SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965

இந்திய சுதந்திரம் 18 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாளில் 1965 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரை முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் குறித்தே இருந்தது.

தி ஹிந்து 23 Sep 2023 7:10 pm

செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965

இந்திய சுதந்திரம் 18 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாளில் 1965 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரை முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் குறித்தே இருந்தது.

தி ஹிந்து 23 Sep 2023 6:37 pm

செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965

இந்திய சுதந்திரம் 18 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாளில் 1965 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரை முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் குறித்தே இருந்தது.

தி ஹிந்து 23 Sep 2023 5:36 pm

செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965

இந்திய சுதந்திரம் 18 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாளில் 1965 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரை முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் குறித்தே இருந்தது.

தி ஹிந்து 23 Sep 2023 4:36 pm

செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965

இந்திய சுதந்திரம் 18 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாளில் 1965 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரை முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் குறித்தே இருந்தது.

தி ஹிந்து 23 Sep 2023 3:36 pm

செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965

இந்திய சுதந்திரம் 18 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாளில் 1965 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரை முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் குறித்தே இருந்தது.

தி ஹிந்து 23 Sep 2023 2:36 pm

குறைகள், நோய்களை நீக்கும் யாகம்

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர்கள் சிலர் தங்கள் பகுதியில் அங்காளம்மனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்ட விரும்பி, மேல்மலையனூரிலேயே அம்மன் வடிவத்தை பூஜை செய்து உருவாக்கிக் கொண்டு சென்றனர். வழியில் பவானி நதிக்கரையில் கோயில் கொள்ள நினைத்த அம்மன் நடுவழியில் மேலே நகராமல் குடிகொண்டாள். அப்போது அருள் வந்த பெண், \இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை செழிக்கத் திருவுள்ளம் கொண்டுள்ளோம். வணிகர்கள் உங்கள் குடும்பத்துடன் இவ்விடம் குடியேறி பூஜை, புனஸ்காரம் செய்துவருவதுடன் வனப் பகுதிகளைச் சீரமைத்து, விளைச்சல் பெருக்கி சமூகத்துக்கு உதவுங்கள்'' எனக் கூறி சாந்தம் அடைந்தாள். அது முதல் சக்தி குடிகொண்டதால் சத்திமங்கலமான சத்தியமங்கலத்தில் அம்மன் சிலைக்கு முறைப்படி வழிபாடு நடத்தி, கோயில் அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தக் கோயில் மக்களின் அபிமானம் பெற்றதாக விளங்குகிறது. பக்தர்கள் நலன் வேண்டியும், உலகம் சுபிட்சம் பெற்று வளரவும், ஆண்டுதோறும் புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. சாகத வழிபாட்டில் சண்டிதேவி மகா சக்தி வாய்ந்த தெய்வம். காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரும் இணைந்த வடிவமே சண்டிதேவியாகும். சக்தி வழிபாட்டாளர்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்கக் கூடிய ஒரு தெய்வம். தேவி உலகில் உள்ள தன்னுடைய குழந்தைகளைக் காத்து, அவர்களுக்குத் தீய சக்திகளால் வரும் தீமையை நீக்கி நன்மை தருபவள். அசுரர்களைஅழிக்க, பல்வேறு வடிவங்களை எடுத்து பக்தர்களைக் காத்தவள் சண்டி. இவளுக்கு உரித்தான சமஸ்டி மந்திரங்கள் சப்தசதி மாலா மந்திரம்'என்று அழைக்கப்படுகின்றன. உலகின் ஒரேவழி நான். என்னைத் தவிர வேறு இல்லை' என ஒரே தெய்வமாக பராசக்தியை உயர்த்திக் கூறுகிறது தேவிமகாத்மியம். மைசூரு மன்னர்கள் ஹைதர்அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆச்சாரியர்களைக் கொண்டு சண்டி யாகம் நடத்தி பயன் பெற்றனர் என குறிப்பிடப்படுகிறது. தேவியின் சக்தியை விளக்கும் சப்தசதியை 10 முறை பாராயணம் செய்தவுடன் சப்த சதியால் ஒருமுறை ஓதி யாகம் செய்வது சண்டி ஹோமம் ஆகும். இதனை தசாம்சபக்ஷஹோமம்' என்றும் சதசண்டிஹோமம்' என்றும்அழைப்பர். சப்தசதியை 100 முறை பாராயணம்செய்து 10 பேர் 10 ஹோமம் செய்வது சதசண்டி ஹோமம் ஆகும். சண்டி யாகம் என்பது சாதாரண யாகம் இல்லை. இதுஅனுபவம் வாய்ந்த 9 வேத விற்பன்னர்களைக் கொண்டு செய்யப்படுகின்ற, மார்கண்டேயரால் சொல்லப்பட்ட 700 மந்திரங்களால் இந்த யாகம் நடைபெறும். 13 அத்தியாயங்களைக் கொண்ட மந்திரங்களைத் தொடர்ந்து சொல்ல வேண்டும். 13}ஆவதுஅத்தியாயத்தில் வழிபாடு நிறைவு பெறும். ஒவ்வொரு அத்தியாயமும் சண்டிகை' எனப்படும். காளி, லட்சுமி, சங்கரி, ஜெயதுர்கை, சரஸ்வதி, பத்மாவதி, ராஜமாதங்கி, பவானி, அர்தாம்பிகை, காமேஸ்வரி, புவனேஸ்வரி, அக்னி துர்கை, சிவதாரிகை ஆகிய 13 சக்திகளும் இணைந்த சக்தி மகா சண்டிகா பரமேஸ்வரி'யாகும். உலக நன்மை, சத்ரு பயம் நீக்கும், தைரியம் உண்டாகும், லட்சுமி தேவியின்அனுகிரகம் கிட்டும், குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம், திருமணம் கைகூடல், மழலைப் பாக்கியம், தொழில் முன்னேற்றம், அனைத்துக் காரியங்களும் வெற்றி அடையும்..'' என்பது ஐதீகம். யாகம் நடக்கும்பொழுது மந்திரங்களைக் கேட்டாலே அனைத்துக் குறைகள், நோய்கள் நீங்கி நிவர்த்தியாகி விடும் என்றும் சொல்லப்படுகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் இந்த ஆண்டு சண்டி யாகம் செப். 22 (வெள்ளி) மாலை தொடங்குகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்கிறது. தொடர்புக்கு:98422 92044, 99441 00700.

தினமணி 22 Sep 2023 5:56 pm

ஸ்ரீஹரி நாம சங்கீர்த்தனம்

ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தில் நாம சங்கீர்த்தனம்' என்பது முக்கியமான, தவிர்க்க முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் குக்கிராமங்கள்தோறும் பெருமாள் கோயில்களில் உற்சவமும், நாம சங்கீர்த்தனமும் நடைபெற்றுவருவது கண்கூடு. ஸ்ரீ ராம பிரான் என்றாலே நாம சங்கீர்த்தனம் (பஜன்)தான். நம்முடன் வாழ்ந்து மறைந்த எண்ணற்ற தாஸ ஸ்ரேஷ்டர்கள் ஸ்ரீ ராமபிரான் குறித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் எண்ணிலடங்கா கீர்த்தனங்களை அனுபவித்துப் பாடி, ஆடி ஆனந்தித்திருக்கிறார்கள். பத்ராசலம் ஸ்ரீ ராமதாஸர் ராமா தய சூடவே பத்ராசல தாமா நனு ப்ரோவவே', ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' எனவும், தூமு ஸ்ரீ நரசிம்ம தாஸர் நமோஸ்துதே ரகு நாயகா' எனவும், அல்லூரி ஸ்ரீ வேங்கடாத்ரி ஸ்வாமி ஷரணு ஷரணு ஷரணு ஸ்ரீராம ராம ராமச்சந்திர' எனவும், ஸ்ரீ தியாகய்யர் என்னுடு ச்சுதுனு யெனகுல திலகா', நிதி சால சுகமா ராமுடு ஸந்நிதி சால சுகமா' என்றும், ஸ்ரீ பைடிகண்டம் ஸ்ரீ ஆதிநாராயண தாஸர் ஆனந்த ராமுனி நேனு மனசு ஆனந்தமுக நீவு ச்சூடு' என்றும், ஸ்ரீ வேங்கடவரத தாஸர் ராரா கோதண்டராமா நனு ப்ரோவவேரா ஸ்ரீ பரந்தாமா' எனவும், தேனுவகொண்ட ஸ்ரீ வேங்கடரங்க தாஸர் சரணாகதுடனுரா சரஜிபந்தன ராமச்சந்த்ர ராரா' எனவும், ஸ்ரீ ராகவ ராமாநுஜதாஸர் தசரத ராமா தாஸலனு காஸிபெட்டகு ரா ராமா' எனவும், ஆற்காடு ஸ்ரீ பால ராமாநுஜதாஸர் பக்துனி கருணிஞ்சு ரகு ராமா ஓ பரந்தாமா' எனவும், கொத்தயிண்டி ஸ்ரீ துளசிதாஸர் ராமா ஸ்ரீ ரகுகுல ஜலநிதி சந்த்ரா நீவு ராரா' எனவும், ஸ்ரீ வேங்கடவிட்டல தாஸர் சரணு ஜொச்சிதி நன்னு கருணிஞ்சு ராமா' எனவும், ஸ்ரீ பராங்குச தாஸர் நின்னே நம்மிதி ராமையா நேனு ரக்ஷிம்பகுன்ன வேமையா' எனவும், ஸ்ரீ அன்னமையா ஜெய ஜெய ராமா சமர விஜய ராமா' எனவும் பாடி ராமநாம மகிமையைப் பரப்பியிருக்கிறார்கள். தவிர, ஸ்ரீ ராமபிரானின் புதல்வர்களான லவனும் குசனும் பாரெங்கும் ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே' என ராம கதையைப் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. கலிஸந்தரண உபநிஷதத்தில் (கலியாகிய சம்ஸரக் கடலை கடக்கச் செய்யும் உபநிஷத்) ஸ்ரீ நாரத முனி படைப்புக் கடவுள் பிரம்மாவைப் பார்த்து, கலிகாலத்தில் அனைத்துப் புண்ணியங்களையும் தரவல்லதாயும், அனைத்து வேதங்களின் ரகஸ்ய சாரமாயும், கலியினால் பீடிக்கப்பட்ட சம்ஸரக் கடலை நீந்திக் கடப்பதில் பேருதவியாகவும் உள்ள மந்திர உபதேசம் எது?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த நான்முகக் கடவுள், ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்ற ஷோடச நாமத்தை உபதேசம் செய்தார். இதற்கு ஈடு இணை எந்த வேதத்திலும் காணப்படவில்லை' என்றார். இதை ஜபம் செய்வதால் ஜீவர்கள் பதினாறு கலைகள் விளங்கப் பெற்று, ஜீவனைச் சூழ்ந்துள்ள மாயையாகிய திரையையும் விலக்கிக் கொள்ள முடியும்' என்றார். இந்த மந்திரமே கோடி சூர்ய பிரகாசமாக பிரபஞ்சத்தில் ஒளி வீசுகிறது' என்றார். இதைப் பாராயணம் செய்ய என்ன விதிமுறை?' என்று நாரதர் கேட்க, இது சுத்தத்துடனோ, சுத்தமில்லாமலோ எந்த நிலையிலும் சொல்லத்தக்கது. எந்த விதிமுறையும் இல்லாதது. இதை ஜபம் செய்வதால் பகவானின் தரிசனமும், நெருக்கமும், பகவானின் வடிவும், அவரது திருவடிகளும் நமக்குக் கிடைக்கும்' என்று பிரம்மா பதிலளித்தார். மேலும், அவர் இதை மூன்றரை கோடி முறை ஜபம் செய்வதால் பிரம்மஹத்தி தோஷமும் தீர்கிறது என்றால் என்னே இதன் மகிமை. பித்ருக்கள், தேவர்கள், மனிதர்களுக்கு நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த அபசாரங்கள் அனைத்தும் விலகும். அனைத்து தர்மங்களையும் கைவிட்ட பாபமும் இந்த நாம ஜபத்தால் நீங்குகிறது' என்றார். இந்த கலியுகத்தில் நம்மை பக்தி வழியில் செலுத்தவும், சம்ஸர சாகரத்தைக் கடந்திடச் செய்யவும், வீடு பேற்றை தருவதும் இந்த ஷோடச நாம ஜபம்' என்பது முற்றிலும் சத்தியமான வாக்கு என்கிறது உபநிஷத வாக்கியம்.

தினமணி 22 Sep 2023 5:53 pm

பொதுக் குடிமைச் சட்டம் தேவையா? - எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி

ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமைநெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது.அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

தி ஹிந்து 22 Sep 2023 2:14 pm

பொதுக் குடிமைச் சட்டம் தேவையா? - எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி

ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமைநெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது.அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

தி ஹிந்து 22 Sep 2023 1:36 pm

பொதுக் குடிமைச் சட்டம் தேவையா? - எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி

ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமைநெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது.அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

தி ஹிந்து 22 Sep 2023 12:36 pm

பொதுக் குடிமைச் சட்டம் தேவையா? - எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி

ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமைநெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது.அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

தி ஹிந்து 22 Sep 2023 11:36 am

பொதுக் குடிமைச் சட்டம் தேவையா? - எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி

ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமைநெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது.அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

தி ஹிந்து 22 Sep 2023 10:36 am

பொதுக் குடிமைச் சட்டம் தேவையா? - எழுத்தாளர் ஜெயமோகன் கேள்வி

ஒரு சமூகத்திற்குள் தனிக் குடிமைநெறிகள் கொண்ட பல துணைச்சமூகங்கள் இருக்கும் ஓர் அமைப்பே முற்போக்கானது. எதிர்காலத்திற்கு உகந்தது.அதாவது பொது குடிமைச்சட்டத்துக்கு நேர் எதிரான ஒன்றையே நாம் கடைப்பிடிக்கவேண்டும். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

தி ஹிந்து 22 Sep 2023 9:36 am

என்னவாகிக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை?

எந்த ஒரு சமூகமும் கால ஓட்டத்தில், நாகரிக வளர்ச்சிக்கு ஏற்பப் புதிய மாற்றங்களை எதிர்கொள்கிறது. அறிவை மையமாகக் கொண்டு, ஆக்கபூர்வ வளர்ச்சியை முன்னெடுக்கும் எந்த ஒரு சமூகமும் அடுத்துவரும் தலைமுறையை விமர்சிக்காமல் இருப்பது சாத்தியமில்லை.

தி ஹிந்து 22 Sep 2023 8:36 am

தடையும் விடையும்! அரிசி ஏற்றுமதி குறித்த தலையங்கம்

மேற்கு வல்லரசுகள் மீது அதிருப்தி அடைந்த வளா்ச்சி அடையும் நாடுகளை கடனுதவியாலும், பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களில் பங்கெடுக்க வைத்தும் தன் பக்கம் ஈா்த்திருக்கிறது சீனா. சீனாவிலிருந்து தனது அணுகுமுறையில் வித்தியாசப்படும் இந்தியாவை அந்த நாடுகள் இப்போது நம்பிக்கையுடன் பாா்க்கத் தொடங்கியிருக்கின்றன. தெற்குலக நாடுகளுக்குத் தலைமை தாங்குவது என்பது எளிதொன்றுமல்ல. அந்த நாடுகளின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் பொருளாதார வலிமையும், உற்பத்தித் திறனும் இல்லாதவரை அது வெறும் பகல் கனவாகத்தான் இருக்கும். உலகமயச் சூழலில் சா்வதேச அரசியல் நகா்வுகளை மேற்கொள்ள விழையும் இந்தியா, பல தா்மசங்கடங்களை எதிா்கொள்கிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, தற்போதைய அரிசி ஏற்றுமதி குறித்த அரசின் முடிவு. உள்நாட்டு சந்தையில் அரிசி விலை அதிகரித்ததால், ஜூலை மாதமே பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்பு, அனுமதியில்லாமல் குருணை அரிசி ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் மெட்ரிக் டன்னுக்கு 1,200 டாலருக்கும் குறைவான விலையில் ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசிக்கு மத்திய அரசு தடை விதித்தது. சாதாரண அரிசியை பாசுமதி அரிசி என்கிற பெயரில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுப்பதுதான் அந்த முடிவுக்குக் காரணம். இந்தப் பின்னணியில் இப்போது அக்டோபா் 15-ஆம் தேதி வரை புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அரிசி ஏற்றுமதியின் மீது இந்தியா ஒன்றன்பின் ஒன்றாக விதிக்கும் கட்டுப்பாடுகள் சா்வதேச அரங்கில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. உலக அரிசி சந்தையில் மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் (45%) நாடாக இந்தியா இருந்து வருகிறது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் - மே 2023-இல் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 21.1% அதிகம். மே மாதம் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட 10.86% அதிகம். வெள்ளை அரிசியின் மீது ஏற்றுமதி வரியும், குருணை ஏற்றுமதிக்குத் தடை இருக்கும் நிலையிலும்கூட பாசுமதி அல்லாத அரிசி ரகங்களின் ஏற்றுமதி 7.5% அதிகரித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக உலகின் மிக அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா, தனது வேளாண் உற்பத்தியில் 19% அளவை ஏற்றுமதி செய்கிறது. உலகிலுள்ள வளா்ந்து வரும் நாடுகள் பலவும் தங்களது அரிசி தானியத் தேவைக்கு இந்தியாவைத்தான் நம்பியிருக்கின்றன. சா்வதேச விலையைவிட இந்திய அரிசியின் விலை குறைவு என்பது அதற்குக் காரணமாக இருக்கக் கூடும். இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில், ரூ. 51,089 கோடி மதிப்புள்ள 1.77 கோடி டன் பாசுமதி அல்லாத அரிசி ரகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. 2022 - 23 -இல் ரூ.38,542 கோடி மதிப்புள்ள 45 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அரிசி உற்பத்தியில், குறிப்பாக பாசுமதி ரக அரிசி உற்பத்தியில் பஞ்சாபும், ஹரியாணாவும் பெரும் பங்கு வகிக்கின்றன. நடப்பு ஆண்டில் ஜூலை - ஆகஸ்ட் மாதம், பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுமாா் 23 மாவட்டங்களில் நெல் சாகுபடிப் பரப்பு சற்று குறைவாகவும் இருந்தது. அப்படியிருந்தும் முந்தைய சாதனைகளையெல்லாம் முறியடித்து இதுவரை இல்லாத அளவிலான அரிசி உற்பத்தியை பஞ்சாப் மாநிலம் சாதித்திருக்கிறது. நடப்பு காரீஃப் பருவத்தில் 5.87 லட்சம் ஹெக்டோ் பாசுமதி ரகம் உள்பட 31.93 லட்சம் ஹெக்டோ் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. சா்வதேச அரிசி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், பஞ்சாப் விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டக் காத்திருக்கிறாா்கள். சா்வதேச சந்தையில் இந்த ஆண்டு பாசுமதி அரிசியின் விலை உச்சத்தைத் தொடும் நிலையில், உள்நாட்டு விலை குவிண்டாலுக்கு ரூ.4,500 அளவுக்கு உயரக்கூடும் என்பது எதிா்பாா்ப்பு. அதனால்தான் பஞ்சாப் விவசாயிகள் வழக்கமான பயிா்களை நாடாமல், ஏற்றுமதிக்கு உகந்த பாசுமதியைப் பயிரிட முனைந்திருக்கிறாா்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய அரசு உள்நாட்டு விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்டிருக்கிறது. பஞ்சாப் விவசாயிகள் மட்டுமல்ல, தங்களது உணவுத் தேவைக்கு இந்தியாவை நம்பியிருக்கும் பல நாடுகளும் அரசின் முடிவால் ஏமாற்றத்தை எதிா்கொள்ளக் கூடும். இந்தியாவுடன் நல்லுறவைப் பேணும் கினி, சிங்கப்பூா், மோரீஷஸ், பூடான் உள்ளிட்ட நாடுகள், அவற்றுக்கான ஏற்றுமதிக்கு தளா்வுகளை வழங்கக் கோரி இருக்கின்றன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அரிசி ஏற்றுமதி செய்யும் தாய்லாந்தும், வியத்நாமும் தங்களுக்கு சாதகமாக இந்த நிலைமையைப் பயன்படுத்த முற்பட்டாலும், எல்-நினோ காரணமாக அவா்களது உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதால் விரைவிலேயே இந்தியாவின் முடிவை அவா்களும் மேற்கொள்ளக் கூடும். இந்தியாவின் முடிவால் சா்வதேச அரிசி விலை அதிகரித்து, பல நாடுகள் உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிா்கொள்ள நேரிடும். அதனால் இந்தியாவுக்கு சா்வதேச அரங்கில் அவப்பெயா் ஏற்படக் கூடும். கட்டுப்பாடு விதிப்பது, தடை விதிப்பது ஆகியவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க சா்வதேச விலையில் அரசே உற்பத்தியை வாங்கிக்கொண்டு, அதைக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்பதன் மூலம் உள்நாட்டு விலையை கட்டுக்குள் வைத்திருப்பது என்பதுதான், தோ்தலை எதிா்கொள்ளும் அரசு எடுக்க வேண்டிய சாதுரியமான முடிவு. அதனால் அரசுக்கு இழப்பு நேரிடலாம்; ஆனால், எதிா்ப்பு வலுக்காது!

தினமணி 22 Sep 2023 5:51 am

செங்கோட்டை முழக்கங்கள் 18 - ஒழுக்கமான இளைஞர்களே நமது வலிமை | 1964

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய உரையில் நேரு அவ்வப்போது மகாத்மா காந்தியைப் பற்றி குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். இதே போல சாஸ்திரி தன்னுடைய உரையில் நேரு பற்றிய நினைவுகளை ஆழமாகப் பதிவு செய்கிறார்.

தி ஹிந்து 21 Sep 2023 8:35 pm

செங்கோட்டை முழக்கங்கள் 18 - ஒழுக்கமான இளைஞர்களே நமது வலிமை | 1964

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய உரையில் நேரு அவ்வப்போது மகாத்மா காந்தியைப் பற்றி குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். இதே போல சாஸ்திரி தன்னுடைய உரையில் நேரு பற்றிய நினைவுகளை ஆழமாகப் பதிவு செய்கிறார்.

தி ஹிந்து 21 Sep 2023 8:35 pm

செங்கோட்டை முழக்கங்கள் 18 - ஒழுக்கமான இளைஞர்களே நமது வலிமை | 1964

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய உரையில் நேரு அவ்வப்போது மகாத்மா காந்தியைப் பற்றி குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். இதே போல சாஸ்திரி தன்னுடைய உரையில் நேரு பற்றிய நினைவுகளை ஆழமாகப் பதிவு செய்கிறார்.

தி ஹிந்து 21 Sep 2023 7:36 pm

செங்கோட்டை முழக்கங்கள் 18 - ஒழுக்கமான இளைஞர்களே நமது வலிமை | 1964

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய உரையில் நேரு அவ்வப்போது மகாத்மா காந்தியைப் பற்றி குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். இதே போல சாஸ்திரி தன்னுடைய உரையில் நேரு பற்றிய நினைவுகளை ஆழமாகப் பதிவு செய்கிறார்.

தி ஹிந்து 21 Sep 2023 6:36 pm

செங்கோட்டை முழக்கங்கள் 18 - ஒழுக்கமான இளைஞர்களே நமது வலிமை | 1964

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய உரையில் நேரு அவ்வப்போது மகாத்மா காந்தியைப் பற்றி குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். இதே போல சாஸ்திரி தன்னுடைய உரையில் நேரு பற்றிய நினைவுகளை ஆழமாகப் பதிவு செய்கிறார்.

தி ஹிந்து 21 Sep 2023 5:37 pm

செங்கோட்டை முழக்கங்கள் 18 - ஒழுக்கமான இளைஞர்களே நமது வலிமை | 1964

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய உரையில் நேரு அவ்வப்போது மகாத்மா காந்தியைப் பற்றி குறிப்பிட்ட வண்ணம் இருந்தார். இதே போல சாஸ்திரி தன்னுடைய உரையில் நேரு பற்றிய நினைவுகளை ஆழமாகப் பதிவு செய்கிறார்.

தி ஹிந்து 21 Sep 2023 4:36 pm

மாற்றம் ஏற்றம் தரட்டும்!

ஜனநாயக இந்தியாவின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்துகொண்டிருக்கும் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடா். ஜனநாயக இந்தியாவின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்துகொண்டிருக்கும் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடா். அதற்கான முக்கியத்துவத்தை உணா்த்தவும், உறுதிப்படுத்தவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்தி மக்களவை நிறைவேற்றியிருக்கிறது.புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாறுவதற்கு முன்னால், ஐந்து நாள் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்டது. அதில் உரையாற்றும்போது பிரதமா் நரேந்திர மோடி வட்ட வடிவிலான அந்த கட்டடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டாா். இங்குதான் காலனிய ஆட்சியாளா்களிடமிருந்து சுதந்திர இந்தியாவுக்கு ஆட்சி மாற்றம் நடந்தது என்பதையும், இந்தியக் குடியரசின் அரசியல் சாசனம் உறுப்பினா்களால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பதையும் அவா் நினைவுகூா்ந்தாா்.பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தில்தான் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியும், நாட்டுப் பண்ணும் அங்கீகாரம் பெற்றன. இந்தியா, குடியரசாகத் தன்னை அறிவித்துக்கொண்டது முதல் (1952) 41 உலக நாடுகளின் தலைவா்கள் விருந்தினா்களாக அழைக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருக்கிறாா்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவா்களாக இருந்தவா்கள் 86 முறை நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறாா்கள். நாடாளுமன்றம் கடந்த 70 ஆண்டுகளில் 4,000-க்கும் அதிகமான மசோதாக்களை நிறைவேற்றி சட்டமாக்கி இருக்கிறது.நவீன இந்தியாவின் உதயத்துக்கும் வளா்ச்சிக்கும் கடந்த ஒரு நூற்றாண்டாக பழைய நாடாளுமன்றக் கட்டடம் சாட்சியாக இருந்திருக்கிறது. அதில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உரைகளும், விவாதங்களும், புரட்சிகரமான பல தீா்மானங்களும் இடம் பெற்றிருக்கின்றன.1911 டிசம்பா் 12-ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாறியபோது, வட்ட வடிவ நாடாளுமன்றமும், அதைச் சுற்றியுள்ள கட்டடங்களும் லுட்யூன்ஸ், ஹொ்பட் பேக்கா் ஆகியோரால் கட்டப்பட்டன. 1927 ஜனவரியில் செயல்படத் தொடங்கிய அந்தக் கட்டடத்தில், இந்தியா விடுதலை பெற்ற 1947 வரை பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் ‘லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்’ செயல்பட்டது. அதன் பிறகு இந்தியாவின் அரசியல் சாசன சபை அதில்தான் கூடியது. இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த 1950 ஜனவரி 26 முதல் அது நாடாளுமன்றமாக மாறியது.1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் இந்தியாவின் முதல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு நிகழ்த்திய உரையுடன் சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாறு தொடங்குகிறது. ‘நீண்டகாலமாக விதியுடன் நாம் நடத்திய போராட்டத்தின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறும் தருணம் கூடி வந்திருக்கிறது. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நடுநிசி நேரத்தில் இந்தியா விடுதலைக்கும் வாழ்வுக்கும் உயிா்த்தெழுகிறது’ என்று தொடங்கும் பண்டித ஜவாஹா்லால் நேரு தனது கைப்பட எழுதி ஆற்றிய உரை இப்போதும் பாதுகாக்கப்படுகிறது.1949 நவம்பா் 25-ஆம் தேதி அரசியல் சாசன சபையில் அன்றைய பண்டித நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்து, அரசியல் சாசனத்தை உருவாக்கிய பாபா சாஹேப் அம்பேத்கரின் ‘அராஜகத்தின் இலக்கணம்’ (கிராமா் ஆஃப் அனாா்கி) உரையும் சரித்திரப் புகழ் பெற்றது. ரத்தம் சிந்தும் புரட்சிகளை தனது உரையில் நிராகரித்தாா் அம்பேத்கா். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உள்ள குறிக்கோள்களை அடைவதற்கு அரசியல் சட்ட ரீதியிலான வழிகள் இருக்கும்போது, வன்முறைகளைப் பின்பற்றுவது அராஜக வழிமுறை என்றும், அவற்றைக் கைவிட வேண்டும் என்றும் தனது உரையில் பாபா சாஹேப் குறிப்பிட்டிருந்தாா்.நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆற்றிய உரை ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தது. 13 நாள் பிரதமராக இருந்து 1996 ஜூன் 1-ஆம் தேதி பதவி விலகுவதற்கு முன்னால், வாஜ்பாய் நிகழ்த்திய உரை, நாடாளுமன்ற வரலாற்றில் மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தின் சரித்திரத்திலும் இடம்பெறும் ஆவணப் பதிவு.1950 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1954 சிறப்பு திருமணச் சட்டம், 1961 வரதட்சிணை தடுப்புச் சட்டம், 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1976 42-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1980 தேசிய பாதுகாப்புச் சட்டம், 1985 கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 2002 கருப்புப் பண ஒழிப்புச் சட்டம், 2005 தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2012 போக்ஸோ சட்டம், 2013 லோக்பால், லோக் ஆயுக்த சட்டம், 2019 ஜம்மு - காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களுக்கு கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவின் பழைய நாடாளுமன்றக் கட்டடம் காரணமாக இருந்திருக்கிறது.24,281 சதுர மீட்டா் பரப்பளவுள்ள வட்ட வடிவிலான பழைய நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து, இந்திய ஜனநாயகம் 64,500 சதுர மீட்டா் பரப்பளவுள்ள புதிய கட்டடத்துக்கு மாறியுள்ள பெருமைமிகு தருணம் இது. காலனிய இந்தியாவின் உணா்வுகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, வலிமைமிக்க பொருளாதாரமாக பாரதம் உயா்ந்திருப்பதன் அடையாளம் இந்த மாற்றம். நல்லவை தொடர வேண்டும்; அல்லவை தவிா்க்கப்பட வேண்டும்.

தினமணி 21 Sep 2023 2:34 am

உணவில் சாதி: இதுவும் ஒரு தீர்வு

கடந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தபிரச்சினை, காலை உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவிவிட்டதைச் செய்திகள் மூலம் அறிகிறோம்.

தி ஹிந்து 20 Sep 2023 9:00 am

உணவில் சாதி: இதுவும் ஒரு தீர்வு

கடந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தபிரச்சினை, காலை உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவிவிட்டதைச் செய்திகள் மூலம் அறிகிறோம்.

தி ஹிந்து 20 Sep 2023 8:36 am

​உண்மை சுடுகிறது! | மனிதத் தன்மையற்ற அதிகாரி குறித்த தலையங்கம்

ஆந்திர மாநிலம், கா்னூல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜானவி கண்டூலா என்ற 23 வயது மாணவி, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்து வந்தாா். அந்த நகரில் இவா் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி சாலையைக் கடந்தபோது, சுமாா் 120 கி.மீ.க்கும் அதிக வேகத்தில் வந்த காவல்துறை வாகனம் மோதியதில் 100 மீ. தொலைவு தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தாா்.இதுபோன்ற விபத்துகள் நடப்பது புதிதல்ல. ஆனால், அதன் பின்னா் நடந்த சம்பவங்கள்தான் மனிதத் தன்மையற்ற சிலரின் கோர முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டி கேட்போரின் நெஞ்சை உறைய வைத்துள்ளன.அந்த காரை ஓட்டி வந்தவா் கெவின் டேவ் என்ற காவல்துறை அதிகாரி. அவருடன் சியாட்டில் நகர காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவரான டேனியல் ஆடரா் என்ற அதிகாரியும் இருந்துள்ளாா்.விபத்து நடந்த உடனேயே, சங்கத்தின் தலைவரும், மூத்த காவல்துறை அதிகாரியுமான மைக் சோலன் என்பவரிடம் ஆடரா் தொலைபேசியில் பேசியுள்ளாா். அவா் பேசியது அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி உள்ளது.‘வழக்கமான நபா்தான். 26 வயதுள்ள அவா் குறைந்த மதிப்பு (லிமிடெட் வேல்யூ) கொண்டவா். 11,000 டாலருக்கு காசோலை தயாா் செய்து வையுங்கள்’ என்று கூறிவிட்டு சப்தமாகச் சிரிக்கிறாா். உரையாடலின்போதும் அவ்வப்போது சிரிக்கிறாா்.இந்த உரையாடலின் விடியோ பதிவை சியாட்டில் காவல்துறை கடந்த 11-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வழக்குரைஞா்களும், பாதிக்கப்பட்டவா்களும் எப்படிச் செயல்படுவாா்கள் என்று கூறியே சிரித்ததாக டேனியல் ஆடரா் சப்பைக்கட்டு கட்டியுள்ளாா்.இந்த காவல் அதிகாரிகளின் செயலுக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரன்ஜித் சிங் சாந்து கடும் கண்டனம் தெரிவித்தவுடன் விழித்துக் கொண்ட அமெரிக்க நிா்வாகம், இது தொடா்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறது. அமெரிக்காவில் அமெரிக்கா்கள் அல்லாதவா்கள் குறித்து காவல்துறையில் சிலா் வெறுப்புணா்வுடன் நடந்து கொள்வது இது முதல் முறையல்ல.மினியாபோலிஸ் நகரில் மளிகைக் கடையில் போலி டாலா் நோட்டுகளை அளித்தாா் என்ற புகாரின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்ட் என்ற 46 வயது ஆப்பிரிக்க அமெரிக்கரை, கடந்த 2020-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி கைது செய்யச் சென்ற போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா். அப்போது, காவல் அதிகாரி டெரிக் சாவின் அவரைத் தரையில் வீழ்த்தி அவரது கழுத்தில் தனது கால் முட்டியால் சுமாா் 9 நிமிஷங்களுக்கு அழுத்தினாா். தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஃபிளாய்ட் கதறியும் பலனில்லை. இறுதியில் அவா் இறந்தாா்.ஃபிளாய்டின் இறப்பு உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் சுமாா் 5 மாதம் நடைபெற்ற போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்ததில் 25 போ் கொல்லப்பட்டனா். ஒரு பில்லியன் டாலா் அளவுக்கு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா்களின் பங்களிப்பு அபரிமிதமானது. அதேபோலத்தான், இந்தியா்களின் பொருளாதார வளா்ச்சியும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா்கள் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சம் டாலா் சம்பாதிக்கின்றனா். அதேநேரம், அமெரிக்கா்களின் சராசரி வருமானம் 75,000 டாலராக உள்ளது.அமெரிக்க பெருநிறுவனங்களை இந்தியா்கள் பலா் நடத்திவருகின்றனா். தமிழகத்தின் சுந்தா் பிச்சை போன்று இந்திய வம்சாவளியினா் 60-க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களில் உயா் பொறுப்புகளில் உள்ளனா். ஐந்து மருத்துவா்களில் ஒருவா் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவராக உள்ளாா்.அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவீதத்துக்கும் சற்று அதிகமாக உள்ள இந்தியா்கள், அமெரிக்க அரசிலும் உயா் பதவிகளை வகித்துவருகின்றனா். தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக உள்ளாா். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபா் தோ்தலில் விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலி, ஹிா்ஷ் வா்தன் சிங் உள்ளிட்டோா் களத்தில் உள்ளனா். இதற்கு முந்தைய தலைமுறையைச் சோ்ந்த இந்தியா்கள் அமெரிக்க கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவா்களாக இருந்தனா். ஆனால், இப்போதைய தலைமுறை தனித்துவமிக்கவா்களாகத் திகழ்ந்து வெற்றி ஈட்டி வருகின்றனா்.செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பொ்சிவியரன்ஸ் ரோவா் விண்கலப் பயணத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகனை, இந்திய அமெரிக்கா்கள் நாட்டையே வழிநடத்துகிறீா்கள் (யூ ஆா் டேகிங் ஓவா் தி கன்ட்ரி) என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பாராட்டினாா்.இவற்றை அமெரிக்கா்களில் சிலரால் ஏற்றுக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியவில்லை. கறுப்பித்தனவா்கள் நிறவெறி காரணமாகத் தாக்கப்படுகின்றனா் என்றால், ‘வந்தேறிகள் நம்மை முந்துகின்றனரே’ என்ற ஆற்றாமையில் ஆசியா்கள் தாக்கப்படுகின்றனா்.புலம்பெயா்தல் என்பது இன்றைய உலகமயச் சூழலில் தவிா்க்க முடியாததாகிவிட்டது. ‘மண்ணின் மைந்தா்கள்’ கோஷம் தேசிய அளவிலானாலும், சா்வதேச அளவிலானாலும் இனிமேல் எடுபடாது என்பது மட்டுமல்ல, சமநீதி, சமூகநீதி என்பவை நிறத்தின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் அமையாது என்பதும் மாறிவிட்ட உலக நீதி ஆகிவிட்டது. இதை அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளும் உணர வேண்டும்.

தினமணி 20 Sep 2023 5:00 am

இதுவும் ‘மரண வியாபாரம்’தான்... - இனியாவது ஊடகப் போக்குகளில் பக்குவம் வருமா?

பிறப்பும், இறப்பும் உலகின் அன்றாட நிகழ்வுகள்தான். அந்தந்த நபரின் குடும்பங்கள் சார்ந்த இயற்கை நிகழ்வு. ஆனால் அதுவேஒரு பிரபலம் சார்ந்ததாக இருந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் பெற்றுவிடுகிறது.

தி ஹிந்து 19 Sep 2023 10:34 pm

இதுவும் ‘மரண வியாபாரம்’தான்... - இனியாவது ஊடகப் போக்குகளில் பக்குவம் வருமா?

பிறப்பும், இறப்பும் உலகின் அன்றாட நிகழ்வுகள்தான். அந்தந்த நபரின் குடும்பங்கள் சார்ந்த இயற்கை நிகழ்வு. ஆனால் அதுவேஒரு பிரபலம் சார்ந்ததாக இருந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் பெற்றுவிடுகிறது.

தி ஹிந்து 19 Sep 2023 10:34 pm

இதுவும் ‘மரண வியாபாரம்’தான்... - இனியாவது ஊடகப் போக்குகளில் பக்குவம் வருமா?

பிறப்பும், இறப்பும் உலகின் அன்றாட நிகழ்வுகள்தான். அந்தந்த நபரின் குடும்பங்கள் சார்ந்த இயற்கை நிகழ்வு. ஆனால் அதுவேஒரு பிரபலம் சார்ந்ததாக இருந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் பெற்றுவிடுகிறது.

தி ஹிந்து 19 Sep 2023 9:36 pm

இதுவும் ‘மரண வியாபாரம்’தான்... - இனியாவது ஊடகப் போக்குகளில் பக்குவம் வருமா?

பிறப்பும், இறப்பும் உலகின் அன்றாட நிகழ்வுகள்தான். அந்தந்த நபரின் குடும்பங்கள் சார்ந்த இயற்கை நிகழ்வு. ஆனால் அதுவேஒரு பிரபலம் சார்ந்ததாக இருந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் பெற்றுவிடுகிறது.

தி ஹிந்து 19 Sep 2023 8:37 pm

இதுவும் ‘மரண வியாபாரம்’தான்... - இனியாவது ஊடகப் போக்குகளில் பக்குவம் வருமா?

பிறப்பும், இறப்பும் உலகின் அன்றாட நிகழ்வுகள்தான். அந்தந்த நபரின் குடும்பங்கள் சார்ந்த இயற்கை நிகழ்வு. ஆனால் அதுவேஒரு பிரபலம் சார்ந்ததாக இருந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தையும் பெற்றுவிடுகிறது.

தி ஹிந்து 19 Sep 2023 6:36 pm

மோடி அதிரடி: புதிய நாடாளுமன்றம் குறித்த தலையங்கம்

இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் செயல்பட இருக்கிறாா்கள். நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடா், பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இந்தியாவின் கடந்த 75 ஆண்டு ஜனநாயக வரலாறு குறித்து விவாதித்தது.புதிய கட்டடத்தில் இன்று முதல் நடைபெற இருக்கும் கூட்டத்தில், என்ன நடக்கப்போகிறது என்பதை உறுப்பினா்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது. சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமா் மோடி தெரிவித்திருப்பது எதிா்பாா்ப்பை அதிகரித்துள்ளது.நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் மிக அரிதாகவே கூட்டப்படுவது வழக்கம். இதற்கு முன்பு சில முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே நாடாளுமன்றம் வழக்கமான நாள்களில் அல்லாமல் கூடியிருக்கிறது.1972, 1997-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சுதந்திர வெள்ளிவிழாவையும், பொன்விழாவையும் கொண்டாட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. 1992-இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் பொன்விழாவுக்காக அவைகள் கூட்டப்பட்டன. 2017-இல் சிறப்புக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கு முன்னால் சிறப்புக் கூட்டங்கள் நடைபெறும்போது முன்கூட்டியே அதுகுறித்த அறிவிப்பு வரும். எதற்காக அவை கூட்டப்படுகிறது, அவையில் என்னென்ன விவாதிக்கப்பட இருக்கின்றன உள்ளிட்ட விவரங்கள் உறுப்பினா்களுக்கு மட்டுமல்லாமல், ஊடகங்கள் மூலம் மக்களுக்கும் தெரியப்படுத்தப்படும். இந்த முறை அப்படி எதுவுமே இல்லாமல் திடுதிப்பென்று அறிவிக்கப்பட்டபோது, எதிா்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளுங்கட்சி உறுப்பினா்களேகூட திடுக்கிட்டிருந்தால் வியப்படைவதற்கில்லை.பெரும்பாலான மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் உருவாக்கி இருக்கும் ‘இந்தியா’ கூட்டணி மும்பையில் கூடியது. அந்த நிகழ்விலிருந்து மக்களின் கவனத்தை முற்றிலுமாக தில்லியை நோக்கி திரும்ப வைத்துவிட்டது, பிரதமா் மோடி தனது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி மூலம் வெளியிட்ட சுட்டுரை அறிவிப்பு. ‘ஜி20 மாநாட்டைத் தொடா்ந்து, செப்டம்பா் 18 முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட இருக்கிறது’ என்று சமூக ஊடகங்களில் செய்யப்பட்ட அந்தப் பதிவில் அமைச்சரவை கூடியதாகவோ, முடிவெடுத்ததாகவோ எந்தவிதத் தகவலும் இல்லை.பிரதமா் மோடியின் அரசியலில் எப்போது என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதை அவருக்கு நெருக்கமானவா்களேகூடதெரிந்து வைத்திருப்பாா்களா என்பது சந்தேகமே. அதனால், அறிவிப்பை வெளியிட்ட அமைச்சா் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட இருக்கும் முக்கியமான செய்திகள் குறித்து தெரிவிக்காமல் இருந்ததில் ஆச்சரியமில்லை.சிறப்புக் கூட்டத்தொடா் குறித்த பிரதமா் மோடியின் அறிவிப்பை, திசைதிருப்பும் முயற்சி என்று முதலில் தெரிவித்த ‘இந்தியா’ கூட்டணி, பின்னா் சமூக ஊடகங்கள் மூலம் ‘இந்த அறிவிப்பு ஜனநாயக விரோதமானது’ என்று தாமதமாகக் குற்றம் சாட்டியது. காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்தி, கூட்டத்தொடா் குறித்த ரகசியத்தைத் தான் தெரிந்துகொள்ள விழைவதாக பிரதமா் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பினாா்.அரசுத் தரப்பு, இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு பயணம் குறித்த விவாதத்தை காரணமாகச் சொன்னபோது, எதிா்க்கட்சிகளின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. இது குறித்து ஏற்கெனவே பல முறை விவாதிக்கப்பட்ட நிலையில், இப்போது எதற்காக சிறப்புக் கூட்டம் என்கிற எதிா்க்கட்சிகளின் கேள்விக்கு அரசுத் தரப்பிடமிருந்து பதில் இல்லை.நடக்க இருக்கும் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா; வழக்குரைஞா்கள் திருத்த மசோதா; பத்திரிகைகள் - இதழ்கள் பதிவு மசோதா; தபால் நிலைய மசோதா உள்ளிட்டவை குறித்த விவாதம் நடக்க இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இவற்றுக்காக அவசரமாக ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்று குழம்பிப்போய் கேட்கின்றன எதிா்க்கட்சிகள்.வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும், முக்கியமான காரணம் இல்லாமல் நரேந்திர மோடி அரசு சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. பொது சிவில் சட்டம், மகளிா் இட ஒதுக்கீட்டு மசோதா ஆகிய இரண்டும் சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று பலரும் எதிா்பாா்க்கிறாா்கள்.உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை, தலைமைத் தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவிலிருந்து அகற்றும் தீா்மானத்தை சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற அரசு முனைப்புக் காட்டக் கூடும். ஆனால், எல்லோரும் எதிா்பாா்ப்பது போல, ‘ஒரே நாடு - ஒரே தோ்தல்’ குறித்த மசோதாவோ, இந்தியாவை ‘பாரதம்’ என்று அதிகாரபூா்வமாக மாற்றும் மசோதாவோ கொண்டுவரப்படும் என்று தோன்றவில்லை.நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுடன் மக்களவைத் தோ்தலையும் நடத்த பாஜக முற்படலாம். அப்படி இருந்தால், 17-ஆவது மக்களவையைக் கலைப்பதற்கு முன்பு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கூட்டம் நடத்தும் முயற்சியாக இது இருக்கக் கூடும்.சிறப்புக் கூட்டத் தொடருக்கான காரணம் தெளிவாக அறிவிக்கப்படாமல் கூடியிருப்பது, இந்திய ஜனநாயகத்தில் புதிய நடைமுறை. காரண காரியமில்லாமல் (அரசியல் ஆதாயமும் இல்லாமல்) பிரதமா் நரேந்திர மோடி எந்தவொரு முடிவையும் எடுக்கமாட்டாா். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் இந்தச் சிறப்புக் கூட்டத் தொடருக்கான காரணம் என்னவென்று கடைசி நாளில்தான் தெரியும் போலிருக்கிறது!

தினமணி 19 Sep 2023 3:40 am

ஆதிதிராவிட மாணவரின் உணவுக்கு 33 ரூபாய்; மோப்ப நாயின் உணவுக்கு 200 ரூபாயா?- நெஞ்சத்தை சுடும் ஆதிதிராவிட நல கல்வி நிலையங்களின் அவலநிலை  

தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் முதுகலை பட்டதாரி விடுதிகள் என மொத்தம் 1331 விடுதிகள் இயங்கி வருகின்றன‌. இந்த நலத்துறை விடுதிகளில் மொத்தம் 98 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

தி ஹிந்து 18 Sep 2023 5:20 pm

ஆதிதிராவிட மாணவரின் உணவுக்கு 33 ரூபாய்; மோப்ப நாயின் உணவுக்கு 200 ரூபாயா?- நெஞ்சத்தை சுடும் ஆதிதிராவிட நல கல்வி நிலையங்களின் அவலநிலை  

தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் முதுகலை பட்டதாரி விடுதிகள் என மொத்தம் 1331 விடுதிகள் இயங்கி வருகின்றன‌. இந்த நலத்துறை விடுதிகளில் மொத்தம் 98 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

தி ஹிந்து 18 Sep 2023 4:37 pm

``கொரோனாவால 10 வருஷம் ஆசிரியரா இருந்த நான் ஆட்டோ டிரைவர் ஆகிட்டேன் - லூர்துராஜ்

கல்வி எந்த வயதிலும் நம்மை உச்சத்தில் தூக்கி நிறுத்தும் என்பதற்கு சான்று ஆட்டோ 'லூர்துராஜ்'. கல்வி மீது கொண்ட தீரா வேட்கையால் ஆட்டோ ஓட்டிக் கொண்டே பி.எட் பட்டம் பெற்றவர் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சூழல் காரணமாக அசிரியர் வேலையை விட்டுவிட்டு தற்போது முழு நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆட்டோ ஓட்டிக்கொண்டே 'வைரமுத்து பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்' என்கிற தலைப்பில் ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வை முடித்துள்ளார். லூர்துராஜ் குறித்து முழுமையாக தெரிந்துக் கொள்ள அவரிடம் பேசினோம். நிழலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினார். எனக்கு வயசு 47. நான் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பக்கத்துல இருக்கிற கிராமத்தைச் சேர்ந்தவன். சின்ன வயசுல இருந்தே எனக்கு படிக்கிறதுக்கு ரொம்பவே விருப்பம். பள்ளிப்படிப்பை சொந்த ஊர்லேயே முடிச்சேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதும் வேலை வேண்டி சென்னைல இருக்கிற என் நண்பருக்குக் கடிதம் எழுதினேன். அவர் எனக்கு வேலை வாங்கித்தர்றேன்னு சொன்னார். சென்னைக்கு வந்து ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டேன். 1998-ல இருந்து ஆட்டோ ஓட்டுறேன். அதுல இருந்து இப்போ வரைக்கும் எனக்கு சென்னைதான். படிப்பு மேல அதிகப்படியான ஆர்வத்தினால சென்னைல இளங்கலை பட்டப் படிப்பையும் முதுகலை பட்டப் படிப்பையும் முடிச்சேன். கல்லூரில படிக்கும் போதே எனக்கு ஆசிரியர் ஆகணும்ன்னு ஆசை வந்துருச்சு. அதுக்கு பிறகு பி.எட் முடிச்சேன். ஆசிரியர் வேலைலயும் சேர்ந்தேன். ஆசிரியர் வேலைக்குப் போனாலும் பகுதி நேரமாக அவ்வப்போது ஆட்டோ ஓட்டுனேன். இதைத் தொடர்ந்து எனக்கு மேல படிக்கணும்ன்னு அதிகப்படியான ஆசை இருந்தது. பிறகு நானும் என் நண்பரும் பிஎச்.டி பண்ணலாம்னு முடிவு பண்ணோம். அந்த சமயத்துல கல்லூரில அதிகப்படியான மாணவர்கள் ஏற்கெனவு சேர்ந்துட்டாங்க. கொஞ்ச காலம் காத்திருந்தோம். வைரமுத்துவுடன் ஆட்டோ லூர்துராஜ் ஒரு நாள் என்னுடைய ஆட்டோல நெறியாளர் இரா.கருணாநிதி பயணம் செய்தார். நான் அப்போ மு.வரதராசனுடைய 'தமிழ் இலக்கிய வரலாறு' புத்தகத்தைப் படிச்சிட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டு என்னுடைய படிப்பைப் பத்தி கேட்டார். 'இவ்ளோ படிச்சுட்டு ஆட்டோ ஓட்டுறீங்க'ன்னு ஆச்சரியமாக பார்த்தார். நான் இவ்ளோ படிச்சிட்டு ஆட்டோ ஒட்டுறதுக்கு முக்கியக் காரணம் பொருளாதாரம் தான். தனியார் பள்ளிகள்ல வேலை பார்த்திருக்கேன். நான் தொடர்ந்து படிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அதுனால ஆட்டோ ஓட்டுறது தான் நம்ம தேவைக்கு சுலபமா இருக்கும்ன்னு முடிவு பண்ணேன். ஆட்டோ ஓட்டும்போது படிப்போட தேவைக்கு விடுப்பு எடுத்துக்கலாம். ஆனால், வேலைக்கு போயிட்டா ஒரு கட்டாயச் சூழல் இருக்கும். எனக்கு குடும்பம் இருக்கு. மனைவி இரண்டு குழந்தைகள் இருக்காங்க. கொரோனா ஊரடங்கு முன்பு வரைக்கும் ஆசிரியராகத்தான் வேலைப் பார்த்துட்டு இருந்தேன். அதுக்கு பிறகு முழு நேரமாக ஆட்டோ ஓட்ட வந்துட்டேன். ஆசிரியராக 10 வருஷம் வேலைப் பார்த்த அனுபவம் எனக்கு இருக்கு. அதுக்கு பிறகு சென்னை பல்கலைக்கழகத்துல 'வைரமுத்து பாடல்களில் புதுக்கவிதை கூறுகள்' என்கிற தலைப்பில ஆராய்ச்சிகள் மேற்கொண்டேன். இந்த தலைப்பிற்காக பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கடிதம் வைரமுத்து கொடுத்தார். வைரமுத்துவோட பல பாடல்கள்ல கவித்தன்மைகள் இருக்கு. இந்த ஆராய்ச்சிக்கான வாய்மொழித் தேர்வை முடிச்சுட்டேன்னு என்னுடைய நெறியாளர் வழியாக வைரமுத்து தெரிஞ்சுக்கிட்டாரு. என்னை நேர்ல பார்க்கிறதுக்கு கூப்பிடங்க. நானும் போனேன். என்றார். மேலும் சமூக வலைத்தளங்களில் 'ஆட்டோ லூர்துராஜை வைரமுத்து வீட்டிற்குள் அழைத்துப் பேசாமல் வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து பேசி அனுப்பியிருக்கிறார்' என்கிற சர்ச்சை எழுந்தது. வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு இது குறித்து அவரிடம் கேட்கையில், நானும் இதைப் பத்தி கேள்விப்பட்டேன். எனக்கு அது ரொம்பவே வருத்தமாக இருக்கு. அவர் அப்படி பண்ணல. நான் வேலைக்கு கிளம்பும்போது தான் என்னைக் கூப்பிட்டாங்க. நானும் காக்கி சீருடையிலேயே போயிட்டேன். என்னை முதல்ல வீட்டுக்குள்ள கூப்பிட்டு தேநீர்லாம் கொடுத்தாங்க. அதுக்கு பிறகு வைரமுத்து சார் என்னைப் பத்தியும், என்னுடைய ஆராய்ச்சிகள் பத்தியும் சில கேள்விகள் கேட்டாரு. பிறகு புகைப்படம் எடுப்பதற்குத்தான் வெளில வந்தோம். ஆட்டோ வெளில பார்க்கிங்ல இருந்தது. ஆட்டோ பக்கத்துலேயே எல்லோரும் போட்டோ எடுத்துக்கிட்டோம். என முடித்துக் கொண்டார்.

விகடன் 18 Sep 2023 3:47 pm

ஆதிதிராவிட மாணவரின் உணவுக்கு 33 ரூபாய்; மோப்ப நாயின் உணவுக்கு 200 ரூபாயா?- நெஞ்சத்தை சுடும் ஆதிதிராவிட நல கல்வி நிலையங்களின் அவலநிலை  

தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் முதுகலை பட்டதாரி விடுதிகள் என மொத்தம் 1331 விடுதிகள் இயங்கி வருகின்றன‌. இந்த நலத்துறை விடுதிகளில் மொத்தம் 98 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

தி ஹிந்து 18 Sep 2023 3:36 pm

ஆதிதிராவிட மாணவரின் உணவுக்கு 33 ரூபாய்; மோப்ப நாயின் உணவுக்கு 200 ரூபாயா?- நெஞ்சத்தை சுடும் ஆதிதிராவிட நல கல்வி நிலையங்களின் அவலநிலை  

தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் முதுகலை பட்டதாரி விடுதிகள் என மொத்தம் 1331 விடுதிகள் இயங்கி வருகின்றன‌. இந்த நலத்துறை விடுதிகளில் மொத்தம் 98 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

தி ஹிந்து 18 Sep 2023 2:37 pm

ஆதிதிராவிட மாணவரின் உணவுக்கு 33 ரூபாய்; மோப்ப நாயின் உணவுக்கு 200 ரூபாயா?- நெஞ்சத்தை சுடும் ஆதிதிராவிட நல கல்வி நிலையங்களின் அவலநிலை  

தமிழகத்தில் ஆதிதிராவிட நலத்துறையின்கீழ் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் முதுகலை பட்டதாரி விடுதிகள் என மொத்தம் 1331 விடுதிகள் இயங்கி வருகின்றன‌. இந்த நலத்துறை விடுதிகளில் மொத்தம் 98 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

தி ஹிந்து 18 Sep 2023 1:37 pm

அவசரம் கூடாது: காஷ்மீர் தேர்தல் குறித்த தலையங்கம்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ கா்னலும், இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்திருப்பது தேசிய அளவில் அதிா்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.ஜம்மு - காஷ்மீா், அனந்த்நாக் மாவட்டத்தில் கோகா்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.கா்னல் மன்ப்ரீத் சிங், மேஜா் ஆசிஷ் டோன்சக், காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட் ஆகிய மூவரும் திறமையான அதிகாரிகள் மட்டுமல்ல, பயங்கரவாத நடவடிக்கைகளை வேரறுப்பதில் முனைப்புக்காட்டும் முக்கியமான மூவா். கா்னல் மன்ப்ரீத் சிங்கும், மேஜா் டோன்சக்கும் ‘சேனா’ விருது பெற்றவா்கள் என்றால், கா்னல் மன்ப்ரீத் சிங், ராணுவத்தின் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவான 19 ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவின் தலைமை அதிகாரியும்கூட.கா்னல் சிங்கின் குழந்தைகளும் சரி, மேஜா் டோன்சக்கின் மூன்று வயது பெண் குழந்தையும் சரி, தங்களது தந்தையை இழந்த துக்கத்தைக்கூட உணரும் வயதினா் அல்லா் என்பது மிகப் பெரிய சோகம்.காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட்டுக்கு, காவல் துறை தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற தந்தை ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டிய துா்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது.அனந்த்நாக்கின் கோகா்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கா்னல் மன்ப்ரீத் சிங்கின் தலைமையில் பாதுகாப்புப் படையினரின் தேடல் வேட்டையைத் தொடங்கி குறிப்பிட்ட பகுதியை நெருங்கியபோது, பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினா். கா்னல் மன்ப்ரீத் சிங் குழுவினா் பயங்கரவாதிகள் விரித்த சூழ்ச்சி வளையில் சிக்கிக் கொண்டனா் என்றுதான் கூற வேண்டும்.2020-இல் இதுபோன்ற தேடுதல்களில் பயங்கரவாதிகளை அழிப்பதைவிட அவா்கள் சரணடைய வாய்ப்பு அளிக்கும் விதமாக நடைமுறை விதிமுறைகளில் (ஸ்டாண்டா்ட் ஆப்பரேட்டிங் ப்ரொசிஜா்) மாற்றம் செய்யப்பட்டன. இதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை அதிகரித்ததுடன் பல அப்பாவி இளைஞா்களின் உயிா்கள் காப்பாற்றப்பட்டன.பயங்கரவாதிகளுக்கு காத்திருப்பு நேரம் வழங்கப்படுவதால் ராணுவமும், பாதுகாப்புப் படையினரும் அழுத்தத்துக்கு உள்ளானாா்கள் என்றாலும்கூட, மக்கள் மத்தியில் ராணுவம் குறித்த அவப்பெயரை ஓரளவுக்கு மாற்ற முடிந்தது.சமீபத்தில் நடந்த தாக்குதலில் அதுபோல கால அவகாசம் வழங்கப்படவில்லை. ஆனால், பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவல்கள் குறித்த உண்மைத்தன்மை ஆராயப்படவில்லை என்று தெரிகிறது.தகவல் தரும் உளவாளிகளில் சிலா் பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இருக்கக் கூடும் என்பதும், அவா்கள் முழுமையாகக் களையெடுக்கப்படவில்லை என்பதும் இந்தத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புப் படையினா் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2019 - 2022 இடைவெளியில், 2016 - 2019 - உடன் ஒப்பிடும்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் 32% குறைந்திருக்கின்றன. பொதுமக்களின் உயிரிழப்பு 14%-உம், பாதுகாப்புப் படையினரின் மரணம் 52%-உம் குறைந்திருக்கிறது. 2020-லிருந்து இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் உள்ளூா் இளைஞா்கள் பயங்கரவாதிகளால் ஈா்க்கப்படுவது தொடா்ந்து குறைந்து வருகிறது.கடந்த 2021 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரில் 29 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 13 இந்த ஆண்டில் மட்டும் நடந்திருக்கின்றன.ஏப்ரல் 20-ஆம் தேதியும், மே 5-ஆம் தேதியும் இந்திய - பாகிஸ்தான் எல்லையையொட்டிய ஜம்மு பகுதியின் பூஞ்ச், ரஜெளரி மாவட்டங்களில் 10 ராணுவ வீரா்கள் தாக்குதலில் உயிரிழந்திருக்கிறாா்கள். சில பயங்கரவாதிகள் நமது பாதுகாப்புப் படையினராலும் கொல்லப்பட்டிருக்கிறாா்கள்.அனந்த்நாக் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கா்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தடை செய்யப்பட்ட ‘எதிா்ப்பு முன்னணி’ (ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்) உரிமை கொண்டாடுகிறது. இதற்கு முன்னால் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் வனப்பகுதியில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இதே அமைப்பு தாக்குதல் நடத்தியபோது மூன்று வீரா்கள் உயிரிழந்தனா் என்பதையும் குறிப்பிட வேண்டும்.ஜம்மு - காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் ஜம்முவிலும் காஷ்மீரிலும் அமைதி திரும்பியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்திருக்கிறாா்கள்.பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது என்பது மட்டுமல்லாமல், வளா்ச்சிப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கும் நிலையில், நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இந்தியாவுக்கு எதிரான உணா்வைத் தூண்டுவிடுவதுதான் பயங்கரவாதிகளின் நோக்கம்.30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த பகுதியை ஒருசில ஆண்டுகளில் அமைதிப் பூங்காவாக மாற்றிவிட இயலாது. எல்லை கடந்த பயங்கரவாதம் முற்றிலுமாக நின்றுவிடாத நிலையில், காஷ்மீரில் தோ்தல் நடத்தத் தயாா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது வியப்பை அளிக்கிறது.அடைந்திருக்கும் வெற்றியை முழுமையாக்காமல் தோ்தலுக்கு அவசரம் காட்டுவது மீண்டும் பயங்கரவாதத்துக்கு பாதை அமைத்துக் கொடுப்பதாக அமைந்துவிடும். பொறுமை தேவை!

தினமணி 18 Sep 2023 3:48 am

இந்த வாரம் கலாரசிகன் - 17-09-2023

அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரில் இருந்து ஏதோ அலுவலாக சென்னை வந்திருந்த ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் பெரியவர் ப. முத்துக்குமரன் எனக்காக அலுவலகத்தில் காத்திருக்கிறார் என்றபோது, நான் திடுக்கிட்டேன். அவர் இருப்பது தெரிந்திருந்தால், முன்கூட்டியே அலுவலகம் வந்திருப்பேன். அவரைக் காக்க வைத்திருக்க மாட்டேன்.அகவை 94 முடிந்து95-இல் அடியெடுத்து வைக்க இருக்கும் ஐயா முத்துக்குமரன், ஜெயங்கொண்டசோழபுரம் திருவள்ளுவர் ஞான மன்றத்தின் செயலாளர். சிறுகளத்தூரில், தனது தனிப்பட்ட முயற்சியில் திருவள்ளுவர் மணிமண்டபம் எழுப்ப இருக்கிறார். அக்கம்பக்கத்து ஊர்களில் குறள் பரப்பும் பணியிலும், ஊருக்கு ஒரு வள்ளுவர் சிலை என்கிற முயற்சியிலும் ஈடுபட்டிருக்கும் குறள் பித்தர் இவர்.திருக்குறளே மறை; திருவள்ளுவரே இறை' என்பது அவர் கொண்ட கொள்கை. அது என்னவோ தெரியவில்லை, எங்களுக்குள் அப்படி ஓர் ஈர்ப்பு. என்னைச் சந்திப்பதில் அவருக்கும், அவருடன் அளவளாவி மகிழ்வதில் எனக்கும் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.சிறுகளத்தூர் முத்துக்குமரனின் பின்னணியும் அனுபவமும் சாதாரணமானதல்ல. அவர் அண்ணல் காந்தியடிகளை நேரில் பார்த்தவர் என்பது மட்டுமல்ல, அவரது காலடியில் அமர்ந்து மகாத்மா பேசுவதைக் கேட்டவர். ஜெயபிரகாஷ் நாராயணனின் கூட்டங்களில், முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் தொண்டர்களில் ஒருவர். காந்தியார் பிறந்த போர்பந்தருக்குச் சென்று தரிசித்ததை வாழ்நாள் பேறாகக் கருதுபவர். அதே நேரத்தில், திராவிட இயக்கப் பற்றாளர்.மேதா பட்கருடன், இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட சிலரில் ஐயா முத்துக்குமரனும் ஒருவர் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். அந்த அனுபவங்கள் குறித்தும், அவரது வடநாட்டுப் பயணங்கள் குறித்தும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.94 வயதிலும் கொஞ்சம்கூடத் தளர்வில்லாத நடை; சற்றும் நடுக்கம் இல்லாத குரல்; தெளிவான சிந்தனைத் திறன். இவையெல்லாம் ஐயா முத்துக்குமரனுக்கு எதனால் சாத்தியமாகிறது? அவரிடம் கேட்டால், குறள்வழி வாழ்க்கை' என்று கூறுகிறார்.ஆமாம், எதற்காக இரவானாலும் பரவாயில்லை என்று எனக்காகக் காத்திருந்தார் என்று கேட்கவில்லையே... எல்லாம் வள்ளுவத்துக்காகத்தான். சிறுகளத்தூரில் விரைவில் திருவள்ளுவர் விழா ஒன்று நடத்த இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளுக்காகவும், பேச்சாளர்களையும், விருந்தினர்களையும் ஏற்பாடு செய்வதற்காகவும்தான் சென்னை வந்திருப்பதாகத் தெரிவித்தார். சென்னை வந்திருக்கும் நிலையில், என்னை வந்து பார்க்க வேண்டும் என்று விழைந்த அந்தப் பெரியவரின் அன்பு என்னை நெகிழ வைத்தது.ஐயா முத்துக்குமரனார்போல, வெளியில் தெரியாமல் குறள் பரப்பும் பணியில் தங்களைத் தோய்த்துக் கொண்டிருக்கும் சான்றோரை அடையாளம் கண்டு தமிழக அரசு கெரவிக்க வேண்டும் என்பது எனதுவேண்டுகோள்!-------------------------------------------------கபிலர் விழாவில் கலந்து கொள்ள ஜூலை மாதம் திருக்கோவிலூர் சென்றிருந்தபோது, நண்பர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தனை சந்தித்தேன். தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார் அவர். ஜனவரி மாதம் வெளியாகி இருந்த அவரது நிலம் கடந்த தமிழர் - வாழ்வும் வரலாறும்' புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தார். அதைப் படிக்க இப்போதுதான் வேளை வாய்த்தது.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றும் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன், அயலகத் தமிழர்கள் குறித்தும், கடல் கடந்து செயல்படும் தமிழ் அமைப்புகள் குறித்தும், புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்தும் செய்திருக்கும் ஆய்வுகள் ஏராளம். அதனால், அவர் தெரிந்து வைத்திருக்கும் அளவு வேறு எவரும் அயலகத் தமிழர்கள் குறித்துத் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.அவரது நிலம் கடந்த தமிழர்' என்கிற புத்தகம், பல்வேறு செய்திகளை நமக்குத் தருகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து அயல் நாடுகளில் பெருமளவில் தஞ்சம் அடைந்ததற்கு முழுமுதற் காரணமாக இருந்தது, தாது வருடப் பஞ்சம் என்பதை நாட்டுப்புறப் பாடல்களின் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார் அவர். வறுமையால் சிதைவடைந்து, வலிமையற்ற நிலையில் இலங்கை, மலாயா நாடுகளை நோக்கி ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செல்லத் தொடங்கினர். தமிழக வரலாற்றில் பெரும் மனிதப் புலப்பெயர்வு நடைபெற்ற காலகட்டம் இதுவே' என்கிறார்.கடற்கரைப்பட்டினத் துறைமுகங்கள், மிக நீண்ட அகலமான சாலைகள், எண்ணற்ற பாலங்கள், ரயில்பாதை வசதிகள் என்று உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிங்கப்பூர், மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகள் தலைநிமிர்ந்து நிற்கின்றன. எழில் சிந்தும் இக்காட்சிகளுக்குப் பின்னால் எண்ணற்ற தமிழர்களின் வியர்வைத் துளிகள் மறைந்திருக்கின்றன' என்று பதிவு செய்கிறார்.உலகப் பரப்பிலுள்ள ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள், தீவுகளுக்குத் தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்து அக்காலத் தமிழ்ப் படைப்புகளில் எவ்வித செய்திகளும் பதிவு செய்யப்படவில்லை. அங்ஙனம் சென்ற தமிழர்களைத் தமிழ்ப் படைப்புலகம் பேச மறந்துவிட்ட சூழலில் ஒலித்த முதல் குரலாக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை இனம் காணவியல்கின்றது' என்று வியந்து பாராட்டுகிறார் இரா. குறிஞ்சிவேந்தன்.அவரால் உவந்தும் வியந்தும் பாராட்டப் பெறும் ஏனைய இரு ஆளுமைகள், இலங்கை மலையகத் தமிழர்களுக்காகக் குரலெழுப்பிப் போராடிய கோ. நடேசய்யரும், அவரது துணைவியார் மீனாட்சி அம்மையாரும். இந்நூலிலுள்ள தேயிலைத் தோட்டத்திலே...' கட்டுரை நமக்கு எடுத்தியம்பும் புதிய செய்திகள் ஏராளம்.17 கட்டுரைகள்... ஒவ்வொன்றும் ஓர் ஆய்வு... சுவாரஸ்யமான தகவல் பெட்டகம்... நிலம் கடந்த தமிழர்களின் வாழ்வும் வரலாறும்...!இந்த வாரத் தேர்வு, கவிஞர் ஜோவின் காலம்' என்கிற இந்தக் கவிதை -நேரம் போகவில்லைஎன்போர்க்கும்நேரம் போதவில்லைஎன்போர்க்கும்ஒரே கடிகாரம்!

தினமணி 17 Sep 2023 4:44 pm

குறளும் குமரேச வெண்பாவும்

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பினை விரித்துரைத்த புலவர்கள் பலர். 1330 குறட்பாக்களுக்கும் உரைதந்தவர் பதின்மர். இவற்றுள் பரிமேலழகரின் உரை முதன்மையதாய்க் கொள்ளப்படுகிறது. இது கற்றவர்களேயன்றி மற்றவருக்கு விளங்காமையால் பல விளக்க உரைகளும் தற்காலத்தே எழுந்துள்ளன.காவியங்களின் கொள்கை, நீதியை நமக்குப் போதிப்பதே. இவை கதைகளாக உள்ளதனால் இவற்றையே அடிப்படையாகக் கொண்டு திருக்குறளின் கருத்துக்களை விரித்துரைத்தால் கற்பவர்க்கு எளிதாமெனக் கருதி மாதவ சிவஞான சுவாமிகள் சோமேசர் முதுமொழி வெண்பா' எனவொரு நூலை இயற்றினார். இதில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து அதன் கருத்திற்கேற்ற கதைகளைப் புகுத்தி வெண்பாக்களாக யாத்துள்ளார்.இவ்வழியைப் பின்பற்றி, ஜெகவீர பாண்டியன் எனும் புலவர் 1330 குறட்பாக்களுக்கும் பொருத்தமான கதைகளைஇராமாயணம், மகாபாரதம் முதலிய இதிகாசங்கள், கிரந்தம், பாகவதம் முதலிய புராணங்கள், சிந்தாமணி, சிலப்பதிகாரம் ஆகிய காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்கநூல்கள், இன்னும் வேறு பல நூல்கள் ஆகியவற்றினின்றும் தேர்ந்தெடுத்து குறட்பாக்கள் கூறும் கருத்துக்கிணங்க அக்குறட்பாக்களையும் இணைத்து, ஒரு தனிச்சீருடன் நேரிசை வெண்பாக்களாக திருக்குறட் குமரேச வெண்பா' எனும் பெயரில் இயற்றியளித்துள்ளார்.இந்நூலில், கருத்துகளை வெண்பாக்களின் முதலிரண்டடிகளால் தமது குலதெய்வமான குமரேசன் முன்னிலையில் விண்ணப்பித்தும் அவற்றிற்கு விடை கூறுமுகமாக ஈற்றிரண்டடிகளாக குறட்பாக்களை இணைத்தும் எடுத்துக்காட்டியுள்ளார்.ஆசிரியரே இப்பாக்களுக்குரிய கதைகளையும் உரையாக விளக்கியருளியுள்ளார். திருக்குறளை நயக்கும் அனைவரும் இந்நூலைப் படித்து இன்புறவேண்டும். இந்நூல் நூறு ஆண்டுகளின் முன்பு (1924-இல்) வெளியிடப்பட்டுள்ளது.நூலின் நயத்தைக் கீழ்க்காணும் இரு வெண்பாக்களால் அறிந்து கொள்ளலாம்.கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் மூன்றாவது குறளைச் சேர்த்தமைத்த வெண்பாவின் பொருள்:குமரேசா! மார்க்கண்டர் நீடிய வாழ்வினையும் பேரின்பத்தையும் இந்நிலமிசை ஏன் விரும்பினார் என்றால், அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிக்ளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் என்பதனால்தான்'. நீடியவாழ் வெய்தி நிலமிசையேன் மார்க்கண்டர்கூடினர்பே ரின்பம் குமரேசா - நாடிமலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்.மார்க்கண்டேயரின் விரிவான கதை கந்தபுராணத்திலுள்ளது. ஆயுள் சிறிதே உடையவனாயினும் அறிவில் பெரியவனாகிய மகனை வேண்டிப் பெற்றனர் மார்க்கண்டேயரது பெற்றோர். மார்க்கண்டேயர் தன் பெற்றோர் கவலையைக் குறிப்பாலுணர்ந்து சிவபெருமானை நினைத்துத் தவமிருந்தார். காலன் அருகே வந்துற்றகாலை,பரமன் தோன்றி அப்பாலகனைக் காத்துக் காலனைக் காலால் உதைத்து வீழ்த்தினார். ஆதலால் இறைவனடி சேர்ந்தவர் நீண்டகாலம் இன்புற்று வாழ்வர் எனும் கருத்து பெறப்பட்டது.இறைமாட்சி எனும் அதிகாரத்துக் குறட்பா ஒன்று:குமரேசா! புரூரவன் ஏன் தேவர்களையும் விஞ்சிய துணிவு கொண்டு விளங்கினான்? ஏனென்றால், சோர்வற்ற தன்மை, உயர்ந்த கல்வி, பெரும் துணிவு ஆகிய இம்மூன்றும் உலகை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை'. திண்டோட் புரூரவனேன் தேவரினும் முந்துணிவுகொண்டுவென்று மீண்டான் குமரேசா- மண்டியேதூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனாள் பவர்க்கு. புரூரவன் எனும் அரசன் சந்திரகுல மன்னன். தேவர்களின் அரசனான இந்திரனின் நண்பன். மகாவீரன்; மிக்க கல்வியறிவுடையவன். இவன் புகழ் எங்கும் பரந்திருந்தது. அரக்கனிடமிருந்து தேவமங்கை ஊர்வசியை விடுவித்துக் காத்தவன். இவனைப் பற்றிய செய்திகளை மகாபாரதம் மற்றும் வேறு பல புராணங்களில் காணலாம். தேவர்களே வியக்கும் துணிவும் பரந்த கல்வியறிவும் வீரமும் உடையவன்.பழமை வாய்ந்த திருக்குறளுடன், புராண, இதிகாசக் கதைகளை இணைத்து விளக்கும் இந்நூல் அனைவரும் படித்து இன்புறத்தக்கது.இவ்வாறு திருக்குறள் கூறும் பல நீதிகளையும் கதைகளாக இணைத்துப் பாடிய வெண்பாக்களைக் கொண்டதே திருக்குறட் குமரேச வெண்பா.

தினமணி 17 Sep 2023 4:37 pm

ஊடல் கொண்ட தலைவி

தலைவன் தலைவியோடு புனலாடினானெனக் கேட்ட செவிலித்தாய், தோழியை நோக்கி, நீர்விழா எவ்வாறு இருந்ததெனக் கூறுக' எனக் கேட்க தோழி, வையை ஆற்றில் நீர்வரத்து மிகுந்திருந்தது. புதுப்புனலில் நீராட அனைவரும் சென்றனர். ஒருவரை ஒருவர் துரத்தி நீரை அள்ளி வீசினர். அந்நீரை அவர்களுடைய அழகான கண்கள் ஏற்றுக் கொண்டன.ஒருத்தி மட்டும் அதற்குத் தோற்றுத் தன் கண்களைக் கைகளால் மூடிக்கொண்டாள். அவள் தோற்றதை உணர்ந்த ஒருத்தி தன் கழுத்தில் அணிந்திருந்த பொன் கயிற்றினால் தோற்றவள் தோளினைக் கட்டி சிறைபிடித்தாள் இதைப் பார்த்த மற்றொரு பெண்ணானவள் தோற்றவளுக்குப் பரிந்து அவளுடைய கட்டை நீக்கும் வகையில் நீரில் பாய்ந்து சென்றாள்.பாய்ந்தவளுடைய மாவடு போன்ற மை தீண்டப்பட்ட கண்களால் செந்நிறத்தில் இருந்த புதுப்புனல் கருநிறமாய் மாறியது. அப்பொழுது தலைவியொருத்தி மதுவைப் பருகினாள். அப்போது அவள் கண்கள் நெய்தல் மலர் போல் கருத்திருந்தன. மதுவைக் குடித்து முடித்த பின்பு அவள் கண்கள் சிவந்திருந்தன.கண்இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினைப்பாண் ஆதரித்துப் பலபாட அப்பாட்டுப்பேணாது ஒருத்தி பேதுற ஆயிடைஎன்னை வருவது எனக்கு என்று இனையாநன்ஞெமர் மார்பன் நடுக்குற நண்ணிசிகை கிடந்த ஊடலின் செங்கண் சேப்புஊரவகைதொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்பகைதொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டுயாறுஆடு மேனி அணிகண்ட தன் அன்பன்சேறுஆடு மேனிதிரு நிலத்துஉய்ப்ப சிரம்மிதித்துதீர்விலதாகச் செருவுற்றாள்- (பரிபாடல் - வையை 7 - 65 - 75)தலைவன் தலைவியின் அக்கண்களைப் பார்த்து, அவற்றின் அழகைப் பாராட்டிப் பாணரைப் போலவே பலவகையாகப் பாடினான். தலைவியை நினைத்து அவன் பாடினான் என்பதை அறியாத வேறொருத்தி அத்தலைவனிடம் கோபமுற்றாள். அதனையறிந்த தலைவன், இஃது என்ன விபரீதமாயிருக்கிறது? நமக்கு என்ன வரப்போகிறதோ என்று அஞ்சி தலைவியையடைந்து நடுக்கமுற்றான்.அப்போது தலைவிக்குத் தலைவன் மேல் சினம் ஏற்பட்டு தன் மாலையைப் பிய்த்து எறிந்தாள். அப்பொழுது அவளைப் புகழ்ந்த தலைவன் கீழே விழுந்து வணங்கினான். அப்போதும் அவள் சினம் அடங்காமல் ஊடல் கொண்டாள்.தலைவன் தனக்குத்தான் சொந்தம் என்று கருதிய தலைவியின் மனநிலையே தலைவன் மேல் அவளுக்கு ஊடல்ஏற்படக் காரணமாயிருந்தது.

தினமணி 17 Sep 2023 4:33 pm

தமிழர் வரலாறு கூறும் அகநானூறு!

அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்றும் ஒரு பெயர் உண்டு.உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறிஅருள்புரி நெஞ்சமொடு எஃகுதுணை யாகவந்தோன் கொடியனும் அல்லன்; தந்தநீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்ஆனா அரும்படர் செய்தயானே தோழி தவறுடை யேனே!22 அடிகள் கொண்ட அகநானூற்றுப் பாடலொன்றின் (72) இறுதி ஆறு அடிகள் இவை. முழுப்பாடலும் தலைவி கூற்று; திணை குறிஞ்சி; பாடியவர் எருமை வெளியனார் மகனார்கடலனார்.சரி, ஏனைய 16 அடிகளில் என்ன தான் சொல்கிறாள் தலைவி? தலைவன் இரவுப் பொழுதில் - குறியிடம் நோக்கி வருகையில் வழியில் உள்ள இடர்ப்பாடுகளை எண்ணி வருந்துகிறாள் அவள். பெருமழை பொழியும் நள்ளிரவு நேரத்தில் வானம் இருட்டைக் கிழிப்பது போல் மின்னும். மின்மினியின் வெளிச்சத்தில் புற்றாஞ்சோற்றைத் தோண்டி உண்ணும் கரடி, இரும்பினையடிக்கும் கொல்லனைப் போலத் தோன்றும்.ஆற்று வெள்ளம் கற்களில் மோதி ஒலிக்க, அதில் வாழும் முதலைகள் நினைப்போரையும் நடுங்கச் செய்யும். கருவுற்றிருக்கும் பெண்புலியின் பசியைப் போக்க ஆண் புலியானது ஆண்பன்றியைக் கொன்று இழுத்துச் செல்லும். அக்குறுகிய வழியில் தலைவன் நம்மீது அன்புடையவனாய் வேலையே துணையாகக் கொண்டு நம்மை நாடி வருகிறான்.அப்படி வந்தவன் கொடியனும் அல்லன்; எங்கள் காதலுக்கு வழியமைத்துத் தந்த நீயும் தவறுடையை அல்லை; இத்துன்பங்களுக்குக் காரணமான யானே தவறுடையேன்' என்று தோழியிடம் சொல்லி வருந்துகிறாள் தலைவி.புறநானூற்றில் சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் கரிகால் வளவனுக்கும் வெண்ணிக்குயம் என்னுமிடத்தில் நடந்தபோரில் சோழன் செலுத்திய நெடுவேல், சேரமான் மார்பிற்பட்டு முதுகுப்புறத்தே உருவிச் சென்றது. இதனால் உண்டான புறப்புண்ணுக்கு நாணிச் சேரன் வாளொடு வடக்கிருந்து உயிர் நீத்தான். இதனைக் கண்ட கழாத் தலையார்என்னும் புலவர்,தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்தபுறப்புண் நாணி; மறத்தகை மன்னன்வாள்வடக் கிருந்தனன்; ஈங்குநாள் போல கழியல ஞாயிற்றுப் பகலே! (புறநா. 65:9-12)என மனம் வருந்திப் பாடுகிறார். கரிகாலனைப் பற்றி வெண்ணிக் குயத்தியார் பாடிய புறப்பாட்டிலும் (66) இக்குறிப்பு இடம் பெற்றுள்ளது.இதே செய்தியை மாமூலனார் எனும் புலவர் அகநானூற்றில் (55) பதிவு செய்துள்ளார். உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிட்ட மகளுக்கு இரங்கித் தாய் பேசுவதாக அமைந்த பாலைத்திணைப் பாடல் அது. புறப்புண் நாணி வடக்கிருந்த சேரலாதனோடு சேர்ந்து அரும்பெறல் உலகம் சென்ற சான்றோர் போல நானும் என் உயிரை நீத்தேன் இல்லையே. உயிர்மீது கொண்ட ஆசையால் இன்னும் வாழ்கின்றேனே'என்று நொந்து கொள்கிறாள்.பொருதுபுண் நாணிய சேரலாதன்அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென,இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்பெரும்பிறிது ஆகியாங்கு, பிரிந்து இவண்காதல் வேண்டி, என்துறந்துபோதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே.(அகநா.55:11-17)என்பன பாடலடிகள்.இது முன்னர்க் குறித்த புறநானூற்றுப் பாடலுக்கு அரணாவதுடன் கூடுதலாக ஒரு தகவலையும் தருகிறது. வடக்கிருந்து உயிர்நீத்த சேரனோடு, சான்றோரும் உயிர் நீத்தமை பற்றிய செய்தி கழாத் தலையார் பாட்டில் இல்லை. ஆனால் மாமூலனார் பாட்டில் அரிய வரலாற்றுக் குறிப்பாக அது இடம் பெற்றுள்ளது.இவ்வாறே தலையாலங்கானத்தில் நெடுஞ்செழியனுக்கும் அவன் பகைவர்க்கும் நடைபெற்ற போரைக் குறித்த பாடல்கள் (19;23;25;72;76;77;78;79) புறநானூற்றில் உள்ளன;குடபுலவியனார் கல்லாடனார், மாங்குடிகிழார், இடைக்குன்றூர் கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். நகுதக்கனரே நாடு மீக்கூறுநர்' என்னும் பாடல் நெடுஞ்செழியனே பாடியதாகும். இங்கெல்லாம் பாண்டியனொடு பொருத பகைவரை - இருபெருவேந்தர், ஐம்பெருவேளிர், வம்ப மள்ளர், புனைகழல் எழுவர் எனப் பொதுப்படக் குறிப்பதல்லால் அவர் தம் ஊர் பேர் பற்றியகுறிப்பில்லை.ஆனால் மதுரை நக்கீரர் அகநானூற்றில்-மருதத்திணை அமையப் பாடிய 36-ஆம் பாடலில் -அவ்வெழுவர் யார், எவர் என்பதற்கான விடை கிடைக்கிறது.வையைக் கரையின் விரிமலர்ச் சோலையில் நீபரத்தையை மணந்த போது உண்டான அலர், ஆலங்கானத்து நடந்த போரில் பகைவர் எழுவரைப் பாண்டியன் வென்ற போது பிறந்த ஆரவாரத்தினும் பெரிதாக இருந்தது' என்கிறாள். பரத்தையிற் பிரிந்து தன்னிடம் வந்த தலைவனைக் குறித்துத் தலைவி ஊடல் கொண்டு பேசியது இது.ஆலங் கானத்து அகன்தலை சிவப்பசேரல்1 செம்பியன்2 சினங்கெழு திதியன்3போர்வல் யானைப் பொலம்பூண் எழினி4நார்அரி நறவின் எருமையூரன் 5 ...இருங்கோ வேண்மான் 6இயல்தேர்ப் பொருநன்7 என்று ...எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்கொன்றுகளம் வேட்ட ஞான்றைவென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!என்பது பாடற்பகுதி. இங்குச் சேரலும் செம்பியனும் இருபெருவேந்தர்; ஏனையோர் ஐம்பெருவேளிர் ஆவர்.ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்' எனத் தொடங்கும் இடைக்குன்றூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலில், புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க' (76:12) என்று மட்டுமே சொல்லியிருக்க அந்த எழுவர் - இருபெரு வேந்தரும் ஐம்பெருவேளிரும் என்பதைச் சொல்லித் தெளிவுண்டாக்குகிறது நக்கீரர் பாடல்.எனவே தமிழர் வரலாறு பேசும் நூலாகவும் அகநானூறு திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

தினமணி 17 Sep 2023 4:31 pm

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,உடையார் எனப்பட்டு ஒழுகி, பகைவர்உடைய மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்படையின், படைத் தகைமை நன்று. (பாடல்: 324)எல்லோர்க்கும் கொடுக்கும் கொடை உள்ளம், நல் ஒழுக்கம், குறிக்கோள் அனைத்தையும் அறியும் உள் உணர்வு ஆகியன உடையவர்; பகைவர்மேல் படை எடுக்கும் வல்லாண்மைஇல்லாதவர்; படை எடுத்துச் செல்லுதலைவிடப் படை நடத்தாமல் இருப்பது நல்லது.

தினமணி 17 Sep 2023 4:27 pm

திரைக்கதிர்

வசூலில் ஷாருக்கானின் 'ஜவான்' புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இது இந்திய சினிமாவின் புது அத்தியாயம் என்கிறார்கள். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் கடந்த 7-ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில் புதிய சாதனைகள் படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான நான்கு தினத்திற்குள் 520 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்து வருகிறது. 'ஜவான்' படம் வெளியாகி மூன்றாவது நாளான செப்டம்பர் 9-ஆம் தேதி, இந்திய திரையுலக வரலாற்றில் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே நாளில் ஹிந்தி பதிப்பு மட்டுமே 68.72 கோடி ரூபாயையும், உலகளவில் 144.22 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது.--------------------------------------------------------------------------'விடுதலை - பாகம் 2' படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.--------------------------------------------------------------------------'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171-ஆவது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. ரஜினிகாந்தின் 171-ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளியான நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதனை உறுதி செய்திருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.--------------------------------------------------------------------------கமலின் 233 - ஆவது படம் 'விக்ரம்' படத்தை விட அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகவிருக்கிறது. 'விக்ரம்' படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி என மல்டி ஸ்டார்கள் இணைந்து நடித்தது போல, இதிலும் மல்டி ஸ்டார்கள் கூட்டணி உருவாகிறது. யாரும் எதிர்பார்த்திடாத இரண்டு பெரிய ஸ்டார்கள் படத்தில் இருக்கிறார்கள் என்கிறார்கள். மிலிட்டரி பின்னணியில் நடக்கும் கதை இது என்றும், பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்கலாம் என்றும் சொல்கிறார்கள். 'இந்தியன் 2'வில் இளமையான கமல் இருக்கிறார் என்ற சர்ப்ரைஸ் போல, இதில் கமலின் தோற்றம் பேசப்படும் எனவும்தகவல்.

தினமணி 17 Sep 2023 3:19 pm

பாஸ்தா மினி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:சத்துமாவு - ஒரு கிண்ணம் (கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்)பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கிண்ணம்சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டிதக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டிபொடியாக நறுக்கியவெங்காயம் - ஒரு கிண்ணம்பச்சைப் பட்டாணி - கால் கிண்ணம்பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை- ஒரு மேசைக்கரண்டிவெள்ளை மிளகுத்தூள் - தேக்கரண்டி எண்ணெய் - சிறிதளவுஉப்பு - தேவைக்கேற்ப.செய்முறை:ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு பாஸ்தாவை அதில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் 2 கப் நீர் ஊற்றி, கொதி வந்ததும் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சத்துமாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு கைவிடாமல் கிளறி இறக்கி, கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி, பச்சைப் பட்டாணி, சிறிதளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவி வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துப்புரட்டி, வெந்த பாஸ்தாவையும் சேர்க்கவும்.ரெடியாக இருக்கும் கொழுக்கட்டையை இதனுடன் சேர்த்துக் கிளறி, பரிமாறவும். வித்தியாசமான, சுவையான, இந்த கொழுக்கட்டையைகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தினமணி 17 Sep 2023 3:13 pm

உப்புமா கொழுக்கட்டை 

தேவையான பொருட்கள்:பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கிண்ணம்,துவரம்பருப்பு - அரை கிண்ணம்பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைதேங்காய்த்துருவல் - அரை கிண்ணம்கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 4எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:அரிசி, பருப்பை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு, நீரை வடித்து, ஒன்று சேர்த்து சிறிதளவு உப்பு, 2 காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மீதமுள்ள 2 மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, அரைத்த அரிசி பருப்புக் கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறினால், பாதி வெந்துவிடும்.இப்போது கீழே இறக்கி, கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, இந்தக் கலவையை விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.இந்த கொழுக்கட்டைகளை மீதமுள்ள கால் கப் தேங்காய்த் துருவலில் போட்டு புரட்டி, பரிமாறவும்.

தினமணி 17 Sep 2023 3:10 pm

பொரித்த மோதகம்

தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - ஒரு கிண்ணம்தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்பொடித்த வெல்லம் - அரை கிண்ணம்வேகவைத்த கடலைப்பருப்பு - அரை கிண்ணம்,ஏலக்காய்த்தூள்- ஒரு சிட்டிகைபச்சைக் கற்பூரம் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவுதேன்,நெய், உப்பு - சிறிதளவு.செய்முறை:கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவில், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல், வேகவைத்த கடலைப்பருப்பு, பச்சைக் கற்பூரம், பொடித்த வெல்லம் சேர்த்துப் புரட்டினால்பூரணம் தயார்.பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தி போல் இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடி மோதகம் தயார் செய்யவும்.கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, மோத கத்தைப் பொரித்தெடுக்கவும்.மேலே தேன் ஊற்றிப் பரிமாறவும்.

தினமணி 17 Sep 2023 3:08 pm

இலை கொழுக்கட்டை 

தேவையான பொருட்கள்:மேல் மாவுக்கு:பச்சரிசி மாவு - 2 கிண்ணம்நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டிவாழை இலை -10 முதல் 15 துண்டுகள்உப்பு - தேவையான அளவு.பூரணத்துக்கு:தேங்காய் துருவல் - ஒரு கிண்ணம்,வெல்லம் - கால் கிண்ணம்,ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.செய்முறை:அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கிண்ணம் தண்ணீரை கொதிக்கவிடவும். அதில் உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.பூரணம் ரெடி. தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கழுவிய வாழை இலையில் பரப்பி, நடுவில் பூரணம் வைத்து, இலையோடு சேர்த்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்க வாழை இலை மணத்தோடு கொழுக்கட்டை தயார்!இதேபோல் பூவரசு இலையிலும் செய்யலாம். விருப்பத்துக்கு ஏற்ற பூரணம் வைத்து தயார் செய்யலாம்.

தினமணி 17 Sep 2023 3:07 pm

மாதவிடாய் காலத்தில் வலி ரத்தப் போக்கைத் தடுக்க..

உடலில் சூடு அதிகரிப்பதால்தான் மாதவிடாய் நாள்களில் வலி அதிகம் ஏற்படுகிறது. நாற்காலியில் வெகுநேரம் உட்காருவது, காற்றோட்டமில்லாத ஆடைகளை அணிவது போன்றவற்றால் உடல் சூடு அதிகரித்து, கர்ப்பப் பையைப் பாதிக்கும். வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம். உடல் சூட்டைக் குறைக்கலாம். கீழ்க்காணும் எட்டு உணவுகளை சாப்பிட்டால், மாதவிடாய் நாள்களில் மனமும், உடலும் நலம் பெற்று இருக்கலாம்.நீர்ச்சத்து உணவுகள்: நீர்ச்சத்து மிக்க உணவுகளை அதிக அளவில் உண்ண வேண்டும். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது பொடியாகவோ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உடல் சூட்டைத் தடுக்கும். மாதுளம் பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ சாப்பிடலாம். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும்.துவர்ப்பு உணவுகள்: மாங்கொட்டையைஅவித்ததோ அல்லது பச்சையாகவோ, மாதுளம் பழத்தின் உள்பகுதி தோல், வாழைப்பூ ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை வயிறு உப்புசம், உடம்பில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி வலியிலிருந்து ஆறுதல் அளிக்கும்.பிஞ்சு காய்கறிகள்: பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் சிலருக்கு மலச் சிக்கல் ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி ஏற்படும். மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச் சத்துள்ள பீன்ஸ் போன்ற காய்களை உண்ண வேண்டும்.முற்றல் காய்கறிகளைத் தவிர்த்து பிஞ்சு காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நார்ச் சத்துள்ள பயிர் வகைகள், பழ வகைகளையும் உண்ணலாம். இதனால் வயிற்றில் இருக்கும் கழிவுகள் சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும்.செக்கு நல்லெண்ணெய்: செக்கு நல்லெண்ணெய்யை மாதவிடாய் நாள்களில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி குடித்து வந்தால், உடலில் வலிமை ஏற்படும். அதில் இருக்கும் வைட்டமின் 'சி' எலும்புகளுக்கு வலிமைச் சேர்க்கும்.கறிவேப்பிலை: கறிவேப்பிலையைத் தேங்காய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளுக்கும் தீர்வு கிடைக்கும்.மோர்: மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துகொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்கும்.புட்டரிசி: அதிக ரத்தப்போக்கு, வலியைத் தடுக்க, புட்டரிசி என்று கூறப்படும் சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்க்கலாம்.உளுந்தங்கஞ்சி: உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுவாகும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்.

தினமணி 17 Sep 2023 3:05 pm

விடுகதைகள்

1.ஒரு மரத்திலே உச்சாணிக் கிளையிலே ஓட்டுச்சட்டியிலேயே இருக்கிறது களிமண். அது என்ன?2. ஒளியில் தொடர்வான். இருளில் மறைவான். அவன் யார்?3. இரவு வந்தால் பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறும் தோட்டம். அது என்ன?4.உருப்படியாய் ஒரு பிள்ளை பெற்று உயிரை விடுவாள். அவள் யார்?5. நீள உடம்புக்காரன், நெடுந்தூரம் பயணக்காரன், அவன் யார்?6. இவன் கறுப்பாக இருந்தால் மட்டுமே அழகு. அவன் யார்?7. முத்து முத்து தோரணம், தரையில் விழுந்து ஓடுது. அது என்ன?விடைகள்.1.விளாம்பழம், 2.நிழல், 3.வானம், நட்சத்திரங்கள், 4.வாழை, 5. ரயில், 6.தலைமுடி, 7. மழைத்துளி.

தினமணி 17 Sep 2023 1:51 pm

தெரியுமா?

உலகிலேயே மிகச் சிறிய நாடு வாடிகன் சிட்டி. இது 1929-இல் தனி நாடானது. இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினியும், போப் ஆண்டவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, தனி நாடானது. இந்த நாட்டில் வறுமை, அரசியல், எல்லைப் பிரச்னை எதுவும் கிடையாது.சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை பாலம் வரை ஆர்தன்காட்டன் என்பவரால் 1837-ஆம் ஆண்டில் தண்டவாளம் அமைக்கப்பட்டு, 'ரெட்ஹில்ஸ் ரயில்வே' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் செப். 12-இல் முதலில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் ஓடிய முதல் ரயில்.சென்னையில் உள்ள 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்' என்பதே நாட்டிலேயே மிகவும் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்படும் வரை ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட சித்தூர் மாவட்டத்தில் உள்ள 'வெங்கடநரசிம்ம ராஜூவாரிபேட்டா ரயில் நிலையம்தான்' மிகப் பெரிய பெயர் கொண்ட ரயில் நிலையமாக இருந்தது. மிகச் சிறிய பெயர் கொண்ட ரயில் நிலையம் - 'இப்'. இது ஒடிஸ்ஸா மாநிலத்தில் உள்ளது.பிரிட்டனில் 1834-இல் வில்லியம் கூப்பர் என்பவரால் கூட்டுறவு அங்காடி உருவாக்கப்பட்டது. இதுதான் உலகிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அங்காடியாகும்.நிலப்பகுதியில் மட்டுமல்ல; கடலில் மலைத்தொடர்புகள் உள்ளன. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மலைத்தொடரில்உள்ளது. இதன் நிலம் 650 முதல் 800 மைல்.உலகிலேயே மிக நீளமான கால்வாய் வோல்கா பால்டிக் கால்வாய். இதன் நீளம் 368 கி.மீ. ஆகும். வோல்கா நதியையும் பால்டிக் கடலையும் இணைக்கும் கால்வாய். இது ரஷியாவில் உள்ளது.உலகில் உள்ள அணு உலைகளின் எண்ணிக்கை 529. இதில் அமெரிக்காவில் மட்டும் 120 அணுஉலைகள் உள்ளன.

தினமணி 17 Sep 2023 1:48 pm

பிஞ்சுக் கைவண்ணம்!

அறிவிப்பு :பிஞ்சுக் கைவண்ணம் பகுதிக்கு அனுப்பப்படும் ஓவியத்துடன், பள்ளி முகவரி, படிக்கும் வகுப்பு, குழந்தையின் பாஸ் போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் ஆகியவற்றைக் கட்டாயம் இணைத்து அனுப்பவும்.-ஆசிரியர்

தினமணி 17 Sep 2023 1:46 pm

கண்டுபிடி கண்ணே!

இரண்டு படங்களுக்கும் ஆறு வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடித்து மகிழுங்கள்.விடை :கண்டுபிடி கண்ணே!

தினமணி 17 Sep 2023 1:44 pm

சிரி... சிரி...

''ஏன்டி, உன்னோட கணவர்தான் காணாமல் போனாரு? அதுக்கு ஏன் உன்னோட போட்டோவை கொடுத்து காணோமுன்னு விளம்பரம் கொடுத்திருக்கே?''''நான் காணோமுன்னு தெரிஞ்சாதானே அவர் தைரியமா வீட்டுக்கு வருவார்!''-ஆர்.சுந்தரராஜன்,சிதம்பரம்.''உன் கணவர் தூக்கத்துல பாடுகிறாரா, பாடிட்டு போகட்டுமே?''''இல்லடி. இடையிடையே என்னை சபாஷ்னு சொல்ல சொல்றாரே?''-நெ.இராமகிருஷ்ணன்,சென்னை.''வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்கிறது பெரிய மருமக. கோலம் போடுறது சின்னவ.. இதனால் பெரிய பிரச்னை''''அதனால் என்ன ஆச்சு..?''''பெரியவ கோலம் போட்ட பிறகு சின்னவ போய் தண்ணீர் தெளிச்சு சண்டையா போச்சு..''-ஏ.நாகராஜன்,பம்மல்.''என்னடி இது. இந்த முதியோர் இல்லத்தில் நடுத்தர வயசு பெண்களும் இருக்காங்க..?''''அதுவா? மாமியாரைவிட்டு பிரிய மனமில்லாத மருமகள்கள்தான் அவங்க?''-அ.சுஹைல் ரஹ்மான்,திருச்சி.''ஏன்டி உன் பையனை சென்னையில் படிக்க வைச்சிருக்கியாமே. நாகர்கோவிலில் இல்லாத காலேஜா..?''''நீ சொல்றது சரிதான். பையன் ஊர் சுற்ற ஆசைப்படுறான். அதான்.''-ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.''மிளகாய்ப் பொடி எப்படி தயாரிக்கிறாங்க..?''''மிளகாயில்..?''''அப்போ பல்பொடி...?-க.நாகமுத்து,திண்டுக்கல்.''மாப்பிள்ளை குடிகாரராக இருப்பாருன்னு எப்படி சொல்றே..''''சமையல்காரரிடம் வகை,வகையாக ஊறுகாய் செய்ய சொல்கிறாரே? அதை வைச்சுதான்!''-அ.செந்தில்குமார்,சூலூர்.''என்ன பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை பாட்டு பாடறாரு?''பொண்ணைவிட மாப்பிள்ளைக்கு சம்பளம் குறைவாம். அதான்!''-தீபிகா சாரதி,சென்னை.''உன்னை வாழ்த்த வயதே இல்லைடி..?''''அப்போ எதுக்கு வந்தே?''''உன்னிடம் திட்டு வாங்க வந்தேன்டி..''''ஹலோ.. என் மாமியார் உன்னோட வீட்டுக்கு வந்திருக்காங்களாமே..''''ஆமாம்மா அதுக்கென்ன..?''''பாதி சண்டையில் வந்துட்டாங்க? புத்திமதி சொல்லி வீட்டுக்குத் திருப்பி அனுப்பு..''''புதுசா வாங்கின பாத்திரத்தை ஏன் பரண் மேல் போட்டு கவிழ்த்தே..''''பழசா போகட்டுமேன்னுதான்..''பர்வதவர்த்தினி,பம்மல்.''எதிர்வீட்டு அக்கா போடுற கண்டிஷன் எனக்கு சரியா வரலைக்கா..''''அப்படி என்ன கண்டிஷன் முனியம்மா..''''அந்த ஐயா ஆபிசுக்கு போனவுடன் நான் வேலைக்கு வரணுமாம். அவங்க திரும்பி வர்றதுக்குள்ளே கிளம்பிடணுமாம்''''இந்த செருப்பு பாம்பு தோலில் செய்திருப்பாங்கன்னு தோணுது...''''எப்படி சொல்றே..''''போட்டுகிட்டு நடந்தா கால் வளைஞ்சி போகுதே..!''''என்ன அத்தை.. ரேஷன் கடைக்காரர்கிட்ட உனக்கு சுகர் இல்லைன்னு சொன்னியே..?''''சுகர் உள்ளவங்களுக்கு உரிமைத் தொகை இல்லைன்னு சொன்னாங்களே அதான்..''-வி.ரேவதி,தஞ்சாவூர்.

தினமணி 17 Sep 2023 12:21 pm

1,330 திருக்குறளுக்கு சிறுகதைகள்

திருக்குறளின் போதனைகளை அடிப்படையாக வைத்து 1,330 சிறுகதைகளை எழுதச் செய்து அதை ஏழு அடி உயரமும் ஆறு அடி அகலமும் கொண்ட பெரிய நூலாகத் தயாரித்துள்ளனர் பெரம்பலூரைச் சேர்ந்த 'அகழ் கலை இலக்கியம்' என்ற அமைப்பினர்'. வித்தியாசமான சாதனையை சாதித்திருக்கும் அந்த அமைப்பின் பொறுப்பாளரும், ஆங்கிலப் பேராசிரியையுமான வினோதினியிடம் பேசியபோது:''1,330 திருக்குறள் தொடர்பாக, 1,330 திருக்குறள்நூலாக வெளியிட முடிவு செய்தாலும் 133 எழுத்தாளர்களை ஒன்று திரட்டியது 2021-ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கில்தான்.சமூக வலைதளங்களில் 'தமிழ் எழுத்தாளர்களை வரவேற்கிறோம்'' என்று தகவல்களை வெளியிட்டபோது, பலரும் முன்வந்தனர். 'ஜூம்' முறையில் கலந்து பேசினோம்.133 எழுத்தாளர்களை உறுதிப்படுத்தியவுடன் உரிய அவகாசம் கொடுத்து, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஓர் அதிகாரத்தை தேர்ந்தெடுத்து பத்து குறள்களுக்குப் பொருத்தமான சிறுகதைகளை எழுதச் சொன்னோம். பெறப்பட்ட சிறுகதைகளை நடுவர் குழுவிடம் கொடுத்தோம். இந்தப் பணி முடிய 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.1,330 சிறுகதைகளை ஒரு தொகுப்பாக அச்சிடலாம் என்று முடிவு செய்தபோது, பிரமாண்ட வடிவில் அச்சிட்டால் என்ன? என்று தோன்றியது. திருக்குறளின் முதல் வரியில் நான்கு சீர் (சொல்) இரண்டாம் வரியில் மூன்று சீர் (சொல்) ஆக மொத்தம் ஏழு சொற்கள். அதனால் 7 அடி உயரமும் 7 அடி அகலமும் உள்ள நூலாக அச்சிட முடிவு செய்தோம். 'அகலத்தைக் குறையுங்கள்' எனஅச்சகத்தினர் கூறினர்.ஏழு அடி நீளத்திலும் மூன்று அடி அகலத்திலும் சிறுகதைகளை அச்சிட்டு,பிறகு ஒரு பாதியை மறு பாதியுடன் ஒட்டி, 7 அடி உயரமும் 6 அடி அகலமுள்ள நூலாக உருவாக்கினோம். தாளின் இரண்டு புறமும் அச்சிட்டுள்ளோம். ஒவ்வொரு பக்கத்தையும் லாமினேட் செய்திருப்பதால், புரட்ட எளிதாக இருக்கும். இந்த நூலை சுவர்ப் புறத்தில் சார்த்தி வைக்கலாம். பெரியவர்கள் நின்று கொண்டு வாசிக்கலாம். சிறார்கள் ஸ்டூல் மேல் நின்று வாசிக்கலாம்.எளிதாக கையில் எடுத்து வாசிக்கும் விதமாக, அகராதி வரிசையில் பத்து சிறுகதைகள் கொண்ட புத்தகமாக 133 நூல்களைத் தனியாக அச்சிட்டுள்ளோம். இதை அச்சிட ரூபாய் ஒரு லட்சம் செலவாகியுள்ளது. அதை 133 எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டோம்.எழுத்தாளர்களில் சிறார்களும், முதிர்ந்தவர்களுக்கு உண்டு. ஜனரஞ்சக இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களும் உண்டு. இந்த நூல்களை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்க அனுமதி பெற்று வழங்க உள்ளோம்'' என்றார்.

தினமணி 17 Sep 2023 12:15 pm

பேல்பூரி

கண்டது(தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள ஒரு சிற்றுண்டிக் கடையின் பெயர்)''வாங்க நம்ம அக்கா கடை''-வீர.செல்வம்,பந்தநல்லூர்.(மன்னார்குடியில் ஒரு காரில் எழுதியிருந்தது)''வார்த்தைகளில் அடங்கா காவியம்; வண்ணத்தில் அடங்கா ஓவியம் அம்மா''-முனைவர் க.இருளப்பன்,மன்னார்குடி,(திண்டிவனத்தில் பழையகட்டடங்களை இடித்துக் கொடுக்கும் கடையின் பெயர்)''தரைமட்டம்''-ம.வசந்தி,திண்டிவனம்.கேட்டது(சிதம்பரம் தெற்கு வாணியத் தெருவில் இரு உறவினர்கள் பேசியது)''மாமா. உங்க பொண்ணு பயங்கரமா கோபப்படுறா? சில நேரம் அடிக்கிறா, வந்து கேளுங்க?''''விடுங்க மாப்ளே. உங்க பெண்டாட்டி உங்களை அடிக்காம பக்கத்து வீட்டுக்காரரையா அடிப்பா?''-அ.ப.ஜெயபால்,சிதம்பரம்.(திருச்சி பூங்கா ஒன்றில் நடைபயிற்சியில் இருவர் பேசியது)''இவ்வளவு திடகாத்திரமாக இருப்பதுஎப்படி?''''மனைவியோட சண்டை போட்டது இல்லை. பிள்ளைங்களுக்கு அறிவுரை சொன்னது இல்லை. பெத்தவங்களை முதியோர் இல்லத்தில் விட்டது இல்லை.''''ம். நடிகர் வடிவேலு மாதிரி பிளான் பண்ணி வாழறீங்கன்னு சொல்லுங்க?''-அ.சுஹைல் ரஹ்மான்,திருச்சி.(சென்னையில் நண்பர் ஒருவரின் வீட்டில்தந்தையும், மகனும்..)''ஏன்டா... மொபைல வெச்சிட்டு பேப்பரை எடுத்து படியேன்டா?''''மொபைலில் இ.பேப்பர் தாம்பா படிக்கிறேன்.''-என்.கே.மூர்த்தி,சென்னை.யோசிக்கிறாங்கப்பா!விதைத்துக் கொண்டே இரு.முளைத்தால் மரம். முளைக்காவிட்டால் உரம்.-மா.திவாகர்,மரத்துறை.மைக்ரோ கதை''தாத்தா எங்கே போறீங்க?''''சுபாஷ் கடைக்கு..''''சபாஷ். அப்படின்னா வரும்போது எனக்குப் பிடிச்ச ஸ்வீட் உங்களுக்குத் தெரியுமே? மறக்காம வாங்கிட்டு வாங்க?'' என்று பேத்தி அகல்யாவின் அன்புக் கட்டளையை ஏற்று, பழனிசாமி வீட்டைவிட்டு புறப்பட்டார்.அப்போது அவருக்கு நண்பர் போன் செய்தார்.''பழனிசாமி சார். வர்றீங்களா டீகுடிப்போம்.''''சரி எங்க வரட்டும்..''''ஆகாஷ் கடைக்கு...''''சுபாஷ் கடைக்குப் போகலாமே..''''அங்கே அலுத்துப் போச்சு சார்..''பேத்தி கேட்ட ஸ்வீட்டுக்கு, சரியான ஒரு பதிலுக்குத் தலையை சொரிந்து கொண்டிருந்தார் பழனிசாமி.-பொன்.சொர்ணவேல்,செங்கோட்டை.எஸ்.எம்.எஸ்.மகிழ்ச்சியின் ரகசியம் விரும்புவதைச் செய்வது!வெற்றியின் ரகசியம். செய்வதை விரும்புவது!!-ஜி.அர்ச்சுனன்,செங்கல்பட்டு.அப்படீங்களா!சிறு பிள்ளைகள் விடியோ கேம்களுக்கு அடிமையாகி இருப்பதைத்தான் பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆனால், கனடாவைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி சிமர் குரானா விடியோ கேமையே உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.'சாதனை புரிய வயதில்லை' என்றாலும், கணினி மென்பொருள் கோடிங்கை சிறு வயதில் கற்றுக் கொண்டு விடியோ கேமை உருவாக்கியுள்ளார். அதுவும், குழந்தைகளுக்கு ஏற்ப பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட துரித உணவுகளைத் தவிர்ப்பது, சத்தான உணவுகளை உட்கொள்வது போன்றவற்றை வைத்து குழந்தைகளுக்கு நல் வழிகாட்டும் விடியோ கேமை சிமர் உருவாக்கி உள்ளார்.'யூ டியூப்' பார்த்து கணித்தைக் கற்றுக் கொண்ட சிமர், தொடக்கப் பள்ளி வகுப்பிலேயே மூன்றாம் வகுப்பு கணிதப் பாடங்களை படித்து அசத்தியுள்ளார். அவரது ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை பாராஸ் சிமருக்கு பிடித்த விடியோ கேம்களை அவரே உருவாக்கும் கனவை நனைவாக்கும் பணியைத் தொடங்கினார். பெரியவர்களுக்கே கோடிங் வகுப்புகள் கடினமாக இருக்கும் என்பதால், சிறுமி சிமருக்கு விடியோ கேம் கோடிங் வகுப்புகளை கற்றுத் தர யாரும் முன்வரவில்லை. பின்னர் ஒரு ஆசிரியர் மூலம் கேம்கள் உருவாக்கத்தை சிமர் கற்றுக் கொண்டார்.பள்ளி, மாலை வகுப்புகளைத் தொடர்ந்து கொண்டே சிமர் விடியோ கேம் உருவாக்கும் கோடிங் வகுப்புகளைத் துரிதமாக மேற்கொண்டார். சில மாதங்களில் விடியோ கேமை உருவாக்கிய 6 வயது சிறுமி என்ற சாதனையைப் படைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் சிமர்.சிமர் வேர்ல்ட் எனும் யூடியூப் சேனல் மூலம் புதிய கேம்களுக்கான யோசனைகளையும் சிமர் பெற்று வருகிறார்.-அ.சர்ப்ராஸ்

தினமணி 17 Sep 2023 12:11 pm

ஸ்டூடியோ!

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் தீபிகாநாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898'. இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் தமிழ் நடிகர்களான கமல்ஹாசன், பசுபதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் க்ளிப்ஸ் விடியோவைப் படக்குழு வெளியிட்டிருந்தது. ராஜமெளலி உள்ளிட்ட பலரும் விடியோவைப் பார்த்தபின் படக்குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பிரபாஸ், தீபிகா படுகோனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்: ''இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன். அவர் ஏற்கெனவே உலக அளவில் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் துடிப்போடு இருப்பார். எனக்கு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகிடைத்தது''என்று கூறியிருக்கிறார். 16 ஆண்டு கால அதிருப்திபாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கதார் 2' படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. இப்பட வெற்றியால் சன்னி தியோல் தனது சித்தி ஹேமாமாலினி குடும்பத்துடனும் சமரசமாகி இருக்கிறார்.எம்.பி.யான சன்னி தியோல் வீடு ஒன்று ஏலத்திற்கு வந்தது. அந்த ஏலமும் இதனால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சன்னி தியோல் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து 1993-ஆம் ஆண்டு 'டர்' என்ற படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் ஷாருக்கான் திரைப்படத்துறைக்குப் புதியவராக இருந்தார். ஆனால் சன்னி தியோல் பிரபலமாக இருந்தார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் சன்னி தியோல் அதிருப்தி தெரிவித்திருந்தார்.அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதோடு இருவரும் கடந்த 16 ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளவும் இல்லை. ஆனால் இப்போது இருவரும் சமதானமாகிவிட்டனர். இது குறித்துப் பேட்டியளித்த சன்னி தியோல், ''ஷாருக்கான் எனக்கு போன் செய்து 'கதார் 2' பட வெற்றிக்கு வாழ்த்து சொன்னார்.ஷாருக்கான் படத்தைப் பார்க்கப் போகும் முன்பு எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார். நான் அவருக்கு நன்றி சொன்னேன். அவரது மனைவி மற்றும் மகனிடமும் பேசினேன்'' என்று தெரிவித்திருந்தார். ஷாருக்கானும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும் போது, ஒரு ரசிகர், 'கதார் 2' பார்த்தீர்களா?' என்று கேட்டதற்கு, 'பார்த்தேன், பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது!' என்று தெரிவித்தார்.மகளுக்கு வழிகாட்டியாக ஷாருக்கான்ஷாருக்கானின் மகள் சுஹானாகான் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் வெப் சீரிஸில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் மற்றும் அமிதாப்பச்சன் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.இந்த வெப் சீரிஸை சோயா அக்தர் இயக்குகிறார். வரும் டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இது வெளியாக இருக்கிறது. ஆர்யன் கானும் வெப் சீரிஸ் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், பாலிவுட்டில் 'கஹானி 2' படத்தை இயக்கிய இயக்குநர் சுஜய் கோஷ் விரைவில் சுஹானா கான் மற்றும் ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக குறிப்பிட்டு இருந்தார்.தற்போது இப்படம் குறித்து மேலும் சில தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி சுஹானா நடிக்கும் படத்தில் ஷாருக்கான் கௌரவ தோற்றத்தில் மட்டும் நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சுஜய் கோஷ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் சுஹானாவை இப்படத்தில் பிரபலப்படுத்த முடியும் என்று ஷாருக்கான் கருதுகிறார்.இப்படத்தில் சுஹானா உளவாளியாக நடிக்கிறார். இதில் உளவாளிக்கு வழி காட்டியாக நடிக்கப்போவது நடிகர் ஷாருக்கான் என்று தெரிய வந்துள்ளது.ஒரே கட்டடத்தில் நட்சத்திர அலுவலகங்கள்மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் குறிப்பிட்ட பகுதியைச் சொத்துக்களில் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏற்கெனவே அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் மும்பையில் பல இடங்களில் வீடு, அலுவலகம் வாங்கி வாடகைக்கு விட்டுள்ளனர். தற்போது மீண்டும் மும்பை அந்தேரி வீர் தேசாய் ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'சிக்னேச்சர்' என்ற கட்டடத்தில் அமிதாப் பச்சன் 21-ஆவது மாடியில் நான்கு அலுவலகங்களை வாங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் 2099 சதுர அடி கொண்டதாகும். நடிகர் கார்த்திக் ஆர்யன், அதே கட்டடத்தில் நான்காவது மாடியில் ஓர் அலுவலகத்தை ரூ.10.09 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.இதே நான்காவது மாடியில் நடிகை சாரா அலிகானும், அவரது தாயார் அம்ரிதா சிங்கும் சேர்ந்து ஓர் அலுவலகத்தை ரூ.9 கோடிக்கு வாங்கியிருக்கின்றனர். பாலிவுட் நடிகை கஜோலும் இதே கட்டடத்தில் ஒரு அலுவலகத்தை வாங்கி இருக்கிறார்.இரண்டு ஆண்டு கரோனாவிற்குப் பிறகு மும்பையில் இப்போதுதான் வீடு மற்றும் அலுவலக விற்பனை சூடு பிடித்து இருப்பதாக ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மற்றும் பில்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அரசுக்குக் கடந்த மாதம் ரூ.776 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 21 சதவிகிதம் அதிகமாகும். மக்கள் அதிக அளவில் 500 முதல் 1000 சதுர அடி பரப்புள்ள சொத்துக்களில் ஆர்வம்காட்டுகின்றனர்.

தினமணி 17 Sep 2023 12:05 pm

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை நோய் குறைய என்ன வழி ?

எனது வயது 60. நீரிழிவு நோயால் பெரும் பாதிப்பு. சுகர் 300 மி.கி. என்ற அளவில் இருக்கிறது. தலைசுற்றல், கிறுகிறுப்பு உள்ளது. சர்க்கரை குறையவும், கிறுகிறுப்பு நிற்கவும் என்ன ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தும்போது ஆங்கில மருந்துகளை உபயோகப்படுத்தலாமா?ரா.மங்கயற்கரசி,மதுரை-1.மனம் சார்ந்த 'ரஜஸ்' எனும் தோஷமும், பித்தம் மற்றும் வாயு எனும் உடல் சார்ந்த தோஷங்களும் தம் அளவைவிட உயர்ந்த நிலையில், மனிதர்களுக்குத் தலைசுற்றல் எனும் கிறுகிறுப்பை ஏற்படுத்தும் என ஆயுர்வேதம் கூறுகிறது.இனிப்புச் சுவையில் பொதிந்துள்ள நிலம் மற்றும் நீரின் அம்சத்தினால் கட்டுப்படும் இம்மனம் மற்றும் உடல் சார்ந்த தோஷங்கள், அதன் வரவானது சர்க்கரையின் உயர்ந்த அளவால் உடலில் குறைக்கப்படும் நிலையில், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்தின் கட்டுப்பாடுகள் தளர்வினால் உயரே எழும்பி, ரத்தக் குழாய்களின் வழியே மூளையைச் சென்று தாக்கும் நிலையில், தலை கிறுகிறுப்புஏற்படுகிறது.ரத்தக் குழாய்களின் உட்புறச் சவ்வுகளில் உண்டாகும் வறட்சி, சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் சுணக்கம், உந்தித் தள்ளும் வாயுவின் வேகமான செயல்பாடு போன்றவைகளை ஏற்படுத்தும் இம்மஹாபூதங்களின் சீற்றமும் உங்கள் பிரச்னைக்குக் காரணமாகிறது.நிலம், நீர், உடலில் சேர்க்கப்பட வேண்டும். ரத்தக் குழாய்கள் நெய்ப்புற வேண்டும். வாயுவின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். உண்ணும் மருந்தினுடைய வீரியமானது, துரித கதியில் மூளையைச் சென்றடைய வேண்டும் என பல 'வேண்டும்' நிலையை உங்கள் உடல் அடைந்திருக்கிறது.பால் முதுக்கன் கிழங்கு, ஆமணக்கு, தேன் கொடுக்கி, மூக்கரட்டை, தேவதாரு, காட்டுளுந்து, காட்டுப்பயிறு, பூனைக்காலி, ஜீவனபஞ்சமூலம், ஹ்ருஸ்வ பஞ்சமூலம், நன்னாரி, சிறுபுள்ளடி ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நெய் மருந்து ஒன்று உள்ளது. இது இதயத்துக்கு ஏற்றது.சர்க்கரையின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உடல் மெலிவு, உடல் வலி, மேல் மூச்சு, வறண்ட இருமல் இவற்றைப் போக்கும்.மனம் சார்ந்த 'ரஜஸ்' எனும் தோஷத்தையும், உடல் சார்ந்த வாயு மற்றும் பித்த தோஷங்களாகக் கண்டிக்கும். சுமார் பத்து மில்லி நெய் மருந்தை, நீராவியில் உருக்கி,காலை, இரவு என இரு வேளை உணவுக்குப் பிறகு மூன்று மாதங்கள் வரை அருந்தி வரலாம்.நாட்டு மருந்துக் கடையில் வேங்கை மரப்பட்டை கிடைக்கும். பதினைந்து கிராம் பட்டையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அரை லிட்டராகக் குறுகியதும் வடிகட்டி, அதில் நூற்று ஐம்பது கிராம் புழுங்கலரிசி சேர்த்து சாதமாக வரும்வரை வேக வைக்கவும், இந்தச் சாதத்தில் மூன்று முதல் ஐந்து மில்லி கிராம் 'சிலாசத்து' எனும் பற்பம் கலந்து, ஏதேனும் ஒரு மாமிச சூப்புடன் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வரவும்.மாமிச உணவு சாப்பிடாதவராக இருந்தால் மோர் சாதமாகச் சாப்பிடலாம்.பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சர்க்கரை உபாதையின் தாக்கம் வெகுவாகக் குறையும். கழலை வீக்கம், கேன்சர் கட்டிகள், நிணநீர் கிரந்தி வீக்கம், உடல் பருமன், தோல் சார்ந்த படை உபாதைகள், பௌத்திரம், குடல் கிருமிகள், யானைக்கால், வீக்கம் போன்ற உபாதைகளும் நன்கு மட்டுப்படும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். மூன்று- ஆறு மாதங்கள் வரை சாப்பிடலாம்.மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம். இதனாலும் சீற்றமடைந்த ரஜ- பித்த- வாயுக்கள்சாந்தமடையும்.(தொடரும்)

தினமணி 17 Sep 2023 11:59 am

ஒரே தீர்வு

அன்று காலை லட்சுமி ஆன்ட்டி தூங்கி, எழுந்திருக்கும்போது மணி எட்டு.உடல் வலியுடன் மன வலியும் சேர்ந்து சோர்வை கொடுத்தது. வயது ஒன்றும் அதிகமில்லை ஐம்பத்து ஐந்து தான்.நமக்குப் பிடித்தமான விஷயங்கள் நடக்காது போனாலோ, அது முற்றிலும் பிறரால் புறக்கணிக்கப்பட்டிருந்தாலோ இம்மாதிரி பிரச்னைகள் வரத்தானே செய்யும்.வேலைக்காரப் பெண் சிவகாமி, உள்ளே பாக்கெட் பாலுடன் நுழைந்தாள். சிவகாமி டீ போட்டுக் கொண்டு வருவதற்குள், காலைக்கடன்களை, முடித்துவிட்டு சோபாவில் அமர்ந்த லட்சுமி 'பிளட் பிரஷர்' மாத்திரையைப் போட்டுக் கொண்டு டீயை குடித்தாள் .காலை டிபன் தயார் செய்யும் வேலையில் சிவகாமி தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது, லட்சுமி ஹாலில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டுக் கண்களைத் துடைத்தாள்.'மனக்குமுறலுக்கு மருந்தே கிடையாதா?'என்று தன்னுள் கேள்விக் கேட்டுக் கொண்டாள்.டிபன் முடித்தவுடன் சிறிது நேரம் செய்தித்தாளில் பார்வையைச் செலுத்தினார். மனசு அதை நிராகரித்தது. மடித்து வைத்தாள்.மீண்டும் ஹாலில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்து பார்த்து மனதுக்குள் அழுதாள்.காய்கறி வாங்க சிவகாமி மார்க்கெட் கிளம்பி போயிருந்தாள்.நேரத்தைப் போக்க நினைத்து லட்சுமி ஆன்ட்டி தொலைக்காட்சியை, ஆன் செய்தபோது, அங்கு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.நிகழ்ச்சி நடத்துபவர் பங்கேற்பாளர்களிடம் 'நீங்கள் உங்களுடைய வாழ்வை யாருக்காக வாழ்கிறீர்கள்?' என்கிற கேள்வியைக் கேட்ட அடுத்த விநாடி அந்தக் கேள்வி தன்னைப் பார்த்து கேட்ட மாதிரி இருந்தது லட்சுமிக்கு. அந்தக் கேள்வி லட்சுமியின் ஆழ்மனதில் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுத்தது.கணவனைப் பறிகொடுத்து வட இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தபோது ரமேஷுக்கு 10 வயது. இந்த ஊருக்கு வந்து, அவனை நன்கு படிக்க வைத்து, அவன் விரும்பிய ராஷ்மியை கல்யாணம் செய்துவைத்து, கொள்ளை அழகு பேத்தி சுஷ்மிதாவை அவர்கள் தன் கையில் கொடுத்தபோது, 'சொர்க்கம் இனி சுஷ்மிதாதான்' என்று நினைத்தாள்.சுஷ்மிதா ஒரு அழகு தேவதை. அவளைத் தினம் பார்த்து ரசித்து, அவளுக்காக விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக் கொடுத்து, அவளோடு விளையாடின பொழுதுகள் தான் கொடுத்து வைத்தவள் என்று எண்ணினாள்.இரண்டு வயது சுஷ்மிதாவுடன் கொஞ்சம் நேரம் கிரிக்கெட் விளையாட்டு; பின்னர் புட்பால் விளையாட்டு.அதன் பின்னர், காய்கறிகள் பழங்கள் பற்றிய பாடம் . மனித உறுப்புகள் பற்றிச் சொல்லிக் கொடுத்த பிறகு, ஆங்கிலத்தில் ரைம்ஸ் பற்றிய படிப்பு., அதன் பின்னர் ஒன்.. டு.. த்ரீ.. சொல்லிக் கொடுப்பாள். தாய் மொழி ஹிந்தியாக இருந்தபோதிலும், தன் பேத்திக்குத் தமிழ் நன்கு கற்க வேண்டும் என்று ஆத்திசூடி, திருக்குறள்.. கற்றுக் கொடுப்பாள் லட்சுமி.பயங்கரச் சுட்டியான சுஷ்மிதா உடனே அதை கற்றுக் கொண்டு 'அறம் செய விரும்பு..' என்று ஆரம்பித்து 'ஊக்கமது கைவிடேல்..' என்று சொல்லும்போது, இரண்டு கைகளாலும் சைகை காண்பிப்பாள். அதை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்ட லட்சுமி, இப்போது சுஷ்மிதா இல்லாத வெறுமையைப் பார்க்கின்றபோது, மனதுக்குள் அழ ஆரம்பித்தாள்.சுஷ்மிதாவுக்கு ஒவ்வொரு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது லட்சுமி தானும் ஒரு குழந்தை போல் ஆகி திரும்ப, அவள் தன் மழலையில் சொல்கிறபோது அனுபவிக்கும் ஆனந்தம் வார்த்தையில் வர்ணிக்க இயலாது.யானை சவாரி விளையாட்டு சுஷ்மிதாவுக்கு மிகவும் பிடிக்கும். தனது உடம்பின் மீது அவளை ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்ட் வந்து இரண்டாவது ரவுண்ட் கேட்கும்போது பாட்டிக்கு மூட்டு வலி 'உவ்வா' என்று லட்சுமி சொல்வாள்,. அடுத்த விநாடியே சுஷ்மிதா லேகிய பாட்டிலை எடுத்துவந்து தேய்த்து விடும்போது, அப்படியே கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தது எவ்வளவு சந்தோஷத்தை ஏற்படுத்தியது.பக்கத்தில் உள்ள பூங்காவுக்கு சுஷ்மிதாவை அழைத்துப் போய், ஊஞ்சல் விளையாட்டு, சீசா விளையாட்டு., சறுக்கு மரம்... இவைகள் மூலம் ஆசை தீர விளையாடும்போது அவள் முகத்தில் சந்தோஷ ரேகைகள் காணப்பட்டு, லட்சுமியும் மகிழ்வாள்.உடல்ரீதியாகக் களைப்பு தோன்றினாலும், குழந்தையின் கள்ளச் சிரிப்பு தேன் மழலை எல்லாக் களைப்பையும் போக்கிவிடும் லட்சுமிக்கு.ஒருமுறை அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட் அழைத்துப் போனபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், பழங்கள் பெயர்களை கடகடவென சொன்னதும் அங்குள்ளவர்கள் ஆச்சரியபட்டார்கள்.லிஃப்ட் ஏறும்போது மேல் பட்டனை பிரஸ் பண்ணும்போது, ''பாட்டி பாட்டி ,இது டிரையாங்கிள்'' என்று சுஷ்மிதா சொல்லும்போது, லட்சுமி பூரிப்பாள்.''அம்மா சாப்பாடு ரெடி'' என்று வேலைக்காரம்மா சொன்னதும், சகஜ நிலைக்குத் திரும்பினார் லட்சுமி.மதியம் 4 மணி. வீட்டு காலிங் பெல்லை ஆகாஷ் அழுத்தியபோது, லட்சுமியேவந்து திறந்தாள்.''யாரு?''''நான் ஆகாஷ். ஆன்ட்டி உங்க பக்கத்து வீடு..''''அடடே!! வாப்பா ! உள்ளே வா. பார்த்து நாலு வருஷம் மேல ஆச்சுல்ல ? அதான் சட்டுன்னு அடையாளம் தெரியலை?''''பரவாயில்ல ஆன்ட்டி.''''இரு டீ போட்டுக் கொண்டு வர சொல்றேன். சிவகாமி .. இரண்டு டீ கொண்டுவா?''''ஆமாம் ! வீட்டிலே ரமேஷ் அண்ணா, ராஷ்மி அண்ணி, குட்டி வாலு சுஷ்மிதா யாரையும் காணோம். எங்கே அவங்க? சுஷ்மிதா குட்டிக்கு டிரஸ், பொம்மைகள். உங்களுக்குத் தங்க வளையல் இரண்டு ஜோடி. ரமேஷ் அண்ணாவுக்கும், அண்ணிக்கும், டிரஸ் வாங்கிருக்கேன். நல்லா இருக்கான்னு பாருங்களேன்?'' என்று கொண்டு வந்த சாக்லேட்டுகளுடன் சேர்த்து கொடுத்து நமஸ்காரம் செய்தான் ஆகாஷ்.''நல்லா தீர்க்காயுசாக இருப்பா..''''என்ன ஆன்ட்டி? நான் கேட்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் காணும்?''அதைக் கேட்டதும், லட்சுமிக்கு துக்கம் தொண்டையை அடைத்து, அழ ஆரம்பித்துவிட்டாள்.''ஆன்ட் டி பீ கூல்.! என்ன நடந்துச்சு ஏன் அழுறீங்க?''அழுகையை, கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திவிட்டு, இந்த 3 வருஷ இடைவெளியின்போது நடந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தாள் லட்சுமி.''அவங்க இரண்டு பேரும்ஆபிஸ் போனவுடன் சுஷ்மிதாவை கவனிச்சுப்பேன். ,அவங்க இரண்டு பேரும் ஆபிஸ் முடிச்சிட்டு வருவதற்கும் சரியா இருக்கும். வந்தவுடன் அவங்க இரண்டு பேரும் டீ குடித்துக் கொண்டே, 'ரொம்ப தேங்க்ஸ் அத்தை.. நீங்க மட்டும் சுஷ்மிதாவை இப்படிகவனிச்சு எங்கச் சிரமத்தைக் குறைக்கிறீங்க.. இல்லைன்னா எங்க பாடு திண்டாட்டம்தான்' என்று ராஷ்மி சொல்ல, சொல்ல ரமேஷும் அதை ஆமோதிப்பான். அது எனக்கு இன்பமயமான காலம். ரமேஷுக்காக அடகு வைத்த இளமையை வட்டியுடன் மீட்டு தந்த தெய்வம் சுஷ்மிதா. நான் பெற்ற பிள்ளையிடம் காட்டிய கஞ்சதனத்தை பேத்தி சுஷ்மிதாவிடம் நான் காட்டியதில்லை. இப்ப அவ இந்த ஸ்டேட்டை விட்டே போயிட்டா ?''இப்படிச் சொன்னதும் ஆகாஷ் அதிர்ச்சியாகி, ''எவ்வளவு நாள் ஆச்சு ஆன்ட்டி?''''ஒரு ஆறு மாசம் இருக்கும். சுஷ்மிதா இல்லாமல் நான் தினமும் செத்துக்கிட்டு இருக்கேன் ஆகாஷ்..''''ஏன் என்ன ஆச்சு ?''''மூணு வருஷம் முன்பு நீயும் உங்க குடும்பமும் அமெரிக்கா போனதால், விஷயம் உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. இவ்வளவு அபிமானம் வைச்சு , என்னையும் அவங்களையும் நீ பார்க்க வந்திருக்கே.. உன்கிட்ட சொன்னா, எனக்கு மன பாரம் குறையும் .'''நான் கேட்டுக்குறேன் ஆன்ட்டி! இப்ப உங்களுக்குத் துணை யாரு?'''ஒரு வேலைக்காரம்மா பேரு சிவகாமி . வந்து துணைக்கு இருப்பாங்க..'' என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தாள் லட்சுமி.''நல்லா போய்க்கிட்டிருந்த அவங்க குடும்ப வாழ்க்கையில் பூ நாகம் ஒன்னு புகுந்துச்சு. ராஷ்மி ஹைதராபாத்தில் ஒரு செமினார் போனபோது , முன்னாள் காதலன் சந்தோஷை சந்தித்தாள். அவள் ரமேஷை உதறிவிட்டு சந்தோஷுடன் கிளம்பி போய் விட்டாள். இரண்டு பேரும் விவாகரத்து வாங்கிட்டாங்க.. இப்போ ராஷ்மி புணேவில் செட்டிலாயிட்டாள். மாதம் ஒரு நாள் குழந்தையைப் பார்த்துவிட்டு வரலாம் என்று தீர்ப்பு வந்தும், அதை ரமேஷ் ஏன் புறக்கணித்தான்னு தெரியலை. நான் எவ்வளவோ கெஞ்சி பார்ததும் சுஷ்மிதாவையும் தன்னுடன் கூட்டிகிட்டு போயிட்டாள் ராஷ்மி. அந்த சுஷ்மிதா என்னைவிட்டு போகமாட்டேன்னு சொல்லி, அடம் பிடிச்சப்ப, தரதரவென்று இழுத்துக் கொண்டு போனாள். என் உயிரோடு கலந்த சுஷ்மிதாவை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். ஆறு மாசம் ஆச்சு! இப்படி பைத்தியம் மாதிரி இருக்கேன். ஹால் பூரா பாரு சுஷ்மிதா போட்டோக்கள்தான்!''''கேக்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு ஆன்ட்டி. ஆமாம் ரமேஷ் அண்ணா ஒன்னும் கேக்கலையா?''''துரோகம் செஞ்ச ராஷ்மி மேலயும், குடும்பத்தைக் கலைச்ச சந்தோஷ் மீதும் கோபம் கொண்டு, ஒரு சந்நியாசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கான்.''''ரமேஷ் அண்ணா இப்ப எங்கே இருக்கார்?''''எங்கே இருக்கான்? என்ன வேலை பார்க்கிறான்? எதுவும் எனக்குத் தெரியாது? மாதத்தில் முதல் ஞாயிறு வருவான். செலவுக்குப் பணம் கொடுத்து செல்வான். அரை மணி நேரம் கூடத் தங்க மாட்டான். வேலைக்கார அம்மாவிடம் என்னைக் கவனமாகப் பாத்துக்கச் சொல்வான். இதே நிலைமை தான் ஆறு மாசமா..''சட்டென்று காலண்டரை பார்த்தான் ஆகாஷ்.நல்ல வேளை நாளை முதல் ஞாயிறு. ரமேஷ் வந்தவுடன் ,இந்தப் பிரச்னை பற்றி ஒரு தீர்வு கிடைக்கப் பாடுபடுவோம்.''சரி ஆன்ட்டி ! நான் கிளம்பறேன். நான் ஹோட்டலில் தங்கிட்டு நாளை வரேன்.''''என்ன ஆகாஷ் வராதவன் வந்துருக்கே! இங்கேயே தங்கு. எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்'.டின்னர் ஆன்ட்டியுடன் சேர்ந்து சாப்பிட்ட பிறகு, அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் படுக்கப் போனான். ஆனால் தூக்கம் வர மறுத்தது.நினைவலைகள் பின் நோக்கி சென்றது.புறநகர் பகுதியில் லட்சுமியின் வீட்டுக்குப் பக்கத்தில் இவர்கள் குடி வர இருவரது குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் நன்கு பழக ஆரம்பித்தனர்.வட இந்தியாவிலிருந்து இவர்களும் புலம் பெயர்ந்தவர்கள். அதுவும் ஆகாஷ் என்றால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். சுஷ்மிதா அப்போது 6 மாத குழந்தை.அவன் அமெரிக்கா போகப் பண உதவி செய்த லட்சுமியை எப்படிமறக்க முடியும்?மனோதத்துவப் படிப்புக்கு அமெரிக்கா போய் அங்கேயே வேலை கிடைத்து, 3 வருடம் கழித்து, ஊர் திரும்பிய ஆகாஷுக்கு , இப்படியொரு நிலைமையில் லட்சுமியை சந்திப்பான் என்று நினைக்கவில்லை.தான் ஒருசைகாலிஜிஸ்ட் எப்படியும்ஆன்ட்டியை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும். அதுதான் நன்றிக்கடன் என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டான்.மறுநாள் காலையில் சீக்கிரமே வந்துவிட்ட ரமேஷை பார்த்ததும், ஆகாஷ் மனம் சங்கடப்பட்டது . அவனிடம் இருந்த துள்ளல் காணாமல் போய் இருந்தது . லட்சுமி ஆன்ட்டி சொன்னபடி ஒரு சந்நியாசி மாதிரிதான் இருந்தான். சேவிங் செய்யாத முகம் கண்களில் எப்போதும் சோகம் தெரிந்தது.பரஸ்பர விசாரிப்புக்கு பிறகு ஆகாஷ் பேச்சை தொடர்ந்தான்''ஐ ஆம் ரியலி சாரி அண்ணா. எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன். இப்போ ஆன்ட் டி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இதை உடனடியாகக் களையணும். உங்க ஒத்துழைப்பு வேணும் அண்ணா..''''ஆகாஷ்.! நான் என்ன செய்ய முடியும்?'' என்றான் விரக்தியுடன் ரமேஷ்.''அப்படியில்லை அண்ணா ! நீங்க ஒருமுறை புணே போயிட்டு வாங்க . ஆன்ட்டியையும்அழைச்சிட்டு போங்க! சுஷ்மிதாவை பார்த்துப் பேசினால் ஆன்ட்டி சந்தோஷப்படுவாங்க..''இப்படி ஆகாஷ் சொன்னதும் ஆவேசத்துடன் ரமேஷ். ''அந்த ஓடுகாலியை பார்க்க நான் போகப் போவதில்லை.'' என்றான்.''அண்ணா நீங்க ஏன் அப்படி நினைக்கணும் ? உங்க வாரிசு, உங்க ரத்தம் பார்க்க போங்க. கூடவே அம்மாவும் வந்துட்டு போகட்டும்..''''இல்லை ஆகாஷ் என் மனசு கல்லாயிடுச்சு''''சரி நீங்க போக வேண்டாம் அண்ணி போன் கொடுங்க...''''அவ ஃபோன் நம்பர் என்கிட்ட இல்லை. வாங்கி வைச்சுக்க விருப்பமும் இல்லை.''''சரிஅட்ரஸ் கொடுங்க. புணேவில் இருக்கும் என் நண்பனைவிட்டுச் சந்திக்கச் சொல்லிஃபோன் நம்பர் வாங்குகிறேன். என்கிட்ட பேச சொல்றேன்..''''இது தேவையில்லாத ஒன்று ஆகாஷ்.''''இல்லைண்ணா! இப்ப நான் கேட்கிறது கூட ஆன்ட்டி மனநிலை உத்தேசித்துத் தான். பாருங்க ஆன்ட்டியை... மனதளவில் நொறுங்கி இருக்காங்க..''வேண்டா வெறுப்பா முகவரியை சொன்னான்.பின்னர், தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி கிளம்பி போயிருந்தான் ரமேஷ்.அட்ரஸ் குறித்துக் கொண்டு நண்பனிடம், குறிப்பிட்ட விலாசத்தில் ராஷ்மியைப் பார்க்கும்படி ஃபோனில் தகவல் சொன்னான் ஆகாஷ். தன் குறிக்கோளைச் சுருக்கமாகச் சொல்லி இந்த விஷயத்தில் தீவிரம் பற்றிச்சொன்னான்.அன்று மாலையே ஆகாஷின் நண்பன் ராஷ்மி விலாசத்தைக் கண்டுபிடித்து ,அவளது ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டான் . தன் நண்பனும் ஒரு சைகாலாஜிஸ்ட் என்பதால் ராஷ்மியிடம் இந்தப் பிரச்னை பற்றிப் பேச முடிந்தது.ஆகாஷ் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால் அவளும் பேசினாள்.''அண்ணி உங்க சொந்த விஷயம் பத்தி, நான் எதுவும் பேசமாட்டேன்..''தான் சொல்ல வேண்டியது பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, '' ஒரு சைகாலிஜிஸ்டு பார்வையில் ஆன்ட்டி படும் பாசப் போராட்டதுக்கு ,ஒரே தீர்வு இருக்கு; அது உங்களிடம் இருக்கு அண்ணி'' என்றான் ஆகாஷ்.தன் அட்வைஸ் கேட்டு நடந்தால், ஆன்ட்டியின் உயிர் காப்பாற்றப்படும் என்று சொன்னதும்,அவள் மனம் இறங்கினாள்.''ஆன்ட்டி நீங்க சுஷ்மிதாவுடன் பேச, பார்க்க ,நான் சொல்ற ஒரே வழிதான் இருக்கு ! நீங்க ஸ்மார்ட் போன் வைச்சுருக்கிங்களா?''''இல்லை..''''என்ன ஆன்ட்டி ? இந்தக் காலத்திலே எல்லார் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கும்போது உங்ககிட்ட இல்லைன்னு சொல்றது ஆச்சர்யமா இருக்கு.''''இல்லை ஆகாஷ்... சுஷ்மிதா இருந்தவரைக்கும் அதற்கு வாய்ப்பு இல்லை. அவ ஊரை விட்டுப் போனதும், நான் ஒடுங்கி போயிட்டேன்..''''பரவாயில்லை ஆன்ட்டி ! இன்றைய அறிவியல் வளர்ச்சி எல்லோரையும் நம் பக்கத்தில் கொண்டு விட்டுருக்கு அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும். நமக்குச் சாதகமான விஷயம்தான்!''உடனடியாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி வந்து, அதை எப்படி இயக்குவது என்று சொல்லிக் கொடுத்தான் ஆகாஷ்.உடனே ஆன்ட்டியின் வாட்ஸ் அப் நம்பருக்கு வர சொல்லி விடியோ காலில் சுஷ்மிதாவை பேசச் சொன்னான். விடியோவில் பார்த்ததும், ''சுஷ்மிதா கண்ணு'' என்று லட்சுமி கூப்பிட ''பாட்டி பாட்டி'' என்று சுஷ்மிதாவும் பேசினாள். இருவரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முத்தமழை பொழிந்தனர். அவர்கள் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர்.அந்த நிமிடங்கள் வர்ணிக்க இயலாத ஒன்று.சுஷ்மிதா கைகொட்டி சிரித்துத் துள்ளல்.அதைப் பார்த்த லட்சுமியின் மனம் லேசானதை கவனித்தான் ஆகாஷ்.ராஷ்மியின் ஒத்துழைப்புக்கு நன்றி சொன்னான்ஆகாஷ்.அதே சமயம் ராஷ்மியிடம் ஒரு வேண்டுகோளை வைத்தான்.''அண்ணி,ஆன்ட்டி எப்போதெல்லாம் சுஷ்மிதாவை நினைத்து பார்க்க வேண்டும் என்று தோன்றி வாட்ஸ் அப் விடியோ காலில் வரும்போது, ஒத்துழைப்புக் கொடுங்கள். பாட்டி- பேத்தி உறவு என்பது வார்த்தையில் சொல்ல முடியாத பந்தம். உங்களுக்கு மன முறிவு ஏற்பட்டது, அதனால் பிரிந்தது இதெல்லாம் சுஷ்மிதா குட்டிக்குத் தெரியாது. அதுக்குத் தெரிஞ்சது எல்லாம் பாட்டியின் அன்பும், அரவணைப்பும் மட்டுமே. நீங்கள் ஒரு நாள் பாட்டியாக மாறும்போது அந்த உணர்வுகள் உங்களுக்கும் புரியும்.''ராஷ்மிக்கு ஆகாஷ் சொன்ன அறிவுரையை ஏற்றுகொண்டு, வாட்ஸ்அப் கால் மூலம் ஒவ்வொரு முறையும் வர சம்மதித்தாள்.''காலப் போக்கில் எல்லாமே காணாமல் போய் விடும் ஆன்ட்டி. என்னதான் நீங்கள் பாசமும் அன்பையும் காட்டினாலும் ரேஷ்மி சுஷ்மிதாவின் அம்மா. உங்க மருமகள் என்கிற பந்தம் முறிந்து போனாலும், சுஷ்மிதாவை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வதில் அக்கறை இருக்கும். சுஷ்மிதாவுக்கு, உங்கள் அன்பு கூடிய சீக்கிரம் புரியும் !அவள் உங்களைத் தேடி நிச்சயம் ஒரு நாள் வருவாள். அதே சமயம் நீங்க ஒன்றை புரிஞ்சுக்கணும் மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகத்தில் கடவுள் தோற்றுவித்த நியதி. வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகி விட்டால் யாருடைய மாறுதலும் நம்மைப் பலமிக்கச் செய்யாது. இதைத் தான் கவிஞர் கண்ணதாசன் 'மாறுவதைத் தெரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்' என்று... '' என்றான் ஆகாஷ்.லட்சுமி ஆன்ட்டிக்கு சரியான முறையில். கவுன்சிலிங் கொடுத்து , தீர்வு கொடுத்த திருப்தியுடன் ஊர் கிளம்பினான் ஆகாஷ்.

தினமணி 17 Sep 2023 11:57 am

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 158

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்த நிலையில், மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் இருந்தனர். அஜித் சிங்கின் உதவியாளர் சமர்பால் சிங் எனது நெருங்கிய நண்பர். உத்தர பிரதேச அரசியல் குறித்துத் தெரிந்து கொள்வதாக இருந்தால், நான் அவரிடம் போய் உட்கார்ந்து விடுவேன். மிகவும் துல்லியமாகத் தேர்தல் முடிவுகளை அவர் கணித்து விடுவார்.துக்ளக் ரோடிலுள்ள அஜித் சிங்கின் வீட்டுக்கு உத்தர பிரதேசத் தேர்தல் நிலவரம் குறித்துத் தெரிந்து கொள்ளப் போயிருந்தேன். அஜித் சிங் பிரசாரத்தில் இருந்ததால், வழக்கமான கூட்டம் எதுவும் இல்லாமல் வீடும் அலுவலகமும் வெறிச்சோடிக் கிடந்தது.சமர்பால் சிங் தனது அலுவலக அறையில் தொலைபேசியில் உத்தரவுகள் பிறப்பித்தும், தகவல்களைக் குறிப்பெடுப்பதுமாக இருந்தார். நான் போய் அமர்ந் ததும், தனது அலுவல்களை மூட்டைகட்டிவிட்டு என்னோடு அரசியல் பேசத் தயாரானார் அவர்.'உத்தர பிரதேசத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதுதான் எனது கணிப்பு. பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸூம் மூன்றாவது அணி அமைத்திருப்பதால், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சியாக வரலாம். ஆட்சிக் கலைப்புக்கு முன்னர் இருந்த நிலைமைதான் மீண்டும் வரும். மாயாவதியை முதல்வராக ஏற்றுக் கொள்ள முலாயம்சிங் யாதவ் தயாராக இருந்தால் மட்டும்தான், பாஜகவுக்கு மாற்றாக இன்னொரு அரசை அமைக்க முடியும்.''இதுதான் அஜித்ஜியின் கணிப்புமா?''அவர்தான் முலாயம்சிங்கின் கூட்டணியில் இருக்கிறாரே. முலாயம் எப்படி சம்மதிப்பார்? நாங்கள் 38 இடங்களில் போட்டி போடுகிறோம். எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் எங்கள் கருத்துக்குமரியாதை இருக்கும்...''எத்தனை இடங்களில் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறீர்கள்?''அதைப் பற்றி நான் அபிப்பிராயம் சொல்லக்கூடாது. முலாயம்சிங் முதல்வராவதை மாயாவதியும், மாயாவதி முதல்வராவதை முலாயம்சிங்கும் எப்பாடு பட்டாவது தடுத்து விடுவார்கள். நாங்கள் 25 இடங்களில் வெற்றி பெற்றால், ஒருவேளை பொதுவான முதல்வர் வேட்பாளராக அஜித்ஜிக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.''என்னதான் நடக்கும் உத்தர பிரதேசத்தில்?''நான் சொல்கிறேன், குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அநேகமாக, குடியரசுத் தலைவர் ஆட்சிதான் தீர்வாக இருக்கும். ஆட்சி அமைவதாக இருந்தால், மாயாவதி தலைமையில்தான் ஆட்சி அமையும். மாயாவதியை பாஜக ஆதரிக்கப் போகிறதா, சமாஜவாதி - காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணி ஆதரிக்கப் போகிறதா என்பதைப் பொறுத்து அமையும். இல்லாவிட்டால், ஆளுநர் ஆட்சிதான்...'எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், சமர்பால் சிங் சொன்னது போலவே தேர்தல் முடிவுகள் அமைந்தன. குடியரசுத் தலைவர் ஆட்சிதான் அமல்படுத்தப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு, பாஜக ஆதரவுடன் மாயாவதி முதல்வரானார். 1996-இல் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் பல தேர்தல்களில் சமர்பாலின் கணிப்பு சரியாகவே இருந்து வந்திருக்கிறது.'அது போகட்டும் சமர்பால், தில்லியில் என்ன நடக்கும்? தேவேகெளடா ஆட்சி தனது பதவிக் காலத்தை முடிக்குமா?''இது நித்திய கண்டம், பூர்ணாயிசு ஆட்சி. எந்த நேரமும் காங்கிரஸ் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடும். சீதாராம் கேசரிக்குப் பிரதமராகும் ஆசை வராமல் இருக்கும் வரைதான், தேவேகெளடா பிரதமராக இருப்பார்...''சீதாராம் கேசரிக்கு அப்படியொரு ஆசை வரும் என்று நினைக்கிறீர்களா?''ஏன் வரக்கூடாது? வெறும் 46 இடங்களுள்ள ஜனதா தளம் ஆட்சி அமைக்கலாமானால், 140 இடங்கள் கொண்ட காங்கிரஸ் ஏன் ஆட்சி அமைக்கக் கூடாது? நாங்கள் ஆட்சி அமைக்கிறோம்,ஆதரவு தாருங்கள்; இல்லையென்றால் தேர்தலை சந்தியுங்கள் என்று சொன்னால், இப்போது ஐக்கிய முன்னணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சீதாராம் கேசரி வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும்.'தொலைபேசி ஒலித்தது. மிக ஆர்வமாக சமர்பால் ஹிந்தியில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். உரையாடல் முடிந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னார் -'தேவேகெளடா விளையாடத் தொடங்கி இருக்கிறார். நரசிம்மராவ் மீது செயின்ட் கிட்ஸ் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்.''அடுத்தது என்ன நடக்கும்?''ராஜீவ் காந்தியின் தூண்டுதலால், அவர் பிரதமராக இருக்கும் போது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், இப்போது நரசிம்ம ராவை குறி வைக்கிறார்கள்.'அதற்கு மேல் நான் அங்கே இருக்க விரும்பவில்லை. அங்கிருந்தபடி ஸ்ரீகாந்த் ஜிச்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் நரசிம்ம ராவின் மோதிலால் நேரு மார்க்இல்லத்துக்குப் புறப்பட இருப்பதாகச் சொன்னார்.உடனடியாகக் கிளம்பி வந்தால் தன்னுடன் சேர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். கிளம்பி விட்டேன்.பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நரசிம்ம ராவ் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், அதனால் உடனடியாக அவரது வீட்டிற்குப் போவதாக இல்லை என்றும் ஸ்ரீகாந்த் ஜிச்கர் தெரிவித்தார். தன்னிடமிருந்த ஒரு கோப்பை எடுத்து, என்னிடம் படிப்பதற்கு நீட்டினார். அது, நரசிம்ம ராவ் மீதான செயின்ட் கிட்ஸ் வழக்கின் குற்றப்பத்திரிகை.சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. அதிலும் வியப்பு என்னவென்றால், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் சிபிஐ இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்கிறது என்பதுதான்.1996-இல், இந்த வழக்கு ஏழு ஆண்டு பின்னணி கொண்டது.ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக, ராஜீவ் காந்தி மீது அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த வி.பி. சிங் ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினார். காங்கிரஸில் இருந்து விலகி 'ஜன் மோர்ச்சா' என்கிற கட்சியைத் தொடங்கி இருந்தார் வி.பி. சிங். தொடர்ந்து ராஜீவ் காந்திக்கும்அவரது குடும்பத்தினருக்கும் எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.வி.பி. சிங்கிற்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக, அவர் மீது சில குற்றச்சாட்டுகளை எழுப்ப சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதுதான் செயின்ட் கிட்ஸ் வழக்கு. வி.பி. சிங்கின் மகன் அஜய் சிங், நியூயார்க் சிட்டி வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். செயின்ட் கிட்ஸ் தீவிலுள்ள வங்கியில் அவரது பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டது என்றும், ஃபர்ஸ்ட் டிரஸ்ட் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்தின் பெயரில் வி.பி. சிங்குக்கு மொத்தம் 2 கோடியே 10 லட்சம் டாலர் அந்த வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் கூறப்பட்டது.1986 செப்டம்பர் 16-க்கும், 1987 மார்ச் 26-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட்டது என்று, 1989 ஆகஸ்ட் மாதம் குவைத்திலிருந்து வெளிவரும் 'அரப் டைம்ஸ்' பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது.சந்திராசுவாமியின் உதவியுடன், இது தொடர்பாக அப்போது ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் போலி ஆவணங்களைத் தயாரித்தார் என்பதுதான் குற்றச்சாட்டு.'சதித்திட்டம் தீட்டுதல், போலி ஆவணங்களை உருவாக்குதல், வி.பி. சிங்கின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப் போலி ஆவணங்களைத் தயாரித்தல்' உள்ளிட்ட குற்றங்களுக்காக பி.வி. நரசிம்ம ராவ், சந்திராசுவாமி, அவரது உதவியாளர் கே.எஸ். அகர்வால், வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த கே.கே. திவாரி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களில் நரசிம்ம ராவ் ஈடுபட்டிருக்க வழியில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அந்த வழக்கில் அமலாக்கப் பிரிவின் முன்னாள் தலைவர் கே.எஸ். வர்மா, ஆயுத வியாபாரி அட்னான் கஸாகியின் மாப்பிள்ளையான லாரி கோப் ஆகியோரும் இணைக்கப் பட்டிருந்தனர். வெளிநாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் வெளியாகி இருந்த செய்தியின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் விசாரணை நடத்தப்படுவதும் விசிரித்திரமாக இருந்தது.'படித்துப் பார்த்தீர்களா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?' - சிரித்தபடியே கேட்டார் ஜிச்கர்.'சிறு பிள்ளைத்தனமாகத் தெரிகிறது. இதை எப்படி உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கச் சொல்கிறது என்பதுதான் புரியவில்லை.''இன்னும் நிறைய வேடிக்கைகள் இருக்கின்றன. ஃபர்ஸ்ட் டிரஸ்ட் கார்ப்பரேஷனின் அப்போதைய தலைவர் ஜார்ஜ் டி. மெக்லியான் இறந்துவிட்டதால் அவரது பெயர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது. லாரி கோப், வர்மா மீது வழக்குத் தொடர எந்தவித ஆதாரமும் இல்லை என்று சிபிஐ தெரிவித்தும்கூட அவர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிடிப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.அயல் நாட்டவரான லாரி கோப்பைப் பிடித்துக் கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு மாஜிஸ்ட்ரேட் பிரேம்குமார் உத்தரவிடுகிறார். சந்திராசுவாமிக்கும், அகர்வாலுக்கும் ஜாமீன் அளித்திருக்கிறார். நரசிம்ம ராவுக்குக் கைது வாரண்ட் பிறப்பிக்கிறார். எல்லாமே விசித்திரமாக இருக்கிறது...''இந்த வழக்கு என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?''யாருக்குத் தெரியும்? இதுபோல இன்னும் எத்தனை வழக்குகளை நரசிம்ம ராவ்ஜிக்கு எதிராக ஜோடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இதன் பின்னணியில் இருப்பது யார் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது...''பிரதமர் தேவேகெளடாவுக்கு இதில் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக நினைக்கிறீர்களா?''யாரையும், எதையும் எதுவும் சொல்ல முடியவில்லை. பிரதமர் தேவே கெளடா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ். அகமதியைச் சந்தித்திருக்கிறார். எதற்காக சந்தித்தார், அதற்கான அவசியம் என்ன என்று தெரியவில்லை. நரசிம்ம ராவ் கைதாவதாலோ, காங்கிரஸ் பலவீனப்படுவதாலோ பிரதமர் தேவே கெளடாவுக்கோ, ஜனதா தளத்துக்கோ என்ன லாபம்? அப்படியே ஏதாவது ஆதாயம் இருந்தால் அது பாஜகவுக்குத்தான். பாஜகவின் பங்கு இதில் என்னஎன்றுகூட யோசிக்கத் தோன்றுகிறது...'நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது தொலைபேசி ஒலித்தது. பேசி முடித்ததும் அவர் எழுந்திருந்தார்.'வாருங்கள், பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போவோம். நரசிம்ம ராவ்ஜி அங்கே போயிருப்பதாகத் தெரிகிறது. அவரது வழக்குரைஞர் ஆர்.கே. ஆனந்த், கபில் சிபல், தலைவர்கள் குலாம் நபி ஆஸாத், சியாமசரண் சுக்லா, பல்ராம் ஜாக்கர் ஆகியோரும் பிரணாப் முகர்ஜியை சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாமும் அங்கே போவோம்' என்றபடி என்னையும் அழைத்துக் கொண்டு விரைந்து வெளியே வந்தார்.நாங்கள் காரில் ஏறி அமர்ந்து கிளம்பும் நேரத்தில், ஜிச்கரின் உதவியாளர் ஓடிவந்து அந்த திடுக்கிடும் செய்தியை அவரிடம் ரகசியமாகத் தெரிவித்தார். 'என்ன?' என்று நான் கேட்பதற்குள், ஜிச்கரே என்னைப் பார்த்துச் சொன்னார் -'பேட் நியூஸ்... நரசிம்ம ராவ்ஜியைக் கைது செய்ய பெருநகர மாஜிஸ்டிரேட் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்...'(தொடரும்)

தினமணி 17 Sep 2023 11:54 am

செங்கோட்டை முழக்கங்கள் 17 - நமது கடமை... நாட்டைக் காத்தல் | 1963

செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய இறுதி உரை இது. 1947 முதல் 1963 வரை தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவால், தான் உண்மையாக நேசித்த 'சகோதரன்' சீனா இழைத்த நம்பிக்கை துரோகம்... ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த மன வேதனையில் நேரு ஆற்றிய இந்த உரை, அவரது ஆற்றாமையை நன்கு வெளிப்படுத்தியது.

தி ஹிந்து 16 Sep 2023 11:34 pm

செங்கோட்டை முழக்கங்கள் 17 - நமது கடமை... நாட்டைக் காத்தல் | 1963

செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய இறுதி உரை இது. 1947 முதல் 1963 வரை தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவால், தான் உண்மையாக நேசித்த 'சகோதரன்' சீனா இழைத்த நம்பிக்கை துரோகம்... ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த மன வேதனையில் நேரு ஆற்றிய இந்த உரை, அவரது ஆற்றாமையை நன்கு வெளிப்படுத்தியது.

தி ஹிந்து 16 Sep 2023 10:37 pm

செங்கோட்டை முழக்கங்கள் 17 - நமது கடமை... நாட்டைக் காத்தல் | 1963

செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய இறுதி உரை இது. 1947 முதல் 1963 வரை தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவால், தான் உண்மையாக நேசித்த 'சகோதரன்' சீனா இழைத்த நம்பிக்கை துரோகம்... ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த மன வேதனையில் நேரு ஆற்றிய இந்த உரை, அவரது ஆற்றாமையை நன்கு வெளிப்படுத்தியது.

தி ஹிந்து 16 Sep 2023 9:37 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

தி ஹிந்து 16 Sep 2023 9:27 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | வாசகர்களின் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கிய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். ’உங்கள் குரல்’ பகுதி மூலம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

தி ஹிந்து 16 Sep 2023 9:00 pm

செங்கோட்டை முழக்கங்கள் 17 - நமது கடமை... நாட்டைக் காத்தல் | 1963

செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய இறுதி உரை இது. 1947 முதல் 1963 வரை தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவால், தான் உண்மையாக நேசித்த 'சகோதரன்' சீனா இழைத்த நம்பிக்கை துரோகம்... ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த மன வேதனையில் நேரு ஆற்றிய இந்த உரை, அவரது ஆற்றாமையை நன்கு வெளிப்படுத்தியது.

தி ஹிந்து 16 Sep 2023 8:47 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | வாசகர்களின் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கிய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். ’உங்கள் குரல்’ பகுதி மூலம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

தி ஹிந்து 16 Sep 2023 8:47 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

தி ஹிந்து 16 Sep 2023 8:47 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | பிரபலங்களின் பார்வையில்...

சமுதாய மேம்பாட்டுக்காக நல்ல நோக்கத்தோடும் அக்கறையோடும் நடுநிலையான செய்திகளைத் தருவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தி ஹிந்து 16 Sep 2023 8:45 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | இனியதோர் பயணத்தில்...

உங்கள் வாழ்த்து அலை, குளிர் தென்றலாக வந்து நிறைக்கிறது எமது வாசலை! 'இந்து தமிழ் திசை' செய்தித்தாளின் இந்தப் பத்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பது வாசக சொந்தங்களாகிய உங்களின் குதூகலத் திருவிழா!

தி ஹிந்து 16 Sep 2023 7:52 pm

செங்கோட்டை முழக்கங்கள் 17 - நமது கடமை... நாட்டைக் காத்தல் | 1963

செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய இறுதி உரை இது. 1947 முதல் 1963 வரை தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவால், தான் உண்மையாக நேசித்த 'சகோதரன்' சீனா இழைத்த நம்பிக்கை துரோகம்... ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த மன வேதனையில் நேரு ஆற்றிய இந்த உரை, அவரது ஆற்றாமையை நன்கு வெளிப்படுத்தியது.

தி ஹிந்து 16 Sep 2023 7:45 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | பிரபலங்களின் பார்வையில்...

சமுதாய மேம்பாட்டுக்காக நல்ல நோக்கத்தோடும் அக்கறையோடும் நடுநிலையான செய்திகளைத் தருவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தி ஹிந்து 16 Sep 2023 7:45 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | வாசகர்களின் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கிய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். ’உங்கள் குரல்’ பகுதி மூலம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

தி ஹிந்து 16 Sep 2023 7:45 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

தி ஹிந்து 16 Sep 2023 7:45 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | இனியதோர் பயணத்தில்...

உங்கள் வாழ்த்து அலை, குளிர் தென்றலாக வந்து நிறைக்கிறது எமது வாசலை! 'இந்து தமிழ் திசை' செய்தித்தாளின் இந்தப் பத்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பது வாசக சொந்தங்களாகிய உங்களின் குதூகலத் திருவிழா!

தி ஹிந்து 16 Sep 2023 7:45 pm

செங்கோட்டை முழக்கங்கள் 17 - நமது கடமை... நாட்டைக் காத்தல் | 1963

செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய இறுதி உரை இது. 1947 முதல் 1963 வரை தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவால், தான் உண்மையாக நேசித்த 'சகோதரன்' சீனா இழைத்த நம்பிக்கை துரோகம்... ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த மன வேதனையில் நேரு ஆற்றிய இந்த உரை, அவரது ஆற்றாமையை நன்கு வெளிப்படுத்தியது.

தி ஹிந்து 16 Sep 2023 6:44 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | பிரபலங்களின் பார்வையில்...

சமுதாய மேம்பாட்டுக்காக நல்ல நோக்கத்தோடும் அக்கறையோடும் நடுநிலையான செய்திகளைத் தருவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தி ஹிந்து 16 Sep 2023 6:44 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

தி ஹிந்து 16 Sep 2023 6:44 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | இனியதோர் பயணத்தில்...

உங்கள் வாழ்த்து அலை, குளிர் தென்றலாக வந்து நிறைக்கிறது எமது வாசலை! 'இந்து தமிழ் திசை' செய்தித்தாளின் இந்தப் பத்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பது வாசக சொந்தங்களாகிய உங்களின் குதூகலத் திருவிழா!

தி ஹிந்து 16 Sep 2023 6:44 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | பிரபலங்களின் பார்வையில்...

சமுதாய மேம்பாட்டுக்காக நல்ல நோக்கத்தோடும் அக்கறையோடும் நடுநிலையான செய்திகளைத் தருவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தி ஹிந்து 16 Sep 2023 5:42 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | வாசகர்களின் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கிய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். ’உங்கள் குரல்’ பகுதி மூலம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

தி ஹிந்து 16 Sep 2023 5:42 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | நிறுவனத் தலைவர்கள் பார்வையில்...

தி ஹிந்து 16 Sep 2023 5:42 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | இனியதோர் பயணத்தில்...

உங்கள் வாழ்த்து அலை, குளிர் தென்றலாக வந்து நிறைக்கிறது எமது வாசலை! 'இந்து தமிழ் திசை' செய்தித்தாளின் இந்தப் பத்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பது வாசக சொந்தங்களாகிய உங்களின் குதூகலத் திருவிழா!

தி ஹிந்து 16 Sep 2023 5:42 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | பிரபலங்களின் பார்வையில்...

சமுதாய மேம்பாட்டுக்காக நல்ல நோக்கத்தோடும் அக்கறையோடும் நடுநிலையான செய்திகளைத் தருவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தி ஹிந்து 16 Sep 2023 4:37 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | இனியதோர் பயணத்தில்...

உங்கள் வாழ்த்து அலை, குளிர் தென்றலாக வந்து நிறைக்கிறது எமது வாசலை! 'இந்து தமிழ் திசை' செய்தித்தாளின் இந்தப் பத்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பது வாசக சொந்தங்களாகிய உங்களின் குதூகலத் திருவிழா!

தி ஹிந்து 16 Sep 2023 4:37 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | பிரபலங்களின் பார்வையில்...

சமுதாய மேம்பாட்டுக்காக நல்ல நோக்கத்தோடும் அக்கறையோடும் நடுநிலையான செய்திகளைத் தருவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தி ஹிந்து 16 Sep 2023 3:36 pm

‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | இனியதோர் பயணத்தில்...

உங்கள் வாழ்த்து அலை, குளிர் தென்றலாக வந்து நிறைக்கிறது எமது வாசலை! 'இந்து தமிழ் திசை' செய்தித்தாளின் இந்தப் பத்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பது வாசக சொந்தங்களாகிய உங்களின் குதூகலத் திருவிழா!

தி ஹிந்து 16 Sep 2023 3:36 pm

பிள்ளைப் பேறு அருளும்...

நூற்று எட்டு திவ்ய தேசங்களில் 26}ஆவது திவ்ய தேசமான திருக்கண்ணங்குடி அருள்மிகு தாமோதர நாராயணப் பெருமாள், தாயார் அரவிந்த நாயகியுடன் வீற்றிருந்து பிள்ளைப் பேறு அருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. நூற்று எட்டு திவ்ய தேசங்களில் 26}ஆவது திவ்ய தேசமான திருக்கண்ணங்குடி அருள்மிகு தாமோதர நாராயணப் பெருமாள், தாயார் அரவிந்த நாயகியுடன் வீற்றிருந்து பிள்ளைப் பேறு அருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.சோழ நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தத் தலம் பஞ்சகிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. ஊறாக்கிணறு, உறங்காப் புளி, தேரா வழக்கு திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேச சிறப்புப் பழமொழி பெற்ற தலம்.தல விருட்சமான மகிழ மரத்தின் நிழலில் அமர்ந்தால் குஷ்ட நோய்கள் அகலும். அவர்கள் உடல் பொன்போல் மின்னும்' என்கிறது புராணம்.இந்தக் கோயில் கிழக்கு நோக்கி 5 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரத்துடன் அழகுறக் காட்சி தருகிறது. 9 ஆழ்வார்கள் சந்நிதியுடன் மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், மதுர கவிகளும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள வகுள விருட்சம் பூத்துக் குலுங்கினாலும் அதன் விதை முளைப்பதில்லையாம்.பெருமாள் சந்நிதிக்குப் பின்புறத்தில் உள்ள சிரவண புஷ்கரணியின் தென்புறத்தில் வீற்றிருந்த பெருமாள் உபய நாச்சியார்களுடன் காட்சி தருகிறார். இங்கு எழுந்தருளியுள்ள கருடன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார்.இக்கோயில், சிரவணப் புஷ்கரணி குறித்து கருட புராணத்தின் 5}ஆவது அத்தியாயத்தில் 320 செய்யுள்களில் பாடப்பட்டுள்ளது.வசிஷ்ட மகரிஷிஆராதனை செய்த திருத்தலம். வசிஷ்டர் கிருஷ்ணனை நினைத்து தவம் செய்தார். வெண்ணெய் மயமான கிருஷ்ணனை இளகிப் போகாமல் கட்டி ஆவாஹனம் செய்து தியானம் செய்தார். காமதேனுவின் பாலை அமுது செய்விப்பார். வெண்ணெய்க் கண்ணனை பகவான் கோபால உருவம்கொண்டு அமுது செய்வதை வசிஷ்டர் பார்த்துவிட்டார். கோபாலனைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. திருக்கண்ணங்குடியில் மகிழ மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மகரிஷிகள் கண்ணன் வருவதை பார்த்துவிட்டனர். பக்தியால் கண்ணனைக் கட்டினர். இத்தலத்தில் கோயில் கொண்டு உலகைக் காக்க வேண்டும் என்று கேட்ட வரத்தைத் தந்தான் கண்ணன். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கத்தை அடைந்தவுடன் திருப்பணிகளைச் செய்யக் கட்டளையிடப்பட்டது. நாகப்பட்டினத்தில் இருந்து விக்ரகத்துடன் திருக்கண்ணங்குடி வந்தார். புளியடி என்ற நெல் வயலின் சேற்றில் விக்ரகம் மறைத்து வைக்கப்பட்டது. அங்கிருந்த புளியமரத்திடம், நீ உறங்க வேண்டாம்' என்று சொல்லிவிட்டு தூங்கினார். இதனால் அது உறங்காப்புளியானது.நிலத்தை உழ உழவன் வந்தபோது புளியமரம் இலைகளை ஆழ்வார் மீது உதிர்த்தது. விழித்தெழுந்த ஆழ்வாருக்கும் - உழவனுக்கும் தகராறு உண்டானது. உழவனிடம் நிலத்துக்கான உரிமைப் பட்டயத்தைக் காட்டச் சொன்னார். உழவன் தனது ஓலைச் சுருளைக் காட்டினான். ஆழ்வாரோ தனது ஓலைச் சுருள் திருவரங்கத்தில் இருப்பதால் எடுத்து வர கால அவகாசம் கேட்கிறார்.ஆழ்வார் களைப்புற்று அங்கிருந்த கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டார். தண்ணீர் தர மறுத்ததுடன் கோபத்துடன் பார்த்து, இனி கிணற்றில் தண்ணீரே ஊற வேண்டாம்' என்று சபித்தார். உடனடியாகக் கிணற்றில் தண்ணீர் வற்றி அது ஊறாக் கிணறானது. இக்கிணற்றருகே இருந்த மகிழ மரத்தடியில் சிறிது கண் ணயர்ந்தார். பெருமாளே வந்து ஆழ்வார்க்கு தீர்த்தம் , பிரசாதம் கொடுத்தாராம். இதனால் மகிழ்ந்த ஆழ்வார் மகிழ மரத்தை என்றும் காயாமல் இருக்கும்படி மங்களாசாசனம் செய்ததால் இதற்கு காயா மகிழ்' என்று பெயர்.வைணவ, சைவ நல்லிணக்கத்துக்கு இக்கோயில் மிகச் சிறந்த உதாரணமாய் விளங்குகிறது. பிரம்மோற்சவத்தின் போது மூன்றே முக்கால் நாழிகை பெருமாள் விபூதியுடன் காட்சியளிக்கிறார்.கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாக இருப்பதால் குழந்தைப் பேறு வேண்டுவோரும், வழக்குகளில் வெற்றி பெறவும் திருக்கண்ணங்குடி தலத்தில் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் தாங்கள் வேண்டிக் கொண்டதை இங்கு வந்து நிறைவேற்றியும் செல்கின்றனர்.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் நாகப்பட்டினம்} திருவாரூர் சாலையில் ஆழியூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.தொடர்புக்கு-99431 38591.

தினமணி 15 Sep 2023 4:57 pm

அருள் வழங்கும் அருளாளீசுவரர்

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகம் வரலாற்றிலும் - வழிபாட்டிலும் சிறப்புப் பெற்றதாக அமைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகம் வரலாற்றிலும் - வழிபாட்டிலும் சிறப்புப் பெற்றதாக அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் திருச்சி நெடுஞ்சாலையில், ஏலவார்குழலி உடனாய அருளாளீசுவரர் கோயில் உள்ளது. இங்கு வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கப் பெற்று, அருள் பெறுகின்றனர்.சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் சிறப்பு பெற்று விளங்கியது. முதலாம் பராந்தகச் சோழன் கால கல்வெட்டில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் மதுராந்தக சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர் தனியூர்' என்ற சிறப்புப் பெற்று விளங்கியதையும் அறிய முடிகிறது.இவ்வூரில் ஏரிகாத்த ராமர் கோயில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. ஏரியில் வெள்ளம் நிரம்பி வழிந்து ஏரியின் கரை உடைந்து விடாமல் மக்களை ராமபிரான் காப்பாற்றிய வரலாறு அனைவரும் அறிந்த செய்தியாக விளங்குகிறது.ராமபிரானை அயோத்தி பெருமான், திருஅயோத்தி கருணாகரப் பெருமாள்' எனக் கல்வெட்டுகள் அழைப்பதைக் காண முடிகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தில் கிழக்குப் பகுதி கடப்பேரி' என அழைக்கப்படுகிறது. இங்கு இறைவன் திருவெண்காட்டீசுவரர்' என்று பெயர் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோயிலும் வரலாற்றுச் சிறப்புடையதாக விளங்குகிறது.மதுராந்தகம் நகரில் ஏரி காத்த ராமர் கோயிலுக்கு தென்பகுதியில் செங்குந்தர்பேட்டை' என்று அழைக்கப்படும் பகுதியில் ஏலவார்குழலி உடனாய அருளாளீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இறைவன் கருவறையில் சிவ லிங்க வடிவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். திருச்சுற்று மாளிகையில் விநாயகர், வள்ளி } தெய்வானை சமேத முருகப்பெருமான் சந்திதிகள் அமைந்துள்ளன. முன் மண்டபத்தில் ஏலவார்குழலி அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற கோலத்தில், மேற்கரங்களில் அங்குசம் } பாசம் தாங்கியும், முன் இரு கரங்களில் அபய } வரத முத்திரை தாங்கியும் அருள் வழங்கும் காட்சியைக் கண்டு மனம் உருக வழிபடலாம்.முன் மண்டபத்தில் நடராஜர் சந்நிதியும், எதிரில் நால்வர் சந்நிதியும் அமைந்துள்ளன. வடகிழக்கு மூலையில் பைரவர் அருள்புரிகின்றார். கோயிலின் வாயிலில் வரசித்தி விநாயகர், அடுத்து லட்சுமி விநாயகர், நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவை அமைத்து சிறப்பான வழிபாடுகள் மாதம்தோறும் நடைபெற்று வருகின்றன. நடராஜப் பெருமானுக்கு ஆறு அபிஷேகங்கள், கந்த சஷ்டி திருநாள் வழிபாடு, ஆடிப்பூரத்தில் அம்பாள் திருவீதி உலா போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோயிலுக்கு வன்னிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் தொழில் அபிவிருத்தி அடையவும், பிரச்னைகள் தீரவும், குழந்தை செல்வம் அடையவும் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.இந்தக் கோயிலில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விக்கிரமசோழன் (1118 }1136) காலத்தில் கோயில் திருச்சுற்றுமாளிகையுடன் கட்டப்பட்டு, வழிபாடுகளுக்கு தானம் அளிக்கப்பட்டதை அறியமுடிகிறது. இறைவன் அகளங்கீசுவரம் உடைய மகாதேவர்' என பெயரிட்டு அழைக்கப்படுகிறார். விக்கிரமசோழனுக்கு அகளங்கன் என்ற சிறப்புபெயர் உண்டு. பின்னர், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் வழிபாட்டுக்காகத் தானம் அளித்த செய்தியுடன் அருளாகரஈசுவரமுடையார்' எனவும் அழைக்கப்படும் செய்தியை அறிய முடிகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டல பூஜைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. -கி. ஸ்ரீதரன்,(தொல்லியல் துறை } பணி நிறைவு).

தினமணி 15 Sep 2023 4:28 pm