'அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம், நாம் வேடிக்கை பார்ப்போம்' - சீமான்
அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம். அதனை நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சினருக்கும், ம.தி.மு.க-வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அவரது ஆதரவாளர்கள், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார்கள்.அந்த வழக்கில் சீமான் உள்ளிட்டோர் மீண்டும் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே போல அந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் தங்களை தாக்கியதாக ம.தி.மு.க-வினர் கொடுத்த வழக்கில் வரும் 25 ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டதுதான். காங்கிரஸ் கதர் ஆடை கட்டிய பாஜக. அதே போல பாஜக காவி ஆடை கட்டிய காங்கிரஸ்.சுதந்திர கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். அவரையும், சாகும் வரை தங்களுக்கு விஸ்வாசமாக இருப்பேன் என பிரிட்டிசாருக்கு கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கரையும், பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம்.அது எப்படி சரி, அவரை எப்படி வீரர் என கூறலாம்? இப்படி தான் அவர்கள் வரலாறை பல வகையில் திரித்து வருகிறார்கள். வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்தவரை வீரர் என எப்படி அழைப்பீர்கள்?.அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அது அவர்களின் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்னை பற்றி பேசுவோம். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை நடத்த முடியுமா? என கற்பனை செய்து பாருங்கள். அங்கு ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம் என்றார்.
வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம் -இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.7 கிலோ தங்க நகை பறிமுதல்
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு 3.7 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமல்ராஜ் குறித்து தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
`துரோக சிந்தனை உடைய கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது' - இபிஎஸ் மீது தினகரன் விமர்சனம்
`அதிமுகவில் நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, இன்றைய தினம் ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமன்றி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனும் தான் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் பேசுகையில் “அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமேதும் இல்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகள் பலவற்றை செய்தோம்.அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். ஆக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் நோக்கமும். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல. யாராக இருந்தாலும் சேர்த்துக்கொள்வோம். யாராக என்ற வார்த்தையில் சின்னம்மாவும் இருக்குறாங்க, டிடிவி தினகரனும் இருக்குறாங்க” என்று கூறியிருந்தார்.ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தக் கருத்துக்கு டிடிவி தினகரன் தற்போது எதிர்வினையாற்றியுள்ளார். அவர் பேசுகையில்,“தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று ட்வீட் செய்துள்ளார்.தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். (1/2)— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2022தனது இந்த ட்வீட்டின் மூலம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் இபிஎஸ்-க்கு எதிராகவும் உள்ள தனது நிலைப்பாட்டை டிடிவி தினகரன் வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
”சைக்கிள் கொடுப்பதை எப்படி இலவசம் என விமர்சிக்க முடியும்” - நிதியமைச்சர் தியாகராஜன்
மாணவர்களுக்கு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அரசு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து கேள்வி கேக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, சமுதாயம் நீதியோடு இருக்க, அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பது தான். பிறப்பால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட கூடாது, உழைப்பு மற்றும் கல்வி அடிப்படையில் அனைத்து மக்களும் முன்னேற முழு வாய்ப்பு அளிக்க வேண்டும், இதை தத்துவம் என்று கூட சொல்லலாம். அதில் முக்கிய பங்கு பெண்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமை கல்வியிலும், சொத்திலும், பொருளாதாரத்திலும் கிடைத்திட வேண்டும். மேலும் விலையில்லா பொருட்கள் வழங்குவதை உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும் இதெல்லாம் தவறு என்றும் செய்யக்கூடாது என்றும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த மாதிரி ஒரு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது.சமூக நீதிக்காக கல்வி முக்கியம், குறிப்பாக பெண்கள் கல்வி முக்கியம். அதற்கு எந்த வழியில் எல்லாம் ஊக்கம் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு அறிவோடு நிதியை ஒதுக்கி செயல்படுத்தக்கூடிய அரசு இது. இதெல்லாம் இலவசம் என்றும் தவறு என்றும் கூறினால் அதை விட சமுதாய துரோகம் இருப்பதாக என்னால் சிந்திக்க முடியவில்லை.தொகுதியில் இன்னும் பல பள்ளிகளுக்கு சைக்கிள் வரவில்லை. அதனை உடனடியாக வழங்குவதற்கு சென்னையில் துறை ரீதியாக ஆய்வு செய்து விரைவில் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி, மிக முக்கியமான திட்டம் அதிலும் பலவகையில் ஈடுபட்டு உள்ளவன் என்ற அடிப்படையில், நம் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது என்பது மிக்க மனநிறைவு அளிக்கிறது.இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை தேவையான நாள் வரை நீடிப்போம், எத்தனை நாள் வரை அது தேவையோ அதுவரை, எவ்வளவு நிதி வேண்டுமானாலும் சரி ஒதுக்கீடு செய்து அதனை நீடிப்போம் என்று தெரிவித்தார்.
”மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்து வருகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்துள்ள பேட்டியில், “கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. -ஆக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் பின்புலம் குறித்து ஆராயக் கூடிய பணி நடைபெற்று வருகிறது.அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களிலிருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது எந்த முடிவுக்கும் நாம் செல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றிய பின்புலம் முழுமையாக தெரிந்தப் பிறகு தான் முடிவு எடுக்கப்படும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டோம். இனி விரைந்து அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கும்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது, அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
’தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மரணம் - முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
உடல்நல குறைவுகாரணமாக இலக்கியவாதி, தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன் இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78.நெல்லை டவுன்அம்மன் சன்னதி தெருவில் வசித்து வந்தவர் தமிழ் இலக்கியவாதியும் பிரபல பேச்சாளரும்பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன். இவருக்கு வயது 78. தமிழ்நாட்டின்முக்கிய தலைவர்கள், ஆளுமைகள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கி பழகி நட்பாய் இருந்தவர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாக இருந்தவர்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜிகே மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி தங்க பாலு ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தவர். 1992 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அதிமுகவில் நீண்ட நாட்களாக பயணிக்க முடியவில்லை. ஒரு ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டவர். 78 வயதானாலும் இவரது பேச்சாற்றலும் நினைவாற்றலும் இலக்கிய நயமும் சிறப்பாக இருக்கும். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதி, காதல் செய்யாதவர்கள் கல்லறியுங்கள், திக்கணைத்தும் சடைவீசி, பழம் பாடல் புதுக்கவிதை உள்ளிட்ட புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவை இவரால் உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின்:நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘’தமிழகத்தின் முதுபெரும்தலைவர்களுடன் நெருங்கி பழகிய நெல்லை கண்ணன் மறைவை அறிந்து வருத்தமுற்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.ஜி.கே.வாசன் எம்பிநெல்லைக் கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் சிறந்த அடைந்தேன். அவர் பேச்சாளராகவும் , பட்டிமன்ற தலைவராகவும் , இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர். நெல்லை கண்ணன் அவர்கள் தன் சிறுவயது முதல் பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் . சிறந்த தேசியவாதி. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் ஜி.கே.வாசன் எம்பி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.பாரிவேந்தர் எம்பிஅவருக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தாமிரபரணி பாயும் திருநெல்வேலியில் பிறந்த தமிழ்நதி நெல்லைக் கண்ணன். தாவிக் குதித்து வரும் தாமிரபரணி வெள்ளம்போல் இவரது நாவிலும் தமிழாறு வெள்ளமாய்ப் பெருகி கேட்போர் உள்ளங்களை எல்லாம் நனைத்ததுண்டு. “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற வள்ளுவன் குறளுக்கு உதாரணமாய் வாழ்ந்துக் காட்டிய பெருமகன் அவர்! கர்மவீரர் காமராசர் பாதம் தொடர்ந்து நடந்த அவர். கவியரசர் கண்ணதாசனின் கீதத்தின் கீர்த்தியை நாதமாய் முழங்கியவர். பேசாத இலக்கிய அரங்கம் இல்லை; இவர் புகழ் மணம். வீசாத இடம் தமிழகத்தில் இல்லை என்று வாழ்ந்த அந்த இலக்கியச் சிங்கத்தின் கர்ஜனை. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அரங்கிலும் இரண்டு முறை எதிரொலித்ததை எண்ணிப் பார்க்கிறேன். மேடையிலே வீசிய அந்த மெல்லிய பூங்காற்றின் இனிய ரீங்காரம் இன்று அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநெல்லை கண்ணன் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில்இரங்கல் தெரிவித்து கோள்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு செயலாளர் இரா.முத்தரசன் அக்கட்சி சார்பாக இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், ‘’இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் களத்தில் கர்மவீரர் காமாராஜரின் தலைமை ஏற்று, சுழன்று, சுழன்று பரப்புரை செய்த முன்னணி தலைவர். இவரது கலாய்ப்பு விமர்சனத்துக்கு உள்ளானோரையும் ரசிக்கச் செய்யும் ஒலி அலைக்கற்றில் நெல்லை கண்ணன் என்றென்றும் வாழ்ந்திருப்பார். நெல்லை கண்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது மகன்களுக்கும் இலக்கிய உலக நண்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என ஐஜத எம்எல்ஏ பகிரங்க புகார்.. சிக்கலில் நிதிஷ் குமார்!
பீகார் மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி. இதனால் அம்மாநில அரசியலில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது.பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி உடனான முரண்பாட்டை தொடர்ந்து கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கமும் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி, ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், தன்னைப் போன்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.இதற்கு பதில் அளித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி கூறிய கருத்து தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் அவையில் இடம் வழங்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி பேசியிருக்கக் கூடாது என தெரிவித்துள்ள நிதிஷ்குமார், இத்தகைய தவறான செயல்பாடுகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பீமா பாரதியை போலவே இன்னும் சில சட்டம்னற உறுப்பினர்களும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.- நிரஞ்சன் குமார்
குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவர்.. ஆயுள் தண்டனையை குறைத்த நீதிமன்றம்!
குடிபோதையில் மனைவியை கொலைசெய்த நபருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை, 7ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள உள்ளூர் கிராமத்தில் அய்யாசாமி மற்றும் அவரது மனைவி மலர்விழி வசித்து வந்துள்ளனர். இவர்களின் இரண்டு மகன்களும் திருச்சி மற்றும் சென்னையிக் வேலை பார்த்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்காக இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அய்யாசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், அய்யாசாமிக்கும் மலர்வழிக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது அதில், ஆத்திரமடைந்த அய்யாசாமி, மலர்விழியை அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கியதால் மலர்விழி உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மகிளா நீதிமன்றம் 2017ல் அய்யாசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அய்யாசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரர் தொடர்ச்சியாக குடிப்பழக்கம் உடையவர். மேலும் நேரில் கண்ட அவரது மகன்களின் சாட்சிகளின் அடிப்படையில், மனுதாரர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் மனுதாரர் இந்த சம்பவத்தின் போது, எவ்விதமான ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை. இதனால், கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இச்ச சம்பவத்தை அய்யாச்சாமி செய்யவில்லை என்பது தெரியவருகின்றது.ஆகவே, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. முன்கூட்டிய விடுதலை இன்றி, 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
சிறுவயதில் உயிரிழந்த அப்பா; டெய்லரிங் வேலையுடன் படிப்பு; 200/200 கட் ஆஃப் எடுத்த அரசுப்பள்ளி மாணவி
விழுப்புரம் தேவநாத சுவாமி நகர் பகுதியை சேர்ந்த மாணவி பிருந்தா. விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையில் பயின்ற இம்மாணவி... 12-ம் வகுப்பு சென்ற போது அங்கு புதிதாக தொடங்கப்பட்ட `அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில்' சேர்ந்து தங்கிப் படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 600-க்கு 593 மதிப்பெண்களை பெற்று அசத்தியிருந்தார் அம்மாணவி. இதில் மொழிப்பாடங்களை தவிர்த்து கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 4 பாடங்களிலும் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருந்தார். அண்ணா பல்கலைக்கழகம், மாணவி பிருந்தா பின், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தார் அம்மாணவி. அண்மையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், அரசுப்பள்ளி அளவில் 200/200 கட் ஆஃப் பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்று மீண்டும் அசத்தியுள்ள மாணவி பிருந்தா, பொதுப்பிரிவு வரிசையில் 35-வது இடத்தைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில், அந்த மாணவியிடம் பேசினோம். எங்க வீட்டில், நாங்க மூன்று பேரும் பெண் பிள்ளைகள்தான். என்னுடைய அப்பா, நான் 7-வது படிக்கும் போதே தவறிவிட்டார். அதிலிருந்து பால்கடை வேலைக்கு சென்று, எங்க மூன்று பேரையும் பத்திரமா வளர்த்தெடுத்தது எங்க அம்மா விஜயலட்சுமி தான். குடும்ப வருமானமும் குறைவாக இருந்ததினால், அக்கா நான் எல்லாம் சேர்ந்து டெய்லெரிங் கத்துகிட்டு எங்க செலவை பார்த்துகிட்டோம். நான் 12-ம் வகுப்பு சென்ற போது, அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியை விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முதலாக தொடங்கினார்கள். நானும் அந்தப் பள்ளியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. கொரோனா சமயத்தில் 11-ம் வகுப்பு பாடத்தை சரியாகப் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தாலும் அதையும் சேர்த்து எங்களுக்கு பாடம் நடத்தினார்கள் ஆசிரியர்கள். அரசுப்பள்ளி மாணவி பிருந்தா காலை 5 மணிக்கு பணிக்கு வரும் ஆசிரியர்கள் இரவு 10 மணி வரை கூட இருந்து அர்ப்பணிப்போடு பாடங்களைப் பயிற்றுவித்து, படிப்பதற்கு உதவி செய்வார்கள். உணவு முதற்கொண்டு அனைத்து வசதிகளும் அங்கு நன்றாக தான் இருக்கும். மாவட்ட ஆட்சியர் உட்பட பல உயர் அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வதோடு, ஊக்கமும் கொடுப்பார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் அரசுப்பள்ளி அளவில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. நீட் தேர்வையும் நன்றாக எழுதியுள்ளோன். என்னுடைய ஆசை மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில், என்னுடைய அப்பா தலையில் அடிப்பட்டதினால் தான் உயிரிழந்தார். அதிலிருந்தே நான் மருத்துவம் (நரம்பியல் வல்லுநர்) படித்து அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணம் எனக்குள் வந்துவிட்டது. மருத்துவம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பொறியியல் படிப்பை தொடருவேன் என்றார். நீட் தேர்வில் வென்ற கோவை பழங்குடி மாணவி; சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த கண்ணீர்க் கதை!
``பட்டா, வீடுன்னு நெறைய சொன்னாங்க, ஆனா..! - பழங்குடியினப் பெண்ணின் புகாரும்... திமுக விளக்கமும்!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில், சுமார் 81 நாடோடி பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்பதுதான் இவர்களின் முழுநேர வேலை. இந்த நிலையில், கடந்த 2021 அக்டோபர் 24-ம் தேதி அங்குள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் நாடோடி பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ``அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என பழங்குடியின பெண்மணி அஸ்வினி என்பவர் கேள்வி எழுப்பிய காணொளி வைரலானது. அதோடு, ``நாங்க எல்லாம் ஊசி, பாசிமணி விற்கிறோம். எங்களுக்கு சாப்பாடு பிரச்னையில்ல. எங்க குழந்தைக படிக்கணும். எம்.பி.சி பட்டியல்ல இருக்கற எங்களை எஸ்.டி பட்டியலுக்கு மாத்தணும்” எனப் பல்வேறு கோரிக்கைகளையும் அஸ்வினி முன்வைத்தார். இதனைக் கவனித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலுக்கு நேரடியாக சென்றார். அங்கு நடந்த அன்னதானத்தில் அஸ்வினியுடன் இணைந்து அவர் உணவருந்தினார். இந்தக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. அஸ்வினி-ஸ்டாலின் அப்போது அமைச்சருடன் பேசிய அஸ்வினி, இந்தப் பகுதியில் 25 வருடங்களாக தங்கள் சமூகத்தினர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாகவும், பட்டா உட்பட எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை முதலமைச்சரின் கவனத்துக்கு சேகர்பாபு கொண்டு சென்றார். இதையடுத்து, ``அந்தப் பகுதியில் ஒரு வாரத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டும்” என முதல்வர் உத்தரவிட்டார். இதனை உள்வாங்கிக் கொண்ட அதிகாரிகள் மின் கம்பம் அமைத்தல், குடிநீர் குழாய் பொருத்துதல், புதிய சாலைகள் அமைத்தல் என பூஞ்சேரி கிராமத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்டனர். இதையடுத்து, தீபாவளி நாளான நவம்பர் 4-ம் தேதி பூஞ்சேரி கிராமத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , நாடோடி பழங்குடியின மக்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பில் 283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேடையிலேயே அவருக்கு நன்றி தெரிவித்து அஸ்வினி பேசினார். தொடர்ந்து, புதிதாகத் தயாரித்த ஊசி, பாசிமணி மாலையை முதல்வருக்கு அணிவித்தார். இந்த நிலையில் முதலமைச்சர் வழங்கிய கடனுதவி தற்போதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லையெனவும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனவும் வேதனை தெரிவித்து அஸ்வினி தற்போது பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ``எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் ஐயா வந்தாங்க. 12 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. 30 பேருக்கு 10 ஆயிரம் ரூபாய் லோன் கொடுத்தாங்க. பட்டா, வீடு என நிறை சொன்னாங்க. ஆனால் எதுவுமே நடக்கல. ஒரு லட்சம் ரூபாய் லோன் சொன்னாங்க. ஆனா, அது ஒருத்தருக்குக்கூட கொடுக்கல. ஒரு வருஷம் ஆச்சு. கடை இருந்தா மட்டும் லோன் கொடுப்போம்னு பேங்கில் சொல்றாங்க. கடை இருந்தால்தான் லோன் கொடுப்போம்னு சொல்றாங்க. எங்கக்கிட்ட ஆதார் அட்டையிலிருந்து, பேங்க் புக், பட்டா, மண் வரி என இத்தன புரூஃப் இருக்கு. இதெல்லாம் பத்தாது நிறையா இருந்தாதான் லோன் கொடுப்போம்னு சொல்றாங்க. இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஐயாவையும் பார்த்தோம். அவர் செங்கல்பட்டு கலெக்டரை பார்க்கச் சொன்னார். அவரும் கடை கொடுக்கலாம்னு சொன்னார். அதுக்கு பிறகு வி.ஏ.ஓ வந்து பார்த்துட்டு கடைகள் காலியா இல்லைனு சொல்லிட்டார். இந்தியாவில் பழங்குடியின சமுதாயத்துல ஒரு கடை எங்களுதுனு காட்டச் சொல்லுங்க. ரோட்டில்தான் உட்கார்ந்து வியாபாரம் பார்க்கணும், ரோட்டில்தான் வாழனும்னு கடவுள் படச்சுவிட்டு போயிட்டாங்க. ‘அரசு உங்களுக்கு நிறைய உதவி பண்றாங்க. உங்களுக்கு என்ன கவலை’னு நாலு பேர் வந்து பேசும்போது கஷ்டமா இருக்கு. எங்க சமூகத்துல லோன் வாங்கினாலும், கட்டி முடிச்சிருக்கோம்” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் அஸ்வினி. அண்ணாமலை அஸ்வினி பேசியுள்ள வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த தி.மு.க அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை... தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்பவைத்து ஏமாற்றுவதுதான் உங்கள் சமூக நீதியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``முதலமைச்சர் சென்று நல திட்டங்கள் வழங்கினார். அதற்கான பிராசஸ் நடந்துகொண்டிருக்கிறது. அதில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் சும்மா போய் வரவேண்டும் என்று முதல்வர் போகவில்லை. அந்த ஒரு இடத்திற்கு மட்டுமல்ல பழங்குடிகள் வசிக்கக்கூடிய பல இடங்களில் இன்று பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் சாதி சான்று கிடைக்காதவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ ஒரு இடத்தில் சின்ன பிரச்னை இருந்திருக்கிறது. அது என்னவென்று பார்த்து, விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். விழுப்புரம்: கல்குவாரி பணி; கொத்தடிமைகளாகப் பழங்குடி மக்கள்; 11 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த நீதி!
பிரீமியர் லீக் Week 2: பாதாளத்தில் வீழ்ந்த மான்செஸ்டர் யுனைடட்; யுத்தத்தில் ஈடுபட்ட பயிற்சியாளர்கள்!
மான்செஸ்டர் யுனைடட் - கொஞ்சமாவது மாறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க, முன்பை விட பெரிய ஏமாற்றத்தைப் பரிசளித்திருக்கிறது அந்த அணி. சீசனின் முதல் போட்டியில் 2-1 என பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணியிடம் தோற்ற அந்த அணி, இந்த வாரம் பிரென்ட்ஃபோர்ட் அணிக்கு எதிராக 4-0 என தோற்றிருக்கிறது. அதுவும் முதல் 35 நிமிடங்களிலேயே 4 கோல்களை வாங்கி இதுவரை கண்டிராத வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது அந்த அணி. மான்செஸ்டர் சிட்டி, ஆர்செனல் போன்ற அணிகள் தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடர யாரும் எதிர்பாராத வகையில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது யுனைடட். எரிக் டென் ஹாக் பயிற்சியாளராக பதவியேற்ற பின் மிகப்பெரிய நம்பிக்கை மான்செஸ்டர் யுனைடட் ரசிகர்களிடம் துளிர்விட்டது. ப்ரீ சீசன் முடிவுகள் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்த்தன. ஆனால், லீக் தொடங்கியதிலிருந்து அந்த நம்பிக்கையை யுனைடட் வீரர்களே உடைத்துக்கொண்டிருக்கின்றனர். பிரீமியர் லீக் - Premier League பிரென்ட்ஃபோர்ட் அணிக்கு எதிரான போட்டியின் ஆரம்ப கட்டத்தில் யுனைடட்தான் பந்தை அதிகமாக தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் ஒரு அட்டகாசமான நகர்வாலும், டி.கே-வின் தவறாலும் பிரென்ட்ஃபோர்ட் முன்னிலை பெற்றது. துரோ இன்-ல் இருந்து யுனைடட் வீரர்களிடமிருந்து பந்தைப் பறித்தது பிரென்ட்ஃபோர்ட். ஜென்சன் டா சில்வாவுக்கு பாஸ் செய்ய, பாக்சுக்கு வெளியே இருந்து கோல் நோக்கி அடித்தார் அவர். அதை டி.கே மிகவும் எளிதாகத் தடுத்திருக்கலாம். ஆனால் 2018 உலகக் கோப்பையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஷாட்டை விட்டதுபோல, இந்த ஷாட்டையும் தன் கைகளுக்கு இடையே சென்று கோலாகவிட்டார் யுனைடட் அணியின் கோல்கீப்பர். அந்த ஒரு தவறே அவரை வாட்டிக்கொண்டிருந்த நிலையில், எட்டே நிமிடங்கள் கழித்து இரண்டாவது தவறையும் செய்தார் அவர். பிரென்ட்ஃபோர்ட் வீரர் வருவதைச் சரியாக கவனிக்காமல் கிறிஸ்டியன் எரிக்சனுக்கு பாஸ் செய்தார் அவர். எரிக்சனால் அதைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அது சாத்தியமும் இல்லை. பந்தை மீட்ட மதியஸ் ஜென்சன் அதை எளிதாக கோலாக்கினார். 2-0. முப்பதாவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி பென் மீ பிரென்ட்ஃபோர்ட் அணியின் மூன்றாவது கோலை அடித்தார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எம்பாயுமோ நான்காவது கோலை அடித்து மான்செஸ்டர் யுனைடட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரின் இதயங்களையும் நொறுக்கினார். இதற்கு மத்தியில் யுனைடட் அட்டாக்கர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. கோல்கள் கொடுத்த நம்பிக்கை பிரென்ட்ஃபோர்ட் அணியின் டிஃபன்ஸையும் வலுவாக்கியது. நம்பிக்கையற்ற, உடைந்து போன மான்செஸ்டர் யுனைடட் அணியை சமாளிப்பது அந்த அணிக்கு மிகவும் எளிதாக மாறிப்போனது. இரண்டாவது பாதி தொடங்கும்போது மூன்று மாற்றங்கள் செய்தார் டென் ஹாக். தொடக்கத்தில் அந்த அணி சில வாய்ப்புகளை உருவாக்கியது. சில கிராஸ்கள் போடப்பட்டன. கிடைத்த இரண்டு வாய்ப்புகளை ரொனால்டோவால் டார்கெட் நோக்கி வைக்க முடியவில்லை. கடைசி வரை எவ்வளவோ முயற்சி செய்தும் மான்செஸ்டர் யுனைடடால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் 4-0 என வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றது பிரென்ட்ஃபோர்ட். பிரீமியர் லீக் - Premier League இந்த வாரம் பிரிமீயர் லீகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய மற்றொரு போட்டி செல்சீ vs டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். களத்தில் சிறப்பான ஆட்டம் நடந்துகொண்டிருந்தாலும், களத்துக்கு வெளியேதான் நெருப்பு அதிகமாக எரிந்தது. செல்சீ 1-0 என முன்னிலையில் இருந்தபோது, ஒரு இடத்தில் ஹாவர்ட்ஸை ஃபவுல் செய்தார் பென்டன்கர். ஆனால் நடுவர் ஆன்டனி டெய்லர் ஃபவுல் கொடுக்கவில்லை. ஆட்டம் தொடரே அதே மூவில் கோலடித்தது ஸ்பர்ஸ். அதனால் செல்சீ வீரர்கள் நடுவர்களை முற்றுகையிட்டனர். பயிற்சியாளர் தாமஸ் டுகெல், ஸ்பர்ஸ் பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்டேவிடம் காரசாரமாக விவாதித்தார். இதனால் பெரும் பிரச்னை கிளம்பியது. இறுதியில் இரண்டு மேனேஜர்களுக்கும் எல்லோ கார்டு கொடுத்தார் நடுவர். செல்சீ இரண்டாவது கோல் அடிக்க, களத்தில் ஓடி தன் கோபத்தையும் சந்தோஷத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தினார் டுகெல். ஆனால் கடைசியில் ஒரு நிமிடம் இருக்கும்போது கார்னரில் இருந்து கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார் ஹேரி கேன். அப்போதும் ஒரு பெரும் பிரச்னை எழுந்தது. செல்சீ வீரர் குகுரெயாவை முடியைப் பிடித்து இழுத்து தள்ளினார் கிறிஸ்டியன் ரொமேரோ. இருந்தும் நடுவர், VAR என யாரும் ஃபவுல் கொடுக்கவில்லை. இதுவும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இறுதியில் போட்டி முடிந்து இரண்டு மேனேஜர்களும் கை குலுக்கிய போது அடுத்த போர் மூண்டது. கான்டேவின் கைகளை டுகெல் இறுக்கமாக முறுக்க, அதன்பிறகு வார்த்தை யுத்தமும் தொடங்கியது. அதனால் இருவருக்குமே ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. பிரீமியர் லீக் - Premier League போர்ன்மௌத் அணியைப் பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி 4-0 என எளிதாக வெற்றி பெற்றது. ஆர்செனல் அணி 4-2 என லெஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. அந்த அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கேப்ரியல் ஜீசுஸ் 2 கோல்கள், 2 அசிஸ்ட்கள் என 4 கோல்களுக்குமே காரணமாக இருந்தார். இந்த 2 அணிகள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றன. மற்றொரு போட்டியில் அர்செனல் அணி லெய்செஸ்டர் சிட்டியுடன் மோதியது. ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கேப்ரியல் ஜீசுஸ் ஆர்சனல் அணிக்காக தன் முதல் கோலை அடித்தார். மீண்டும் 35-வது நிமிடத்தில் அவரின் இரண்டாவது கோலை அடித்தார் அவர். சென்ற ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது போல் இந்த ஆட்டத்திலும் அர்செனல் அணி அருமையாக விளையாடியது. அதன் பலனாக 55-வது நிமிடத்தில் கிரானிட் ஷக்காவமும், மார்டினெல்லி 75-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் 4-2 கோல் கணக்கில் அர்செனல் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்றது. பிரீமியர் லீக் - Premier League லிவர்பூல் எஃப்சி vs கிரிஸ்டல் பேலஸ் அணி மோதிய போட்டி ஆன்ஃபீல்டில் நடைப்பெற்றது. தொடக்கத்தில் இருந்தே லிவர்பூல் அணியே ஆதிக்கம் செலுத்த ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் கவுண்டரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ஜஹா கிரிஸ்டல் பேலஸ் முதல் கோலை அடித்தார். முதல் பாதியில் லிவர்பூல் அணி கோல் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் நுனிஸ் செய்த பவுல்லால் லிவர்பூல் அணியில் பத்து வீரர்கள் மட்டுமே ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் 61-வது நிமிடத்தில் லூயிஸ் டியாஸ்சின் கோல் ஆட்டத்தை 1-1 என்று சமநிலைக்கு ஆக்கியது. பிரீமியர் லீக் போட்டி முடிவுகள் - கேம் வீக் 2 ஆஸ்டன் விலா 2 - 1 எவர்டன் ஆர்செனல் 4 - 2 லெஸ்டர் சிட்டி பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் 0 - 0 நியூகாசிள் யுனைடட் மான்செஸ்டர் சிட்டி 4 - 0 போர்ன்மௌத் சௌதாம்ப்டன் 2 - 2 லீட்ஸ் யுனைடட் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் 0 - 0 ஃபுல்ஹாம் பிரென்ட்ஃபோர்ட் 4 - 0 மான்செஸ்டர் யுனைடட் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் 1 - 0 வெஸ்ட் ஹாம் யுனைடட் செல்சீ 2 - 2 டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஐரோப்பாவின் மற்றொரு பெரிய தொடரான லா லிகா இந்த வாரம் தொடங்கியது. காசே இல்லை என்று சொன்னாலும் எண்ணற்ற வீரர்களை வாங்கிக் குவித்த பார்சிலோனா முதல் போட்டியில் ஒரு கோல் அடிக்கவே தடுமாறியது. ரயோ வலெசானோ அணிக்கு எதிரான பார்சிலோனாவின் ஆட்டம் 0-0 என முடிந்தது. நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் கூட தங்கள் முதல் போட்டியில் தடுமாறியது. செகுண்டா பி தொடரை வென்று புரமொஷன் பெற்ற அல்மேரிய அணிக்கு எதிராக மோதிய அந்த அணி சுமார் 55 நிமிடங்கள் ஒரு கோல் பின்தங்கியிருந்தது. இருந்தாலும் கடைசி அரை மணி நேரத்தில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது மாட்ரிட். பிரீமியர் லீக் - Premier League Serie A திருவிழாவும் இந்த வாரம் தொடங்கியது. Serie A-வில் கடந்த முறை சாம்பியனான ஏசி மிலன் மற்றும் யுடினெஸ் அணிகள் மோதின. யுடினெஸ்சை 4-2 பந்தாடியது ஏசி மிலன். ஆட்டம் தெடங்கிய 2 நிமிடத்தில் கோல் அடித்த யுடினெஸ் அதை தக்க வைக்க முடியவில்லை. ஹெர்னாண்டஸ் 11' (penalty) ரெபிக் 15', 68 , தியாஸ் 46 ஆகியோர் ஏசி மிலன்னுக்கு கோல் அடித்தனர். - லோகு, உ.கற்பக ஐயப்பன்
உலகளவில் 60 சதவீத தடுப்பூசிகளை வினியோகிப்பது இந்தியா –நிர்மலா சீதாராமன் பெருமிதம்..!!
உலகளவில் பயன்படுத்தப்படுகிற தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகளை வினியோகிப்பது இந்தியாதான் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார். மத்திய செலவினத்துறையின் கூடுதல் செயலாளர் சஜ்ஜன் சிங் யாதவ் ‘இந்தியாவின் தடுப்பூசிகள் வளர்ச்சி கதை’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். டெல்லியில் நேற்று இந்த புத்தகத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகளவில் பயன்படுத்தப்படுகிற அனைத்து தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுபவை […]
22 க்கு எதிராக 09 மனுக்கள் தாக்கல்!
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு
மத்திய வங்கி வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலம்
பொது மக்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கி அமைப்பில் வைப்பிலிடுவதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலம் வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய வர்த்தகர்களிடம் சஜித் கோரிக்கை!
இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவொன்றுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (17) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
லெபனான் தோல்வியடைந்த நாடாக மாறுவதை தவிர்க்க முடியாது
லெபனான் விரைவில் தோல்வியடைந்த நாடாக மாறுவது தவிர்க்க முடியாதது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுப்பணித்துறை ஊழியர்கள் பல மாதங்களாக வேலை நிறுத்தத்தில்
பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மேர்வின் சில்வா பிணையின்றி விடுவிப்பு!
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத்
சிஐடியில் எரிசக்தி அமைச்சர் முறைப்பாடு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன செயற்பாடுகள் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
வசந்த முதலிகே உட்பட 5 பேர் கைது!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள்...
நாட்டில் மேலும் 166 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் வௌிநாட்டுப் பயணம்! 3 நாடுகளுடன் கலந்துரையாடல்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மாதம் ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார். ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மிக் (MIC) விமான கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், […]
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA, அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து.
… The post சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA, அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து. first appeared on Chennai Today News .
பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நபர் கைது!
பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது
சீன கப்பல் வருகையும், அதானி நிறுவனத்தின் இலங்கை பிரவேசமும்!! (வீடியோ, படங்கள்)
இலங்கையின் வட பகுதியிலுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேசத்தில் 286 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 234 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை […]
அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கத் திட்டம்!
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! The post அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கத் திட்டம்! appeared first on NTamil.com .
சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் உடன்படிக்கை: மத்திய வங்கி ஆளுநர்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! The post சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் உடன்படிக்கை: மத்திய வங்கி ஆளுநர் appeared first on NTamil.com .
3 வயது குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்!!
தனது 3 வயது குழந்தைக்கு முன்னால் இளம் தாய் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. கடந்த 3.07.2022 அன்று 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கணவன் வீட்டில் இல்லாத வேளை அவரது 3 வயது பிள்ளை பார்த்து இருந்த சந்தர்ப்பத்தில் அயலவர் ஒருவரினால் கத்தி மூலம் அச்சுறுத்தபட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் […]
சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகள் தேவையில்லை- அமைச்சர் பிடிஆர் காட்டம்!
அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. சர்வாதிகாரமாக வழங்கப்படும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
கோலாகல கோகுலாஷ்டமி: கொண்டாடுவது எப்படி? சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன? வழிகாட்டுகிறார் APN சுவாமிகள்
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று ரோஹிணி நட்சத்திர நன்னாளில் பகவான் கிருஷ்ணர், அவதரித்தார். அந்த அற்புதமான நாளே ‘கோகுலாஷ்டமி’ ஶ்ரீஜயந்தி என்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களில் சிறந்தது கோகுலாஷ்டமி கொண்டாட்டம் என்பார்கள். அப்படிப்பட்ட கோகுலாஷ்டமியின் சிறப்புகள் என்ன? அதைக் கொண்டாடுவது எப்படி? இந்த நாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன என்பது குறித்து ஏபிஎன் சுவாமிகளிடம் கேட்டோம் பொதுவாக ராமநவமி என்று சொன்னால் அது பெரும்பாலும் சைவர்கள் வைஷ்ணவர்கள் என அனைவருக்கும் ஒரே நாளில் வரும். ஒரே நாளில் கொண்டாடுவோம். ஆனால் கிருஷ்ண ஜயந்தியைப் பொருத்த அளவில் சிலர் ஜன்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்று ஒரு நாளிலும் சிலர் ஶ்ரீ ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி என்று ஒரு நாளிலும் கொண்டாடுவது வழக்கம். ஏன் இப்படி இரண்டு தினங்களாக வருகிறது என்று பலரும் கேட்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணன் இதற்கு சாஸ்திரபூர்வமாகப் பல்வேறு பொருள் நிறைந்த விடை உண்டு. ஆனால் இதற்கு அடியேன் விளையாட்டாகக் கூரத்தாழ்வான் சொன்ன பதிலில் இருந்து ஒன்றை எடுத்துச் சொல்வதுண்டு. பெருமாள் ராமாவதாரத்தில் 'ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்' என்று வாழ்ந்தவர். எனவே அவர் பிறந்த தினமும் ஒரே நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரோ சுபாவத்திலேயே விளையாட்டுத்தனம் மிகுந்தவர். ஆண்டாள் கண்ணனைப் பாடும்போது, 'ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே...' என்று பாடுவாள். ஏற்றுக்கொள்ள முடியாத பொய்களைச் சொல்வானாம் கண்ணன். காரணம் கோகுலத்தில் அவன் விளையாட்டுப் பிள்ளை. கண்ணனுக்கு இரண்டு தந்தை, இரண்டு தாய். ஆம், பெற்றெடுத்த தாய் தந்தை தேவகி - வசுதேவர். வளர்த்த தாய் தந்தை யசோதை - நந்தகோபர். வேதத்தில் 'அன்னவான் அன்னாதோ பவதி' என்று ஆசீர்வாதம் உண்டு. அதாவது நிறைய செல்வம் உடையவனாக இருக்க வேண்டும். அதே வேளை செல்வத்தை அனுபவிப்பவனாகவும் இருக்க வேண்டும். தேவகியும் வசுதேவரும் கண்ணனைப் பெற்றார்களே தவிர அவனின் பால்ய லீலைகளை அருகிருந்து ரசிக்க இயலாதவர்களாகி விட்டார்கள். அதே வேளை யசோதையும் - நந்தகோபனும் அருகிருந்து ரசிக்கும் தன்மையைப் பெற்றார்களே அன்றி அவனைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெறவில்லை. இப்படி இருவருக்கும் அவரவர் வேண்டிக்கொண்டபடியான பாக்கியத்தை அருள்வதற்காகவா கிருஷ்ணன் அவதரித்தான் என்றால் அதுவும் இல்லை என்கிறார் கூரத்தாழ்வார். மன்னர் குலத்தைச் சேர்ந்த ருக்மணியைக் கரம்பிடிக்க மன்னர் குலத்தில் அவதரித்தார். ஆயர்குலப் பெண்ணான நப்பின்னையைக் கரம்பிடிக்க கோகுலத்திலும் வளர்ந்தார் என்கிறார் கூரத்தாழ்வார். பார்த்தீர்களா... எப்படிக் கிருஷ்ணனின் விளையாட்டு. கோகுலாஷ்டமி இப்படிப் பட்ட கிருஷ்ணனை இரண்டு நாள்கள் கொண்டாடுவதுதானே சரி... அதனால் கிருஷ்ண ஜயந்தி என்று ரோகிணி நட்சத்திர நாளிலும் கோகுலாஷ்டமி என்று அஷ்டமி திதி நாளிலும் இரண்டு தினங்களாகக் கொண்டாடக் கிடைத்திருப்பது நம் பாக்கியமே. குறைந்தபட்சம் இரண்டு நாள்களில் ஒரு நாளேனும் கொண்டாட வேண்டும். வாய்ப்பிருப்பவர்கள் இரண்டு தினங்களும் அந்தக் கண்ணன் பிறப்பைக் கொண்டாடலாம். எப்போது கொண்டாடுவது? 'தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார்' என்கிறார் ஆழ்வார். நல்ல இருள் சூழ்ந்த நேரத்தில் பெருமாள் தோன்றினாராம். அப்படியானால் கோகுலாஷ்டமி நாளில் நள்ளிரவில் பெருமாளை வழிபடுவது சிறப்பு. ஆனால் அவ்வாறு வீட்டில் வழிபட முடியாது என்று நினைப்பவர்கள் மாலை வேளையில் கிருஷ்ணனை வழிபடலாம். வீட்டில் சாளக்கிராமம் இருந்தால் அதற்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் கிருஷ்ணன் படம் அல்லது விக்ரகம் வைத்திருந்தால் அதற்கு மலர் சாத்தி அலங்காரம் செய்து வழிபட வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை பூஜைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கரங்களால் கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்யச் சொல்ல வேண்டும். அவரவர்களுக்குத் தெரிந்த பூஜையைச் செய்யலாம். கிருஷ்ணனைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியும் ஆத்ம சுத்தியும் தான் முக்கியம். அன்போடு செய்யும் எந்த பூஜையையும் அவன் ஏற்கிறான். பலவிதமான பட்சணங்கள் படைத்து வழிபடுவது சிறப்பு. குறைந்தபட்சம் அவல், வெண்ணெய் ஆகியவற்றை 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். சொல்ல வேண்டிய ஸ்லோகம் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அமரவைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்வது விசேஷம். வந்தே பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம் ஜயந்தீ சம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம் என்றார் ஏபிஎன் சுவாமிகள். கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் புண்ணிய பலன்கள் கிட்டுவதோடு இந்த உலக வாழ்விற்குத் தேவையான சகல சுகங்களும் கிடைக்கும். எனவே கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி நன்னாளில் அவரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைவோம். ஏபிஎன் சுவாமிகள் இந்த ஆண்டு கோகுலாஷ்டமி எப்போது? அஷ்டமி திதி இன்று இரவு (ஆகஸ்ட் 19 - 1.48 a.m) மணிக்குத் தொடங்கி (ஆகஸ்ட் 20 - நள்ளிரவு 2.47 a.m) வரை இருக்கிறது. ரோகிணி நட்சத்திரம் சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் காலை 6.01க்குத் தொடங்கி 21 ஆகஸ்ட் காலை 8.11 வரை இருக்கிறது. எனவே எனவே கோகுலாஷ்டமி கொண்டாடுபவர்கள் நாளையும் நட்சத்திர அடிப்படையில் ஶ்ரீஜயந்தி கொண்டாட விரும்புபவர்கள் சனிக்கிழமையும் கொண்டாடுவது சிறப்பு. இரண்டு நாள்களுமே கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பு.
அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் செயற்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களுக்கு அழைப்பு!!
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேச பிரிவுகளில் மற்றும் தமிழ் கிராமங்களில் செயற்ப்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாரை மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சமாசதில் அங்கத்தவர்களாக இணையுமாறு சமாசத்தின் தலைவர் எஸ் .லோகநாதன் அழைப்பு விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு சமாசம் தேவையென 1987ம் ஆண்டு கொடிய யுத்த சூழ்நிலையிலும் […]
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் இடமாற்றம்!!
இடமாற்றலாகி செல்லவுள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெறவுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை(20) அன்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ ஆர் எம் தௌபீக்கின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு சிறப்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் சிறப்பாக […]
சர்வகட்சி அரசாங்கத்தில் நாமலுக்கு அமைச்சு பதவி வழங்கக் கூடாது! வெளியாகியுள்ள எதிர்ப்பு
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!சர்வகட்சி அரசாங்கத்தில் நாமலுக்கு அமைச்சு பதவி வழங்கக்… The post சர்வகட்சி அரசாங்கத்தில் நாமலுக்கு அமைச்சு பதவி வழங்கக் கூடாது! வெளியாகியுள்ள எதிர்ப்பு appeared first on NTamil.com .
வன்னியர் சங்க பிரமுகர் வெட்டி படுகொலை..! 9 பேர் கைது... மயிலாடுதுறை யில் பதட்டம்
மயிலாடுதுறையில் நள்ளிரவு வன்னியர் சங்க பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர்.
சி.எம்-ஐயே தூக்கிட்டாங்க... மாஸ்டர் மைண்ட் பாஜக... சும்மா சீண்டி பார்த்த காங்கிரஸ்!
பாஜக நாடாளுமன்ற குழுவில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சிவராஜ் சிங் சவுகான் குறித்து காங்கிரஸ் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
சிசிரிவி கெமராவில் பதிவான துவிச்சக்கர வண்டி திருட்டு!
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி திருடப்பட்ட காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமெராவில் பதிவாகியுள்ளது. கெஸ்பேவ ஆவாஷா வீதி பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இனி என் வாழ்க்கையில் அதை மட்டும் பண்ணவே மாட்டேன்: கடுப்பான நடிகை நஸ்ரியா.!
வெளிநாட்டு விமானத்தில் பயணம் செய்த போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நஸ்ரியா.
இணையத்தில் வைரலாகும் தமிழ்நாடு நிதியமைச்சர்.! நான் ஏன் உங்கள் அறிவுரையை கேட்க வேண்டும்.?
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியார் தொலைக்காட்சி விவாத மேடையில் பேசிய வீடியோ மிக வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. நேற்று (புதன்கிழமை) மத்திய அரசின் நிலைப்பாட்டை குறித்து, ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது. அதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட பல அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது நெறியாளர்,மத்திய அரசின் கொள்கைகளை ஏன் மத்திய அரசின் கொள்கைகளின் ஏற்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தமிழக நிதியமைச்சர், ‘ எந்த அடிப்படையில் மாநில […]
ராதை மனதில் என்னமோ ரகசிமாக இருக்கிறது.! போட்டோ ரிலீஸ் செய்து மனதை கொள்ளையடித்த தர்ஷா குப்தா.!
நடிகை தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறுகிய காலத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினால் கூட இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியை விட்டு வெளிய வந்த தர்ஷா குப்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்றே கூறலாம். அதன்படி, காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது தான் எடுக்கும் […]
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது எந்த நேரத்திலும் மீண்டும் தடை விதிக்கப்படும்! பகிரங்க எச்சரிக்கை
The post புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது எந்த நேரத்திலும் மீண்டும் தடை விதிக்கப்படும்! பகிரங்க எச்சரிக்கை appeared first on NTamil.com .
Actress Bindhu Madhavi Latest Photos
Login, Drama and Kaa Movies Trailer Launch Stills
கெட்டுப்போன சாப்பாடு... கிழிஞ்ச துணி... அவமானத்தால..! - பேரழகன் Sneha -வின் கண்ணீர் கதை
காலிமுகத்திடல் சேதங்களுக்கு போராட்டகாரர்களிடம் இழப்பீடு பெறப்படும்:பிரசன்ன ரணதுங்க
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! The post காலிமுகத்திடல் சேதங்களுக்கு போராட்டகாரர்களிடம் இழப்பீடு பெறப்படும்:பிரசன்ன ரணதுங்க appeared first on NTamil.com .
நீர் வெறுப்பு நோயால் 15 மான்கள் உயிரிழந்தன!!
ஹோமாகம பிரதேசத்தில் சுற்றித் திரியும் மான்கள் சில கடந்த இரண்டு நாட்களுக்குள் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது, குறித்த மான்கள் நீர்வெறுப்பு நோய் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த மான்களில் உடல்கள் வைத்திய ஆய்வு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் இதன்போதே உயிரிழந்த மான்களுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பொது சுகாதார மிருக வைத்திய சேவை பணிப்பாளர் வைத்தியர் எல்.டி. கித்சிறி தெரிவித்துள்ளார். கடந்த 13 மற்றும் 14ஆம் […]
`காமராஜரின் சிஷ்யன் டு ராகுல் காந்திக்கு அனுப்பிய மெயில் வரை'- நெல்லை கண்ணன் வாழ்வின் சில சம்பவங்கள்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக பட்டிமன்றப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தமிழை நேசித்த அவரது பேச்சைக் கேட்க ரசிகர்கள் இருக்கும் அளவுக்கு நகைச்சுவையாகவும் அதே சமயம் ஆழ்ந்த கருத்துடனும் பேசக்கூடியவர். `நெல்லைத் தமிழின் எல்லை தெரியாதவர்களால் வந்த தொல்லை!’ - நெல்லை கண்ணன் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடக்கும் விழாக்களில் நெல்லை கண்ணன் பேசுவதாக இருந்தால் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு இணையாக அவரது படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படுவது வழக்கம். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைப் பேசும்போது பாடல்களை வரிமாறாமல் மடைதிறந்த வெள்ளம் போல சொல்லக் கூடியவர். இளம் வயதிலேயே மேடைப்பேச்சு நெல்லை கண்ணனின் தந்தை ந.சு. சுப்பையாபிள்ளை, தாய் முத்துஇலக்குமி அம்மாள். சுதந்திரத்துக்கு முன்பு 1945-ல் ஜனவரி 27-ம் தேதி பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர், அவரது தந்தை தமிழ்ப்புலமை மிகுந்தவர். அவரிடம் இருந்தே தான் தமிழ் கற்றுக் கொண்டதாக பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார். மனைவியுடன் நெல்லை கண்ணன் தமிழ் மீது ஆர்வம் இருந்த நிலையில், கல்வியில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. தந்தையின் வற்புறுத்தல் காரணமாக ஒரு வருடம் மட்டுமே கல்லூரிக்குச் சென்றார்.நெல்லை கண்ணனின் முதல் மனைவி வேலம்மாள் புற்றுநோயால் மறைந்த பின்னர் தெய்வநாயகி என்பவரை மணமுடித்தார். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். முதல் மகன் சுகா திரைப்படத் துறையிலும், ஆறுமுகம் ஊடகத் துறையிலும் பணியாற்றுகின்றனர். இளம் வயதிலேயே மேடைகளில் பேசும் ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர்,பட்டிமன்றங்களில் திறமையாக வழக்காடுவார். நகைச்சுவையுடன் நெல்லை பேச்சு வழக்கில் பேசி பார்வையாளர்களின் கைதட்டலைப் பெறுவார். பாரதியார், திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், என தேசித் தலைவர்கள் மீது பற்று கொண்டிருந்தார். கடைசி வரையிலும் காமராஜரின் தீவிர அபிமானியாக விளங்கியவர். அவர் பேசும் மேடைகள் அனைத்திலும் காமராஜரின் புகழை எடுத்துரைக்கத் தவறியதே இல்லை. உடலைப் பார்த்துக் கதறும் உறவினர்கள் குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களில் பேசிவந்த அவர் அதை அறிவார்ந்த விவாதத் தளமாக மாற்றியவர். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். கவிதைகளையும் எழுதி பதிப்பித்துள்ளார். பன்முகத் தன்மையுடன் விளங்கிய அவர் ‘தமிழ்க்கடல்’ என்று புகழப்பட்டார். அவருக்கு தமிழக அரசின் சார்பாக இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது. அரசியல் அரங்கில் நெல்லை கண்ணன்! தனக்குச் சரி எனப்படுவதைப் பேசுவதற்கு எப்போதுமே தயங்காதவர் நெல்லை கண்ணன். காமராஜரின் மீதுள்ள பிடிப்பின் காரணமாக காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்தார். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மீது அன்பு கொண்டிருந்தவர். கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் செயல்பட்டவர். உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி தன்னை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற ஏக்கம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. கட்சி வரையிலும் ராகுல் காந்தியுடன் மெயில் மூலம் தொடர்பிலேயே இருந்தார். தமிழகத்தில் கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்பது தொடர்பாக அவர் மெயிலில் தெரிவித்த கருத்துகளை ஏற்று, தமிழகத்தில் ராகுல் காந்தி இளைஞர்களுடன் கலந்துரையாடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சம்பவங்கள் நடந்தன. தேர்தல் களத்தையும் நெல்லை கண்ணன் விட்டுவைக்கவில்லை . மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இரு முறை காங்கிரஸ் சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.1996-ல் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். பல்வேறு அரசியல் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதிலும், கருத்து வேறுபாடு காரணமாக ஒதுங்கியே இருந்துவந்த அவரை ஜெயலலிதா நேரில் அழைத்து ஒரு மணிநேரம் பேசினார். அதனால் அ.தி.மு.க-வில் இணைந்தார். எதையும் துணிச்சலுடன் பேசக்கூடிய அவரால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. அதனால் அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறினார் சைவ சிந்தாந்தவாதி! சைவ சித்தாந்தத்தில் தீவிர பற்று கொண்டிருந்தார். சைவ சமயம் குறித்து ஆழ்ந்த அறிவும் தெளிவான பார்வையும் அவரிடம் இருந்தது. மதுரை ஆதீன மடத்தை நித்யானந்தா கைப்பற்றுவதைத் தடுக்க தீவிரமாகப் போராடினார். அதற்கான சட்டப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சைவ அமைப்பினர் மதுரை ஆதீன மடத்தை நித்யானத்தா கைப்பற்றுவதைத் தடுக்க களமிறங்கி போராடியவர் ஆகம விதிகளை மீறி சைவ மடங்கள் செயல்படக்கூடாது என்பதற்காக தானே களத்தில் இறங்கி மதுரையில் போராட்டம் நடத்தினார். அவரது முயற்சியின் காரணமாகவே மதுரை ஆதினத்தில் நித்யானந்தா முக்கிய இடத்தைப் பிடிக்கும் திட்டம் தோல்வியில் முடிந்தது. ஆன்மிகத்தில் அவருக்கு எந்த அளவுக்கு நாட்டம் இருந்ததோ அதே அளவுக்கு பெரியார் மீதும் மரியாதை வைத்திருந்தார். பல கூட்டங்களில் பெரியார் பற்றி விளக்கமாகப் பேசியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு நேர் எதிராக அவரது சிந்தனை இருந்தது. அக்கட்சியின் சனாதனக் கொள்கைகளை வீரியமுடன் எதிர்த்தார். அந்த எதிர்ப்பே அவரை தி.மு.க-வுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தது. காலம் முழுவதும் தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்த அவர், சில வருடங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே அவரது செயல்களை பாராட்டிப் பேசினார். திருமாவளவனையும் அவரது கொள்கைகளையும் புகழ்ந்தார். நெல்லை கண்ணன் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் காரணமாக கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. 77 வயது நிரம்பிய நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்..
ஆர்ப்பாட்டத்தில் மாணவர் ஒன்றியத் தலைவர் கைது!!
பிடிவிறாந்தொன்றைக் கொண்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வசந்த முதலிகே, ஜெஹான் அப்புஹாமி மற்றும் மேலும் நால்வர், யூனியன் பிளேஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய கூகுள் பிளேயின் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரிப்பு!!
இந்திய ஆப்ஸ் மற்றும் கேம்கள் செயலியான கூகுள் பிளே இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் கூகுள் பிளேயின் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூகுள் பிளே அதிகாரி இன்று ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்தார். கூகுள் ப்ளே பார்ட்னர்ஷிப்ஸ் இயக்குனர் ஆதித்யா ஸ்வாமி வலைப்பதிவில், உள்ளூர் டெவலப்பர்களும் இந்திய ஆப்ஸ் மற்றும் கேம்களுடன் உலகளாவிய பார்வையாளர்களைக் கண்டறிந்துள்ளனர். கூகுள் ப்ளேயில் 2019ஐ […]
ஜீவி படத்துக்கு நம்ம ஆந்தை ரிப்போர்ட்டரில் எ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் இஸிகோல்டு ஏ ஸ்கொயர் + பி...
10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு…! ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு..!
ரஷ்யாவில் மக்கள் தொகை சரிந்து வரும் நிலையில், 10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார். ரஷ்யாவில் கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் காரணமாக அங்கு மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனையடுத்து, மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் புதின் பரிசு தொகையை அறிவித்துள்ளார். அதன்படி பத்துக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு ரூ.13 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை […]
எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்கவில்லையா? - இத படிங்க | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் நம் அத்யாவசிய தேவைகள் மிகவும் குறைவு, எளிதாக நம் மாத சம்பளத்தில் அதை நம்மால் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இருப்பினும் பலர் ஒவ்வொரு மாத இறுதியிலும் பணப்பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். எத்தனை சம்பாதித்தாலும் கையில் காசு தங்கவில்லையே என்று வருத்தம் கொள்கின்றனர். 10,000 ரூ சம்பளம் வாங்குவோருக்கும் இதே நிலை , 1,00,000 ரூ சம்பளம் வாங்குவோருக்கும் இதே நிலை தான். இதன் காரணம் என்ன? காண்போம்... பணப்பற்றாக்குறை அளவில்லாமல் செலவிடுவதுதான் பணப்பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். நம் ஆசைகளுக்கு அளவே இல்லை அது பேரண்டம் போல, அவை அனைத்தையும் நிறைவேற்ற எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது. மாதத்தில் பல முறை உணவை ஆர்டர் செய்கிறோம், Branded Clothes தான் தரமானது என்று எண்ணி விலை உயர்ந்ந்த உடைகளுக்காக செலவிடுகிறோம், ஒவ்வொரு வாரமும் தவறாமல் Mall’க்கு சென்று ஒரு திரைப்படம் பார்க்கிறோம். நம் சம்பளம் அதிகரித்தால் நாம் அதை எவ்வாறு செலவு செய்வது என்றே சிந்திக்கிறோம், நம்மிடம் நன்றாக செயல்படும் கைபேசி இருந்தாலும், மார்க்கெட்டில் வருகின்ற புது மொபைல் போன் வாங்குகின்றோம். அட அவரு பைக் நல்லா இருக்கே நாமளும் EMI ல வாங்கலாமே, கார் இருந்த கெத்தா இருக்குமே லோன் போற்றுவோம் சம்பளம் அதிகமாயிருக்கே சமாளிச்சரலாம்... இது போன்ற செலவுகலால் நாம் EMI கட்டுவதற்காகவே வேளைக்கு செல்ல வேண்டும். Representational Image செலவை குறைத்தல் ஆசைகள் தவறல்ல, நம் ஆசைகளுக்காக செய்கின்ற செலவு நம் அன்றாட வாழ்வை பாதித்து விடக்கூடாது. நம் செலவை கட்டுப்படுத்த முதலில் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டைரி'யை maintain செய்யுங்கள், அதில் உங்கள் வரவு செலவுகளை மட்டுமே குறிப்பிடுங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை அந்த டைரியில் எழுதுங்கள், 1. கடந்த மாதம் ஏன் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது? 2. என் மாத வருமானம் என்ன? 2. என்னென்ன செலவுகள் செய்தேன்? 3. தேவைகளுக்காக எவ்வளவு? 4. ஆசைகளுக்காக எவ்வளவு? 5. அதில் எதை எல்லாம் நான் தவிர்த்து இருக்கலாம்? 6. அதை நான் தவிர்த்து இருந்தால் மீதம் எவ்வளவு பணம் என்னிடம் இருந்து இருக்கும்? நீங்கள் எழுதிய பதில்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள். குறைந்தது மூன்று மாதமாவது உங்கள் செலவுகளை கணக்கெடுங்கள், அப்போதுதான் உங்கள் செலவிடும் முறை என்னவென்பது உங்களுக்கு தெரியும். அதில் தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொண்டாலே, நிச்சயமாக பணப்பற்றாக்குறை ஏற்படாது. கணிசமான ஒரு தொகை எப்போதுமே உங்கள் கையில் இருக்கும். அந்த தொகைதான் சேமிப்பின் தொடக்கம். நன்றி, நரேந்திரன் பாலகிருஷ்ணன். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

அந்த படத்தில் நான் இருக்கிறேன்…! ரகசியத்தை உளறிய விஜய் சேதுபதி.!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜவான்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். பிரியா மணி, தீபீகா படுகோன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்ட இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதிபதி […]
வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம் -இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.7 கிலோ தங்க நகை பறிமுதல்
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு 3.7 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமல்ராஜ் குறித்து தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
`துரோக சிந்தனை உடைய கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது' - இபிஎஸ் மீது தினகரன் விமர்சனம்
`அதிமுகவில் நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, இன்றைய தினம் ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமன்றி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனும் தான் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் பேசுகையில் “அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமேதும் இல்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகள் பலவற்றை செய்தோம்.அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். ஆக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் நோக்கமும். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல. யாராக இருந்தாலும் சேர்த்துக்கொள்வோம். யாராக என்ற வார்த்தையில் சின்னம்மாவும் இருக்குறாங்க, டிடிவி தினகரனும் இருக்குறாங்க” என்று கூறியிருந்தார்.ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தக் கருத்துக்கு டிடிவி தினகரன் தற்போது எதிர்வினையாற்றியுள்ளார். அவர் பேசுகையில்,“தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று ட்வீட் செய்துள்ளார்.தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். (1/2)— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2022தனது இந்த ட்வீட்டின் மூலம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் இபிஎஸ்-க்கு எதிராகவும் உள்ள தனது நிலைப்பாட்டை டிடிவி தினகரன் வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
”சைக்கிள் கொடுப்பதை எப்படி இலவசம் என விமர்சிக்க முடியும்” - நிதியமைச்சர் தியாகராஜன்
மாணவர்களுக்கு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அரசு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து கேள்வி கேக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, சமுதாயம் நீதியோடு இருக்க, அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பது தான். பிறப்பால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட கூடாது, உழைப்பு மற்றும் கல்வி அடிப்படையில் அனைத்து மக்களும் முன்னேற முழு வாய்ப்பு அளிக்க வேண்டும், இதை தத்துவம் என்று கூட சொல்லலாம். அதில் முக்கிய பங்கு பெண்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமை கல்வியிலும், சொத்திலும், பொருளாதாரத்திலும் கிடைத்திட வேண்டும். மேலும் விலையில்லா பொருட்கள் வழங்குவதை உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும் இதெல்லாம் தவறு என்றும் செய்யக்கூடாது என்றும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த மாதிரி ஒரு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது.சமூக நீதிக்காக கல்வி முக்கியம், குறிப்பாக பெண்கள் கல்வி முக்கியம். அதற்கு எந்த வழியில் எல்லாம் ஊக்கம் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு அறிவோடு நிதியை ஒதுக்கி செயல்படுத்தக்கூடிய அரசு இது. இதெல்லாம் இலவசம் என்றும் தவறு என்றும் கூறினால் அதை விட சமுதாய துரோகம் இருப்பதாக என்னால் சிந்திக்க முடியவில்லை.தொகுதியில் இன்னும் பல பள்ளிகளுக்கு சைக்கிள் வரவில்லை. அதனை உடனடியாக வழங்குவதற்கு சென்னையில் துறை ரீதியாக ஆய்வு செய்து விரைவில் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி, மிக முக்கியமான திட்டம் அதிலும் பலவகையில் ஈடுபட்டு உள்ளவன் என்ற அடிப்படையில், நம் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது என்பது மிக்க மனநிறைவு அளிக்கிறது.இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை தேவையான நாள் வரை நீடிப்போம், எத்தனை நாள் வரை அது தேவையோ அதுவரை, எவ்வளவு நிதி வேண்டுமானாலும் சரி ஒதுக்கீடு செய்து அதனை நீடிப்போம் என்று தெரிவித்தார்.
”மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்து வருகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்துள்ள பேட்டியில், “கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. -ஆக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் பின்புலம் குறித்து ஆராயக் கூடிய பணி நடைபெற்று வருகிறது.அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களிலிருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது எந்த முடிவுக்கும் நாம் செல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றிய பின்புலம் முழுமையாக தெரிந்தப் பிறகு தான் முடிவு எடுக்கப்படும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டோம். இனி விரைந்து அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கும்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது, அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
’தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மரணம் - முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
உடல்நல குறைவுகாரணமாக இலக்கியவாதி, தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன் இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78.நெல்லை டவுன்அம்மன் சன்னதி தெருவில் வசித்து வந்தவர் தமிழ் இலக்கியவாதியும் பிரபல பேச்சாளரும்பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன். இவருக்கு வயது 78. தமிழ்நாட்டின்முக்கிய தலைவர்கள், ஆளுமைகள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கி பழகி நட்பாய் இருந்தவர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாக இருந்தவர்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜிகே மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி தங்க பாலு ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தவர். 1992 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அதிமுகவில் நீண்ட நாட்களாக பயணிக்க முடியவில்லை. ஒரு ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டவர். 78 வயதானாலும் இவரது பேச்சாற்றலும் நினைவாற்றலும் இலக்கிய நயமும் சிறப்பாக இருக்கும். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதி, காதல் செய்யாதவர்கள் கல்லறியுங்கள், திக்கணைத்தும் சடைவீசி, பழம் பாடல் புதுக்கவிதை உள்ளிட்ட புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவை இவரால் உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின்:நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘’தமிழகத்தின் முதுபெரும்தலைவர்களுடன் நெருங்கி பழகிய நெல்லை கண்ணன் மறைவை அறிந்து வருத்தமுற்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.ஜி.கே.வாசன் எம்பிநெல்லைக் கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் சிறந்த அடைந்தேன். அவர் பேச்சாளராகவும் , பட்டிமன்ற தலைவராகவும் , இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர். நெல்லை கண்ணன் அவர்கள் தன் சிறுவயது முதல் பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் . சிறந்த தேசியவாதி. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் ஜி.கே.வாசன் எம்பி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.பாரிவேந்தர் எம்பிஅவருக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தாமிரபரணி பாயும் திருநெல்வேலியில் பிறந்த தமிழ்நதி நெல்லைக் கண்ணன். தாவிக் குதித்து வரும் தாமிரபரணி வெள்ளம்போல் இவரது நாவிலும் தமிழாறு வெள்ளமாய்ப் பெருகி கேட்போர் உள்ளங்களை எல்லாம் நனைத்ததுண்டு. “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற வள்ளுவன் குறளுக்கு உதாரணமாய் வாழ்ந்துக் காட்டிய பெருமகன் அவர்! கர்மவீரர் காமராசர் பாதம் தொடர்ந்து நடந்த அவர். கவியரசர் கண்ணதாசனின் கீதத்தின் கீர்த்தியை நாதமாய் முழங்கியவர். பேசாத இலக்கிய அரங்கம் இல்லை; இவர் புகழ் மணம். வீசாத இடம் தமிழகத்தில் இல்லை என்று வாழ்ந்த அந்த இலக்கியச் சிங்கத்தின் கர்ஜனை. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அரங்கிலும் இரண்டு முறை எதிரொலித்ததை எண்ணிப் பார்க்கிறேன். மேடையிலே வீசிய அந்த மெல்லிய பூங்காற்றின் இனிய ரீங்காரம் இன்று அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநெல்லை கண்ணன் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில்இரங்கல் தெரிவித்து கோள்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு செயலாளர் இரா.முத்தரசன் அக்கட்சி சார்பாக இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், ‘’இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் களத்தில் கர்மவீரர் காமாராஜரின் தலைமை ஏற்று, சுழன்று, சுழன்று பரப்புரை செய்த முன்னணி தலைவர். இவரது கலாய்ப்பு விமர்சனத்துக்கு உள்ளானோரையும் ரசிக்கச் செய்யும் ஒலி அலைக்கற்றில் நெல்லை கண்ணன் என்றென்றும் வாழ்ந்திருப்பார். நெல்லை கண்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது மகன்களுக்கும் இலக்கிய உலக நண்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:திரையரங்கு (Theatre)1. திருச்சிற்றம்பலம் (தமிழ்) - ஆகஸ்ட் 182. மாயத்திரை (தமிழ்) - ஆகஸ்ட் 193. Do Baaraa (இந்தி) - ஆகஸ்ட் 194. Nope (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 19ஓ.டி.டி. (OTT)1. Spell (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. Look Both Ways (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Royalteen (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. ஜீவி 2 (தமிழ்), ஆஹா - ஆகஸ்ட் 195. Highway (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 196. The Next 365 Days (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 197. Orphan: First Kill (ஆங்கிலம்), Paramount + - ஆகஸ்ட் 198. Sherdil: The Pilibhit Saga (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 20ஷோ (Show)1. Tim Dillon: A Real Hero (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. The Bear (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 17டாக்குமெண்ட்ரி (Documentary)1. Song Of the River (இந்தி), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 152. Barefoot Empress (மலையாளம்), யூட்யூப் - ஆகஸ்ட் 153. Untold: The Girlfriend Who Didn't Exist (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16சீரிஸ் (Series)1. Peacemaker (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 142. High Heat (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Unsuspicious (போர்ச்சுகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. She-Hulk: Attorney at Law (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 185. Raised by Wolves S2 (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 186. தமிழ்ராக்கர்ஸ் (தமிழ்), சோனிலைவ் - ஆகஸ்ட் 197. Duranga (இந்தி), ஜீ5 - ஆகஸ்ட் 198. Echos (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)1. பன்னிகுட்டி (தமிழ்), சன்நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 142. Nikamma (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 143. Makal (மலையாளம்), மனோரமா மேக்ஸ் - ஆகஸ்ட் 184. யானை (தமிழ்), ஜீ5 - ஆகஸ்ட் 195. Heaven (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 196. Bairagee (கன்னடம்), வூட் - ஆகஸ்ட் 19
அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என ஐஜத எம்எல்ஏ பகிரங்க புகார்.. சிக்கலில் நிதிஷ் குமார்!
பீகார் மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி. இதனால் அம்மாநில அரசியலில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது.பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி உடனான முரண்பாட்டை தொடர்ந்து கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கமும் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி, ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், தன்னைப் போன்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.இதற்கு பதில் அளித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி கூறிய கருத்து தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் அவையில் இடம் வழங்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி பேசியிருக்கக் கூடாது என தெரிவித்துள்ள நிதிஷ்குமார், இத்தகைய தவறான செயல்பாடுகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பீமா பாரதியை போலவே இன்னும் சில சட்டம்னற உறுப்பினர்களும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.- நிரஞ்சன் குமார்
குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவர்.. ஆயுள் தண்டனையை குறைத்த நீதிமன்றம்!
குடிபோதையில் மனைவியை கொலைசெய்த நபருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை, 7ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள உள்ளூர் கிராமத்தில் அய்யாசாமி மற்றும் அவரது மனைவி மலர்விழி வசித்து வந்துள்ளனர். இவர்களின் இரண்டு மகன்களும் திருச்சி மற்றும் சென்னையிக் வேலை பார்த்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்காக இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அய்யாசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், அய்யாசாமிக்கும் மலர்வழிக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது அதில், ஆத்திரமடைந்த அய்யாசாமி, மலர்விழியை அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கியதால் மலர்விழி உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மகிளா நீதிமன்றம் 2017ல் அய்யாசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அய்யாசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரர் தொடர்ச்சியாக குடிப்பழக்கம் உடையவர். மேலும் நேரில் கண்ட அவரது மகன்களின் சாட்சிகளின் அடிப்படையில், மனுதாரர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் மனுதாரர் இந்த சம்பவத்தின் போது, எவ்விதமான ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை. இதனால், கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இச்ச சம்பவத்தை அய்யாச்சாமி செய்யவில்லை என்பது தெரியவருகின்றது.ஆகவே, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. முன்கூட்டிய விடுதலை இன்றி, 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
கூடலூர் அருகே ஓவேலி காந்திநகர் பகுதியில் யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளர் உயிரிழப்பு
நீலகிரி: கூடலூர் அருகே ஓவேலி காந்திநகர் பகுதியில் யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளர் உயிரிழந்துள்ளார். தேயிலை தோட்டத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் யானை தாக்கியதில் ராஜகுமாரி இறந்துள்ளார்.
Thiruchitrambalam: எல்லை மீறிய தனுஷ் ரசிகர்கள்: 'திருச்சிற்றம்பலம்' படத்தால் வெடித்த பிரச்சனை.!
இன்று வெளியாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தை பார்க்க வந்த தனுஷ் ரசிகர்கள் செய்த அட்டகாசத்தில் சென்னையில் இருக்கும் பிரபல தியேட்டரின் ஸ்கிரின் கிழிக்கப்பட்டுள்ளது.
கன மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குஜராத். 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
… The post கன மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குஜராத். 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! first appeared on Chennai Today News .
சிசிரிவி கெமராவில் பதிவான துவிச்சக்கர வண்டி திருட்டு!
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி திருடப்பட்ட காட்சி அங்கிருந்த சிசிடிவி கெமெராவில் பதிவாகியுள்ளது. கெஸ்பேவ ஆவாஷா வீதி பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நபர் கைது!
பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது
22 க்கு எதிராக 09 மனுக்கள் தாக்கல்!
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு
மத்திய வங்கி வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலம்
பொது மக்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கி அமைப்பில் வைப்பிலிடுவதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலம் வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நமக்கு வேறு வழியில்லை - ஜனாதிபதி
தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமாயின் போட்டித்தன்மையுடைய ஏற்றுமதி பொருளாதாராத்தை தவிர வேறு மாற்றுவழி
லெபனான் தோல்வியடைந்த நாடாக மாறுவதை தவிர்க்க முடியாது
லெபனான் விரைவில் தோல்வியடைந்த நாடாக மாறுவது தவிர்க்க முடியாதது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுப்பணித்துறை ஊழியர்கள் பல மாதங்களாக வேலை நிறுத்தத்தில்
பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மேர்வின் சில்வா பிணையின்றி விடுவிப்பு!
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத்
சிஐடியில் எரிசக்தி அமைச்சர் முறைப்பாடு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன செயற்பாடுகள் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
வசந்த முதலிகே உட்பட 5 பேர் கைது!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள்
ராமநாதபுரம்: முதன்முறையாக முளைக்கட்டுத் திருவிழா கொண்டாடிய திருநங்கைகள்!
ரா மநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லைநாயகபுரம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மும்தாஜ் என்ற திருநங்கை சொந்தமாக வீடு கட்டி, அதில் 15 திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மனுக்குக் கோயில் எழுப்பி, முளைக்கட்டுத் திருவிழா கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி முதலாம் ஆண்டு முளைக்கட்டுத் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோயில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பெண்களுடன் கும்மி கொட்டிய திருநங்கைகள் இதனைத் தொடர்ந்து நேற்று முளைப்பாரி, பால்குடத்துடன் மாடக்கொட்டான் பகுதியிலிருந்து இரண்டு கி. மீ தூரம் ஊர்வலமாக நடந்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது திருநங்கைகள் வேடமிட்டு நடனமாடியபடி வந்தனர். பின்னர் சுமந்து வந்த முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். இந்த விழாவில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பர்யக் கலைகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனையுடன் முத்துமாரி அம்மனுக்கு முதன்முறையா முளைக்கட்டுத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்த கொண்டு சென்றபோது மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.
IMF பிரதிநிதிகளின் இலங்கை விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மிதந்து வந்த மர்ம படகு... உள்ளே AK 47 ரக துப்பாக்கிகள், வெடி மருந்து - மும்பையில் பரபரப்பு!
மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள ராய்கட் மாவட்டம், ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் நேற்று காலை படகு ஒன்று மர்மமான முறையில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்தது. இது குறித்து மீனவர்கள் உள்ளூர் போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸாரும், கடலோர பாதுகாப்பு படையினரும் கடலில் மிதந்துவந்த படகை மீட்டு சோதித்தனர். அதில் 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 10 பாக்ஸ்களில் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு... பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிகள் தனித்தனி பாகங்களாக பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மகாராஷ்டிராவில் இன்றும், நாளையும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அடுத்த பத்து நாள்களில் கணபதி விழா கொண்டாடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கடலில் மர்ம படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது போலீஸாரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ராய்கட் எம்.எல்.ஏ அதிதி தட்காரே தெரிவித்திருக்கிறார். மிதந்து வந்தபடகு விழாக்காலத்தில் படகில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பாதுகாப்பு குளறுபடியாக கருதுவதாக எம்.எல்.ஏ தெரிவித்தார். மும்பையிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தச் சம்பவம் மும்பைக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது. இதையடுத்து மும்பை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு கடலோர பாதுகாப்பு படையினரும் கடலில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். தேவேந்திர பட்நவிஸ் இது குறித்துப் பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ``16 மீட்டர் நீளமுள்ள சேதமடைந்த படகு ஆயுதங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. உயிர் காக்கும் படகு ஒன்றும் கடலில் மிதந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்து வரும் மாதங்களில் தீபாவளி வரை தொடர்ந்து மும்பை விழாக்கோலம் பூண்டிருக்கும். எனவே தீபாவளி வரை பாதுகாப்பை பலப்படுத்த மும்பை போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். ஏற்கெனவே மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து நடத்திய தீவிரவாத தாக்குதலின் வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கிறது. இந்த படகு ஓமனிலிருந்து கடலில் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர் என்றார். `ஒலியைவிட 10 மடங்கு வேகம்' - உக்ரைனை உருக்குலைக்க ரஷ்யா பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் என்னென்ன?!
‘தமிழ்க்கடல்’நெல்லை கண்ணன்( 77) காலமானார்!
தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு...
தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு ப. சிதம்பரம் இரங்கல்
சென்னை: நெல்லை கண்ணன் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழையும், தேசியத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்நாள் முழுதும் ஓய்வில்லாமல் உழைத்துப் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற நண்பர் நெல்லை கண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலுக்காக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கான அறிவிப்பு
தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புக்கான, கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி
சிபிஐ என்று கூறி வங்கியில் ₹35 லட்சத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்!!
இன்று, ஜாம்ஷெட்பூரில் உள்ள இந்தியன் வங்கியின் மாங்கோ கிளையில் ஆயுதம் ஏந்திய நான்கு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து, சுமார் ₹35 லட்சத்தை பறித்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “நான் இங்கு வந்தபோது, வங்கி ஊழியர்களை அவர்களது இடத்தில் நாங்கள் காணவில்லை. வாசலில் நின்றிருந்த இரண்டு கொள்ளையர்கள் என்னை உள்ளே அமரச் சொல்லிவிட்டு மொபைலைக் கேட்டார்கள். நான் மறுத்தபோது, அவர்கள் ஒரு ரிவால்வரை எடுத்து, வங்கியில் […]
சுரானா குழுமத்தின் இயக்குனர் தினேஷ் சந்த் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
சென்னை: சுரானா குழுமத்தின் இயக்குனர் தினேஷ் சந்த் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கில் தினேஷ் சந்த், ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிவச்ச பாஜக... வசமாக சிக்கிய எடப்பாடி- சசிகலாவிற்கு அடிச்ச ஜாக்பாட்!
அதிமுகவை காப்பாற்றும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு வந்திருப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
500 ரூபாயில் உங்க வாழ்க்கையைச் சமாளிக்கலாம்.. அது பெரிய ரகசியம் இல்ல!!
மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.500 முதலீட்டில் சேமிக்க உதவும் புதிய திட்டங்கள் இவைதான்.
உதவிக்கு வந்தவன்! | சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் திருச்சி நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கிளைச் சாலையில் திரும்பிய அந்த கார் சட்டென்று ஒரு குலுக்கலுடன் நின்றது. தனது செல்லில் சுவாரசியமாக பேசிக்கொண்டு வந்த காவ்யா அதிர்வில் ஃபோனை நழுவ விட்டாள். 'என்ன ஆச்சு! ஏன் வண்டியை நிறுத்தினே?' டிரைவரை பார்த்து கேட்டுக் கொண்டே குனிந்து செல்லை எடுத்தாள். 'காரில் ஏதோ பிரச்சினை. நகரமாட்டேங்குதும்மா'. பயத்துடன் சொன்ன கணேசன் மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தார். 'அதுதான் ஓடமாட்டேங்குதே !.செல்லை எடுத்து மெக்கானிக்கை கூப்பிட வேண்டியதுதானே !' சிடுசிடுத்தாள் அவள்.'செல்லை எடுத்து வர மறந்துட்டேன் மேடம் .' தயங்கியபடியே வார்த்தைகளை உதிர்த்தார் அவர். 'எப்பவும் உங்களோட இது ஒரு தொல்லை', என்றபடியே தன் செல்லில் முயற்சி செய்த காவ்யா வெகுவாக அதிர்ந்தாள். அவள் செல்லும் சுத்தமாக இணைப்பை தொலைத்திருந்தது. திகைப்புடன் காரின் ஜன்னலை இறக்கி வெளியே பார்த்தாள் . சரியாக ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் கார் நின்றிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்ற ஆட்டோக்களை தவிர வேறு எதுவும் தென்படவில்லை. மருந்துக்கு கூட கடைகள் இல்லாத இடம். அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நேரம் தான் போனதே தவிர ஒன்றும் பயனில்லாமல் போகவே காரை விட்டு கீழே இறங்கினாள். வழியில் வரும் வண்டிகள் எதையாவது நிறுத்தி உதவி கேட்கலாம் என்று முயற்சித்தவளுக்கு நிற்காமல் போன வாகனங்களை பார்த்து அயர்வாக வந்தது. கூடவே ஒன்றுக்கும் பயனில்லாமல் நிற்கும் கணேசனை பார்த்து மேலும் எரிச்சலானாள் அவள். இதற்கு முன் இருந்த டிரைவர் சௌந்தர் சாமர்த்தியமானவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அவர்களிடம் பணி புரிந்திருக்கிறான். ஒரு நாள் கூட இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை . வண்டி அப்படி ஒரு கண்டிஷனில் வைத்திருப்பான் . கொஞ்சம் மெகானிசமும் தெரியும். இக்கட்டில் நிற்க வைத்து பார்க்கவே மாட்டான். இவனும் இருக்கின்றானே என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள். கணவன் படித்து படித்து சொல்லியும் அடம் பிடித்து அவனை நிறுத்தியது மனதில் உறுத்தியது. எத்தனை முறை சொன்னான் அவன். 'அவங்க தங்களோட கஷ்டத்தை தீர்த்துக்க வேலைக்கு வராங்க. நம்ம இஷ்டத்துக்கு கஷ்டப்படுத்த இல்லை' . 'வசதி இருந்தால் யாரை வேண்டுமானாலும் எதுவும் சொல்லுவது நல்லதில்லை.' அடிக்கடி ஒரு பாடலின் வரிகளை சொல்லுவான். 'இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்.' என்ன சொல்லி என்ன? அவள் பிடிவாதம் தானே வென்றது.. இப்போது நினைத்துப் பார்க்கையில் மனம் கலங்கினாள் அவள். வேகத்தை குறைக்காமல் பாதையில் நிற்பவளை பார்த்தும் பாராதது போல் நிற்காமல் போகும் வண்டிகளும் மெல்ல சூழ்ந்து வரும் இருளும் பதைப்பை உண்டாக்கியது. எப்போதும் பிரகாஷ் கனிவுடன் நடந்து கொள்வான். ஒரு வார்த்தை அவனுக்கு தெரியப்படுத்திவிட்டால் எப்படியாவது அங்கு வந்து விடுவான் . ஆனால் எப்படி தெரியப்படுத்துவது! நேரம் போக போக என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள். கூடவே கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. எத்தனையோ பேரை நான் அலட்சியப்படுத்தியிருக்கிறேன். பணத்திமிரில் வார்த்தைகளை வீசியிருக்கிறேன். எளியவர்கள் மனம் நொந்து போவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். எனக்கே இப்படி ஒரு நிலைவரும் என்று எதிர்பார்க்கவில்லையே!.. மனம் வெதும்பினாள் அவள்.சரியான ஒரு இக்கட்டில் மாட்டியிருக்கிறோம் என்று உணர்ந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த அவள் அருகில் வந்து நின்றது ஒரு பைக் 'மேடம், நான் ஒரு மெக்கானிக். வண்டிக்கு என்ன ஆச்சு!' என்றபடியே தன்னுடைய கார்டை காட்டினான் அவன். எதையும் பார்க்கும் நிலைமையில் அவள் இல்லை. சாதாரணமாக ஆயிரம் கேள்விகள் கேட்கும் அவள் எப்படியாவது வண்டி நகர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். அவன் காரின் உள்ளே அமர்ந்து எதையோ முடுக்கினான். பானெட்டை திறந்து ஏதோ செய்தான். திக்பிரமை பிடித்தவள் போல் நின்றவள் கார் ஸ்டார்ட் ஆன சப்தத்தில் சுயநினைவுக்கு வந்தாள். அந்த மெகானிக்கிடம் ஃபோனை வாங்கி கணவனுக்கு தகவல் சொன்னாள். 'உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சொல்லி வந்தீர்கள்? யாருமே நிறுத்தவில்லையே' ஆதங்கத்துடன் அவள் கேட்டதற்கு அவன் சின்ன முறுவலுடன் பதில் சொன்னான்.' இந்த வழியாக போன ஒரு ஆட்டோ டிரைவர் தான் இந்த இடம் சொல்லி உடனே போக சொன்னார். அவர் அவசரமாக ஒரு பயணியை கொண்டு விட போனதால் அவரால் உதவமுடியவில்லை என்றும் சொன்னார்.'அவள் அயர்ந்து போய் நின்றாள். இன்னும் மனித தன்மை சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.அவள்மனதில் அந்த ஆட்டோ டிரைவர் விசுவரூபமாக உயர்ந்து நின்றார். வீடு வந்ததும் வெளியிலேயே பதட்டத்துடன் நின்ற பிரகாஷைப் பார்த்ததும் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கி வந்தாள். 'பயந்தே போய்விட்டேன் . நேரம் வேறு ஆகி விட்டதா? . உன் செல்லுக்கும் பல முறை முயற்சி செய்தும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. நல்ல வேளையாக யார் செல்லிலிருந்தோ ஃபோன் பண்ணினாய்.' தனக்கு கொஞ்சமும் குறையாமல் அவனும் வேதனையும் கலக்கமும் அடைந்திருக்கிறான் என்று அவள் உணர்ந்தாள். 'டிரைவரை அனுப்பிட்டு உள்ளே வாங்க' என்று சொல்லி விட்டு மெதுவாக வீட்டுக்குள் போனாள் அவள். நடந்ததெல்லாம் சொல்ல சொல்ல அவன் அதிர்ச்சியின் உச்சிக்கே போனான். 'என்ன இது! இந்த டிரைவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கிறான்! அவனும் எரிச்சல் பட்டான் 'நல்ல வேளையாக ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து ஆளை அனுப்பினாரோ ,நான் பிழைத்தேனோ', என்றவளிடம் 'யார் அந்த ஆட்டோ டிரைவர் 'நீ கூப்பிட்டு நன்றி சொன்னாயா !' வேகமாக பட படத்தவனிடம் 'என் செல்தான் சரியில்லையே ! நான் எப்படி பேசுவது! அதுதான் அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்து கொண்டு நேரிலேயே போய் பார்த்தேன்.' ஒரு நிமிடம் மெளனம் சாதித்தவள் 'அது யார் தெரியுமாங்க! நம்ம சௌந்தர் தான்' என்று கண் கலங்கினாள். திகைத்து போய் அவளை பார்த்தான் பிரகாஷ் . 'என்ன சொல்றே ? சௌந்தரா !அவன் எப்படி?' குழம்பினான். 'என்னை தனியா அந்த இடத்திலே பார்த்ததும் ரொம்ப பயந்து போயிட்டாராம். உடனே உதவிக்கு ஆள் அனுப்பிட்டார் .' 'சொல்ல மறந்துட்டேனே.! அவர் கொஞ்ச வருஷமா ஆட்டோ தான் ஓட்டுறாராம். யாரோ ஒரு புண்ணிய வான் முதல் ட்யூ கட்டி ஆட்டோ வாங்கி தந்தாராம். அதோடு நிரந்தரமாக சில வாடிக்கையும் பிடிச்சு கொடுத்திருக்கிறார். நான் நல்லா இருக்கேம்மா ' என்று சொன்னார்.' அவள் தன் கணவன்தான் அந்த புண்ணியவான் என்று தெரியாமல் பேசிக்கொண்டே போக பிரகாஷ் சிலிர்த்து போய் நின்றான். 'சௌந்தர் உன் நன்றிக்கடனை நல்லாவே தீர்த்து விட்டாயடா!'. வாய்க்குள் முனகியவனின் முகத்திலிருந்த திகைப்பு பிரமிப்பாகி ஆனந்தமாக மாறியதை அவள் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள். - காந்திமதி உலகநாதன் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
India / Chennai, August 18, 2022: Apollo Proton Cancer Centre (APCC), the first & only Proton Therapy Centre in South