SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்; களைகட்டிய நிகழ்ச்சிகள் - Album

கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா

விகடன் 14 Jan 2026 3:11 pm

Miracle Baby: இத்தாலி கிராமம் - 30 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள குழந்தை; இதுவரை ஏன் பிறப்பில்லை?

இத்தாலியில் உள்ள சிறிய மலைக்கிராமம் பாக்லியாரா டெய் மார்சி (Pagliara dei Marsi). இங்கே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளது. இது அந்த கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக குழந்தை பிறப்பு இல்லை. இதற்குக் காரணம் எந்த மருத்துவ அல்லது சுற்றுச்சூழல் பிரச்னையும் அல்ல. வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளுக்காக இளம் வயதினர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததன் விளைவாக, இந்தக் கிராமத்தில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. Miracle Baby Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to தற்போது இந்த கிராமத்தில் வசிப்போர் எண்ணிக்கை சுமார் 20 பேர் மட்டுமே; பெரும்பாலோர் முதியவர்கள். இந்தச் சூழலில், 2025 மார்ச் மாதத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு லாரா புஸ்ஸி டிராபுக்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது. அவளது பெற்றோர் பாவ்லோ புஸ்ஸி (56) மற்றும் சின்சியா டிராபுக்கோ (42). இருவரும் முன்பு நகரத்தில் வசித்து வந்தவர்கள். பின்னர் கிராம வாழ்க்கையைத் தேர்வு செய்து அங்கு குடியேறி குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்தில் பிறந்த குழந்தையாக இருப்பதால், மக்கள் அவளை 'மிராக்கிள் பேபி' என்று அழைக்கின்றனர். தேவாலயத்தில் நடைபெற்ற பெயர் சூட்டு விழாவில், கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குழந்தை தொடர்பான நிகழ்வாக இது அமைந்துள்ளது. இந்தச் சம்பவம், இத்தாலியில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் கிராமப்புற மக்கள் தொகை சரிவு போன்ற பிரச்சினைகளை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியின் பிறப்பு விகிதம் குறைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக சிறிய கிராமங்கள் காலப்போக்கில் வெறிச்சோடிப் போகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க!

விகடன் 14 Jan 2026 12:02 pm

ஈரோடு: சிலம்பம் சுற்றி, கயிறு இழுத்த ஆட்சியர்... களைகட்டிய பொங்கல் விழா | Photo Album

ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்

விகடன் 13 Jan 2026 6:36 pm

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் - மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் ராணிக்கு அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இக்காதல் அவர்களுக்குள் 5 ஆண்டுகளாக இருந்தது. இது வெளியில் தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக நடந்து வந்தது. குந்தன் ஒவ்வொரு முறையும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாட்சி கையெழுத்து போட்ட கணவன் ஆனால் அடிக்கடி ராணி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், காதலனுடன் வெளியேறுவதாகவும் இருந்தார். இதனால் இனியும் ராணியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த குந்தன் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். இது தொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து வீட்டில் தெரிவித்துவிட்டு இருவரையும் கோர்ட்டிற்கு அழைத்து சென்ற குந்தன் அவர்களுக்கு கோர்டில் பதிவு திருமணம் செய்து வைத்தார். அவர்களது திருமணத்திற்கு குந்தன் தான் சாட்சிக்கையெழுத்து போட்டார். அவர்கள் திருமணமாகி சென்றபோது அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்தார். ஆனால் மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக்கொள்வதாக குந்தன் தெரிவித்துவிட்டார். இதனால் இப்போது மூன்று குழந்தைகளும் குந்தனுடன் இருக்கிறது.

விகடன் 10 Jan 2026 5:30 pm

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் - மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் ராணிக்கு அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இக்காதல் அவர்களுக்குள் 5 ஆண்டுகளாக இருந்தது. இது வெளியில் தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக நடந்து வந்தது. குந்தன் ஒவ்வொரு முறையும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாட்சி கையெழுத்து போட்ட கணவன் ஆனால் அடிக்கடி ராணி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், காதலனுடன் வெளியேறுவதாகவும் இருந்தார். இதனால் இனியும் ராணியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த குந்தன் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். இது தொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து வீட்டில் தெரிவித்துவிட்டு இருவரையும் கோர்ட்டிற்கு அழைத்து சென்ற குந்தன் அவர்களுக்கு கோர்டில் பதிவு திருமணம் செய்து வைத்தார். அவர்களது திருமணத்திற்கு குந்தன் தான் சாட்சிக்கையெழுத்து போட்டார். அவர்கள் திருமணமாகி சென்றபோது அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்தார். ஆனால் மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக்கொள்வதாக குந்தன் தெரிவித்துவிட்டார். இதனால் இப்போது மூன்று குழந்தைகளும் குந்தனுடன் இருக்கிறது.

விகடன் 10 Jan 2026 5:30 pm

திருநெல்வேலி புகழ் 'பித்தளை'பொங்கல் பானைகள்; தயாரிப்பு பணிகள் தீவிரம்! | Photo Album

திருநெல்வேலி புகழ் 'பித்தளை' பொங்கல் பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்.!

விகடன் 9 Jan 2026 7:40 pm

திருநெல்வேலி: அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பொங்கல் விழா; மாணவர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் |Album

திருநெல்வேலி: அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவியர்களின் உற்சாக பொங்கல் விழா கொண்டாட்டம் .!

விகடன் 8 Jan 2026 3:56 pm

எந்த ஊருக்கு போனாலும் 'ஓகே' ; Rail One-ல் Unreserved டிக்கெட் புக் செய்தால் 3% Cash Back | How to

Unreserved கோச்சில் ரயில் டிக்கெட் புக் செய்யுங்கள்... உங்களுக்கு 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று சொன்னால், நம்ப முடிகிறதா? இது உண்மை தான்... நம்பித் தான் ஆக வேண்டும். Rail One ஆப்பில், டிஜிட்டல் பேமென்டுகள் மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்த ஆஃபர். டிஜிட்டல் பேமென்ட்டை ஊக்குவிக்க இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரயில் ஒன் | RailOne முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன? எப்போது முதல்... எப்படி? வருகிற ஜனவரி 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும். ரயில் ஒன் ஆப்பில் ஜி பே, Paytm, Phone pe போன்ற எந்த ஆன்லைன் டிஜிட்டல் மோடில் பேமென்ட் செய்து டிக்கெட் புக் செய்தாலும், 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். இது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். R-Wallet மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஏற்கெனவே இந்தச் சலுகை இருந்து வந்தது. அது தொடரும். இது உள்ளூர், வெளியூர் என அனைத்து இடங்களுக்கும் செல்லும். சரி... அந்த ரயில் டிக்கெட்டை எப்படி புக் செய்வது என்பதைப் பார்ப்போம். > ரயில் ஒன் ஆப்பிற்கு செல்லவும். > Unreserved ஆப்ஷனை கிளிக் செய்யவும். > Outside Station, Inside Station என்கிற இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். ரயில் நிலையத்திற்கு வெளியே புக் செய்கிறீர்கள் என்றால் Outside Station-ஐ தேர்ந்தெடுக்கவும். > ரயில் நிலையத்திற்கு உள்ளே புக் செய்கிறீர்கள் என்றால் Inside Station-ஐ தேர்ந்தெடுக்கவும். கேஷ்பேக் | Cash Back 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? > அடுத்ததாக, எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை நிரப்பவும். > Proceed to Book கொடுத்து, எந்த வகையான ரயில் வேண்டும்... எத்தனை பேர் செல்கிறீர்கள் என்பதை பதிவிட்டு, 'Book Now'-ஐ கிளிக் செய்யுங்கள். > அடுத்ததாக, ஆன்லைன் பேமென்ட் செய்தால், உங்கள் டிக்கெட் புக் ஆகிவிடும். ஆனால், இந்தச் சலுகை வரும் 14-ம் தேதி முதல் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை - எப்போது?

விகடன் 7 Jan 2026 1:43 pm

60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!

வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அயலகத் தமிழர் மாநாடு இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ம.வள்ளலார் ஐ.ஏ.எஸ்., “வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பது, துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல், அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் உதவுதல், வெளிநாடுகளில் இறக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்பாராத வகையில் நேரும் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள அந்தந்த இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உதவுவது எனப் பல பணிகளை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சார்பில் மேற்கொண்டு வருகிறோம். அயலகத் தமிழர் மாநாடு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனில் கவனம், அக்கறை கொண்டு, இத்துறையை உருவாக்கி, அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளது, தமிழக அரசு. 2022-ம் ஆண்டு இத்துறை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறையின் சார்பில் ‘அயலகத் தமிழர் தினம்’ வருகிற ஜனவரி 11, 12-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தமிழர்கள் உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். பல தொழில்களை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். பல நாடுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஆலோசனைகளை கொடுத்து வழிநடத்தி வருகிறார்கள். மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள், அயலக அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள். அயலகத் தமிழர் மாநாடு உணவு சார்ந்த அரங்குகள், கலாசாரம் சார்ந்த அரங்குகள், வணிகம் சார்ந்த அரங்குகள், கைவினைப் பொருள்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த அரங்குகள் என 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. தமிழ் உணவு சார்ந்தும், நம் தமிழ் கலாசார பண்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு இருக்கும். பல்வேறு துறைகளில் கோலோச்சும் உலகத் தமிழர்களைச் சந்திக்கவும், இந்த விழா வாய்ப்பாக அமையும். இது உலகத் தமிழர்களுக்கான மேடை. மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ் கலைகள் மற்றும் கலாசாரம் குறித்த நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. உலகத் தமிழர்கள் ஓரிடத்தில் சங்கமிக்க இருக்கிறார்கள். தமிழால் இணைவோம், தமிழால் வளர்வோம். புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்ள மற்றும் அரங்குகள் அமைக்க விருப்பமுள்ளோர் https://nrtamils.tn.gov.in/nrtday/index என்ற தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளவும். வள்ளலார் ஐ.ஏ.எஸ் அயலகத் தமிழர்கள் மட்டும் பங்குபெறும் இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருப்போர் தங்கள் தொழில், கலாசாரம், கைவினைபொருள்கள், உணவு உள்ளிட்டவற்றை வெளிநாடு வாழ் தமிழர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்நிகழ்வு வெளிநாடு மற்றும் வெளிமாநில தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். ஜனவரி 11 மற்றும் 12ம் தேதி(ஞாயிறு, திங்கள்) இரண்டு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வு காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அயலகத் தமிழர் தினத்தைக் கொண்டாட அனைவரையும் அழைக்கிறோம்” என்றார்.

விகடன் 6 Jan 2026 7:45 pm

புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Photo Album

புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?

விகடன் 3 Jan 2026 2:50 pm

Railway: ஆதார் இணைக்கவில்லையா? 60 நாள்களுக்கு முன் 'நோ'டிக்கெட் புக்கிங்! இணைப்பது எப்படி?|How to

ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கும் நாளன்றே, நீங்கள் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அப்போது இனி நீங்கள் கட்டாயம் ரயில்வே டிக்கெட் புக்கிங் கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தற்போது ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் 60 நாள்களுக்கு முன்பு திறக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, வரும் மார்ச் 3-ம் தேதிக்கான ரயில்வே டிக்கெட் இன்று ஓபனாகி இருக்கிறது. அந்தத் தேதிக்கான டிக்கெட்டை இன்றே நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால், டிக்கெட் புக் செய்யும் ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். ரயில் 2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா? கடந்த 29-ம் தேதி முதல், காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஆதார் எண் இணைத்திருப்பவர்களால் மட்டுமே அன்றைய ஓபனிங் டிக்கெட்டை புக் செய்ய முடியும். 12 மணிக்கு மேல் தான், ஆதார் இணைக்காதவர்களும் புக் செய்யத் தொடங்க முடியும். வரும் 5-ம் தேதி முதல், இந்தத் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்ததாக வரும் 12-ம் தேதி முதல், காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆதார் இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். அதனால், உங்களது ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை உடனே இணைத்துவிடுவது நல்லது. ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? IRCTC வலைதளம் 1. உங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு முகப்புப் பக்கத்திற்குள் செல்லவும். 2. முகப்புப் பக்கத்தில் உள்ள My Account > Authenticate User-ஐ கிளிக் செய்யவும். IRCTC 2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை 3. இப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவிட்டு, உங்களது பெயர் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறை செக் செய்துகொள்ளுங்கள். 4. அடுத்ததாக, வலது பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் 'Save'-ஐ கிளிக் செய்யவும். 5. உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP வரும். இதை பதிவிட்டு 'Submit' கொடுத்தால் 'ALL DONE'. குறிப்பு: ஆதார் எண்ணிற்கு பதிலாக, பான் கார்டு எண்ணைக் கூட தரலாம். Railone ஆப் 1. Railone ஆப்பிற்குள் செல்லவும். 2. 'You'-ஐ கிளிக் செய்யவும். 3. 'Link Your Aadhaar'-ஐ கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை நிரப்பவும். பின்னர், 'Verify' கொடுக்கவும். 4. நீங்கள் ஆதார் இணைத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி 'Submit'-ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ரயில்வே கணக்கு ரெடி. நீங்கள் ரிசர்வேஷன் ஓபனாகும் அன்றே சிக்கலின்றி டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!

விகடன் 2 Jan 2026 1:45 pm

எங்க நாடகக் கொட்டகையில் 200 ஆண்டுகளாகக் கைத்தட்டல் நிற்கவில்லை-AI யுகத்தில் ஓர் ஆச்சரியக் கிராமம்!

தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாளை தரிசிப்பார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவில் கண் விழிப்பதற்காக இக்கிராமத்தினர் சரித்தர நாடகங்கள் நடத்துவது வழக்கம். அதில் கிராம மக்களே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வேடமிட்டு நடிப்பது தனி சிறப்பு. கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இப்பழக்கம் அந்த ஊரின் அடையாளமாகி, பாரம்பர்யத்துடன் இந்த ஏஐ காலத்திலும் தொடர்வது ஆச்சர்யம். நாடகத்தில் நடிப்பவர்கள் பெரிய திரை, சின்னத்திரை, செல்போன் என டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்திலும் வைகுண்ட ஏகாதசியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவில் சரித்திர நாடகம் போடுவதை சுற்றியுள்ள கிராமத்தினர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். வள்ளி திருமணம், ருக்மாங்கதன், இராமாயணம், சத்தியவான் சாவித்ரி போன்ற சரித்திர நாடகங்கள் தான் இதில் இடம் பெறும். இதே போல் இந்த ஆண்டு ஏகாதசி விழா விமர்சையாக கொண்டாடி முடித்திருக்கின்றனர். சம்பூர்ண ராமாயணம், ருக்மாங்கதன் உள்ளிட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் கொல்லாங்கரை கிராமத்தினர் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்து விடிய விடிய கண்டு ரசித்தனர். இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரு நாட்கள் சரித்திர நாடகம் போடுவோம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் இருந்து நாடகத்தில் நடிப்பதற்கான பயிற்சி எடுக்க தொடங்கி விடுவோம். இதில் எங்க ஊரைச் சேர்ந்த ஆண்கள், ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பார்கள். இந்த கனவு நிறைவேறுவதற்கு அனைவரும் தவம் கிடப்போம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 பேர் நடிப்பார்கள். ஆனால் இப்போது இதற்கான ஆர்வம் குறைந்தாலும் இதை தொடர்கிறோம். பெண் வேடமிட்டு நடிக்கும் ஆண்கள் தற்போது காலமாற்றத்தால், பலவிதமான பொழுது போக்கு வளர்ச்சி கண் முன்னே இருக்கிறது. இதனால் நாடகம் நடிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் இப்போதும் பத்து பேருக்கு மேல் நடிக்க வருகின்றனர். கையில் உள்ள கைபேசியில் அனைத்து விதமான பொழுது போக்கும் கிடைத்து விடுகின்றன. இருந்தாலும் எங்க ஊரில் இன்னமும் நாடகங்களை பார்த்து, ரசிப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். எங்கள் முன்னோர்கள் கடைபிடித்த இந்த பழக்கம், எங்கள் அடையாளமாகி விட்டது. இந்த பாரம்பரியத்தை நாங்க கைவிடாமல் தொடர்கிறோம். நாடகம் போடுவதற்கு ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்வோம். நாடகத்தில் நடிப்பவர்கள் விரதம் இருந்து நடிப்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களும் நாங்க சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு நாடகம் தொடங்கினால் அதிகாலை 5 மணிக்கு முடியும். எங்க கிராமத்தினர், ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து வழிபடுவோம். சரித்திர நாடகத்தை கண்டு ரசிக்கும் மக்கள் பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் எங்க கிராம மக்கள் 100 பேராவது கலந்து கொண்டு பாட்டுப்பாடி, தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி திரும்புவதை இப்போதும் கடைபிடிக்கின்றனர். நாங்க பிறவி நடிகர்கள் இல்லை, கலைஞர்கள் இல்லை. ஆனாலும் முழு திறமையை வெளிக்காட்டி நடிக்கும் போது கிராம மக்கள் கைத்தட்டி எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள். எங்க ஊர் நாடக கொட்டகையில் 200 ஆண்டுகளாக கைத்தட்டல் நிற்கவில்லை. நாங்க, எப்போதும் நடிப்பை கைவிட மாட்டோம். அடுத்த தலைமுறைக்கும் இதை கடத்துவோம். ஒவ்வொரு ஏகாதசியிலும் எங்க ஊர் நாடக கொட்டகை சினிமா தியேட்டராக மாறி விடும், எங்களோட நடிப்பில் திருவிழா களைக்கட்டும் என்றார்.

விகடன் 2 Jan 2026 12:42 pm

அடுத்தது என்ன...?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் வழக்கம் போல ஒரு மாறுபட்ட, சற்று வித்தியாசமான தலைப்பில் சிறிய இடைவெளிக்குப் பிறகு கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளேன். சரி அடுத்தது என்ன...- இப்படி யோசிச்சு ரொம்ப நாளாச்சு. மூளைக்கு வேலை கொடுக்காமல் விட்டால் அது சோம்பேறி ஆயிடும். அதன் விளைவே இந்த கட்டுரை. அடுத்தது என்ன... அடுத்தது என்ன... இப்படி சிந்தனை போய்க்கொண்டே இருந்தால் நமது மனம் புதிது புதிதாக சிந்திக்க ஆரம்பிக்கும். புதிய விஷயங்கள் நம்மைத் தேடி வரும். பூக்களை சுற்றிக்கொண்டு இருக்கும் பட்டாம்பூச்சி நம் அருகில் வந்து நலம் விசாரித்து செல்லும். நம் எண்ணங்கள் அதை கவர்ந்து இழுக்கிறது. வீட்டு தோட்டத்தில் ஒரு செடியை நட்டு தினம் தண்ணீர் விட்டுப்பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அது வளர ஆரம்பிக்கும். அடுத்த அடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டே இருக்கும். யார் அதற்கு சொல்லித் தருகிறார்கள். INBUILT ENERGY என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒன்று தாவரங்களுக்குள் இருக்கும். அது அவைகளை செயல்பட வைக்கிறது. அடுத்தது என்ன என்ற சிந்தனையே தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள் கண்டுபிடிக்க காரணமாகியது. இந்த INBUILT ENERGY சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் அபரிமிதமாக இருக்கும். அடுத்தது என்ன என்று யோசிக்காமல் செயல்படுவார்கள். மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் செயல்படுவார்கள். சித்தர்களின் முதன்மையானவர் அகத்தியர். சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த போது அனைவரும் கைலாயத்தில் கூடிவிட்டதால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து போனது. உலகம் மீண்டும் சமநிலை அடைய தென்திசைக்கு இறைவனால் அனுப்பப் பட்டார் அகத்தியர். அவர் ஒருவர் மட்டும் அங்கு சென்றால் சமநிலை அடையும் என்று இறைவன் உலகுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்தார். அவருடைய INBUILT ENERGY எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த காட்சியை அகத்தியர் படத்தில் 'உலகம் சமநிலை பெற வேண்டும்' என்ற பாடல் மூலம் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள் காட்டி இருப்பார்கள். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று இறைவனிடம் வாதாடினாரே அவரும் இந்த நிலையில் உள்ளவர்தான். கவியரசர் கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி இவர்களுக்குள் இருந்த அந்த ENERGY பல பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. மெட்டு கொடுத்த அடுத்த வினாடியே அவர்களிடமிருந்து வரிகள் அருவி போல் கொட்டும். திரை இசை தாண்டியும் சாதித்துள்ளார்கள். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம், வாலியின் பாண்டவர் பூமி , அவதார புருஷன் - காலத்தால் அழியாத காவியங்களை படைத்தவர்கள். திரைப்படங்களில் 'INTERVAL BLOCK ' என்று ஒன்று உண்டு. டைரக்டர்கள் அதற்காக நிறைய நேரம் செலவிடுவதுண்டு. அடுத்தது என்ன என்று இடைவேளை நேரத்தில் ரசிகர்களை சிந்திக்க விடுவதற்காக. டைரக்டர் பாக்யராஜ் அவர்கள் அதை சரியாக பயன்படுத்தி கதையில் முடிச்சு போட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்து வெற்றிகளைக் குவித்தார். நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் அது போன்ற சம்பவங்கள் வரும். பத்தாம் வகுப்பு முடித்ததும் அடுத்தது என்ன எடுப்பது... +2 முடித்ததும் நீட்டா...அல்லது இன்ஜினியரிங் அல்லது கல்லூரி படிப்பா...20 வயது முடியும் போது மீண்டும் அடுத்தது என்ன என்ற கேள்வி வரும். படித்தது பிரபல தனியார் கல்வி நிறுவனமாக இருந்தாலும் அரசு வேலை தான் மனதில் முதலில் வந்து நிற்கும். 18 வயது வந்ததும் அடுத்தது என்ன வந்து நின்று காதல் பற்றி சொல்லித் தரும். ஒரு சிலர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவார்கள். காதலில் அடுத்தது என்ன என்ற தேடலில் தீவிரமாகி கல்யாணம் வரை சென்று விடுவார்கள். இரு வீட்டார் சம்மதத்துடனா... ஒரு வீடு மட்டுமா..இரு வீட்டிலும் எதிர்ப்பா...அடுத்தது என்ன அங்கேயும் இடம் பெறும். அடுத்தது என்ன என்ற ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் LVM 3 (LAUNCH VEHICLE MARK 3) - இதன் செல்லப்பெயர் 'பாகுபலி' . இந்த பாகுபலி ராக்கெட் மூலமாக அமெரிக்காவின் புளுபேர்ட் -2 செயற்கைக்கோள் (6,100 கிலோ எடை கொண்டது) டிசம்பர் 24 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடையும். உயரமான மலைகள் அடர்ந்த காடுகள் ஆகிய இடங்களில் 5ஜி இணைய சேவைகள் பெற முடியும். விண்வெளியில் செலுத்திய இந்த செயற்கை கோள் தான் அதிக எடை கொண்டதாகும். இதன் மூலம் சர்வதேச சந்தையில் இஸ்ரோவின் வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது. நமது வாழ்க்கையில் 'அடுத்தது என்ன' என்பதை தெரிந்து கொள்ள நாம் ஆவலோடு இருப்போம். ஒவ்வொரு நாளும் நன்றாக விடிகிறது. புதுப்புது தேடல்களை தொடங்கி வைக்கிறது. நாள் நேற்று, இன்று, நாளை என்று மூன்று காலை நிலைகளாக இருக்கும். அடுத்தது என்ன மட்டும் ஒரே நிலை...என்றும் நிகழ்கால நிலையில்...நாளை நமதே என்று வாலி அவர்கள் புரட்சித் தலைவருக்கு (படம் :'நாளை நமதே') பாடினார். அதற்கு மாற்றாக 'நாளை என்ன நாளை.. இன்று கூட நமது தான்' என்று கவியரசர் நடிகர்திலகத்துக்காக (படம் : 'அவன் ஒரு சரித்திரம்') பாடினார். இரண்டுமே நம்மை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள எழுதப்பட்ட பாடல்கள். இன்றைய தொடக்கம் நாளைய இமாலய வெற்றி.'அடுத்தது என்ன' கேள்வி மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கும் வரையில் புதிய புதிய சாதனைகள் நம்மை நோக்கி அணிவகுத்து வரும். - திருமாளம் எஸ். பழனிவேல் தேர்தல்

விகடன் 30 Dec 2025 1:46 pm

காரைக்குடி: '5 தலைமுறைகள், 300 உறவினர்கள்' - நெகிழ வைக்கும் 'சின்னான் வீடு'நூற்றாண்டு விழா!

வீடு கட்டிய அன்றே, இந்த வீட்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று சொன்ன சி.ஆ.பெரியண்ணனின் ஆசையை நிறைவேற்ற வீட்டைப் பழமை மாறாமல் பராமரிக்கும் நோக்கில் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்படியே புதுப்பித்தனர். 12 ஆண்டுகள் வேலைப்பாடு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியில் அமைந்துள்ள சின்னான் வீடு என்று அன்போடு அழைக்கப்படும் இந்த வீட்டின் வேலை 1912-ல் பூஜை போட்டு தொடங்கப்பட்டு, 1926-ல் முழுவதுமாக கட்டி முடிந்துள்ளது. சுமார் 14 ஆண்டுகள் கலைநயத்தோடு கட்டப்பட்ட இந்த வீட்டில், 12 ஊர்களைச் சார்ந்த மக்கள் வேலை செய்துள்ளனர். தற்போது 99 ஆண்டை நிறைவு செய்து, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இருப்பினும் அதே கம்பீரத்தோடு பழமை மாறாமல் இருக்கிறது என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு ஐந்து தலைமுறை ஆண்டியப்பன், வள்ளி தம்பதியருக்குப் பிறந்த பெரியண்ணன் மற்றும் சுப்பையா ஆகிய அண்ணன் - தம்பி இருவரின் வாரிசுகளின் 60 குடும்பங்கள், 300 குடும்ப உறுப்பினர்கள் என, ஐந்து தலைமுறையினரும் ஒன்றுகூடி திருவிழாவைப் போல் நடத்தியது பார்ப்போர் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எல்லாம் இங்கதான் இது குறித்து குடும்ப உறுப்பினர் சுந்தர் கூறுகையில், இது வெறும் வீடு மட்டும் கிடையாது எங்களோட அடையாளம். எங்க யாரு வீட்டுல என்ன விசேஷமா இருந்தாலும் அத இங்கதான் கொண்டாடுவோம். கல்யாணம், காதுகுத்து, பொங்கல், சடங்கு என்று எல்லாமே இங்கதான் நடக்கும். அப்போவும் இதே மாதிரி எல்லோரும் வந்துருவோம். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு இன்னும் சொல்லனும்னா, எங்க குடும்பதுல எந்த ஒரு இறப்பு நடந்தாலும் இந்த வீட்ல வச்சுதான் இறுதிச்சடங்கு செய்வோம். அந்த அளவுக்கு எங்க உணர்வோட கலந்தது இந்த சின்னான் வீடு என்று அவர் கூறினார் கடல் கடந்து வரும் உறவுகள் இந்தக் குடும்பத்தில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதிலும் சிலர் வெளிநாட்டினரையே திருமணம் செய்துள்ளனர். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு மேலும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்துள்ளார்கள். அதிலும் இந்த நிகழ்வில் தமிழர்கள் பாரம்பரிய உடையில் இருப்பது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது. நிகழ்ச்சி நிரல் இதில் அதிகாலை கணபதி ஹோமம், பின்பு இறைவணக்கம், பரதநாட்டியம், ஓவியப்போட்டி, பட்டிமன்றம், உணவு இடைவேளை, கலைநிகழ்ச்சிகள், இசைக்கருவி வாசித்தல், குடும்ப நேரம், நன்றியுரை என்று ஒரு விழாவைப் போல் இந்தச் சங்கமத்தை ஒருங்கிணைத்துள்ளனர். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு விழா மலர் இந்த நூற்றாண்டு விழாவில் முன்னோர்களை இன்றைய தலைமுறை நினைவுகூறும் வகையில், சரஸ்வதி என்பவர், 5 ஆம் தலைமுறை சின்னான் வீடு என்ற விழா மலரை எழுதி வெளியிட்டுள்ளார். 5 ஆம் தலைமுறை சின்னான் வீடு என்ற விழா மலர் இதில் ஓட்டன்–ஓட்டி முதல் தற்போது உள்ள உறவினர் வரையுள்ள 5 தலைமுறை குடும்ப உறுப்பினர்கள் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் செட்டிநாட்டுப் பகுதி, இன்றளவும் உறவுகளின் புகழிடமாக திகழ்கின்றது.

விகடன் 30 Dec 2025 12:19 pm

பாரம்பரிய முறையில் மொற்பர்த் பண்டிகை காெண்டாடிய தாேடர் பழங்குடியினர்

மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த்

விகடன் 29 Dec 2025 3:03 pm

உங்கள் கோலத்துக்கு 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு! - கோலம் போடுங்க பரிசை வெல்லுங்க!

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி

விகடன் 26 Dec 2025 6:14 pm

முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்'ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்'தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் 'வாரன் பஃபெட்'. இவர் 2001-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில், '20 ஸ்லாட் பன்ச் கார்டு' பற்றி பேசியது தற்போது செம்ம வைரல். அது என்ன '20 ஸ்லாட் பன்ச் கார்டு'? இதை வாரன் பஃபெட்டின் தியரி என்றே கூறலாம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் 500 வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த வாய்ப்புகளே கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் '20 ஸ்லாட் பன்ச் கார்டு'. Warren Buffett - வாரன் பஃபெட் 'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'! அதாவது, ஒருவருக்கு வாழ்க்கையில் 20 வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போது, வாய்ப்புகள் குறைந்துகொண்டே வரும். ஒருமுறை ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி விட்டால், அதை மீண்டும் மாற்ற முடியாது. அதனால், ஒவ்வொரு முடிவையும் பார்த்து யோசித்து எடுக்க வேண்டும். ஏன் 20 முறை மட்டுமே? ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் பல தவறான முடிவுகள் எடுக்கக்கூடும்... அவசர முடிவுகளும் எடுக்கக்கூடும். 20 வாய்ப்புகள் மட்டும் இருக்கும்போது, ஒவ்வொரு முடிவுகளையும் பார்த்து, நிதானமாக, யோசித்து எடுப்போம். இதனால், அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறாக வாய்ப்பில்லை. மேலும், அந்த முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் பலன் தர வேண்டும் என்பதனால் சரியாக முடிவு செய்து எடுப்போம். இந்த தியரி முதலீடுகளுக்கு மட்டுமல்ல... பிசினஸ் தொடங்கி அனைத்திற்குமே பொருந்தும். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இன்னும் ஐந்து நாள்களில் புத்தாண்டு. இனி உங்களது '20 ஸ்லாட் பன்ச்'சைத் தொடங்கி அடுத்தடுத்த முடிவுகளை சூப்பராக எடுங்க மக்களே. அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்:) வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

விகடன் 26 Dec 2025 6:01 pm

Personal Finance: புத்தாண்டுச் சபதம் ஓகே... ஆனால் உங்கள் ஃபைனான்ஸ் பிளான் ரெடியா?

வணக்கம். புத்தாண்டு வரப்போகிறது. டிசம்பர் 31 இரவு கொண்டாட்டங்கள் முடியும். ஜனவரி 1 காலை விடியும். வழக்கம் போல ஒரு புதிய டைரியை வாங்குவோம். முதல் பக்கத்தில், இந்த வருடம் ஜிம்முக்குப் போவேன், கோபப்பட மாட்டேன், எடையைக் குறைப்பேன் இத்யாதி இத்யாதி... சில சபதங்களை மோட்டிவேஷன் பொங்க எழுதுவோம். பிப்ரவரி 15-ல் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். டைரி மூலைக்குப் போய்விடும். பழைய வாழ்க்கை தொடரும். ஏன் இப்படி? நமக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆனால் அதை அடைவதற்கான சரியான 'அஸ்திவாரம்' (Foundation) இல்லை. பிரச்னை: தெளிவற்ற பயணம் உங்கள் நிதி வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள். உங்களைப் போல ஒரு டிப் டாப் ஆசாமி, ரயில் நிலையத்திற்குப் போய், டிக்கெட் கவுண்டரில் நின்று எங்கேயாவது ஒரு டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இப்போது பலரின் நிதி நிலைமை. பணம் வருகிறது. செலவாகிறது. இயற்கைதான் இல்லையா? சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் மாதக் கடைசியில் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. பிள்ளையின் படிப்புக்கு, என் ஓய்வுக்காலத்துக்கு என்று பெரிய கனவுகள் உண்டு. ஆனால் அதற்கான திட்டம்? கடவுள் விடுற வழி என்று விட்டுவிடுகிறோம். பணவீக்கம் உங்கள் சேமிப்பைத் திருடிக்கொண்டிருக்கிறது என்பது கூட நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இருந்தாலும் ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் அம்மா போல வெள்ளந்தியாக இருக்க கூடாது. இப்படித் திட்டமில்லாமல் போனால், 2026-ம் இன்னொரு சாதாரண வருடமாகவே கடந்து போய்விடும். பயமுறுத்துவதாக நினைக்க வேண்டாம். (ஆனால் கொஞ்சம் பயப்படுங்கள். தவறில்லை.) Confused Person தீர்வு: ஒரு தெளிவான வரைபடம் இந்தக் குழப்பத்தை உடைக்க, உங்களுக்குத் தேவை ஒரு தெளிவான வரைபடம் (Financial Roadmap). அதை உருவாக்கவே இந்தச் சிறப்பு அமர்வு. தலைப்பு: 2026 – உங்கள் கனவுகளுக்கு அடித்தளமிடுவது எப்படி? நாள்: டிசம்பர் 28, 2025 (ஞாயிறு) நேரம்: காலை 11:00 – 12:30 IST labham workshop இந்த 90 நிமிடங்களில் நாம் மேலோட்டமாகப் பேசப் போவதில்லை. ஆழமாக, ஆனால் எளிமையாக அணுகப்போகிறோம். நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது: இலக்கு நிர்ணயம்: ஆசைக்கும் இலக்குக்கும் வித்தியாசம் உண்டு. நிறைய பணம் வேண்டும் என்பது ஆசை. 2030-ல் 10 லட்சம் வேண்டும் என்பது இலக்கு. 2026-க்கான உண்மையான இலக்குகளை எப்படி செட் செய்வது என்று பார்க்கப்போகிறோம். SIP எனும் மந்திரம்: மாதம் 10,000 ரூபாய் சேமிப்பது எப்படி 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும்? கூட்டு வட்டியின் (Compounding) சக்தியை உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது? தவறுகள்: புத்தாண்டு உற்சாகத்தில் அவசரப்பட்டு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது, தேவையில்லாத பங்குகளை வாங்குவது போன்ற பொதுவான தவறுகளை எப்படித் தவிர்ப்பது? சமநிலை: இன்றைய ஆசைகளையும், நாளைய தேவைகளையும் (Savings vs Spending) எப்படிச் சமாளிப்பது? வழிகாட்டி யார்? திரு. A.R. குமார். (Chief of Content, Labham & Former Joint Editor, Nanayam Vikatan). நாணயம் விகடனில் பல ஆயிரம் கேள்விகளுக்குப் பதிலளித்து, சிக்கலான நிதி விஷயங்களை பாமரருக்கும் புரியும் வகையில் எழுதியவர். happy Family முடிவு: ஒரு புதிய ஆரம்பம் இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகு என்ன நடக்கும்? தெளிவு: அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருக்காது. அமைதி: உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை பிறக்கும். செயல்: சும்மா யோசித்துக்கொண்டிருக்காமல், முதல் அடியை எடுத்து வைப்பீர்கள். செபி (SEBI) போன்ற அமைப்புகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சரியான அறிவுடன் அணுகினால், இது உங்கள் செல்வத்தை உருவாக்கும் சிறந்த கருவி. ​ வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளின் தொகுப்பு. 2026-ஐ உங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த வருடமாக மாற்றும் முடிவு உங்கள் கையில். இடங்கள் குறைவு. இன்றே பதிவு செய்யுங்கள்.  பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் - https://labham.money/webinar-dec-28-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_dec28_2025 சிந்தியுங்கள். (உடனே) செயல்படுங்கள். - டீம் லாபம் Personal Finance: உங்கள் வீட்டு பட்ஜெட் சூப்பரா, சுமாரா, இல்ல டேஞ்சரா இருக்கா? நிதிச் சுதந்திரம் - 3

விகடன் 26 Dec 2025 7:18 am

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 25 Dec 2025 6:39 pm

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? - சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி

விகடன் 24 Dec 2025 7:26 pm

கோவை : நெருங்கும் பொங்கல் பண்டிகை; மும்முரமாகத் தயாராகி வரும் பானைகள்! | Photo Album

பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் அடுப்புகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் & அடுப்புகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள் பொங்கல் பானைகள்

விகடன் 24 Dec 2025 6:27 pm

நெல்லை: 5D, 7D தியேட்டர்கள்; கற்காலத் தங்கம்; பிரமிக்க வைக்கும் பொருநை அருங்காட்சியகம்! |Photo Album

பிரமிக்க வைக்கும் நெல்லை 'பொருநை'அருங்காட்சியகம்|5டி-7டி தியேட்டர்கள்|கற்கால தங்கம்! மனித எலும்புகள் `பொருநை நாகரிகத்தின் சான்று' - 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!

விகடன் 24 Dec 2025 7:30 am

பழையன கழிதலும், புதியன புகுதலும்! - ஒரு டிசம்பர் மேஜிக்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் டிசம்பர் மாதம் என்பது கொண்டாட்டங்களுக்கு மட்டுமானது அல்ல; அது நம் இல்லத்தையும் மனதையும் மறுசீரமைப்பதற்கான காலமும் கூட. தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது (Decluttering) உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கி, வரும் புத்தாண்டை வரவேற்க உங்களைத் தயார்படுத்தும். 1. Kitchen & Pantry (சமையலறை மற்றும் உணவு மேலாண்மை): Expired Items: முதலில் உங்கள் Pantry-யைச் சோதித்து, காலாவதியான மசாலாப் பொடிகள் மற்றும் உணவுப் பொருட்களை அப்புறப்படுத்துங்கள்.   Kitchenware: மூடி இல்லாத Mismatched Containers, விரிசல் விழுந்த கண்ணாடி குவளைகள் மற்றும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தாத Kitchen Gadgets-களைத் தானம் செய்யுங்கள். Drawer Organization: துருப்பிடித்த கரண்டிகளை அகற்றி, சமையல் மேடையை (Kitchen Countertop) எப்போதும் காலியாக வைத்திருங்கள். 2. Clothing & Personal Care (ஆடை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு) Wardrobe Audit: கடந்த ஒரு வருடமாக நீங்கள் அணியாத ஆடைகளை வகைப்படுத்துங்கள். குறிப்பாக, தேவையற்ற குளிர்கால உடைகளை (Winter Clothes) ஏழைகளுக்குத் தானம் செய்யுங்கள். Toiletries: காலாவதியான அழகு சாதனப் பொருட்கள் (Expired Cosmetics) மற்றும் தரம் குறைந்த வாசனை திரவியங்களை அப்புறப்படுத்துங்கள். Medicine Cabinet: மருந்துப் பெட்டியைச் சோதித்து, காலாவதியான மருந்துகளைப் பாதுகாப்பாக அகற்றுங்கள். 3. Home Decor & Seasonal Items (வீட்டு அலங்காரம்) Holiday Decor: வேலை செய்யாத மின் விளக்குகள், உடைந்த பொம்மைகள் மற்றும் கசங்கிய Gift Wraps-களைச் சேர்த்து வைக்காதீர்கள். Sentimentals: பழைய வாழ்த்து அட்டைகளில் (Greeting Cards) மிகவும் நெருக்கமானவை தவிர மற்றவற்றை மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். Home Ambience: பழைய மெழுகுவர்த்திகள் மற்றும் கிழிந்த மிதியடிகளை மாற்றுவதன் மூலம் உங்கள் வீட்டிற்குப் புதிய பொலிவைத் தரலாம். 4. Leisure & Kids Area (பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் பகுதி) Bookshelf Clear-out: இனி படிக்கப்போவதில்லை என்று உறுதி செய்த புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்குங்கள்.  Toy Rotation: துண்டுகள் தொலைந்துபோன போர்டு கேம்கள் (Board Games) மற்றும் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்கள் பயன்படுத்தாத பொம்மைகளைத் தானம் செய்யுங்கள். 5. Digital Decluttering (மின்னணு மற்றும் டிஜிட்டல் தூய்மை) E-Waste: உடைந்த செல்போன்கள், வேலை செய்யாத சார்ஜர்கள் மற்றும் பயன்படாத ஒயர்களை (Cables) முறையாக அப்புறப்படுத்துங்கள். Digital Files: உங்கள் அலைபேசியில் உள்ள தேவையற்ற புகைப்படங்கள், செயலிகள் மற்றும் மின்னஞ்சல்களை (Unwanted Emails) நீக்குங்கள். இது மன அழுத்தத்தைக் குறைக்கும். 6. Home Office & Stationery (வீட்டு அலுவலகம் மற்றும் எழுதுபொருட்கள்) Paperwork: தேவையற்ற பழைய ரசீதுகள் (Receipts), வங்கி அறிக்கைகள் மற்றும் காலாவதியான இன்சூரன்ஸ் பேப்பர்களை அகற்றிவிட்டு, முக்கியமான ஆவணங்களை மட்டும் File செய்யுங்கள்.  Desk Essentials: எழுதாத பேனாக்கள், காய்ந்துபோன இங்க் பாட்டில்கள் மற்றும் பழைய டைரிகளை மேசையிலிருந்து அகற்றுங்கள்.  Planning: புதிய ஆண்டிற்கான New Planner மற்றும் நாட்காட்டிகளைத் தயார் செய்து, உங்கள் மேசையை நேர்த்தியாக (Organizedவையுங்கள்.  டிசம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பகுதியைச் சுத்தப்படுத்துங்கள். தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவது என்பது உங்கள் வாழ்வின் புதிய தொடக்கத்திற்கான இடம் ஒதுக்குவதாகும். Simplify your home, simplify your life. தேர்தல்

விகடன் 23 Dec 2025 10:37 pm

கீதம் உணவகம் நடத்தும் கோலப் போட்டி; 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 23 Dec 2025 7:25 pm

தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 22 Dec 2025 6:12 pm

கோலப் போட்டி... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி

விகடன் 21 Dec 2025 7:38 pm

`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ - நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்

நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார். நவீன்ராஜ் கவுதமன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும். கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம். கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை 'ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்'. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார். ``பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன். பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ? அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன். பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க. பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும். அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே? ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ' சுயம்புங்கிற' பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு. பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன். பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது. என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.

விகடன் 19 Dec 2025 1:30 pm

`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ - நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்

நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார். நவீன்ராஜ் கவுதமன் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும். கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம். கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது. இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை 'ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்'. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார். ``பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன். பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ? அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன். பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க. பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும். அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே? ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ' சுயம்புங்கிற' பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு. பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன். பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது. என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.

விகடன் 19 Dec 2025 1:30 pm

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 18 Dec 2025 8:17 am

`திருந்துவார் என நினைத்தேன்’ ; ஹோட்டலில் மீண்டும் வேறொருவருடன் மனைவி - GPS மூலம் சிக்க வைத்த கணவன்

பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் திருமணமாகி 15ஆண்டுகள் கழித்த பிறகு பெண் ஒருவர் மாற்றான் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கி இருந்ததை அவரது கணவர் கண்டுபிடித்துள்ளார். ரவி குலாதி என்ற அந்த நபருக்கு ஹாமினி என்பவருடன் 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றனர். 2018ம் ஆண்டு ரவியின் மனைவி வேறு ஒரு நபருடன் ஹோட்டலில் தங்கி இருந்ததை அவரது கணவர் கண்டுபிடித்தார். அந்நேரம் ரவி தனது மனைவியின் பெற்றோரை வரவழைத்து இது குறித்து பேசினார். இப்பேச்சுவார்த்தையில் மனைவியின் பெற்றோரும், மனைவியும் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இதனால் ரவி தனது குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார். மனைவி திருந்துவிடுவார் என்று நினைத்தார். ஆனாலும் மனைவியின் மீது ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் ரவி தனது மனைவி அடிக்கடி பயன்படுத்தும் ஸ்கூட்டியில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தி மனைவியின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் மனைவி மீண்டும் தனது ஸ்கூட்டரில் பிற்பகலில் புறப்பட்டு சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. எனவே ரவி தொடர்ந்து தனது மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் மனைவி போனை எடுத்து பேசவில்லை. 15 முதல் 20 முறை போன் செய்தபிறகும் போனை எடுக்காத காரணத்தால் வேறு வழியில்லாமல் ஸ்கூட்டரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் வண்டி எங்கு இருக்கிறது என்று பார்த்தார். அந்த ஜி.பி.எஸ்.கருவி இருக்கும் இடத்தை நோக்கி சென்றபோது அது ஒரு ஹோட்டலுக்குள் சென்றது. அங்கு சென்று பார்த்தபோது ரவியின் மனைவி வேறு ஒரு ஆடவருடன் இருந்ததை கையும் களவுமாக ரவி கண்டுபிடித்தார். இது குறித்து ரவி கூறுகையில், ''நான் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். 2018ம் ஆண்டு ஹோட்டலில் வேறு ஒருவருடன் எனது மனைவியை பார்த்தேன். இதனால் அவரது பெற்றோரை அழைத்து எச்சரித்து மன்னித்து ஏற்றுக்கொண்டேன். தவறு நடப்பது புதிதல்ல என்று நினைத்துவிட்டேன். ஆனால் இன்று அவர் பிற்பகல் 3 மணிக்கு வெளியில் கிளம்பிச்சென்றார். 15 முதல் 20 முறை போன் பண்ணியும் எடுத்து பேசவில்லை. எனவே ஸ்கூட்டியில் இருந்த ஜி.பி.எஸ் சாதனத்தை சோதித்து பார்த்தபோது ஸ்கூட்டி ஹோட்டல் ஒன்றில் நிற்பது தெரிய வந்தது'' என்றார். ரவியின் தந்தை பர்வேஷ் குலாதி இது குறித்து, ''இந்த பிரச்னை பல ஆண்டுகளாக இருக்கிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஹோட்டலில் எனது மருமகள் வேறு ஒருவருடன் இருந்த போது பிடிபட்டார். அப்போது இரு குடும்பமும் எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டோம். பிரச்னை முடிந்துவிட்டதாக நினைத்தோம். ஆனால் இப்போது மீண்டும் அதே போன்று நடந்திருக்கிறது. இப்போது ரவியுடன் வாழ முடியாது என்று மருமகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார். இப்போது ஹோட்டலில் அவருடன் பிடிபட்ட நபர் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருபவர். அவர் எனது மருமகளின் சகோதரன் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். இப்போது எனது மருமகளின் பெற்றோர் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வர மறுக்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 16 Dec 2025 4:22 pm

அறிவைத் தேடுங்கள், செல்வத்தை அல்ல : காலம் கடந்து நிற்கும் சாக்ரடீஸ் பொன் மொழிகள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சாக்ரடீஸ் பண்டைய கிரேக்கத்தின் தத்துவஞானி. ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த சாக்ரடீஸ் கி.மு.470இல் பிறந்தார். மேற்கத்திய தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்தவர் சாக்ரடீஸ் என்று சொல்லலாம். “உன்னை அறிந்து கொள்” என்பது அவர் இளைஞர்களுக்கு அளித்த அறுவுரை. தன்னைப் பற்றி, தன்னால் செய்யக்கூடியது என்ன, அபிலாஷைகள் என்ன என்று அறிந்தவன் மட்டுமே புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க முடியும் என்பது அவரது கருத்து.  Socrates இளைஞர்களின் மனதில் நச்சுப் போன்ற கருத்துகளை விதித்தாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரே நாள் விசாரணையில் சாக்ரடீஸூக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. கி.மு 399 ஆம் ஆண்டு தண்டனை நிறைவேற்றப்பட்டு அவர் இறந்தார். ஆனால், அவர் விட்டுச் சென்ற பொன்மொழிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றன. உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதில்தான் உண்மையான மெய்யறிவு உள்ளது. சாக்ரடீஸ், பெருவாரியான மக்கள் சாதாரணமாக நினைத்த விஷயங்களைக் கூடக் கேள்வி கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர். ஒருவர், ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்கு முழுமையாகத் தெரியும் என்று கருதினால் “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மனநிலையில், அதைப் பற்றியப் புதிய கண்ணோட்டங்களை செவி மடுக்க மாட்டார். மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்க மாட்டார். “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மன நிலை, புதிய சிந்தனைக்கு தடை விதிக்கும். நிச்சலமான மனதுடன் எந்த விஷயத்தையும் அணுகுவதே சாலச் சிறந்தது. 2. செல்வத்தை விட அறிவை விரும்புங்கள். ஏனென்றால் ஒன்று நிலையற்றது. மற்றது நிரந்தரமானது. செல்வம் நிலையற்றது. அழியும் தன்மையுடையது. சம்பாதித்த செல்வம் செலவழிக்கும் நிலையில் குறையும். ஆனால், அறிவு நிலையானது. மற்றவர்களுடன் உங்கள் அறிவுச் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது அது குறைவதில்லை. மாறாக மற்றவர்களின் கருத்துக்களால் அறிவு மேம்படுகிறது. தன்னுடைய செல்வ நிலையில் மன நிறைவு கொள்கின்ற செல்வந்தர், புதியதாக எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமில்லாதவராக இருப்பார். ஆனால், அறிவை வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாக கருதும் நபர், அவருடைய நிதி நிலைமையை பொருட்படுத்தாமல், மேலும் கற்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார். ஒருவனுடைய செல்வம் பரம்பரைச் சொத்தாக இருக்கலாம். ஆனால், அறிவு பரம்பரைச் சொத்தல்ல. அறிவு இடை விடாத முயற்சியின் மூலம் பெறப்பட்டது. ஆகவே, நிரந்தரமான அறிவைப் போற்ற வேண்டும்.   கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை ஒருவனுக்கு கல்வியே உயர்ந்த செல்வம். மற்ற செல்வங்கள் நிலையானவை அல்ல. (திருக்குறள்) 3. ஆராயப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது. அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு சுய பரிசோதனை தேவை என்பது சாக்ரடீஸின் முக்கியமான கொள்கை. மனிதன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து. சாக்ரடீஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளத தவறியதில்லை. நான் ஏன் இந்த முடிவை எடுத்தேன். இதனால் அடைந்தது அல்லது அடையப் போவது என்ன என்று ஆராயும் போது, நாம் நடந்து வந்த பாதையை ஆராய்கிறோம். இந்த சுய பரிசோதனை எதிர் காலத்தில் நாம் எடுக்க வேண்டிய முடிவிற்கு வழி செய்யும். மலர்கள் நிறைந்த தோட்டத்தை கடக்கும் ஒருவன், சற்றே நின்று பூக்களின் அழகை ரசிக்காமல் கடந்து சென்றால், இயற்கையின் அழகை இழக்கிறான் அது போலவே, சுய பரிசோதனை செய்யாதவன், வாழ்க்கை நமக்களித்த பாடத்தை மறக்கிறான். 4. தெளிந்த அறிவு ஆச்சரியத்தில் தொடங்குகிறது. நுண்ணறிவு அல்லது தெளிந்த அறிவு ஆச்சரியத்தில் தொடங்குகிறது. ஆச்சரியம் கற்றலைத் தூண்டுகின்ற தீப்பொறி. வங்கிக்குச் சென்று பணம் எடுப்பவன், வங்கிக்குச் செல்லாமல், தானியங்கி இயந்திரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்க முடிகிறதே, அது எப்படி சாத்தியமாகிறது என்று ஆச்சரியப்பட்டால், அது எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொள்கிறான். வான வில்லின் வர்ணங்களை ரசிக்கும் குழந்தை, ஆச்சரியத்துடன் இது எப்படி ஏற்படுகிறது என்று கேட்கத் துவங்கும் போது அந்த குழுந்தையின் அறிவு மேம்படுகிறது.  ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகள் அறிவுக் கதவுகளைத் திறக்கும் திறவுகோல் 5. ஒரே நன்மை அறிவு. ஒரே தீமை அறியாமை. இதன் பொருள் அறிவு நன்மையை வளர்க்கிறது. ஆனால், அறியாமை தீமைக்கு வழி வகுக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றி சரியான புரிதலிருந்தால் அவனுடைய அறிவு அதன் நன்மை தீமைகளை ஆராயும். இது தேவை அல்லது தேவையில்லை என்ற முடிவை எடுப்பதற்கு வழி வகுக்கும். ஆனால், அதனைப் பற்றிய புரிதல் இல்லாத அறியாமை, அவனிடம் தவறான எண்ணத்தை உருவாக்கும். அந்த தவறான எண்ணம் மற்றவர்களிடையே பரவும் போது அது வன்முறைக்கு வித்திட வழி வகுக்கிறது. இதனால், அறியாமை சமுதாயத்திற்கு தீமை என்கிறார் சாக்ரடீஸ்.  அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் ஏதும் இல்லாதவர் ஆனாலும் அறிவுடையார் எல்லாம் உடையவர் எல்லாம் உடையவர் ஆனாலும், அறிவிலார் ஏதும் இல்லாதவர். (திருக்குறள்) - கே.என்.சுவாமிநாதன், சென்னை தேர்தல்

விகடன் 16 Dec 2025 11:03 am

Parenting: உங்க குழந்தை `I hate you'னு சொன்னா என்ன அர்த்தம்?

இந்த உலகில் அதிகம் கவனிக்கப்படாத வார்த்தைகள், குழந்தைகளின் வார்த்தைகளாகத்தான் இருக்கும். காரணம், எவ்வளவு சீரியஸாக குழந்தை நம்மிடம் ஒரு விஷயத்தைப் பேசவந்தாலும் அதற்குக் காதுகொடுக்காமல் சென்றுவிடுபவர்கள் பலர். அப்படியே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும், அதன் வீரியம் உணராமல், `குழந்தை ஏதோ சீரியல், சினிமாவைப் பாத்துட்டு பேசுதுபோல', 'ஏதோ தெரியாம இப்படிப் பேசியிருக்கும்' என்றே நம்மில் பலரும் அவர்களை நொடிகளில் கடந்துவிடுகிறோம். அவ்வளவு பரபரப்பு நமக்கு! Parenting என்றாலும், சில வார்த்தைகளைக் குழந்தைகள் சொல்லக்கேட்கும்போது மட்டும், `இதை இவர்கள் தெரிந்துதான் பேசுகிறார்களா' என யோசிப்போம். அந்த அளவுக்கு வீரியமுள்ள வார்த்தைகளாக அவை இருக்கும். அப்படியானவைதான், `ஐ ஹேட் யூ' என்ற வார்த்தைகள். `ஹேட்', அதாவது வெறுப்பு என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் குழந்தைகள் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், அவர்கள் அதைப் பேசுகிறார்கள் எனும்போது, கவனம் செலுத்தவேண்டிய விஷயம் அது. குழந்தை 'ஐ ஹேட் யூ' எனச் சொன்னால், அதன் அர்த்தம் என்ன? குழந்தைக்கு நம்மீது ஏற்படும் வெறுப்பை எப்படி அணுகலாம்? சில யோசனைகள் சொல்கிறார், மனநல மருத்துவர் பூங்கொடி பாலா. என்ன அர்த்தம்? * வயதுக்கேற்றபடி இதன் பொருள் மாறும். அந்த வகையில், பேச ஆரம்பித்த முதல் சில வருடங்களிலுள்ள குழந்தை எனில், குழந்தைக்கு விருப்பமான ஏதோவொரு பொருளை நீங்கள் கொடுக்கவில்லை என்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். அது, குழந்தை விளையாடும் சிறுபொருளாகக்கூட இருக்கலாம். நீங்கள் தடாலடியாக அதைப் பறித்துக்கொண்டீர்கள் என்ற கோபத்தைத்தான், குழந்தை அப்படிக் குறிப்பிடும். இந்த வயதிலுள்ள குழந்தைகளுக்கு, உங்கள் வார்த்தையின் பின்னுள்ள நியாயத்தை தெளிவாகப் புரியவைக்க முடியாது என்றாலும், `ஐ ஹேட் யூ' என்பது தவறான வார்த்தைப் பிரயோகம் எனச் சொல்லிக்கொடுக்க முடியும். ஆகவே, பெற்றோர் தரப்பில் அதை முயலலாம். Parenting * சற்றே வளர்ந்த குழந்தை என்றால், அவர்களுக்கு விருப்பமான ஒரு பொழுதுபோக்கு விஷயத்தை நீங்கள் செய்யவிடவில்லை என்பதால் அவர்கள் இப்படிப் பேசியிருக்கலாம். அந்தப் பொழுதுபோக்கு, குழந்தையின் நேரத்தை வீணடிக்கிறது என்பதால்கூட நீங்கள் அப்படிச் சொல்லியிருக்கலாம். பிரச்னை என்னவெனில், உங்கள் நிராகரிப்புக்குப் பின்னாலுள்ள நியாயத்தைக் குழந்தைக்கு நீங்கள் புரியவைக்கவில்லை. * டீன் ஏஜ் குழந்தை என்றால், அவர்களுக்குப் பிடித்த மாதிரி அவர்கள் செயல்பட நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், இப்படிப் பேசுவார்கள். அதற்காக, அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அமைதிகாக்க வேண்டும் என்றில்லை. தவறு இருப்பின், அதை முறையாக சுட்டிக்காட்டலாம். இருப்பினும், விஷயத்தைப் பொறுமையாகவும் நிதானமாகவும் அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் புரிந்துகொள்வார்கள். Parenting * பெரும்பாலான நேரங்களில், குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லும் `ஐ ஹேட் யூ' என்பது, `ஐ மிஸ் யூ', `எனக்கு வேண்டியதை நீ கொடுக்கவில்லை', `எனக்குப் பிடிச்ச மாதிரி செயல்பட நீ அனுமதிக்கவில்லை' போன்ற வருத்தத்தின், கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். ஏதோவோர் இடத்தில், நீங்கள் உங்கள் குழந்தைக்கு உறுதுணையாக இல்லை, அல்லது முன்பிருந்ததுபோல இப்போது இல்லை என்பதையே இது குறிக்கும். எனவே இனி வரும் நாள்களில், குழந்தையுடன் நீங்கள் செலவழிக்கும் குவாலிட்டி நேரத்தில், அவர்களுடனான நெருக்கமான உறவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குழந்தையை அணுகும் முறை * கீழ்க்காணும் கேள்விகளை குழந்தையிடம் கேட்டு, விடைக்கேற்றபடி உங்களைச் சரிசெய்துகொள்ளுங்கள். நான் செய்த எந்த விஷயம் உன்னைக் காயப்படுத்தியது? உனக்கு இப்போது கோபமாக உள்ளதா, வருத்தமாக உள்ளதா? நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? நீ ஸ்ட்ராங்கான குழந்தை என்ற உண்மையை, இப்போது நீ உணர்கிறாயா? Parenting * புரிந்துகொள்ளும் வயதில் இருக்கும் குழந்தை என்றால், வெறுப்பு என்ற வார்த்தையின் வீரியத்தை அவர்களுக்குச் சொல்லுங்கள். அந்த வார்த்தையை உங்களை நோக்கி அவர்கள் சொன்னதால், உங்களுக்கு மனத்தளவில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் கூறுங்கள். * குழந்தையை, அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் செலவழிக்க அனுமதியுங்கள். ஒரு விடுமுறை நாளில், ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பொறுமையாக அமர்ந்து பேசுங்கள். Parenting: இந்த வகை பெற்றோர்களின் குழந்தைகளே சமூகத்துக்கு வரம்! மீண்டும் குழந்தையுடன் பேசும்போது, கீழ்க்காணும் விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அவை... பூங்கொடி பாலா வார்த்தைகளில் கவனமாக இருப்பது ஏன் அவசியம்? உங்களிடம் ஹேட் யூ சொல்லும் குழந்தையிடம், கீழ்க்காணும் விஷயங்களை அன்பாகச் சொல்லுங்கள். * 'எங்களுக்கு நீ ரொம்ப முக்கியம். எங்கள் வாழ்வின் பொக்கிஷம் நீதான். உன்னுடைய செய்கைகள், உணர்வுகளெல்லாம் எங்களுக்குப் புரிகின்றன. நாங்கள் எப்போதும் உனக்காக, உன்னோடு உடனிருப்போம்! வீ லவ் யூ லாட்!' Parenting: குழந்தைகளை 2 வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? * 'ஹேட் யூ' வார்த்தை உபயோகம், தவறென சொல்லிக்கொடுங்கள்! * பெற்றோர்கள் சிலர், `ஐ ஹேட் யூ' என்று குழந்தைகள் சொன்னால் ரசிக்கிறார்கள். தன் வயதுக்கு மீறிய அந்த வார்த்தைகளைக் குழந்தை சொன்னவுடன், 'குட்டி எப்படியெல்லாம் பேசுது பாரு' என்று சிரித்து மகிழ்கிறார்கள். இப்படிச் செய்வதை பெற்றோர் தவிர்த்தால் மட்டுமே, குழந்தைகள் அதைச் சொல்வதை நிறுத்துவார்கள். எனவே பெற்றோரே... அடுத்த முறை நீங்கள் கவனமாக இருங்கள்! சொல்லிக்கொடுங்கள் பெற்றோரே! கோபத்தை மற்றவர்களின் மீது வெறுப்புக்கொள்ளாமல் எப்படி வெளிப்படுத்தலாம் எனக் பெற்றோர் அல்லாத வேறொரு நபரைப் பார்த்து 'ஐ ஹேட் ஹிம்/ஹெர்' எனக் கூறினால், பெற்றோர் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நபரால் குழந்தைக்கு ஏதாவது அசௌகர்யம் ஏற்பட்டிருந்தால்தான் குழந்தை அப்படிக் குறிப்பிடும். ஆகவே, 'ஏன்டா அவரைப் பார்த்து அப்படிச் சொன்ன? அவர் என்ன பண்ணினார்?' என்று குழந்தையிடம் கவனமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார் பூங்கொடி பாலா.

விகடன் 16 Dec 2025 6:35 am

மின்னல் தாக்கி செல்போன் வெடிக்குமா?

சருமப் பராமரிப்பு என்பது இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டியதா? - கே.ராஜலட்சுமி, புதுச்சேரி பதில் சொல்கிறார், ஆரணியைச் சேர்ந்த சரும மருத்துவர் ஜெகன் ராமன். சருமம் என்பது நாம் வெளியில் பார்க்கும் தோல் மட்டும் கிடையாது. அது நம் உடல் வெப்பத்தை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் வெயிலில் சென்று வந்தால் சருமம் நிறம் மாறியிருப்பதை கவனித்திருப்போம், அது சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை நம் உடலுக்குள் இறக்காமல் இருப்பதற்காக, மெலனோ சைட்ஸ் எனப்படும் நிறமிகளை சருமத்தின் மேற் பகுதிக்குக் கொண்டுவரும் ஒருவித பாதுகாப்பு நடவடிக்கையே. இப்படி சருமத்துக்கு நிறைய பணிகள் உண்டு. எனவே, சருமப் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். தினமும் சருமப் பராமரிப்பைப் பின்பற்றுவது அவசியம் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் தேவையற்றது. உதாரணத்துக்கு, சிலர், பாதுகாப்பு கருதி, குழந்தைகளை வெளியே விடாமலேயே வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் செய்ய வேண்டியதில்லை. நம் ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு தன்மையில் இருக்கும். அதற்கேற்றவாறு தான் சருமப் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்ச்சரைசர் இரண்டும் மிக முக்கியம். வெயிலில் செல்லும்போது தலையில் தொப்பி அணிவது, உடல் முழுவதும் மூடும்படியான ஆடைகள் அணிவது போன்றவற்றால் வெளிப்புற காரணிகளால் சருமம் பாதிப்படை வதைத் தடுக்கலாம். சருமத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். அடிக்கடி பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக சருமத்தை அடிக்கடி கிளென்ஸ் செய்ய வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். எனவே, சருமப் பராமரிப்பு என்பது எப்போதும் பின்பற்றப்பட வேண்டியதுதான். மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசியபோது மின்னல் தாக்கி, செல்போன் வெடித்து ஓர் இளைஞர் உயிரிழந்ததாக செய்தி படித்தேன். இது எப்படி சாத்தியம... ? மழை பெய்யும்போது செல்போன் பேசக்கூடாதா? - மல்லிகா அன்பழகன், சென்னை-78 பதில் சொல்கிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த `அஃறிணை இன்னோவேஷன்' நிறுவனர் முனைவர் விக்னேஷ் கிருஷ்ணன். மின்சாதன பொருளாகவே இருந்தாலும் செல்போனுக்கு மின்னலை ஈர்க்கும் தன்மை கிடையாது. அதனால் மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசும்போது, அது வெடிக்கும் என்பதும், அதனால் மனிதர்கள் இறப்பார்கள் என்பதும் தற்போது வரை நிரூபிக்கப்படாதவை. எப்போதும் மின்னல் வரும்போது அது பூமியை நோக்கி இறங்கும். அப்போது வரும் வேகத்தில் மின்கடத்தும் பொருள்கள் ஏதேனும் இருந்தால் அதன்வழியே இறங்கிவிடும். அதனால்தான் பெரிய பெரிய கட்டடங்களில் கூர்மையான முனை போன்ற பகுதியும், மின்னலைத் தாங்கும் அமைப்பும் கொண்டும் கட்டுகின்றனர். மொட்டைமாடியில் நாம் நிற்கும்போது மொட்டைமாடியைவிட அதிக உயரத்தில் நாம் இருப்போம். நம்முடைய உடலும் மின்னலைக் கடத்தும் தன்மையுடையது. அதனால் மின்னல் நம் உடல் வழியே பூமிக்குள் இறங்கும். அதனால்தான் மின்னல் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கின்றனர். மனித உடலில் பாயும் மின்னல், அதிக வோல்டேஜ் உடன் இறங்கும். அப்போது ஏற்கெனவே கையில் இருக்கும் செல்போன் போன்ற மின்சாதன பொருளில், அந்த அதிக வோல்டேஜால் வெடிக்கும். இதனால்தான் மழை பெய்யும்போது உயரமான இடங்களில் இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது. இடி என்பது வெறும் சத்தம் தான், மின்னல்தான் பூமியில் இறங்குவது. அதனால் இதனை `மின்னல்தாங்கி' என்றே கூற வேண்டும். அப்படித்தான் ஆரம்பத்தில் கூறினார்கள். பேச்சு வழக்கில் அது `இடிதாங்கி' என மாறிவிட்டது.

விகடன் 16 Dec 2025 5:38 am

சந்நியாசம் 2.0 : DINK தம்பதிகளின் வாழ்க்கைமுறை – இது பொருளாதாரப் புரட்சியா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் DINK வாழ்க்கை முறை ஏன் இன்று தவிர்க்க முடியாத பேசுபொருளாக மாறியுள்ளது? இது ஒரு தற்காலிகப் பொருளாதார அதிர்ச்சியின் விளைவா, அல்லது பெண்கள் தேடிய நிரந்தர விடுதலைக்கான வழியா? இந்தக் கட்டுரை, தமிழர் வாழ்வியல் முதல் தற்கால உலகப் போக்கு வரை, DINK வாழ்க்கை முறையின் சமூக, பொருளாதாரப் பரிமாணங்கள் குறித்து விரிவாக அலசுகிறது. இந்திய சமூக அமைப்பில், DINK (DUAL INCOME,NO KIDS) வாழ்க்கை முறை, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இத்தகைய தளங்களில், இளம் தம்பதிகளின் பிரபலமான முகங்கள் பலர் உள்ளனர். DINK வாழ்க்கை முறை என்றால் என்ன? DINK என்பது Dual Income, No Kids என்பதன் சுருக்கமாகும். தமிழில் இதை இரட்டை வருமானம், குழந்தை இல்லை என்று குறிப்பிடலாம். இது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் தம்பதிகளைக் குறிக்கிறது. Dual Income (இரட்டை வருமானம்): கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலை செய்து வருமானம் ஈட்டுவார்கள். No Kids (குழந்தை வேண்டாம்): அவர்கள் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்து, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் வாழ்கிறார்கள். சமீபக் காலமாக DINK வாழ்க்கை முறையை பின்பற்றும் தம்பதிகள், தங்கள் துணையின் அன்றாட வாழ்க்கையைக் காட்டும் DINK vlogs (டிங்க் காணொளிகள்) மூலம் அதிகப் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளனர். அவற்றில் அவர்கள் தங்கள் ஆடம்பரமான மற்றும் சுமை இல்லாத வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வாழ்க்கை முறையின் புகழ்ச்சி, தெரிந்தோ தெரியாமலோ, பல தம்பதிகளை DINK என்ற கருத்தியலை நோக்கி ஈர்க்கவும், உத்வேகப்படுத்தவும் செய்கிறது. இந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக இந்தக் தம்பதியினர் பொருளாதார மற்றும் சமூக காரணங்களைக் கூறி பல வாதங்களை முன்வைக்கின்றனர். பொருளாதாரக் காரணம் முக்கியமாக, இரட்டை வருமானம் ஈட்டி, நிதி நெருக்கடிகள் ஏதுமின்றி, தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை அனுபவித்து தங்கள் தொழிலைத் தொடர்வதுதான்.  இந்த வாழ்க்கை முறையை ஆதரிப்பவர்களின் கூற்றுப்படி, குழந்தை உள்ள தம்பதியினரை விட இவர்களுக்கு செலவழிக்கக்கூடிய வருமானம் (disposable income) அதிகமாக உள்ளது, இது அவர்களுக்கு விருப்பமான ஆடம்பரப் பொருட்களை வாங்கவும், சுதந்திரத்துடன் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழவும் கூடுதல் நிதி பலத்தை (financial leverage) அளிக்கிறது. சமூக அமைப்பில், DINK தம்பதியினரின் கூற்றுப்படி, அவர்களுக்குக் குழந்தைகளை வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் சுமை இல்லை. எனவே, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பொறுப்புகள் என்ற சுமை எதுவும் இல்லாமல், தங்கள் வேலைகள், பொழுதுபோக்குகள் மற்றும் பயணங்களை தொடர ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. இது பெற்றோர் என்ற மன அழுத்தம் மற்றும் பொறுப்பிலிருந்து அவர்கள் விடுபட்டதாக உணர வைக்கிறது. குழந்தைகள் இல்லாமல், இந்தத் தம்பதியினர் தங்கள் சொந்த தனிப்பட்ட உறவில் அதிக நேரத்தையும் ஆற்றலையும் முதலீடு செய்ய முடியும் என்று உணர்கிறார்கள். ஃபைனல்மைல் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நடத்தை அறிவியல் நிபுணருமான பிஜு டொமினிக் கூறுகையில், “பொதுவாக மக்களால் எதிர்காலத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முடிவதில்லை. ஆனால், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் திட்டமிடவும் மக்களைத் தூண்டும் உந்து சக்தியாக குழந்தைகளே இருக்கிறார்கள் என்று நான் காண்கிறேன்.” இந்தக் கூற்றில் உண்மை உள்ளது, ஏனெனில் இந்தியச் சமூக அமைப்பில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப மரபு தொடர வேண்டும் என்ற வலுவான ஆசை உள்ளது. எனவே, குடும்பத்தில் உள்ள குழந்தைகளே ஒருவரை எதிர்காலத்திற்காக உழைக்கவும் திட்டமிடவும் வைக்கிறார்கள். இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மறுக்க முடியாது, ஆனால் அது DINK  வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இருக்கக் கூடாது.  திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் இளம் தம்பதிகள் DINK வாழ்க்கை முறையைப் பின்பற்றலாம், ஆனால் அவர்கள் அத்தகைய வாழ்க்கை முறைக்கு ஒரு கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும், மேலும் ஒருமுறை நிலைபெற்ற பிறகு, அவர்கள் குழந்தை பேறு என்னும் சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டும். குழந்தைகள் இல்லாத வாழ்க்கை முதுமையில் வேதனையாகிறது; இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, எந்தவொரு சமூகத்திலும் மன மற்றும் உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இளமையான மக்கள் தொகை இல்லாத நிலையில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நின்றுவிடும் என்றும் கூறுகிறார். DINK என்ற சொல் முதலில் 1980-களில் பிரபலமடைந்தது. ஆனால், youtube, Instagram மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் அது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இந்தத் தளங்களில் இளம் தம்பதிகள் தங்கள் குழந்தைகளற்ற, அனுபவம் நிறைந்த வாழ்க்கை முறையைப் பகிர்ந்து கொள்கின்றனர். DINK-க்கள் மக்கள் தொகையில் வெறும் 5% மட்டுமே என்றாலும், அவர்களின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளன. அவர்களில் 61% பேர் குடும்ப வருமானம் பல கோடிகள் தாண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர், இது வாழ்க்கை முறையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடாக மாறுகிறது. சராசரி அமெரிக்கருடன் ஒப்பிடும்போது DINK-கள் ஒவ்வொரு மாதமும் வெளியே உணவருந்த நான்கு மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றனர். மேலும் விடுமுறைகளுக்காக கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக ஒதுக்குகின்றனர், பயணத்திற்கு முதலீடு செய்கின்றனர். அவர்களின் செலவு முறைகள் ஆடம்பரம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உடனடி முடிவுகள் (spontaneity) ஆகியவற்றை நோக்கியே உள்ளன‌.குழந்தைப் பேறு வேண்டாம் என்ற அவர்களின் தேர்வால் இந்த குணாதிசயங்கள் சாத்தியமாகின்றன என்று பலர் கூறுகின்றனர். இந்த போக்கு சமூக பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. Gen-Zகளில்  மில்லினியல் தொண்ணூற்று ஒரு சதவீதம் பேர் DINK க்கு ஆதரவு தருகின்றனர்.குழந்தைகள் இல்லாததால், நானும் எனது துணையும் எங்களுக்காக முதலீடு செய்ய என்னிடம் அதிக செலவிடக்கூடிய வருமானம் உள்ளது, என்றும் கூறுகின்றனர். DINK குடும்பங்கள் 84% பேர் தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு முக்கிய முன்னுரிமையாகக் குறிப்பிட்டனர். DINK-களில் 76% பேர், குழந்தைகளற்ற தங்கள் நிலையே, உலகை தங்கள் விருப்பப்படி ஆராய அவர்களுக்கு உதவுகிறது என்று கூறுகின்றனர், அதேசமயம் 79% பேர் இது தொழில் மற்றும் வாழ்க்கை முறைக்கான இலக்குகளை அடைய உதவுகிறது என்று நம்புகின்றனர். மேலும், உடல் மற்றும் மன ஆரோக்கியம் முதல் சமூக வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள் வரை, DINK-கள் பெற்றோரையும் பொது மக்களையும் விட தங்கள் நல்வாழ்வை தொடர்ந்து உயர்வாக மதிப்பிடுகின்றனர். கருத்துக் கணிப்பின்படி, DINK-கள் தங்கள் காதல் உறவு  குறித்து 83% - 88% மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். DINK வாழ்க்கை முறை பெரும்பாலும் தற்காலிகமானது என்றாலும் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட Gen Z மற்றும் DINK-களில் 65% பேர், தாங்கள் இறுதியில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறினர். மேலும், சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், குடும்பம், வேலை மற்றும் நிதி சுதந்திரம் தொடர்பான கலாச்சார நெறிமுறைகளையும் மறுவடிவமைக்கின்றன. ஹாரிஸ் கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் தலைமை  அதிகாரியான லிப்பி ராட்னி கூறுகையில், DINK-களின் எழுச்சி என்பது பெற்றோர் ஆவதை நிராகரிப்பது அல்ல. இது ஒரு தலைமுறையின் பொருளாதார அதிர்ச்சிக்கு (economic trauma) அளித்த பதிலாகும். இதன் மூலம் அவர்கள் நிதிப் பாதுகாப்பை (financial security) மிக உயர்ந்த ஆடம்பரமாக மாற்றுகிறார்கள். என்றார். பெரியார் ``குழந்தை பிறப்பை ஒரு பெண்ணின் அடிமைத்தனத்துக்கான கருவியாகப் பார்க்காமல், பிறப்புக் கட்டுப்பாடு (Family Planning) மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று முன்னேற வேண்டும். மேலும் திட்டமிடல் இல்லாமல் குழந்தைகள் பிறப்பதைத் தவிர்த்து, நல்ல திட்டமிடலுடன் குழந்தைகளைப் பெற்று, அவர்களின் தரமான கல்விக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களின் ஒரே கடமை குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்ற எண்ணமே அவர்களை அடிமைகளாக மாற்றுகிறது; இது பெண்களின் சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் பாதிக்கிறது” என்றார் தந்தை பெரியார். அகம் புறம் என்று பகுக்கப்பட்ட சங்ககாலத் தமிழர் வாழ்வியலிலுக்கு அறம் பொருள் இன்பம் தான் அடிப்படையே தவிர வீடு எனப்படும் வீடுபேறு அல்ல. அதனால்தான் திருவள்ளுவரும் அறம் பொருள் இன்பத்துடன் நிறுத்திக்கொண்டார்.  இளங்கோவடிகளும் வீடுபேற்றைப் பற்றிப் பேசவில்லை. வீடுபேறேதான் வேண்டுமென்றால் சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலையில் சென்று படித்துக்கொள்ளுங்கள் என்று கைகாட்டிவிடுகிறார். (சிலம்பு சமணநூல் என்பதெல்லாம் சிலம்பைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்விட்ட கதை. எது எப்படியிருந்தாலும் சந்நியாசத்தால் பெருத்த சுரண்டலுக்குள்ளாவது பெண்கள்தான். சம்சாரத்திலாவது குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்கும் பங்கிருந்தது. சந்நியாசத்தில், ஆண் முற்றமுழுதாக விடுதலை அடைந்தவன். சந்நியாசிக்குப் பிள்ளைபெற்றவள் தலையில்தான் மொத்தப் பிள்ளைவளர்ப்பின் சுமையும் விழுந்து கழுத்தை முறித்தது. தற்காலத்தில், பெண்களுக்கும் சந்நியாசம் தேவைப்படுகிறது. பொருளாதாரத் தன்னிறைவடைந்த புதிய தலைமுறைப் பெண்கள், சந்நியாச ஆண்களைப் போலவே தாங்களும் எந்தநேரமும் இன்பமாக இருக்க விழைகிறார்கள். பிள்ளைகுட்டி பிக்கல் பிடுங்கலில்லாத வாழ்வின்மீது அவர்களுக்கும் ஆசை வந்திருக்கிறது. இது பிழையே இல்லை. பல்லாயிரம் ஆண்டுகாலப் பெண்குலத்தின் கனவு இப்பொழுதுதான் நனவாக ஆரம்பித்திருக்கிறது. அனுபவித்துவாழ வாழ்த்துகள். தேர்தல்

விகடன் 15 Dec 2025 11:38 pm