StartUp சாகசம் 48 : `இரண்டாம் திருமணத்திற்கென தனி தளம்!' - SecondSutra நிறுவனரின் சாகச கதை
StartUp சாகசம் 48 இந்தியாவின் ஆன்லைன் திருமணச் சந்தை (Online Matrimony Market) பல ஆயிரம் கோடிகள் புழங்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக வளர்ந்துள்ளது. இருப்பினும், இதில் ‘இரண்டாம் திருமணம்’ (Second Marriage) என்ற பிரிவு இன்றும் வணிக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு 'கவனிக்கப்படாத சந்தையாகவே' (Underserved Market) உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் பெருகிவிட்ட போதிலும், மறுமணத்தை நாடுபவர்கள் எங்கே தேக்கமடைகிறார்கள் என்பதையும், கலாச்சார ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் புரிந்துகொள்வது இந்தத் துறையில் உள்ள வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்கு அவசியமாகும். இந்தியக் கலாச்சாரச் சூழலில், முதல் திருமணம் என்பது ஒரு சமூகக் கொண்டாட்டமாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இரண்டாம் திருமணம் என்பது பெரும்பாலும் 'மறைக்கப்பட வேண்டிய விஷயமாகவோ' அல்லது 'தோல்வியின் பிம்பமாகவோ' கட்டமைக்கப்பட்டுள்ளது. திருமணம் விவாகரத்து பெற்றவர்கள் அல்லது துணையை இழந்தவர்கள், சமூகத்தின் விமர்சனங்களுக்கு பயந்து, தங்களின் மறுமண முயற்சியை வெளிப்படையாகச் செய்யத் தயங்குகின்றனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் தனிப் பெற்றோர்கள் (Single Parents), தங்களின் இந்தத் தேடுதல் பயணத்தில் சமூகத்தால் தவறாகப் பயன்படுத்தப்படுவார்களோ என்ற அச்சத்திலேயே உறைந்து போயுள்ளனர். தற்போதுள்ள பெரிய மேட்ரிமோனி நிறுவனங்கள் (Mainstream Players) முதல் திருமணங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இதனால், மறுமணம் நாடுபவர்கள் பின்வரும் இடங்களில் தேக்கமடைகின்றனர்: 1. நம்பகத்தன்மை இன்மை: பொதுவான தளங்களில் உள்ள போலி கணக்குகள் மற்றும் மேலோட்டமான சரிபார்ப்பு முறைகள், ஏற்கனவே மனதளவில் காயப்பட்டிருக்கும் இவர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்குவதில்லை. 2. உளவியல் ஆதரவின்மை: இது வெறும் துணையைத் தேடும் படலம் மட்டுமல்ல; கடந்தகால கசப்புகளைக் கடந்து வரும் ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். ஆனால், தற்போதைய சந்தை இவர்களுக்குத் தேவையான உளவியல் மற்றும் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதில் பின்தங்கியுள்ளது. எனவே, இந்தியாவின் இரண்டாம் திருமணச் சந்தை என்பது வெறும் 'மேட்ச் மேக்கிங்' (Matchmaking) சார்ந்தது மட்டுமல்ல. இது 'நம்பிக்கை' (Trust) மற்றும் 'பாதுகாப்பு' (Safety) ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான வணிகக் களமாகும். சமூகத் தடைகளை உடைத்து, இவர்களுக்கென ஒரு பாதுகாப்பான சூழலைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்குவதே இந்தச் சந்தையில் வெற்றி பெறுவதற்கான திறவுகோலாகும். இந்தச்சந்தையில் தமிழர் ஒருவர் சிங்கப்பூரில் சீனா நண்பரை கூட்டாளியாகஇணைத்து `செகண்ட்சூத்ரா’ என்ற பெயரில் இரண்டாவது திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களைக் இலக்காகக்கொண்டு செயல்படுகிறார் . சிங்கப்பூரை தலைமையிடமாக்கொண்டு செயல்படும் SecondSutra.com நிறுவனர்களில் ஒருவரான வெங்கட்ராமன் தாமோதரன் வழியே அவர்களின் சாகசக் கதையை கேட்போம். ``ஏற்கனவே பல பெரிய மேட்ரிமோனி நிறுவனங்கள் கோலோச்சும் போது, 'இரண்டாம் திருமணம்' (Second Marriage) என்ற இந்தத் தனித்துவமான பிரிவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது? இதற்கான முதல் பொறி எங்கே கிடைத்தது?” ``இன்று ஆன்லைன் திருமணத் தளங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டாலும், இரண்டாம் திருமணத்தை நாடுபவர்கள் பொதுவான தளங்களில் பெரும் சங்கடங்களையே சந்திக்கின்றனர். அங்கே அவர்கள் ஒரு ‘சிறுபான்மையினராக’ உணர்வதுடன், அவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் குறைவு. இந்த ‘ஒதுக்கப்பட்ட உணர்வு’தான், அவர்களுக்கென பிரத்தியேகமான, பாதுகாப்பான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை எங்களுக்கு விதைத்தது. எங்களுக்குக் கிடைத்த பயனாளர்கள் அனுபவத்தின் தரவுகள், சமூக அழுத்தம் எந்த அளவுக்கு ஆழமாக உள்ளது என்பதை உணர்த்தின: தென் தமிழகத்தைச் சேர்ந்த, நல்ல பணியில் உள்ள ஒரு கல்லூரி விரிவுரையாளர் (Single Mother), தன் விவாகரத்து விஷயத்தைச் சக ஊழியர்களிடம் சொல்லாமல் மறைத்து வாழ்ந்து வருகிறார். காரணம், தேவையற்ற கேள்விகள் மட்டுமல்ல; ‘இந்தத் தனிமை நிலையைப் பயன்படுத்தி யாராவது தவறாக அணுகினால் என்ன செய்வது?’ என்ற தொடர் அச்சமும் எங்களுக்கான பொறி என்று வைத்துக்கொள்ளலாமே. மறுமணம் நடுத்தர நகரங்களில் (Tier 2 Cities) வசிப்பவர்கள், தங்கள் சமூகத்தின் புறங்கூறல்கள் மற்றும் குறுக்கீடுகளிலிருந்து தப்பிக்க, மறுமணம் முடிந்த கையோடு சென்னை போன்ற பெருநகரங்களுக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்று குடியேறத் தயாராக இருக்கின்றனர். விமர்சனங்களில் இருந்து தப்பிக்க இடப்பெயர்வு செய்யும் அளவுக்குப் பிரச்சனை பெரிதாக இருக்கும்போது, இரண்டாம் திருமணத்திற்கான தளம் என்பது வெறும் வணிகம் அல்ல; அது ஒரு சமூகத் தேவை என்பதைப் புரிந்துகொண்டோம். அவர்களின் இரண்டாவது இன்னிங்ஸ் கௌரவமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைவதே எங்கள் பிரதான இலக்கு.” StartUp சாகசம் 44: கால்நடை சிக்கல்களுக்கு தொழில்நுட்ப தீர்வு! - `கைமெர்டெக்’ வளர்ந்த கதை! ``நம் சமூகத்தில் இரண்டாம் திருமணம் குறித்து இன்னும் தயக்கங்கள் உள்ளன. உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியபோது (Launch) நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அவற்றை எப்படிக் கடந்து மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கினீர்கள்?” ``சமூகத்தில் நிலவும் தயக்கங்களும் விமர்சனங்களும்தான் எங்களை இந்தப் பிரிவை நோக்கி ஈர்த்தன. பயனர்களின் மனதில் ஆழமான அச்சங்கள் இருந்தன: *குடும்பத்திடம் விளக்குதல்: ஒரு தனி பெற்றோராக (Single Parent), தன் டீன்-ஏஜ் குழந்தைகளிடமோ அல்லது வயது முதிர்ந்த உறவினர்களிடமோ தனது மறுமண விருப்பத்தை எப்படிச் சொல்வது? * துணையின் நம்பகத்தன்மை: வரப்போகும் துணைவர், என் குழந்தைகளை ஏற்றுக்கொள்வாரா? நல்லவராக இருப்பாரா? என்ற பயம். இந்த அச்சங்களால்தான், பெரிய மேட்ரிமோனி தளங்களில் இவர்கள் ‘Under-served’ பிரிவினராக இருந்தனர். வெங்கட்ராமன் தாமோதரன் SecondSutra.com நம்பிக்கையை உருவாக்கிய விதம்: மக்களின் பயத்தைப் போக்குவதே எங்கள் முதல் படி. 1. பாதுகாப்பு & சரிபார்ப்பு : போலி கணக்குகளைத் தவிர்க்க, மனிதவளப் பரிசோதனை (தானியங்கி முறைகள் மூலம் கடுமையான சோதனைகளைச் செய்கிறோம்.) 2. வெளிப்படையான கட்டணம் : யாரையும் கட்டாயப்படுத்தி பணம் செலுத்த வைப்பதில்லை. எங்கள் சேவை பிடித்திருந்தால் மட்டுமே பணம் செலுத்தலாம். 3. பணம் திரும்பப் பெறும் உத்தரவாதம்: பணம் செலுத்தியும், ஒருவருடன் கூடப் பேசும் வாய்ப்பு அமையவில்லை என்றால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பயனாளர் ஒருவருடன் பேசிய பிறகுதான் கட்டணம் கணக்கில் கொள்ளப்படும்.” ``இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான நிதியை (Funds) எப்படித் திரட்டினீர்கள்? முதலீட்டாளர்களை அணுகும்போது, உங்கள் பிசினஸ் பிளான் மீது நம்பிக்கையை ஏற்படுத்த என்ன செய்வீர்கள்?” ``தற்போதைக்கு நாங்கள் வெளி முதலீடுகள் எதையும் திரட்டவில்லை. ஏற்கனவே எங்களுக்கு வெற்றிகரமாக இயங்கும் மற்றொரு நிறுவனம் உள்ளது. அதன் லாபத்தைக் கொண்டே, சமூக நோக்கம் கொண்ட இந்தத் திட்டத்தை (SecondSutra.com) Bootstrapped முறையில் நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் முதலீட்டாளர்களை அணுகினால், பின்வரும் இரண்டு விஷயங்களே எங்களின் பலமாக இருக்கும்: 1. வலுவான குழு : நிறுவனத்தை வழிநடத்தும் குழுவின் அனுபவம். 2. தனித்துவமான தயாரிப்பு : மிகப்பெரிய சந்தை (Market Size) என்றாலும், அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஆழமாக இறங்கி, பிரத்தியேகத் தீர்வைத் தருவது. திருமணம் ``ஏன் நிறுவனத்தை சிங்கப்பூரில் துவக்கினீர்கள்? ஏதும் முக்கிய காரணம் உண்டா?” ``செகண்ட் சூத்ரா (Second Sutra) பங்குதாரர்களில் ஒருவர் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர். ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் பங்குதாரராக இருக்கும்போது, சட்ட ரீதியிலான நடைமுறைகள் (Legal Documentation) மிக அதிகம். எங்கள் ஆடிட்டரின் அறிவுரைப்படி, ஆரம்பகட்டச் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவே சிங்கப்பூரில் பதிவு செய்தோம். அடுத்தகட்ட வளர்ச்சியின்போது இந்தியாவிலும் பதிவை மேற்கொள்வோம்.” 'விர்ச்சுவல் மீட்' (Virtual Meet) மற்றும் 'கறாரான சரிபார்ப்பு' (Strict Verification) போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் பிசினஸ் ரீதியாக எப்படி உதவின? வழக்கமான முறையை விட, இந்தத் தொழில்நுட்ப அணுகுமுறைகள் பயனர்களின் நம்பிக்கையை வெல்ல பெரிதும் உதவின. 1. விர்ச்சுவல் மீட் (Virtual Meet): * இரண்டாம் திருமணத்தைத் தேடுபவர்கள், கடந்தகாலக் கசப்பான அனுபவங்களால் தங்கள் பர்சனல் நம்பரை உடனே பகிரத் தயங்குவார்கள். * எங்கள் தளத்திலுள்ள 'விர்ச்சுவல் மீட்' மூலம், போன் நம்பரைப் பகிராமலே வீடியோ காலில் பேசலாம். ஒருவேளை பிடிக்கவில்லை என்றால், அத்துடன் முடித்துக்கொள்ளலாம். இது அவர்களுக்குப் பாதுகாப்பையும் நிம்மதியையும் தருகிறது. 2. மூன்று அடுக்குச் சரிபார்ப்பு : * அரசு ஆவணம் : நபர் உண்மையானவரா என அறிய. * வீடியோ சரிபார்ப்பு : புகைப்படத்தில் இருப்பவர்தான் இப்போதும் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய. * தொழில்முறைச் சரிபார்ப்பு : LinkedIn அல்லது அலுவலக மின்னஞ்சல் மூலம் அவர்களின் வேலை/பதவியை உறுதி செய்ய. StartUp சாகசம் 46: `இரசாயன கழிவுகளை அகற்றும் எந்திரன்’ - தமிழக StartUp `Unibose’ கதை ``ஆரம்பத்தில் முதல் 100 வாடிக்கையாளர்களைப் பெறுவது கடினம். நீங்கள் சரியான வாடிக்கையாளர்களை எப்படிக் கண்டறிந்தீர்கள்?” தரவு சார்ந்த முடிவுகளே (Data-Driven Decisions) எங்களுக்கு வழிகாட்டின. 1. பிரச்சனையை உறுதி செய்தல்: முதலில் ஒரு எளிய 'லேண்டிங் பேஜ்' மட்டும் உருவாக்கி விளம்பரம் செய்தோம். அதில் கிடைத்த அதிகப்படியான பதிவுகள், இப்படியொரு தேவை இருப்பதை உறுதி செய்தன. 2. முக்கிய மாற்றம் : பதிவு செய்தவர்களின் தரவுகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலோர் இரண்டாம் திருமணத்தைத் தேடுபவர்கள் எனத் தெரிந்தது. இதுதான் எங்களை பொதுவான தளத்திலிருந்து விலகி, 'Second Sutra' எனத் தனிப்பாதையில் பயணிக்க வைத்தது. 3. பயனாளர் ஆய்வு: Hotjar போன்ற கருவிகள் மற்றும் தொடர் நேர்காணல்கள் (User Interviews) மூலம் வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்பத் தளத்தை மாற்றியமைத்தோம். திருமணம் ``இதுவரை எத்தனை பேருக்கு உங்கள் தளம் வழியே திருமணம் நடத்தி வைத்துள்ளீர்கள்?” ``செகண்ட் சூத்ரா (Second Sutra) ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகிறது, முதலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவைத் தொட்டால்தான் மேட்சிங் சாத்தியமாகும். கடந்த 6 மாதங்களாகத்தான் தளத்தில் விருப்பமான பாதுகாப்பு பரிசோதனை தாண்டி இருநபர்களும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், எங்களுக்கு தெரியாதது நிறையவே இருக்கலாம், இப்போது நடந்த திருமணங்களை பற்றிய தரவை சேகரிக்க தனி குழுவை உருவாக்கி உள்ளோம். தற்போது வாரந்தோறும் பேசுபவர்களின் 'விர்ச்சுவல் மீட்' அதிகரித்து வருகிறது . வெற்றிகரமான உரையாடல்கள் முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வார்கள் என்று நம்புகிறோம், அதற்கான பாதையை நாங்கள் வெற்றி கரமாக உருவாக்கிவிட்டோம்” ``மற்ற தளங்கள் சந்தா (Subscription) முறையில் இயங்கும்போது, உங்களுடைய தனித்துவமான வருவாய் மாடல் (Revenue Model) சந்தையில் எடுபடும் என்று எப்படி நம்பினீர்கள்?” ``பல தளங்களில் பணம் கட்டியும் பலனில்லை என்ற விரக்தி மக்களிடம் உள்ளது. இதை மாற்றவே செகண்ட் சூத்ரா(SecondSutra) நினைத்தது. * பயனடைந்தால் மட்டுமே கட்டணம்: நீங்கள் பணம் செலுத்தியும், ஒருவருடன் கூடப் பேசவில்லை என்றால் பணம் திரும்பத்தரப்படும் . * நிதானம்: இரண்டாம் திருமணத்தில் அவசரம் இருக்காது. அவர்கள் நிதானமாகத் துணையைத் தேர்ந்தெடுக்க இந்த முறை உதவுகிறது. தற்போது லாபத்தை விட, பயனர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து அவர்கள் வழியாக தெற்காசியா முழுதும் எங்கள் வணிகத்தை நிலை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள்.” மணம் ``புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, குறிப்பாகச் சவாலான துறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?” புதிய தொழில்முனைவோருக்கு எனது 3 P ஃபார்முலா: 1. Passion (ஆர்வம்): தீர்க்கப்போகும் பிரச்சனையின் மீது உங்களுக்குத் தீராத ஆர்வம் இருக்க வேண்டும். இல்லையெனில், சவால்கள் வரும்போது சோர்வடைந்து விடுவீர்கள். 2. Positioning (நிலைநிறுத்துதல்): சந்தையில் உங்கள் இடம் என்ன? போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் எப்படித் தனித்துத் தெரிகிறீர்கள் என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். 3. Pivot (திசை மாற்றுதல்): முதல் திட்டமே இறுதித் திட்டம் அல்ல. பயனாளர்களின் தேவைக்கேற்ப, உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.” உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? ``இரண்டாம் திருமணப் பிரிவினரின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் முழுமையான தளமாக செகண்ட் சூத்ரா (Second Sutra) வை மாறத் திட்டமிட்டுள்ளோம்: * குடும்பத்தினரிடம் பேசுவதற்கும், தயக்கங்களைப் போக்குவதற்கும் கவுன்சிலிங் வசதி. * விவாகரத்து பத்திரங்கள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்க வழக்கறிஞர்கள் உதவி. * முதல் திருமணக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் செட்டில்மென்ட் குறித்த ஆலோசனைகள். மேலும், சரிபார்க்கப்பட்ட பயனர்கள் நேரில் சந்தித்துப் பேசக்கூடிய பிரத்யேகமான சந்திப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யும் திட்டத்தில் உள்ளோம்.” (சாகசங்கள் தொடரும்) StartUp சாகசம் 47 : கிரிப்டோ, இன்னும் பல.! மதுரையிலிருந்து ஒரு பிளாக்செயின் நிறுவனம்! Blaze Web கதை

Foreign-ல இருந்து projects நிறைய கிடைக்கணுமா, இப்படி business பண்ணுங்க | M.K.Anand Explains

26 C