SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் 'தற்குறிகள்' எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம தவெக இளம் தோழர்கள், GEN Z கிட்ஸ் தவெக தோழர்களை எல்லாம் ‘தற்குறிகள்’ என சொல்லி நல்லா வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் அவர்கள் தற்குறிகள் அல்ல, நம்ம பசங்க - திமுக எம்.எல்.ஏ எழிலன் சொல்லும் லாஜிக்! சமீபத்துல ‘அறிவுத் திருவிழா’னு ஒன்னு நடத்துனாங்க. சாரி, அது ‘அவதூறு திருவிழா’. அதுல இப்போ, ‘அவங்க தற்குறிகள் இல்லை. அவங்கள அப்படி சொல்லாதீங்க. அங்க ஒன்னும் சங்கிகள் கிடையாது’னு ஒரு குரல். அவங்க கட்சியோட அறிவுக் கண்ணை திறந்து வைக்கிற மாதிரி பேசியிருக்கிறார் அவங்களோட எம்.எல்.ஏ. யாருடா அதுனு பார்த்தா, அவர் நம்ம தவெக கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் அவர்களோட சொந்தக்காரராம். அவர் நமக்கு ஆதரவாகப் பேசுகிறார். அந்த ஆதரவுக் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுலையும் இனி எதிரொலிக்கும். சும்மா பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டுதான்.  ‘மர்மயோகி’ படத்துல எம்.ஜி.ஆர் ‘குறி வைத்தால் தவறவிடமாட்டேன். தவறு என்றால் குறியே வைக்க மாட்டேன்’ என்பார். அப்படித்தான் இந்த விஜய்யும். ‘ஏன்டா இந்த விஜய்யை தொட்டோம். ஏன்டா விஜய் கூட இருக்க அந்த மக்களை தொட்டோம்’ என நினைச்சு நினைச்சு வருத்தப்பட போறாங்க.  அரசியல் புரிதல் நமக்கு இல்லைனு சொல்றாங்க. நான் ஒன்னு கேட்குறேன், ‘மக்கள் எல்லாரும் உங்களுக்குத் தற்குறிகளா?’.  எங்களுக்கு ஓட்டு போடுகிற மக்கள் தற்குறிகள் என்றால், அதே மக்கள்தானே இவ்வளவுநாள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. அவங்க தற்குறிகளா? மக்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா? `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்க அரசியலையே கேள்விக் குறியாக்க போறாங்க. இவங்க எல்லாம் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டின் ஆச்சர்யக் குறிகள். மாற்றத்திற்கான அறிகுறிகள்.  சும்மா லாஜிக்கே இல்லாம ‘தற்குறி தற்குறி’னு சொல்லிட்டு இருக்கக் கூடாது என்று 'தவெக' வினரை 'தற்குறிகள்' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் விஜய்.

விகடன் 23 Nov 2025 3:08 pm

`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக்கிறார் விஜய். இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், நம்ம ஆட்சிக்கு வந்தால்…. அதென்ன வந்தால். நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி ‘தவெக; வை ஆட்சி அமைக்க வைப்பாங்க. அப்படி மக்கள் அமைக்கும் நம்ம ஆட்சியில மக்களுக்கான நல்லது மட்டுமே செய்வோம். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல் - திமுக வை தாக்கும் தவெக விஜய் எங்களுடைய தேர்தல் வாக்குறுதியின் அடிப்படை இவைதான் எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கணும். கார் இருக்கணும் என்பது எதிர்கால லட்சியம். அதுக்கான வசதி வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்கணும். ஒவ்வொரு வீட்ல இருக்குறவங்களும் குறைந்தபட்சம் டிகிரி படிச்சிருக்கிறத உறுதி செய்வோம். ஒவ்வொரு வீட்டுலையும் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது நிரந்தர வருமானம் இருக்கணும். அதுக்கான வேலைவாய்ப்பு, கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். எந்த பயமுமின்றி மக்கள் அரசு மருத்துவமனைக்குப் போகிற மாதிரி மாற்ற வேண்டும். பருவமழை காலத்துல மக்களும், விவசாயமும் பாதுகாக்கப்படனும். அதுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான பாதுகாப்புத் திட்டத்த உருவாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சட்ட ஒழுங்கை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்; எல்லாருக்கும் பவர் ஃபுல்லான பாதுகாப்பை உண்டாக்க வேண்டும்.  நம்ம வீட்டு பெண்கள் பயமே இல்லாமல் சமூகத்தில் வாழ வேண்டும். தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்! இவையெல்லாம் எப்படி செயல்படுத்த போறோம் என்கிற விவரத்தை தவெக தேர்தல் வாக்குறுதியில் விரிவாக, தெளிவாகச் சொல்வோம். நல்லது செய்வது மட்டும்தான் தவெகவின் அஜெண்டா. வேறெந்த அஜெண்டாவுமில்லை எங்களுக்கு. இந்த விஜய் ஒன்னு சொன்னா அதைச் செய்யாமல் விடமாட்டான். அது மக்களுக்கும் நல்லா தெரியும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 23 Nov 2025 2:49 pm

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப்படி பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆபாச வீடியோ இந்த நிலையில், வழக்கு தொடர்பாக வெளியூர் சென்று வந்த பெண் ஆய்வாளர் ஒருவர் பயணப்படிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முருகனிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அன்றைய தினம் இரவு புதிய செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட எண் குறித்து புகார் அளித்திருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் பணியாற்றி வந்த முருகனின் எண் என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆபாச வீடியோக்களை முருகன் அனுப்பியதை உறுதி செய்த காவல்துறையினர், முருகன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். முருகன் பிண்ணனி குறித்து தெரிவித்த காவல்துறையினர், டிராவல் அலவன்ஸ் விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட லேடி இன்ஸ்பெக்டர் தன்னுடைய செல்போன் எண்ணை எழுதியிருக்கிறார். இதை கவனித்த முருகன், எண்ணை செல்போனில் ஏற்றி வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

விகடன் 23 Nov 2025 2:38 pm

ஆடையில்லா காட்சிக்காக நடிகை மீராவிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்: ஏன் தெரியுமா?

தன்மாத்ரா படத்தில் வந்த ஆடையில்லா காட்சியில் நடித்த மோகன்லால் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார். மோகன்லால் ஏன் மன்னிப்பு கேட்டார் என தெரிந்து கொள்ளுங்கள்.

சமயம் 23 Nov 2025 2:31 pm

விபத்தில் சிக்கிய மணமகள் –மருத்துவமனையில் வைத்து தாலி கட்டிய மணமகன்

மணமகள் விபத்தில் சிக்கியதால், மருத்துவமனையில் வைத்து மணமகன் தாலி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய மணமகள் கேரள மாநிலம் ஆலப்புழாவின் கொம்முடியை சேர்ந்த ஆவணி(Aavani) என்பவருக்கும், தம்பொலியை சேர்ந்த ஷரோன்(Sharon) என்பவருக்கும், ஆலப்புழாவில் உள்ள சக்தி ஆடிட்டோரியத்தில் நேற்று முன்தினம் மதியம் 12.12 மணிக்கு திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில், மணப்பெண் அலங்காரத்திற்காக ஆவணி தனது குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தை […]

அதிரடி 23 Nov 2025 2:30 pm

ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்!

மாவனல்லை கடுகண்ணாவ பிரதேசத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி காலை மண்சரிவு மற்றும் பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம்… The post ஹிங்குல கடுகண்ணாவ அனர்த்தத்தில் 6 பேர் மரணம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 2:05 pm

தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு… The post தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு. appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 2:02 pm

குடும்பபெண்ணின் உயிரை பறித்த பேருந்து

ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும், பஸ் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். ஹங்குரன்கெத்த – ஹலங்வங்குவ பகுதியில் நேற்று (22) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை விபத்தில் காயமடைந்தவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் உள்ளடங்குவதாகபபொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த 45 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக ஹங்குரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு […]

அதிரடி 23 Nov 2025 1:54 pm

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் ; CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான […]

அதிரடி 23 Nov 2025 1:52 pm

BB Tamil 9 Day 48: சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!

வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி.  மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 48 “இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க. ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது.  BB TAMIL 9: DAY 48 ஏற்கெனவே சொன்னது போல, சாண்ட்ரா + திவ்யாவை வேலை பார்க்க வைக்கும் சூப்பர்வைசர் பணி விக்ரமிற்கு தரப்பட்ட தண்டனையாக அமைந்தது. “என்னங்க செய்றீங்களா…?” என்று கேட்டே சோர்ந்து போனார். ஒருவர் படுத்தபடி வீட்டைப் பெருக்குவதை எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ‘பெருக்காசனம்’ செய்து உலக சாதனை செய்தார் திவ்யா.  ‘வேலை செய்யறீங்களா?” என்று விக்ரம் மீண்டும் கேட்க “எனக்கு தலை வலிக்குது. டீ வேணும். பிளாக் டீல்லாம் வேணாம்.. பால் டீதான் வேணும்” என்று அடம்பிடித்தார் திவ்யா. புத்திசாலித்தனமான குற்றவாளிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தண்டனையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள். சாண்ட்ராவும் திவ்யாவும் அப்படியாக நேரத்தை இழுத்துக் கொண்டே போனார்கள்.  “இது பிக் பாஸ் ஆர்டருங்க. உங்களை ஜெயில்ல அடைக்கச் சொல்லியிருக்காங்க” என்று விக்ரமும் எஃப்ஜேவும் கெஞ்ச “எங்க வேலை முடியலை. முடிஞ்சவுடன்தான் வருவோம்” என்று அழிச்சாட்டியம் செய்தார்கள்.  நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த சாண்ட்ரா - திவ்யா அலப்பறைகள் காலை, மாலை மட்டும் பால் தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த நோக்கில் பால் தர முடியாது என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தார் எஃப்ஜே. “மெடிக்கல் எமர்ஜென்சின்னா கூடவா தர மாட்டீங்க?” என்றார் திவ்யா. தலைவலி எப்போது மெடிக்கல் எமர்ஜென்சியில் சேர்ந்தது என்று தெரியவில்லை.  “இவன் பாலை எங்கதான் போய் ஊத்துவான்.. அவன் ஃபேமிலிக்கா?” என்று பிரஜின் வார்த்தைகளை விட்டது அநியாயம். “உன் வொய்ஃபை கூட்டிட்டு வாங்க” என்று இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை அநாவசியமாக இழுப்பதை பிரஜின் வழக்கமாக வைத்திருக்கிறார்.  தனக்கு பால் தராமல் போன அநீதியை எண்ணி பாத்ரூமில் சென்று திருட்டு அழுகை அழுதார் திவ்யா. “போங்க.. இப்ப போய் அவ கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து ஜெயில்ல தள்ளுங்க” என்று விக்ரமிடம் சொல்லி ஓவராக சீன் போட்டார் சாண்ட்ரா. “நான் ஏங்க ..கழுத்தையெல்லாம் பிடிக்கப் போறேன்” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம்.  “அப்ப மூடிட்டு போங்க” என்கிற மாதிரி சைகை காட்டினார் சாண்ட்ரா. விக்ரம் பாடிய பாடல் வரிகளை வைத்து ‘லைஃப்ல நீ மறக்க மாட்டே’ என்று சாபம் விட்டுக் கொண்டே போனார்.  BB TAMIL 9: DAY 48 “இது பிக் பாஸ் ஆர்டர். ஜெயில்ல போடணும்” என்று விக்ரமும் எஃப்ஜேவும் மறுபடி வந்து கெஞ்ச “சாவிய வெச்சிட்டு போங்க.. வரேன்.. வர முடியாது’ என்றெல்லாம் சொன்னார் திவ்யா. விக்ரம் அகன்ற பிறகு “என்ன திமிர் பாரேன்.. இவனுக்கு?” என்றார்.  தண்டனையிலிருந்து தப்பிக்க எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ, அவ்வளவு நேரத்தை இழுத்த கிரிமினல்களான சாண்ட்ராவும் திவ்யாவும் இரவு முழுவதும் வீட்டை தூங்க விடாமல் அதிகாலை மூன்று மணிக்குத்தான் ஒருவழியாக சிறைக்குள் சென்றார்கள். அதுவரை கார்டன் ஏரியாவில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உள்ளே செல்ல “பாம்புங்கள்லாம் உள்ளே போகுது” என்று கனியை டார்கெட் செய்து வசைபாடினார் சாண்ட்ரா.  பாருவின் நெகட்டிவிட்டி பற்றி குறை சொன்னவர்கள், பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்ளும் மர்மம் ஒரு விஷயம்தான் புரியவில்லை. வைல்ட் கார்ட் எண்ட்ரிகளாக சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் உள்ளே நுழையும் போது பாரு செய்து கொண்டிருந்த அடாவடிகளை கண்டித்தார்கள். ‘இது வெளில எப்படி தெரியும் தெரியுமா’ என்று எச்சரித்தார்கள். எனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் மோசமாக நடந்து கொண்டால் அது பல மடங்கு வெறுப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பது ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இவர்கள் அனைவருமே மீடியாவில் இருப்பதால் அதன் பவரை நன்கு உணர்ந்திருப்பார்கள்.  எனில், பாருவிற்கு பாடம் சொன்ன இவர்கள் பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? இவர்கள் அட்வைஸ் வேடம் கலைந்து அசல் நிறம் வெளிப்படுகிறதா? அல்லது பெயர் கெட்டாலும் பரவாயில்லை, கன்டென்ட் தந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்கிற டிராமாவா? BB TAMIL 9: DAY 48 மேடைக்கு வந்த விசே “தன்னை புத்திசாலின்னு நம்பற முட்டாள்களும், வீரன்னு நெனச்சிக்கிற கோழைகளும் வீட்டுக்குள்ள இருக்கறாங்க.. அவங்களை முதல்ல பாராட்டுவோம். ஸோ… நீங்க நல்லா கைத்தட்டுங்க.. அவங்க கன்ஃப்யூஸ் ஆகட்டும்”என்கிற வேடிக்கையுடன் உள்ளே சென்றார்.  திரை விலகியதும் பார்வையாளர்கள் மிகையாக கைத்தட்ட, தங்களுக்கு கிடைத்த பாராட்டாக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். “பிரஜின்.. எப்பவும் ஒரு போஸ்லதான் உக்காந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விசே. (பின்னே.. ஹீரோ மெட்டீரியல் ஆச்சே?!) “திவ்யா.. சாண்ட்ரா.. நல்லாயிருக்கீங்களா.. இவர்கள் இருவரும் வீரமங்கையர்கள்.. பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. நடப்பாங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விசே.  பதில் சொல்லாமல் அடம்பிடித்த திவ்யா “ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்சீங்க. என்னதான் வேலை செஞ்சீங்க?” என்று விசே விசாரிக்கும் போது அவர்கள் தூங்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டை மட்டும் நன்றாக பெருக்கியுள்ளது தெரியவந்தது. “எனக்கு தலைவலி சார்” என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்ட மாணவன் மாதிரி ஆரம்பித்தார் திவ்யா. சாண்ட்ரா இடையில் சிரிக்க “அப்படி சிரிக்காதீங்க.. எரிச்சலாகுது” என்று வெளிப்படையாகவே கோபப்பட்டார் விசே.  திவ்யாவின் டிராமாவை ஏற்காத விசே ‘என்னவொரு ஆட்டிடியூட்.. பிக் பாஸ் கண்ணை திறந்து வெச்சிருக்கணுமா.. மூடணுமான்னுல்லாம் சொல்லத் தெரியுது. இந்த ஷோ உங்களால மட்டும் நடக்கலை. சாண்ட்ரா.. உங்க பேரு ஸ்பாயில் ஆகும்ன்னு திவ்யாவிற்கு நல்லா தெரியும். நோயாளின்ற லேபிள்ல தப்பிச்சுடுவாங்க.” என்று வெடித்தார் விசே.  அதாவது இந்த அலப்பறைகளுக்கு திவ்யாதான் மாஸ்டர் மைண்ட் என்கிற மாதிரியும் சாண்ட்ரா பேபிக்கு எதுவுமே தெரியாது என்கிற மாதிரியும் திவ்யாவினால்தான் அவர் மோசமாக நடந்து கொண்டார் என்கிற மாதிரியும் ஒரு சித்திரத்தை விசே எழுப்ப முயன்றாரா? உண்மையில் சாம்பார் அணி, டாக்ஸிக் அணியாக மாறியதற்கு சாண்ட்ராவின் துர்உபதேசங்கள்தான் காரணம். கைகேயி மாதிரி கூடவே உதவியாக இருந்தார் பாரு.  “திவ்யாவிற்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்கப்பட “செஞ்சேன் சார்.. அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி வந்துடுச்சா.. அதான் கூடவே உதவிக்கு நின்னேன்” என்று சாண்ட்ரா மழுப்ப, திவ்யா எதையோ சொல்வதற்கு கை காட்ட “உக்காருங்க. வேலை செய்ய வக்கில்லை” என்று ஆத்திரமானார் விசே.  BB TAMIL 9: DAY 48 “அவங்களுக்கு தலைவலி.. நீங்கதான் தனியா ஆடறவங்களாச்சே. ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்க ‘திவாகர் பாணியில்’ தலையைக் குனிந்தபடி நின்றார் அப்பாவி சாண்ட்ரா.  படுத்துக் கொண்டே வீடு பெருக்கிய லட்சணத்தை விசே விசாரிக்க “அது சும்மா ஜாலிக்காக பண்ணினது” என்றார் திவ்யா. “நீங்க உங்க வீ்ட்டுல எப்படி வேணா பெருக்குங்க. யார் கேட்கப் போறா.. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதை மதிக்கணும். நீங்க உங்க ஜாலிக்கு பண்ணக்கூடாது. பார்க்கற எங்களுக்குத்தான் ஜாலியா இருக்கணும்.” என்றெல்லாம் விசே காட்டமானார். திவ்யாவின் திமிர் காரணமாக எரிச்சலான விசே விசேவின் கோபத்தைக் கண்டு திவ்யா முகம் சுளிக்க “என்ன டயர்ட்டா இருக்கா.. வேணுமின்னா வெளிய வந்துடறீங்களா… உடம்பு சரியில்லைன்னா உக்காருங்க” என்று விசே சொல்ல ‘பரவாயில்ல நிக்கறேன்’ என்று கெத்து காட்டினார் திவ்யா. “ஹலோ.. உக்காருன்னா உக்காரணும்.. என்ன பழக்கம் இது?” என்று கோபமானார் விசே.  “நீங்க சொல்லுங்க. சாண்ட்ரா.. கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா.. பிக் பாஸிற்கே அட்வைஸ் பண்ணுவீங்களா.. அதையெல்லாம் நீங்க யாருங்க சொல்றதுக்கு?” என்று சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விசே, சட்டென்று திரும்பி “நீங்க டென்ஷன் ஆகாதீங்க பிரஜின்” என்று சொன்னது டைமிங் நகைச்சுவை. மீசையை முறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பிரஜின்.  BB TAMIL 9: DAY 48 “விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” - வாக்குமூலம் தந்த திவ்யா “போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன். பிக் பாஸ் சொல்றதை மதிங்கன்னு.. தீபக் கூட வந்து கண்கலங்கிட்டுப் போனார். உங்களுக்குள்ள சண்டை போடுங்க.. ஆனா பிக் பாஸ் சொல்றத மதிங்க.. பாவம் அவரும் ஒண்டியா என்னதான் பண்ணுவாரு” என்று விசே சொன்னதைக் கேட்டு பிக் பாஸிற்கே கண்கலங்கியிருக்க வேண்டும்.  மறுபடியும் திவ்யாவிடம் “ஏன் வேலை செய்யலை?” என்று விசே கேட்க திவாகர் பாணியை இப்போது திவ்யாவும் பின்பற்றினார். பாரு வழக்கம் போல் தனது சேஷ்டையான சிரிப்பை வைக்க “பாரு.. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எது எதுக்கு எப்படி சிரிப்பீங்கன்னு தெரியும்” என்று விசே நையாண்டி செய்ய அதற்கும் அசட்டுச்  சிரிப்பை வைத்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மோமெண்ட்!). “நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் ரூல். நீங்க தப்பிக்கவே முடியாது. பதில் சொல்லாம இருக்க முடியாது” என்று கேட்டு சலித்துப் போன விசே ‘நான் பிரேக்ல போறேன்” என்று கிளம்பினார். (திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!) விசே பிரேக்கில் சென்றதும் “என்ன பதில் சொல்லணும்.. விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” என்று தன்னிச்சையாக உண்மை திவ்யாவிடம் வாயில் இருந்து விட்டது. பிரேக்கில் இருந்து திரும்பிய விசே “திவ்யா.. இதை அப்பவே சொல்லியிருக்கலாமே.. விக்ரமை வெறுப்பேத்த செஞ்சீங்களா.. உக்காருங்க” என்று சொல்லி “சாண்ட்ரா.. அவங்க கூட கூட்டு சோ்ந்தா உங்க கேம் பாதிக்கும். எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க” என்று சாண்ட்ராவிற்கு அட்வைஸ் செய்தது ஓவர். பாருவிற்குப் பிறகு இந்த சீசன் அதிகமாக டாக்ஸிக் ஆனதற்கு காரணமே சாண்ட்ராதான். அவரையே ஏதோ ஒரு குழந்தை போல சித்தரிப்பதை விசே தவிர்த்திருக்க வேண்டும்.  BB TAMIL 9: DAY 48 சாண்ட்ரா பேபி  - செல்லம் கொஞ்சிய பாருவின் பச்சோந்தித்தனம் ஒருவழியாக இந்த ‘மிட்நைட் பஞ்சாயத்து’ முடிந்ததும் அடுத்ததாக ‘சோறு - சோப்பு - மாப்பு’ டாஸ்க்கிற்கு வந்த விசே “டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணீங்க”என்று பாராட்டினார். (சர்காஸமோ?!) “எல்லோரும் டீமா பிரிஞ்சு உக்காருங்க. டீம்ல இருக்கறவங்க உங்க கேப்டனைப் பத்தி சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார்.  விக்ரம் டீமில் இருந்த சுபிக்ஷா தன் லீடரைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னார். ஆனால் சாம்பார் டீமில் இருந்தவர்களே சாண்ட்ராவை குத்தினார்கள். “எங்க டீம் டாக்ஸிக் தன்மையோட ஆனதுக்கு சாண்ட்ராவோட தப்பான டைரக்ஷன்தான் காரணம்” என்றார் வியானா.  அடுத்ததாக பாரு எழுந்தார். அவர் சாண்ட்ராவை காட்டித் தர மாட்டார் என்பது வெளிப்படை. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் “திவாகர் போனதுல இருந்து ஒரு மாதிரியா இருந்தது. அதான் சமையல் டீம்ல ஒட்டிக்கிட்டேன். சமையல்ன்றது இங்க பிரம்மாஸ்திரம். அத வெச்சு எதையாவது பண்ணலாம்னு .. ‘“ என்று பாரு இழுக்க “கனியை இத  வெச்சுதானே ராஜமாதான்னு கிண்டல் பண்ணுவீங்க. இப்ப நீங்க ராஜமாதாவா மாற டிரை பண்றீங்களா?” என்று விசே மடக்க ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்கிற மாதிரி திகைத்து நின்றார் பாரு.  BB TAMIL 9: DAY 48 “சாண்ட்ரா பேபி என்ன பண்ணாலும் மன்னிச்சு விட்ற மாதிரி க்யூட்னஸ் இருக்கும்” என்று பாரு அள்ளி விட “இப்படி ஏத்தி விட்டுத்தான் அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இது அந்தப் பய புள்ளைகளுக்கு புரியல.” என்று விசே ஜாலியாக கொளுத்திப் போட “சலங்கையைக் கட்டியாச்சு.. நடிச்சுதானே ஆகணும்” என்றார் பாரு. ‘இது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே” என்று பாருவின் பச்சோந்தித்தனத்தை நகைச்சுவை மோடில் சுடடிக் காட்டினார் விசே. “சார். வேணாம்..சார்.. அப்புறம் டிரையின் இந்தப் பக்கம் திரும்பிடும்” என்று பாரு நடுங்க “அடடா.. பயப்படற மாதிரி கூட நடிக்கறாங்கப்பா.. என்னால முடியல. நான் போறேன்” என்று விசே சொல்ல சபை கலகலத்தது.  ஹீரோ மாதிரி பந்தா காட்டி ஜீரோவான பிரஜின் பிரேக் முடிந்து வந்து மீண்டும் பாருவிடம் விசாரணையைத் தொடர்ந்தார் விசே. “அதாவதுங்க சார்.. சாண்ட்ரா இன்னும் கொஞ்சம் எண்டர்டெயின்மென்ட் தந்திருக்கலாம். கனியும் சாண்ட்ராவும் ஒத்துப் போயிருக்கலாம்” என்று ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் பேச “டீம் கேப்டன் யாரு.. சாண்ட்ராதானே.. அவங்கதானே கோஆர்டினேட் பண்ணியிருக்கணும். உங்களுக்குப் பிடிச்சவங்கறதுக்காக பார்ஷியாலிட்டி காட்டாதீங்க. பார்க்க நல்லாயில்ல. ஒவ்வொரு முறையும் சொல்றேன். அதையே பண்றீங்க. உக்காருங்க” என்று பாருவை அமர வைத்தார் விசே.  அடுத்ததாக பிரஜின் பஞ்சாயத்து. ஹீரோ பேசிய பன்ச் வசனங்களை பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டு வரிசையாக சொன்ன விசே “விக்ரம் சொன்னது கப்புளா இருக்கும் போது எமோஷனல் சப்போர்ட் கிடைக்குன்ற பத்தி. இந்த அபிப்ராயம் எல்லோருக்குமே இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள் யார் வரலாம்ன்ற முடிவை நாங்கதான் எடுப்போம். பிக் பாஸ் கிட்ட சொல்றேன். சேது கிட்ட பேசறேன்னு நீங்க எப்படி சொல்லலாம்.. அதை சொல்ல நீங்க யாரு. நீங்க சொன்னா கதவைத் திறக்கணும். நீங்க சொன்னா கண்ணை மூடிக்கணுமா.. வண்டி என் பக்கம் வந்தா கண்டம் பண்ணிடுவேன்னு சொல்றீங்க..  BB TAMIL 9: DAY 48 … ஐ எம் எ ஃபாதர் ஐ எம் எ ஹஸ்பண்ட்.. ஐ எம் எ ஹீரோன்னு சொல்றீங்க. இதையெல்லாம் மத்தவங்க சொல்லணும் சார். வியானாவையும் சுபிக்ஷாவையும் ‘காலி பண்ணிடுவேன்’ன்னு மிரட்றீங்க. இதுதான் ‘சரியா வளர்க்கப்பட்டவன்’ற அடையாளமா.. பாலை யாருக்கு ஊத்தப் போறான்.. அப்பாவுக்கா.. அம்மாவுக்கா..ன்னு கேக்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. உங்க குழந்தைங்க இதை பார்க்க மாட்டாங்களா.? என்று பிரஜினை நிற்க வைத்து கேள்வி மழை பொழிந்தார் விசே. ஆனால் பிரஜினோ முறைப்பான போஸில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்.  ‘பால் ஊத்தும் வசனம் எனக்கு கேட்கவேயில்லை. கேட்டிருந்தா தடுத்திருப்பேன்’ என்று அபாண்டமாக புளுகினார் சாண்ட்ரா. “நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்” என்று பிரஜின் சமாளிக்க “ஒரு சோ் கொடுங்கப்பா.. உக்காருவோம். இது ரொம்ப நேரம் போவும் போலிருக்கு” என்று சேரை வரவழைத்த விசே, பிரஜின் அலட்டல் மாதிரியே கால் மேல் கால் போட்டு உட்கார, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்தார்கள்.  தக்காளி சட்னி - ரத்தம் ஃபார்முலாவைப் பின்பற்றும் பாரு “நான் தனியாத்தான் ஆடறேன். நாமினேஷன் ப்ரீபாஸ் எனக்கு தரப்பட்ட போது வேணாமின்னு மறுத்தேன்” என்று பிரஜின் சொல்ல கூட்டம் சிரித்தது. “பால் வேணுமின்னா சண்டை போட்டு கூட வாங்கியிருக்கலாம். அது உங்க கேம். ஆனா இப்படியா அநாகரிகமா வார்த்தைகளை விடறது?” என்று பொங்கினார் விசே.  தன் குடும்பத்தினரைப் பற்றி பிரஜின் அவதூறாக பேசியதை இப்போதுதான் எஃப்ஜே அறிகிறார். எனவே அவருக்கு கோபம் வந்தது நியாயம். பொறுக்க முடியாமல் அவர் பொங்க “இந்த எஃப்ஜே ரொம்ப துள்றான்” என்று போட்டுக் கொடுத்தார் பாரு. இந்த சமயத்தில் பாருவின் பச்சோந்தித்தனம் மேலும் அம்பலமானது.  திவ்யா வைல்ட் கார்டாக வந்த சமயத்தில் ‘என்னைப் பத்தி எப்படி வெளிய தெரியுது?” என்று கேட்டு போட்டு வாங்க முயன்றார் பாரு. கம்ருதீன் விவகாரம் பற்றி சொன்ன திவ்யா “வீட்ல உங்க அம்மா பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று ஓர் அக்கறையில் சொல்லி விட அப்போதைக்கு மண்டையை ஆட்டினாலும் பிறகு “அதெப்படி எங்க வீட்டைப் பத்தி நீ பேசலாம்?” என்று திவ்யாவை நாள் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தார் பாரு.  BB TAMIL 9: DAY 48 பிரஜினும் சாண்ட்ராவும் - ஜாடிக்கேற்ற வன்ம மூடிகள் ஆனால் அதே பாருதான், இப்போது எஃப்ஜேவின் கோபத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம். மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி பாலிசி.  “ண்ணா.. உங்களுக்காகத்தான் இப்ப கம்முன்னு இருக்கேன்” என்று எஃப்ஜே சொல்ல “குட் மாறிட்டே வர்றீங்க இல்லையா..அதுதான் முதிர்ச்சி” என்று சமாதானப்படுத்தினார் விசே.  “நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க.. நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க. ஒண்ணும் புரியலை” என்று பிரஜின் விதாண்டாவாதம் பேச “சண்டை போடுங்க. அது உங்க கேம். ஆனா அது ஒரு எல்லைக்குள்ள நாகரிகமா இருக்கணும். கம்முவைப் பாருங்க.. இப்ப கம்முன்னு ஆயிட்டாரு. அவர் ஆடாத ஆட்டமா.. உங்களுக்கும் புரியும்” என்று பிரஜினுடன் மல்லுக்கட்டிய விசே, கோட்டை கழட்டிய படியே எரிச்சலுடன் சென்றார்.  “பர்சனல் வேற.. கேம் வேற” என்று என்னதான் விசே சொல்லி அனுப்பினாலும் பிரஜின் அதை வைத்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது. வீறாப்பாக நிற்பதும், முறைப்பதும் என்று ஹோஸ்ட்டிற்கு மரியாதை தரவில்லை. விசேவும் கூட பிரஜினுடன் விவாதிக்கும் போது வார்த்தைகள் வராமல் திண்டாடினார். இனியாவது சேனலுக்கு நெருக்கமானவர்களை போட்டிக்கு தோ்வு செய்யக்கூடாது என்பது இதன் மூலம் தெரிய வரும் பாடம். ஆனால் பின்பற்ற மாட்டார்கள்.  விசே சென்றதும் எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் சண்டை நிகழ்ந்தது. “உங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்தானே. கோள் மூட்டி வேலையை வெச்சுக்காதீங்க” என்று பொங்கினார் எஃப்ஜே.  “அப்பவே சொன்னேன். நம்ம குழந்தைகள் பார்ப்பாங்க.. வார்த்தைகளை விடாதீங்கன்னு” என்று பிரஜின் குறித்து புலம்பினார் சாண்ட்ரா. ஆனால் இவரும் அதையேதான் செய்கிறார் என்பது இவருக்குப் புரியவில்லையா?  BB TAMIL 9: DAY 48 இப்படி ஆயிடுச்சே. என்று சாண்ட்ரா அழுது  புலம்பியது கூட ஓகே. ஆனால் ‘அவர் அக்கா.. தங்கச்சின்னு சொன்னது.. கனியைப் பத்திதான்’ என்று சமாளித்த விதம் இருக்கிறதே.. அநியாயம். எனில் கனியைப் பற்றி தவறாக சொன்னால் மட்டும் ஓகேவா?... முன்னரே சொன்ன மாதிரி பாருவின் நச்சுத்தன்மையால் கெட்டுப் போயிருந்த இந்த ஷோ, சாண்ட்ரா, திவ்யா, பிரஜினின் வருகைக்குப் பிறகு கூடுதல் நச்சாக மாறியிருக்கிறது. சண்டை, வன்மம், பழிவாங்கல், கோள் மூட்டுதல், பச்சோந்தித்தனம் என்று பல நெகட்டிவிட்டிகள். சுவாரசியம் என்பதின் சதவீதம் மிகவும் குறைவு.  இந்த வாரத்தில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நடக்காது. வேறு பலியாட்டை தோ்வு செய்வார்கள். பார்ப்போம். 

விகடன் 23 Nov 2025 1:50 pm

கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!

கி ருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அர்ஜுனன் வீடு அமைந்திருக்கும் தெருவுக்குள் புகுந்து அவரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, `சார்... சார்... நான் அடிப்பட்டு வந்துருக்கேன் சார். என் பேரு மீனாட்சி. காப்பாத்துங்க, ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்...’ என சத்தமாக பேசினார். அதைத்தொடர்ந்து, ஜெகதேவி சாலைப் பகுதிக்குச் சென்றவர் அங்கு இருந்த ஆண் நபரிடம் பேசுவதை போன்ற காட்சிகளும் அர்ஜுனன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குரல் பதிவுடன் தெளிவாக பதிவாகியிருந்தன. வைரல் வீடியோ காட்சி பெண்ணின் நடவடிக்கைகளைப் பார்த்து, அர்ஜுனனும், அவரின் மனைவியும் `கொள்ளையர்களாக இருப்பார்களோ...?’ என அச்சத்துக்குள்ளாகி, கதவைத் திறக்காமல் வீட்டுக்குள் இருந்தபடியே தங்கள் மகனுக்குப் போன் செய்திருக்கின்றனர். அவரும் தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்துவிட்டு, `கதவைத் திறக்க வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களின் வழியாக வேகமாக பரவியதால், கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பெரும் பீதிக்குள்ளானார்கள். உண்மைத்தன்மை அறியாமல், ஊடகங்களும் திரும்பத் திரும்ப அந்த வீடியோவை பகிர்ந்து, மக்களை பயத்திலேயே வைத்திருந்தது. இந்த நிலையில், வைரல் வீடியோ குறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``மேற்கண்ட பெண் மிட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 20-ம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவரின் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அடித்ததில் அந்தப் பெண் உள்காயம் அடைந்தார். காவல்துறை விளக்க அறிக்கை பர்கூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தண்ணீர் தாகம் எடுத்த காரணத்தினால் எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடுகளின் கதவைத் தட்டி உதவி கேட்டிருக்கிறார். பின்னர் அவர் பர்கூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேற்கண்ட குற்றச் சம்பவம் தொடர்பாக, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, மேற்கண்ட செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். சமூக வலை தளங்களில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் 23 Nov 2025 1:47 pm

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அவர் கூறினார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

அதிரடி 23 Nov 2025 1:40 pm

Ajith: வெனிஸில் அஜித்துக்கு ஜெண்டில்மென் டிரைவர் விருது! - மேடையில் அஜித் வைத்த கோரிக்கை என்ன?

நடிகர் அஜித் குமார் தற்போது ரேசிங் களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றிருந்த அவருக்கு எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித். அஜித் குமார் அவர் விருது வென்றிருப்பது குறித்து அவருடைய மனைவி ஷாலினி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், “வெனிஸில் என் கணவருக்கு ‘Gentleman Driver of the Year 2025’ விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமைகிடைக்கிறது. தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அஜித் பேசுகையில், “இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022) என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேசிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்.” எனக் கூறினார்.

விகடன் 23 Nov 2025 1:40 pm

Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்

நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய கடத்தல் சம்பவம் இதுதான் எனவும் கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நைஜிரிய கிறிஸ்துவ சங்கம் முதலில் 227 நபர்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தது. Nigeria people பின்பு, எண்ணிக்கை சரிபார்க்கையில் மொத்தமாக 303 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருப்பதாக உறுதி செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட மாணவர்களுக்கு எட்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை இப்படியான மூன்று கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை குறித்தான அச்சமும் எழுந்திருக்கிறது. நைஜிரியாவின் நைஜர் மாநிலத்திலுள்ள செயின்ட் ஆகஸ்டின் பள்ளியின் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அருகிலிருக்கும் மற்றொரு பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தி 25 மாணவிகளை கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து நைஜர் மாநில ஆளுநர் மொஹம்மது உமர் பாகோ, “போலீசார் எத்தனை பேர் மொத்தமாக கடத்தப்பட்டிருக்கிறார்கள் என சரிபார்த்து வருகிறார்கள். நைஜர் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டிருக்கிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது அரசின் முதன்மை நடவடிக்கையாக உள்ளது. அருகிலுள்ள பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதேபோன்ற உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்தார். இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்த தனது வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்திருக்கிறார். நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் பணத்திற்காகத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இந்தக் கடத்தல் கும்பல் தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்போது நைஜர் மாநிலத்தில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய நைஜர் மாநில காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நைஜிரியாவில் தொடர்ந்து கிறிஸ்துவர்கள் கொலைச் செய்யப்பட்டு வருவது குறித்து சமீபத்தில் பேசிய டிரம்ப், நைஜீரியா அரசு கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா தன்னுடைய அனைத்து உதவி, ஆதரவுகளையும் உடனடியாக நிறுத்தும். மேலும், தேவையானால், அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து, இந்த கொடூர தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்துவிடவும் செய்யும். என எச்சரித்து இருந்தார்.

விகடன் 23 Nov 2025 12:49 pm

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 48 மருத்துவ இடங்கள்; தேசிய மருத்துவ ஆணையத்திடம் நிரப்ப கோரிக்கை

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இடங்களை நிரப்ப 4 சுற்று கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 48 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப அனுமதி கோரப்பட்டுள்ளது.

சமயம் 23 Nov 2025 12:44 pm

விஜய் சேதுபதியிடம் பார்வதியை மாட்டிவிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்: என்ன பஞ்சாயத்துனு தெரியுமா?

வார இறுதி நாட்கள் வந்தாலே போட்டியாளர்களை விட்டுவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பார்வையாளர்கள்.

சமயம் 23 Nov 2025 12:42 pm

தவெகவிற்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ? தற்குறி இல்ல, விஜய் சொன்ன பிளாஸ்ட் மூமண்ட்!

திமுகவின் அறிவுத் திருவிழாவில் அக்கட்சி எம்.எல்.ஏ எழிலன் பேசியது தொடர்பாக தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தவெகவிற்கு ஆதரவாக பேசியதால் திமுக தலைமையே குழம்பி போயிருப்பதாக விமர்சித்திருக்கிறார்.

சமயம் 23 Nov 2025 12:32 pm

வியத்நாம் வெள்ளம்! பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு!

வியத்நாம் நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. வியத்நாமில் பெய்த கனமழையால், மத்திய மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 28,400-க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், 80,000 ஹெக்டேர் அளவிலான விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக, வியத்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 13 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகளில் அரசுப்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. […]

அதிரடி 23 Nov 2025 12:30 pm

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண பந்தத்தில் இன்று (23) இணைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளுடன் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உட்பட இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

அதிரடி 23 Nov 2025 12:18 pm

புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர்!

தெருவில் எதாவது பொருள் கிடந்தால் உடனே எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்வது வழக்கம். அதுவும் பணம் என்றால் ஒரு ரூபாய் கிடந்தால் கூட விடமாட்டார்கள். ஆனால் புனேயில் தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சத்தை தூய்மைப் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்து அதனை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். புனே சதாசிவ் பேட் பகுதியில், அஞ்சு மானே என்ற பெண் ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரிக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் வழக்கம்போல் ஒவ்வொரு வீட்டிலும் குப்பையை வாங்கிக்கொண்டு வந்தபோது சாலையில் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. உடனே அதில் எதாவது மருந்து இருக்கலாம் என்று கருதி அதனை எடுத்து தனது வண்டியில் தனியாக வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் மருந்தும், கட்டுக்கட்டாக பணமும் இருந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்களிடம் யாராவது பணம் இருந்த பையை தவறவிட்டார்களா என்று அஞ்சு விசாரித்தார். அப்போது ஒருவர் மிகவும் பதட்டத்துடன எதையோ தேடிக்கொண்டு வந்தார். அவரது பதட்டத்தை பார்த்த அஞ்சு அவரிடம் என்னவென்று விசாரித்தார். உடனே அவர் தான் பேக்கை தவறவிட்டுவிட்டதையும், அதில் பணம் மற்றும் மருந்து இருந்ததை தெரிவித்தார். உடனே பணத்திற்கு சொந்தக்காரர் அவர்தான் என்பதை அறிந்து கொண்ட அஞ்சு அந்த பேக்கில் என்னவெல்லாம் இருந்தது என்பதை கேட்டு உறுதி செய்துகொண்டு அதனை அவரிடம் ஒப்படைத்தார். அவர் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளவில்லை. பேக்கில் ரூ.10 லட்சம் இருந்தது. பணத்திற்கு சொந்தக்காரர் மிகவும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார். அப்பெண்ணின் இந்த தன்னலமற்ற செயலை பாராட்டி உள்ளூர் மக்கள் சிறிய பாராட்டு விழா எடுத்தனர். அதில் அவருக்கு ஒரு சேலையும், சிறிது ஊக்கத்தொகையும் கொடுத்தனர். கடந்த 20 ஆண்டுகளாக அஞ்சு புனே மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரித்து வருகிறார்.

விகடன் 23 Nov 2025 11:52 am

தனுஷ் மூஞ்சி 'LF' மூஞ்சினு சொன்ன தேரே இஷ்க் மெய்ன் இயக்குநர், ஹீரோயின்: அவர் முகம் என்ன அப்படியா இருக்கு?

தன் முகத்தை பற்றி க்ரிட்டி சனோன், ஆனந்த் எல். ராய் சொன்ன விஷயத்தை தேரே இஷ்க் மெய்ன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து, என் முகம் என்ன அப்படியா இருக்கிறது என்று கண்ணாடியை பார்த்ததாக கூறினார் தனுஷ்.

சமயம் 23 Nov 2025 11:52 am

விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி.. அரங்கம் அதிர்ந்த விஜய் பேச்சு!

தனது கொள்கைகளை அடகு வைத்தது தான் திமுக.விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி தவெக தலைவர் விஜய் தெரிவிமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படிவித்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 11:46 am

தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள்… அனைவருக்கும் வீடு, வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், பட்டப்படிப்பு- விஜய் போட்ட லிஸ்ட்!

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சி தலைவர் விஜய் 2026 தேர்தல் வாக்குறுதிகளாக சிலவற்றை முன்வைத்துள்ளார். மேலும் காஞ்சிபுரம் மக்களின் நிலை குறித்து எடுத்துரைத்திருக்கிறார்.

சமயம் 23 Nov 2025 11:45 am

இனி இவர்களுக்கும் கிராஜுட்டி கிடைக்கும்.. ஒரு வருடம் வேலை செய்தாலே வரும்!

நிரந்தர ஊழியர்களுக்கு கிராஜுட்டி பணம் கிடைப்பதைப் போல இனி தற்காலிக ஊழியர்களுக்கும் கிராஜுட்டி பணம் வழங்கப்படும்.

சமயம் 23 Nov 2025 11:43 am

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண் –மிரண்ட பயணிகள்

எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் மேகி சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகி சமையல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பெண் பயணி ஒருவர் எலெக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்தி மேகி சமைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில் சமையலறை எங்கு வேண்டுமானாலும் உள்ளது” என்று மகிழ்ச்சியுடன் பேசிய அந்த பெண், ஒரே கெட்டிலில் 15 பேருக்கு டீ போடும் திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார். அத்துமீறிய பெண் இதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு விதிகள் […]

அதிரடி 23 Nov 2025 11:30 am

அலிபாபாவும் 40 திருடர்களும் பங்குபற்றிய நுகேகொடை பேரணி

அண்மையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றிய கூட்டணி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தரப்பு “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்த விமர்சனத்தை முன்வைத்தார். எல்லா திருடர்களும் ஒரே மேடையில்… இந்த நாடு வங்குரோத்து நிலை அடைந்ததற்கு மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமே பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திய அவர், […]

அதிரடி 23 Nov 2025 11:14 am

தமிழர் பகுதியொன்றை உலுக்கிய சம்பவம் ; குடும்ப பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட பெரும் கொடூரம்

பொத்துவில் பொலிஸ் பிரிவின் ஹுலன்னுகே 12வது தூண் பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை நேற்று (22) நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஹுலன்னுகே பொத்துவில் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஆவார். நடந்து வரும் விசாரணையில், இந்தக் கொலை தனிப்பட்ட தகராறில் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக 59 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 23 Nov 2025 11:09 am

யாழில் நான்கு இளைஞர்கள் அதிரடி கைது

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். மேலதிக விசாரணை கைதானவர்கள் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 22,24 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதிரடி 23 Nov 2025 11:08 am

24 மணிநேரத்திற்குள்..! வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

வங்கதேச நாட்டில், 24 மணிநேரத்துக்குள் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் அருகிலுள்ள பைபைல் எனும் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று (நவ. 22) காலை 10.36 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பெரியளவில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதனால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, வங்கதேசத்தில் நேற்று முன்தினம் காலை […]

அதிரடி 23 Nov 2025 10:30 am

அசைவ உணவோட தலைநகரம் சென்னை 'தாஷமக்கான்’ பகுதி; ராப் இசை கலைஞராக நடிச்சிருக்கேன் -ஹரிஷ் கல்யாண்

'லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது. டைட்டில் ஏதும் முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்புப் பணிகள் நடந்து வந்தன. இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தாஷமக்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இந்நிலையில் இப்படத்திற்கு 'தாஷமக்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் குறைந்த விலையில் நல்ல சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன ஏரியாதான் இந்த 'தாஷமக்கான்’. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஷ் கல்யாண், என் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸுக்கு இப்படி தனியாக நிகழ்ச்சி நடத்துறது இதுதான் முதல்முறை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'தாஷமக்கான்’ ஏரியா பற்றி நிறையபேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதோட உலகம்பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அசைவ உணவு தலைநகரம் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் நான் ராப் இசைப் பாடகராக நடிச்சிருக்கேன். பல இளம் ராப் இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்களைப் பார்த்து அவர்களுடைய அசைவுகள், ஸ்டைல், ராப் பாடும் விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். யோகி பி, ஹிப் ஹாப், ரஹ்மான் சார் என எல்லோரும் ராப் இசையைக் கேட்டிருப்போம். இன்னைக்கு ராப் இசை நல்லா வளர்ந்திருக்கு. அறிவு, அசல் கோளாறு, பால் டப்பா எனப் பலர் உலகளவில் பிரபலமாகிட்டாங்க. ராப் இசை மூலமாக புரட்சியே பண்ணுறாங்க. அப்படியான ராப் இசை கலைஞராக நான் நடித்திருக்கிறேன். நிறையபேர் இந்தப் படத்தோட கதையக் கேட்டுட்டு நடிக்கல, ஒரு சவாலாக எடுத்து இந்தப் படத்துல நடிச்சிருக்கேன். வடசென்னை பற்றி நிறையபடம் வந்திருக்கு, ஆனால் இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வரும் என்று பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

விகடன் 23 Nov 2025 9:35 am

பிக் பாஸ்ல இருந்து கெமி வெளியேற்றம்:தயவு செஞ்சு இனியும் 'அந்த வார்த்தையை' சொல்லாதீங்க விஜய் சேதுபதி

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் கெமியை வெளியேற்றியுள்ளனர். மேலும் திவ்யாவை விளாசும்போது விஜய் சேதுபதி பயன்படுத்திய வார்த்தை சரியில்லை என்று புகார் எழுந்திருக்கிறது.

சமயம் 23 Nov 2025 9:34 am

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு.. பவுன்சர்களுக்கு விஜய் போட்ட ஆர்டர் - பலத்த பாதுக்காப்பு

காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்திக்க உள்ளார். இதனால் பாதுக்காப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சமயம் 23 Nov 2025 9:31 am

பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது –ரூ. 5.76 கோடி பறிமுதல்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 7.11 கோடி பணத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன வானத்தில் கடந்த 19ம் தேதி ஊழியர்கள் சென்றனர். அந்த வாகனத்தில் டிரைவர், துப்பாக்கியுடன் கூடிய 2 பாதுகாவலர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர். இதனிடையே, ஜெயநகர் அருகே அசோக் பில்லர் பகுதியில் சென்றபோது அந்த வாகனத்தை சொகுசு காரில் வந்த சிலர் இடைமறித்தனர். ரிசர்வ் வங்கி, […]

அதிரடி 23 Nov 2025 9:30 am

நாவாந்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர், உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் சனசமூக நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோரினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் மாலை அணிவித்து , மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது. நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பதிவு 23 Nov 2025 9:02 am

Doctor Vikatan: குழந்தையின்மைக்கும் உணவுப்பழக்கத்துக்கும் தொடர்பு உண்டா?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் கருத்தரிக்கவில்லை. பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம், பலனில்லை. என் தோழி, என் உணவுப்பழக்கத்தை மாற்றும்படி அறிவுறுத்துகிறாள். உணவுப்பழக்கத்துக்கும் கருத்தரித்தலுக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? கருத்தரிக்க விரும்புவோர், எப்படிப்பட்ட உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளுக்கும் கருத்தரித்தல் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீங்கள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதாக நினைக்கலாம், ஆனால், சில உணவுகளும், அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களும் உங்கள் ஹார்மோன்களைக் குலைத்து, உடலில் அழற்சியை (Inflammation) ஏற்படுத்தி, முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை நாளடைவில் சேதப்படுத்தலாம். கருத்தரிக்கும் திட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உணவு விஷயத்தில் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.  வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பேக்கரி பொருள்கள், சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை இன்சுலின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்து, இன்சுலின் எதிர்ப்புக்கு (Insulin Resistance) வழிவகுக்கும். இது பிசிஓஎஸ் (PCOS), கருமுட்டை வெளியேறுவதில் குறைபாடு மற்றும் விந்தணுவின் இயக்கக் குறைவு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.  இவற்றுக்குப் பதிலாக, பழங்கள், பேரீச்சம்பழம், பனை வெல்லம் (அளவோடு), மற்றும் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். பாக்கெட் உணவு பொரித்த உணவுகள், பாக்கெட் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், வனஸ்பதி (Margarine) மற்றும் துரித உணவுகளில் டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு காணப்படும். அது கருப்பையை பாதித்து, ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தி, கருத்தரிக்கும் திறனையும் பாதிக்கும். எனவே, அத்தகைய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவது மிக நல்லது. சிலருக்கு, பால் பொருள்கள் அழற்சியை அதிகரிக்கலாம். பால் ஒவ்வாமை இருக்கலாம். பால் குடித்த பிறகு வயிறு உப்புசம், சோர்வு அல்லது முகப்பரு ஏற்பட்டால் பால் உணவுகளைத் தவிர்த்து, அவற்றுக்கு மாற்றாக, பாதாம் பால், தேங்காய்ப் பால் போன்றவற்றை பயன்படுத்தலாம்.  குளூட்டன் அதிகமுள்ள கோதுமை, மைதா, பார்லி ஆகியவை சிலருக்கு குடலில் அழற்சியை உண்டாக்கி ஹார்மோன் சமநிலையின்மையைத் தூண்டும். அவர்கள், சிறுதானியங்கள், சிவப்பு அரிசி, கினோவா, மற்றும் பயறு வகைகளைப் பயன்படுத்தலாம். மதுப் பழக்கமும் அதிக காபி குடிக்கும் பழக்கமும் ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கத்தை அதிகரிக்கும். விந்தணுவின் தரத்தையும் குறைக்கலாம். பாக்கெட் உணவு ப்ரிசர்வேட்டிவ் சேர்த்த உணவுகள், பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றில் Xenoestrogens எனப்படும் ரசாயனங்கள் இருக்கும். இவை ஈஸ்ட்ரோஜெனைப் போலச் செயல்பட்டு, உங்கள் நாளமில்லாச் சுரப்பி அமைப்பை (Endocrine System) சீர்குலைக்கும். எனவே, எப்போதும் வீட்டில் ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதே சிறந்தது. சமைத்த உணவுகளை கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கன்டெய்னர்களில் வைத்திருப்பது சிறந்தது. மேற்குறிப்பிட்ட விஷயங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் பெரிய ஆபத்தில்லாதவை போலத் தெரியலாம். நீண்டகாலம் இவற்றுக்கு உட்படும்போது அவை நிச்சயம் உங்கள் கருத்தரித்தல் திறனை பாதிக்கலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட்? - இவை உடலில் செய்யும் மாற்றங்கள் என்ன?

விகடன் 23 Nov 2025 9:00 am

கடுகன்னாவ மண்சரிவின் உயிரிழப்பு அதிகரிப்பு ; பல்கலை விரிவுரையாளரும் சடலமாக மீட்பு

கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், ஒருவர் முன்னதாகவே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் , மண்ணுக்குள் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 10 மணி நேர மீட்புப் பணியின்போது மேலும் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்தவர்களில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் உள்ளடங்குகின்றார் எனத் தெரியவருகின்றது.

பதிவு 23 Nov 2025 8:50 am

காஞ்சிபுரத்தில் தவெக விஜய் மக்கள் சந்திப்பு… கரூருக்கு பின் முதல் கூட்டம்- QR கோடு கட்டுப்பாடு!

கரூர் நிகழ்விற்கு பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் தவெக தலைவர் விஜய் வருகை புரிந்து மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

சமயம் 23 Nov 2025 8:44 am

நீங்கள் ‘ஆம்’என்று மட்டும் சொன்னால் போதும்; இந்திய வம்சாவளி மேயரிடம் சமாதானமான ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மம்தானியை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப்-ஐ ‘பாசிஸ்ட்’ என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என ட்ரம்ப்பும் விமர்சித்தனர். மம்தானி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நியூயார்க்கிற்கான நிதி குறைக்கப்படும் என ட்ரம்ப் தேர்தலுக்கு ஒரு நாள் முன் மிரட்டினார். வெள்ளை மாளிகையில் சந்திப்பு இருப்பினும் நியூ யார்க் மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியராக மம்தானியை தங்கள் மேயராக தேர்ந்தெடுத்தனர். இந்த சூழலில் வெள்ளை […]

அதிரடி 23 Nov 2025 8:30 am

BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?

இந்த வார எவிக்ஷனுக்கான நேரம் வந்துவிட்டது. வார இறுதி எபிசோடுகளுக்கான ஷூட் நேற்று காலை தொடங்கியது. விஜய் சேதுபதியுடன் பிரஜின் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோவும் இணையத்தில் வைரலானது. பிக் பாஸ் சீசன் 9-ல் வி.ஜே. பார்வதி, பிரவீன் காந்தி, வாட்டர்மெலன் திவாகர், கனி, கெமி என மொத்தமாக 20 போட்டியாளர்கள் முதலில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். BB TAMIL 9 சோசியல் மீடியா பிரபலங்களே பிக் பாஸ் நிறைந்திருப்பதால் இந்த சீசன் கொஞ்சம் டல் அடிக்கிறது என்கிற பேச்சு எழுந்தது. அதைத் தொடர்ந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பரபரப்பாகவே நகரத் தொடங்கியது. இந்த வார எவிக்ஷனுக்கான டிஸ்கஷன் வழக்கம் போல நடந்திருக்கிறது. இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்திருந்தது. அமித் பார்கவ், அரோரா, திவ்யா கணேஷ், கனி, கெமி, பிரஜின், ரம்யா ஜோ, சபரி, சாண்ட்ரா, சுபிக்ஷா, விக்ரம், வியானா, வி.ஜே. பார்வதி என 13 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் 13 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் யார் வெளியேறுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. BB Tamil 9 பார்வையாளர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இந்த வாரம் கெமி வெளியேறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ், திவாகர் என 7 பேர் எவிக்ட் ஆகியிருக்கிறார்கள். பிக் பாஸ் வீடு செட் ஆகாததால் நந்தினி முதல் வாரத்தில் அவராகவே வெளியேறினார். ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாக்குகளைப் பெற்ற கெமி இந்த வாரம் எவிக்ட் ஆகியிருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விகடன் 23 Nov 2025 8:10 am

கோவை செம்மொழி பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்போது திறக்கப்படும்?

கோவை செம்மொழி பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்போது திறக்கப்படும்? என்பது தொடர்பாக அமைச்சர் கே என் நேரு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சமயம் 23 Nov 2025 8:08 am

போதை பொருள் கடத்தல் விவகாரம் ; மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21) உறுதி செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, ‘புத்திம’ எனும் மீன்பிடிப் படகில் மீனவர்கள் போன்று வேடமணிந்து 151 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த ரோஹன, அன்டன் கிறிசாந்த, துலாக் ரவீந்திர, லியனாதுரகே சுரங்க மற்றும் தரிந்து ஜயந்த […]

அதிரடி 23 Nov 2025 8:08 am

Rain Alert: இந்த 16 மாவட்டங்களில் இன்று காலை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (நவ.22) காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. Rain Alert கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு... - எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணிவரை இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று சென்னையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

விகடன் 23 Nov 2025 8:05 am

வெளிநாடொன்றில் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வொண்டிப் பகுதியில், வவுனியாவைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர் மற்றும் 36 வயதான பெண் ஒருவர் நள்ளிரவு வேளையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை குறித்த இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றிருந்தாலும், அவர்கள் மீண்டும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்துவந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதே நேரத்தில், பிரான்ஸ் அரசாங்கம் மனைவி மற்றும் அவளது இரு குழந்தைகளுக்காக வழங்கி வந்த சமூக நல உதவித் தொகைகளை மனைவி தொடர்ந்து பெற்றுவந்ததாகவும் பொலிசார் […]

அதிரடி 23 Nov 2025 8:03 am

IND vs SA ODI: ‘கில் நீக்கம்’.. கேப்டன் இடத்துக்கு 2 பேர் போட்டி: குட்டி கோலிக்கு அடித்த ஜாக்பாட்.. திடீர் சேர்ப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், ஷுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இருக்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், குட்டி கோலியை சேர்க்க வாய்ப்புள்ளதாம்.

சமயம் 23 Nov 2025 7:44 am

'மாஸ்க்', 'மிடில் க்ளாஸ்', எல்லோ' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்களின் விமர்சனங்கள் இங்கே!

இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் 'மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'சிசு' படத்தின் சீக்வெலான 'சிசு - ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அப்படங்களின் விகடன் விமர்சனங்களை இங்கு பார்ப்போமா... MASK மாஸ்க்: அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இப்படம். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று சென்னையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள். டிடெக்டிவாக இருக்கும் வேலு (கவின்), என்.ஜி.ஓ வைத்திருக்கும் பூமி (ஆண்ட்ரியா), எம்.எல்.ஏ மணிவண்ணன் (பவன்) எப்படி இந்த கொள்ளைக்குச் சம்பந்தப்படுகிறார்கள், இந்த கொள்ளைச் சம்பவத்தை உண்மையாகவே நிகழ்த்தியது யார் என்பதுதான் இந்த 'மாஸ்க்' படத்தின் கதை. இயக்குநர் நெல்சனின் வாய்ஸ் ஓவர், ஐடியா என சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் திரைக்கதையில் இந்த 'மாஸ்க்' ஆங்காங்கே சறுக்கியிருக்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். தீயவர் குலை நடுங்க: எழுத்தாளராக இருப்பவரின் கொலை வழக்கை விசாரிக்க காவல் அதிகாரியான மகுடபதி (அர்ஜூன்) களத்தில் இறங்குகிறார். எழுத்தாளர் எழுதி வைத்த புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை கொலைக் காரணங்களாகக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் இவர். உண்மையான கொலையாளி யார், எதற்காக கொலை செய்தார் என்பதைச் சொல்கிறது இந்த 'தீயவர் குலை நடுங்க'. கணிக்கக்கூடிய திருப்பங்கள், டெம்ப்ளேட் திரைக்கதையாலும் பார்வையாளரை இப்படம் சோர்வடையச் செய்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். தீயவர் குலை நடுங்க விமர்சனம் | Theeyavar Kulai Nadunga Review எல்லோ: தந்தையின் உடல்நிலை பிரச்னைகளால் குடும்பப் பொறுப்புகள் ஆதிரையை (பூர்ணிமா ரவி) சூழ்ந்துவிடுகின்றன. தந்தையின் பழைய ஆல்பத்தில் இருக்கும் புகைப்படம் இவரை கேரளத்துக்கு பயணப்பட வைக்கிறது. பயணத்தின் போது சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் இவருடைய ஆசைகளுக்கு உதவுகிறார். இவர்களின் பயணம் எங்கெல்லாம் இவர்களை அழைத்துச் செல்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபீல் குட் டிராமாவாக நகரும் இந்த 'எல்லோ' திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஆழமிருந்திருந்தால் பலருக்கும் பேவரிட்டாகியிருக்கும். படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். மிடில் க்ளாஸ்: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காரல் மார்க்ஸ், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சொந்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்பதே இந்த மிடில் க்ளாஸ் குடும்பத் தலைவரின் கனவாக இருக்கிறது. அப்படியான வேளையில், இவருடைய தந்தையால் இவருக்கு ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், அது கைகளுக்கு கிடைக்காமல் சில பிரச்னைகளையும் இழுத்து விடுகிறது. இறுதியில் அந்த ஜாக்பாட் இவர்களின் கைகளுக்கு கிடைத்ததா என்பதுதான் இதன் கதை. காமெடி, எமோஷனல் என குழம்பும் திரைக்கதையால் இந்த 'மிடில் க்ளாஸ்' ஓகே மட்டுமே சொல்ல வைக்கிறது. படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம் சிசு ரோட் டு ரிவெஞ்ச் (SISU - Road To Revenge): கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'சிசு' படத்தின் சீக்வெல்தான் இத்திரைப்படம். இரண்டாம் உலகப் போரில் இறுதியில் இறந்துப் போன தனது குடும்பத்தின் நினைவாக கட்டைகளால் செய்யப்பட்ட அவருடைய வீட்டை தகர்த்துவிட்டு அதை வைத்து வேறொரு இடத்தில் வீடு கட்ட திட்டமிடுகிறார். கட்டைகளை எடுத்துச் செல்லும் வேளையில் அடாமி கார்பிக்கு (ஜால்மரி டாமிலா) பழைய எதிரிகளால் பல தடைகளும், பிரச்னைகளும் வருகின்றன. அதை கடந்து எப்படி மற்றொரு பகுதிக்கு சென்று வீட்டை எழுப்பினார் என்பதுதான் இதன் கதை. வழக்கமான ஆக்‌ஷன் படங்களின் கதை சொல்லலை தவிர்த்து புதிய திரைமொழிக் கொண்டு சொல்லும் இடத்தில் இந்த 'சிசு' தனித்து நிற்கிறது படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

விகடன் 23 Nov 2025 7:17 am

சிவகாசி: நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்து விபத்தை உண்டாக்கிய இருவர் கைது

சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை பார்த்த பைக்கில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இரு இளைஞர்கள் சண்டையிடுவது போல் நடித்து வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்போது அவ்வழியே டூ-வீலரில் சென்ற நபர் சண்டையை உண்மையென நினைத்து பார்த்தபோது, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த தனியார் பேருந்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. பைக் விபத்தில் சிக்கியதை பார்த்த இளைஞர்கள் இருவரும் சிரித்துக் கொண்டு வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். பைக் விபத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மல்லி போலீஸார், சிவகாசி அருகே அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜன் மற்றும் வடபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீடியோ எடுத்த நபரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சாலையில் சண்டை போட்டு ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்; விபத்தில் சிக்கிய பயணி - சிவகாசியில் சோகம்

விகடன் 23 Nov 2025 7:16 am

கடுகண்ணாவ அனர்த்தத்தில் பலியான பேராதனை பல்கலை விரிவுரையாளர்

நேற்றைய தினம், கடுகண்ணாவவில் ஏற்பட்ட பாறை சரிவில் உயிரழந்த 6 பேரில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பேராதனை பொறியியல் பீட விரிவுரையாளர் லஹிரு என்பவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடுகண்ணாவவில் இருந்த ரொட்டி கடை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் கடை மீது பாரிய பாறை ஒன்று விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த கார் அவர்களில், கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் […]

அதிரடி 23 Nov 2025 7:14 am

கடுகண்ணாவ மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கியிருந்த மேலும் இருவர், சற்றுமுன்னர் உடலங்களாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

அதிரடி 23 Nov 2025 7:12 am

பெரியகுளம்: ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திர தினத்தில் சிறப்பு அபிஷேகம் | Photo Album

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம். ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம். ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம். ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம். ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பெரியகுளம்.

விகடன் 23 Nov 2025 7:06 am

வடவள்ளி - மருதமலை வரை சாலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் எதிர்ப்பு!

கோவை மாவட்டம் வடவள்ளி - மருதமலை வரை அமைக்கப்படும் சாலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 23 Nov 2025 7:01 am

எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட்? - இவை உடலில் செய்யும் மாற்றங்கள் என்ன?

சாதம், பிரெட், காய்கறி, பழங்கள், குளிர்பானங்கள் என நாம் உட்கொள்ளும் எந்த ஓர் உணவிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கார்போஹைட்ரேட் என்றாலே உடலுக்குக் கெடுதி என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. கார்போஹைட்ரேட் என்றால் என்ன, எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட் என்று தெரிந்துகொண்டால், இந்த தவறான எண்ணம் மறையும்; உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளலாம். எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் - நல்லது நல்ல கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து எனப்படுவது, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட். இதன் ரசாயனக் கட்டமைப்பு மற்றும் நார்ச்சத்து போன்றவை காரணமாக, நம்முடைய செரிமான மண்டலமானது இதைச் செரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால், கலோரியானது நீண்ட நேரத்துக்கு வெளியாகிறது. இயற்கை வடிவில் உள்ள உணவுப் பொருட்களை நல்ல கார்போஹைட்ரேட் எனலாம். • முழு தானியங்கள் • பட்டைதீட்டப்படாத அரிசி • பச்சைக் காய்கறிகள் • பழங்கள் எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? நல்ல கார்போஹைட்ரேட் - என்ன பயன்? நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. மிகக் குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது. மிகக் குறைவான கலோரியிலேயே உட்கொண்ட நிறைவு கிடைக்கும். இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. சிம்பிள் கார்போஹைட்ரேட் - கெட்டது எளிதில் செரிமானம் ஆகும் வகையில் உருமாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ‘எளிய கார்போஹைட்ரேட்’ எனப்படும். இவற்றை உட்கொண்டதுமே செரிமானம் ஆகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். இப்படி கலக்கப்படும் சர்க்கரையை, நம் செல்கள் உடனடியாகப் பயன்படுத்தாவிடில், இவை கொழுப்பாக மாற்றப்படும். எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? பதப்படுத்தப்பட்ட, பட்டைதீட்டப்பட்ட, செயல்பாட்டுக்கு உள்ளான உணவுகள் (Processed food) அனைத்துமே சிம்பிள் கார்போஹைட்ரேட் உணவுகள்தான். Healthy Food: இதயம் தொடங்கி வயிறு வரைக்கும் நல்லதே செய்யும் பாசிப்பருப்பு! • சாக்லேட், இனிப்பு வகைகள் • மைதா பொருட்கள் • சர்க்கரை • கார்பனேட்டட் பானங்கள் Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? சிம்பிள் கார்போஹைட்ரேட் என்கிற கெட்ட கார்போஹைட்ரேட் ஏன் கெடுதல்? ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து இல்லை. கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம். பயன்படுத்தப்படாத கலோரிகள் கொழுப்பாக மாற்றப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

விகடன் 23 Nov 2025 6:56 am

நாகூர் தர்கா கந்தூரி விழா- சிறப்பு ரயில்களை இயக்க நாகை எம்பி தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை!

நாகூர் தர்கா கந்தூரி விழா நடைபெற்று வருவதை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க நாகை எம்பி தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 6:51 am

சென்னை மெட்ரோவுக்கு வரும் புதிய ரயில்கள்... டெண்டர் வெளியிட்ட நிர்வாகம்!

சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ முடிவு செய்து உள்ளது. இதற்கான டெண்டரை சிஎம் ஆர் எல் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

சமயம் 23 Nov 2025 5:57 am

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள் ; பயணிகள் பலர் படுகாயம்

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் நகரில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு செஸ்கே புடெஜோவிஸ் (Česk Budějovice) நோக்கிப் பயணித்தது. பயணிகள் பலர் படுகாயம் அந்த ரயில் தனது இலக்குக்கு அருகில் சென்றபோது, அதே ரயில் மார்க்கத்தில் வந்த மற்றொரு ரயில் நேருக்கு நேர் மோதியது. இந்த திடீர் மோதலில் பயணிகள் பலர் படுகாயமடைந்தனர். மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து […]

அதிரடி 23 Nov 2025 5:49 am

பிராட்வே-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் BRTS அமைப்பு- முன்னோட்ட பணிகள் தொடக்கம்!

சென்னையில் முக்கிய போக்குவரத்து வழித்தடமான பிராட்வே முதல் பூந்தமல்லி வரை விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் பிஆர்டிஎஸ் அமைப்பானது செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு உள்ளது.

சமயம் 23 Nov 2025 5:32 am

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் ஸ்டார்ட்அப் ஒன்றைத் தொடங்கியுள்ளார். விண்வெளி பயணங்களில் அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள் (space debris) பிரச்சினையை தீர்க்க, ஜேர்மனியின் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் லியோனிடாஸ் அஸ்கியானாகிஸ் (Leonidas Askianakis) புதிய ஸ்டார்ட்அப் ஒன்றை தொடங்கியுள்ளார். அஸ்கியானாகிஸ் நிறுவிய Project-S நிறுவனம், பூமியைச் சுற்றி உள்ள 1 செ.மீ முதல் 10 செ.மீ அளவுள்ள சிறிய துண்டுகளை கண்டறிய உயர் உணர்திறன் கொண்ட ரேடார் மற்றும் தனித்துவமான அல்காரிதம் பயன்படுத்தும் […]

அதிரடி 23 Nov 2025 3:30 am

ஈரான் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபா்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது அந்நாட்டு பிராந்திய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘ஈரான் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இந்தியா, பனாமா, செஷல்ஸ் போன்ற […]

அதிரடி 23 Nov 2025 1:30 am

ஹமாஸ் பயன்படுத்திய ரகசிய சுரங்கம் வெளிச்சம் ; இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியீடு

இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரின் உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ரஃபா பகுதிக்கும், பள்ளிவாசல் ஒன்றுக்கும் கீழ் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 7 கிலோமீற்றர் நீளமும் 25 மீற்றர் ஆழமும் கொண்ட இந்த சுரங்கம் 80 அறைகளையும் கொண்டது. ஹமாஸ் தளபதிகள் ஆயுதங்களை சேமிக்கவும், தாக்குதல்களை […]

அதிரடி 23 Nov 2025 12:30 am

எல்லை மீள் நிர்ணயமும் முஸ்லிம் பிரதேசங்களும்

மொஹமட் பாதுஷா மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பரவலாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலிலும் அரசாங்கம் இன்னும் தேர்தலை இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றது. அடுத்த வருடம் தேர்தலை நடத்த முடியும் என்பதுதான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிகபட்ச அறிவிப்பாகும். அரசாங்கம் பல்வேறு காரணங்களினால் உடனடியாக மாகாண சபை தேர்தலுக்குச் செல்வதற்கு விரும்பவில்லை எனச் சொல்லப்படுகின்றது. சில ‘முக்கிய தரப்புக்களை’ வைத்துத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இராஜதந்திரிகளுக்கு அரச தரப்பில் தேர்தலுக்கான தாமதங்கள் பற்றி விளக்குவதற்கும் முயற்சிகள் […]

அதிரடி 23 Nov 2025 12:30 am

தமிழ்நாடு தேர்தலில் திமுகவிடம் விசிக கேட்கும் தொகுதிகள்? திருமாவளவன் போடும் கணக்கு இதுதான்...

எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருமாவளவனின் விசிக கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து முக்கிய தகவலை விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 12:03 am

கரூர் துயரத்திற்கு பின்னர் நாளை மக்களை சந்திக்கும் விஜய் –எங்கே தெரியுமா?

தவெக தலைவர் விஜய், கரூர் துயர சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக நாளை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் தவெக தலைவர் விஜய், மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 2 மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கோண்டார். செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 […]

அதிரடி 22 Nov 2025 11:30 pm

Aval Awards: என் கனவை அம்மா அனுமதிச்சதுக்கு நன்றி சொன்னா பத்தாது - சிவகார்த்திகேயன் எமோஷனல்!

விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் 'பெஸ்ட் மாம்' விருதைப் பெற்றார் நடிகர் சிவகார்த்திகேயனின் அம்மா ராஜி தாஸ். விருது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அம்மாவுக்கு கிடைத்த விருதுபற்றி பேசிய சிவகார்த்திகேயன், அப்பா இறக்கும்போது நான் ஃபர்ஸ்ட் இயர், அக்கா வந்து காலேஜ் செகண்ட் இயர். அதுக்கப்புறம் எல்லாருக்குமே ரெண்டு கேள்விதான் 'அடுத்து என்ன செய்யப் போறோம் லைஃப்ல'. Aval Awards அம்மா ஒன்னு மட்டும் தான் சொல்லிட்டே இருப்பாங்க படிச்சிடணும் படிச்சிடணும் நல்லா படிச்சிடணும் அப்படின்னு. சோ படிக்கணும்ங்கறது மட்டும் தான் மைண்ட்ல இருந்துட்டே இருந்துச்சு. ஆனா அதை தாண்டி எனக்கு ஒரு கனவு இருந்தது. என் கனவுக்கு அம்மா அனுமதிச்சதுக்கு நன்றி சொன்னா பத்தாது. அது கரெக்டா இருந்து அவங்களுக்கு ஏதாவது ஒரு மரியாதை செஞ்சிடனும்னு நினைச்சேன். அது இந்த மாதிரி ஒரு மேடையில இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. தேங்க்யூ விகடன் டீம். அதனாலதான் நான் நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன். நான் அம்மா செல்லம். அப்பாவும் அக்காவும்தான் க்ளோஸ். நமக்கெல்லாம் அப்பான்னா பயம். அம்மாவுடைய குணங்கள்தான் எனக்கு. Aval Awards அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு மேடை எவ்வளவு ஸ்பெஷலா இருக்கும்னு எனக்கு தெரியும். மதுரைக்கு பக்கத்துல பிரான்மலைன்னு ஒரு ஒரு கிராமத்துலதான் பிறந்து வளர்ந்தது அவங்க. அங்க இருந்து வேற வேற ஊர்கள்ல அப்பா கூட இருந்து, அதுக்கப்புறம் இப்ப இங்க சென்னைக்கு வந்து இதெல்லாம் பார்த்துட்டதுக்கு அப்புறம், எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு வேற எது எவ்வளவு சந்தோஷம் கொடுத்திருக்கும்னு தெரியல. இந்த விருது அவங்களுக்கு சந்தோஷம் கொடுத்திருக்கும்னு நினைக்கிறேன். இந்த பெயர் ரொம்ப நல்லா இருக்கு, பெஸ்ட் மாம் அப்படின்றத, தமிழ்ல சொல்லும்போது ரொம்ப நல்லா இருக்கு, சிறந்த அம்மா அப்படின்னு. அம்மான்னாலே சிறந்தவங்க தான். அதுல சிறந்த அம்மான்னும்போது அது ரொம்ப ஸ்பெஷல். எனப் பேசினார். மார்க்குக்காக கொஞ்சம் படிங்க, வாழ்க்கைக்காக நிறைய படிங்க - சிவகார்த்திகேயன் அட்வைஸ்!

விகடன் 22 Nov 2025 11:01 pm

இந்திய அரசியலமைப்பின் அதிகார பயணம்: ஒரு தேசத்தின் கனவுகளை செதுக்கிய புனித ஆவணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வேகம் பொங்கிப் பெருக்கும் காலத்தில், தேசிய உணர்வு தீப்பற்றி எரிந்த அந்த வரலாற்று தருணங்களில், இந்தியா புதிய வாழ்வை நோக்கிச் சென்றது. நூற்றாண்டுகளாக நீண்டுகொண்டிருந்த விடுதலைக்கான போராட்டம், ஒரு நவீன தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான அடிப்படைச் சட்டம்—ஒற்றுமையும் சமத்துவமும் நீதி நிறைந்த அரசியலமைப்பு - அவசியமாகுமென உணர்த்தியது. அதன் விளைவாக, 1946 டிசம்பர் மாதத்தில் அரசியல் நிர்ணய சபை எனும் வரலாற்றுச் சின்னமான அமைப்பு உருவானது. மூன்றாண்டுகளுக்கு அருகில் நீடித்த ஆழமான சிந்தனைகள், மாபெரும் விவாதங்கள், குடிமக்களின் எண்ணங்கள், தலைவர்களின் தத்துவங்கள் ஆகியவற்றின் கலவையால், உலகின் மிக நீளமான எழுத்துப்பூர்வ அரசியலமைப்பு வடிவெடுத்தது. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையின் தோற்றமும் தத்துவமும் கிரிப்ஸ் மிஷன் தோல்வியடைந்த பின்னர், இந்தியாவை சுதந்திரத்திற்கு வழிநடத்தும் பெரிய பொறுப்பு, 1946-இல் காபினட் மிஷன் திட்டத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் படி, இந்திய மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல்களின் மூலம், மாகாண சட்டசபைகள் அனைவரும் தங்கள் மக்கள்தொகையின் விகிதாசாரப்படி அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்தன. ஒவ்வொரு பத்து லட்ச மக்களுக்கும் ஒருவர் என்ற கணக்கில் அமைந்த இந்த அமைப்பு, பல்வகை இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை ஒரே மேடையில் கொண்டு வந்த உண்மையான ஜனநாயகக் குழுவாக இருந்தது. இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்தத் தத்துவச் சபை, மக்கள் ஆட்சியின் முதல் உயரிய வடிவமாக வரலாற்றில் நிலைபெற்றது. இதுவே பாகுபாடற்ற, அனைத்தையும் இணைக்கும் புதிய தேசக் கட்டுமானத்தின் முதல் எழுத்தாக மாறியது. இந்திய அரசியலமைப்பு முகப்புரை - இடது (1950), வலது (1976) சபையின் முதல் நாள்: புதிய காலத்தின் விடியல் 1946 டிசம்பர் 9 - இந்திய வரலாற்றின் பொற்குறியீட்டு நாள். அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தை டாக்டர் சச்சிதானந்த சின்ஹா தற்காலிகத் தலைவராக வழிநடத்தும்போது, இந்தியாவின் எதிர்காலம் புதிய பாதையில் முதல் அடியை எடுத்து வைக்கிறதென உணரப்பட்டது. சில நாட்களிலேயே டாக்டர் ராஜேந்திர பிரசாத் நிரந்தரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சபையின் கண்ணியத்தையும், செயற்பாட்டு வலிமையையும் உயர்த்தினார். அந்தக் கூட்டத் தொடரிலேயே, இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவாக விளங்கும் ஒரு வரலாற்றுச் சின்ன தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அது - குறிக்கோள் தீர்மானம் (Objective Resolution). குறிக்கோள் தீர்மானம்: புதிய இந்தியாவின் தத்துவ அறிவிப்பு ஜவஹர்லால் நேரு சபையின் முன் வாசித்த இந்தத் தீர்மானம், சுதந்திர இந்தியா எதற்காக உருவாகிறது, எந்த மதிப்புகளின் அடிப்படையில் இயங்கும், எந்த உயரிய இலக்குகளை நோக்கிச் செல்லும் என்பதற்கு தத்துவ ரீதியான விளக்கமாக இருந்தது. இந்தத் தீர்மானம் பின்னர் நமது அரசியலமைப்பின் இதயம் என விளங்கும் அறிமுகவுரையாக (Preamble) மாற்றப்பட்டு, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற நான்கு தூண்களை நித்தியமாக உறுதி செய்தது. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று! - சிறப்பு பகிர்வு குழுக் கட்டமைப்பு: அரசியலமைப்பின் எலும்புக்கூடு 1947 ஜனவரியில், அரசியலமைப்பு எழுதும் பணிகளை துல்லியமாக நடத்த பல துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவைகள்: வழிப்படுத்தல் குழு சிறுபான்மை பிரச்சினைகள் குறித்த குழு மத்திய அரசின் அதிகாரப் பரப்பு ஆய்வு குழு குடியுரிமை, அடிப்படை உரிமைகள், மாநில உறவுகள் போன்ற பிரிவுகளுக்கு தனித்தனியாக நியமிக்கப்பட்ட குழுக்கள் இந்த குழுக்களின் பரந்த ஆய்வுகளும் பரிந்துரைகளும், அரசியலமைப்பின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அறிவார்ந்த அடித்தளமாக அமைந்தன. தேசியக் கொடியின் பிறப்பு 1947 ஜூலை 22 அன்று அரசியல் நிர்ணய சபை, சுயாட்சி இந்தியாவின் தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. குங்குமப்பொன், வெண்மையும், பச்சையும் கலந்த திரிவர்ணத்தில் சக்கரத்தின் சுழற்சி—சுதந்திரத்திற்குள் செல்லும் ஒரு தேசத்தின் நித்திய இயக்கத்தை குறித்தது. வரைவுக் குழு மற்றும் டாக்டர் அம்பேத்கர் 1947 ஆகஸ்ட் 29 அன்று, அரசியலமைப்பை வடிவமைக்கும் மாபெரும் பொறுப்பு வரைவுக் குழுவுக்கு வழங்கப்பட்டது. குழுவின் தலைவராக டாக்டர் பீம்ராவ் அம்பேத்கார் நியமிக்கப்பட்டார். அவரின் சட்ட அறிவு, மனித மரியாதையின் பால் தத்துவ நம்பிக்கை, பாகுபாடற்ற சிந்தனை - இவை அனைத்தும் இந்திய அரசியலமைப்பை உலகின் மிக நுணுக்கமான ஜனநாயக ஆவணமாக மாற்றின. அவருடன் பணியாற்றிய மனம் திறந்த அறிஞர்கள்: கே.எம். முன்ஷி, என். கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, முகம்மது சாதுல்லா உள்ளிட்டோர். இவர்கள் சேர்ந்து ஒரு தனித்துவமான சட்டப்பிரபஞ்சத்தை உருவாக்கினர். விவாதங்களின் பெருங்கடல் 1948 பிப்ரவரியில் வரைவு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதும், நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கருத்துகள் வந்தன. எட்டு மாதங்கள் அவை ஆராயப்பட்டன. 1948 நவம்பர் 4 முதல் நடந்த விவாதங்களில்: 7635 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன அவற்றில் 2473 மட்டுமே விவாதிக்கப்பட்டன மொழி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், நீதித்துறை சுதந்திரம், மொழி அடையாளம், போர்—சமாதான கொள்கைகள் போன்றவை தீவிரமாகப் பேசப்பட்டன இந்த விவாதங்கள் இந்திய ஜனநாயகத்தின் அறிவாற்றலையும், பட்டினச் சிந்தனையையும் உலகுக்கு நிரூபித்தன. Constitution Day Of India - அம்பேத்கர் உலகத்தின் சிறப்பம்சங்களின் சங்கமம் இந்திய அரசியலமைப்பு உலகின் பல முன்னேற்ற அரசியலமைப்புகளை தழுவிய ஒரு சங்கீதம் போன்றது: இங்கிலாந்து – நாடாளுமன்ற முறை, ஒற்றைக் குடியுரிமை அமெரிக்கா – அடிப்படை உரிமைகள், நீதி மறுஆய்வு அயர்லாந்து – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் கனடா – கூட்டாட்சி அமைப்பு பிரான்ஸ் – குடியரசுத் தன்மை மற்றும் சுதந்திரம்–சமத்துவம்–சகோதரத்துவம் இந்த உலக அனுபவங்களின் கலவை, இந்தியாவின் தனித்துவமான அரசியல் சூழலுக்குப் பொருத்தமாக மாற்றப்பட்டது. ஒப்புதல் நாள்: நவம்பர் 26, 1949 1949 நவம்பர் 26 அன்று, அரசியல் நிர்ணய சபை, அனைத்து வாசிப்புகளையும் முடித்து அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. இந்தப் புனித நாள் இன்று அரசியலமைப்பு நாள் எனக் கொண்டாடப்படுகிறது. மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் கழித்து, இந்திய அரசியலமைப்பு தனது பூரண வடிவத்தை அடைந்தது. ஒரே வரைவு மட்டும் 114 நாட்கள் விவாதிக்கப்பட்டது என்பதே அதன் ஆழத்தைக் காட்டும் சான்று. இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950: புதிய யுகத்தின் விடியல் அந்த மாபெரும் நாளில், இந்திய அரசியலமைப்பு அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் இந்தியா: இறையாண்மை உடையது ஜனநாயகக் குடியரசு பல்பெரும் பண்பாட்டு தேசம் என்ற நிலையில் சட்டபூர்வமாக உலக மேடையில் தன்னை அறிவித்துக் கொண்டது. இந்திய அரசியலமைப்பு, மக்களின் ஆவியைப் பிறப்பித்த ஒரு “சமூக ஒப்பந்தம்”.ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் அல்ல—பல்வகைமைக்கு உறுதியான காவலர். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நான்கு நெறிகளை நம் வாழ்வின் நரம்புகளில் ஓடவைத்த ஆவணம். இது ஒரு சட்டப்புத்தகம் மட்டுமல்ல; இந்தியாவின் கனவுகளை ஒன்றாக சேர்த்த ஆவணம். இது ஒரு மக்களின் நம்பிக்கைகளையும், நெறிகளையும் பாதுகாக்கும் உறுதியான அடையாளம். இது ஒரு ஜனநாயகத்தின் வாழ்வையும் வளர்ச்சியையும். தொடர்ந்து ஒளிரச் செய்யும் நிலையான தீபம். இன்று வரை இந்த அரசியலமைப்பு, இந்தியாவின் அரசியல், சமூக, மானுட வாழ்வை வழிநடத்தும் நெறிப்பாலமாக, உலகிற்கே உதாரணமாக திகழ்கிறது. தேர்தல்

விகடன் 22 Nov 2025 11:01 pm

திருத்தணி தொகுதி: எல்லைகள் மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளும் பெரிது!

திருத்தணி தொகுதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆந்திரா என பல எல்லைப் பகுதிகளை உள்ளடக்கி, பல தரப்பட்ட மக்களைக் கொண்டுள்ளது. கோடைக்கால குடிநீர் பஞ்சம், உப்பு நீர் பிரச்சனை என சவால்களும் இருக்கின்றன.

சமயம் 22 Nov 2025 10:55 pm

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மீண்டும் பள்ளி மாணவா்கள் ஆயுதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனா். அந்த நாட்டின் நைஜா் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியான செயின்ட் மேரீஸ் பள்ளியை வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயுதக் குழுவினா் தாக்கி, பல மாணவா்கள் மற்றும் ஊழியா்களை கடத்திச் சென்றனா். அண்டை மாகாணமான கேபியில் 25 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சில நாள்களிக் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் மற்றும் கடத்தலுக்கு யாா் பொறுப்பு என்பது தெரியவில்லை. மேலும், […]

அதிரடி 22 Nov 2025 10:30 pm

சபரிமலை சிறப்பு பேருந்துகள்: தமிழகத்தில் இருந்து இந்த 3 நாட்கள் கிடையாது! SETC அறிவிப்பு

சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சில நாட்கள் சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 22 Nov 2025 10:11 pm

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 3 இடங்களை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் மூன்று தலங்களை சேர்த்தே பயணத்தை திட்டமிடுவது வழக்கமாக உள்ளது. காரணம், ஒவ்வொரு கோயிலும் ஐயப்பனின் ஒரு தனித்துவமான வடிவத்தையும் தத்துவத்தையும் தாங்கிக் கொண்டுள்ளது.

சமயம் 22 Nov 2025 10:07 pm

Aval Awards: நான் 15 ஆண்டுகளாக காட்டில் இருக்கிறேன் - விஷா கிஷோர் ஷேரிங்ஸ்!

விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பசுமைப்பெண் விருது பெற்றார் நடிகர் கிஷோரின் மனைவி விஷாலா கிஷோர். பசுமைப் பெண் - விஷாலா கிஷோர் விஷாலா ,  ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். நாமறிந்த நல்லதொரு நடிகர் கிஷோரின் மனைவி. கிஷோர், சினிமாவில் பிஸியாக, விஷாலா கழனி நோக்கி நடந்தார். பெங்களூருவை அடுத்த கரியப்பன தொட்டி கிராமத்தில் புதர்மண்டிக் கிடந்தது அவர்களது ஏழு ஏக்கர் நிலம். விஷாலாவின் கடும் முயற்சியால் தற்போது சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள் என அவ்விடத்தில் பசுமை பூத்துக் குலுங்குகிறது. வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் விலங்குகள் தொல்லை, சுரங்கத்தொழில் என பாதிக்கப்பட்டனர், அப்பகுதி பழங்குடி விவசாயிகள். அவள் விகடன் அதனால் மாற்றுத்தொழிலுக்குச் சென்ற நூற்றுக் கணக்கான பெண்களை ஒருங்கிணைத்தார் விஷாலா. `பஃபல்லோ பேக் கன்ஸ்யூமர்ஸ்' எனும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களுக்கு இயற்கை விவசாயம் கற்றுக்கொடுத்தார். இவரது வழிகாட்டலில், நிலமில்லாத ஏழைப் பெண் விவசாயிகளும், கூட்டுப் பண்ணை முறையில் குத்தகை நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினர். அவர்களது விளைபொருள்களுக்கு, பெங்களூருவிலுள்ள விஷாலாவின் வீடுதான் அங்காடி. அவங்க என்னை ஏற்றுக்கொண்டது, எனக்கு மிகப் பெரிய பாக்கியம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மருத்துவர் கு.சிவராமன் கைகளால் விருதுபெற்ற விஷாலா, இங்கே வந்த கலைஞர்கள், இலக்கியவாதிகள், இசைக்கலைஞர்கள் எல்லோரும் தான் இந்த உலகத்தை அழகாக்குகிறார்கள். ஆனால் நான் மற்றொரு வித்தியாசமான உலகுடன் தொடர்பில் உள்ளேன். நான் காட்டில் வசிக்கிறேன். இன்று காலை கூட ஒரு யானை வந்ததால் 5 நிமிடம் நின்றுதான் நாங்கள் வரவேண்டியிருந்தது. செடி, கொடிகளோடு மக்கள் இணையும் இடத்தில்தான் என் இதயம் இருக்கிறது. நான் 15, 20 வருடமா காட்டில் வாழ்கிறேன். என்னைக் கண்டுபிடித்து அங்கீகரித்த விகடனுக்கு நன்றி. விஷாலா கிஷோர் பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் விகடனுக்கு ஒரு கலாச்சார முக்கியத்துவம் இருக்கிறது. என்னுடன் கீதா, லதா என்ற இரண்டு உழவர்கள் வந்திருக்கின்றனர் (அவர்களை மேடைக்கு அழைத்தார்). நாங்கள் வசிக்கும் இடம் பெங்களூரில் இருந்து 30 கிலோமீட்டர்தான். ஆனால் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என்பதனால் சாதாரண கிராமங்களில் நடக்கும் உட்கட்டமைப்பு முன்னேற்றம் எதுவும் இங்கே இருக்காது. ரோடு கிடையாது, ட்ரான்ஸ்போர்ட் கிடையாது. ஆனாலும் வெளியில் இருந்து பிடிவாதமாக கடினமா உழைச்சு அவங்க குடும்பத்துக்கு, கிராமத்துக்கு நல்ல உணவு கிடைக்கத் தேவையான பல பொருட்களை மேல கொண்டு சேர்த்திருக்காங்க. இப்ப அவங்க என்னை ஏற்றுக்கொண்டது, நான் நல்ல விஷயம் செய்றேன்னு நம்புவது எனக்கு மிகப் பெரிய பாக்கியம். அவங்ககிட்ட இருந்துதான் நான் கத்துகிட்டேன். இந்த அங்கீகாரத்துக்கு நன்றி விகடன் எனப் பேசினார். 1000 அடி உயரத்தில் வசிக்கும் பறவை; 'அண்ணாமலையார்' மலைக்கு வந்த அதிசயம்!

விகடன் 22 Nov 2025 9:54 pm

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரடி தாக்குதல் ; பலர் காயம்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெல்லா கூலா பகுதியில் இடம்பெற்ற கரடி தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் ஏழு பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றுள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு காடு மற்றும் நதி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். விசாரணை மற்றும் சூழ்நிலை […]

அதிரடி 22 Nov 2025 9:30 pm

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அறிவுறுத்தல் இதன்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மின்னல் ஏற்படும்போது, வீட்டிற்குள் இருக்குமாறும், மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இடியுடன் கூடிய மழைபெய்யும் போது வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த […]

அதிரடி 22 Nov 2025 9:30 pm

’’நள்ளிரவில் கேட்ட பெண்ணின் குரல்..’’வைரலாகும் வீடியோ - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கிருஷ்ணகிரி அருகே நள்ளிரவில் கூச்சலிட்டி உதவிக் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 22 Nov 2025 9:12 pm

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமேசன் பகுதியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, நவ.10 முதல் 21 வரை நடக்கிறது. இந்த காலநிலை மாற்ற உச்சிமாநாடு பிரேசிலின் பெலேம் நகரில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநாடு நிறைவடைய ஒரு நாள் […]

அதிரடி 22 Nov 2025 8:30 pm

துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை

மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாவது அமர்வில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது மற்றும் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையை முன் வைத்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை முழுவதும் இன்று குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர் பகுதிகளுக்குள் படையெடுக்கும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை அழிக்கின்றன. மின் குமிழ்களை திருடிச் செல்கின்றன, சி. சி. டிவி கமராக்களை உடைக்கின்றன, பிரதேச சபையினால் போடப்பட்ட மின் குமிழ்களை எடுத்துச் செல்கின்றன. தொலைத்தொடர்பு இணைப்புக்களை துண்டிக்கின்றன. பலன் தரும் மா, தென்னை மரங்களை அழிக்கின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான சொத்தழிவுகள் ஏற்படுகிறது. அத்தோடு பல கிராமங்களில் பொதுமக்களை குரங்குகள் கடித்துள்ளன. குரங்கு கடியால் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.இன் நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு வாய்ந்த பிரதேச சபை என்ற வகையில் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது எமது கடமையாக உள்ளது.

பதிவு 22 Nov 2025 8:30 pm

தமிழகத்தில் தடுப்பூசி கட்டாயம்.. மீறினால் உரிமம் ரத்து.. அரசு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ஹோட்டல் மற்றும் உணவகங்களில் வேலை செய்பவர்களுக்கு குடல் காய்ச்சல் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி செலுத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

சமயம் 22 Nov 2025 8:20 pm

ரணில்:அம்மன் தரிசனம்?

நாட்டை விட்டு வெளியேற நீதிமன்ற தடை அமுலில் உள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் அவர் சென்னை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமானும் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தார்.

பதிவு 22 Nov 2025 8:17 pm

திருவாரூர்-காரைக்குடி ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் எப்போது நிறைவடையும்? வெளியான தகவல்!

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை ரயில் பாதையை மின் மயமாக்கும் திட்டம் எப்போது நிறைவடையும் என்று பொதுமக்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 22 Nov 2025 8:11 pm

தென்னிலங்கை மண்சரிவு:மரணம் 4!

தென்னிலங்கையில் வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். கணேதென்ன சந்தியிலிருந்து கடுகண்ணாவ வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை-கலகெதர வழியாக கண்டி நோக்கிச் செல்ல வேண்டும் என்றும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்த மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டும் என்றும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

பதிவு 22 Nov 2025 8:09 pm

டெல்டா வெதர்மேன் கொடுத்த வார்னிங்... 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! புயல் உருவாகுமா?

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு 24ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் எச்சரித்துள்ளார்.

சமயம் 22 Nov 2025 8:04 pm

Perseverance Rover May Have Found Mars Meteorite

NASA’s Perseverance rover has found an unusual rock on Mars that is rich in iron and nickel. Scientists think it

சென்னைஓன்லைனி 22 Nov 2025 8:02 pm

OnePlus Teases New Watch Before Watch 4

On OnePlus’s websites in the UK and EU, the company is giving hints about a new smartwatch called the “OnePlus

சென்னைஓன்லைனி 22 Nov 2025 7:57 pm

கடுகண்ணாவ மண்சரிவு ; தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, காயமடைந்த நான்கு பேர் தற்போது மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகள் கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் […]

அதிரடி 22 Nov 2025 7:50 pm

Pixel 10 Now Shares Files Directly with iOS

Google has made a big improvement for Pixel 10 users. They can now share files directly with iPhones, iPads, and

சென்னைஓன்லைனி 22 Nov 2025 7:48 pm

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்படுமா?

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய சுங்கச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்படுமா? என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைதுறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமயம் 22 Nov 2025 7:47 pm

Aval Awards: இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்க - ரோஜா நெகிழ்ச்சி!

விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் வைரல் ஸ்டார் விருதைப் பெற்றார் இனியா ராஜகுமாரன். யார் இந்த இனியா ராஜகுமாரன்? தமிழ்நாட்டின் சமீபத்திய செல்லக் குரல்... இனியா ராஜகுமாரன். Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளரான இந்தக் கல்லூரி மாணவி, நடிகை தேவயானி - இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகள். பெற்றோரின் புகழை தனது விசிட்டிங் கார்டு ஆக்க விரும்பாத செல்ஃப் மேடு டேலன்ட். கர்னாடக சங்கீதம், கீ போர்டு, பியானோ, பரதம், சிலம்பம், சுருள் வாள் வீச்சு, கத்திச் சண்டை, நெருப்புப் பந்தம் என இவர் கற்றுள்ள கலைகள் பல. இனியா ராஜகுமாரன் போட்டி மேடையில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடலை குயில்போல பாடியவரை, தமிழ் மக்கள் தங்கள் வீட்டு இசை மகளாக வாரியணைத்துக் கொண்டனர். சிறப்பான பாடல் தேர்வு, எளிமையான ஆடைகள், பாந்தமான பேச்சு என ஒவ்வொரு சுற்றிலும் மில்லியன் வியூவ்ஸ்களை அள்ளினார். போட்டியாளர் இனியா, பாடகி இனியாவாக ஒளிரத் தொடங்கினார். நான் கோலங்கள் சீரியல்போதுதான் பிறந்தேன் அரசியல்வாதியும் நடிகையுமான ரோஜா கையில் விருதுபெற்ற இனியா ராஜகுமாரன், ரோஜா ஒரு பவர்ஃபுல்லான வுமன். அவங்க கிட்ட இருந்து அவார்ட் வாங்கினதில் ரொம்ப ஹேப்பி. விகடனுக்கும் எங்க குடும்பத்துக்கு நீண்டநாள் தொடர்பு இருக்கு. நான் கோலங்கள் சீரியல்போதுதான் பிறந்தேன். அந்த சீரியலைத் தயாரித்தது விகடன். ரியாலிட்டி ஷோ முடிச்சிட்டு வந்து முதல் விருது வாங்குறேன். மென்மேலும் பெருமைப் படுற அளவுக்கு முன்னேறுவேன் எனப் பேசினார். தேவயாணி, இனியா, ரோஜா இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்க இனியாவுக்கு விருது கொடுத்தது குறித்து பேசிய ரோஜா, எனக்கு இனியாவ பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா என்னோட பொண்ணு, தேவயானி பொண்ணுங்க, மீனாவுடைய பொண்ணு, நம்ம ரம்பா எல்லாரோட பசங்க குட்டி வயசுல பர்த்டேஸ்ல நாங்க மீட் பண்ணுவது உண்டு. திடீர்னு பார்த்தா வைரல் ஸ்டார் நீங்க அவார்ட் கொடுக்கணும்னு நீங்க சொன்னதும் நான் ஷாக். இவ்வளவு வளர்ந்துட்டாங்களான்னு. ஏன்னா தேவயானி ஒரு ஆர்ட்டிஸ்ட், ஹீரோயின். அவங்க ஹஸ்பண்ட் வந்து டைரக்டர். சோ இவங்க ஒரு டைரக்டரா ஒரு ஹீரோயினா ஆவாங்கன்னு நினைச்சேன். திடீர்னு பார்த்தா ஒரு புது இது சிங்கர் ஆயிட்டாங்க. அதும் அந்த சாங், பவதாரணி சாங் 'மயில் போல ஒரு பொண்ணு' அந்த சாங் பாடும்போது வைரல் ஆயிட்டாங்க தமிழ்நாட்டுக்குள்ள. ஏன் அந்த சாங், அந்த வாய்ஸ் எனக்கு பிடிக்கும்னா, என்னுடைய சூப்பர் ஹிட் சாங் மஸ்தான மஸ்தான பாடினது பவதாரணிதான். சோ, அவங்க இல்லங்கிற குறை இனிமே இல்லை. இனியா வாய்ஸ்ல பவதாரணி எப்பவுமே இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன். அண்ட் தேவயானி மாதிரி, ராஜ்குமார் மாதிரி, இனியா கூட இன்ண்டஸ்ட்ரில ஒரு ரவுண்ட் வரணும்னு நான் பிளஸ் பண்ணி இருக்கேன். `அதிசயக் குழந்தைக்கு' கித்தார் பரிசளித்த அமித் ஷா - யார் இந்த 7 வயது எஸ்தர்?

விகடன் 22 Nov 2025 7:46 pm

Easy Cauliflower and Broccoli Cheese Recipe

This cauliflower and broccoli cheese is an easy, meat-free meal that tastes delicious. You can use any type of cheese

சென்னைஓன்லைனி 22 Nov 2025 7:39 pm

சேலம் ஈரோடு இடையே புதிய மெமு ரயில்... மக்கள் மகிழ்ச்சி!

சேலம் ஈரோடு இடையே புதிய மெமு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .

சமயம் 22 Nov 2025 7:36 pm

‘கேப்டன் ஆனார் சஞ்சு சாம்சன்’.. அணி நிர்வாகம் அறிவிப்பு: எப்போது முதல்? முழு அட்டவண இதோ!

சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி கிடைத்துள்ளது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், கேரள அணியை வழிநடத்த உள்ளார். இத்தொடரில், கேரள அணி எந்த குரூப்பில் இடம்பெற்றுள்ளது? போட்டி எப்போது இருந்து? விபரம் இதோ!

சமயம் 22 Nov 2025 7:34 pm