Non Veg: வாரத்துக்கு எத்தனை முறை சாப்பிடலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம்
'அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா?' விளக்கமளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன். Non Veg அசைவ உணவுகள் நல்லவையா? அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்கள். மற்றொரு தரப்பினர், புரோட்டீன் தேவைக்காக அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்கள். தானியங்களைக் காட்டிலும் சில அசைவ உணவுகளில் புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பது உண்மைதான். அதேசமயம், அசைவ உணவுகளில் இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது. இருப்பினும், இறைச்சியில் சுவைக்காக அதிக அளவிலான எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. மேலும், உப்பு, காரம், மசாலா பொருள்களையும் அசைவ உணவில் அதிகமாகச் சேர்க்கின்றனர். இவ்வாறு, அசைவ உணவுகளை கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக உட்கொள்ளும் ஆபத்தான போக்கையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். அசைவ உணவு நல்லதுதான். ஆனால், அதை உடலுக்குக் கெடுதலான வகையில் மாற்றி உட்கொள்வதுதான் ஆபத்தானது. Non Veg எப்படிச் சமைக்கலாம்? மீனில் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச்சத்து அதிகமுள்ளது. எனவே, மீன் சிறந்த உணவாகிறது. நீர்ச்சத்து அதிகமுள்ள எந்த உணவாக இருந்தாலும், அதை எண்ணெயில் பொரிக்கும்போது, நீர்ச்சத்துக்கு இணையான அளவு அந்த உணவில் எண்ணெய் சேகரமாகும். நீரிலேயே வாழ்வதால், மீனின் உடலில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது. அதை எண்ணெயில் பொரிக்கும்போது, அதன் உடலிலுள்ள ஒவ்வொரு சொட்டு நீருக்கும் ஒவ்வொரு சொட்டு எண்ணெய் அதனுள் சேர்ந்துதான் சாப்பிட ஏதுவாக மீன் தயாராகும். இதனால், மீனிலுள்ள நல்ல கொழுப்புச்சத்து, உடலுக்குத் தீமை பயக்கும் கெட்ட கொழுப்பாக மாற வாய்ப்புள்ளது. எனவே, பொரித்த மீனை அடிக்கடி அல்லது அதிகளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மாறாக, குழம்பாகச் செய்து சாப்பிடுவது நல்லது. சிக்கன், மட்டன், மீன் போன்ற பெரும்பாலான அசைவ உணவுகளையும் வெளிநாட்டினர் 'க்ரில்டு' (Grilled) எனும் எண்ணெய் சேர்க்காத குக்கிங் முறையில் தயாரிக்கின்றனர். இதன்மூலம், இறைச்சியானது, அதிலுள்ள கொழுப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து மூலமாகவே வேக வைக்கப்படுவதால், அந்த உணவிலுள்ள சத்துகள் நமக்குச் சரியாகக் கிடைக்கின்றன. இதுபோன்று க்ரில்டு உணவாகச் சாப்பிடலாம். அல்லது, இறைச்சி உணவுகள் எதுவானாலும் குழம்பாகச் செய்து சாப்பிடலாம். Non Veg வாரத்தில் எத்தனை முறை இறைச்சி சாப்பிடலாம்? ஞாயிற்றுக்கிழமை என்பது பெரும்பாலான வீடுகளில் 'மீட் டே'வாக (Meat Day) மாறிவிடுகிறது. குறிப்பாக, அன்றைய தினம் பலரும் 2 - 3 வேளைக்கு அசைவம் சாப்பிடுவதுண்டு. இதுவும் தவறான பழக்கம்தான். ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் எந்த நாளாக இருந்தாலும், காலை அல்லது மதியத்தில் மட்டும் அசைவம் சாப்பிடலாம். இரவில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு, வாரத்துக்கு தலா 100 கிராம் வீதம் 1 - 3 தடவை மட்டும் அசைவம் சாப்பிடுவதே சரியானது. அசைவ உணவுகள் செரிமானமாக அதிக நேரமெடுக்கும். இதுபோன்ற கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை ஒரே நாளில் பலமுறை உட்கொள்வது மிகவும் தவறு. நீண்ட, ஆரோக்கிய வாழ்வுக்கு ஒவ்வொரு நாளும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம். ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவம் தவிர, காய்கறிகள், தானியங்கள் சேர்த்த உணவுகள் சமைக்கப்படுவதில்லை. ஒருநேர உணவில் அசைவம், மற்ற இரண்டு வேளைகளில் காய்கறிகள், தானியங்கள் என நம் உணவுமுறை இருக்க வேண்டும். meat with vegetables pic அசைவ உணவுகளைச் சூடுபடுத்திச் சாப்பிடலாமா? இறைச்சி உணவுகளைத் திரும்பத் திரும்பச் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாது. குறிப்பாக, புளி அதிகம் சேர்த்துச் சமைக்கப்பட்ட மீன் குழம்பை பலரும் நாள் கணக்கில் வைத்திருந்து, திரும்பத் திரும்ப சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். இது தவறு. Health: பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே மீன் குழம்பைச் சூடுபடுத்திச் சாப்பிடலாம். மீனில் நல்ல கொழுப்புச்சத்து உள்ளது. மீன் உணவை அதிக தடவைச் சூடுபடுத்தும்போது, உடலுக்குக் கெடுதலான கொழுப்பு அமிலங்களாக (Trans fatty acids) மாறும். Fridge: ஃப்ரிட்ஜில் உணவுப் பொருள்கள்... தவிர்க்க வேண்டிய தவறுகள்; கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..! வயதானவர்கள் இறைச்சி உணவுகள் சாப்பிடலாமா? உடலுழைப்பு குறையும்போது, நாம் செலவிடுகிற ஆற்றலுக்கு ஏற்ப உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அது, இறைச்சி உணவுகளுக்கும் பொருந்தும். '80 வயதிலும் நன்றாக வேலை செய்கிறேன். உடலுழைப்புடன், செரிமான பாதிப்புகளும் இல்லை' என்பவர்கள், அசைவ உணவுகளை வாரத்தில் ஓரிரு முறை (குறைவான அளவில்) சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவாக இல்லாமல், குழம்பு மற்றும் சூப் செய்து சாப்பிடலாம் என்று முடித்தார் தாரிணி கிருஷ்ணன்.
Doctor Vikatan: ஜலதோஷம், உடல் வெப்பம் இரண்டையும் சமநிலைப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா?
Doctor Vikatan: என் மகனுக்கு 25 வயதாகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது. அதனால் எப்போதும் வெந்நீர், சிக்கன் சூப் என சூடான உணவுகளையே கொடுக்கிறேன். இன்னொரு பக்கம் உடலில் சூடு அதிகமாகி, கட்டிகள் வருகின்றன. அதற்கு குளிர்ச்சியாக ஏதேனும் கொடுத்தால், மறுபடி சளி பிடித்துக்கொள்கிறது. இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது? அவனுக்கு சித்த மருத்துவம் உதவுமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக சந்தேகப்படலாம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டியது முக்கியம். வெந்நீர் குடிப்பதால் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்பில்லை. வெந்நீர் குடிக்கும்போது, உடலின் வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும். குடல் இயக்கம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும். சளி பிடித்திருக்கும் போது வெந்நீர் குடிப்பது தான் நல்லது. இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவும் போது சிக்கன் சூப் கொடுக்கலாம். ஒருவேளை உடலில் கொப்புளங்கள் வந்தாலோ, உடல் சூடாவதாக உணர்ந்தாலோ, இரண்டு நாள்களுக்கொரு முறை மட்டும் குடிக்கலாம். தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். பித்தம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வதைக் கொண்டு, கொப்புளங்கள் வந்திருக்கலாம் அல்லது நாக்கில் புண் ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. இவை அனைத்தும் அதிக காரமான உணவுகளை உண்ணும் போதுதான் ஏற்படும். தொண்டை கம்மல் சளிப் பிரச்னையை சரிப்படுத்திக்கொள்ள வீட்டில் உள்ள மருந்துகளைப் பயன்படுத்தலாம். தொண்டை கரகரப்பாக இருந்தால், வெறும் உப்பைப் போட்டு வாய் கொப்பளித்தாலே தொண்டை கம்மல் (குரல் கம்மல்) குறைய வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் நீங்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான மருந்துகள் உள்ளன. தாளிசாதிச் சூரணத்தை அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா? அடுத்து அதிமதுரச் சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதை மாத்திரைகளாகவே வாங்கி, சப்பி சாப்பிட்டாலும் சளி குறையும். இது கோழையை (கபத்தை) வெளியேற்றும் 'எக்ஸ்பெக்டோரன்ட்' (கோழை அகற்றும் செய்கை) குணத்தைக் கொண்டது. நெஞ்சில் கட்டியிருக்கும் கபத்தை வெளியேற்ற உதவும். ஆடாதோடை மணப்பாகு என்பது இது வீட்டில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மருந்து. இதை 10 மில்லி அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்துக்கொள்ளலாம். நுரையீரல் இந்த மூன்று மருந்துகளும் ஓரளவுக்கு வெப்பம் மிகுந்த மருந்துகள்தான். ஆனால், சளிப் பிரச்னை இருக்கும்போது ஐந்து முதல் ஏழு நாள்கள் பயன்படுத்தினால் எந்தச் சிக்கலும் இருக்காது. உங்கள் மகனின் உடல்நலம் ஓரளவு சரியான பிறகு, ஒரு சித்த மருத்துவரை அணுகி நாடி பார்த்து, அவரது உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். மேலும், அவருக்கு டான்சில்ஸ் தொந்தரவு இருக்கிறதா அல்லது சைனஸ் போன்ற பிரச்னை இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ற நல்ல சித்த மருந்துகளையும் உணவு முறைகளையும் கொடுத்தால், கண்டிப்பான மாற்றத்தைக் காணலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டும் கொடுங்கள். முடிந்த அளவுக்கு வீட்டு உணவுகளையே எடுத்துக்கொண்டு, மூன்று வேளையும் இயற்கையோடு இயைந்த உணவுமுறையைப் பின்பற்றினால் மிகவும் நல்லது. பாலில் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொடுக்கும் கோல்டன் மில்க் (Golden Milk) முறையையும் தொடர்ந்து கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சளி இல்லாத நேரங்களில், நெல்லிக்காய் லேகியத்தை அரை டீஸ்பூன் சப்பிச் சாப்பிட்டு, வெந்நீர் குடிக்கச் சொன்னால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?
ப்ரீ டயாபட்டீஸ் யாருக்கெல்லாம் வரலாம்? வந்துவிட்டால் என்ன செய்வது?
ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிற நிலையில், ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம். சர்க்கரை நோய் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?' 'பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.' 'ப்ரீ டயாபடீஸ் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?' 'அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.' டயாபட்டீஸ் 'ப்ரீ டயாபடீஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?' 'சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள். இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.' குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ்: ’சுகர் போர்ட்’ எச்சரிக்கை; பெற்றோர்களுக்கு நிபுணர் அட்வைஸ்! 'ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?' ''ப்ரீ டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன. ஆனால். அவற்றை எடுத்துக் கொள்ளாமல், 'உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது. Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? இரவில் உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம். பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக ப்ரீ டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், ப்ரீ டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம். இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.'
Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cider Vinegar தெரியுமா?
ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது. அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன. சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட கதாநாயகிகள்கூட ஆப்பிள் சிடர் வினிகரின் நன்மைகள் பேசியதை அடுத்து, இது இன்னமும் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களில் தொடங்கி சாமானியர் வரை பிரபலமாகிவிட்டது. ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar) ஆரோக்கியம் காக்கும்! ஆப்பிள் சிடர் வினிகரை உணவில் சேர்த்துக்கொள்வது உண்மையில் உடலுக்கு நல்லதா, யாரெல்லாம் இதை எடுத்துக்கொள்ளலாம்? ஆப்பிள் சிடர் வினிகரைப் பயன்படுத்துவதில் உண்மையில் என்ன பயன்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்: ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்து முகம் கழுவி வந்தால் சருமம் பளபளவென்று பொலிவடையும். (ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது) Beauty: இரவு நேர சருமப் பராமரிப்பு டிப்ஸ்! காலை எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து 10 நொடிகள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், கிருமிகள் அழிவதோடு, பற்களிலுள்ள கறைகள் நீங்கி வெண்மையாகப் பளிச்சிடும். (ஆனால், இதை 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்) Apple Cider Vinegar ஆப்பிள் சிடர் வினிகரில் அதிகப்படியான அமிலத்தன்மை உள்ளதால் இதை நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. பழங்கள் அல்லது காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம். இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை 100 மி.லி தண்ணீரில் நன்றாகக் கலந்து அருந்தலாம். நேரடியாக அப்படியே சாப்பிடக் கூடாது. Beauty: சருமம் பளபளப்பா இருக்க வீட்டுக்குள்ள ஒரு பியூட்டி பார்லர்!
UPSC: `இறுதியில் என்னையே நான் தொலைத்துவிட்டேன்!' - யு.பி.எஸ்.சி தயாரிப்பு குறித்து இளம்பெண் எமோஷனல்
யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களின் உயரிய இலகுக்காக, பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனர். சவால்கள் நிறைந்த இந்தப் பாதையில், ஒரு தேர்வரின் மனமும் வாழ்க்கையும் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுகின்றன என்பதை, மான்வி ஸ்ரீவஸ்தவா என்ற இளம் பெண்ணின் உணர்வுப்பூர்வமான காணொளி சமீபத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. ஒரு மகத்தான லட்சியத்துக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எழும் ஒரு கேள்வியாகவே அவருடைய ஆதங்கம் இன்று பார்க்கப்படுகிறது! யு.பி.எஸ்.சி தேர்வைத் தன் இலக்காகக் கொண்ட அவர், அந்தப் பயணத்தில் தான் சந்தித்த சிரமங்களைப் பதிவு செய்துள்ளார். எனது 20-களை இதற்காகவே நான் கொடுத்துவிட்டேன். பிறந்தநாள், நண்பர்கள், உறவுகள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று மான்வி கூறுகிறார். தேர்வு இந்தக் கடுமையான ஒழுக்கமும், வெளி உலகத்துடனான தொடர்புகளை முழுவதுமாகத் துண்டித்துக் கொண்ட தனிமையும், ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையின் மீதே ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. இலக்கை அடைவதற்காகத் தன்னை வருத்திக்கொண்டபோது, அவர் படிப்படியாகத் தன்னுடைய இயல்பான மகிழ்ச்சி மற்றும் அடையாளத்தையே இழந்துவிட்டதாகச் சொல்கிறார். தேர்வுப் பாதை முடிவுக்கு வந்தபோதுதான், மான்வி ஒரு பெரிய வெற்றிடத்தை உணர்ந்தார். எல்லாம் முடிந்த பிறகு, நான் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. யு.பி.எஸ்.சியைத் துரத்துவதற்கும், தூக்கத்தை இழந்ததற்கும் இடையில், நான் எப்போதோ என்னையே தொலைத்துவிட்டேன் என்று அவர் மன வேதனையுடன் பேசுகிறார். அவருடைய லேப்டாப் திரையில் தன் ரெஸ்யூமை எழுத முற்படும்போது, அது தோல்விகளைப் பற்றி மட்டுமே அறிந்த ஒருவருடையதைப் போல் தோன்றுவதாகவும், 'வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்' என்று தெரியாதவராக உணருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தன்னுடைய இந்தக் கடுமையான அனுபவத்திலிருந்து, மான்வி மற்ற தேர்வர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை வைக்கிறார். தான் அனுபவித்த தனிமையின் வலியைத் தாங்களும் அனுபவிக்காமல், மற்ற தேர்வர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். View this post on Instagram A post shared by Manvi Srivastava (@discipline.over.motivation.now) நீங்கள் உங்கள் கனவுகளுக்காகத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தால், தயவுசெய்து உங்களைத் தொலைத்து விடாதீர்கள். எல்லாம் முடிந்த பிறகு, உங்களுக்கு நீங்களே தேவைப்படுவீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்பதே அவருடைய அழுத்தமான செய்தியாகும். இலக்கை அடைவதற்கான பாதையில், மனத் தெளிவுக்கும், சுயமகிழ்ச்சிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்.
Doctor Vikatan: திடீரென பறிபோன தூக்கம்; சரியாகுமா, தொடர்கதையாக மாறுமா?
Doctor Vikatan: நான் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த 2 மாதங்களாக இரவில் தூக்கமே இல்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே கனவாகிவிட்டது. தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டாலும், மீண்டும் தூக்கத்துக்குள் போக முடியாமல், விடிய விடிய விழித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன் இப்படி இருந்ததில்லை. இந்தப் பிரச்னை சரியாகிவிடுமா அல்லது இனி இதுவே தொடர்கதையாகிவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் நீண்டகால தூக்கமின்மை என்பது சிகிச்சை தேவைப்படுகிற விஷயம். ஆனால், தற்காலிக தூக்கமின்மை அப்படியல்ல. சின்னச் சின்ன டெக்னிக்ஸை பின்பற்றினாலே இதிலிருந்து வெளியே வரலாம். திடீரென ஒருநாள், இரண்டு நாள் அல்லது அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு தூக்கமின்மை ஏற்படுவதை 'ஷார்ட் டேர்ம் இன்சோம்னியா' (Short-term insomnia) என்கிறோம். மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தூக்கமில்லாமல் இருக்கும் பிரச்னையைப் போன்றதல்ல இது. தற்காலிக தூக்கமின்மை பிரச்னைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். இரவு நேரத்தில் ஸ்ட்ரெஸ் இருந்தால் தூக்கம் வராது. உடலும் உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் நடக்கவுள்ள திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள், அடுத்தடுத்த நாள்களில் அட்டெண்ட் செய்யவிருக்கிற இன்டர்வியூ, தேர்வு, போட்டிகள், சுற்றுலா போன்றவற்றை பற்றி இரவு நேரங்களில் யோசிப்பார்கள். மனது பரபரப்பாக எதையேனும் யோசிக்கும்போதும், சிந்தனைகள் (பாசிட்டிவ்வாகவோ, நெகட்டிவ்வாகவோ) ஓடிக்கொண்டிருக்கும்போதும் தூக்கம் பாதிக்கப்படலாம். இரவு தூக்கம் வழக்கமாகத் தூங்கும் அறையை, இடத்தை மாற்றிவிட்டு, வேறோர் இடத்தில் தூங்க முயற்சிசெய்யும்போதும் உடல் அந்தச் சூழலுக்குப் பழகாததால் தூக்கம் தடைப்படலாம். பெண்களுக்கு மெனோபாஸ், ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ், ஹைப்பர் தைராய்டிசம், கர்ப்பகாலம் உள்ளிட்ட நிலைகளில் உடலில் அடிக்கடி ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இவையும் தற்காலிக தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். மாலை 3-4 மணிக்கு மேல் காபி, டீ குடிப்பதாலும் ஆல்கஹால் கலந்த பானங்களைக் குடிப்பதாலும் தூக்கம் தடைப்படலாம். என்றோ ஒருநாள் வழக்கத்தைவிட அதிக அளவில் காபி, டீ குடிக்க வேண்டியிருக்கலாம். அந்த நாள்களிலும் தூக்கம் தடைப்படும். Doctor Vikatan: கனவுகளே இல்லாத தூக்கம் வரமா, சாபமா? மிதமான உடற்பயிற்சி என்பது உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சிலர் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள். அப்படிச் செய்வது தூக்கத்தை பாதிக்கும். இரவு நேரத்தில் பரபரப்பான கேம்ஸ் விளையாடுவது, திகில் காட்சிகள் நிறைந்த டி.வி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் பார்ப்பதும் அன்றைய நாளின் தூக்கத்தைக் கெடுக்கும். அடுத்த இரண்டு நாள்களுக்குக்கூட அந்த பாதிப்பு தொடரலாம். பகல் மற்றும் இரவு ஷிஃப்ட்டில் மாற்றி மாற்றி வேலை பார்ப்பவர்களுக்கு, ஷிஃப்ட் மாறும் நாள்களில் தூக்கம் பாதிக்கப்படலாம். 'ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம்' ( Restless legs syndrome ) என்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, இரவு முழுவதும் கால்களில் ஒருவித குடைச்சலும் வலியும் அசௌகர்யமும் இருக்கும். கால்களை மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இது அவர்களது தூக்கத்தை பாதிக்கும். படுக்கையிலேயே புரண்டு தூக்கம் தற்காலிகத் தூக்கமின்மை குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. அதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. தூக்கமில்லையே என்று கவலைப்பட ஆரம்பித்தால், அது 'க்ரானிக் இன்சோம்னியா' (Chronic Insomnia) எனப்படும் தீவிர தூக்கமின்மை பாதிப்புக்கு காரணமாகலாம். தூக்கமில்லாத இரவுகளில், அது பற்றியே யோசித்துக்கொண்டு, படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்க வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து விடுங்கள். பெட்ரூமிலிருந்து வெளியே வந்து விடுங்கள். செய்யாமல் விடப்பட்ட சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். காலையில் சூரிய உதயத்தின்போது அந்த வெயில் உடலில்படும்படி சில நிமிடங்கள் இருக்கலாம். அதேபோல மாலை வேளையில், சூரிய அஸ்தமனத்தின் போதான வெளிச்சமும் உடலில் படட்டும். கண்கள் மூலம் சூரிய ஒளியானது மூளையை எட்ட அனுமதிக்கும்போது, பகல் வேளையில் உடலும் மூளையும் எனர்ஜியோடு இருக்கும். மாலை வேளைக்குப் பிறகு உடலும், மனதும் அமைதியடையும். இரவில் ஆழ்ந்த உறக்கம் உங்களைத் தழுவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வது எப்படி?
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... உங்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்யுங்கள்! #HerSafety
கோயம்புத்தூரில் அண்மையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது, நம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தச் சமூக அவலத்திற்கு நிரந்தரத் தீர்வு காண, அரசின் நடவடிக்கை மட்டும் போதாது; ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை மாற்றமும் அவசியம். இந்தச் சூழலில், விகடன் அதன் வாசகர்களின் குரலை ஆவணப்படுத்தவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீர்வுகளை நோக்கி நகர்த்தவும் முடிவு செய்துள்ளது. HerSafety உங்களின் பார்வை என்ன? வாசகர்களாகிய நீங்கள், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து உங்கள் ஆழமான பார்வையைப் பதிவு செய்யலாம். உங்கள் கட்டுரைகள் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பிரிவில் அமையலாம்: சமூகப் பார்வை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? சட்டம் மற்றும் சமூக நீதி அமைப்புகளிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? தீர்வு: இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க பள்ளி, கல்லூரி, குடும்பம் மற்றும் அரசு மட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் என்னென்ன? தனிப்பட்ட அனுபவம் (பெயர் வெளியிடாமல்): உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அல்லது தொந்தரவு குறித்த அனுபவங்கள் (பெயர், இடம் போன்ற விவரங்கள் பாதுகாக்கப்படும்). எதிர்ப்புக் குரல்: ஆண்களின் மனநிலையில் வர வேண்டிய மாற்றங்கள், பெண்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்துக்கள். நினைவில் கொள்க: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. `இனி அந்த வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் ஆகட்டும்’ | கோவை சம்பவம் | #HerSafety விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?
Doctor Vikatan: வயதான என் அம்மாவுக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் நார்மலாகவே இருக்கிறது. இந்த வீக்கத்துக்கு வேறு என்ன காரணமாக இருக்கும். தானாகச் சரியாகிவிடும் என விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி வயதானவர்களுக்கு கால்களில் ஏற்படும் திடீர் வீக்கத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கால்களில் ஏற்படும் வீக்கம் இரண்டு வகையாகப் பார்க்கப்படும். ஒன்று வலியோடு கூடிய வீக்கம், இன்னொன்று வலியில்லாத வீக்கம். திடீரென அடிபடுதல், காயம் ஏற்படுதல், தசை நார் கிழிதல் போன்ற காரணங்களால் ஏற்படும் வீக்கத்தில் வலியும் இருக்கும். இதுபோன்ற வலி மற்றும் வீக்கத்துக்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். அதிலும், வயதானவர்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பு உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். லேசாக கால் பிரண்டால்கூட சவ்வு கிழியலாம். எலும்புகளில் லேசான விரிசல்கூட ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை கொடுக்கப்படாத பட்சத்தில், அது பெரிய பிரச்னையாக மாறக்கூடும். அடுத்தது வலியில்லாத வீக்கம். இதிலும் இரண்டு வகை உண்டு. ரத்தக் குழாய்களில் உள்ள வால்வுகள் பலவீனமாவதால், அந்த இடத்தில் ரத்தம் தேங்கிவிடும். ரத்தமானது பம்ப் செய்யப்பட்டு, கால்களிலிருந்து இதயத்துக்கு வர வேண்டும். அந்த வால்வு பலவீனமாகியிருந்தால், அசுத்தமான ரத்தமும் நீரும் கால்களில் கோத்துக்கொள்ளும். இந்தப் பிரச்னை பல நாள்களாகத் தொடர்ந்தால், சருமம் பாதிக்கப்படலாம். அந்தப் பகுதி கருமையாக மாறலாம். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். நாள்கள் செல்லச் செல்ல வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். இதற்கும் சிகிச்சை மிக அவசியம். கால்களில் வீக்கம் | Swelling in the legs வலியில்லாத வீக்கத்துக்கு இன்னொரு காரணம், இதயம் அல்லது சிறுநீரகங்களில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்கலாம். ஏற்கெனவே, இதய பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு இதயநலனை பரிசோதித்துப் பார்க்க வேண்டியது மிக அவசியம். அதேபோல சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படி வலியில்லாத வீக்கம் ஏற்படலாம். சிறுநீரக பாதிப்பின் காரணமாக நீரை வெளியேற்ற முடியாமல், கால்களில் வீக்கமாக வெளிப்படலாம். இந்த வீக்கமானது கால்களில்தான் வர வேண்டும் என்றில்லை, வயிற்றைச் சுற்றியோ, கண்களைச் சுற்றியோகூட வரலாம். இதுவும் தாமதமின்றி உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியது. எனவே, கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து அதற்கான சிகிச்சை வேறுபடும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?
சிகரெட்: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது. புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும். சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னையைச் சேர்ந்த இதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம். புகை பிடிப்பதை நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட 20-வது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. * புகை பிடிப்பதைவிட்ட 8 மணி நேரத்தில், ரத்தத்தில் உள்ள நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்ஸைடு அளவு பாதியாக குறைந்துவிடும். ஆக்ஸிஜன் அளவு நார்மலுக்கு வந்து விடும். * 24 மணி நேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு முற்றிலும் வெளியேறி விடும். புகை பிடிப்பதை நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? * 48 மணி நேரத்தில் உடலில் உள்ள நிக்கோடின் முற்றிலும் வெளியேறி விடும். * 72 மணி நேரத்தில் சுவாசம் சீராகி விடும். உடலில் ஆற்றல் அதிகரித்துவிடும். * 2 முதல் 12 வாரங்களில் ரத்த ஓட்டம் மேம்பட்டிருக்கும். Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? * ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. அகர்பத்தி புகை: மூக்குக்கு வாசனையா, நுரையீரலுக்கு வேதனையா? * இப்படியே தொடர்ந்தால், புகை பழக்கம் இருக்கிற ஆண், பெண் இருவருக்குமே குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது'' என்கிறார் டாக்டர் ஆர்.ரவிக்குமார். புகை பிடிப்பதை நிறுத்த முடிவெடுத்து விட்டீர்கள்தானே?
Visualisation: உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஒரு டெக்னிக் இது!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றதுக்கு இதுவும் ஒரு காரணம் என, கிரிக்கெட் வீராங்கனைகளே குறிப்பிட்ட அந்த விஷூவலைசேஷன் (Visualisation) பற்றி உங்களுக்குத் தெரியுமா? விஷூவலைசேஷன் (Visualisation) மனதுக்குள் கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் ஒரு விஷயத்தை சாதிக்க ஆசைப்பட்டிருப்பீர்கள். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் வேலைபார்க்க ஆசைப்பட்டிருப்பீர்கள். எத்தனையோ நாள்கள் அந்த ஆசையை மனதுக்குள் ஓட்டியபடி இருந்திருப்பீர்கள். 'அந்த கம்பெனியில மட்டும் எனக்கு வேலை கிடைச்சிட்டா எப்படியெல்லாம் வேலைபார்ப்பேன் தெரியுமா' என்கிற கற்பனையை எத்தனையோ தூக்கம் வராத இரவுகளில் மனதுக்குள் ரீவைண்ட் செய்து செய்து பார்த்திருப்பீர்கள். ஒருநாள் நீங்கள் ஆசைப்பட்ட அந்த கம்பெனியிலேயே வேலை கிடைக்கிறது. வேலைபார்க்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போது, சில வேலைகளை செய்யும்போது, 'இதை ஏற்கெனவே இங்கே செய்ததுபோலவே இருக்கிறதே' என்று சில நேரங்களில் தோன்றும். ஆனால், அது என்னவென்று புரியாமல் அதை அப்படியே கடந்துசென்றிருப்பீர்கள். அதற்கு காரணம், அந்த கம்பெனியில் நீங்கள் ஏற்கெனவே வேலைபார்ப்பதுபோல மனதுக்குள் கற்பனை செய்து பார்த்ததுதான். அப்படி கற்பனை செய்துபார்ப்பதன் பெயர்தான் விஷூவலைசேஷன் (Visualisation). உலகக்கோப்பையை வென்றதுக்கு இந்த டெக்னிக்கும் ஒரு காரணம்! இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றதில் இருந்து இந்த விஷூவலைசேஷன் என்கிற வார்த்தை பலராலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா பேசுகையில், 'போட்டிக்கு முந்தைய நாளில் மைதானத்தில் 45 நிமிடங்கள் அமர்ந்து நாங்கள் உலகக்கோப்பையை வென்றதைப்போல மனதுக்குள் சித்திரமாக ஓட்டி பார்த்துக்கொண்டோம். அந்த 'Visualisation' பயிற்சி எங்களின் வெற்றிக்கு பெரியளவில் உதவியது' என்றார். உலகக்கோப்பையை வென்றதுக்கு இந்த டெக்னிக்கும் ஒரு காரணம்! நிபுணர் என்ன சொல்கிறார்? இன்னொரு வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும், 'நேற்று ஒரு 'Visualisation' செஷனில் கலந்துகொண்டோம். நாங்கள் உலகக்கோப்பையை வென்றதைப்போல மனதுக்குள் சித்திரத்தை ஓடவிட்டுக் கொண்டோம். அது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது' என்றார். நாம் சாதிக்க ஆசைப்படுகிற ஒரு விஷயத்தை மனதுக்குள்ளே ஒரு படம்போல அசைபோட்டுக்கொண்டே இருந்தால், அதில் வெற்றிபெறுவதற்கான உத்வேகத்தை 'Visualisation' நமக்கு தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். இதுபற்றி தெளிவாக தெரிந்துகொள்ள மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் அவர்களிடம் பேசினோம். மனித மூளை நெகட்டிவாக அதிகம் யோசிக்குமா? ''பொதுவாகவே, மனித மூளையானது 'பரீட்சையில் தோற்றுவிட்டால் என்ன செய்வது; இன்டர்வியூவில் தோற்றுவிட்டால் என்ன செய்வது; கூட்டத்தில் பேசும்போது எல்லோர் முன்னாலும் திக்கிவிட்டால் என்ன செய்வது' என நெகட்டிவாக அதிகம் யோசிக்கும். இதனால், 'தோத்துப்போயிடுவோமோ... தோத்துப்போயிடுவோமோ...' என நினைத்து நினைத்தே, அது அப்படியே நிகழ்ந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் மனதுக்குள் எப்படி கற்பனை செய்துபார்க்க வேண்டும்? மனதுக்குள் கற்பனை செய்துபார்த்தல் அல்லது மனதுக்குள் காட்சிப்படுத்தல் என்கிற (Visualisation) டெக்னிக்கின் அடிப்படை என்னவென்றால், நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, அதை தத்ரூபமாக மனதுக்குள் கற்பனை செய்துபார்ப்பதோடு, அதை ஏற்கெனவே சாதித்துவிட்டதைப் போலவும் நினைத்துப்பார்க்க வேண்டும். எப்படியென்றால், இன்டர்வியூவுக்கு செல்கையில் பதற்றத்தில் உங்கள் உடல் இறுக்கமாக இருக்கும். ஆனால், இப்படி மனதுக்குள் விஷூவலைசேஷன் (Visualisation) செய்துபார்க்கையில், கண்களை மூடி, ஆழமாக சுவாசித்து, உடல் இறுக்கமில்லாமல் இருப்பதுபோல கற்பனை செய்ய வேண்டும். இப்படியே செய்துகொண்டிருக்கும் ஒரு நபர், நிஜத்தில் இன்டர்வியூவுக்கு செல்கையில் பதற்றமில்லாமல் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. Mental Health: மனதை நிலைப்படுத்தும் வைட்டமின்கள்! உலகக்கோப்பை விஷயத்தில் இந்த டெக்னிக்கை எப்படி பயன்படுத்தியிருப்பார்கள்? உலகக்கோப்பை வென்ற விஷயத்தில் இந்த விஷூவலைசேஷன் (Visualisation) எப்படி நடந்திருக்கும் என்றால் , 'சூப்பராக விளையாடுகிறோம்', 'நிறைய ரன் எடுக்கிறோம்', 'கடைசி நேரத்தில் ஒரு விக்கெட்டை எடுக்கிறோம்', 'உலகக்கோப்பையை வென்று அதை கைகளில் ஏந்துகிறோம்', 'அதை புகைப்படம் எடுக்கிறார்கள்', 'அந்த நேரத்தில் எங்களுடைய உடம்பு புல்லரிக்கிறது', 'எங்கள் வெற்றியைக் கொண்டாட வெடிக்கிற பட்டாசுகளின் ஒலி கேட்கிறது', 'ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்', 'நாங்கள் வெற்றிபெற்றதற்கான இசை ஒலிக்கிறது', 'பட்டாசு வாசனை எங்கள் நாசியில் நுழைகிறது' என, உலகக்கோப்பை தொடர்பான பல பாசிட்டிவான விஷயங்களை கண்களை மூடி கற்பனை செய்ய சொல்லியிருப்பார்கள். இதனால், அந்த வீராங்கனைகளில் உடலில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியை உணர வைத்திருக்கும் இந்த விஷூவலைசேஷன் டெக்னிக். Road Sociology: தரமற்ற சாலைகள் மக்களின் வாழ்வையும் மனநிலையையும் பாதிக்கிறதா? - ஆய்வு சொல்வதென்ன? கற்பனையில் கண்ட வெற்றியை நிஜத்திலும் பெற்றுவிட்டார்கள்! இந்தப் பயிற்சியை அடிக்கடி செய்கையில், 'நம்மால் முடியும்; நம்மால் இந்தப் போட்டியில் ஜெயிக்க முடியும்' என்கிற நம்பிக்கை வந்துவிடும். நான் மட்டும் கடினமாக உழைத்தால், இந்தக் கனவை என்னால் நிஜமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையும் வரும். பயிற்சியின் முடிவில் அவர்களை மெள்ள மெள்ள நிஜ உலகுக்கு வரவழைத்து, இதே உணர்வுடன் போட்டியில் விளையாடுங்கள் என்று அறிவுறுத்தியிருப்பார்கள். இதன் விளைவாக, வீராங்கனைகள் பயமும் பதற்றமுமில்லாமல் தன்னம்பிக்கையுடன் எதிரணியை எதிர்கொண்டிருப்பார்கள். பயிற்சியின்போது கற்பனையில் கண்ட வெற்றியை நிஜத்திலும் பெற்றுவிட்டார்கள். இந்த டெக்னிக்கை, வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் அப்ளை செய்யலாம். ஓர் உளவியல் ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் முறைப்படி இந்த டெக்னிக்கை எப்படி செய்வது, பயிற்சி முடிந்ததும் படிப்படியாக எப்படி நிஜ உலகத்துக்கு வருவது என கற்றுக்கொண்டு, செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் கனவுகளும் நனவாகும்'' என்கிறார் டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?
Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களாக கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் போட்டும் பலன் இல்லை. இந்நிலையில், தலையணை வைத்துப் படுப்பதுதான் கழுத்துவலிக்குக் காரணம் என்றும், அதைத் தவிர்த்துவிட்டு வெறுமனே படுக்கும்படியும் சொல்கிறார் என் நண்பர். இது உண்மையா, தலையணையைத் தவிர்த்தால் கழுத்துவலி சரியாகிவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு. எலும்பியல் சிகிச்சை மருத்துவர் ரமேஷ்பாபு கழுத்து வலி என்றதுமே, தலையணை வைக்காமல் படுத்தால் சரியாகிவிடும் என்கிற கருத்து பலரிடமும் உள்ளது. தலையணை இல்லாமல் படுத்தால் உங்களுக்கு வலி சரியாகிறது என்றால் படுக்கலாம். ஆனால், கழுத்துவலி உள்ள எல்லோருக்கும் இது தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது. பல நாள்களாக கழுத்துவலி தொடர்வதாகச் சொல்லும் நீங்கள், அதற்கான மருத்துவரைப் பார்த்து காரணம் கேட்டீர்களா, சிகிச்சையை எடுத்தீர்களா என்று தெரியவில்லை. காரணம் தெரிந்து சரியான சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. நீங்களாகவே பெயின் கில்லர் வாங்கிப் பயன்படுத்துவது சரியல்ல. நீங்கள் பயன்படுத்தும் தலையணை கடினமாக இல்லாமல் மென்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் இலவம்பஞ்சு தலையணை மிகவும் ஏற்றது. ஃபோம் (Foam) தலையணைகளும் உபயோகிக்கலாம். குறிப்பாக, மெமரி ஃபோம் (Memory Foam) தலையணைகளை வைத்துப் படுத்துக்கொள்ளலாம். மெமரி ஃபோம் வகைத் தலையணை மெமரி ஃபோம் வகைத் தலையணையில் தலை வைத்துப் படுக்கும்போது ஃபோம் அமுங்கும். அதிலிருந்து தலையை எடுத்ததும், மீண்டும் தலையணை பழைய நிலைக்குத் திரும்பிவிடும். சாதாரண ஃபோம் தலையணையைப் பயன்படுத்தும்போது நாளாக, ஆக, அது பழைய நிலைக்குத் திரும்பாது. கழுத்து வலி உள்ளவர்களுக்கு இந்த வகை தலையணையோ, மெத்தையோ ஏற்றவை அல்ல. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஃபேன்சி பைக், long ride.. முதுகுவலியை ஏற்படுத்துமா?
உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் மாதுளம் பழ எண்ணெய்! வீட்டிலேயே தயாரிக்கலாம்!
‘‘தன் பூ, கனி, உள்ளிருக்கும் முத்துக்கள் என்று அனைத்திலும் அழகு மிளிரும் மாதுளையை ஓர் அழகுராணி’’ எனும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, மாதுளையை கொண்டு செய்யப்படும் அழகுக் குறிப்புகளை இங்கே வழங்குகிறார். மாதுளம் எண்ணெய் தயாரிக்கலாமா? மாதுளம் எண்ணெய் தயாரிக்கலாமா? ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு மாதுளம்பழத்தை நான்காக நறுக்கிப் போடவும். பாத்திரத்தில் கைகளை அமிழ்த்தி மாதுளம் முத்துக்களைப் பிரிக்கவும். மாதுளம் தோல்களை வெளியே எடுத்துவிடவும். இப்போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் நல்ல மாதுளம் முத்துக்கள் இறங்கியிருக்க, பூச்சி அரித்த, சொத்தை மற்றும் அழுகிய மாதுளம் முத்துக்கள் மேலே மிதக்கும். தண்ணீரோடு அவற்றை வடித்துவிடவும். அடிப்பகுதியில் தங்கியிருக்கும் நல்ல மாதுளம் முத்துக்களை ஒரு காட்டன் துணியில் பரப்பி, ஃபேன் காற்றில் உலர்த்தவும். இதனை ஒரு கனமான கண்ணாடி பாட்டிலில் சேமித்துக்கொள்ளவும். மற்ற எண்ணெயைப்போல் பிசுபிசுப்பு இருக்காது! 50 மில்லி பாதாம் எண்ணெயைக் காய்ச்சி, பாட்டிலில் உள்ள மாதுளம் முத்துக்களின் மீது சூடாக ஊற்றவும். எண்ணெய் ஆறியவுடன் பாட்டிலை நன்கு மூடி, வெயில்படாத இருட்டு அறையில் வைக்கவும். 10, 15 நாட்களுக்குப் பிறகு பாட்டிலில் மாதுளம் எண்ணெய் தயாராகியிருக்கும். ஒரு மாதுளம்பழத்தின் முத்துக்கள் 100 கிராம் எனில், 25 மில்லி அளவில் எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயில் மற்ற எண்ணெயைப்போல் பிசுபிசுப்பு இருக்காது. உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் மாதுளம் பழ எண்ணெய் சருமப் பொலிவுக்கு பயன்படுத்தும் முறை! * மாதுளம் எண்ணெயை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவ, வறண்ட சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கும். * பொதுவாக, எண்ணெய்ப் பிசுக்கு சருமம் உடையவர்களும் பருக்கள் உடையவர்களும், முகத்தில் எண்ணெய் தடவக்கூடாது. ஆனால், மாதுளம் எண்ணெய், பிசுக்குத்தன்மை இல்லாத லேசான எண்ணெய் என்பதால் பயன்படுத்தலாம். பருக்கள் உள்ளவர்கள் சிறிது பஞ்சில் மாதுளம் எண்ணெயைத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்து, 10, 15 நிமிடங்களில் முகத்தைக் கழுவவும். இதனால் பருக்கள் தோன்றுவது மட்டுப்படுத்தப்படும். * மாதுளம் எண்ணெயை சுடவைத்து, மிதமான சூட்டில் தலைக்குத் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கி எடுத்த டவலால் தலையைச் சுற்றி நீராவி கொடுக்கவும். அரை மணி நேரம் கழித்து டவலை எடுத்துவிட்டு, பகல் முழுக்க அந்த எண்ணெயைத் தலையில் ஊறவிட்டு பிறகு குளிக்கவும். இது முடியின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும். மாதுளை எண்ணெய் கூந்தல் மசாஜ் *மாதுளம் எண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்துகொண்டு அதில் பஞ்சை நனைத்து, தினசரி கண் இமைகளின் மேல் மற்றும் கண்களைச் சுற்றியும் தடவிவந்தால் கண்கள் பளிச்சிடும்'' என்றவர், மாதுளம் சாற்றின் பலன்களையும் விவரித்தார். மாதுளம் சாற்றின் பலன்கள்! * ஒரு ஸ்பூன் மாதுளம் சாற்றுடன் கால் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் `பேக்' போட்டு 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் தொட்டு தேய்த்துக் கழுவவும். * முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் இதை, தினசரி முகத்தை சுத்தப்படுத்த க்ளென்சராகப் பயன்படுத்தலாம். * மாதுளம் சாறு ஒரு டீஸ்பூன், புதினா சாறு அரை டீஸ்பூன், பால் பவுடர் ஒரு டீஸ்பூன் இவற்றை பேஸ்ட் போல குழைத்து பருக் களினால் ஏற்பட்ட வடுக்களின் மேல் தினசரி ஒரு முறை தடவிவர, வடுக்கள் மறையும். மாதுளம் சாற்றின் பலன்கள்! * மாதுளம்பழ சாறு தயாரித்தவுடன் மிச்சம் இருக்கும் சக்கையை வீணாக்காமல் முகத்தில் தடவினால், வெயிலினால் நெற்றி, மூக்கு கன்னங்களில் ஏற்படும் நாள்பட்ட கருந்திட்டுக்கள் மறையும். * மாதுளம் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி பொடி செய்துகொள்ளவும். வாரம் ஒருமுறை, இந்தப் பொடியைத் தண்ணீரில் குழைத்து முகம் மட்டுமில்லாமல் உடல் முழுக்க தேய்த்துக் குளித்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! * உதடு, பாதம், உள்ளங்கை போன்றவற்றில் வெடிப்பு ஏற்பட்டால், மாதுளம் சாறு ஒரு ஸ்பூன், இரண்டு பாதாம், ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை, ஒரு டீஸ்பூன் கசகசா அனைத்தையும் சேர்த்து அரைத்து, தினசரி இரவு அந்த வெடிப்புகளில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் வெடிப்புகள் மறைந்து சருமம் மிருதுவாகும். * நாள் முழுவதும் கணினியில் வேலைபார்ப்பதால் ஏற்படும் கண் வறட்சியில் இருந்து தப்பிக்க, மாதுளம் சாறு 2 ஸ்பூன், தண்ணீர் 2 ஸ்பூன் கலந்து வைத்துக்கொண்டு, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பஞ்சை அதில் நனைத்து மூடிய கண்களின் மேல் ஒத்தடம்போல கொடுக்கவும். * தலையில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் வழுக்கையைத் தடுக்க, உலர்ந்த மாதுளம் தோல் 100 கிராம், அதிமதுரம் 50 கிராம், உலர்ந்த ஒற்றைச் செம்பருத்தி 50 கிராம் இவை அனைத்தையும் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொண்டு, இந்தப் பொடியை தலைக்குத் தேய்த்துக் குளித்து வரவும். Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்!
Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?
Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும் போதெல்லாம் பிரெகன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் காட்ட வாய்ப்பிருக்கிறதா? வேறு எந்த விஷயங்களை எல்லாம் இதில் கவனிக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் கர்ப்பத்தை உறுதிசெய்ய சிறுநீர்ப் பரிசோதனைதான் செய்யப்படும். அந்தப் பரிசோதனையில், ரத்தத்தில் ஹெச்.சி.ஜி (Human Chorionic Gonadotropin) என்ற ஹார்மோன் இருக்கிறதா, இல்லையா என்பதைக் காட்டிக் கொடுக்கும். ஆனால், அதில் ஹெச்.சி.ஜி அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் காட்டாது. கர்ப்பம் தரித்ததும் உடலில் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் உருவாகும். அதாவது கரு பதியத் தொடங்கிய பிறகு, இது ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு நிகழ்ந்த 6 முதல் 10 நாள்கள் கழித்து, கர்ப்பம் தரித்திருந்தால் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் உற்பத்தியாவது நடக்கும். உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது 28 நாள்களுக்கொரு முறை சரியாக வருவதாக வைத்துக்கொள்வோம். கடந்த மாதம் 14-ம் தேதி பீரியட்ஸ் வந்திருந்து, அடுத்த மாதம் அதே தேதியில் வராவிட்டால், 15-ம் தேதியன்று நீங்கள் டெஸ்ட் செய்து பார்க்கலாம். அதற்கு முன்பு டெஸ்ட் செய்து பார்ப்பதில் அர்த்தமில்லை. கர்ப்பம் எப்போதுமே காலையில் வெளியேற்றும் முதல் சிறுநீரை எடுத்துதான் இந்த டெஸ்ட்டை செய்யச் சொல்வோம். அந்தச் சிறுநீர் அடர்த்தியாக இருக்கும். அதில் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும். கர்ப்பம் தரித்திருந்தால், இந்த டெஸ்ட்டில் 97 முதல் 99 சதவிகிதம் துல்லியமாகச் சொல்லிவிடும். அதை 'சென்சிட்டிவிட்டி' (Sensitivity) என்று சொல்வோம். அடுத்து ஸ்பெசிஃபிசிட்டி (Specificity). அதாவது டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்று வந்தால், அது கர்ப்பம் தரித்திருப்பதை 99 சதவிகிதம் உறுதிசெய்கிற விஷயத்தை ஸ்பெசிஃபிசிட்டி என்று சொல்வோம். அடுத்து 'ஃபால்ஸ் நெகட்டிவ்' (False negative) என்றொரு விஷயம் குறிப்பிடுவோம். அதாவது கர்ப்பம் இருக்கிறது, ஆனால் இல்லை... என்பதைக் குறிப்பது. இப்படிக்கூட நடக்குமா என்றால், அதற்கு 1 முதல் 2 சதவிகித வாய்ப்பு இருக்கிறது. ரத்தப் பரிசோதனை ரொம்பவும் சீக்கிரமே டெஸ்ட் செய்யும்போதோ, முறையற்ற மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்களுக்கோ, நிறைய தண்ணீர் குடித்ததன் விளைவாக, சிறுநீர் ரொம்பவும் நீர்த்திருந்தாலோ, டெஸ்ட் செய்யத் தெரியாவிட்டாலோ, இப்படி நடக்கலாம். அல்லது பிரெக்னன்சி டெஸ்ட் கிட்டில் ஏதேனும் கோளாறு இருப்பதும் காரணமாகலாம். அதே போல 'ஃபால்ஸ் பாசிட்டிவ்' (False positive) என்றும் காட்டலாம். அதாவது கர்ப்பம் இல்லை, ஆனால் இருப்பதாகக் காட்டும். இதற்கும் கிட் பிரச்னையால் நிகழலாம். குழந்தையின்மை சிகிச்சையில் இருப்போர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விளைவாக இருக்கலாம். கருச்சிதைவின் காரணமாக இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: பிரெக்னன்சி டெஸ்ட்டில் பாசிட்டிவ்... ஆனாலும் ப்ளீடிங்... என்ன காரணம்?
தண்ணீரை முறைப்படி காய்ச்சிக் குடிப்பது எப்படி?
மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால், அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது. முறைப்படி தண்ணீரை காய்ச்சிக் குடிப்பது எப்படி? மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக் குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச்சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நீரின் தன்மை பற்றி சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம். Can water: கேன் வாட்டர் குடிச்சா ஆண்மை குறையுமா..? | காமத்துக்கு மரியாதை - 180 கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம்! 'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல், வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக் கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர்களால் மாசுபட்டுள்ளது. நம் நாட்டில், சுத்தமான குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. முறையான கொதிக்கவைத்தல் தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு முறையான கொதிக்கவைத்தல்’ பற்றிச் சரியான புரிதலோ வழிகாட்டுதலோ இல்லை. தண்ணீரை அடுப்பில் வைத்து, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள் இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. மேலும், பானையில் வைத்திருக்கும் நீராக இருந்து, ஒவ்வொரு முறையும் கையை விட்டு்த் தண்ணீரை எடுக்கும்போது, நம் கை மூலம் சில கிருமிகளை உள்ளே விடுகிறோம். எனவே, தண்ணீரை முகந்து குடிக்காமல், ஊற்றிக் குடிப்பதுதான் நல்லது' என்கிறார் டாக்டர் எழிலன். சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத்துவர் விளக்கம்!
பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா?
வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ வீட்டை சுத்தம் செய்யக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். வயிற்றை சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படி செய்யப்படுகிறது என வயிறு மற்றும் செரிமான மண்டல சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் விரிவாகக் கேட்டோம். பெருங்குடல் சுத்தம்; எப்படி செய்வது? ’’வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசி பகுதி பெருங்குடல். இந்த பெருங்குடல் சுமார் ஐந்து அடி நீளமும், இரண்டரை இன்ச் சுற்றளவும் கொண்டது. இதன் முக்கிய பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும், நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான். பெருங்குடலில் நன்மை தரும் பாக்டீரியா வசிக்கிறது. இந்த பாக்டீரியா வைட்டமின் கே மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது. கழிவுகள் என்றாலே விஷம்தான் கழிவுகளை வெளியேற்றும் போது சில நேரங்களில் பெருங்குடலிலேயே கழிவுகள் தங்கிவிடலாம். அது நாம் சாப்பிட்ட உணவின் எச்சம், இறந்த செல் திசு, வயிற்றில் சுரக்கும் சளி போன்ற திரவம், ஒட்டுண்ணியாகவும் இருக்கலாம். இப்படி தங்கும் கழிவுகளால் நமக்குப் பிரச்னைதான். கழிவுகள் என்றாலே விஷம்தான். இப்படி தங்கிவிட்ட நஞ்சு மீண்டும் ரத்தத்தில் கலந்து, நல்ல பாக்டீரியாவைப் பாதித்து ஊட்டச்சத்து உற்பத்தியைத் தடுத்துவிடும். மேலும், செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு இப்படி கழிவு தங்கினால், தலைவலி, முதுகுவலி, மலச்சிக்கல், சோர்வு, வாயில் கெட்ட வாசனை, உடலில் துர்நாற்றம், எரிச்சல், குழப்பமான மனநிலை, தோல் பிரச்சனைகள், வாயுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். பெருங்குடல் சுத்தம்; எப்படி செய்வது? 'கலோனிக் லாவேஜ்’. இதைக் சுத்தம் செய்யும் சிகிச்சை முறைக்குத்தான் ‘கலோனிக் லாவேஜ்’. அதாவது, பெருங்குடலை நீரால் அலசி சுத்தப்படுத்தும் நீர் சிகிச்சை. ஒரு மணி நேரத்தில் பெருங்குடல் சுத்தப்படுத்தும் சிகிச்சை முடிந்துவிடும். இதற்காக தோராயமாக 18–20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது, சிகிச்சை எடுத்துக்கொள்பவரின் வயிற்றில் மென்மையாக மசாஜ் செய்யப்படும். அதன் பிறகு, அவரது ஆசனவாய் வழியே குடலைச் சுத்தப்படுத்தும் பிரத்யேக கருவி பெருங்குடல் வரை உள்ளே செலுத்தப்படும். இந்த கருவியின் ஒரு குழாய் சுத்தமான நீரை உள்ளே பாய்ச்சும்; அந்த நீர் குடலைச் சுத்தப்படுத்தும். மற்றொரு குழாய், குடலைச் சுத்தப்படுத்திய நீரை உறிஞ்சி வெளியே எடுக்கும். இப்படி பெருங்குடல் முதல் மலக்குடல் வரை உள்ள குடல் பகுதிகள் கழுவி சுத்தம் செய்யப்படும். ஆசனவாய் வழியே செலுத்தப்படுகிறதே என்ற அசௌகரியத்தைத் தவிர்த்து, வலி ஏதும் இருக்காது. Muskmelon: முலாம் பழம் குளிர்ச்சி தரும்; குடல் புழுக்களைக் கொல்லும்; அல்சரை குணப்படுத்தும்! நன்மை செய்யும் பாக்டீரியா வாழ ஏற்ற சூழல் ஏற்படுத்தித்தரப்படுவதால்... இந்த சிகிச்சையின் போது, வயிற்றில் உள்ள கழிவுகளுடன் நன்மை செய்யும் பாக்டீரியாவும் வெளியேறும். ஆனால் பாக்டீரியா முற்றிலும் வெளியேற்றப்படுவது இல்லை. குடலைச் சுத்தம் செய்து, நன்மை செய்யும் பாக்டீரியா வாழ ஏற்ற சூழல் ஏற்படுத்தித் தரப்படுவதால், அவை சில நாட்களிலேயே நன்றாக பெருக்கம் அடைந்துவிடும். சிலர், “எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும், எனிமா கொடுத்தாலே வயிறு சுத்தமாகிவிடுமே” என்று நினைக்கலாம். எனிமா என்பது மலக்குடலை மட்டுமே சுத்தம் செய்யும். அதனால் பெருங்குடலைச் சுத்தப்படுத்த முடியாது. பொதுவாக கேஸ்ட்ரோஎன்ட்ராலஜி மருத்துவர்கள் இதைப் பரிந்துரை செய்வது இல்லை. ஆனால், நோயாளி விரும்பினால், அவருக்கு இதைச் செய்வதால் பாதிப்பு இல்லை என்ற நிலையில் நீர் சிகிச்சை செய்யப்படுகிறது,” என்றார். சுத்தம் கவனம்! அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதற்கென வயிறு செரிமான மண்டல நிபுணர்கள் அல்லது பயிற்சி பெற்ற செவிலியர்கள் சிகிச்சை அளிப்பார்கள். இந்தியாவில் 'இந்த சிகிச்சை புதிது’ என்பதால் ஒரு சில மருத்துவர்கள்தான் சிகிச்சை அளிக்கின்றனர். நன்கு பயிற்சிபெற்ற நிபுணரிடம் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். இல்லை எனில், பிரத்யேகக் கருவியை உள்ளே செலுத்தும்போதும், நீரைப் பீய்ச்சி அடிக்கும்போதும் குடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு'' என்கிறார் டாக்டர் பாசுமணி. Health: குடல் சுத்தம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை.. ஆரோக்கியம் தரும் 7 நாள் 7 ஜூஸ் ஃபார்முலா
தூங்கப் போகுமுன் செல்போன் திரையைப் பார்க்கிறீர்களா? - எச்சரிக்கும் புதிய ஆய்வு
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, ஓய்வெடுக்கப் போகும் முன் செல்போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பதுதான் இன்று பலரின் பழக்கம். குறிப்பாக இரவில் மொபைல் பார்த்தபடி தூங்குவது பலரின் பழக்கம் ஆகிவிட்டது. ஆனால், இந்த பழக்கம் நாளடைவில் உங்கள் இதயத்தை பாதிக்கக் கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நான் சமீபத்தில் வாசித்த ஒரு ஆய்வுக் கட்டுரை என்னை அதிர்ச்சி அடைய செய்தது. அதைப் பற்றி இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். ஒன்பது ஆண்டுகால ஆராய்ச்சி சொல்லும் உண்மை! ஆஸ்திரேலியாவின் ஃப்ளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு முக்கியமான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதற்காக, இங்கிலாந்தைச் சேர்ந்த சுமார் 89,000 பேரை, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்காணித்தனர். அவர்களின் கைகளில் Sensors பொருத்தப்பட்டது. அதன் மூலம், அவர்கள் இரவு நேரத்தில் எந்தளவுக்கு டிஜிட்டல் திரை வெளிச்சத்துக்கு ஆட்படுகிறார்கள் என்ற தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வின் முடிவில், இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துக்குத் தொடர்ந்து ஆளானவர்களுக்கு, இதயச் செயலிழப்பு (Heart Failure) வருவதற்கான அபாயம் 56 சதவீதம் வரை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இது இருதய நோய்கள் வருவதற்கான ஒரு பெரிய ஆபத்துக் காரணியாக உருவெடுத்துள்ளது. இந்த ஆய்வின்படி பார்த்தால், இந்த விஷயத்தில் குறிப்பாக, 40 வயதைக் கடந்தவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! ஆம், இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்துக்கு நம்மை நாமே வெளிப்படுத்துவதும், குறிப்பாக உறங்கச் செல்லும் முன் கைபேசித் திரையின் நீல ஒளியைப் பார்ப்பதும், இதயச் செயலிழப்பு (Heart Failure) அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்கிறது இந்த புதிய ஆய்வு. நமது உடலில் உள்ள 'சர்காடியன் கடிகாரம்' (Circadian Clock) எனப்படும் இயற்கையான சுழற்சியை, இரவு நேர வெளிச்சம் குழப்பிவிடுவதே இதற்குக் காரணம். இந்தக் குழப்பம், நாளடைவில் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இரவு நேரத்தில் அதிக வெளிச்சத்திற்கு தங்களை ஆட்படுத்துபவர்களுக்கு, இதயச் செயலிழப்பு மட்டுமல்லாமல், வேறு சில இருதய நோய்களும் அதிகரிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செய்ய வேண்டியது என்ன? இரவு நேரத்தில் அதிக டிஜிட்டல் திரை ஒளிக்கு நம்மை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதே நம் இதயம் மற்றும் உடலைப் பாதுகாக்கும் ஒரே வழி என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே செல்போன், லேப்டாப் போன்ற அதிக ஒளி தரும் திரைகளைப் பார்ப்பதை முழுமையாக நிறுத்துங்கள். இரவு நேரங்களில், குறைவான ஒளி (Dim Lights) தரும் விளக்குகளை மட்டுமே பயன்படுத்துங்கள். இந்த எளிய மாற்றத்தைச் செய்வதன் மூலம், உங்கள் விலைமதிப்பற்ற இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். இனியாவது, 'இரவு வணக்கம்' செல்போனுக்கு அல்ல, நிம்மதியான உறக்கத்துக்குச் சொல்லுங்கள்! Source : Study published in the Journal of the American Medical Association (JAMA) விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை, அதீத களைப்பு; வேலைதான் காரணமா?
Doctor Vikatan: நீண்டகாலமாக வேலை தேடிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், நைட் ஷிஃப்ட் வேலைதான் கிடைத்திருக்கிறது. ஒரு மாதமாக இந்த வேலையைப் பார்க்கிறேன். ஆனால், இதுவரை இல்லாத அளவு மிகவும் களைப்பாக உணர்கிறேன். பகலில் தூக்கமும் இல்லை. என்னுடைய திடீர் களைப்புக்கு என் நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான உணவை சரியானதாகவும் சரியான நேரத்திலும் சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, பகலில் பட்டினி கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பகலில் எனர்ஜி குறைவாக இருக்கும். எனவே, ஒவ்வொரு வேளை உணவுக்கும் சரியான இடைவெளி முக்கியம். அடுத்தது உறக்கம். ஆரோக்கியமான நபருக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானது. ஆனால், சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அடுத்தநாள் காலையில் களைப்புடனேயே எழுந்திருப்பார்கள். உடல் பருமனானவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகாமல் போகலாம். நம் எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். அதை 'எட்டு எட்டாக ' மூன்றாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இரவில் 12 மணி நேரம் ஓய்வெடுக்கவும் பகலில் 12 மணி நேரம் வேலைசெய்யவும் ஏதுவாகத்தான் இயற்கையே நம் உடலை வடிவமைத்திருக்கிறது. நீங்கள் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர் என்றால் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்களுக்கான பிரேக்ஃபாஸ்ட். நள்ளிரவு 12 மணிக்குச் சாப்பிடுவது லஞ்ச். காலையில் வீட்டுக்கு வரும்போது சாப்பிடுவது டின்னர். அதற்கடுத்த 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கானது. அந்த நேரத்தில் நீங்கள் சாப்பிட வேண்டியதில்லை. அதாவது நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள், பகலை இரவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பலரும் பகலில் கிடைக்கிற நேரத்தை டி.வி பார்க்க, போன் பேச, வேறு வேலைகளைப் பார்க்கவெல்லாம் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் ஆரோக்கியத்தை ஆபத்தை நோக்கித் தள்ளுகிறார்கள் என்றுதான் அர்த்தம். போதுமான நேரம் தூங்காத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளவயதிலேயே நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். 6 முதல் 8 நேரத் தூக்கத்தில்தான் உங்கள் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும். உடல் ஓய்வெடுத்துக்கொள்ளும். அதீத களைப்பு: நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா? பகலில் தூங்கும்போது உங்கள் அறை, இருட்டாகவும் சத்தங்கள் இன்றியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பகல்தான் உங்களுக்கு இரவு என்பதால் பகலிலும் மீண்டும் சாப்பிடாதீர்கள். சரியாகத் தூங்காமலும் இரவில் மட்டுமன்றி பகலிலும் சாப்பிடுவதாலும் நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கத் தொடங்கிய மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள் உங்கள் ஆரோக்கியம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களும் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். இதையெல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடனடியாக உங்கள் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டாலே உங்கள் பிரச்னைகள் தானாகச் சரியாகும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துமா?
உங்கள் குழந்தையின் ஐ.க்யூ வை அதிகரிக்க முடியுமா? விளக்குகிறார் குழந்தை மனநல மருத்துவர்!
ஐ.க்யூ டெஸ்ட் எதற்காக எடுக்கிறோம்; நம் குழந்தைகளின் ஐக்.யூவை அதிகரிக்க முடியுமா; ஐ.க்யூ அதிகமாக இருந்தால் நம் குழந்தைகள் திறமை வாய்ந்தவர்களா..? இந்த சந்தேகங்கள் பல பெற்றோர்களுக்கும் இருக்கும். இதுபோன்ற கேள்விகள் அனைத்திற்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர், ஜனனி எஸ். பிரசன்னா விளக்கம் அளிக்கிறார். உங்கள் குழந்தையின் ஐ.க்யூ வை அதிகரிக்க முடியுமா? ஐ.க்யூ டெஸ்ட் என்றால் என்ன? ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் பொதுவாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களின் வார்த்தைகள் மூலமும் நடத்தையின் மூலமும் பரிசோதிப்பதற்காகத்தான் ஐ.க்யூ டெஸ்ட் எடுக்கப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு மூளையின் ஏதோ ஒருபகுதி மட்டும் செயல்படவில்லை; பல பகுதிகளும் சேர்ந்து ஒருங்கிணைந்து வேலைபார்த்தால் மட்டுமே ஒரு குழந்தை நன்றாக இயங்க முடியும். அதனால், ஒரு குழந்தையின் ஐ.க்யூவை ஸ்கேன் மற்றும் ரத்தப்பரிசோதனை மூலம் பரிசோதிப்பது என்பது முடியாத ஒன்று. மூளையின் வடிவமைப்பை மட்டுமே ஸ்கேன் மூலம் பார்க்க முடியுமே தவிர, மூளையின் செயல்பாடுகளை அல்ல. ஐ.க்யூ டெஸ்ட் என்பது முழுக்க முழுக்க உங்கள் குழந்தையின் நடத்தையையும் மூளையின் செயல்பாடுகளையும் சார்ந்ததே ஆகும். ஒட்டுமொத்த நரம்பு இணைப்புகளும்தான் ஒரு குழந்தையை உளவியல்ரீதியாக நன்றாக இயங்க வைக்கிறது. யாருக்கு, எப்படி டெஸ்ட் பண்ணலாம்? ஆறு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளில் இருந்து எந்த வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலும் ஐ.க்யூ டெஸ்ட் எடுக்க முடியும். ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து முதல் இரண்டு வருடங்களில்தான் அதன் மூளை வளர்ச்சி அடைகிறது. அதன்பின் 6, 7 வயது வரைதான் மூளையின் நரம்பு இணைப்புகள் நன்றாக செயல்பட தொடங்குகிறது. எனவே, 6,7 வயதிற்கு பிறகு ஐ.க்யூ டெஸ்ட் எடுப்பதுதான் உகந்ததாக இருக்கும். முதலில் அவர்களிடம் பல கேள்விகள் கொடுக்கப்படும். அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களிம் ஐ.க்யூ லெவலை பரிசோதிப்போம். உங்கள் குழந்தையின் ஐ.க்யூ வை அதிகரிக்க முடியுமா? ஐ.க்யூ டெஸ்ட் எதற்காக எடுக்கிறோம்? ஒரு குழந்தைக்கு பேச, எழுத, கை, கால் அசைக்க, அதனுடைய வேலையை தானே செய்துகொள்ள வேண்டுமென்றால் அதன் மூளையின் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும். ஆனால், ஆட்டிஸம், ADHD (Attention Deficit / Hyperactivity Disorder) போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருந்தாலும், நடத்தை வேறு மாதிரியாக இருக்கும். அவர்களை மூளை வளர்ச்சிக் குன்றியவர்கள் என்று சிலபேர் அழைக்கிறார்கள். அது முற்றிலுமாக தவறு. உதாரணத்திற்கு, மூளையின் பகுதிகள் பொதுவாக இணைக்கப்பட்டு இருக்கும் என்றால், இதுபோன்ற குழந்தைகளுக்கு வித்தியாசமாக இணைக்கப்பட்டு இருக்கும். அதாவது, மற்ற குழந்தைகளைவிட இந்த குழந்தைகளின் மூளையின் செயல்பாடு முற்றிலுமாக வேறுபட்டு இருக்கும். எனவே இவர்களைப் பற்றி புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் ஐ.க்யூ டெஸ்டிங் மூலம் இவர்களைப் புரிந்துகொள்வது என்பது எளிதாகி விடுகிறது. அதுமட்டுமல்லாமல், ADHD குழந்தைகளுக்கு கவன குறைபாடு இருப்பதால் கற்றலிலும் அவர்களுக்கு குறைபாடு இருக்கும். பள்ளிகளில் அந்தக் குழந்தைகளின் நடத்தையும் மற்ற குழந்தைகளைவிட மாறுபட்டு இருக்கும். அதனால், மற்ற குழந்தைகளை அணுகுவதுபோல அவர்களை அணுக முடியாது. அதற்குத்தான் நாங்கள் ஐ.க்யூ டெஸ்ட் எடுக்கிறோம். அதில் வரும் முடிவுகளைப் பொறுத்து அவர்களுக்கு விளையாட்டு முறையிலேயே பயிற்சியும் அளிக்கிறோம். மனநல மருத்துவர், ஜனனி எஸ். பிரசன்னா ஐ.க்யூ லெவலை அதிகரிக்க முடியுமா? 18 வயதிலிருந்து இரண்டு வயதுக்குள்ளேயே குழந்தை மற்றும் மனநல மருத்துவர்களை சந்தித்து பரிசோதனைகளை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை தலையீடுகளை கொடுக்கலாம். மூன்று வயது வரை, அனைத்து குழந்தைகளுக்குமே கற்றுக் கொள்கிற தன்மை சரியாக இருக்கும் என்பதால் நாம் சரியான முறையில் பயிற்சி கொடுத்தால் அவர்களின் ஐ.க்யூ லெவலை நிச்சயமாக அதிகரிக்க முடியும். இந்த வயதில் குழந்தைகளால் நாம் கேட்கும் கேள்விகளை புரிந்து கொள்ள முடியாது என்பதால் ஐ.க்யூ டெஸ்ட் எடுக்க மாட்டோம். அதற்கு பதிலாக அவர்களுடைய அறிவாற்றல் திறனுக்கு (cognitive capacity) ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படும். ஆனால், வலிப்பு, தலையில் காயம் (Head injury), பெருமூளை வாதம் (Cerebral palsy) போன்ற மருத்துவரீதியான பிரச்னைகள் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு ஐ.க்யூ லெவல் குறைவாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஐ.க்யூவை அதிகரிக்கச் செய்வது என்பது சிரமமான ஒன்று. Parenting: குழந்தைகளை 2 வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? ஐ.க்யூ அதிகமாக இருந்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா? ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகள் அளவுக்கு மீறி சேட்டை செய்தாலும் அவர்களுடைய ஐ.க்யூ மிகவும் அதிகமாக இருக்கம். அதேபோன்று ஆட்டிசம் குழந்தைகளுக்கு எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் அவர்களைப் போன்று கவனமாக யாராலும் வேலை செய்ய முடியாது. அவர்களை 'ஹியூமன் கம்ப்யூட்டர்ஸ்' என்றுகூட சொல்வார்கள். பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு தேதியை சொன்னால் அது என்ன கிழமையாக இருக்கும் என்றுகூட சிலர் பதிலளிப்பார்கள். அவர்களுக்கு தனித்திறமை இருந்தாலும், மற்ற குழந்தைகளைப்போல அவர்களும் வாழ்க்கையின் பல சிக்கல்கள சந்திக்கத்தான் செய்வார்கள். ஐ.க்யூ லெவல் அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு... அதேபோன்றுதான் ஐ.க்யூ லெவல் அதிகமாக இருக்கும் குழந்தைகளும் நன்றாக படிக்கிறார்கள், அறிவோடு பேசுகிறார்கள் என்று அவர்களின் பெற்றோர்கள் பாராட்டுகிறார்களே தவிர, ஐ.க்யூ லெவல் அதிகமாக இருக்கும் குழந்தைகள், அன்றாடம் மற்றவர்களோடு பேசவும் பழகவும்கூட முடியாமல் தவிப்பதை பல பேர் புரிந்து கொள்வதே இல்லை. இந்த சிக்கல் என்பது அவர்களின் பள்ளி பருவத்தில் தெரியாது. அவர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும்போதுதான் அதிகம் சிரமப்படுவார்கள். உதாரணமாக, ஞாபக சக்தி நன்றாக இருக்கும். ஆனால், சமூக திறன்கள் (socialising skills) குறைவாகவே இருக்கும். எதிர்காலத்தில் அவர்களது திருமண வாழ்க்கையில்கூட இதனால் சிக்கல்கள் வரலாம். எனவே உங்கள் குழந்தைகளுக்கு என்ன தனித்திறமைகள் இருந்தாலும், அதன் கூடவே அவர்கள் அதற்கான சிக்கல்களையும் நிச்சயமாக சந்திப்பார்கள். அதை உடனே கண்டறிந்து, பெற்றோர்கள், மனநல மருத்துவர்கள் அல்லது குழந்தை மருத்துவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதே நல்லது என்கிறார் மனநல மருத்துவர், ஜனனி எஸ். பிரசன்னா. உங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா? #IQ
தாம்பத்திய உறவின்போது பெண்கள் ஏன் பேசணும்னா? | காமத்துக்கு மரியாதை - 264
கணவனும் மனைவியும் உறவுகொள்கையில் பேச வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். பேசுவதால் என்ன பலன் என்றோம். தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா... குழப்பமான மனநிலையில இருக்கிற பெண்களுக்கு... ''பல நேரங்களில் உறவின்போது, பெண்கள் தங்கள் கணவரிடம் பேசுவதே இல்லை. 'என்னைத் திருப்திப்படுத்த வேண்டியது கணவரோட வேலை. ஆனா, என்னை அங்க, இங்கன்னு தொடக்கூடாது. செக்ஸ் பண்றப்போ பேசுறதுக்கும் எனக்கு பிடிக்காது. கூச்சமா இருக்கும்' என்பார்கள். இத்தனைக் குழப்பமான மனநிலையில இருக்கிற பெண்களுக்கு உச்சக்கட்டம் கிடைக்காவிட்டால் கோபம் வரும். ஆனால், அந்தக் கோபத்தால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பதே உண்மை. தீர்வு பேசுவதில்தான் இருக்கிறது. 'என் மனைவிக்கு பெண்ணுறுப்பைத் தொட்டா பிடிக்கல. ஆனா, உச்சக்கட்டமே வரலைன்னு சொல்றாங்க. நான் வேற என்னதான் பண்றது டாக்டர்'னு கேட்பவர்களையும் பார்த்திருக்கிறேன். தாம்பத்திய உறவு அப்போ பெண்கள் ஏன் பேசணும்னா... விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12 எல்லா ஆண்களாலும் இது முடியாது! ஓர் ஆண், தன் மனைவியை உச்சக்கட்டம் அடைய வைக்க வேண்டுமென்றால், 14 நிமிடங்கள் விடாமல் தூண்ட வேண்டும். இது எங்கோ ஒரு கணவனுக்குத்தான் சாத்தியம். எல்லா ஆண்களாலும் இது முடியாது. அதற்குள் விந்து வந்துவிடும். அதனால், தனக்கு என்ன வேண்டும், எப்படி செய்தால் பிடிக்கிறது, எதை ரொம்ப விரும்புகிறேன் என்பதை ஒரு பெண் சொன்னால் மட்டுமே கணவனுக்குத் தெரியும். 'செக்ஸ் வெச்சுக்கிறப்போ பேச சங்கடமா இருக்கு' என்று நினைக்கிற பெண்கள், அதற்கு முன்னரே 'குளிச்சிட்டு வாங்க; பல் தேய்ச்சிட்டு வாங்க; நான் இந்த டிரெஸ் போட்டுக்கவா' என்பதுபோல பேசலாம். இப்படிப் பேச, பேச ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவில் இது பிடித்திருக்கிறது, இது பிடிக்கவில்லை என்பதுபோல பேச ஆரம்பிக்கலாம். அது படுக்கையறை, ஓட்டப்பந்தய மைதானம் கிடையாது; அதனால் ஆண்களே..! | காமத்துக்கு மரியாதை - 244 அது ப்யூர்லி பர்சனல்! இப்போது நான் சொல்லியிருப்பதெல்லாம் எல்லோருக்கும் பொதுவானது. தாம்பத்திய உறவு தரும் உணர்வுகள், அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அது ப்யூர்லி பர்சனல். மருத்துவர்கள் நாங்கள் பொதுவாகச் சொல்கிற விஷயங்களும் சில உதவும் என்றாலும், உங்கள் கணவருக்கும் உங்களுக்குமான தனிப்பட்ட பேச்சுக்கள் என்று இருக்கும். அவற்றை உறவின்போது பேசுங்கள்...'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்பது உண்மையா?
Doctor Vikatan: பொதுவாகவே ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்றும் பருமனானவர்களுக்கு அது அதிகமிருக்கும் என்றும் கேள்விப்படுகிறோம். ஆனால், அது தவறான கருத்து என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். உண்மையா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஒல்லியான நபர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது, பருமனானவர்களுக்கு தான் அது அதிகமிருக்கும் என்ற அறியாமை படித்தவர்களுக்கே கூட இருப்பதைப் பார்க்கிறோம். ஒருவரது உடல் அமைப்புக்கும் அவரது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் சம்பந்தமே இல்லை. கொழுப்பில் பலவிதங்கள் உள்ளன. நம் சருமத்துக்குக் கீழே, அதாவது கழுத்து, இடுப்பு, மார்பு என உடல் முழுவதும் சருமத்துக்குக் கீழே உள்ள கொழுப்புக்கு 'சப்கியூட்டேனியஸ் ஃபேட்' ( subcutaneous fat ) என்று பெயர். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதுதான் ஒருவருக்கு உடல் பருமன் ஏற்படக் காரணமாகிறது. இந்தக் கொழுப்புத் திசுக்களுக்கும், கொலஸ்ட்ரால் எனப்படுகிற கொழுப்புச்சத்துக்கும் சம்பந்தமே கிடையாது. கொலஸ்ட்ரால் என்பது நம் கல்லீரலில் இயற்கையாக உருவாகக்கூடியது. இது ஒருவருக்கு 100 கிராம் ரத்தத்தில் 200 முதல் 250 மில்லிகிராம் அளவுதான் இருக்க வேண்டும். இந்தக் கொழுப்புச்சத்தை உருவாக்குவதே கல்லீரல்தான். இது நம் உடலில் ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. நம் மூளையும் நரம்புகளும் சரியாக இயங்க உதவுகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, பல்வேறு வகையான பிரச்னைகளைக் கொடுக்கிறது. கொலஸ்ட்ரால் டேட்டா எனவே, பருமனாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும் என்ற எண்ணமே தவறு. ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது பரம்பரைத் தன்மை. ஒருவரின் மரபணுக்கள், கல்லீரலின் செயல்பாடு, அதன் உற்பத்தித் திறன் போன்றவற்றைப் பொறுத்தது. கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு 80 சதவிகிதம் இதுதான் காரணம். மீதி 20 சதவிகிதம் என்பது ஒருவரது உணவுப்பழக்கத்தினால் வருவது. பொதுவாக சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் கிடையாது. அசைவ உணவுகளில்தான் அது அதிகம். அடிக்கடி அசைவ உணவுகள் சாப்பிடும்போது அளவுக்கதிகமாக கொலஸ்ட்ரால் சேர்கிறது. எனவே, ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு எப்படி இருக்கிறது என்பதை தோற்றத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்கான பிரத்யேகப் பரிசோதனைகளின் மூலம்தான் கண்டறிய முடியும். குடும்பப் பின்னணியில் கொலஸ்ட்ரால், இதயநோய், பக்கவாத பாதிப்பு ரிஸ்க் உள்ளவர்களும், அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களும் மருத்துவ ஆலோசனையோடு கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து பார்த்து அதன் அளவைத் தெரிந்துகொள்ளலாம். அதிகமிருப்பின் மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?
சைனஸ் எப்போது ஆஸ்துமாவாக மாறலாம்? நிபுணர் விளக்கம்!
நவம்பர் மாதத்தில் இருந்தே குளிர்காலம் ஆரம்பித்துவிடும். இந்த காலகட்டத்தில்தான் சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு அது அதிகரிக்கும். இதற்கு லைஃப் ஸ்டைல் தீர்வுகள் என்னென்ன என்று சொல்கிறார் செங்கல்பட்டைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ந. கிருபானந்த். சைனஸ், தப்பிக்க என்ன வழி? ''மூளையின் எடையை பேலன்ஸ் செய்ய, தகவமைப்பாக முகத்தில் காற்று அறைகள் இருக்கின்றன. இவை, சைனஸ் அறைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சைனஸ் காற்றறைகள் ஒவ்வாமையினால் தொற்றுக்கு உள்ளாகும்போது அழற்சிஅடைவதுதான் 'சைனஸைடிஸ்’ நோயாக அறியப்படுகிறது. சளியாக மாறத் துவங்கும்! எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தனிப்பட்ட மனித உடல் இயல்பினாலோ உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒரு வகை நீரை சுரக்க ஆரம்பிக்கின்றன. எதிர்ப்புச் சக்தி குறைவால் நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். உப உபத்திரவமாக தும்மல், தலைவலி, தலைபாரம் போன்றவையும் தோன்றும். இந்த நிலை வரை எழும் தொந்தரவுகள் சைனஸைடிஸ் வரையறைக்குட்பட்டவை. இதே தொந்தரவுகள் தொடர்ந்து நீடிக்கும்போது, அது ஆஸ்துமாவாக உருவாகலாம். சைனஸ், தப்பிக்க என்ன வழி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடலின் ஒவ்வாமைக்கு தனிப்பட்ட மற்றும் பொதுவான காரணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஒருவருக்குக் குறிப்பிட்ட பதார்த்தம் ஒவ்வாமையைத் தரலாம். மேற்படி உணவைத் தவிர்ப்பதன் மூலம் அவர் நிவாரணம் பெற முடியும். ஆனால், மழை, பனி போன்ற சீதோஷ்ண மாறுதல்கள் ஒருவரின் ஒவ்வாமை இயல்பை அதிகரிக்கும்போது சமாளிப்பது சற்று சிரமம்தான். உதாரணமாக, காற்றில் பரவும் மாசுகளை மழையும் பனியும் ஈர்த்து, நம் சுவாசப்பரப்பிலேயே நிலைநிறுத்துகின்றன. கூடவே, இந்தக் காலங்களில் பூச்செடி, மரங்கள் என்று அதிகரிக்கும் மகரந்தச் சேர்க்கையும் சைனஸைத் தூண்டும். இந்தப் பொதுக் காரணங்களை தவிர்க்க முடியாது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறலாம். சைனஸ்... ஆஸ்துமா... சரும வறட்சி... மூட்டுவலி... பனிக்கால நோய்கள்... தீர்வுகள்! லைஃப் ஸ்டைல் ஒழுங்குகளே நல்ல ரிசல்ட் தரும்! சைனஸைடிஸை எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சைகளை விட, லைஃப் ஸ்டைல் ஒழுங்குகளே நல்ல ரிசல்ட் தரும். தூய பருத்தி ஆடைகள், கம்பளி ஆடையெனில் அவை தூசு இல்லாதிருப்பது, பூக்கள், தூசுக்கள் சூழலைத் தவிர்ப்பது, மாஸ்க் அல்லது கர்ச்சீஃப் உபயோகிப்பது என ஆயத்தமாக இருக்கலாம். பனி, மழை காலங்களில் பாக்டீரியா தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால் உடல் எதிர்ப்பு சக்தி சீர்குலையாதிருக்க ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். Health: சைனஸ் முதல் மூட்டு வீக்கம் வரை... குளிர்கால ஹெல்த் பிரச்னைகள்; வராமல் தடுக்க டிப்ஸ்! இறுகியும், மஞ்சள் நிறத்திலும் சளி இருக்குமானால் சைனஸ் அறைகளின் ஆரம்பகால பாதிப்புக்கு சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமானது. இறுகியும், மஞ்சள் நிறத்திலும் சளி இருக்குமானால் மருத்துவ ஆலோசனையுடன் கூடுதல் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது மாத்திரை வடிவில் கிடைக்கும் மருந்துகளை கொண்டு 'வேது’ (நீராவி) பிடிப்பது பக்க விளைவுகளற்ற சிறப்பான வழி. நாள்பட்ட சைனஸ் பாதிப்பு, காற்றறை சுவரை தடிப்பாக்கி, அதன் வாயை அடைக்க முற்படும். இதற்கு எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம். போதிய கவனிப்பு, சிகிச்சைகளின்றி சைனஸ் பிரச்னை ஆஸ்துமாவாக உருவெடுக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் இருக்கட்டும்'' என்கிறார் டாக்டர் ந. கிருபானந்த்.
மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; கல்லூரிக்கு விடுமுறை, சமையல் அறைக்கு சீல்- நாமக்கல்லில் நடந்தது என்ன?
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில், எக்ஸெல் எனும் தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தக் கல்வி வளாகத்தில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான கல்லூரிகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கல்லூரியில் இயங்கிவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதைத் தொடர்ந்து, 28.10.2025 அன்றும் ஒரு சில மாணவ, மாணவியர்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மாணவ, மாணவிகள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தங்கவிக்னேஷ், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறையினர், கல்லூரி விடுதிக்குள் அமைந்துள்ள கல்லூரி உணவக இருப்பு அறை, உணவு பரிமாறும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், தகுதியற்ற முறையில் இயங்கி வந்த சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது. , மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பெயரில், 29.10.2025ம் தேதி முதல் 02.11.2025ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விடுதி உணவை சாப்பிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் வரை உயிரிழந்து உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் செய்தி பரவ... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்ணீர் தொட்டிகள் ஆய்வு இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் சிலரிடம் பேசினோம். ''கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்றதாக இருக்கும். சமீபத்தில் உணவில் கூல் லிப் (cool lip) இருந்தது. இது தொடர்பாக புகார் அளித்தபோது, 'மார்க்கில் கை வைத்து விடுவோம்...' என்று நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். கடந்த திங்கள்கிழமை கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டு ஏராளமான மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் நிறைய விஷயங்களை மறைக்கிறது. கல்லூரி தரப்பில் இருந்து மாணவர்களுக்கு எந்தவித விளக்கத்தையும் கொடுக்காமல், விடுதியை காலி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வரும் திங்கட்கிழமை (03.11.2025) அன்று மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மாணவர்கள் உயிரிழந்ததாக பரவிவரும் செய்தி தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ''27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய தேதிகளில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவிகள் சுமார் 128 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு சில மாணவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கல்லூரி விடுதி சமையலறையை ஆய்வு செய்தனர். அவர்கள் சமையல் அறையில் சில மாற்றங்களை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிகிச்சை பெற்று வந்த மாணவர்கள் அனைவரும் உடல்நிலை சரியாகி வீடு திரும்பி உள்ளனர். மாணவிகள் இறந்ததாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. கல்லூரி வளாகத்திற்குள் எந்த விதமான அசாதாரண சூழ்நிலையும் ஏற்படவில்லை'' என்று தெரிவித்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதனிடம் பேசியபோது, ''திங்கட்கிழமை (27.10.2025) அன்று கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக விடுதி மாணவர்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, சமையல் அறை, உணவக இருப்பு அறை, உணவு பரிமாறும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற முறையில் உணவு கூடம் இயங்கியது தெரியவந்தது. உடனடியாக மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு கல்லூரியில் ஆய்வு நடத்தினோம். ஆய்வின் அடிப்படையில் கல்லூரியில் உணவுக்கூடம் சமைப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருந்ததால் சீல் வைக்கப்பட்டது. பின்னர், தண்ணீர் தொட்டி முறையாக பராமரித்தல், சமையல் அறை புதுப்பித்தல், உணவுப் பொருட்களை மாற்றுவது உள்ளிட்ட 21 விதிமுறைகளை சரி செய்தால் மட்டுமே சமையல் அறை திறக்க உத்தரவிட்டுள்ளோம். கல்லூரிக்கு தண்ணீர் அருகே உள்ள கிணற்றிலிருந்து லாரி மூலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தக் கிணற்றையும் ஆய்வு செய்து சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறோம். மாணவர்களை பொறுத்தவரை 220 பேர் மருத்துவமனையில் அனுமதித்து உடல்நிலை சரியான உடன் வீடு திரும்பி உள்ளனர். பெரிய அளவில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்றார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கல்லூரி நிர்வாகத்தின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறுகையில், ''கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எக்ஸெல் கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு சான்றிதழ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதியில் 19 குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை நிவர்த்தி செய்ய முன்னேற்ற அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் கீழ், கல்லூரி விடுதி நிர்வாகத்திற்கு 48 மணி நேரத்திற்குள் விடுதி, சமையலறை மற்றும் அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் கீழ் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தரவு விரைவில் வழங்கப்படும்'' என்று கூறினார்.
Health: கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை; செலவில்லா அழகுக்குறிப்புகள்!
கேரட்... கரோட்டின் மற்றும் விட்டமின் `ஏ' சத்து நிறைந்தது. விட்டமின் `ஏ', கண்களுக்கு மிகவும் நல்லது என்பதுடன், உடல் திசுக்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. கரோட்டின் சத்து தொடர்ந்து கிடைக்கப்பெற்றால், சருமம் பளிச்சென்று ஆகும். கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை கண்களுக்கு... ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் `வழவழ' க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து துணியை எடுத்துவிட்டு, க்ரீமை கழுவாமல் அப்படியே விட்டுவிடவும். இது கண்களை `பளிச்' என்று ஆக்கும், கூரிய பார்வை கிடைக்கச் செய்யும். இதை முகம், கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் ஆகவும் பயன்படுத்தலாம். முகம் மங்காமல் இருக்க... வெயிலில் வேலை செய்வோர் மற்றும் லேப்டாப், கணினியில் வேலை செய்வோருக்கு அந்த வெப்பம் காரணமாக முகம் சிறிது மங்கிக் காணப்படும். அரைத்த கேரட் ஒன்றுடன் ஒரு டீஸ்பூன் பால், சிறிது கடலை மாவு சேர்த்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர, மங்கிய முகம் தன் இயல்பை மீட்கும். கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை கருமையைத் தவிர்க்க.... கேரட்டை பாலில் வேக வைத்து அரைக்க, க்ரீம் போல கிடைக்கும். இதை தினமும் வெளியே செல்லும்போது மாய்ஸ்ச்சரைசராக முகம், காது, கழுத்துப் பகுதியில் பயன்படுத்தலாம். இதனால் வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும். காது, கழுத்து பகுதிகளில் உள்ள கருமை நீங்குவதோடு... புருவம் அரிப்பதும், புருவத்தில் முடி உதிர்வதும் தடுக்கப்படும். கரும்புள்ளிகள் நீங்க... அரை கப் கேரட் சாற்றுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் `பேக்' போட்டு அரை மணி நேரம் கழித்து உரித்தெடுக்கவும். இதை தொடர்ந்து செய்து வர, கரும்புள்ளிகளுக்கு `பை பை' சொல்லலாம். கேரட் க்ரீம் முதல் கேரட் சாறு குளியல் வரை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் நீங்க... பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பின் வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வந்துவிடும். குழந்தைப் பராமரிப்பு பொறுப்புகளுக்கு இடையே அதை நீக்கும் வழிமுறைகளைச் செய்யத் தவறிவிட்டால், அது நிரந்தரமாகத் தங்கிவிடும். அதைத் தவிர்க்க, 5 துண்டுகள் கேரட்டுடன் 5 பாதாம் சேர்த்து அரைத்து, தழும்புகளில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கவும். இதை தினசரி செய்து வந்தால் பலன் கிடைக்கும். Beauty: ``5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அழகுக்குறிப்பு!'' - ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்! வெளிறிப்போதலை தடுக்க... டைஃபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, கன்னங்கள் வெளிறிப்போயிருக்கும். அதைச் சரிசெய்ய, ஒரு கேரட், 2 பேரீச்சம்பழத்துடன் சிறிது பால் சேர்த்து அரைக்கவும். இதை கன்னங்களுக்கு பேக் போட்டு கழுவி வர, இழந்த பொலிவு மீண்டும் கிடைக்கும். Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்! மாசு, தூசு, பாதிப்பு நீங்க... கேரட் சாறு - அரை கப், கஸ்தூரி மஞ்சள் - ஒரு டீஸ்பூன், பார்லி பொடி - 2 டீஸ்பூன்... இவை அனைத்தையும் கலந்து வாரம் ஒருமுறை சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தி குளித்துவர, மாசு, தூசால் சருமத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.’’
நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனுமதி! - விவரம் என்ன?
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்கபாளையம் கிராமத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 27.10.2025 அன்று கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவியர்களில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கல்லூரியில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதைத் தொடர்ந்து, 28.10.2025 அன்றும் ஒரு சில மாணவ, மாணவியர்களுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மாணவ மாணவிகள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாள்களில் 128 மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் விடுதி உணவகத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இல்லாததால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. College (Representational Image) இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தங்கவிக்னேஷ், தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர், கல்லூரி விடுதிக்குள் அமைந்துள்ள கல்லூரி உணவக இருப்பு அறை, உணவு பரிமாரும் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை ஆய்விற்கு எடுத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவின் பெயரில், 29.10.2025ம் தேதி முதல் 02.11.2025ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து மாணவிகள் உயிரிழந்து உள்ளதாகவும் பரவி வரும் தகவல் வதந்தியானது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுக்கலாமா?
Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. தலைக்குக் குளிப்பாட்டும் நாள்களில், வேப்பிலை, வெற்றிலை உள்ளிட்ட ஏதேதோ பொருள்களை அரைத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் என் மாமியார். பல வீடுகளில் இந்த வைத்தியம் பின்பற்றப்படுகிறது. இது உண்மையிலேயே அவசியம்தானா, பிறந்த குழந்தைக்கு மூலிகை மருந்துகள் கொடுப்பது பாதுகாப்பானதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த மருந்துக்கு 'வேப்பங்காரம்' என்று பெயர். 6 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு, தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் கொடுக்கக்கூடாது என்பதுதான் உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. அதன் பிறகு இந்த வேப்பங்காரம் கொடுக்கலாம். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேம்பு நம் மருத்துவத்தில் முக்கியப் பொருளாக இருந்திருக்கிறது. அது தொல்காப்பியத்தில்கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவ்வளவு பழைமையான, பாதுகாப்பான மருந்து வேம்பு. வேப்பங்கொழுந்து 5 எண்ணிக்கை, ஒரு மிளகு, 10 சீரகம் ஆகியவற்றை நன்கு நுணுக்கி சுத்தமான, வெள்ளைத் துணியில் கட்டி முடிந்துகொள்ளவும். அதை 15 மில்லி தாய்ப்பாலில் ஊறவைக்கவும். குழந்தையைக் குளிப்பாட்டியதும், காலில் இருந்து தூக்குவதற்கு முன்பே, ஊறிக்கொண்டிருக்கும் மருந்தைக் கசக்கி, வடிகட்டி எடுத்து, சங்கில் குழந்தைக்குக் கொடுத்து விடுவார்கள். Doctor Vikatan: முடியே இல்லாமல் பிறந்த குழந்தை... வளர்ந்ததும் இப்படியேதான் இருக்குமா? குழந்தைக்கு எண்ணெய் தடவும்போதே இதை ரெடி செய்துவிட வேண்டும். பிறகு குழந்தையைக் குளிப்பாட்டி முடிக்கும்வரை இந்த மருந்து, தாய்ப்பாலில் ஊறிக்கொண்டிருக்கும். குழந்தையைக் குளிப்பாட்டியதும், காலில் இருந்து தூக்குவதற்கு முன்பே, ஊறிக்கொண்டிருக்கும் மருந்தைக் கசக்கி, வடிகட்டி எடுத்து, சங்கில் குழந்தைக்குக் கொடுத்து விடுவார்கள். வேப்பங்காரம் கொடுத்த சில நொடிகளில், குழந்தைக்கு சளி கட்டியிருந்தால், அதைக் கக்கி விடும். பிறகு அதைச் சுத்தம் செய்து, குழந்தையைத் துடைத்து எடுப்பார்கள். இது காலங்காலமாக கிராமங்களில் பின்பற்றப்படுகிற விஷயம்தான். பயப்படத் தேவையில்லை. வேப்பங்கொழுந்து உள்ளிட்ட மருந்துப் பொருள்களை நுணுக்குவது, தாய்ப்பாலை எடுப்பது, ஊறவைப்பது என எல்லாவற்றையும் மிகமிகச் சுத்தமாகக் கையாள வேண்டியது அவசியம். வேப்பிலை பிறந்து 6 மாதங்கள் முடிந்துவிட்ட குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு உணவுகளையும் அறிமுகப்படுத்துவோம். அந்தக் குழந்தையின் குடலானது வாரந்தோறும் வளர்ச்சி அடையும். அந்த மாற்றங்களால் குழந்தையின் வயிற்றில் வாய்வு சேரும். திடீர் திடீரென குழந்தை வலியால் அழும். அந்தப் பிரச்னைகள் வராமல் தடுக்கவும் வேப்பங்காரம் உதவும். நெஞ்சில் சளி சேராமல் தடுக்கும். அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். 12 வயது வரை இந்த மருந்தைக் கொடுக்கலாம். வயதாக, ஆக, வேப்பங்கொழுந்து, சீரகத்தின் எண்ணிக்கையை ஐந்து, ஐந்தாகவும், மிளகின் எண்ணிக்கையை ஒன்றிரண்டாகவும் அதிகரித்துக்கொள்ளலாம். எனவே, உங்கள் மாமியார் கொடுக்கும் இந்த வேப்பங்காரம், குழந்தைக்கு நிச்சயம் நல்லதுதான் செய்யும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
வயிற்றுப்போக்கு முதல் மலேரியா வரை; மழைக்கால நோய்களைச் சமாளிப்பது எப்படி?
எத்தனைக் கொடுமையான வெயிலையும் அனுசரிக்கப் பழகிவிடும் நாம், சட்டெனப் பெய்யும் மழையில் தத்தளித்துப் போகிறோம். மழைக்காலத்தில் வீட்டில் நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது சில சமயம் நோய்க் கிருமிகளையும் உள்ளே அழைத்து வந்துவிடுகிறோம். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள், இதில் இருந்து தப்பிக்கும் வழிகள் குறித்து சென்னையைச் சேர்ந்த மூத்த பொதுநல மருத்துவர் செல்வராஜ் விளக்கமாகப் பேசினார். மழைக்கால நோய்களும் தீர்வுகளும் ''மழைக்காலம் என்றாலே தேங்கியத் தண்ணீரில் கொசு வளர்வது, குடிநீரில் கழிவு நீர்க் கலப்பதால் வயிற்றுப்போக்குத் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இவற்றை தவிர்க்க முடியும்'' என முன்னோட்டம் கொடுத்தவர் மழைக்கால வியாதிகளையும் அவற்றைத் தடுக்கும் வழிகளையும் விளக்கினார். காலரா மழைக்காலத்தில் குடிநீரில் கழிவு நீர்க் கலப்பது காலராவுக்கு முக்கிய காரணம். காலரா நோய்த் தொற்றை 'விப்ரியோ காலரே’ என்ற பாக்டீரியா ஏற்படுத்துகிறது. இது ஒருவரை நேரடியாகத் தாக்குவது இல்லை. வயிற்றுக்குள் சென்றதும் ஒருவகையான நஞ்சை இந்த கிருமி சுரக்கிறது. குடலானது அதிக அளவில் நீரை உருவாக்கி அந்த நஞ்சை வெளியேற்ற முயற்சிக்கிறது. இதனால், வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத் தும். உடலில் இருந்து அதிக நீர் வெளியேறும். அத்துடன் உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டா சியம் உள்ளிட்ட உப்புகளும் வெளியேறிவிடுவதால், உடல் பலவீனம் அடையும். சில சமயம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். தண்ணீர் மாசு அடையும்போது காலரா பரவும். வயிற்று வலி காலரா தொற்றுள்ள கழிவுகளின் மீது ஈ உட்காரும்போது அதன் கால்களில் காலரா கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். அந்த ஈ நாம் சாப்பிடும் உணவில் உட்காரும் போது கிருமிகள் அங்கும் பரவும். காலரா அறிகுறி தென்பட்டால் உடனடியாக, கொதித்து, ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் எட்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் குடிக்கக் கொடுக்கவேண்டும். காலரா வராமல் தடுக்க எப்படி மருந்துகள் இல்லையோ அதே போல அதைக் குணமாக்கவும் மருந்துகள் இல்லை. எலிக்காய்ச்சல் மழைக்காலத்தில் வேகமாகப் பரவும் நோய் இது. லெப்டோஸ்பைரா என்ற அதிநுண்கிருமி எலியின் உடலில் வளரும். எலியின் சிறுநீர் வழியாக இந்தக் கிருமி வெளியேறும். அந்தச் சிறுநீரை மிதிப்பவர்களுக்கு காலில் காயம் இருந்தால் இந்தக்கிருமி தொற்றிக்கொள்ளும். வறண்ட இருமல், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, பேதி போன்றவை இதன் அறிகுறிகள். எலிக்காய்ச்சல்தானா என்பதை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம். தரமான ஆய்வுக்கூடத்தில் மட்டுமே இதற்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொண்டாலும் இந்த நோய் கட்டுப்படும். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பென்சிலின் மருந்து அளிப்பார்கள். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை. மழைக்கால நோய்களும் தீர்வுகளும் மலேரியா பெண் அனாஃபிலிஸ் கொசுக்கள் மட்டுமே மலேரியாவைப் பரப்பக் கூடியவை. 'பிளாஸ்மோடியம்’ எனப்படும் ஒட்டுண்ணிக் கிருமிகள் அனாஃபிலிஸ் கொசுக்களிடம் காணப்படும். இந்தக் கொசுக்கள் பகலில் நிழல் உள்ள இடங்களில் மறைந்து இருக்கும். இரவில்தான் மனிதர்களைக் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியாக் கிருமிகள் மனிதனின் உடலில் புகுந்துவிடும். பின்பு, அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு செல்லும். இந்தக் கிருமிகள் மூன்று நாள் முதல் ஒரு வாரம் வரை கல்லீரலில் தங்கிப் பல்கிப் பெருகும். பின்னர் அங்கிருந்து ரத்தத்திற்குத் திரும்பி வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும். மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசாகக் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு ஆகியவை இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்க்காய்ச்சல் ஏற்படும். உடல் முழுவதும் நடுங்கும். இது சுமார் அரைமணி நேரம் நீடிக்கும். மழைக்காலத்தில் குழந்தைகளை வதைக்கும் சளி... தீர்வாகும் அந்த மாமருந்து! மலேரியாவின் அறிகுறிகள் இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாய்க் கொதிக்கும். இது சுமார் ஆறு மணிநேரம் நீடிக்கும். மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ் போலக் குளிர்ந்துவிடும். இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு இதே காய்ச்சல் மறுநாளோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறையோ மீண்டும் வரும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை உள்ளது. ஆனால், தடுப்பூசி மருந்துகள் இல்லை. தோல் நோய்கள் மழைக்காலத்தில் சொறி-சிரங்கு அதிக அளவில் பரவும். இதுதவிர வீதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து செல்பவர்களுக்கு காலில் சேற்றுப்புண் ஏற்படும். இதைத் தவிர்க்க தண்ணீர் நுழையாத காலணிகள் பயன்படுத்தலாம். வீட்டுக்கு வந்ததும் வெந்நீரில், கிருமிநாசினி போட்டு நன்கு சுத்தம் செய்வதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். Safety Tips: மின்னல் அடிக்கையில் வீட்டிலுள்ள தண்ணீர்க் குழாய்களைப் பயன்படுத்தக் கூடாதா?
சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் இணைந்து, திருச்சியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை பெருக்கும் நோக்கில் 'ரன் ஃபார் ஹோப்' மாரத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். 2 கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ ஓட்டங்களில் 1000 அதிகமான பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பி.ஹெச்.இ.எல் நிர்வாக இயக்குநர் திரு. பிரபாகர் தலைமை விருந்தினராக துவக்கி வைத்தார். மாரத்தான் பி.ஹெச்.இ.எல் பொது மேலாளர் திரு. ரவி மற்றும் சில்வர்லைன் ஹாஸ்பிட்டல்ஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி.செந்தில்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். மொத்தமாக ₹40,000 பரிசுத்தொகையுடன், பி.ஹெச்.இ.எல் சமுதாயத்திலிருந்து 1000 அதிகமான பேர் கலந்து கொண்ட மாரத்தான் சிறப்பாக நடைபெற்றது.
Doctor Vikatan: உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்குமா?
Doctor Vikatan: காரணமே இல்லாமல், சிலருக்கு பிபி அதிகரிப்பது ஏன்? உணவில் உப்பைக் குறைத்தும் பிபி அதிகரிப்பது ஏன், பிபி அதிகமாக உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகம் என்பது உண்மையா, பிபி மானிட்டர் மெஷின் வைத்து தினமும் டெஸ்ட் செய்ய வேண்டுமா, மாத்திரைகள் எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல். இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension) என்று சொல்லக்கூடிய, ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடிய பாதிப்பு இருக்கிறது. குடும்ப வரலாறு, வயதாவது, உடல் பருமன், மன அழுத்தம், புகைப்பழக்கம், தூக்கமின்மை போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். உணவில் உப்பைக் குறைத்தாலும், மன அழுத்தம் இருந்தாலோ, புகைப்பழக்கம் தொடர்ந்தாலோ, BP நிச்சயம் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் ரிஸ்க்கும் அதிகம். தவிர, அவர்களுக்கு ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமானது பல காலம் தொடரும் பட்சத்தில், சிறுநீரகங்களும், கண்களும்கூட பாதிக்கப்படலாம். எனவே, இதயம், மூளை, கண்கள், சிறுநீரகங்கள் என எல்லாமே ஆரோக்கியமாக இருக்க ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம். பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம். Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா? ரத்த அழுத்தமானது 120/80-க்குள் இருக்க வேண்டும். 121 முதல் 135 வரை (121/89 - 135/89) அதிகரிக்கும்போது உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி, ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம். 140/90- என்பதைத் தொட்டுவிட்டால் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றைப் பின்பற்றினால், ஒரு கட்டத்தில் மாத்திரைகளை நிறுத்தவும் வாய்ப்பு உள்ளது. BP அளவை மருத்துவரிடம் செக் செய்து கொள்வதே சிறந்தது. அது தவிர்த்து பிபி பரிசோதிக்கும் மானிட்டரை வீட்டில் வைத்தும் அவ்வப்போது டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஏனென்றால், மருத்துவமனைக்கு வருவதால் பிபி அதிகரிக்கும் மக்கள் பலர். அதற்கு 'வொயிட் கோட் ஹைப்பர்டென்ஷன்' (White coat hypertension) என்றே பெயர். அதேபோல, ' ஆம்புலேட்டரி பிபி மானிட்டரிங்' (Ambulatory blood pressure monitoring) என்றொரு கருவியும் உண்டு. வருடம் ஒருமுறை இதிலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். இரவில் பொதுவாக பிபி அளவு குறைய வேண்டும். அப்படிக் குறையாவிட்டால் அதை 'நாக்டர்னல் ஹைப்பர் டென்ஷன்' (Nocturnal hypertension) என்று சொல்வோம். இதை ஹோம் பிபி மானிட்டர் வைத்துக் கண்டுபிடிக்க முடியாது. BP checking உணவில் அதிக உப்பும் கொழுப்பும் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக காபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 2 கப்புக்கு மேல் போக வேண்டாம். நீரிழிவு கட்டுக்குள் இருக்க வேண்டும். 80 முதல் 90 சதவிகித மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் அவசியம். பலருக்கும் அறிகுறிகள் இருப்பதில்லை என்பதால், பிரச்னை இல்லை என மருந்துகளை நிறுத்தக்கூடாது. 10 முதல் 15 சதவிகித மக்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வே இருப்பதில்லை. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்படைவதையும் உயிரிழப்பையும் பெருமளவில் தடுக்க முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
டாக்டர் திலீப்பும் டாக்டர் சிவரஞ்சனியும்; இது ORS பிறந்த கதையும் அது மீண்ட கதையும்!
உயிர் காக்கும் மருத்துவ கண்டுபிடிப்பு ஒன்று, வணிகரீதியான பொருளாக மாற்றப்பட்டால், அதனால் மக்களுக்கு என்னவெல்லாம் கெடுதல்கள் நடக்கும் தெரியுமா? அதற்கு முன்னால் அந்த உயிர் காக்கும் மருந்தின் பெயர் என்ன; அது பிறந்த கதை என்ன என நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா..? அந்தக் கதையை நமக்கு சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் பாசுமணி. ஓ.ஆர்.எஸ் கரைசல் ஒரு கொடிய வியாதி இது! ''இன்றைக்கும் நம்முடைய கிராமங்களில் அடுத்தவர் மீது கோபம் வந்து சாபம் கொடுக்கையில் 'வாந்தி, பேதி வந்து வாரிக்கிட்டுப் போக' என்று காலரா நோயை குறிப்பிட்டு சாபம் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு காலரா தொற்றுக்கு லட்சக்கணக்கானவர்களை நாம் வாரிக்கொடுத்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இன்றைக்கும் ஒரு வருடத்தில் உலகம் முழுக்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட நாலரை லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து வருகிறார்கள். அந்தளவுக்கு ஒரு கொடிய வியாதி இது. இதற்கான மருந்தை நரம்பு வழியாக செலுத்திக் காப்பாற்றி வந்தார்கள் மருத்துவர்கள். அப்படியென்றால், ORS (வாய்வழி நீரேற்றுக் கரைசல்) எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்கிறீர்களா? டாக்டர் திலீப் மகாலனாபிஸ் 1971-ல் பங்களாதேஷ் விடுதலைப் போர் நடந்தது. அகதிகள் முகாமில் இருந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொல்கத்தாவில் மருத்துவம் படித்து, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற டாக்டர் திலீப் மகாலனாபிஸ் (Dilip Mahalanabis) என்பவர் வந்தார். இவர் ஒரு குழந்தை நல மருத்துவர். அவர் அந்த அகதிகள் முகாமிற்கு சென்றபோது நாள்தோறும் பலரும் காலராவினால் இறந்துகொண்டிருந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பில் ஏற்ற வேண்டிய டிரிப்ஸ் பாட்டில்கள் குறைவாக இருந்தன. தவிர,, பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்த அவருக்கு உதவியாளர்களாக வெறும் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். டாக்டர் திலீப் ஒரு முடிவெடுத்தார். ஆனால், அவருடைய அந்த முடிவை பலரும் எதிர்த்தனர். இதெல்லாம் 'வேலைக்கு ஆகாது' என்கிற தொனியில் நம்பிக்கையில்லாமல் பேசினர். அவர்களை எல்லாம் மீறி, காலராவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய் வழியாக திரவம் தரும் சிகிச்சையை தொடங்கினார் டாக்டர் திலீப். உதவியாளர்கள் குறைவாக இருப்பதால், நோயாளிகளின் உறவினர்களுக்கு வாய் வழியாக தருகிற திரவத்தை எப்படித் தயாரிப்பது என சொல்லித்தருகிறார். டாக்டர் திலீப் மகாலனாபிஸ் (Dilip Mahalanabis) அது என்ன திரவம் தெரியுமா..? சாதாரண சமையல் உப்பையும் சர்க்கரையும் சேர்த்து அந்தத் திரவத்தை தயாரித்து, காலராவால் இறப்பை நோக்கி சென்றுகொண்டிருப்பவர்களுக்கு அருந்தக் கொடுக்கிறார் டாக்டர் திலீப். என்ன ஆச்சரியம், அந்தத் திரவத்தை பாதிக்கப்பட்டவர்கள் அருந்த ஆரம்பித்தபின், காலராவால் நூற்றுக்கு 30 பேர் இறந்துகொண்டிருந்த முகாமில், நூற்றுக்கு ஒருவர் மட்டுமே இறந்தார். உருவானது ஓ.ஆர்.எஸ் இந்தக் கண்டுபிடிப்பைப் பார்த்து மொத்த உலகமும் ஸ்தம்பித்து நின்றது. இந்தக் கண்டுபிடிப்புக்காக உலக சுகாதார நிறுவனம் டாக்டர் திலீப் மகாலனாபிஸ்க்கு பல அங்கீகாரங்களை வழங்கியது. இதை அடிப்படையாக வைத்து ORS காம்பினேஷன் உருவாக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டில், மருத்துவ உலகில் மிகப்பெரிய கண்டுபிடிப்பைச் செய்து, காலராவிடமிருந்து லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய வணக்கத்திற்குரிய டாக்டர் திலீப் மகாலனாபிஸ் அவர்களுக்கு 2023-ம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷண் என்கிற உயரிய விருதை வழங்கி கௌரவித்தது. ஓ.ஆர்.எஸ் கரைசல் ஏற்றுக்கொண்ட உலக சுகாதார நிறுவனம்..! காலரா வந்தவர்களின் உடலுக்குள் சோடியத்தை செலுத்தி நீரேற்றத்தை தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது சாதாரண விஷயம் அல்ல. வெறும் சோடியத்தை மட்டும் கொடுத்தால் உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. கூடவே சர்க்கரையை கொடுத்தால்தான் உடம்பு அதை எடுத்துக் கொள்ளும். இந்த ஒரு நுட்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி டாக்டர் திலீப் நிரூபித்து விட்டதால், இந்தக் கரைசலை உலகம் முழுக்க உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்கொண்டு சென்றது. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, இந்த உப்புச் சர்க்கரைக் கரைசலை தயங்காமல் கொடுங்கள் என்றது. 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த சிம்பிளான ஓ.ஆர்.எஸ் கரைசல்தான். இந்த ஒரு சிகிச்சை ஏறத்தாழ ஏழு கோடி குழந்தைகளை இதுவரை காப்பாற்றியுள்ளது. ஓ.ஆர்.எஸ் கரைசலின் ஃபார்முலா உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு லிட்டர் நீரில் கரைக்க வேண்டிய ORS பவுடரில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும். 4 கிராம் ORS பாக்கெட் என்றால் 200 மில்லி நீரில் கலக்க வேண்டும். 20 கிராம் பாக்கெட் என்றால் ஒரு லிட்டர் நீரில் கலக்க வேண்டும். இது ரெடிமேடாக மருந்தகங்களில் கிடைக்கிறது. WHO உலக சுகாதார அமைப்பு தரக் கட்டுப்பாட்டு இதில் இருக்கிற உப்பும் சர்க்கரையும் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருப்பதால் இதுவொரு மருந்தாகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி தயாரித்து, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தாக விற்பனை செய்து வருகிறது. இந்த ORS கரைசல் ஃபார்முலா பல தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு அது மருந்து என்கிற வரையறைக்குள் வருவதாலும், அதற்குரிய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படுவதாலும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ORS கரைசலை, பெற்றோர்கள் தாராளமாக அருந்தக் கொடுக்கலாம். இத்தனைக்கும் ஆரம்பப்புள்ளியான டாக்டர் திலீப் மகாலனாபிஸ் 2022-ல், தன்னுடைய 87-வது வயதில் முதுமை காரணமாக மரணமடைந்தார். டாக்டர் திலீபனின் மரணமும் டாக்டர் சிவரஞ்சனியின் போராட்டமும்... ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த எட்டு வருடங்களாகப் போராடி 2022-ல், டாக்டர் திலீபன் இறந்த அதே வருடத்தில் ORS கரைசல் தொடர்பான இன்னொரு வெற்றியை பெற்றிருக்கிறார். அது, பாட்டில்களில் விற்கப்படும் பழச்சாறுகள், காற்று அடைக்கப்பட்ட பானங்கள் உள்பட எந்தவொரு பானத்திற்கும் இனிமேல், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது என்பதுதான். டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் ஏறத்தாழ பத்து மடங்கு அதிகம். சரி, இந்த 'ORS' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பானங்களில் அப்படி என்னதான் பிரச்னை இருக்கிறதென்றால், உலக சுகாதார நிறுவனம் 'ORS' கரைசலில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவாக அறிவுறுத்தியிருப்பது 13.5 கிராம். ஆனால், இந்த பானங்களில் 90-ல் இருந்து 120 கிராம் வரைக்கும் சுவைக்காக சர்க்கரையை சேர்த்திருக்கிறார்கள். ஏறத்தாழ பத்து மடங்கு அதிகம். மிச்சம் மீதி தண்ணீரையும் வெளியேற்றி விடும்! சர்க்கரையும் உப்பும் கலந்த நீரை நம் குடலின் உட்சுவர் உறிஞ்சும்போது, இதுபோன்ற போலியான 'ORS' கரைசல்களில் அதிகப்படியாக இருக்கிற சர்க்கரை என்ன செய்யும் தெரியுமா? உடம்பில் இருக்கிற தண்ணீரை வெளியேற்றி விடும். அதாவது ஒரிஜினல் 'ORS' கரைசல் வயிற்றுப்போக்குக் காரணமாக உடம்பில் இருந்து வெளியேறிய தண்ணீரை உடலில் ஈடு செய்யும். ஆனால், சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட இந்த பானங்கள் உடலில் இருக்கிற மிச்சம் மீதி தண்ணீரையும் வெளியேற்றி, இதை அருந்தும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய உயிராபத்தை ஏற்படுத்தி விடும். Baby (Representational Image) 'ORS'-க்கு மாற்றாக எப்படி மாறின இந்தப் பானங்கள்? இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் (fssai), ORS லேபிள் ஒட்டப்பட்ட இந்த சர்க்கரை பானங்களை குடிக்கும் பானங்கள் என்கிற அடிப்படையில் உரிமம் பெற்று, விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில், இவை மெள்ள மெள்ள ORS கரைசலுக்கு மாற்றாக மாறியிருக்கிறது. இந்த பானங்கள், மருந்தகங்களில் விற்கப்படுகிற ORS கரைசல் பாக்கெட்டைவிட விலை குறைவாக இருப்பதாலும், அவற்றை விற்கும்போது லாபம் அதிகமாக கிடைப்பதாலும், ORS லேபிள் ஒட்டிய பானங்களை விற்பதற்கு வியாபாரிகள் முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். இந்த பிரச்னை இந்தியா முழுக்க இருக்கிறது. மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதை கவனித்து, சட்டப் போராட்டம் நடத்திய டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் அவர்களும் சரி, மற்ற குழந்தைகள் நல மருத்துவர்களும் சரி என்ன சொல்கிறார்கள் என்றால், 'இந்தப் போலி ORS கரைசல் கொடுத்த குழந்தைகளுக்கு பேதி நிற்காமல் இன்னும் அதிகமாகி உயிரிழப்பு ஏற்படலாம். தவிர, சிறு வயதிலேயே நீரிழிவு வந்த குழந்தைகளுக்கு இந்த போலி ORS கரைசலை கொடுக்கும்போது அந்தப் பிரச்னை அதிகமாகி, அதனாலும் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது' என்கிறார்கள். ஏற்கெனவே வயிற்றுப்போக்கால் இறந்துகொண்டிருக்கிற நம் குழந்தைகளுக்கு சரியான தீர்வு கொடுக்காமல் இருப்பதோடு, அந்த குழந்தைகளுக்கு இன்னும் உயிராபத்தை ஏற்படுத்துகிற போலி ORS பானங்களை விற்பனை செய்வது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சர்க்கரை பானங்கள் இனி செய்ய வேண்டும்? டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் தொடர்ந்து போராடியதன் காரணமாக ஒரு தற்காலிக வெற்றி கிடைத்திருக்கிறது. என்றாலும், இந்திய உணவுக் கட்டுப்பாடு நிறுவனமும் சரி, நம்முடைய ஆரோக்கியத்துக்கு பாதுகாவலனாக இருக்கிற சுகாதார அமைச்சகமும் சரி, குழந்தைகளின் உயிர்காக்கும் பிரச்னையாக இதை அணுகி, இனி எக்காலத்திலும் சர்க்கரை பானங்கள் ORS லேபிளுடன் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவிர, தற்போது மார்க்கெட்டில் இருக்கிற பானங்களின் மேல் ஒட்டப்பட்டிருக்கிற ORS லேபிளை உரித்து எடுக்கவும் அறிவுறுத்த வேண்டும். Thyroid: தைராய்டு இருந்தா முட்டைகோஸ் சாப்பிடக்கூடாதா..? பேசுகிறேன்-13 எத்தனை பெரிய கொடுமை? நல்ல உடல் நிலையுடன் இருப்பவர்களே இதுபோன்ற பானங்களை தவிர்க்க வேண்டும் என்றால், ஏற்கெனவே வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு இந்த போலி ORS கரைசலைக் கொடுப்பது எத்தனை பெரிய கொடுமை? அதை வெளியுலகத்துக்கு எடுத்துச்சொன்ன, சர்க்கரை பானங்களின் மேல் ORS லேபிள் ஒட்டக்கூடாது என்று போராடி அதில் வெற்றிபெற்ற டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷுக்கும், அவருடன் இணைந்து போராடிய மருத்துவர்களுக்கும், இந்தியாவில் இருக்கிற அனைத்து மருத்துவர்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 'ORS' லேபிள் ஒட்டுவதற்கு எதிராகப் போராடி வென்ற பெண் டாக்டர்; அதிர்ச்சியான காரணம் இதோ! போலி ORS பானங்கள் கடைகளில், இதுபோன்ற பானங்களைக் கொடுத்தால், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த ORS கரைசல் பாக்கெட்டைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்குங்கள. உங்கள் குழந்தை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் இதை மட்டுமே கொடுங்கள். இதுதொடர்பான விழிப்புணர்வை இந்தியா முழுக்க ஏற்படுத்த வேண்டும்! இந்தப் போலி ORS பானங்கள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்குச் சென்று, இதுபற்றி தெரியாதவர்களின் குழந்தைகளை பாதிப்பதற்குள் இதுதொடர்பான விழிப்புணர்வை இந்தியா முழுக்க ஏற்படுத்த வேண்டும். அதை உடனடியாக செய்ய வேண்டும். இந்தக் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது'' என்கிறார் டாக்டர் பாசுமணி.
Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு, தானாகச் சரியாகிவிடுமா? தாய்ப்பால் வழியே சர்க்கரை பரவுமா?
Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கர்ப்பமானதுமே சுகர் வந்துவிட்டது. இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு வருகிறேன. இந்த வகை நீரிழிவு, பிரசவத்துக்குப் பிறகு தானாகச சரியாகிவிடும் என்கிறார்கள். அது உண்மையா, குழந்தை பிறந்தால் நான் தாய்ப்பால் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீரிழிவு உள்ள அம்மாக்கள் குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். கர்ப்பகால நீரிழிவு என்பது பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால், அது பிற்காலத்தில் நீரிழிவாக மாறாமல் இருக்க, இப்போதிலிருந்தே கவனமாக இருக்கவும். நீரிழிவு பாதிப்பு என்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒருபோதும் தடையாக அமைவதில்லை. தாய்க்கு நீரிழிவு இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு அந்த பாதிப்பு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. நீரிழிவு உள்ள அம்மாக்களின் ரத்தச் சக்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கத் தொடங்கும். அதாவது, தாய்ப்பால் குடிப்பதால் குழந்தையின் குளுக்கோஸ் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதன் விளைவாக அந்தக் குழந்தைக்கு இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கத் தொடங்கும். தாய்ப்பால் (breastfeed) குழந்தைக்கு இன்சுலின் சுரப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது குழந்தை பிறந்து வெளியே வந்ததும் அதற்கு ரத்தச் சர்க்கரை அளவானது குறையத் தொடங்கும். எனவே, குழந்தை பிறந்ததும் தாய்க்கு நீரிழிவு இருந்தாலும் அடிக்கடி அதற்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது அவசியம். இதன் மூலம் குழந்தைக்கு ஹைப்போகிளைசிமியா எனப்படும் தாழ சர்க்கரை நிலை ஏற்படுவது தவிர்க்கப்படும். எனவே, நீரிழிவு உள்ள அம்மாக்கள் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கு நீரிழிவு வந்துவிடும் என பயப்படத் தேவையில்லை. நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதற்கான அலாரமாக இதை எடுத்துக் கொள்ளவும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். `தூங்கும் முன் வெளிச்சத்தைத் தவிர்த்தால் கர்ப்பகால நீரிழிவு குறையும்’ - ஆய்வில் தகவல்!
இதற்காகவெல்லாம் உங்கள் தாம்பத்திய இன்பத்தை இழக்காதீர்கள்! | காமத்துக்கு மரியாதை -263
''மிகவும் சின்ன விஷயமாக இருக்கும். ஆனால், மனம் விட்டுப் பேசாததால் கணவன் - மனைவிக்கு இடையே அது மிகப்பெரிய பிரச்னையாக மாறி நிற்கும். அப்படியொரு பிரச்னையுடன் தான் அந்த தம்பதியினர் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். கணவர், 'எங்களோட செக்ஸுவல் லைஃப் திருப்தியா இல்ல' என்றார். மனைவியோ, 'இவர் எனக்கு துரோகம் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு' என்றார். இருவரிடமும் தனித்தனியாக பேசினேன்'' என்றபடி, பேச ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். தாம்பத்தியம் ஒருசிலருடைய செக்ஸுவல் லைஃபில் இந்தப் பிரச்னை இருக்கிறது என்றால்... ''கணவர், 'எங்களோட செக்ஸுவல் லைஃப் திருப்தியா இல்ல' என்று சொன்னதற்கு, பல மனைவிகள் தயங்குகிற 'நியூட் செக்ஸ்'தான் காரணம். 'எங்களுக்குள்ள செக்ஸ் நடக்குது. ஆனா, அதுல ஒரு முழுமையே இல்ல. அவங்க தன்னை ரொம்ப மறைச்சி மறைச்சி வெச்சுக்கிறாங்க. ஆர்கசம் கிடைக்குது. ஆனா, என் மனைவி எப்படி இருப்பாங்கன்னு நான் முழுமையா பார்த்ததே இல்ல' என்று வருத்தப்பட்டார். அந்தக் காலத்தில், கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தபோது இந்தக் காரணத்தால், பல கணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தனிக்குடித்தனம் அல்லது தங்களுக்கென தனியாக ஒரு படுக்கையறை கொண்ட வாழ்க்கை முறை வந்தப் பிறகு, இந்தப் பிரச்னை பெரும்பாலும் குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியும் ஒருசிலருடைய செக்ஸுவல் லைஃபில் இந்தப் பிரச்னை இருக்கிறது என்றால், அதற்கு வேறு ஏதேனும் தான் காரணமாக இருக்க வேண்டும். கணவன், மனைவி இருவருக்குமே உதவும் வைப்ரேட்டர் காண்டம்! - காமத்துக்கு மரியாதை 261 தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இருந்தார். அடுத்து அவருடைய மனைவியிடம் பேசினேன். மற்றப் பெண்களைவிட தன்னுடைய மார்பக அளவு சிறியதாக இருக்கிறது என்கிற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இருந்தார். அதனால்தான், நியூட் செக்ஸுக்கு அவர் மறுத்தே வந்திருக்கிறார். கணவர் அதற்கு முயற்சி செய்தாலும், அவருடைய கையை தட்டி விடுவது; தன்னுடைய கைகளால் உடலை மறைத்துக்கொள்வது என்று இருந்திருக்கிறார். இந்தக் காரணத்தால்தான், 'கணவர் வேறு யாருடனாவது உறவு வைத்துக்கொள்வாரோ' என்கிற பயத்தில் 'இவர் எனக்கு துரோகம் பண்ணிடுவாரோன்னு பயமா இருக்கு' என்று சொல்லியிருக்கிறார். சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262 அளவு ஒரு விஷயமே கிடையாது. இருவருடைய பிரச்னைகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கவுன்சலிங் கொடுத்தேன். அளவு ஒரு விஷயமே கிடையாது. உன் மேல் எனக்கு இருக்கிற காதலை மட்டும் பார். என்னுடைய ஆசைகளை உன்னைத் தவிர வேறு யாரிடம் நான் கேட்க முடியும்? உன்னிடத்தில் இன்னொரு பெண்ணை நான் கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று கணவர் தன் மனைவியிடம் தன்னைப் புரிய வைத்தார். அந்தப் பெண்ணின் முகத்திலும் ஒரு தெளிவு வந்தது. இந்தப் பெண்ணைப்போலவே ஆண்களும் தங்கள் உறுப்பின் அளவு குறித்த தாழ்வு மனப்பான்மையால் திருமணத்தையோ அல்லது தாம்பத்திய உறவையோ தவிர்த்து வருவார்கள். இதுவும் அவசியமே இல்லாததுதான். ஒரு கவுன்சலிங் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுதல் மூலமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட முடியும்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: விருந்துக்குப் பிறகு பீடா சாப்பிடும் வழக்கம், செரிமானத்துக்கு நல்லதா?
Doctor Vikatan: என் கணவருக்கு அடிக்கடி பீடா சாப்பிடும் பழக்கம் உள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் சாப்பிடும்போது அங்கே விற்கப்படும் ஸ்வீட் பீடாவை தவறாமல் வாங்கிச் சாப்பிடுகிறார். “பீடா வேண்டாம், வெற்றிலை–பாக்கு போடுங்கள்” என்றால் கேட்க மறுக்கிறார். “செரிமானத்துக்கானதுதானே… ஒன்றும் செய்யாது” என்கிறார். அவர் சொல்வது சரிதானா? பதில் சொல்கிறார்: சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது ஸ்வீட் பீடா. ஆனால் ஸ்வீட் பீடாவில் கலோரிகள் மிக அதிகம். என்றாவது ஒருநாள் ஒரு மாற்றத்திற்காக அதைச் சாப்பிடுவதில் தவறில்லை. சாப்பாட்டுக்குப் பிறகு அது வாயில் ஏற்படுத்தும் நல்ல மணமும் ருசியும் அலாதியானது. சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை-பாக்கு போடும் பழக்கம் நம் முன்னோர்களிடமும் இருந்தது. செரிமானத்துக்காக அவர்கள் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். பிரசவமான பெண்களுக்கு முதல் 40 நாள்கள் வரை வெற்றிலை கொடுப்பதும் இப்போதும் சில இடங்களில் வழக்கத்தில் உள்ளது. குழந்தை பெற்ற பெண்களின் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கச் செய்வதற்காக அது செய்யப்படுகிறது. சமீப காலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு காம்பினேஷனின் அளவு சரியாகப் பின்பற்றப் படுவதில்லை. இந்த மூன்றில் எதன் அளவு அதிகமானாலும் அது உணவுக்குழாயில் எரிச்சலையும், வாய்ப்புண்ணையும் ஏற்படுத்திவிடும். ஆனால், சமீப காலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு காம்பினேஷனின் அளவு சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த மூன்றில் எதன் அளவு அதிகமானாலும் அது உணவுக்குழாயில் எரிச்சலையும், வாய்ப்புண்ணையும் ஏற்படுத்திவிடும். வெற்றிலை நல்லதுதான் என்றாலும் தினமும் எடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. அதேபோல இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பீடாவும் அடிக்கடி சாப்பிட உகந்தது அல்ல. அது பழக்கமாக மாறிவிடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்... புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா?
தயிர் முதல் அருகம்புல் சாறு வரை பொடுகுத் தொல்லை தீர டிப்ஸ்!
வயது வித்தியாசமில்லாமல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தலைபோகிற ஒரு பிரச்னை பொடுகுதான். பொடுகு ஏன் ஏற்படுகிறது, இதற்கான வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் ஏதும் உள்ளதா என சொல்கிறார் சித்த மருத்துவர் முகமது மாலிக். பொடுகுப் பிரச்னை, குளிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், அதிகப்படியான வியர்வை காரணமாக இந்தியாவில் கோடைகாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு, பொடுகுத் தொல்லை வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆரம்பகாலத்தில் வரும் பொடுகுகள் வெள்ளை நிறத்திலும், முற்றிய நிலைகளில் மஞ்சள் நிறத்திலும் சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும்கூட இருக்கும். பொடுகுத் தொல்லை தீர டிப்ஸ்! பொடுகு வந்தால், முகத்தில் பருக்கள் வரலாம். பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், முடி உதிர்வதுடன் அரிப்பும் ஏற்படலாம். தலையில் பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்தும் சீப்பு மற்றும் துணிகளைப் பயன்படுத்தினால் பொடுகு வரும். பொடுகு போயே போச்! * கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு வாளி தண்ணீரில் இரண்டு எலுமிச்சை பழச்சாறைக் கலந்து, அந்த நீரில் குளித்தால் பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். Hair Care Health: உங்க தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு எது? கண்டுபிடிக்கலாம் வாங்க! * தலையில் அதிக எண்ணெய்ப் பசையுடன், பொடுகுத் தொல்லையும் இருந்தால் முடி உதிரலாம். இந்தப் பிரச்னைக்கு குளிக்கும் முன்பு தயிர் அல்லது மோரினை தலையில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊறிய பிறகு குளித்தால், எண்ணெய்ப்பசை நீங்கும். முடியும் வலுவாகிப் பளபளப்பு கூடும். * மஞ்சள்தூளை, தண்ணீரில் கலந்தோ அல்லது, ஷாம்பூவுடன் கலந்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கலாம். * அருகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை குளிரவைத்து, இரண்டு நாட்களுக்கு வெயிலில் இரண்டு மணி நேரம் வைத்து தலைக்குப் பயன்படுத்தலாம். Beauty: வெண்ணெய் முதல் சந்தனத்தூள் வரை... பேரழகியாக ஜொலிக்க பியூட்டி டிப்ஸ்!
Doctor Vikatan: பதின்ம வயதுப் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி உடல் எடையைக் கூட்டுமா?
Doctor Vikatan: பெண் குழந்தைகளுக்கு, குறிப்பாக டீன்ஏஜில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி கொடுப்பது மிகவும் நல்லது என்று நிறைய தகவல்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இயற்கை மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும்கூட அதைப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், உளுந்தங்களி கொடுத்தால் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் என சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். அது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை உளுத்தங்களி என்பது ஆகச் சிறந்த புரத உணவு என்பதில் சந்தேகமே இல்லை. கிராமப் புறங்களில் உளுந்தங்களி என்பது தவிர்க்க முடியாத ஓர் உணவாக இருக்கிறது. நகரத்தில் வசிப்போருக்கு அதன் அருமை தெரிவதில்லை. அடிக்கடி உளுந்தங்களி சாப்பிடுவதால், பெண்களின் மாதவிடாய் காலப் பிரச்னைகள் சரியாகும். குறிப்பாக, பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் இடுப்புவலி, உடல் வலியைக் குறைத்து எனர்ஜியைக் கொடுக்கும். பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடல் அளவுக்கு அதிகமாக களைத்துச் சோர்ந்து போயிருக்கும். அந்த உடலுக்கு மீண்டும் வலிமையைக் கொடுக்கவல்லது உளுத்தங்களி. கர்ப்பப்பையை பலப்படுத்துவதிலும் உளுத்தங்களிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இன்று உடலில் எனர்ஜியே இல்லை என எனர்ஜி டிரிங்க், எனர்ஜி பார் என எதை எதையோ வாங்கிச் சாப்பிடுகிறார்கள். செயற்கையான இத்தகைய உணவுகளை நாடுவதற்கு பதில், இயற்கையான பவர்ஹவுஸ், எனர்ஜி பூஸ்டரான உளுந்தங்களி போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். கர்ப்பப்பையை பலப்படுத்துவதிலும் உளுத்தங்களிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. Doctor Vikatan: தீவிரமான ஸ்கிப்பிங் பயிற்சி, பீரியட்ஸ் வருவதை துரிதமாக்குமா? உளுந்தங்களியில் உள்ள அபரிமிதமான இரும்புச்சத்து, அனீமியா எனப்படும் ரத்தச்சோகையைக் குறைக்கும். இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இரண்டும் எலும்புகளை வலிமையாக்கும். உளுந்தங்களியில் புரதச்சத்தும் ஊட்டச்சத்துகளும் அதிகம் என்பதால், பூப்பெய்தும் வயதிலுள்ள பெண்களுக்குக் கொடுக்கும்போது அவர்களது வளர்ச்சிக்கு உதவும். இத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும், உளுத்தங்களி என்பது கலோரிகள் அதிகமுள்ள உணவு என்பதில் சந்தேகமில்லை. எனவே, இதை அளவுக்கதிகமாகவும் அடிக்கடியும் கொடுத்தால் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இதில் சேர்க்கப்படும் நல்லெண்ணெய், நெய், இனிப்பு போன்றவற்றின் அளவிலும் கவனம் வேண்டும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ஓவர்நைட் ஓட்ஸ், பாதாம், சியா சீட்ஸ் காம்போ - ஆரோக்கியமான காலை உணவா?
Doctor Vikatan: நான் தினமும் இரவில் ஆர்கானிக் ஓட்ஸ், சியா சீட்ஸ் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மறுநாளுக்கு காலை உணவாக எடுத்துக்கொள்கிறேன். காலையில் அத்துடன் சிறிது தேனும் கலந்துகொள்கிறேன். இது சத்தான உணவா, இதனால் ஆரோக்கியம் கிடைக்குமா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஓட்ஸை இரவில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடும் 'ஓவர்நைட் ஓட்ஸ்' மிகவும் ஆரோக்கியமானது. அதில் நார்ச்சத்து மிக அதிகம் என்பது முக்கியமான காரணம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளில் ஓட்ஸும் முக்கியமானது. அதிலுள்ள பீட்டா குளுக்கன், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். அதன் மூலம் இதயநலன் உறுதிசெய்யப்படுகிறது. சிலவகை கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிட்டால், உடனடியாக ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அது நீரிழிவு பாதிப்பு உள்ளோருக்கு நல்லதல்ல. ஓட்ஸ் உணவுகளைச் சாப்பிடும்போது அந்தப் பிரச்னை வருவதில்லை. சியா சீட்ஸ் என்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள விதை. அது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவக்கூடியது. இதிலும் நார்ச்சத்து மிக அதிகம். சியா சீட்ஸில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் மிக அதிகம். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது. பாதாம், சியா சீட்ஸ் போன்றவற்றை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அவை ஊறிப் பெரிதாகும். அவற்றைச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். நீண்ட நேரத்துக்குப் பசி எடுக்காது. மலச்சிக்கல் பிரச்னை வராமலும் தடுக்கும். சியா சீட்ஸ் என்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள விதை. மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவக்கூடியது. Doctor Vikatan: சியா சீட்ஸ், சப்ஜா சீட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? ஆக, ஓட்ஸ், பாதாம், சியா சீட்ஸ் என்ற காம்பினேஷன் உண்மையிலேயே மிக ஆரோக்கியமானது. செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், நீண்ட நேரம் பசி உணர்வு இல்லாமல் வைத்திருக்கும். முழுமையான சத்துகளைக் கொடுக்கும். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் நல்ல சாய்ஸ். சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது, உடனடியாக எனர்ஜி கிடைத்தது போல உணர்வீர்கள். சிறிது நேரத்தில், எனர்ஜி குறைந்தது போல ஆகிவிடும். ஆனால், இந்த ஓட்ஸ்-நட்ஸ் காம்போவில் அந்தப் பிரச்னை இருக்காது. இந்த உணவில் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். அது உடல் பலவீனம் இல்லாமல் வைத்திருக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் தேன் கலந்தும் சாப்பிடலாம். உங்களுக்கு நீரிழிவு இருந்தாலோ, எடையைக் குறைக்க வேண்டும் என்றாலோ, தேன் உள்ளிட்ட எந்த இனிப்பையும் தவிர்ப்பதுதான் சரியானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையும் தள்ளி வைக்கலாம்!
பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அதைப் பற்றி பேசுவதற்கு பெண்கள் கூச்சப்படுவதாலும், இன்று மார்பகப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மார்பகப் புற்றுநோய் மாதம் (பிங்க் அக்டோபர்) அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக சுகாதார அமைப்பு இந்த வருட தீமாக 'ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, ஒவ்வொரு பயணமும் முக்கியமானது' என்று பொருள்படும் Every Story is Unique, Every Journey Matters என்ற வாசகத்தை வெளியிட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுத் தகவல்களை நெல்லை கேன்சர் சென்டரில் பணியாற்றும் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் சாரதா அவர்களிடம் கேட்டோம். Pink October 100% குணப்படுத்தியிருக்க முடியும்! பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்றுநோய்களில் தற்போது, உலக அளவிலும், இந்தியாவிலும் மார்பகப் புற்றுநோய்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் 1.5 லட்சம் பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். அதில் 80 ஆயிரம் பேர் இறந்துவிடுகின்றனர். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால், அவர்களையெல்லாம் 100% குணப்படுத்தியிருக்க முடியும். போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், இறுதி நிலையில்தான் வருகின்றனர். அதுவும் அதிகமாக இளம்பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று வருத்தப்பட்டவர் தொடர்ந்தார். சிகிச்சைப் பற்றிய பயம் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு வரவே பயப்படுகின்றனர். சிகிச்சைப் பற்றி சரியான முறையில் அவர்களிடம் எடுத்துக் கூறினால், அவர்கள் நிச்சயம் சிகிச்சைக்கு வருவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வராமல் அவர்களைக் குணப்படுத்த முடியாது அல்லவா? 40 வயதில் காலடி எடுத்து வைத்தவுடன், பெண்கள் அனைவரும் கட்டாயமாக Breast Cancer Screening (Mammogram) செய்து கொள்ளவேண்டும். பிறகு, மார்பகத்தில் புற்றுநோய் இருந்தால் Bioxin Test -ம் செய்கிறோம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகம் தவிர்த்து, மார்பில் உள்ள கட்டிகளை மட்டும் நீக்கலாம். டாக்டர் சாரதா எப்படிப் பரிசோதிப்பது? பெண்கள் 20 வயதிலிருந்து மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மாதந்தோறும், மாதவிடாய் முடிந்தபின் முதல் வாரம் இதை செய்ய வேண்டும். மார்பகத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா; மார்பகத்தைத் தொட்டு ஏதேனும் திரவம் வடிகிறதா, கட்டி உள்ளதா, மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் உள்ளதா, கால்புப் பகுதியில் மாற்றம் உள்ளதா, நிணநீர் கணுக்களில் வீக்கம் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்ய வேண்டும். இதை வழக்கமாக செய்து வரும்பட்சத்தில், ஏதேனும் ஒரு நிலையில் மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடித்து மருத்துவரிடம் சென்றுவிடலாம். Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது என்ன? தலைமுறை தலைமுறையாக வரக்கூடியது. மார்பகத்தின் தோலில் ஏதேனும் மாற்றம் அல்லது மார்புகளில் கட்டி இருந்தால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதை வெளியே சொல்லாமல் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். பல பெண்கள் இறப்பதற்கு இதுவே காரணம். ஒருவிதத்தில், மார்பகப் புற்றுநோய் தலைமுறையாக வரக்கூடியது. ஒரு பெண்ணின் தாய்க்கோ அல்லது அத்தைக்கோ மார்பகப் புற்றுநோய் இருந்தால், உடனே அந்தப் பெண்ணும் மார்பகப் பரிசோதனையை மருத்துவமனையில் செய்துகொள்ள வேண்டும். Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர் விளக்கம் காரணங்கள்... மார்பகப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. நாம் உண்ணும் உணவுகள், உடல் பருமன், மரபு, ஹார்மோன் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது ஆகியவை அவற்றில் சில. சில சமயங்களில், மார்பகப் புற்றுநோய் வருவதன் காரணம் தெரியாமலும் போகலாம். மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை, சீக்கிரம் நோயைக் கண்டுபிடிப்பதே நல்ல சிகிச்சைக்கும், அதிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கும் வழிவகுக்கும். அதனால், பெண்கள் சுயபரிசோதனை செய்ய பழகுங்கள். தயக்கமின்றி மருத்துவர்களை அணுகுங்கள் என்கிறார் டாக்டர் சாரதா.
Doctor Vikatan: கொட்டாவி விடும்போது மாட்டிக்கொண்ட தாடை; `ஓப்பன் லாக்'சீரியஸ் பிரச்னையா?
Doctor Vikatan: சமீபத்தில் செய்திகளில் பார்த்த ஒரு விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரளாவில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு நபர், கொட்டாவி விட்டபோது, அவரது வாய்ப்பகுதி 'லாக்' ஆகிவிட்டதாகவும், பிறகு ஒரு மருத்துவர் வந்து அதைச் சரி செய்ததாகவும் பார்த்தோம். இப்படியெல்லாம் கூட நடக்குமா, இது எப்படிப்பட்ட பிரச்னை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இந்த நிகழ்வு அடிக்கடி நடப்பது இல்லை என்றாலும், வழக்கமாகப் பார்க்கக்கூடிய விஷயம்தான். இந்தப் பிரச்னையை 'டெம்போரோமேண்டிபுலர் டிஸ்ஆர்டர்' (Temporomandibular joint disorder) என்று சொல்வோம். 'டெம்போரோமேண்டிபுலர் சப்லக்ஸேஷன்' (Temporomandibular subluxation) என்றும் சொல்வதுண்டு. நமது மண்டை ஓட்டுடன் நமது தாடை சேர்ந்து நிற்கக்கூடிய இடம்தான் டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட் எனப்படும். நம்முடைய உடலில் கை, கால் மூட்டுகள், இடுப்பு மூட்டுகள் என பல இணைப்புகள் இருப்பதைப் போல டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட் என்பதும் மிக முக்கியமான ஓர் இணைப்பு. அந்த இணைப்பு இருப்பதால்தான் நம்மால் பேச முடிகிறது, சாப்பிட முடிகிறது. வாய்வழியே செய்யக்கூடிய பல விஷயங்களையும் செய்ய முடிகிறது. கொட்டாவி Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்? டெம்போரோமேண்டிபுலர் ஜாயின்ட்டில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், உதாரணத்துக்கு, பாக்டீரியா தொற்று, தசை பலவீனம் போன்ற பாதிப்புகளில் தாடைப் பகுதி பலவீனமாக வாய்ப்புகள் உண்டு. அப்போது தாடையில் உள்ள எலும்பானது, மண்டை ஓட்டில் உள்ள சாக்கெட்டில இருந்து விலகுவதைத்தான் 'டெம்போரோமேண்டிபுலர் சப்லக்ஸேஷன்' அல்லது 'டெம்போரோமேண்டிபுலர் டிஸ்லொகேஷன்' என்று சொல்கிறோம். தோள்பட்டை இணைப்பானது சிலருக்கு நழுவிப் போவதைக் கேள்விப்பட்டிருப்போம். தோள்பட்டை இணைப்பு இறங்கிவிட்டதாகச் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அப்படி நழுவியதை சரிசெய்ய சிகிச்சைகள் உள்ளன. சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அப்படித்தான் டெம்போரோமேண்டிபுலர் டிஸ்ஆர்டர் பிரச்னையும். வாயைப் பெரிதாகத் திறந்து கொட்டாவி விடும்போதோ, அதிகபட்ச சோகம் அல்லது ஸ்ட்ரெஸ்ஸில் பெரிதாக அழும்போதோகூட வாய் திறந்த நிலையில் மாட்டிக் கொள்ளும். இதை 'ஓப்பன் லாக்' என்று சொல்வோம். ஸ்ட்ரெஸ் (Stress) இதற்கான சிகிச்சை மிக எளிதுதான். அடிக்கடி இந்தப் பிரச்னை வந்த அனுபவம் உள்ளவர்கள், வாயை அசைத்து அசைத்து தானாகவே சரி செய்து கொண்டு விடுவார்கள். முதல்முறை வரும்போது சிலருக்கு இதை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை. ரொம்பவும் பெரிதாக கொட்டாவி விடாமல் பார்த்துக்கொள்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது, தசைகளில் பலவீனம் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவை இந்த விஷயத்தில் முக்கியம். மற்றபடி, இது பெரிய அளவில் பயப்படக்கூடிய பிரச்னை எல்லாம் இல்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சுத்திணறலுக்கு உடனடி தீர்வளிக்குமா தாளிசாதி எனும் சித்த மருந்து?
இந்த சிம்பிள் டிப்ஸ் மழைக்காலத்துல நம்மை ஆரோக்கியமா வெச்சுக்கும்!
மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், காய்ச்சல் போன்ற தொல்லைகள் வருவது இயல்பே. இந்தப் பிரச்னைகளுக்கு நம் வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியிலேயே மருந்து இருக்கிறது என்கிறார் கன்யாகுமரியைச் சேர்ந்தவரும் மணிப்பால் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியருமான சித்த மருத்துவர் அருள் அமுதன். அவர் தரும் கை வைத்தியக் குறிப்புகள் இங்கே. மழை. ``சித்தர்கள் ஒரு வருடத்தை கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என்று 6 பருவங்களாகப் (Seasons) பிரித்துள்ளனர். இயற்கையின் இந்தக் காலமாற்றத்துக்கு ஏற்ப நம்மைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் அவர்கள் விரிவாகச் சொல்லிச் சென்றுள்ளனர். இந்த வழிமுறைகளை நாம் பின்பற்ற ஆரம்பித்தால் மழையோ, குளிரோ, வெயிலோ நம்மை எதுவும் செய்துவிடாது. மாயம் செய்யும் மூன்று! வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உயிர்த்தாதுகளும் மனித உடலுக்குள் உண்டு. இந்த மூன்றும் தன் அளவைவிட மிகுந்தாலோ, குறைந்தாலோ நோய் வரும். இதைப் போலவே பூமிக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றும் உண்டு. குறிப்பாக, மழைக்காலங்களில் (கார்காலம், கூதிர்காலம்), பூமியின் கபம் அதிகரிக்கும், பித்தம் குறையும். மழைக்காலத்தைத் தொடர்ந்து வரும் குளிர் அல்லது பனிக்காலத்தில், (முன்பனிக்காலம், பின் பனிக்காலம்) கபத்துடன், வாதமும் சேர்ந்து அதிகரிக்கும். இந்த அதிகரிப்புதான் மனிதனுக்குள்ளும் கபத்தன்மையையும் வாதத்தன்மையையும் அதிகரித்து இந்தக் காலகட்டங்களில் குறிப்பிட்ட நோய்களைத் தருகின்றன. குறிப்பாக, பூமியின் கபத்தன்மை அதிகரிப்பதால், பல கிருமிகள் பெருகி வாழும். இவை நமக்கு நோய்களை ஏற்படுத்தும். இந்தக் காலம் மாறிவிட்டால் இந்நோய்களும் தானாகக் காணாமல் போய்விடும். இந்தக் காலகட்டத்தில், நம்மை எப்படி நாம் பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதுதான் நம் கண்முன் இருக்கும் சவாலே. சித்த மருத்துவம் கபமா, வாதமா? உடல் அறிகுறிகளே காட்டிக்கொடுத்துவிடும்! மழை மற்றும் குளிர்காலங்களில் கபம் அதிகரிக்கும்போது சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலைபாரம், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற தொல்லைகள் வரும். வாதம் அதிகரிக்கும்போது சிலருக்குக் கை கால்வலி, தோல் வறட்சி, நரம்பு - எலும்பு வலிகளும் உண்டாகும். மேற்சொன்ன இந்த அறிகுறிகளிலிருந்து நமக்கு வந்திருக்கும் பிரச்னை கபத்தினாலா, வாதத்தினாலா என்பதைப் பகுத்தறிய முடியும். கபத்தை அதிகரிக்கும் உணவுகளுக்கு `நோ' சொல்லுங்கள்! வெளியிலிருந்து, அதாவது பூமியிலிருந்து நம்மை தாக்கும் கபத்திலிருந்து நம்மை பாதுகாக்க கபத்தை குறைக்கும் உணவு, மூலிகைகள் மற்றும் வாழ்வுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உடலைக் குளிர்வித்து கபத்தை அதிகரிக்கும் நீர்ச்சத்து அதிகமாக உள்ள வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், இளநீர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மிகக் குறிப்பாக, ஐஸ்க்ரீம் போன்ற உணவுப் பண்டங்களை இந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதேபோல இனிப்புச் சுவையுள்ள உணவுப் பண்டங்கள் கபத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது சாலச் சிறந்தது. சளித்தொல்லை கபத்தைக் குறைக்க எவற்றை உண்ணலாம்? உடலின் வெப்பத்தை அதிகரித்து, கபத்தைக் குறைக்கக்கூடிய கத்திரிக்காய், வழுதனங்காய் (நீண்ட பச்சை கத்திரிக்காய்), சுண்டைக்காய், மணத்தக்காளி, நார்த்தங்காய், வெற்றிலை, தூதுவளை போன்ற வெப்பத்தை அதிகரிக்கும் காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ரசம் என்னும் பேரமுதம்! இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் தினமும் கண்டிப்பாக ரசம் வைத்து உண்ண வேண்டும். குறுமிளகு (நல்ல மிளகு), மஞ்சள், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், சின்ன வெங்காயம் போன்றவை ரசத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும். நம் வீட்டின் சமையலறையிலும், அஞ்சறைப் பெட்டியிலும் இருக்கும் இந்த மருந்துப் பொருள்கள் மூலம் செய்யப்படும் ரசம் நிச்சயம் மனதையும் உடலையும் இதமாக்கும். நீங்கள் எப்போதும் வைக்கும் ரசத்தில் வெற்றிலையை நறுக்கிச் சேர்த்தால் அது வெற்றிலை ரசமாகிவிடும். இந்த வெற்றிலை ஒரு நல்ல மருந்து. சளி சுரப்பதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிலைக்கு நிகர் வெற்றிலைதான். ரசம் துளசி ரசமும் சூப்பர்தான்! எப்படி வெற்றிலை சளி சுரப்பைக் கட்டுப்படுத்துமோ அதேபோல, உருவாகும் சளியை வெளியே தள்ளுவதில் துளசி சிறந்தது. எனவே, சளிப்பிடித்தவர்கள் வெற்றிலை ரசத்தைச் சாப்பிடுவது போலவே துளசியையும் ரசமாகச் செய்து பருகலாம். அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். ரசமாகப் பருக விருப்ப மில்லை எனில், தேநீர் தயாரிக்கும்போது துளசியையும் சேர்த்துத் தேநீர் தயாரித்துப் பருகலாம். சளியை அண்டவிடாமல் செய்யும் காயகல்ப மூலிகை! மழைக்காலத்தில் நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒரு மூலிகை தூதுவளை. இந்தத் தூதுவளைக் கீரையைச் சட்னி செய்து சாப்பிடலாம். அல்லது தூதுவளையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராகவும் பயன்படுத்தலாம். இதை நீங்கள் உணவில் சேர்த்து வரவர சளி உங்கள் பக்கம் வரவே வராது. சித்த மருத்துவ மூலிகைகளான தூதுவளை, கண்டங்கத்திரியால் செய்யப்பட்ட பொடிகள், லேகியங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவையும் மழை மற்றும் குளிர் காலங்களில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நொச்சி Health : மழைக்காலத்தில் அச்சுறுத்தும் கொசுத்தொல்லை; இயற்கை முறையில் விரட்டுவதெப்படி? நொச்சி இலையை மறக்காதீங்க! மழை மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம் போன்றவையும் கூடவே வந்துவிடும். இவற்றைச் சரிசெய்யவும் ஓர் இயற்கை வழி இருக்கிறது. நாட்டுமருந்துக் கடைகளில் நொச்சி இலை கிடைக்கும். இதை வாங்கி நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, ஆவி (வேது) பிடிக்க வேண்டும். இந்த நொச்சி இலை கிடைக்கவில்லையென்றாலும் கவலை வேண்டாம். வெறும் நீரில் உப்புபோட்டுக் கொதிக்க வைத்து அதில் ஆவிபிடிக்கலாம். இது நுரையீரல் மற்றும் மூக்கின் பக்கத்திலுள்ள சைனஸ் அறைகளில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்றும். அங்கே நுழைந்துள்ள கிருமிகளையும் கொல்லும். Health: மழை & குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா? மூக்கடைப்பை விரட்டும் மஞ்சள், மிளகு வைத்தியம்! மழை மற்றும் குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதை விரட்டவும் எளிமையான ஒரு வழி இருக்கிறது. உலர்ந்த மஞ்சள் கொம்பு ஒன்றை எடுத்து அதை அடுப்பில் காட்டி எரியவிடுங்கள். பின்னர், அதிலுள்ள தீயை அணைத்தால் ஏற்படும் புகையை சுவாசியுங்கள். இவ்வாறு செய்யும்போது மூக்கடைப்பு அகலும். அதுமட்டுமல்லாமல் கிருமிகளை அழித்து மூக்கு, சைனஸ் அறைகள் மற்றும் நுரையீரலைச் சுத்தமாக வைத்திருக்கவும் இது உதவும். மூக்கு முற்றிலும் அடைத்துவிட்டாலும் கவலை வேண்டாம். குறுமிளகு என்று சொல்லக்கூடிய நல்ல மிளகை ஊசியில்குத்தி, நெருப்பில்காட்டி, பின்னர் அதிலிருந்து எழும் புகையை சுவாசிக்க சளியால் அடைத்த மூக்கை உடனே திறக்கும். சுக்குமல்லி காபி சுகம் தரும் சுக்குமல்லி காபி சுக்கு, மல்லி விதை (தனியா) ஆகியவற்றுடன் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபியைத் தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ, காபிக்கு பதிலாக இந்தச் சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டு மானாலும் குடிக்கலாம். குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே வெந்நீர் அல்லது மேலே சொன்ன சுக்கு மல்லி காபியை அருந்தி சுகம் பெறலாம். காய்ச்சல் வராமல் இருக்க உதவும் தடுப்பு மருந்து! நிலவேம்புக் குடிநீர் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துவதோடு காய்ச்சலைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் தடுப்பு மருந்தாகவும் இது திறம்படச் செயலாற்றும் தன்மை கொண்டது. நிலவேம்புக் குடிநீர் காய்ச்சலுக்குக் கைவைத்தியம் என்ன? காய்ச்சல் வந்துவிட்டால் சுக்கு, குறுமிளகு, மல்லி (தனியா), துளசி, வெற்றிலை போன்றவற்றை நீர் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி குடித்தால் வியர்வை வெளியேறி காய்ச்சல் மற்றும் சளி தீரும். மூன்று நாள்களுக்கு மேல் கைவைத்தியம் வேண்டாம்! பொதுவாக எந்த மிதமான நோய்களுக்கும் மூன்று நாள்கள் கைவைத்தியம் பார்க்கலாம். அதற்குப் பிறகும் காய்ச்சல், சளி குறையாவிட்டால், உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில் டெங்கு, சிக்கன்குனியா, டைபாய்டு, மலேரியா, கோவிட் தொற்று மற்றும் வைரல் காய்ச்சல்கள் எனப் பல வகையான நோய்கள் நம்மை அச்சுறுத்தி வருவதால் நோயைச் சரியாகக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டியது மிகமிக அவசியம்'' என்கிறார் மருத்துவர் அருள் அமுதன். எல்லா பருவ காலத்திலும் ஆரோக்கியமாக இருப்போம்..!
Health: அட்டையில் ஒட்டிய மாத்திரை; ஓப்பன் செய்த மருந்து பாட்டில் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
நமக்கு நல்லது செய்கிற, பிரச்னைகளைச் சரி செய்கிற மாத்திரை, மருந்துகள் சில நேரம் கெட்டதும் செய்யலாம். அது நிகழாமல் தடுக்க நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்களை இங்கே சொல்கிறார் பொது நல மருத்துவர் செல்வராஜன். மருந்து, மாத்திரைகள் குறித்து நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்! சொட்டு மருந்துகள் * கண், காது, மூக்கு போன்றவற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்காக வாங்கும் சொட்டு மருந்துகளை நாள்பட வைத்திருந்து பயன்படுத்தக்கூடாது. 15 நாள்களுக்கு ஒரு முறை * சர்க்கரைநோய், இதயநோய் உள்ளவர்கள் மருந்து, மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். அவர்களேகூட 15 நாள்களுக்கு ஒரு முறை மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. மருந்து, மாத்திரைகள் குறித்து நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்! டோசேஜ் பிரச்னை வரும்! * நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு, புதிதாகப் பரிந்துரைக்கப்படும் மாத்திரையில் டோசேஜ் குறைக்கப்படுவதுண்டு. அது தெரியாமல் மீதமான பழைய மாத்திரைகளைச் சிலர் பயன்படுத்துவார்கள். இது, நோய் பாதிப்பை அதிகரித்துவிடும் அல்லது பக்கவிளைவை ஏற்படுத்திவிடும்... கவனம். இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம் அட்டையுடன் மாத்திரை ஒட்டிக்கொண்டிருந்தால்... * மாத்திரையின் நிறத்தில் மாற்றம், நாற்றம், அட்டையுடன் மாத்திரை ஒட்டிக்கொண்டிருப்பது, கவர் பிரிந்திருப்பது தெரியவந்தால், காலாவதி தேதிக்கான அவகாசம் இருந்தாலும் அவற்றைத் தவிர்க்க வேண்டும். Health: மல்டி வைட்டமின் மாத்திரைகள்... யார், எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?! இந்த மாத்திரையை இறுதியாகப் பயன்படுத்தவும். * பிரிக்கப்பட்ட மருந்து பாட்டிலை அதிகபட்சம் பத்து நாள்கள்வரைதான் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் மருந்தில் சேர்ந்து, அதன் தன்மையை அழித்துவிடும். சிரப் போன்ற திரவ வடிவிலான அனைத்து மருந்துகளுக்கும் இந்தக் கால அவகாசம் பொருந்தும். * முழு அட்டையாக அல்லாமல் தனியாகத் தரப்படும் மாத்திரையில் காலாவதி தேதி இருப்பது உறுதி இல்லை. அவற்றை வாங்க வேண்டாம். அட்டையில் காலாவதி தேதி இருக்கும் பகுதியிலுள்ள மாத்திரையை இறுதியாகப் பயன்படுத்தவும்.
Doctor Vikatan: தீபாவளி விருந்து; விதம்விதமான ஸ்வீட்ஸ், கார வகைகள், டயட் சோடா குடிக்கலாமா?
Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவோராக இருந்தாலும், தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் அன்று ஒருநாள் டயட்டை பின்பற்றுவது சாத்தியமாகாது. அதே சமயம், விதம் விதமான விருந்து, இனிப்பு, பலகாரங்களைச் சாப்பிடுவதால், வயிறு கெட்டுப்போகாமல் இருக்கவும், செரிமானம் சீராக இருக்கவும் டயட் சோடா குடிப்பது சரியானதா... அது வழக்கமான சோடாவை விட ஆரோக்கியமானதுதானே? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் வழக்கமான சோடாதான் ஆரோக்கியமற்றது, டயட் சோடா ஆரோக்கியமானது என்ற உங்கள் எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான கார்போனேட்டடு பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரி அளவுகள் எக்கச்சக்கம் என்பதால் அவை உடல் பருமனையோ, நீரிழிவையோ ஏற்படுத்தலாம் என்ற பயத்தில் நம்மில் பலர் அவற்றைத் தவிர்க்கிறோம். கலோரியே கிடையாது என்ற அறிவிப்புடன் வருகிறது டயட் சோடா. அதனால் வழக்கமான இனிப்பு சேர்த்த குளிர்பானங்களுக்கு பதிலாக பலரும் டயட் சோடாவைத் தேர்வு செய்கிறார்கள். பருமன், சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணத்திலும், ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களும் டயட் சோடாவை மாற்றாக நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது உண்மையல்ல, அதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வழக்கமான இனிப்பு சேர்த்த கார்போனேட்டட் பானங்களை விடவும் டயட் சோடா மற்றும் டயட் பானங்கள் ஆபத்தானவை. இவை இனிப்பு உணவுகளின் மீதான தேடலை அதிகரித்து அதன் தொடர்ச்சியாக உடல் பருமன், டைப்-2 டயாபட்டீஸ் போன்றவற்றுக்கும் காரணமாகலாம். வழக்கமான இனிப்பு சேர்த்த கார்போனேட்டட் பானங்களை விடவும் டயட் சோடா மற்றும் டயட் பானங்கள் ஆபத்தானவை. டயட் சோடாவில் மிக அதிக அளவு செயற்கை இனிப்பு சேர்க்கப்படும். இந்த அளவானது நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் இனிப்பின் அளவை விட பல மடங்கு அதிகம். இந்தச் செயற்கை இனிப்பு உங்கள் உடலை ஏமாற்றி, அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இன்சுலின் சுரப்பு அதிகரித்தால் வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு அதிகமாவதுடன் உடல் எடையும் கூடும். இந்த வகை பானங்கள் உங்கள் உடலைக் குழப்புவதால் உடலின் வளர்சிதைமாற்ற அளவும் குறையும், எனவே உங்கள் உடல் தினமும் எரிக்கும் ஆற்றலின் அளவும் குறையும். அடிக்கடி டயட் சோடா உள்ளிட்ட டயட் பானங்களை அருந்துபவர்களுக்கு வழக்கத்தைவிட சீக்கிரமே பசியெடுக்கும். உணவின் மீதான தேடல் அதிகரிக்கும். குறிப்பாக, அரிசி, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும். அடிக்கடி டயட் சோடா குடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பும் பற்சிதைவும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இனிப்பு, கொழுப்பு சேர்த்த உணவுகள் உடல் எடையைக் கூட்டும் என்பதில் எப்போதுமே எச்சரிக்கையோடு இருப்பதுதான் சரியானது. எனவே, நீங்கள் அருந்தும் இனிப்பு சேர்த்த பானங்களுக்கு மாற்றாக டயட் சோடாவை நினைக்க வேண்டாம். இனிப்பு, கொழுப்பு சேர்த்த உணவுகள் உடல் எடையைக் கூட்டும் என்பதில் எப்போதுமே எச்சரிக்கையோடு இருப்பதுதான் சரியானது. என்றாவது ஒருநாள் விருந்து, இனிப்பு, பலகாரங்கள் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அளவு முக்கியம்! உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: `தீபாவளி லேகியம்' எல்லா நாள்களிலும் சாப்பிடலாமா, குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?
Doctor Vikatan: `தீபாவளி லேகியம்'எல்லா நாள்களிலும் சாப்பிடலாமா, குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?
Doctor Vikatan: தீபாவளிக்குச் செய்கிற லேகியத்தில் என்ன ஸ்பெஷல்? அதை தீபாவளி அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டுமா, மற்ற நாள்களிலும் சாப்பிடலாமா? குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் தீபாவளி லேகியத்தின் சிறப்பே செரிமானத்துக்கு உதவும் அதன் தன்மைதான். தீபாவளி அன்று, மற்ற நாள்களைவிட, வழக்கத்துக்கு அதிகமான இனிப்பு, எண்ணெய், நெய் போன்றவற்றைச் சாப்பிடுவோம். அவையெல்லாம் செரிப்பதற்காகவே ஸ்பெஷலாகத் தயாரிக்கப்படுவது தான் தீபாவளி லேகியம். தீபாவளி லேகியத்தில் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டாலே செரிமானம் சீராக இருக்கும். இதை எல்லா வயதினருமே கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம், குழந்தைகளின் செரிமான திறனுக்கேற்ப பார்த்துக் கொடுப்பது நல்லது. இதை மற்ற நாள்களிலும் எடுத்துக் கொள்ளலாமா என்றால், எப்போதுமே செரிமான கோளாறு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. லேகியம் என்பது மருந்துப் பொருள் என்றாலும் அளவு தாண்டாதவரை பாதுகாப்பானது தான். அதில் சேர்க்கப்படுகிற இனிப்பு, நெய் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு, அளவோடு எடுத்துக்கொள்வதுதான் சரியானது. தீபாவளி விருந்து, ஸ்வீட்ஸ் Doctor Vikatan: தீபாவளி... ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா? தீபாவளி லேகியத்தில் சேர்க்கப்படுகிற சுக்கு, திப்பிலி உள்ளிட்ட பல மூலிகைப் பொருள்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை. தீபாவளியின்போது பட்டாசுப் புகையால் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்படும். இன்னும் சிலருக்கு வயிற்றுத் தொந்தரவுகள் வரும். நிறைய உணவுகளை வழக்கத்தைவிட அதிக அளவில் சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்று உப்புசம் வயிற்றுப் பொருமல் போன்றவற்றுக்கும் தீபாவளி லேகியம் சிறந்த மருந்து. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
`அழகுக்கு அரோமா ஆயில்' - எந்தப் பிரச்னைக்கு எந்த ஆயில்? சொல்கிறார் நிபுணர்!
’சருமத்தை மெருகேற்ற பார்லரைவிட கூடுதல் பலன் கொடுக்கக்கூடியது அரோமா ஆயில்’ என்கிற அரோமா தெரப்பிஸ்ட் கீதா அஷோக், அரோமா ஆயில்களின் உதவியுடன் வீட்டிலேயே அழகாகும் வழிகளைச் சொல்கிறார். அழகுக்கு அரோமா ஆயில் சரும துவாரங்கள் சுத்தமாகும்..! தினமும் முகத்தைக் கழுவும்போது, சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் சிறிதளவு எடுத்து நுரை வரும் அளவுக்கு கைகளில் தேய்த்துக்கொண்டதும் அந்த நுரையில் லெமன் கிராஸ் ஆயில் இரண்டு சொட்டு விட்டு முகத்தைக் கழுவவும். பலன்: சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், அரோமா ஆயிலின் வாசனையானது, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். எண்ணெய் வடியும் சருமத்துக்கு எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கான குறிப்பு இது. ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் பெப்பர் மின்ட் ஆயில், லாவெண்டர் ஆயில், மின்ட் ஆயில் தலா இரண்டு சொட்டுகள் விட்டு பாத்திரத்தை மூடி அடுப்பில் ஏற்றி கொதிக்கவிடவும். இதில் முகத்துக்கு நீராவி எடுக்கவும். பலன்: முகத்தில் சுரக்கும் அதிக எண்ணெய்ப் பசையை மட்டுப்படுத்துவதுடன், சருமத்தில் படிந்துள்ள அழுக்கை வெளியேற்றி பொலிவாக்கும். அழகுக்கு அரோமா ஆயில் வறண்ட சருமத்தினருக்கு... வறண்ட சருமத்தினருக்கும் இருக்கிறது அழகுக் குறிப்பு. ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் ஜெரேனியம் ஆயில் (geranium oil), லாவெண்டர் ஆயில், யலாங் யலாங் ஆயில் (ylang ylang oil) தலா இரண்டு சொட்டுகள் விட்டு, மூடிக் கொதிக்க விடவும். கொதித்த பின் நீராவி பிடிக்கவும். பலன்: முகத்தின் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும். Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..! சரும அடுக்குகளில் ஊடுருவி இளமையாக்கும்! பொதுவாக பொலிவிழந்த சருமத்தை உடனடியாகப் பளிச்சென காட்டவும், அந்தப் பொலிவு அதிகபட்சம் மூன்று நாட்கள் நிலைக்கவும் ஃபேஸ்பேக் உதவி செய்யும். ஆனால் கரும்புள்ளி, பரு, மங்கு போன்ற சருமத்தின் இரண்டாவது அடுக்கின் பிரச்னைகளையும், சுருக்கம், கோடுகள், வயதான தோற்றம், சருமத் தளர்வு போன்ற சருமத்தின் மூன்றாவது அடுக்கின் பிரச்னைகளையும் சரிசெய்வது, அரோமா ஆயிலின் தனிச்சிறப்பு. இதற்கு, லாவெண்டர் ஆயில், லைம் ஆயில், பச்சோலி ஆயில், சீடர் வுட் ஆயில், யலாங் ஆயில் இவற்றில் ஏதாவது இரண்டு ஆயில்களில் தலா இரண்டு சொட்டுகளை, ஃபேஸ்பேக் போடும் முன் அதில் கலந்து முகத்துக்கு அப்ளை செய்யவும். அரிசி களைந்த தண்ணீர், பாதாம் ஆயில்... முகத்தை பளிச் என்று மினுங்கவைக்கும் கொரியன் பியூட்டி டிப்ஸ்! பலன்: அரோமா ஆயிலின் மூலக்கூறுகள் சருமத்தின் துவாரங்களைவிட மிகச்சிறியது. அதனால் ஃபேஸ்பேக் போட்ட 2 முதல் 20 விநாடிகளுக்குள் இந்த ஆயில் சருமத்தின் மூன்றாவது அடுக்குவரை ஊடுருவி சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும். அரோமா ஆயில்களும் இனி இருக்கட்டும் உங்கள் அலமாரியில்!
Diwali : காட்டன் டிரெஸ் தீப்பிடிக்கும்; ஆனால், பட்டாசு வெடிக்கையில் அதையே உடுத்த வேண்டும் - ஏன்?
நாளை தீபாவளி என்பதாலேயே இரவெல்லாம் தூங்காமல் கனவு கண்டு, அலாரம் இல்லாமலேயே காலையில் எழுந்து, குளித்து புத்தாடைகளெல்லாம் அணிந்து, நேராக நாம் போகும் இடம் எங்கே..? வீட்டு வாசலுக்குத்தான். இந்த தீபாவளிக்கென்றே எக்ஸ்குளூசிவ் ஆக வாங்கிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாமா..? அதே நேரம், ஆசையாக வாங்கிய பட்டாசுகளை கவனமாக வெடிக்கவில்லை என்றால் ஆபத்தில் முடியக்கூடும். Deepavali ஏன் பட்டாசு வெடிக்கும்போது காட்டன் உடை உடுத்த வேண்டும் என, சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப கழகத்தில் கைத்தறி தொழில்நுட்பம் மற்றும் துகிலியல் துறையில் (Handloom and Textile Technology) பணியாற்றி வரும் பேராசிரியர் முனைவர் த.கோபி கண்ணன் சொல்வதைக் கேளுங்கள்! தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி ''பொதுவாகவே தீபாவளிக்கு விலையுயர்ந்த, ஆடம்பரமான, அதிக வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் உடுத்துபவர்கள் உண்டு. அதில் தவறில்லை. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி, நம் எல்லாருக்கும் தெரிந்த காட்டன் எனப்படும் பருத்திதான். காட்டன் உடைகளும் எளிதாக தீ பற்றி எரியக்கூடியதே என்றாலும் அதை அணிவதே பாதுகாப்பு. Deepavali காட்டன்தான் விரைவாக தீ பிடிக்கக்கூடியது. ஆனால்... எடுத்துக்காட்டாக, தீபாவளி அன்று ஒருவர் காட்டன் உடை அணிந்தும், மற்றொருவர் synthetic fabric வகையில் ஒன்றான பாலியஸ்டர் உடையை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிக்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டில், காட்டன்தான் விரைவாக தீ பிடிக்கக்கூடியது. ஆனால், காட்டன் டிரெஸ்ஸில் தீப்பிடித்து பரவும் நேரத்திற்குள் பாலியஸ்டர் உருக தொடங்கிவிடும். காட்டன் அணிந்திருப்பவரின் உடையில் தீப்பிடிக்க தொடங்கியவுடன் தீ உடையில் பரவி பிறகுதான் தோலைத் தொடும். ஆனால், பாலியஸ்டர் அணிந்திருப்பவருக்கு அப்படி அல்ல. அந்தத் துணி ஒரு மெழுகு போல் உருகி தோலின் மீது படிந்து கொப்பளங்களை உருவாக்கும். தோலை உரிக்கக்கூடும். அதனால், காட்டனைக் காட்டிலும் பாலியஸ்டர் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். பட்டும் இயற்கையில் இருந்து கிடைக்கும் இழைதான். பட்டாடையையும் பட்டாசு வெடிக்கும்போது உடுத்தலாம். ஆனால், அதைவிட காட்டன் உடுத்துவதே சிறந்தது'' என்கிறார். பட்டாசால் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஐஸ்வர்யா கூறுவதையும் கேளுங்கள். டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் பேராசிரியர் முனைவர் த.கோபி கண்ணன் ``தீபாவளி லேகியம் கேக்குறா கீர்த்தி சுரேஷ்!’’ - மேனகா சுரேஷ் கைகள், முகத்தில்தான் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளி அன்றைக்கு நிறைய மக்களுக்கு தீக்காயங்கள் ஏற்படுகின்றன. மக்கள் சற்று விழிப்புணர்வோடு இருந்தால், இதைத் தடுக்கலாம். பெரும்பாலும் சேலையின் முந்தானை, துப்பட்டா, வேட்டி போன்றவற்றில் தீ பிடிப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அதிலும் பாலியஸ்டர் உடை அணிவதால் ஏற்படும் தீக்காயங்கள்தான் அதிகம். சின்ன பிள்ளைகளுக்கு பெரும்பாலும் கைகள், முகத்தில்தான் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. Diwali: எண்ணெய்க் குளியலும் அரப்புத்தூளும்..! | Nostalgia + Health நச்சுத்தன்மை வாய்ந்த வெடி மருந்துகள் பட்டாசு வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், உடனே அதை தண்ணீர் கொண்டு அணைத்துவிட்டு, தீக்காயம் பட்ட இடத்தில் தண்ணீர் (Running Water) கொண்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அந்த பட்டாசுகளில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வெடி மருந்துகள்/ ரசாயனங்கள் நம் உடலுக்குள் நுழைவதை தடுக்க முடியும். சிலர், முதலுதவி என்று நினைத்து தீக்காயம் மீது 'டூத் பேஸ்ட்' தடவுகிறார்கள். இதை கண்டிப்பாக செய்யக்கூடாது. Deepavali: பலகாரங்களோடு சாப்பிட வேண்டிய தீபாவளி லேகியம் - வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்! மாஸ்க்கும் கண்ணாடியும்... பலத்த காயமாக இருந்தால், நிச்சயமாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. தவிர, பிள்ளைகள் பட்டாசு வெடிக்கையில் மூக்கை மறைக்கும்படி மாஸ்க் அணிவது நல்லது. முடிந்தால் கண்களை மறைக்க சிறுவர்களுக்கான கண்ணாடிகூட அணியலாம்'' என்கிறார். அரசு குறிப்பிட்டிருக்கும் விதிமுறைகளை மதித்து, கவனமாக தீப ஒளித் திருநாளை கொண்டாடுவோம்..!
Doctor Vikatan: இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு; ஆஞ்சியோ, சிடி ஆஞ்சியோ எது பெஸ்ட்?
Doctor Vikatan: இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டுபிடிக்கிறோம். இந்த டெஸ்ட்டுக்கு பதில் சிடி ஆஞ்சியோ செய்யலாம், ஸ்கேன் மாதிரி சுலபமான டெஸ்ட் அது என்கிறார்களே! அது உண்மையிலேயே துல்லியமானதுதானா? அது பற்றி விளக்கவும். பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் ஆஞ்சியோகிராம் என்பது இதயத்தின் ரத்தக்குழாய்களில் நேரடியாக கான்ட்ராஸ் டை (Contrast dye ) எனப்படும் திரவத்தைச் செலுத்தி, எக்ஸ்ரே போன்ற மெஷினை வைத்துப் பார்த்து, மேற்கொள்ளப்படுகிற சோதனை. இது மிகவும் துல்லியமானது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், ரத்தக்குழாய் அடைப்பு அதிகமாக இருப்பது தெரிந்தால், பலூன் வைத்து அந்தக் குழாயை விரிவுபடுத்தி, ஸ்டென்ட் எனப்படும் உலோக கருவியை உள்ளே பொருத்திவிடுவார்கள். இதை ஆஞ்சியோபிளாஸ்டி என்கிறோம். எனவே, ஆஞ்சியோகிராம் செய்கிறபோது, உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டியும் செய்துவிட முடியும். பிபி, சுகர், கொலஸ்ட்ரால், குடும்ப பின்னணியில் உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள், இதயத்தின் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிந்தவர்கள், அடிக்கடி நெஞ்சுவலியை உணர்பவர்கள், எக்கோ பரிசோதனையில் மாறுதல்கள் இருப்பவர்கள் போன்றோருக்கெல்லாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்வதுதான் சரியானது. ஏனென்றால், டெஸ்ட் செய்த உடனேயே அதற்கான தீர்வையும் காண முடியும். இதயத்தின் ரத்தக்குழாய் Doctor Vikatan: 60 வயது கணவருக்கு ரத்தக்குழாய் அடைப்பு, 20 வயது மகனுக்கும் டெஸ்ட் அவசியமா? அதுவே, ஒரு நபருக்கு 35-40 வயதுதான் ஆகிறது, இசிஜியில் மாறுதல்கள் தெரிகின்றன, வலியும் இருக்கிறது, பிபி, சுகர போன்ற ரிஸ்க் காரணிகள் இல்லாதவர், குடும்ப பின்னணியில் இதய நோய் இல்லாதவர் என்ற நிலையில், இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சிடி ஆஞ்சியோ டெஸ்ட் செய்து பார்க்கலாம். இது ஸ்கேன் செய்வது போன்ற எளிமையான பரிசோதனைதான். இதற்காக மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டியதில்லை. புறநோயாளியாகவே சென்று டெஸ்ட் செய்து கொண்டு வீடு திரும்பலாம். இந்த டெஸ்ட்டுக்கு முன் கையில் இன்ஜெக்ஷன் ஒன்று போடுவார்கள். பிறகு இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம். சிடி ஆஞ்சியோவில் நார்மல் என ரிசல்ட் வந்தால், அது 99.5 சதவிகிதம் நம்பகமானது. அதுவே, அடைப்பு இருப்பதாக ரிசல்ட் வந்தால், அது 70 முதல் 75 சதவிகிதம்தான் நம்பகமானது. எனவே, அடைப்பு இருப்பது உறுதியானால், ரெகுலர் ஆஞ்சியோதான் செய்ய வேண்டியிருக்கும். ஆஞ்சியோ, சிடி ஆஞ்சியோ எது பெஸ்ட்? எனவே, அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே சிடி ஆஞ்சியோ பரிசோதனையைப் பரிந்துரைப்போம். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் அட்மிட் ஆகி, கைவழியே ஊசி போடப்பட்டு, இன்வேசிவ் முறையில் ரெகுலர் ஆஞ்சியோ செய்வதுதான் சிறந்தது. இதற்காக 4 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
'ORS'லேபிள் ஒட்டுவதற்கு எதிராகப் போராடி வென்ற பெண் டாக்டர்; அதிர்ச்சியான காரணம் இதோ!
ஒரு மருத்துவரின் போராட்டமும் தடை உத்தரவும்... வாந்தி மற்றும் பேதியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளைத்தான் (ORS - Oral Rehydration Solution). மருத்துவர்கள் முதல் சாமானியர்கள் வரை ஓ.ஆர்.எஸ் உயிர் காக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கையில், சர்க்கரை பானங்களுக்கெல்லாம் 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் வணிக நோக்கம் கொண்டவர்கள். அதற்குள் இருப்பது சர்க்கரை மட்டுமே; உயிர் காக்கும் எலக்ட்ரோலைட்ஸ் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார், ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ். இதன் நல்ல விளைவாக, இனி சர்க்கரை பானங்களுக்கு 'ORS' லேபிளைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்திருக்கிறது. ors water 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது! பாட்டில்களில் விற்கப்படும் பழச்சாறுகள், காற்று அடைக்கப்பட்ட பானங்கள் உள்பட எந்தவொரு பானத்திற்கும் இனிமேல், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது. அப்படிச் செய்வது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ஐ மீறுவதாகும். இது அந்தப் பானங்களை நம்பி வாங்குகிற நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாகும் என, அந்தத் தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யப்படும் பானங்களில்... உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு லிட்டர் ORS கரைசலில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யப்படும் பானங்களில் ஒரு லிட்டருக்கு 120 கிராம் சர்க்கரை இருந்திருக்கிறது. தவிர, பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பைத் தடுக்கும் எலக்ட்ரோலைட்ஸ் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது என்பதை நிரூபித்த டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், சர்க்கரை பானங்களில் 'ORS' லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகிறார். Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க! குழந்தை குழந்தைளின் உயிரிழப்புக்கும் காரணமாகலாம். ’’இந்தியாவில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு ஒரு முக்கியமான காரணம் வயிற்றுப்போக்கு. பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் மருத்துவ உதவிகளில் ஒரு முக்கிய இடத்தில் 'ORS' பானம் இருக்கிறது. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களில் 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்தால், அதைக் குடிக்கிற குழந்தைகளின் நிலைமை இன்னுமே மோசமாகும். அது அந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்கும் காரணமாகலாம். Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா? மக்களுக்குக் கிடைத்த வெற்றி அதனால்தான், இதை எதிர்த்து தொடர்ந்து போராடினேன். இனிமேல், சர்க்கரை பானங்களுக்கு 'ORS' லேபிளைப் பயன்படுத்தக்கூடாது என இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்திருக்கிறது. இந்த வெற்றி என்னுடன் துணை நின்று போராடிய பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியும் கண்ணீருமாய் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ். View this post on Instagram A post shared by Dr Sivaranjani Santosh (@drsivaranjanionline) தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன? கவனமாக இருங்கள். வயிற்றுப்போக்குப் பிரச்னை வந்தால் மருத்துவரை நாடுங்கள். உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய 'ORS' பாக்கெட்டுகளை வாங்கி நீரில் கரைத்துக் குடியுங்கள். வண்ண வண்ண பாட்டில்களில் அடைக்கப்பட்ட சர்க்கரைத் தண்ணீரை வாங்கி உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கொடுக்காதீர்கள். இனி மழைக்காலம் என்பதால், வாந்தியும் வயிற்றுப்போக்கும் வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. 'ORS' லேபிள் ஒட்டப்பட்ட பானங்களிடத்தில் கவனமாக இருங்கள்.
Doctor Vikatan: சீக்கிரமே உடல் பருமனைக் குறைக்க உதவுமா சித்த மருந்துகள்?
Doctor Vikatan: நான் பல வருட காலமாக உடல் எடையைக் குறைக்கப் போராடிக் கொண்டிருக்கிறேன். உடல் எடையைக் குறைக்க உதவுவதாகச் சொல்லும் மாத்திரைகள்கூட பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், எதிலுமே எனக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், சித்த மருத்துவத்தில் வெயிட்லாஸுக்கென்றே நிறைய மருந்துகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் உடல் எடையைக் குறைப்பதற்கு எப்போதுமே மருந்துகளைத் தீர்வாக நாடாமல், மருந்துகளை துணை ஆதரவாக வைத்துக்கொள்வதுதான் சிறந்தது. அதாவது, உடல் எடையைக் குறைப்பதில் கூட்டு சிகிச்சை முறைதான் சிறந்தது. நல்ல உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றோடு கொழுப்புச்சத்தைக் குறைப்பதற்கான மருந்துகள், குறிப்பாக, கெட்ட கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை வெகுவாகக் குறையும். சித்த மருத்துவத்திலும் அதற்கு நிறைய தீர்வுகள் உள்ளன. உதாரணத்துக்கு, திரிபலா சூரணம். ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும், கொழுப்பு அதிகரிக்காமல் இருக்கவும் திரிபலா பயன்தரும். அதேபோல நத்தைச்சூரி சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதயத்தின் செயல்பாடுகளைச் சிறப்பாக்கும் மருதம்பட்டைச் சூரணம், வெண் தாமரை சூரணம் போன்ற மருந்துகளையும், சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம். திரிபலா பொடி வராது... ஆனா, வரும்!- 1: குழந்தைப்பருவ உடல் பருமன்... அடுத்த 5 வருடங்களில் காத்திருக்கும் ஆபத்து... புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்க்காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, மதிய உணவுக்கு புரோபயாடிக் சத்து நிறைந்த பானகம், பழைய சாத நீர், மோர் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம். செரிமான மண்டலத்துக்கு நலம் செய்யக்கூடிய கிருமிகளை அதிகரித்தாலே உடல் பருமன் வராமல் தடுக்கலாம் என்ற கருத்தும் சமீபகாலமாக வலுப்பெற்று வருகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்கு குறுக்கு வழிகளே கிடையாது. உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சி மிகமிக முக்கியம். உணவுக்கட்டுப்பாடும் அவசியம். மருந்துகள் என்பவை கூடுதலாகப் பலன் தரும், அவவ்ளவுதான். மருந்துகளை மட்டுமே நம்பி, அவை மட்டுமே உடல் பருமனில் இருந்து தீர்வளிக்கும் என்று நினைக்க வேண்டாம். உடல் பருமன் வராமல் தடுக்கும் கொள்ளு சட்னி, கொள்ளு துவையல், கொள்ளு ரசம் போன்ற இயற்கையிலேயே உடலில் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதும் பலன் தரும். கொள்ளு குழம்பு இன்றைய டிஜிட்டல் உலகில், உடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் மருந்துகளின் விளம்பரங்களை அதிகம் பார்க்க முடிகிறது. அவை, மலமிளக்கி போல செயல்படும். அதனால் உடல் எடை குறைந்தது போன்ற ஒரு மாயை ஏற்படும். மற்றபடி அது நிரந்தர தீர்வாகாது. தினமும் மலமிளக்கி எடுத்துக்கொள்வதெல்லாம் சரியான விஷயமல்ல. நீரைப் பெருக்கும் மருந்துகளும் அப்படித்தான்... உடலை லேசாக்கியது போல உணர்வோம். ஆனால், அவை உடல் எடையைக் குறைக்காது. எனவே, எந்தக் குறுக்கு வழியையும் நாடாமல், மருத்துவரின் வழிகாட்டுதலோடு இந்த விஷயத்தை அணுகுவதுதான் நிரந்தர பலன் தரும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்ய மருத்துவ உணவுகள்!
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வயிற்றைச் சுற்றி கடுமையான அரிப்பு; காரணமும் தீர்வுகளும் என்ன?
Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். வயிற்றைச் சுற்றிலும் அரிப்பு ஆரம்பித்திருக்கிறது. நாளாக ஆக இது அதிகரிக்கிறது. சொரிந்து சொரிந்து புண்ணாவதுதான் மிச்சம். இப்படிச் செய்தால் தழும்புகள் அதிகமாகும் என்கிறார்கள் சிலர். கர்ப்பகாலத்தில் இப்படி வயிற்றைச் சுற்றி அரிப்பு ஏற்பட என்னதான் காரணம். இதைக் கட்டுப்படுத்த வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படுகிற அரிப்பானது பொதுவான ஓர் அறிகுறியே. கர்ப்பத்தின் 6-வது மாதத்துக்குப் பிறகு இந்த அரிப்பு ஆரம்பமாகும். அதாவது வயிறு பெரிதாகத் தொடங்கும்போது, மெள்ள மெள்ள அரிப்பும் ஆரம்பமாகும். குழந்தை வளர, வளர வயிற்றுப் பகுதியில் உள்ள சருமம் விரிவடைகிறது. அதனால் சருமம் வறட்சியடையும். அதன் விளைவாக அரிப்பும் இருக்கும். தேங்காய் எண்ணெயோ, தரமான மாய்ஸ்ச்சரைசரோ தடவினாலே, இந்த அரிப்பிலிருந்து மீள முடியும். கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதியில் அதிகமான அரிப்புடன் உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளிலும் அரிப்பு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.இது 'கோலிஸ்டேசிஸ்' (Cholestasis) என்ற பிரச்னையாக இருக்கலாம். இது கல்லீரலில் ஏதோ பிரச்னை இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரலால் சில பொருள்களை வெளித்தள்ள முடியாதநிலையில், அந்தப் பொருள்கள் கல்லீரலில் சேகரமாகத் தொடங்கும். அதை 'பைல் ஆசிட்' (Bile acids) என்று சொல்வோம். இதன் அளவு அதிகமாகும்போதும் அரிப்பு இருக்கலாம். இதை ரத்தப் பரிசோதனையின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பிரச்னை கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால், இத்தகைய அரிப்பு அறிகுறியை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம். அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, தினமும் இருவேளை குளிக்க வேண்டும். பாலிமார்பிக் எரப்ஷன் (Polymorphic eruption) என்ற பாதிப்பு கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் வரும். இதனாலும் அரிப்பு இருக்கலாம். குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை தானாகச் சரியாகிவிடும். இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற பெரும்பாலான அரிப்பு, குழந்தை பிறந்து, தொப்புள்கொடி இணைப்பைத் துண்டித்ததும் தானாகச் சரியாகிவிடும். அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, தினமும் இருவேளை குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர்தான் பெஸ்ட். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். தளர்வான உடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளை ஒரு சைஸ் பெரிதாக வாங்கி அணிவது சௌகர்யமாக இருக்கும். கற்றாழை, மென்தால் உள்ள மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Myths and Facts: கர்ப்பிணிகள் டூ வீலர் ஓட்டலாமா?
இரவு 7 மணிக்குள் டின்னர்; கிடைக்கும் 10 பலன்கள்! எல்லோரும் ட்ரை பண்ணலாமே
எல்லா மருத்துவர்களும் தினமும் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடச் சொல்கிறார்கள். 6 - 7 மணிக்குள் இரவு உணவை முடிப்பது எல்லோருக்கும் சாத்தியமா? இதை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? சென்னையைச் சேர்ந்த வாழ்க்கை விதிமுறை மற்றும் ஆன்டி ஏஜிங் ஆலோசகரான டாக்டர் கெளசல்யா நாதன் அவர்களிடம் கேட்டோம். இரவு 7 மணிக்குள் டின்னர் 6 மணிக்கு டின்னர் சாத்தியமா? விடியற்காலையில் நீராகாரம் குடித்துவிட்டு விவசாய வேலைக்குச் சென்ற நம் முன்னோர்கள், காலையில் 10 - 11 மணி வாக்கில் மதிய உணவையும், மாலை 6 மணி வாக்கில் இரவு உணவையும் முடித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த உணவுமுறை ‘இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ (Intermittent fasting) என மருத்துவ வல்லுநர்களால் சொல்லப்படுகிறது. அந்த உணவுப்பழக்கம், இன்றைய வேகமான வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கும் சாத்தியப்படாது. இரவு உணவை கூடுமான வரை விரைவாக வேலை முடிந்து மாலை 7 மணிக்குள் வீடு திரும்பினாலும், அதற்குள் வீட்டில் உணவு தயாராக இருக்குமா என்பது விவாதத்துக்குரிய கேள்வியே. இதில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான நெருக்கடிகள் இன்னும் அதிகம். எனவே, வேலைக்குச் செல்வோர் உட்பட யாராக இருந்தாலும், குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் இரவு உணவை கூடுமான வரை விரைவாக முடிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். டாக்டர் கெளசல்யா நாதன் 4 - 6 வாரங்களில் பழக்கமாகிவிடும்! இரவு 6 - 7 மணிக்குள் டின்னரை முடிக்கும் உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க நினைப்பவர்கள், காலை 8 மணிக்குள் காலை உணவையும், பிற்பகல் 1 மணிக்குள் மதிய உணவையும் முடித்துவிட வேண்டும். இதற்கிடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைக் கூடுமானவரையில் தவிர்த்துவிட்டு, பசிக்கும் போது இளநீர், மோர், பழங்கள், ஜூஸ், உலர் பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். வாழைப்பழம் அல்லது அரை டம்ளர் பால் தூங்கச் செல்லும் முன்பு பசித்தால் வாழைப்பழம் அல்லது அரை டம்ளர் பால் எடுத்துக்கொள்ளலாம். சீக்கிரமே சாப்பிடுவதால் விரைவாகப் பசிக்குமோ என்று அதிக அளவில் சாப்பிடாமல், அந்த வேளை பசிக்கு ஏற்றவாறு அளவுடன் சாப்பிடுவதுதான் முறையானது. தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், 4 - 6 வாரங்களில் இந்த உணவுமுறைக்கு ஏற்ப உடல் பழகிவிடும். தூங்கச் செல்லும் முன்பு பசித்தால் வாழைப்பழம் அல்லது அரை டம்ளர் பால் எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியான உணவுமுறை! ‘6 மணிக்கு டின்னரை முடித்துவிட்டாலும், இரவு 10 மணிக்குப் பிறகுதான் தூங்குவேன், இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவேன்’ என்பவர்கள், இந்த உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமே இல்லை. நம் விருப்பத்துக்கு ஏற்ப மாறுபட்ட உணவு முறைகளையும் வாழ்வியல் முறைகளையும் கடைப்பிடிப்பது, உடலியல் கடிகார (Biological Clock) சுழற்சியை மாற்றி, உடல் நல பாதிப்புகளுக்கு வழிவகை செய்யும். அரை வயிறு மட்டுமே நிரம்ப வேண்டும். பசி எடுக்கும்போதுதான் சாப்பிட வேண்டும். அடிக்கடி வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கக் கூடாது. எந்த வேளை உணவாக இருந்தாலும், அரை வயிறு மட்டுமே நிரம்ப வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு, வயிற்றை மட்டுமே நிரப்புவதாக இல்லாமல், சமச்சீரான சத்துகள் நிறைந்த தாகவும் இருக்க வேண்டும். முடிந்தவரை குறிப்பிட்ட டயட் என இல்லாமல், தங்கள் உடல்நலனுக்கும் வாழ்க்கைச்சூழலுக்கும் உகந்த உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமாக வாழலாம்.” தூக்கம் இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் * செரிமான தொந்தரவுகள் குறையும். * உடல் எடை கட்டுக்குள் இருக்கும். * சீக்கிரமே தூங்குவது வழக்கமாகும். * ஆழ்ந்த தூக்கம் சாத்தியப்படும். * அடுத்தநாள் சீக்கிரமாக எழுந்திருக்கலாம். ’’உணவு கொடுக்கப் போறப்போ சின்னப் பசங்கள கூட்டிட்டுப் போவோம்; ஏன்னா...’’ - இது மதுரை மனிதாபிமானம்! * காலைக்கடனை எளிதாக முடித்து, தினப்பொழுதைப் புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம். * வாயுத்தொந்தரவுகள் கட்டுப்படும். * மூளையின் செயல்திறன் சீராக இருக்கும். * நீரிழிவு பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறையும். * ஒட்டுமொத்த உடலுறுப்புகளின் செயல்பாடுகளும் சீராகும். Health: உங்கள் ஆயுளை நீட்டிக்கும் உணவு ரகசியம் தெரியுமா? யாருக்கெல்லாம் சரிவராது? * அடிக்கடி தலைவலி அல்லது ஒற்றைத்தலைவலி பாதிப்பு இருப்பவர்கள். * நீரிழிவு நோயாளிகள். * இரவுப் பணிக்குச் செல்வோர் மற்றும் அடிக்கடி ஷிஃப்ட் மாறி வேலை செய்வோர். * 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறப்புக் குழந்தைகள். * மூத்த குடிமக்கள், உடல்நல பாதிப்புக்குச் சிகிச்சை எடுப்பவர்கள், இரவு உணவுக்கு முன்பும் பின்பும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோர் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, இந்த உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம்.
Doctor Vikatan: 20 வருடங்களாக சுகர் மாத்திரை, சுகர் குறைய இனி இன்சுலின் போட வேண்டுமா?
Doctor Vikatan: எனக்கு 20 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். என்னுடைய நண்பர் இனியும் மாத்திரை வேலை செய்யாது, இன்சுலினுக்கு மாறுங்கள் என்கிறார். இனி எனக்கு மாத்திரைகள் பலனளிக்காதா, நான் இன்சுலினுக்கு மாற வேண்டுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி 20 வருடங்களாக நீரிழிவுக்கு மாத்திரைகள் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று சொல்லவில்லை. 20 வருடங்கள் அல்ல, 40 வருடங்களாக நீரிழிவு இருந்தாலும், அதை நீங்கள் எந்த அளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் இதில் முக்கியம். ரத்தச் சர்க்கரை அளவானது, சாப்பாட்டுக்கு முன் 100-க்கு கீழும், சாப்பாட்டுக்குப் பிறகு அது 150-க்குக் கீழும் இருக்க வேண்டும். தவிர, ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவானது 7-க்குக் கீழும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருப்பதாக அர்த்தம். கூடவே, நீரிழிவுடன் தொடர்புடைய பிற சிக்கல்கள் இல்லாமல் இருக்கிறீர்களா என்பதும் முக்கியம். உதாரணத்துக்கு, கால்களில், கண்களில், சிறுநீரகங்களில், இதயத்தில் இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாதபட்சத்தில், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. ரத்தச் சர்க்கரை அளவு அதே சமயம், மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தாலும், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றாலோ, நீரிழிவால் வேறு பிரச்னைகள் புதிதாகச் சேர்ந்துகொண்டிருந்தாலோ உங்கள் சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்குத்தான் இன்சுலின் தேவைப்படும். அது எல்லோருக்கும் அவசியப்படாது. கணையத்தில் இன்சுலின் சுரப்பு எப்படியுள்ளது என்பதைப் பார்த்துவிட்டுதான் அது முடிவு செய்யப்படும். பொதுவாக, டைப் 1 நீரிழிவு பாதித்தோருக்கும், நீரிழிவால் வேறு சிக்கல்கள் இருப்போருக்கும் இன்சுலின் பரிந்துரைக்கப்படலாம். இன்சுலின் சுரப்பு அறவே இல்லாதவர்களுக்கும் அது பரிந்துரைக்கப்படும். மற்றபடி எல்லோருக்கும் தேவையில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கண் ஆபரேஷனுக்காக இன்சுலின் ஊசிக்கு மாற்றம்: இனி ஊசியா, மாத்திரையா.. எதைத் தொடர்வது?
Hair Dye & Hair Colouring: பின்பற்ற வேண்டிய எச்சரிக்கை வழிமுறைகள்! - நிபுணர் கைடன்ஸ்
ஹேர் கலரிங், இதனை சிலர் அழகிற்காக பயன்படுத்துகிறார்கள். சிலர் ஆசைக்காக பயன்படுத்துகிறார்கள். இதில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருக்கின்றன என தெரிந்தும், பின்விளைவுகளைத் தெரியாமல் பலர் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் வெள்ளை முடியின் நிறம் மாறுவதற்காக ஹேர் டை பயன்படுத்தினார்கள். தற்போது உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு ஹேர் கலரிங் செய்கிறார்கள். ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை குறித்த நமது கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அசோக். Hair Dye & Hair Colour ஹேர் கலரிங் செய்யும்போது நமது கூந்தலுக்கு என்ன ஆகிறது? நம்முடைய கூந்தலில் இயற்கையாகவே எண்ணெய் உற்பத்தி இருக்கும். ஹேர் கலரிங் செய்யும்போது, முடியின் இயற்கை நிறம் மாறி, தனது பளபளப்பு தன்மையை இழந்துவிடுகிறது. இவற்றில் இருக்கிற ரசாயனங்கள் முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி, அதன் இயற்கை நிறத்தையும் இயற்கை தன்மையையும் மங்கச் செய்துவிடும். அதன் பிறகு இந்த ரசாயனங்கள் கூந்தலில் வண்ண நிறங்களில் தெரியத் துவங்கும். ஹேர் கலரிங் செய்த பிறகு கூந்தலின் இயற்கை நிறத்தை திரும்பப் பெற முடியுமா? முன்பெல்லாம் வெள்ளை நிறத்தை மறைக்கவே ஹேர் டை பயன்படுத்துவார்கள். ஆனால், தற்போது இதனை ஒரு அழகுசாதனப் பொருளாகவே மாற்றிவிட்டார்கள். ஹேர் கலரிங்கில் வயலட், ப்ளூ, கிரீன், யெல்லோ என எண்ணிலடங்காத நிறங்கள் உள்ளன. தொடர்ந்து ஹேர் கலரிங் பயன்படுத்திக்கொண்டே இருக்கும்போது கூந்தலின் இயற்கை நிறத்தை அந்த ரசாயனக் கலவை எடுத்தபிறகே நாம் கூந்தலில் தடவிய கலரிங்கின் நிறம் தெரியத் துவங்கும். எனவே, முடியின் இயற்கை நிறத்தை மீண்டும் பெறுவது சாத்தியமற்றது. Hair Dye & Hair Colour தொடர்ந்து ஹேர் டை, ஹேர் கலரிங் உபயோகித்தால் என்ன ஆகும்? முதலில் மூச்சுத்திணறல், தோலில் எரிச்சல் உணர்வு, பார்வை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கான அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது. யார் ஹேர் டை, ஹேர் கலரிங் பயன்படுத்தக்கூடாது? உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சிறுநீரகம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், மூச்சு சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், சிறுவர்கள், ஏதேனும் அலர்ஜி உள்ளவர்கள் இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கெமிக்கல் ஹேர் டை எவ்வாறு நல்ல 'ஹேர் டை'யை கண்டறிவது? அமோனியா ஃப்ரீ (Ammonia Free) ஹேர் டை பாதுகாப்பானது. அதே அளவு பிபிடி ஃப்ரீ (PPD Free) ஹேர் டையாக இருக்க வேண்டியதும் முக்கியமானது. பாராபினலைன்டயாமின் (Paraphenylenediamine) என்பதன் சுருக்கமே பிபிடி (PPD). இவை ஸ்ட்ராங்க் கெமிக்கல்ஸ் என அழைக்கப்படும். இவை கூந்தலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும். இவற்றுக்கு பதில், மெடிக்கல் கிரேடு ஹேர் டையை வாங்கிப் பயன்படுத்தலாம். இளநரை உடையவர்கள் ஹேர் டை பயன்படுத்தலாமா? இளநரை உள்ளவர்கள் முதலில் அதன் காரணத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும் அம்மா, அப்பாவிற்கு இளநரை இருந்தால் பரம்பரை வழியாகவோ அல்லது இரும்புச்சத்து, புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவோ இளநரை ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு ஹேர் அயர்னிங் செய்வதன் காரணமாக, கூந்தல் அதன் தன்மையை இழந்து, நிறம் மாறத் தொடங்கிவிடும். எனவே இளநரைக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டாலே இதனைக் கட்டுப்படுத்திவிடலாம். இதற்காக ஹேர்டை பயன்படுத்தினால் உடல் சார்ந்த பிரச்னைகளை அதிகம் ஏற்படுத்தக்கூடும். மேலும் இவை நிரந்தரமான தீர்வல்ல. Eyes ஹேர் டை, ஹேர் கலரிங் பயன்படுத்தினால் கண்களுக்கு ஆபத்து வருமா? இவற்றில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்க்கால்கள் மூலம் உடலுக்குள் ஊடுருவி கண்களைச் சுற்றியுள்ள பகுதிக்கும், கண்களில் உள்ள நரம்பிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால், கண்பார்வை மங்கத் தொடங்கிவிடும். அப்படி இல்லையேல் இவற்றை பயன்படுத்திய பிறகு கூந்தலை சுத்தம் செய்யும்போது அந்த வேதிப்பொருட்கள் கண்களில் பட்டு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஹேர் டை பயன்படுத்தினால் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? எப்போதாவது பயன்படுத்தினால் இதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் வராது. ஆனால், தொடர்ந்து பயன்படுத்தினால் கண்பார்வை மங்குதல், நரம்புத்தளர்ச்சி, மூச்சுத்திணறல், முகத்தில் சுருக்கம், சுவாசக்கோளாறு, புற்றுநோய் போன்றவை வரக்கூடும். கர்ப்ப காலத்தில் ஹேர் டை பயன்படுத்தலாமா? கர்ப்ப காலத்தில் ஹேர் டை பயன்படுத்தலாமா? கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, குழந்தை பிறந்த பிறகும் ஹேர் டை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவை தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்குப் பதிலாக இயற்கை வழியில் மருதாணியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேர் டை பயன்படுத்தினால் முடி உதிருமா? நமது உடலில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும், முதலில் அது கூந்தல் உதிர்வதன் வழியேதான் தெரிய ஆரம்பிக்கும். தலைவலி, வயிற்று வலியிலிருந்து ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என அனைத்திற்குமே முதல் அறிகுறி முடி உதிர்தலே ஆகும். உடலில் சிறிய பாதிப்பு என்றாலே முடி உதிரத் துவங்கிவிடும், அதிலும் எண்ணில் அடங்காத வேதிப்பொருட்களை முடியில் பயன்படுத்தினால் கூந்தல் உதிராதா என்ன? நிச்சயம் உதிரும். பாதிப்பு இல்லாத ஹேர் பேக் உண்டா? பாதிப்பு இல்லாத ஹேர் பேக் உண்டா? ஹேர் பேக்கைப் பொறுத்தவரை இயற்கையானது, ரசாயனம் கலந்தது என இரு வகையாகப் பிரிக்கலாம். இயற்கையைப் பொறுத்தவரையில் மருதாணி, அவுரி போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை கூந்தலுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ரசாயனத்தைப் பொறுத்தவரை தற்காலிகமானது, நிரந்தரமானது என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அனைத்து நிரந்தரமான ஹேர் கலரிங் பேக்கிலும் அமோனியம் ஹைட்ராக்சைடு நிச்சயம் இடம்பெற்றிருக்கும். இவை கூந்தலுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும். இயற்கையாக நாமே வீட்டில் தயாரிக்கும் ஹேர் பேக் மட்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்காது. Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்? ரெடிமேட் ஹேர் டை வாங்கி வீட்டிலேயே பயன்படுத்தலாமா? இதனால் உங்களுக்கு பலன் கிடைப்பதைவிட பிரச்னை கிடைப்பதே அதிகமாக இருக்கும். ஹேர் டையைப் பொறுத்தவரை, அதில் உள்ள வேதிப்பொருட்களில் பல வேதிப்பொருள்கள் ஆக்டிவேட்டராகச் செயல்படும். இவையே கூந்தலுக்கு நிறங்களைக் கொடுப்பவை. அதிகமாக ஹேர் டை பயன்படுத்தினால் அதிகமாக நிறம் வரும் என நினைத்து, அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறானது. Hair fall: கொத்து கொத்தாக முடி உதிர்ந்தால் மறுபடியும் வளர வைக்க முடியுமா? பயிற்சிபெற்ற ஒருவரிடம் ஹேர் டையைக் கூந்தலில் அப்ளை செய்யச் சொல்லலாம். ஏனெனில் அவர்களுக்கு எந்த ரசாயனத்தை எந்த அளவிற்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியும். தவிர, ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் என்னென்ன பராமரிப்புகளைச் செய்ய வேண்டும் என்பதும் நிபுணர்களுக்கு நன்கு தெரியும். இதன் மூலம் முடியில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம். எனவே நாம் எந்த ஒரு ரெடிமேட் ஹேர் பேக்கையும் வீட்டிலேயே பயன்படுத்தக் கூடாது'' என்கிறார் அரோமா தெரப்பிஸ்ட் கீதா அசோக்.
சுகப்பிரசவம்; சிசேரியன் - எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? | காமத்துக்கு மரியாதை 262
குழந்தை பிறந்த பிறகு எத்தனை நாள் அல்லது எத்தனை வாரம் அல்லது எத்தனை மாதம் கழித்து உறவுக்கொள்ளலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதிலை சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். நார்மல் டெலிவரி; சிசேரியன்; எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்ளலாம்? ''இது முதலில் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. உறவுகொள்வது நல்லதுதான். செய்யாமல் இருந்தாலும் கெடுதல் இல்லை'' என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். வெறி நாய் கடிக்கும் - ஆணுறுப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை 260 பயந்து போய் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை... ''சிசேரியனோ அல்லது நார்மல் டெலிவரியோ, பெண்ணுறுப்பில் காயங்கள் ஆறுவதற்கும், அறுவை செய்த காயம் ஆறுவதற்கும், பெண்ணுறுப்பு இயல்பான அளவுக்கு வருவது வரைக்கும் உறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. இதற்கு ஒன்றரை மாதம், அதாவது, 6 வாரங்கள் இடைவெளிவிட வேண்டும். அதன்பிறகு, வழக்கம்போல தாம்பத்திய உறவில் இயல்பாக ஈடுபடலாம். ஒருவேளை பெண் களைத்துப் போயிருந்தாலோ அல்லது உடல் பலவீனமாக இருந்தாலோ அல்லது மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாலோ தவிர்த்து விட வேண்டும். பயந்து போய் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை. கணவன், மனைவி இருவருக்குமே உதவும் வைப்ரேட்டர் காண்டம்! - காமத்துக்கு மரியாதை 261 கணவன், மனைவியின் மனநிலையைப் பொறுத்தது! இன்னொரு முக்கியமான விஷயம், தாம்பத்திய உறவு என்றாலே பெனிட்ரேட் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரல் செக்ஸ், பரஸ்பரம் சுய இன்பம் செய்துகொள்வது என்றும் இருக்கலாம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, இது சம்பந்தப்பட்ட கணவன், மனைவியின் மனநிலையைப் பொறுத்தது'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சுத்திணறலுக்கு உடனடி தீர்வளிக்குமா தாளிசாதி எனும் சித்த மருந்து?
Doctor Vikatan: ஆஸ்துமா (Asthma) மற்றும் மூச்சுத்திணறல் (Shortness of Breath) உள்ளவர்கள், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் தாளிசாதி மாத்திரையோ, சூரணமோ தினமும் எடுத்துக்கொண்டாலே பிரச்னை சரியாகும் என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா, இதனால் உடனடி நிவாரணம் கிடைக்குமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் ஆஸ்துமாவின் தீவிரத்தைப் பொறுத்துதான் அதற்கான சித்த மருந்தை முடிவு செய்ய வேண்டும். ஆஸ்துமா பாதிப்புக்கு தாளிசாதி சூரணம் மிகவும் நல்ல மருந்து என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்துமா பாதித்தவர்கள், வளர்ந்த, பெரியவர்களாக இருக்கும்பட்சத்தில், தாளிசாதி சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்துக் கொடுக்கலாம். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற மூச்சுத்திணறல் என்பது எந்தக் காரணத்தால் ஏற்பட்டது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். வீஸிங் காரணத்தால் ஏற்பட்டதா, இதயத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதா என்பதை எல்லாம் பார்த்துதான் அதற்கான சரியான மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும். அதாவது, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப்பாதை தொடர்பான பிரச்னைகளுக்கு தாளிசாதி சூரணம் நன்கு வேலை செய்யும். வேறு காரணங்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு தாளிசாதி வேலை செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையோடு, தாளிசாதி சூரணம் சாப்பிடலாம். வெந்நீரில் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தேனில் கலந்து சாப்பிடும்போது அதன் பலன் சிறப்பாக இருக்கும். தாளிசாதி சூரணம் தாளிசாதியின் காரத்தன்மையை, தேனின் இனிப்பு குறைத்து, கேஸ்ட்ரைட்டிஸ் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்பதே காரணம். தொண்டைக் கமறல், எரிச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால், சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் என்ற மாத்திரை இருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பி சாப்பிடலாம். பயணம் செல்லும்போது ஏற்படும் தொண்டை பிரச்னைகளுக்கு மாத்திரைகளைத் தேடி ஓடாமல், தாளிசாதி வடக மாத்திரைகள் இரண்டை சப்பி சாப்பிட்டாலே பிரச்னை உடனே குறைவதைப் பார்க்க முடியும். இதே தாளிசாதி வடகத்தை இடித்து, வாய்க் கொப்பளிக்கவும் பயன்படுத்தலாம். தொண்டை எரிச்சலின் ஆரம்பநிலையிலேயே இதையெல்லாம் செய்தால், பாதிப்பு தீவிரமாகாமல் சரியாவதைப் பார்க்க முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். அருமருந்தான திரிபலா சூரணம்; யார், எப்படி பயன்படுத்த வேண்டும்?
அகர்பத்தி புகை: மூக்குக்கு வாசனையா, நுரையீரலுக்கு வேதனையா?
வீடுகளில் ஆரம்பித்து ஆன்மிகத் தலங்கள் வரைக்கும் அனைத்து இடங்களிலும் அகர்பத்தி பயன்பாடு இருக்கிறது. அகர்பத்தி புகை நம் ஆரோக்கியத்தில் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துமா என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம். அகர்பத்தி புகை ''வாசனைப் பொருள், மரத்தூள், பொட்டாசியம் நைட்ரேட், கரி மற்றும் கோந்து ஆகியவற்றை வைத்துதான் அகர்பத்தி தயாரிக்கிறார்கள். இந்த அகர்பத்தியை எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைட், ஃபார்மால்டிஹைட், நைட்ரஜன் டை ஆக்சைடு, பாலி அரோமேட்டிக் காம்பவுண்ட், பாலி சைக்ளிக் அரோமாட்டிக் காம்பவுண்ட், வொல்லாட்டைல் ஆர்கானிக் காம்பவுண்ட், பார்ட்டிகுலேட் மேட்டர் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிவருகின்றன. இவற்றை நாம் சுவாசிக்கும்போது சிலருக்கு ஒவ்வாமை நிகழலாம். சிலருக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய உணர்வு தோன்றலாம். சிகரெட்டுடன் ஒப்பீடு! சிகரெட்டை பயன்படுத்தும்போது, புகையிலை எரிக்கப்பட்டு கார்பன் டை ஆஸ்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற தேவையற்ற வாயுக்களை நம் நுரையீரலுக்கு கொண்டு செல்கிறோம். இதனால் நுரையீரலுக்குள் எரிச்சல் ஏற்படுகிறது. இதேபோல தான், நாம் அகர்பத்திப் புகையை சுவாசிக்கும்போதும் தேவையற்ற நச்சுக்களை சுவாசப்பாதையின் மூலம் நுரையீரலுக்குக் கொண்டு செல்கிறோம். இதுவும் நுரையீரலுக்கு எரிச்சலையே உண்டாக்குகிறது. ஒவ்வாமை ஆரோக்கிய பாதிப்புகள்! வீட்டில் அகர்பத்தியை தொடர்ந்து ஏற்றிக்கொண்டு வந்தால், அதை நுகரும் நபர்களுக்கு சுவாசப்பாதை சார்ந்த பிரச்னைகள், ஒவ்வாமை, எரிச்சல், தோல் மற்றும் கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த பிரச்னையான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease) ஆகியவை ஏற்படும். இவ்வளவு ஏன், நுரையீரல் புற்று வருவதற்குகூட வாய்ப்புள்ளது. அலர்ஜி இருப்பவர்கள் அகர்பத்திப் புகையை நுகர்வதால் உடனடியாக இருமல், தும்மல், கண் எரிச்சல், மூச்சு விடுதலில் சிரமம், ஏற்கனவே ஆஸ்துமா இருப்பின் மூச்சுத்திணறல், இளைப்பு நோய் ஆகியவை ஏற்படும். தவிர்க்க வேண்டிய சூழல்கள் வீட்டில் குழந்தைகள் குறிப்பாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியோர்கள், ஏற்கெனவே ஆஸ்துமா, அலர்ஜி இருப்பவர்கள் இருந்தால் வீட்டில் கட்டாயமாக சாம்பிராணியோ, அகர்பத்தியோ கொளுத்தக்கூடாது. அது அவர்களுக்கு தீவிர ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். டாக்டர் ஃபரூக் அப்துல்லா மாற்று வழிகள்! அடைத்திருக்கும் அறைகளிலோ, வீடுகளிலோ அகர்பத்தியை ஏற்றுவது தவறானது. வீட்டில் அகர்பத்தி எரிக்கும்போது கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். அந்தப் புகை வெளியேறுவதற்கான வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்த வேண்டும். சிறிய அறைகளில் ஏற்றுவதைக் காட்டிலும் நல்ல காற்றோட்டமான அறைகளில் அகர்பத்தியை ஏற்றலாம். Health: கிருமி நாசினி திரவம்... எப்படிப் பயன்படுத்துவது? இதற்குப்பதில், வீடு நறுமணமாக இருப்பதற்கு பூக்களைப் பயன்படுத்தலாம். பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட நறுமண எண்ணெய்களை பயன்படுத்தலாம். பூச்சிக் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? - அவசர கால மருத்துவர் ஆலோசனை மருத்துவ பரிசோதனை நீண்ட காலமாக அகர்பத்தி புகையை நுகர்ந்துகொண்டிருந்தீர்கள் என்றால், நுரையீரல் சிறப்பு நிபுணரை சந்தித்து உங்கள் நுரையீரல் தனது பணியை சரியாக செய்கிறதா என்று பரிசோதித்து கொள்ளவேண்டும். நுரையீரல் தன் பணியை சரியாக செய்யாதபட்சத்தில் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.
Doctor Vikatan: இதயத்தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் நகருமா, எவ்வளவு பாதுகாப்பானது?
Doctor Vikatan: இதயத்தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட்டை பிற்காலத்தில் அகற்ற முடியுமா, நடக்கும்போதும், ஓடும்போதும் ஸ்டென்ட் வேறு இடத்துக்கு நகர்ந்துபோக வாய்ப்பிருக்கிறதா?மெட்டலால் செய்யப்பட்டதுதானே ஸ்டென்ட் (stent). அது உடலுக்குள் இருப்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் நம்மில் பலரும் ஸ்டென்ட் பொருத்திக்கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. ஆனாலும், அதைக் கேட்டால் யார், என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் அப்படிக் கேட்பதைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் எல்லோரின் சார்பாகவும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். stent இதயத்தின் ரத்தக்குழாய்க்குள் ஸ்டென்ட் எனப்படும் கருவியை ஒருமுறை பொருத்திவிட்டால், அதை மீண்டும் வெளியே எடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுதான் உண்மை. அப்படியானால், அந்த ஸ்டென்ட் அங்கேயே இருக்குமா என்றால், ஆமாம்... அங்கேயேதான் இருக்கும். ஸ்டென்ட்டுகளில் லேட்டஸ்ட்டாக, தானாக உறிஞ்சப்படும், 'பயோ அப்சார்பபிள்' ஸ்டென்ட்டுகள் (bioabsorbable stent) வந்துள்ளன. அந்த வகை ஸ்டென்ட்டை உள்ளே பொருத்திவிட்டால், அது 6 முதல் 8 மாத காலத்திற்குள் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால், இந்த வகை ஸ்டென்ட்டில் சில சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பரிந்துரைப்பதில்லை. இது எதிர்பார்த்த அளவு ரிசல்ட்டையும் கொடுப்பதில்லை. தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. அது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிற உலோகம் என்பதால் பெரும்பாலும் பிரச்னைகளைத் தருவதில்லை. இதயத்தின் ரத்தக் குழாயில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட், நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றால் நகர வாய்ப்பே இல்லை. பொதுவாக, ஸ்டென்ட்டை உள்ளே வைத்து, பலூன் மூலம் விரிவடையச் செய்து, ரத்தக் குழாயினுள் நன்கு பதியும்படி செய்வதால், அது நகர்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்கள், அது குறித்த அறியாமையில் பயம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இதயநோயாளிகளுக்கு ‘ஸ்டென்ட்’சிகிச்சை, அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்களா பணத்தாசை பிடித்த மருத்துவர்கள்?
Doctor Vikatan: அதிகாலை முதுகுவலி, தூங்கி எழுந்த பிறகும் நீடிக்கிறது - தீர்வு என்ன?
Doctor Vikatan: நான் 35 வயது ஆண். எனக்கு தினமும் அதிகாலை 4 மணிக்கு முதுகுவலி வருகிறது. தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்வரையும் சில நேரங்களில் தூங்கி எழுந்திருந்த பிறகும் வலி தொடர்கிறது. தூக்கம் கெட்டுப்போனால் வலி இன்னும் அதிகரிக்கிறது. எனக்கு சுகர், பிபி போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வலியிலிருந்து மீள எனக்கு ஆலோசனை சொல்வீர்களா? - Krishnan Mani , விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் வலிகளில் பல வகை உண்டு. இன்ஃபெக்ஷனால் (Infection), அதாவது, கிருமித்தொற்றால் ஏற்படும் வலி, அடிபடுவதால் ஏற்படும் வலி, இன்ஃபளமேஷன் (Inflammation) எனப்படும் அழற்சி காரணமாக ஏற்படும் வலி என மூன்றாகப் பிரிக்கலாம். அடிபடுவதால் ஏற்படும் வலி, ஓய்வெடுக்கும் போது சரியாகிவிடும். அசைவுகளின் போது வலி இருக்கும். இன்ஃபெக்ஷனால் வரும் வலியில், அசைவுகளின் போதும் இருக்கும்... ஓய்வெடுக்கும் போதும் இருக்கும். அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி, ஓய்வில் இருக்கும்போது அதிகமாகவும், அசைவுகளின் போது குறைவாகவும் இருப்பதாக வித்தியாசமான அறிகுறியைக் காட்டும். இவற்றை வைத்துதான் வலியின் தன்மையைப் பிரிப்போம். அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி Doctor Vikatan: சிசேரியனுக்கு பிறகு அதிகரித்த முதுகுவலி, தீர்வு உண்டா? அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலி, அழற்சியால் ஏற்பட்டது போல தெரிகிறது. இதற்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும். முதுகுத்தண்டை சுற்றியுள்ள தசைகள் இறுகியிருக்கின்றனவா, அழற்சியால் ஏற்படும் ஸ்பாண்டிலைட்டிஸ் (Spondylitis) பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த டெஸ்ட்டுகளை பார்த்துவிட்டு, அழற்சி தான் காரணம் என உறுதியானால், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இல்லாத பட்சத்தில், இதை எளிதாக குணப்படுத்தி விடலாம், கவலை வேண்டாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
இளநரை முதல் முடி உதிர்வு வரை; கூந்தலைக் காக்கும் கீரை தைலம்!
''கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதைத் தடுக்கவும் பல வழிகள் உண்டு. தலைமுடியானது திடீரென ஏதோ ஒரு காரணத்தால் கருமை குறைந்து போகக்கூடும். இளநரைகூட எட்டிப் பார்க்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்குக் கைகொடுப்பவை கூந்தல் தைலங்கள். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, கருகருவெனவும் பராமரித்து, உங்கள் இளமையைத் துள்ள வைக்கும்'' என்கிற அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, வெட்டிவேர் தைலம் மற்றும் கீரை தைலம் தயாரிக்கும் முறையையும், அவற்றின் பலன்களையும் இங்கே விவரிக்கிறார். கூந்தல் தைலங்கள் வெட்டிவேர் தைலம் தயாரிப்பது எப்படி? ''வெட்டிவேர் (சிறுசிறு துண்டுகளாக) - 1 கப், ஜாதிக்காய் - 10... இவை இரண்டையும் முந்தைய நாள் இரவே காய்ச்சிய பசும்பாலில் ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து, இரண்டு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு, சட சடவென ஓசை வரும்வரை காய்ச்சி இறக்கினால் வெட்டிவேர் தைலம் தயார். பிறகு, அரை மூடி தேங்காயைத் துருவி, அரைத்து அடுப்பில் வைத்து எண்ணெய் பிரியும் வரை காய்ச்சி வடிகட்டி, இதை வெட்டிவேர் தைலத்துடன் சேருங்கள். இந்தத் தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக் கொள்ளலாம். தலையில் வியர்வையின் காரணமாக சுரக்கும் அதீத எண்ணெய் உறிஞ்சப்படுவதற்கு வெட்டிவேர் துணை புரியும். முடி வளர்ச்சியை ஜாதிக்காய் பார்த்துக் கொள்ளும். முடியை சீக்கிரமாக வளர வைக்கும் வேலையை பசும்பால் எடுத்துக் கொள்ளும். கருகருவென கூந்தலின் நிறத்தைப் பராமரிப்பது... தேங்காயின் வேலை. கூந்தல் தைலங்கள் கூந்தல் என்று இருந்தால் உதிராமல் இருப்பது என்பது அபூர்வம். கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதேசமயம், அதைத் தடுத்து நிறுத்தவும் பல வழிகள் உண்டு என்பதுதான் சந்தோஷமான விஷயம். அதில் ஒன்று, கீரை தைலம்! எண்ணெய்... ஹேர் பேக்... கொப்பரைத் தேங்காய்... ஆரோக்கிய கூந்தல் சீக்ரெட்ஸ்! கீரை தைலம் தயாரிப்பது எப்படி? அரைக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை இந்த ஐந்து இலைகளையும் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒரு நாள் வைத்திருந்தால்... தெளிந்துவிடும். தெளிந்த எண்ணெயை தனியாகப் பிரித்து சேமியுங்கள். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால்... கூந்தல் உதிர்வது நின்றுவிடும். அது எந்தக் காரணத்தினால் உதிர்ந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையை இந்தக் கீரைத் தைலம் பார்த்துக்கொள்ளும். Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யலாம்? அரைக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை சரியாகச் சாப்பிடாமல் ரத்தசோகையால் முடிகொட்டுகிறது என்றால், அதை அரைக்கீரை நிவர்த்தி செய்துவிடும். இந்தத் தைலத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை, இளநரைக்கு தடா போடும். உடல் உஷ்ணத்தால் முடி கொட்டிக் கொண்டி ருந்தால் அதை தடுத்து நிறுத்தும் வேலையை பொன்னாங்கன்னி பார்த்துக் கொள்ளும். பொடுகு அரிப்பினால் முடி வளர்வது தடைபட்டால், வெந்தயக்கீரை அதை நிவர்த்தி செய்வதோடு, மிருதுவாகவும் மாற்றி வைக்கும். உணவுப்பழக்கத்தாலும் முடி உதிர்வதுண்டு. இதன் காரணமாக முடி உதிராமல், கட்டுக்குள் கொண்டு வர கற்பூரவல்லி உதவும்'' என்கிறார் ராஜம் முரளி.
Doctor Vikatan: பல காலமாகச் செய்கிற, தெரிந்த வேலையில் திடீர் கவனமின்மையும் ஆர்வமின்மையும் ஏன்?
Doctor Vikatan: தெரிந்த பணிகளைச் செய்வதில் சில நேரங்களில் கவனமின்மையும் ஆர்வமின்மையும் ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம். இயல்பானதுதானா, எப்படித் தவிர்ப்பது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ் மனநல மருத்துவர் சுபா சார்லஸ் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயம், அனேக நபர்கள் எதிர்கொள்வதுதான். அது குறித்துப் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. மனது எப்போதும் புதுமையைத் தேடக்கூடியது. கிரியேட்டிவ் திங்கிங்கை எதிர்பார்க்கும் மனதுக்கு, தெரிந்த வேலையும், பல காலமாகப் பார்த்த வேலையும் சலிப்பை ஏற்படுத்துவது சகஜம்தான். தங்கள் தொழிலுக்காக பெரும்பான்மை நேரத்தைச் செலவழித்து, அதில் சிறந்த பெயரைப் பெற்ற பல நபர்கள், பொழுதுபோக்குக்காக ஹாபிஸ் என்ற பெயரில் பல விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவதைப் பார்க்கலாம். இது அவர்களுடைய தொழிலை சலிப்பின்றி தொடர, ஒருவித தெம்பையும் மனத்தெளிவையும் கொடுக்கும். பல திறமைகள் கொண்ட மனித மூளைக்கு, அவ்வப்போது ஒரு சவால் தேவைப்படுகிறது. வேலையில் சலிப்பு - ஏன்? Doctor Vikatan: வேலை ஸ்ட்ரெஸ்... ஒரு நாளைக்கு 8 முதல் 9 காபி, டீ... ஏதேனும் பிரச்னையா? இப்படிப்பட்ட கிரியேட்டிவ்வான, இலகுவான விஷயங்களில் கவனம் செலுத்தும்போது அந்தச் சவாலை எதிர்கொள்ள மூளை பழகுகிறது. அதன் செயல்திறன் பெருகிறது.தொழிலோ, வேலையோ... அதில் தொடர்ந்து 10 வருடங்கள் ஈடுபடும்போது அதில் ஒரு நிபுணத்துவம் ஏற்படுகிறது. சில இளைஞர்கள் கஷ்டப்பட்டு பல வருடங்கள் செலவழித்து மருத்துவம் படிப்பார்கள். பிறகு அதில் மேற்படிப்பும் படித்து போராடி, வாழ்க்கையில் முன்னேறி குறிப்பிட்ட மருத்துவப் பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்வார்கள். எல்லாம் முடிந்து, வாழ்க்கையில் செட்டில் ஆகும் அந்த நேரம் அவர்களுக்குத் தன் துறையில் ஒரு சலிப்பு தட்டும். மனது எதற்காகவோ ஏங்கும். கடன் வாங்கி மருத்துவமனை கட்டுவார்கள். சிலர் பங்குச் சந்தையில் ஈடுபடுவார்கள். அரசியலில் ஈடுபட்டு, புது அனுபவங்களைப் பெறுவார்கள். இப்படி ஏதேனும் விஷயங்களில் தங்களைத் திசைதிருப்பி கொண்டு, மீண்டும் தங்களுடைய பழைய பணியில் இன்னும் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வேலையில் சலிப்பு ஏற்படும்போது தற்காலிக திசைத்திருப்பலுக்காக கேம்ஸ் விளையாடுவோரைப் பார்க்கலாம். இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சகஜம்தான். ஆங்கிலத்தில் 'த்ரில் சீக்கிங் பிஹேவியர்' (Thrill-Seeking Behavior ) என்போம். வேலையில் போரடிக்காமல் இருக்க அதாவது, மனித மனமானது எப்போதும் சவாலான, வித்தியாசமான எதையோ தேடிக்கொண்டே இருக்கும். எனவே, வேலையில் சலிப்பு தட்டும்போது, அதை உங்கள் திறமைக்கும் செயல்திறனுக்குமான எண்ட் கார்டாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. உங்களை, உங்கள் மூளையை அப்டேட் செய்து கொள்ள, ரெஃப்ரெஷ் செய்துகொள்ள ஏதேனும் விஷயத்தில் கவனத்தைத் திருப்பி, எனர்ஜி பெற்று மீண்டும் உங்கள் வேலையைத் தொடரலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: ரெட் ஒயின் குடித்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
Doctor Vikatan: என் உறவினருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அவருக்கு உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ரெட் ஒயின் குடித்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என அவருக்கு யாரோ அறிவுறுத்தியதன் பேரில் இப்போது அடிக்கடி ரெட் ஒயின் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். இது உண்மையா, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம். கற்பகம், ஊட்டச்சத்து ஆலோசகர் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க வேண்டும் என்றால் முதலில் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகமிக முக்கியம். அடுத்தது இதயத்துக்கு நலம் சேர்க்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். அவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். மீன்கள், நட்ஸ், சீட்ஸ், தேங்காய் எண்ணெய், நார்ச்சத்துக்காக நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை முறைப்படி சேர்த்துக்கொண்டாலே, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் கெட்ட கொழுப்பு உள்ள உணவுகள், பேக்கரி உணவுகள், சர்க்கரை சேர்த்த உணவுகள், ஜூஸ் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். சுகர்ஃப்ரீ உணவுத்தேர்வுக்கு மாறுவது நல்லது. குடிக்கும் பானம், உண்ணும் உணவு என எல்லாவற்றிலும் சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. தினமும் 30 முதல் 45 நிமிங்கள் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும். அது வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங் என எதுவாகவும் இருக்கலாம். உடல்பருமன் அதிகரிக்காமல், பி.எம்.ஐ அளவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சில கிலோ எடை குறைவதுகூட உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்களைக் காட்டும். Brisk Walking அவள் பதில்கள் - 37 - ரெட் ஒயின் குடித்தால் சருமம் பளபளக்குமா? புகைப்பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்துங்கள். அந்தப் பழக்கம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை கட்டாயம் குறைத்துவிடும். குடிப்பழக்கமும் அப்படித்தான். ஆறு மாதங்களுக்கொரு முறை உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை டெஸ்ட் செய்து பாருங்கள். அது அதிகரிக்கும்போது இதயநோய் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். ரெட் ஒயின் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், ரெட் ஒயினில் பாலிஃபினால் (Polyphenol) எனும் தாவர வேதிப்பொருளின் அளவு கணிசமாக உள்ளது. அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், உங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க ஓரளவு உதவலாம். ஆனால், அதை மட்டுமே எடுத்துக்கொண்டால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் அளவுக்கதிகமாக எடுப்பதும் ஆபத்தானது. இது குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து, பிறகு முடிவெடுப்பதுதான் பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
சிறுநீர்ப்பாதைத் தொற்று வராமல் தடுக்குமா டாய்லெட் சீட் சானிட்டைசர்?
பொதுக்கழிவறைகள் என்றாலே அதில் கிருமிகள் அதிகமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தினால், சிறுநீர்ப்பாதைத் தொற்று கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்பதுதான் நம் எல்லோருடைய எண்ணமும். அது உண்மையும்கூட. அதே நேரம், இப்போது சிலர் டாய்லெட் சீட் மேல் அதற்கென தயாரிக்கப்படுகிற சானிட்டைசரை ஸ்பிரே செய்துவிட்டு பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதுபற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் மலர்விழி அவர்களிடம் பேசினோம். பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தினால் சிறுநீர்ப்பாதைத் தொற்று வருமா? பெண்களுக்கு இந்த நோய் தொற்றிக் கொள்வது சுலபம். பலரும் கழிப்பறைகளால் பரவும் என நம்பிக்கொண்டிருக்கும் சிறுநீர்ப் பாதைத் தொற்று (urinary tract infection or UTI) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். E.coli, Staphylococcus, Streptococcus போன்ற பாக்டீரியாக்கள் நம் சிறுநீர்ப்பாதைக்குள் நுழையும்போது ஏற்படுவதுதான் சிறுநீர்ப் பாதைத் தொற்று. அங்கிருந்து சிறுநீர்ப்பையைத் தாக்கி, அதிலிருந்து சிறுநீரகம் வரைக் கூட பரவ வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இந்த நோய் தொற்றிக்கொள்வது சுலபம். ஏனெனில் அவர்களின் சிறுநீர்க் குழாய் ஆண்களை விடச் சிறியது, மற்றும் ஆசனவாய் அருகில் உள்ளது. இதனால் கிருமிகள் ஊடுருவும் வாய்ப்பும் அதிகம். நம் உடலுக்குள்ளேதான் இவை அதிகம் வாழ்கின்றன. ஆனால், இந்த பாக்டீரியாக்கள் பற்றி நாம் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு கழிப்பறை இருக்கையின் மீது இருப்பதைவிட, நம் உடலுக்குள்ளேதான் இவை அதிகம் வாழ்கின்றன. ஆம்! நமது மலத்தில்தான் இந்த பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன. நாம் நம்மை சரியாக சுத்தம் செய்துகொள்ளாத நிலையில் நமது மலம் நம் சிறுநீர்க்குழாய்க்குள் செல்ல வாய்ப்புண்டு. இப்படி பலமுறை நடந்து, சற்று நேரத்திற்கு மலம் அங்கேயே இருந்தால்தான் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. டாக்டர் மலர்விழி நீண்ட நேரம் அடக்கி வைத்தால் அது இல்லாமல் மற்றொரு காரணம் என்னவென்றால், நாம் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருந்தாலும் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு. நம் உடலுக்குள் வரும் கிருமிகள் மலம், சிறுநீர் போன்ற கழிவுகள் மூலமாகவும், மூச்சுக்காற்று மூலமாகவும் தான் வெளியேற்றப்படுகின்றன. இதை சிறுநீர்ப் பாதையில் நீண்ட நேரம் அடக்கி வைத்தால் ஆபத்து. நேரத்திற்கு கழிவறைக்குச் சென்று, சுத்தமாகப் பராமரித்துக் கொண்டால், அச்சம் தேவையில்லை. பால்வினை தொற்று: `இதை மறைக்கக்கூடாது' - எப்படியெல்லாம் பரவும்? நிபுணர் விளக்கம் பல கிருமிகளால் பிழைக்கக்கூட முடியாது. இப்போது பொதுக் கழிவறைகளுக்கு வருவோம். ஆம், கிருமிகள் அக்கழிவறைகளில் இருக்கின்றனதான். ஆனால், நாம் அதை உபயோகிக்கும் சில நொடிகளில் அவற்றால் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது. ஏன், பல கிருமிகளால் மனிதருடைய உடலை விட்டு வெளியே வந்துவிட்டால் பிழைக்கக்கூட முடியாது. கோட்பாட்டளவில் கழிப்பறை இருக்கையில் இருந்து பரவக்கூடிய நோய்களின் சதவீதம் மிக மிகக் குறைவு. ஒருவேளை சிறுநீர்ப் பாதைத் தொற்று இருக்கும் ஒருவரின் சிறுநீர் அந்தக் கழிவறை இருக்கையில் மீதம் இருக்கும் பட்சத்தில் வாய்ப்புண்டு. Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன? ஆய்வகங்களில் கிருமிகளை கொல்வதற்கு பயன்படும்! இப்போது சானிட்டைசர் ஸ்பிரே பற்றி சொல்கிறேன். இந்த ஸ்பிரேவில் இருப்பது, ஐசோபுராப்பைல் ஆல்கஹால் (isopropyl alcohol or IPA). இது அறிவியல் படித்தவர்களுக்கு பரிச்சயமான பெயராகும். ஏனெனில் ஆய்வகங்களில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கொல்வதற்கு (sterilization) பயன்படுத்தப்படும் பொருள் இதுவே. இதில் வாசனைப் பொருட்களை சேர்த்து, ஸ்பிரே பாட்டிலில் அடைத்து மக்களிடம் விற்பனை செய்கிறார்கள். இந்த ஸ்பிரேவை பயன்படுத்துவதால் பயனே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், கழிவறை இருக்கைகளை தண்ணீரால் நன்கு சுத்தம் செய்தாலே போதும். இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுக் கழிவறைகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். கழிவறைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். தனி மனிதர்களின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மறந்தால், நாடும் குப்பை மேடு தான்'' என்கிறார் டாக்டர் மலர்விழி. Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?
Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?
Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வருவது ஏன்? பொதுவாக, கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் என எல்லா பாதிப்புகளும் வரும் என்று சொல்வார்கள். ஆனால், கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என ஒரு செய்தியில் படித்தேன். இந்த இரண்டில் எது உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். நீங்கள் கேள்விப்பட்ட இரண்டு தகவல்களுமே உண்மைதான். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதும் ஆபத்துதான், அது ஒரேயடியாகக் குறைவதும் பிரச்னைதான். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. நம்முடைய பேச்சு, கை, கால் அசைவு, பார்வை, கேட்பது, உணர்வது என எல்லாச் செயல்களும் மூளையின் மூலமே நடக்கின்றன. மூளையின் ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தடை ஏற்படும்போது, அதன் தாக்கத்திற்கேற்ப நம் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். உதாரணத்துக்கு, பேச்சில் பிரச்னை வரலாம், பார்வையில் பாதிப்பு வரலாம். கை, கால்களில் லேசான மரத்துப்போன உணர்வு ஏற்படலாம். பலவீனமாக உணரலாம். அதுவே ரத்தக்குழாய்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கும்போது உடலின் ஒரு பக்கம் முழுவதுமோ, இரு பக்கங்களுமோ செயலற்றுப் போகலாம். பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள் கிட்டத்தட்ட மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைப் போன்றவை தான். மூளைக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இப்படி மிகச் சாதாரணமானது முதல் மிக மோசமானது வரை பாதிப்பு எப்படியும் இருக்கலாம். சமீபகாலமாக இள வயதினரிடம் பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள் கிட்டத்தட்ட மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைப் போன்றவைதான். நான்கரை மணி நேரம் மட்டுமே அவகாசம், BE FAST எச்சரிக்கை! பக்கவாதம், காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்! வயதாகும்போது பக்கவாத பாதிப்பு அதிகரிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் இந்த ரிஸ்க் அதிகரிக்கிறது. புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன், உடல் இயக்கமற்ற வாழ்க்கைமுறை, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருப்பது போன்ற எல்லாமே பக்கவாத ரிஸ்க்கை அதிகரிக்கும் காரணிகள். மூளை எனவே, இவை தவிர்த்த ஆரோக்கிய வாழ்வியல் முறை பின்பற்றப்பட வேண்டும்.கெட்ட கொலஸ்ட்ரால் மூளைக்கு எப்படி ஆபத்தானதோ, அதேபோல கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக இருப்பதும் மூளைக்கு ஆபத்தானதுதான். அது குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஜப்பானியர்களிடம் மூளையில் ஏற்படும் இந்த பாதிப்பு மிக அதிகம். காரணம், அவர்களது அதீத ஆல்கஹால் பழக்கமும், மிகக் குறைவான கொலஸ்ட்ரால் அளவும்தான். இந்த விஷயங்களாலும் ஒருவருக்கு பக்கவாத பாதிப்பு வரலாம். எனவே, கொலஸ்ட்ரால் சரியான அளவில் தக்கவைத்துக் கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். அவ்வப்போது இந்த அளவுகளை டெஸ்ட் செய்து பார்த்துக்கொள்வது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Health: 'மூளை உழைப்பு... உடல் உழைப்பு...' - எத்தனை மணி நேரம் செய்யலாம்?
அலுமினிய பாத்திரங்களில் சமைப்பதில் என்னதான் பிரச்னை? நிபுணர் விளக்கம்!
அலுமினிய பாத்திரங்கள் இல்லாத இந்திய சமையலறையே இல்லை என்று கூறக்கூடிய அளவிற்கு அலுமினிய குக்கர்களும், வாணலிகளும் நமது அன்றாட வாழ்வில் பங்களித்து வருகின்றன. குறைவான எடை, மலிவான விலை என அலுமினியப் பொருட்களை வாங்க வரிசையாக காரணங்களை அடுக்கலாம். ஆனால், அலுமினிய பாத்திரங்கள் வாங்கும்போதும், பயன்படுத்தும்போதும் கவனம் மிக முக்கியம். குக்கர் அங்கீகாரமில்லாத அலுமினிய குக்கர் மும்பையைச் சேர்ந்த ஐம்பது வயது நபர் ஒருவர், சமீபத்தில் மறதி, சோர்வு, காலில் வலி மற்றும் உணர்வின்மை போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், அவரது ரத்தத்தில் ஒரு டெசிலிட்டருக்கு 22 மைக்ரோகிராம் அளவு லெட் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த உலோகம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர் விசாரித்ததில், அவரின் மனைவி இந்தியத் தர நிர்ணயப் பணியகத்தின் (Bureau of Indian Standards - BIS) அங்கீகாரமில்லாத அலுமினிய குக்கர் ஒன்றை இருபது வருடங்களாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம், அலுமினியப் பயன்பாட்டாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்தலாமா? அப்படிப் பயன்படுத்தினால் எப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நீரிழிவு நோய் நிபுணர் பவித்ரா தமிழரசன் விளக்குகிறார். நீரிழிவு நோய் நிபுணர் பவித்ரா தமிழரசன் பழைய அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது “அலுமினிய பாத்திரங்களில் சமைப்பதில் ஆபத்து இருக்கிறது என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முடிந்தவரை அலுமினிய பாத்திரங்களைத் தவிர்த்துவிட்டு இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகங்களுக்கு மாறிவிடுவது நல்லது. பழைய அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும்போது தேய்மானம், உணவில் இருக்கும் அமிலம் ஆகிய காரணங்களால் அலுமினிய துகள்கள் உணவில் கலக்கின்றன. அது உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து நச்சுத்தன்மை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் அதிக அளவு அலுமினியம் கலக்கும்போது, எலும்பு, சிறுநீரகம், மூளை போன்ற பாகங்களை பாதிக்கிறது. மேலும், மறதி, குழப்பம், பேசுவதில் சிக்கல், வலிப்பு, நரம்பியல் நோய்கள், ரத்தசோகை, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, கோமா என்று உயிரிழப்புவரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கிரே வாட்டர், ஒயிட் வாட்டர், பிளாக் வாட்டர்... தண்ணீர் சிக்கனத்துக்குச் சில வழிகள்! #SaveWater செய்யப்பட வாய்ப்புள்ளது. சான்றிதழ் பெறாத அலுமினிய குக்கர்களில் லெட் கலப்படம் லெட் அளவு ரத்தத்தில் அதிகமானால், இந்த பாதிப்புகள் கூடவே மலட்டுத்தன்மையும் ஏற்படும். பொதுவாக அலுமினிய குக்கரில் லெட் இருக்காது. அது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. BIS சான்றிதழ் பெறாத அலுமினிய குக்கர்களில் லெட் கலப்படம் செய்யப்பட வாய்ப்புள்ளது. லெட் போன்ற மிகவும் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் சமையல் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது மிகவும் அபாயம் வாய்ந்தது. முறையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படாத அலுமினிய குக்கர்களில் உள்ள அலுமினியம் மறுசுழற்சி செய்யப்பட்டவை. அவற்றில் லெட் போன்ற உலோகக் கலப்படங்கள் இருக்க வாய்ப்பு அதிகம். முறையான தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதே இதற்கான சரியான தீர்வாக இருக்கும்'' என்றவர், அதுவரை நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள பின்பற்றவேண்டிய வழிமுறைகளையும் சொன்னார். ``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்வறிக்கை சொல்வதென்ன? வேண்டும். அலுமினியம் ஃபாயில் பயன்பாட்டையும் குறைத்துக்கொள்ள · BIS முத்திரையுள்ள அலுமினிய சமையல் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். · பாத்திரத்தில் தேய்மானம், கீறல்கள் தென்பட்டால் உடனே அதனை மாற்றிவிட வேண்டும். · அலுமினிய பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது எலுமிச்சை பயன்படுத்தி அழுத்தி தேய்த்து கழுவுவதை தவிர்க்க வேண்டும். · குளிர்சாதனப்பெட்டியில் அலுமினிய பாத்திரங்களில் உணவுகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். · அலுமினியம் ஃபாயில் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். · இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்றவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.
Apollo: பரம்பரை புற்றுநோய்; விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் அப்போலோ கேன்சர் சென்டர்
புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவின் முதன்மை வலையமைப்பாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), பரம்பரை புற்றுநோய் விழிப்புணர்வு வார அனுசரிப்பின்போது, மரபணுக்கள் காரணமாக ஏற்படும் பரம்பரை புற்றுநோய்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது. மரபணு சோதனை மற்றும் தன்முனைப்புடன் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஸ்க்ரீனிங் பரிசோதனைகள் வழியாக ஆரம்ப நிலையிலேயே இத்தகைய புற்றுநோயைக் கண்டறிவதை வலியுறுத்துவது மீது இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பரம்பரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் சாத்தியமுள்ள குடும்பங்களுக்கு இது குறித்த அறிவை வழங்குவதும், அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்கான திறனை வழங்குவதும் இந்த விழிப்புணர்வு திட்டத்தின் நோக்கமாகும். உரிய நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது உயிரைப் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்துவது இந்த பரப்புரை திட்டத்தின் ஒரு அங்கமாகும். பரம்பரை புற்றுநோய்கள், பெற்றோர்களிடமிருந்து அவர்களின் பிள்ளைகளுக்குக் கடத்தப்படுகிற பரம்பரையான மரபணு பிறழ்வுகளினால் உருவாகின்றன. இந்த மரபணு பிறழ்வுகள், புற்றுநோய் ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பை அதிகரிக்கின்றன என்ற போதிலும், அவற்றை உறுதி செய்வதில்லை. இத்தகைய மரபணு பிறழ்வுகள், நம் உடலில் செல் வளர்ச்சி, பழுதுநீக்கல் மற்றும் புற்றுக்கட்டியை ஒடுக்குவதற்குப் பொறுப்பான மரபணுக்களைச் சீர்குலைக்கின்றன. உலக அளவில் பரம்பரை புற்றுநோய்கள், ஒட்டுமொத்த புற்றுநோய்களில் ஏறக்குறைய 5–10% பங்கினைக் கொண்டிருக்கின்றன ( PMC.NCBI ). பெரும்பாலான புற்றுநோய்கள் வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் காரணிகள் அல்லது யதேச்சையான பிறழ்வுகளின் காரணமாக ஏற்படுகின்றன. பொதுவான பரம்பரை புற்றுநோய் நோய்த்தொகுப்புகளில் பரம்பரை மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் (HBOC) , லிஞ்ச் சிண்ட்ரோம் மற்றும் குடும்ப ரீதியிலான நாளக்கட்டிகள் ஆகியவை உள்ளடங்கும். இந்தியாவில் 2020-ம் ஆண்டில் (குளோபோகேன் அறிக்கை) மார்பக புற்றுநோய் 1,78,361 நபர்களுக்கும் மற்றும் கருப்பை புற்றுநோய் 45,701 நபர்களுக்கும் கண்டறியப்பட்டது. இவற்றுள் 10%-க்கும் அதிகமானவை BRCA1 மற்றும் BRCA2 மரபணு பிறழ்வுகளுடன் தொடர்புடையவை. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்தப் பிறழ்வுகளின் விகிதம் 2.9% லிருந்து 28% ( IJMIO ) வரை மாறுபடுகிறது. HBOC உடன் தொடர்புடைய பிற மரபணு பிறழ்வுகள் தொடர்ந்து குறைவாகவே அறியப்படுகின்றன. மலக்குடல் புற்றுநோய்களில் 2-3 % ஐ ஏற்படுத்தும் லிஞ்ச் சிண்ட்ரோம் ( ScienceDirect ), கருப்பை உள்வரிச்சவ்வு, வயிறு, கணையம், கருவகம், சிறுநீர்ப்பாதை மற்றும் இன்னும் பலவற்றில் புற்றுநோய்களுக்கு அதிகரித்த இடர்வாய்ப்புகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. குடும்ப ரீதியான நாளக்கட்டிகள் (FAP) என்பது, ஒரு அரிதான, மரபு வழியான பாதிப்பாகும்; எண்ணற்ற முன்பெருங்குடல் கட்டிகளை இது விளைவிப்பதோடு, 40 வயதிற்குள் மலக்குடல் புற்றுநோய்க்கு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட இடர்வாய்ப்பை இது விளைவிக்கிறது. இது குறித்து இந்தியாவில் மிகக்குறைவான தரவுகளே கிடைக்கப்பெறுகிறது ( NCBI ). cancer cells இந்த பின்னணியில், சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிகிச்சை நிகழ்வை கையாண்டது. இதில் கௌஹாத்தியைச் சேர்ந்த, இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களுக்கு 'லிஞ்ச் சிண்ட்ரோம்' (Lynch syndrome) தொடர்பான புற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயாரான திருமதி நமிதா டே, 2011-ம் ஆண்டில் தனது 50 -வது வயதில் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்றார். அவரது மகள், திருமதி தீபா கோஷ், தனது 26வது வயதில் சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2012-ல் சிகிச்சை பெற்றார். மிக சமீபத்தில், அவரது மற்ற இரு பிள்ளைகளான திருமதி ஷிகா சர்க்கார் மற்றும் திரு. மதுரா நாத் டே ஆகிய இருவரும் தங்களது 40-வது வயதில் வலது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2024-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த நால்வரும் தற்போது நலமாக உள்ளனர். சரியான நேரத்தில் செய்யப்படும் இடையீட்டு நடவடிக்கையும், அறுவை சிகிச்சை பராமரிப்பும் சிகிச்சை விளைவுகளை சிறப்பானதாக ஆக்குகின்றன; ஒரு சிறந்த, தரமான வாழ்க்கையை வாழ உரிய நேரத்தில் பெறப்படும் சிகிச்சை வழிவகுக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த குடும்ப நபர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து பேசிய சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் வெங்கட் P கூறியதாவது, “புற்றுநோய் எப்போதும் தற்செயலாக ஏற்படுவதில்லை என்பதை இந்த நேர்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இது பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது மற்றும் தலைமுறைகளாக குடும்ப உறுப்பினர்களுக்கு கடத்தப்படக் கூடியது. ஒரு குடும்பத்தில் பல உறுப்பினர்கள் பாதிக்கப்படும்போது, மரபணு காரணிகள் இதில் பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு வலுவான அறிகுறியாகும். இதுபோன்ற அதிக இடர்வாய்ப்புள்ள குடும்பங்களில், மரபணு ஆலோசனை மற்றும் முன்னெச்சரிக்கையாக தன்முனைப்புடன் செய்யப்படும் பரிசோதனைகள் விலைமதிப்பற்றவையாக அமைகின்றன. நோய் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியக்கூறு உள்ள நபர்களை அடையாளம் காண உதவுவதோடு, தடுப்பு அல்லது ஆரம்ப சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவை வழிவகுக்கின்றன. இதன் மூலம் நோயாளிகள் குணமடைவதற்கும், உயிர்வாழ்வதற்கும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தைப் பெறுவதற்கும் சிறந்த வாய்ப்பை இவை வழங்குகின்றன.” சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பிரியா கபூர் பேசுகையில், “ மலக்குடல், கருப்பை அல்லது கருப்பை உள்வரிச்சவ்வில் புற்றுநோய்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கும் குடும்பங்கள் அவர்களின் மருத்துவ வரலாற்றை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் மற்றும் இந்த புற்றுநோய் பாதிப்புகளை யதேச்சையானது என்று அலட்சியம் செய்யக்கூடாது. ஒரே குடும்பத்தில் பலருக்கு புற்றுநோய் வந்த வரலாறு, மரபணு ரீதியில் ஏற்படும் பரம்பரை புற்றுநோய் நோய்க்குறியின் முதல் சுட்டிக்காட்டல் அம்சமாக பெரும்பாலும் இருக்கிறது. இத்தகைய இடர்வாய்ப்பில் இருப்பவர்களை அடையாளம் காண்பதில் அத்தியாவசியமான முதல் நடவடிக்கையாக மரபியல் பரிசோதனையும் மற்றும் கட்டமைக்கப்பட்ட கண்காணிப்பு திட்டங்களும் இருக்கிறது. திட்டமிட்ட கால அளவுகளில் கொலனோஸ்கோப்பி, உரிய நேரத்தில் நாளக்கட்டிகளை அகற்றுவது மற்றும் சில நேர்வுகளில் முன்தடுப்பு அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வது, புற்றுநோய்கள் முழுமையாக வளர்ந்து பெரிதாவதற்கு முன்பு இடையீட்டு சிகிச்சையை வழங்க எங்களுக்கு உதவுகிறது. இதன்மூலம் உயிர்களை காப்பாற்ற உதவ முடியும். குடும்பங்கள் மீது சுமத்தப்படும் உணர்வு ரீதியான மற்றும் உடல் ரீதியான கடும் சுமையைக் குறைக்க முடியும்.” என்று கூறினார். இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நோயாளி இது குறித்து கூறியதாவது: “புற்றுநோயானது எங்களது குடும்பத்தில் ஒருவரை மட்டுமின்றி, எங்கள் நால்வரையும் பாதித்தபோது பெரும் அச்சுறுத்தலாக எங்களை மிரள வைத்தது. ஆனால், அப்போலோ கேன்சர் சென்டரில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சையின் மூலம் உதவுவதோடு, தங்களது பணியை மட்டுப்படுத்தாமல், எமது சிகிச்சை பயணத்தில் ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டலையும், கனிவையும் வழங்கினர். இன்றைக்கு நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்; இதற்கு முன்பு இருந்த அச்சத்திற்குப் பதிலாக, நம்பிக்கையையும், தைரியத்தையும் கொண்டவர்களாக நாங்கள் வாழ்கிறோம். குடும்பங்களில் பரம்பரை நோயாக புற்றுநோய் ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் பெறப்படும் சிகிச்சை அதன் பாதிப்பை அகற்றி, மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கும் என்பதை அப்போலோவின் சிகிச்சை எங்களுக்கு காட்டியிருக்கிறது.” cancer சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் – ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு, கரண் பூரி பேசுகையில், “அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் – ல் எமது அர்ப்பணிப்பும், பொறுப்புறுதியும் மேம்பட்ட நவீன சிகிச்சையை வழங்குவது என்பதையும் கடந்து பயணிப்பதாக இருக்கிறது. மரபியல் ரீதியாக, பரம்பரை நோயாக வரக்கூடிய புற்றுநோய்கள் மீது சரியான தகவலை வழங்கி, விழிப்புணர்வை பரப்புவதும் எமது பொறுப்பு என்று நாங்கள் கருதுகிறோம். பெரும்பாலான நேரங்களில், தங்களது குடும்பங்களில் பல உறுப்பினர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் வரை தங்களது மரபணுக்களில் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை உருவாக்கும் மரபணு பிறழ்வுகள் இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. இது குறித்த விழிப்புணர்வு உரிய நேரத்தில் எடுக்கப்படும் சிகிச்சை நடவடிக்கையோடு இணையும்போது புற்றுநோயை வெல்வதற்கான வலுவான ஆயுதமாக அது மாறுகிறது.” என்று கூறினார். பரம்பரை புற்றுநோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதில் ACC – ன் இந்த நிகழ்வு முன்னிலைப்படுத்தியது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர்களின் விளக்க உரைகளும் மற்றும் நோயாளிகளின் நிஜ வாழ்க்கை வரலாறுகளின் பகிர்வுகளும் இதில் இடம்பெற்றன. இந்த சீரிய முயற்சிகளின் வழியாக, பரம்பரை புற்றுநோய் குறித்த கல்வியறிவை வழங்குவதிலும் மரபணு ரீதியிலான இடர்வாய்ப்பு பற்றி விழிப்புணர்வை அதிகரிப்பதிலும், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது மற்றும் தன்முனைப்புடன் சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதிலும் தனது தலைமைத்துவ நிலையை ACC தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது; இந்தியாவெங்கிலும் நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பையும் இந்த முன்னெடுப்புகளின் மூலம் அது நிரூபிக்கிறது. cancer disease புற்றுநோயை வெல்வோம் அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https://apollocancercentres.com/ புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 400-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது. Apollo cancer centres இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம்.
Doctor Vikatan: குடும்பநல மருத்துவர்; சரியான நபரை எப்படித் தேர்ந்தெடுப்பது?
Doctor Vikatan: குழந்தைகள் முதல் வீட்டிலுள்ள பெரியவர்கள்வரை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படும்போது, உடனே அணுகும்படி குடும்பநல மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று பலரும் சொல்கிறார்கள். குடும்பநல மருத்துவரை எப்படித் தேர்வு செய்வது... அவர் சரியான நபர்தான் என்பதை எப்படி உறுதிசெய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் புதிதாக ஓரிடத்துக்குக் குடிபோகிறீர்கள் என்றால், அந்தப் பகுதியில் மக்கள் அதிகம் நாடிச்செல்லும் மருத்துவர், நிச்சயம் நம்பகமான குடும்பநல மருத்துவராக இருப்பார். ஒரே ஏரியாவில் இரண்டு, மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் சிகிச்சை பெற்றுதான் எந்த மருத்துவர் பெஸ்ட் என முடிவு செய்ய வேண்டும். நோயாளியின் நலனில் அக்கறை செலுத்துபவராக இருக்க வேண்டியது முக்கியம். தேவைப்படும் பட்சத்தில் முன்கூட்டியே டெஸ்ட் எடுக்கச் சொல்வது, அந்த டெஸ்ட் எடுக்கப்படுவதன் நோக்கம் சொல்வது, நோய் குறித்து விளக்குவது, அது வராமல் தடுப்பதற்கான வழிகளைச் சொல்வது போன்றவற்றை எல்லாம் புரியும்படி சொல்பவர், நிச்சயம் நல்ல மருத்துவராகவே இருப்பார். மிக முக்கியமாக, நோயாளியை பயமுறுத்தாமல், அதே சமயம் நோய் குறித்த தெளிவை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். சரியான குடும்பநல மருத்துவரிடம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் சிகிச்சை பெறலாம். என்ன நோய்... எந்த டாக்டர்? - 1 - உங்களுக்காக ஒரு கிளினிக் கைடு ஏற்கெனவே சொன்னபடி, ஒரே பகுதியில் இரண்டு, மூன்று மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால், உங்களுக்கு அவர்களில் யாரைப் பிடிக்கிறது என்று பார்த்து முடிவு செய்யலாம். சிலர் நிறைய பேசுவது உங்களுக்குப் பிடிக்கலாம். சிலருக்கு அதுவே பிடிக்காமல் போகலாம். எனவே, அது உங்கள் தனிப்பட்ட தேர்வு. நீங்கள் தேர்வு செய்கிற மருத்துவர், விலை அதிகமான மருந்துகளைப் பரிந்துரைக்கிறாரா, விலை மலிவான மருந்துகளைக் கொடுக்கிறாரா, அவரது சிகிச்சையில் உடனே உடல்நலம் பெறுகிறதா என்றெல்லாம் பாருங்கள். ஊசி தேவையில்லை எனும் பட்சத்தில் அதைத் தவிர்ப்பவர் நல்ல மருத்துவராக இருக்கலாம். மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்பதில், மக்களுடைய மிகப் பெரிய கவலையே மருத்துவர் கட்டணம்தான். எனவே, உங்கள் ஏரியாவில் உள்ள மருத்துவர்களில் யார் நியாயமான கட்டணம் வாங்குகிறார்கள் என்று பார்த்தும் தேர்ந்தெடுக்கலாம். எனவே, மருத்துவரை அணுகும்போது அவர் உங்களை எப்படி நடத்துகிறார், அவரது சிகிச்சை உங்களுக்கு எந்த அளவுக்கு நிறைவைத் தருகிறது என்றெல்லாம் பாருங்கள். Doctor குடும்பநல மருத்துவர் என்பவர், நல்ல சிகிச்சையைக் கொடுப்பவர் மட்டுமல்ல, இந்தப் பிரச்னைக்கு இந்த மருத்துவரைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என பரிந்துரைப்பவராகவும் இருக்க வேண்டும். அப்படி அவர் பரிந்துரைக்கும் மருத்துவரும் நன்றாகப் பேசக்கூடிய, நோய் குறித்து விளக்கக்கூடிய, குறைவான கட்டணம் வாங்கக்கூடியவராக இருப்பார். சரியான குடும்பநல மருத்துவரிடம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் சிகிச்சை பெறலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

29 C