SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

பிஎஸ்எல்விசி62 ராக்கெட் தோல்வி: பசிப்பிக் கடலில் விழுந்த செயற்கைக்கோள்கள்

ஸ்ரீஹரிகோட்டா, இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி 62 இன்று விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது பாதையில் இருந்து விலகிச் சென்றதால் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி, நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மைய முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 10.18 மணிக்கு 18 செயற்கைக்கோளுடன் புறப்பட்ட பிஎஸ்எல்வி சி62 ராக்கெட், 8-வது நிமிடத்தில் தனது பாதையில் இருந்து விலகிக் […]

அதிரடி 13 Jan 2026 9:30 am

மான் தாக்கி விவசாயி உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்

குருணால் ஹேரத்கம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாக்கச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மான் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே சம்பவத்தில் மேலும் ஒருவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹேரத்கம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர், பொல்பிதிகம – ஹேரத்கம – கலஹிட்டியாவைச் சேர்ந்த 47 வயதான எம்.ஏ. சமந்த விஜேவர்தன என்பவர் எனவும் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் […]

அதிரடி 13 Jan 2026 9:28 am

Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to

பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெற... EB பில் கட்ட வரிசையில் நிற்பது... அலையோ அலை என அலைந்து கொண்டிருப்பது எல்லாம் இனி வேண்டாம். வாட்ஸ்ஆப்பில் சில கிளிக்குகளிலேயே விண்ணப்பித்துவிடலாம். வாட்ஸ்ஆப் நிறுவனத்துடன் தற்போது தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, 78452 52525 எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மெசேஜ் செய்தால், நமக்குத் தேவையான அரசுத் துறை சம்பந்தமான வேலைகளை எளிதாக முடித்துக் கொள்ளலாம். இந்தச் சாட்பாட்டிற்கு 'நம்ம அரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளைப் பெற முடியும். நம்ம அரசு வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained என்னென்ன ஆப்ஷன்கள் உண்டு? பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெறலாம். விவசாயிகள் விதையிருப்பு, காலநிலை மாற்றம், உர இருப்பு, சந்தை விலை போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். சொத்து வரிக் கட்டணம், குடிநீர் வாரிய வரி கட்டணம் போன்றவற்றையும் இதில் கட்டலாம். EB பில் கட்டலாம் இன்னும் பல சேவைகள் இந்தச் சாட்பாட்டில் உள்ளன. எப்படி? 'நம்ம அரசு' சாட்பாட்டில், 'Hi' டைப் செய்தால், தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். ஆங்கிலத்திற்கு 'E'-யும், தமிழுக்கு 'T'-யும் டைப் செய்து, மெசேஜ் செய்யவும். அடுத்ததாக, 'அரசுத் துறைகள் > துறையைத் தேர்ந்தெடுக்கலாம்'-ஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர் எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்குத் தேவையானதைச் செலக்ட் செய்துகொள்ளவும். இனி அடுத்தடுத்து சாட்பாட் சொல்வதைச் செய்தால், உங்களுக்கு வேண்டியதைச் சில கிளிக்குகளிலேயே எளிதாக முடித்துக் கொள்ளலாம். 12 நாள்களில் 'அமோக' வளர்ச்சி: கிரீன்லேண்டை குறி வைக்கும் ட்ரம்ப்; உடனே தங்கம், வெள்ளியை கவனிங்க!

விகடன் 13 Jan 2026 9:12 am

நீதியின் மேடையில் நம்பிக்கை சிதைந்த தருணம் ; நீதிமன்ற பதிவாளருக்கு நேர்ந்த கதி

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருசவிதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இதன்போது நீதிமன்றில் அறிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த […]

அதிரடி 13 Jan 2026 9:04 am

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறல் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் , அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர் , படகினை அங்கு தடுத்து வைத்துள்ளதுடன் , கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பதிவு 13 Jan 2026 9:04 am

தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகள்… ஜனவரி 17ல் அலங்காநல்லூர் செல்லும் மு.க.ஸ்டாலின்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி திமுக உடன்பிறப்புகள் மற்றும் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி பொங்கலாக அமையட்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமயம் 13 Jan 2026 8:58 am

மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த –அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை.

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல சாசனாரதன தேரர் எச்சரித்துள்ளார். கண்டி -மடவலயில் உள்ள ஜனமங்கலராமய அனைத்துலக பௌத்த மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும்

புதினப்பலகை 13 Jan 2026 8:36 am

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

வங்கதேச சிறையில் இருந்துவந்த அந்நாட்டுப் பாடகர் புரோலாய் சாகி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாப்னா மாவட்ட சிறை கண்காணிப்பாளர் உமர் ஃபரூக் பேசியதாவது: ”பாடகர் புரோலாய் சாகி நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், சிறையில் இருந்த மருத்துவர்கள் அவரை பாப்னா சர்தார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் […]

அதிரடி 13 Jan 2026 8:30 am

சிறிலங்காவில் தொடர்ந்து நிறுத்தப்படவுள்ள இந்திய இராணுவம்

சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெய்லி பாலங்களை அமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மீட்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சேதமடைந்த பாலங்களை சீரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக 4 தற்காலிக இரும்புப் பாலங்கள் (பெய்லி பாலம்)

புதினப்பலகை 13 Jan 2026 8:25 am

கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்!

7-ம் நூற்றாண்டு தலயாத்திரை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் தன் பிஞ்சுப்பாதங்கள் இந்த நிலத்தில் பதிய தமிழ் மண்ணெங்கும் நடந்து திரிந்தார். அப்படி அவர், கடலூர் அருகே இருக்கும் சோபுரம் திருத்தலத்துக்குச் சென்றார். அங்கே இருந்த ஈசனை `வில்லைக் காட்டிலும் வளைந்த அழகிய புருவமும், வேல்போன்ற விழிகளும் கொண்ட வேல்நெடுங்கண்ணி அம்மையுடன் ஊழிதோறும் நிலைத்திருக்கும் சோபுர நாதனே’ எனப் போற்றிப் பாடி மகிழ்ந்தார். அப்போதுதான் அவரோடு வந்தவர்களுக்குத் தெரிந்தது அது நான்கு யுகங்களாக நிலைத்திருக்கும் தலம் என்று. கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில், ஆலப்பாக்கம் ரயிலடி எனும் ஊரிலிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, திருச்சோபுரம். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கி.பி. 6-ம் நூற்றாண்டுக்குமுன் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் மீன் சின்னங்களைக் கொண்டு, இந்த ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு, மற்ற மன்னர்களாலும் திருப்பணி கண்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் பிராகார லிங்கம் ஒருமுறை வங்கக்கடல் பொங்கி எழுந்தது. திருச்சோபுரநாதர் ஆலயம் கடல்நீரில் மூழ்கியது. நாளடைவில் கடல்நீர் வற்றினாலும், கோயில் மண்ணுக்குள் புதையுண்டு போனதாம். ஆலயத்தை மண் மூடியிருந்த மேட்டை `கோயில் மேடு’ என்றே அழைத்து வந்தனர். அப்போது ஒருநாள். மதுரை ஆதீன திருமடத்தின் தம்பிரான் ஸ்ரீமத் ராமலிங்க சிவயோகி தம்பிரான் சுவாமிகள் நடுநாட்டு தலங்களைத் தரிசிக்கும் பொருட்டு இவ்வூருக்கு வந்தார். இப்பகுதி மக்களிடம் சோமநாதர் ஆலயம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தார். அவரை மணல்மேடு பகுதிக்கு அழைத்துச் சென்ற மக்கள், ‘இங்கு ஆலயம் எதுவும் இல்லை. ஆனால் இந்த இடம்தான் காலகாலமாக கோயில் மேடு என அழைக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்கள். மெய்சிலிர்த்த தம்பிரான் சுவாமிகள், அந்த ஆலயத்தின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தார். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! அப்போது வீசிய பலத்த காற்றில் மணல் மேட்டின் உச்சிப் பகுதி கரைந்து, ஆலயத்தின் ஸ்தூபி வெளியே தெரிய ஆரம்பித்தது. அதனைக் கண்ட மக்கள் மணலை அப்புறப்படுத்தி, ஆலயத்தைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தனர். பல ஆண்டுகளாக மணலுக்குள் மூழ்கிக் கிடந்த ஆலயத்தின் கருவறையைத் தரிசித்த மக்கள் பெரிதும் வியந்துபோனார்கள். காரணம், கருவறை தீபம் அப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. மட்டுமன்றி, சிறிது நேரத்துக்கு முன்புதான் பூஜை நடந்து முடிந்ததது போன்ற அறிகுறிகளும் தென்பட்டன! இந்த அற்புத தரிசனம் அனைவரையும் சிலிரிக்க வைத்தது. ஊர் மக்கள் கூடி ஆலயத்தைச் சீரமைத்து குடமுழுக்கு விழா நடத்தியதுடன், நாள்தோறும் பூசைகள் நடத்தி வழிபடத் தொடங்கினர். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் இசை தட்சிணாமூர்த்தி இந்த ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தியாகவல்லி, ஆவுடையார் சந்நிதிகள் சோழர்களின் திருப்பணிக்குச் சான்றாகத் திகழ்கின்றன. ஆதியில் இவ்வூர் மங்களபுரி என்றும், இறைவன் மங்களபுரீஸ்வரர் என்றும் திருப்பெயர் கொண்டிருந்தார்களாம். பிற்காலத்திலேயே திருச்சோபுரம் எனும் பெயர் ஏற்பட்டதாம். இறைவனுக்கு சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர் ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுவது போல், அம்பிகைக்கு சத்தியாயதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி, மங்கள நாயகி, சோபுர நாயகி ஆகிய திருப்பெயர்கள் உண்டு. விசாலமான பிராகாரங்கள், நந்தவனங்களோடு திகழ்கிறது ஆலயம். இரண்டாம் பிராகாரத்தில் நந்தி, கொடிமரத்தைத் தாண்டி முதல் பிராகாரத்தில் நுழைந்தால், தென்மேற்கு மூலையில் விநாயகர் அருள்கின்றனர். இந்தப் பிராகாரத்திலேயே தேவியருடன் அருளும் முருகன், கஜலட்சுமி, விசாலாட்சி உடனுறை விசுவநாதர், வீரட்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்! முதல் பிராகாரத்திலிருந்து மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில், மகாமண்டபத்துக்கு வடக்கில் அம்பிகை வேல்நெடுங்கண்ணி தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தியபடி, கீழிரு கரங்களால் அபய - வரத முத்திரைகள் காட்டி, கருணை ததும்ப அருள்புரிகிறாள் இந்த அன்னை. இது கல்யாணப் பரிகாரத் தலம். திருமணத் தடையால் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்யவேண்டும். பிரசாதமாகத் தரப்படும் அந்த மஞ்சள் குங்குமத்தைத் தினமும் நெற்றியில் வைத்துவரவேண்டும். அந்த மஞ்சள் குங்குமம் தீர்ந்துபோவதற்குள் திருமணம் கூடிவரும் என்பது நம்பிக்கை. அம்பாளை வழிபட்டுவிட்டு சுவாமியின் சந்நிதிக்குச் செல்கிறோம். மேற்கு நோக்கி அருள்கிறார் திருச்சோபுரநாதர். கடற் மண்ணால் ஆனவர், அகத்திய மாமுனியால் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட லிங்கத் திருமேனியர். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் திருச்சோபுரத்தை அடைந்த அகத்தியர் சிவலிங்க வழிபாடு செய்ய சித்தம் கொண்டார். ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் கடற்கரை மண்ணால் லிங்கம் அமைக்க முடியவில்லை. ஆகவே இறைவனைத் தியானித்து வழிபட்டு, இந்தப் பகுதியிலுள்ள அரிய மூலிகைகளைச் சேகரித்து கடற்கரை மணலுடன் சேர்த்துப் பிசைந்து பாணலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார். அந்தக் கணமே அவருக்குத் திருமணக்கோலம் காட்டிய அம்மையும் அப்பனும், அவர் அமைத்த லிங்கத் திருமேனியில் ஐக்கியமானார்கள். அகத்தியர், தான் அமைத்த லிங்க மூர்த்திக்கு 'களபுரீஸ்வரர்' என்று திருப்பெயர் சூட்டி வழிபட்டார். அத்துடன், ``யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும். ஆகவே, ஊழிதோறும் இங்கே நிலைத்திருக்க வேண்டும். இங்கு வந்து உம்மை வணங்கும் அடியார்களுக்கு அருளவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டு விடைபெற்றார். திருச்சோபுரநாதர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவரின் திருமேனியைத் தட்டினால் மரத்தைத் தட்டுவது போன்ற ஓசை எழுமாம். இசை ஆர்வம் உள்ளவர்கள், கல்வி-கலைகளில் மகத்தான வெற்றி பெற விரும்புவோர், இந்த தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது சிறப்பு. முருகனும் விநாயகரும் இங்கே வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்கள்! தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன இந்த ஆலயத்தில். புரட்டாசி 15 முதல் 25 தேதிக்குள்; மாசியில் 5 முதல் 10 தேதிக்குள் ஒரு நாள், அஸ்தமன நேரத்தில் சூரியக் கிரணங்கள் சுவாமியின் மீது விழுந்து பூஜிப்பது சிறப்பு. தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

விகடன் 13 Jan 2026 7:52 am

IND vs NZ 2nd ODI: ‘உத்தேச 11 அணி’.. புது ஆல்ரவுண்டர் அறிமுகம்: மொத்தம் 2 மாற்றங்கள் உறுதி? விபரம் இதோ!

இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில், இரண்டு மாற்றங்கள் உறுதி எனக் கருதப்படுகிறது. அறிமுக ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சமயம் 13 Jan 2026 7:51 am

காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 13) விடுமுறை… கனமழை எச்சரிக்கையால் அறிவிப்பு!

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

சமயம் 13 Jan 2026 7:32 am

பொங்கல் பரிசு ரூ.3,000… விடுமுறை முடிஞ்சதும் வங்கிக் கணக்கில் வரவு- புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்படுவது போல, புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை நாட்கள் முடிந்ததும் தான் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 13 Jan 2026 7:06 am

ஜன நாயகன்: விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - நயினார் நாகேந்திரன்

வருகின்ற 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார். அப்போது அவர் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறலாம். நயினார் நாகேந்திரன் இந்த நிலையில் பாண்டி கோயில் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோருடன் அதிமுக நிர்வாகிகள் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி மதுரை வரும் அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள கூட்டம் இன்னும் உறுதியாகவில்லை. கூட்டணியில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா முடிவு செய்வார்கள். பாமக அன்புமணியோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை. அதிமுக நிர்வாகிகளுடன் நயினார் பழைய பராசக்தி படத்திற்கும் கூட சென்சார் போர்டு பல தடைகள் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி செய்வதையெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம். திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். கூட்டணி ஆட்சி என நாங்கள் சொல்லவில்லை. பாஜக 56 தொகுதிகள், 3 அமைச்சர்கள் கூட்டணியில் கேட்கிறார்கள் என்பது வதந்தி என்றார். `சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

விகடன் 13 Jan 2026 7:05 am

‘BBL தொடரில்’.. அசிங்கப்பட்ட முகமது ரிஸ்வான்: தொடரில் இருந்து விலக வாய்ப்பு: வைரலாகும் வீடியோ இதோ!

பிபிஎல் தொடரில், மெல்போர்ன் அணிக்காக விளையாடிய முகமது ரிஸ்வானை, அந்த அணிக் கேப்டன் அசிங்கப்படுத்தினார். இதனால், இனி ரிஸ்வான் விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 13 Jan 2026 6:52 am

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

‘வெனிசுவேலாவின் செயல் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது ஜன. 3 ஆம் தேதி படையெடுத்த அமெரிக்கா, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர். தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை […]

அதிரடி 13 Jan 2026 6:20 am

பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 12 முதல் ஜனவரி 18 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 13 Jan 2026 6:00 am

ஈரான்: 15 நாள் போராட்டத்தில் 420 பேர் பலி; அமைதிக்காக போப் வேண்டுதல்

தெஹ்ரான், ஈரான் நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்கும் […]

அதிரடி 13 Jan 2026 5:30 am

தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை மேம்பாலம்… வெறும் 5 நிமிஷம் தான்- நந்தனம் சிக்னல் கட் ரூட்!

சென்னையில் உள்ள அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.

சமயம் 13 Jan 2026 5:11 am

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஒருவர் பலி

கென்பரா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வெப்பம், அதிக காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், 70க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலமாகவும் காட்டுத்தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளை, வீடுகள் உள்பட 300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். […]

அதிரடி 13 Jan 2026 3:30 am

மீண்டும் வெடிக்கத் தொடங்கிய  கிலாவியா எரிமலை  

ஹவாய் தீவில் அமைந்துள்ள உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான கிலாவியா (Kīlauea) மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.… The post மீண்டும் வெடிக்கத் தொடங்கிய கிலாவியா எரிமலை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Jan 2026 3:17 am

  யாழ் மாவட்ட செயலரை சந்தித்த காவல்துறை அதிகாரிகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புச் சந்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.… The post யாழ் மாவட்ட செயலரை சந்தித்த காவல்துறை அதிகாரிகள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Jan 2026 3:03 am

சர்வதேச அரசியல் சதுரங்கம்: உக்ரைனில் எப்-16 வீழ்ச்சியும், வெனிசுலாவில் ஆட்சி மாற்றமும்!

சர்வதேச ஊடகங்கள் மறைக்க விரும்பும் அல்லது முக்கியத்துவம் தராத சில அதிரடி மாற்றங்கள் உலக அரசியலில் நிகழ்ந்து வருகின்றன.… The post சர்வதேச அரசியல் சதுரங்கம்: உக்ரைனில் எப்-16 வீழ்ச்சியும், வெனிசுலாவில் ஆட்சி மாற்றமும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Jan 2026 2:24 am

உக்ரைனின் எப்-16 (F-16) போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? –  உண்மையும் பின்னணியும்!

உக்ரைன் போர்க்களத்தில் அமெரிக்க தயாரிப்பான எப்-16 (F-16) ரக போர் விமானத்தை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக வெளியாகும்… The post உக்ரைனின் எப்-16 (F-16) போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? – உண்மையும் பின்னணியும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Jan 2026 2:09 am

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தென்கொரியாவின் வான்வெளி அத்துமீறல்கள் தொடர்ந்தால், அந்நாட்டின் அதிநவீன போர்… The post appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Jan 2026 1:56 am

அவுஸ்திரேலியாவில் இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்!

சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தையடுத்து, மெட்டா (Meta) நிறுவனம் தனது தளங்களில் இருந்து… The post அவுஸ்திரேலியாவில் இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 13 Jan 2026 1:27 am

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கடந்த மாதம் சிரியாவின் பால்மைரா நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரா்கள் எட்கா் பிரையன், வில்லியம் நதானியல் ஹோவா்ட், அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு உதவிய மொழிபெயா்ப்பாளா் அயாத் மன்சூா் சாகத் ஆகியோா் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், சிரியாவின் பல்வேறு இடங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. கூட்டணி நாடுகளுடன் சோ்ந்து இந்தத் […]

அதிரடி 13 Jan 2026 12:30 am

கட்டுநாயக்காவில் கொதிக்கும் வெப்பம் ; குளிரில் நடுங்கும் மலைநாடு ; ஒரே நாளில் இரண்டு வானிலை மாற்றம்

இன்று (12) நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 31.5 பாகை செல்சியஸ் ஆக கட்டுநாயக்க வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 பாகை செல்சியஸ் ஆக நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது. இன்று மதியம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான வெப்பநிலையின் அளவுகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

அதிரடி 13 Jan 2026 12:30 am

மேலூர் சட்டமன்றத் தொகுதி.. கடந்த தேர்தல் வெற்றி 2026-ல் கைக்கொடுக்குமா? நிலவரம் என்ன?

2021 தேர்தல் முடிவின் மூலம் பி. செல்வம், மேலூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். தற்போது வரை அவர் மேலூர் தொகுதியின் எம்.எல்.ஏ ஆக செயல்பட்டு வருகிறார்.

சமயம் 12 Jan 2026 11:05 pm

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது. சைபர் கொள்ளை அந்த லிங்கை திறந்தவுடன் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளே முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர் புகாரளித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு  கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. குஜராத் சென்ற தனிப்படை காவல்துறையினர் 14 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் இவர்களிடமிருந்து ரூ.3.50 லட்சம் பணம் மற்றும் 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஸ்வைப்பிங் மெஷின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6.39 லட்சம் பணம் முடக்கி வைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தனிப்படை காவல்துறையினரை பாராட்டிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணன், கோவை சைபர் காவல்துறை “வட மாநிலத்தைச் சேர்ந்த 14 பேரை ஒரே நேரத்தில் கைது செய்து தமிழ்நாடு அழைத்து வந்தது இதுவே முதல்முறை” என்று கூறினார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 12 Jan 2026 10:54 pm

``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம் - ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000 டாலர்) சம்பள வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு மேலாண்மையில் பட்டம் பெற்ற டேனியல் மின் என்ற இளைஞர் தனது 21-வது வயதிலேயே 'க்ளூலி' (cluely) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO) பணியில் சேர்ந்தார். டேனியல் மின் மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பும், கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைத்ததால் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார். 21 வயதில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைப்பதுதான் சாதனை எனவும் நம்பியுள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இடைவிடாத வேலைப் பளுவும், அந்தப் பதவியின் அழுத்தமும் அவரைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக டேனியல் மின் தன் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``நண்பர்களுடன் ஒரு வேளை இரவு உணவு உண்பது, என் தம்பியின் 12-வது பிறந்தநாளுக்கு அவனுக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பது போன்ற மிகச் சிறிய மகிழ்ச்சியைக் கூட நான் இழக்கத் தொடங்கினேன். நிறுவனத்தின் வளர்ச்சியில் நான் காட்ட வேண்டிய தீவிரம், எனது தனிப்பட்ட வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டது. வேலையில் ஏற்பட்ட சலிப்பும், அதிருப்தியும் ஒருகட்டத்தில் வெளிப்படத் தொடங்கியது. இதைக் கவனித்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராய் லீ என்னிடம் பேசியபோது நான் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதேன். அப்போதுதான் நான் வேலையை விட்டு விலகப்போவதைத் தைரியமாக அவரிடம் சொன்னேன். டேனியல் மின் ராய் லீ எனது தனிப்பட்ட நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றாலும், நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல என்ற உண்மையை உணர்ந்தபோது ஏற்பட்ட வலியே எனது ராஜினாமாவுக்குக் காரணம். மேலும், அவ்வளவு பெரிய வருமானத்தை இழந்ததால் நிதி ரீதியான சவால்கள் வரும் என்று தெரிந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நிதிச் சிக்கல்களைக் காட்டிலும், இந்தப் பதவியில் நீடிப்பது என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும். என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அவரது வீடியோவை பகிர்ந்த பலரும், நிச்சயமாக வாழ்க்கை என்பது வேலைமட்டுமல்ல... அதையும் தாண்டிய அனுபவம் எனப் பகிர்ந்து வருகின்றனர். இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே எப்படி இருக்கிறது புத்தக ரசனை?!

விகடன் 12 Jan 2026 10:51 pm

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை  நீலகிரி  மாவட்டம் கூடலூர் வருகிறார். செல்வப்பெருந்தகை பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் ஆகியவற்றில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. சிபிஐ மூலம் அரசியல் நெருக்கடி கொடுத்து விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அவர்களின் முயற்சி பலிக்காது. விஜய் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டால் அவர் மீதான வழக்குகள் வாபஸ் வாங்கப்படும். சிங்கத்தின் வாயில் மாட்டிய கதையாக விஜய் சிக்கி விட்டார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அண்ணாமலை. அண்ணாமலை நாகரிகமாக பேச தெரியாதவர். எதை சாப்பிட்டால் அவருக்கு பித்தம் தெளியும் என்று தெரியவில்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. பாசிச சக்திகளை தமிழ் மண்ணில் நுழைய விடக் கூடாது. நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் மாற்று  கருத்துகள் இருக்கும். இதில் திமுக தலைமையும், காங்கிரஸ் அகில இந்திய தலைமையும் முடிவு செய்யும். எங்களுக்கு கொள்ளை பக்க அரசியல் செய்யும் பழக்கம் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தையை வெளிப்படையாக நடத்துவோம். கூட்டணி தொடர்பாக எங்கள் தலைமை குழு அமைத்துள்ளது. அவர்கள் தான் பேசுவார்கள். இனிமேல் கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் பேச மாட்டார்கள்” என்றார்.

விகடன் 12 Jan 2026 10:38 pm

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து மாதம் ரூ.15,000 சம்பாதிக்கிறார்கள். கோவை பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. ரூ. 4,000க்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் இருந்ததால், எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். சங்கீதா – பாலாஜி சிறுக சிறுக சேமித்துள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசின் உதவியால் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ. 2.10 லட்சம் மானியம் கிடைத்துள்ளது. அதனுடன் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் கடன் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாகியுள்ளது. கோவை பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா வெற்றிகரமாக வீடு கட்டி தற்போது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். கடின உழைப்பால் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்த சங்கீதாவை கௌரவிக்கும் வகையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அதன்படி ஜனவரி 26-ம் தேதி டெல்லி ராஷ்ட்ரபதி பவன் குடியரசு தினவிழா பேரணியை நேரில் காண்பதற்கும், குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவும் சங்கீதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கீதா மகிழ்ச்சியடைந்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு “இந்த திட்டத்தால் என் வாழ்க்கையே மாறியுள்ளது. என் மகன்களின் கல்வி தான் முக்கியம். அவர்களின் எதிர்காலத்துக்கு இந்த சொந்த வீடு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை சாத்தியப்படுத்திய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

விகடன் 12 Jan 2026 10:34 pm

ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில்… The post ஜனாதிபதியை தமிழர்கள் நம்பியுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தொிவிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Jan 2026 10:30 pm

துயரமாக மாறிய திருமணக் கொண்டாட்டம் ; எரிவாயு வெடித்து மணமக்கள் உட்பட எட்டு பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த எரிவாயு கொள்கலன் வெடிப்புச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், இன்று அதிகாலை எரிவாயு கொள்கலன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மணமக்கள் உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமணக் கொண்டாட்டங்களுக்காகத் திரண்டிருந்த விருந்தினர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு […]

அதிரடி 12 Jan 2026 10:30 pm

பிளாஸ்டிக் ஆதார் கார்டு வேண்டுமா? 75 ரூபாய் தான்.. உடனே ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம்!

வீட்டில் இருந்தபடியே வெறும் 75 ரூபாய் செலவு செய்து பிளாஸ்டிக் ஆதார் கார்டை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 12 Jan 2026 10:05 pm

கிளிநொச்சி வீதிவிபத்தில் நால்வர் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை - நான்காம் கட்டை பகுதியில் இன்று மாலை அரங்கேறிய வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மாலை 4.40 மணியளவில் விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.அதன் போது, காரில் பயணித்த நான்கு பேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், மற்றும் ஒரே வகுப்பு தோழர்களான 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன் புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்சன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். நண்பர்கள் அனைவரும் கார் ஒன்றில் பயணித்த நிலையில் விபத்தில் சிக்கியுள்ளனர

பதிவு 12 Jan 2026 10:01 pm

தையிட்டி யார் சொல்வது உண்மை?

யாழ்ப்பாணம் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் மறுத்துள்ளதாக கூறப்படுவதை அரச அமைச்சர் சந்திரசேகரன் மறுதலித்துள்ளார். திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்று கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. அதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. காணி முற்றுமுழுதாக விகாரைக்குச் சொந்தம் என்பதால், அதை விடுவிக்கும் எண்ணம் இல்லை என்றும், அவ்வாறு விடுவிப்பது பொருத்தமாக இருக்காது எனவும் அவர்கள் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர். திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியைத் தவிர, ஏனைய காணிகளை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அண்மையில் தகவல்கள் வெளிவந்திருந்தன. அவ்வாறான நிலையிலேயே, பகுதியளவேனும் காணிகளை விடுவிப்பதற்குத் தற்போது திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. எனினும் சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் மறுக்கப்பட்டமையினை அரச அமைச்சர் சந்திரசேகரன் மறுதலித்துள்ளார்.

பதிவு 12 Jan 2026 9:56 pm

மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல்?

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள போதும் வன்னியில் போர்க்கால புதையல்களை தோண்டியெடுப்பது ஓய்ந்தபாடாகவில்லை. கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்களான சிங்களவர்கள் விசேட அதிரடிப் படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதி பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. அதன் போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 04 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பன விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் போல வருகை தந்து விடுதியில் தங்கியிருந்து புதையல் தேடலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரசு சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்கள் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.விசாரணைகளின் பின்னராக அவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

பதிவு 12 Jan 2026 9:48 pm

மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக் கிழமை தாக்கலானால் நல்லதுதான்.. ஏன் தெரியுமா?

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஞாயிற்றுக் கிழமையில் தாக்கல் செய்யப்படுவதால் முதலீட்டாளர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏன் தெரியுமா?

சமயம் 12 Jan 2026 9:47 pm

ஈரானில் கலவரத்தைத் தூண்ட அமெரிக்கா, இஸ்ரேல் சதி: அதிபா் பெசெஷ்கியான் குற்றச்சாட்டு

ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த தயாா்; அதேநேரம், வன்முறையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரித்தாா். ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி […]

அதிரடி 12 Jan 2026 9:30 pm

இந்தியத் திரையுலகின் Top கோடீஸ்வரர்கள்: ₹2,000 கோடி கிளப்பில் உள்ள நடிகர்கள் யார் யார்?

திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல், புத்திசாலித்தனமான முதலீடுகள் மற்றும் தொழில்கள் மூலம் இந்தியாவின் Top நடிகர்கள் பிரம்மாண்ட சொத்துக்களைக் குவித்து… The post இந்தியத் திரையுலகின் Top கோடீஸ்வரர்கள்: ₹2,000 கோடி கிளப்பில் உள்ள நடிகர்கள் யார் யார்? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Jan 2026 9:26 pm

சற்றுமுன்: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பொங்கலுக்கு முன்னதாகவே விடுமுறை!

தமிழ்நாட்டில் போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதியும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தமிழக அரசு சற்று முன் உத்தரவிட்டு உள்ளது.

சமயம் 12 Jan 2026 9:20 pm

ஒரே அடியாக வரும் 3,000 ரூபாய்.. பெண்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்!

ஜனவரி 14அம் தேதியன்று பெண்களின் அக்கவுண்டில் மொத்தமாக 3,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமயம் 12 Jan 2026 9:10 pm

மதுரோவை மட்டும் அல்ல, ஜெரோம் பவலையும் மிரட்டும் அமெரிக்க சண்டியர்!

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Fed) தலைவர் ஜெரோம் பவல் மீது தற்போது ஒரு குற்றவியல் விசாரணை… The post மதுரோவை மட்டும் அல்ல, ஜெரோம் பவலையும் மிரட்டும் அமெரிக்க சண்டியர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Jan 2026 8:35 pm

கனடாவில் காய்ச்சல் தொற்று அதிகரிப்பு

கனடாவின் குறைந்தது இரண்டு மாகாணங்களில் விடுமுறை காலத்தில் காய்ச்சல் (இன்ஃப்ளூயன்சா) பரவல் உச்சத்தை எட்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தேசிய தரவுகளின்படி, புதிய தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளபோதிலும், புதிய ஆண்டின் தொடக்கத்தில் அது நிலைபெற்றுள்ளதாகக் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய தேசிய இன்ஃப்ளூயன்சா தரவுகள் டிசம்பர் 14 முதல் ஜனவரி 3 வரையிலான காலத்தை உள்ளடக்கியவை. காய்ச்சல் பரவல் விடுமுறை காலத்திற்கு முன்னதாக இன்ஃப்ளூயன்சா A வகை தொற்றுகள் திடீரெனவும் விரைவாகவும் அதிகரித்து, மருத்துவமனைகளில் கடும் […]

அதிரடி 12 Jan 2026 8:30 pm

யாழில் ஐஸ்சுடன் சிக்கிய இருவர்

யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே நேற்று (11) கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் இருந்து ஐந்து கிராம் மற்றும் 39 மில்லி கிறாம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டது. கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிரடி 12 Jan 2026 8:30 pm

Range Rover: 55 Years of Ultimate Driving Luxury

True lovers of luxury don’t just live in fancy homes—they appreciate style and comfort in everything they do, even in

சென்னைஓன்லைனி 12 Jan 2026 8:22 pm

குறுகிய பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு பீஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு தென்னாபிரிக்காவின் டர்பனில் இருந்து பீஜிங் புறப்பட்டார். வழியில் இன்று அதிகாலை 1.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங்

புதினப்பலகை 12 Jan 2026 8:20 pm

நாங்களும் போருக்குத் தயார் - ஈரான் அறிவிப்பு

கொடிய போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் என்று டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறியதை அடுத்து, ஈரான் போருக்குத் தயாராக இருப்பதாக அறிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டங்களை ஒடுக்க இராணுவத் தலையீட்டை அச்சுறுத்தியதை அடுத்து, ஈரான் திங்களன்று போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறியது. போராட்டங்களில் குறைந்தது 544 பேர் கொல்லப்பட்டதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஈரான் இஸ்லாமிய குடியரசு போரை நாடவில்லை, ஆனால் போருக்கு முழுமையாக தயாராக உள்ளதுஎன்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெஹ்ரானில் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பிய வெளிநாட்டு தூதர்கள் மாநாட்டில் கூறினார். நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இருக்கிறோம், ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் நியாயமானதாகவும், சம உரிமைகளுடனும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். தெஹ்ரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் இராணுவ ரீதியாகத் தலையிடுவதாக பலமுறை மிரட்டியதைத் தொடர்ந்து, ஈரான் தலைமை தன்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஈரான் தலைவர்கள் அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள் என்று டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கூறினார், ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்று கூறினார்.

பதிவு 12 Jan 2026 8:11 pm

China develops world’s first accurate lunar timekeeping software

Chinese scientists have developed the world’s first software for keeping time on the moon. This new tool will help with

சென்னைஓன்லைனி 12 Jan 2026 8:04 pm

திருகோணமலை மாநகரசபை நடவடிக்கைக்கு எதிராக வர்த்தக சங்கத்தினர் போராட்டம்

திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் திங்கட்கிழமை (12) காலை மாநகரசபையின் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து மாநகரசபை வரை பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று மாநகரசபையின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது “வீதியோர வியாபாரிகளை தடைசெய்”, “வெளி ஊர் தற்காலிக வியாபாரிகளை நிறுத்து”, உள்ளுர் வர்த்தகம் உள்ளுர் வளர்ச்சி”, “தரமற்ற பொருட்களை வியாபாரம் செய்ய அனுமதிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத்தினர், தற்போது குறித்த நிறுவனங்களிடம் கட்டணங்கள் பெறப்பட்டு முறையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் அனுமதியை இரத்து செய்ய முடியாதுள்ளதாகவும், எதிர்காலத்தில் வர்த்தக சங்கத்தை பாதிக்காத வகையில் அனுமதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சாதகமான முறையில் மாநகரசபையின் முதல்வர் பதில் வழங்கியதாகவும் அதேபோன்று நகரசபையின் வருமானம், பணிபுரிகின்ற ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்ததாகவும் வர்த்தக சங்க பிரதிநிதி புர்ஹான் தெரிவித்தார்.

பதிவு 12 Jan 2026 7:54 pm

கிளிநொச்சி முரசுமோட்டையில் விபத்து: நால்வர் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை ஏ 35 வீதியில் பேருந்து ஒன்றுடன் மகிழுந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் மகிழுந்தில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள்பேருந்து ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது மகிழுந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதேவேளை காருக்குள் நெரிபட்ட நிலையில் இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதிவு 12 Jan 2026 7:47 pm

ஹரினி மீதான நம்பிக்கையீன பிரேரணையும் சிறீதரன் மீதான நடவடிக்கைக் கடிதமும்! பனங்காட்டான்

பிரதமர் ஹரினி அமரசூரிய மீதான எதிரணியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஓரந்தள்ள, முன்னைய ஆட்சிக்காலங்களில் மீளப்பெறப்பட்ட 65 வழக்குகளை தூசு தட்டி எடுத்துள்ளது அநுர அரசு. சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து ஒதுக்குவதற்கு கடிதம் எழுதியுள்ள தமிழரசுக் கட்சி ஆப்பிழுத்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்கின்றனர் கட்சியின் உள்வீட்டுக்காரர்கள். இலங்கை அரசியலில், இரு தரப்பிலும் வித்தியாசமான ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பிலும் என்று குறிப்பிடுவது தெற்கிலும் தமிழர் தாயகத்திலும் என்பதாகும். ஆட்சித்தரப்பு ஆட்டம் பிரதமர் ஹரினி அமரசூரியவை மையப்படுத்தியது. இவரே கல்வி அமைச்சராகவும் இருப்பதால் புதிய கல்வித்திட்டம் ஒன்றை இவ்வருடம் அறிமுகம் செய்தார். இதில் என்ன மாற்றம் வந்துள்ளது என்று புரியாமலே, எதிர்க்கட்சிகள் என்றால் எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற பாணியில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விசமிகள் சிலர் புகுத்திய வேண்டப்படாத இடைச்செருகல் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ஹரினிக்கும் ஜே.வி.பி. தலைமைக்கும் இடையில் ஏற்கனவே பிச்சல் பிடுங்கல் என்றும் அவரை பதவி நீக்க ஜே.வி.பி. செயலர் ரில்வின் சில்வா முயற்சிப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்து வந்தன. இதனை சஜித், நாமல் தலைமையிலான கட்சிகள் நாடாளுமன்றத்திலும் சொல்லி வந்தன. ஹரினியைப் பதம் பார்த்தால் அநுர அரசுக்குள் வெடிப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அநுர அரசின் அமைச்சரவையில் ஹரினி மட்டும் ஜே.வி.பி. உறுப்பினர் அல்லாதவர். இவரது பிரதமர் பதவியில் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க கண் வைத்திருப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வந்தன. இந்தச் சூழ்நிலையில் பாடப்புத்தக விவகாரத்தை பெரிதாக்கி, அரசை ஆட்டிப் பார்க்கலாம் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் ஒப்பமிட்டது பரபரப்பான செய்தியானது. அநுர அரசின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற போதுமானதல்ல. இது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாததுமல்ல. எனினும் அரசுக்கெதிராக சுமத்த வேண்டிய அனைத்து குற்றங்களையும் ஓரேயடியாக நாடாளுமன்றில் கூறி அதனை அதிகார ஏட்டிலும், பொது ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்தினால் போதுமென்ற கோதாவிலேயே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த முன்னெடுப்புக்கு இவ்விடயத்தில் துள்ளிக் கொண்டிருக்கும் நாமலின் தந்தையான மகிந்த ராஜபக்ச ஆதரவில்லை. இதனை அவரே வெளிப்படுத்தியுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமர் ஹரினி மீதான அநாவசியத் தாக்குதல்களை கண்டிதுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியுற்றாலும் ஜே.வி.பி.யினரின் நிலைப்பாட்டை அறியவாவது இது உதவுமென சஜித் தரப்பு நம்புகிறது. ஹரினி ஒரு பெண் என்பதால்தான் தாக்கப்படுகிறார் என சில குரல்கள் எழும்புகின்றன. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமரானபோதும், அவரது சிவில் உரிமைகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு ரத்துச் செய்த போதும் இதே கோசங்கள் எழும்பியதுண்டு. ஆனால், ஹரினி இவற்றை எதிர்கொண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு விடயம் அவரை சிங்கப் பெண்ணாக காட்டியுள்ளது. 2019 - 2024 ஆட்சிக் காலங்களில் நீதிமன்றங்களில் வாபஸ் பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 மீள எடுக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றங்களுக்கு செல்கின்றன என அறிவித்து, எதிரணியினருக்கு வயிற்றோட்ட மாத்திரை கொடுத்துள்ளார் ஹரினி. அந்த 65 வழக்குகளில் தாங்களும் இருப்போமோ என்ற அச்சம் எதிரணியில் உள்ள சில எம்.பிக்களுக்கும் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது ஆட்சித் தரப்பின் இலக்கு. ராஜபக்சக்கள், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கால பிரமுகர்கள் பலர் ஏற்கனவே ஊழல் வழக்குகளில் கைதாகி பிணையில் உள்ளனர். பொதுஜன பெரமுனவின் முக்கிய புள்ளியான ஜோன்சன் பெர்ணான்டோவும் அவரது மகனும் அண்மையில் கைதாகினர். போகிற போக்கைப் பார்க்கின் ராஜபக்சக்களோடு நெருக்கமாக இருந்தவர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலை தொடருமானால் அநுர அரசுக்கு எதிரான முன்னெடுப்புகள் குழிகளுக்குள் விழும். மாகாண சபைத் தேர்தல் காணாமல் போகும். புதிய அரசியலமைப்பு தயாரிப்பை காட்டி அரசின் ஆட்சிக் காலம் நீடிப்புக்கு உள்ளாகலாம். 1972ல் சிறிமாவோவும், 1978ல் ஜே.ஆரும் புதிய அரசியலமைப்பைக் காட்டித்தான் நாடாளுமன்ற ஆயுளை அவ்வப்போது நீடித்தார்கள் என்பது ரில்வினுக்கும் அநுரவுக்கும் தெரியாததா? தெற்குக்குச் சமாந்தரமாக தமிழர் தரப்பு அரசியல் வேறு வகை ஓட்டம் நடத்துகிறது. எடுத்ததற்கெல்லாம் கட்சி உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்களை இடைநீக்கம் செய்வதும் தமிழரசு கட்சியின் பதில் செயலாளரது தினசரி வேலையாகி விட்டது. எப்படியாவது தமது பெயர் ஊடகங்களில் வந்தால் போதுமென இவர் நினைக்கிறார் போலும். வன்னிப் பிராந்திய முன்னாள் எம்.பி. சிவமோகன் சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் முன்னணி பிரமுகர்களை பெயர் கூறி விளாசித் தள்ளிய கண்டனங்களை எல்லாரும் படிக்க நேர்ந்தது. எனது அறிவுக்கு எட்டிய வகையில் கட்சித் தலைமையை இவ்வாறு கிழித்துத் தொங்கப்போட்ட ஓர் அறிக்கையை முன்னர் எப்போதும் படித்ததாக ஞாபகம் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசு கட்சிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். தொடர்ந்து எங்களை அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம் என்று ஊடகங்கள் ஊடாக தமிழரசுக் கட்சி கஜேந்திரகுமாரை எச்சரித்திருந்தது. இவர் ஒரு பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டார். இப்போது சிவமோகனுக்கும் இவ்வாறான ஓர் எச்சரிக்கையை தமிழரசுத் தலைமை விடுமா? நிச்சயமாக மௌனம்தான் சாதிப்பார்கள். . தமிழரசின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கியமான பலருடன் கடந்த சில நாட்களாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது, கட்சியின் பதில் தலைமை கண்களை மூடிக்கொண்டிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இல்லையில்லை - அவர் பதில் செயலாளரை கண்காணித்துக் கொண்டிருப்பதாக வேறு சிலரது கருத்து. அரசமைப்புச் சபையில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள கிளிநொச்சி எம்.பி. சிறீதரன் மீது இப்போது கட்சியின் பார்வை திரும்பியுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுக்கு கட்சி விளக்கம் கேட்கவில்லை. ஆனால், அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை விளக்கமாகச் சொல்வதானால் சிறீதரன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதென உள்வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஏன் இந்தக் கடிதம் என்ற கேள்வி எழுகிறது. எதிர்காலத்தில் இவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் அதற்கு பலம் கூட்ட இக்கடிதம் உதவலாம் என்று நம்புகிறார்களாம். அதுமட்டுமன்றி சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற எவராவது முயற்சித்தால் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அதற்கு உடன்பட மாட்டாரென்றும் அவரது பதவிக்கான அதிகாரத்தை பயன்படுத்துவாரென்றும் மார்ட்டின் வீதியிலுள்ள மூத்தோர் கிளப்பில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் மீறி சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கம் செய்தால் அதன் பாதிப்பு கட்சிக்கே என்றும் தலைமை மேசையில் உள்ளவர்களுக்கு தெரியுமாம். சேலை முள்ளில் பட்டாலென்ன, முள் சேலையில் பட்டாலென்ன சேலைக்குத்தான் சேதம் என்ற நிலையில் கட்சி இருக்கிறது. அதாவது, சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கினால் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இப்போது தக்க வைத்துள்ள ஓர் ஆசனம்கூட இல்லாமல் போகும். சிறீதரன் சுயேட்சையாகக் கேட்டாலும் வெற்றி பெறுவார் என்பது கட்சிக்காரர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அண்மைய இந்திய மற்றும் நோர்வே பயணங்களை தமிழரசுச் கட்சியினர் அங்கலாய்ப்புடன் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பூரணமாக நடைமுறைப்படுத்த இந்தியா முன்வராது அசட்டையாக இருப்பதை தங்களுக்கான பின்னடைவாகக் கருதும் தமிழரசுக் கட்சி, மாகாண சபையை ஒதுக்கிவிட்டு புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சியைக் கோரும் கஜேந்திரகுமாரின் சர்வதேச பயணத்தையிட்டு பலவாறாக சிந்திக்கிறது. ஏதோ ஒரு ஐரோப்பிய நாடு இதன் பின்னணியில் இருக்கலாம் என மூக்கில் விரலை வைத்து ஆட்டும் தமிழரசுக் கட்சியினர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் சந்தேகம் கொண்டுள்ளனர். எதுவானாலும் மலிவாகும்போது சந்திக்கோ சந்தைக்கோ வரும்தானே.

பதிவு 12 Jan 2026 7:36 pm

NASA’s Pandora Satellite Launched to Hunt Exoplanets

NASA’s new exoplanet-hunting satellite, Pandora, was successfully launched on January 11, 2026, aboard SpaceX’s Falcon 9 rocket as part of

சென்னைஓன்லைனி 12 Jan 2026 7:34 pm

சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை மேம்பாலம் திறப்பு எப்போது? மா.சுப்பிரமணியனின் முக்கிய அறிவிப்பு!

ரூ.500 கோடி மதிப்பீட்டில், 6.5 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகளுக்காக மட்டுமே அமைக்கப்பட உள்ள புதிய சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அடிக்கல் நாட்டவுள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறினார்

சமயம் 12 Jan 2026 7:31 pm

கனடாவில் ஒரே நாளில் நடந்த இரு கொலைகள் ; ஒருவருக்கு ஆயுள் தண்டனை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கிரெஸ்டன் நகரைச் சேர்ந்த மிட்செல் மெக்இன்டையர் என்பவருக்கு, ஒரே நாளில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மரணங்களும் ஆரம்பத்தில் இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2022 பிப்ரவரி 6 ஆம் திகதி கிரெஸ்டனில் உள்ள ஒரு வீட்டில் ஜூலியா ஹவ் என்பவர் தலையில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், இரண்டாம் நிலை கொலை குற்றத்திற்காக மெக்இன்டையருக்கு 13 ஆண்டுகள் பரோல் இன்றி […]

அதிரடி 12 Jan 2026 7:30 pm

Top Non-Veg Foods for Healthy Hair Growth

If you’ve noticed more hair in your brush than on your head, you’re not alone. Hair fall has become a

சென்னைஓன்லைனி 12 Jan 2026 7:09 pm

பரந்தன் –முல்லைத்தீவு பிரதான வீதியில் பேருந்து காரும் மோதி கோர விபத்து; நால்வர் பலி

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் பேருந்தும் காரும் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காரில் பயணித்த ஐவரில் நான்கு பேர் பலி இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். முரசுமோட்டை பகுதியில் நடந்த விபத்தில் காரில் […]

அதிரடி 12 Jan 2026 7:01 pm

துப்பாக்கி பயன்படுத்த தயங்காது.. இனி இதற்கு அனுமதி கிடையாது.. காவல் ஆணையரின் எச்சரிக்கை!

குற்றவாளிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சூழ்நிலைக்கு ஏற்ப காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தவும் தயங்காது என்று கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சமயம் 12 Jan 2026 6:57 pm

எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு ?

யாழ்ப்பாணம் எழுவை தீவில்தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காகஅவற்றை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எழுவை தீவில்ஜே / 39 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 2 பரப்பு காணியை எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்வதற்கான அறிவித்தாலும் , 3ஆம் வட்டாரத்தில் தனியாருக்கு சொந்தமான 53 பேர்ச் காணியையும் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு, அவற்றை அளவீடு செய்யும் பணிகள் 20ஆம் மற்றும் 21ஆம்திகதிகளில் இடம்பெறவுள்ளது. கடந்த 3 வருட காலத்திற்கு […]

அதிரடி 12 Jan 2026 6:55 pm

Mahindra: குழப்பிக்காதீங்க! XUV7OO - XUV7XO ரெண்டும் ஒரே கார்தான்!எம்மாடியோவ்.. எம்பூட்டு ஹைலைட்ஸ்!

‛ஜனநாயகன்’ படத்தைவிட கார் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த கார் XUV7XO. ‛ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிடுச்சு; ஆனால், மஹிந்திராவின் புது ரிலீஸ் புக்கிங்கில் அள்ளிடுச்சு! ஆம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் புக்கிங் நடந்து கொண்டிருக்கிறதாம் XUV7XO காருக்கு! அப்போ XUV7OO என்னாச்சு? என்று பலர் கேட்கிறார்கள். இரண்டுமே ஒரே கார்தான். அதாவது, XUV7OO-வின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்தான் XUV7XO. ஆனால், பார்ப்பதற்கு XUV3XO-வின் அண்ணன் போன்று இருக்கும் இந்த 7 சீட்டர் காரை, ரூ.13.66 லட்சம் எனும் எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. இதன் டாப் மாடல் 24.92 லட்சம் வரைக்கும் போகிறது. அதாவது - ஆன்ரோடு விலை சுமார் 15.90 லட்சத்தில் இருந்து 29.55 லட்சம் வரைக்கும் இந்தக் காரை வாங்க முடியும்.  XUV7XO XUV7XO காரைப் பற்றி முக்கியமான சில ஹைலைட்ஸ் பார்க்கலாம்! AX, AX5, AX7 என சுமார் 27 வேரியன்ட்களில் இந்தக் காரைக் கொண்டு வந்திருக்கிறது மஹிந்திரா. இது XUV7OO காரா என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி மொத்தமாக மாறியிருக்கிறது XUV7OO. அதாவது புது XUV7XO. ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புது ஸ்டைலில் அலாய் வீல்கள் என்று ரோடு பிரசன்ஸில் அசத்துகிறது XUV7XO.  ஸ்ப்ளிட் செய்யப்பட்ட எல்.இ.டி ஹெட்லைட்கள் செம ஸ்டைல். கார்னரிங் மற்றும் பனிவிளக்குகள், ஐஸ் க்யூப் வடிவத்தில் க்யூட்டாக இருக்கின்றன. இதில் ஒரு விசேஷம் உண்டு. 80 கி.மீ வேகத்துக்கு மேலே போனால், இது ஒரு ஹெட்லைட் பூஸ்ட்டராகச் செயல்பட்டு, எக்ஸ்ட்ரா வெளிச்சத்தைப் பீய்ச்சுமாம். ஆனால், இது ஹைபீமில் மட்டும்தான் வேலை செய்யும். அதனால், இரவு நேரங்களில் ஹைவேஸில் செல்லும்போது விசிபிலிட்டி குறைபாடு இருக்காது.  இந்தக் காரில் வசதிகளை வாரித் தெளித்திருக்கிறது மஹிந்திரா. அடாஸ் லெவல் 2, பெரிய பனோரமிக் சன்ரூஃப், டேஷ்போர்டு முழுதும் நீளும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், முன் பக்கத்தில் பவர்டு மெமரி மற்றும் வென்ட்டிலேட்டட் சீட்கள், 2 ஸ்போக் மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், முன்பக்கப் பயணியின் சீட்டின் பின்னால், ஒரு ஸ்க்ரீன் எனக் கலக்குகிறது. டாப் மாடலில் 19 இன்ச் அலாய்; மிட் வேரியன்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கின்றன. புது டிசைனில் இருக்கின்றன இவை. XEV 9S காரில் இருப்பதுபோல், பின் பக்க டெயில்லைட்கள் இருக்கின்றன. 6 and 7 Seater 540 degree camera அந்த ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் இந்த XUV7XO காரிலும் தொடர்கிறது. இது ஒரு ப்ராக்ஸிமிட்டி சென்சார் அடிப்படையில் பாப்-அவுட் ஆகும் விதம் அழகாக இருக்கும். ஹைவேஸிலும் ஸ்டெபிலிட்டி கிடைக்க உதவும். இது டாப் வேரியன்ட்டில் மட்டும்தான்.  ஸ்டீயரிங்கும் XEV 9S காரில் இருக்கும் அதே செட்அப்தான். ரீச் மற்றும் ரேக் என எல்லா ஆப்ஷன்களும் உண்டு. உயரம் குறைவானவர்கள், அதிகமானவர்கள் எல்லோருக்குமே இந்தக் கார் ஓட்டுவதற்குப் பக்காவாக இருக்கும். பொதுவாக, கார்களில் 360 டிகிரி கேமராதானே இருக்கும்; இதில் 540 டிகிரி கேமரா இருக்கும் என்கிறது மஹிந்திரா. டாப் வியூவையும் சேர்த்துச் சொல்கிறார்கள். இது 6 மற்றும் 7 சீட்டர் வேரியன்ட்டில் வருகிறது. பாட்டுக் கேட்க Dolby Atmos சரவுண்ட் சிஸ்டம், ஏதோ தியேட்டர் எஃபெக்ட்டில் இருக்கிறது. டாப் 2 ட்ரிம்களில் இருக்கும் கேப்டன் சீட்களின் சொகுசு வேற லெவலில் இருக்கும். அட, இதுவும் வென்ட்டிலேட்டட்தான். குளுகுளுவென்று பயணிக்கலாம். நல்ல லெக்ரூம், ஹெட்ரூம் என சொகுசு. என்ன, பின் பக்கம் 3-வது வரிசைதான் பேருக்கு இருக்கிறது. இதில் 3 பேர் பயணிப்பது கொஞ்சம் சிரமம்தான். டாப் வேரியன்ட்டான AX7-ல் Boss Mode என்றொன்று உண்டு. முன் பக்கப் பயணியின் சம்மதம் இல்லாமலே பின்னால் உட்கார்ந்து கொண்டு முன் சீட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்வது.  Stylish Interior இதில் சஸ்பென்ஷன்தான் பெரிதும் பேசப்படுகிறது. இதிலுள்ள Davinci Damping எனும் தொழில்நுட்பம், ஓட்டுதலில் இந்தக் காரை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம். ஏற்கெனவே தார் ராக்ஸில் இருக்கும் Frequency Selective Dampers (FSD) எனும் கிட்டத்தட்ட அதே டெக்னாலஜிதான். இதன் சப்ளையர் Tenneco call DaVinci dampers. டெரெய்னுக்கு ஏற்ப இதன் டேம்ப்பிங் ஃபோர்ஸ் அட்ஜஸ்ட் ஆகும் விதம் அருமையாக இருக்கும்.  மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் இருக்கின்றன. 203hp பவர் மற்றும் 380Nm டார்க் தரும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்; 185hp பவர் மற்றும் 450Nm டார்க் தரும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின். இதில் Zip, Zap மற்றும் Zoom என 3 டிரைவிங் மோடுகள் உண்டு. இந்த டீசல்தான் பலரது சாய்ஸாக இருக்கிறது. 75% டீசல்தான் விற்கிறதாம். ஆனால், டீசலுக்கு எப்படியும் 1.25 லட்சம் எக்ஸ்ட்ரா எடுத்து வைக்க வேண்டும். என்னது, சிஎன்ஜியா? அது மஹிந்திராகிட்டதான் கேட்கணும்?  இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் செம ஸ்மூத்தாக இருக்கும். பெட்ரோல் மேனுவல் மாடலின் அராய் மைலேஜ் 13 கி.மீ; பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கின் மைலேஜ் 15 கி.மீ. இதுவே டீசல் காரின் அராய் 17 கிமீ - 16.57 கி.மீ என்று க்ளெய்ம் செய்கிறது மஹிந்திரா.  XUV7XO இது மஹிந்திரா சொல்லும் மைலேஜ்! நீங்கள் யாராவது XUV7XO வாங்கினால், எம்புட்டு மைலேஜ் கிடைக்குதுனு சொல்லுங்களேன்! இன்னொரு விஷயம் - இனி XUV700-வின் 5 சீட்டர் கிடையாது!

விகடன் 12 Jan 2026 6:47 pm

Raising Awareness About Rare Cancer Sarcoma in India

Cancer awareness is growing in India, especially about common types like breast, lung, and oral cancer. However, there are more

சென்னைஓன்லைனி 12 Jan 2026 6:41 pm

புத்தக கண்காட்சி வரலாற்றிலேயே முதல்முறை.. தமிழ்நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்.. டெல்லி வரை பெருமிதம்!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரங்கு, டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இடம் பெற்றுள்ளது.

சமயம் 12 Jan 2026 6:33 pm

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸையும் ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்து, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையானது. ட்ரம்ப் இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரின் மனைவியும் அமெரிக்காவின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா உட்பட பல நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப், ``கியூபா வெனிசுலாவிலிருந்து கிடைத்த பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தது. அதற்குப் பதிலாக, கியூபா இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கும் பாதுகாப்பு சேவைகளை வழங்கியது. ஆனால் இனிமேல் அது நடக்காது. டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguez கியூபாவிற்கு இனி எண்ணெய், பொருளாதாரம் என எதுவும் செல்லாது. காலம் கடந்துபோவதற்குள், கியூபா ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவரின் பதிவில் விக்கிப்பீடியா சுயவிவரப் பக்கத்தின் எடிட் செய்யப்பட்டப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், `` 'வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்' - பதவிக்காலம் ஜனவரி 2026 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரபூர்வமாக தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

விகடன் 12 Jan 2026 6:32 pm

India faces second-highest global diabetes economic burden

A new study shows that India faces the second highest economic burden from diabetes, estimated at USD 11.4 trillion. The

சென்னைஓன்லைனி 12 Jan 2026 6:27 pm

Waist-to-Height Ratio Better Indicator Than BMI

New research has found that waist-to-height ratio is a more accurate and reliable measure of age-related obesity risk than the

சென்னைஓன்லைனி 12 Jan 2026 6:20 pm

⚖️ சித்திரவதைக்கு உடந்தை –அபு சுபைதாவுக்கு பெரும் தொகை நஷ்டஈடு வழங்கும் பிரித்தானியா!

அமெரிக்காவின் குவாண்டானாமோ பே (Guantnamo Bay) சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அபு… The post ⚖️ சித்திரவதைக்கு உடந்தை – அபு சுபைதாவுக்கு பெரும் தொகை நஷ்டஈடு வழங்கும் பிரித்தானியா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Jan 2026 6:18 pm

யாழில். இருந்து மிக விரைவில் நேரடி ஏற்றுமதி

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது, என அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம்உறுதியளித்தார். வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பின்போது வடக்கின் ஏற்றுமதிச் […]

அதிரடி 12 Jan 2026 6:17 pm

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.  அதிருப்தியில் ராமதாஸ் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இதனால் கட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் இரு தரப்பாகப் பிரிந்து நிற்கின்றனர். அன்புமணி, ராமதாஸ் அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் பா.ம.க-வில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ஜி.கே.மணி மற்றும் இரா.அருள் ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாகவும், எஸ்.பி.வெங்கடேஸ்வரன், எஸ். சதாசிவம், சி.சிவக்குமார் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனிடையே, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.   தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியையே பாமக தலைவராக அங்கீகரித்து மாம்பழம் சின்னத்தையும் அன்புமணி தரப்புக்கே ஒதுக்கி இருக்கிறது.  இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திலும் காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் அன்புமணி இந்தச் சூழலில் அண்மையில் அன்புமணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் (தேசிய ஜனநாயக கூட்டணி) பாமக இணைவதை உறுதி செய்திருந்தார்.  இந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு சுமார் 17-20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா இடம் ஒதுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  எடப்பாடி - அன்புமணி திமுக-வோடு கூட்டணி பேசும் ராமதாஸ்? ஒரு புறம் அன்புமணி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் திரைமறைவில் தி.மு.க-வோடு பேச்சுவார்த்தையையும் தொடங்கிவிட்டார் எனும் தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.  அதற்கேற்ப அரசு ஊழியர்களுக்காக முதல்வர் அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை ராமதாஸ் வரவேற்றிருக்கிறார்.  மேலும், இந்த ஆட்சி நன்றாக இருப்பதாகவும் மதிப்பீடு கொடுத்திருக்கிறார். அமைச்சர் ராஜ கண்ணப்பனும் ராமதாஸ் தி.மு.க-வுடன் பேசுவதை மேடையிலேயே போட்டுடைத்திருக்கிறார். ராமதாஸைக் கூட்டணிக்குள் ஏற்றுக்கொள்வாரா திருமா? ஆனால், தி.மு.க கூட்டணியோடு ராமதாஸ் இணைவதில் ஒரு பெரும் சிக்கல் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. வி.சி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் ஆகவே ஆகாது. ஏற்கெனவே, `மதவாதக் கட்சியான பா.ஜ.க-வோடும், சாதியவாதக் கட்சியான பா.ம.க-வுடனும் எந்தவித ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவர்களுடன் கூட்டணியும் இல்லை' என்று டிக்ளேர் செய்திருந்தார் திருமா.  ராமதாஸூக்காக திருமாவை விட்டுக்கொடுக்க தி.மு.க துணியுமா அல்லது தி.மு.க-வுக்காக ராமதாஸைக் கூட்டணிக்குள் ஏற்றுக்கொள்வாரா திருமா? ஆகிய கேள்விகளுடன் மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் திமுக-விற்கு என்ன பயன்? “வி.சி.க - பா.ம.க பஞ்சாயத்தை ஒரு பக்கம் வையுங்கள். கடந்த தேர்தலில் பா.ம.க இல்லாமல்தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது பா.ம.க பிரிந்திருக்கும் நிலையில் தி.மு.க எதற்காக பா.ம.க-வை இணைத்துக்கொள்ள வேண்டும். பா.ம.க-வை சேர்ப்பதால் தி.மு.க-விற்கு என்ன பயன் இருக்கப் போகிறது? பா.ம.க கூட்டணியை வி.சி.க எதிர்ப்பதாக ஒருபுறம் இருந்தாலும்கூட… பா.ம.க-வை சேர்த்தால் வன்னியர் அல்லாத ஓட்டும், பட்டியலின ஓட்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். அதனால் ராமதாஸை தி.மு.க எப்படி ஏற்றுக்கொள்ளும்? ராமதாஸை இணைத்துக்கொண்டால் கடினமாகிவிடும்! அவரை தி.மு.க ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. பிளவுபடாத பா.ம.க-வை சேர்த்துக்கொள்ளாதபோதே தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி இருக்கையில் இந்தத் தேர்தலில் பிளவுபட்ட பா.ம.க-வை கூட்டணிக்குள் சேர்ப்பதால் தி.மு.க-விற்கு என்ன பலன் இருக்கப் போகிறது. ஏற்கெனவே தி.மு.க-வில் உள்ள கூட்டணிக் கட்சிகள் அதிக சீட்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தவிர தே.மு.தி.க-வையும் கூட்டணிக்குள் இணைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ராமதாஸை இணைத்துக்கொண்டால் அவர்களுக்குக் கடினமாகிவிடும். ராமதாஸ் - ஸ்டாலின் ராமதாஸ் தனியாக நிற்பதையே திமுக விரும்பும் பா.ம.க-வை இணைத்தால் தி.மு.க-விற்கு வாக்கு வங்கியில் இழப்பைத்தான் கொடுக்குமே தவிர பெரிதாகச் செல்வாக்கைச் சேர்க்காது. மாறாக ராமதாஸ் தனியாக நிற்பதையே தி.மு.க விரும்பும். ஏனென்றால் தனியாக நின்றால் அன்புமணி ஓட்டைப் பிரிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பிரித்தால் அது அ.தி.மு.க-விற்குப் பின்னடைவாக இருக்கும்” என்றார்.

விகடன் 12 Jan 2026 6:17 pm

Anirudh Meets Ajith at Abu Dhabi Race Event

Actor Ajith Kumar is making headlines after taking part in an international car race in Dubai. Several moments from the

சென்னைஓன்லைனி 12 Jan 2026 6:13 pm

Demonte Colony 3 Creates Massive Pre-Release Hype

Director Ajay Gnanamuthu’s “Demonte Colony” series is still a big hit in Tamil cinema as a popular horror thriller franchise.

சென்னைஓன்லைனி 12 Jan 2026 6:08 pm

விண்ணில் பாய்ந்த PSLV C62 ராக்கெட்… 3ஆம் நிலையில் கோளாறு- தோல்வி குறித்து இஸ்ரோ விசாரணை!

நடப்பாண்டின் முதல் ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவிய நிலையில், மூன்றாம் நிலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு PSLV C62 தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 12 Jan 2026 6:01 pm

Jana Nayagan Release Delayed Due to Censor Dispute

Thalapathy Vijay’s highly awaited film “Jana Nayagan” has faced a delay in its release due to issues with the censor

சென்னைஓன்லைனி 12 Jan 2026 5:59 pm

Tamil ZEE5 kicks off 2026 with thrilling entertainment slate, launches Pongal Campaign featuring Jiiva and Andrea Jeremiah

Mumbai: Tamil ZEE5 has begun 2026 with strong momentum, reinforcing its commitment to delivering edge-of-the-seat thrillers and high-octane entertainment for its audiences. With a robust pipeline of films and original series, the platform is positioning itself this year as a destination for intense storytelling and immersive viewing experiences.The early momentum for Tamil ZEE5 has been driven by the massive response to the audio launch of Jana Nayagan starring Thalapathy Vijay, which recorded the highest first-day subscriptions ever for any ZEE5 content. This performance was further bolstered by encouraging viewership for Kevin’s Mask, signalling a strong start to the year.Building on this traction, Tamil ZEE5 has unveiled a special Pongal brand film featuring Jiiva and Andrea Jeremiah. Titled ‘Zee5-il Indha Pongal, Thigil Pongal’ (On ZEE5, this Pongal is a thrilling Pongal), the campaign reinforces the platform’s promise of delivering suspense-filled, engaging entertainment during the festive season.Set against the backdrop of a traditional Pongal celebration, the brand film takes an unexpected turn when a mysterious incident sparks a tense investigation. Jiiva portrays a determined investigator, while Andrea Jeremiah becomes central to the unfolding mystery. The film blends festive warmth with noir-style suspense, reflecting Tamil ZEE5’s thriller-led content strategy for 2026.From this Pongal onwards, Tamil ZEE5 is also bringing audiences a strong slate of films, including the critically acclaimed Sirai, starring Vikram Prabhu and L.K. Akshay Kumar. The platform will also premiere highly anticipated titles such as Parasakthi, featuring Sivakarthikeyan, Jayam Ravi, and Sree Leela, along with the sequel to the blockbuster thriller Demonte Colony. Original series offerings include Samuthirakani-starrer Partha Naybhagam Illayo and Once Upon A Time In Kayamkulam.[caption id=attachment_2487842 align=alignleft width=200] Lloyd C. Xavier[/caption]Sharing the platform’s content vision, Lloyd C. Xavier, Business Head – Tamil Malayalam ZEE5, SVP – Marketing South, said, “Tamil ZEE5 has entered 2026 with a clear focus on delivering thrilling, high-impact entertainment. The strong response to Jana Nayagan and Kevin’s Mask reflects our audience’s appetite for powerful content. With our Pongal campaign and an exciting lineup of films and series, we are committed to raising the bar for Tamil OTT entertainment and keeping viewers engaged with compelling, edge-of-the-seat content throughout the year.” Actor Jiiva, the face of the campaign, added, “Working with Tamil ZEE5 has been a great experience. The team is focused on presenting thrilling and engaging stories in a way that connects with the audience. The Pongal film captures both the festive spirit and the thrill that viewers can expect from Tamil ZEE5 this year.” Andrea Jeremiah said, “It was fun working on this film and integrating the promotion of Mask in a creative way. I also enjoyed collaborating with my friend Jiiva on the project. I’m looking forward to seeing the audience’s response.” With a lineup packed with gripping thrillers, marquee films, and high-energy original series, Tamil ZEE5 is set to redefine festive and year-round entertainment for its audiences, positioning 2026 as a landmark year for Tamil OTT storytelling.https://www.youtube.com/watch?v=9zd7u-vKS9g

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Jan 2026 5:57 pm

புத்தளம் –முந்தலில் கோர விபத்து –  மூவர் உயிரிழப்பு  

புத்தளம் – முந்தல் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நவடான்குளம் பகுதியில் இன்று இன்று (12-01-2026) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில்… The post புத்தளம் – முந்தலில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Jan 2026 5:43 pm

NCERT-யில் 173 காலிப்பணியிடங்கள்; மத்திய கல்வித்துறையில் நிரந்த பணி - 12-ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஆசிரியர் அல்லாத பதவிகளில் உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 173 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.

சமயம் 12 Jan 2026 5:37 pm

Goa Tourism confirmed as ‘Powered By’ Sponsor for inaugural World Legends Pro T20 League

Goa: The World Legends Pro T20 League (WLPTL) has announced Goa Tourism as the ‘Powered By’ sponsor for its much-anticipated inaugural season, scheduled to begin on January 26 at the 1919 Cricket Stadium in Verna, Goa.The debut edition of WLPTL is set to be an international sporting spectacle, featuring 90 cricketers drafted across six teams. The league will bring together some of the biggest names in world cricket, including international legends such as Shane Watson, Dale Steyn, Jacques Kallis, Chris Gayle, and Faf du Plessis, alongside Indian icons Shikhar Dhawan, Dinesh Karthik, Harbhajan Singh, among others. The tournament offers cricket fans in Goa a rare opportunity to witness some of the greatest T20 players in history live in action.For more than four decades, Goa Tourism has played a pivotal role in developing tourism in the state and positioning Goa as one of India’s most sought-after travel destinations. The arrival of the World Legends Pro T20 League adds elite international cricket to Goa’s rich mix of beaches, heritage, cuisine, and festivals. With iconic players and a festival-style format, the league is expected to attract both domestic and international visitors, firmly placing Goa on the global cricket calendar during the season.Commenting on the association, Rohan Khaunte, Minister for Tourism, IT, E&C and Printing and Stationery, said, “Goa is a natural partner for global sporting events, and hosting the World Legends Pro T20 League aligns seamlessly with our vision for tourism and events. By bringing together cricketing legends and fans from around the world, the league acts as a catalyst for tourism, engages local communities and youth, and creates meaningful opportunities for local businesses and the hospitality ecosystem, while positioning Goa as a hub for world-class sports entertainment.” Speaking on the partnership, Mahesh Bhupathi, CEO, SGSE, said, “We are delighted to welcome Goa Tourism as the Powered By sponsor for the inaugural season of the World Legends Pro T20 League. Goa offers the perfect blend of vibrant culture and world-class hospitality. This makes it an ideal destination for a premium international property like WLPTL. This partnership strengthens our vision of delivering a festival-style, high-quality experience for locals and travelling supporters, while positioning Goa as the premier destination for international sporting events.” Designed as a single-destination, festival-style tournament, the World Legends Pro T20 League aims to deliver a distinctive cricketing experience for fans across the globe. With Goa Tourism on board as a key partner, the league further reinforces its ambition to combine world-class sport with destination-led experiences. As the countdown to January 26 begins, fans can look forward to legendary cricketers returning to the field and a celebration of the game set against the backdrop of one of India’s most iconic destinations.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Jan 2026 5:34 pm

CNN-News18 presents Ballot Maximum City: Decoding Mumbai’s Biggest Civic Battle

Mumbai: As the Brihanmumbai Municipal Corporation (BMC) heads to polls on 15 January, CNN-News18 ramps up extensive on-ground election coverage through its special programming ‘Ballot Maximum City’. CNN-News18 brings together its strongest editorial resources, top anchors, editors and reporters, to decode one of the most crucial civic elections in the country’s financial capital.As India’s richest municipal body, the BMC plays a pivotal role in shaping Mumbai’s civic infrastructure, public health systems, transportation networks, and urban governance. The elections, being held after a gap of eight years, assume added significance amid changing political equations and heightened voter expectations.The special programming lineup includes a set of short, sharp segments under ‘Ballot Maximum City, showcasing popular political faces of Mumbai as they campaign across the city, offering viewers unfiltered insights into local politics, party strategies and voter outreach. The segments feature special interactions with key political leaders including Devendra Fadnavis, Eknath Shinde, Aaditya Thackeray, Varun Sardesai, and Praful Patel.Putting the voter at the centre of the story is ‘Reporters Project’, a ground-up election docu-series where CNN-News18 reporters travel across key wards to capture the pulse of Mumbai’s voters. The first episode explores voter expectations and civic issues shaping the mandate, while the second follows the campaign trail amid Mumbai’s changing political dynamics, including the key question of how the Uddhav-Raj Thackeray reunion could influence the BMC elections.Adding a strong local connect, ‘Mumbai Local’ features a series of candid, Walk The Talk chat format with well-known local faces and celebrities who have seen the city evolve and have played a role in shaping its cultural and social narrative. This includes personalities such as Milind Deora, Shobha De, Priya Dutt, Vivek Agnihotri, and Malhar Kamble to name a few.The coverage builds up to ‘Mumbai 60,’ a one-hour live special airing on the eve of polling on 14 January at 5 PM, sharply focused on ward-level issues and last-minute electoral buzz.On Polling day, 15 January, CNN-News18 will bring viewers continuous, on-ground coverage from polling booths across Mumbai. The BMC Elections coverage culminates with special Counting Day programming on 16 January, 7am onwards with in-depth analysis from the channel’s top anchors and election experts, live reporters from ground zero, delivering the fastest and most accurate results, thereby establishing the promise ‘Elections = CNN-News18’.Speaking about the special programming line-up, Rahul Shivshankar, Editorial Affairs Director, CNN-News18, said, “Our focus with this coverage is on the voter. By reporting from the wards, listening to citizens, and closely tracking the campaigns, we aim to present a nuanced, issue-based narrative that truly captures Mumbai’s electoral pulse.” Commenting on the special programming, Smriti Mehra, CEO – English & Business News, said, “The BMC elections are critical to the future of Mumbai, and our endeavour with ‘Ballot Maximum City’ is to go beyond headlines and soundbites. As India’s number one English news channel, backed by the best editorial team, we are committed to bringing viewers credible, on-ground journalism that reflects the real concerns of citizens, important leaders, and stakeholders shaping Mumbai’s civic future.” Tune in to CNN-News18 for this special programming line-up through which the channel once again reinforces its position as the definitive destination for election coverage, delivering clutter-free, credible journalism.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Jan 2026 5:30 pm

CNN-News18 presents Ballot Maximum City: Decoding Mumbai’s Biggest Civic Battle

Mumbai: As the Brihanmumbai Municipal Corporation (BMC) heads to polls on 15 January, CNN-News18 ramps up extensive on-ground election coverage through its special programming ‘Ballot Maximum City’. CNN-News18 brings together its strongest editorial resources, top anchors, editors and reporters, to decode one of the most crucial civic elections in the country’s financial capital.As India’s richest municipal body, the BMC plays a pivotal role in shaping Mumbai’s civic infrastructure, public health systems, transportation networks, and urban governance. The elections, being held after a gap of eight years, assume added significance amid changing political equations and heightened voter expectations.The special programming lineup includes a set of short, sharp segments under ‘Ballot Maximum City, showcasing popular political faces of Mumbai as they campaign across the city, offering viewers unfiltered insights into local politics, party strategies and voter outreach. The segments feature special interactions with key political leaders including Devendra Fadnavis, Eknath Shinde, Aaditya Thackeray, Varun Sardesai, and Praful Patel.Putting the voter at the centre of the story is ‘Reporters Project’, a ground-up election docu-series where CNN-News18 reporters travel across key wards to capture the pulse of Mumbai’s voters. The first episode explores voter expectations and civic issues shaping the mandate, while the second follows the campaign trail amid Mumbai’s changing political dynamics, including the key question of how the Uddhav-Raj Thackeray reunion could influence the BMC elections.Adding a strong local connect, ‘Mumbai Local’ features a series of candid, Walk The Talk chat format with well-known local faces and celebrities who have seen the city evolve and have played a role in shaping its cultural and social narrative. This includes personalities such as Milind Deora, Shobha De, Priya Dutt, Vivek Agnihotri, and Malhar Kamble to name a few.The coverage builds up to ‘Mumbai 60,’ a one-hour live special airing on the eve of polling on 14 January at 5 PM, sharply focused on ward-level issues and last-minute electoral buzz.On Polling day, 15 January, CNN-News18 will bring viewers continuous, on-ground coverage from polling booths across Mumbai. The BMC Elections coverage culminates with special Counting Day programming on 16 January, 7am onwards with in-depth analysis from the channel’s top anchors and election experts, live reporters from ground zero, delivering the fastest and most accurate results, thereby establishing the promise ‘Elections = CNN-News18’.Speaking about the special programming line-up, Rahul Shivshankar, Editorial Affairs Director, CNN-News18, said, “Our focus with this coverage is on the voter. By reporting from the wards, listening to citizens, and closely tracking the campaigns, we aim to present a nuanced, issue-based narrative that truly captures Mumbai’s electoral pulse.” Commenting on the special programming, Smriti Mehra, CEO – English & Business News, said, “The BMC elections are critical to the future of Mumbai, and our endeavour with ‘Ballot Maximum City’ is to go beyond headlines and soundbites. As India’s number one English news channel, backed by the best editorial team, we are committed to bringing viewers credible, on-ground journalism that reflects the real concerns of citizens, important leaders, and stakeholders shaping Mumbai’s civic future.” Tune in to CNN-News18 for this special programming line-up through which the channel once again reinforces its position as the definitive destination for election coverage, delivering clutter-free, credible journalism.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Jan 2026 5:30 pm

சென்னை –மும்பை விமானத்தில் இயந்திர கோளாறு: 9 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு ஏற்பட்டது. சுமாா் 9 மணி நேரத்துக்கு மேலாக விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். சென்னையில் இருந்து மும்பை செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. விமானத்தில் 192 போ் இருந்தனா். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் தயாராக இருந்தபோது, இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தாா். […]

அதிரடி 12 Jan 2026 5:30 pm

எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு ?

யாழ்ப்பாணம் எழுவை தீவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை அப்பகுதி மக்களிடையே… The post எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு ? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 12 Jan 2026 5:27 pm

Draupathi 2 Set For Pongal Release January 15

Director Mohan G Kshatriyan’s highly anticipated historical drama, “Draupathi 2”, now has an official release date. The film’s makers announced

சென்னைஓன்லைனி 12 Jan 2026 5:24 pm

Herbalife India renews partnership as Official Nutrition Partner for TATA WPL 2026

Mumbai: Herbalife India, a global health and wellness company, community, and platform, has announced the continuation of its association with the Board of Control for Cricket in India (BCCI) as the Official Nutrition Partner for the TATA Women’s Premier League (WPL) 2026 season. The partnership reinforces Herbalife’s sustained commitment to the growth of women’s sports in India and the holistic well-being of elite athletes.India’s women’s cricket ecosystem continues to witness rapid growth in participation and viewership, with the TATA WPL emerging as a transformative platform that unlocks new opportunities for athletes while strengthening the broader women’s sports landscape. Through the renewed collaboration, Herbalife will continue to promote the importance of science-based nutrition in enhancing performance, endurance, and recovery for elite cricketers competing at the highest level.[caption id=attachment_2487825 align=alignright width=200] Ajay Khanna[/caption]Commenting on the partnership, Ajay Khanna, Managing Director, Herbalife India, said, “India’s women’s sports revolution with TATA WPL at its epicenter signals a transformative era for athletic excellence and gender equity. Herbalife proudly continues its association with BCCI as Official Nutrition Partner, arming elite cricketers with science-based nutritional products to optimize performance, endurance, and recovery on this world-class platform. It’s our privilege to drive this momentum and shape the future of women’s cricket.” [caption id=attachment_2487827 align=alignleft width=200] Devajit Saikia[/caption] Devajit Saikia, Honorary Secretary, BCCI, said, “The WPL is built on a vision of excellence, opportunity, and world-class sports entertainment. Herbalife brings exceptional value and diverse strengths to this ecosystem. This partnership will play a critical role in shaping the fan experience and supporting the growth of women’s cricket.” Since its inception, the TATA WPL has played a catalytic role in elevating women’s cricket in India, setting new benchmarks for competitiveness, professionalism, and fan engagement. As the league continues to evolve, partnerships focused on athlete support and performance standards are expected to remain central to its long-term success.Globally, Herbalife supports over 150 athletes, teams, and leagues, providing high-quality sports nutrition across all stages of training and competition. In India, the company partners with leading athletes across cricket, badminton, and table tennis, including Yashasvi Jaiswal, Smriti Mandhana, Lakshya Sen, Manika Batra, and Palak Kohli. From the Olympic Games and Commonwealth Games to Special Olympics Bharat, Herbalife continues to champion nutrition-led performance and sporting excellence.

மெடியானேவ்ஸ்௪க்கு 12 Jan 2026 5:23 pm