சிம்மம் டூ விருச்சிகம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?
வார ராசி பலன்: பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். சிம்மம்: இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு கலவையான வாரமாக இருக்கும். அவசரமாக எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுக்காமல்
நிலம், நகையில் செம லாபம்.. மிதுனம் ராசிக்கு அற்புதன பலன்களை தரும் மாசி மாதம்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியல் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மிதுனம் ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம். உங்கள் ராசியில் செவ்வாய் வக்கிரமாக
தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
தை மாதம் பிறந்ததும் தைப்பொங்கல் எவ்வளவு முக்கியமோ அதற்கு அடுத்தபடியாக நாம் எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒரு நாள் தைப்பூசம். தைப்பூசம் முருகப்பெருமானுடைய பல முக்கியமான பண்டிகைகளில் தலைசிறந்ததாகவே கருதப்படுகிறது. தைப்பூச தினத்தில் முருகப்பெருமானை வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பார்கள். காவடி எடுக்கும் பக்தர்கள் பண்டைய காலத்தில் விழாக்களைத் தமிழர்கள் பௌர்ணமியை ஒட்டியே நடத்தினார்கள். காரணம் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் நடந்தே கோயில்களுக்குச் செல்ல வேண்டும். அதிலும் மலைத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் பௌர்ணமிக்கு மூன்று நான்கு தினங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு பௌர்ணமி நாளில் திருக்கோயிலை அடைந்து வழிபட்டு பின் நிலவொளி வீசும் அடுத்த மூன்று நாள்களுக்குள் ஊர் திரும்புவது வழக்கம். அப்படிப் பௌர்ணமியை ஒட்டிக் கொண்டாடப்படும் பண்டிகைகளே சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகியவை. இவற்றுள் தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உரியதாகக் கொண்டாடப்படுகிறது. பழநியில் முருகப்பெருமான் கோயில் கொண்டது ஒரு தைப்பூச நாளிலேயே என்பார்கள். எனவேதான் பழநியில் தைப்பூசம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பூச நட்சத்திரத்தின் மகத்துவம் பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு பிரகஸ்பதி. பிரகஸ்பதியைத் தேவர்களின் குரு எனப் போற்றுகின்றன புராணங்கள். அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவர் குருபகவான். எனவே முருகப்பெருமான் குருவாக அருளும் தலங்களில் பூச நட்சத்திரத்தன்று வழிபடுவது சிறப்பு. தை மாதத்தில் பூசமும் பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில்தான் சிவபெருமான் திருநடனம் ஆடினார் என்கின்றன ஞான நூல்கள். தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால் திருவருட்பிரகாச வள்ளலார் ஸித்தி விளாகத்தில் அந்த நாளில்தான் ஜோதியில் கலந்தார் என்பர். அங்கு ஏழு திரையை விலக்கி ஜோதிக்காட்சி வடலூரில் காட்டப்பெரும் நன்னாளும் தைப்பூசமே. சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்ல. இருவரும் ஒருவரே என்னும் தத்துவப்படி தைப்பூசம் - பங்குனி உத்திரம் - வைகாசி விசாகம் முதலான விசேஷ நாள்கள் முருகப்பெருமானுக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகின்றன. பழநி முருகன் பழநி முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடலாமா? பழநியில் அருளும் தண்டாயுதபாணியைப் பற்றி பலவிதமான தவறான புரிதல்கள் கூட உண்டு. அவர் ஆண்டிக் கோலத்தில் அருள்பாலிப்பதால் அவரை வீட்டில் வைத்து வழிபட்டால் நாம் ஆண்டியாகிவிடுவோம் என்று சிலர் சொல்வார்கள். இது மிகவும் தவறு. முருகப்பெருமானுடைய 16 வடிவங்களில் மிகவும் விசேஷமான வடிவமாகச் சொல்லக்கூடிய ஸ்கந்தன் என்று சொல்லக்கூடிய பழநி தண்டாயுதபாணி திருவடிவம். பழநி முருகனுடைய தியான ஸ்லோகம், 'கல்பத்ருமம் ப்ரணமதாம் கமலாருணாபம் ஸ்கந்தம் புஜத்வயமனாமயமேகவக்த்ரம் காத்யாயனீ ப்ரியசுதம் கடிபத்தவாமம் கெளபீனதண்ட தரதக்ஷிணஹஸ்தமீடே. இதன் கருத்து: கற்பக விருட்சம் எப்படிக் கேட்டதை எல்லாம் கொடுக்குமோ அதுபோல யார் இவனை வணங்குகிறார்களோ அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு கற்பக விருட்சம் போல பழநி ஆண்டவன் விளங்குகிறானாம். அப்படிப்பட்ட முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடுவதன் மூலம் வேண்டும் வரம் கிடைக்கும். செல்வ வளம் சேரும். இதே திருக்கோலத்தில்தான் சுவாமி மலையிலும் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார் என்பது பலரும் அறியாத செய்தி. எனவே முருகப்பெருமானை ஞான குருவாக ஏற்றுத் தைப்பூச நாளில் வழிபாடு செய்ய வாழ்வில் ஏற்றம் உண்டாகும். தைப்பூசம் 2024: பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்களை நீங்கள் அறிந்ததுண்டா? தைப்பூச நாளில் எப்படி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்? பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி எடுப்பதும் தைப்பூச விழாவின்போது பிரசித்தம். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற பல நாடுகளிலும் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளில் முருகன் திருத்தலத்துக்குச் சென்று வழிபடுவது விசேஷம். இயலாதவர்கள் வீட்டிலேயே சிறப்பாக வழிபடலாம். தைப்பூச நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிப் பிறகு நீறு பூசி ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம். வீட்டில் தைப்பூச தினத்தில் வீட்டில் ஆறு விளக்குகள் ஏற்றி முருகப்பெருமானைத் துதிக்க வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ், வேல்மாறல் பாராயணம் போன்றவற்றைப் பாராயணம் செய்வது சிறப்பு. பால்குடம் திருவிழா சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது சிறப்பு. இயலாதவர்கள் எளிமையாகத் தேனும் தினை மாவும் சமர்ப்பித்து முருகப்பெருமானை வழிபட்டாலேபோதும், வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். குறிப்பாக முருகப்பெருமானுக்கு இந்த நாளில் பாலாபிஷேகம் செய்வது சிறப்பு. அருகில் உள்ள திருக்கோயிலுக்குப் பால் கொண்டு சென்று சமர்ப்பணம் செய்ய வேண்டும். குறைந்த அளவு பாலாக இருந்தாலும் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நம் தலையில் சுமந்து ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் (பால்பாக்கெட்டாகக் கொண்டு செல்வது தவறு.) தைப்பூசத்தன்று பால் குடம் எடுக்கும் வழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் அதற்கு முறையாக விரதம் இருந்து எடுக்க வேண்டும். விரதம் இருக்காதவர்களாக இருந்தால் அவர்களும் பாலை ஒரு சிறு பாத்திரத்தில் விட்டுத் தலையில் சுமந்து சென்று பக்தியோடு சமர்ப்பித்தால் பால்குடம் எடுத்து வழிபட்ட பலன் கிடைக்கும். இந்த நாளில் மந்திர உபதேசம் பெறுவது சிறப்பு. முருகன் அடியார்களுக்குத் தங்களால் ஆன உதவியும் உபசாரமும் செய்வது மிகவும் சிறப்பு. நாளை (11.2.24) மாலை 7.31 வரை பூச நட்சத்திரம் உள்ளது. எனவே அந்த நேரத்துக்குள் முருகப்பெருமானை வழிபட்டு வேண்டும் வரம் பெறுவோம். Palani Murugan Thirukalyanam | பழநி முத்துக்குமார சாமி திருக்கல்யாணம் | தைப்பூசம் | Thaipusam |Live
தைப்பூச திருவிழா: பழநியில் குவியும் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்ட 3-ம் படை வீடு
தைப்பூச திருவிழாவையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் 3-ம் படை வீடு விழாக்கோலம் பூண்டது.

பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Palani Murugan Thirukalyanam | பழநி முத்துக்குமார சாமி திருக்கல்யாணம் | தைப்பூசம் | Thaipusam |Live
தைப்பூசத் திருவிழாவை ஒட்டி நடைபெறும் பழநி முத்துக்குமாரசாமி திருக்கல்யாண வைபவம் நேரலை.
சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம்; குவிந்த பக்தர்கள்
தேனி மாவட்டம் சின்னமனூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் கட்டுமானத்துக்குச் சிவப்பு நிற பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயில் திருப்பணி செய்த குலசேகர பாண்டியனின் பெயர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. பூலாநந்தீஸ்வரர் ஆலயம் கோயில் வளாகத்திற்குள் பூலாநந்தீஸ்வரரைச் சுற்றி விநாயகர், முருகன், தண்டபாணி, வள்ளி தெய்வானையுடன் சண்முகர், 63 நாயன்மார்கள், ஜுரத்தைப் போக்கக்கூடிய சக்தி கொண்ட சுரகர தேவர், நடராஜ பெருமாள், மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, கன்னீஸ்வரமுடையார் உள்ளிட்ட கடவுள்கள் உள்ளனர். பூலாநந்தீஸ்வரரை எங்கிருந்து பார்த்தாலும் பார்ப்பவரின் அளவுக்குத் தகுந்தபடி காட்சியளிப்பார். பெரியவர்கள் பார்த்தால் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல காட்சியளிப்பார், சிறியவர்கள் பார்த்தால் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல காட்சியளிப்பார். பக்தர்கள் கூட்டம் மதுரையில் நடக்கும் திருவிழாவைப் போல இங்கும் வெகு விமர்சியாக நடக்கும். மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண நாளில் இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். கொடியேற்றத்தில் தொடங்கித் தேர்த் திருவிழா, திருக்கல்யாணம் போன்றவை மிகவும் முக்கியமானவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் உபயதாரர்கள் மூலமாகத் திருப்பணிகள் நடந்தன. தமிழகத்தில் பழமையான கோயில்களில் ஒன்றான பூலாநந்தீஸ்வரர் கோயிலின் அமைப்பே காண்போரைக் கவரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகா கும்பாபிஷேக விழா பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கியது. மூன்று பெரிய யாகசாலைகளும், 16 சிறிய யாக சாலைகளும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. கலச நீர் ஊற்றும் நிகழ்வு இன்று காலை ஆறு கால யாக பூஜைகளைத் தொடர்ந்து 9.15 மணிக்குக் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ``1000 வெள்ளத்தாலும் அசைக்க முடியாத முருகன் கோவில்...'' - வியக்க வைக்கும் தொழில் நுட்பங்கள்..!
வடலூர்: தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு சொந்த வாகனத்தில் செல்கிறீர்களா? – இதைப் படிங்க முதல்ல!
ஜோதி தரிசன நேரங்கள் என்னென்ன ? கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் நாளை 154-வது தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் பிறந்த ஊரான மருதூரில் இருக்கும் வள்ளலார் சந்நிதியில் அந்த கிராம மக்களால் வள்ளலார் தண்ணீரால் விளக்கெரியச் செய்த கருங்குழியிலும், அவர் சித்திபெற்ற மேட்டுக்குடியிலும் சன்மார்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. அதையடுத்து சத்திய ஞானசபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை மற்றும் வள்ளலாரின் திருவுருவப் படம் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொடிமரம் அருகில் வந்தனர். அதையடுத்து `அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி… தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி’ என்று முழக்கமிட்டனர். வடலூர் சத்தியஞானசபை அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றன. நாளை நடைபெற இருக்கும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவைக் காண இந்தியா மட்டுமல்ல, அயல் நாடுகளில் இருந்தும் வள்ளலாரின் பின்தொடர்பாளர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். நாளை 11-ம் தேதி காலை 6 மணிக்கு முதல் தரிசனமும், 10 மணிக்கு இரண்டாவது தரிசனமும், நண்பகல் 1 மணிக்கு மூன்றாவது தரிசனமும், இரவு 7 மணிக்கு நான்காவது தரிசனமும், இரவு 10 மணிக்கு ஐந்தாவது தரிசனமும், 12-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆறாவது தரிசனமும், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. அதேபோல 13-ம் தேதி வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் சித்திவளாக திருஅறை தரிசனமும் நடைபெறும். ஜோதி தரிசனம் பெருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. போக்குவரத்து மாற்ற அறிக்கை தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டிருக்கும் போக்குவரத்து மாற்ற அறிக்கையில், `ஜோதி தரிசனம் காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன் காரணமாக நாளை 11-ம் தேதி அன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை, வடலூரில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடலூர் ஜோதி தரிசனம் | கோப்புப் படம் அன்று சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் கார், வேன் உள்ளிட்ட பேருந்துகள், 11-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வடலூருக்குள் வராமல் வேறு வழிகளில் செல்ல தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆண்டிக்குப்பம் புதிய பைபாஸ் சாலை அருகில் இடது புறமாக திரும்பி ராசாக்குப்பம், கருங்குழி கைகாட்டி, மேட்டுக்குப்பம் வழியாக விருத்தாசலம் செல்ல வேண்டும். அதேபோல விருதாச்சலத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி ஆர்ச் கேட், கொள்ளுக்காரன் குட்டை, சத்திரம், குள்ளஞ்சாவடி வழியாக கடலூருக்கு செல்ல வேண்டும். பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துகள் கொள்ளுக்காரன் குட்டை, சத்திரம், மீனாட்சி பேட்டை, குறிஞ்சிப்பாடி, ராசாக்குப்பம் வழியாக வந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும். அதேபோல் கும்பகோணத்திலிருந்து பண்ருட்டி செல்லும் வாகனங்கள் சேத்தியாத்தோப்பு, கருங்குழி, கைக்காட்டி, ராசாக்குப்பம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிபேட்டை, சத்திரம், கொள்ளுக்காரன் குட்டை வழியாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடலூர் - பண்ருட்டி செல்லும் வாகனங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கண்ணுத்தோப்பு பழைய பாலம் அருகில் இடது பக்கத்தில் தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டு பொது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும் வடலூர் காவல்துறை சார்பில் தற்காலிக கார், வேன் மற்றும் பேருந்து நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடலூர் சத்தியஞான சபையில் தொடங்கிய தைப்பூசவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! கடலூரில் இருந்து வடலூர் வள்ளலார் தைப்பூசம் காண வரும் சன்மார்க்க அன்பர்கள் ஆண்டிக்குப்பம் புதிய பைபாஸ் அருகில் வலது பக்கமும், பண்ருட்டியில் இருந்து வரும் வாகனங்கள் அகர்வால் பேக்கரி வழியாக ராகவேந்திரா சிட்டியிலும், சேத்தியாத்தோப்பில் இருந்து வரும் வாகனங்கள் அதே சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரி எதிரில் உள்ள இடத்திலும், விருத்தாசலம் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுக்குப்பம் ஆர்ச் வழியாக வீணங்கேணி பகுதியில் உள்ள இடத்திலும் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்து தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்களில் இருந்தும், ஜோதி தரிசனம் காண செல்லும் சன்மார்க்க அன்பர்களுக்கு தற்காலிக பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். வடலூர்: `வள்ளலார் சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது!’ – தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதி மன்றம்
வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்!
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்!
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பூச திருவிழா: பழநியில் குவியும் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்ட 3-ம் படை வீடு
தைப்பூச திருவிழாவையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் 3-ம் படை வீடு விழாக்கோலம் பூண்டது.
வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்!
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பூச திருவிழா: பழநியில் குவியும் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்ட 3-ம் படை வீடு
தைப்பூச திருவிழாவையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் 3-ம் படை வீடு விழாக்கோலம் பூண்டது.
வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்!
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தைப்பூச திருவிழா: பழநியில் குவியும் பக்தர்கள்; விழாக்கோலம் பூண்ட 3-ம் படை வீடு
தைப்பூச திருவிழாவையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் 3-ம் படை வீடு விழாக்கோலம் பூண்டது.
வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்!
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
பேரூர் பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றம்!
கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.
``பல தலைமுறைகளாக இந்த பந்தம்... -புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்!
தஞ்சாவூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புன்னை மரக்காட்டில் மூலஸ்தான மகமாயியான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானதாக ஐதீகம். இதனால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைல காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறுவது வழக்கம். இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோவில்களில் ஒன்றாகும். சீர்வரிசை எடுத்த இஸ்லாமியர்கள் ஆடி அம்மன் தரிசனம்: பிணி தீர்க்கும் புற்றுமண்... புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மகிமைகள்! #Video இதன் குடமுழுக்கு கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு, குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு, அரண்மனை தேஸ்வதானம், அறநிலையத்துறை சார்பில், கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 10-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குடமுழுக்கிற்கான பூஜைகள் மற்றும் யாக சாலை பூஜைகள் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்றன. இதையடுத்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் போது, `எங்களுக்கு எல்லாத்தையும் தரும் மகமாயி' என பக்தர்கள் கோஷமிட்டனர். குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைக்கு தேவையான பழங்கள், நெய், புடவை, ஜாக்கெட் பிட் உள்ளிட்ட பல பொருள்களை 51 தட்டில் இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தது முத்தாய்ப்பாகவும், மதநல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாகவும் அமைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், நாங்களும், இஸ்லாமியர்களும் மதங்களை கடந்து உறவுகளாக, சகோதர்களாக நகமும், சதையுமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்றனர். குடமுழுக்கு விழாவில் சீர்வரிசை எடுத்த இஸ்லாமியர்கள் இது குறித்து மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, மாரியம்மன் கோயில் பகுதியில் சுமார் 200 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள இந்துக்களும், நாங்களும் தாயா, பிள்ளையா வாழ்ந்து வருகிறோம். கோயிலில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கும். பூச்சொரிதல் விழா நடக்கும் போதும் இதே போல் சீர் வரிசை எடுத்துச் செல்வோம். தற்போது குடமுழுக்கு விழாவிற்காக 51 தட்டுகளில் சீர்வரிசை பொருள்கள் எடுத்துச் சென்றோம். பல தலைமுறைகளாக இந்த பந்தம் தொடர்கிறது என்றார். தைப்பூசம்: பழநிக்கு படையெடுக்கும் முருக பக்தர்கள்... இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்..!
தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு பழநி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயிலில் இன்று (பிப். 10) முதல் வரும் 12-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தைப்பூசம்: பழநிக்கு படையெடுக்கும் முருக பக்தர்கள்... இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்..!
தமிழகத்தில் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று மூன்றாம்படை வீடான பழநி முருகன் கோயில். இங்கு ஆண்தோறும் தைப்பூசம் விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது. அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள் பழநியில் கடந்த 5 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று வெள்ளி யானை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பாடு நிகழ்வு நடந்தது. ஆறாம் நாள் நிகழ்வாக இன்று காலை 9.15 மணிக்கு தந்த பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. இதையடுத்து இரவு 7 முதல் 8.30 மணிக்குள் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு மேல் ரதவீதிகளில் வெள்ளி தேரோட்டம் நடக்கவுள்ளது. நாளை காலை தோளுக்கினியாள் சண்முகாநதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்வு நடக்கும். காலை 11.15 -12 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருள்வார். மாலை 4.45 மணிக்கு தைப்பூசத் தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கும். பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்றைய இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. பாதுகாப்பு பணியில் போலீஸார் பழநி: `ரஷ்ய பக்தர் தந்த 6 அடி வேல்'- 12 கிலோ எடையில் தந்த காணிக்கையின் காரணம் இதையொட்டி பழநிக்கு முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழநி கோயில் அடிவாரம், கிரிவலப் பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 12 இடங்களில் தற்காலிக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு பழநி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயிலில் இன்று (பிப். 10) முதல் வரும் 12-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

வார பலன்கள்: துலாம் முதல் மீனம் வரை - பலன்கள், அதிர்ஷ்டக்குறிப்புகள்!
துலாம் ராசி அன்பர்களே! வருமானத்துக்கு குறை இருக்காது. மற்றவர்களால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். அவ்வப்போது சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதியாகப் பணி செய்யும் அன்பர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். வியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். துலாம் ராசி பெண்கள் குடும்பத்தில் மற்றவர்களுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை ஏற்படுவதுடன் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,15 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,5 வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர் பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும். புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா | அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் || விருச்சிகராசி அன்பர்களே! குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு திருமண முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும் புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். விருச்சிகம் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது. அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,15 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,6 சந்திராஷ்டமம்: 10 இரவு வரை வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமகா விஷ்ணு பரிகாரம்: தினமும் காலை வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும். பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே தனுசுராசி அன்பர்களே! குடும்பத்தில் அடிக்கடி அமைதிக் குறைவான சம்பங்கள் நிகழக்கூடும். வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். வேலை அல்லது கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும். பயணங்களின் காரணமாக மனதில் உற்சாகம் பிறக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர்களும் இணக்கமாகப் பழகுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். மற்றபடி பாதிப்பு இல்லை. பழைய பாக்கிகள் வசூலாவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். தனுசு ராசி குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13,16 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6 சந்திராஷ்டமம்: 10 இரவு முதல் 11,12 நடு இரவு வரை வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே மகரராசி அன்பர்களே! பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. எனவே கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மகரம் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10,11 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9 சந்திராஷ்டமம்: 12 நடு இரவு முதல் 13,14,15 மாலை வரை வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி பரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும். தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! கும்பராசி அன்பர்களே! பொருளாதார நிலை சற்று சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் அநாவசிய செலவுகளும் இருக்காது. உஷ்ணத்தால் கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்துகொள்வது நல்லது.பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர் களுக்கு சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது. கும்பம் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,14 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,5 சந்திராஷ்டமம்: 15 மாலை முதல் 16 முழுவதும் வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர் பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும். ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுவனே மீனராசி அன்பர்களே! சிறு சிறு உடல்நலக் குறைபாடு தோன்றக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை செய்து கொள்வது நல்லது. பேச்சிலும் செயலிலும் நிதானமும் பொறுமையும் மிக அவசியம். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கலாம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். மீனம் குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,15 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,7 வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை பரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 10 - 2025 திங்கட்கிழமை
நாள் : குரோதி வருடம் தை மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 10.02.2025 திதி : இன்று இரவு 08.08 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று இரவு 07.12 வரை புனர்பூசம். பின்னர் பூசம். நாமயோகம் : இன்று காலை 11.02 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 10 -2025 திங்கட்கிழமை
அஸ்வினி: திருமணப் பேச்சுகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பரணி: புதிய தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். கார்த்திகை: பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ரோகிணி: முதலாளிகளின் மனதைப் புரிந்து கொண்டு வேலை பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: சகோதரரின் பிரச்சனையை சட்ட ரீதியாகச் சந்திப்பீர்கள். திருவாதிரை: எதிர்பாராமல் கிடைத்த பணத்தை நிலத்தில் போடுவீர்கள். புனர்பூசம்: ஏழை மாணவர்களின் கல்விக்கு
இன்றைய ராசி பலன்கள் - பிப்ரவரி 10 - 2025 திங்கட்கிழமை
சென்னை குரோதி வருடம் தை மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 10.02.2025 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.08 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று இரவு 07.12 வரை புனர்பூசம். பின்னர் பூசம். கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
நவபஞ்சம யோகத்தால் செல்வம், லாபத்தை குவிக்கும் ராசியினர்.. அதிர்ஷ்ட ராசியினர் யார்?
Nava panjama yogam palangal: சனி மற்றும் செவ்வாய் பகவான் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செல்வம், லாபம், தொழிலில் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தையும், இடத்தையும் மாற்றுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியால் உருவாகும் தாக்கம் அனைத்து
அடடா மழைடா பண மழைடா.. ரிஷபம் ராசிக்கு அள்ளி தரும் மாசி மாதம்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியல் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷபம் ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம். குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே
சுக்கிரன் பெயர்ச்சி வச்சு செய்யப் போகுது.. மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்
சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிர பகவான் மே மாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சுக்கிரனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் சவால்கள் ஏற்படக்கூடும். எந்தெந்த ராசியினர் பிரச்சனையை சந்திக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம். செல்வம், செழிப்பு, புகழ், வசதி, வசியம், காதல் போன்ற அனைத்து விதமான செல்வங்களுக்கும் அதிபதியானவர் சுக்கிர பகவான். சுப கிரகமான சுக்கிரன் ஒருவரின்
எல்லா பக்கமும் பணம்.. மேஷ ராசிக்கு மெகா ஜாக்பாட் அளிக்கும் மாசி மாதம்
மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியல் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில் (13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷ ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம். ராசிக்கு இரண்டாம் இடத்தில்
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.
சூரியன் - குருவின் கேந்திர யோகம்.. பணக்காரராக வாழப்போகும் ராசியினர்.. இனி உங்களை அசைக்க முடியாது
Kendra yogam 2025: சூரியன் கிரகமும், குரு பகவானும் மார்ச் 2 ஆம் தேதி குறிப்பிட்ட இடைவெளியில் இருப்பதால் கேந்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசியினர் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிப்பார்கள். எந்தெந்த ராசியினர் பலன் பெறுவார்கள் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தையும், இடத்தையும்
சுக்கிரனின் அருளால் லட்சாதிபதியாகும் 4 ராசியினர்.. கட்டு கட்டா பணத்தை அள்ளப் போறீங்க
Malavya raja yoga: மீன ராசியில் மாளவ்ய ராஜயோகம் நாளை உருவாகிறது. மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் சுக்கிர பகவான் தற்போது மிகவும் வலிமையாக உள்ளதால் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். மீன ராசியில் உருவாகும் ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.
செவ்வாய் வக்ர நிவர்த்தியால் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. பணம், தொழிலில் அதிர்ஷ்டம் கொட்டும்
செவ்வாய் வக்ர நிவர்த்தி: பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைவதால் சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தையும், இடத்தையும் மாற்றுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியால்
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
குன்னுார் சிவ சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது.
சனி பகவான் அருளால் 5 ராசியினருக்கு ஜாக்பாட்.. பணம், அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
சனிப்பெயர்ச்சி பலன்கள்: மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் சில ராசியினருக்கு செல்வம், செழிப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சில முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியும் மற்றும் முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளும் அதன்
சனி பகவான் அருளால் 5 ராசியினருக்கு ஜாக்பாட்.. பணம், அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
சனிப்பெயர்ச்சி பலன்கள்: மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் சில ராசியினருக்கு செல்வம், செழிப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சில முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியும் மற்றும் முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் அனைத்து ராசிகளும் அதன்
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Weekly Horoscope: வார ராசி பலன் 9.2.25 முதல் 15.2.25 | Indha Vaara Rasi Palan | இந்த வாரம் எப்படி?
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 9 - 2025 ஞாயிற்றுக்கிழமை
நாள் : குரோதி வருடம் தை மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9.02.2025 திதி : இன்று இரவு 08.47 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. நட்சத்திரம் : இன்று இரவு 07.17 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். நாமயோகம் : இன்று பிற்பகல் 12.59 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி. கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 9 - 2025 ஞாயிற்றுக்கிழமை
அஸ்வினி: புதிய பொறுப்புகளை பெற்று பூரிப்படைவீர்கள். பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும். ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள். மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும். திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம் நஷ்டத்தை கொண்டு
இன்றைய ராசி பலன்கள் - பிப்ரவரி 9 - 2025 ஞாயிற்றுக்கிழமை
சென்னை குரோதி வருடம் தை மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 9.02.2025 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.47 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. இன்று இரவு 07.17 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். அனுஷம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
ராஜயோகம் பெறும் 4 ராசியினர்.. சுக்கிரன், சனியின் சேர்க்கையால் தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
சனி சுக்கிரன் சேர்க்கை: மார்ச் 28 ஆம் தேதி மீன ராசிக்குள் சனி பகவான் நுழைகிறார். மீன ராசியில் ஏற்கனவே சுக்கிர பகவான் இருக்கும் நிலையில், சனி பகவான் சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.கிரகங்களின் சேர்க்கை, இடமாற்றம் ஆகியன ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை
ராஜயோகம் பெறும் 4 ராசியினர்.. சுக்கிரன், சனியின் சேர்க்கையால் தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
சனி சுக்கிரன் சேர்க்கை: மார்ச் 28 ஆம் தேதி மீன ராசிக்குள் சனி பகவான் நுழைகிறார். மீன ராசியில் ஏற்கனவே சுக்கிர பகவான் இருக்கும் நிலையில், சனி பகவான் சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டம்பெறும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.கிரகங்களின் சேர்க்கை, இடமாற்றம் ஆகியன ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியுண்டு. நண்பர்களின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

D.A.Joseph | விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இந்த ஒரு நாமம் சொன்னால் போதும் | Mantra Nama for Wealth Creation
வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு நாமத்தைச் சொன்னால் போதும் என்று விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருந்து ஒரு மந்திர நாமாவை எடுத்துச் சொல்கிறார் ப்ரவச்ன பாஸ்கரன் டி.ஏ.ஜோசப்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா -நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக சித்திரை, ஆடி, தை, பங்குனி உள்ளிட்ட மாதங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வர். இதில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருவர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். அக்னிச்சட்டி ஆடி வெள்ளி: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் - இதன் சிறப்புகள் என்ன? தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். இந்தநிலையில் தை மாத கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 16 வகை திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை வேண்டி , அக்கினிச்சட்டி, மாவிளக்கு, பறக்கும்காவடி, தேர்இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோவில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோ மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இருக்கன்குடி மாரியம்மனுக்கு நந்தி வாகனம் ஏன் தெரியுமா? இருக்கன்குடி அற்புதங்கள்!
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியுண்டு. நண்பர்களின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
காதலிப்பவரையே திருமணம் செய்யும் அதிர்ஷ்ட ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
Valentines day 2025: காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ளும் ராசியினர், காதல் திருமணத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ராசியினர் யார், அவர்களுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கம் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. ஜாதி, மதம், அந்தஸ்து என எந்த ஒரு விஷயத்தையும்
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியுண்டு. நண்பர்களின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தை தெப்பத் திருவிழா கோலாகலம்!
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைத் தெப்பத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. இன்று இரவில் மின்னொளி அலங்கார தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.