SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

தகன இல்லம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட 400 சடலங்கள்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

தகன இல்லம் ஒன்றில் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட சுமார் 400 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் பலர் உரிய விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளனர். பாதுகாக்கப்பட்டிருக்கலாம் மெக்சிகோவின் ஜுவரெஸ் பகுதியிலேயே அந்த தகன இல்லம் அமைந்துள்ளது. இந்த வாரம் விசாரணை அதிகாரிகள் கிட்டத்தட்ட 383 முழுமையான சடலங்களையும் 6 அழுகிய நிலையில் உள்ள பகுதி உடல்களையும் கணக்கெடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தலையிட்டு, உரிய தகவல்களை வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் கார்டெல் வன்முறைக்கு பெயர் […]

அதிரடி 6 Jul 2025 2:30 am

தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை கூகுள் நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதாக 2019 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் இலக்கு விளம்பரத்துக்காக, பயனர்களின் தரவுகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கலிஃபோர்னியா சட்டத்தின்கீழ், பயனர்களின் தரவு என்பது அவர்களின் தனிப்பட்ட சொத்து. வாடிக்கையாளர்களின் தொலைபேசிகள் செயலற்று இருக்கும்போது பயன்படுத்தப்படும் தரவுகளுக்கு கூகுள் நிறுவனம்தான் பொறுப்பு என்று […]

அதிரடி 6 Jul 2025 12:30 am

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதிக்கும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த அதன் நிறுவனத்தை மூடுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக மறுசீரமைப்பு மற்றும் கிளவுட் அடிப்படையிலான, தடத்திற்கு மாறுவதாக தெரிவித்தது. 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு, தொழில்நுட்ப […]

அதிரடி 5 Jul 2025 11:30 pm

பேசாத பொம்மை சொல்லும் சோகக்கதை: செம்மணியின் ஆழங்கள்

தி.டிலக்சன், யாழ். பல்கலைக்கழகம், மனித வரலாற்றின் இருண்ட பக்கங்களில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரங்களும் காலத்தால் அழியாத வலிகளும் புதைந்து கிடக்கின்றன. அந்தப் பக்கங்களில் ஒன்று தான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி என்ற நிலப்பரப்பு. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் பொம்மை வெறும் விளையாட்டுக் கருவியாக இல்லாமல், கண் விழித்த சாட்சியாக நின்று செம்மணியின் ஆழங்களில் புதைந்துள்ள ஒரு சோகக்கதையை உலகுக்கு உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்தப் பொம்மை உருக்குலைந்த நிலையில் மண்ணின் நிறம் பூசி ஒருபுறம் […]

அதிரடி 5 Jul 2025 11:30 pm

மொத்தமாக மாறி வரும் வடசென்னை! இனி எல்லாமே ரியல் எஸ்டேட் தான் போங்க...

வடசென்னை ஒரு காலத்தில் தாழ்வான பகுதியாக பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. இப்போது, நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. புதிய வீடுகள், மேம்பட்ட சாலைகள், மெட்ரோ ரயில் போன்ற வசதிகள் வந்துள்ளன. இதனால், வட சென்னையின் மதிப்பு உயர்ந்து வருகிறது.

சமயம் 5 Jul 2025 10:40 pm

திருமணமான 6 மாதத்தில்.. இளம்பெண் விபரீத முடிவு –என்ன நடந்தது?

திருமணமான 6 மாதத்தில், இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம் கன்னியாகுமரி, கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா(26). பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இருவரும் உறுதியாக இருந்ததால், இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். பெண் தற்கொலை தொடர்ந்து பெண் […]

அதிரடி 5 Jul 2025 10:30 pm

உங்கள் வீட்டுப் பிள்ளையாக வீடு தேடி வருகிறேன் : சுற்றுப் பயணம் குறித்து இபிஎஸ் கடிதம்!

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமயம் 5 Jul 2025 9:49 pm

SF90: பெங்களூரில் வலம் வந்த ரூ7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி; ரூ1.41 கோடி அபராதம் விதித்த காவல்துறை!

ஃபெராரி இத்தாலியைச் சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம். ரேஸ் கார்கள் தவிர, SF90 Stradale, SF90 ஸ்பைடர், என்ஸோ ஃபெராரி என்று பல சூப்பர் கார்களை விற்றுக் கொண்டிருக்கிறது ஃபெராரி. சமீபகாலமாக கர்நாடக மாநிலம், பெங்களூரில் சிவப்பு நிற ஃபெராரி SF90 ஸ்ட்ராடேல் கார் வலம் வந்துகொண்டிருந்தது. ரூ.7.5 கோடி தொடக்க விலையுடன் வரும் இந்த சூப்பர் கார், மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டு பெங்களூர் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. SF90 Stradale அதற்கான காரணம், கர்நாடகாவை விட மகாராஷ்டிராவில் சொகுசு வாகனங்களுக்கான சாலை வரிகள் கணிசமாகக் குறைவு. மகாராஷ்டிராவில் பதிவான வாகனத்தை வாங்கியிருந்தாலும், அதன் உரிமையாளர் கர்நாடக மாநிலத்தில் அதை பதியவோ, அல்லது கர்நாடக சாலைவரியை செலுத்தவோ இல்லை. அதனால், அந்த கார் உரிமையாளர் வரி ஏய்ப்பு செய்வதாக காவல்துறைக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இந்த நிலையில், பெங்களூரு தெற்கு ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அவர்கள் சிவப்பு நிற ஃபெராரி SF90 ஸ்ட்ராடேல் காரை கண்காணித்து, அதன் ஆவணங்களைச் சரிபார்த்து, உரிய வரி செலுத்தாமல் கர்நாடக மாநிலத்தில் கார் இயங்கி வருவதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அந்த கார் கர்நாடகா போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. SF90 Stradale இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், ``சட்ட விதிமீறல் உறுதிசெய்யப்பட்டதும், ஃபெராரியைக் கைப்பற்றி, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். விரைவில் உரியத் தொகையை செலுத்த வேண்டும் எனவும், மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருக்கிறோம். உரிமையாளர் செலுத்தவேண்டியத் தொகை ரூ.1.41 கோடி. அதாவது நிலுவையில் உள்ள வரி மற்றும் அபராதங்களை உள்ளடக்கியது. சமீபத்தில் ஒற்றை வாகனத்துக்கு இவ்வளவு தொகை வரி உள்ளிட்ட வகைகளில் விதிக்கப்பட்டு, போக்குவரத்துத் துறைக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றனர். Ajith : ரூ.3 கோடி, 320 கி.மீ ஸ்பீடு, 6 சிலிண்டர் இன்ஜின் - அஜித்தை ஈர்த்த Porsche காரின் ஸ்பெஷல்!

விகடன் 5 Jul 2025 9:42 pm

வரிகளைக் குறைத்து…ரூ 4,200 கோடிக்கு அமெரிக்க கோதுமை வாங்கவும் முடிவெடுத்த ஆசிய நாடு

வரி விதிப்பு பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கியப் பொருட்களுக்கான வரிகளை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைக்கவும், 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க கோதுமையை வாங்கவும் இந்தோனேசியா முன்வந்துள்ளது. இறக்குமதியை அதிகரிக்க இந்தோனேசியாவின் தலைமைப் பொருளாதார அமைச்சர் ஏர்லாங்கா ஹார்டார்டோ தெரிவிக்கையில், நாட்டின் விமான சேவை நிறுவனமான கருடா அமெரிக்காவுடனான 34 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கூடுதல் போயிங் விமானங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி வெளியிட்டுள்ள […]

அதிரடி 5 Jul 2025 9:30 pm

ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை

ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 241 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 37,934 ஆகும். அதன்படி, இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், ஜனவரி மாதத்தில் […]

அதிரடி 5 Jul 2025 9:27 pm

அரியலூர் சட்டமன்றத் தொகுதி : மீண்டும் களமிறங்குவாரா எஸ்.எஸ்.சிவசங்கர்? வெற்றிவாய்ப்பு யாருக்கு?

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் யாரெல்லாம் போட்டியிட வாய்ப்புள்ளது, வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 5 Jul 2025 9:06 pm

`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்

மராத்திய மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக அறிவித்து உத்தரவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக மும்பையில் மிகப் பெரிய பேரணியை நடத்துவோம் என அறிவித்தனர். Raj Thackery - Uddhav Thackery சிவசேனா கட்சியிலிருந்து ராஜ் தாக்கரே பிரிந்து சென்ற 20 ஆண்டுகளாக இருவரும் இணையாத சூழலில், இந்த பிரச்னையில் இருவரும் இணைந்து குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பாஜக அரசு உத்தரவை திரும்பப் பெற்றது. இன்று மராத்தி ஒற்றுமையின் வெற்றி என்ற மாநாட்டில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து கலந்துகொண்டனர். இந்த சம்பவங்களை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் பதிவு இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். MK Stalin இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்ரே தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன? என்றும், இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்? என்றும் ராஜ் தாக்ரே அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன். Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்? மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல! இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்! தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்! சாதிவாரி கணக்கெடுப்பு: பீகார் தேர்தல் அரசியல் லாபத்துக்காக... - முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன?

விகடன் 5 Jul 2025 9:04 pm

‘ஃபாஸ்ட் &ஃபியூரியஸ்’, ‘எஃப் 1’ படங்களின் அடுத்த பாகங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் - அஜித்

நடிகர் அஜித் கடந்தாண்டு முதல் அடுத்தடுத்து கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார். அந்த ரேஸ்களில் பங்கேற்று டாப் இடங்களையும் பிடித்து வருகிறார் அஜித். கார் ரேஸில் தற்போது பரபரப்பாக ஈடுபட்டு வருவதால் 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்தான அப்டேட்கள் எதுவும் வெளியிடவில்லை. Good Bad Ugly தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார் அஜித். கார் ரேஸில் அதிகமாக ஈடுபாடு காட்டத் தொடங்கிய பிறகு அஜித் சில பேட்டிகளும் கொடுத்து வருகிறார். கார் பந்தயத்தின் இடைவெளியில் 'ஹாலிவுட் நடிகர் ப்ராட் பிட் சமீபத்தில் 'F1' என்ற கார் பந்தயத்தை மையப்படுத்திய திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுபோல, `நீங்களும் கார் ரேஸை மையப்படுத்திய படங்களில் நடிப்பீர்களா?' எனத் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார். Brad Pitt - F1 Movie இந்தக் கேள்விக்கு அஜித், ஏன் முடியாது? என் படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நானேதான் நடிக்கிறேன். அப்படியான வாய்ப்புகள் வந்தால் ஏன் நடிக்காமல் இருக்கப் போகிறேன்? ‘ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்’, ‘எஃப் 1’ படங்களின் அடுத்த பாகங்களில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனப் பதிலளித்திருக்கிறார்.

விகடன் 5 Jul 2025 8:55 pm

திருச்செந்தூர் குடமுழுக்கு: பக்தர்கள் கவனிக்க, கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கினை முன்னிட்டு, பக்தர்கள் கவனிக்க, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு, வரும் 7.7.2025- திங்கட்கிழமை காலையில் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் குடமுழுக்கினை  காண்பதற்கு காவல் துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு பிரகாரம் வழியாக செல்ல அனுமதி கிடையாது மேற்கு பிரகாரமானது யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகம் சம்மந்தமான பூஜைகள் நடைபெரும் முக்கிய பகுதி ஆகும். எனவே பக்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே பத்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக வருவதை தவிர்க்கவும். திருச்ச்செந்தூர் கோயில் கூட்ட நெரிசலை தவிர்க்க கோயில் பிரகாரங்கள், வசந்த மண்டபம் அருகில் மற்றும் கோவில் அருகில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இடவசதிக்கு ஏற்ப போதுமான பத்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேக தீர்த்தமானது ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 48 நாள்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். திருச்செந்தூர் குடமுழுக்கு: திருக்கோயில் ராஜகோபுரத்தில் சிற்பங்களின் சிறப்புகள் என்ன தெரியுமா? கும்பாபிஷேகம் ராஜகோபுர தரிசனம் ராஜகோபுரத்தை பார்த்து (ராஜகோபுரம் தெரியும் இடங்கள்) கும்பாபிஷேக தரிசனம் செய்யும் இடங்கள்:   கோயில் கடற்கரை பகுதியில் (Sea shore) ராஜகோபுரம் தெளிவாக காணலாம். மேலும் கீழ்கண்ட இடங்களில் இருந்து ராஜகோபுரத்தை கண்டு கும்பாபிஷேகத்தை காணலாம். மேலும் தூத்துக்குடி ரோடு JJ நகர் பார்க்கிங், JJ நகர் பார்க்கிங் செல்லும் வழி பைரவர் கோவில் அருகில், JJ நகர் பார்க்கிங் செல்லும் வழி தாய் Resort பின்புறம், நாழிகிணறு பழைய பேருந்து நிலையம் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி, ஆலயம் D பிளாக் மற்றும் ஆலயம் H பிளாக் முன்பு, சண்முகர் விடுதி ஆகிய இடங்களிலும் காணலாம். மேலும் இவ்விடங்களில் கும்பாபிஷேக தீர்த்தமானது ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காணலாம். ராஜகோபுரம் பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும் வழி: பகத்சிங் பேருந்து நிலைய வாகன நிறுத்தம், மாட்டுத்தாவணி வாகன நிறுத்தம், TB ரோடு ஐடியல் பார்க்கிங் வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் TB ரோடு, மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், கோவில் வடக்கு ஆர்ச் வழியாக கோவில் வடக்கு பகுதிக்கு (யாகசாலை, ராஜகோபுரம்) இடவசதிக்கேற்ப போதுமான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களில் கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் மாற்றுப்பாதையில் கோவில் மற்றும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள். JJ நகர் பார்க்கிங் மற்றும் TB ரோடு வழியாக வரும் பக்தர்கள், தாலுகா அலுவலகம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம், மினிசிவமுருகன் லாட்ஜ் ஜங்ஷன் (நாடார் தெரு), சன்னதி தெரு (சுபா மெடிக்கல் ஜங்ஷன்), சன்னதி தெரு (புளியடி சந்தனமாரியம்மன் கோவில் ஜங்ஷன்), புளியடியம்மன் கோவில் தெரு, சபாபதி பிள்ளையார் கோவில் (நவாப்பழ சாலை), நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.  தூத்துக்குடி ரோடு வழியாக வரும் பக்தர்கள், பகத்சிங் பேருந்து நிலையம், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். திருநெல்வேலி ரோடு வழியாக வரும் பக்தர்கள், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். சுவாமி சண்முகர் பரமன்குறிச்சி ரோடு மற்றும்குலசேகரபட்டினம் ரோடு வழியாக வரும் பக்தர்கள், முருகாமடம் (தெப்பகுளம்), முத்தாரம்மன்கோவில் தெரு ஜங்ஷன், தெற்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். கிழக்கு ரதவீதி மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து சன்னதி தெரு வழியாக பக்தர்கள் கோவில் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் வெளியே நடந்து வரும் வழி:  கோயில் வடக்கு பகுதியில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் வடக்கு ஆர்ச், மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், TB ரோடு வழியாக JJ நகர் பார்க்கிங் அல்லது TB ரோடு மெயின் ஆர்ச் வழியாக தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு அல்லது பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு மற்றும் மற்றப்பகுதிகளுக்கு செல்லவும்.  கோயில் சன்னதி தெரு (கோவில் மத்திய பகுதி) வழியாக வெளியே வரும் பக்தர்கள் தேரடி (கிழக்கு ரதவீதி) வந்து கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச், மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேவலி ரோடு செல்லலாம். அல்லது தேரடி (கிழக்கு ரதவீதி) கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகும்) வழியாக பரமன்குறிச்சி ரோடு மற்றும் குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும். கோயில் தெற்கு பகுதி (கடற்கரை, நாழிகிணறு) பகுதிகளில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் நவாப்பழ சாலை, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகுளம்) வந்து பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும். அல்லது முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன் வந்து மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி இரும்பு ஆர்ச் ஜங்ஷன் வழியாக மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு செல்லவும். திருச்ச்செந்தூர் கோயில் கடற்கரை கடற்கரை பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் (தேவைப்படும் பட்சத்தில்) நாழிகிணறு பழைய பேருந்து நிலையம், முருகன் விடுதி, வள்ளியம்மை Quarters, வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை- முருகாமடம் அருகில்) செல்லவும். அல்லது கடற்கரை அய்யா கோவில், கமலா கார்டன், கிருஷ்ணா தியேட்டர், வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை- முருகாமடம் அருகில்) செல்லவும்.   தரிசனம் சம்மந்தமான அறிவிப்பு:  மேலும் கும்பாபிஷேகம் முடிந்த உடன் மூலவர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடைபெறயிருப்பதால் 7.7.2025 அன்று பகலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை. கும்பாபிஷேகம் முடிந்த உடன் பத்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அன்னதானம் கொடுக்கப்படும் இடங்கள்:  1. TB ரோடு: செந்திலாண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.  2. தூத்துக்குடி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் (ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம் & JJ நகர் பார்க்கிங்.  3. திருநெல்வேலி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் ரூ வியாபாரிகள் சங்க பார்க்கிங் (ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்.)  4. பரமன்குறிச்சி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் & FCI குடோன் அருகிலுள்ள பார்க்கிங் (சர்வோதயா அருகில்).  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. திருச்செந்தூர்: அறுபடை ஓவியம், தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை.. குடமுழுக்கு பணிகள் தீவிரம்!

விகடன் 5 Jul 2025 8:49 pm

காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகிவருவதன் அறிகுறியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே அந்த வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை சென்று, காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்திவரும் அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்துப் […]

அதிரடி 5 Jul 2025 8:30 pm

செம்மணியில் இதுவரையில் 42 எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் பத்தாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 45 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இதுவரையில் இன்றைய தினம் 05 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 42 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை செய்மதி படங்களின் அடிப்படையில் மேலும் மனித புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரிதொரு இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வு அகழ்வு பணியில் மனித என்பு சிதிலங்கள் என சந்தேகிக்கப்படும் சில சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்டையோடு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பதிவு 5 Jul 2025 8:23 pm

Liverpool: உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.140 கோடி; ஒப்பந்த தொகையை அப்படியே வழங்கிய அணி!

லிவர்பூல் கால்பந்து அணியின் வீரர் டியாகோ ஜோட்டா சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. 28 வயது போர்த்துகீசிய வீரரான ஜோட்டாவின் மரணம் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் மரணத்துக்குப் பிறகு லிவர்பூல் அணியின் உரிமையாளரான ஃபென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (FSG), ஜோட்டாவின் மனைவி ரூட் கார்டோசோ மற்றும் அவர்களின் குழந்தைகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்க எடுத்த முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. View this post on Instagram A post shared by Rute Cardoso (@rutecfcardoso14) லிவர்பூலுடனான ஜோட்டாவின் ஒப்பந்தம் இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கான சம்பள தொகையையும் அவரது குடும்பத்துக்கு அளிப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அவரது குடும்பத்துக்கு 14 மில்லியன் யூரோ, இந்திய மதிப்பில் 140 கோடி ரூபாய் கிடைக்கும் என செய்திதளங்கள் குறிப்பிட்டுள்ளன. Liverpool அணி சமீப காலமாக உள்ளூர் மற்றும் ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில் முக்கிய தூணாக செயல்பட்டார் தியாகோ ஜோட்டா. அவரது இறுதி சடங்கில் மொத்த லிவர்பூல் அணியினரும், முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். மைதானத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. DIOGO JOTA'S FUNERAL BEGINS IN PORTUGAL pic.twitter.com/jVQLFnRhvm — Tefara prosperous (@am_tefara) July 5, 2025 சென்னை: கால்பந்து திடல்களைத் தனியாருக்கு வழங்க தீர்மானம்; திரும்பப்பெற்ற மேயர் பிரியா; காரணம் என்ன?

விகடன் 5 Jul 2025 8:13 pm

20 சவரன் நகை கேட்டு கொலை மிரட்டல்.. பிரபல youtuber மீது வரதட்சணை புகார்- நடந்தது என்ன?

பிரபல youtuber மீது வரதட்சணை புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த youtuber எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சமயம் 5 Jul 2025 8:12 pm

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மேல்முறையீடு-எந்த கண்டிஷனா இருந்தாலும் ஒகேதான்..

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், ஜாமீன் கோரி நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சமயம் 5 Jul 2025 8:11 pm

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பலன் எப்போது கிடைக்கும்?

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பலன் யார் யாருக்கு கிடைக்கும்? எந்த மாதங்களில் கிடைக்கும்? முழு விவரம் இதோ..!

சமயம் 5 Jul 2025 8:11 pm

Chiyaan 63: 'எனக்கு நெருக்கமான படம் இது; ரசிகர்கள் திட்டுகிறார்கள்!' - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 'வீர தீர சூரன்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே அவருடைய 63-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது. Veera Dheera Sooran 'மாவீரன்', '3 BHK' ஆகியப் படங்களைத் தயாரித்த அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரிக்க, இயக்குநர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு படத்தைப் பற்றிய வேறு எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.'3 BHK' படத்தின் ரிலீசைத் தொடர்ந்து பல திரையரங்குகளுக்கும் விசிட் அடித்து மக்களின் வரவேற்பைப் பார்த்து வருகிறார் தயாரிப்பாளர் அருண் விஷ்வா. அப்படி அங்கு வைத்து விக்ரமின் 63-வது திரைப்படம் பற்றிப் பேசியிருக்கிறார். அங்கு அவர், 'சியான் 63' படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. Chiyaan 63 Team அதற்காகத்தான் நேரம் எடுத்து வருகிறோம். நான் படத்தின் அப்டேட்களைக் கொடுக்கவில்லை என விக்ரம் சாரின் ரசிகர்கள் பலரும் என்னைத் திட்டி வருகிறார்கள். அத்திரைப்படம் எனக்கு மிகவும் பர்சனலாக நெருக்கமான திரைப்படம். படத்தைப் பற்றிய அறிவிப்பு சரியான நேரத்தில் வரும், எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 5 Jul 2025 7:56 pm

ஒரு சிறுவன் கலைஞனாக உருவானத் தருணம்! - மிருதங்கம் அரங்கேற்ற கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அமெரிக்காவின் அரிசோனாவில் பள்ளியில் படிக்கும் என் மகன் ராஹுல், ஏழாவது வயதில் மிருதங்கம் பயிற்சி தொடங்கினான். 2024ல், ராஹுலின் குரு கலைமாமணி திருவாரூர் வைத்யநாதன். அரங்கேற்றம் என்பது சாதாரண நிகழ்ச்சி இல்லை. அது ஒரு குடும்ப திருமணத்துக்கு சமம் – இசையை மையமாக கொண்டு நடந்த ஒரு தெய்வீக திருவிழா. கார்நாடிகா சகோதரர்கள் KN சசிகிரண், P கணேஷ, B.V. ராகவேந்திர ராவ் (வயலின்), டாக்டர் எஸ். கார்த்திக்* (கட்டம்), வி. ந். சுந்தர்* (மோர்சிங்) என இவர்கள் எல்லாரும் ராஹுலுடன் அரங்கேற்றத்தில் வாசிக்க ஒப்புக்கொண்டதும், அந்த பக்குவம் ராஹுலுக்கு வந்து விட்டது என்று தெரிந்தது! ராஹுலின் குரு திருவாரூர் வைத்யநாதன் அவர்களே ரெகார்டிங்கில் மிருதங்கம் வாசித்தார். நாங்கள் பெற்றோர்களாக, இதற்குப்பின் எடுத்து வைத்த பெரிய பங்குதான் – குருவை நேரில் பயிற்சிக்கு ஏற்பாடு பண்ணியது தான். எங்கள் வீட்டுக்கு ஆசானை வரவழைக்க, அவருடைய பல வேலைகளை நிறுத்தி, குடும்பத்திலிருந்து அவர் தற்காலிகமாக விலகி, ராஹுலுக்கு நேரமெடுத்து வந்தது – அது ஒரு ஆசானின் சிருஷ்டிக்கே ஒரு சாட்சி. அரங்கேற்றத்தை எங்கே நடத்துவது? இந்தியாவா அல்லது அமெரிக்காவா? நிறைய யோசிச்சோம். முதிர்ந்த தாத்தா-பாட்டி, உறவுகள் எல்லாம் கலந்து கொள்ளும் வகையில, சென்னையிலேயே செய்வோம் என்று முடிவு செய்தோம். எங்களோட இந்திய கோடை விடுமுறையை சேர்த்து திட்டமிட்டோம், செலவு குறைவாக இருக்கும். சென்னைக்கு வந்து 2 வாரங்கள் ஆசானுடைய வீட்டுக்கு அருகே ஒரு சாப்பாட்டு அபார்ட்மென்டில் தங்கினோம் – ராஹுல் நாள்தோறும் ஆசானோட வீட்டுக்கே போய் பயிற்சி – அது ஒரு “மாணவர்-குரு” பந்தத்தின் உயிர்! *இறுதிக் கணம் – ஒரு முழுமையான ரெஹர்சல்*. பெரிய இசைஞர்கள் எல்லாரும் நேரில வந்து, ராஹுலை பாராட்டி ஊக்கப்படுத்தினார். அரங்கேற்ற நாளன்று, பளீச்சென மேடை அலங்காரம், கலையும் ஆனந்தமும்தான் பூரணமாக காண முடிந்தது. கடைசி பாடலான ராமா ராமா வில் என் மற்றொரு பிள்ளைகள் ரிஷி (வீணை) மற்றும் ரோஹன் (புல்லாங்குழல்) சேர்ந்ததும் – அந்த தருணம் என் குடும்பத்தின் இசைக் கனவின் உச்சம். விருந்தினர்களில், மன்னார்குடி ஈஸ்வரன் சார், க்ளீவ்லன்ட் VV சுந்தரம் சார் ஆகியோர் வந்ததில் ஆரோக்கிய பாராட்டு, ஆசீர்வாதம், மேலும் – ஒவ்வொருவரும் பயிற்சி, பொறுமை, தொடர்ச்சியான உழைப்பு இவை முக்கியம் என்று சொன்னதும் – ரொம்ப அர்த்தமாயிருந்தது. இது எங்களுக்கு ஒரு சிறுவனின் கலைஞனாக உருவாகும் பயணம் – ராஹுலின் வலிமை, புன்னகை, தைரியம், தவம், நன்னடை, நேர்த்தி, ஸ்ருதி, ஸம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொண்டான். கலைமாமணி திருவாரூர் வைத்யநாதன்* நாங்கள் மனமார்ந்த நன்றி செலுத்துகிறோம். அவரோட வழிகாட்டுதல் இல்லாமலா இது நடந்திருக்காது. இது ஒரு வாழ்நாள் நினைவாக இருக்கும் – ஒளிரும் மேடையிலும், உருகும் மனதிலும்! – அன்புடன், ரம்யா ரங்கநாதன் (ராஹுலின் அம்மா) விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 5 Jul 2025 7:47 pm

யாழ் வந்த பேருந்தில் சாரதிக்கு திடீர் சுகயீனம்; காப்பாற்றப்பட்ட உயிர்கள்

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து சாரதிக்கு ஏற்ப்பட்ட திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எனினும் சாரதி சாதுரியமாக பேருந்து நிறுத்தப்பட்டு பல பயணிகள் பாதுகாப்பாக பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காப்பாற்றப்பட்ட பயணிகள் குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதிக்கு திடீரென தலைச் சுற்று பேருந்து தடுமாறியுள்ளது. இதனால் சாவகச்சேரியை அண்மித்த போது […]

அதிரடி 5 Jul 2025 7:34 pm

பாகிஸ்தான்: வீட்டிலிருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைரல்!

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட 11 மாத ஆண் சிங்கம் ஒன்று, நேற்று முன்தினம் (ஜூலை 3) இரவு வீட்டின் தடுப்புச் சுவர்களைத் தாண்டி குதித்து வெளியே தப்பியுள்ளது. இதையடுத்து, அந்தச் சிங்கம் நேரடியாக சாலையில் சென்ற ஒரு பெண்ணை விரட்டி அவரைத் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தச் சிங்கம் அங்கிருந்த […]

அதிரடி 5 Jul 2025 7:30 pm

இந்தித் திணிப்பு : மகாராஷ்டிரா எழுச்சி உற்சாகம் தருகிறது - மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணி நடந்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சமயம் 5 Jul 2025 7:18 pm

Zaaroz app: Zomato swiggy நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள்

Zomato swiggy நிறுவன பொருட்களை இணையதளத்தில் விற்பதற்கு நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் புதிதாக ஒரு ஆப்-பை அவர்கள் ஏற்படுத்தி, சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சமயம் 5 Jul 2025 7:17 pm

ஆதார் கார்டில் மிக முக்கியமான அப்டேட்.. இனி இவை எல்லாமே செல்லும்!

ஆதார் கார்டுக்கு அங்கீகரிக்கப்படும் ஆவணங்கள் தொடர்பான பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த ஆதார் கார்டுகள் இனி செல்லாது.

சமயம் 5 Jul 2025 6:54 pm

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்”–முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில், 20 ஆண்டுகளாக எதிர் எதிர் துருவங்களாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஒரே மேடையில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் […]

டினேசுவடு 5 Jul 2025 6:43 pm

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?- சுகாதாரத் துறை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் கேள்வி

சிதிலம் அடைந்த மருத்துவமனை சீரமைக்க தவறிய சுகாதாரத் துறை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது காட்டமாக வினா எழுப்பினர்.

சமயம் 5 Jul 2025 6:30 pm

உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்

உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து உக்ரைன் விமானப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வியாழக்கிழமை இரவு முழுவதும் 550 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் 72 ட்ரோன்கள் உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி இலக்குகளைத் தாக்கின. இது, ரஷியாவின் இதுவரை இல்லாத […]

அதிரடி 5 Jul 2025 6:30 pm

கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ; தீவிரமாகும் விசாரணை

மதுகம பொலிஸ் பிரிவின் உடவெல, அட்டகெஹெல்கல்லே பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள கால்வாயில் நேற்று (4) ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக மதுகம பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் எலும்புக்கூடாக இருக்கலாமெனவும் இந்த எலும்புக்கூடு ஆணா அல்லது பெண்ணா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 5 Jul 2025 6:11 pm

குளத்தில் நீராட சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலிப்பொத்தான குளத்தில் நேற்று நீராடிக்கொண்டிருந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் இரத்மல்கஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய மூதாட்டி ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 5 Jul 2025 6:08 pm

விழுப்புரம் To தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதை : மத்திய அரசுக்கு ராமதாஸ் வைத்த கோரிக்கை

விழுப்புரம் முதல் தஞ்சை வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமயம் 5 Jul 2025 6:03 pm

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் –அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால் வெள்ளை மாளிகையில் குடியரசு கட்சியினர் கொண்டாட்டமாக மாறியது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அது 90 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டது. இப்போது அதன் காலக்கெடு ஜூலை 9 அன்று முடிவடைகிறது. இந்த காலக்கெடுவிற்கு […]

டினேசுவடு 5 Jul 2025 6:00 pm

வடிவேலு –பகத் பாசில் நடித்த ‘மாரீசன்’ஜூலை 25ஆம் தேதி ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படம் எதிர்வரும் 25ஆம்

ஆந்தைரேபோர்ட்டர் 5 Jul 2025 5:55 pm

AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?

18 ஆண்டுகளாக குழந்தை பெற முயன்ற அமெரிக்க தம்பதி, செயற்கை நுண்ணறிவால் (AI) கர்ப்பம் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் IVF சிகிச்சை மேற்கொண்டபோதிலும், முயற்சிகள் தோல்வியடைந்திருக்கிறது. காரணம், கணவருக்கு அஸோஸ்பெர்மியா என்ற குறைபாடு இருந்துள்ளது. அஸோஸ்பெர்மியா என்பது ஆண்களின் விந்தணுவில் விந்தணுக்கள் இல்லாத ஒரு நிலையாகும். சாதாரணமாக, ஆரோக்கிய விந்து மாதிரியில் மில்லிலிட்டருக்கு லட்சக்கணக்கான உயிரணுக்கள் காணப்பட வேண்டும். ஆனால் இவரது விந்து மாதிரியில் உயிரணுக்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது. meta AI அனைத்து வழிகளும் தோல்வியடைந்த நிலையில், இந்த தம்பதியினர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழக மையத்திற்கு (CUFC) சென்றுள்ளனர். அங்கு STAR (Sperm Tracking and Recovery) என்ற புதிய AI முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை கணவரின் விந்து மாதிரியை மைக்ரோஸ்கோப் கீழ் வைத்து, ஒரு மணி நேரத்தில் 80 லட்சம் படங்கள் எடுத்து, அதில் மறைந்திருந்த 44 உயிரணுக்களை கண்டுபிடித்தது. நிபுணர்கள் பார்த்து கண்டுபிடிக்க முடியாத, விந்து மாதிரியில், AI ஒரு மணி நேரத்தில் 44 உயிரணுக்களை கண்டுபிடித்திருக்கிறது. டாக்டர் ஜெவ் வில்லியம்ஸ் அந்த உயிரணுக்கள் மனைவியின் முட்டையுடன் IVF மூலம் இணைக்கப்பட்டு, அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். STAR முறை மூலம் கர்ப்பம் அடைந்த உலகின் முதல் பெண்ணாக இவர் உள்ளார். “நான் கர்ப்பம் அடைந்தேன் என இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. ஸ்கேன் எடுக்கும் வரை இதை நிஜம் என உணர முடியவில்லை,” என அந்த பெண் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். STAR முறை ஐந்து வருட ஆய்வில் உருவாக்கப்பட்டதாக டாக்டர் ஜெவ் வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார். இந்த புதிய முறை குழந்தை ஆசை கொண்ட தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. ``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

விகடன் 5 Jul 2025 5:51 pm

Armstrong: அண்ணனுக்கு இந்த அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடாது- நினைவேந்தல் கூட்டத்தில் பா.ரஞ்சித்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய அவர், ‘அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆம்ஸ்ட்ராங் உண்மையிலேயே இந்த ஒரு வருட காலம் நிறைய விஷயங்களை நாம் சந்திக்க வேண்டி இருந்தது. அதில் மகிழ்ச்சியானத் தருணங்களும் இருந்தது, வருத்தமான தருணங்களும் இருந்தது. அவர் இல்லாத இந்தப் பொழுதுகளை நிறைய முறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அண்ணனுக்கு இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடாது. அந்த அசம்பாவிதம் நமக்கு அருகிலேயே நடந்திருக்கிறது. ஏன் இதைக் கவனிக்காமல் விட்டோம் என்ற கேள்வியும், அச்சமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பா.ரஞ்சித் அண்ணன் இல்லாத பெரும் துயரத்தைக் கடந்து வருவதற்குள் அவருடையக் கொள்கை வழியில் அவர் விரும்பிய சமத்துவத்தை உருவாக்க அண்ணன்  ஆம்ஸ்ட்ராங் அவர்களின் துணைவியார் களமிறங்கி இருக்கிறார். அவரின் நீண்ட நெடிய வழியில் செயல்படுவார்” என்று பேசியிருக்கிறார்.    Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 5 Jul 2025 5:42 pm

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.5,000 கோடிக்கும் மேல் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 43 போ் உயிரிழந்த நிலையில், அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் 17 உயிரிழப்புகள் […]

அதிரடி 5 Jul 2025 5:30 pm

சமூகத்தின் அடையாளங்கள் இல்லாமல்.. ஆம்ஸ்ட்ராங் குறித்து நயினார் நாகேந்திரன் உருக்கம்- விழாவில் நடந்து என்ன?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

சமயம் 5 Jul 2025 5:05 pm

கடற்பிரதேசத்தில் உலர்ந்த இஞ்சி மற்றும் 238 ஜோடி காலணிகள் மீட்பு

புத்தளம், கற்பிட்டி – பத்தலங்குண்டுவ கடற்பிரதேசத்தில் இருந்து பெருந்தொகையான உலர்ந்த இஞ்சி மற்றும் ஒரு தொகை காலணிகள் என்பன கடற்படையினரால் நேற்று (4) கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படை தலைமையகத்தால் நடத்தப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடற் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஐந்து பொதிகளை கடற்படையினர் பரிசோதனை செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஐந்து பொதி இதன்போது, 91 கிலோ கிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 238 […]

அதிரடி 5 Jul 2025 4:57 pm

'அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?' - சந்தேக தொனியில் திருமா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அஜித் குமாரின் காவல் மரணம், விஜய்யின் அரசியல் என பலவற்றைப் பற்றியும் திருமா பேசியிருக்கிறார். விசிக - திருமா திருமாவளவன் பேசியதாவது, 'அஜித் குமார் கொலையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு துணிச்சலான முடிவை எடுத்தார். முதல்வரின் நடவடிக்கைகள் கடும் துயரத்திலும் ஒரு ஆறுதலை தருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் இதில் அரசியலே செய்கின்றன. Vijay : மக்கள் முதல்வர்னு எப்படி நாக்கு கூசாமா சொல்றீங்க? - ஸ்டாலினை கடுமையாக சாடிய விஜய்! எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி திமுகவை விமர்சிக்கிறார். அது அவருடைய அரசியல். அதை நாம் விமர்சிக்க முடியாது. ஓரணியில் தமிழ்நாடு என்பதை தமிழ்நாட்டுக்குள் சங்பரிவார அமைப்புகளை புகவிடாமல் செய்ய ஓரணியில் ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். திருமாவளவன் ராமதாஸை ஏன் சந்தித்தேன் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டார். அதற்குமேல் இதை பேச முடியாது. பாமகவின் முரண்பாடுகள் தீரும். இருவரும் ஒன்றிணைந்தே தேர்தலை சந்திப்பார்கள் என்றே நினைக்கிறேன். எடப்பாடிக்கு ரொம்பவே தாமதமாக Z+ பாதுகாப்பை வழங்கியிருக்கிறார்கள். அவரின் பாதுகாப்புக் கருதி ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். விஜய் திமுகவையும் பாஜகவையும் எதிரிகள் என்கிறார். அதிமுகவைப் பற்றி பேசவே இல்லை. அதிமுகவை தோழமை சக்தியாக பார்க்கிறாரா எனும் கேள்வி எழுகிறது.' என்றார். TVK : 'நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!' - பனையூரில் விஜய் கர்ஜித்ததின் பின்னணி என்ன?

விகடன் 5 Jul 2025 4:56 pm

ஆர்யா - தினேஷின் மாஸ் ஆக்‌ஷன்; புதிய டீமுடன் பா.ரஞ்சித்... பரபர படப்பிடிப்பு - 'வேட்டுவம்'அப்டேட்!

விக்ரமின் 'தங்கலான்' படத்திற்கு பின், 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பா.ரஞ்சித் 75 வது கான் திரைப்பட விழாவின் போது 'வேட்டுவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். புலி ஒன்றின் ஓவியமும் அதில் இடம்பெற்றிருந்தது. மற்றபடி படம் குறித்த விஷயங்கள் அதில் இடம் பெறவில்லை. அவர் 'வேட்டுவம்' படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது தான் விக்ரமை வைத்து 'தங்கலா'னை இயக்கினார். அந்தப் படம், 19ம் நூற்றாண்டின் சமூக மோதல், சாதியக் கட்டமைப்பு, ராமானுஜர் செய்த பணிகள், நடுகல் வழிபாடு, ரயத்துவாரி வரி என பல விஷயங்களை பேசியது. அதைப் போல 'வேட்டுவ'மும் பல விஷயங்களை பேசப் போகிறது என்கிறார்கள். தினேஷ் | 'வேட்டுவம்' ஆர்யா, 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன், ஷபீர், ஜான் விஜய், மைம் கோபி, லிங்கேஷ், சாய் தீனா என பலரும் நடிக்கின்றனர். ஹீரோயினாக 'பொன்னியின் செல்வ'னில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா நடித்து வருகிறார். லப்பர் பந்து' படத்தில் ஹீரோவின் மாமனாராக நடித்த தினேஷ், 'வேட்டுவ'மில் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார். கையில் டாட்டூ, காலேஜ் பையன் லுக் என ஆளே வித்தியசமாக மாறியிருக்கிறார். ஆர்யாவை இதுவரை பார்த்திராத கோணத்தில் பார்க்கலாம் என்கிறார்கள். படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறையவே இருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் நடத்திய ரஞ்சித், இப்போது கடலூர், காரைக்கால் பகுதிகளில் எடுத்து வருகிறார். இதுவரை 75 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது என்கிறார்கள். sobhitha அதைப் போல தன் வழக்கமான டீமையும் மாற்றியிருக்கிறார் ரஞ்சித். 'பாட்டல் ராதா' படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். 'தங்கலா'னுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்யாவின் திரைப்பயணத்தில் எப்படி 'சார்பட்டா பரம்பரை' முக்கியமான படமாக அமைந்ததோ, அதைப் போல 'வேட்டுவம்' படமும் பேசப்படும் என்கிறார்கள். ஆர்யாவிற்கு அடுத்து திரைக்கு வரும் படமாக 'மிஸ்டர் எக்ஸ்' உள்ளது. 'எஃப்.ஐ.ஆர்' மனு ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். உளவாளி நிறுவனம் ஒன்றில் நடக்கும் கதை இது. இந்தியாவில் நடந்த சில அதிரடியான உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படமிது என்கிறார்கள்.

விகடன் 5 Jul 2025 4:54 pm

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் நன்கொடை

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஜப்பான் அரசாங்கம் , பல தொழில்நுட்ப உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப உபகரணங்கள் , புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் (International Organization for Migration – IOM) துணையுடன் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் முதல்முதலில் தொழில்நுட்ப உபகரணங்கள் இலங்கையின் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் எல்லை தயார்நிலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நவீனமயமாக்கல் […]

அதிரடி 5 Jul 2025 4:54 pm

அடுத்த போட்டியில் ஆடுவேனா என்று எனக்கே தெரியாது - இங்கிலாந்தைச் சுருட்டிய இந்திய பவுலர் ஓபன் டாக்!

இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் முதல் இரண்டு நாள்களில் 10 விக்கெட் இழப்புக்கு 587 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் முடிவில் 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதில், ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். ஆகாஷ் தீப் பின்னர், நேற்று (ஜூலை 4) மூன்றாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார் சிராஜ். 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து. இங்கிலாந்து அணி ஃபாலோ ஆனை தவிர்க்க யாராவது சரிவிலிருந்து மீட்பர்களா என்று இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், ஹாரி ப்ரூக்கும், ஜேமி ஸ்மித்த்தும் இணைந்து 300+ பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை நோகடித்தனர். Shubman Gill: வரலாற்றில் எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை - இரட்டை சதமும், கில் சாதனைகளும்! இதனால், ஃபாலோ ஆனை இங்கிலாந்து எளிதாகக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில் ஹாரி ப்ரூக்கை 158 ரன்களில் கிளீன் போல்டாக்கி ஆட்டத்தை மீண்டும் இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார் ஆகாஷ் தீப். இங்கிலாந்திடம் மீதமிருந்த 4 விக்கெட்டுகளும் அடுத்த 20 ரன்களில் காலி. இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி ஸ்மித் மட்டும் 184 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இந்திய அணியில், சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆகாஷ் தீப் இந்த நிலையில், முக்கியமான நேரத்தில் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் கைக்குள் கொண்டுவந்த ஆகாஷ் தீப், இந்த டெஸ்டில் இன்னும் இரண்டு நாள்கள் இருக்கிறது. இந்தப் போட்டி எங்களின் வெற்றிக்கு மிக முக்கியமானது. அதனால், மூன்றாவது போட்டியைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. எனவே, இந்த இரண்டு நாள்களில் என்ன ஆற்றலை வெளிப்படுத்துவேன் என்று நான் நம்புகிறேன். ஆகாஷ் தீப் அடுத்த போட்டியில் நான் விளையாடுவேனா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை அணிதான் முடிவெடுக்கும். போட்டிக்கு முந்தைய நாள்தான் அது எங்களுக்குத் தெரியும். என்று தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப், இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Follow On Rules: ஃபாலோ-ஆன் என்றால் என்ன? - இந்தியாவைக் காப்பாற்றிய பும்ரா - ஆகாஷ் தீப் ஜோடி

விகடன் 5 Jul 2025 4:53 pm

அதிஉயர் பாதுகாப்பு சிறையிலிருந்த மரண தண்டனை கைதி மரணம்

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெவுந்தர குடு சமில்” என்று அழைக்கப்படும் நாராதொட்ட ஹேவகே சமில் அஜித் குமார என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “தெவுந்தர குடு சமில்” என்பவர் சுகயீனம் காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தெவுந்தர குடு சமில்” என்பவர் 2000 ஆம் […]

அதிரடி 5 Jul 2025 4:50 pm

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒன்றிணைய அழைப்பு: ‘குரலற்றவர்களின் குரல்’அமைப்பு வேண்டுகோள்

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் […]

அதிரடி 5 Jul 2025 4:48 pm

கமல் ஹாசன் இனி அதபத்தி பேசவே கூடாது! உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு...

நடிகர் கமல் ஹாசன் அண்மையில் கன்னட மொழி குறித்து பேசி கருத்துக்கள் சர்ச்சையானது. இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் கமல் ஹாசனுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுகுறித்து இந்த செய்தியி

சமயம் 5 Jul 2025 4:45 pm

பெண் வேடமிட்டு மகனுக்கு அழகு பார்த்த தாய்! குடும்பமே உயிரிழந்த சோகம்

ராஜஸ்தானில் கணவன், மனைவி மற்றும் இரு மகன்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ்லால் மேக்வால்(வயது 35), இவரது மனைவி கவிதா( வயது 32), இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர். கடைசி மகனான ராமதேவ்(வயது 8) என்பவருக்கு பெண் வேடமிட்டு அழகு பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளார். துரதிஷ்டவசமாக புதன் காலை நால்வரின் உடல்களும் வீட்டின் அருகில் இருந்து 20 அடி தொலைவில் உள்ள தண்ணீர் டேங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. […]

அதிரடி 5 Jul 2025 4:30 pm

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்படும், இதில் நகரப் பகுதிகளில் 3,768 முகாம்களும், […]

டினேசுவடு 5 Jul 2025 4:22 pm

டெக்சாஸ் வெள்ளம்: 25 பேர் பலி! 25 சிறுமிகளைக் காணவில்லை!

அமெரிக்காவில் - டெக்சாஸ் மாநிலத்தில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25 இளையவர்களைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாடலூப் ஆற்றில் தண்ணீர் அதன் சாதாரண நீர் மட்டத்திலிருந்து சுமார் 30 அடி உயரத்திற்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் கூறுகின்றன. காணாமல் போன இளையவர்களைத் தேட 14 உலங்கு வானூர்த்திகள் மற்றும் 12 ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மீட்க 500 பேர் கொண்ட 9 நிவாரணக் குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. டெக்சாஸில் உள்ள ஒரு கோடைக்கால முகாமில் 700 குழந்தைகள் கலந்து கொண்டனர் இவர்களில் 25 இளையவர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 13 பேர் இறந்துள்ளதாகவும் 20 இளையவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன குழந்தைகளைத் தேட 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 ட்ரோன்கள் அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக 500 பேர் கொண்ட ஒன்பது நிவாரணக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்தன. டெக்சாஸில் உள்ள ஒரு கோடைக்கால முகாமில் 700 இளையவர்குள் கலந்து கொண்டனர். இதில் 20 இளையவர்களைக் காணாமல் போயுள்ளனர். மழை காரணமாக கெர் கவுண்டியில் உள்ள குவாடலூப் நதி 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது. மோசமான வானிலை காரணமாக டெக்சாஸில் பல சுதந்திர தின கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு 5 Jul 2025 4:20 pm

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கிட்டுப்பூங்காவில் போராட்டம்

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது. இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பறிக்கப்பட்ட எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை உணர்வுபூர்வமாய் மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். சுதந்திர வாழ்வின் உரிமைக்காக நித்தமும் போராடிக் கொண்டிருக்கின்ற எமது தமிழினத்தை சட்டத்தின் பெயரால் அடக்கி ஒடுக்குவதற்கென்று ஆதிக்க அரசினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் இனவிடுதலையின் பெயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நாம் மறந்து விடலாகாது. நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதிகளில் மனிதாபிமானமின்றி கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான எமது உறவுகளை நினைவேந்துவதுடன், 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்றுவரை சிறைக்கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். தமிழினத்தை வேரறுக்கும் வரலாற்றின் முதல் அத்தியாயமான 'ஜூலைக் கலவரத்தின் சிறைப்படுகொலை நாளான ஜூலை 25ம் திகதியை முன்னிறுத்தி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க குரலற்றவர்களின் குரல்'அமைப்பு சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது. நினைவேந்தலை வலுப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்க ஈழத்து சூழலில் மட்டுமன்றி அயலகமான தமிழகம், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பன்னாட்டு தமிழ் உணர்வாளர்கள், தமிழர் அமைப்புகள், மனித உரிமைவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் ,சிவில் சமூக அமைப்புக்கள்,ஜனநாயகசக்திகள் எனஅனைத்து தரப்பினரிடமும் அந்தந்த நாடுகளில் இதேபோன்ற உணர்வுபூர்வ கவனக் குவிப்பு நிகழ்வுகளுக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் உரிமையோடு வேண்டி நிற்கின்றோம். எதிர்வருகின்ற, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று, ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச் சேர்ப்போம் என தெரிவித்தார்.

பதிவு 5 Jul 2025 4:13 pm

பயங்கரவாத தலைவர் மசூத் அசார் எங்கு உள்ளார்? பாகிஸ்தான் கொடுத்த புதிய தகவல்...

பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர், ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மசூத் அசார் தங்கி இருக்கும் இடம் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தானில் அவர் உள்ளாரா என்றும் தெளிவுப்படுத்தி உள்ளார்.

சமயம் 5 Jul 2025 4:11 pm

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” –அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனுடன் இணைந்து, இன்று கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவித்தது குறித்த கேள்வி? பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். அமைச்சர் கே.என்.நேருவின் […]

டினேசுவடு 5 Jul 2025 4:06 pm

ரிதன்யா தற்கொலை வழக்கு: வெளியில் சொல்ல முடியாத கொடுமை.. 2FIR -ல் அதிர்ச்சி தகவல்!

அவிநாசியில் திருமணமாகி 78 நாட்களான புது மணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்பொழுது அவரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 5 Jul 2025 4:06 pm

நிர்மலா சீதாராமன் VS வானதி சீனிவாசன்: பாஜக தேசிய தலைவர் பதவி யாருக்கு வாய்ப்பு?

பாஜகவில் முதல் முறையாக பெண் தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய தலைவர் நட்டா பதவிக்காலம் முடிவடைவதால், நிர்மலா சீதாராமன், டி.புரந்தேஸ்வரி, வானதி சீனிவாசன் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். இதில் யாருக்கு தேசிய தலைவர் பதவி கிடைக்கும் என்பது கேள்வியாகி உள்ளது.

சமயம் 5 Jul 2025 3:52 pm

ரஷ்ய இராணுவ விமானநிலையத்தைத் தாக்கியது

இன்று சனிக்கிழமையன்று உக்ரைன் இராணுவம் வோரோனேஜ் பகுதியில் உள்ள போரிசோக்லெப்ஸ்க் விமானநிலையத்தைத் தாக்கியதாகக் கூறியது. கியேவின் கூற்றுப்படி, அந்த தளத்தில் ரஷ்ய சுகோய் Su-34, Su-35S மற்றும் Su-30SM இராணுவ ஜெட் விமானங்கள் இருந்தன. அவை ஒரு கிளைட் குண்டு தாக்கியதாகக் கூறின. இதை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் உள்கட்டமைப்பைத் தாக்கும் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், உக்ரைனுக்கு எதிரான ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை ரஷ்ய கூட்டமைப்பை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தவும் பாதுகாப்புப் படைகள் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகின்றன என்று ஆயுதப்படைகள் டெலிகிராமில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளன. வோரோனேஜ் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் சேதம் ஏற்பட்டதாக அறிவித்தார். ஆனால் என்ன தாக்கப்பட்டது என்பதை அவர் கூறவில்லை. 94 உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அவற்றில் 34 வோரோனேஜ் பகுதிக்கு மேலே இருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை உக்ரைன் மேலும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது. இராணுவ ஆளுநர் ஓலே சினெகுபோவ், சுஹுய்வ் நகரில் 12 வயது சிறுவன் உட்பட குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளதாக டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

பதிவு 5 Jul 2025 3:47 pm

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிப்பட்டுள்ளது. நாளை முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் […]

டினேசுவடு 5 Jul 2025 3:45 pm

Armstrong: 'மக்கள் மனதில் அன்பையும் அறிவையும் விதைத்தது நம்ம ஆம்ஸ்ட்ராங்'- நயினார் நாகேந்திரன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் இதில் தமிழக  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், “ இன்று ஆம்ஸ்ட்ராங் நம்மோடு இல்லை. ஆனாலும் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிற தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருக்கிறார். ஆயிரக்கணக்கான பேர் சென்னையில் இன்று வழக்கறிஞராக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஆம்ஸ்ட்ராங்தான். அனைத்து சமூகத்தினரையும் நேசிக்கும் ஒரு தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். இப்படிப்பட்ட தலைவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக கலந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் உண்மையிலேயே அவர் செய்த தியாகம், உழைப்பு அவர் மக்களுக்காற்றிய பணிகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நயினார் நாகேந்திரன் முதன் முதலாக நிலவில் கால்பதித்தது அந்த  ஆம்ஸ்ட்ராங். மக்கள் மனதில் அன்பையும், அறிவையும் விதைத்தது இந்த  ஆம்ஸ்ட்ராங். எல்லாக் கட்சி தலைவர்களும் இன்றைக்கு  ஆம்ஸ்ட்ராங்கை போற்றுகிறோம்” என்று பேசியிருக்கிறார்.              Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 5 Jul 2025 3:41 pm

``நல்லதங்காள் சிலை உடைப்பு; புதிய சிலை வைக்க அனுமதி இழுத்தடிப்பு..'' - வத்திராயிருப்பில் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயில் அமைந்துள்ளது. இந்த நல்லதங்காள் தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன், தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும், கோயிலாகவும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. உடைந்த நல்லதங்காள் சிலையால் பக்தர்கள் வேதனையில்.. அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். நெல் வயல்களுக்கு மத்தியில் கண்மாய் கரையை ஒட்டி தனியே அமைந்துள்ளதால் மாலை 3 மணிக்குள் கோயில் பூட்டப்பட்டு விடும். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வறுமைக்குத் தன்னையும் தம்மக்களையும் பறிகொடுத்துத் தெய்வமான நல்லதங்காள்! இதனை அடுத்து பொதுமக்களின் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதமாக சிலையில்லாமல் கோயில் களையிழந்து காணப்படுவதாகவும், இதனால் தாங்களே சிலை வைத்து கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ள அர்ச்சனாபுரம் கிராம மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால் துறை ரீதியான நடவடிக்கைகள் மிக மந்தமாக இருப்பதாகவும் அனுமதி வழங்க ஆறு மாதத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறார் என அர்ச்சனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் இதனால் இந்து சமய அறநிலைதுறையை கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அர்ச்சனாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது புதிதாக செய்யப்பட்டுள்ள நல்லதங்காள் சிலையை கோயிலில் வைத்து, கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எல்லை சாமிகள்! -நல்லதங்காள்

விகடன் 5 Jul 2025 3:39 pm

கர்நாடகாவில் எகிறி அடிக்கும் கனமழை : மேட்டூர் அணை நீர்வரத்து கிடுகிடு உயர்வு - எவ்ளோ வரும் தெரியுமா?

ஒகேனக்கலில் இருந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் தற்போதைய நிலவரம் என்னவென்று பார்ப்போம்.

சமயம் 5 Jul 2025 3:31 pm

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் தீ பிடித்து எரிந்ததோடு கரும் புகையும் எழுந்தது. தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தை அடைந்ததும் மேலும் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தில் 20 பேர் லேசான காயங்கள் அடைந்தனர். அதில் மீட்பு நடவடிக்கையில் […]

அதிரடி 5 Jul 2025 3:30 pm

சென்னையில் பழுதடைந்த ஸ்மார்ட் கம்பங்கள்: நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்!

சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கம்பங்கள் பழுதடைந்து காணப்படுவதால் மீண்டும் அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது

சமயம் 5 Jul 2025 3:30 pm

தாய்லாந்து: நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய குடும்பம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தாய்லாந்தில் நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) நான்கு வயது இரட்டையர்களுக்குள் திருமணம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தட்சனப்போர்ன் சோர்ன்சாய் மற்றும் தட்சதோர்ன் என்ற இரட்டையர்களுக்கு தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. வைரலாகும் வீடியோவின்படி,இந்த திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் புத்த துறவிகள் கலந்து கொண்டுள்ளனர். rep image சிறுமி தன் இரட்டையர் சகோதரரின் கன்னத்தில் முத்தமிட்டு, பிறகு திருமண சடங்குகளைச் செய்து முடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை தொடர்ந்து புத்த துறவிகள் குழந்தைகளை ஆசீர்வதித்தனர். இந்த திருமண நிகழ்வு ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றதாக சிங்கப்பூரைச் சேர்ந்த Must Share News தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது குடும்பம் நான்கு மில்லியன் பாத் பணம் மற்றும் தங்கம் வரதட்சணையாக அளித்ததாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது. சிலர் இதனை ஒரு கலாசார மரபாக ஏற்றுக்கொண்டாலும், சிலர் விமர்சித்து வருகின்றனர். Thai family holds "wedding" for twin children May the twins grow up with all the blessings this symbolic ceremony hopes to bring. ✨ pic.twitter.com/pNUSzc4Hop — MustShareNews (@MustShareNews) July 4, 2025 இதுபோன்ற இரட்டையர் திருமணம் தாய்லாந்தில் ஒரு சடங்காக கருதப்படுகிறது. தாய்லாந்து மக்களின் நம்பிக்கையின்படி, இதுபோன்ற பெண்-ஆண் இரட்டையர்கள் கடந்த ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள் என்றும், அவர்கள் இந்த ஜென்மத்தில் இரட்டையர்களாக பிறந்ததால், எதிர்காலத்தில் ஏற்படும் துன்பங்கள், நோய்கள் போன்ற கெட்ட விஷயங்களை தவிர்க்க இந்த சடங்கு நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இது பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நலன் தரும் என்றும் அவர்களது வாழ்க்கை இனிமையாக அமையும் என்றும் குடும்பத்தினர் நம்புகின்றனர்.10வது பிறந்தநாளுக்கு முன் இச்சடங்கு நடத்தப்பட வேண்டும் என்பதே அங்குள்ள மரபாகும். இந்த திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகாது என்பதும், இது வெறும் சடங்காக மட்டுமே நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விகடன் 5 Jul 2025 3:19 pm

``நீதிக்காக வன்முறையில் ஈடுபடுவோம்'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்கள் மேடையில் பேச்சு

மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் 1-5 வது வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு போராட்டமும் நடத்தப்போவதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே ஆகியோர் அறிவித்ததோடு, ஒன்று சேர்ந்து மாபெரும் பேரணி நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். தாக்கரே சகோதரர்கள் இந்த பேரணி இன்று நடப்பதாக இருந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் நெருக்கடியால் பள்ளிகளில் மும்மொழி திட்டம் கட்டாயமாக்கப்படாது என்றும், மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற அரசாணை திரும்ப பெறப்படுவதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். இதையடுத்து இந்தி திணிப்பு போராட்டம் வெற்றி பெற்றதாக தாக்கரே சகோதரர்கள் அறிவித்தனர். அதோடு 5-ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்த போராட்ட பேரணியை வெற்றி விழா பொதுக்கூட்டமாக நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன் படி இன்று இரு கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் மும்பை ஒர்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒன்றாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராஜ் தாக்கரே, ''பால் தாக்கரே மற்றும் பலரால் செய்ய முடியாததை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்து முடித்து இருக்கிறார். என்னையும், உத்தவ் தாக்கரேயையும் ஒன்றாக சேர்த்துள்ளார். விதான் பவனில் வேண்டுமானால் நீங்கள் ஆட்சி செய்யலாம். ஆனால் தெருக்களில் எங்களது ஆட்சிதான் நடக்கிறது. மராத்தி மக்களின் கடுமையான ஒற்றுமை காரணமாகத்தான் இன்றைக்கு மும்மொழி கொள்கையை மாநில அரசு கைவிட்டுள்ளது. மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்கவே மும்மொழி திட்டத்தை திட்டமிட்டு கொண்டு வருகின்றனர். எல்.கே.அத்வானி மிஸ்ஷனரி பள்ளியில் தான் படித்தார். அதற்காக அவரது இந்துத்துவாவில் நாம் சந்தேகப்படுகிறோமா? பால் தாக்கரே ஆங்கில மீடிய பள்ளியில் படித்தார். ஆனால் ஒருபோதும் மராத்திக்காக சமரசம் செய்து கொண்டது கிடையாது. இந்தி திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் மராத்தி படித்தோம். இப்போது குழந்தைகள் ஆங்கிலம் படிக்கின்றனர். தென்னிந்திய நடிகர்கள் இன்றைக்கு ஆங்கிலம் படித்துவிட்டு சிறப்பாக இருக்கின்றனர்'' என்றார். `மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி திணிப்பு வாபஸ்'-வெற்றிக்கூட்டத்தில் பங்கேற்கும் தாக்கரே சகோதரர்கள்! அதனை தொடர்ந்து பேசிய உத்தவ் தாக்கரே, ''இன்றைக்கு நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். எங்களது பேச்சைவிட இந்த மேடை மிகவும் முக்கியமானது. பல ஆண்டுகளுக்கு பிறகு நானும், ராஜ் தாக்கரேயும் ஒரே மேடையில் வந்திருக்கிறோம். ராஜ் சிறப்பான ஒரு உரையை நிகழ்த்திவிட்டு சென்று இருக்கிறார். எனவே நான் பேசவேண்டியிருக்காது என்று நினைக்கிறேன். எங்களுக்கு இடையிலான இடைவெளியை நீக்கி இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருப்போம்'' என்றார். மராத்தி பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை பொருத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய உத்தவ் தாக்கரே, எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்போம் என்று தெரிவித்தார். தாக்கரே சகோதரர்களின் இந்த பொதுக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தாக்கரே சகோதரர்கள் கடைசியாக 2005-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயும், ராஜ்தாக்கரேயும் இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, அதிகாரப்போட்டி போன்ற காரணங்களால் ராஜ் தாக்கரே தனியாக பிரிந்து சென்றார். அதன் பிறகு இருவரும் ஒருபோதும் ஒரே மேடையில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது. இப்போதுதான் மராத்திக்காக ஒரே மேடையில் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் வரும் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகின்றனர். இக்கூட்டம் குறித்து மும்பை பா.ஜ.க மூத்த தலைவர் அசிஷ் ஷெலார் கூறுகையில், ''அவர்களுக்கு மொழி மீது பற்று கிடையாது. தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதால் குடும்பமாக சேர்ந்து வெற்றி பெற நினைக்கின்றனர்'' என்றார். ``மும்பையில் இந்தி எதிர்ப்பு பேரணி'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்

விகடன் 5 Jul 2025 3:06 pm

இரண்டாம் உலகப் போரில் தன்னை இழந்த இந்த நகரம் பெரிதாக பேசப்படாதது ஏன்? : ஓர் பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பிப்ரவரி 14 ஆம் தேதி. அன்பின் வெளிப்பாடாக சிகப்பு ரோஜாக்களை ஒருவருக்கொருவர் பரிசளித்து உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்த ஒரு நகரின் மக்களால் மட்டும் ஏனோ அந்த மகிழ்ச்சியை மனதார ரசிக்க இயலவில்லை.  உலகமே இரண்டாம் உலக போரின் நினைவுகளிலிருந்து கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது இந்த நகரம் மட்டும் அதை மறக்காமல் இன்றும் அந்த கொடிய காலங்களிலேயே தன்னை சிறை வைத்து கொண்டிருக்கிறது.  Dresden, Germany எப்படி மறக்க முடியும்?  இத்தனை ஆண்டுகள் கடந்தும் அன்று நடந்த போரின் தாக்கம் இங்கே குறைந்தபாடில்லை. அன்று பெய்த குண்டு மழைகளின் ஈரம் இன்றும் காயவில்லை. ஆம், இப்பொழுதும் இந்நகரத்தில் தோண்ட தோண்ட வெடிகுண்டு கிடைத்த வண்ணமே உள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் கூட ஒரு வெடிகுண்டை கண்டெடுத்துள்ளார்கள்.  அந்த இரண்டாம் உலக போரில் ஜப்பானில் அழிந்த ஹிரோஷிமா நாகசாக்கி பற்றி உலகம் அறிந்த அளவு இந்த நகரத்தை பற்றி யாரும் அறிந்ததில்லை.  ஆம், நாம் இன்று காணபோவது இரண்டாம் உலக போரில் தொலைந்து போன, தற்போதைய ஜெர்மனியில் உள்ள ட்ரெஸ்டன் (Dresden) நகரமே ஆகும். கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் தான் இந்த ட்ரெஸ்டன். பெர்லினுக்கு தெற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  இங்கு இறங்கியதும் முதலில் என் கண்களைக் கவர்ந்தது Frauenkirche சர்ச் தான். இதை உள்ளூர் மக்கள் அவர் லேடி சர்ச் என்றும் அழைக்கிறார்கள்.  அதன் அழகிய கட்டமைப்பும், உயரும், நிறமும் கண்ணை கொள்ளை  கொள்கிறது. அதன் அழகை ரசித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அதன் வரலாற்றை பற்றி அறிந்து பிரமிப்பு கொண்டேன்.  இன்று நாம் காணும் இந்த கண்கவர் தேவாலயம் இரண்டாம் உலகப் போரின் குண்டுவெடிப்பில் முற்றிலுமாக அழித்துவிட்ட ஓர் கட்டிடம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை.  இரண்டாம் உலக போரில் ஆயிரத்திற்கும் மேலான விமானங்கள் கிட்டத்தட்ட 4000 டன் வெடிகுண்டுகளை மூன்றே நாட்களில் இந்த நகரத்தில் கொட்டி தீர்த்தது. அதில் கிளம்பிய தீப்பிழம்புகள் 1600 ஏக்கர் பரப்பளவை விழுங்கியது. 25,000 மக்கள் இறந்ததாக கணக்கு கூறப்படுகிறது. அப்பேரழிவில் இந்த தேவாலயம் மட்டும் என் செய்யும்?  அதுவும் முற்றிலுமாக அழிந்தது, மிஞ்சியது நீங்கள் கீழே காணும் சுவரின் ஒரு பகுதி மட்டுமே. அப்படி அழிந்த அந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தைத்தான் இன்று தங்களின் தீவிர முயற்சியால் மீட்டெடுத்துள்ளார்கள் அந்நகரத்து மக்கள்.  இரண்டாம் உலகப் போரில் தன்னை இழந்த இந்த நகரம் GDR-ன் [ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு] கீழ் இருந்தபோது, ​​அவர்களால் இதை மீட்டெடுக்க முடியவில்லை, எனவே இந்த இடம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஒரு நினைவுச்சின்னமாக அதே நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு, இன்றைய ஜெர்மனியுடன் இணைந்த பிறகு, பல விஷயங்கள் மாறத்தொடங்கின. புது நம்பிக்கை கொண்ட அந்நகர மக்கள் அனைவரும் இதை உயிர்ப்பித்து எழுப்ப நிதி திரட்டும் முயற்சிகளைத் தொடங்கினார்கள். தேவாலயத்தை புதுப்பிக்க மட்டுமின்றி, அன்று இழந்ததை அச்சுஅசலாக அப்படியே மீண்டும் உயிர்ப்பிக்க செய்யவேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கம்ப்யூட்டர் உதவியை நாடி, இக்கட்டிடங்களில் இருந்து சிதறி கிடந்த பழைய கற்களுக்கான சரியான இடங்களை தேர்ந்தேடுத்தார்கள். புனரமைக்கும் பொழுது அந்த பழைய கற்களை குண்டுவெடிப்புக்கு முன்பு இருந்த அதே இடங்களில் பொருத்தி 2005ம் ஆண்டு முழுவதுமாக முடித்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்கள். நீங்கள் கூர்ந்து கவனித்தால், புதிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் இன்றும் அந்த பழைய சுவர் அப்படியே இருப்பது உங்களுக்கும் நன்கு புலப்படும். மேலே உள்ள புகைப்படத்தில் கருமை நிறத்திலுள்ள கற்கள் கொண்ட சுவர் தான் அவை. அதன் பழமையை பாதுகாக்கும் வண்ணம் அதை அப்படியே வைத்துள்ளார்கள்.  அவர்களின் அந்த முயற்சியினால் இன்று நாம் எந்த வித கட்டணமுமின்றி இந்த ஆலயத்தின் உள்ளே சென்று இதன் அழகை கண்டு ரசிக்கலாம். தங்கம் மற்றும் வெள்ளை நிறம் கலந்த அலங்காரங்களை கண்டு சற்று மதி மயங்கி தான் போனேன். அவ்வளவு அழகு.  ஒரு சிறிய கட்டணம் கட்டி இந்த தேவாலயத்தின் மேலுள்ள கோபுரங்களுக்கு சென்று அந்த நகரத்தின் அழகையும் ரசிக்கலாம். மேலே இருந்து எல்பா நதியும் அதன் மேல் கடந்து செல்லும் மேம்பாலங்களும் காண்பதற்கு அருமையாக இருக்கும்.  மற்றோரு துணுக்கு செய்தி. நீங்கள் காணும் இந்த பாலம் நான் சில வருடங்களுக்கு முன் சென்றிருந்த பொழுது க்ளிக்கியது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன் நான் சென்றிருந்த பொழுது இடிந்து இருந்தது. கடந்த ஜனவரி மாதம் இப்பாலம் விழுந்ததாகவும், அதை பராமரிக்கும் பணிக்காக தோண்டும் பொழுது மீண்டும் ஒரு வெடுகுண்டை இங்கு கண்டெடுத்ததாக கூறியபொழுது மேலும் ஓர் அதிர்ச்சி.  இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நகரங்களுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் நாம்  பல புது புது விஷயங்களை கற்று கொள்வோம். அவ்வளவும் வரலாற்று பொக்கிஷம். ஆம், இம்முறை நான் யூதர்களும் அவரது கடைசி இடங்களில் பாதிக்கப்படும் பிளாக் (Plague) பற்றி தெரிந்து கொண்டேன்.  இது 1992ம் வருடம் ஒரு ஜெர்மனிய ஆர்டிஸ்ட்டால் துவங்கப்பட்டது இந்த வழக்கம். Concentration கேம்பில் நாசிகளின் (Nazi) கையில் பல்லாயிர கணக்கான யூதர்கள் கொடுமை படுத்தப்பட்டு கொல்லப்பட்டது நாம் அறிந்ததே. அப்படி இறந்தவர்கள் கடைசியாக வாழ்ந்த இடங்களை கண்டறிந்து அங்கே அவர்கள் பெயரில் ஒரு கோல்ட் பிளேட் வைத்திருக்கிறார்கள்.   இங்கே நாம் காண்பது அப்படி கொல்லப்பட்ட நான்கு யூதர்களின் பெயர் பலகையே. இதில் அவர்கள் பிறந்த தினங்களும் கொல்லப்பட்ட தினங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது போன்ற வரலாற்று துணுக்குகள் நீங்கள் வலைத்தளங்களில் தேடினாலேயே கிடைத்து விடும். ஆனால், நீங்கள் எவ்வளவு தான் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம், அந்த போரின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்த மக்களின் வாரிசுகளிடம் உரையாடுவது. பெர்லின் சுவர் வீழ்ந்த பொழுது அங்கிருந்த மக்களின் நேரடி அனுபவங்களை தெரிந்து கொள்வது. அதுவே ஒரு பயணத்தின் தனிச்சிறப்பு.  அதுமட்டுமல்ல, நம்மூரை போலவே அங்கும் பல மண் சார்ந்த கதைகள் உண்டு. அது உண்மையா இல்லை வெறும் கட்டுக்கதையா என்று ஆராய்வதை விட்டு அதிலுள்ள நல்ல விஷயங்களையும் உணர்ச்சிகளையும் அனுபவிப்பதே ஒரு பயணத்தின் பேரானந்தம். அதுபோன்ற மண்ணின் கதைகளை அங்கேயே அல்லும் பகலும் வசிக்கும் மக்களை விட வேறு யாரால் துல்லியமாக வர்ணிக்க இயலும்? எனவே தான் நான் எங்கு பயணம் செய்தாலும் அங்கு வசிக்கும் மக்களிடம் நேரடியாக பேச முயல்வது உண்டு.  பெரும்பாலும் அம்மக்கள், தங்கள் நகரத்தை பற்றி மற்றவர் தெரிந்து கொள்ள வினையும்பொழுது பெருமை கொண்டு அனுபவங்களை பகிர முற்படுவார்கள்.  அப்படி நான் சந்தித்த ஒருவர் தான், டிரெஸ்டனில் பிறந்து வளர்ந்த தாமஸ் என்ற அந்த மனிதர். அவர் பேச்சிலேயே தன் நகரத்தின் பெருமை புலப்படுகிறது.  அக்காலங்களில், GDR-ஐ (German Democratic Republic) ஆட்சி புரிந்தது ஒரு கம்யூனிச அரசு. அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளின் பொருளாதார தடை இருந்த காரணத்தால், பல நாடுகள் அன்று அவர்களுக்கு மா, பலா, வாழை போன்ற சாதாரண கனிகள் கூட ஏற்றுமதி செய்ய மறுத்த காலம். எனவே அந்நாளில், எந்த கடையிலாவது வாழைப்பழம் விற்பதாக தகவல் தெரிந்தால் அது எப்படி அவர்களின் நகரத்தில் காட்டுத்தீ போல் பரவியது என்பது பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் தாமஸ். ஒரு சில நிமிடங்களிலேயே, அது விற்று தீர்ந்து விடும் என்றும், அடுத்த சரக்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும் கூறினார்!  ஆம், அவர்களுக்கு இதை வழங்கிய ஒரே நாடு அன்றைய கியூபா தான். எனவே, அவரது சிறுவயதில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட தருணங்களில், அவர் தனது குடும்பத்தினருடன் முதல்முதலில் பெர்லினுக்குச் சென்றதை சந்தோசத்துடன் பகிர்ந்தார். நான் கூட, அது ஏதோ  அவர்களது சொந்தங்களை சந்திப்பதற்காக என்று எண்ணினேன். பிறகு தான் தெரிந்தது, அதைவிட மிக முக்கியமாக நிறைய வாழைப்பழங்களை வாங்குவதற்காக சென்றதாக அவர் கூறியபோது சுற்றி இருந்த அனைவரும் சிரித்தது நன்கு நினைவிருக்கிறது! ஒரு முறை இங்கே ஒரு ஹோட்டலில் exotic ஜூஸ் என்று ஒன்றை மெனு கார்டில் பார்த்து ஆர்வத்துடன் ஆர்டர் செய்து காத்திருந்தேன். அப்படி என்ன exotic என்று.  வந்த பின் தான் தெரிந்தது அது நம்மூர் மேங்கோ ஜூஸ் என்று!!!   அதற்கு அர்த்தம் தாமஸ் கூறிய பின் தான் நான் உணர்ந்தேன்.  அந்த மனிதர் பகிர்ந்து கொண்ட மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், கிங் அகஸ்டோ II வின் கட்டைவிரலின் சக்தி பற்றியது.  அப்போது, ​​இது உண்மையா என்று நான் அவரிடம் கேட்டபோது, ​​தன்னிச்சையான அவர் கூறியது எனக்குத் தெரியாது. ஆனால் இது தலைமுறை தலைமுறையாக வாய்வழியே கடத்தப்படும் ஒரு கதை. என்பது மட்டுமே. என் அன்பு வாசகர்களே, அந்த கதையின் நம்பகத்தன்மையை ஆராய எனக்கு மனமில்லை. அது ஒரு கட்டுக்கதையாகவே இருக்கட்டும், ஆனால் அது மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது, எனவே இங்கே அதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். அது என்னவென்றால், நான் கூறிய வரலாற்று சிறப்புமிக்க “அவர் லேடி” சர்ச்சுக்கு மிக அருகில் Bruehi’s Terrace என்று ஒரு இடம் உள்ளது. ஒரு பழைய கோட்டைச் சுவர்களுக்கு மேல் உள்ள அதில் நீங்கள் நடக்கும் பொழுது ஒரு சில இரும்புத் வேலிகளை காண நேரிடும். இந்த இரும்பு வேலிகளின் ஓர் இடத்தில ஒரு பெரிய கட்டைவிரல் அளவிற்கு நசுங்கி இருக்கும். விஷயம் என்னவென்றால், ஒரு நாள் இரண்டாம் அகஸ்டோ மன்னர், இந்த இரும்பு வேலியின் அருகே நின்று எல்பா நதியை ரசித்து கொண்டிருந்ததாகவும், தனது சக்தியை சுற்றியிருந்த நண்பர்களிடம் வெளிப்படுத்த அவர் வேலியின் கம்பிகளை அழுத்தியதாகவும் அது தான் இன்றும் அந்த இரும்பு வேலிகளில் அவரது கட்டைவிரலின் அடையாளத்தைக் காண்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. நான் முன்பே குறிப்பிட்டது போல, இது கட்டுக்கதையா அல்லது உண்மைக்கதையா என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு மண்ணின் மக்களுக்குள்ளும் இது போன்ற பல கட்டுக்கதைகள் நிரம்பி வழிவதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.  உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பல சுவாரசியமான தகவலுக்கு நீங்ககளும் எங்கு சென்றாலும் அங்குள்ள உள்ளூர் மக்களிடம் பேச்சு கொடுங்கள். அவர்கள் அள்ளி வழங்கும் வரலாற்று பொக்கிஷத்தை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.  விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

விகடன் 5 Jul 2025 3:04 pm

ஜப்பானில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ”மங்கா நாவல்” கணிப்பு – அச்சத்தில் சுற்றுலாப் பயணிகள்!

ஜப்பானில் இன்று (ஜூலை 5) ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஒரு மங்கா நாவல் கணித்ததாக பரவிய தகவல்கள் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்கா என்பது ஜப்பானிய கிராஃபிக் நாவல்கள் அல்லது காமிக்ஸ் ஆகும். ஓய்வுபெற்ற மங்கா கலைஞரும் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் ரியோ டாட்சுகி எழுதிய The Future I Saw எனும் மறுபதிப்பு, பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளை பெரிய சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கிறது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி, பலரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, ஹாங்காங், தைவான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த வதந்தி அதிகம் பகிரப்பட்டுள்ளது. சுற்றுலா நிறுவனங்கள் கூட, பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி வருகின்றன. மங்கா புத்தகம் எதை கணித்தது? The Future I Saw என்ற மங்கா புத்தகத்தில், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலுள்ள கடற்கீழ் பகுதியிலொரு பிளவு ஏற்பட்டு, 2011ல் ஏற்பட்ட பேரலையை விட மூன்று மடங்கு பெரிய பேரலை உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை என்றாலும், சிலர் இதை உண்மையான முன்னறிவிப்பாகவே எடுத்துக்கொண்டு பீதியில் உள்ளனர். ரியோ தட்ஸுகி, 2011ல் ஜப்பானை உலுக்கிய தொஹோகூ நிலநடுக்கம் மற்றும் பேரலை போன்ற பல நிகழ்வுகளை முன்னதாக கணித்ததாக நம்பப்படுகிறார். மேலும், பிரின்சஸ் டயானா மரணம், COVID-19 பரவல் போன்றவற்றையும் அவர் கணித்ததாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? ஜப்பானில் நிலநடுக்கங்களை நேரம், இடம், அதிர்வு அளவு என தெளிவாக முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனமும், “இதுபோன்ற நேரடி நிலநடுக்க கணிப்பு தவறான தகவல்” எனவும், மக்கள் வதந்திகளால் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. சுற்றுலா மீது தாக்கம் இந்த வதந்திகள் காரணமாக ஜப்பான் செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏப்ரலில் 3.9 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் வந்திருந்த நிலையில், மே மாதத்தில் ஹாங்காஙில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை 11% குறைந்துள்ளது. ஹாங்காங் ஏர்லைன்ஸ், கிரேட்டர் பே ஏர்லைன்ஸ் போன்றவை ஜப்பான் விமானங்களை ரத்து செய்துள்ளன. நிபுணர்கள் எச்சரிக்கை டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நவோயா சேக்கியா இதுகுறித்து கூறுகையில், ஆதாரமற்ற கணிப்புகளில் கவனம் செலுத்துவதை விட, எந்த நேரத்திலும் பேரழிவுகளுக்குத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார். 2055க்குள் ஜப்பான் நன்காய் பள்ளத்தாக்கில் இருந்து 9.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட 80% வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். ஆனால் இதற்கும் தற்போதைய வதந்திகளுக்கும் எந்த சம்பந்தம் இல்லை எனவும், தவறான தகவல்களை நம்பி பயப்பட வேண்டாம் எனவும் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒலி அலையால் உடல் எடையைக் குறைக்க முடியுமா? ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

விகடன் 5 Jul 2025 3:02 pm

தமிழ்நாடு நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்!

Nannilam Magalir Nila Udamai Thittam | பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்காக நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் தமிழக அரசின் 'நன்னிலம் மகளிர் நல உடைமைத் திட்டம்' குறித்த முழுத் தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

சமயம் 5 Jul 2025 3:01 pm

TVK : 'நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!' - பனையூரில் விஜய் கர்ஜித்ததின் பின்னணி என்ன?

'தவெக செயற்குழுக் கூட்டம்!' தவெகவின் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. தவெக தலைமையில்தான் கூட்டணி. விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறுதியிட்டு கூறுவதற்காகவே இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். தவெக செயற்குழுக் கூட்டம் விஜய்யின் திட்டம் என்ன? செயற்குழுவில், நாங்கள் என்ன திமுகவா அதிமுகவா? பா.ஜ.கவுடன் என்றைக்கும் கூட்டணி கிடையாது என விஜய் கர்ஜித்ததன் பின்னணி என்ன? தனித்துப் போட்டியிடுவதற்காக தவெக செய்து வரும் களப்பணிகளின் தற்போதைய நிலைமை என்ன? 'பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை...' கட்சி தொடங்கி கடந்த அக்டோபரில் முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார் விஜய். அந்த மாநில மாநாட்டிலேயே கொள்கை எதிரி பா.ஜ.க. அரசியல் எதிரி தி.மு.க என விஜய் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில்தான் அரசியலும் செய்தார். விளம்பர மாடல் அரசு, கபடவேடதாரிகள் என ஒவ்வொரு அறிக்கையிலும் திமுகவை அட்டாக் செய்தனர். தவெக விஜய் - பரந்தூர் பரந்தூருக்கு நேரடியாக சென்று திமுகவுக்கு எதிராகப் பேசினார். இருநூறு தொகுதிகளில் வெல்வோம் என இறுமாப்போடு பேசுகிறார்கள் என ஸ்டாலினை நேரடியாக தாக்கிப் பேசினார். திமுகவுக்கு எதிராக இத்தனை வலுவாக பேசினாலும், பா.ஜ.கவுக்கு எதிராக கொஞ்சம் மெதுவாகவே வாள் வீசினார் விஜய். திருப்பரங்குன்றம் பிரச்சனையிலெல்லாம் வாயே திறக்காமல் இருந்தார். அதிமுகவை சீண்டவே இல்லை. இதெல்லாம் நிறைய யூகங்களுக்கு வழிவிட்டது. திமுக எதிர்ப்பை முன்னிறுத்தி அதிமுக, பா.ஜ.கவின் NDA கூட்டணிக்கு விஜய் செல்வார் என பேசப்பட்டது. ஆனால், தவெக முகாமில் வேறு மாதிரியான மனநிலை இருந்தது. 'எங்களுக்கு யதார்த்தம் புரியும். நாங்கள் கூட்டணிக்கு தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், அதற்காக பா.ஜ.கவோடு கூட்டணி செல்லமாட்டோம். அதிமுகவோடு கூட்டணிக்கு செல்வதைப் பற்றி யோசிக்கலாம். ஆனால், அவர்கள் பா.ஜ.கவோடு நிற்கும் வரை அதற்கும் வாய்ப்பில்லை. அதிமுக - பா.ஜ.க கூட்டணி இப்படியே சுமூகமாக செல்லும் என நினைக்கவில்லை. டிசம்பரில் முக்கிய முடிவுகளை எடுப்போம்.' இதுதான் தவெகவின் முக்கிய நிர்வாகிகளின் மைண்ட் செட்டாக சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்தது. விஜய் 'பா.ஜ.கவின் விருப்பம்!' ஆனால், கடந்த சில நாட்களாக விஜய்யை நோக்கிய NDA கூட்டணிக்கான அழைப்புகள் அதிகமானது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமில்லாமல் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்திரராஜன் போன்றோரும் வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்தனர். அமித் ஷா கொடுத்த பேட்டியிலுமே விஜய் குறித்து நெகட்டிவ்வாக எதையுமே பேசவில்லை. 'இன்னும் நேரமிருக்கிறது. பொறுத்திருந்துப் பாருங்கள்.' என்றுதான் கூறியிருந்தார். இதெல்லாம் விஜய்யை NDA கூட்டணி பக்கமாக இழுப்பதற்கான வேலைகள் திரைமறைவில் வேகமாக நடக்கிறது என்ற தோற்றத்தை உண்டாக்கியது. ஆதவ் அர்ஜூனா ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ் மோகன் என முக்கிய நிர்வாகிகளை வைத்து கொள்கை எதிரிகளோடு கூட்டணி இல்லை என பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பேச வைத்தனர். அப்படியிருந்தும், அந்த கூட்டணிப் பற்றிய பேச்சுகள் அடங்கவில்லை. 'விஜய் குறிவைக்கும் வாக்கு வங்கி!' தவெக முகாம் மூன்று முக்கிய தரப்புகளை வாக்கு வங்கியாக குறிவைக்கிறது. தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் என இந்த மூன்று தரப்பையும் தங்களுடைய வலுவான வாக்கு வங்கியாக மாற்ற வேண்டும் என்றுதான் வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் திமுக கூட்டணியிடமே இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசே முழுப் பொறுப்பையும் கொண்டுள்ள, வக்ஃபு சட்டத் திருத்த மசோதா சம்பந்தமான பிரச்னையில் திமுகவை முதன்மை வில்லனாகக் காட்டி தொடர்ச்சியாக அறிக்கைகளையும் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினர். tvk vijay திமுகவின் சிறுபான்மையினர் வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்தி தங்கள் பக்கமாக அதை மடைமாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் தவெகவின் திட்டம். அதனால்தான் பா.ஜ.கவின் NDA கூட்டணிக்கு தவெக செல்வதாக எழுந்த பேச்சை விஜய்க்கு வியூகம் வகுக்கும் தரப்பு ரசிக்கவில்லை. இதன்மூலம் தாங்கள் குறிவைக்கும் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதில் சிக்கல் உண்டாகும் என நினைத்தனர். அதனால்தான் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி பா.ஜ.கவோடு என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தீர்மானமாக நிறைவேற்றியிருக்கின்றனர். அந்தத் தீர்மானத்தையும் விஜய்யே வாசித்து, 'நாங்கள் என்ன திமுகவா அதிமுகவா பா.ஜ.கவோடு கூட்டணி செல்ல?' எனக் கேள்வியும் கேட்டதன் மூலம் சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற முடியும் என வலுவாக நம்புகிறது பனையூர் தரப்பு. 'பூத் கமிட்டி பணிகள்...' விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தனித் தீர்மானமாகவும் நிறைவேற்றியிருக்கின்றனர். ஆக, தங்கள் தலைமையை ஏற்று வரும் கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளும் மனநிலையில் இப்போது இருக்கின்றனர். அதற்கான வேலைகளையுமே தொடங்கியிருக்கின்றனர். செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மா.செக்கள் அத்தனை பேரும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழுள்ள தொகுதிகளின் பூத் கமிட்டிப் பொறுப்பாளர்களின் பட்டியலையும் எடுத்து வந்திருந்தனர். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலோடு கூட்டத்துக்கு வந்த மா.செக்கள் எந்தெந்த பூத்களில் எத்தனை வாக்குகள் இருக்கிறது? யாரை பூத் கமிட்டிப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள்? அவருடைய பின்னணி மற்றும் தொடர்பு விவரங்கள் என எல்லா டீடெய்ல்களும் அடங்கிய பட்டியலை மா.செக்கள் பொதுச்செயலாளர் ஆனந்திடம் ஒப்படைத்திருக்கின்றனர். TVK Vijay முதற்கட்டமாக கோயம்புத்தூரில் நடத்தியதைப் போல, மேற்கொண்டு நான்கு மண்டலங்களில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர். அடுத்தக்கட்டமாக வேலூரில் வட மாவட்டங்களுக்கான பூத் கமிட்டி கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடுகளைத் தொடங்கியிருந்தனர். அதற்குள்ளாகத்தான் ஆகஸ்ட்டில் மீண்டும் ஒரு மாநில மாநாட்டை நடத்தும் முடிவுக்கும் வந்ததால், வேலூர் கூட்டம் இப்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைத் தாண்டி தமிழகம் முழுவதும் பேசுபொருளாகும் வகையில் நிகழ்வுகளை நடத்த வேண்டும் என முடிவெடுத்துதான் மாநாட்டுக்கும் சுற்றுப்பயணத்துக்கும் திட்டமிட்டிருக்கின்றனர். 'தவெக பூத் கமிட்டி சிக்கல்கள்!' வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து அனைவரையும் பிரமிப்படைய செய்வோம் என கட்சியின் இரண்டாமாண்டு தொடக்க விழாவில் விஜய் பேசியிருந்தார். அவர் பேசியே நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், களத்தில் யதார்த்தம் வேறாக இருக்கிறது. 69000 பூத்களுக்கு பூத்துக்கு தலா ஒரு பொறுப்பாளர் என 69000 பொறுப்பாளர்களை மட்டும்தான் மா.செக்கள் நியமித்திருக்கிறார்கள். பூத் கமிட்டி பட்டியலோடு நிர்வாகிகள் அந்தப் பொறுப்பாளர்களுக்கு கீழ் 10 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டம். இதை மனதில் வைத்துதான் ஒவ்வொரு தெருவிலும் நம்முடைய நிர்வாகிகள் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்றும் செயற்குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு கீழ் 10 உறுப்பினர்களை நியமிக்கும் வேலையை பெரும்பாலான மா.செக்கள் இன்னும் செய்து முடிக்கவில்லை. தலைமையும் பூத் பொறுப்பாளர்களின் நியமனத்தை கவனிப்பதோடு நிறுத்திக் கொள்கிறது. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனத்திலுமே சில மா.செக்கள் அவசர அடி அடித்திருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் களத்தில் திமுக, அதிமுகவுடன் போட்டி போடுவது பெரும் சவாலாக மாறிவிடும் என சில நிர்வாகிகளே கவலை தெரிவிக்கின்றனர். Vijay: `பா.ஜ.க-வோடு சேரவே மாட்டேன்; என் தலைமையிலேயே கூட்டணி!' -செயற்குழுக் கூட்டத்தில் விஜய் பளிச் 'வீடு வீடாக சேகரிக்கப்படும் ரிப்போர்ட்!' செயற்குழுக் கூட்டத்தில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் வேலையிலும் மா.செக்கள் இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் 1 கோடி உறுப்பினர்களை செயலி மூலம் இணைத்துவிட்டோம் என தவெகவின் ஐ.டி.விங் மூலம் விளம்பரம் செய்திருந்தனர். ஆக, இன்னும் 1 கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம். அதற்காக சத்தமில்லாமல் ஒரு வேலையையும் செய்து கொண்டிருக்கின்றனர். 'ஓரணியில் தமிழ்நாடு' என திமுகவினர் வீடு வீடாக சென்று மக்களை சந்திப்பதை போன்ற ஒரு அசைன்மெண்டும் தவெக நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் குறைதீர் விண்ணப்பம் 'மக்கள் குறைதீர் விண்ணப்பம்' என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியிலும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து அவர்களின் வாக்காளர் அட்டை விவரங்களோடு, அந்தப் பகுதியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். கூடுதலாக 2026 இல் மாற்றம் வர வேண்டும் என விரும்புகிறீர்களா என்ற கேள்வியையும் கேட்கிறார்கள். அதற்கு மக்களின் பதில் என்னவோ அதையும் குறித்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மக்களின் தற்போதைய மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும் என நினைக்கின்றனர். இன்னும் 10-15 நாட்களுக்குள் எவ்வளவு மக்களை சந்திக்க முடியுமோ சந்தித்து அந்தப் பட்டியலை தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவுப் பிறப்பித்திருக்கின்றனர். இந்தப் பணியிலும் தலைமையிடம் நல்லப் பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக அவசர அடி அடித்து வேக வேகமாக பட்டியலை ஒப்படைக்கும் வேலைகளில் சில மா.செக்கள் இறங்கியிருக்கின்றனர். விஜய் 'கூட்டணிக் கணக்குகள்!' எங்கள் தலைமையில்தான் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். விஜய்க்கு வட மாவட்டங்களில் தலித் இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருப்பதாக தவெக தரப்பு நம்புகிறது. அதனால், விசிக தங்கள் பக்கம் வந்தால் வட மாவட்டங்களில் நிறைய தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிற விருப்பமும் தவெகவுக்கு இருக்கிறது. அதனால்தான் மாநாட்டிலிருந்தே 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு!' என பெரிய தூண்டிலை விஜய் விரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், திருமா இன்னும் பிடிகொடுக்கவில்லை. அவ்வபோது திமுகவை விமர்சித்தாலும், திமுகவும் நாங்களும் கொள்கைக் கூட்டணியில் இருக்கிறோம் என விரிசலை உடனடியாக பூசி விடவும் செய்கிறார். Vijay : மக்கள் முதல்வர்னு எப்படி நாக்கு கூசாமா சொல்றீங்க? - ஸ்டாலினை கடுமையாக சாடிய விஜய்! ஆக, விஜய்யை நம்பி எந்தக் கட்சி வரப்போகிறது என்பதே பெரிய கேள்விக்குறிதான். இப்போதைக்கு முஸ்தபாவின் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே விஜய்யோடு இருக்கிறார்கள். விஜய் பிறந்தநாளுக்கு பனையூர் வாசலில் போஸ்டர் அடித்த கையோடு 3-5 தொகுதிகளை தாங்கள் எதிர்பார்ப்பதாக தவெக தலைமையிடம் விருப்பமும் தெரிவித்திருக்கின்றனராம். விஜய் 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு, திமுகவும் அதிமுகவுமே இங்கே மாறி மாறி ஆட்சியமைத்திருக்கின்றன. மூன்றாவதாக ஒரு அணியை கட்டமைத்த யாருடைய கனவும் இங்கே பலித்ததில்லை. இதோ விஜய் இப்போது தன்னை ஒரு மாற்று சக்தியாக முன்னிறுத்தி மூன்றாவது அணியை கட்டமைக்கும் வேலையில் இறங்கப்போவதாக சொல்கிறார். இமயமலையை முதுகில் கட்டி இழுக்கும் சவால் இது. விஜய் என்னவாகப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம். Vijay: 'தலைமைச் செயலகம் போக விஜய் மட்டும் தேதி குறிக்கட்டும்....! - பரந்தூர் விவசாயிகள் ரியாக்சன்

விகடன் 5 Jul 2025 2:55 pm

Nipah virus: கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ் - சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகின்றது என்பதால் மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் கடுமையான மூளைக்காய்ச்சல் (AES) நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 18 வயது சிறுமிக்கும், தற்போது மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) ஜூலை 4, 2025 அன்று 38 வயது பெண்ணுக்கு நிபா தொற்று இருப்பதை உறுதி செய்தது. மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த சிறுமியின் இறுதி பரிசோதனை முடிவு இன்னும் பெறப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது. மருத்துவர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தல் நிபா தொற்றால் உயிரிழந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? மலப்புரம், பாலக்காடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகள் உயர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். நிபா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், ”நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடந்த சில நாள்களாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முப்பது குழுக்கள் மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன. போலீசாரின் உதவியுடன் தொடர்புகளை கண்டறியும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ஹெல்ப்லைன் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்திருக்கிறார். கேரளா டு UK: பக்கிங்ஹாம் அரண்மனையில் பணிபுரியும் இந்திய வம்சாவளிப் பெண் - யார் இந்த மூனா ஷம்சுதீன்?

விகடன் 5 Jul 2025 2:48 pm

மணிப்பூர் மக்களுக்கு ஷாக்! நிவாரண முகாம்கள் கலைக்க மாநில அரசு முடிவு

மணிப்பூரில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிவாரண முகாம்களை கலைப்பதற்கு மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

சமயம் 5 Jul 2025 2:43 pm

``அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல'' - முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன. இப்போதைக்கு தி.மு.க கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மறுபக்கம், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மட்டும் உறுதியாகியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு செல்லும் என்று பேச்சு அடிபட்ட வேளையில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவானதால் இனி விஜய், பா.ஜ.க அங்கம் வகிக்கும் அ.தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது. எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் லோகோ இதற்குப் பதிலளிக்கும் வகையில், சுயநலத்துக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி செல்ல தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ இல்லை நாம். என த.வெ.க செயற்குழு கூட்டத்தில் நேற்று வெளிப்படையாகப் போட்டுடைத்த விஜய், த.வெ.க தலைமையில் கூட்டணி அமையும் என்றும் கூறினார். மேலும், இக்கூட்டத்தில் விஜயை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார், ஒருவேளை இக்கூட்டணி வெற்றிபெற்றால் அது அ.தி.மு.க ஆட்சியாக இருக்குமா அல்லது பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியாக இருக்குமா என்ற கேள்விகளும் அ.தி.மு.க-வை நோக்கி எழுந்து கொண்டிருக்கிறது. `பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் இவ்வாறான அரசியல் பரபரப்புக்கு மத்தியில், தேர்தலை எதிர்நோக்கி ஜூலை 7-ம் தேதி முதற்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயண பாடலையும், லோகோவையும் சென்னையில் இன்று வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி , சென்னைக்கு அமித் ஷா வந்தபோது, `அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமையேற்கும், அ.தி.மு.க ஆட்சியமைக்கும், முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்' என்று தெளிவாகத் தெரிவித்தார். இதில், அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல. என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி மேலும், விஜய்யின் நேற்றைய அறிவிப்பு குறித்த கேள்விக்கு, அது அவருடைய முடிவு எனப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தி.மு.க ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் தேர்தலில் கூட்டணியமைத்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். தி.மு.க அகற்றப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். என்றார். `தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

விகடன் 5 Jul 2025 2:31 pm

``காவல்துறையினர் அடித்துக் கொன்றனர்'' - நீதிமன்றத்தில் முறையிட்ட உறவினர்; 6 பேர் மீது FIR பதிவு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் வாசிம்(22). இவர் ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மதோபூரில் உள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக வாசிமின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது காவல்துறை அதை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வாசிமின் உறவினரான அலாவுதீன் நடுவர் நீதிமன்றத்தில் 10 மாதத்துக்குப் பிறகு மனு தாக்கல் செய்திருக்கிறார். Gym அதில், ``கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாலையில் வாசிம் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​சப்-இன்ஸ்பெக்டர் சர்த் சிங், கான்ஸ்டபிள்கள் சுனில் சைனி மற்றும் பிரவீன் சைனி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது தடிகளால் கொடூரமாகத் தாக்கி அவரை அருகில் இருந்த குளத்தில் வீசியிருக்கின்றனர். அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட உள்ளூர்வாசிகள் சம்பவத்தைப் பார்த்திருக்கின்றனர். அவர்கள் வாசிமை மீட்க முயன்றபோது, ​​தலையிட்டால் போலீசார் அவர்களைச் சுட்டுவிடுவதாக மிரட்டியிருக்கின்றனர். அடுத்த நாள், கங்னஹார் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தபோதுகூட அவர்கள் அதை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில்,``வாசிம் ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாலை ஸ்கூட்டரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது காவல்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் இருந்தனர். காவல்துறை அதிகாரியை பார்த்ததும் வாசிம் பைக்கை நிறுத்திவிட்டு சடலம் கிடந்த குளத்தில் குதித்துவிட்டார். நீதிமன்றம் உத்தரவு அப்போதே அவர் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார். அவரின் வாகனத்தை பரிசோதித்தபோது அதில் மாட்டிறைச்சி இருந்தது. அப்போது வாசிமின் உறவினர்கள் உள்பட ஏராளமானோர் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர். அவர்கள் போலீஸாரைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயன்றனர். வாசிமை காவல்துறை அதிகாரிகள் அடித்து சுட்டுக் கொன்றதாகவும், குளத்தில் அவரின் உடலை வீசியதாகவும் குற்றம் சாட்டினர் எனக் குறிப்பிட்டிருந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட உத்தரகாண்ட் தலைமை நீதிபதி, ``இரு தரப்பு வாதத்திலும் வாசிம் உயிரிழக்கும்போது காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்திருக்கின்றனர். நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டதாகவும், அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் கடினமான பொருளால் ஏற்பட்டதாகவும் பிரேத பரிசோதனையில் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. எனவே வாசிம் இறக்கும்போது உடன் இருந்த ஆறு அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்து முறையாக விசாரிக்க வேண்டும். என உத்தரவிட்டுள்ளார். Custodial Death: ``நானும் அம்மாவும் அழுதுகொண்டே இருக்கிறோம் - முனைவர் நிகிதா வெளியிட்ட ஆடியோ!

விகடன் 5 Jul 2025 2:27 pm

ரஜினியின் கூலி -ரிலீஸூக்கு முன்பே சாதனை!

சன் பிக்சர்ஸின் கூலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் சாதனை படைக்கிறது, ரஜினிகாந்த் படங்களில் முக்கியமான ஒன்றாக மாற உள்ளது.

ஆந்தைரேபோர்ட்டர் 5 Jul 2025 2:25 pm

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி”- புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், “தமிழ் மாநில பகுஜன் சமாஜ்”

ஆந்தைரேபோர்ட்டர் 5 Jul 2025 2:09 pm

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’– 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், மும்மொழி கொள்கையை பாஜக வாபஸ் பெற்ற நிலையில், போராட்டம் வெற்றி கொண்டாட்டமாக மாறியது. மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள், பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டம் வோர்லியில் உள்ள NSCI டோமில் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட […]

டினேசுவடு 5 Jul 2025 2:09 pm

Fire Nahi Full On Wildfire! Pushpa 2: The Rule Premieres on &pictures on 6th July

Mumbai: Fire Nahi, Wildfire Hai! He rose from dust with nothing to his name, fought his way up one battle at a time, and now Pushpa Raj returns — stronger than ever — in Pushpa 2: The Rule, set for its &pictures premiere on Sunday, 6th July at 7.30 PM. Starring the superstar Allu Arjun along with the stunning Rashmika Mandanna, this is not just a story — it’s a full-on storm of action, power, and heart. Catch the fiery spirit of Pushpa with the channel premiere of Pushpa 2: The Rule on 6th July at 7.30 pm only on &pictures.Pushpa 2: The Rule isn’t just a story of power, it’s a story of survival, love, and staying true to yourself in a world that constantly tries to break you. The first chapter of Pushpa revolutionized the underdog narrative among the audience and got the entire world to root for him. The anticipation ran all time high with the next chapter and brought in a strong wave of thrill among the audiences. With the channel premiere of Pushpa 2: The Rule on &pictures, the entire nation will feel the fire of Pushpa Raj all over again! Rashmika Mandanna, on returning as Srivalli says, Playing Srivalli has been a truly enriching experience because she represents a blend of quiet strength and emotional depth. In Pushpa 2, her character evolves significantly—she’s no longer just a supportive presence, but someone who takes a stand when it truly matters. There’s a pivotal scene where she stands up for Pushpa, and it’s not just about their relationship, but about her own conviction and courage. That moment really reflects how much she has grown, and as an actor, portraying that transformation was both relatable and rewarding. Director of the film, Sukumar added, Cinema connects with people in so many ways, and television brings that experience directly to their most personal space — their home. This film is very close to my heart — every frame, every emotion was created with love and passion. I want people to sit with their families and experience the journey of Pushpa again, relive the action, emotion, and drama, and enjoy it from the comfort of their homes.” With hit music, unforgettable characters, powerful storytelling, and moments that will make you feel every emotion — Pushpa 2: The Rule, is a perfect film to experience with your family.Catch the Channel Premiere of Pushpa 2: The Rule on Sunday, 6th July at 7.30 pm, only on &pictures – kyunki yahaan hota hai entertainment On Nahi, Full On!-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Jul 2025 2:02 pm

பாகிஸ்தானில் மைக்ரோசாஃப்ட் அலுவலகம் மூடல்: பின்னணியும் விளைவுகளும்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், பாகிஸ்தானில் தனது 25 ஆண்டுகால செயல்பாட்டை முடித்துக்கொண்டு அலுவலகத்தை மூடியுள்ளது. 2023-ஆம் ஆண்டுக்குப்

ஆந்தைரேபோர்ட்டர் 5 Jul 2025 1:57 pm

மகாராஷ்டிராவில் இணைந்த எதிரெதிர் துருவங்கள்: ஒரே மேடையில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த ராஜ் தாக்கரேவும் உத்தவ் தாக்கரேயும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்துள்ளனர்.

சமயம் 5 Jul 2025 1:49 pm

நிதிஷை டைவர்ஸ் பண்ண போகும் இனியா.. சுதாகருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பாக்கியலட்சுமி சீரியலில் இனி!

பாக்கிலட்சுமி சீரியல் நாடகத்தில் மகளின் வாழ்க்கைக்காக நியாயம் கேட்க வந்த கோபி, பாக்யாவை அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டு, மீண்டும் நிதிஷுடன் இனியாவை சேர்த்து வைக்க திட்டமிடுகிறான் சுதாகர். ஆனால் சீதா இந்த விஷயத்தில் வேறொரு முடிவை எடுக்கிறாள். இதனையடுத்து அடுத்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 5 Jul 2025 1:45 pm

Zee Action Brings A Blockbuster Toofani Ride With The World Television Premiere Of Night Drive On Tuesday, 8th July At 7:30 pm

Mumbai: Zee Action, your go-to destination for adrenaline-pumping action, is all set to take you on a suspenseful journey with the World Television Premiere of Night Drive! This gripping crime thriller unravels the story of an ordinary night that spirals into a web of danger, drama, and unexpected twists. With its edge-of-the-seat narrative, powerful performances, and nail-biting moments, Night Drive promises a paisa vasool experience packed with action and intrigue, premiering Tuesday, 8th July at 7:30 PM, only on Zee Action!Night Drive is a gripping crime-action entertainer that follows a young couple whose simple late-night drive turns into a full-blown nightmare. What starts off as a quiet outing soon explodes into a rollercoaster of crime, chase, and unexpected twists. Packed with edge-of-the-seat moments, gripping drama and solid performances, this duhadaar thriller delivers dhamakedaar entertainment for fans of high-stakes action and suspense!Directed by Vysakh renowned for the 2016 blockbuster Pulimurugan Night Drive features a talented ensemble cast including Anna Ben, Roshan Mathew and Indrajith Sukumaran. Known for his knack for crafting engaging thrillers, Vysakh brings his signature style to this gritty, fast-paced narrative. Roshan Mathew impresses with his versatility, while Anna Ben lends a refreshing presence to the screen. Indrajith Sukumaran delivers a powerful performance as a determined cop. Penned by Abhilash Pillai, the film skillfully blends action, emotion and mystery against an urban backdrop.With its tightly-woven plot, standout performances and relentless pace, Night Drive offers a cinematic experience that’s both intense and unforgettable. The film keeps viewers hooked as it dives into a night filled with danger, unexpected turns, and emotional depth. A perfect watch for those who enjoy action with a dose of intrigue catch it all unfold, only on Zee Action!Tune in this 8th July at 7:30 PM for the World Television Premiere of Night Drive, only on Zee Action, an adrenaline-charged thriller that will keep you hooked from start to finish!-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Jul 2025 1:41 pm

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி”–புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொத்தூரில் உள்ள வள்ளலார் நினைவிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர். அதில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நினைவிடம் வந்தடைந்த பின், […]

டினேசுவடு 5 Jul 2025 1:37 pm

Microsoft: பாகிஸ்தானுக்கு குட் பை சொன்ன மைக்ரோசாப்ட்; முடிவுக்கு வந்த 25 ஆண்டுகாலப் பயணம்!

உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் பாகிஸ்தானில் உள்ள தங்களது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தான் ரஷ்யாவில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானிலும் தங்கள் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் அலுவலகம் மூடப்பட்டதை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்திருக்கிறார். ‘இது ஒரு சகாப்தத்தின் முடிவு. தற்போதுள்ள வணிக சூழலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியேற்றத்தைக் காட்டுகிறது. எங்கெல்லாம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்வதற்கு சாத்தியமும், வாய்ப்பும் இல்லையோ அங்கெல்லாம் தமது இயக்கத்தை மைக்ரோசாப்ட் நிறுத்தி வருகிறது’ என்று அவர் கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாட்டு அரசு ஆதரவு அளிப்பதும், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதும் இத்தகைய முடிவுகளுக்கு காரணமாக இருப்பதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர். ஷெபாஸ் Vs இம்ரான்: அதலபாதாளத்தில் பொருளாதாரம்... வன்முறைக்காடான பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

விகடன் 5 Jul 2025 1:32 pm

அமெரிக்கா மீது இந்தியா பதில் வரி திட்டம்: WTO-வில் அறிவிப்பு

ட்ரம்ப்பின் வரிவிதிப்பிற்கு பதிலடியாக அமெரிக்கா மீது அதற்கு இணையான வரியை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வாகன உதிரி பாகங்கள் மற்றும் கார்களுக்கு 25% வரி விதித்ததற்கு பதிலடி நடவடிக்கையாக, இந்தியா சில அமெரிக்க தயாரிப்புகளுக்கு மேலதிக சுங்க வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் பற்றி உலக வர்த்தக அமைப்பிற்கு (WTO) இந்தியா ஜூலை 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வரிகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்படும் வருமான இழப்பு $723.75 மில்லியன் […]

அதிரடி 5 Jul 2025 1:30 pm

சகோதரியின் இறுதிச் சடங்கிற்கு சென்றவர் கொடூர கொலை ; துயரத்தில் தவிக்கும் குடும்பம்

மஹியங்கனை குருமட பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதலில், 35 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இறுதிச் சடங்கில் வாக்குவாதம் மேலும் 20 வயதுடைய மற்றொரு நபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவரின் சகோதரியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் […]

அதிரடி 5 Jul 2025 1:15 pm

தமிழர் பகுதியில் கணவனை அடித்துகொன்ற மனைவி; பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த 73 வயதுடைய கணவன் அடி காயங்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (4) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் […]

அதிரடி 5 Jul 2025 1:13 pm

ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் குகேஷ் வென்றார் –

கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின் ரேபிட் பிரிவில் உலக செஸ் சாம்பியனான இந்தியாவின்

ஆந்தைரேபோர்ட்டர் 5 Jul 2025 1:13 pm

`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூலை) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், அவர் வகித்த தலைவர் பதவியில் ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும், தன்னுடைய குடும்பத்தை கவனித்து கொள்வதிலும் பொற்கொடி முழுமையாக கவனம் செலுத்துவார் என்று கூறி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து கட்சி அவரை விடுவித்தது. இவ்வாறிருக்க, பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் அவரின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி - ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் ஜெய் பீம் ஜெய் ஆம்ஸ்ட்ராங் கோஷங்களுக்கு மத்தியில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பொற்கொடி தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து, கட்சிக் கொடியை பொற்கொடி அறிமுகப்படுத்தினார். நீல நிறத்தாலான அக்கொடியின் நடுவில் பேனா ஏத்திய ஒற்றை யானை உருவம் பதிக்கப்பட்டிருந்தது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY அஜித்குமார் விவகாரம்; நண்பர் ஆம்ஸ்ட்ராங் கொலை - M.S.பாஸ்கர் அடுக்கும் கேள்விகள்

விகடன் 5 Jul 2025 1:12 pm

இலங்கையில் போதைபொருளுக்கு அடிமையாகும் கர்ப்பிணி தாய்மார்

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட உயன உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களே இவ்வாறு போதை பொருள் பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது. சுகாதார அதிகாரிகளிடம் பதிவு செய்வது தவிப்பு இது கடுமையான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகரசபையின் உறுப்பினரான சமல் சஞ்சீவ கூறியுள்ளார். குறித்த பெண்கள் கரையோரப்பகுதியில் மது மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்து […]

அதிரடி 5 Jul 2025 1:11 pm

Vummidi Bangaru Jewellers partners with Ignition by Shiv Nadar Foundation in Chennai

Chennai: Vummidi Bangaru Jewellers (VBJ Since 1900), India’s most trusted heirloom jewellery brand, has partnered with Ignition presented by Shiv Nadar Foundation, Chennai edition — a unique platform uniting young professionals and like-minded individuals across disciplines to foster deeper public discourse.Curated by award-winning journalist Shoma Chaudhury under her company Lucid Lines Productions, Ignition is a thought-leadership initiative that fuels transformative conversations around society, culture, policy, and innovation. The Chennai edition of the event was held at ITC Grand Chola and drew a crowd of over 500 powerful voices and influential personalities from across the city.Speaking about the association, Amarendran Vummidi, Managing Partner, VBJ Since 1900, said, “We are proud to be associated with Ignition presented by Shiv Nadar foundation, Chennai edition as we share similar principles and ideologies. Ignition presented by Shiv Nadar foundation, Chennai edition celebrates accomplishments and encourages younger generation. These healthy conversations truly ignite the minds and promotes diverse thinking amongst the youth. As a 125-year-old brand, we have the responsibility towards the society, and this is one small step towards that direction.” Bringing a rich cultural dimension to the event, VBJ showcased a curated selection of its heritage and contemporary jewellery through an exclusive display panel, offering guests a visual journey through the brand’s legacy of craftsmanship and innovation.Hosted by Shoma Chaudhury, the event featured compelling dialogues and insights from some of India’s most respected voices, including Sanjaya Baru (Policy Analyst and Author), Dr. Ambrish Mithal (Padma Bhushan awardee), D.P. Srivastava (former Ambassador to Iran), Kabir Taneja (Strategic Affairs Expert), and Richa Gangani (Wellness Advisor).By aligning with Ignition, VBJ reinforces its continued commitment to cultural enrichment, social responsibility, and thought leadership, while staying deeply rooted in values that transcend generations.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Jul 2025 1:09 pm

யாழில் விபரீதத்தில் முடிந்த முயற்சி ; நடுவீதியில் கவிழ்ந்த கனரக வாகனம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று காலை வீதியில் குடைசாய்ந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ தெரியவருவதாவது கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுதப்பட்ட ரோளர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் குடைசாய்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த துவிச்சக்கர வண்டி முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அதனை தவிர்க்க முற்பட்ட வேலையே […]

அதிரடி 5 Jul 2025 1:09 pm