உலகச் செய்திகளின் சுருக்கம் –ஒரே பார்வையில்!
• புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் (சுவிட்சர்லாந்து): சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதியில் உள்ள ஒரு பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்… The post உலகச் செய்திகளின் சுருக்கம் – ஒரே பார்வையில்! appeared first on Global Tamil News .
கனடாவில் 80 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி
கனடாவில் கடந்த 30ம் திகதி நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் சீட்டிழுப்பில் 80 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட் ஒன்டாரியோவின் லண்டன் நகரில் விற்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம் லாட்டோ மேக்ஸ் ஜாக்பாட் 80 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்ட பிறகு, ஒன்டாரியோவில் இந்த ஜாக்பாட் முதல்முறையாக வென்றுள்ளது. மேலும், ஒரே ஒரு டிக்கெட் மட்டுமே ஜாக்பாட்டை வென்ற இரண்டாவது முறையும் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்பாட் வெற்றியாளர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. […]
புத்தாண்டில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; இரண்டு பெண்கள் உட்பட மூவருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம்
மாவனெல்ல – தனகம பகுதியில் இன்று (01) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் கைது ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சம்பவம் […]
உக்ரைனை வெல்வோம்! புதின் சூளுரை
உக்ரைன் போரில் ரஷியா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார். ரஷிய அதிபர் புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஷிய மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை இரவு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில், ரஷியா தனது […]
உமர் காலித்திற்கு நியூயார்க்கில் இருந்து ஆதரவு! ✍️
டெல்லி திகார் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு, அமெரிக்காவின் நியூயார்க் மேயர்… The post உமர் காலித்திற்கு நியூயார்க்கில் இருந்து ஆதரவு! ✍️ appeared first on Global Tamil News .
“40 கோடி வேண்டாம்!”– கொள்கையில் உறுதியாக நிற்கும் சுனில் ஷெட்டி!
பிரபல பொலிவுட் நடிகர் சுனில் செட்டி அண்மையில் வெளியிட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தடை செய்யப்பட்ட… The post “40 கோடி வேண்டாம்!” – கொள்கையில் உறுதியாக நிற்கும் சுனில் ஷெட்டி! appeared first on Global Tamil News .
தலதா மாளிகையில் புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி தலதா மாளிகை வளகாத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்றதோடு, புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையை தரிசிக்க வந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார். புத்தாண்டு வாழ்த்து அதனைத் தொடர்ந்து, […]
கஞ்சா ஹீரோக்கள் உலா வரும் தமிழ்நாடு.. யாரைக் காப்பாற்ற முயற்சி? தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
சடுதியாக உயர்ந்த தேங்காய் விலை ; எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்
தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளபோதும், சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய் 122 – 124 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதிக விலை இருப்பினும், வெளிச்சந்தையில் அதே தேங்காய் 180 – 200 ரூபாய் வரையிலான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் பணிப்பாளர் சுனிமல் ஜயகொடி கவலை வெளியிட்டுள்ளார். ஏலத்தில் குறைந்த […]
போா் நிறுத்தம்: 18 கம்போடிய வீரா்களை விடுவித்தது தாய்லாந்து
தாய்லாந்து-கம்போடியா இடையிலான புதிய போா் நிறுத்த ஒப்பந்தம் 72 மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து புதன்கிழமை விடுவித்தது. இது குறித்து கம்போடிய தகவல்துறை அமைச்சா் நெத் பியாக்ட்ரா கூறுகையில், தங்கள் நாட்டின் 18 வீரா்கள் பாதுகாப்பாக கம்போடியாவுக்கு உள்ளூா் நேரப்படி காலை 10 மணிக்கு வந்து சோ்ந்தனா் என்றாா். இந்தத் தகவலை உறுதி செய்த தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம், நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் […]
பொங்கல் பரிசுத் தொகுப்பு நடைமுறைக்கு வர யார் காரணம் தெரியுமா? அந்த முக்கியத் தலைவர்கள் யார் யார்?
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பல்வேறு பரிணாமங்களை கடந்து இருந்தாலும், 2026 ஆம் ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்து வருகிறது.
நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து
நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடப்படும் ஒரு வினோதமான மற்றும் சவாலான விளையாட்டாகும். இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தப் போட்டியில் சதுரங்கப் பலகைகள் காந்தத் தன்மையுடனும் (Magnetic boards), காய்கள் […]
தலைமறைவான முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து வத்தளை நீதவான் நீதிமன்றம் நேற்று (31) உத்தரவிட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பயணத் தடை குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் […]
உலகம் அழியப்போகிறது”என பீதியை ஏற்படுத்திய எபோ நோவா கைது
“டிசம்பர் 25, 2025 அன்று உலகம் அழியப்போகிறது” என்று பீதியை ஏற்படுத்திய கானா நாட்டுச் சாமியார் எபோ நோவா… The post உலகம் அழியப்போகிறது” என பீதியை ஏற்படுத்திய எபோ நோவா கைது appeared first on Global Tamil News .
Jana Nayagan: 'தங்கமே தளபதி!' - 'ஜனநாயகன்'படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் |Photo Album
வவுனியாவில் சின்ன கதிர்காமம்:அமைச்சர் ஆலோசனை!
கதிர்காமத்தில் மூன்று இனத்தவர்களும் வழிபடுகிறார்கள். கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமாணத்திற்கும் நிதியைப் பெற்றுக் கொடுக்கலாம் என கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா, சமனங்குளம், கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தர்ல் பௌ;த விகாரை கட்டப்படுவதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் அதனை தெரிவித்துள்ளார். கதிர்காமம் எல்லா மதத்தவர்களும் வழிபடும் தளம். தென் பகுதியில் எல்லோரும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். மதம் என்பதை வைத்து சிலர் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு அரசியல் தேவைப்படாது. சமயம் என்பது ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு பின்பற்றுகின்ற ஒரு விடயம். இன, மதங்களை கொண்டு செய்யப்பட்ட அரசியல் தோற்கடிக்கப்பட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யும் ஆட்சியே உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் மதவாதம் உருவாக்கப்பெறுகிறது. தொல்பொருள் திணைக்களத்தில் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்து மத தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்கிறார்கள். ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையில், இன, மத வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு ஆட்சியை உருவாக்க விரும்புகின்றோமெனவும் அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நிமலராஜன் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்!
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விடயம் உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பி யினர் காரணமாக இருப்பது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் வடக்கு - கிழக்கில் பல்வேறுபட்ட ஆயுத குழுக்களின் தாக்கங்களினால் பல்வேறுபட்ட அப்பாவி மக்கள் கடத்தப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள். வடக்கில் கடத்தல்கள் பல காணாமல்போன சம்பவங்களுக்கு பொறுப்பாக ஈ.பி.டி.பி கட்சி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பான விடயத்திலும்சரி, பல்வேறு கடத்தல்களோடு சம்பந்தப்பட்ட கொலை செய்யப்பட்ட விடயங்களிலும்சரி, பத்திரிகை ஆசிரியர் அற்புதனின் படுகொலையாக இருக்கலாம், கே எஸ் ராஜாவின் படுகொலை, இன்னும் பல படுகொலைகளுக்கு காரணமாக ஈ.பி.டி.பியினர் இருந்ததாக மக்கள் பலர் குற்றச்சாட்டுகின்றார்கள். அதாவது ராஜபக்சவின் ஆட்சிக்காலம் சந்திரிகாவின் ஆட்சிக் காலங்களில் ஈ.பி.டி.பியினர் அவ்வாறு செயற்பட்டதாக குற்றச்சாட்டுகின்றார்கள். எனவே அவை இதுவரையில் வெளிக்கொண்டுவரப்படவில்லை. கைது செய்யப்படுகின்றவர்கள் அப்பாவிகளாக இருந்ததால் தப்பிக் கொண்டனர். ஆனால் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் சார்பாக சொல்லிக் கொள்வது யாதெனில் உண்மையான குற்றவாளிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே. ஆகவே கிழக்கில் இருந்து யார் கைது செய்யப்பட்டாலும், வடக்கிலிருந்து யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்ட ரீதியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம் எனவும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) 2026-ஆம் புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1, வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக… The post யாழ். சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) 2026-ஆம் புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1, வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக… The post யாழ். சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
டென்மார்க்கில் கடித விநியோகம் இனி இல்லை ; அஞ்சல் சேவை முழுமையாக நிறுத்தம்
அஞ்சல் கடிதங்களின் தேவை மிகக் குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து முழுமையாக விலகத் தீர்மானித்துள்ளது. 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து டென்மார்க்கில் கடிதங்களின் பயன்பாடு 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது. கடிதங்களின் எண்ணிக்கை குறைந்ததால், நாடு முழுவதும் இந்த சேவையைத் தொடர்வது நிதி ரீதியாக நட்டத்தை ஏற்படுத்துவதாக PostNord தெரிவித்துள்ளது. டென்மார்க் முழுவதும் உள்ள சுமார் 1,500 புகழ்பெற்ற சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் […]
தமிழர் பகுதிகளில் ஆட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சி கலப்படம் ; அவதானம் மக்களே
நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக நாய்கள் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டுக் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. புது […]
த.வெ.க கூட்டணிக்கு வருகிறதா வி.சி.க? செங்கோட்டையன் கொடுத்த விளக்கம் - திமுகவில் சலசலப்பு!
த.வெ.க கூட்டணிக்கு வருகிறதா வி.சி.க? என்ற கேள்விக்கு செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புத்தாண்டில் கத்திக் குத்து: பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கொடூரமாகக் கொலை!
யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் புத்தாண்டு தினமான இன்று இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின்… The post புத்தாண்டில் கத்திக் குத்து: பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கொடூரமாகக் கொலை! appeared first on Global Tamil News .
கனடாவின் கடற்படையை தீவிரவாத இயக்கமாக அறிவித்த ஈரான்
கனடாவின் கடற்படையை தீவிரவாத அமைப்பாக ஈரான் அறிவித்துள்ளது. கனடிய அரசு, ஈரானின் இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சி காவல் படை (IRGC)யை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்ததற்குப் பதிலடியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா 2024 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி காவல் படை தீவிரவாத அமைப்பாகப் பட்டியலிட்டது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என ஈரான் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா இஸ்லாமிய புரட்சி காவல் படை […]
புத்தாண்டில் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் கணவர் புத்தாண்டு தினமான இன்றைய தினம் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மருதங்கேணி வீரபத்திரர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மருதங்கேணியில் உள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரின் வீட்டிற்கு முன்பாக நின்று போதையில் ஒருவர் கூச்சலிட்டு , வீட்டில் இருப்போரை வெளியே வருமாறு அட்டகாசம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து சென்ற பின்னர் , பிரதேச சபை உறுப்பினரின் கணவர் , வீட்டில் இருந்து வெளியேறி மருதங்கேணியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , வீரபத்திரர் ஆலயத்திற்கு அருகில் போதையில் வீட்டின் முன் நின்று கத்திய நபர் வழிமறித்து சரமாரியாக கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்தவரை மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினர்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு விமான நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டியிருந்த நிலையில் , மைதானத்தில் நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பமாகி , எதிர்வரும் 14ஆம் திகதி(14.01.2026) சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பணிகள் கால தாமதமாகிய […]
கேரள இலக்கிய விழா 2026.. விண்வெளியில் தடம் பதித்த சுனிதா வில்லியம்ஸ் கேரளா வருகை!
2026 ஆம் ஆண்டிற்கான கேரள இலக்கிய விழாவானது ஜனவரி 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்கிறார்.
”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” - அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு!
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சிராஜூதீன். சிங்கப்பூர் தொழிலதிபரான இவர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர் மற்றும் செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துகள் இருந்தன. இதன் இன்றைய அரசு மதிப்பு சுமார் ரூ.800 கோடி என்கிறார்கள். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்து விட்டார். பிறகு, இவரது மனைவி முகமதா பேகம்(76) வசம் சொத்துகள் இருந்தன. இவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர், தங்களின் சொத்துகளை பராமரித்து, பாதுகாத்து தருவதாக, நம்பிக்கை ஏற்படுத்தி மோசடியாக பழகியுள்ளார். இதை நம்பி அவரிடம் முகமதா பேகம் சொத்தை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அபகரிக்கபட்ட இடம் பிறகு, ஸ்ரீவித்யா சுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சாவூரை சேர்ந்த அ.தி.மு.க-வின் மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்ட தலைவர் கேபிள் செந்தில் (எ) செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம், முகமதா பேகத்திடம், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, போலியான பவர் ஆஃப் அட்டார்னி, விற்பனை பத்திரங்கள், உள்ளிட்ட ஆவணங்கள் தயார் செய்து, முகமதா பேகத்திடம் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும், செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் இடத்தினை, செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்யதுள்ளார். அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியில், சிராஜூதீனுக்கு சொந்தமான இடத்தினையும், அவர் அன்பளிப்பாக வழங்கி விட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரித்துள்ளனர். மேலும், மூன்று வங்கிகளில் முகமதா பேகம் பெயரில், கணக்கு துவங்கி பணம் பரிவர்த்தனை செய்துள்ளார். கடந்த மாதம் பால்பண்ணையில் உள்ள சிராஜூதீனின் பெரிய வீட்டை இடித்து அங்கிருந்த ஆவணங்கள், நான்கு டூ வீலர்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள், பணம், நகை உள்ளிட்டவையும் திருடி சென்றனர். போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு இது குறித்து தகவலறிந்த முகமதா பேகம், செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் கேட்டுள்ளார். ஆனால், முறையான பதில் சொல்லவில்லை, மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக சொல்கிறார்கள். வயது மூப்பு காரணமாக இதில் பயந்த முகமதா பேகம் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த தைரியத்தின் பேரில், போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்தாக செந்தில்குமார், பிரகாஷ், ரேவதி, பாஸ்கரன், நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, ஸ்ரீவித்யா சுமதி, செல்லப்பன், மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோர் மீது, தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் ஒன்பது பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு வழக்கில், அதிமுக பிரமுகர் கேபிள் செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மற்றவர்கள் அங்குள்ள 27 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்ட விசாரணையில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்ததுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழப்புகள் 14 இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை மறுத்துள்ள இந்தூர் மேயர் புஷ்யமித்ரா, 7 பேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார். அதேசமயம் முதல்வர் மோகன் யாதவ், நான்குபேர் தான் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் கைலாஷ் மேற்கொண்டு முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ``பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கிடைத்த பிறகு தான் இறப்பு குறித்த தகவல் தெரியும் என்றார். இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று 8வது முறையாக விருது பெற்றுள்ள இந்தூரில் அசுத்தமான தண்ணீரை குடித்து பொதுமக்கள் உயிரிழந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு உண்மையிலேயே இந்தூர் சுத்தமான நகரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்துள்ளது. மேலும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க தவறிய பொறியாளர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பேட்டியளித்த போது, ஒரு நிருபர் `சம்பவத்திற்கு ஏன் ஜூனியர் அதிகாரிகளை மட்டும் குறை சொல்கிறீர்கள், மேல் மட்டத் தலைவர்களை பற்றி இதில் விவாதிப்பதில்லை' என்று கேட்டார். உடனே அமைச்சர் கைலாஷ், ''அதை விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்விகளை கேட்க வேண்டாம்'' என்று எரிச்சலுடன் தெரிவித்தார். இது தவிர மேலும் சில வார்த்தைகள் பேசினார். அவரது பேச்சு வைலரானது. இதையடுத்து அமைச்சர் கைலாஷ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறார். தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை கொடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சம்பவ பகுதியில் டேங்கர் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
️யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் தீவிரம்: ️
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணிப்பு பணிகளை, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள்… The post ️யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் தீவிரம்: ️ appeared first on Global Tamil News .
கவலைப்படாதீங்க இது முழுக்க தளபதி படம்…ஜனநாயகன் குறித்து பேசிய ஹெச்.வினோத்!
சென்னை : தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. அரசியல் அவதாரம் எடுத்துள்ள விஜய்யை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருக்கும் இயக்குநர் ஹெச். வினோத், படம் குறித்தும் விஜய்யுடனான அனுபவம் குறித்தும் திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார்.“முதன்முதலாக விஜய் சாரை இயக்கியது சந்தோஷமான அனுபவம். ‘ஜன நாயகன்’ அவரது கடைசிப் படம் என்று அறிவித்த பிறகுதான் படப்பிடிப்பு […]
புத்தாண்டில் மக்களுடன் ஜனாதிபதி!
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள மக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க (ADK) அவர்கள்… The post புத்தாண்டில் மக்களுடன் ஜனாதிபதி! appeared first on Global Tamil News .
சுவிட்சர்லாந்தில் பெரும் சோகம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து – 40 பேர் பலி!
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.… The post சுவிட்சர்லாந்தில் பெரும் சோகம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து – 40 பேர் பலி! appeared first on Global Tamil News .
புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு... கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! - Photo Album
புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்பு போக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள் சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் காவல்துறை அதிகாரிகள் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம் புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்
உலகம் அழியும் என கூறிய ‘எபோ நோவா’…அதிரடியாக கைது செய்த காவல்துறை!
கானா : சேர்ந்த இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ நோவா’ என்று அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்று கூறி பீதி கிளப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. இவர் தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்டு, மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியதே கைதுக்கு காரணம் என்று தெரிகிறது.எபோ நோவா கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய மரப் பேழையை (ஆர்க்) […]
ஏர் இந்தியா சேவையில் பிரச்சினையா? ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பிய டிஜிசிஏ!
ஏர் இந்தியா விமானங்களான AI-358 மற்றும் AI-357 தொடர்பான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து, சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) கடும் கவலை தெரிவித்து உள்ளது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மதிப்பளிப்பு வைபவம் இன்று முதலாம் திகதி, வியாழக்கிழமை காலை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள கொடிக் கம்பத்துக்கு அருகில் இடம்பெற்ற அரச சேவையின் முதல் நாள் உறுதியுரையேற்பு நிகழ்வைத் தொடர்ந்து பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்த விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களும், கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற […]
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2027 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொதுச் சேவையைத் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்து உள்ளார்.
சுவிட்சர்லாந்து புத்தாண்டு கொண்டாட்டம்: பலர் உயிரிழப்பு: பலர் காயம்!
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நெரிசலான கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகாலை 01:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டபோது, 100க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த லீ கான்ஸ்டெல்லேஷன் பாரில் அதிகாலை 01:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என்று வாலைஸ் கன்டோனல் போலீசார் தெரிவித்தனர். இந்த அரங்கம் 400 பேர் அமரக்கூடியது. பலர் உயிரிழந்தனர், மற்றவர்கள் காயமடைந்தனர் என்று காவல்துறை முதலில் கூறியது. இது ஒரு தீவிரமான சம்பவம் என்று அவர்கள் விவரித்தனர். பின்னர் எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. சுவிஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி, சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவல்துறை செய்தித் தொடர்பாளர் கெய்டன் லாதியோன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிகாரிகள் பலர் உயிரிழப்புகளைக் காண்கிறார்கள். கட்டிடத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர், மேலும் பலர் காயமடைந்ததையும் பலர் இறந்ததையும் நாங்கள் காண்கிறோம் என்று அவர் கூறினார். முந்தைய அறிக்கைகள் ஒரு வெடிப்பு என்று விவரித்தன, ஆனால் பின்னர் போலீசார் இந்த நிகழ்வை தீர்மானிக்கப்படாத தீ விபத்து என்று வகைப்படுத்தினர். கிரான்ஸ்-மொன்டானா என்பது சுவிட்சர்லாந்தின் வாலிஸ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஆல்பைன் ரிசார்ட் ஆகும், இது ஒரு உயர்மட்ட விடுமுறை இடமாகக் கருதப்படுகிறது. இது நீண்ட காலமாக சர்வதேச பார்வையாளர்களையும், மறைந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் உட்பட பொது நபர்களையும் ஈர்த்துள்ளது. இந்த ரிசார்ட் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் (சுமார் 5,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் ஒரு பெரிய ஸ்கை பகுதியை வழங்குகிறது. ஜனவரி மாத இறுதியில் நடைபெறும் ஸ்கை உலகக் கோப்பை பந்தயங்கள் உட்பட முக்கிய விளையாட்டு நிகழ்வுகளையும் இது தொடர்ந்து நடத்துகிறது. விடுமுறை நாட்களில், கிரான்ஸ்-மொன்டானா பொதுவாக முழுமையாக முன்பதிவு செய்யப்படும். நகராட்சியில் சுமார் 10,000 குடியிருப்பாளர்களும், எட்டு சொகுசு ஹோட்டல்கள் உட்பட சுமார் 2,600 ஹோட்டல் படுக்கைகளும், நூற்றுக்கணக்கான விடுமுறை அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. உள்ளூர் பொருளாதாரத்தின் மையமாக சுற்றுலா உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் இரவு தங்கல்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் சுற்றுலா ஆணையத்தின் கூற்றுப்படி, சுமார் 20% பார்வையாளர்கள் சுவிட்சர்லாந்திற்கு வெளியில் இருந்து வருகிறார்கள்.
Vedan: இரா.முத்தரசன் நடிக்கும் படம்; இளையராஜா இசையில் பாடும் ராப் பாடகர் வேடன்! - வெளியான அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் 'அரிசி' படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகி இருந்தது. இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Vedan in Ilaiyaraja Music இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இப்படத்தை இயக்கியுள்ள இப்படம் உணவுக்குப் பின்னுள்ள அரசியல் குறித்தும், விவசாயிகள் சந்திக்கும் போராட்டங்களை இத்திரைப்படம் மையப்படுத்துகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில்தான் வேடன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். சமீப நாட்களாக மலையாள சுயாதீன இசைத்துறையின் சென்ஷேஷனாக இருந்து வருகிறார் வேடன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பைசன்' படத்தின் மூலம் தமிழில் அவரின் முதல் பாடலைப் பாடினார். Vedan in Ilaiyaraja Music தற்போது இளையராஜா இசையிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் வேடன். பாடலாசிரியர் மற்றும் ராப் பாடகர் அறிவுடன் இணைந்து இப்பாடலை அவர் பாடவிருப்பதாகவும் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்துதான் 'பைசன்' படத்தின் 'ரெக்க ரெக்க' பாடலைப் பாடியிருந்தனர்.
புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர் நிகழ்வினை தொடர்ந்து வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் சத்திய பிரமாணம் எடுத்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
பணவீக்க நெருக்கடி ; ஈரான் முழுவதும் தீவிரமடைந்த போராட்டங்கள்
பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, ஈரானில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானிய ரியால் (Rial) மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளமையினால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளன. இதனால், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. முன்னதாக, வர்த்தகர்கள் இடையே ஆரம்பமான குறித்தப் போராட்டம், தற்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் பரவியுள்ளது. இந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி […]
ரோஹித் –கோலியை தொடர்ந்து விளையாட வைக்கணும் –இர்ஃபான் பதான் ஸ்பீச்!
டெல்லி : விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தற்போது T20I மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் (ODI) கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனால் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு ODI போட்டியும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்வாக மாறியுள்ளது. அவர்களை நேரில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய ODI தொடர்கள், 2023 உலகக் கோப்பை காலத்தில் இருந்த அதே உற்சாகத்தை […]
ரங்கநாதன் தெருவில் நடந்து செல்வதற்கு கூட இடமின்றி, மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காண மாநகராட்சி, மாநகர போலீசார் பலகட்ட நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளனர்.
கூட்டணி விவகாரம்.. லக்ஷ்மண ரேகையை மீற மாட்டோம்.. வைகோ கருத்து!
திமுக காங்கிரஸ் கூட்டணி உட்கட்சி பூசல் விவகாரத்தில் லக்ஷ்மண ரேகையை மீற மாட்டோம் என்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்து உள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்…சுவிட்சர்லாந்து தீ விபத்தில் 40 பேர் பலி!
சுவிட்சர்லாந்து :கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள Le Constellation என்ற பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. வெடிப்பு ஒன்றுக்குமேல் ஏற்பட்டதாக தகவல்கள் கூறும் நிலையில், அதன் பின் தீ வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் (GMT 00:30) நிகழ்ந்ததாக RTS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்க சுமார் 100 பேர் பாரில் கூடியிருந்த […]
மக்களுடன் மக்களாக, தலாதா மாளிகையில் ஜனாதிபதி AKD!
வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையில் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் வழிபாடுகளில்… The post மக்களுடன் மக்களாக, தலாதா மாளிகையில் ஜனாதிபதி AKD! appeared first on Global Tamil News .
த.வெ.க கூட்டணிக்கு வருகிறதா வி.சி.க? செங்கோட்டையைன் ஓபன் டாக்.!
சென்னை :திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் முக்கியமாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) வருகிறதா என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார். வி.சி.க கூட்டணிக்கு வருமா, இல்லையா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் வி.சி.க தொண்டர்கள் பலர் த.வெ.கவில் இணைந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், எல்லோருடைய எண்ணங்களும் ஒரே திசையில் தான் இருப்பதாக […]
யாழ். சுற்றுலாத்துறையின் மையமாக மாறும் வலி வடக்கு: தவிசாளர் சுகிர்தன் பெருமிதம்
வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலி வடக்கு தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. வலி வடக்கு பிரதேசசபை செயலாளர் சிவகுமார் சிவானந்தனால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இப்புதிய வருடத்தில் வலி வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேலும் துரிதகதியில் மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக யாழ் நகரத்தை […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானின் நில அதிர்வு
ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகில் நேற்று 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஜப்பானின் கிழக்கு நோடா கடற்பரப்புக்கு அப்பால் சற்று முன்னர் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது நிலப்பரப்பில் இருந்து சுமார் 19.3 கிலோமீட்டர் (சுமார் 12 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் இந்த நில […]
புதுக்கோட்டையில் பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஜன.4ல் அமித் ஷா வருகை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ள நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்திற்கு தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி: அதிமுக கோட்டையில் திமுக போடும் கணக்கு- வெற்றி வாய்ப்பு யாருக்கு?
ஆத்தூர் தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், வரவிருக்கும் 2026 தேர்தலில் களம் மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி பற்றி விரிவாக பார்க்கலாம்.
புதிய விடியல் – 2026! பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்!
2026 புத்தாண்டுக்கான பணிகளைப் பிரதமர் அலுவலகத்தில் (Prime Minister’s Office) இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்… The post புதிய விடியல் – 2026! பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்! appeared first on Global Tamil News .
பர்னி தெலோங் எரிமலை சீற்றம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்!
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் அமைந்துள்ள பர்னி தெலோங் (Bur Ni Telong) எரிமலை தற்போது அதிகப்படியான சீற்றத்துடன் காணப்படுவதால்,… The post பர்னி தெலோங் எரிமலை சீற்றம் : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்! appeared first on Global Tamil News .
சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி!
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கிராஸ்-மொன்டானா (Crans-Montana) பனிச்சறுக்கு விடுதியில் (Ski Resort) இன்று (ஜனவரி 1, 2026) அதிகாலை நடந்த… The post சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் வெடிப்பு: 10 பேர் பலி! appeared first on Global Tamil News .
விஜய்யை அரசியல் களத்தில் இறக்கிவிட்டது யார்?: மன்சூர் அலி கானால் ஆராய்ச்சி செய்யும் ரசிகர்கள்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பற்றி மன்சூர் அலி கான் தெரிவித்த ஒரு விஷயம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். மேலும் மன்சூர் அலி கானிடமே பதில் கேட்கிறார்கள்.
நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து
நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடப்படும் ஒரு வினோதமான மற்றும் சவாலான விளையாட்டாகும். இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தப் போட்டியில் சதுரங்கப் பலகைகள் காந்தத் தன்மையுடனும் (Magnetic boards), காய்கள் […]
தூத்துக்குடி ,நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை :வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு […]
2026: ட்ரம்ப் டு கிம் வரை; ரஷ்யா டு சுவிட்சர்லாந்து.. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் - Album
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று இடம்பெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
மொசாட் பெண் உளவாளி கூறும் புதிய தகவல்
நாளொன்றிற்கு சராசரியாக 9 மில்லியன் தகவல்கள் இஸ்ரேலிய அமைப்புகளால் திரட்டப்படுவதாக இஸ்ரேலிய மொசாட் உளவாளி பெண் டனா ரசண்டல் தெரிவித்தார். இந்த தகவல்கள் தான் இஸ்ரேலின் தற்போதை அளப்பரிய சாதனைகளுக்கு உதவியுள்ளது. இஸ்ரேல் என்றதும் மொசாட் உளவுத்துறை பெரிதாக பேசப்பட்டாலும், அங்கு 3 உளவுத்துறைகள் செயற்பட்டு வருகின்றன. 15ற்கும் மேற்பட்ட உப பிரிவுகள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு பிரிவில் செயற்பட்டு வருகின்றன. மொசாட்டின் சாதனை என்று பல புலனாய்வு பெறுபேறுகளை செய்தது இஸ்ரேலின் ஷின்பெத் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டவை.
இறையருளுடன் இனிதே தொடங்கிய 2026: பாஷையூர் அந்தோனியார் ஆலய நள்ளிரவு நற்செய்தி திருப்பலி
யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று(01) நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.
✨ புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2026 புத்தாண்டை முன்னிட்டு, கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (வியாழக்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற்றது.… The post ✨ புத்தாண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கடமைகளை ஆரம்பித்த யாழ். போதனா வைத்தியசாலையினர்! appeared first on Global Tamil News .
பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி!
யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில்… The post பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு புதுவருட திருப்பலி! appeared first on Global Tamil News .
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பரிசு அறிவித்த அரசு!
சென்னை :தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் மிகை ஊதியம் அறிவித்துள்ளது. சி, டி பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.183.86 கோடி […]
2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை
2025-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.91 வரை கூட சென்றது. இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான். ஆனால், இது இறக்குமதியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்தது. விலைவாசி உயர்வு அச்சம் இந்தியாவின் பக்கம் எட்டிப்பார்த்தது. ஆனால், சில நாள்களிலேயே, இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்தது. 2026-ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, 2025-ம் ஆண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 5 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியைக் கண்டது கடந்த ஆண்டு தான். கடந்த ஆண்டு, ஆசியாவிலேயே மிக வீழ்ச்சியைக் கண்ட நாணயம் இந்திய ரூபாய். இந்திய ரூபாய் கிரெடிட் ஸ்கோர் முதல் வருமான வரி ஃபைலிங் வரை - இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள் என்னென்ன? ஏன் இந்த வீழ்ச்சி? அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது 50 சதவிகித வரி விதித்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும். அடுத்ததாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பெருமளவு தங்களது முதலீடுகளை வெளியேற்றினர். இன்னொன்று, உலக அளவிலான நிலையற்ற தன்மை, நாணய சந்தையைப் பாதித்தது. 2026-ம் ஆண்டு எப்படி இருக்கும்? இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அதனால், இந்திய ரூபாயின் மதிப்பு நிலையற்று இருக்கும். இப்போது சந்தையைக் கணிக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு கரடியின் பிடியில் இருக்கலாம். ஆனால்... இந்த இறங்குமுகத்தைத் தாண்டி, இந்திய பொருளாதாரம் வலுவாக இருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி நன்கு இருக்கிறது. பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருக்கும். மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!
வலி. வடக்கு பிரதேச சபையின் 2026 புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு!
வலி. வடக்கு பிரதேச சபையின் 2026-ஆம் ஆண்டிற்கான பணிகள் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. முக்கிய நிகழ்வுகள்:… The post வலி. வடக்கு பிரதேச சபையின் 2026 புத்தாண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு! appeared first on Global Tamil News .
பார்வதியும், கம்ருதீனும் சண்டை போட்டுக் கொண்ட விதத்தை பார்த்தால் கண்டிப்பாக பிரேக்கப் தான் என்று பலரும் முடிவே செய்த நிலையில் உல்ட்டாவாக ஆகிவிட்டது. இதை சத்தியமாக எதிர்பார்க்கல பாரு என்கிறார்கள் பார்வையாளர்கள்.
விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் –சென்னை மாநகர காவல் அறிவிப்பு
சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ‘ஹாட் ஸ்பாட்’டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே
ரூ.20,668 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 20,668 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகி விட்டது –உக்ரைன் அதிபர் தகவல்
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக 20 அம்சங்கள் கொண்ட
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ம் ஆண்டிற்கான C,D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,
போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பணம் போடப் போறீங்களா? புத்தாண்டில் புதிய வட்டி அறிவிப்பு!
2026 ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் இதுதான்..!
போர் பயிற்சியில் சீன இராணுவம் ; ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்
தாய்வானைச் சுற்றி சீனாவின் இராணுவப்படைகள் முன்னெடுக்கும் போர் பயிற்சிகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா, தாய்வானுக்கு இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்த சில நாட்களில் சீனா போர் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது. இன்றைய போர் பயிற்சியின்போது சீனா, தாய்வானை நோக்கி ரொக்கெட்டுகளை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், இராணுவப் பயிற்சிகள் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை, ஆனால் சீனா வழக்கமாக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதால் […]
✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கடமைகளை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு சிறப்பாக… The post ✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்! appeared first on Global Tamil News .
யாழில். அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்றத்தில் பெண் கைது
அயல் வீட்டுக்காரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அயல் வீடான இரு வீட்டார் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தில் பெண்ணொருவர் அயல் வீட்டார் மீது கத்தி குத்து தாக்குதல் நடாத்தியுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை கடமைகளை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு சிறப்பாக… The post ✨ யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டு கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்! appeared first on Global Tamil News .
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது!
யாழ்ப்பாணம், சுன்னாகம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட தகராறில், அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் நேற்றைய… The post யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: அயலவரை கத்தியால் குத்திய பெண் கைது! appeared first on Global Tamil News .
Rishabam 2026 New Year Rasi Palan | ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன் | திருமணம்,தொழில்,கல்வி எப்படி?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் ரிஷபம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு் ரிஷபம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் விளக்குகின்றனர்.
இந்தியாவின் பணக்கார மாநகராட்சி; மும்பையை ஆளப்போவது யார்? - 2516 வேட்பாளர்களுடன் பலமுனை போட்டி!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மற்றொரு சிவசேனா(உத்தவ்) மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சி உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறது. துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி மாநிலம் முழுவதும் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற கட்சியுடன் கூட்டணி வைத்து 62 வார்டுகளை அக்கட்சிக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால் வஞ்சித் பகுஜன் அகாடி 16 வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 2516 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பா.ஜ.க கூட்டணியில் கடைசிவரை நீடித்ததால் வேட்பாளர் யார் என்பது கடைசி வரை சஸ்பெண்ஸ்சாக இருந்தது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாளில் மட்டும் 84 சதவீதம் பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது மனைவிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதில் தீவிர கவனம் செலுத்தினர். இட ஒதுக்கீடு முறையில் சில வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வார்டுகளில் அரசியல் தலைவர்கள் தங்களது மனைவிகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றனர். பா.ஜ.கவில் தனது மனைவிக்காக சீட் பெற்றுள்ள முன்னாள் கவுன்சிலர் அபிஜித் சாவந்த் இது குறித்து கூறுகையில்,'' எனது மனைவி ஆரம்பத்தில் இருந்தே எனது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். நான் வேறு எங்காவது புதிதாக ஒரு இடத்தில் போட்டியிடுவதை விட, எனது மனைவி எனது வார்டில் போட்டியிடுவதுதான் மிகவும் பொருத்தமானது என்று நான் உணர்ந்தேன்,” என்றும் அவர் தெரிவித்தார். மும்பையில் மட்டும் 43 அரசியல் தலைவர்கள் தங்களது மனைவி, மகன், மருமகள், வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி இருக்கின்றனர். பாஜக எம்.எல்.ஏ ராகுல் நர்வேகர், காங்கிரஸ் எம்.எல்.ஏ அஸ்லாம் ஷேக் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ நவாப் மாலிக் ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா மூன்று டிக்கெட்டுகளைப் பெற்ற நிலையில், மற்றவர்கள் தங்கள் உறவினர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றனர். இது தவிர எம்.எல்.ஏ.க்கள் தங்களது பகுதியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களது தூரத்து உறவினர்களுக்கு சீட் வாங்கிக்கொடுத்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பணக்கார மாநகராட்சியை கைப்பற்றுவது என்பது பா.ஜ.கவின் நீண்ட கால கனவாகும். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனாவை விட சில வார்டுகள் குறைவாக பெற்றதால் அப்போது பதவியை பிடிக்க முடியவில்லை. எனவே இந்த முறை எப்படியும் மும்பையை பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் ஏறத்தாழ ரூ.75 ஆயிரம் கோடியாகும். 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த மாநகராட்சியை சிவசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இம்முறை சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 90 வார்டுகளில் தான் போட்டியிடுகிறது. மும்பையை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். உண்மையான போட்டியென்றால் அது உத்தவ் தாக்கரேயிக்கும், ஏக்நாத் ஷிண்டேயிக்கும் தான் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி, மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத்… The post ⛪️மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி! ✨ appeared first on Global Tamil News .
பலவீனமாக இருந்தாலும் அதிமுகதான் எங்கள் எதிர்க்கட்சி –உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!
சென்னை :துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த புத்தாண்டு நேர்காணலில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாகப் பேசினார். “தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான பலமான கட்சியே இல்லை. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அதிமுகவைத்தான் முதன்மை எதிர்க்கட்சியாகப் பார்க்கிறோம். அதிமுக இப்போது பலவீனமாக இருந்தாலும், திமுகவின் எதிர்க்கட்சியாக அதிமுகவை மட்டுமே கருதுகிறோம்” என்று தெளிவாகத் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் “2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி” […]
பிரஜின், மீனு குட்டி அவ்ளோ சொல்லியும் புத்தாண்டும் அதுவுமா வேலையை காட்டிய சாண்ட்ரா: என்ன தாயி இது?
குடும்ப வாரத்தின்போது பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிரஜின் மற்றும் மகள் மீனு குட்டி சொன்னதை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் சாண்ட்ரா. புத்தாண்டு அன்றே ஆரம்பித்துவிட்டாரே சேச்சி என்கிறார்கள் பார்வையாளர்கள்.
சென்னை கடற்கரை–எழும்பூர் இடையே கூடுதல் ரயில் பாதை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை நகரின் ரயில் போக்குவரத்தில் முக்கியமான மாற்றமாக, கடற்கரை (Beach) நோக்கி கூடுதல் ரயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு தயாராகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் 2026 அறிவிப்பு… எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது…விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு!
சென்னை :மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை கடுமையாக கிண்டலடித்தார். “மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. உண்மையான வெளிச்சத்தை எடப்பாடி பழனிசாமிதான் தருவார். களத்தில் பணியாற்றும் எங்களுக்குதான் தெரியும் யாருக்கு யார் போட்டி என்று” என்று கூறினார். விஜய்யின் ரசிகர் செல்வாக்கை மின்மினி பூச்சியோடு ஒப்பிட்டு அவர் பேசினார்.“அமிதாப்பச்சன் வந்தால்கூட கூட்டம் கூடும். நம்மை ஆளக்கூடியவர் யார் என்பதை […]
சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. புத்தாண்டு அதுவுமாக மக்களுக்கு வந்த ஷாக் நியூஸ்!
2026ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சிலிண்டர் விலை பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் சிலிண்டர் விலை இதுதான்.
மேஷம் - புத்தாண்டு பலன்கள் 2026 | Mesham Rasi New Year Rasi Palan | நினைத்தது நடப்பது எப்போது?
இந்த வீடியோவில் பிரபல ஜோதிடர்கள் பாரதி ஸ்ரீதர், பஞ்சநாதன் மற்றும் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கும் மேஷம் ராசிக்கான புத்தாண்டு கணிப்புகளை விரிவாகக் கேட்கலாம். இந்த ஆண்டு மேஷம் ராசியினருக்கு ✅ வேலை & தொழில் ✅ பணவரவு & முதலீடு ✅ குடும்பம் & திருமணம் ✅ ஆரோக்கியம் ✅ ஆன்மிக வளர்ச்சி என்ற துறைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எளிய பரிகாரங்கள் மூலம் தடைகளை எவ்வாறு நீக்கலாம் என்பதையும் தெளிவாக விளக்குகின்றனர்.
நெல்லை, குமரி, விருதுநகரில் மினி டைடல் பூங்கா… தமிழக அரசு வெளியிட்ட டெண்டர்!
தமிழகத்தில் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணிகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் மூன்று மாவட்டங்களில் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

24 C