அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஏன்? - 6 காரணங்கள் | Quick Points
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த சரிவிற்கு சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை: 1. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பிற்கு பிறகு, பல நாடுகள் அமெரிக்கா உடன் ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. ஆனால், இன்னும் இந்தியா பேச்சுவார்த்தையிலேயே இருந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அவ்வப்போது பாசிட்டிவ் சிக்னல் வந்தாலும், இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. இந்திய ரூபாய் வீழ்ச்சி `இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன் 2. வரி போன்ற காரணங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து முதலீடுகளை எடுத்து செல்கின்றனர். இதனால், இந்தியாவிற்குள் டாலர்கள் வரத்து குறைகிறது. இன்னொரு பக்கம், இந்த முதலீட்டாளர்கள் முதலீடுகளை டாலராக மாற்றி தான் வெளியே எடுத்துச் செல்கிறார்கள். இதனால், இங்கு டாலருக்கான டிமாண்ட் அதிகரிக்கின்றன. விளைவாக, டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகின்றன. 3. மேலே சொன்ன விஷயத்தில், இன்னொன்றும் கவனிக்க வேண்டும். அது இந்தியாவின் ஜி.டி.பி தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கிறது. ஆனால், இதை தாண்டியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றி வருகின்றனர். 4. இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கி பெரிதாக தலையிடவில்லை. 5. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது. இருந்தும், இந்தியா தொடர்ந்து தங்கம், வெள்ளியை இறக்குமதி செய்து வருகிறது. இதனாலும், டாலர் இந்தியாவில் இருந்து வெளியே செல்கிறது. 6. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போதும் டாலர்கள் அதிகம் வெளியே செல்கின்றன. இதுவும் டாலரின் டிமாண்டை அதிகரிக்கின்றது. Gold Rate: ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,320 சரிந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை என்ன?

25 C