சென்னை மெட்ரோவுக்கு வரும் புதிய ரயில்கள்... டெண்டர் வெளியிட்ட நிர்வாகம்!
சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டரை சிஎம் ஆர் எல் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் ; பயணிகள் பலர் படுகாயம்
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு செஸ்கே புடெஜோவிஸ் (Česk Budějovice) நோக்கிப் பயணித்தது. பயணிகள் பலர் படுகாயம் அந்த ரயில் தனது இலக்குக்கு அருகில் சென்றபோது, அதே ரயில் மார்க்கத்தில் வந்த மற்றொரு ரயில் நேருக்கு நேர் மோதியது. இந்த திடீர் மோதலில் பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து […]
பிராட்வே-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் BRTS அமைப்பு- முன்னோட்ட பணிகள் தொடக்கம்!
சென்னையில் முக்கிய போக்குவரத்து வழித்தடமான பிராட்வே முதல் பூந்தமல்லி வரை விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் பிஆர்டிஎஸ் அமைப்பானது செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு உள்ளது.
விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்
விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். விண்வெளி பயணங்களில் அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள் (space debris) பிரச்சினையை தீர்க்க, ஜேர்மனியின் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் லியோனிடாஸ் அஸ்கியானாகிஸ் (Leonidas Askianakis) புதிய ஸ்டார்ட்அப் ஒன்றை தொடங்கியுள்ளார். அஸ்கியானாகிஸ் நிறுவிய Project-S நிறுவனம், பூமியைச் சுற்றி உள்ள 1 செ.மீ முதல் 10 செ.மீ அளவுள்ள சிறிய துண்டுகளை கண்டறிய உயர் உணர்திறன் கொண்ட ரேடார் மற்றும் தனித்துவமான அல்காரிதம் பயன்படுத்தும் […]
ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபா்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது அந்நாட்டு பிராந்திய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘ஈரான் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இந்தியா, பனாமா, செஷல்ஸ் போன்ற […]
ஹமாஸ் பயன்படுத்திய ரகசிய சுரங்கம் வெளிச்சம் ; இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியீடு
இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரின் உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ரஃபா பகுதிக்கும், பள்ளிவாசல் ஒன்றுக்கும் கீழ் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 7 கிலோமீற்றர் நீளமும் 25 மீற்றர் ஆழமும் கொண்ட இந்த சுரங்கம் 80 அறைகளையும் கொண்டது. ஹமாஸ் தளபதிகள் ஆயுதங்களை சேமிக்கவும், தாக்குதல்களை […]
தமிழ்நாடு தேர்தலில் திமுகவிடம் விசிக கேட்கும் தொகுதிகள்? திருமாவளவன் போடும் கணக்கு இதுதான்...
எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருமாவளவனின் விசிக கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து முக்கிய தகவலை விரிவாக காண்போம்.
நீதிமன்றில் வசமாக சிக்கிய பசில் ராஜபக்ச ; காட்டிக் கொடுத்த விமான டிக்கட்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறையில் முறைகேடான பணத்தைப் பயன்படுத்தி காணி கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்தன. வழக்கு விசாரணை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைத் தவிர, அவரது மனைவியின் சகோதரி அயூமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸா கலப்பத்தி மற்றும் முதிதா ஜெயக்கொடி […]
கரூர் துயரத்திற்கு பின்னர் நாளை மக்களை சந்திக்கும் விஜய் –எங்கே தெரியுமா?
தவெக தலைவர் விஜய், கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக நாளை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் தவெக தலைவர் விஜய், மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 2 மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கோண்டார். செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 […]
Aval Awards: என் கனவை அம்மா அனுமதிச்சதுக்கு நன்றி சொன்னா பத்தாது - சிவகார்த்திகேயன் எமோஷனல்!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் 'பெஸ்ட் மாம்' விருதைப் பெற்றார் நடிகர் சிவகார்த்திகேயனின் அம்மா ராஜி தாஸ். விருது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அம்மாவுக்கு கிடைத்த விருதுபற்றி பேசிய சிவகார்த்திகேயன், அப்பா இறக்கும்போது நான் ஃபர்ஸ்ட் இயர், அக்கா வந்து காலேஜ் செகண்ட் இயர். அதுக்கப்புறம் எல்லாருக்குமே ரெண்டு கேள்விதான் 'அடுத்து என்ன செய்யப் போறோம் லைஃப்ல'. Aval Awards அம்மா ஒன்னு மட்டும் தான் சொல்லிட்டே இருப்பாங்க படிச்சிடணும் படிச்சிடணும் நல்லா படிச்சிடணும் அப்படின்னு. சோ படிக்கணும்ங்கறது மட்டும் தான் மைண்ட்ல இருந்துட்டே இருந்துச்சு. ஆனா அதை தாண்டி எனக்கு ஒரு கனவு இருந்தது. என் கனவுக்கு அம்மா அனுமதிச்சதுக்கு நன்றி சொன்னா பத்தாது. அது கரெக்டா இருந்து அவங்களுக்கு ஏதாவது ஒரு மரியாதை செஞ்சிடனும்னு நினைச்சேன். அது இந்த மாதிரி ஒரு மேடையில இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. தேங்க்யூ விகடன் டீம். அதனாலதான் நான் நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன். நான் அம்மா செல்லம். அப்பாவும் அக்காவும்தான் க்ளோஸ். நமக்கெல்லாம் அப்பான்னா பயம். அம்மாவுடைய குணங்கள்தான் எனக்கு. Aval Awards அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு மேடை எவ்வளவு ஸ்பெஷலா இருக்கும்னு எனக்கு தெரியும். மதுரைக்கு பக்கத்துல பிரான்மலைன்னு ஒரு ஒரு கிராமத்துலதான் பிறந்து வளர்ந்தது அவங்க. அங்க இருந்து வேற வேற ஊர்கள்ல அப்பா கூட இருந்து, அதுக்கப்புறம் இப்ப இங்க சென்னைக்கு வந்து இதெல்லாம் பார்த்துட்டதுக்கு அப்புறம், எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு வேற எது எவ்வளவு சந்தோஷம் கொடுத்திருக்கும்னு தெரியல. இந்த விருது அவங்களுக்கு சந்தோஷம் கொடுத்திருக்கும்னு நினைக்கிறேன். இந்த பெயர் ரொம்ப நல்லா இருக்கு, பெஸ்ட் மாம் அப்படின்றத, தமிழ்ல சொல்லும்போது ரொம்ப நல்லா இருக்கு, சிறந்த அம்மா அப்படின்னு. அம்மான்னாலே சிறந்தவங்க தான். அதுல சிறந்த அம்மான்னும்போது அது ரொம்ப ஸ்பெஷல். எனப் பேசினார். மார்க்குக்காக கொஞ்சம் படிங்க, வாழ்க்கைக்காக நிறைய படிங்க - சிவகார்த்திகேயன் அட்வைஸ்!
இந்திய அரசியலமைப்பின் அதிகார பயணம்: ஒரு தேசத்தின் கனவுகளை செதுக்கிய புனித ஆவணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வேகம் பொங்கிப் பெருக்கும் காலத்தில், தேசிய உணர்வு தீப்பற்றி எரிந்த அந்த வரலாற்று தருணங்களில், இந்தியா புதிய வாழ்வை நோக்கிச் சென்றது. நூற்றாண்டுகளாக நீண்டுகொண்டிருந்த விடுதலைக்கான போராட்டம், ஒரு நவீன தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான அடிப்படைச் சட்டம்—ஒற்றுமையும் சமத்துவமும் நீதி நிறைந்த அரசியலமைப்பு - அவசியமாகுமென உணர்த்தியது. அதன் விளைவாக, 1946 டிசம்பர் மாதத்தில் அரசியல் நிர்ணய சபை எனும் வரலாற்றுச் சின்னமான அமைப்பு உருவானது. மூன்றாண்டுகளுக்கு அருகில் நீடித்த ஆழமான சிந்தனைகள், மாபெரும் விவாதங்கள், குடிமக்களின் எண்ணங்கள், தலைவர்களின் தத்துவங்கள் ஆகியவற்றின் கலவையால், உலகின் மிக நீளமான எழுத்துப்பூர்வ அரசியலமைப்பு வடிவெடுத்தது. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையின் தோற்றமும் தத்துவமும் கிரிப்ஸ் மிஷன் தோல்வியடைந்த பின்னர், இந்தியாவை சுதந்திரத்திற்கு வழிநடத்தும் பெரிய பொறுப்பு, 1946-இல் காபினட் மிஷன் திட்டத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் படி, இந்திய மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல்களின் மூலம், மாகாண சட்டசபைகள் அனைவரும் தங்கள் மக்கள்தொகையின் விகிதாசாரப்படி அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்தன. ஒவ்வொரு பத்து லட்ச மக்களுக்கும் ஒருவர் என்ற கணக்கில் அமைந்த இந்த அமைப்பு, பல்வகை இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை ஒரே மேடையில் கொண்டு வந்த உண்மையான ஜனநாயகக் குழுவாக இருந்தது. இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்தத் தத்துவச் சபை, மக்கள் ஆட்சியின் முதல் உயரிய வடிவமாக வரலாற்றில் நிலைபெற்றது. இதுவே பாகுபாடற்ற, அனைத்தையும் இணைக்கும் புதிய தேசக் கட்டுமானத்தின் முதல் எழுத்தாக மாறியது. இந்திய அரசியலமைப்பு முகப்புரை - இடது (1950), வலது (1976) சபையின் முதல் நாள்: புதிய காலத்தின் விடியல் 1946 டிசம்பர் 9 - இந்திய வரலாற்றின் பொற்குறியீட்டு நாள். அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தை டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தற்காலிகத் தலைவராக வழிநடத்தும்போது, இந்தியாவின் எதிர்காலம் புதிய பாதையில் முதல் அடியை எடுத்து வைக்கிறதென உணரப்பட்டது. சில நாட்களிலேயே டாக்டர் ராஜேந்திர பிரசாத் நிரந்தரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சபையின் கண்ணியத்தையும், செயற்பாட்டு வலிமையையும் உயர்த்தினார். அந்தக் கூட்டத் தொடரிலேயே, இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக விளங்கும் ஒரு வரலாற்றுச் சின்ன தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அது - குறிக்கோள் தீர்மானம் (Objective Resolution). குறிக்கோள் தீர்மானம்: புதிய இந்தியாவின் தத்துவ அறிவிப்பு ஜவஹர்லால் நேரு சபையின் முன் வாசித்த இந்தத் தீர்மானம், சுதந்திர இந்தியா எதற்காக உருவாகிறது, எந்த மதிப்புகளின் அடிப்படையில் இயங்கும், எந்த உயரிய இலக்குகளை நோக்கிச் செல்லும் என்பதற்கு தத்துவ ரீதியான விளக்கமாக இருந்தது. இந்தத் தீர்மானம் பின்னர் நமது அரசியலமைப்பின் இதயம் என விளங்கும் அறிமுகவுரையாக (Preamble) மாற்றப்பட்டு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற நான்கு தூண்களை நித்தியமாக உறுதி செய்தது. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று! - சிறப்பு பகிர்வு குழுக் கட்டமைப்பு: அரசியலமைப்பின் எலும்புக்கூடு 1947 ஜனவரியில், அரசியலமைப்பு எழுதும் பணிகளை துல்லியமாக நடத்த பல துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவைகள்: வழிப்படுத்தல் குழு சிறுபான்மை பிரச்சினைகள் குறித்த குழு மத்திய அரசின் அதிகாரப் பரப்பு ஆய்வு குழு குடியுரிமை, அடிப்படை உரிமைகள், மாநில உறவுகள் போன்ற பிரிவுகளுக்கு தனித்தனியாக நியமிக்கப்பட்ட குழுக்கள் இந்த குழுக்களின் பரந்த ஆய்வுகளும் பரிந்துரைகளும், அரசியலமைப்பின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அறிவார்ந்த அடித்தளமாக அமைந்தன. தேசியக் கொடியின் பிறப்பு 1947 ஜூலை 22 அன்று அரசியல் நிர்ணய சபை, சுயாட்சி இந்தியாவின் தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. குங்குமப்பொன், வெண்மையும், பச்சையும் கலந்த திரிவர்ணத்தில் சக்கரத்தின் சுழற்சி—சுதந்திரத்திற்குள் செல்லும் ஒரு தேசத்தின் நித்திய இயக்கத்தை குறித்தது. வரைவுக் குழு மற்றும் டாக்டர் அம்பேத்கர் 1947 ஆகஸ்ட் 29 அன்று, அரசியலமைப்பை வடிவமைக்கும் மாபெரும் பொறுப்பு வரைவுக் குழுவுக்கு வழங்கப்பட்டது. குழுவின் தலைவராக டாக்டர் பீம்ராவ் அம்பேத்கார் நியமிக்கப்பட்டார். அவரின் சட்ட அறிவு, மனித மரியாதையின் பால் தத்துவ நம்பிக்கை, பாகுபாடற்ற சிந்தனை - இவை அனைத்தும் இந்திய அரசியலமைப்பை உலகின் மிக நுணுக்கமான ஜனநாயக ஆவணமாக மாற்றின. அவருடன் பணியாற்றிய மனம் திறந்த அறிஞர்கள்: கே.எம். முன்ஷி, என். கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, முகம்மது சாதுல்லா உள்ளிட்டோர். இவர்கள் சேர்ந்து ஒரு தனித்துவமான சட்டப்பிரபஞ்சத்தை உருவாக்கினர். விவாதங்களின் பெருங்கடல் 1948 பிப்ரவரியில் வரைவு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதும், நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கருத்துகள் வந்தன. எட்டு மாதங்கள் அவை ஆராயப்பட்டன. 1948 நவம்பர் 4 முதல் நடந்த விவாதங்களில்: 7635 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன அவற்றில் 2473 மட்டுமே விவாதிக்கப்பட்டன மொழி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், நீதித்துறை சுதந்திரம், மொழி அடையாளம், போர்—சமாதான கொள்கைகள் போன்றவை தீவிரமாகப் பேசப்பட்டன இந்த விவாதங்கள் இந்திய ஜனநாயகத்தின் அறிவாற்றலையும், பட்டினச் சிந்தனையையும் உலகுக்கு நிரூபித்தன. Constitution Day Of India - அம்பேத்கர் உலகத்தின் சிறப்பம்சங்களின் சங்கமம் இந்திய அரசியலமைப்பு உலகின் பல முன்னேற்ற அரசியலமைப்புகளை தழுவிய ஒரு சங்கீதம் போன்றது: இங்கிலாந்து – நாடாளுமன்ற முறை, ஒற்றைக் குடியுரிமை அமெரிக்கா – அடிப்படை உரிமைகள், நீதி மறுஆய்வு அயர்லாந்து – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் கனடா – கூட்டாட்சி அமைப்பு பிரான்ஸ் – குடியரசுத் தன்மை மற்றும் சுதந்திரம்–சமத்துவம்–சகோதரத்துவம் இந்த உலக அனுபவங்களின் கலவை, இந்தியாவின் தனித்துவமான அரசியல் சூழலுக்குப் பொருத்தமாக மாற்றப்பட்டது. ஒப்புதல் நாள்: நவம்பர் 26, 1949 1949 நவம்பர் 26 அன்று, அரசியல் நிர்ணய சபை, அனைத்து வாசிப்புகளையும் முடித்து அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இந்தப் புனித நாள் இன்று அரசியலமைப்பு நாள் எனக் கொண்டாடப்படுகிறது. மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் கழித்து, இந்திய அரசியலமைப்பு தனது பூரண வடிவத்தை அடைந்தது. ஒரே வரைவு மட்டும் 114 நாட்கள் விவாதிக்கப்பட்டது என்பதே அதன் ஆழத்தைக் காட்டும் சான்று. இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950: புதிய யுகத்தின் விடியல் அந்த மாபெரும் நாளில், இந்திய அரசியலமைப்பு அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் இந்தியா: இறையாண்மை உடையது ஜனநாயகக் குடியரசு பல்பெரும் பண்பாட்டு தேசம் என்ற நிலையில் சட்டபூர்வமாக உலக மேடையில் தன்னை அறிவித்துக் கொண்டது. இந்திய அரசியலமைப்பு, மக்களின் ஆவியைப் பிறப்பித்த ஒரு “சமூக ஒப்பந்தம்”.ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் அல்ல—பல்வகைமைக்கு உறுதியான காவலர். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நான்கு நெறிகளை நம் வாழ்வின் நரம்புகளில் ஓடவைத்த ஆவணம். இது ஒரு சட்டப்புத்தகம் மட்டுமல்ல; இந்தியாவின் கனவுகளை ஒன்றாக சேர்த்த ஆவணம். இது ஒரு மக்களின் நம்பிக்கைகளையும், நெறிகளையும் பாதுகாக்கும் உறுதியான அடையாளம். இது ஒரு ஜனநாயகத்தின் வாழ்வையும் வளர்ச்சியையும். தொடர்ந்து ஒளிரச் செய்யும் நிலையான தீபம். இன்று வரை இந்த அரசியலமைப்பு, இந்தியாவின் அரசியல், சமூக, மானுட வாழ்வை வழிநடத்தும் நெறிப்பாலமாக, உலகிற்கே உதாரணமாக திகழ்கிறது. தேர்தல்
திருத்தணி தொகுதி: எல்லைகள் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளும் பெரிது!
திருத்தணி தொகுதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆந்திரா என பல எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி, பல தரப்பட்ட மக்களைக் கொண்டுள்ளது. கோடைக்கால குடிநீர் பஞ்சம், உப்பு நீர் பிரச்சனை என சவால்களும் இருக்கின்றன.
நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மீண்டும் பள்ளி மாணவா்கள் ஆயுதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனா். அந்த நாட்டின் நைஜா் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியான செயின்ட் மேரீஸ் பள்ளியை வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயுதக் குழுவினா் தாக்கி, பல மாணவா்கள் மற்றும் ஊழியா்களை கடத்திச் சென்றனா். அண்டை மாகாணமான கேபியில் 25 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சில நாள்களிக் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் மற்றும் கடத்தலுக்கு யாா் பொறுப்பு என்பது தெரியவில்லை. மேலும், […]
சபரிமலை சிறப்பு பேருந்துகள்: தமிழகத்தில் இருந்து இந்த 3 நாட்கள் கிடையாது! SETC அறிவிப்பு
சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சில நாட்கள் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aval Awards: நான் 15 ஆண்டுகளாக காட்டில் இருக்கிறேன் - விஷா கிஷோர் ஷேரிங்ஸ்!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பசுமைப்பெண் விருது பெற்றார் நடிகர் கிஷோரின் மனைவி விஷாலா கிஷோர். பசுமைப் பெண் - விஷாலா கிஷோர் விஷாலா , ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். நாமறிந்த நல்லதொரு நடிகர் கிஷோரின் மனைவி. கிஷோர், சினிமாவில் பிஸியாக, விஷாலா கழனி நோக்கி நடந்தார். பெங்களூருவை அடுத்த கரியப்பன தொட்டி கிராமத்தில் புதர்மண்டிக் கிடந்தது அவர்களது ஏழு ஏக்கர் நிலம். விஷாலாவின் கடும் முயற்சியால் தற்போது சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள் என அவ்விடத்தில் பசுமை பூத்துக் குலுங்குகிறது. வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் விலங்குகள் தொல்லை, சுரங்கத்தொழில் என பாதிக்கப்பட்டனர், அப்பகுதி பழங்குடி விவசாயிகள். அவள் விகடன் அதனால் மாற்றுத்தொழிலுக்குச் சென்ற நூற்றுக் கணக்கான பெண்களை ஒருங்கிணைத்தார் விஷாலா. `பஃபல்லோ பேக் கன்ஸ்யூமர்ஸ்' எனும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களுக்கு இயற்கை விவசாயம் கற்றுக்கொடுத்தார். இவரது வழிகாட்டலில், நிலமில்லாத ஏழைப் பெண் விவசாயிகளும், கூட்டுப் பண்ணை முறையில் குத்தகை நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினர். அவர்களது விளைபொருள்களுக்கு, பெங்களூருவிலுள்ள விஷாலாவின் வீடுதான் அங்காடி. அவங்க என்னை ஏற்றுக்கொண்டது, எனக்கு மிகப் பெரிய பாக்கியம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மருத்துவர் கு.சிவராமன் கைகளால் விருதுபெற்ற விஷாலா, இங்கே வந்த கலைஞர்கள், இலக்கியவாதிகள், இசைக்கலைஞர்கள் எல்லோரும் தான் இந்த உலகத்தை அழகாக்குகிறார்கள். ஆனால் நான் மற்றொரு வித்தியாசமான உலகுடன் தொடர்பில் உள்ளேன். நான் காட்டில் வசிக்கிறேன். இன்று காலை கூட ஒரு யானை வந்ததால் 5 நிமிடம் நின்றுதான் நாங்கள் வரவேண்டியிருந்தது. செடி, கொடிகளோடு மக்கள் இணையும் இடத்தில்தான் என் இதயம் இருக்கிறது. நான் 15, 20 வருடமா காட்டில் வாழ்கிறேன். என்னைக் கண்டுபிடித்து அங்கீகரித்த விகடனுக்கு நன்றி. விஷாலா கிஷோர் பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் விகடனுக்கு ஒரு கலாச்சார முக்கியத்துவம் இருக்கிறது. என்னுடன் கீதா, லதா என்ற இரண்டு உழவர்கள் வந்திருக்கின்றனர் (அவர்களை மேடைக்கு அழைத்தார்). நாங்கள் வசிக்கும் இடம் பெங்களூரில் இருந்து 30 கிலோமீட்டர்தான். ஆனால் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என்பதனால் சாதாரண கிராமங்களில் நடக்கும் உட்கட்டமைப்பு முன்னேற்றம் எதுவும் இங்கே இருக்காது. ரோடு கிடையாது, ட்ரான்ஸ்போர்ட் கிடையாது. ஆனாலும் வெளியில் இருந்து பிடிவாதமாக கடினமா உழைச்சு அவங்க குடும்பத்துக்கு, கிராமத்துக்கு நல்ல உணவு கிடைக்கத் தேவையான பல பொருட்களை மேல கொண்டு சேர்த்திருக்காங்க. இப்ப அவங்க என்னை ஏற்றுக்கொண்டது, நான் நல்ல விஷயம் செய்றேன்னு நம்புவது எனக்கு மிகப் பெரிய பாக்கியம். அவங்ககிட்ட இருந்துதான் நான் கத்துகிட்டேன். இந்த அங்கீகாரத்துக்கு நன்றி விகடன் எனப் பேசினார். 1000 அடி உயரத்தில் வசிக்கும் பறவை; 'அண்ணாமலையார்' மலைக்கு வந்த அதிசயம்!
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை..அதிர்வலைகளை ஏற்படுத்திய பாகிஸ்தான் கருத்து!
ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்து உள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரடி தாக்குதல் ; பலர் காயம்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெல்லா கூலா பகுதியில் இடம்பெற்ற கரடி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் ஏழு பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றுள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு காடு மற்றும் நதி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். விசாரணை மற்றும் சூழ்நிலை […]
மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அறிவுறுத்தல் இதன்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மின்னல் ஏற்படும்போது, வீட்டிற்குள் இருக்குமாறும், மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இடியுடன் கூடிய மழைபெய்யும் போது வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த […]
’’நள்ளிரவில் கேட்ட பெண்ணின் குரல்..’’வைரலாகும் வீடியோ - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் கூச்சலிட்டி உதவிக் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்ணென்று கொட்டு முரசே! - அணிவகுத்த ஆளுமைகள்.. களைகட்டிய விழா மேடை... அவள் விகடன் விருதுகள் | Album
பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் திடீர் தீ விபத்து
பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமேசன் பகுதியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, நவ.10 முதல் 21 வரை நடக்கிறது. இந்த காலநிலை மாற்ற உச்சிமாநாடு பிரேசிலின் பெலேம் நகரில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநாடு நிறைவடைய ஒரு நாள் […]
துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை
மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாவது அமர்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது மற்றும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன் வைத்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை முழுவதும் இன்று குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர் பகுதிகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை அழிக்கின்றன. மின் குமிழ்களை திருடிச் செல்கின்றன, சி. சி. டிவி கமராக்களை உடைக்கின்றன, பிரதேச சபையினால் போடப்பட்ட மின் குமிழ்களை எடுத்துச் செல்கின்றன. தொலைத்தொடர்பு இணைப்புக்களை துண்டிக்கின்றன. பலன் தரும் மா, தென்னை மரங்களை அழிக்கின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான சொத்தழிவுகள் ஏற்படுகிறது. அத்தோடு பல கிராமங்களில் பொதுமக்களை குரங்குகள் கடித்துள்ளன. குரங்கு கடியால் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.இன் நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு வாய்ந்த பிரதேச சபை என்ற வகையில் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது எமது கடமையாக உள்ளது.
நாட்டை விட்டு வெளியேற நீதிமன்ற தடை அமுலில் உள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் அவர் சென்னை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமானும் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
NEET PG 2025 Round 1 Counselling Results Released
The Medical Counselling Committee (MCC) has released the provisional results for Round 1 of PG Counselling 2025. 26,889 candidates have
திருவாரூர்-காரைக்குடி ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் எப்போது நிறைவடையும்? வெளியான தகவல்!
திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை ரயில் பாதையை மின் மயமாக்கும் திட்டம் எப்போது நிறைவடையும் என்று பொதுமக்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிலங்கையில் வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். கணேதென்ன சந்தியிலிருந்து கடுகண்ணாவ வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை-கலகெதர வழியாக கண்டி நோக்கிச் செல்ல வேண்டும் என்றும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்த மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டும் என்றும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
டெல்டா வெதர்மேன் கொடுத்த வார்னிங்... 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! புயல் உருவாகுமா?
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு 24ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் எச்சரித்துள்ளார்.
Perseverance Rover May Have Found Mars Meteorite
NASA’s Perseverance rover has found an unusual rock on Mars that is rich in iron and nickel. Scientists think it
OnePlus Teases New Watch Before Watch 4
On OnePlus’s websites in the UK and EU, the company is giving hints about a new smartwatch called the “OnePlus
கடுகண்ணாவ மண்சரிவு ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, காயமடைந்த நான்கு பேர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகள் கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் […]
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்படுமா?
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய சுங்கச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்படுமா? என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைதுறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Aval Awards: இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்க - ரோஜா நெகிழ்ச்சி!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் வைரல் ஸ்டார் விருதைப் பெற்றார் இனியா ராஜகுமாரன். யார் இந்த இனியா ராஜகுமாரன்? தமிழ்நாட்டின் சமீபத்திய செல்லக் குரல்... இனியா ராஜகுமாரன். Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளரான இந்தக் கல்லூரி மாணவி, நடிகை தேவயானி - இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகள். பெற்றோரின் புகழை தனது விசிட்டிங் கார்டு ஆக்க விரும்பாத செல்ஃப் மேடு டேலன்ட். கர்னாடக சங்கீதம், கீ போர்டு, பியானோ, பரதம், சிலம்பம், சுருள் வாள் வீச்சு, கத்திச் சண்டை, நெருப்புப் பந்தம் என இவர் கற்றுள்ள கலைகள் பல. இனியா ராஜகுமாரன் போட்டி மேடையில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடலை குயில்போல பாடியவரை, தமிழ் மக்கள் தங்கள் வீட்டு இசை மகளாக வாரியணைத்துக் கொண்டனர். சிறப்பான பாடல் தேர்வு, எளிமையான ஆடைகள், பாந்தமான பேச்சு என ஒவ்வொரு சுற்றிலும் மில்லியன் வியூவ்ஸ்களை அள்ளினார். போட்டியாளர் இனியா, பாடகி இனியாவாக ஒளிரத் தொடங்கினார். நான் கோலங்கள் சீரியல்போதுதான் பிறந்தேன் அரசியல்வாதியும் நடிகையுமான ரோஜா கையில் விருதுபெற்ற இனியா ராஜகுமாரன், ரோஜா ஒரு பவர்ஃபுல்லான வுமன். அவங்க கிட்ட இருந்து அவார்ட் வாங்கினதில் ரொம்ப ஹேப்பி. விகடனுக்கும் எங்க குடும்பத்துக்கு நீண்டநாள் தொடர்பு இருக்கு. நான் கோலங்கள் சீரியல்போதுதான் பிறந்தேன். அந்த சீரியலைத் தயாரித்தது விகடன். ரியாலிட்டி ஷோ முடிச்சிட்டு வந்து முதல் விருது வாங்குறேன். மென்மேலும் பெருமைப் படுற அளவுக்கு முன்னேறுவேன் எனப் பேசினார். தேவயாணி, இனியா, ரோஜா இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்க இனியாவுக்கு விருது கொடுத்தது குறித்து பேசிய ரோஜா, எனக்கு இனியாவ பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா என்னோட பொண்ணு, தேவயானி பொண்ணுங்க, மீனாவுடைய பொண்ணு, நம்ம ரம்பா எல்லாரோட பசங்க குட்டி வயசுல பர்த்டேஸ்ல நாங்க மீட் பண்ணுவது உண்டு. திடீர்னு பார்த்தா வைரல் ஸ்டார் நீங்க அவார்ட் கொடுக்கணும்னு நீங்க சொன்னதும் நான் ஷாக். இவ்வளவு வளர்ந்துட்டாங்களான்னு. ஏன்னா தேவயானி ஒரு ஆர்ட்டிஸ்ட், ஹீரோயின். அவங்க ஹஸ்பண்ட் வந்து டைரக்டர். சோ இவங்க ஒரு டைரக்டரா ஒரு ஹீரோயினா ஆவாங்கன்னு நினைச்சேன். திடீர்னு பார்த்தா ஒரு புது இது சிங்கர் ஆயிட்டாங்க. அதும் அந்த சாங், பவதாரணி சாங் 'மயில் போல ஒரு பொண்ணு' அந்த சாங் பாடும்போது வைரல் ஆயிட்டாங்க தமிழ்நாட்டுக்குள்ள. ஏன் அந்த சாங், அந்த வாய்ஸ் எனக்கு பிடிக்கும்னா, என்னுடைய சூப்பர் ஹிட் சாங் மஸ்தான மஸ்தான பாடினது பவதாரணிதான். சோ, அவங்க இல்லங்கிற குறை இனிமே இல்லை. இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன். அண்ட் தேவயானி மாதிரி, ராஜ்குமார் மாதிரி, இனியா கூட இன்ண்டஸ்ட்ரில ஒரு ரவுண்ட் வரணும்னு நான் பிளஸ் பண்ணி இருக்கேன். `அதிசயக் குழந்தைக்கு' கித்தார் பரிசளித்த அமித் ஷா - யார் இந்த 7 வயது எஸ்தர்?
Easy Cauliflower and Broccoli Cheese Recipe
This cauliflower and broccoli cheese is an easy, meat-free meal that tastes delicious. You can use any type of cheese
சேலம் ஈரோடு இடையே புதிய மெமு ரயில்... மக்கள் மகிழ்ச்சி!
சேலம் ஈரோடு இடையே புதிய மெமு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .
‘கேப்டன் ஆனார் சஞ்சு சாம்சன்’.. அணி நிர்வாகம் அறிவிப்பு: எப்போது முதல்? முழு அட்டவண இதோ!
சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், கேரள அணியை வழிநடத்த உள்ளார். இத்தொடரில், கேரள அணி எந்த குரூப்பில் இடம்பெற்றுள்ளது? போட்டி எப்போது இருந்து? விபரம் இதோ!
Creamy Roasted Butternut Squash Soup Recipe
This butternut squash soup is flavoured with red pepper and ginger and blended until smooth and silky. Roasting the squash
Creamy Roasted Butternut Squash Soup Recipe
This butternut squash soup is flavoured with red pepper and ginger and blended until smooth and silky. Roasting the squash
தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ; ஈரான் சவுதி அரேபியாவிடம் விடுத்துள்ள கோரிக்கை
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு ஈரான் சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கு ஒரு நாள் முன்பு, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில், ஈரான் மோதலை நாடவில்லை என்றும் நாட்டின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் அணுசக்தி தகராறை தீர்க்கத் தயாராக […]
5 Early Signs of Stomach Cancer to Watch
Stomach cancer is a dangerous growth that starts in the stomach lining, usually caused by changes in DNA that make
Washington Man First Human Death from Rare Bird Flu
A man in Washington State is believed to be the first person to die from a rare type of bird
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், பிளேயிங் 11-ல் 2 இடங்கள் காலியாக இருக்கிறது. அந்த இடங்களுக்கு யார் யாரை வாங்க வேண்டும் என்பது குறித்து, சிஎஸ்கே முடிவு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2.5 ஆண்டுகள் ஆகிய நிலையில் அந்த அரசு செய்த 4 முக்கிய ஸ்கேம் மற்றும் முறைகேடுகள் குறித்து பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகும் சென்யார் புயல் – தமிழகத்திற்கு ஆபத்தா? மழை எப்படி இருக்கும்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள சென்யார் புயல் தமிழகத்தை நிச்சயம் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
Aval Awards 2024: நாம் போராடி பெற்ற சட்டங்களை ரத்து செய்துவிட்டனர் - கீதா ராமகிருஷ்ணன் வேதனை!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அவள் ஆளுமை விருதுபெற்றார் கீதா ராமகிருஷ்ணன். யார் இந்த கீதா ராமகிருஷ்ணன்? அரசால் மறக்கப்படுகிற, ஆதிக்கத்தால் அடக்கப்படுகிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தீப்பந்த வழிகாட்டி, கீதா ராமகிருஷ்ணன். கட்டுமானத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான முழக்கங்களை தன் சகாக்களுடன் இணைந்து மத்திய, மாநில அரசுகளின் செவிப்பறைகள் அதிர எழுப்பியவர். கீதா ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டில் 1970-களின் பிற்பகுதியில் இவர்கள் முன்னெடுத்த போராட்டங்களால், மாநில அளவிலான கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. அது, 1996-ல் தேசிய அளவிலான சட்டம் இயற்றப்படக் காரணமாக அமைந்தது. இவற்றுக்கெல்லாம் கருவியாக முன்னின்று போராடியவர், கீதா ராமகிருஷ்ணன். அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக வித்திட்டார். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை, குடிசைப் பகுதி மக்களுக்கான பட்டா உரிமை, பெண்கள் பாதுகாப்பு என... இவர்களது இருட்டையெல்லாம் எரிக்க நாட்டின் எந்த மூலையிலும் தினம் தினம் உதித்துக் கொண்டிருக்கும் நெருப்புப் புயல். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சமூக செயற்பாட்டாளர்கள் மன்மோகி, கீதா இழங்கோவன், அருண் மொழி ஆகியோர் கைகளால் விருதுபெற்றார் கீதா ராமகிருஷ்ணன். Aval Awards விருதுபெற்ற கீதா ராமகிருஷ்ணன், விருது பெறும் இந்த வேளையில் நாங்கள் எல்லோரும் கடுமையான வருத்தத்தில் இருக்கிறோம். நேற்றிலிருந்து ஒன்றிய அரசு தொகுப்பு சட்டங்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். ஆனால் இதன் மூலம் நாம் போராடி பெற்ற சட்டங்களை ரத்து செய்துள்ளனர். 44 சட்டங்களை ரத்து செய்துள்ளனர். இதில் நாம் போராடி பெற்ற கட்டட தொழிலாளர் சட்டமும் ஒன்று. கட்டட தொழிலாளர் சட்டத்தின் மூலம்தான் எல்லா மாநிலத்திலும் தொழிலாளர் நல வாரியங்களை அமைக்க முடிந்தது. தொழிலாளர் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை ரத்து செய்துள்ளனர். முத்தரப்பு மாநாட்டைக் கூட்டாமல் இவர்களாக சட்டத்தை அமுல்படுத்தியிருப்பது கேள்விகளை எழுப்புகிறது. தமிழ்நாட்டில்தான் தொழிலாளர்களுக்காக 20க்கும் மேலான நலவாரியங்கள் இருக்கிறது. இவற்றின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. இதை எதிர்த்து போராட வேண்டிய சூழலில் நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் உள்ளனர். Aval Awards Working Hours: இந்தியர்கள் சோம்பேறிகளா, சுரண்டப்படுபவர்களா? - ஓர் அலசல்!
Mask Explores Morality but Lacks Depth, Substance
In today’s world, is there still such a thing as absolute right and wrong? Maybe that’s why, in a world
Aval Awards 2024: நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுவிட்டது - இலக்கிய ஆளுமை அமரந்தா பேச்சு!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அவள் இலக்கிய வல்லமை விருது பெற்றார் எழுத்தாளர் அமரந்தா. யார் இந்த அமரந்தா? தமிழ் இலக்கியச் சூழலில் ப டைப்பாளர், மொழி பெயர்ப்பாளர், ஆய்வாளர் எனப் பல முகங்களுடன் இயங்குகிறவர், அமரந்தா. தனிமையிலிருந்து விடுபட எழுத ஆரம்பித்ததாகக் கூறுபவர். இவரின் முதல் படைப்பான ‘சுற்றத்தார்’, தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. தனது கிணற்றுத் தவளை மனநிலையை உடைக்க எண்ணி, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தார். அதில் முன்னோடியாகவும், தனிச் சுடராகவும் ஒளிர்ந்தார்; நவீன இலக்கியத்துக்குப் புதிய சாளரத்தைத் திறந்துவிட்டார். Amarandha வங்காள எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவி எழுதிய, பழங்குடிப் பெண்களின் வலிகளைத் தாங்கிய சிறுகதைகளை, தனது குருதிப்புனல் எழுத்துகளில் மொழிபெயர்த்தார் அமரந்தா. பெண்ணியம் சார்ந்த இவரின் படைப்புகள், மொத்த சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன. கதைகளில் புனைவையும் வாழ்வையும் இணைக்கும் நுட்பம், மொழிபெயர்ப்புகளில் சரளமான வாசிப்பின் சாத்தியம், கட்டுரைகளில் வரலாற்று தரவுகள் எனப் படைக்கும் நேர்த்தியாளர். Aval Awards 2024 திராவிடர் கழக தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் கைகளால் விருதுபெற்ற அமரந்தா, விகடன் எப்படி என்னைக் கண்டுபிடித்தது என்று தெரியாது. ஆனால் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீதா அவர்கள் சொன்ன மாதிரி நானும் ஒரு கடுமையான ஒரு மனவருத்தத்தோடு தான் இங்கு இருக்கேன். Aval Awards உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும், செய்தித்தாளில் பார்த்திருப்பீங்க, அரும்பாடுபட்டு ஒரு புதிய ஜனநாயக முறையை ஹூகோ சாவேஸ் அவர்கள் வெனிசுலாவில் தோற்றுவித்தார். நாடாளுமன்ற ஜனநாயகம் முழுவதும் தோற்றுப் போய்விட்டது என்பது நமக்கு எல்லாம் தெரியும். அவர் பார்டிசிபேட்டரி டெமாக்ரசி என்ற புதிய ஒரு மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்தை அந்த நாட்டில் புகுத்தி வெற்றிகரமாக பல ஆண்டுகள் செய்து காட்டினார். ஆனால் இப்பொழுது வட அமெரிக்கா வெனிசுலாவை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. என்ன நடக்கும் என்பது இன்னும் சில நாட்களில் சில வாரங்களில் நமக்கு தெரிய வரும். பல போர்களுக்கு வட அமெரிக்கா தான் காரணம் என்பது நம்மில் எல்லோருக்குமே தெரியும். அந்த வருத்தத்தோடு தான் நான் இங்கு நிற்கிறேன். கூடவே அவள் விகடன் விருதுக்காக என்னுடைய மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். எனப் பேசினார். Aval Vikatan Awards: ``கோலங்கள் சீரியல் அப்போதான் நான் பிறந்தேன்'' - `வைரல் ஸ்டார்' இனியா ராஜகுமாரன்
முட்டை களவாடியவர் போதைப்பொருளுடன் கைது ; மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான முட்டைகள்
சிறிது காலமாக முட்டை திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப் பழக்கம் முன்னதாக, வெலிவேரிய நகரில் உள்ள ஒரு முட்டை விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து முட்டைகள் திருடப்பட்டதாக வெலிவேரிய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில், சிசிடிவி காட்சிகள் சோதனை செய்யப்பட்டன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் […]
Thalapathy Vijay Prepares for Politics, Last Film Release
Thalapathy Vijay is now fully focused on politics. He is actively preparing his political party, the Tamilaga Vetri Kazhagam, for
மோசமாக நடத்தப்படுவதால் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த மருத்துவர்கள்
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாக பிரித்தானிய அரசு மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த மருத்துவர்கள் 2024ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் பணியாற்றிவந்த புலம்பெயர் பின்னணி கொண்ட மருத்துவர்களில் 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக பொது மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. அப்படி பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். புலம்பெயர்ந்தோர் என்பதற்காக மோசமாக […]
மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர்
நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில் இருந்து சென்னை சென்ற அவயவங்களை இழந்த குழுவினர்களுக்கான மாற்று அவயவங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக இன்றைய தினம் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளனர். யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில், கனடா வாழ் மக்களின் பங்களிப்புடன் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த இரண்டாவது தொகுதியினர் […]
இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தங்கள்: போராட்டத்திற்கு அழைப்பு!
இந்தியாவில் உள்ள பத்து தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதைக் கண்டித்துள்ளன. நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிராக செய்யப்படும் ஏமாற்று மோசடி என்று குறிப்பிட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுத் தளம் என்று அழைக்கப்படும் தொழிற்சங்கங்களின் கூட்டணி, நவம்பர் 26 அன்று நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து இன்று வெள்ளிக்கிழமை இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு தொழிலாளர் குறியீடுகளை அமல்படுத்தியது. ஊதியக் குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, சமூகப் பாதுகாப்பு குறியீடு மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளன. அரசாங்கம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியுடன் தொடர்புடைய பணி விதிமுறைகளை எளிமைப்படுத்த முயல்கிறத. அதே நேரத்தில் முதலீட்டிற்கான நிலைமைகளை எளிதாக்கவும் முயல்கிறது. சீர்திருத்தங்கள் தொழிலாளர் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் அது கூறுகிறது. தொழிலாளர் விதிமுறைகளை நவீனமயமாக்குவதன் மூலமும், தொழிலாளர் நலனை மேம்படுத்துவதன் மூலமும், வளர்ந்து வரும் வேலை உலகத்துடன் தொழிலாளர் சுற்றுச்சூழல் அமைப்பை இணைப்பதன் மூலமும், இந்த மைல்கல் நடவடிக்கை எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்களை இயக்கும் வலுவான, மீள்தன்மை கொண்ட தொழில்களுக்கு அடித்தளம் அமைக்கிறது என்று தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கும் உற்பத்தித் துறையில் , குறிப்பாக, இந்தியா தனது தொழிலாளர் விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வணிகங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன . இதற்கிடையில், புதிய விதிகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான செலவுகளை கணிசமாக அதிகரிக்கும் என்று இந்திய தொழில்முனைவோர் சங்கம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது. இந்தக் குழு புது தில்லியிலிருந்து இடைக்கால ஆதரவைக் கோரியது.
Madras HC Reviews CBI Probe Against Chef Rangaraj
The Madras High Court recently reviewed a petition requesting a CBI and CID investigation into popular Coimbatore chef Madhampatty Rangaraj.
யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டெங்கு கட்டுப்படுத்தல் விசேட முன்னாயத்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் டெங்கு தாக்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சடுதியான அதிகரிப்பை காட்டுகிறது. இந்த அதிகாரிப்பை நாம் சாதாரண அதிகரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனெனில் 2023 ல் யாழ் மாவட்டத்தில் சுமார் 3986 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 10 இறப்புக்கள் பதிவாகியது. அதேபோல் 2024 ஆம் ஆண்டு சுமார் 5000 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் 60 இறப்புக்கள் பதிவாகியது. இவ் வருடம் 2025 நவம்பர் மாத தொடக்கத்தில் 22 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாதம் முடிவுறாத நிலையில் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் தற்போது 171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 22 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலகப் பிரிவில் 10 பேர் இனங்காணப்பட்ட நிலையில் தற்போது 80 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ள நிலையில் அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட செயலர், யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இதுவரை இறப்புகள் பதிவாகவில்லை. டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் கழிவுகளை அகற்றும் போது தரம் பிரித்து உரிய முறையில் அகற்ற வேண்டும் . அதேபோல் உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தரம் பிரிக்காத கழிவுகளை எடுத்துச் செல்வதை தவிர்ப்பதோடு உரியவர்களே தரம் பிரித்து தருமாறு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் . யாழ் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறித்த கலந்துரையாடலில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் சமன்பத்திரன , பிரதேச செயலாளர்கள் , உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
நைஜீரியா பள்ளி மாணவர்களின் கடத்தல் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்தது!
நைஜீரியப் பள்ளிக் கடத்தலில் ஒரு வாரத்திற்குள் 315 மாணவர்களும் ஆசிரியர்களும் கடத்தப்பட்டதாக ஒரு கிறிஸ்தவக் குழு இப்போது கூறுகிறது. இக் கடத்தல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இன்று சனிக்கிழமை முந்தைய நாள் பள்ளி கடத்தலில் இருந்து புதிய கணக்கை வெளியிட்டது. இறுதியில் 315 மாணவர்களும் ஆசிரியர்களும் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் கடத்தப்பட்டதாகக் நைஜீரியா கிறிஸ்தவ சங்கம் (CAN) கூறியது. முன்னைய செய்திகள் 215 பள்ளி மாணவர்களை எனக் குறிப்பிட்டன. நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் இணை கல்விப் பள்ளியில் நடந்த சம்பவம், அண்டை நாடான கெப்பி மாநிலத்தில் திங்களன்று மற்றொரு தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது, அங்கு ஒரு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 25 சிறுமிகள் கடத்தப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் ஒரு தசாப்தத்திற்கு முன்னர், சிபோக் நகரில் கிட்டத்தட்ட 300 சிறுமிகள் போகோ ஹராம் குழுவைச் சேர்ந்த ஜிஹாதிகளால் கடத்தப்பட்ட அதே அளவில் உள்ளது. அந்தப் பெண்களில் சிலர் இன்னும் காணவில்லை.
SMAT 2025 : ரஹானே இருந்தும் மும்பைக்கு கேப்டனாகும் ஷர்துல் தாகூர்!
மும்பை : சையது முஷ்டாக் அலி டிராபி (SMAT) 2025-க்கான மும்பை அணியின் கேப்டனாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் அஜிங்க்யா ரஹானே, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே போன்ற மூத்த மற்றும் இந்திய அணி வீரர்கள் இருந்தாலும், ஷர்துலுக்கே கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் ஷ்ரேயஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் அடைந்து இந்த ஆண்டு […]
Lithuanian Fighter’s Story Wins Critics’ Pick at PÖFF
A canceled Lithuanian martial arts champion finds shelter in a Taiwanese family’s restaurant while trying to rebuild his life in
AUS vs ENG Test: ‘பேஸ் பால் ஆடிக் காட்டிய ஆஸி’.. முன்னிலை பெற்றும் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பின்னடைவை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்து, பேஸ் பால் ஆடி அபார வெற்றியைப் பெற்று, இங்கிலாந்தை படுதோல்வியை சந்திக்க வைத்தனர்.
வந்தே பாரத் ஸ்லீப்பர்.. ரயில்வே அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்!
இந்திய ரயில்வே, புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரயிலில் ஏசி 3 டயர், 2 டயர் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் பெட்டிகள் உள்ளன.
தூத்துக்குடி தவெகவினரால் கடுப்பான விஜய்.. சேலத்தில் மக்கள் சந்திப்புக்கு இதுதான் காரணமா?
தூத்துக்குடி தவெக நிர்வாகிகளால் தான் விஜய் கடுப்பாகி, சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விரிவாக காண்போம்.
மண்சரிவு உயிாிழப்பு அதிகாிப்பு
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த… The post மண்சரிவு உயிாிழப்பு அதிகாிப்பு appeared first on Global Tamil News .
கடுகண்ணாவையில் பாரிய மண்சரிவு ; மண்ணுக்குள் அகப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்களும் கடையில் இருந்தவர்களும் பாறைக்கு அடியில் சிக்கிய நிலையில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் மண்சரிவில் சிக்கியுள்ள ஏனையவர்களையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பாரிய கல்லுடன் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர்
நவீன தொழில் நுட்பத்தினூடாக தயாரிக்கப்பட்ட மாற்று அவயவங்களை பொருத்திக் கொள்வதற்காக கடந்த 28 ஆம் திகதி யாழில்… The post மாற்று அவயங்களை பொருத்த சென்னை சென்றவர்கள் நாடு திரும்பினர் appeared first on Global Tamil News .
மதுரை மீனாட்சி அம்மனை தாிசனம் செய்த ரணில்
இந்தியாவிற்கு சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன்… The post மதுரை மீனாட்சி அம்மனை தாிசனம் செய்த ரணில் appeared first on Global Tamil News .
Ashes: டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம்!; 104 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளில் முடிந்தப் போட்டி!
104 வருடங்களுக்குப் பிறகு ஆஷஸ் போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 74-வது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் பெர்த் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்காமல் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். Australia vs England - Ashes அதிகபட்சமாக, ஆலி போப் 46 ரன்களும், ஹாரி ப்ரூக் 52 ரன்களும் எடுத்திருந்தார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து அணி. 13 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தினார். பிறகு பேட்டிங்கிற்கு வந்த ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 123 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது. முதல் நாளில் மொத்தமாக 19 விக்கெட்டுகள் விழுந்தன. இத்தனை வருட ஆஷஸ் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் நாளில் 19 விக்கெட்கள் விழுவது இது முதல் முறை. இரண்டாவது நாளில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்கள் அடித்திருந்தார். அதிரடியாக பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸிற்கு பேட்டிங் வந்த இங்கிலாந்து அணியின் பேட்டர்களுக்கு சறுக்கலே தொடர்ந்தது. அடுத்தடுத்து பேட்டர்கள் ஆட்டமிழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். Australia vs England - Ashes பிறகு 205 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்டர்கள் 28 ஓவரிலேயே டார்கெட்டை எட்டி வெற்றியைத் தொட்டனர். ஓப்பனிங் வந்த டிராவிஸ் ஹெட் 123 ரன்களும், லபுஷேன் 51 ரன்களும் அடித்து இரண்டாவது நாளிலேயே போட்டியை முடித்து வைத்தனர். 69 பந்துகளில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆஷஸ் வரலாற்றில் அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.பாஸ்ட் பவுலர்களுக்கு இந்த பிட்ச் சாதகமாக அமைய இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி அதை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. இந்தப் போட்டியில், ஸ்டார்க் மட்டும் மொத்தமாக 10 விக்கெட்களை எடுத்திருக்கிறார்.
Priyanka Chopra Sees Parallels in Born Hungry
Priyanka Chopra said that working as a producer on Born Hungry reminded her of her own life living between different
Ray Dalio Warns of AI Stock Market Bubble
Nvidia’s huge earnings have sparked a big rally in AI stocks. But billionaire investor Ray Dalio says the excitement is
தாராவியில் தீ விபத்து.. ரயில் நிலையம் அருகே ஏற்பட்டதால் நீடிக்கும் பதற்றம்!
மும்பை தாராவியில் மஹிம் ரயில் நிலையம் அருகே இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ரயில் பாதைகளுக்கு அருகில் தீ பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களைத் தொடர்ந்து வெளியேற்றும் அமேசான்.. 1,800 பொறியாளர்கள் பாதிப்பு!
அமேசான் நிறுவனத்தில் பணி நீக்கங்கள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது 1,800 பொறியாளர்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர்.
GST Can Temporarily Freeze Accounts in Serious Cases
The GST department has strong powers to enforce tax laws, including the ability to temporarily freeze the bank accounts of
நாளை இந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : நேற்று (21-11-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (22-11-2025) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் […]
திருகோணமலையில் சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது. சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளங்களோடு மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இதன்போது மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ் பெற்றோர் கௌரவிப்பில் மாவீரர்களின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில்
இந்தியாவின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட ரணில், தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் அவர் சென்னை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
19 வயது இளைஞனின் உயிரை பறித்த கார்
சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – ஹபரண வீதியில் திகம்பதஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபரண நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை அதேநேரம், பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு எதிர் திசையில் வந்த கார் குறித்த நபர் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் மற்றும் மோட்டார் […]
வீட்டின் மேல் சரிந்து விழுந்த மண்மேடு ; உடமைகள் சேதம்
திம்புலபத்தனை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடொன்று சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக குறித்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. படுக்கையறை சேதம் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாக சேதம் அடைந்துள்ளது. மேலும் வீட்டின் மற்ற சுவர்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், வீட்டில் வசிக்கும் 05 பேரை உறவினர் […]
தமிழகத்தில் 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடங்கிய நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், இதுவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 22, 2025) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மொத்தம் 6,41,14,582 வாக்காளர்களில் 6,14,07,805 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்டவை) […]
மாவீரர் நாளையொட்டி எழுச்சிக் கோலத்தில் கோம்பாவில் பிரதேசம்!
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் உள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும், கோம்பாவில் மக்கள், இளைஞர்கள் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது.
கடுகண்ணாவ மண்சரிவு ; பெண் ஒருவர் உயிருடன் மீட்பு
கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் பலி ஏலவே இந்த விபத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் பல வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன. இந்த நிலையில், மேலும் நால்வர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]
யாழில். கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான் குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் (வயது17) என்ற சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணை காவல் பணிக்காக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு சென்ற சிறுவன் காலையில் கரை திரும்பாத நிலையில் காணாமல் போயிருந்தார். சிறுவனை தேடி அப்பகுதி மக்களால் தேடுதலை மேற்கொண்டனர்.இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ,யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டெல்லியின் காற்று மாசுபாடு: GRAP திட்டத்தின் நிலையில் திடீர் மாற்றம் ஏன்?
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் GRAP திட்டத்தின் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பான்மையுடன் ஆபீஸில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வீட்டில் வேலை செய்யப் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணமென கணவர் புகார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாகிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப்பணியில் இருந்தார். அதில் வாக்காளர்களுக்கு படிவம் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட படிவங்களை திரும்பப் பெறுதல் போன்ற பணிகளை செய்து வந்தார். கடந்த நவம்பர் 20-ம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்ற ஜாகிதா பேகம், மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது கணவர் முபாரக் சாப்பாடு வாங்கி வருவதற்காக ஹோட்டலுக்குச் சென்றார். அதையடுத்து ஜாகிதா பேகம் வீட்டுக்குச் சென்ற அவரது உறவினர் ஒருவர், ஜாகிதா பேகம் ஊஞ்சல் சங்கிலியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கூச்சலிட்டார். தற்கொலை செய்து கொண்ட ஜாகிதா பேகம் அதைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ஜாகிதா பேகத்தை மீட்டு திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அதையடுத்து ஜாகிதா பேகத்தின் உடல், உடற்கூராய்வு சோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தப்பணியால் ஏற்பட்ட அழுத்தம்தான் தன்னுடைய மனைவியின் தற்கொலைக்கு காரணம் என காவல் நிலையத்தில் புகார் எழுப்பியிருக்கிறார் முபாரக். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருக்கும் திருக்கோவிலூர் போலீஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். புதுச்சேரி: திருமணம் மீறிய உறவு; மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை செய்த பின்னணி!
சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமாகியிருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92. கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதை மற்றும் புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து விளங்கியவர் இவர். ஈரோடு தமிழன்பன் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1933-ம் ஆண்டு பிறந்த இவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 1975 முதல் 1993 வரை அங்கு செய்தி வாசிப்பாளராக இவர் பணியாற்றினார். கடந்த 2004-ம் ஆண்டு 'வணக்கம் வள்ளுவ' என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். வானம்பாடி கவிதை இயக்கத்தில் முக்கியப் பங்களிப்புகளை இவர் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, 'அரிமா நோக்கு' என்ற ஆய்விதழில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஈரோடு தமிழன்பன் மேலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலும், அறிவியல் தமிழ் மன்றத்திலும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இவர் செயலாற்றியிருக்கிறார். இவருடைய மறைவுக்கு இலக்கியத் துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Travis Head Stars as Australia Wins First Ashes
Makeshift opener Travis Head played an incredible innings, scoring a 69-ball century, to help Australia win the first Ashes Test
FIFA Bans Panama Football President for Misconduct
A few days after Panama proudly secured a spot in the 2026 World Cup, the country’s football federation president, Manuel
சபரிமலை அய்யப்பன் சீசன்! கடும் கட்டுப்பாடுக்கு இடையே 5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்...
சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் இதுவரை மட்டும் 5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Maanbumigu Parai Movie Audio Launch Stills
Nellai Boys Movie Audio Launch Stills
ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!
தைவான் விவகாரத்தில் ஜப்பானின் தலையிடும் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து, சீனா ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது. நவம்பர் 21 அன்று சீனாவின் ஐ.நா. தூதர் ஃபூ கோங் அனுப்பிய இந்தக் கடிதத்தில், ஜப்பான் பிரதமர் சானே தகைச்சியின் (Sanae Takaichi) கருத்துகள் “தவறானவை மற்றும் ஆபத்தானவை” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகைச்சி, இந்த மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் “தைவான் அரசியல் பிரச்சினை ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் […]
Varanasi Movie Title Launch Event Stills
Friends Movie Re Release Press Meet Stills
மெட்ரோ திட்டத்தில் தாமதம்.. அதிகாரிகள் கூறும் காரணம் என்ன தெரியுமா?
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், பூந்தமல்லி - போரூர் வழித்தடம் பாதுகாப்பு சான்றிதழ் தாமதத்தால் தடைபட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத ரயில்களுக்கான சோதனை ஓட்டங்கள் முடிந்தும், RDSO காரணத்தை தெரிவிக்காதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

26 C