சி மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. இதில் மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும். மும்பை மேயர் பதவி எஸ்.சி. மற்றும் எஸ்.டி பிரிவுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் பா.ஜ.கவில் அந்த பிரிவை சேர்ந்த யாரும் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறவில்லை. ஏக்நாத் ஷிண்டே கட்சியிலும் யாரும் வெற்றி பெறவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து இரண்டு பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இதனால் மகாராஷ்டிரா களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது.

தேனி: யார் தற்குறி? - பேனர் சண்டையில் திமுக - தவெக; மோதல் பதற்றம்; பேனர் அகற்றம்; என்ன நடந்தது?
தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் ஐந்தாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது வார்டில் உள்ள வினோபாஜி காலனியில் சாலை அமைப்பதற்காக பேரூராட்சியிலிருந்து நிதி பெற்று சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். 'சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர்க் கல்வாய்களைச் சரி செய்து உயர்த்திக் கட்டி விட்டு அதன் பிறகு சாலை போடுங்கள்' எனத் தவெக கட்சியினர் கவுன்சிலரிடம் கேட்டுள்ளனர். பேனர் சண்டையில் தவெக - திமுக கட்சியினர் இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் சார்பில் அந்தப் பகுதியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டது. அதில், கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைகள் தரமாக அமைக்கப்படும். இதில் சில தற்குறிகள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள், குறைகள் இருந்தால் கவுன்சிலர் ஆகிய என்னிடம் கூற வேண்டும் எனத் தன்னுடைய தொலைபேசி எண்ணுடன் வினோபாஜி காலனி பகுதியில் பேனர் வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்தப் பேனருக்கு அருகாமையில், கேள்வி கேட்டால் ஓட்டு போட்ட மக்களை தற்குறி எனக் கூறுவதா? எனக் குறிப்பிட்டு திமுக கவுன்சிலர் வெளியிட்ட புகைப்படத்திற்கு உண்மை புகைப்படமாகச் சில புகைப்படங்களை வைத்து, மக்களை முடிவு செய்வீர். யார் தற்குறி தவெகவா? தீய எண்ணம் கொண்ட? குறிப்பிட்டு பேனர் வைத்துள்ளனர். பேனர் சண்டையில் தவெக - திமுக கட்சியினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போடி தாலுகா காவல்துறையினர் இரவோடு இரவாக இரு பேனர்களையும் அகற்றினர். மேலும் அப்பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படாத வகையில் இரவு ரோந்து பணியிலும் பாதுகாப்புப் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!
ஆளுநர் வெளிநடப்பு: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் வெளியேற முடியுமா? - அப்பாவு கேள்வி
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதன் பின், 'ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது... தேசிய கீதத்திற்கு மரியாதை தரவில்லை' என்று தமிழ்நாடு அரசின் மீது நீண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இன்றைய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு. அப்போது அவர் கூறியதாவது... ஜனநாயக முறைப்படி, ஆளுநரை நேரில் சந்தித்து அழைத்தோம். இன்று அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆளுநர் உரையை வாசியுங்கள் என்று கூறியது தவறில்லையே. சபையின் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நாங்கள் நடந்தோம். சபையின் மாண்பை மதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆர்.என்.ரவி 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தயார் செய்து தரும் உரையைத்தான் ஜனாதிபதி படிக்கிறார். அப்படித்தான் இங்கேயும் தமிழ்நாடு அரசு தயார் செய்து தரும் உரையைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறோம். ஆக, நாடாளுமன்றத்தில் என்ன தவறு நடக்கிறதோ, இங்கேயும் அதே தவறுதான் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் இப்படி வெளியேற முடியுமா? ஒருவர் பேசும்போது, இன்னொருவர் குறுக்கிடக்கூடாது என்று மைக் ஆஃப் செய்யப்படும். அப்படி நான் பேசும்போது, ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம். 'Humble request' என்றுதான் அவரிடம் உரையை வாசிக்கச் சொல்லிக் கேட்டேன். ஆனாலும், அவர் வாசிக்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எப்போதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்... இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த மரபு எப்போதுமே மாறாது என்று பேசியுள்ளார். `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்

சட்டசபை: ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க சட்டத் திருத்தம்” - முதல்வர் ஸ்டாலின் அதிரடி
இந்த ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதற்கு திமுகவினர் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆளுநர் அவர்கள் உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தைக் கொண்டு வந்து உரை ஆற்றியிருக்கிறார். ஆளுநர் ஆர்.என் ரவி ஆளுநரின் செயல் பதவிக்கு அழகல்ல... மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார்; வெளியே என்று சொல்வதைவிட, வெளியேறிச் சென்றிருக்கிறார். ஆளுநரின் செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல. இந்திய அரசமைப்புச் சட்டம் Article 176-ன்படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் ஆளுநர் தனது சொந்த கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து தெரிவிக்கும் Article 176-ல், தெளிவுரைகளைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் நாம் அவர் அவ்வாறு சில விளக்கங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு நேற்று கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவருக்கு அதற்கான பதிலும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலைச் செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பர்யத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை, அதன் மாட்சிமையை அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன். 10-4-2023 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கே நான் நினைவுகூர விரும்புகிறேன். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியபோதிலும், அதை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழிமொழிந்தபோதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் முதல்வர் ஸ்டாலின் மிகவும் வருத்தத்திற்குரியது! அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை என்று அன்றைக்கு நான் எடுத்துரைத்தேன். அந்தக் கொள்கையையொட்டியே நான் ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க ஆணையிட்டேன். எனினும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஏற்கெனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாடு சட்டமன்றம், எட்டரைக் கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையைப் பேசுபவராக இருக்க வேண்டும். மக்களுடைய பேராதரவோடு, பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் அந்தப் பதவி வகிப்பவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. ஆனால் நம்முடைய ஆளுநர் அவர்கள் அதற்கு மாறாகச் செயல்படுகிறார். மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்பிவருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும், அத்தகைய ஒரு முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையதல்ல. நூற்றாண்டு விழா கொண்டாடி, சீரோடும், சிறப்போடும் இயங்குகின்ற இப்பேரவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தினைப் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வரலாற்றுப் பெருமை கொண்ட இப்பேரவையின் மாண்பினைப் பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால், கீழ்க்காணும் தீர்மானத்தை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் இசைவோடு, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, முன்மொழிந்திட அனுமதி கோருகிறேன். (பேரவைத் தலைவரால் அனுமதி வழங்கப்பட்டது.) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் சென்றுள்ளதை இப்பேரவை ஏற்கவில்லை. மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே மாண்புமிகு ஆளுநர் அவர்களால் படிக்கப்பட்டதாக இப்பேரவைக் கருதுகிறது. அவ்வாறே அவைக் குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம் பெறலாம். மேலும், மரபுவழி நிகழ்வுகள், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம், அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெறலாம் என்னும் தீர்மானத்தை மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்ற தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி சட்டமன்றம் முரண்டு பிடிக்கும் ஆளுநர் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தச் சட்டமன்றத்தின் மாண்பைக் காத்து, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தந்த மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டுதோறும் அரசின் சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும், அதனை முறையாக வாசிக்காமல் ஆளுநர் அவர்கள் முரண்டு பிடிப்பதும் தொடர்ந்து வருவது நல்லதல்ல. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. ஒரு நாள் செய்தியாக இதனைக் கடந்துவிட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில் அரசின் கொள்கை அறிக்கையை ஆளுநர் அவர்கள் முறையாக வாசிப்பது நடைமுறை. அந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும்போது அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டுமென்ற கேள்வி சாதாரணமாகவே அனைவரின் மனதிலும் எழும். எனவே, ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்ற உறுதியையும் இந்த மாமன்றத்தில் அறிவிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்! - அமைச்சர் ரகுபதி விளக்கம்
'தேசிய கீதம் பாடப்படவில்லை... மைக் ஆஃப் செய்யப்பட்டது... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று ஏகப்பட்ட காரணங்களைக் கூறி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பின், ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடுத்த விளக்கம்... சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆர்.என்.ரவி 'ஆளுநரின் மைக் 'அப்படி' ஆஃப் செய்யப்பட்டிருக்கலாம்' - அப்பாவு| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபுப்படி, கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படும். இதை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஆனால், ஆளுநர் ஆரம்பத்திலேயே தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறினார். அவர் சட்டமன்றத்தில் ஏதேனும் பிரச்னையைக் கிளப்ப முடியுமா என்று பார்த்தார். ஆனால், அது முடியவில்லை. அதனால், இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்தார். ஆளுநர் உரையைப் படிக்கக் கூறி, எவ்வளவு தாழ்ந்து போய் கேட்க முடியுமோ, அவ்வளவு தாழ்ந்து சபாநாயகர் கேட்டுப்பார்த்தார். ஆனால், ஆளுநர் வாசிக்காமல் வெளியேறிவிட்டார். மீடியா, பிற கட்சிகள் என அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம் - எந்த மைக் ஆஃப் செய்யப்பட்டது? அது சுத்தமான புளுகு. ஆளுநரை ஆளுநர் உரை பேசத் தான் அழைத்தோமே தவிர... மைக்கை ஆஃப் செய்ய அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூறாத குற்றச்சாட்டுகளைக் கூட ஆளுநர் கூறுகிறார். ஆர்.என்.ரவி - அப்பாவு `காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு' ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம் தமிழ்நாடு அரசின் முதலீட்டுத் தகவல் தவறு என்று கூறுகிறார். மத்திய அரசு தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.9 சதவிகிதமாக உள்ளது என்று கூறியிருக்கிறது. முதலீடு, வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி 11.9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியும்? ஆளுநர் வெளியேறிய உடனேயே ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளிவருகிறது என்றால், அது முன்னரே தயாரிக்கப்பட்டது தான். அதில் எங்களுக்கு கவலை இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு வழங்கப்படுகிறது. போதைப்பொருள் உற்பத்தி தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகத்தின் 18 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. பெண்கள் அதிகம் உயர்கல்வி படிக்கும் மாநிலம் தமிழ்நாடு. பிற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் பன்மடங்கு கல்வி வளர்ச்சி உள்ளது தற்கொலைக்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு அரசு காரணமாக முடியாது. ஆனால், அதை தடுக்க அரசு உதவி செய்து வருகிறது என விளக்கம் அளித்தார்.
தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, அதிமுகவை அடிமைக் கட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். அதிமுக அடிமைக் கட்சியாக இருந்தால் கடந்த மக்களவைத் தேர்தலில் எப்படி தனித்துப் போட்டியிட்டிருக்க முடியும்? வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும். எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை ஆனால் அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி. ஆட்சிக்காக கூட்டணி இல்லை. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை இதுவரை விரும்பியது இல்லை. இனியும் விரும்ப மாட்டார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு மக்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே அதிமுகவின் கொள்கை என்று பேசியிருக்கிறார். மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத்தமா?
'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2
கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது 'கூட்டணி சர்க்கஸ்' - கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்!' வைகோ 'கூட்டணி சர்க்கஸ்' - பகுதி 02 'கலைஞர் அவர்களே! உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் சொன்னார். மக்கள் நம்பினார்கள். தூக்கியெறிந்தார்கள். இப்போது மீண்டும் உங்கள் மீது நான் குற்றச்சாட்டு சொல்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களின் கண்ணீரில், ரத்தத்தில் கிடைத்த ஆஸ்திகளை குடும்ப சொத்தாக்கி தொண்டனுக்கே துரோகம் செய்து கட்சிக்குள்ளேயே நீங்கள் ஊழல் செய்துவிட்டீர்கள் என்பதற்குப் பிறகு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. நீங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள்' திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு மதிமுகவை தொடங்கிய சமயத்தில் நடந்த எழுச்சிப் பேரணியில் வைகோ பேசியவை இவை. vaiko அதே வைகோதான் இப்போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தி மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய வேண்டுமென பிரசாரம் செய்து வருகிறார். சீறிய வைகோ வைகோ ஆகச்சிறந்த நாடாளுமன்றவாதி. ராஜிவ் காந்தியையே நடுங்க வைத்தவர். திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவுக்கென தனி செல்வாக்கு உருவாகியிருந்தது. இப்படியொரு சமயத்தில்தான் வைகோவுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகள் கருணாநிதியை கொல்ல திட்டமிட்டிருப்பதாக ஒரு கடிதத்தை தமிழக அரசின் தலைமைச் செயலர் எழுதுகிறார். அதை பொதுவெளியில் போட்டுடைக்கிறார் கருணாநிதி. 'எங்கே தன் மகனுக்கு இடையூறாக இந்த வைகோ இருந்துவிடுவானோ என்கிற அச்சத்தில் துரோகி பட்டம் சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றுகிறார்' என வைகோ சீறினார். வைகோ உதயமான மதிமுக! வைகோவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 9 மாவட்டச் செயலாளர்கள் உடன் நின்றனர். 5 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தீக்குளித்தனர். வைகோ திமுக தனக்குதான் சொந்தமென தேர்தல் ஆணையத்துக்கு ஓலை அனுப்பினார். முடிவு அனுகூலம் அளிக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டினார். மதிமுக என்கிற கட்சி உதயமானது. திமுகவையும் அதன் வாரிசு அரசியலையும் எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி, அப்போது ஆட்சியில் ஆட்சியிலிருந்த அதிமுகவை கடுமையாக எதிர்க்கத் தொடங்கிய கட்சி, பின்னாளில் அந்த இரண்டு கட்சிகளுடனுமே மாறி மாறி கூட்டணி வைத்தது பெரும் சோகம். கூட்டணி குருமாக்கள் மதிமுகவை தொடங்கிய பிறகு 1996 இல் முதல் தேர்தலை சந்திக்கிறார் வைகோ. அப்போது திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டையும் ஜனதா கட்சியையும் சேர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைக்கிறார். மதிமுக 177 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வைகோவுக்கு கிடைத்திருந்த வரவேற்புக்கும் அவர் செய்த ஆக்டிவ் அரசியலுக்கும் சில தொகுதிகளிலாவது மதிமுக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட மதிமுக வெல்லவில்லை. 6% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன்பிறகுதான் வைகோ கூட்டணி குருமாக்களை கிண்ட தொடங்கினார். கருணாநிதி - வைகோ 'திமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததே இல்லையா? 2004 வரை அவர்களுடன் கூட்டணியிலிருந்து அமைச்சர் பதவியெல்லாம் அனுபவித்தீர்களே' என எடப்பாடி திமுகவை நோக்கி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி செல்வதில் திமுகவுக்கே முன்னோடி மதிமுகதான். வைகோ வாஜ்பாயின் நண்பர். 90 களின் கடைசியில் பாஜக ஆட்சி அமைத்த போது மதிமுக அவர்களுடன் தான் கூட்டணி வைத்திருந்தது. பாஜகவுக்கான ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டு ஆட்சி கவிழ்ந்த போதும் வைகோ வாஜ்பாய் பக்கமே நின்றார். அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியவுடன் திமுக பாஜக கூட்டணியில் வந்து சேர்ந்தது. 'திமுக இருக்கும் கூட்டணியில் போய் மதிமுக சேரவில்லை. மதிமுக இருக்கும் கூட்டணியில்தான் திமுக வந்து தஞ்சம் அடைகிறது' என லாஜிக் பிடித்துப் பேசினார் வைகோ. வைகோ ட்விஸ்ட் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணியில் நான்கு இடங்களில் போட்டியிட்டு நான்கிலும் வெல்கிறது மதிமுக. இதே கூட்டணி அப்படியே 2001 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வைகோ ட்விஸ்ட் கொடுத்தார். திமுகவுக்கும் மதிமுகவுக்கும் தொகுதி உடன்பாடு எட்டப்படாமலே இருந்தது. 'மதிமுக தொண்டர்கள் திமுகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை' எனக்கூறி அறிவாலயத்துக்கு எதிராக பேசினார். மேலும், திமுக - பாஜக கூட்டணியில் பாஜக நிற்கும் தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளிலெல்லாம் வேட்பாளர்களை நிறுத்தினார். 211 தொகுதிகளில் போட்டியிட்டார். மாபெரும் தோல்வி. திமுகவும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. அதிமுக ஆட்சி அமைந்தது. வைகோ, ஜெயலலிதா மதிமுக தொண்டர்களை காரணம் காட்டி திமுக கூட்டணிக்கு நோ சொன்ன வைகோ அடுத்த மூன்றே ஆண்டுகளில் பெரிய யூடர்னாக போட்டார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோவை பொடாவில் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம். கருணாநிதி வைகோவை சிறைக்கு நேரில் சென்று பார்த்து தேற்றினார். வைகோ பிணையில் வெளிவந்த சமயத்தில் 2004 நாடாளுமன்றத் தேர்தல். அப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியுடன் கரம் கோர்க்கிறார். இதே கூட்டணி 2006 சட்டமன்றத் தேர்தலில் தொடருமென நினைத்த போதுதான் கருணாநிதிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் வைகோ. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்த வைகோவின் தாயார், 'எத்தனை கோடி கொடுத்தாலும் அதிமுகவுடன் சேரமாட்டான்' என உறுதியாகக் கூறினார். திருச்சி மாநாட்டில் வைகோவின் கட் அவுட்டையும் வைத்துக் கொண்டு காத்திருந்தார் கருணாநிதி. இடது பக்க இண்டிகேட்டரை போட்டு விட்டு வலதுபக்கமாக காரை திருப்பி போயஸ்கார்டனுக்கு வண்டியை விட்டார் வைகோ. வைகோவின் உயிர்மூச்சான ஈழத்தை பற்றி பேசியதற்காக பொடாவில் தள்ளிய ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்த அந்த சம்பவம், அவர் மீதான நம்பகத்தன்மையின் மீது பெரிய கேள்வியை எழுப்பியது. வைகோ தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவே நினைத்தார் கருணாநிதி. அதிமுக கூட்டணியில் 35 சீட்டுகளை வாங்கியது மதிமுக. அதிமுக அந்தத் தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்தது. மதிமுகவும் ஒற்றை இலக்கத்திலேயே வென்றது. வைகோ, ஜெயலலிதா 2006-11 காலக்கட்டத்தில் ஈழப்போர் விவகாரம் பற்றியெறிந்து கொண்டிருந்தது. திமுகவுக்கு எதிராக காத்திரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் வைகோ. இதனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே தொடர்கிறார். நான்கு இடங்கள் மதிமுகவுக்கு. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. விருதுநகரில் வைகோவே தோற்றார். 2011 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள் என பலரையும் சேர்த்துக் கொண்டு அதிமுக தேர்தலை எதிர்கொள்ள தயாரானது. மதிமுக இந்த முறையும் 20+ சீட்டுகளை எதிர்பார்த்தது. ஜெயலலிதா வைகோவுக்கு 12 சீட்டுகளுக்கு மேல் கொடுக்க விரும்பவில்லை. கௌரவக் குறைச்சலாக உணர்ந்த வைகோ தேர்தலையே புறக்கணித்தார். மோடிக்கு உற்ற நண்பர் எப்படி வாஜ்பாய்க்கு தோளோடு தோளாக நின்றாரோ அதேபோல மோடிக்கும் வைகோ உற்ற நண்பராக இருந்தார். மோடியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே வைகோதான். 2014 தேர்தலில் என்.டி.ஏவில் ஐக்கியமாகி 7 சீட்டுகளை பெற்றார். பாஜகவுக்காகவும் மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். இந்திய அளவில் பாஜக கோலோச்சினாலும் தமிழகத்தில் சோபிக்கவில்லை. பாஜகவும் தோற்றது. மதிமுகவும் தோற்றது. மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து கூட்டணியிலிருந்து வெளியேறினார். மோடி - வைகோ அப்படி வெளியே வந்தவர் கையிலெடுத்த பெரிய ப்ராஜெக்ட்தான் 'மக்கள் நலக் கூட்டணி'. கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக என அத்தனைக் கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் இணைத்தார். தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற கருணாநிதியின் கனவை மீண்டும் உடைத்தார். மூழ்கப் போகும் படகென தெரிந்தே சவாரிக்கு ஏற்பாடு செய்ததைப் போல, கடைசி நிமிடத்தில் வைகோ போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். இந்தத் தேர்தல் சமயத்தில்தான் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார் வைகோ. 'நமக்கு நாமே என பட்டாபிஷேகம் செய்ய துடித்துக் கொண்டு காத்திருக்கிறார் ஸ்டாலின். அவர் எதற்கும் தகுதியற்றவர். எதற்கும் லாயக்கற்றவர்' என ஸ்டாலினின் இமேஜை இயன்றளவுக்கு டேமேஜ் செய்தார் வைகோ. அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த, திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்ற வண்டியை அறிவாலயம் பக்கமாக திருப்பிவிட்டார். 2019, 2021, 2024 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திமுக கூட்டணியில் தொடர்ந்து நிற்கிறது மதிமுக. இதுவே பெரிய சாதனைதான். மக்களின் விருப்பத்துக்கு மாறான கூட்டணியை சரியாக தேர்வு செய்வது, திரில்லர் படங்களைப் போல தேர்தல் நெருக்கத்தில் க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுப்பது, நேற்றுப் பேசியதை அப்படியே மறந்துவிட்டு மீண்டும் புதிதாக தங்கள் வசதிக்கேற்ப அரசியல் கோடுகளை கிழித்துக் கொள்வது என மதிமுகவும் வைகோவும் தமிழக அரசியலில் நிறைய ரகளைகளை செய்திருக்கின்றனர். வைகோ வாரிசு அரசியலால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என மக்களிடம் நியாயம் கேட்ட அதே வைகோ, தன்னுடைய வாரிசுக்காக ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டங்கள்தான் அரசியலெனில் அவருக்காக தீக்குளித்த தொண்டர்களின் விசுவாசத்துக்கும் நன்றிக்கும் என்னதான் பதில் மரியாதை இருக்கிறது? (தொடரும்) அடுத்த வாரம் இன்னொரு கட்சி, தலைவரின் கூட்டணி குருமாக்களை பார்க்கலாம்!

`காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு'ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை. இதனால் இந்த முறையும் ஆளுநர் உரை மீது எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆர்.என்.ரவி கேட்டுள்ளார். ஆனால், மரபுப்படி, தமிழ்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதால், ஆளுநர் வெளியேறியுள்ளார் என முதற்கட்டமாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் ஆளுநர் ரவி வெளியேறியதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், ஆளுநர் சட்டமன்றத்தில் அரசின் உரையை வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள்: 1- ஆளுநரின் மைக் தொடர்ந்து அணைக்கப்பட்டது மற்றும் அவர் பேச அனுமதிக்கப்படவில்லை; 2- உரையில் ஆதாரமற்ற பல கூற்றுகள் மற்றும் தவறான அறிக்கைகள் உள்ளன. மக்களைத் தொந்தரவு செய்யும் பல முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 3- மாநிலம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்ற கூற்று உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. வருங்கால முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. உண்மையான முதலீடு அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே. முதலீட்டுத் தரவுகள் தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்கு குறைவான ஈர்ப்பு உள்ளதாக மாறி வருவதைக் காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடு, மாநிலங்களில், நேரடி வெளிநாட்டு முதலீட்டில் நான்காவது பெரிய பெறுநராக இருந்தது. இன்று அது ஆறாவது இடத்தில் இருக்க போராடுகிறது. 4- பெண்கள் பாதுகாப்பு பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. POCSO பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 55% அதிகரிப்பும், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் 33% அதிகரிப்பும் கவலையளிக்கிறது; 5- போதைப்பொருள் மற்றும் போதை மருந்துகளின் பரவலான பரவல் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை வழக்குகளில் கூர்மையான அதிகரிப்பு மிகவும் கவலையான விஷயம். ஒரு வருடத்தில் போதைப்பொருள் பாவனை காரணமாக 2000 (இரண்டாயிரம்) பேர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்து கொண்டனர். இது நமது எதிர்காலத்தை கடுமையாக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது சாதாரணமாக புறக்கணிக்கப்படுகிறது. 'மைக் off செய்யப்பட்டது; பேச அனுமதிக்கவில்லை' - ஆளுநர் மாளிகை| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE 6- தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கடுமையாக அதிகரித்து வருகிறது. ஆனால், இது முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. 7- நமது மாநிலத்தில் ஒரு வருடத்தில் சுமார் 20,000 (இருபதாயிரம்) பேர் தற்கொலை செய்து கொண்டனர் - ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 65 தற்கொலைகள். நாட்டில் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு அபாயகரமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலை தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் இது அரசுக்கு கவலையாக தெரியவில்லை. இது புறக்கணிக்கப்படுகிறது. 8- கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவு மற்றும் கல்வி நிறுவனங்களில் பரவலான தவறான நிர்வாகம் நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கிறது. 50% க்கும் அதிகமான ஆசிரியர் பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன, விருந்தினர் ஆசிரியர்கள் எல்லா இடங்களிலும் அமைதியின்றி உள்ளனர். நமது இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். இது அரசுக்கு கவலையாக தெரியவில்லை மற்றும் பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றம் 9- பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாததால் பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் செயலிழந்துள்ளன. அவை நேரடியாக அரசின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. கோடிக்கணக்கான மக்களுக்கு அடிமட்ட ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் எழுத்துக்கும் உணர்வுக்கும் எதிரானது. மக்கள் கிராம பஞ்சாயத்துகளை மீட்டெடுப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், இது உரையில் குறிப்பிடப்படவில்லை. 10- மாநிலத்தில் பல ஆயிரம் கோவில்கள் அறங்காவலர் குழு இல்லாமல் நேரடியாக மாநில அரசால் நிர்வகிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கான பக்தர்கள் கோவில்களின் தவறான நிர்வாகத்தால் ஆழமாக காயப்பட்டு விரக்தியடைந்துள்ளனர். பண்டைய கோவில்களை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கியமான உத்தரவுகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் கண்மூடித்தனமாக புறக்கணிக்கப்படுகின்றன; 11- தொழிற்சாலைகளை நடத்துவதற்கான காணக்கூடிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத செலவுகள் காரணமாக MSME துறைகள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய துறையாகும். இருப்பினும், நாட்டில் 55 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட MSMEகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியம் இருந்தபோதிலும் சுமார் 4 மில்லியன் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை பிற மாநிலங்களில் அமைக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது; 12- கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் கீழ்நிலை ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி உள்ளது. அவர்கள் அமைதியின்றி மற்றும் விரக்தியடைந்துள்ளனர். அவர்களின் உண்மையான குறைகளை தீர்ப்பதற்கான வழிகள் குறிப்பிடப்படவில்லை; 13- தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேதி குறித்த BJP; ஜன 23-க்குள் NDA கூட்டணியில் ட்விஸ்ட்? | TVK VIJAY CBI | DMK ADMK | IPS Vikatan

'மைக் off செய்யப்பட்டது; பேச அனுமதிக்கவில்லை' - ஆளுநர் மாளிகை| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE
தமிழ்நாட்டில் சட்டமன்ற ஒழுங்கு பிரச்னையா? தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளியேறியது. சட்ட ஒழுங்கு பிரச்னை விஷயத்தை ஆளுநர் மாளிகையும் தங்களது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது... தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது. போக்சோ பாலியல் வன்கொடுமைகள் 55 சதவிகிதம் உயர்ந்துள்ளது... பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் 33 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில், கிட்டத்தட்ட 2,000 இளைஞர்கள் போதை மருந்து பழக்கத்தால் தற்கொலை செய்துள்ளனர். போதை மருந்து பழக்கம் பள்ளி மாணவர்களுக்கும் பரவியுள்ளது. தலித்துகள் மற்றும் தலித் பெண்களுக்கான எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 20,000 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளனர். ஒரு நாளுக்கு 65 எனும் விதம் தற்கொலைகள் நடக்கின்றன. இது மிக பயங்கரமானது. தமிழ்நாடு 'இந்தியாவின் தற்கொலை நகரமாக' மாறியுள்ளது. ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகை என்ன சொல்கிறது? ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது.... ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. Reasons why Governor declined reading the Govt speech in the Assembly: 1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak; 2- The speech contains numerous unsubstantiated claims and misleading statements. Several crucial issues troubling the people… pic.twitter.com/EebC7wDJHg — LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) January 20, 2026 ஆர்.என்.ரவி ஏன் வெளியேறினார்? தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆர்.என்.ரவி கேட்டுள்ளார். ஆனால், மரபுப்படி, தமிழ்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியதால், ஆளுநர் வெளியேறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் வெளியேறினார் தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியுள்ளார். கூட்டத்தொடர் தொடங்கியது! தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருக்கின்றனர். இன்று தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை. இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இன்று ஆர்.என்.ரவி என்ன செய்யப்போகிறார் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்பதி; காரணம் என்ன?
இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், தேனி மாவட்டம் சேர்ந்த பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோரை விவிஜபி பிரிவின் கீழ் முதன்மை சிறப்பு அழைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 25 ஆண்டு கால சமூக பணி பெரியகுளம் அருகே உள்ள சொக்கன் அலை கிராமத்தைச் சேர்ந்தவர் பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன். இவருடைய மனைவி கனகா அங்கன்வாடியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கண்ணன்தான் அவருடைய சமூகத்திலேயே முதல் முதலாக உயர்நிலைப்பள்ளி வரை சென்று படித்தவர். மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுக்க வந்தபோது தன்னைப் போலவே மற்றவர்களும் கல்வி கற்க வேண்டும் என நினைத்த கண்ணன் தன்னுடைய 17 வயதில் சமூகப்பணி செய்ய தொடங்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனைமலைத் தொடர்களில் வசிக்கும் புலையர் மற்றும் இரவாளர், முதுவர் பழங்குடி மக்கள் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்தே சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி படிக்க வைத்து பலரையும் அரசுப் பணிகளில் சேர்வதற்கு உத்வேகமாக இருந்துள்ளார். ஒரு பழங்குடி கிராமத்தின் தாகம் தீர்ந்த கதை! கண்ணன் மேலும் பழங்குடியின விவசாயிகளுக்குத் தேவையான பொருட்கள், அரசு மானியங்களைப் பெற்றுத் தருதல், மின்சார வசதி இல்லாத வீடுகளுக்குச் சூரியசக்தி விளக்குகளை ஏற்பாடு செய்தல் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளார். வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரிடையாக மக்களுடன் சந்தித்து, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகளைத் தனது மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார். பழங்குடி மக்களுக்கு உதவிகளை வழங்கிய போது. இவர்களுடைய சமூகப்பணியைக் கெளரவிக்கும் விதமாக, வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க விவிஐபியாக அழைத்துள்ளது மத்திய அரசு. ``பழங்குடி மக்கள் எதுனாலும் என்கிட்ட கேட்கிற நம்பிக்கையை சம்பாதிச்சிருக்கேன்!” - `மலைமகன்' சதிஷ்
காசாவை மீட்கும் முயற்சி; ட்ரம்பின் 'அமைதி வாரியம்'; மெலோனி முதல் மோடி வரை; யார் யாருக்கு அழைப்பு?
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக உயர்மட்ட 'அமைதி வாரியம் - Board Of Peace' என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த அமைதி வாரியம் மூன்று கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1. நிதி திரட்டுதல், முதலீடு, பிராந்திய உறவுகளைக் கவனிக்கும் பொருப்பை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குழு கவனிக்கும். ட்ரம்ப் இந்த முதல் அமைப்பில் அமெரிக்காவின் செல்வாக்குமிக்க நபர்களும், உலகளாவிய நிதி நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜாரெட் குஷ்னர், ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். மேலும், இந்த அமைப்பில் சர்வதேச பிரதிநிதியாக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், காசாவின் பொதுச் சேவைகளைக் கண்காணிக்கப் போகும் தேசியக் குழுவிற்குப் பாலஸ்தீனிய அதிகார சபையின் முன்னாள் துணை அமைச்சர் அலி ஷாத் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. தொழிற்நுட்ப வல்லுநர் குழு காசாவின் அன்றாட சிவில் நிர்வாகத்தைக் கவனிக்கும். இந்தப் பொறுப்புகளில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 3. ஆலோசனை மற்றும் வழிகாட்டும் அமைப்பாக 'காசா நிர்வாக வாரியம்' செயல்படும் எனத் திட்டமிடப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு மனிதாபிமான உதவிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது. காசா இந்த வாரியத்தில் மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கியின் அமைச்சர்கள், தூதர்கள், ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக், அதன் தூதர் நிக்கோலே மிலாடெனோவ், இஸ்ரேலிய கோடீஸ்வரர் யாகிர் கபாய் உள்ளிட்ட வணிகப் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். எனவே, இந்த அமைதி வாரியத்தில் இணைந்து கொள்வதற்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் இந்தியாவும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. இது தொடர்பாக அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ``காசாவிற்கு நீடித்த அமைதியைக் கொண்டுவரும் இந்த முயற்சியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதில் பெருமை கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் சேர்த்து, துருக்கி அதிபர் எர்டோகன், இத்தாலி பிரதமர் மெலோனி, எகிப்து அதிபர் அல்-சிசி மற்றும் ஜோர்டான் மன்னர் உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது காசா விவகாரத்தில் ஒரு சர்வதேச கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. காசா மக்கள் ஒருவேளை இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் காசா பகுதி ஒரு புதிய பொருளாதார மையமாக மாற்றப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது. எனினும், அங்குள்ள ஆயுதக் குழுக்களைக் களைவதும், மீண்டும் போர்ப் பதற்றம் உருவாகாமல் தடுப்பதும் இந்த வாரியத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் 'அமைதி' பேச்சுக்கே இடமில்லை – வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!

``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் 'அமைதி'பேச்சுக்கே இடமில்லை– வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!
டென்மார்க் கட்டுப்பாட்டில், சுயராஜ்யத்தில் இருக்கும் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில், உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என, ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார். இந்த விவகாரம் உலக அரங்கில் நகைப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. டிரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ``சுமார் 8 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு அந்தப் பரிசை வழங்க வேண்டாம் என்று உங்கள் நாடு முடிவு செய்துவிட்டது. அதனால் இனிமேல் 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக நான் உணரவில்லை. இப்போது அமெரிக்காவிற்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே நான் சிந்திப்பேன். டென்மார்க்கால் கிரீன்லாந்தை ரஷ்யா, சீனாவிடமிருந்து பாதுகாக்க முடியாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. அமெரிக்காவின் படகுகளும் அங்கே தரையிறங்கியுள்ளன. மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றால், உலகம் பாதுகாப்பாக இருக்காது. நேட்டோ நேட்டோ உருவான காலத்திலிருந்து வேறு எவரும் செய்யாத பல நன்மைகளை நான் செய்துள்ளேன். இப்போது நேட்டோ எனக்காக ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோ உதவ வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை முன்னணி செய்தி நிறுவனங்களால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இதுவே இப்போது விவாதப் பொருளாக உள்ளது. ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth

ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'என்னென்ன? |In Depth
டொனால்ட் ஜெ ட்ரம்ப் – ‘இரண்டாவது முறையாக’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, நாளையுடன் (ஜனவரி 20) ஓராண்டு முடிவடைகிறது. இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அதிரடிகளால் உலக நாடுகளும், உலக நாடுகளின் பொருளாதாரமும் திணறிவிட்டன. கடந்த ஓராண்டாக, ‘அமெரிக்க அதிபர்’ ட்ரம்ப் செய்த 'சம்பவ'ங்களைப் பார்க்கலாமா? ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் முதன்முதலாக கையில் எடுத்த பெரிய அஸ்திரம், ‘வெளியேற்றம்’. வெளியேற்றம் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! “அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக பலர் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்… போதை மருந்து கடத்துகிறார்கள்” என்று புகார்களை அடுக்கினார். இதை சரிசெய்ய அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினார். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றுவதைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் கண்ணியமாக வெளியேற்றப்படாததை நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய மக்கள் கை, கால் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். பொதுவாக, போர்க் குற்றவாளிகள் தான் ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்படுவர். ஆனால், பொதுமக்கள் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர். ஏன் இங்கே பொதுமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய அனைத்து மக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறமுடியாது. காரணம், பல மக்கள் தங்களது நாட்டில் வேலை கிடைக்காததால்... சரியான நிதி ஆதாரம் இல்லாததால் தான், அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குக் கண்ணியம் என்பது அடிப்படையானது. மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகள் ட்ரம்பின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும், இந்தியா இதை அமைதியாகவே கடந்தது. ட்ரம்ப் - பரஸ்பர வரி ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன? அடுத்தது, அமெரிக்காவின் 'சுதந்திர தினம்'. இதை அமெரிக்காவின் சுதந்திர தினம் என்று கூறுவதை விட, ட்ரம்பின் சுதந்திர தினம் என்று கூறலாம். காரணம், இந்தச் சுதந்திர தினத்தை அறிவித்ததே ட்ரம்ப் தான். அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூல் செய்கின்றன. இதனால், அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என்று கூறி, நாடுகள் மற்றும் அதன் அமெரிக்கப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைப் பொறுத்து, அந்தந்த நாடுகளுக்குப் பரஸ்பர வரியை விதித்தார். ட்ரம்ப் கூறிய அந்தச் சுதந்திர நாள், ஏப்ரல் 2, 2025. இந்தியாவிற்கு ஆரம்பத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. இந்த வரியினால் மிகவும் பாதிக்கப்பட்டது சீனா தான். பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டாலும், அதை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யவும்... குறைக்கவும் அவகாசம் கொடுத்தார் ட்ரம்ப். ஆனால், சீனாவிற்கு மட்டும் உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதை சீனா சும்மா விடவில்லை. பதிலுக்கு, அமெரிக்காவின் மீது வரி விதித்தது. இதனால், கோபமடைந்த அமெரிக்கா, சீனா மீது மீண்டும் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக, சீனா அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதித்தது. இப்படியே மாறி மாறி நடந்து, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனா அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது. பிறகு, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், இரு நாடுகளும் அமைதியாகி, பேச்சுவார்த்தையைத் தொடங்கின. இப்போது வரை பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு இடையில் அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்கள் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனப் பொருள்களுக்கு 100 சதவிகிதம் வரி என்று அறிவித்தார். ஆனால், அது அமலுக்கு வரவில்லை. ட்ரம்ப் - நோபல் பரிசு ட்ரம்பிற்கு 'நோ' நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்? அடுத்த முக்கியமான சம்பவம் - அது 'நோபல் பரிசு ஆசை'. ட்ரம்பிற்கு ஏனோ நோபல் பரிசு மீது தீராத ஆசை போலும். நான் அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன் என்று பட்டியலை அடுக்கி, பல முறை நோபல் பரிசைக் கேட்டார் ட்ரம்ப். ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் பரிந்துரைத்தனர். ஆனால், இவர்களெல்லாம் மே மாதத்திற்கு பிறகே, ட்ரம்பின் பெயரைப் பரிந்துரைத்தார்கள். ஜனவரி மாதத்திற்குள் பரிந்துரைத்தால் தான், ட்ரம்பினால் நோபல் அமைதிப் பரிசு பெற்றிருக்க முடியும். அதனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசைத் தட்டிச் சென்றார் வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. இதில் ட்ரம்பிற்கு 'வருத்தம் தாம்பா'. தற்போது லேட்டஸ்டாக மச்சாடோ ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசைத் தந்திருக்கிறார். ஆனால், இது நோபல் பரிசு கமிட்டியின் விதிமுறைகள் படி செல்லாது. மச்சாடோவிற்கு முன்பே, FIFA அமைப்பு ட்ரம்பிற்கு 'ஃபிஃபா அமைதி பரிசை' வழங்கியது. இந்த அமைப்பு அமைதிப் பரிசு வழங்க தொடங்கிய முதல் ஆண்டு சென்ற ஆண்டு தான். ட்ரம்ப் நோபல் பரிசு கேட்ட தனது அமைதிக் கொடி பட்டியலில், 'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தமும்' இருந்தது. 'நான் தான்' இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறி வருவதை இந்தியா பலமுறை மறுத்துவிட்டது. இருந்தாலும், இன்னமும் அவர் அந்தக் கூற்றைக் கூறுவதை நிறுத்தவில்லை. புதின் - ட்ரம்ப் அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explained இப்போது ட்ரம்பின் 'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த' முயற்சிகள். ரஷ்ய அதிபர் புதினும், ட்ரம்பும் நண்பர்கள் என்பது உலகம் அறிந்தது. இதனால், ட்ரம்ப் எளிதாக ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார். ஆனால், 'நட்பு வேறு... அரசியல் வேறு' என ட்ரம்பிற்குக் காட்டிவிட்டார் புதின். ஜெலன்ஸ்கியை அழைத்துப் பேசுவது... புதினை அழைத்துப் பேசுவது என பல முயற்சிகளைச் செய்தார் ட்ரம்ப். அது இன்னமும் முயற்சிகளாகவே இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் புதினை 'சாஃப்ட்டாக' கையாண்டாலும், இப்போது வரியைக் காட்டி பயமுறுத்தத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். இருந்தும் புதின் வழிக்கு வருவதாக இல்லை. புதினை வழிக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்று தான், 'இந்தியா மீது 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது'. கூடுதல் 25 சதவிகித வரி என்பது இந்தியா, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக. ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்துடன் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரைப் பார்த்துவிடுவோம். ட்ரம்ப் பேசிக்கொண்டு மட்டுமில்லை... சில போர்களை நிறுத்தியும் இருக்கிறார். அதில் ஒன்று தான், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர். இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் தரப்பு இரண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டன. இப்போது காசா அமைதி அமைப்பிற்காக ட்ரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார் என்பதை நேற்றிலிருந்து காண முடிகிறது. மேலே சொன்ன போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டன தான் இரு தரப்பும். ஆனால், இப்போதும் அவ்வப்போது பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல். 'இது இஸ்ரேலின் தற்காப்பு தாக்குதல்' என்று இதற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வருகிறார். கம்போடியா - தாய்லாந்து, எகிப்து - எத்தியோப்பியா, செர்பியா - கொசாவோ போன்ற பல நாடுகளின் போர்களை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். எனவே ட்ரம்ப் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ட்ரம்ப் - நெதன்யாகு - காமேனி வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained இந்தப் போர் வரிசையில், ஈரானை விட்டுவிட முடியாது. 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' என ஈரானின் அணு ஆயுதங்களை அழிக்க கிளம்பியது இஸ்ரேல். இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகளின் மீது குண்டு வீசியது. இது அமெரிக்காவிற்கு வெற்றிகர தாக்குதலே. இப்போது ஈரானில் நடக்கும் உள்நாட்டு பிரச்னையிலும் தலையிட்டு வருகிறார் ட்ரம்ப். காசு... பணம்... துட்டு... Money... Money... அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார் ட்ரம்ப். இவர்களின் வருகை அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிறது என்றும் கருதுகிறார் ட்ரம்ப். இதனால், ஹெச்-1பி விசாவிற்கு கடும் நெருக்கடிகளை விதித்திருக்கிறார். ஹெச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தினார். இந்த விலை உயர்வு இந்தியா, சீனாவை அதிகம் பாதித்தது. ஏனெனில், 67 சதவிகித இந்தியர்களும், 10 சதவிகித சீனர்களும் தான் இந்த விசாவைப் பெற்று அமெரிக்கா சென்றுவந்தனர். அடுத்ததாக, தனிநபர்களுக்கு ட்ரம்ப் கோல்டு கார்டு பெற 1 மில்லியன் டாலர் என அறிவித்தார். இந்தக் கோல்டு கார்டு அமெரிக்காவின் நிதிக்காகவே வழங்கப்பட்டது. ஹெச்-1பி விசாவிற்கு மட்டுமல்ல... அனைத்து விசாக்களுக்குமே கெடுபிடிகளை அதிகரித்து வருகிறது ட்ரம்ப் அரசு. அவர்களுக்குத் தேவையெல்லாம், அரசிற்கு பிரச்னை ஏற்படுத்ததாத மக்கள். ட்ரம்ப் - நிக்கோலஸ் மதுரோ Venezuela: ஒத்திகை முதல் Spy வரை; அதிபர் மதுரோவைச் சிறைப்பிடிக்க அமெரிக்கா எப்படித் திட்டமிட்டது? ட்ரம்பின் சமீபத்திய அத்துமீறல் 'நிக்கோலஸ் மதுரோ கைது'. வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ. அவர் அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தல் செய்கிறார் என்று அவரது இருப்பிடத்திற்கே சென்று, இரவில் அவரது படுக்கையறையிலேயே கைது செய்தது ட்ரம்ப் அரசு. இப்போது அவர் நியூயார்க் சிறையில் இருக்கிறார். ஒரு நாட்டிற்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபரைக் கைது செய்துள்ளது பல தரப்பினரிடம் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது. 'போதைப்பொருள் கடத்தல்' என்று சொன்னாலும், 'வெனிசுலாவின் எண்ணெய் வளம்' தான் மதுரோவின் கைதிற்கு பின்னணியில் உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதுபோலவே, மதுரோவின் கைதிற்குப் பிறகு, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை முழுதாக ஃபோக்கஸ் செய்து வருகிறார் ட்ரம்ப். ட்ரம்பின் லேட்டஸ்ட் குறி, 'கிரீன்லேண்ட்'. டென்மார்க்கின் கீழ் உள்ளது கிரீன்லேண்ட். பாதுகாப்புக் காரணங்களுக்காக வேண்டும் என்று, அதை வாங்கவோ, அபகரிக்கவோ திட்டமிடுகிறார் ட்ரம்ப். இதை ஒத்துக்கொள்ளாத நேட்டோ, அமெரிக்க நாடுகளுக்கு தற்போது 10 சதவிகித வரியை விதித்துள்ளார் ட்ரம்ப். மேலே, கூறியிருப்பவை எல்லாமே, ஒரு சில தான். ட்ரம்ப் செய்த சம்பவங்களோ நிறைய நிறைய. அதில் முக்கியமானவை மட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில், 'Make America Great Again' என்ற ட்ரம்பின் நோக்கத்துக்காகத்தான்! ஓராண்டிற்கே இந்த நிலை என்றால், இன்னும் மூன்று ஆண்டுகள் எப்படி இருக்கப் போகிறதோ? Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?

TVK Vijay: ``கிளி ஜோசியம்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள் - சி.டி.ஆர்.நிர்மல் குமார்
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 போ்பரிதாபமாக பலியானார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரித்து வருகின்றது. கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், தற்போது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர். தவெக விஜய் அதன் அடிப்படையில், த.வெ.க நிர்வாகிகளைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் கடந்த 12-ம் தேதி 6 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக காலை 11 மணிக்கு விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும், தமிழக காவல்துறை அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,``இன்றுடன் எங்கள் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்மன் முடிந்தது. எங்களின் நிகழ்ச்சி நிரல்களையும், நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர்களுக்கு என்னென்ன தகவல்கள் தேவையோ அவை அனைத்தையும் கொடுத்திருக்கிறோம். இன்றுடன் எங்கள் தலைவருக்கு விசாரணை முடிந்தது. ஆனால் காலையிலிருந்து திமுக ஆதரவு ஊடகங்கள் விஜய் கைது என்றும், அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது என்றும் கிளி ஜோசியம் சொல்வதைப்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை. தவெக விஜய் அமித் ஷா தமிழ்நாடு வந்தபோது, அவர் முன்னாலேயே பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், `கரூர் மரணத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம்' என வெளிப்படையாகப் பேசினார். ஆனால் அது குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை. செந்தில் பாலாஜிக்கு ஏதேனும் சம்மன் அனுப்பப்பட்டதா இல்லையா என்பது குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் தவறான தகவல்களைப் பதிவு செய்கிறார்கள். சிபிஐ விசாரணை தொடர்பான தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். எனத் தெரிவித்திருக்கிறார். CBI சம்மன்: Vijay -க்கு 2 Options கொடுக்கும் BJP? | ADMK வாக்குறுதிகள் | DMK TVK | IPS | Vikatan TV
மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத்தமா?
ஜனவரி 23 ஆம் தேதியன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப்போது நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் மேடை ஏற்ற வேண்டும் என்பது பாஜக-வின் திட்டமாக இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி வலுப்பெறுமா? ஆனால் அன்புமணியின் பாமக-வும், G.K வாசனின் தமிழ் மாநில காங்கிரஸும் மட்டும்தான் தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிடிவி தினகரனும், பிரேமலதாவும் கூட்டணி பிரசார மேடையில் ஏறுவார்களா? அதிமுக - பாஜக கூட்டணி வலுப்பெறுமா? அவர்களின் திட்டம் நிறைவேறுமா? என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். கோபித்துக் கொண்ட அமித் ஷா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான்(என்.டி.ஏ) ஆட்சி அமைக்கும் என்று அமித் ஷா சொல்ல, நாங்கள் தனித்துதான் ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி தலைமையிலான அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. அவர்களுக்குள்ளேயே பல சிக்கல்கள் எழுந்தன. அமித் ஷா திருச்சி வந்தபோதுகூட கூட்டணியில் இன்னும் யாரையும் சேர்க்காமல் இருக்கிறீர்கள்? என்று எடப்பாடியிடம் கோபித்துக் கொண்டார். ப்ரியன் கூட்டணியில் அன்புமணி அமித் ஷா கொடுத்த அழுத்தத்தினால்தான் அன்புமணியை அழைத்து பாமக-வுடனான கூட்டணியை அறிவித்தார்கள். அதிலும் இன்னும் தொகுதிகள் குறித்தும், ராஜ்ய சபா சீட் குறித்தும் அன்புமணிக்கு உறுதியாகச் சொல்லவில்லை. ஆனால் 23-ம் தேதி அன்புமணி மேடையில் இருப்பாரா? என்றால் அவர் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம் தேமுதிக இருக்குமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான். ராஜ்ய சபா சீட்டில் இருக்கும் சிக்கல் ஏனென்றால் தேமுதிக அதிமுக-வுடன் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. திமுக-வுடனும் கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக, அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்கு கொடுத்திருந்தால் அதில் நமக்கு சிக்கல் இருக்குமா? என்று தேமுதிக யோசிக்கிறது. ஏனென்றால் அன்புமணிக்கும் ராஜ்ய சபா சீட் கொடுத்து, தேமுதிக-விற்கும் ராஜ்ய சபா சீட் கொடுத்தால் அதிமுக-வில் இருப்பவர்கள் குரல் எழுப்புவார்கள். பிரேமலதா யோசனையில் தேமுதிக தம்பிதுரை எல்லாம் 10-வது முறையாக எம்.பி ஆக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இடையில் ஜி.கே வாசனும் எனக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் ராஜ்ய சபா சீட் தங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று வாக்குறுதி தந்தால் தான் தேமுதிக, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் வருவார்கள் என்பது என்னுடைய கருத்து. டிடிவி-க்கு அழுத்தம் கொடுக்கும் பாஜக பாஜக அழுத்தம் கொடுக்கிறது. மத்திய அரசின் அழுத்தம் என்பது சாதாரணமானது கிடையாது. தவெக-வுடன் டிடிவி தினகரன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை டெல்லிக்கு வரவழைத்து அழுத்தம் கொடுத்தார்கள். வெளியில் பேசும்போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று தான் சொல்கிறார். பிறகு ஏன் அவர் அமித் ஷாவை சந்தித்தார். டிடிவி தினகரன் கேள்வி எழுப்பும் அமமுக கட்சியினர் தற்போது தேர்தலில் எதிரிகள், துரோகிகள் என எதையும் பார்க்கக் கூடாது என்று பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடியை எதிர்த்து பேசிவிட்டு இப்போது அவர் இருக்கும் கூட்டணிக்கு சென்றால் நன்றாக இருக்காது என்று டிடிவி கட்சியினர் நினைக்கின்றனர். அப்படி எடப்பாடி இருக்கும் கூட்டணியில் இணைந்தால் நம் ஜனங்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். மேலும் நம்முடைய ஓட்டை எல்லாம் வாங்கி எடப்பாடி தானே பலமடைவார். அவரை ஏன் அரசியலில் நாம் பலப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள்? அதனால் டிடிவி தினகரனும் சற்று குழப்பத்தில் தான் இருக்கிறார். வெளியே வந்துவிடலாமா?- டிடிவி கடைசி நேரத்தில் 20 இடங்களைக் கேட்டு அவர்கள் கொடுக்க மறுத்து விட்டால் நாம் வெளியே வந்துவிடலாமா? என்ற யோசனையில் டிடிவி தினகரன் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. தற்போது டிடிவியுடன் தொகுதி குறித்த பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் 23-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தை முடிந்தால் அதிமுக - பாஜக கூட்டணி பிரசார மேடைக்கு டிடிவி தினகரன் வருவார். அதேபோல ஜான் பாண்டியன் 5 இடங்கள் கேட்கிறார். ஆனால் இவர்கள் 2 இடங்கள் தான் கொடுப்போம் என்று சொல்கிறார்கள். அன்புமணி ராமதாஸ் பிரசார மேடை ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம், அன்புமணி போன்றோர் மேடையில் இருப்பார்கள். பிரேமலதாவையும், தினகரனையும் மேடையில் அமர வைத்தார்கள் என்றால் நிச்சயமாக அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணியாகப் பார்க்கப்படும். ஆனால் அதில் நான் முன்பே சொன்ன மாதிரியான சிக்கல்களும் இருக்கின்றன என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

குடிநீர் vs பல்லுயிர்: `மாமல்லன் நீர் தேக்கத்தின் இரு முகங்கள்'- உப்பங்கழியைப் பலி கொடுக்கிறதா அரசு?
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கம் சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாகும். இந்த நீர்தேக்கம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றச் செய்தி வந்தவுடன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``நாளை முதல்வர் அடிக்கல் நாட்டப் போகும் “மாமல்லன் நீர்த்தேக்கம்” , பல சூழலியல் சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறது. இது குறித்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளை புறந்தள்ளி இந்த விழாவை நடத்தவேண்டிய அவசரம் ஏன்? மேலோட்டமாக பார்த்தால், ஒரு நீர்த்தேக்கம் தானே, நல்லதுதானே என்கிற எண்ணம் ஏற்படலாம். பூவுலகின் நண்பர்கள் ஆனால் கழுவேலி மற்றும் உப்பங்கழி நிலப்பரப்பை முழுவதுமாக “நன்னீர் நிலமாக” மாற்றி, பல்லூரியத்தை சிதைத்து, பலரின் வாழ்வாதாரங்களை அழிக்கப்போகும் இந்த திட்டத்தை மறுபரீசலனை செய்வதுதான் சிறந்தது. முதல்கட்டமாக இந்த திட்டத்திற்காக நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவை ரத்து செய்ய வேண்டும். செய்வீர்களா முதல்வரே? எனக் கேள்வி எழுப்பி, கோரிக்கை விடுத்திருந்தார். அவசரகதி... அவசியம் என்ன? அதைத் தொடர்ந்து அ.ம.மு.க பொதுச்செயலர் டிடிவி தினகரன், ``செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு – புதிய நீர்த்தேக்கத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முன்பே அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன்? செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலப் பகுதியில் மாமல்லன் எனும் பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நிலமான உப்பங்கழி நீர்நிலையில் அமையவிருக்கும் இந்த புதிய நீர்த்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித் தொழிலோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், நீண்டகால நிலைத்தன்மை, நிலத்தடி நீரின் போக்கு என எந்தவித ஆய்வுகளையும் முறையாக மேற்கொள்ளாமலும், அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் அவசரகதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் எழுப்பியுள்ளனர். எனவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் உப்பங்கழிப் பகுதியின் தன்மையை முற்றிலுமாக மாற்றி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு, இதுபோன்ற திட்டங்கள் தொடங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். முதல்வர் ஸ்டாலின் `13 லட்சம் மக்களுக்கு குடிநீர்' இந்தக் கோரிக்கைகள் ஒருபக்கம் என்றால், மற்றொருபக்கம் அரசு திட்டமிட்டபடி முதல்வர் ஸ்டாலின் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார். மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம்: ஸ்டாலின் அவர் உரையில், ``காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கிறோம். நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் எடுத்துக்கூறினார் வள்ளுவர். இயற்கையோடு இணைந்தது தான் தமிழர் வாழ்வு. அதை ஒட்டியே திராவிட மாடல் அரசு நடைபெறுகிறது. ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும். 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும். 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் ஏற்கனவே உள்ளன. நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது. சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். 'தமிழ்நாடு அரசின் சுமார் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும், வெள்ள நீர் மேலாண்மையையும் காரணம்காட்டி அமைக்கப்படும் இந்த திட்டத்தால், என்னதான் சிக்கல்?' என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம். மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் அவர், ``மாமல்லன் நீர்தேக்கத் திட்டத்தின் முதல் கட்டத்தில் நெம்மேலி, கிருஷ்ணகாரனை, தண்டலம், பட்டிபுலம், திருப்போரூர், மாமல்லபுரம், சலுவான்குப்பம், பையனூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட, 4375 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த்துறை, நீர்வளத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1.655 TMC கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், மேற்கூறிய கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும், அருகாமை கிராமங்களின் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் எனவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. நீர்த்தேக்கம் நல்லது... ஆனால்! மேலோட்டமாக பார்த்தால் நீர்த்தேக்கம் நல்லதுதானே எனத் தோன்றும். ஆனால் நீர் தேக்கம் எங்கு அமைக்க வேண்டும் என்ற அறிவியல் வரைமுறை இருக்கிறது. சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக, ரூ.500 கோடி செலவில் கண்ணன்கோட்டை - தேர்வாய்க்கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. அதை நாம் எதிர்க்கவில்லை. காரணம், அந்த நீர்த்தேக்கம் சரியான இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் மாமல்லன் நீர்தேக்கப் பகுதி, உவர் நீரும், நன்னீரும் ஒன்று சேரக்கூடிய இடம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் உவர் நீர் (Brackish water), சதுப்பு நிலம் (Marshland), ஈர நில / நீர் தேக்கம் (Wetland) ஆகிய மூன்றும் ஒன்றுபோலத் தெரிந்தாலும், அவற்றுக்கிடையே மிகப்பெரிய அறிவியல் வேறுபாடுகள் உள்ளன. தற்போது நீர்த்தேக்கம் அமைக்கவிருக்கும் நிலப்பகுதியில், நூற்றுக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவை அங்கு தொடர்ந்து வாழ்வதற்கு நன்னீரும் கடல் நீரும் சீராகக் கலக்க வேண்டியது அவசியம். இந்தச் சூழல் மண்டலத்தில், அணை கட்டி அந்த ஏரியை 'நன்னீர் ஏரியாக' (Freshwater Reservoir) மாற்றினால், அங்கிருக்கும் ஒட்டுமொத்த உயிர்சூழலும் தலைகீழாக மாறி, ஒட்டுமொத்தச் சூழல் மண்டலமே சிதைந்துவிடும். ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது இதுதவிர, அந்தப் பகுதியில் இருக்கும் 16 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும், சதுப்பு நிலங்களில் கைகளால் இறால் பிடித்து வாழ்வாதாரம் நடத்துகின்றனர். எனவே, மாமல்லன் நீர் தேக்கம் அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிராக, ஏற்கெனவே நெய்தல் மக்கள் கட்சி மற்றும் சில மீனவப் பிரதிநிதிகள் தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone Clearance - CRZ) ஆணையத்துக்குக் கடிதம் வாயிலாகக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் இத்திட்டத்திற்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நெம்மேலி ஏரி மேலும், இத்திட்டம் குறித்து ஐ.ஐ.டி. மெட்ராஸ், அண்ணா பல்கலை, அரசின் பிற துறைகள், பஞ்சாயத்து மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஆகியோருடன் கலந்தாலோசிப்பது அவசியம் எனத் தொழில்நுட்ப வல்லுனர் குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால், இப்படியொரு கலந்தாய்வுக் கூட்டமே நடத்தாமல் CRZ அனுமதி வழங்கியிருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது. அதே நேரம் ' இந்த நீர்த் தேக்கம் அமைத்தால் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது' என்ற அரசு தரப்பின் வாதத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு அரசு வேறு வழிகளை சிந்திக்கலாம். 195 உயிரினங்களின் வாழ்வாதாரம்? முன்பு செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவார்கள். இப்போது அப்படி இல்லை என்பதால், செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாரி, அதன் கொள்ளளவை இரட்டிப்பாக்கினாலே போதும். அதேப்போல சென்னைக்கு நீர் கொடுக்கும் ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்தினால், இந்த நீர்த்தேக்கத்தைவிட அதிக தண்ணீரை சேமிக்கலாம். மேலும், இந்தச் சூழலில் வெறும் 13 லட்சம் மக்களுக்கான தண்ணீர் என்பதை மட்டும் கவனத்தில் எடுக்க முடியாது. தற்போது நீர் தேக்கம் அமைக்கவிருக்கும் பகுதியில் 195 தனித்துவமான உயிரினங்கள் வாழ்கின்றன. நெம்மேலி ஏரி கழுவேலி பகுதியில் இதுவரை மொத்தம் 190 பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 65 இனங்கள் வலசை வரும் (Migratory) பறவைகளாகும். இப்பகுதியில் பறவைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது தரவுகளின் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக நெம்மேலி உப்புப் பாத்திகள் (Nemmeli Salt Pans) இப்பகுதியின் மிக முக்கியமான பறவை நோக்கும் இடமாகும். 143 பறவை ஆர்வலர்கள் வழங்கிய 12,484 ஆய்வறிக்கை விவரங்கள்படியும், 381 பட்டியல்களின் அடிப்படையிலும் 1900 முதல் 2025 மே மாதம் வரையிலான காலப்பகுதியில், இங்கு வரும் 190 பறவை இனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு ஒருங்கிணைந்தப் பார்வை முக்கியம்! நெம்மேலிப் பகுதி சென்னையின் புறநகர்ப்பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நீர் ஈரநிலமாகும். மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்ப்பன்மயமிக்க அலையாத்திக் காடுகளைக்கொண்ட இப்பகுதி, கடலோடு முட்டுக்காடு வழியே பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், கடலோடு நுண்ணூட்டச் சத்துக்களையும் உயிரினங்களையும் பரிமாறிக்கொள்ளும் ‘Bio corridor’ ஆகச் செயல்படுகிறது. பள்ளிக்கரணை போன்ற சிறப்புமிக்க நன்னீர் சதுப்புநிலங்களில் பார்க்க முடியாத ஏராளமான முதுகெலும்பற்ற உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வடக்கிலிருந்து இமைய மலையைத் தாண்டிப் பயணிக்கும் பட்டைத் தலை வாத்து (Bar headed goose) முதலாகச் சிறிய ஆலா (Small Pratincole), Short toed snake eagle, திபத்திய மணல் புளோவர் (Tibetan Sand Plover), Chestnut winged cuckoo, Peregrine Falcon, கடல் ஆலா (White bellies sea eagle) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பறவைகளையும் ஈர்க்கும் பகுதி இது. இதனை ஆழப்படுத்திக் கடலிலிலிருந்து துண்டித்து நீர்த்தேக்கமாக மாற்றுவது அப்பகுதியின் சூழலியல் தனித்தன்மையை சிதைத்து அதனை உயிரற்றதாக மாற்றிவிடும். திருநெல்வேலி, கன்னியாகுமரிப் பகுதியிலிருந்து அதிகமாக எடுத்துச் செல்லப்படுவது வெறும் ஜல்லி, மணல் அல்ல. அது ஒரு மாபெரும் மலையின் ஒரு பகுதி. இங்கு பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசின் பிடிவாதம், பள்ளிக்கரணையில் கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்கியது, இப்போது மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டியது என அரசின் செயல்பாடுகள் கவலையளிக்கிறது. ஒட்டுமொத்தமாக அரசு சூழலியலுக்கு எதிராக செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டவில்லை. என்றாலும், அரசுக்கு தொலைநோக்குத் திட்டத்துடன், ஒருங்கிணைந்தப் பார்வை அவசியம் வேண்டும் என்பதை இந்தத் தொடர் சம்பவங்கள் உணர்த்துகிறது. என்றார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடம்; அனுமதி வழங்கி துணை நிற்கும் அரசு நிர்வாகம்? - முழு பின்னணி

திருப்பூர்: கர்நாடகக் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தல்; கண்டனம் தெரிவித்த சீமான்!
தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில் பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச் சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார். சீமான் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற புரிதலற்ற, தேவையற்ற வன்முறைச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியது. கர்நாடக மாநில முதல்வர் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றும் வேளையில், அருகிலேயே கர்நாடக மாநிலக் கொடியையும் ஏற்றுகின்றார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே தன்னுடைய அரசு வாகனத்தில் இந்திய கொடியுடன், கர்நாடக மாநிலக் கொடியையும் பொருத்தியுள்ளார். கோலார் தங்கவயல் சுரங்கங்களில் அணுக்கழிவை பாதுகாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது இதே கன்னடக்கொடியை ஏந்தியே ஒற்றுமையுடன் தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அச்சதியை கன்னட மக்கள் முறியடித்தனர். அண்டை மாநிலங்களுடனான எல்லைச்சிக்கல், நதிநீர் சிக்கல், இந்தி திணிப்பு எதிர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்ட எந்தவொரு மாநில உரிமைச்சார்ந்த பிரச்சனைகளிலும் கர்நாடக கொடியை ஏந்தியே கன்னட மக்கள் உரிமை மீட்கின்றனர். கர்நாடக உரிமைப்போராட்டங்கள் யாவிலும் சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி கன்னட மக்கள் அனைவரும் கட்சி கொடிகளை விடுத்து, மஞ்சள் சிகப்பு வண்ணங்களுடனான கர்நாடக கொடியை தங்களின் ஒற்றை அடையாளமாக்கி போராடும் அளவிற்கு அக்கொடி மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும். சீமான் கன்னட மக்களின் உணர்வுடன் இரண்டற கலந்து, அவர்களது ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக திகழும் கர்நாடக மாநில கொடியை கன்னட மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவரும் மிகப்பெருமையோடு தங்கள் கைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொருத்துகின்றனர். அது அவர்களின் அடிப்படை உரிமையுமாகும். கன்னட மக்களின் அத்தகு இன உணர்வை மதித்து நாம் போற்ற வேண்டும். அவர்களிடமிருந்து இன ஓர்மையையும், மாநிலக் கொடிக்கான மாண்பையும் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனை வெறுப்பதோ, அதற்காக தாக்குவதோ தேவையற்றதாகும். இத்தகு வன்முறையில் ஈடுபடுவோர்கள், கன்னட மக்கள் மீதும், கர்நாடக கொடியின் மீதும், உங்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் காட்டுவதற்கு பதிலாக இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் போற்றிய மூவேந்தர் இலட்சனை பொருந்திய தமிழ்நாட்டு கொடியை அங்கீகரிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் மீது உங்கள் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டும், தமிழ்நாட்டிற்கென்று தனித்த கொடி உரிமையை வாங்கி தராத திமுக, அதிமுக கட்சிகள் மீது உங்கள் கோபம் இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமையை பறித்த பாஜக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும், அதற்கு துணைநின்றவர்கள் மீதும் உங்கள் வெறுப்பும், எதிர்ப்பும் இருந்திருக்க வேண்டும். தங்கள் மாநிலக்கொடிக்கு பெருமதிப்பு தரும் கன்னட மக்களின் இனப்பற்றினைப் போற்றி, பின்பற்ற வேண்டுமே தவிர, புரிதலற்று வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது தேவையற்றது! தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில், பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக்… pic.twitter.com/4Wpi6dFqzX — செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 19, 2026 அதனை விடுத்து தமிழ்நாட்டிற்கு வரும் அப்பாவி கன்னட மக்களை வெற்று வெறுப்புணர்வு கொண்டு தாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒரு சிலரின் இதுபோன்ற தேவையற்ற அடாவடிச் செயல்களால் கர்நாடகாவில் எழுந்துள்ள பதற்றமும், இதை சாதகமாக பயன்படுத்தி கன்னட அமைப்புகள் சில, அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக செய்யும் வெறுப்பு பரப்புரைகளும் பெருங்கவலையைத் தருகிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும், எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும் இதுபோன்ற இழிசெயல்களில் இனிமேல் எவரும் ஈடுபட வேண்டாமென வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

ஓமலூர்: வாடகைப் பிரச்னை; மதுப்பிரியர்கள் தொல்லை... காய்கறிச் சந்தையில் கால்வைக்காத வியாபாரிகள்!
சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் புதிதாக சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, தமிழ்நாடு நகராட்சித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் 22.02.2025 என்று திறப்பு விழா கண்ட காய்கறி சந்தை, இன்று வரை பயன்பாட்டுக்கு வராமல் மது பிரியர்களுக்கான முழு நேர மதுக்கூடமாக மாறியுள்ளது, கவலையடையச் செய்கிறது. இது குறித்து தகவல் நமக்கு கிடைத்தவுடன், நேரடியாகச் சென்று விசாரித்தோம். மின்சாரம் வசதி, தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதி என அடிப்படை வசதிகள் இருந்தபோதும், ஏன் காய்கறிக் கடைக்காரர்கள் சந்தைக்குள் கடைகள் அமைக்கவில்லை என்பது சற்றே வியப்பாக இருந்தது. ஏனென்றால்... கட்டடம்தான் புதியதே தவிர, ஏற்கெனவே அங்குதான் காய்கறிக்கடைகள் இயங்கி வந்தன. அதனால், கட்டடப் பணிகள் முடிந்த பிறகு அங்கு கடைகளைத் திறப்பது வியாபாரத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. பொது மக்களுக்கும் அது ஏற்கெனவே பழக்கப்பட்ட இடம் என்பதால், அங்கு வேறு ஏதோ பிரச்னை உள்ளது என்பது தெளிவானது. இது குறித்து புதிய காய்கறிச் சந்தைக்கு அருகில் கடைப்போட்டுள்ள வியாபாரிகளிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``தலைமுறை தலைமுறையாய் இங்குதான் கடைப்போட்டு வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் தற்போது இங்கு கட்டப்பட்டிருக்கும் சந்தையை ஏதோ ஒரு புதிய நபருக்கு ஏலத்தில் விட்டிருக்கிறார்கள். அந்த தனி நபர் அதிக வாடகை கேட்கிறார். எங்களால் சமாளிக்க முடியாது என்பதால், இங்கு சாலையில் கடைப்போட்டு எங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறோம் என்றனர். மக்கள் கோரிக்கை என்ன? அங்குள்ள பெரும்பான்மையான காய்கறிக் கடைக்காரர்களின் கோரிக்கை அரசு மாமூல் கடைக்காரர்களுக்கு சற்று முன்னுரிமை அடிப்படையில், குறைந்த மற்றும் நியாயமான வாடகையை நிர்ணயம் செய்து தர வேண்டும் என்பதே! ``பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கடைகள் மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இதற்கு மாற்றாக இந்தப் புதுக் கட்டடம் கட்டாமலே இருந்திருந்தால், நாங்கள் எங்கள் மாமூல் கடைகளிலே இருந்திருப்போம் என்று மனம் நோகிறார், மற்றொரு கடைக்காரர். பெரும்பாலானோர் வெளியே சாலையில் கடைகள் போட்டு வியாபாரம் செய்து வரும் நிலையில், வியாபாரம் செய்வதற்காக கட்டப்பட்ட சந்தையில் மதுபிரியர்களின் ஆதிக்கம் தலைதூக்கிக் காணப்படுகிறது. சந்தைக்குள் மது பாட்டில்களுடன் முகாமிடும் சமூகவிரோதிகள், மக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனராம். எனவே அரசு, ஏல ஒப்பந்ததாரரோடு பேசி, ஒரு நியாயமான வாடகை அடிப்படையிலும்... மாமூல் கடைக்காரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காய்கறிக் கடைக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை அணுகி விசாரித்தபோது, ``காய்கறிச் சந்தை ஏலத்தில் விடப்பட்டது. வியாபாரிகளின் கோரிக்கை எங்கள் கவனத்துக்கு வந்திருக்கிறது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் இருதரப்பினரிடமும் பேசி, சுமுக தீர்வு காணப்படும் என்றனர்.

கவுன்சிலர்கள் கட்சி தாவும் அபாயம்; ஹோட்டலில் வைத்து பாதுகாக்கும் ஷிண்டே; என்ன நடக்கிறது மும்பையில்?
மும்பை மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியைப் பிடிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றிபெற்று இருக்கிறது. தானே மாநகராட்சியைத் தவிர்த்து வேறு எந்த மாநகராட்சியிலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வெற்றி பெறவில்லை. மும்பையில் பா.ஜ.க ஆட்சியமைக்க சிவசேனா(ஷிண்டே)வின் தயவு தேவையாக இருக்கிறது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி சிவசேனாவிடம்தான் இருந்திருக்கிறது. இப்போது முதல் முறையாக பா.ஜ.க, மேயர் பதவியைக் கைப்பற்ற இருக்கிறது. சிவசேனா இரண்டாக உடைந்ததைப் பயன்படுத்தி பா.ஜ.க ஆட்சிக்கு வர இருக்கிறது. சிவசேனா(ஷிண்டே) கவுன்சிலர்கள் பா.ஜ.க அல்லது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்குத் தாவும் அபாயம் இருந்து வருகிறது. இதையடுத்து தனது கட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் ஏக்நாத் ஷிண்டே ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்து இருக்கிறார். மேயர் தேர்தல் வரை அவர்கள் அனைவரும் ஹோட்டலில்தான் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. உத்தவ் மேலும் கவுன்சிலர்கள் அணி மாறுவதைத் தடுக்க சிவசேனா மாநகராட்சித் தலைவர் அவசர அவசரமாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதற்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணியும் வேகமாக நடந்து வருவதாக ஏக்நாத் ஷிண்டேயிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மூத்த கவுன்சிலர்கள் யாமினி ஜாதவ், திரிஷா விஷ்வராஜ், அமய் கோலே ஆகியோரில் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதேசமயம் சிவசேனா(ஷிண்டே) கவுன்சிலர்கள் அணி மாறும் வாய்ப்பு இருப்பதாக உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ''ஷிண்டே சேனா கவுன்சிலர்களில் பலர் புதிய முகங்கள். அவர்கள் சிவசேனா தொண்டர்கள். அவர்கள் பாஜக மேயரை விரும்பவில்லை. நீங்கள் அவர்களை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும், பல தகவல் தொடர்பு வழிகள் உள்ளன. கடவுள் விரும்பினால், தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகப் பொறுப்பேற்க முடியும்'' என்று குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா தேர்தல்: 'நிலம், கார், வெளிநாட்டுப் பயணம்' - வாக்குறுதிகளை வாரி வழங்கும் வேட்பாளர்கள்! இது குறித்து ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவாளரான ராஜு வாக்மரே அளித்த பேட்டியில், ''உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் தேர்தலில் நேர்மையாகப் போட்டியிட்டோம். அனைத்து நடைமுறைகளும் சரியாக முடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் எங்கள் கவுன்சிலர்களை ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துள்ளோம்'' என்றார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளிநாடுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வந்த பிறகுதான் மேயர் பதவி குறித்து முடிவு செய்யப்படும். அதோடு தங்களுக்கும் 2.5 ஆண்டு மேயர் பதவி கொடுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கோரி வருகிறார். அதனால் இது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. அதேசமயம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தவ் தாக்கரேயுடன் மேயர் பதவி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே அமைச்சர்களை மாற்ற ஷிண்டே முடிவு நடந்து முடிந்த மாநகராட்சித் தேர்தலில் சிவசேனா(ஷிண்டே) எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏக்நாத் ஷிண்டே குறிப்பிட்ட மாவட்டத்தை ஒதுக்கி தேர்தல் பணிகளைச் செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. தானே மாநகராட்சியைத் தவிர்த்து வேறு எந்த மாநகராட்சியையும் சிவசேனா(ஷிண்டே) கைப்பற்றவில்லை. இதனால் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு குறித்து ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி அடைந்துள்ளார். இதையடுத்து அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஷிண்டே பரிசீலித்து வருகிறார். மும்பை, நாக்பூர், சோலாப்பூர், பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் சத்ரபதி சம்பாஜிநகர் போன்ற முக்கியமான நகர்ப்புற மையங்களில், ஷிண்டேவின் சேனா இரட்டை இலக்க எண்ணிக்கையைக் கூட கடக்கத் தவறிவிட்டது. ஆனால் விதர்பா, மராத்வாடா மற்றும் மேற்கு மகாராஷ்டிராவின் பெரும் பகுதிகளில் ஓரளவு வெற்றிபெற்று இருக்கிறது. மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி
திருவையாறு: சேதமடைந்த சாக்கடை - சாலை; நிலவும் சுகாதார சீர்கேடு; அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மேல வீதியில் உள்ள சாக்கடை உடைந்து 8 மாதங்களாகியும் சரி செய்யவில்லை என்று குறைபடும் பொதுமக்கள், அதை உடனடியாகச் சீரமைத்து சுகாதாரத்தை உறுதிசெய்ய கோரிக்கை விடுத்தது வருகிகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், ``இந்தச் சாலையை ஒட்டி அமைஞ்சிருக்க சாக்கடை உடைஞ்சு மாசக்கணக்குல சுகாதார சீர்கேடு நிலவிட்டு இருக்குது. இதைப் பத்தி எட்டு மாசமா நிறைய பேர் கேட்டுட்டுப் போறாங்க. ஆனா யாருமே இதை சரி செய்ய முன் வரவே இல்ல. இங்க 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்குறோம். இந்தச் சாக்கடை ஆரம்பத்திலேயே திறந்த வெளியாகத்தான் இருந்துச்சு. தினமும் இந்தச் சாலையைக் கடக்கும்போது வரும் துர்நாற்றம் மயக்கமே வர்ற மாதிரி இருக்கும். கிட்டத்தட்ட எட்டு மாசமா இந்தச் சாக்கடை இப்படியேதான் கிடக்கு. அதைக்கூட தாங்கிக்கிட்டு இருந்துட்டோம். ஆனா... இப்போ அந்தச் சாக்கடையை ஒட்டி உள்ள சாலையும் உடைஞ்சுட்டே வருது. பாதிக்குப் பாதி உடைஞ்சு போயிருச்சு. குழந்தைகளுக்கும் ஆபத்தான நிலை: இந்தச் சாலை இப்படி இருக்குறதால எங்க குழந்தைகளை தனியாக விடவே பயமா இருக்கு. எங்களுக்கு இதை விட்டா வேற வழியே இல்லை. இந்தச் சாலையைக் கடந்துதான் நாங்க பேருந்து நிலையத்திற்குப் போகணும். இப்படி உடைஞ்சு கிடக்குற சாக்கடை சாலையை கடந்துதான் பிள்ளைங்க பள்ளிக்கூடங்களுக்குப் போயிட்டு வர்றாங்க. தொற்று ஏற்படும் அபாயம்: அதுமட்டுமல்லாம இந்தச் சாக்கடை திறந்த வெளியில் இருக்குறதால, கொசு தொல்லையும், மழை பெய்தால் வர்ற துர்நாற்றமும் நோய் பரவல் பாதிப்பை ஏற்படுத்திடுமோன்னு பிள்ளைகளை வெச்சுட்டு பயந்துகிட்டு இருக்கோம். இது குறித்து எங்க பகுதி கவுன்சிலர் நாகராஜன் கிட்ட கோரிக்கை வெச்சுருக்கோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்குறதா சொல்லிருக்காரு. இனியும் அதிகாரிங்க அலட்சியம் காட்டாம உடனே உரிய நடவடிக்கை எடுக்கணும் என்றனர்.

`குடும்பத்தை நாசமாக்கியவர்' - பா.ஜ.க எம்.எல்.ஏ-வான மனைவியை விவாகரத்து செய்கிறாரா முலாயம் சிங் மகன்?
சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் இப்போது கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். மற்றொரு மகனான பிரதீக் யாதவ் அரசியலில் ஈடுபடவில்லை. அவர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியான சாத்னா குப்தாவின் மகனான பிரதீக், அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். அபர்ணா பா.ஜ.க சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் பிரதீக்கிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் உட்பட ஏராளமான கார்கள் உட்பட பல வசதிகள் இருக்கிறது. இது தவிர லக்னோவில் மிகவும் பிரபலமான ஜிம் ஒன்று இருக்கிறது. அபர்ணா தேர்தலில் போட்டியிட்ட போது தங்களுக்கு ரூ.15 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. பிரதீக் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கிறார். அவர் தனது பதிவில், ``உறவுகளை அவர் நாசப்படுத்திவிட்டார். அவர் புகழையும் செல்வாக்கையும் தேடுகிறார். விளம்பரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் மீதான அவரது கவனம் குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆத்மாவை நான் பார்த்ததே இல்லை. ஆனால் நான் மனதளவில் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறேன். என் மனைவி எனது நிலை குறித்து அக்கறையின்றி தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாள். அவள் ஒரு கெட்ட குணம் கொண்டவள். அவளைத் திருமணம் செய்துகொண்டது எனது துரதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது. மேலும் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதீக் குற்றச்சாட்டு குறித்து அவரது மனைவியிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. அதோடு பிரதீக் விவாகரத்துக்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளாரா என்பது குறித்தும் தெரியவில்லை. அபர்ணா யாதவ் கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!
‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ கிரீன்லேண்டைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற கடும் முயற்சியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அவருக்குத் தேவையான ஆதரவை நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தரத் தயாராக இல்லை. இதனால், ட்ரம்ப் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு 10 சதவிகித வரி விதித்துள்ளார். இந்த வரி வரும் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஒருவேளை, வரும் ஜூன் மாதத்திற்கு மேலேயும், கிரீன்லேண்ட் பிரச்னை அமெரிக்காவிற்கு சாதகமான நிலையை எட்டவில்லை என்றால், 10 சதவிகித வரி 25 சதவிகித வரியாக அதிகரிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார். கிரீன்லேண்ட் உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained கூட்டறிக்கை என்ன சொல்கிறது? இந்த நிலையில், டென்மார்க்கின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வரி அச்சுறுத்தல் டிரான்ஸ் அட்லாண்டிக் பகுதிகளின் உறவைப் பாதிக்கும். நாங்கள் எப்போதும் ஒன்றாக நிற்போம்… எங்களுடைய பதிலும் ஒரே மாதிரி இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டறிக்கை டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளுடையது. ஆக, இந்த நாடுகள் ட்ரம்பின் அச்சுறுத்தலை ஒன்றாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்பது தெரிகிறது. ட்ரம்பிற்கே வரியா? கூடுதலாக, இந்த அனைத்து நாடுகளும் சேர்ந்து அமெரிக்கப் பொருள்களுக்கு 108 பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும்… அமெரிக்காவின் கம்பெனிகளுக்கு ஐரோப்பிய சந்தைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும் ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் எப்போதுமே தனக்கு எந்தக் காரியம் ஆக வேண்டுமென்றாலும், ட்ரம்ப் ‘வரி’யைக் கையில் எடுத்துக்கொள்கிறார். அதை வைத்தே உலக நாடுகளைப் பயமுறுத்த நினைக்கிறார். அது எப்போதுமே அவருக்குக் கைகொடுக்காது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained ட்ரம்ப் வரியைக் காட்டி பயமுறுத்துவது குறித்து இன்றைய Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பகிர்ந்துகொண்டதாவது… “வரியைக் காட்டி பயமுறுத்தி தனக்கு தேவையானதைச் சாதித்துக்கொள்ள நினைப்பது தவறான உதாரணம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இந்த மாதிரியான காரியங்கள், நிச்சயமாக சந்தைக்கு அதிர்வுகளைத் தரும். ஆனாலும், ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. இது மிகவும் ஆபத்தானது. ஆம்… இதை அவர் மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தால், பிற நாடுகள் அமெரிக்காவை வர்த்தகத்தில் தனித்துவிடக் கூடலாம். ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா தங்களுக்கென தனி வர்த்தக அமைப்பை அமைத்து வர்த்தகம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இதை மற்ற நாடுகளும் பின்பற்றலாம். பிறகு, அவர்களுக்குள்ளாகவே வர்த்தகம் செய்ய தொடங்கிவிடுவர். இதனால், அமெரிக்காவின் வர்த்தகம் பாதிக்கலாம்” என்று கூறியிருந்தார். ஏற்கெனவே, சீனா தன்னுடைய ஏற்றுமதிகளை தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் ஆகிய நாடுகளின் சந்தைக்கு மாற்றிவிட்டது. இதை பிற நாடுகளும் பின்பற்றினால், என்ன ஆகும்? அமெரிக்கா வர்த்தக ரீதியாகத் தனித்துவிடப்படலாம். 2025-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்ப் முதன்முதலாக வரியை அறிவித்தபோது, உலக நாடுகள் அதைப் பார்த்த விதமும், பயமும் வேறு. இப்போதிருக்கும் நிலைமை வேறு. இப்போது உலக நாடுகளும், சந்தைகளும் சற்று வரிக்குப் பழகிவிட்டன. அதனால், அவர்கள் தங்களது சந்தைகளை அமெரிக்காவைத் தாண்டி பரப்பத் தொடங்கிவிட்டனர். இது நிச்சயம் அமெரிக்காவிற்குத் தான் பாதிப்பாக முடியும். அதனால், இனி ட்ரம்ப் தனது நகர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் 'அகண்ட அமெரிக்கா' கனவு | Explained

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் பழனிசாமி ஏன் பதறுகிறார்? - அன்பில் மகேஸ்
2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? பழனிசாமி ஏன் பதறுகிறார்? என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். பழனிசாமி ஏன் பதறுகிறார்? இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றப்படுவதை அவரது பேட்டிகளும் அறிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போது, ’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது பற்றி சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அரசு ஊழியர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். தேர்தல் நாடகம் ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்வது “அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அருவாளாம்” என்ற பழமொழியைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகப் பறித்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே 2003-ஆம் ஆண்டில் சிதைத்த அதிமுக, தற்பொழுது அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான் என்பதைக் கூட அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன? எடப்பாடி பழனிசாமி அதிமுக ஏன் நிறைவேற்றவில்லை? 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 46-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை 5 ஆண்டுகாலமாக ஏன் நிறைவேற்றவில்லை? அரசு ஊழியர்களின் 23 ஆண்டுக் காலக் கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து அவர்களின் வாழ்வில் வசந்தத்தைத் தந்திருக்கிறார். இப்போது திமுக அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதும் பொறுக்க முடியாமல் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவது பற்றி முடிவு எடுப்போம் என்றெல்லாம் தேன் தடவி பேசுகிறார் பழனிசாமி. ஓய்வூதியத் திட்டம்: மத்திய அரசின் புதிய `மூவ்’ - தமிழக அரசுக்கு அதிகரிக்கிறதா அழுத்தம்?! திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன்? 4 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த போது பழனிசாமி அந்தப் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இப்போது திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன்? பழனிசாமி ஆட்சியில் 2019-ல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை எல்லாம் பட்டியல் போட்டு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அரசு ஊழியர்கள் வாங்குகிறார்கள் என விளம்பரம் வெளியிட்டு அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்திய பழனிசாமிதான் இப்போது அரசு ஊழியர்கள் மீது போலிப் பாசத்தைக் கொட்டுகிறார். அரசு ஊழியர்கள் போராட்டம் கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியக் கணக்கீடு என்பது கடைசியாகப் பெற்ற 12 மாத ஊதியத்தின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதம். ஆனால் தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியக் கணக்கீடு என்பது அரசு ஊழியர் கடைசியாகப் பெற்ற மாதத்தின் அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதம். இந்தக் கணக்கீடுதான் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும் இருந்தது. அதையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கேட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார். ரூ.3 கோடியுடன் 55 வயதில் ஓய்வு... இப்படி முதலீடு செய்தால் போதும்..! அதிமுக ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? ஒன்றிய அரசின் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியமும், அதன் தொடர்ச்சியாக குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். ஆனால், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் பணிக்காலம் குறைவாக இருந்தாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 13,000 கோடி ரூபாயை அரசு இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளதுடன், ஆண்டு தோறும் சுமார் 11,000 கோடி ரூபாயைக் கூடுதலாக ஒதுக்கும் என அறிவித்துள்ளது. அன்பில் மகேஷ் ஆட்சியில் இருந்த போது 2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தையே ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பழனிசாமி ஏன் பதறுகிறார்? அன்பில் மகேஷ் சாடியிருக்கிறார். `இது பாதிக்கிணறு தாண்டிய கதை மாதிரிதான்!' - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமும் பின்னணியும்!
சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்... - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்வது என்ன?
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், சமூக நடைமுறையில் இருந்து சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில் மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும். மோகன் பகவத் கடந்த காலங்களில் சாதி என்பது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது. பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது. இதற்கு முடிவுகட்ட, ஒவ்வொரு மனதிலிருந்தும் சாதியை அகற்ற வேண்டும். இதை நேர்மையாகச் செய்தால், 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சாதிப் பாகுபாடு ஒழிக்கப்படும். பொதுமக்களின் தனிப்பட்ட குணநலன்களை வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு வலிமையூட்டி, தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம். ஆர்எஸ்எஸ் பெரிய சங்கமாக மாற எப்போதும் விரும்பியதில்லை. சமூகத்தை மேம்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும். Rss எதிர்ப்புகளுக்கு எதிர்வினையாற்றுவதோ, போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதோ ஆர்எஸ்எஸ் வேலை இல்லை. முற்றிலும் தேசத்தை மையமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் செயல்படும் என்று பேசியிருக்கிறார். RSS 100: ஆர்.எஸ்.எஸ் - இது அரசுசாரா இயக்கமா? அரசியல் திட்டமா?

கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2
`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர். கட்டுரையாளர் : பா.முகிலன் `முதல் களம்’ 02 | கருணாநிதி அது 1957 ஆம் ஆண்டின் தொடக்க காலம். இந்தியா சுதந்திரம் அடைந்து ஒரு தசாப்தம் கூட நிறைவடையவில்லை. நாட்டின் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கட்சி என்கிற அடிப்படையில், நாடு முழுவதும் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ஆட்சி அதிகாரமும் காங்கிரஸ் கட்சியிடம்தான். அதில், தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து மார்ச் மாதம் பொதுத் தேர்தல் என்கிற அறிவிப்பு வெளியானது. கருணாநிதி - அண்ணா இன்னொருபுறம், பேரறிஞர் அண்ணா தலைமையில் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் தேர்தலில் முதல் முதலாக களம் இறங்கியது. திமுகவின் சார்பில் 124 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அந்த 124 பேர்களில் திமுகவின் இளம் தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதியும் இடம்பெற்றார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே. தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. குளித்தலையில் போட்டியிடு என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். கருணாநிதிக்கு காத்திருந்த சவால் அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை, காவிரி நதிக்கரை வளமும், வறண்ட நிலப்பரப்பும் கலந்த ஒரு பிரம்மாண்ட தொகுதி. குளித்தலை, முசிறி, கரூர், லாலாப்பேட்டை, நங்கவரம், அந்தநல்லூர் என்று பல கிராமங்களையும் நகரங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. காங்கிரஸ் வேட்பாளராக காட்டுப்புத்தூர் தர்மலிங்கமும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் கே.ஏ. சண்முகமும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், அந்தப் பகுதியில் வலுவான அடித்தளம் மற்றும் மக்களிடையே நன்கு அறிமுகம் கொண்டவர்கள் என்பதால், இவர்களை வெல்வது கருணாநிதிக்கு கடுமையான சவாலாகவே இருந்தது. கலைஞர் கருணாநிதி ஆனாலும், தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னர், திரைத்துறையில் தனது கூர் தீட்டிய வசனங்களால் மக்களை வசீகரித்ததில் கிடைத்த செல்வாக்கும் புகழும், பெரியார் மற்றும் அண்ணாவுடன் பணியாற்றியதில் கிடைத்த அரசியல் களப்பணி அனுபவமும் கருணாநிதியை தைரியம் கொள்ள வைத்தன. தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கினார். மக்களின் கவனத்தை ஈர்க்க, பிரசார உத்தியை மாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தார். திரைப்படத்துக்கு திரைக்கதை தீட்டியவர் அல்லவா? அந்த அனுபவம் அவருக்கு மிக நன்றாகவே கை கொடுத்தது. தேர்தல் பிரசாரத்தில் புதுமையான உத்திகள் அதுவரை தமிழகத் தேர்தல்களில் கண்டிராத பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். இதில், அவரது முதல் உத்தி - சுவர் ஓவியங்கள். திருவாரூரைச் சேர்ந்த ராஜன் மற்றும் லாலாப்பேட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் என்கிற இரண்டு ஓவியர்களை வரவழைத்து, சுவர்களை உதயசூரியன் சின்னத்தால் நிரப்பினார். கூடவே “காகிதப் பூ மணக்காது காங்கிரஸ் ஆட்சி இனிக்காது, டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்கு பகையாளி என எதுகை மோனையில் அவர் எழுதிக்கொடுத்த பல்வேறு பிரசார வாசகங்கள் மக்களைச் சுண்டி இழுத்தன. சுவர்களில் எழுதப்பட்ட கவிதை நடையிலான அந்த வாசகங்களை மக்கள் கூடிக்கூடி நின்று வாசித்து, அது குறித்து சிலாகித்துப் பேசினர். அடுத்ததாக இன்னொரு புதிய உத்தியையும் கருணாநிதி புகுத்தினார். அதுதான் `டோர் ஸ்லிப்’ எனப்படும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் முறை. இன்று எல்லோரும் பயன்படுத்தும் இந்த முறையை முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதிதான் என்கிறார்கள் அந்தக் கால அரசியலை அசைபோடுபவர்கள். அதாவது, ஒரு வீட்டில் வாக்கு சேகரிக்கும்போது, அந்த வீட்டின் கதவில், 'எங்கள் ஓட்டு கருணாநிதிக்கே' என்கிற வாசகமும் உதயசூரியன் படமும் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை, திமுகவினர் ஒட்டி விடுவார்கள். அதே போல் வீடுதோறும் காலண்டர்களும் விநியோகமானது. மூன்றாவது உத்திதான் எதிரணியினரையே, குறிப்பாக காங்கிரஸ் கட்சியைக் கதிகலங்க வைத்த உத்தி. அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து, காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் வீடுகளுக்கே சென்று “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” எனக் கேட்பார் கருணாநிதி. அவரது கார் ஓட்டுநர், கருணாநிதி வாக்கு கேட்டுச் செல்லும் வீடுகளின் கதவில், உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை ஒட்டி வைத்துவிட்டு வருவார். காலையில் எழுந்து பார்க்கும் காங்கிரஸ்காரர்கள் அதிர்ச்சி அடைவார்கள். “என்னய்யா, கருணாநிதி வந்தாரா?” என ஒருவருக்கு ஒருவர் கேட்கத் தொடங்கினார்கள். கூடவே பிரச்சாரத்தில் அண்ணா, எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரும் கை கொடுத்தனர். கலைஞர் கருணாநிதி- அண்ணா பழைய ஃபியட் கார், இட்லி பொட்டலம், டிரங்கால்! பிரசாரத்தில் கருணாநிதி பயன்படுத்திய வாகனம் ஒரு பழைய ஃபியட் கார். அந்தக் காரில், தன்னுடன் ஆறு பேரை அடைத்துக்கொண்டு, தொகுதி முழுவதும் சுற்றிச் சுற்றி சுழன்றடித்தார். இப்போது இருப்பது போன்றெல்லாம் அப்போது உணவு விடுதிகள் அவ்வளவாக கிடையாது. கரூர் மார்க்கெட்டில் எஸ்.வி. சாமியப்பன் என்பவரின் லாரி செட்டில் இருந்த திமுக அலுவலகமே, இரவில் கருணாநிதி உள்ளிட்டோருக்கான தங்குமிடமாக இருந்தது. இரண்டு ரூபாயில் எட்டு இட்லி பொட்டலம் வாங்கி, எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். தொலைபேசி அரிது. கரூர் அஞ்சல் நிலையத்துக்கு எதிரே இருந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் வரிசையில் நின்றுதான் டிரங்க் கால் மூலம் சென்னைக்குப் பேசி அண்ணாவிடம், தேர்தல் களத்தின் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று தனது அக்காள் மகன் முரசொலி மாறனுக்கு டிரங்கால் போட்டு பேசித்தான் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் கைச்செலவுக்கான பணத்தையும் வரவழைப்பாராம் கருணாநிதி. அந்த நாட்களில் பெரும்பாலான அரசியல் மேடை பேச்சுகள் கடினமான சொற்கள், நீளமான வரலாறு பேசும் பாணியில் இருந்தன. ஆனால், கருணாநிதியின் பிரசாரம் அந்தக் கால அரசியல் கூட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அவர் பேசும்போது , இன்றைய சில தலைவர்கள் பேசுவதைப் போன்ற ‘ஸ்கிரிப்ட் ரீடிங்’ பாணியில் இருந்ததில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் உள்ளூர் பிரச்னைகளைக் குறிப்பிட்டு, அதற்கான தீர்வுகளை தெளிவாக விளக்கினார். அவரின் பிரசாரத்தில் ஒவ்வொரு கூட்டமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. சில இடங்களில் மேடை தேவைப்படாமல், மரத்தடியில் அல்லது திறந்த வெளியில் கூடிச் சிறிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரசியல் உரையை விட சுவைமிகு கதைகள், எடுத்துக்காட்டுகள் மூலம் மக்களைக் கவர்ந்தார். சுருக்கமாக சொல்வதென்றால் அவரது பிரசாரம்,'திமுக வென்றால் இதை மாற்ற முடியும்' என்கிற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துவதாக இருந்தது. காதல் படிக்கட்டுகள் - கலைஞர் கருணாநிதி! குளித்தலையின் கரையோரப் பகுதிகளில் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்ட கூட்டங்கள் அனைத்திலும் பெண்களும் இளைஞர்களும் அதிகம் கூடினர்.“எழுத்தாளராக இருக்கும்போது நம்ம பிரச்னையை எல்லாம் கதைல எழுதினார்; இப்போ சட்டமன்றத்துலச் சொல்லப் போறாராம்!”—என்கிற ரீதியில் வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மிகுதியானது. அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01 வெற்றிக்கு உதவிய கல்லக்குடி போராட்டம் 1950-களில் நடந்த கல்லக்குடி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்த நிகழ்வு, தமிழக அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அந்தப் போராட்டக் கதைகள் குளித்தளை பிரச்சாரத்திலும் பேசப்பட்டு, கருணாநிதிக்கான வாக்குகளை அதிகமாக்கியது. கருணாநிதியின் இந்த புதுமையான உத்திகளும் பிரசாரங்களும்தான், குளித்தலை தொகுதியில் அவருக்கான முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்து. கடைசியாக 2016-ல் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதிவரை, தொடர்ந்து 13 தேர்தல்களிலும் மகுடம் சூட வைத்தது. குளித்தலை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதிக்கு 22,785 வாக்குகள் கிடைத்தன. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார் கருணாநிதி. முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்த திமுக, தமிழக அரசியலில் ஒரு நீண்ட நெடிய அத்தியாயத்துக்குள் அடியெடுத்து வைத்து, இன்றளவும் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் மாறிமாறி தமிழர்களிடம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது. கருணாநிதி சட்டமன்றத்தில் அடியெடுத்த பின்னர், கருணாநிதி மேற்கொண்ட நுணுக்கமான அரசியல் அணுகுமுறைகளும், அறிவுக்கூர்மையான வாதங்களும், அவரை திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வேகமாக உயர்த்தி, அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பல முறை ஆட்சிக்கட்டிலிலும், சாகும்வரை திமுக தலைவராகவும் அரியாசனத்தில் அமரவைத்தது. அந்த வகையில், கருணாநிதியின் இத்தகைய நீண்ட அரசியல் பயணத்திற்கான அடித்தளமாக அமைந்தது அவரது குளித்தலை தேர்தல் வெற்றியே! (தொடரும்) அடுத்த வாரம்: எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02

'பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்' - பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் சார்பில் ராஜா என்பவர் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் இம்மாதம் தொடக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசியிருந்தார். இதை அடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்றுச் சென்ற ராஜேந்திரன் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ராஜீவ் சந்துரசேகர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த ராஜேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில், நீண்ட காலமாக அரசியலில் இருந்த நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை. எனக்கு நிறைய மன ரீதியான சிரமங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், சி.பி.எம் கிளைக் கமிட்டி இதுவரை என் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தவில்லை. என்னை தொல்லை செய்ய வேண்டாம் என அடிக்கடி கேட்டுக் கொண்டேன். பல சிரமங்களை சகித்துக்கொண்டேன். நான் யாரையும் பா.ஜ.க-வுக்கு இழுக்கவில்லை. நான் சார்ந்திருந்த கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை. பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன் என்றார். பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல் ஏ ராஜேந்திரனுடன் சி.பி.எம் பிரமுகர் சந்தோஷ், சி.பி.ஐ நிர்வாகி குருநாதன் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்தனர். வரும் 8-ம் தேதி இடுக்கியில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Stouffville Tamils’ Association -Tamil Heritage Month Celebration
Tamil Heritage Month Celebration Location: Stouffville District Secondary School,801 Hoover The post Stouffville Tamils’ Association -Tamil Heritage Month Celebration appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
இலங்கை சிறையில் வாடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்... மீட்கக் கோரி கண்ணீர் சிந்தும் மனைவி
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரபு. இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மீனவர் பிரபு கடந்த சில வருடங்களாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாள்களில் மருந்து மாத்திரைகளுடனும் சென்றுள்ளார். மேலும் தினமும் தூக்க மாத்திரை உட்கொண்டால்தான் தூங்க கூடிய நிலையிலும் இருந்து வந்துள்ளார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப்படகில் சென்றுள்ளார் பிரபு. அன்று இரவு இவர்களது படகு பாரம்பர்ய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பிரபு உள்ளிட்ட மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி நீதிமன்றத்திற்கு பிரபு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது மனைவி பிரபாவை செல்போனில் தொடர்பு கொண்ட பிரபு, வழக்கமாக தான் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் சிறையில் அவதியுற்று வருவதாகக் கூறியுள்ளார். திருப்பத்தூர் தொகுதி: அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து இலங்கை எம்.பி-யின் மாமனாரா? இது குறித்து நம்மிடம் பேசிய பிரபா, ''கடந்த 20 நாள்களாக எனது கணவர் பிரபு இலங்கை சிறையில் இருந்து வருகிறார். மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட அவரை மாதந்தோறும் மதுரையில் உள்ள மனநல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது வழக்கம். மருத்துவர்களின் அறிவுரைப்படி எனது கணவருக்கு தினமும் மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 20 நாள்களாக அவர் மருந்து மாத்திரை சாப்பிட முடியாமல் சிறையில் வாடி வருகிறார். இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும், தூக்கம் இல்லாததால் மன அழுத்தம் அதிகமாகி வருவதாகவும் கூறினார். மீனவர் பிரபு மருந்து மாத்திரை இல்லாததால் சரியான உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வரும் அவரது நிலை தற்போது எப்படி உள்ளது என்பதைக் கூட எங்களால் அறிய முடியவில்லை. இந்நிலையில் வரும் 27-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அவரை அழைத்து வரும் போது அவரது நிலையினை இந்திய தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி அவரை சிறையில் இருந்து மீட்டுத் தர வேண்டும். எனது கணவரின் நிலை குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். எனது கணவரின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகி அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் அவரை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீர் சிந்தினார். மீனவர் படகுகளில் த.வெ.க பெயர் இருந்தால் மானியம் தர மறுப்பது அராஜகம் - திமுக அரசுக்கு விஜய் கண்டனம்
தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளுக்கான Gun Buyback Program விவரங்களை Minister Gary Anandasangaree வெளியிட்டார் The post தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளுக்கான Buyback Program விவரங்களை Minister Gary Anandasangaree வெளியிட்டார் appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .
Sri Lanka மனிதாபிமான வளர்ச்சியில் Canada ஆதரவு – Juanita Nathan, M.P.
Pickering–Brooklin, Ontario Member of Parliament Juanita Nathan -Humanitarian projects across The post Sri Lanka மனிதாபிமான வளர்ச்சியில் Canada ஆதரவு – Juanita Nathan, M.P. appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

29 C