ஆசியாவில் கண்டத்தில் மிகச்சிறிய நாடு.. அதுவும் இந்தியாவில் - எங்கு இருக்கு தெரியுமா?
ஆசியாவில் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் மிகச்சிறிய நாடு எது தெரியுமா? அந்த குட்டி எங்குள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அழகு கிறீம் பிடிக்கும் இலங்கை கடற்படை!
நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றியுள்ளது.. சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற வெளிநாட்டு சிகரெட்டுகள்,150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாததால், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகள்,அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் அடங்கிய தொகுதியை கடற்படை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ சேவை பாதிப்பு.. இதுவரை ரூ.610 கோடி REFUND.. விரைவில் சீராகும் சேவை!
இண்டிகோ விமான நிறுவனம், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பயணிகளின் உடமைகளை ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராமர் கோவிலுக்கு மார்க்கெட் இல்ல..’’ இப்போது முருகனை பயன்படுத்தி அரசியல் - பாஜகவை சாடிய சீமான்!
ராமர் தொடர்பான விவாதங்கள் குறைந்து வரும் நிலையில், இப்போது முருகன் வழிபாட்டை அரசியல் நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்
NATO நீர்பரப்பில் புடினின் கோஸ்ட் கப்பல் நுழைந்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான “shadow fleet” எனப்படும் மறைமுக எண்ணெய் கப்பல்களில் ஒன்றான Kairos என்ற மிகப்பெரிய டாங்கர், கருங்கடலில் கட்டுப்பாடின்றி மிதந்து, NATO நீர்பரப்பில் நுழைந்தது. இந்த கப்பல், கடந்த நவம்பர் 29-ஆம் திகதி துருக்கி கடற்கரைக்கு அருகில், உக்ரைன் பயன்படுத்திய Sea Baby drone தாக்குதலுக்கு உள்ளானது. 1,49,000 டன் எடையுடைய, 899 அடி நீளமுள்ள இந்த கப்பல், ரஷ்யா எண்ணெய் தடைகளை […]
பிளவுபட்ட அதிமுகவை சரிசெய்ய பாஜக தேவை! டிடிவி தினகரன் சொன்ன அந்த வார்த்தை...
தவெக தலைவர் விஜய் தலைமையில் வலுவான கூட்டணி தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கைவரிசையை காட்டிய இளைஞன் கைது
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இந்தச் சந்தேகநபர் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க மாவத்தையில் வசிக்கும் 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டிருந்த 32 வெளிநாட்டுப் புறாக்கள் கடந்த ஒக்டோபர் […]
அணையா விளக்கும் மீட்டும் உடைப்பு
யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது. இந்நிலையில், குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்பின் அணையா விளக்கு தூபியின் புனரமைப்புப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைதினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது. இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். தலைசிறந்த சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர் 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமைச்சர் பதவி இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ,ஊடகவியலாளராகவும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும்பணியாற்றினார். இராசதுரை […]
யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு –இருவர் ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து , […]
தீடீரென சந்தித்த சங்கும் வீடும்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், சி.ரவீந்திரா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கையில் டிட்வா புயல் பாதிப்பு.. ஆபரேஷன் சாகர் பந்து.. இந்திய ராணுவத்தில் 1,250 பேருக்கு சிகிச்சை!
இலங்கையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் உதவி செய்து வருகிறது. கள மருத்துவமனை ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்து உள்ளது.
அணையா விளக்கு மீண்டும் உடைத்தெறியப்பட்டது
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உடைத்தெறியப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை அணையா விளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது. குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதன்பின் அணையா விளக்கு தூபி அன்றைய தினமே மீண்டும் நிறுவப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி விஷமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.
யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு –இருவர் ஆபத்தான நிலையில்!
யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்! யாழ். பண்ணை கடலில்… The post யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்! appeared first on Global Tamil News .
பள்ளி,கல்லூரி மாணவிகளை ஏமாற்றிய கொடூரன்; போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்த காவல்துறை
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவன் 22 வயதான பிரவீன். கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்த இவன் , நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்திருக்கிறான். Rep image இந்த நிலையில், 18 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாகச் சொல்லி கர்ப்பமடையச்செய்திருக்கிறான். 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணின் வற்புறுத்தலின் பேரில் வீட்டிற்குத் தெரியாமல் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறான். இந்தநிலையில் தான் இவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் பரிசோதனை மேற்கொள்ள செய்ததில் பள்ளி சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கைதான பிரவீன் ஊட்டியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அன்றைய தினமே சிறுமிக்கு பிரசவமும் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரவீனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஏர்போர்ட்-கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் என்ன ஆச்சு? ஒப்புதல் கிடைக்க காத்திருப்பா?
சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் நிலை என்ன என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. அதை விரிவாக காண்போம்.
வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.1,120 கோடி சொத்து முடக்கம்
புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்தது. பின்னர் இந்த முதலீடு வாராக் கடன்களாக மாறின. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.11,000 கோடி பொது நிதி, யெஸ் வங்கி மூலமாக அனில் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனங்களுக்கு வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அனில் அம்பானியின் 18 சொத்துக்களை அமலாக்கத் துறை தற்போது முடக்கியது. இவற்றின் மதிப்பு ரூ.1,120 கோடி ஆகும். […]
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான பைனல் வாய்ப்பு மிகவும் கடினமாக இருக்கும்.
‘டித்வா’புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! !
‘டித்வா’ புயல் அனர்த்தத்தின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக, அமெரிக்காவின் வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J… The post ‘டித்வா’ புயல் நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்காவின் உடனடி உதவி: C-130J விமானங்கள் வருகை! ! appeared first on Global Tamil News .
``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு
இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அதிலும், நியூசிலாந்திடம் 3-0 எனவும், தென்னாப்பிரிக்காவிடம் 2-0 எனவும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. அணித் தேர்வில் கம்பீர் அதிகமாக தலையிடுவதாலும், ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஐ.பி.எல் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வதாலும், பேட்டிங்கோ பவுலிங்கோ அந்தந்தப் பிரிவின் நிபுணர்களைக் (ஸ்பெஷலிஸ்ட் ப்ளேயர்களை) தேர்வு செய்யாமல் ஆல்-ரௌண்டர்களைத் தேர்வு செய்வதாலும்தான் சொந்த மண்ணில் இவ்வாறு மோசமாக டெஸ்ட் தொடர்களை இழக்க நேர்கிறது என கம்பீருக்கு மீது விமர்சனங்கள் குவிந்தன. கவுதம் கம்பீர் - அஜித் அகர்கார் இத்தகைய விமர்சனங்களுக்கிடையிலும் டெஸ்ட் தோல்விகளுக்கு, “சாம்பியன்ஸ் டிரோபியும், ஆசியக் கோப்பையும் வென்றதும் இதே கம்பீர்தான்” என சம்பந்தமே இல்லாமல் வைட் பால் தொடர்களை ஒப்பிட்டார் கம்பீர். அவர் சொன்னதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அந்த இரண்டு தொடர்களும் துபாயில் நடந்தவை. இவ்வாறான சூழலில்தான் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், “சொந்த மண்ணில் நமது டெஸ்ட் அணி இவ்வளவு பலவீனமாக இருப்பதை நான் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. ரெட் பால் (Red Ball) ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்படாவிட்டால் இதுதான் நடக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்தியா ஒரு ரெட் பால் ஃபார்மட் ஸ்பெஷலிஸ்ட் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய நேரம் இது” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பார்த் ஜிண்டால் இந்த நிலையில், நேற்று தென்னாப்பிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற கையோடு, டெல்லி அணியின் இணை உரிமையாளரைப் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார் கம்பீர். நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், “முடிவுகள் (டெஸ்ட் தொடரில்) எங்களுக்கு சாதகமாக வராததால் நிறைய பேச்சுகள் வந்தன. ஆனால் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் இல்லை (கில்); இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் பேட்டிங் செய்யவில்லை. இதைப் பற்றி யாரும் பேசவில்லை.” `என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் நான் எந்த சாக்குபோக்கும் கூறாததால், உண்மையை யாரும் பேசக்கூடாது என்று அர்த்தமல்ல. அணி ஒரு மாற்றத்தில் (Transition) இருக்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஃபார்ம் பேட்ஸ்மேனான, 7 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தவரான கேப்டனை இழந்தால் முடிவுகள் கடினமாத்தான் இருக்கும். India Cricket Team Captain Shubman Gill ஏனெனில் ரெட் பால் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் இல்லை. யாரும் அதைப் பற்றி பேசவில்லை. பிட்ச் பற்றி என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், கிரிக்கெட்டுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களெல்லாம் சில விஷயங்களைச் சொன்னார்கள். IND vs SA: கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல - ஏபிடி சொல்லும் காரணம் என்ன? ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் (பார்த் ஜிண்டால்) பயிற்சியாளர் பொறுப்பை பிரித்துக் கொடுப்பது பற்றிக் கூறினார். இது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரவர் தங்கள் வரம்புக்குள் இருப்பது நல்லது. நாம் ஒருவரின் வரம்புக்குள் செல்லாதபோது, அவர்களும் நம் வரம்புக்குள் வர எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கம்பீர் - Gautam Gambhir கம்பீரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில் வெறும் 124 ரன்கள் டார்கெட்டை அடிக்கக் கூட 7 போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த கேப்டன்தான் வேண்டுமா? அவர் மட்டும் இந்திய அணியில் வீரரா மற்றவர்கள் எல்லாம் வெறுமனே அணியில் இருக்கிறார்களா?' என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. முன்னதாக, 2018-ல் கொல்கத்தா அணி கம்பீரை ஏலத்தில் விட்டபோது பார்த் ஜிண்டாலின் டெல்லி அணி ரூ. 2.80 கோடிக்கு எடுத்து அணியின் கேப்டனாக்கியது. ஆனால், கம்பீர் தலைமையில் டெல்லி அணி மோசமாக ஆடியதால் பாதியிலேயே தொடரிலிருந்து விலகியதோடு தனது சம்பளத்தையும் கம்பீர் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்தியா இவ்வாறு மோசமாகத் தோல்வியடையும்போது கேள்வியே எழுப்பக்கூடாது என்பது என்று கம்பீர் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 2011-ல் வரிசையாக 7 தோல்விகள்; அன்று தோனி பேசிய வார்த்தைகள் - `தற்பெருமை’ தான் முக்கியமா கம்பீர்?
இலங்கை தமிழ் அரசுக் கட்சி –ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் […]
``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்; திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக கலைஞர் நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கிய மண். மு.க.ஸ்டாலின் பாசக்காரர்களான மதுரைக்காரர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாமதுரைக்கு வளர்ச்சி என்றாலே அது தி.மு.க. ஆட்சியில்தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், கடந்த கால தி.மு.க. ஆட்சிகளில் மதுரைக்காக நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். தி.மு.க. அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மதுரையை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் நிகழ்ச்சிதான் இது. ஒரு லட்சம் நபர்களுக்கு பட்டா வழங்கியும், 2 இலட்சத்து 58 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறேன். இதுவரை நாம் நடத்தி இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அரசு விழா இந்த விழாதான். அமைச்சர் மூர்த்தியின் பிரம்மாண்ட ஏற்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்; வியக்கிறேன். இந்த அரசு விருது விழாவை சித்திரை திருவிழாபோல் ஆக்கியுள்ளார். தன் துறைகள் மூலம் தமிழ்நாட்டு கருவூலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தந்து நல்ல பெயர் பெற்ற மூர்த்தி, இன்றைக்கு இது அரசு விழாவா அல்லது மாநாடா என்று சொல்லக்கூடிய வகையில் மதுரை மக்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அதேபோல், இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆற்றலும், அறிவும், ஆக்கப்பூர்வமான சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்; சிறந்த இறைப்பற்றாளர். அதே நேரத்தில், கடவுளின் பெயரில் வெறுப்பை விதைக்கக் கூடியவர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் சரியாகப் பயன்படுத்தி பதிலடி கொடுப்பவர். அவருக்கும் பாராட்டுக்கள். மதுரை விழாவில் கடந்த கால அவல ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், ஒட்டுமொத்த இந்தியாவும் - ஏன், உலக நாடுகளும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு முற்போக்கான, முன்னோடியான மக்கள் நலத் திட்டங்களை கடந்த நான்கு ஆண்டு காலங்களில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி அதிக பயனாளிகளைக் கொண்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். புதுமைப்பெண் திட்டத்தில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 400 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். அதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் 31 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை விழாவில் நலத்திட்ட உதவி காலை உணவுத் திட்டத்தில் 59 ஆயிரத்து 394 பள்ளிக் குழந்தைகளும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 8 இலட்சத்து 60 ஆயிரம் நபர்களும் பயனடைந்துள்ளனர். “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் நபர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டங்களில் மூன்று இலட்சம் மாணவ–மாணவிகளும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 75 ஆயிரத்து 597 பேரும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 22 ஆயிரத்து 766 நபர்களும், ‘தாயுமானவர்’ திட்டத்தில் 86 ஆயிரத்து 130 பேரும் பயனடைந்துள்ளார்கள். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 75 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டிருக்கின்றோம். ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் 341 குழந்தைகளை பாதுகாத்துள்ளோம். மேலும், 4 ஆயிரத்து 196 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திலும் எத்தனை பயனாளிகள் உள்ளார்கள் என்று பட்டியலிட்டு சொல்ல ஆரம்பித்தால், இந்த ஒரு நிகழ்ச்சி போதாது. ஒவ்வொரு நாளும் இத்தனை லட்சம் மக்கள் பயனடைவது போல, நாம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள். வயிற்றெரிச்சலிலும் ஆற்றாமையிலும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையையும் நாங்கள் முறியடிப்போம், சிதைப்போம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த பாச்சா எதுவும் பலிக்காது. மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நான் ஒரு ட்வீட் செய்திருந்தேன். மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிரூபிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு முன்பு 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 56 ஆயிரத்து 766 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இதுதான் எங்கள் அரசியல். மதுரையையும் அதைச் சுற்றி இருக்கின்ற பகுதிகளையும் நல்ல தரமான, உயர்தர வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களாக உருவாக்க வேண்டும் என்று இந்த அரசு ஓயாமல் பாடுபடும், என்றார். முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் பயன்படுத்திக் கொள்கிறார்.. நயினார் குற்றச்சாட்டு!
வடபழனியில் தமிழக பாஜக சார்பில் சம்பந்தி போஜனம் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு குறித்தும், தீபம் ஏற்றும் விவகாரம் குறித்தும் விமர்சித்தார்.
வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயற்கையின் இடர் தடகளத்தில் நல்லது கெடுவதும், நன்மையாவதும்! பனங்காட்டான
2004ம் ஆண்டு சுனாமி நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளையும் இணைத்து செயற்பட சந்திரிகா அரசு முனைந்தபோது அதனை ஆட்சேபித்து அமைச்சர் பதவிகளையும் துறந்து ஆட்சியிலிருந்து வெளியேறியது ஜே.வி.பி. இருபது ஆண்டுகளின் பின்னர் பேரிடர்ப் பணிபுரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களிடம் (தமிழர்களே அதிகம்) உதவியை நாடுகிறது அதே ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி. இதுவும் இயற்கையின் நியதி போலும். இயற்கையின் பெருஞ்சீற்றம் இரத்தினதுவீபம் என அழைக்கப்பட்டு வந்த இலங்கை எனும் குட்டித்தீவை முற்றுமுழுதாக சீரழித்துள்ளது. 75 வருட அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக ஓர் அணி - புரட்சிகர சிந்தனையாளர்களின் ஆட்சி ஆரம்பமாகி ஒரு வருட முடிவு காலத்தில் இவ்வாறான ஒரு பேரழிவை கையாளக்கூடியதாக திட்டமிடவில்லையென்பதை உள்நாட்டில் பலரும் கூறுமளவுக்கு நிலைமை உள்ளது. அரச நிர்வாகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஒன்று உள்ளது. இது நேரடியாக ஜனாதிபதி அநுர குமரவின் தலைமையில் இயங்குகிறது. இந்த அமைச்சின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளது. இதற்கான சட்டம் 2005ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பூகம்பம், சுனாமி உட்பட்ட பதினேழு வகையான அனர்த்த வேளைகளில் உடனடிப் பணிகளை நிறைவேற்றுவதே இந்த நிலையத்தின் பிரதான பணி. 1913, 1940, 1947, 1950ம் ஆண்டுகளில் களனி, கல, ஜின், மகாவலி கங்கைகள் பெருக்கெடுத்து பாரிய அழிவை ஏற்படுத்தின. பின் நவீனத்துவ காலத்தில் 2003ம் ஆண்டில் தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 260 பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், ஆயிரமாயிரம் பேர் இடம்பெயர்ந்ததையும் அரசாங்கத் தகவல் பதிவு செய்துள்ளது. 1978ம் ஆண்டு சூறாவளி இலங்கை மக்களை வேறுபாடின்றி எதிர்பாராத அழிவுக்குள்ளாக்கியது. இதன் பின்னரான பேரழிவை ஏற்படுத்தியது நேற்றுப்போல் இடம்பெற்ற சுனாமி. 2004 டிசம்பர் 26ம் திகதியான கிறிஸ்மஸ் நாளன்று இது இடம்பெற்றது. மின்னாமல் முழங்காமல் என்று கூறுவதுபோன்று இலங்கை வரலாற்றில் எதிர்பார்த்திராத அனர்த்தத்தை இது ஏற்படுத்தியது. வடக்கின் கரையோரத்திலிருந்து இலங்கை வரைபடத்தின் கீழ்மூலையிலுள்ள அம்பாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்களில் ஆறு மணித்தியாலத்தில் பல்லாயிரம் பேரை கொன்றொழித்த பேரலை இது. மக்களின் இருப்பிடங்கள், தொழிலகங்கள், வணக்கத் தலங்கள், வாழ்வாதார மூலங்கள், பாடசாலைகள், விவசாயப் பண்ணைகள் என்று எதனையுமே இது விட்டுவைக்கவில்லை. இலங்கை அரசியலில் இதே சுனாமி சிலரை அடையாளம் காட்டவும் வைத்தது. அப்போது சந்திரிகா குமாரதுங்க தலைமையில் மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தது. ஜே.வி.பி. இதில் பங்காளராக அமைச்சுப் பதவிகளிலும் அமர்ந்திருந்தது. அநுர குமர, விஜித ஹேரத் போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்தனர். சுனாமி நிவாரணத்துக்காக பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை நிதி வழங்கிய நாடுகள் சந்திரிகாவுக்கு ஏற்படுத்தின. அவரும் அதனை ஏற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் இணைந்து கட்டமைப்பை உருவாக்க முனைந்த வேளை அதனை ஆட்சேபித்த ஜே.வி.பி. தங்கள் அமைச்சுப் பதவிகளையும் துறந்து ஆட்சிக் கூட்டிலிருந்து வெளியேறியது. பொதுக்கட்டமைப்பில் விடுதலைப் புலிகளையும் இணைப்பதால் அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதே ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கு காரணமாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக இலங்கையிலிருக்கும் அமெரிக்க தூதரகம் தனது அரசுக்கு அனுப்பி வைத்த தகவல் விக்கி லீக்சில் இடம்பெற்றுள்ளது. அப்போது சந்திரிகா அரசில் கலாசார மற்றும் மரபுரிமை அமைச்சராகவிருந்த விஜித ஹேரத் (தற்போதைய வெளிவிவகார அமைச்சர்) இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், ஆட்சியின் பங்காளர்களான தங்களின் ஆட்சேபணையை பொருட்படுத்தாது சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளை பொதுக்கட்டமைப்பில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார் என்று குறிப்பிட்டதாக விக்கி லீக்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. விதிப்பயனோ அல்லது இயற்கையின் நியதியோ சுனாமியிலும் பார்க்க மிகமிக மோசமான பேரழிவை ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி புரியும் காலத்தில் ஏற்பட்டுள்ளது. தமது வல்லமைக்கு உட்பட்ட வகையிலும் கிடைக்கும் சர்வதேச உதவிகளைப் பயன்படுத்தியும் நாட்டை மீளெழுப்ப அரசு செயற்களத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் உதவியை இது பகிரங்கமாகக் கோரியுள்ளது. புலம்பெயர் இலங்கையர்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே. தமிழ் மக்களினுடைய உரிமைப் போராட்டத்தை நசுக்க போர் வெறி கொண்ட மகிந்த அரசுக்கு பக்கபலமாக அப்போது நின்றது ஜே.வி.பி. சுனாமிக் கட்டமைப்பில் விடுதலைப் புலிகளை சந்திரிகா இணைத்துக் கொள்ள முயன்றபோது அதனை எதிர்த்து முறித்தழித்ததும் இதே ஜே.வி.பி. இப்போது, போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகப் புறப்பட்ட தமிழர்களின் உதவியை இது நாடி நிற்கிறது. இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் உள்நாட்டில் அநுர அரசு மேற்கொள்ளும் பணிகள் வெளிநாடுகளில் இதன் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கையின் பயனாகவே உலகநாடுகள் அனைத்தும் கிள்ளிக்கொடு;க்காமல் இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் வேறொரு கட்சியின் ஆட்சி இலங்கையில் இருந்திருக்குமாயின் இந்தளவுக்கு சர்வதேச ஆதரவு கிடைத்திருக்காது என்று சொல்லலாம். இதற்குக் காரணம் ஊழல் ஒழிப்பில் முழுமையாக இறங்கி ஊழலற்ற அரசாட்சி ஒன்றை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசு பயணிப்பதே என்று துணிந்து சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு வருட ஆட்சிக்குள் அநுர குமர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன, மத பேதமற்ற நிர்வாகமாக முழுமையாக மாறவில்லை. பொதுமக்கள் நம்பக்கூடிய வகையில் தனது பாதையை இவ்வழியில் அது அமைத்து வருவது மட்டும் தெரிகிறது. இந்த நம்பிக்கையே சர்வதேசத்தின் பங்களிப்புக்கு அடிப்படைக் காரணம். அனைத்து மக்களையும் இணைத்தவாறு நாட்டை இழுத்துச் செல்ல முயற்சித்த வேளையில் புயலும், வெள்ளமும், நிலச்சரிவும் ஒன்றுசேர்ந்து அனைத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. மரணித்தோர் தொகை அடுத்த சில நாட்களில் ஆயிரத்தைத் தாண்டலாம் என எதிர்வு கூறப்படுகிறது. காணாமல் போனோர் தொகை பற்றி இப்போது எதுவும் கூறமுடியாத நிலை காணப்படுகிறது. மலையகமே கூடுதலான பாதிப்பைக் கண்டுள்ளது. சில கிராமங்கள் அடியோது காணாமல் போயுள்ளன. துயில் கொண்டிருந்த பல குடும்பங்கள் புதையுண்டு போயுள்ளன. உடனடியாக தங்கள் தொகுதிகளுக்குச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தை முக்கியப்படுத்தி கொழும்பில் தங்கி விட்டனர். அத்துடன், அரசாங்கத்தின் செயற்பாடுகளை குறை கூறி ஊடகங்கள் ஊடாக தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முற்பட்டனர். தமிழ் அரசியல்வாதிகளும் இதில் வேறுபடவில்லை. இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் தாராளமாக உதவி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருபத்தையாயிரம் முதல் ஐம்பதினாயிரம் ரூபா வரையான நிவாரணம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிவாரணம் உடனடித் தேவைகளுக்கு மட்டுமே. பிரதேச வேறுபாடின்றி சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படுவதை காணமுடிகிறது. எனினும், எதிர்க்கட்சிகள் தாங்கள் நல்லவற்றுக்கும் எதிரானவர்களே என்பதைக் காட்டும் பாணியில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆக்கபூர்வமான பணிகள் எதனையும் இவர்கள் செய்வதாகத் தெரியவில்லை. பேரிடரைப் பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை நிரப்பலாமென எண்ணிச் செயற்படும் இவர்களை சர்வதேசம் கேள்விக்குறியாக்கியுள்ளது. நித்தம் நித்தம் கிடைத்துவரும் நிவாரண உதவிகள் எதிரணிகளை நிலைகுலைய வைக்கிறது. அதனால் ஏதாவது குற்றங்களை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடிகளுடன் இவர்கள் திரிகிறார்கள். நிவாரண திட்டமிடலின்மை, தாமதமான நிவாரணப்பணி என்பவைகளை முன்னிறுத்தி ஆட்சித் தரப்பை மக்கள் செல்வாக்கிலிருந்து இறக்கி விடலாமென இவர்கள் எண்ணியது தலைகரணமாக்கியுள்ளது, சர்வதேச நிவாரணமும் அரசாங்கத்தின் வீச்சான செயற்பாடும். மறுபுறத்தில், ஆட்சி புரியும் தேசிய மக்கள் சக்தி அனைத்து மக்களையும் ஒரே நோக்கில் இருத்தி தனது பணிகளை மேற்கொள்கிறது. அரசியல் ஆதாயம் தேடப்படுவதாக இதனை எவரும் பார்க்கவில்லை. பேரிடரிலிருந்து நாட்டை மீட்டு அதனை நவீன இலங்கையாக கட்டியெழுப்ப காலம் தேவையென்று கூறி பொதுத்தேர்தலை குறைந்தது பத்தாண்டுகளுக்காவது பின்போட (ரில்வின் சில்வாவின் ஆசையும் இதுதான்) தேசிய மக்கள் சக்திக்கு இதன் நிவாரணப்பணி வரப்பிரசாதமாக அமையலாம். மாகாண சபைத் தேர்தல் பற்றி இப்போதைக்கு எவரும் வாய் திறக்க முடியாத நிலைமை வந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி பேரிடர் காலத்தில் மேற்கொள்ளும் சாதகமான செயற்பாடுகளும், எதிர்க்கட்சிகளின் இயக்கமற்ற குற்றக் கூச்சல்களும் நாட்டின் எதிர்காலம் எதுவாகும் என்பதை தீர்மானிக்கப்போகும் சக்திகள். இதில் சர்வதேசத்தின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கும் - புலம்பெயர்ந்தவர்களின் பங்கும்கூட.
பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை ஊக்குவிக்கும் அரசு! –எதிர்க்கட்சித் தலைவர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை அரசு ஊக்குவிப்பதாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அப்துல் சமாத் யாகூப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பாதுகாப்பு முப்படைகளின் தலைவர் (சிடிஎஃப்) பதவி வகிக்கும் ஜெனரல் சையத் ஆசிம் முனீரின் பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளது அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ). பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் நிறுவனத் தலைவருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் […]
அன்புமணி ராமதாஸ் எடுத்த முடிவு! மாவட்ட பொறுப்புகளுக்கு 12 முக்கிய நிர்வாகிகள் நியமனம்
அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமகவில் மாவட்ட பொறுப்பாளர்களாக 12 முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம்.
வீடு முற்றுகை யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்றைய… The post வீடு முற்றுகை! appeared first on Global Tamil News .
இண்டிகோ நிறுவன அதிகாரிக்கு Show Cause Notice.. விமான சேவை பாதிப்பால் நடவடிக்கை!
இண்டிகோ விமான சேவை தொடர்ந்து ரத்தாகி வருகிறது. இதனால் DGCA, இண்டிகோ அதிகாரிக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி, 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு உள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.12.25)… The post வீட்டில் சங்கு! appeared first on Global Tamil News .
புயல் அனர்த்தத்தில் சிக்கிய மக்களுக்கு வர்த்தக சங்க அணுசரனையுடன் பொலிஸாரின் உதவி
video link- https://fromsmash.com/Gm1ujAO_G~-dt நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்களின் அணுசரனையுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முதற்கட்டமாக அத்தியவசிய உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உலருணவுப் பொருட்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை மருதமுனை சவளக்கடை சாய்ந்தமருது சம்மாந்துறை வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்குபற்றலுடன் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கல்முனை மாநகர சபையின் […]
வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய… The post வெள்ளை நுரை கரையொதுங்கியதால் வடமராட்சியில் பரபரப்பு! appeared first on Global Tamil News .
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் குமுறல்! இண்டிகோ நிறுவனத்திடம் சிக்கிய லக்கேஜ்- எப்போது கிடைக்கும்?
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உடைமைகளை பெற முடியாமல் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
உயிரைப் பறித்த உடற்பயிற்சி ; அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் 55 வயதான நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்ற நபர் கடந்த மாதம் 1 ஆம் திகதி பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார். […]
வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை!
வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரின் பூதவுடல் தீயுடன் சங்கமாகியது.… The post வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் இறுதி கிரியை! appeared first on Global Tamil News .
பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் கைப்பற்றப்பட்ட பழைய பொருட்கள் அழிப்பு
பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு இன்று (6) நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரபலமான ஒரு உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட பழுதடைந்த 144 சம்சா, 4 kg பிசைந்த மாவு, 8 kg சோறு உட்பட பல பழைய பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன. குறித்த உணவகத்தில் உணவைப் பெற்றுக் கொண்ட தாய் மற்றும் மகள் […]
சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. பாதுகாப்பு இல்லாத ஆட்சி.. எடப்பாடி பழனிசாமி வேதனை!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வழமைக்கு திரும்பியது மின்சாரம்
video link- https://fromsmash.com/0spo3OdntH-dt அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது . மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. வெள்ள அனர்த்தத்தினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பத்தை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்பின் மீள் நிர்மாணத்தை தொடர்ந்து இன்று (06)பிற்பகல் அப்பகுதிகளுக்கான மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது. மின்சார […]
‘அ’– அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி!
‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! மலையக அரங்க வரலாற்றில் ஒரு… The post ‘அ’ – அவ்வை சிறுவர் அரங்கு: அன்பினாலான உலகை நோக்கி ஒரு எழுச்சி! appeared first on Global Tamil News .
`பால் பவுடருக்கு பதில் க்யூப்' - ஜப்பானில் அறிமுகமான 'பேபி ஃபார்முலா க்யூப்ஸ்' - என்ன சிறப்பு?
வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன ஜப்பான், புதிய 'கியூப்' வடிவ பாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக 'ஃபார்முலா மில்க்' பவுடர் வடிவத்தில் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்துவது சில நேரங்களில் சவாலான விஷயமாக இருக்கும். குறிப்பாக நள்ளிரவு 2 மணி அல்லது 3 மணிக்குக் குழந்தை பசியால் அழும்போது, தூக்க கலக்கத்தில் இருக்கும் பெற்றோர்கள் சரியான அளவில் பவுடரை அளந்து, வெதுவெதுப்பான நீரில் கலக்குவது சிரமமாக இருக்கும். பல நேரங்களில் பவுடர் கீழே சிந்திவிடும் அல்லது அளவுகள் மாறிவிடும். இதனால் ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான 'மெய்தி' (Meiji), பவுடருக்குப் பதிலாகத் திட வடிவிலான 'கியூப்'களை உருவாக்கியுள்ளது. பார்ப்பதற்குச் சர்க்கரைத் துண்டுகள் போலவே இருக்கும் இவை, தண்ணீரில் போட்டவுடன் உடனடியாகக் கரைந்துவிடும் தன்மையுடையவையாக உள்ளது. milk representative image இது எப்படி வேலை செய்கிறது? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின்படி, ஒருவர் இந்த கியூப்களை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்குகிறார். ஒரு கியூப் என்பது 40 மி.லி பாலுக்குச் சமம். அதாவது ஒரு கியூபை பாட்டிலில் போட்டு, தேவையான அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஆட்டினால் போதும், பால் தயாராகிவிடும். ஸ்பூன் கணக்கு, சிந்தும் கவலை, அளவு போன்ற எந்தப் பிரச்னையும் இதில் இல்லை என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. View this post on Instagram
கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்! அண்ணாமலை குற்றச்சாட்டு
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் மாணவர்ளுக்கு வழங்கிய இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் தரமற்றும் இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! -டிசம்பர் 9 முதல் மிகக் கனமழை வாய்ப்பு! வானிலை ஆய்வு: கிருபா இராஜரெட்ணம்,… The post மட்டக்களப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை! appeared first on Global Tamil News .
FJ என்ன அமுக்கப் பார்க்கிறார் என்ற பாரு: கேமுக்காக ஒரு பெண்ணை யூஸ் பண்றார்னு பொங்கிய ஆதிரை
பிக் பாஸ் 9 போட்டியாளரான எஃப்.ஜே. மீது சக போட்டியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஆதிரை புகார் சொன்னதை பார்த்தவர்களோ அந்த தகுதி உங்களுக்கு இல்லை என்கிறார்கள்.
உக்ரைனில் ரஷியா ட்ரோன் மழை! அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தாக்குதல்!
உக்ரைனில் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் சனிக்கிழமை(டிச. 6) தாக்குதல்களைத் தொடுத்தது. வெள்ளிக்கிழமை (டிச. 5) நள்ளிரவில் தொடங்கிய ரஷியாவின் தீவிர வான் வழி தாக்குதல்கள் சனிக்கிழமை(டிச. 6) அதிகாலை வரை நீடித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களில் மக்களுக்கு ஏர் சைரன் மூலம் அபாய ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷியாவிலிருந்து அனுப்பப்பட்ட 653 ட்ரோன்கள் மற்றும் 51 ஏவுகணைகளில் 585 ட்ரோன்களையும் 30 ஏவுகணைகளையும் இடைமறித்து செயலிழக்கச் செய்திருப்பதாகவும் […]
மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் கரையை கடந்து கனமழை கொடுத்தது. இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால்
மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் ‘தமிழ்நாடு வளர்ச்சி’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- * ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை சென்றிருந்தார். இன்று காலையில் மதுரையில் மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன்
``திருமணம் ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார். ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. ஆனால், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அன்று திருமணம் நடக்கவில்லை. அதே அன்று பலாஷ் முச்சாலுக்கும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இன்ஸ்டா ஸ்டோரி முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின் இதன் பின், இவர்களது திருமணம் நின்றுவிட்டது. இருவரும் பிரிந்துவிட்டனர் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி இருந்தன. ஸ்டோரி இந்த நிலையில், திருமணம் நின்றது குறித்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ஸ்மிருதி மந்தனா. அதில், சில வாரங்களாக, என்னை குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்போது நான் பேச வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன். நான் ஒரு பிரைவெட் நபர். என்னுடைய விஷயங்களையும் அப்படி வைக்கவே நினைக்கிறேன். ஆனால், எனது திருமணம் ரத்தாகி விட்டது என்பதை தெளிவாக்க விரும்புகிறேன். ஸ்மிருதி மந்தனா இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள நினைக்கிறேன். இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் பிரைவசியையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரையும் ஒரு விஷயம் இயக்குகிறது என்று நான் நம்புகிறேன். அப்படி எனக்கு என்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது மிக முக்கியம். எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இந்தியாவிற்காக நிறைய விளையாடுவேன். கோப்பைகளை வெல்லுவேன். இது தான் என்னுடைய லட்சியம் என்று குறிப்பிட்டுள்ளார். 'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
திமுக கூட்டணியில் அடிமை சாசனம்..உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் -ஆர்.பி.உதயகுமார்!
மத்தியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் திமுக கூட்டணியில் இருந்தபோது அடிமை சாசனம் செய்த வரலாற்றை உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து உள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் நிலநடுக்கம் –ரிகடர் அளவில் 7 ஆக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250
வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில்,
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்
`தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்தார். உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்த மகேந்திர சிங் தோனி சென்னை ஐ.பி.எல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னை ஐ.பி.எல். அணிக்காக தோனி விளையாடி வருகிறார். ஆனால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே சத்தமே இல்லாமல் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு படிப்படியாக தொழிலிலும் சாதித்து இருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்காக இந்தியன் சூப்பர் லீக் ஆரம்பித்த போது அதில் சென்னை அணியை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். மகேந்திர சிங் தோனி அவர் சென்னையை தனது சொந்த ஊராக நினைக்க தொடங்கியதால் அவரால் மும்பை அல்லது கொல்கத்தா அணியை வாங்குவது பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தோனி தெரிவித்து இருந்தார். இது குறித்து கால்பந்து வீரர் அனிருத் தபா கூறுகையில், ''மதிய உணவின் போது எப்போதும் தோனி விளையாட்டு வீரர்களுடன் தான் இருப்பார். அவர் ஸ்பான்சர்களுடன் அல்லது அதிகாரிகளுடன் இருக்கமாட்டார். வி.ஐ.பி.க்களுடன் வந்து இருக்கும்படி சொன்னாலும் சிரித்துக்கொண்டே வீரர்களுடன் இருப்பதாக சொல்லிவிடுவார். அவர் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். பிறகு பணம் சம்பாதிக்கிறார்'' என்றார். மேரி வாலி பிரியாணி ஒரு முறை ஒரு சிறிய பிரியாணி கடை உரிமையாளர் மகேந்திர சிங் தோனியிடம் 'மேரி வாலி பிரியாணி' என்ற ஒரு திட்டம் குறித்து தெரிவித்தார். இத்திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் பிரியாணியின் எந்த மாதிரியான மசாலா சேர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். அந்த ஐடியா தோனிக்கு பிடித்துப்போனது. உடனே அத்தொழிலில் ரூ.32 கோடியை முதலீடு செய்வதாக கூறி காசோலையை எடுத்துக் கொடுத்துவிட்டார். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவரது கணக்கு வீண் போகவில்லை. வாடிக்கையாளர்கள் எந்த வித டிஸ்கவுண்டும் இல்லாமல் பிரியாணியை ஆர்டர் செய்தனர். இதுவே பிரியாணி தொழிலில் 70% வருவாயை கொடுத்து வருகிறது. Dhoni - தோனி இப்போது இந்த பிரியாணிக்கு இந்தியா முழுவதும் 22 இடங்களில் சமையல் அறைகள் திறக்கப்பட்டுள்ளது. துபாய், இங்கிலாந்து, ஜப்பானிலும் கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஸ்வக்கி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தின் மூலம் 83 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணிக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பிரியாணியில் தோனி பணத்தை முதலீடு செய்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். Dhoni: ``தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும்'' - மாணவர்களிடையே பேசிய தோனி கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம் ஒரு முறை சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற ட்ரோன் தயாரிக்கும் நிறுவனம், தோனியை தங்களது நிறுவனத்திற்கு வந்து தங்களது பணியை பார்வையிடும்படி கேட்டுக்கொண்டது. தோனியும் அங்கு சென்றார். ட்ரோன்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை பார்த்தார். அவர் பெரிதாக எதுவும் பேசவில்லை. அமைதியாக அவர்களது தொழிலை கவனித்தார். உடனே அடுத்த ஒரு வருடத்தில் அந்த நிறுவனத்தில் தோனி ரூ.5 கோடியை முதலீடு செய்தார். இப்போது அதே கம்பெனி தொழிலை விரிவுபடுத்த ரூ.100 கோடி முதலீடு திரட்டி இருக்கிறது. தோனி எங்களுடன் இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அக்கம்பெனி நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். தோனி இத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான CARS24 என்ற நிறுவனத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான emotorad என்ற நிறுவனத்திலும், உடற்பயிற்சிக்கான tagda raho என்ற நிறுவனத்திலும், ராஞ்சி ஹோட்டல், ராஞ்சி ரேய்ஸ் ஹாக்கி அணி போன்ற நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். தோனி முதலீடு செய்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. Dhoni - தோனி தோனி முதலீடு செய்த சில நிறுவனங்கள் சறுக்கி இருந்தாலும், பெரும்பாலான முதலீடுகள் அவருக்கு வருவாயை ஈட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை அவரது முதலீடு கம்பெனிகளில் 1000 கோடியாக வளர்ச்சியடைந்து இருக்கிறது. எந்த ஒரு தொழிலிலும் தோனி முதலீடு செய்வதற்கு அவசரப்பட மாட்டார். அவர் அனைத்து தகவல்களையும் பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் இவ்விவகாரத்தில் முடிவு எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தோனிக்கு பல கம்பெனிகளில் முதலீடு இருப்பதால், எப்போது எந்த கம்பெனி கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு, அவர் எப்போதும் தொழிலில் பிஸியாக இருக்கிறார். MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த தென்
பா.ஜ.கவினர் நினைத்த செயல் தமிழ்நாட்டில் நடக்காது –நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாறினால் என்ன தவறு என்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர்சேகர்பாபு கருத்து கூறுகையில், வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க.வினர் நினைத்த
Thirupparankundram Issue: CM ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? Pe.Maniarasan ஆவேச கேள்வி
புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை!
மன்னார் மறைமாவட்ட ஆயரின் திருவருகைக்காலத் திருமடல்: புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை!… The post புதிய அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியன, ஆனால் தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றமில்லை! appeared first on Global Tamil News .
2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை…தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு
பெங்களூரு, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே பள்ளிக்கூடத்திற்கு […]
நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
ஊழலுக்கு இடமில்லை! வெள்ள நிவாரணப் பணியில் பாரபட்சம் காட்டினால் கடுமையான நடவடிக்கை – வடக்கு மாகாண ஆளுநர்… The post நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Global Tamil News .
வெள்ள நிவாரணக் கொடுப்பனவு –பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
️ வெள்ள நிவாரணக் கொடுப்பனவு: யாழ்ப்பாணத்தில் புதிய உத்தரவு! – 25,000 ரூபா உதவித்தொகை விநியோகத்தில் அதிகாரிகள் பொறுப்புக்கூற… The post வெள்ள நிவாரணக் கொடுப்பனவு – பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை appeared first on Global Tamil News .
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பூங்காவின் (Old Park Jaffna) நிலம், அதிகாரிகளின் குறுகிய சிந்தனையாலும்,… The post பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது appeared first on Global Tamil News .
சட்டப் பேராசிரியர் கார்லோஸ் போர்ச்சுகல் கோவியா அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்
ஹார்வர்ட் பேராசிரியரின் விசா விவகாரம்: சட்டப் பேராசிரியர் கார்லோஸ் போர்ச்சுகல் கோவியா அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்! ✈️ முக்கியத் தகவல்:… The post சட்டப் பேராசிரியர் கார்லோஸ் போர்ச்சுகல் கோவியா அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம் appeared first on Global Tamil News .
ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்திய ஏர் இந்தியா விமானம் -காரணம் என்ன?
பராமரிப்புப் பணிக்காக கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 737-200 ரக விமானம், கவனக்குறைவால் அங்கேயே 13 ஆண்டுகள் கைவிடப்பட்டதால் தற்போது அதற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக இந்த விமானம் தரையிறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பராமரிப்புப் பணிகள் முடிந்ததா அல்லது கைவிடப்பட்டதா என்ற தகவல் இல்லாமல், விமான நிலையத்தின் ஒரு ஓரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த விமானம் குறித்த தகவல்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்தும் விடுபட்டதாக கூறப்படுகிறது. Air India சமீபத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் இட நெருக்கடி அதிகரித்ததைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத விமானங்களை அப்புறப்படுத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போதுதான், ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் குறித்து தெரியவந்துள்ளது. தற்போது இந்த விமானத்திற்கு ரூ.1 கோடி பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இனி பறப்பதற்குப் பயன்படாத இந்த விமானம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில், விமான பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி: `போலி மருந்து வழக்கு' சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவு; கலக்கத்தில் ரௌடிகள்
BB Tamil 9 Day 62: பாரு பெஸ்ட் பிளேயரா?; மாட்டிக் கொண்ட ரம்யா, வியானா, விக்ரம்!
ஒரு பக்கெட் துணியை இரண்டு மணி நேரமாக அலசி எபிசோடை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி. ‘பிரம்பு வாத்தியார் அவதாரம் எடுக்காமல், சுவாரசியமான டாஸ்க்குகளை வைத்து நடந்த வீக்கெண்ட் ஷோ நன்றாக இருந்தது. இது தொடர்ந்தால் நன்றாக இருக்கும்’ என்று கடந்த வாரத்தில் எழுதியிருந்தேன். ஆனால் இந்த வாரம் மீண்டும் பிரம்பை கையில் தூக்கிவிட்டார் விசே. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 62 விசாரிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கும்போது, இந்தப் பக்கெட் துணி சமாச்சாரத்தை இத்தனை நேரத்திற்கு இழுக்க என்ன காரணம்? பிக் பாஸின் செல்லப் பிள்ளையான விக்ரம் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்கா? அல்லது பாரு மாதிரி தந்திரமாக விளையாட, ரம்யாவிற்கும் வியானாவிற்கும் தெரியவில்லை என்பதைக் காட்டுவதற்கா? Vijay Sethupathi இத்தனைக்கும் வெள்ளிக்கிழமை நிகழ்விலேயே அனைத்து சண்டையும் முடிந்து மன்னிப்பு கேட்கப்பட்டு அந்த டிராமா முடிந்து விட்டது. மீண்டும் அதைத் தோண்டி ‘ரம்யா நீங்க சொல்லுங்க. வியானா நீங்க சொல்லுங்க’ என்று இழுத்தது, வெளிப்படையான நேர விரயம். இந்த நாடகத்தின் சூத்ரதாரியான பாருவிற்கு ‘நல்லா விளையாடினீங்க’ என்று பாராட்டு கிடைத்தது வேறு கொடுமை. நெக்லஸ் பக்கத்தில் குத்துக்கல் மாதிரி அமர்ந்திருந்த விக்ரமை எழுப்புவதற்காக பாரு செய்த ஸ்ட்ராட்டஜி நன்று. அதில் மறுப்பே இல்லை. ஆனால் இந்த பிளானை ரம்யாவிற்கும் வியானாவிற்கும் அதில் தெளிவாகச் சொல்லி விட்டுச் செய்தாரா என்பதில்தான் குழப்பமே. இதில்தான் பாரு தெளிவாக கேம் ஆடியிருக்கிறார். வியானாவாவது விசே சற்று அதட்டிக்கேட்டால் ‘தெரியும்’ என்று ஒரு மாதிரி குன்சாக சொல்கிறார். ஆனால் ரம்யாவோ ‘இது எனக்குத் தெரியவே தெரியாது’ என்று வீட்டிலும் சொல்லி விட்டு அழுகிறார். விசாரணையின் போதும் அழுகிறார். Ramya எனில் இவர்களுக்கான சந்தேகத்தின் பலனை அளித்து ஒரு குறும்படத்தை விசே வெளியிட்டிருக்கலாம். பாருவின் சமையல் காமெடிக்கெல்லாம் குறும்படம் போட்டு மகிழும் பிக் பாஸ் டீம், இத்தனை அதி தீவிர பிரச்சினைக்கும் ஒரு குறும்படம் போட்டிருந்தால் பாரு சொன்னது உண்மையா, அல்லது வியானாவும் ரம்யாவும் சொன்னது பொய்யா என்று தெரிந்திருக்கும். Paaru பாரு போட்ட மாஸ்டர் பிளான் - மாட்டிக் கொண்ட ரம்யா, வியானா, விக்ரம் ‘எனக்கு இது பிளானுன்னு தெரியாது. தலன்றதால என்கிட்ட பாரு புகார் சொல்றாங்க போலன்னுதான் நெனச்சேன். என்னை ஏன் டார்கெட் பண்றீங்க. இந்த விஷயத்துல என்னை ஏன் கெட்டவளா காட்ட முயற்சிக்கறீங்க..?” என்று வீட்டிற்குள்ளேயே வெடித்து அழுகிறார் ரம்யா. இதைத் திரையில் பார்த்துக் கொண்டிருந்த விசே, ரம்யாவை விசாரிக்கும்போது தனது வழக்கமான கடுமையைக் காட்டியது முறையானதல்ல. ஒருவேளை இப்படி நடந்திருக்கலாம். ‘விக்ரமை எப்படியாவது எழுப்ப வேண்டும்’ என்கிற பிளானை பாரு, தன் அணியிடம் முதலில் சொல்லியிருக்கலாம். பிறகு பக்கெட் துணி பிரச்சினையை சொல்லியிருக்கலாம். இதை இரண்டையும் சரியாக கனெக்ட் செய்து யோசிக்கும் அளவிற்கு ரம்யாவிற்கும் வியானாவிற்கும் தெரியாமல் போயிருக்கலாம். குறிப்பாக ரம்யாவிற்கு இரண்டையும் கனெக்ட் செய்து யோசிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் அதையே தொடர்ந்து சொல்லி அழுகிறார். “அது எப்படிம்மா உங்களுக்கு தெரியாம போகும்…? என்று ரம்யாவை மீண்டும் மீண்டும் விசே கேள்வி கேட்டு வதைத்தது ஒரு வகையான டார்ச்சர் போலவே தெரிந்தது. ‘கெட்ட வார்த்தைல்லாம் பேசத் தெரியுது. இதை யோசிக்க முடியலையா?” என்று சம்பந்தமில்லாமல் கோர்த்து பேசினார் விசே. Vikram வியானாவிற்கும் இதுபோல், பக்கெட் துணி சமாச்சாரத்தை பாருவின் பிளானுடன் இணைத்து யோசிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். இல்லையென்றால் இத்தனை ஆக்ரோஷமாக விக்ரமுடன் சண்டை போட்டிருக்க மாட்டார். ஏனெனில் இந்த விவகாரத்தில் அவருடைய உடைதான் சர்ச்சைக்குள்ளானது. தெரிந்தே பாருவின் பிளானிற்கு ஒப்புதல் சொல்லியிருக்கமாட்டார். ‘பாரு.. நீங்க பெஸ்ட் வில்லன்’ - சர்காஸமாக பாராட்டிய விக்ரம் இதையெல்லாம் கூடுதலாக ஒன்றுண்டு. விக்ரமை அப்புறப்படுத்த பாரு பிளான் போட்டது சிறப்புதான். ஆனால் அதற்குப் பின்னால் வியானா மற்றும் ரம்யாவின் அழுகை, விக்ரமின் கோபம் போன்றவை நடந்தததற்குப் பின்னாலாவது விக்ரமிடம் அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால் பாரு சொல்லாமல் கமுக்கமாக இருந்து விட்டார். பிரச்சினை பொிதாக வெடிக்கும் போதுதான் வாயைத் திறந்தார். “பாரு. நீங்க பெஸ்ட் வில்லன். இதுல வியானா ஹர்ட் ஆகியிருக்கா.. நான் அழுதிருக்கேன். அப்பவே சொல்லி இதை முடிச்சு வெச்சிருக்கலாம்’ என்று விக்ரம் பாருவிடம் குறிப்பிட்டது இதைத்தான். ஒவ்வொரு போட்டியாளரும் ஐக்யூவில் ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருப்பார்கள். அந்தந்த மீட்டரில் அவர்களை வைத்து நிதானமாக விசாரிப்பதுதான் ஒரு ஹோஸ்டின் முறையான செயல். ஆனால் விசேவோ, அனைவருமே தன்னுடைய மீட்டரில் யோசித்து சட்டென்று புரிந்து பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அப்படி இயலாதவர்களை ‘உக்காருங்க.. உங்களுக்கு ஒண்ணும் புரியலை’ என்று அவமானப்படுத்துகிறார். Vikram ரம்யாவிற்கு இந்த பிளான் தெரியாது என்பதால்தான் வீட்டிற்குள்ளும் மறுத்து அழுகிறார். அதையே விசே வலியுறுத்தும் போதும் ‘எனக்குத் தெரியாது சார். வேணுமின்னா கேம் விட்டு போயிடறேன்’ என்கிறார். அவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. எனில் விசே இதை நிதானமாக ஹாண்டில் செய்கிறார்கள். ‘எப்படி இருக்கீங்க பேபிஸ்?’ என்று அவர் செல்லம் கொஞ்ச வேண்டியதில்லை. காட்ட வேண்டிய இடங்களில் கடுமை காட்டுவது அவசியம். ஆனால் அதையே எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டியதில்லை. ரம்யாவிற்கும் வியானாவிற்கும் உண்மையிலேயே பாருவின் பிளான் தெரியாதா? விக்ரம் மீது வியானாவிற்கு ஒரு சாப்ட் கார்னர் உண்டு. என்றாலும் இந்த விவகாரத்தில் அவர் ஆரம்பத்தில் முரண்டு பிடித்ததற்கான காரணத்தை இறுதியில் அவரே சொல்லி விட்டார். “நான் ரம்யாவையும் பாருவையும்தான் முதல்ல கேட்டிருக்கணும்.. உங்களைக் கேட்டது தப்பு. நீங்க முன்னாடி சொன்ன விஷயங்கள் என்னைப் பாதிச்சது. அதை வெச்சு இதுல உங்களை குற்றம் சுமத்திட்டேன்” என்று மன்னிப்பு கேட்டது சிறந்த காட்சி. இதைப் போலவே ‘என் கிட்ட மன்னிப்பு கேளு. ஏன்னா உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். நீ அந்த மாதிரி ஆளுன்னு கிடையாது. வேற யாராவது இருந்தா இப்படி கேட்க மாட்டேன். நீ மன்னிப்பு கேட்க மாட்டேன்னு சொல்றது ஒரு hierarchy (அதிகார படிநிலை) தெரியுது. அதை நான் உன் கிட்ட எதிர்பார்க்கலை. ஸோ.. மன்னிப்பு கேட்ரு” என்று வியானாவிடம் விக்ரம் உரிமையுடன் கேட்டது சிறந்த காட்சி. நுண்ணுணர்வுள்ளவர்களால்தான் இப்படி யோசிக்க முடியும். இதன் மூலம் இருவரின் மனவருத்தமும் உடனே அகன்று சமநிலையுள்ள நண்பர்களாக மீண்டும் மாறி விடுவார்கள். ‘வெள்ளை பக்கெட் கதையை பாரு ஆரம்பியுங்க’ என்ற விசே ‘ரொம்ப சுத்தாம சொல்லுங்க.. மத்தவங்க யாரும் நடுவுல சொதப்பாதீங்க.. ‘சாவு’ன்னு சொன்னா மட்டும் கோபம் வருது. பிக் பாஸ் சொல்றத கேட்காம சண்டை போடறீங்க.. அப்ப எங்களுக்கு சுயமரியாதை இல்லையா?’ என்று விசே பொங்கியது சரியாது. “ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு வாங்க. இல்லைன்னா சாவுங்க’ என்று எரிச்சலின் உச்சத்தில் விக்ரம் சொன்னது பிழைதான் என்றாலும் இயல்பானது. இவர்களின் ராவடி அந்த அளவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. Bigg boss housemates ‘என்னால முடியல.. நான் வெளில போறேன்’ என்று ரம்யா உணர்ச்சிவசப்பட்டு சொன்னதும் “அப்படில்லாம் யாரும் உங்களை கட்டாயப்படுத்தல. வெளியே வந்துடுங்க’ என்று விசே பதிலடி தந்ததும் பிரமோவில் காட்டிய போதே தெரிந்துவிட்டது. அப்படி நிகழப் போவதில்லை என்று. சக போட்டியாளர்கள் ‘இது நல்ல சான்ஸ். வார்த்தையை விட்றாத’ என்று உபதேசம் தந்ததும் மனம் மாறிவிட்டார் ரம்யா. ‘கைய விட்டுப் பார்த்தாரா?’ என்று பக்கெட் விவகாரத்தில் யாரோ கமெண்ட் அடித்தார்கள் என்று அதற்கும் விக்ரம் மீது பாய்ந்தார் வியானா. கடைசியில்தான் தெரி்ந்தது அந்தக் கமெண்டை அடித்தவர் அரோரா. அதிலும் விக்ரமிற்கு ஆதரவாகத்தான் அந்தக் கமெண்ட்டை அடித்திருக்கிறார். இப்படியாக ரம்யா, பாரு, அரோரா மீது காட்ட வேண்டிய கோபத்தை ஒட்டுமொத்தமாக விக்ரம் மீது வியானா காட்டியதால்தான் இத்தனை பெரிய ‘பக்கெட்’ பஞ்சாயத்து. ‘உங்க மீது வன்மத்தைக் கொட்றாங்களே?’ - விசேவிடம் கேட்ட பார்வையாளர் இது முடிந்ததும் பிரேக் விட்டு திரும்பிய விசே விடம் “சார்.. நீங்க இந்த ஷோவிற்கு ஹோஸ்ட் மட்டும்தான். ஆனா உங்க மேல வன்மத்தைக் கொட்றாங்களே..அதை எப்படிப் பார்க்கறீங்க?” என்று ஒரு பெண்மணி கேட்டார். (செட்டப் கேள்வியா?!) “நல்லாவே கொட்டட்டும். அதை நாங்க வரவேற்கிறோம். வீக்கெண்ட்ல முக்கியமான விஷயத்தை அட்ரஸ் பண்றோம். அதன் மூலம் போட்டியாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி, சில புரிதல்களை ஏற்படுத்த முயல்கிறோம். இதுக்குப் பின்னாடி பெரிய டீம் இருக்கு. விமர்சனங்களை நாங்க வரவேற்கிறோம்” என்றார் விசே. “கத்துக்கறதுக்கு சிலபஸ் இருக்கு. ஆனா புரிஞ்சுக்கறதுக்கு சிலபஸ் இல்ல. அதை கத்துக்கறவங்கதான் செய்யணும்”என்று விசே சொன்னது சிறப்பு. “விமர்சனங்களை வரவேற்கிறோம். நல்லா கொட்டுங்க” என்று சர்காஸமாக விசே சொன்னாலும், அந்த விமர்சனங்களை வைத்து விசேவோ அல்லது பிக் பாஸ் டீமோ ஏதாவது மாற்றங்கள் செய்திருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. வீக்கெண்ட் விசாரணைகள் முதல் எவிக்ஷன் வரை பார்வையாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பிற்கு மாறாகத்தான் பல விஷயங்கள் தொடர்ந்து நடக்கின்றன. எனில் அந்த விமர்சனங்களுக்கு என்ன மதிப்பு? அரோரா “நான் சொன்னாலும் கேக்க மாட்டீங்க. பிக் பாஸ் பேச்சையும் கேக்க மாட்டீங்க. அடுத்த வாரமும் இதையேதான் பண்ணப் போறீங்க?” என்று போட்டியாளர்கள் குறித்து சலித்துக் கொள்கிறார் விசே. ஆனால் பார்வையாளர்களின் ஃபீட்பேக்கை மதிக்காமல் பிக் பாஸ் டீமும் அதைத்தானே செய்கிறது?! பக்கெட் பஞ்சாயத்து முடிந்ததும், நடிப்பு டாஸ்க்கிற்கு வந்தார் விசே. முதலில் கிருமி சுபிக்ஷாவை எழுப்பி ‘நீங்க என்னதான் பண்ணீங்க?’ என்று கேட்க அவரிடம் பதில் இல்லை. போலவே எஃப்ஜே, அமித், சபரி, ஆதிரை போன்றோரும் பதில் இல்லாமல் திகைத்து நின்றார்கள். முந்தைய சீசன்களில் இந்த நடிப்பு டாஸ்க்களில் போட்டியாளர்கள் இயன்றவரை சுவாரசியம் காட்டினார்கள். ஆனால் இந்த சீசனில் உக்கிரமாக சண்டை போட்டதைத் தவிர காரெக்டர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ‘பாரு பெஸ்ட் பிளேயர்’ - விசேவின் பாராட்டு நியாயமானதா? ‘மோசத்தில் குறைந்த மோசம்’ என்று பார்த்தால் விக்ரம், பாரு, வினோத், கனி ஆகிய நால்வரும் தங்கள் காரெக்டரில் ஓரளிவற்காவது நீடிக்க முயன்றார்கள். டிஆர் மாதிரி ஆரம்பத்தில் அசத்திய வினோத், பிறகு சண்டை போடுவதில் மூழ்கி விட்டார். மற்றவர்களும் இதை அப்படியே கை விட்டு விட்டார்கள் ஆனால் ‘விக்ரமும் பாருவும் செஞ்சது எனக்குப் பிடிச்சிருந்தது’ என்றார் விசே. எம்.ஆர்.ராதா மாதிரி எதையோ முயன்றார் விக்ரம். போலவே முறுக்கை கடித்து கர்ரக் முர்ரக் என்று மெல்லுவது போல பல்லைக் கடித்து ‘என்ற.. ஒன்ற..’ என்று கோவைத் தமிழ் மாதிரி எதையோ மென்று துப்பினார் பாரு. என்னவொன்று சண்டை போடும் போதுகூட அந்த ஸ்லாங்கில் பேசியது மட்டுமே சிறப்பு. Vijay Sethupathi ஆனால் இதற்காக ‘நடிகர் டாஸ்க்கில்’ பாருவை சிறந்தவர் என்று சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. கோள்மூட்டி விடுவது, அரோராவை வெறுப்பேற்றுவது, விக்ரமை சீண்டுவது, வீட்டு தல, பிக் பாஸ் ஆகிய இருவரையும் மதிக்காமல் தனியார்வர்த்தனமாக சபையில் கத்திக் கொண்டே இருப்பது. கம்முவுடன் ஜாலியாக ரொமான்ஸ் செய்வது என்பதில்தான் பிஸியாக இருந்தார் பாரு. மைக்கை மறைத்துவிட்டு பேசுவது முதல் பாருவின் அட்ராசிட்டிகள் எதையும் அட்ரஸ் செய்யாமல் அவரைப் பாராட்டுவதின் மூலம், இந்த ஷோவை பாரு இருந்தால்தான் ஓட்ட முடியும் என்று பிக் பாஸ் டீம் நினைக்கிறதா? அதனால்தான் அவரது பிழைகள் விசாரிக்கப்படவில்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. “என்னைப் பேச வெக்காதீங்க. எப்படியாவது போங்க’ என்று சட்டென்று டாட்டா காட்டி ஷோவை முடித்துவிட்டார் விசே. பக்கெட் விவகாரத்தில் பாருவின் சூழ்ச்சி காரணமாகவே இத்தனையும் நடந்தது என்பதை ஒருவழியாக புரிந்து கொண்ட வியானா, கடைசியில் விக்ரமிடம் கட்டியணைத்து மன்னிப்பு கேட்டு ‘இந்த வலையில் தெரியாமல் மாட்டிக்கொண்டேன்’ என்றது சிறப்பான காட்சி. இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் நடந்ததா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ‘பக்கெட் துணி’ விவகாரத்தில் பிரதான குற்றவாளி யாரென்று நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.
தென்னாப்பிரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி!
தென்னாப்பிரிக்கா நாட்டில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவர் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில், தலைநகர் பிரிட்டோரியாவின் அட்டெரிட்ஜ்வில்லே பகுதியில், 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று (டிச. 6) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 25 பேர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில், 2 சிறுவர்கள் மற்றும் 16 வயது சிறுமி ஒருவரும் பலியானதாகத் […]
தூத்துக்குடி: போலி 500 ரூபாய் நோட்டை திருடி சில்லரை மாற்றியவர் கைது - விசாரணையில் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு நேற்று இரவு எட்டயபுரம், கான்சாபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரியும் கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரூ.500 கொடுத்து சில்லரை மாற்றிக்கொண்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில், அவர் கொடுத்த ரூ.500 நோட்டு போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட இருவர் அப்போது, அவர் அந்த 500 ரூபாய் நோட்டை தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு சமையல் மாஸ்டரான அசாம் மாநிலம் தேஸ்பூரைச் சேர்ந்த குமார் சர்மாவின் பர்சில் இருந்து திருடியதாக கூறியுள்ளார். இதையடுத்து, குமார் சர்மாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர், “5 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் ‘ரூ.1 லட்சம் நல்ல நோட்டுகளை கொடுத்தால், இரட்டிப்பாக ரூ.2 லட்சம் வழங்குகிறோம்’ என்ற விளம்பரத்தைப் பார்த்து, அந்த விளம்பரத்தை கொடுத்த நபர்களை தொடர்பு கொண்டேன். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மும்பை சென்று, அவர்களிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்து, ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகளை பெற்றுக்கொண்டு எட்டயபுரம் வந்ததாகவும் கூறியுள்ளார். இங்கு வந்து பார்த்தபோது, அதில் ரூ.2 ஆயிரத்திற்கு மட்டும் நான்கு 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததையும், மற்றவை குழந்தைகள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டுகளாகவும், வெள்ளை பேப்பர்களை கட்டுகளாக வைத்து ஏமாற்றியுள்ளனர். எட்டயபுரம் காவல் நிலையம் இதனால் அந்த போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் பையில் வைத்திருந்தேன். ஆனால், சரவணன் எனக்குத் தெரியாமல் அதை திருடி, கடையில் கொடுத்து சில்லரை மாற்றியுள்ளார் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரிடமிருந்த 67 போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், மும்பையை சேர்ந்த மோசடி கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஜன்னல் வழியே ரூபாய் நோட்டு கட்டுகளை வீசிய அதிகாரி - என்ன நடந்தது?
புதுச்சேரியில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா… 2026 தேர்தலில் தவெக மாஸ்டர் பிளான்!
விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில் தவெக கவனம் செலுத்தி வரும் நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
பஞ்சப்பூரில் காய்கறி சந்தை அருகில் பூங்கா எப்போது கட்டப்படும்?
பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அருகிலேயே பூங்கா எப்போது அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கந்தன் மலை: ``34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம்!'' - ஹெச்.ராஜா
ஹெச். ராஜா இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'கந்தன் மலை' என்ற படத்தின் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வீர முருகன் இயக்கயிருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. சில சர்ச்சையான விஷயங்களையும் இந்த டிரெய்லர் உள்ளடக்கி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெச். ராஜா, திருப்பரங்குன்றம் விஷயம் திருத்தி கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், 2 ஆம் தேதி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அங்கு சென்று, பலியிடுவது காலம் காலமாக அங்கு நடக்கிறது என்ற பொய் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹெச். ராஜா வரலாற்று ரீதியாக பார்த்தால் 1310 ஆம் ஆண்டு தொடங்கி 8 ஆப்கானிய சுல்தான்கள் தமிழ்நாட்டை ஆண்டு வந்தார்கள், அதில் இறுதி சுல்தான் தான் சிக்கந்தர். திருப்பரங்குன்றம்: ``ராமர் கோயில் மார்க்கெட் போயிடுச்சுனு இப்போ முருகனைத் தொட்டு பாக்றீங்க - சீமான் இவர்கள் ஆட்சிக் காலத்தில் பல இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன, பல இந்து பெண்களுக்கு கொடுமைகள் நடந்துள்ளன. இதை அனைத்தையும் மறைத்து திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருப்பதாக சொல்கிறார்கள். இது சம்பந்தமான வழக்கு 1930-ல் லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் உண்மை வெளிப்பட்டது, அதில் 34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம் என இருக்கிறது. அதனால் கந்தன் மலையைத் திரித்து சிக்கந்தர் மலையாக மக்களை ஏமாற்றும் வேலையை முறிக்கும் ஒரு சமூகப் படமாகத்தான் இப்படம் இருக்கும். என்றார். திருப்பரங்குன்றம்: இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம் - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு
அமெரிக்காவில் தீ விபத்தில் படுகாயமடைந்த இந்தியப் பெண் பலி!
அமெரிக்காவில், தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த 24 வயதான பெண் பொறியாளர் சஹாஜா ரெட்டி உடுமாலா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயில அமெரிக்கா சென்ற அவர் மேற்படிப்பை முடித்துவிட்டு, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த டிச.4 ஆம் தேதி காலை பணிமுடிந்து நியூயார்க்கின் அல்பானி பகுதியில் உள்ள வீட்டிற்குத் திரும்பிய சஹாஜா அவரது அறையில் உறங்கிக் […]
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’–அமைச்சர் சந்திரசேகர்
“வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கிறார்கள். இது நியாயமற்றதொன்றாகும். எனவே இந்திய மீனவர் அத்துமீறலைக் கட்டுப்படுத்த எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்து விசேட ‘ஒப்பரேசன்’ ஒன்று முன்னெடுக்கப்படும்’ என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் […]
வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஆளுநர், இது குறித்து விசேட தெளிவுபடுத்தலை […]
யாழில். 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவினை பெறும் பயனாளிகளின் பெயர்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25 000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலரால் , பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் […]
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்நகரப்பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் […]
மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட்ட பாஜக பூமி பூஜை
மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எம்.ஏ. ஹிமாயூன் கபீர் முர்ஜிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டுவோம் என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அவரை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். திட்டமிட்டபடி அயோத்தியில் பாபர் மசூதி இடப்பட்ட நாளில் பாபர் மசூதி கட்ட பூமி பூஜை செய்யப்படும் என்று கபீர் தெரிவித்து இருந்தார். மம்தா பானர்ஜி சொன்னபடி நேற்று முர்ஜிதாபாத்தில் உள்ள ராஜீவ் நகரில் அயோத்தியில் இருந்தது போன்ற பாபர் மசூதியை கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவும், பாபர் மசூதி கட்ட நன்கொடை கொடுக்கவும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டனர். விழாவிற்கு வந்த மத போதகர்களின் முன்னிலையில் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீஸாரோ அல்லது ரிசர்வ் போலீஸ் படையோ பூமி பூஜையை தடுக்க முன்வரவில்லை. பாபர் மசூதி கட்ட பூமி பூஜை பாபர் மசூதிக்கு பூமி பூஜை செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ. ஹிமாயூன் கபீர் மூலம் முஸ்லிம்களை மம்தா பானர்ஜி திருப்தி படுத்த முயற்சி செய்துள்ளார். ஹிமாயூன் கபீர் ஆதரவாளர்கள் பாபர் மசூதி கட்ட செங்கல் எடுத்துச் செல்கிறார்கள். அதோடு மேற்கு வங்க போலீஸார் தனக்கு துணையாக இருப்பதாக ஹிமாயூன் கபீர் தெரிவித்துள்ளார். இப்போது ஹிமாயூன் கபீரை சஸ்பெண்ட் செய்துள்ள மம்தா பானர்ஜி, இந்துக்களை ஹிமாயூன் கபீர் மிரட்டியபோது ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளது. போட்டியாக ராமர் கோயில் பாபர் மசூதிக்கு போட்டியாக முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டப்போவதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மத்திய அமைச்சர் சுகந்தா அளித்த பேட்டியில், “எங்களது கட்சி முர்ஜிதாபாத்தில் ராமர் கோயிலை கட்டுவோம்” என்றார். முர்ஜிதாபாத் பா.ஜ.க நிர்வாகி சர்கார், தனது கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ராமர் கோயில் கட்ட பூமி பூஜை செய்துள்ளார். இதில் மத்திய அமைச்சர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மேற்கு வங்க மக்கள் தங்களது இல்லங்களில் செங்கலை வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள் என்றும், அந்த செங்கலை கொண்டு ராமர் கோயில் கட்டப்படும் என்றும் சர்கார் தெரிவித்துள்ளார். அதோடு, மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் இருக்கும் ஆதினா மசூதியை மீட்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் ஆதித்நாத் கோயில் இருந்ததாக மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். 1867ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராமர் கோயிலுக்கு பூமி பூஜை அரசியல் நோக்கம் கொண்டது மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்ட திட்டமிட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து அயோத்தி பாபர் மசூதி டிரஸ்ட் செயலாளர் ஆதார் ஹுசேன் அளித்த பேட்டியில், “அரசியல் நோக்கத்தோடும், பிரிவினை நோக்கத்தோடும் பாபர் மசூதி கட்டப்படுகிறது. எம்.எல்.ஏ. கபீர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும். அயோத்தி பாபர் மசூதி சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இனி பாபர் பெயரில் செய்யும் எதுவும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார். `மே., வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன்; டிச.6-ல் அடிக்கல்' - தி.காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு
வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் அதிகம் வாங்கக் கூடாது.. புதிதாக வந்த ரூல்ஸ்!
வாடகை வீட்டில் வசிக்கும் மக்களிடம் அட்வான்ஸ் தொகையாக இந்த அளவுக்கு மேல் வாங்கக் கூடாது என்று புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குறைந்தது 23 பேர் பலியாயினர். பலியானவர்கள் அனைவரும் விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. சிலிண்டர் வெடிப்பு காரணமாக தீ […]
பிரபல பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் - சிவகாசியில் 3 பேர் கைது
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகத்தின் சான்றிதழை வழங்கி, அம்மாநில இளைஞர் ஒருவர் அரசுப் பணிக்குச் சேர்ந்துள்ளார். அந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது அது போலியானது என தெரியவந்தது. உடனடியாக இது குறித்து சான்றிதழ் அளித்த நபர் மீது மலப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் (40), வெங்கடேஷ் (24), அரவிந்த்குமார் (24) ஆகியோர் அதிகத் தொகையைப் பெற்றுக்கொண்டு போலியாகப் பல்வேறு பிரபலமான பல்கலைக்கழகங்களின் பெயர்களில் கல்விச் சான்றிதழ்களை போலியாக அச்சடித்து விநியோகம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலிச் சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று பேரையும் கேரள போலீசார் கைது செய்தனர். போலிச் சான்றிதழ் விற்பனை! மேலும், போலி சான்றிதழ் தயாரிப்பிற்குப் பயன்படுத்திய கணினி, பல்வேறு முக்கிய ஆவணங்கள், போலி முத்திரைகள், பல்கலைக்கழக லோகோக்கள், பிரிண்டர்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்துச் சிவகாசி டவுன் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், ஜெயினுலாபுதீன் ஒரு போலி சான்றிதழ் தயாரிப்பு அமைப்பின் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்று தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டாக சிவகாசியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கிராபிக் டிசைனிங் என்ற பெயரில் போலியாகப் பல்கலைக்கழகச் சான்றிதழ்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு உதவியாக வெங்கடேஷ், அரவிந்த்குமார் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். அச்சு இயந்திரம் ஒரு சான்றிதழிற்கு ₹25,000 முதல் ₹1 லட்சம் வரை வாங்கிக் கொண்டு போலி சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தரப்பில் தெரிவித்த தகவல்களின்படி, இதுவரை கணினியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தயாரித்த போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் துறைகளில் எத்தனை பேர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் வேறு மாநில பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களையும் போலியாகத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். `நீட் தேர்வு போலி சான்றிதழ் தயாரித்த மாணவி, சிக்கியது எப்படி?' - அதிர்ச்சி தகவல்கள்!
Krithi Shetty, ``I Get Stressed About Film Results, Because'' | Karthi | Vaa vaathiyaar | Interview
'Vijay-Rahul டீல்?' Stalin-க்கு போன ஷாக் ரிப்போர்ட்! | Elangovan Explains
Indigo Flight Cancellation: காரணம் என்ன? Real problem explained | Decode
Karnataka: 16 குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்த கர்நாடக வனத்துறை; என்ன நடக்கிறது?
கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் வாழும் பகுதிகளாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இந்த மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய வனப்பரப்பு விளங்கி வந்தாலும், அவற்றுக்கான வாழிடப்போதாமை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. கர்நாடக வனத்துறையால் பிடிக்கப்பட்ட புலி குட்டிகள். கர்நாடகாவின் பந்திப்பூர் , நாஹரோலே புலிகள் காப்பக சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி- மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளால் ஏற்படும் கால்நடைகளின் இழப்பைத் தாண்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று விவசாயிகள் புலி தாக்குதல்களால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து புலிகளைப் பிடிக்கும் பணியில் இறங்கிய கர்நாடக வனத்துறையினர் ஒரே மாதத்தில் 20 புலிகளுக்கு மேல் பிடித்திருக்கிறார்கள். இதில் 16 குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தெரிவித்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள், புலிகள் காப்பக எல்லை பகுதிகளில் நடமாடி வரும் புலிகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளைநிலங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடலில் 16 புலிக்குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்திருக்கிறோம். மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் படிப்படியாக வனப்பகுதிக்குள் விடுவித்து வருகிறோம். கர்நாடக வனத்துறையால் பிடிக்கப்பட்ட புலி குட்டிகள். குட்டிகளை அதன் தாயுடன் இணைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் பிடித்த 3 புலிக் குட்டிகளையும் தாயுடன் இணைத்தோம். கடைசியாக பிடிக்கப்பட்ட 3 மாத குட்டியின் தாய் புலியை தேடும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன. எங்களின் இந்த நடவடிக்கையால் எதிர்கொள்ளல்கள் குறையும் என்றனர். அதேவேளையில் , புலிக்குட்டிகளை வனத்துறையினர் முறையாகக் கையாள்வதில்லை என சுற்றுச்சூழல் அமைப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
பாக். –ஆப்கன் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! 4 பேர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையில் இருநாட்டுப் படைகளுக்கு இடையே திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சாமன் நகரில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் உடனான எல்லையில், நேற்று முன்தினம் (டிச. 5) இரவு 10.30 மணியளவில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இருநாட்டுப் படைகளுக்கு இடையில் சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மக்கள் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 4-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் […]
தொடருந்து பயணிகளுக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு
தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து சேவைகள் வழக்கமாக இயங்கும் பகுதிகளில், தொடருந்து பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க முயற்சிப்பதாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இந்தப் பிரச்சினையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதைப் பாலமாக […]
நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரிப்பு
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காணாமல் போனோரின் எண்ணிக்கை 209 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஹட்டன் – வட்டவல, மாணிக்க தோட்டம் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸில் இருந்து பார்வதி அல்ல பிரஜின் வெளியேற்றம்: கனி அக்கா சேஃப்
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வி.ஜே. பார்வதி வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று மக்கள் செல்வனின் நண்பர் பிரஜினை வெளியேற்றிவிட்டார்கள்.
சிறுவயதில் கொலை மிரட்டல் – 20 ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்த சிறுமி பார்வைக் குறைவுடன் மீட்பு
பஸ்தார்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் பகாவந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் லிசா. இவர் கடந்த 2000-ம் ஆண்டில் தனது 6 வயதில் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் லிசாவை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அவரது பேச்சை கேட்டு மிகவும் பயந்துபோன சிறுமி வீட்டைவிட்டு வெளியேறவில்லை. இந்நிலையில் அவரது தாயும் இறந்துவிட்டார். அந்த சிறுமியை பார்த்துக் கொள்ள யாரும் முன்வரவில்லை. இதனால் அவரது தந்தை லிசாவை அவர்களது மண் குடிசை […]
நாய்கள் பேய்களைப் பார்க்கிறதா? நள்ளிரவில் அவை குறைப்பதன் மர்மம் என்ன?
வீட்டில் வளர்க்கும் நாய்கள் சில நேரங்களில் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைப்பதைப் பார்த்திருப்போம். நாய்களுக்குப் பேய்கள் தெரியும், அவை அதனை உணரும் என்று காலம் காலமாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் நாய்களால் ஆவிகளைப் பார்க்க முடியுமா? இதுகுறித்து ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். லண்டன் ரிப்பன் கல்லூரியின் பேராசிரியர் மார்க் ஈடன் இதுகுறித்து கூறுகையில், சமீபத்தில் தந்தையை இழந்த ஒருவர், தன் நாய் தொடர்ந்து படிக்கட்டுகளைப் பார்த்துக் குறைப்பதாகக் கூறினார். அவர் ஏற்கெனவே பேய்களின்மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், தன் நாய் தன் தந்தையின் ஆவியை உணர்வதாக அவர் நம்புகிறார் என்று கூறியிருக்கிறார். Dog அறிவியல் சொல்வதென்ன? விஞ்ஞானிகள் நாய்கள் பேயைப் பார்க்கவில்லை, மனிதர்களால் உணர முடியாத சத்தங்களையும், வாசனைகளையும் அவை உணர்கின்றன என்று கூறுகின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் பிரெஞ்ச் கூறுகையில் நாய்களுக்கு மனிதர்களைவிட சிறந்த நுகரும் திறனும், கேட்கும் திறனும் உண்டு. எனவே மனிதர்களால் கண்டறிய முடியாத இயற்கையான அசைவுகளைக் கண்டு அவை எதிர்வினையாற்றுகின்றனவே தவிர, இது அமானுஷ்யம் அல்ல என்று கூறியிருக்கிறார். மனிதர்களுக்கு மூக்கில் சுமார் 5 மில்லியன் நுகர்வு செல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், நாய்களுக்கு சுமார் 220 மில்லியன் நுகர்வு செல்கள் உள்ளன. இது மனிதனை விடப் பல மடங்கு அதிகமாம். 1950-களில் டியூக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், மிகக் குறைந்த அளவு பூண்டு எண்ணெயைக்கூட நாய்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்திய ஆய்வுகளில், புற்றுநோய் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை வாசனை மூலமே நாய்கள் கண்டுபிடிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏன், மனிதர்களின் மன அழுத்தத்தைக்கூட நாய்களால் முகர்ந்து உணர முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது, நாய்கள் ஒரு வெற்று இடத்தைப் பார்த்து குரைத்தால், அங்கே பேய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாத ஏதோ ஒரு வாசனையோ அல்லது சத்தமோ அங்கே இருக்கிறது என்பதே அறிவியலில் பதிலாக உள்ளது.
Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?
Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளை தினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று சொல்லப்டுவது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி சளி, காய்ச்சல் பிரச்னை எதனால் வருகிறது என்பது மிகவும் முக்கியம். சளி, காய்ச்சல் என்பது வைட்டமின் சி குறைபாடுகாரணமாக வருவது கிடையாது. சளி, காய்ச்சல் வருவதற்கான பல காரணங்களில் மிக முக்கியமான காரணம், தொற்று (Infection). தொற்று பாதிக்கிறது என்றால், நம் உடலின்நோய் எதிர்ப்புச் சக்தி (Immune Level) சற்று குறைவாக இருப்பதாக அர்த்தம். நம் உடல் 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' (Oxidative Stress) நிலையில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு குறையும்போது ஏற்படும் சமநிலையற்ற நிலை. இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை சமன் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ உபயோகப்படுத்துவதுதான் வைட்டமின் சி. அதனால்தான், காயம் ஆறும் காலத்தில் உள்ளவர்களுக்கோ (Healing Time), புகை பிடிப்பவர்களுக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு, அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்குப் புண்கள் ஏதாவது வந்தாலோ வைட்டமின் சி சப்ளிமென்ட்டை (Supplement) மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறோம். இதன் நோக்கம், அவர்களுடைய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து, அவர்களுடைய நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். நாம் ஒருநாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கு மேல் வைட்டமின் சி எடுத்தால், அதுவே நமக்கு பிரச்னைகளை உண்டாக்கும். ஒரு நாளைக்கு ஒருவர்2,000 மில்லிகிராமுக்குள்தான் வைட்டமின் சி எடுக்க வேண்டும். அதற்கும் மேல் போனால், அந்த வைட்டமின் சி-யே அவர்களுக்குப் பிரச்னைகளை உண்டுபண்ணும். அதனால்தான் வைட்டமின் சி இருக்கக்கூடிய உணவுகளைப் (முக்கியமாக சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், கீரை, புரோக்கோலி) பரிந்துரைக்கிறோம். அது அவர்களுக்கு வைட்டமின் சியின் பலனை அளிக்கும். வைட்டமின் சி மட்டுமல்ல, எந்த சப்ளிமென்ட்டையும் மருத்துவரின் பரிந்துரையின்றி, எடுக்காமல் இருப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கோபம், அழுகை, தனிமை, பயம்... மாறும் மனநிலையை சரிசெய்யுமா பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்?

25 C