`அரசுப் பள்ளி மாணவர்களின் 50 நூல்கள்'இறையன்பு ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலில் சாதித்த கண்ணகி நகர்!
சென்னைக்குள் இருந்து வேர்பிடுங்கி எறியப்பட்ட அடித்தட்டு மக்களின் புகலிடமாக இருக்கிறது கண்ணகி நகர். இந்தப் பகுதியில் 1,20,000 பேர் வசிக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, விளையாட்டு, என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. கண்ணகி நகரில் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த ‘முதல் தலைமுறை அறக்கட்டளை‘ என்கிற அறக்கட்டளை தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகளும் தற்காப்புப் பயிற்சிகளும், இளைஞர்களுக்குத் தொழிற்திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக இப்போது கண்ணகி நகரில் நானூறுக்கும் மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள். பலர் வேலைவாய்ப்புகளையும் பெற்றிருக்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ‘எழுதுக‘ என்கின்ற ஓர் அமைப்பின் மூலம் நூல்களை எழுதுவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, புத்தகங்களை எழுதி வெளியிடும் மகத்தான முயற்சி நடந்து வருகிறது. இந்த அமைப்பு, கண்ணகி நகரில் உள்ள மாணவர்களுடைய படைப்பாக்கத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு கோடை விடுமுறை முதல் பலருக்கும் பயிற்சி அளிக்க முன்னெடுப்புகளை எடுக்கத் தொடங்கியது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கண்ணகி நகருக்கு வந்து அங்கிருக்கும் முதல் தலைமுறை அறக்கட்டளை கட்டடத்தில் பயிற்சியை அளித்து வந்தனர். இதன் விளைவாக கண்ணகி நகரைச் சேர்ந்த 50 மாணவர்கள் எழுதிய நூல்கள் செம்மைபடுத்தப்பட்டு, 'நியூ செஞ்சுரி பதிப்பகம்' மூலம் புத்தங்களாக அச்சிடப்பட்டன. இன்று அந்த 50 புத்தகங்களும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கண்ணகி நகரின் மாணவர்கள் முன்பு வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு எழுதுக அமைப்பைச் சார்ந்த கிள்ளிவளவன் வரவேற்புரையும், ஜோசப் ராஜா நோக்க உரையும், பாலச்சந்திரன் வரவேற்புரையும் ஆற்றினர். அரசுப்பள்ளி மாணவர்கள் கண்ணகி நகர் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஆனந்தீஸ்வரி, மாணவர்கள் எழுதத் தொடங்கிய பிறகு அவர்கள் பண்பிலும் நடத்தையிலும் ஏற்பட்டிருக்கின்ற மாறுதல்களையும், தாக்கத்தையும் பற்றிப் பேசினார். நியூ செஞ்சுரி பதிப்பக மேலாண் இயக்குநர் திரு சந்தானம் பேசுகையில், இந்த மாணவர்கள் தொடர்ந்து நூல்களை எழுதி எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவார்கள் என்கின்ற நம்பிக்கையையும் தெரிவித்து மாணவர்களைப் பாராட்டினார். ‘எழுதுக‘ அமைப்பின் வழிகாட்டியாக இருந்து அமைப்பை நெறிபடுத்தி வருகிற முனைவர் இறையன்பு ஐ.ஏ.ஏஸ் பேசுகையில், நூல்களை எழுதுபவர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். வாசிப்பை மேலும் தீவிரமாக்குவார்கள். கண்ணகி நகரின் மாணவர்கள் பல்வேறுவிதமான சூழல்களில் தங்களுடைய அனுபவங்களைப் பெறுகிறார்கள். அவர்கள் ஒன்றும் பாதுகாக்கப்பட்ட மாணவர்கள் அல்லர். பல இடர்பாடுகளைச் சந்தித்து வளர்கின்ற மாணவர்கள். அதன் காரணமாகச் செறிவான அனுபவங்கள் அவர்களிடம் குவிந்து கிடக்கின்றன. அவற்றை எழுதுகிறபோது இதுபோன்ற பகுதிகளில் வாழ்கின்றவர்கள் எத்தகைய சூழலில் வாழ்கிறார்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியகிறது. இறையன்பு இந்தியாவிலேயே இப்படி ஒரே ஒரு பகுதியில் 50 நூல்களை மாணவர்கள் எழுதி வெளியிடுவதும் அதை ஒரு தேர்ந்த பதிப்பகம் வெளியிடுவதும் மிகுந்த சிறப்பு. இந்த நிகழ்ச்சியின் மூலமாக கண்ணகி நகரின் மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற முயற்சி தமிழ்நாடு எங்கும் நிகழும் என்று நெகிழ்ச்சிப் பொங்க தெரிவித்தார். இறுதியாக மாணவர்கள் எழுதிய ஐம்பது நூல்களும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டபோது மாணவர்கள் தாங்கள் படைப்பாளிகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தார்கள்.
`அன்னைக்கு நானே நடந்த மாதிரி சந்தோஷப்பட்டேன்; ஒரு நாளைக்கு 1,500 ரூபா.!' - நெகிழும் `நம்பிக்கை'ராஜா
திருச்சி மாவட்டம், மேலப்புதூரில் உள்ள கான்வென்ட் ரோடு. பள்ளிக் குழந்தைளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் பரபரப்பாக இருந்தது அந்தச் சாலை. காலை ஒன்பது மணிக்கு, தன் வண்டியில் வந்து இறங்கினார் அந்த ஆண். கால்கள் இரண்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு இருந்தது. வண்டியில் இருந்து ஊர்ந்து சென்று கடைக்குள் சென்றவர் டூவீலர் சீட்டிற்கான துணிகளை மரக்குச்சியால் தூக்கி ஆணியில் மாட்டினார். டெய்லர் ராஜா தவழ்ந்து சென்று, தையல் மெஷினுக்கு நேராக இருந்த சிமென்ட் திண்டில் ஏறி அமர்ந்து சீட் கவர்களை வெட்டுவது, தைப்பது என பரபரப்பாகினார். தன் உடல் குறை சார்ந்த எந்த எண்ணமும் அவரிடம் இல்லை. கால்களில் பலம் இல்லாத போதும் அவரின் கால் கட்டை விரல் மெஷினுக்கு அழுத்தம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. வாடிக்கையாளர்களிடம் பேசுவது, சின்னச் சின்ன விஷயங்களையும் நேர்த்தியாக செய்வது என நம்மை வியப்பில ஆழ்த்தியவரிடம் பேச்சுக் கொடுத்தோம். என் பேரு ராஜா. 'பிளாட்டினம் சீட் கவர்'ங்கிறது என் கடை பேரு. இந்த ஏரியால 14 வருஷமா கடை வெச்சிருக்கேன். டூ விலர்களுக்கு வாடிக்கையாளர்கள் என்ன டிசைன்ல சீட், டேங்க கவர் கேட்டாலும் பண்ணிக் கொடுத்திருவேன். என்னுடைய தொழில் நேர்த்தியை பார்த்துட்டு, வாய்வழி விளம்பரம் மூலமா வாடிக்கையாளர்கள் தினமும் அதிகரிச்சுட்டே இருக்காங்க. தொழில் நல்லபடியா போகுதும்மா என தன் தொழிலை அறிமுகப்படுத்தியவர் சீட் கவர்களை ஊசி முனைக்குத் தள்ளிக்கொண்டே தொடர்ந்தார். டெய்லர் ராஜா எனக்கு சொந்த ஊர் திருச்சி. அண்ணன், அக்கானு நாங்க அஞ்சு பேரு. அப்பா - அம்மா ரெண்டு பேரும் கூலி வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. எனக்கு ஒரு வயசுல போலியோ அட்டாக் ஆயிருச்சு. கால் ரெண்டும் நடக்கும் திறனை இழந்திருச்சு. விவரம் தெரியுறதுக்கு முன்னாடியே போலியோ பாதிப்பு வந்ததால, சின்ன வயசிலேயே எல்லா வேலைகளையும் ஊர்ந்து, தவழ்ந்து செய்யக் கத்துக்கிட்டேன். எனக்கு சின்ன வயசா இருக்கும் போதே அப்பா தவறிட்டாரு. எங்க அம்மா ஒரு ஆள் வேலைக்குப் போயி எங்க அஞ்சு பேரை பார்த்துக்குச்சு. கூலி வேலைக்குப் போகும், சித்தாள் வேலை செய்யும், ஸ்கூல்ல கேண்டின்ல வேலை செய்யும். எங்க அஞ்சு பேரோட பசியை போக்க எங்க அம்மா படாத கஷ்டம் இல்ல. இப்போ 85 வயசு ஆச்சு. மூணு அக்காங்களுக்கும் ரொம்ப சிரமப்பட்டுதான் கல்யாணம் பண்ணி வெச்சுது. நான் எட்டாவது வரைக்கும் படிச்சேன். பள்ளிக்கூடத்துக்குப் போனா எல்லாரும் என் உடல் குறையை வெச்சு கிண்டல் பண்ற மாதிரி ஃபீல் ஆச்சு. எல்லாத்துக்கும் யாரோ ஒருத்தர் உதவிய எதிர்பார்த்துட்டே இருந்த மாதிரி இருந்துச்சு. அதனால படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டேன். டெய்லர் ராஜா நிறைய இடத்துல வேலை கேட்டேன். எல்லாரும் உடம்புல இருந்த குறையை பார்த்துட்டு வேலை தர யோசிச்சாங்க. தெரிஞ்ச ஒரு அண்ணன் சீட் கவர் தைக்கிற கடையில வேலைக்குச் சேர்த்து விட்டாரு. ஒரு நாளைக்கு 15 ரூபா சம்பளம். உண்மையைச் சொல்லணும்னா குறையெல்லாம் மறந்து திறமையை வளர்த்துக்கிட்டேன். சீட் கட் பண்றது, அளவு எடுக்குறது, பின் அடிக்கிறது இந்த வேலைகள் எல்லாம் அத்துப்படி. மெஷின் சத்தம் என் மனசை என்னமோ பண்ணிட்டே இருந்துச்சு. ஏறி உட்கார்ந்து தைக்கணும்னு ஆசை. என்னால தனியா நிக்க முடியாது. நடக்க முடியாது. ஆனா, ஏதோ ஒரு தைரியத்துல மெஷின்ல ஏறி உட்கார்ந்தேன். நம்பிக்கை கால்களுக்கு பலம் கொடுத்துச்சு. விரலால பெடலை அழுத்தி நான் தைக்க ஆரம்பிச்சப்போ மெஷின்னோட அந்த சத்தத்தை கேட்கும் போது, அது தான் என் காலடி சத்தங்கிற அளவுக்கு சந்தோஷம் இருந்துச்சு. அன்னைக்கு நான் நடந்த மாதிரி சந்தோஷப்பட்டேன் என்றவரின் கண்கள் மகிழ்ச்சியில் குளம் ஆகியது. சிரித்துக் கொண்டே ' இந்த கேட்குது பாருங்க. என் காலடி சத்தம்' என மீண்டும் மெஷின்களின் பெடல்களை அழுத்திக்காட்டினார். டெய்லர் ராஜா பத்து வருசத்துல தொழிலை நல்லாக் கத்துக்கிட்டேன். இடைப்பட்ட காலத்துல ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறதா சொன்னாங்க. அவங்க காதலை சொல்லும் போது, எனக்கு பயமாதான் இருந்துச்சு. இது எப்படி சரியா வரும்னு யோசிச்சேன். ஆனா அவங்க, 'கட்டுனா உன்னத்தான் கட்டிப்பேன்'னு சொல்லிட்டாங்க. கல்யாணத்துக்கு அவங்க வீட்ல சம்மதிக்கல. எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். குழந்தை பிறக்குற வரைக்கும் ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு. குறை இல்லாம பொறக்கணும்னு வேண்டாத சாமி இல்ல. தேவதை மாதிரி ரெண்டு பொண்ணுங்க எங்களுக்கு. பெரிய பொண்ணு காலேஜ் படிக்கிறாங்க. சின்ன பொண்ணு பிளஸ் டூ படிக்கிறாங்க. என் மனைவி வீட்ல இருந்தே டெய்லரிங் பண்ணி சம்பாதிக்கிறாங்க. குச்சிதான் துணையா இருக்கும்னு நினைச்ச எனக்கு கடவுள் அழகான குடும்பத்தைக் கொடுத்து அழகு பார்த்தாரு. கிடைக்காததுக்கு வருத்தப்படுறதைவிட, கிடைச்சதை கொண்டாடணும். நான் சொல்றது சரிதானம்மா என்றவர் தன் குறைகளை மறந்து சிரித்த போது அவரின் தையல் மெஷின் இன்னும் வேகமெடுத்திருந்தது. தினமும் காலையில ஒன்பது மணிக்கு கடைக்கு வந்தா ராத்திரி எட்டு மணி வரை வேலை இருக்கும். என் கடையில ரெண்டு பேர் வேலையும் செய்றாங்க. ஒரு நாளைக்கு 1,500 ரூபா வரை சம்பாதிக்கிறேன். வாழ்க்கையில எந்தக் குறையும் இல்ல. கால் இல்லாதவன்'னு சொன்னவங்க முன்னாடி கெளரவமா வாழுற வாழ்க்கையை, உழைப்பு உருவாக்கி கொடுத்திருக்கு தம்ஸ் அப் செய்து விடைபெறுகிறார் ராஜா அண்ணா.!
காலத்தால் அழியாத நற்பெயரையும் புகழையும் ஈட்டுவது எப்படி? - மனிதத்தின் உண்மையான முகம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் காலத்தின் நவரசங்கள் வாழ்க்கையாக இருக்கலாம். அந்த நவரசங்களில் ஒன்று கூடினாலோ குறைந்தாலோ வாழ்வது தான் கடினம். சுதந்திரமாக பறக்கும் பறவைகளுக்கு எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும். இலக்கு இல்லாத வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. இங்கு வாழ்கின்ற உயிர்களும் சரி.. மனிதனும் சரி.. வாழ்க்கையின் ஆழத்திற்கு சென்று மீண்டு வரும்போது தான் வாழ்க்கைக்கான அர்த்தத்தையே புரிந்துக் கொள்ள முடிகிறது. மனிதன் என்பவன் யார்? மனிதம் என்பது என்ன? பூ விற்கும் மூதாட்டி ஒருவர், பூக்களை விற்பனை செய்வோரிடம் புன்னகை பூத்த முகத்துடன் நீடுழி வாழ்க என்று சொல்லும் போது, ஒரு வித உவகையோடு அன்றைய நாள் இருக்கும். இது தான், அவர்கள் நம்மிடம் காண்பிக்கும் மனிதம். இது போன்ற உள்ளம் கொண்டவர்களே மனிதர்களாகிறார்கள். மனிதம் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை புரிந்து கொள்பவனே மனிதன். கிட்டத்தட்ட மனிதன் - மனிதம் இரண்டும் ஒரே அர்த்தமாக தான் இருக்க முடியும். மனித விழுமியத்தின் கதவை திறந்து பார்த்தாலே, ஒழுக்கமும் வாழ்வும் சீர்படும். விழுமியம் என்பது ஒரு மனிதனின் எண்ணம், நம்பிக்கை, கருத்து போன்றவற்றை சரியான பாதையில் பின்பற்றுவது. பணம் என்றால் பிணம் கூட வாய் பிளக்கும் என்று ஒரு பழமொழி உண்டு.. சமூகத்தில் சராசரி ஒரு மனிதனின் மதிப்பு அவனிடம் உள்ள பணத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. தனக்காக மட்டுமின்றி மற்றவர்களின் நலனுக்காகவும் உழைப்பவர்கள் மாமனிதர் ஆகிறார்கள். இவர்கள் தான் இளைஞர்கள் பட்டாளத்திற்கு தூண்டுதலாகவும், முன்னோடியாகவும் விளங்குகிறார்கள். இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. நாம் விட்டு சென்ற எழுத்துகளையும், மதிப்பையும், புகழையும் தவிர.. மீதம் எல்லாமே தற்காலிகம் தான். அன்பு, மகிழ்ச்சி போன்றவையெல்லாம் தற்காலிகம் என்ற போது தான் வருத்தமாக இருக்கும். நரை முதிர்ந்த பாட்டியின் பாதத்தில் முள் குத்திவிடுகிறது. தன் பார்வை மங்கிய கண்களால் கைகளில் உள்ள சிறிய ஊசியினால் அதை தடவி கணவன் எடுக்கின்ற போது, அவர்களது இருவரது மனதிலும் ஆழமான அன்பு அழகாய் தோன்றும். மகிழ்ச்சியே வாழ்க்கையின் அர்த்தமும் நோக்கமும், மனித இருப்பின் முழு நோக்கமும் முடிவும் ஆகும் என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. மகிழ்ச்சி வகை ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். ஒருவனே பல வடிவங்களில் மகிழ்ச்சியை உணர்கின்றான். உதாரணமாக, ஒருவருக்கு சுற்றுலா செல்வது மகிழ்ச்சியைத் தரும்.. இது ஒரு வகை மகிழ்ச்சி.. யாருடன் செல்வது கூடுதல் மகிழ்ச்சியைத் தரும்? என்பது வடிவம்.. எப்போதுமே புன்னகை முகத்துடனே இருக்கின்ற ஒரு முதியவரிடம், ஒரு இளைஞன் கேட்கிறான்: உங்களுக்கு துன்பம் என்பதே கிடையாதா? நீங்கள் தான் மகிழ்ச்சியான மனிதராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கு முதியவரின் பதில், புண்பட்டவனின் மனதை அவனே சமாதானப்படுத்தும் கருவி தான் புன்னகை. ஒருவன் எவ்வளவு மெனளமாக புன்னகை புரிகிறனோ? அவ்வளவு அதிகமாக துன்பத்தை அனுபவித்திருப்பான். ஒரு சிலருக்கு அந்த முகம் இயற்கையாகவே இருக்கிறது.. அது கடவுள் கொடுத்த வரம் என்று புன்னகைத்து கொண்டே கூறினார். அனுபவமே சிறந்த ஆசான் என்று கூறுவார்கள். அனுபவம் நமது தவறுகளை திருத்திக் கொள்ளவும் செய்கிறது. ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளவும் செய்கின்றது. இதைத் தான் அனுபவ அறிவு என்கிறோம். ஒருவன் வளர்கின்ற சூழ்நிலை, கற்றுக்கொள்ளும் செயல், மனதில் உள்வாங்கும் விஷயம் இவற்றை பொறுத்தே, அவன் நல்ல அனுபவங்களை பெற்றிருப்பானா? என்பதை கூற முடியும். நல்ல அனுபவங்களை பெற்றிருந்தால் மட்டுமே சிறந்த அனுபவசாலியாக இருக்க முடியும். ஒரு மனிதனின் அனுபவம் அவன் இலக்கை அடைய துணை புரிகிறதா? என்று கேட்டால் நிச்சயம் துணை புரியும். பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் விளையாடுகின்ற போது, அவர் பலமுறை தோல்வி அடைந்துள்ளார். சர்வதேச அளவில் அவர் விளையாடிய போது வெற்றி பெற்று விட்டார். அப்போ, அவர் தோல்வி அடைந்த போது, தான் பெற்ற அனுபவத்தையும், தோற்றதற்கான காரணத்தை ஆராய்ந்த தால் தான், சர்வதேச அளவில் வெற்றியும் பெற்றார். நம் கண்களில் உள்ள லேக்ரிமல் சுரப்பி சுரக்கின்ற கண்ணீரில் வலி மிகுந்த பாதையின் பயணங்கள் நிறைந்திருக்கும். வலி மிகுந்த பாதையிலும் நல்ல எண்ணங்களே நம்மை வலிமை படைத்தவனாக வைத்திருக்கும். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்தால் வாழ்வின் பயணம் இனிதாய் இருக்கும். சி. ஹரிசுவேதா., சேலம் மாவட்டம். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
'படிக்காத மேதை படைத்த பள்ளிக்கூடம்' - பழ வியாபாரியின் பத்மஸ்ரீ பயணம் தெரியுமா?
ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் எழுந்து வேலைக்குச் செல்லும்போது, நமக்கு இன்னும் வசதிகள் இருந்திருக்கலாமோ என்றோ அல்லது நம்மால் இவ்வளவுதான் முடியும் என்றோ பல நேரங்களில் பலர் நினைப்பதுண்டு. ஆனால், எதுவுமே இல்லாத மனிதர் ஒருவர் நினைத்தால் ஒரு ஊரின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்பதற்கு வாழும் உதாரணம், கர்நாடகாவைச் சேர்ந்த ஹரேகளா ஹஜப்பா (Harekala Hajabba). ஆரஞ்சு பழங்களைச் சுமந்து, தனியாளாக விற்று, ஒரு பள்ளிக்கூடத்தையே உருவாக்கிய இந்தச் சாதாரண மனிதரின் கதை, உங்களின் இன்றைய தினத்தைச் சிறப்பாகத் தொடங்க ஒரு மிகச்சிறந்த உந்துதலாக இருக்கும். Hajabba கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள `நியூபடுப்பு' (Newpadupu) என்ற குக்கிராமம்தான் ஹஜப்பாவின் சொந்த ஊர். அந்த ஊரில் பள்ளிக்கூடம் என்ற ஒன்றே கிடையாது. வறுமையின் காரணமாக ஹஜப்பாவும் பள்ளிக்கூடத்துப் பக்கம் சென்றதில்லை. மங்களூர் நகரப் பேருந்து நிலையத்தில் ஒரு கூடை நிறைய ஆரஞ்சு பழங்களைச் சுமந்து சென்று விற்பதுதான் அவருடைய தினசரி பிழைப்பு. ஒரு நாளைக்குச் சுமார் 150 ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும். ஒருநாள், வெளிநாட்டவர் இருவர் ஹஜப்பாவின் கூடையிலிருந்த பழங்களைப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் அதற்கான விலையைக் கேட்டனர். ஹஜப்பாவிற்கு ஆங்கிலம் புரியவில்லை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று தெரியாமல் ஹஜப்பா திருதிருவென முழிக்க, அந்த வெளிநாட்டவர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டனர். அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி... மகள் டாக்டர்... மகன் ரயில்வே ஊழியர்... விதியை வென்ற கல்வி! அந்தச் சம்பவம் ஹஜப்பாவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எனக்குப் படிக்கத் தெரியாததால்தானே எனக்கு இந்த அவமானம் நேர்ந்தது? என் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருந்திருந்தால் நான் படித்திருப்பேனே. எனக்கு நேர்ந்த இந்த நிலைமை என் ஊரில் உள்ள எந்தக் குழந்தைக்கும் வரக்கூடாது, என்று அந்த நிமிடத்தில் ஒரு சபதம் எடுத்தார். ஒரு நாளைக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் ஒருவரால் பள்ளிக்கூடம் கட்டுவது என்பது சாதாரண கனவு அல்ல. இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் பலரும் அந்தப் பேச்சை காதுகொடுத்துக் கூட கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் ஹஜப்பாவின் வைராக்கியம் பெரிதாக இருந்தது. Hajabba அன்றிலிருந்து தான் சம்பாதிக்கும் அந்தச் சிறிய தொகையிலிருந்து ஒரு பகுதியைத் தன் கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகச் சேமிக்கத் தொடங்கினார். பல வருடங்கள் அந்தச் சேமிப்பு தொடர்ந்தது. ஆரம்பத்தில் தன் ஊரில் உள்ள ஒரு சிறிய மசூதியின் நிர்வாகிகளிடம் பேசி, அங்குள்ள ஒரு சிறிய அறையில் 28 குழந்தைகளுடன் ஒரு தொடக்கப் பள்ளியைத் தொடங்கினார். அதன்பிறகு, ஊர் மக்களின் சிறு உதவிகளோடும், தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொண்டும் தன் கிராமத்திலேயே ஒரு நிலத்தை வாங்கி, 2004-ஆம் ஆண்டு `தட்சிண கன்னடா ஜில்லா பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளி' என்ற அரசாங்கப் பள்ளியைக் கட்டி முடித்தார். பள்ளிக்கூடம் கட்டியதோடு ஹஜப்பா நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தப் பள்ளிக்குச் சென்று, வகுப்பறைகளைக் கூட்டிச் சுத்தம் செய்து, பள்ளியின் பராமரிப்பு வேலைகளையும் அவரே தன் கைகளால் செவ்வனே செய்து வந்தார். அந்த ஊர் மக்கள் அவரை `அட்சர சந்த்' (எழுத்துச் சித்தர் / Saint of Letters) என்று அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். அவரது இந்த தன்னலமற்ற மாபெரும் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2020-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ` பத்மஸ்ரீ ' விருதை அறிவித்தது. ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது - முதல்வர் ஸ்டாலின் Hajabba விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் கூடியிருந்த அந்த மாபெரும் சபையில், ஒரு சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி அணிந்து, காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் காலோடு நடந்து சென்று அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார் ஹஜப்பா. அந்த ஒரு காட்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது. நமக்குத் தேவையான வளங்கள் இல்லை, பின்புலம் இல்லை, நேரம் இல்லை என்று பல காரணங்களை நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எதைக் கண்டும் சோர்வடையாமல் தன்னிடம் இருந்ததை மட்டுமே வைத்து ஒரு மாபெரும் கல்விப் புரட்சியைச் செய்துள்ளார் ஒரு பழ வியாபாரி. எந்த ஒரு பெரிய மாற்றமும், ஒரு தனி மனிதனின் சிறிய முடிவில் இருந்தே தொடங்குகிறது என்பதற்கு ஹஜப்பா ஓர் உதாரணம். Hajabba உங்களின் இன்றைய நாள், ஹஜப்பாவைப் போல ஒரு சிறிய, ஆனால் உறுதியான முன்னெடுப்போடு தொடங்கட்டும்! 'கல்வி மட்டும் இருந்தால் போதும்' - 3 அடி உயரம் கொண்ட 'வைரல்' டாக்டர் கணேஷின் வைராக்கிய கதை!
சென்னை: எக்மோர் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? - இதுவெல்லாம் மாறுகிறது கவனிங்க!
சென்னை எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து பயணிப்பவரா நீங்கள்... எக்மோர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அதனால், வரும் 20-ம் தேதி முதல், எக்மோர் ரயில் நிலையத்தில் சில மாற்றங்கள் வர உள்ளன. அவை என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்... வழக்கமாக, பிளாட்ஃபார்ம் 10 மற்றும் 11-ல் இருந்து கிளம்பும் புறநகர் மின்சார ரயில்கள் இனி பிளாட்ஃபார்ம் 5 மற்றும் 6-ல் இருந்து கிளம்பும். எக்மோர் வழியாக சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் பிளாட்ஃபார்ம் 6-ல் இருந்து இயக்கப்படும். ரயில் நிலையம் - பிளாட்ஃபார்ம் வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? - கடும் வீழ்ச்சியை சந்திக்குமா? - இப்போதே Alert ஆகுங்க! எக்மோர் வழியாக அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நிலையம் வரை செல்லும் ரயில்கள் பிளாட்ஃபார்ம் 5-ல் இருந்து இயக்கப்படும். பிளாட்ஃபார்ம் 5 மற்றும் 6 எக்ஸ்பிரஸ் லைன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறைகள் அனைத்தும் வருகிற பிப்ரவரி 20-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி வரை (45 நாள்கள்) தொடரும். இந்த நடைமுறைகளின் போது, ரயில்களின் நேரங்கள் மாற்றப்படுகின்றன. அதன் விவரம் இதோ... மாற்றப்பட்ட நேர அட்டவணை மாற்றப்பட்ட நேர அட்டவணை வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?
AC: ஏ.சி-யால் ஆபத்து நேராமல் இருக்க... இதையெல்லாம் நிச்சயம் செய்துவிடுங்கள்!
வீடுகளில் பயன்படுத்தும் ஏ.சி, திடீரெனத் தீப்பிடிக்கும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், `மெக்கானிக் மூலமாகத்தான் ஏ.சி மெஷினை முறையாகப் பொருத்துகிறோம். இருந்தும் எதனால் தீப்பிடிக்கிறது?' என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். கேள்வியோடு நின்றுவிடாமல், அதற்கான பதிலையும் தெரிந்து கொண்டால்தான் நமது வீட்டில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாமல் தடுக்கமுடியும். இங்கே, ஏ.சி தீப்பிடிப்பதற்கான காரணம் மற்றும் தீர்வுகளைக் கூறுகிறார், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் சின்னண்ணன். ஏ.சி தீப்பிடிக்காமல் இருக்க ``குறைந்த மின்னழுத்தத்தின் (short circuit) காரணமாகத்தான் பெரும்பாலும் ஏ.சி தீப்பிடிக்கிறது. குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது, சரியான வயரிங் செய்யப்படாததுதான். ஏ.சி மெக்கானிக்கைவிட எலெக்ட்ரீஷியனுக்குத்தான் இதில் அதிக பொறுப்பிருக்கிறது. வீட்டின் ஒவ்வோர் அறையின் தேவைக்குமேற்ப மின் விநியோகம் செய்வதற்குத் தகுந்தபடியாக வயரிங் செய்வது அவசியம். அப்படிச் செய்யப்படாத நிலையில்தான் ஏ.சி தீப்பிடிப்பது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. சின்னண்ணன் சில ஏ.சி நிறுவனங்கள், ஸ்டெபிலைஸர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றன. ஸ்டெபிலைஸரின் வேலை, தேவையான அளவு மின்சாரத்தைச் சீராக அனுப்புவதுதானே தவிர, அது மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்தாது. ஒவ்வொரு ஏ.சி-க்குமெனத் தனி சர்க்யூட் வைக்க வேண்டும். 1 டன், 1.5 டன், 2 டன் என ஏ.சி மெஷினுக்கேற்ற மின்சாரத்தை கிலோ வாட் அடிப்படையில் பிரிப்பார்கள். அப்படியாக மணிக்கு இத்தனை கிலோ வாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏ.சி-க்கு, போதுமான மின்சாரம் தடையின்றிக் கிடைக்கவேண்டும். இதை எலெக்ட்ரீஷியன்கள் திட்டமிட வேண்டும். இப்போதெல்லாம் வீடு கட்டுகிறவர்கள், முன்கூட்டியே ஏ.சி-க்கும் திட்டமிட்டுத்தான் வயரிங் வேலைகளைச் செய்கிறார்கள் என்பதால், பிரச்னை இல்லை. அப்படித் திட்டமிடப்படாத வீடுகள் என்றால், பிரச்னை வரலாம். ஏ.சி-யில் இரு யூனிட்கள் இருக்கின்றன. அறைக்குள் நாம் பொருத்தியிருப்பது எவாப்பரேட்டிங் யூனிட் (Evaporating Unit). வீட்டுக்கு வெளியே வெப்பத்தைக் காற்றாடி மூலம் புறந்தள்ளுவது கண்டன்சேஷன் யூனிட் (Condensation Unit). இவை இரண்டையும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வது அவசியம். ஏனென்றால், இவற்றில் அழுக்குப் படியும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குறிப்பாக, கண்டன்சேஷன் யூனிட்டை நாம் வெளியில் வைத்திருப்பதால் கட்டாயம் தூசி படிந்துவிடும். காற்றாடி முழுவதும் தூசி படிந்துவிட்டால் அது இயங்குவதற்கு அதிகப்படியான மின்சாரத்தை இழுக்கும். அதிக மின்னோட்டத்தின் விளைவாக வயர்களில் அதிக வெப்பம் பரவி ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் விளைவாகவும் ஏ.சி தீப்பிடிக்கிறது. பல்லி, அணில் ஆகியவை எவாப்ரேட்டிங் யூனிட்டுக்குள் செல்வதால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டுத் தீப்பிடித்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. தற்போது, இது போன்ற விபத்துகளைத் தடுக்கும்படியாக ஏ.சி தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்பினை மேம்படுத்திவருகின்றன. ஏ.சி-யில் இருக்கும் கேஸ் கசிவதால்தான் தீ விபத்து நிகழ்கிறது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது தவறான நம்பிக்கை. ஏ.சி தீப்பிடிக்காமல் இருக்க என்னதான் தீர்வு? தேவையான அளவு மின்சாரம் கிடைக்கும்படியான வயரிங் முக்கியம். கட்டாயம் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏ.சி-யின் இரண்டு யூனிட்களையும் சர்வீஸ் செய்யவேண்டும். ஏ.சி பயன்படுத்துகிற அனைவருமே சர்க்யூட் பிரேக்கர் (Circuit Breaker) வாங்கிப் பயன்படுத்தலாம். வழக்கத்தைவிட அதிகமாக மின்சாரத்தை இழுப்பதன் விளைவாகத்தான் அதிக வெப்பம் ஏற்பட்டு ஷார்ட் சர்க்யூட் ஆகிறது. சர்க்யூட் பிரேக்கர் பொருத்தினால், அளவுக்கு அதிகப்படியாக மின்சாரத்தை இழுக்கும்போது, ஷார்ட் சர்க்யூட் ஏற்படாமல் தடுத்துவிடும்.” ஏ.சி விபத்தைத் தவிர்ப்பது நம் கையிலும் கவனத்திலும்தான் இருக்கிறது!
Kiss Day: `முத்தம்’ என்பது இயற்கையான வலி நிவாரணி! எப்படித் தெரியுமா?
காதலர் தின வாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நாள்களில் ஒன்று `கிஸ் டே' (Kiss Day) . பிப்ரவரி 13-ம் தேதி கொண்டாடப்படும் இந்த நாள், காதலர் தினத்திற்கு முந்தைய நாள் என்பதால் மிகவும் விசேஷமானது. உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும், மொழிபெயர்ப்பு தேவைப்படாத ஒரே சர்வதேச மொழி `முத்தம்'. காதலர் வாரத்தில் வரும் `கிஸ் டே' என்பது வெறும் ஆசை வேட்கைக்கான நாள் அல்ல; அது இரு மனங்கள் தங்கள் அன்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் தருணம். kiss ஒரு தாயின் முத்தம் குழந்தைக்குப் பாதுகாப்பைத் தருகிறது. ஒரு நண்பனின் முத்தம் ஆறுதலைத் தருகிறது. காதலர்களின் முத்தம் நம்பிக்கையைத் தருகிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத எத்தனையோ உணர்வுகளை ஒரு சிறிய முத்தம் கடத்திவிடும். சண்டை போட்டுக்கொள்ளும் தம்பதிகள்கூட, ஒரு முத்தத்தில் சமாதானம் ஆவது அதன் மகிமைக்குச் சான்று. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், நாம் விரும்பும் நபரை முத்தமிடும்போது, மூளையில் டோபமைன் (Dopamine), ஆக்ஸிடாஸின் (Oxytocin) போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றனவாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக வைக்க உதவுகிறது. `முத்தம் என்பது இயற்கையான வலி நிவாரணி’ என்று மருத்துவர்கள் கூறுவதும் இதனால்தான். Kiss Day: கண்கள், நெற்றி, கழுத்து - ஒவ்வொரு முத்தத்துக்கும் ஓர் அர்த்தம்!|#Visual Story முத்தம் பற்றிய சில சுவாரசியங்கள் * தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த எக்கச்சாய் மற்றும் லக்சனா திரானரத் (Ekkachai & Laksana Tiranarat) தம்பதியினர், 2013-ம் ஆண்டு காதலர் தினத்தில் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகள் தொடர்ந்து முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தனர். * முத்தத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் துறைக்கு ` பிலேமடோலஜி ' (Philematology) என்று பெயர். Relationship * சிலருக்கு முத்தமிடுவது என்றாலே பயம் ஏற்படும். இந்தப் பயத்திற்கு ` பிலேமாஃபோபியா ' (Philemaphobia) என்று பெயர். * ஒரு நிமிடம் தீவிரமாக முத்தமிடுவது சுமார் 2 முதல் 3 கலோரிகளை எரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், முத்தமிடும்போது முகத்தில் உள்ள சுமார் 30 தசைகள் இயங்குகின்றன, இது இளமையாக வைத்திருக்க உதவும். Gen Z மத்தியில் இருக்கும் விதவிதமான `கிஸ்'கள் நெற்றி முத்தம் (Forehead Kiss): இது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. நான் உன்னைப் பாதுகாக்கிறேன், உன் மீது எனக்கு மரியாதை உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லும் முத்தம் இது. இது ஆன்மாவைத் தொடும் முத்தம். கன்னத்தில் முத்தம் (Cheek Kiss): இது நட்பின் அடையாளம். ஒருவரை வரவேற்கவோ அல்லது விடைபெறும் போதோ அன்பை வெளிப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது. Freeze Kiss, Fruity Kiss... முத்தத்தில் இத்தனை வகை இருப்பது தெரியுமா?! |#Visual Story kiss கை முத்தம் (Hand Kiss): இது ஒரு நளினமான செயல். பெரும்பாலும் ஒருவரைப் பாராட்டுவதற்கோ அல்லது அவர் மீதுள்ள ஈர்ப்பை மரியாதையுடன் வெளிப்படுத்தவோ இது தரப்படுகிறது. பறக்கும் முத்தம் (Flying Kiss): தூரத்தில் இருப்பவருக்கு அல்லது வேடிக்கையாக அன்பைப் பரிமாறிக் கொள்ளும் முறை. எஸ்கிமோ கிஸ் (Eskimo Kiss): உதடுகள் படாமல், இருவர் தங்கள் மூக்கின் நுனியை உரசிக்கொள்வது. இது மிகவும் நெருக்கமான மற்றும் செல்லமான அன்பின் வெளிப்பாடு. இந்தக் காலத்து இளைஞர்கள் முத்தத்தை கேசுவலாகவும் ட்ரெண்டாகவும் பார்த்தாலும், அதன் அடிப்படை அன்புதான். முத்தம் என்பது நம்பிக்கையின் முத்திரை. இந்தக் கிஸ் டே-வில், உங்கள் அன்புக்குரியவருக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்து, `எப்போதும் நான் உன்னுடன் இருப்பேன்’ என்பதை உணர்த்துங்கள். kiss குழந்தையோ, அம்மாவோ, காதலியோ, மனைவியோ, முதல் காதலோ, அல்லது வேறு யாரோ... இப்படி உங்களைச் சிலிர்க்க வைத்த, ஆபாசம் இல்லாத முத்த அனுபவங்களை கமென்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலைக் கொண்டாடுங்கள்.
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 வயது மாணவி காவியா யாதவ்
சமீபத்தில் உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி சுமார் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் நெல்லை மாவட்டம் பாரத் ரைபிள் கிளப்பிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட ஏர் பிஸ்டல் பிரிவில் ஏழு வயதையுடைய காவ்யா யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். பதக்கம் வென்ற மாணவி காவ்யா யாதவ் வருகின்ற மே மாதம் பூடானில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளார். மாணவி காவ்யா யாதவ் அவர்களை லிட்டில் பிளவர் சிபிஎஸ்இ பள்ளியில் உற்சாகத்தோடு சந்தித்தோம், மகிழ்ச்சியோடு அவர் நம்மோடு உரையாடிய போது, நான் காசியாபாத்தில் நிகழ்ந்த தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தேன். வருகின்ற மே மாதம் பூடானில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டிக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அப்பா ஆவின் பால் வியாபாரம் செய்து வருகிறார். எனக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை முழுவதுமாக வழங்குவது என் அப்பா தான். தினமும் ஒரு மணி நேரம் அப்பா எனக்கு பயிற்சி அளிப்பார். நான் தற்போது மே மாதம் பூடானில் நடக்க உள்ள சர்வதேச போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று தன் மழலை பேச்சின் உற்சாகத்தோடு பேசி முடித்தார் . பிறகு மாணவியின் தந்தை காந்திமதிநாதன் அவர்களிடம் பேசியபோது, பாரத் ரைபிள் கிளப் என்ற பெயரில் நான் மாணவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை கற்றுத் தருகிறேன். தற்போது என்னிடம் ஏழு மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் கற்று வருகிறார்கள். என் மகள் திறமைசாலி எதையும் எளிதில் கையாள்வார். கற்றுக் கொடுப்பதை சுலபமாக கற்றுக் கொள்வார். எனது மகள் தினமும் இரவு 8 மணியிலிருந்து10 மணி வரை இரண்டு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வார். இதுவரை நடைபெற்ற எல்லா போட்டிகளிலும் நானும், என் மனைவியும் உடனிருந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம் என்றார். மேலும் காவ்யா யாதவின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கூறுகையில் ,நம் இந்திய திருநாட்டிற்கு பல பதக்கங்களைப் பெற்று சாதனை படைக்கவும், எனது மகளின் எதிர்கால கனவாக இருக்கக்கூடிய ஐபிஎஸ் அல்லது இந்திய ராணுவத்தில் ஏதேனும் ஒன்றில் எனது மகள் மிகப்பெரும் உயரத்திற்குச் செல்ல என் மகளுக்கு உறுதுணையாய் நிற்பேன் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
Musical Road: ரோட்ல பாட்டுக் கேக்குமா? இந்தியாவின் முதல் இசைச் சாலை! - எங்கு இருக்கிறது தெரியுமா?
இந்தியாவின் முதல் இசைச் சாலையானது மும்பையின் நரிமன் பாயின்ட்டிலிருந்து வொர்லி செல்லும் வடக்கு நோக்கிய பாதையில் அமைந்துள்ளது. அங்குள்ள சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்த சிறிது தூரத்தில் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு இந்த சிறப்புச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் செல்லும்போது, ஆஸ்கார் விருது பெற்ற `ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பிரபலமான `ஜெய் ஹோ’ (Jai Ho) பாடல் ஒலிக்கும். america road இது எப்படிச் செயல்படுகிறது என்றால், சாலையின் தார் பரப்பில் குறுக்கே குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய மேடுபள்ளங்கள் (Rumble Strips) செதுக்கப்பட்டிருக்கும். வாகனத்தின் டயர்கள் இந்த வரிசையான மேடுபள்ளங்களின் மீது செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக இசை கேட்கும். புல்லாங்குழலில் துளைகளின் இடைவெளி எப்படி வெவ்வேறு ஒலியை எழுப்புகிறதோ, அதேபோல சாலையில் உள்ள பள்ளங்களின் இடைவெளி இசையின் ஸ்வரங்களை உருவாக்குகிறது. இந்த இசையைத் தெளிவாகவும் இனிமையாகவும் கேட்க, வாகனத்தை மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் சீராக ஓட்ட வேண்டும். வேகம் குறைந்தால்பாடல் மிகவும் மெதுவாக (Low pitch) கேட்கும். குறிப்பிட்டதை விட வேகம் அதிகரித்தால் பாடல் மிக வேகமாக, கீச்சுக்குரலில் (High pitch) கேட்பது போல் இருக்கும். இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவிற்குப் புதிது என்றாலும், உலகின் பல நாடுகளில் இது ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. உலகின் முதல் இசைச் சாலை 1995-ம் ஆண்டு டென்மார்க்கில் உருவாக்கப்பட்டது. ஜப்பானில் இவை மெலடி சாலைகள் (Melody Roads) என்று அழைக்கப்படுகின்றன. தென் கொரியாவில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் பாடும் சாலைகள் (Singing Roads) அமைக்கப்பட்டன. கலிபோர்னியா, லான்காஸ்டர் நகரில் உள்ள சாலையில் மேற்கத்திய செவ்வியல் இசை ஒலிக்கிறது. ஓட்டுநர்கள் தூங்குவதைத் தவிர்க்கவும், விழிப்புடன் இருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. music road இந்த இசைச் சாலைக்கான ஐடியாவே ஒரு `விபத்தான’ கண்டுபிடிப்புதான். ஜப்பானில் ஷிசுவோ ஷினோடா (Shizuo Shinoda) என்ற பொறியாளர் புல்டோசர் மூலம் சாலையைச் சுரண்டிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக உருவான பள்ளங்கள் இசையை எழுப்புவதைக் கண்டுபிடித்தார். இதுவே ஜப்பானில் மெலடி சாலைகள் உருவாகக் காரணமானது. இது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. ஓட்டுநர்கள் இசையைச் சரியாகக் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் சரியாகச் செல்வார்கள். இது விபத்துகளைக் குறைக்க உதவுகிறது என்பதும் நிரூபணமாகியுள்ளது.
Cycling: தினமும் ஆபிஸுக்கு சைக்கிளில் வரலாம்! - சொந்த அனுபவ பகிரல்!
நகர வாழ்க்கையின் நெரிசலில், காலை வேளையில் அலுவலகம் செல்வது என்பது பலருக்கும் ஒரு போர்க்களத்திற்குச் செல்வது போன்ற உணர்வைத் தரக்கூடும். வாகனங்களின் இரைச்சல், புகை, போக்குவரத்து நெரிசல் என அனைத்தும் சேர்ந்து அந்த நாளைத் தொடங்கும் முன்பே சோர்வடையச் செய்துவிடுகின்றன. ஆனால், இதற்கு ஒரு எளிய, ஆரோக்கியமான, மற்றும் அமைதியான மாற்று வழி இருக்கிறது. அதுதான் சைக்கிள் பயணம். கடந்த 10 ஆண்டுகளாக அலுவலகத்திற்குத் தொடர்ந்து சைக்கிளில் சென்று வருகிறேன். அதனால் என் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, சிலவற்றைப் பகிர்கிறேன். 1. உடற்பயிற்சி: நேரமும் பணமும் மிச்சம் இன்றைய சூழலில் உடற்பயிற்சி செய்யத் தனியாக நேரம் ஒதுக்குவது பலருக்குச் சிரமமாக உள்ளது. அலுவலகத்திற்கு தினமும் சைக்கிளில் செல்வது (எனக்கு போக வர 12 கி.மீ) ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாக அமைகிறது. தனியாக ஜிம் சந்தா கட்ட வேண்டிய அவசியமில்லை. பயணமே பயிற்சியாக மாறுகிறது. தினமும் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. cycle 2. போக்குவரத்து நெரிசலும் மன அமைதியும் பைக் அல்லது காரில் செல்லும்போது டிராபிக்கில் சிக்கினால் ஏற்படும் மன உளைச்சல் (Traffic Stress) அதிகம். ஆனால், சைக்கிளில் செல்பவர்கள் நெரிசலைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வாகனங்களுக்கு இடையே எளிதாக வழி ஏற்படுத்திச் செல்ல முடியும். சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைவு. அலுவலகத்தை அடையும்போது மனது பதற்றமின்றி, மிகவும் 'ரிலாக்ஸாக' இருப்பதை உணர முடியும். இது அன்றைய வேலைநாளைச் சிறப்பாகத் தொடங்க உதவுகிறது. 3. வியர்வை ஒரு தடையா? சைக்கிள் ஓட்டினால் அதிகம் வியர்க்கும், அலுவலகத்தில் சங்கடமாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அனுபவபூர்வமான உண்மை வேறு. பந்தயத்தில் ஓட்டுவது போல் வேகமாக ஓட்டாமல், நிதானமாக ஓட்டினால் வியர்வை அதிகம் வெளியேறாது. சென்னை போன்ற நகரங்களில், பிரதான சாலைகளைத் தவிர்த்துவிட்டு, மரங்கள் நிறைந்த உட்புறச் சாலைகளைத் தேர்ந்தெடுத்துச் செல்லலாம். இது தூய்மையான காற்றையும், நிழலையும் தருவதோடு, வியர்வையையும் குறைக்கிறது. western valley cycling 4. சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பெட்ரோல் விலை விண்ணைத் தொடும் இக்காலத்தில், சைக்கிள் பயணம் பர்ஸிற்கு மிகவும் பாதுகாப்பானது. மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்தலாம். பைக் அல்லது காரைப் போல இன்சூரன்ஸ், சர்வீஸ் என அதிக செலவுகள் சைக்கிளுக்கு இல்லை. புகையில்லா வாகனம் என்பதால், காற்று மாசைக் குறைப்பதில் நம் பங்கு மிக முக்கியமானது. அதாவது நம் சுயநலத்திலும் ஒரு பொதுநலம். 5. எல்லாக் காலநிலையிலும் சாத்தியமே! வெயில் அல்லது மழைக்காலங்களில் சைக்கிள் ஓட்டுவது கடினம் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், சரியான மனநிலையும், சிறிய முன்னேற்பாடுகளும் இருந்தால் இது தடையல்ல. மழைக்காலத்தில் ஒரு ரெயின்கோட் அணிந்து செல்வது போதுமானது. வெயில்காலத்தில் தொப்பி மற்றும் சன் கிளாஸ் அணிந்து, நிழலான பாதைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக நான் இதைச் செய்து வருகிறேன் என்றால், அது சாத்தியமே! cycling ஆரம்பத்தில் தினமும் 20 கி.மீ, இப்போது 12 கி.மீ (வீடு மாறியதால்) என என்னுடைய தூரம் மாறினாலும், சைக்கிள் ஓட்டுவது தரும் அந்த உற்சாகம் மட்டும் குறைவதே இல்லை. இது வெறும் பயணம் மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை முறை. நம் ஆரோக்கியத்தையும் பேணி, சுற்றுச்சூழலையும் காத்து, மன அமைதியையும் தரும் என் சைக்கிள் பயணம் தொடர்கிறது... நீங்களும் இணையலாமே!
மரங்களடர்ந்த பெசன்ட் நகர் சாலையில் நடக்கிறதெல்லாம் செம ஃபீல்! - சென்னையும் நானும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் 2002 டிசம்பரில், எம்சிஏ ப்ராஜெக்ட் ட்ரைனிங்கிற்காக அடையார் மத்திய கைலாஷ் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது தொடங்கியது என்னுடைய சென்னை நாட்கள். அந்த நவம்பர் மாதம் தான் கோயம்பேடு புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருந்தது. வெளியில் இருந்து பார்ப்பதற்கும், உள்ளேயும் மிக பிரம்மாண்டமாக, அனைத்து வசதிகளுடனும் மின்னியது. “பஸ் ஸ்டேண்டே படத்துல பார்க்கிற ஏர்போர்ட் மாதிரி பளபள னு இருக்கே” னு தோணுச்சு. அப்பாவுடன் வந்து விவரங்கள் கேட்டு, சேருவதற்கான நடைமுறைகளை முடித்தப்பின், திங்கட்கிழமையிலிருந்து வரசொல்லியதும், காஞ்சிபுரத்தில் சித்தப்பாவிடம் விட்டுட்டு அப்பா ஊருக்கு போய்ட்டாங்க. முதல் நாள் அடையார் டெப்போ பக்கத்தில் உள்ள விடுதிக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு, பேருந்தில் ஏறி “மத்திய கைலாஷ்” நிறுத்தத்தில் இறங்கி கம்பெனியில் விட்டுட்டு “சாயந்திரம் வந்து அழைத்துக் கொண்டு செல்கிறேன்” என்று சொல்லிட்டு போனாங்க. மத்திய கைலாஷ் கோயில், அடையாறு சாயந்திரம் அவங்க வர லேட் ஆனதுனால “சரி நாமளே ஹாஸ்டல் போவோம்” அப்படின்னு பேக் ஒன்னு மாட்டிகிட்டு கம்பெனி ல இருந்து அடையார் டெப்போ பக்கத்துல உள்ள விடுதிக்கு பஸ் ரூட்லயே வழி முழுவதும் ஆவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தே சென்றதில் தொடங்கியது சென்னையில் என் நடை பயணம். விடுதிக்கு போனா எங்க சித்தப்பா பதட்டத்துடன் வாசலில் காத்திருந்தார்கள். கம்பெனில போய் பாத்துட்டு நேரா விடுதிக்கு(பஸ்ல) வந்து பார்த்தா நான் இல்ல. அப்போ கையில் செல்போனும் கிடையாது. வேலைக்கு சென்று சில மாதங்கள் கழித்து தான் போன் வாங்கினேன். அவ்ளோ ஈஸியா எதுக்கும் பதட்டமடையாத எங்க சித்தப்பாவை பயங்கரமான பதட்டத்தில் ஆழ்த்திய பெருமை என்னையே சேரும். “சித்தப்பா” அப்படின்னு கூப்பிட்டு சிரிச்ச உடன் அவங்க முகத்துல வந்த நிம்மதி கலந்த ஆசுவாச சிரிப்பு இன்னும் என் மனதில் படமாக இருக்கிறது. கம்பெனியில் இருந்து குறுக்கு வழியில் நடந்தால் விடுதியை இன்னும் சீக்கிரம் அடைந்து விடலாம். ஆனால் அது எனக்கு சரியாக தெரியாததால் பேருந்து தடத்திலேயே காலையில் வரும் போது பார்த்ததை நினைவுப்படுத்தி நடந்து வந்ததால் நேரமாயிடுச்சு சித்தப்பா அப்படின்னு சொன்னவுடன் என் முதுகில் தட்டி சிரிச்சாங்க. “நான் ரொம்ப பயந்து போயிட்டேன்” னு அவங்க சொன்னத கேட்ட பொழுது வருத்தமா இருந்துச்சு. ஆனால் இப்போதும், அடையார் சி. எல். ஆர். ஐ ல இருந்து அடையார் டெப்போ வரைக்கும் அந்த மெயின் ரோடு ஃபுல்லா பஸ் ரூட் ல ஆர்வத்துடன் பரபரப்பான சென்னையின் மாலை வேளையை வேடிக்கை பார்த்துகிட்டே நடந்து போனது இன்னும் மிகப்பசுமையான நீங்காத நினைவுகளில் ஒன்று. அன்றிலிருந்து சென்னையை விட்டு வரும் வரை அடையாரில் தான் வாசம். வேலை கிடைத்து கம்பெனி மாறிய போதும், கம்பெனியில் கிளைகள் மாறிய போதும், அடையாருக்குள்ளேயே விடுதி மாறிய போதும் அடையாரை விட்டு வேறெங்கும் மாறவேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் அடையார் நம்ம சொந்த ஊர் போல மனதுக்கு மிகவும் நெருக்கம். காந்தி நகர், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், ஆவின் பூங்காவிற்கு எதிரிலுள்ள பெசன்ட் நகர் ரோடு இங்கெல்லாம் நடந்து போறதே ரொம்ப நல்லாருக்கும். மெயின் ரோட்ல இருந்து அடையாரின் உள்ரோடுகளில், நகரத்தின் பரபரப்பின்றி, நடந்து போவது ஒரு சுக அனுபவம் தான். வேலை தேடி சென்னையில் பல இடங்களுக்கு அலைந்திருந்தாலும், விடுதி தேடி, வீடு தேடி அதிகம் அலைந்தது அடையாரில் தான். அதனால் அடையார் எப்பவும் “எங்க ஏரியா”. தீபாவளி, பொங்கல் விடுமுறைக்கால சென்னைக்கு தனி அழகுண்டு. ஊரே அமைதியா, ரோடெல்லாம் வெறிச்சோடி எந்த பரபரப்பும் இல்லாம இருக்கும். அப்போ எல்லாம், டிராபிக் இல்லாத, அமைதியான அதிகாலையில அடையார் பாலத்துக்கு கீழ, மரங்களடர்ந்த பெசன்ட் நகர் ரோட்ல நடக்கிறதெல்லாம், ஆனந்தமா இருக்கும். எங்க வீட்ல இருந்து படிக்கவும், வேலைக்கும் முதலில் மெட்ராஸ் வந்தது எங்க சித்தப்பா தான். இன்றுவரை சென்னையில் ஏதேனும் விசாரிக்க, வீடு பார்க்க, முகவரி கேட்க என்று எதுவென்றாலும் எங்கள் உறவுகளில் முதல் அழைப்பு சித்தப்பாக்கு தான். பஸ் ரூட், பஸ் நம்பர் எளிமையான வழிகள் அனைத்தும் அத்துப்படி. அதனால் சித்தப்பாவின் ஆலோசனையும் வழிநடத்துதலும் எப்போதும் இருக்கும். ஆனாலும் செல்ஃபோன் இல்லாததால் நினைத்த நேரத்தில் கேட்க முடியாது. முதல் வார இறுதிக்கு, காஞ்சிபுரம் சென்று விட்டு ஞாயிறு மாலை கிளம்பி (கூட வருவதாக சொன்ன சித்தப்பாவிடம், “நானே போய்டுவேன் சித்தப்பா. கத்திப்பாரா ல இறங்கி, எம்49 பஸ் பிடிச்சு ஹாஸ்டல் போய்டுவேன்” னு வசனம் பேசிட்டு) எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்த போது ஒரு சம்பவமாகிவிட்டது. கத்திப்பாராவில் இறங்கி “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற வளைவினை பார்த்தவுடன் அந்த திசையில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன். ஞாயிறு இரவு, போக்குவரத்து, ஜன நடமாட்டம் குறைவாகவே இருந்தது. நடக்கிறேன், நடக்கிறேன், நடந்து கொண்டே இருக்கிறேன். ‘எம்49’ ம் காணோம், பஸ் ஸ்டாப்பும் காணோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு தான் “ஆகா…. இது கிண்டி பஸ் ஸ்டாப் போற வழி இல்ல போலவே…. இவ்வளவு நேரம் நடக்க வேண்டி இருக்காதே….” அப்படின்னு தோணுச்சு. ஜன சந்தடியற்ற அமைதியான இரவு நேரம். கடைகளும் எதுவும் இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி “கிண்டி பஸ் ஸ்டாப் போகணும்” அப்படின்னு சொல்லி ஏறி உட்கார்ந்து, வழியைப் பார்த்துக் கொண்டே வந்தால்…. நான் வந்த வழியும் இல்லை. மெயின் ரோடும் இல்லாமல் எங்கேயோ போற மாதிரி இருக்கு. “அச்சச்சோ என்னடா இது” அப்படின்னு “அண்ணா ஏன் மெயின் ரோட்ல போகாம ஏதோ ஒரு வழியில் போறீங்க” ன்னு கேட்டேன். அவர் “இல்லம்மா இப்படியே போனா சீக்கிரம் போயிடலாம்.. இதோ இப்ப வந்துரும் பாருங்க” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரத்துல பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு சிரிச்சார். அவருக்கு “தேங்க்ஸ்” சொல்லிட்டு, பஸ் ஸ்டாப்ல இருந்து இந்த பக்கம் திருப்பி பார்த்தால், கொஞ்சம் தூரத்தில் தெரிஞ்சுச்சு… அந்த “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” போர்டின் பின்புறம். “அடக்கடவுளே இந்த போர்டு எல்லாப்பக்கமும் இருக்கும் போல” னு தலையில் தட்டி, சிரித்துக் கொண்டே ‘எம் 49’ பஸ்ஸைப் பிடித்து விடுதியை வந்தடைந்தேன். அறியாத ஊர். இரவு நேரம். வழி மாறி தவித்து நின்றபோது கூட, என்னை அதிகம் கலங்க விடாமல், நம்பிக்கையை கொடுத்து, நல்லெண்ணத்தை என்னுள் விதைத்த அந்த ஆட்டோ அண்ணாவிலிருந்து தொடங்கியது சென்னையில் என் நல் அனுபவங்கள். இதனால் தானோ என்னவோ, துணையில்லாமல், எந்த நேரமென்றாலும் சென்னையில் எங்கும் போக, வர(அது… நடந்து, பஸ், ஆட்டோ எதுவென்றாலும்) அஞ்சியதில்லை. எதுனாலும் பார்த்துக்கலாம் னு ஒரு எண்ணம். அப்படிதான் ஒருமுறை எங்க பெரிய அப்பா அலுவலக விஷயமாக ஒருவாரம் சென்னை வந்து, மந்தைவெளியில் அரசாங்கம் கொடுத்த இடத்தில் தங்கியிருந்தார்கள். இரண்டு நாள் கழித்து வீட்டிலிருந்து ஃபோன் செய்யும் பொழுது அப்பாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும் சிறு பதட்டம். அதனால் மாலை ஆனதும் ஊரிலிருந்து எங்க அப்பா எனக்கு போன் பண்ணி “அப்பா தங்கி இருக்கிற இடத்துக்கு போய், என்னன்னு பாத்துட்டு போன் பண்ணு” அப்படின்னு சொன்னாங்க. நான் அலுவலகத்தில் இருந்து மந்தைவெளிக்கு வந்து சேர ஏழரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த இடம் எங்கே என்று எனக்கு தெரியவில்லை. அப்பா சொன்னதை வைத்து ஒரு ஆட்டோ பிடித்து இடத்தைச் சொல்லி போனால், மெயின் ரோடு விட்டு எங்கேயோ உள்ளார போகுது. வழியில் நிறைய தூர இடைவெளியில் பெரிய பெரிய அதிகாரிகளின் வீட்டு நேம் போர்டு இருக்கு. அதெல்லாம் பாத்துக்கிட்டு, இந்த இடத்தை விசாரித்துக் கொண்டே போனேன். இன்னும் உள்ள போகணும்னு சொல்லி சொல்லி, ரொம்ப தூரம் போய் அந்த இடத்தின் கடைசியில் இவர்களுக்கான அந்த பயிற்சி நிலையமும், தங்குமிடமும் இருந்தது. இந்த வழியில் ஆள் அரவமற்ற மரங்கள் அடர்ந்த இடங்கள் மிக அதிகம். அங்க போய் இறங்கி ஆட்டோவை வெயிட்டிங்ல போட்டுட்டு உள்ளார போய் அப்பாவைப் பார்த்தபோது 9 மணியை நெருங்கியிருந்தது. அந்த நேரத்துல அங்க என்னைய பார்த்ததும் அப்பா, “எப்படிப்பா இங்க வந்த இந்த நேரத்துல” அப்படின்னு ஷாக் ஆயிட்டாங்க. “ஆட்டோல தான்பா… கேட்டுட்டே வந்தேன்” அப்படின்னு சொன்ன உடனே வந்த வழியை நினைத்து அவங்களுக்கு ஒரு பயம். அப்போதும் அவங்களுக்கு நான் சொன்ன பதில் “ஆட்டோ ல தான்பா வழி கேட்டு கேட்டு வந்தேன் ஒன்னும் பயம் எல்லாம் இல்ல.” வெளில வந்து அந்த அண்ணாவிற்கு மிகுந்த நன்றி சொல்லி என்னை ஹாஸ்டல் அனுப்பி வச்சாங்க. ஒரு முறை நானும் என் தங்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமாப் பெண்ணை பார்க்க அவசரமாக ஆட்டோவில் சென்றபோது, தங்கையின் கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டோம். ஆயிரத்தி சொச்சம் பணமும், அலுவலக அடையாள அட்டை, வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் என்று அனைத்தும் அதில் இருந்தது. மாமாப் பெண்ணை பார்த்த பின், சிறிது நேரத்திற்குப் பிறகு தான் கைப்பையை தவறவிட்டதையே உணர்ந்தோம். என்ன செய்வதென்று புரியாமல், கவலையுடன் விடுதிக்கு திரும்பினோம். ஆனால் அடுத்த நாள் மாலையே, அந்த ஆட்டோ ஓட்டுநர், விடுதிக்கு வந்து “காலையில் வேறு அவசர வேலை இருந்ததால் இப்போதாம்மா வர முடிந்தது.. எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க” என்று சொல்லி, கைப்பையை ஒப்படைத்த போது நாங்கள் அடைந்த நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. மனப்பூர்வமான நன்றியை செலுத்தி, மகிழ்ச்சியுடன் பணம் கொடுக்க முனைந்த போது, அதை புன்னகையுடன் மறுத்து “பொருளை பத்திரமா வச்சுக்கோங்கம்மா” என்று சொல்லி சென்றதை இன்றளவும் மறக்கவில்லை. இப்படி நேரங்கெட்ட நேரத்திலும் நல்ல நம்பிக்கையான அனுபவங்களையே தந்திருக்கிறார்கள் சென்னையின் ஆட்டோ அண்ணாக்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை, தி.நகர் பாண்டி பஜார் பக்கம் ஏதோ ஒரு அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு. அடையாறில் இருந்து பேருந்தில் திநகர் சென்று, நேரமாகிவிட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் அந்த அலுவலகத்திற்கு சென்று விட்டேன். பரீட்சைக்கு போனதால் வழியை எல்லாம் நோட் பண்ணல. எழுத்துத் தேர்வு முடிய 12 மணி ஆகிவிட்டது. “முடிவுகளை மெயில் பண்றோம்” னு சொல்லிட்டாங்க. வெளியில வந்து பேருந்து நிறுத்தத்தை விசாரித்து… விசாரித்து… சந்து சந்தா நடந்து நடந்து… “ஹப்பா… கடைசியா ஒரு மெயின் ரோடு தெரியுது… இதுல எதாவது பஸ் ஸ்டாப் இருக்கான்னு பார்க்கலாம்” அப்படின்னு நினைத்து சந்துல இருந்து வெளியில வந்து எட்டிப் பார்த்தா… எதிர்த்தாப்புல ‘அண்ணா அறிவாலயமும், சன் டிவி சூரியனும்’ தெரியுது… “அடக்கடவுளே எங்கிருந்து எங்கடா நடந்து வந்திருக்கோம்” அப்படின்னு யோசிச்சு எனக்கே செம சிரிப்பாயிடுச்சு. அப்புறமா அங்கிருந்து 23சி பஸ் ஏறி அடையார் வந்தேன். ஒருமுறை ஊரில் இருந்து அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாம் வந்திருந்தாங்க. எங்கேயோ போயிட்டு பேருந்து நிறுத்தத்துக்கு போகணும். ஆட்டோ அந்த நேரத்துல கண்ல படல. சரின்னு நம்ம “நடராஜா சர்வீஸ்” ஸ்டார்ட் பண்ணேன். தம்பி கேட்டான், “இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? பஸ் ஸ்டாப்க்கு எவ்வளவு தூரம் இருக்கு?” உடனே நான், “பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப் வந்துடும் டா” அப்படின்னு சொன்னேன். இந்த கேள்வியும் பதிலும் ரிப்பீட் மோட் ல போயிட்டே இருந்துச்சு. (தூரம் கொஞ்சம் அதிகம் தான்.. ஆனா அன்னைக்கு ஆட்டோ எதுவுமே அந்த நேரத்துல இல்ல.. அதனால அவங்களையும் நடக்க வைக்க வேண்டியதாயிடுச்சு). ஹாஸ்டல் வந்தவுடனே, தம்பி, என் ஃபிரண்டு கிட்ட “எவ்வளவு தூரம் எங்களை நடக்க வச்சுடுச்சு தெரியுமாக்கா? பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. னு சொன்னுச்சுக்கா. ஆனா பாலம் ஏறுது… ஏறுது… ஏறுது… இறங்கவே மாட்டேங்குதுக்கா” அப்படின்னு சொல்ல.. அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்து விட்டோம். “என்னையும் இந்த பொண்ணு இப்படித்தான் தம்பி நடக்க வெச்சிருக்கு.. உங்களையுமா?” அப்படின்னு ஃபிரண்டும் சொல்லி ஒரே புலம்பல். எனக்கு சிரிப்பு. இப்ப கூட, நான் “நடக்கிற தூரம் தான்” அப்படின்னு சொன்னேன்னா.. உடனே என் தம்பி மத்தவங்கள அலர்ட் பண்ணிடுவான். “என்ன டிஸ்டன்ஸ்னு கரெக்ட்டா பாத்துக்கங்க.. இல்லன்னா.. இது, ‘பாலம் ஏறி இறங்குனா பஸ் ஸ்டாப்’ னு சொல்லி சொல்லியே நம்மளை எக்கச்சக்கமா நடக்கவச்சிடும்” அப்படின்ற கிண்டல் இப்ப வரை தொடர்கிறது. சென்னை தந்த நல் அனுபவங்களும் நினைவில் நீங்காத, எப்போதும் தொடரும் தொடர்கதை தான். தேர்தல்
Bharat Taxi: ஓலா, ஊபருக்கு போட்டியாக களமிறங்கும் மத்திய அரசின் ஆப்; இதில் நமக்கு என்ன பயன்?
ஓலா, ஊபர், ரேப்பிடோவிற்கு மாற்று 'பாரத் டாக்ஸி'. இது மத்திய அரசின் ஆப். இதில் ஓலா, ஊபர், ரேப்பிடோ மாதிரி கால் டாக்ஸி, ஆட்டோ, பைக் போன்றவற்றைப் புக் செய்யலாம். இந்த ஆப் கடந்த 5-ம் தேதியில் இருந்து டெல்லி, குஜராத் போன்ற பகுதிகளில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 2029-ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் இந்த ஆப் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது. Bharat Taxi 2022-ல் இந்தியா உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? மற்ற ஆப்களைக் காட்டிலும் இதில் என்ன ஸ்பெஷல்? பிற ஆப்களில் டிரைவர்கள் ஒவ்வொரு ரைடிற்கும் 20 - 30 சதவிகிதம் கமிஷன் கட்ட வேண்டும். ஆனால், இந்த ஆப்பில் அப்படி எந்தக் கமிஷனும் கட்ட வேண்டியதில்லை. இதனால், டிரைவர்களுக்கும் லாபம்... கமிஷன் குறைவதால் பயணிகளுக்குக் கட்டணம் குறையும். இது பயணிகளுக்கும் லாபம். பிற ஆப்களில், பீக் நேரங்கள், மழையின் போது கட்டணங்கள் அதிகரிக்கும். ஆனால், பாரத் டாக்ஸியில் இந்தப் பிரச்னைகள் இல்லை. இந்த ஆப்பில் கட்டணங்கள் நடைமுறைகளுக்கு உட்பட்டே நிர்ணயிக்கப்படும். பாரத் டாக்ஸியைப் பொறுத்தவரை, டிரைவர்கள் பார்ட்னர்கள். இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு
Fastag: 'ஸ்கேன்'பிரச்னை இனி இல்லை; ஃபாஸ்ட் டேக்-ல் அமலாகிய புதிய நடைமுறை - விவரம் என்ன?
டோல் பிளாசாவில் நின்றுகொண்டிருப்போம். நமக்குப் பின்னால் 7 - 8 வாகனங்கள் இருக்கும். இதோ ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்தால், கிளம்பிடலாம் என்று நினைக்கும்போதுதான்... அந்தச் சம்பவம் நடக்கும். அதாவது ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் ஆகாமல் மக்கர் செய்யும். இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், ஃபாஸ்ட் டேக்கில் KYV அப்டேட் ஆகியிருக்காது. இனி அந்தச் சிக்கல் இருக்காது. ஃபாஸ்ட் டேக் 'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail இந்த மாதத்தில் இருந்து (பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து), புதிய ஃபாஸ்ட் டேக்குகளுக்கு KYV அப்டேட் தேவையில்லை என்பதை அறிவித்திருக்கிறது தேசிய நெடுஞ்சாலை துறை. புதிதாக ஃபாஸ்ட் டேக் வாங்கும்போது, வங்கியே வாகனங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டிருக்கிறது. அப்போது ஏற்கெனவே உள்ள ஃபாஸ்ட் டேக்குகளுக்கு என்னும் கேள்வி எழுகிறதா? அந்த ஃபாஸ்ட் டேக்குகளுக்கு இனி KYV அப்டேட் அவசியமில்லை. ஒருவேளை, ஃபாஸ்ட் டேக் தொலைந்தாலோ, அதன் மீது புகார் எழுந்தால் மட்டும், இனி KYV அப்டேட் செய்யப்படும். வரலாற்று 'Worst Budget Day Loss'-ஐ சந்தித்த பங்குச்சந்தை - முதலீட்டாளர்களுக்கு ஒரு அறிவுரை!
மதுரை: 'என்ன என்ன ஐட்டங்களோ...' - களைகட்டிய ஞாயிற்றுக்கிழமை சந்தை! | Photo Album
மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்! - தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்

31 C