SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு -ப.சிதம்பரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின்றன. அதே நேரம், இந்தத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்களும் வரத் தொடங்கிவிட்டன. த.வெ.க தலைவர் விஜய், இந்தத் தேர்தல் தி.மு.க - த.வெ.க என்ற இருமுனைப் போட்டியாகவே இருக்கும் என்றார். அதிமுக - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என வானதி சீனிவாசன் பேட்டியளித்து தேர்தல் களத்தைச் சூடாக்கியிருக்கிறார். செல்வப்பெருந்தகை காங்கிரஸ் வழக்கம் போல தி.மு.க-வுடன்தான் கூட்டணி எனப் பேசப்பட்ட நிலையில், த.வெ.க-வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் மத்தியத் தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற செய்தி வெளியாகி பரபரப்பானது. இந்தக் கூற்றை மறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் - தி.மு.க-வுடன் கூட்டணி என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தார். தவெக: பிரசாரத்தை தொடங்கும் விஜய், அனுமதி மறுத்த காவல்துறை - காரணம் என்ன? இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, திரு. நிவேதித் ஆல்வா, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, திரு. செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். 'இந்தியா கூட்டணி'யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார். ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

விகடன் 22 Nov 2025 12:00 pm

`மேக்கேதாட்டு அணை - மெட்ரோ - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு’ - எடப்பாடி பழனிசாமி விரிவான பேட்டி

சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ``கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டியில், மேக்கேதாட்டு அணை கட்ட முழுவீச்சில் பணி துவங்கப்படும், புதிய விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். மேக்கேதாட்டு திட்டத்திற்கு தலைமை அலுவலகம் தனியாக கட்டப்படும் என பேசியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு மெத்தனப்போக்காக இருக்கிறது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் உள்ள ஜீவநதியாக காவிரி தண்ணீர் தான் இருப்பதுதான். காவிரி தண்ணீரை நம்பி தான் பல லட்சம் விவசாயிகள் வேளாண் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி தண்ணீர்தான். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடகா அரசு இவ்வாறு தெளிவான திட்ட அறிக்கையை மத்தியில் நீர்வள ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பேட்டி அணை கட்டுவதற்கு உரிமை கர்நாடக அரசுக்கு இல்லை! உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு உரிமை கர்நாடக அரசுக்கு இல்லை. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. 15 ஆண்டுகளுக்கு காவிரி நதிநீர் தடுக்கவோ, திருப்பவோ, மடைமாற்றம் செய்யவோ கூடாது என்று ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தர வேண்டும். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு ஆண்டுக்கு 177.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து முதலமைச்சர் எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார். மேலும் தொடர்ந்தவர் ``திமுக இந்திய கூட்டணியில் உள்ளது. காங்கிரஸும் இடம்பெற்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசி சுமுகமாக நிலை உருவாக்க வேண்டும். இந்திய கூட்டணியில் அங்கும் வகிப்பதாக ஸ்டாலின் கூறி வருகிறார். அவ்வாறு அங்கம் வகிக்கும்போது, காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை எளிதாக தீர்க்க வாய்ப்புள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் தலைவருடன் தொடர்பு கொண்டு நல்லதீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அவ்வாறு தீர்வு காணப்படாமல் இருந்தால் தமிழக வஞ்சிக்கப்பட்டுவிடும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். எனவே எச்சரிக்கையுடன் முதல்வர் கையாள வேண்டும்” என்றும் தெரிவித்தார். மெட்ரோ திட்ட அறிக்கையில் பல குளறுபடிகள்! தொடர்ந்து மெட்ரோ குறித்து பேசியவர், ``அதிமுக ஆட்சியில் கோவை மாநகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும் என்று விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டனர். 2024 ஆம் ஆண்டுதான் மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தனர். அந்தத் திட்ட அறிக்கையில் பல குளறுபடிகள் இருந்ததன் காரணமாக மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதன் பிறகும் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் வர வேண்டும் என்றால் 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15 லட்சத்து 85 ஆயிரம் மக்கள் இருப்பதாக திட்டஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அதனால் இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டது. தற்போது 2025 ஆம் ஆண்டு மக்கள்தொகை எவ்வளவு உள்ளது என்று கணக்கிட்டு மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தால், மத்திய அரசு விதிகளின்படி 20 லட்சம் மக்கள் தொகை இருந்திருக்கும் மெட்ரோ ரயில் திட்டமும் கிடைத்திருக்கும். எனவே மீண்டும் தமிழக அரசு விழிப்புடன் இருந்து குளறுபடி இல்லாமல் மத்திய அரசு விதிமுறைகளை பின்பற்றி விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்றார். மெட்ரோ ரயில் நிலையம் மாநில அரசின் கவனக்குறைவு மேலும், ``இந்த குளறுபடி மாநில அரசிடம் தான் உள்ளது. மாநில அரசு, மத்திய அரசிடம் மெட்ரோ ரயில் திட்டத்தில் என்னென்ன விதிகள் உள்ளது என்று ஆய்வு செய்து, அதன்படி முறையாக விரிவான திட்ட அறிக்கை அனுப்பியிருந்தால் பிரச்சினை வந்திருக்காது. இதேபோன்று மதுரை மாநகராட்சியும் இதேதான். அதிமுக ஆட்சி வந்தவுடன் இரண்டு மெட்ரோ ரயில் திட்டத்தையும் துவங்குவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அதிமுக ஆட்சி தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை பணி துவங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டம் என்பதால் காலதாமதம் செய்து, சரியாக ஆய்வு செய்து, அனுப்பாத காரணத்தால் பணிசுணக்கம் ஏற்பட்டு, மத்திய அரசிடம் இருந்து இவ்வாறு பதில் வந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் மாநில அரசின் கவனக்குறைவும், அலட்சியம் தான் என்றார். தொடர்ந்து, ``தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து பலமுறை கூறியும் தமிழக அரசு மெத்தனபோக்குடன் தான் உள்ளது. நிரந்தரமான டிஜிபியை இதுவரை தமிழக அரசு நியமிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், காலஅவகாசம் கொடுத்து திமுக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது. தனக்கு வேண்டுபவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசாக இருந்து கொண்டிருக்கிறது. திமுக அரசுக்கு கைபாவையாக உள்ள டிஜிபியை நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார். இனியாவது காலதாமதம் செய்யாமல் நிரந்தர டிஜிபி நியமித்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் கோரிக்கை வைத்தார். ஒரு முக்கிய புள்ளிக்கு தொடர்பு? ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ``ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாநில காவல்துறையால், நீதி கிடைக்காது என உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பெறப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு டெல்லி உச்ச நீதிமன்றம் செல்கிறது. யார் விசாரித்தால் என்ன? மாநில அரசுக்கு என்ன அச்சம், இதில் ஏதோ மர்மம் உள்ளது. ஒரு முக்கிய புள்ளி இதில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள். உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று மேல்முறையீடு செய்கிறார்கள். யார் விசாரித்தால் என்ன. உண்மை வெளியே வந்தால்போதும், குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் இதுதான் எதார்த்தமான நிலை. ஆனால் மாநில அரசுக்கு அது தேவையில்லை. பிரச்சினை அடிப்படையில் உயர் நீதிமன்றத்தை சம்பந்தப்பட்டவர்கள் நாடுகிறார்கள். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும் அதற்கு எதிராக மாநில அரசு முறையிடுகிறது” என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமி மேலும் தொடர்ந்தவர், ``விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவரப்பட்ட, நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்து இருந்தால்,விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். 15 நாட்கள் கொள்முதலை நிறுத்திவிட்டார்கள். விவசாயிகளின் நெல்மணிகள் எல்லாம் முளைத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசு வந்த பிறகு அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உண்மையான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் அதிமுக உடைய கருத்து. எஸ்.ஐ.ஆர் பணியை யாராவது ஒருவர் மேற்கொண்டு தான் ஆகவேண்டும். இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை‌. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து தான் எஸ் ஐ ஆர் பணியை மேற்கொள்ள முடியும்.. இதற்கு தனியாக ஏஜென்சி வைக்க முடியாது. அந்த அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். நிறையபேர் உயிரெல்லாம் பொருட்படுத்தாமல் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள். வாக்காளர் பட்டியலை தயாரிக்கக்கூட முன் வராவிட்டால் நாடு எவ்வாறு வளரும். அரசு அலுவலர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால், சரியான முறையில் செயல்பட தயாராக உள்ளார்கள். அரசாங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி. ஜெயலலிதா இருந்தபோது தனபாலை உயர்ந்த இடத்தில் அமர வைத்து, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். அதிமுக கட்சி பட்டிலின மக்களுக்கு உரிய மரியாதை வழங்கியது. ஜவுளி பூங்கா மற்றும் ராணுவத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆகியவை அமைப்பதற்கு அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இரும்பாலை பகுதியில் குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. சுமார் 1500 ஏக்கர் இரும்பாலை பகுதியில் காலியாக உள்ளது. இரண்டு திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, மாநில அரசு கடிதம் அனுப்பியது. இதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த பிரச்னை இருந்திருக்காது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தார்களோ அதை எல்லாம் கடைப்பிடிப்பதும் தொடர்வதும் கிடையாது. விவசாயிகள் பாதிக்காத அளவிற்கு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றும் கூறினார். பற்றவைத்த ஆளுநர்... ஃபைல் கொடுத்த எடப்பாடி... ‘ஓ.கே’ சொன்ன மோடி!

விகடன் 22 Nov 2025 11:13 am

புதிய தொழிலாளர் சட்டம்: ``ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி குறிப்பாக சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020, தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு 2020, ஊதியம் குறித்த சட்டத் தொகுப்பு 2019, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020 ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``இன்று, நமது அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை கணிசமாக எளிதாக்குகிறது. மேலும், வணிகம் செய்வதை எளிதாக்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ. சண்முகம்,``இந்திய தொழிலாளி வர்க்கம் 150 ஆண்டு காலம் போராடி பெற்ற ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்புகளை உள்ளடக்கிய 29 சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு நிறைவேற்றியது. இந்த சட்ட தொகுப்புகள் சட்டமாக்கப்பட்டாலும் இந்திய தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியதின் விளைவாக அமலாக்கத்தை ஒத்திவைத்தது. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான குரூரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. பெ. சண்முகம் தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் 21.11.2025 முதல் நடைமுறைப்படுத்த நிர்வாக ரீதியிலான அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. மோடி அரசின் இத்தகைய செயலானது இந்திய பெரும் முதலாளிகளையும், கார்ப்பரேட்டுகளின் லாப வேட்கைக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளதாகும். இனி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தட்டி கேட்க முடியாத வகையில் சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை மறுக்கப்பட்டு தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்படுவார்கள். இதன் விளைவாக, தொழிலாளர்களின்உண்மை ஊதியம் மென்மேலும் குறைந்தும், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக குறைந்து, காண்ட்ராக்ட், தினக்கூலி, குறிப்பிட்ட கால வேலை முறையில் அத்துக்கூலிகளின் பெருமளவிலான வேலைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பற்ற தொழிலாளார்கள் கூட்டம் பெருகும் ஆபத்தை உண்டாக்கும். மோடி! இது இந்திய சமூக, அரசியல், பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். தொழில் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து தொழிலமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தும். மோடி அரசின் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்ய தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் அமலாக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென சிபிஐ (எம்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது இவ்வாறு பெ. சண்முகம் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, ``இன்று நாடு முழுவதும் கட்டாயமாக அமலாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனையும் மனிதநேய உரிமைகளையும் நேரடியாக புறக்கணிக்கும் முடிவாகும். உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இந்தச் சட்டங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 8 மணி நேர வேலை நேரம் என்பது ஒரு சாதாரண விதிமுறை அல்ல; தலைமுறைகள் கடந்து நடந்த ரத்தத்தும் உயிர்தியாகங்களும் கொண்ட போராட்டங்களின் பயனாக உருவான வரலாற்றுச் சாதனை. தொழிலாளர் | May Day Clicks தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமையாக இதை உறுதி செய்தவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். ‘தொழிலாளர் ஒரு மனிதன் இயந்திரம் அல்ல’ என்ற அவரின் உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேரம் என்பது சட்டமாக கொண்டுவரப்பட்டது. அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு. மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும். இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல. நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன. உழைப்பால் தேசத்தை வளர்க்கும் மக்களின் சுவாசத்தையும், துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது. செல்வப் பெருந்தகை இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின் செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு. இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கப்படும் வரை நாம் ஒருபோதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம். எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சட்டத்தை எதிர்த்து நாடுதழுவிய அளவில் 26-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. ``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்

விகடன் 22 Nov 2025 10:37 am

ஒட்டாவாவில் சர்வதேச தலைவர்களை வரவேற்று G7 மாநாடு துவக்கம்

ஒட்டாவாவில் சர்வதேச தலைவர்களை வரவேற்று G7 மாநாடு துவக்கம்பாதுகாப்பு, எல்லைக் காவல், அமைக்கப்பட்ட The post ஒட்டாவாவில் சர்வதேச தலைவர்களை வரவேற்று G7 மாநாடு துவக்கம் appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 22 Nov 2025 10:23 am

இன்று மாவீரர் வாரம் ஆரம்பம்

இன்று (21) மாவீரர் வாரம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது The post இன்று மாவீரர் வாரம் ஆரம்பம் appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 22 Nov 2025 10:00 am

`நிதிஷின் 20 வருட முக்கிய இலாகாவும் போனது’ - அதிகாரத்தில் மேலோங்கும் பாஜக! | பீகார் அமைச்சரவை

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. நவம்பர் 20-ல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 10-வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருடன் 26 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்களில், பாஜக-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்கள். மொத்தமாகக் கட்சி வாரியாக, பா.ஜ.க-வில் 14 பேருக்கும், ஜே.டி.யு-வில் 8 பேருக்கும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் 2 பேருக்கும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய இரு கட்சிகளில் தலா ஒருவருக்கும் அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதல்வர் உட்பட அமைச்சர்கள் 26 பேருக்கும் யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், 2005-ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் வசமிருந்த உள்துறை இலாகா பாஜக-வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி வசம் சென்றிருக்கிறது. ஏற்கெனவே ஜே.டி.யு-வை விட பா.ஜ.க-வுக்கு அதிக அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது உள்துறை இலாகாவும் பா.ஜ.க-விடம் சென்றிருப்பதால் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க-வின் கரங்கள் மேலிருப்பதாகப் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. இனி யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலைப் பார்ப்போம்... நிதிஷ் குமார் - Bihar Cabinet பீகார் அமைச்சரவை! பாஜக அமைச்சர்கள்: 1. சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) - உள்துறை 2. விஜய் குமார் சின்ஹா ​​(துணை முதல்வர்) - நிலம் & வருவாய், சுரங்கம் & புவியியல் 3. திலீப் ஜெய்ஸ்வால் - தொழிற்துறை 4. மங்கள் பாண்டே - சுகாதாரம், சட்டம் 5. ராம் கிருபால் யாதவ் - விவசாயம் Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை 6. சஞ்சய் சிங் டைகர் - தொழிலாளர் வளங்கள் 7. நிதின் நபின் - சாலை கட்டுமானம்; நகர்ப்புற மேம்பாடு & வீட்டுவசதி 8. அருண் சங்கர் பிரசாத் - சுற்றுலா, கலை & கலாச்சாரம் 9. சுரேந்திர மேத்தா - விலங்கு மற்றும் மீன்வள வளங்கள் பீகார் உள்துறை அமைச்சர் சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) - முதல்வர் நிதிஷ் குமார் 10. நாராயண் பிரசாத் - பேரிடர் மேலாண்மை 11. ராமா நிஷாத் - பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன் 12. லக்கேந்திர ரோஷன் - பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலன் 13. ஷ்ரேயாஷி சிங் - தகவல் தொழில்நுட்பம்; விளையாட்டு 14. பிரமோத் குமார் - கூட்டுறவு; சுற்றுச்சூழல், காடு & காலநிலை மாற்றம் ஐக்கிய ஜனதா தள அமைச்சர்கள்: 15. விஜய் குமார் சவுத்ரி - நீர்வளம், கட்டிட கட்டுமானம் 16. விஜேந்திர குமார் யாதவ் - எரிசக்தி 17. ஷ்ரவன் குமார் - கிராமப்புற மேம்பாடு, போக்குவரத்துத் துறை 18. அசோக் சவுத்ரி - கிராமப்புற பணிகள் 19. எம்.டி. ஜமா கான் - சிறுபான்மையினர் நலன் 20. லெஷி சிங் - உணவு & நுகர்வோர் விவகாரங்கள் 21. மதன் சாஹ்னி - சமூக நலன் 22. சுனில் குமார் - கல்வி மோடி - நிதிஷ் குமார் லோக் ஜனசக்தி கட்சி அமைச்சர்கள்: 23. சஞ்சய் குமார் - கரும்பு தொழில்கள் 24. சஞ்சய் குமார் சிங் - பொது சுகாதாரப் பொறியியல் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா அமைச்சர்: 25. தீபக் பிரகாஷ் - பஞ்சாயத்து ராஜ் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா: 26. சந்தோஷ் குமார் சுமன் - சிறு நீர்வளங்கள் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பொது நிர்வாகம், அமைச்சரவை செயலகம், கண்காணிப்பு ஆகிய இலாகாக்களுடன் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் அனைத்தும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?

விகடன் 22 Nov 2025 9:50 am

கனடா – UAE வர்த்தக உறவுகள் புதிய உயரத்தில்பிரதமர் மார்க் கார்னி முக்கிய ஒப்பந்தங்களை உறுதி செய்தார்

உலகம் அதிக ஆபத்தான மற்றும் பிளவுபட்ட சூழ்நிலைக்குள் நுழைந்துள்ள இந்த காலக்கட்டத்தில், வர்த்தக The post கனடா – UAE வர்த்தக உறவுகள் புதிய உயரத்தில்பிரதமர் மார்க் கார்னி முக்கிய ஒப்பந்தங்களை உறுதி செய்தார் appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 22 Nov 2025 9:27 am

பிராம்ப்டனில் தமிழ் ஈழ தேசியக் கொடி நாள் – Tamil Eelam National Flag Day

பிராம்ப்டன், நவம்பர் 21 — Tamil Eelam National Flag Day தமிழ் The post பிராம்ப்டனில் தமிழ் ஈழ தேசியக் கொடி நாள் – Tamil Eelam National Flag Day appeared first on The Tamil Journal - Members of the National Ethnic Press and Media Council of Canada .

தி தமிழ் ஜௌர்னல் 22 Nov 2025 8:24 am

GST Raid: அமைச்சர் ஐ. பெரியசாமி குடும்பத்தினரிடம் நடந்த 7 மணி நேரம் சோதனை நிறைவு | Photo Album

7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை 7 மணி நேரம் நீண்ட சோதனை I Periyasamy வீட்டில் Raid - DMKவுக்கு எதிராக EDயின் புதிய ஆபரேஷன்! | Off The Record | ஐ பெரியசாமி

விகடன் 22 Nov 2025 8:06 am

கன்னியாகுமரி: ஏரியில் மீன் பிடிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை மேயராக்கினார் - மா.சு

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், இந்த அரசு மீனவர்களுக்குச் செய்துள்ள நலத்திட்டங்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பேசினார்கள். மீன்வளத்துறை என்றுதான் முன்பு பெயர் இருந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலன் என இந்த அமைச்சகத்துக்குப் பெயர் வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீன்வளத்துறைக்குத் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மீனவர்களுக்கு சிங்காரவேலர் இலவச வீடு கட்டிக்கொடுத்தார். குளச்சலில் உலக மீனவர்தினவிழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீனவர் கூட்டுறவில் வாங்கிய கடன் 96.56 கோடியைத் தள்ளுபடி செய்தவர் கருணாநிதி. மறைந்த ஜே.பி.ஆர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது 'மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை சென்னை மேயராகத் தேர்வு செய்ய வேண்டும் என நாங்கள் ஆசைப்பட்டோம். அதை தி.மு.க செய்துள்ளது. தென்கொரியா சியோன் நகரில் உலக மேயர்கள் மாநாட்டையும், ஜெர்மனியில் மீனவர் மாநாட்டையும் நீங்கள் தொடங்கி வைத்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்' என்று கூறினார். ``நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புகிறார்'' - அமைச்சர் மா.சு குறித்து பார்த்திபன் சமுதாயத்தில் மிக மிக பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் நான். ஏரி, குளங்களில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை சென்னை மாநகரத்தின் மேயராகவும், அமைச்சராகவும் அமர்த்தும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் கருணாநிதியும், முதல்வர் ஸ்டாலினும் தந்தார்கள். இதுவரை மீனவர்கள் மாநாட்டை அரசே நடத்தியது இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாட்டை அரசு சார்பில் நடத்தினார். மா. சுப்பிரமணியன் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்த்தினார் முதல்வர். குமரி மாவட்ட மீனவர்கள் நாட்டுப்படகு இயந்திரம் வாங்க 40 சதவிகிதம் மானியம் அறிவித்தார். மீனவ கிராமங்களில் 60 வயதை கடந்த மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்பதுபோன்ற ஏராளமான திட்டங்களை அறிவித்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் 10 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் பணிகள் நடைபெற்று வருகின்றன. 23 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய அளவிலான தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது என்றார். மாநிலங்களவைத் தேர்தலில் மீனவர் ஒருவருக்கு வாய்ப்பு தாருங்கள் - முதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை

விகடன் 22 Nov 2025 7:47 am

ஸ்ரீவில்லிபுத்தூர் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்; செய்தியாளரின் செல்போனைப் பறித்து தாக்க முயற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளரை ம.தி.மு.க-வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வேல்முருகன் அழைப்பின் பேரில் நிருபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தி சேகரித்தனர். கூட்டத்தில் சாத்தூர் ம.தி.மு.க எம்.எல்.ஏ ரகுராமன் பேசுகையில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக சில கருத்துக்களைப் பேசினார். செய்தியாளர்களிடம் வாக்குவாதம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்டச் செயலாளர் தரப்பினர் ரகுராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரகுராமன் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆதரவாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோசமான வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர். மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு கூட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை வீடியோ எடுத்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபரை நோக்கி வந்த ம.தி.மு.க-வினர் அவரது செல்போனைப் பறித்து அவரைத் தாக்க முயன்றனர். வாக்குவாதம் இதனால் மண்டபத்தில் இருந்து தாக்கப்பட்ட நிருபருடன் இருந்த மற்ற நிருபர்கள் வெளியே அழைத்து வந்தனர். அதன் பின்பும் வெளியே வந்த ம.தி.மு.க-வினர் நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு வைகோ தலைமையில் சாத்தூரில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ம.தி.மு.க நிகழ்வுகளில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது ஒரு தொடர்கதையாக உள்ளது. 'கூவம் போல் ஆகிவிட்டது மதிமுக.. நீங்கள் தோற்றுவிட்டீர்கள் தலைவரே..' - வெளுத்துவாங்கிய மல்லை சத்யா

விகடன் 22 Nov 2025 6:55 am

`ரௌடி தட்டாஞ்சாவடி செந்தில், வீட்டுக்கு வந்தவரை கொலை செய்து வீசியவர்!’ - பாஜக எம்.எல்.ஏ பகீர் புகார்

புதுச்சேரியின் பிரபல தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான தட்டாஞ்சாவடி செந்தில், முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர். இவர் காலாப்பட்டு தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதுகுறித்து கடந்த 20.1.2025 அன்று விகடன் இணையப்பக்கத்தில், `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்திடம் விளக்கம் பெற முயற்சித்தபோது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு குறுந்தகவல் அனுப்பியிருந்தோம். பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் அதையடுத்து, அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோவை நமக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த வீடியோவில், `இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் கொலைக் குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்தில் என்ற ரௌடி, காலாப்பட்டு பகுதியில் இருக்கும் மூன்று கம்பெனிகளை மிரட்டி மாமூல் வாங்கச் சென்றார். அதையடுத்து, `காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு வேலை கேட்டுத்தான் அந்த கம்பெனிகளுக்குச் சென்றேன்’ என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். ஆனால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. வேலை கேட்டுச் செல்பவர்கள் நான்கு அல்லது ஐந்து பேர்களுடன் செல்லலாம். ஆனால் தட்டாஞ்சாவடி செந்திலுடன் சென்ற 70 பேர்களில், எத்தனை பேர் கொலைக் குற்றவாளிகள் என்று நான் பட்டியல் போட்டுத் தருகிறேன். கொலை, கட்டப்பஞ்சாயத்து என அனைத்தையும் செய்தவர் அவர். அவர் வீட்டுக்குச் வந்த மடுவுபேட் முரளி என்பவரை, அங்கேயே கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை சாலையில் வீசியவர். அந்த சம்பவத்தில் அவர் தலைமறைவாக இருந்ததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அனைத்து செய்தித்தாள்களிலும் அது வந்தது. அதன்பிறகு எஸ்.எஸ்.பி ராஜீவ்ரஞ்சனால் கைது செய்யப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனில் அவர் முட்டி போட்டுக் கொண்டிருந்த போட்டோ என்னிடம் இருக்கிறது. கொலை செய்யப்பட்ட உமாசங்கர், ஜோசப் அதன்பிறகு 2016-ல் வன்னியர் என்ற போர்வையில், அனைத்து தொகுதிகளில் இருக்கும் வன்னியர் சமுதாய மக்களிடம் சென்று பணம் கேட்டு வருகிறார். இவை அனைத்தையும் என்னால் நிரூபிக்க முடியும். 2016 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து நான் சுயேட்சையாகப் போட்டியிட்டேன். அப்போது காலாப்பட்டு தொகுதியில் இருக்கும் வன்னியர் சமூக மக்களை வைத்துக் கொண்டு, என்னிடம் ரூ.60 லட்சம் பேரம் பேசியவர் இவர். ஆனால் தற்போது வன்னியர் சமூகத்தின் போராளி என அவரை அவரே சொல்லிக் கொள்கிறார். அந்தத் தேர்தலில் யார் யாரிடம் இவர் எவ்வளவு வாங்கினார் என்று என்னால் சொல்ல முடியும். என்னிடமே பணம் கேட்டவர் இவர். காலாப்பட்டு தொகுதி வன்னியர் மக்களை வைத்து வியாபாரம் செய்ய வந்த வியாபாரி இவர். தட்டாஞ்சாவடி செந்தில் என்று சொல்லிக் கொள்ளும் இவர், தட்டாஞ்சாவடியில் நின்றால் விலை போகமாட்டாரா ? தட்டாஞ்சாவடி செந்தில் எவ்வளவு பெரிய கொலைக் குற்றவாளி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்பது உலகத்துக்கே தெரியும். அதனால் அங்கு விலைபோக முடியாது என்பதால் காலாப்பட்டு தொகுதிக்கு வருகிறார். அதேபோல நான் தேர்தலுக்கு பயந்து ஜோசப்பையும், சந்திரசேகரையும் கொலை செய்துவிட்டதாக சொல்கிறார். 15.02.2017 அன்று நடைபெற்ற மடுவுப்பேட் முரளி கொலை வழக்கில், குற்றவாளியாக சிறையில் இருந்தவர் தட்டாஞ்சாவடி செந்தில். புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் ஜோசப் கொலை செய்யப்பட்டது 30.07.2018. அப்போது இவர் சிறையில் இருந்தார். 24.09.2019 அன்று சந்திரசேகர் கொலை செய்யப்படுகிறார். அப்போதும் இவர் சிறையில் இருந்தார். அதாவது மூன்று ஆண்டுகள் கொலை வழக்கிற்காக சிறையில் இருந்தார். ஜோசப், சந்திரசேகர் உயிருடன் இருக்கும்போதே, 2011 தேர்தலில் 6,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகானை தோற்கடித்தேன். அப்படி இருக்கும்போது நான் யாருக்காக அவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் ? இவர் இருபதுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இருக்கும் குற்றவாளி. ஆனால் அவரைப் போல என் மீது ஏதேனும் வழக்கு இருந்தால் நான் அரசியலையே விட்டு விடுகிறேன்” என்று பேசியிருக்கிறார். புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா

விகடன் 21 Nov 2025 10:38 pm

அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தினர் வீட்டில் 7 மணி நேரம் நீண்ட சோதனை - ஆவணங்களுடன் சென்ற அதிகாரிகள்!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி தன்னுடைய கணவர் துவாரநாதனுடன் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். துவாரநாதன் வத்தலகுண்டு அருகேயுள்ள ஓட்டுப்பட்டியில் 'அலமேலு மில்ஸ்' என்ற கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்று மதியம் 2 மணி அளவில் இந்திராணியின் வீடு மற்றும் மில்லிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு ( Directorate General of GST Intelligence (DGGI) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து வந்த பெண் அதிகாரி உட்பட நான்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி சோதனை நடைபெறுவதையொட்டி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் திமுகவினர் வீட்டின் முன் குவிய தொடங்கினர். துணை மேயர் ராஜப்பா, இந்திராணியின் வீட்டிற்குள் செல்ல முயற்சித்த போது அதிகாரிகள் அவரை வெளியே செல்ல சொல்லி அறிவுறுத்தி, வெளியேற்றினர். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் இந்திராணியின் வீட்டிற்கு ஐ.பி. செந்தில்குமாரின் மனைவி மெர்சி வந்தார். உடனே வெளியே வந்த அதிகாரிகள் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். மெர்சியிடமும் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. துணை மேயர் ராஜப்பாவுடன் பேசும் அதிகாரிகள் தொடர்ந்து, இரவு 8 மணியை கடந்தும் மூவரிடமும் விசாரணை நடைபெற்றதால் வீட்டின் வெளியே கூடியிருந்த திமுகவினர் அதிகாரிகளை 'வெளியே வா, வெளியே வா 'என்று கூச்சலிட தொடங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வெளியே வந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் பிரிண்டரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது மேலும் சோதனை முடிவடைய 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும். தேவை எனில் வழக்குரைஞர்கள் வீட்டுக்குள் வந்து பார்வையிடலாம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 2 வழக்குரைஞர்கள் அமைச்சர் மகள் இந்திராவின் வீட்டுக்குள் சென்றனர். அதனைத் தொடர்ந்து வெளியே வந்த அமைச்சர் மகள் இந்திரா மற்றும் மருமகள் மெர்சி செந்தில்குமார் ஆகியோர் ஜிஎஸ்டி அதிகாரிகள் 'கணக்கு வழக்கு தொடர்பான சோதனைகள் மட்டுமே நடைபெறுவதாக' தெரிவித்தனர். இதனை அடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். இந்த நிலையில் சரியாக இரவு 9.00 மணியளவில் அமைச்சர் மகள் இந்திரா வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவடைந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (DGGI) மூன்று பைகளில் ஆவணங்களுடன் வெளியே வந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ரெய்டு கடந்த 7 மணி நேரமாக ஐ.பெரியசாமியின் மகள், மருமகன், மருமகள் என மூவரையும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் விசாரணை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விகடன் 21 Nov 2025 10:35 pm

Kerala: Complete Non-Vegவைரலான பதாகை; இணையத்தில் எதிர்வினைகள் என்ன?

கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தின் அறிவிப்புப் பலகை தற்போது இணையத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் அதில் வழக்கத்துக்கு மாறாக நாங்கள் முற்றிலும் அசைவ உணவகம் என எழுதப்பட்டிருந்தது. @RishiJoeSanu' என்ற X பயனர் ஒருவர், அந்தப் பலகையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, சமூக ஊடகங்களில் 'சைவப் பிரியர்களால் (vegetarian engagement baiters)' மூலம் ஏற்படும் பெயர்க் கெடுதலைத் தவிர்க்க, சில 'மல்லு உணவகங்கள்' இப்போது வெளிப்படையாக 'அசைவ உணவகம்' என்ற அறிவிப்பைப் வைக்கத் தொடங்கியுள்ளன என்று பதிவிட்டிருந்தார். Non Veg இணையத்தில் பரவிய இந்த பதிவு, உணவுத் தேர்வுகள், பிராந்திய உணவு கலாசாரம், வெளிப்படைத் தன்மை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. வைரலான அறிவிப்பு பலகை X தளத்தில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படத்தில் இருந்த பலகையில், நாங்கள் முற்றிலுமான அசைவ உணவகம் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அங்கே சைவ உணவுகள் வெறும் வெரைட்டிக்காக மட்டுமே கிடைக்கிறது என்றும், இரண்டும் பொதுவான சமையலறையில் சமைக்கப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. Mallu restaurants have begun displaying "Non-Vegetarian" signboards to avoid the reputational damage that comes from vegetarian engagement baiters on X. pic.twitter.com/wMLSrlO2WP — Rishi | ഋഷി | (@RishiJoeSanu) November 17, 2025 இந்தப் பலகையை சிறந்த உணவகங்களில் ஒன்று என்று குறிப்பிடப்படும் பாரகன் (Paragon) என்ற உணவகத்தில் பார்த்ததாக அந்த X பயனர் குறிப்பிட்டுள்ளார். நெட்டிசன்கள் கருத்து என்ன? இந்த பலகை குறித்து பல்வேறு இணையதளவாசிகள் கமண்ட் செய்துள்ளனர். ஒருவர், வேறொரு உணவகத்தில் இருந்த முழுவதும் அசைவம் (pure non-veg) என்ற லேபிள் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, புனேவில் இது காலம் காலமாக நடந்து வருகிறது! என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இது ஒரு நல்ல முயற்சிதான். மக்கள் சிந்தித்து முடிவெடுக்கலாம், என்று ஒரு பயனர் எழுதியிருந்தார். மற்றொருவர், இப்படித் தெளிவாக அறிவிப்பதுதான் சிறந்தது. சாப்பிடலாமா வேண்டாமா என்பது என் விருப்பம், என்று இந்த வெளிப்படைத்தன்மையைப் பாராட்டினார். தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவகங்களில் இது பொதுவான சமையல் முறைதான் என்று ஒரு பயனர் சுட்டிக் காட்டினார். மதுரையில் இதுதான் இயல்பு. சாதாரண மதுரைக் கடைகளில் சைவ உணவுகள் எதுவும் கிடைக்காது, என்றும் அவர் கூறியிருந்தார். சில வடஇந்தியர் சைவ பிரியர்கள் சிலர் தங்கள் உணவு பொது சமையலறையில் சமைக்கப்பட்டது தெரிந்தால் கோபமடைவார்கள் என்பதால் அவர்களுக்கான பதிலாக இது இருக்கலாம் என்றும் ஒருவர் கமண்ட் செய்துள்ளார். Delhi: சிவராத்திரியில் அசைவம் பரிமாறியதாக தகராறு; பெண்கள் மீது தாக்குதல் - SFI, ABVP சொல்வதென்ன?

விகடன் 21 Nov 2025 10:22 pm

கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு... - எடப்பாடி பழனிசாமி

 மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாதது காரணமாக கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள்தொகை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அனுமதிக்கப்படும் என்று விதிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக-வினர் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக - அதிமுக ஆட்சி அமைத்தால் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ திட்டத்தைத் கொண்டு வருவோம் என்று கூறி வருகின்றனர். மெட்ரோ அதிரடி அபராதங்கள்; ஆம்னி பேருந்து விவகாரத்தில் சுமூக தீர்வு வேண்டும் - எடப்பாடி பழனிசாமி இந்நிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் கவனக்குறைவே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேகதாது விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார். மேகதாது விவகாரம் இது குறித்துப் பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு பாலைவனமாகிவிடும், இதனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. இதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி பிரச்னையை தீர்க்கலாம். எடப்பாடி பழனிசாமி கே.என்.நேரு, சகோதரர்களின் 'JOB RACKET’ ; ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் - எடப்பாடி பழனிசாமி காட்டம் கோவை மதுரை மெட்ரோ ரயில் விவகாரம் அதேபோல் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை தமிழக அரசு கவனக்குறைவாக அனுப்பி இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை சமர்பிக்கும் போது, 2011 மக்கள் தொகையை திமுக குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டிருந்தால், ஒப்புதல் கிடைத்திருக்கும். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின், மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள். கோவை, மதுரை திட்டத்தில் மாநில அரசு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதற்கு காரணமே நிரந்தர டிஜிபியை நியமிக்காதது தான். நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று திமுகவைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்.

விகடன் 21 Nov 2025 9:26 pm

காசா: 7 கி.மீ நீளம், 25 மீ ஆழம், 80 அறைகள்; இஸ்ரேல் கண்டறிந்த ஹமாஸின் மர்ம சுரங்கம்!

இஸ்ரேலிய ராணுவத்தின் (IDF) அதிரடிப் படையினர், காஸா பகுதியில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய சுரங்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். லெப்டினன்ட் ஹடார் கோல்டின் உடல், இந்தச் சுரங்கத்தில்தான் ஹமாஸ் பயங்கரவாதிகளால் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. லெப்டினன்ட் ஹடார் கோல்டின், 2014-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் போரின்போது காஸாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடல் இந்த மாதம் தொடக்கத்தில்தான் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டது. லெப்டினன்ட் ஹடார் கோல்டின் ஹடார் கோல்டின் உடல் வைக்கப்பட்டிருந்த சுரங்கம் குறித்த வீடியோவை, இஸ்ரேலிய ராணுவம் (IDF) தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தச் சுரங்கம் மக்கள் நெருக்கமாக வசிக்கும் ரஃபா பகுதி குடியிருப்புகளுக்கு அடியிலும், UNRWA (ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் அமைப்பு) வளாகம், மசூதிகள், கிளினிக்குகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வழியாகவும் செல்வதாக IDF தெரிவித்துள்ளது. இந்தச் சுரங்கத்தை ஹமாஸ் தளபதிகள், ஆயுதங்களைச் சேமித்து வைக்கவும், தாக்குதல்களைத் திட்டமிடவும், நீண்ட காலம் தங்குவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். ⭕️ EXPOSED: A 7+ kilometer Hamas tunnel route that held Lt. Hadar Goldin. IDF troops uncovered one of Gaza’s largest and most complex underground routes, over 7 km long, ~25 meters deep, with ~80 hideouts, where abducted IDF officer Lt. Hadar Goldin was held. The tunnel runs… pic.twitter.com/GTId75CvYw — Israel Defense Forces (@IDF) November 20, 2025 Hamas சுரங்கம்: 7 கி.மீ, 80 அறைகள்! இந்தச் சுரங்கம் ஏழு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், 25 மீட்டர் ஆழமும் கொண்டது என்றும், இதில் 80 அறைகள் உள்ளன என்றும் IDF கூறியுள்ளது. இந்த பிரமாண்டமான சுரங்கத்தை, யஹலோம் கமாட் இன்ஜினீயரிங் பிரிவு மற்றும் ஷயேடெட் 13 கடற்படை கமாண்டோ பிரிவைச் சேர்ந்த உயரடுக்குப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதிகளின் கமாண்ட் போஸ்ட்களாகப் பயன்படுத்தப்பட்ட அறைகளையும் இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்துள்ளது. இதில், கடந்த மே மாதம் ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருடன் கொல்லப்பட்ட முகமது ஷபானா பயன்படுத்திய அறையும் அடங்கும். காசா போரின் தற்போதைய நிலை அக்டோபர் 2023-ல் தொடங்கிய காஸா போரின் சமீபத்திய தகவல்கள் இவை: வியாழக்கிழமை காஸா ஸ்டிரிப்பின் தெற்குப் பகுதியில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர். கான் யூனிஸுக்குக் கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தில் ஒரு வீட்டின் மீது நடந்த தாக்குதலில், ஒரு குழந்தை, பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும், அருகில் உள்ள அபஸ்ஸான் நகரத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ ஊழியர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். சுமார் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போர் நிறுத்தத்தை ஹமாஸும் இஸ்ரேலும் ஒருவரையொருவர் மீறியதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன. காசா: போரில் பிறந்த குழந்தைக்கு 'Singapore' எனப் பெயர் - நெகிழ வைக்கும் காரணம்

விகடன் 21 Nov 2025 8:24 pm

`` 'நேத்து முளைச்ச காளான்'என விஜய்யை சொல்லவில்லை - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

விஜய் அரசியலில் காலாடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார். தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. விமான நிலையத்தில் விஜய் தமிழகத்திலும் 'வாக்குத் திருட்டு' நடக்கிறது - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன? 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். நேற்று சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சுற்றுப் பயணத்தில் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் இருந்தபோது யாரும் அவரை புரிந்துகொள்ளவில்லை.வாழ்க்கை ஒரு வட்டம். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். அதேபோல், மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் மாற்றம் ஒன்றே மாறாதது. நேத்து முளைச்ச காளான் எல்லாம் இங்க எடுபடாது. அந்த மாற்றம் மக்களுக்கு நல்லது நடக்கின்ற சிறந்த மாற்றமாக இந்த தேர்தல் அமையும். யார்? யாரையோ நம்பி ஓட்டு போடுகிறீர்கள். தேமுதிகவிற்கு ஏன் வாய்ப்பு கொடுக்கக் கூடாது? என்று பேசியிருந்தார். பிரேமலதா விஜயகாந்த் TVK: விஜய்யும் என் பிள்ளைதான்; அரசியலுக்கு விஜய்காந்த்தைப் பயன்படுத்தினால் - பிரேமலதா பளீச் பதில் இந்நிலையில் பிரேமலதா 'நேத்து முளைச்ச காளான்' என்று விஜய்யை குறிப்பிட்டாரா?' என்று சர்ச்சை கிளம்பிவிட்டது. இதற்கு விளக்கமளித்திருக்கும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், நான் விஜய்யை 'நேற்று முளைத்த காளான்' என்று சொல்லவில்லை. விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் தாக்கிப் பேசவில்லை. விஜய்க்கு எப்போதும் தேமுதக எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைப் போல் அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்

விகடன் 21 Nov 2025 6:42 pm

மெட்ரோவுக்கு இங்கு போராடி என்ன பயன்? நாடாளுமன்றத்தை முடக்குங்கள் - திமுகவுக்கு வேலுமணி அறிவுரை

கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் தொய்வாக உள்ளன. கோவை மாவட்டத்தில் திமுகவினர் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். வேலுமணி அதிமுக ஆட்சியின்போது கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும், ஏராளமான மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. கோவையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டால் நிவர்த்திசெய்து அனுப்ப வேண்டும். கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் கொடுத்துள்ளார். 2026 தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்றதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். 'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு மெட்ரோ தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவும் மோடியிடம் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கோவைக்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பகட்ட பணிகளுக்காக அதிமுக ஆட்சியில் ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டது. கோவையின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ செல்லும் வகையில் நாங்கள் திட்டமிட்டிருந்தோம். திமுக ஆட்சியில் வெறும் இரண்டு வழித்தடங்களில் மட்டும் மெட்ரோ ரயில் திட்டமிட்டுள்ளனர். கோவை திமுகவில் 40 எம்பிக்கள் உள்ளனர். அவர்கள்தான் திட்டத்தைக் கேட்டு பெற வேண்டும். இங்கு போராடி என்ன பயன்? டெல்லி சென்று போராடுங்கள். நாடாளுமன்றத்தை முடக்கி திட்டத்தைப் பெறுங்கள்” என்றார். '10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

விகடன் 21 Nov 2025 6:07 pm

CIA: போர் வந்தால் இந்தியா வெல்லும் - பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த அமெரிக்க அதிகாரி!

அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIAவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ என்ற அதிகாரி இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ பலத்தை ஒப்பிட்டு பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்புக் கேட்கக் கூறி பாகிஸ்தானிலிருந்து அவருக்கு கடிதம் வந்ததையும் அந்த சூழலை அவர் சுலபமாக கையாண்டதையும் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப், அவரது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற மெயிலை அனுப்பியுள்ளது. அதற்கு 'உங்கள் கடிதத்தை நான் கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்' என பதிலனுப்பியுள்ளார் கிரியாகோ. அதன்பின்னர் பாகிஸ்தானிலிருந்து எந்த பதிலும் வரவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர் CIAவில் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் கிரியாகோ, ஒரு ஆய்வாளராகவும், 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். பஹல்காம் தாக்குதல் அதைத் தொடர்ந்த இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்னிட்ட, இந்தியா பாகிஸ்தான் இடையிலான 4 நாள் மோதலுக்குப் பிறகு, வழக்கமான போர் ஏற்பட்டால் இந்தியா பாகிஸ்தானை எளிமையாக வீழ்த்திவிடும் எனக் கூறினார் கிரியாகோ. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு உண்மையான போர் நடந்தால், அவர்களுக்கு எதுவும் நல்ல விளைவுகளைத் தரப்போவதில்லை. ஏனெனில் பாகிஸ்தானியர்கள் தோல்வியடைவார்கள். அது அவ்வளவுதான். அவர்கள் தோற்பார்கள். நான் அணு ஆயுதங்களைப் பற்றி பேசவில்லை. வழக்கமான போரைப் பற்றிதான் பேசுகிறேன். எனவே, இந்தியர்களைத் தொடர்ந்து சீண்டுவதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறியிருந்தார். அக்டோபரில் கிரியாகோ தெரிவித்த இந்தக் கருத்து, பாகிஸ்தானியர்களிடையே பெரும் ஆன்லைனில் எதிர்ப்பலையைத் (abuse) தூண்டியது. அதன்பிறகுதான், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவரிடம் இருந்து கடிதம் வந்ததாக கிரியாகோ தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், கிரியாகோவின் கருத்துக்களை மிகவும் கடுமையாக கண்டிக்கிறோம் என்றும், முன்னாள் பிரதமர் (இம்ரான் கான்), கட்சி உறுப்பினர்கள் (பி.டி.ஐ.), மற்றும் பாகிஸ்தான் மக்கள் ஆகியோரிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்ததாக தெரிவிதிருக்கிறார். தற்போது ஜூலியன் டோராய் (Julian Dorey) உடனான யூ-டியூப் பாட்காஸ்டில் (podcast) முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கிரியாகோ, வழக்கமான போரில், இந்தியா பாகிஸ்தானை வெல்லும் என்று நான் சொன்னேன், ஏனெனில் இந்தியாவுக்கு ஐந்து மடங்கு அதிகமான மக்கள் உள்ளனர். எனக்கு வந்த மரண மிரட்டல்களை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை. அதன் பிறகு, என் வழக்கறிஞர், 'குறைந்த சுயவிவரத்தைக் (low profile) கடைப்பிடி; உங்களைச் சுற்றியுள்ளவற்றில் கவனமாக இரு' என்று கூறியபோது, ​​அனைத்திலும் சிறந்தது வந்தது— இம்ரான் கானின் அரசியல் கட்சியின் தலைவரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, அதன் பெயர் பாகிஸ்தான்... ஏதோ... கட்சி. அவர், நான் இந்தியர்களிடம் சொன்னதை மிகவும் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்றும், முன்னாள் பிரதமரிடமும், கட்சி உறுப்பினர்களிடமும், பாகிஸ்தான் மக்களிடமும் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கோரியிருந்தார். என்று நடந்ததை விளக்கினார். மேலும் வழக்கத்துக்கு மாறாக அவர் செய்ததைத் தெரிவித்தார். என் வழக்கறிஞர், 'அதை தூக்கி எறிந்துவிடுங்கள், தூக்கி எறிந்துவிடுங்கள்' என்றார். ஆனால் நான் அதைத் தூக்கி எறியவில்லை. நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், அதில், 'நீங்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வைத்த கோரிக்கை குறித்து, உங்கள் மன்னிப்புக் கடிதங்களைக் கொண்டு நான் என் *** துடைப்பேன்' என்று சொன்னேன். நான் ‘send’ பட்டனை அழுத்தி அனுப்பினேன். அதன்பிறகு, அவர்களிடமிருந்து நான் எந்தப் பதிலும் கேட்கவில்லை என்று நவம்பர் 18 அன்று பதிவேற்றப்பட்ட அந்தப் பாட்காஸ்டில் கிரியாகோ தெரிவித்துள்ளார். US: உளவுத்துறை இயக்குனராக `இந்து பெண்' தேர்வு செய்த ட்ரம்ப்... `துளசி கபார்ட்' பின்புலம் என்ன?

விகடன் 21 Nov 2025 4:59 pm

`கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு’ - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு, திட்டமிடுவதற்கு, முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது. 5 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாசார மற்றும் மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும். வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தாது. தமிழக அரசு நடத்தை விதிகள் அமலில் இருக்கும் தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும். இருப்பினும், கூட்டக் கட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு. 5 ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங்களுக்கு இது பொருந்தாது. ஆனால் தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகிவை நடைபெற உள்ள இடங்களை காவல் துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்து அறிவிப்பார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும்முன் என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். ரோடு ஷோக்களை பொருத்தவரை பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை துவங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடங்களையும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இது மாதிரியான நிகழ்வுகளில் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண்டும். நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். 50 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்பார்க்க கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். திடீரென ஏற்பாடு செய்யப்பட கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பொருத்தவரை மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு. நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து வழங்க வேண்டும். கர்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்களுக்கு பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் 21 Nov 2025 3:35 pm

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி, திண்டுக்கல் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ( Directorate General of GST Intelligence (DGGI) அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் நான்கு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு என்பது வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி போன்றவற்றை விசாரிக்கும் ஒரு துறையாகும். ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, அவர் மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி வீடுகள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான இரண்டு மில்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்தனர். அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீடு இதில் இந்திராணியின் வீட்டில் மட்டும் சுமார் 15 மணி நேரம் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் 21 Nov 2025 2:56 pm

மயிலாடுதுறை: `எப்டி ஓட்டுனாலும் ரோட்ல விழுறது சாதாரணமாகிடுச்சி’ - பழையபாளையம் சாலையின் அவலம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் ஊராட்சியில், கொடாக்காரமூலை முதல் பழையபாளையம் வரை செல்லும் சாலையானது சுமார் 1.5கி.மீ வரை ஐந்து வருடங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் தெருவிளக்குகள் இன்றியும் காணப்படுகிறது. மேலும் கொடாக்காரமூலை கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் படிக்கும் அரசு உயர்நிலை பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. குண்டும் குழியுமான சாலையால் நாள்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அன்றாட வேலைக்கு செல்லும் ஊழியர்கள், அத்தியாவசிய தேவைக்கு அடுத்த ஊருக்கு செல்வோர் என அனைவருக்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கரடு முரடான சாலையால் நாள்தோறும் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்ட வண்ணமே உள்ளது. தெருவிளக்குகளும் இல்லை சாலையும் சரி இல்லை என்பதால் ஏதேனும் விஷப்பூச்சி கடித்துவிடுமோ? விபத்துகள் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனே இரவில் இச்சாலையை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதுக்குறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, இந்த ரோடு அஞ்சு வருசத்துக்கு மேல இப்டிதான் இருக்கு. இந்த ரோட்ல நடந்து போறதே பாத்து பக்குவமாத்தான் போகனும். கொஞ்சம் கவனம் தப்புச்சின்னாகூட விழுந்து அடிபட்டுதான் வீடு போயி சேரனும். காருல போன காரு டையர் எங்கியாச்சம் மாட்டிக்குது. இல்ல, காரை குழிக்குள்ள விட்டு காரையே சேதப்படுத்திடுது இந்த பாழாப்போன ரோடு. நடந்து போறத்துக்கே சரியில்லாத ரோட்ல சைக்கிள எப்டி ஓட்றதுன்னு தெரியாம பாவம் ஸ்கூல் புள்ளைங்க அப்டி இப்படின்னு சைக்கிள வளச்சி வளச்சி ஓட்டுவாங்க. எப்டி ஓட்டுனாலும் ரோட்ல விழுறது எழுந்திருக்கிறதுன்னு அவங்களுக்கே ரொம்ப சாதாரணமாகிடுச்சி. இந்த ரோட்ல டெய்லியும் ஒரு சின்ன ஆக்ஸிடன்ட் ஆச்சம் நடத்துடுது. பழையபாளையத்துல உள்ள எல்லாரும் கொடக்காரமூலை வழியாத்தான் ஆச்சாள்புரம், கொள்ளிடம், சிதம்பரம்லா போவாங்க. பழையபாளையத்துல உள்ளவங்ளோட அத்தியாவசிய தேவையே இந்த ரோட நம்பிதான் இருக்கு. பழையபாளைத்துலேந்து வேலைக்கு போற நெறைய பேரு நைட்டு கொடக்காரமூலைல இறங்கி, அங்கேந்து வண்டியிலையோ, சைக்கிளையோ பழையபாளையம் போவாங்க. தெருலைட்டும் இல்லாம, ரோடும் சரியில்லாம, பாவம் அவங்களாம். ரெண்டு சைடும் கொஞ்சம் வயலா வேற இருக்குறதுனால பாம்பு, விஷ பூச்சி எதாவது ரோட்ல இருக்குமோ, ரோட்ல எங்க பெரிய பள்ளம் இருக்ககோ? அப்டி இப்டின்னு அசுரபயத்தோடே திக்குமுக்காடிதான் வீட வந்தடைவாங்க. அந்த வழியில நாலு லைட் போஸ்ட் போடலாம். ஆனா, இன்னும் போட்ட பாடு இல்ல. போடுற‌ மாதிரியும் தெரியல. இங்க உள்ள எல்லாருமே நல்லூர்ல உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தான் போவோம். இந்த ரோடு வழியா போன நல்லூர் 3 கி.மீ தான். இந்த ரோடு இல்லாட்டி 7 கி.மீ சுத்திதான் போகனும். இந்த ரோட்லே போயிடலான்னு போனக்கூட வயசானவங்க, மாசமா இருக்குறவங்க, உடம்பு சரியில்லாதவங்களலாம் அழைச்சிட்டு போறப்ப ரோடு குண்டும் குழியுமா இருக்குறதுனால அலுங்கி குலுங்கி போகும்போது அவங்கலுக்கெலாம் எதாவது ஆயிடுமோன்னு பதட்டமாவே இருக்கும். இந்த ரோடு இப்டி இருக்குறதுனால நடந்து போறவங்க, பைக்ல போறவங்க, கார்ல போறவங்கன்னு எல்லாருக்குமே ரொம்ப‌ சிரமமா இருக்கு. நெறைய ஸ்கூல் வேன், ஆம்புலன்ஸ்லாம் கூட இந்த வழியாத்தான் போகுது. எங்கையாச்சம் அவசரத்துக்கு போகனுன்னா கூட உடனே போக முடியாது. ஏன்னா? நின்னு நிதானமா போனதான் இந்த ரோட்ல போக முடியும். இதுல வேகமாக போனோம் அவ்ளோதான் ரோட்ல விழுந்து அடிப்பட்டு ஆஸ்பத்திரி தான் போவுனுன். நாங்க தேர்தலப்பையே பிரசிடன்ட்டுக்கிட்ட இந்த ரோடு போட்டு தரனுன்னு தான் கோரிக்கை வச்சோம். ரோடு போட்ட பாடு இல்ல. ஆட்சி முடிஞ்ச பாடு மட்டும் தான் மிச்சம். கவுன்சிலர் கிட்டையும் சொன்னோம். ஆனா, அவருக்கு கேட்க மட்டும் தான் நேரம் இருந்துச்சி. இதுவரையும் ஒன்னும்‌ பண்ணல. இந்த ரோட்டையும், லைட்டையும் மட்டும் போட்டுட்டா எங்க ஊர்ல எல்லாருமே எந்த பயமும் பதட்டமும் இல்லாமா போயிட்டு வருவோம். போயிட்டு வரவும் எந்த சிரமமும் இருக்காது. எப்டியாச்சும் சீக்கிரம் இந்த ரோடையும் லைட்டும் போட்டு கொடுத்துடுங்கப்பா என்று கவலையுடன் கூறினர். இதுக்குறித்து பழைய பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் அவர்களிடம் விளக்கம் கேட்கையில், 2024ஆம் ஆண்டே 700மீ புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி சார்பில் கொள்ளிடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆனால், ஃபண்டு வரவில்லை என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் கூறுகிறார்கள் என்றார். இதுக்குறித்து கொள்ளிடம் வட்டாட்சியர் ஜாக்சனை தொடர்புக்கொண்டு பேசியபோது, புதிய சாலை அமைப்பதற்கான அறிக்கையானது தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தவுடன் இத்திட்டம் விரைவில் நிறைவேற்றபடும் என்றார். அரசு விரைந்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் தரமான முறையில் புதிய தார் சாலையும், தெருவிளக்குகளும் அமைத்து அச்சமற்ற நிலையில் அப்பகுதி மக்களின் பயணத்தினை மாற்றி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

விகடன் 21 Nov 2025 12:48 pm

ஏழை முதியவர் ரூ.1.14 கோடி; பந்தல் தொழிலாளி ரூ.5 கோடி வரி பாக்கி - அதிர வைத்த GST நோட்டீஸ்!

தி ருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திருமாஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் ராமமூர்த்தியின் பெயரில் ரூ.5 கோடி ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வந்திருக்கிறது. வரும் 29-ம் தேதி, நேரில் ஆஜராகவும் வணிக வரிகள் துறை அதிகாரிகள் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது பற்றி விசாரித்தபோது, ``ராமமூர்த்தியின் `பான் கார்டு’, `ஆதார் கார்டு’ உள்ளிட்ட அடையாள ஆவணங்களைக் கொண்டுதான் சென்னையில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு, வரி ஏய்ப்பு மோசடியில் மர்மநபர்கள் ஈடுபட்டிருப்பதாக’’ தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, தனது பெயரிலான ஜி.எஸ்.டி மோசடியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார் ராமமூர்த்தி. புகாரளித்த ராமமூர்த்தி இதேபோல், ஆம்பூர் மளிகைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் வேலாயுதம். பென்ஷன் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் வேலாயுதத்தின் பெயரிலும் ரூ.1.14 கோடி ஜி.எஸ்.டி மோசடி நடைபெற்றிருக்கிறது. இதனால், பென்ஷன் பணமும் கடந்த சில மாதங்களாக அவருக்குக் கிடைக்கவில்லை. வங்கிக்குச் சென்று அவர் விசாரித்தபோது, ஜி.எஸ்.டி வரி பாக்கி நிலுவையில் இருப்பதால், பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதனால், முதியவர் வேலாயுதமும் செய்வதறியாமல் பரிதவித்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டுப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களை `ஜி.எஸ்.டி மோசடி’யில் சிக்கவைத்து, சிலர் கோடிகளில் கொழித்துக்கொண்டிருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் குவிந்து வருகின்றன. பொதுவாக விவரமறியாத ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து `புதிது புதிதாகத் திட்டங்கள் வந்திருக்கின்றன. அவற்றை உங்களுக்குப் பெற்றுத் தருகிறோம்’ என்று ஆசைகாட்டி, அவர்களிடமிருந்து `பான் கார்டு’, `ஆதார் கார்டு’, `வங்கிக் கணக்குப் புத்தகம்’ உள்ளிட்ட அடையாள ஆவணங்களை நகலெடுத்து வாங்குகின்றனர். பிறகு அவற்றைத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என அவர்களது செல்போன்களுக்கு வரும் ஓ.டி.பி எண்களைக் கேட்டு வாங்கிச் சென்று, அவற்றை மோசடித் தொழில் நிறுவனங்கள் நடத்துவோரிடம் விற்றுவிடுகின்றனர். முதியவர் வேலாயுதம் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி போலியாக ஜி.எஸ்.டி எண் பெற்று, ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் முறைகேடு செய்கின்றனர். இறுதியில், செலுத்தவேண்டிய ஜி.எஸ்.டி வரி தொடர்பான நோட்டீஸ், வீட்டுக்கு வரும்போதுதான், தங்கள் பெயரில் இப்படியொரு மோசடி நடந்திருப்பதே அந்த அப்பாவி ஏழைகளுக்குத் தெரியவருகிறது. மோசடிகள் குறித்தான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதிலும், ஜி.எஸ்.டி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ``கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துவிட்டு போலிகள் ஓட்டம் எடுத்த பிறகே ஆவணங்களின் அடிப்படையில் அப்பாவிகள்மீது அதிகாரத்தை ஏவுகிறது ஜி.எஸ்.டி விசாரணைப் பிரிவு. இறுதியாக குற்றம் செய்யாத அப்பாவிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களும் தேவையில்லாமல் யாரிடமும் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களைப் பகிர வேண்டாம்” என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.

விகடன் 21 Nov 2025 11:47 am

அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை காவல்துறை கட்டுப்படுத்த  வேண்டும். கோவையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி, ரூ.18 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளார். இருப்பினும் பிரதமர் மீது குறை கூறுவது ஏற்புடையதல்ல. நயினார் நாகேந்திரன் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. அந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து விரிவாக அனுப்பக்கோரியுள்ளது. ஆனால், அந்தத்திட்டம் குறித்து தவறாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் உள்ள இடைப்பட்ட தூரம் குறைவாக உள்ளது. மெட்ரோ ரயில்திட்டத்தை அமைப்பதற்கு குறைந்தபட்ச தூரம் இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அந்த திட்டத்தை நிராகரித்ததாகக்கூறி கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இது பொதுமக்களை ஏமாற்றும் வேலையாக உள்ளது. அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், பல்வேறு சாலைகள் விஸ்தரிப்பு, அனைத்து கிராமங்களுக்கான ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், ரேசன் கடைகளில் இலவச அரிசி பல நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நயினார் நாகேந்திரன் வரும் 2026-ல் தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம்” என்றார். அவரிடம், நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் முன் வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதற்கு பதில் கூறாமல் பின்னர் பார்க்கலாம் என மழுப்பலாக பதில் கூறி கிளம்பிச் சென்றார்.    

விகடன் 21 Nov 2025 11:41 am

``ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டிருந்தது. ஆளுநர் விவகாரம் : குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும், உச்ச நீதிமன்ற பதில்களும் | முழு விவரம் திரௌபதி முர்மு - ஆளுநர் ரவி அதில், ``மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதற்கான காரணங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு கால வரம்பை நிர்ணயித்திருந்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடலாம். இருப்பினும் ஆளுநருக்கு நீதிமன்றங்களால் எந்த உத்தரவையும் போட முடியாது. மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என கேட்டுக் கொள்ளத்தான் முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது. எனத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்! சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது. சொல்லப் போனால், * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. * அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது! * சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை. * மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம். ஸ்டாலின் என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது. *காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம், *சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம். தமிழ்நாடு அரசு அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆளுநர் விவகாரம் : குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும், உச்ச நீதிமன்ற பதில்களும் | முழு விவரம்

விகடன் 21 Nov 2025 11:24 am

திமுக, அதிமுக-வுக்கு பிடிகொடுக்காத பிரேமலதா - தேமுதிக-வின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற்றிருந்தது. விருதுநகரில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனப் பெரிதும் நம்பிய பிரேமலதாவுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அ.தி.மு.க உதவியுடன் சகோதரர் சுதீஷை ராஜ்யசபா எம்.பி-யாக்கிவிடலாம், 2026 சட்டப்பேரவை தேர்தலையும் அ.தி.மு.க-வுடன் இணைந்து சந்திக்கலாமெனக் கணக்குப் போட்டிருந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனால் இதையெல்லாம், 'தே.மு.தி.க-வுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை' எனக்கூறி தவிடுபொடியாக்கினார், எடப்பாடி. அதுவரை அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதாகப் பேசிவந்த பிரேமலதா, தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போதே கூட்டணிபற்றி ஜோசியம் கூற முடியாது என அப்போது அறிவித்தார். பிறகு தி.மு.க ஆதரவு ரூட்டில் பயணிக்கத் தொடங்கினார், அவர். தி.மு.க-வின் கச்சிதமான நகர்வு! அ.தி.மு.க, தே.மு.தி.க இடையிலான அதிருப்தியை கச்சிதமாகத் தி.மு.க-வும் பயன்படுத்தியது. அதாவது அப்போது நடந்த தி.மு.க் பொதுக்குழுவில் விஜயகாந்த்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாகப் பிரேமலதாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார், முதலவர் ஸ்டாலின். பிறகு நடந்த மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தையில், 'தே.மு.தி.க-வுக்கு 5 சீட்டுதான்' என்றது அறிவாலயம். இதில் மீண்டும் கடுப்பானவர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக எல்.கே.சுதீஷ், 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் என கட்சிக்குள் அதிரடி காட்டினார். அதன் ஒருபகுதியாகத் தமிழகம் முழுவதும் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு கூட்டத்திலும் மைக் பிடிக்கும் பிரேமலதா, 'விரைவில் கடலூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டை நடத்த இருக்கிறோம். அதில்தான் கூட்டணிகுறித்து அறிவிக்கப்படும். நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம். அடுத்த ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்' எனப் பேசி வருகிறார். இதற்கிடையில் மதுரையில் கடந்த 17-ம் தேதி நடந்த தே.மு.தி.க வாக்​குச் சாவடி முகவர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்தில் நடந்த விஷயங்கள்தான் தே.மு.தி.க-வை மீண்டும் லைம்லைட்டுக்கு கொண்டுவந்திருக்கிறது . அன்றையதினம் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரேமலதாவும் மதுரைக்கு வந்திருந்தார். அவரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து பேசினார். காக்கவைக்கப்பட்ட உதயகுமார்! பிரேல​தாவை சந்​திக்​கும் முன்​பாக, தே.மு.​தி.கக்கூட்டம் நடந்த மண்​டபத்​தின் ஓர் அறை​யில் சுமார் அரை மணி நேரத்​துக்​கும் மேலாக உதயகு​மார் காக்கவைக்கப்பட்டிருந்தார். கூட்​டத்தை முடித்​து​விட்டு வந்து அவரைச் சந்தித்த பிரேமல​தா, உதயகு​மாரை உட்​கார​வைத்​துக் கூடப் பேசாமல் நிற்க வைத்தே சுமார் 5 நிமிடங்கள் பேசி​விட்டு வழிய​னுப்பி வைத்​தாராம். பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், தமி​ழ​கத்​தில் உள்ள அனைத்​துக் கட்​சிகளுமே எங்களுக்குத் தோழமைக் கட்​சிகள்​தான். அவர்​கள் எல்​லோருமே தே.மு.​தி.​க-வுடன் கூட்​டணி வைக்க ஆர்​வ​மாக உள்​ளனர். ஆர்.பி. உதயகுமார் ஆனால் மாவட்​டச் செய​லா​ளர்​களை​யும், நிர்​வாகிகளை​யும் அழைத்​துப் பேசி மக்​கள் மனநிலை​யை​யும் ஆராய்ந்து நாங்​கள் நிச்​சய​மாக நல்ல முடிவை எடுப்​போம். இவங்க கூட​தான் கூட்​டணி... அவங்​ககூட தான் கூட்​டணி என்று நாங்​கள் இன்​ன​மும் முடிவுக்கு வரவில்​லை. எங்​கம்​மா​வின் மறைவுக்கு அனைத்து தலை​வர்​களும் வந்து இறுதி மரி​யாதை செலுத்​தி​னார்​கள். அந்த அடிப்​படை​யில் தான் உதயகு​மாரும் இன்று என்னைச் சந்தித்து துக்​கம் விசா​ரித்​தார்” என்​றார் அதிரடியாக. ஆனால் இந்தச் சந்திப்புக்கு முன்னதாக உதயகுமார், பிரேமல​தாவை மரி​யாதை நிமித்தமாகச் சந்திக்கும்படி இ.பி.எஸ்தான் தன்னை அனுப்பி வைத்தார் எனக் கூறியிருந்தார். ஆனாலும் பிரேமலதா பிடி கொடுக்கவில்லை. ஏற்கெனவே தி.மு.க-வுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒர்கவுட் ஆகாத சூழலில் அ.தி.மு.க-வுக்கும் பிரேமலதா பிடிகொடுக்கவில்லை. இதையடுத்து அவரது திட்டம்தான் என்ன என விசாரித்தோம்? விஜய பிரபாகரன் இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவால் அனுதாப அலையில் எப்படியும் விஜயபிரபாகரன் வெற்றிபெற்றுவிடுவாரெனப் பிரேமலதா பெரிதும் நம்பினார். அது நடக்காததால் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என உறுதியாக இருந்தார். ஆனால் கடைசிநேரத்தில் அ.தி.மு.க கையைவிரித்துவிட்டது. இதில் பிரேமலதாவுக்கு ஏக மன வருத்தம். இதையடுத்துதான் தி.மு.க பக்கம் நகரத் தொடங்கினார். அமைச்சர் ஒருவர் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில், 'வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள். நல்ல எண்ணிக்கையில் உங்களுக்குச் சீட் தருகிறோம். தேர்தல் செலவையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டதாம். பிரேமலதாவின் டிமாண்ட் என்ன? ஆனால் தே.மு.தி.க தரப்பில் பேசியவர்கள், 'தி.மு.க எங்களுக்கு 15 சீட், 2 ராஜ்யசபா சீட், தேர்தல் செலவு' என டிமாண்ட் வைத்ததாக தகவல். ஆனால் இதற்குத் தி.மு.க-விலிருந்து கிரீன் சிக்னல் வரவில்லை. எனவேதான் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகவும் பிரேமலதா அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் 'அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெற வேண்டும் என்றால் ஏற்கெனவே சொன்னதுபோல் ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும். அதைப் பொதுவெளியில் முன்னதாகவே அறிவிக்க வேண்டும். கூடவே 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' எனத் தே.மு.தி.க தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க-வும் ஓகே சொல்லவில்லை. திமுக தே.ஜ கூட்டணிக்குப் பா.ம.க-வை கொண்டுசெல்ல பா.ஜ.கத்தீவிரமாக முயற்சி செய்கிறது. எனவே தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இருந்தால் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும் எனத் தி.மு.க கணக்கு போடுகிறது. அதேநேரத்தில் 5 முதல் 8 தொகுதிகள்வரை மட்டுமே தே.மு.தி.க-வுக்கு கொடுக்கத் தி.மு.க ரெடியாக இருக்கிறது. இதனால்தான் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக இருக்கிறது. மறுபக்கம் தே.மு.தி.க-வின் அனைத்து கோரிக்கையும் ஏற்பதற்கு அ.தி.மு.க-வும் தயாராக இல்லை. அதேநேரத்தில் தே.மு.தி.க-வை இழப்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை. ஏனெனில் ஏற்கெனவே அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் எக்கச்சக்க பஞ்சயத்துக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் தே.மு.தி.க-வை இழக்க வேண்டாமென அ.தி.மு.க தலைமையும் நினைக்கிறது. மேலும் பிரேமலதாவுடன் தங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவே உதயகுமார் மூலமாகச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டது. ராமதாஸ் - அன்புமணி அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்! ஏனெனில் மதுரையில் பிரேமலதா தங்கியிருந்தபோது யாருக்கும் தெரியாமல் உதயகுமார் சந்தித்திருக்கலாம். ஆனால் பிற கட்சிகளிடத்தில் அ.தி.மு.க, தே.மு.தி.க இடையே நல்ல உறவு இருக்கிறது எனக் காட்டிக்கொளவதற்குத்தான் வெளிப்படையாக உதயகுமார் சந்திக்க சென்றிருந்தார். முன்னதாகக் கடந்த மக்களவை தேர்தலில் அவர் விஜயபிரபாகரனுக்காகப் பணியாற்றியிருந்தார். எனவேதான் எடப்பாடி அவரை அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அ.தி.மு.க-வின் இந்த அரசியல் பிரேமலதாவும் நன்கு தெரியும். அவர் அ.தி.மு.க-வுடன் சுமுகமான உறவில் இல்லை. தி.மு.க-வுடனும் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறோம் என்பதை வெளியில் காட்டும் விதமாகச் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு உதயகுமாரை அனுப்பி வைத்துவிட்டார். இதன் மூலம் அ.தி.​மு.க தங்களது தயவை தேடு​கிறது என வெளி​யில் தெரியவைத்துவிட்டார். மேலும் பலத்தை காட்டும் விதமாகக் கடலூரில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த பிரேமலதா தயாராகி வருகிறார். அவரது டிமாண்டை பூர்த்தி செய்யும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்பார். இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்றனர். பாஜக இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காகத் தே.மு.தி.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதியை பல வழிகளில் தொடர்பு கொண்டும் அவர் பதில் அளிக்கவில்லை. அவர் தனது கருத்தை தெரிவிக்கும் பட்சத்தில் அது உரிய பரிசீலனைக்கு பிறகு பிரசுரிக்கப்படும்! 'மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு' - ஓபிஎஸ்-ஸின் கருத்து வியூகமா? குழப்பமா?

விகடன் 21 Nov 2025 10:08 am

ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொலை செய்யப்பட்டதற்காக மே 7-ம் தேதி இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மே 10 அன்று போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்துக்குப் பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீடு இருக்கிறது என அமெரிக்காவும், பாகிஸ்தானும் தொடர்ந்து பேசிவரும் நிலையில், இந்தியா அதை மறுத்து வருகிறது. ஜெய்ராம் ரமேஷ் இந்த நிலையில், ``மே 7 முதல் 10 வரை இந்தியாவுடனான நான்கு நாள் மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மேலும் இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையேயான நான்கு நாள் இராணுவ மோதல்களைப் பயன்படுத்தி சீனா தனது ஆயுதங்களின் நுட்பத்தை சோதித்துப் பார்த்து விளம்பரப்படுத்தியிருக்கிறது. என அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் (USCC) தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிக்கை இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில், `` அந்த அறிக்கையில், 'அமெரிக்க அரசின் இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், அந்த அறிக்கையில் பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்களை 'கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்' என விவரித்திருக்கிறது. நான்கு நாள் மோதலில் ‘இந்தியா மீது பாகிஸ்தானின் இராணுவ வெற்றி’ எனக் குறிப்பிடப்படுகிறது. மோடி, ட்ரம்ப் இந்த அறிக்கை வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, சவுதி பட்டத்து இளவரசர் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி அரேபிய மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 61வது முறையாக, `இந்தியா மீது 350% வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியே ஆபரேஷன் சிந்தூரை முடிவுக்குக் கொண்டுவந்தேன்' எனக் கூறியுள்ளார். பிரதமர் மோடியோ 'ஷெரீஃப் எனக்கு போன் செய்தார்’ எனத் தெரிவித்தார். இந்த அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையும், அதிபர் ட்ரம்பின் இந்த தொடர் கருத்தும் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு பிரதமர் மோடியும், வெளியுறவுத்துறையும் தங்கள் ஆட்சேபனைகளையும், எதிர்ப்பையும் பதிவு செய்வார்களா? நமது ராஜதந்திரம் மற்றொரு கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறார். Delhi Car Blast: ``மோடி-அமித்ஷா-அம்பானி கூட்டணி பொறுப்பேற்க வேண்டும்?'' - திருமாவளவன் விமர்சனம்

விகடன் 21 Nov 2025 9:22 am

``உதயநிதி அப்செட்; செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்'' - வைரலாகும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு

இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மெல்லத் தொடங்குகிறது. இதற்கிடையில், திமுக காங்கிரஸ் கூட்டணி நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகவே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கு பேச்சுவார்த்தைகள் நடந்துவருதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் இன்று செந்தில்வேல் எழுதிய திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த நூலை வெளியிட்டு உரையாற்றினார். திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல் வெளியீட்டு விழா இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழா மேடையில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ``நீதிக்கட்சித் தொடங்கப்பட்ட அதே தினத்தின் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்பது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு. இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதலில் என் பெயர், அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைப் பெயர் எல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள். அண்ணன் செல்வப் பெருந்தகை நிகழ்ச்சிக்கு முன்னமே வந்துவிட்டார். நான் தாமதமாக வந்தேன். அவருக்கு அவசர அழைப்பு வந்ததால் அவர் நான் வருவதற்கு முன்பே 'வருகிறேன்' எனச் சென்றுவிட்டார். ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கிவிட்டோம். அப்போதும் அவர் வரவில்லை என்றதும் அவர் வருவாரா? மாட்டாரா? எனச் சந்தேகத்திலேயே இருந்தார்கள். திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர்களும் 'உதயநிதி அப்சட்; செல்வப் பெருந்தகை ஆப்செண்ட்' எனத் தலைப்பெல்லாம் வைத்துவிட்டார்கள். ஆனால், அண்ணன் செல்வப் பெருந்தகையும், அவரின் இயக்கமும் சரியான நேரத்துக்கு, சரியான இடத்துக்கு வந்துவிட்டார். சென்றால்தானே வரமுடியும்... ஒரு கொள்கை 100 வருடங்களுக்குப் பிறகும் நிலைத்து நிற்கிறது என்றால் அந்தக் கொள்கை உறுதியை நினைத்து நாம் பெருமைப் படவேண்டும். எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்படியான ஆற்றல் மிக்க இந்த இரும்புக்கோட்டையில் விரிசல் வந்துவிடாத எனச் சங்கிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் வந்திருப்பதுதான் செந்தில்வேலின் இந்த புத்தகம். சங்கிகளை மேலும் மேலும் பதறவைக்கும் விதமாகதான் இந்த புத்தகம் எழுதியிருக்கிறார். என உரையாற்றினார். TVK: `அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு.! - மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

விகடன் 21 Nov 2025 9:14 am

மகாராஷ்டிரா: மராத்தி பேசாதவருக்கு ரயிலில் அடி, உதை; உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவர்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயிலில் சென்றபோது மொழி விவகாரத்தில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவர், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வியாழக்கிழமை (நவ. 20) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்யாண் ஈஸ்ட் பகுதியில் அப்பார்ட்மென்டில் வசிக்கும் அந்த முதலாம் ஆண்டு மாணவர் கடந்த செவ்வாய் (நவ. 18) அன்று தூக்கிட்டுள்ளார். அவர் தினமும் கல்யாணிலிருந்து முலுண்டில் இருந்த தனது கல்லூரிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார். செவ்வாய் காலை அதுபோல பயணிக்கும்போது சச்சரவு ஏற்பட்டுள்ளது. ரயில், நெருக்கடியான நிலை வாலிபரின் தந்தை கூறியதன்படி, நெருக்கடியான நிலையில், ஒருவர் அவரை தள்ளி நிற்க சொல்ல, அவர் மராத்தியில் பதில் அளிக்காததால் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். ஒரு பயணி, தனது ஐந்து தோழர்களுடன் சேர்ந்து, மாணவனை கொடூரமாகத் தாக்கி, அவரை எண்ணற்றமுறை குத்தியுள்ளனர். இதனால் அவருக்கு பயமும் குமட்டலும் ஏற்பட்டு தானே நிலையத்தில் இறங்கியுள்ளார் என காவல்துறை அதிகாரி விளக்கியுள்ளார். கல்லூரியில் முழு நேரமும் அமராத அந்த மாணவர் விரைவாக வீடுதிரும்பி அவரது தந்தையிடம் ஃபோனில் பேசியிருக்கிறார். Marathi அவர் தனது மொபைல் போனில் சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார், தந்தை அவரது குரலில் பயமும் பதற்றமும் இருப்பதை தந்தை உணர்ந்தார். அன்று மாலை வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, ​​கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டார். அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ​​தனது மகனைக் கண்டார், என்று அந்த காவல்துறை அதிகாரி கூறயுள்ளார். தாக்குதலால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவரது தந்தை புகார் அளித்துள்ளார். காவலர்கள் இதனை விபத்து மரணம் எனப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். `மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்

விகடன் 21 Nov 2025 8:33 am

மதுரை: ``மெட்ரோவைத் தொடர்ந்து ஆசியான் ஒப்பந்தத்தில் விமான நிலையமும் புறக்கணிப்பா?'' - சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு இருதரப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்க்க வேண்டும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுக்கு கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தேன். சு.வெங்கடேசன் இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், சுற்றுலா மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக 18 இந்திய விமான நிலையங்களை சுற்றுலா நகரமாக ஏழு ஆசியான் நாடுகளுக்கு அறிவித்து மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமானது ONE-TIME POLICY DECISION எனவும், தற்போது மதுரையை இந்த ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்ப்பதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும், இந்திய விமான நிறுவனங்கள் விரும்பினால் மதுரையிலிருந்து ஆசியான் நாடுகளுக்கு தங்கள் விமானங்களை இயக்க எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும், ஆனால் அந்த முடிவு இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் லாபம் மற்றும் வழித்தடத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு அவர்களே முடிவு செய்ய முடியும் என்றும் அரசு அவர்களின் விமான இயக்கத் திட்டங்களில் தலையிட முடியாது எனவும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மதுரை மண்டலம் இயற்கையாகவே தெற்காசிய நாடுகளுடன் கலாசார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது, அங்கு வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் தென் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மதுரைக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையேயான சுற்றுலா வாய்ப்புகளும் ஏராளம். இத்தனை அம்சங்களையும் அறிந்துதான் மலேசியாவின் ஏர்ஆசியா 2003ஆம் ஆண்டிலிருந்தும், பாட்டிக்ஏர் (மலிண்டோ) 2014ஆம் ஆண்டிலிருந்தும் மதுரைக்கு நேரடி விமான சேவையை இயக்க முன்வந்தனர். மதுரை விமான நிலையம் மேலும் 2014-15 காலகட்டங்களில் ஏர் அரேபியா, ஃப்ளை துபை போன்ற சில வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களும் மதுரைக்கு தங்களது விமானங்களை இயக்க ஆர்வம் காட்டின. ஆனால் இவை அனைத்தும் இருதரப்பு ஒப்பந்தங்களில் மதுரை இடம் பெறாத ஒரே காரணத்தால் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போனது. ஒருபக்கம் இந்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு எதிராகவே உள்ளன. மறுபுறம் ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரங்கள் என சேர்க்கப்பட்டுள்ள 18 இந்திய நகரங்களை ஆராய்ந்தோமானால், கஜுராஹோ இன்றுவரை முழுமையான உள்நாட்டு விமான நிலையமாக உள்ளன, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தில் ஒரு உள்நாட்டு விமான நிலையத்தை POC ஆகச் சேர்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் சுங்க மற்றும் குடியேற்ற வசதிகள் இல்லாமல் சர்வதேச விமான நடவடிக்கைகளை அங்கு கையாள முடியாது. ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து, போர்ட்-பிளேர், அவுரங்காபாத் போன்ற சில விமான நிலையங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசியான் இருதரப்பு சலுகைகளைப் பயன்படுத்தவில்லை. ``எம்.பி-க்களுக்கு மட்டும் அலுவலகம் இல்லை; தமிழக அரசு மறுக்க காரணம் என்ன?'' - சு.வெங்கடேசன் கேள்வி இருதரப்பு ஒப்பந்தங்கள் ஒரு கொள்கை முடிவு என்று இந்திய அரசு கூறுகிறது, ஆனால் அந்த கொள்கையே நியாயமற்றதாக தெரிகிறது., அதுமட்டுமின்றி இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் போன்ற தங்கள் HUB வழியாக உலகம் முழுவதும் பயணத்திட்டங்களை மேற்கொள்கின்றன. அதிகளவில் லாபம் ஈட்டுகின்றன ஆனால், இந்திய விமான நிறுவனங்கள் பெரும்பாலும் O&D போக்குவரத்தையே சார்ந்துள்ளன. ஆர்வமுள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதும், தயங்கும் இந்திய விமான நிறுவனங்கள் மதுரை விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதை எதிர்பார்ப்பதும்/அதற்காக காலவரையற்று காத்திருப்பதும், மதுரையை ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் விளைவிக்கும் AAI விமான நிலையங்களின் பட்டியலில் வசதியாக சேர்க்கிறது. இது எந்த வகையில் நியாயம்? சு.வெங்கடேசன் இந்தக் கொள்கை முடிவு என்பது முற்றிலும் நியாயமற்றது. இது ஒரு முறை முடிவு செய்யப்படும் கொள்கை முடிவாக இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்த சிறப்பு ஆசியான் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். சர்வதேச போக்குவரத்திற்கு பயன்படாத விமான நிலையங்களுக்கு பதிலாக தெற்காசிய நாடுகளுடனான நேரடி விமானங்களுக்காக பல வருடங்களாகக் காத்திருக்கும் மதுரை போன்ற தகுதியான விமான நிலையங்களை இந்த ஆசியான் ஒப்பந்தத்தில் POC-ஆக சேர்ப்பது தானே நியாயமாக இருக்க முடியும்? தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மதுரையை ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் ஒரு சுற்றுலா நகரமாக சேர்க்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். மதுரைக்கு மெட்ரோ திட்டம் கிடையாது என ஒன்றிய அரசு மறுக்கிறது, பிற மாநிலங்களில் அடிப்படையாக இருக்கவேண்டிய வசதிகள் கூட இல்லாத சிறிய விமான நிலையங்களை ஊக்குவிக்கிறது, ஆனால், மதுரை விமான நிலையத்தைப் புறக்கணிக்கிறது. ஒன்றிய அரசின் வஞ்சகம் நிறைந்த இச்செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. என்று தெரிவித்துள்ளார். S.I.R. : தமிழ்நாடு மிக வலிமையாக இதை எதிர்க்க வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

விகடன் 21 Nov 2025 6:54 am

மசோதா : குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும், உச்ச நீதிமன்றத்தின் பதில்களும் | முழு விவரம்

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதன் மீது குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த 14 கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் தனித்தனியாகப் பதில் அளித்திருக்கிறது. அந்தக் கேள்வி பதில்களைத் தற்போது விரிவாகப் பார்க்கலாம். உச்ச நீதிமன்றம் 1. அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு ரீதியான அவரது தனிப்பட்ட விருப்ப உரிமை என்பதை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது தனி விருப்ப உரிமையைச் செயல்படுத்துவதை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. நீதிமன்றம் அந்த முடிவின் தகுதி மீதான ஆய்வுக்கு செல்ல இயலாது. எனினும் ஒரு மசோதா மீது நீண்ட காலம் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தால் சட்டப் பிரிவு 200-ன் கீழ் செயல்படுமாறு ஆளுநரை வரம்புக்கு உட்பட்டு நீதிமன்றத்தால் கேட்டுக் கொள்ள முடியும். 2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநருக்கு உள்ள அரசியலமைப்பு ரீதியான வாய்ப்புகள் என்ன? ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மூன்று அரசியலமைப்பு ரீதியான வாய்ப்புகள் உள்ளன. அவை, * ஒப்புதல் அளித்தல், * ஜனாதிபதியின் பரிசீலனைக்காக மசோதாவை எடுத்து வைப்பது, * ஒப்புதலைத் தடுத்து நிறுத்தி, அதற்கான காரணங்களுடன் மசோதாவைச் சட்டமன்றத்திற்குத் திரும்ப அனுப்புதல். இது ஒரு நான்காவது வாய்ப்பை வழங்குவதல்ல, மாறாக ஏற்கனவே உள்ள வாய்ப்புகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கிறது. * மூன்றாவது வாய்ப்பான மசோதாவைச் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்புவது என்பது பண மசோதா அல்லாத மசோதாக்களுக்கு மட்டுமே அவ்வாறு திருப்பி அனுப்ப முடியும். ``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை - CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு! 3. 200-வது பிரிவின் கீழ் மசோதா சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது முடிவெடுக்க ஆளுநர் தனக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தும்போது அமைச்சரவையின் உதவியையும் ஆலோசனையையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதா? பதில்: அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்த மூன்று வாய்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மாநில ஆளுநருக்குத் தனி விருப்புரிமை இருக்கிறது. அப்படி முடிவு எடுக்கும்போது அதற்கு மாநில அமைச்சரவையின் உதவி அல்லது ஆலோசனையை அவர் கட்டாயம் கேட்க வேண்டும் என்பதில்லை, அதற்கு அவர் கட்டுப்பட்டவரும் இல்லை. 4. இந்திய அரசியல் சாசனத்தின்படி பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர் எவ்வளவு காலத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? முடியாது. ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் எந்த கால வரம்பையும் நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் அரசியல் சாசன சட்டப் பிரிவு 201-ன்படி குடியரசுத் தலைவரின் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விருப்ப உரிமை நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதா? பதில்: முடியாது, மசோதாக்கள் மீது ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் எப்படிச் சொல்ல முடியாதோ, அதேபோல இந்தக் குறிப்பிட்ட சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவருக்கும் அவ்வாறு சொல்ல முடியாது. 6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவானது, 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் மேற்கொள்ளும் செயல்கள் மீதான நீதிமன்ற ஆய்வுக்கு முற்றிலும் தடையாக இருக்குமா? ஆம், 361-வது பிரிவு ஆளுநரைத் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கு முற்றிலும் தடையாக உள்ளது. ஆனால், 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் நீண்டகாலமாகச் செயலற்ற தன்மையில் இருக்கும்போது, அவர் ஏன் அதைச் செய்யாமல் இருக்கிறார் என்பதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் கிடையாது. ஆளுநருக்கு மட்டுமல்ல... பா.ஜ.க அரசுக்கும் எதிரான தீர்ப்பு இது! | In-depth Read 7. மசோதா சட்டமாக மாறுவதற்கு முந்தைய நிலையில் 200 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் முடிவுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவையா? இந்திய அரசியலமைப்பின் 200 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகள், மசோதா சட்டமாக உருவாவதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல. சட்டமாக மாறுவதற்கு முன்னர் ஒரு மசோதாவின் உள்ளடக்கத்தின் மீது எந்த வகையிலும் நீதிமன்றங்கள் ஆய்வு மேற்கொள்ள அனுமதியில்லை. குறிப்பாக, 143 பிரிவின் கீழ் மசோதாக்களை நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியாது. 8. அரசியல் சாசனத்தில் கால வரம்பு மற்றும் அதிகாரப் பயன்பாட்டு முறை குறிப்பிடப்படாத நிலையில், 201-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமை இவ்வாறு தான் இருக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவுகள் மூலம் கால வரம்புகளை நிர்ணயிக்க முடியுமா? ஆளுநருக்கு 200-வது பிரிவு தொடர்பாகக் கூறப்பட்ட அதே காரணங்களுக்காக, 201-வது பிரிவின் கீழ் பணிகளை நிறைவேற்றுவதில் குடியரசுத் தலைவரையும் நீதிமன்ற ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புகளுக்கு கட்டுப்படுத்த இயலாது. திரௌபதி முர்மு, மோடி 9. ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும்போது குடியரசுத் தலைவர் 143-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவது கட்டாயமா? அரசியலமைப்பு சாசனத்தில், ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும் ஒவ்வொரு முறையும், குடியரசுத் தலைவர் 143-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்க வேண்டியதில்லை. ஒருவேளை மசோதா தொடர்பாகச் சட்ட ஆலோசனைகள் எதுவும் தேவைப்பட்டால் இந்த நீதிமன்றத்தை அணுகலாம். 10. இந்திய அரசியலமைப்பின் 142 பிரிவின் கீழ் (உச்ச நீதிமன்றத்திற்கு என்று உள்ள சிறப்பு தனி அதிகாரம்) குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களது உத்தரவுகளையும் எவ்வகையிலும் மாற்ற முடியுமா? குடியரசுத் தலைவர்/ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களது உத்தரவுகளையும் இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி மாற்ற முடியாது. `குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுங்கள் என ஆளுநருக்கு உத்தரவிட முடியாது;எனினும்!’ - உச்ச நீதிமன்றம் 11. இந்திய அரசியலமைப்பின் 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே மாநில சட்டமன்றம் இயற்றிய மசோதா அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வர முடியுமா? இந்தக் கேள்விக்கான பதில் கேள்வி 10-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றம் இயற்றிய சட்டம் நடைமுறைக்கு வர முடியாது. ஆளுநரின் சட்டமியற்றுதல் பணியை வேறு எந்த அரசியலமைப்பு அதிகாரமும் மாற்றம் செய்ய முடியாது. அதை ஆளுநர் மட்டுமே செய்ய முடியும். 12. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 145(3)-ன்படி, ஒரு வழக்கில் அரசியலமைப்பு விளக்கம் தொடர்பான சட்டக் கேள்வி உள்ளதா என்பதை முதலில் தீர்மானித்து, அதனைக் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது இந்த நீதிமன்றத்தின் எந்த அமர்வுக்குக் கட்டாயம்? 145(3)-வது பிரிவின் அரசியலமைப்பு முக்கியத்துவம் குறித்து இந்த அமர்வு ஏற்கனவே விளக்கத்தைத் தெளிவாகக் கொடுத்து விட்டது. எனவே, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் திருப்பி அனுப்புகிறோம். உச்ச நீதிமன்றம் 13. இந்திய அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு அல்லது சட்ட விதிகளுக்கு மாறாகவோ முரணாகவோ, வேறு உத்தரவுகளையோ வழிகாட்டுதல்களையோ பிறப்பிக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் தொடர்பான இந்தக் கேள்வி மிகவும் பெரியதாக இருக்கிறது. இது தொடர்பாக உறுதியான பதில் கொடுப்பது சாத்தியம் கிடையாது. ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் பணிகள் தொடர்பில் பிரிவு 142 குறித்து ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்வியின் பதிலின் ஒரு பகுதியாகவே இதற்கான பதில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 14. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்திய அரசியலமைப்பு பிரிவு 131-ன் கீழ் செயல்படுவதைத் தவிர வேறு ஏதேனும் வகையில் செயல்படத் தடை எதுவும் இருக்கிறதா? இந்தக் கேள்வி நீதிமன்றங்களிடம் கேட்கும் சந்தேகங்களுக்குத் தொடர்பற்றதாக இருக்கிறது. எனவே, இதற்குப் பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது. `ஒரு மாநிலத்துக்கு இரு அதிகார அமைப்புகளை ஏற்க முடியாது’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

விகடன் 21 Nov 2025 6:20 am

இனாம் நிலம் விவகாரம்; தீக்குளிக்க முயன்ற மக்கள்... போராட்டத்தில் குதித்த அரசியல்வாதிகள் கைது!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் (இனாம் நிலம்) உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். protest கடந்த 17- ம் தேதி வெண்ணைமலை கோயில் முன்பு அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் இனாம் நிலத்தில் உள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு, 62 கடைகள், ஒரு செல்போன் டவர் ஆகியவற்றை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றிட திட்டமிட்டு இருந்தனர். அதன்படி, இன்று கண்ணம்மாள் என்பவர் வீட்டிற்கு சீல் வைக்க சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பா.ம.க மாவட்ட செயலாளர் பிரேம்நாத் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அப்பகுதி மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். arrest பின்னர், அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸார் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். பாதுகாப்பு பணிக்காக கரூர் மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களில் ஒரு பகுதியினர், மதுரை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாவல் நகர் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்கள் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது. arrest வாகனங்கள் 1 கி.மீ வரை நின்றன. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு அனைவரையும் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இனாம் நிலம் தொடர்பான அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிராக போராடி வரும் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 20 Nov 2025 10:14 pm

புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா

`எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் வெட்டுவேன்...’ புதுச்சேரி, தமிழகத்தின் பிரபல தாதாவான `தட்டாஞ்சாவடி’ செந்தில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். அதேபோல 2011-ல் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி காலாப்பட்டு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர்கள் இருவருமே தற்போது காலாப்பட்டு தொகுதியை குறி வைத்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 19-ம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், ``புதுச்சேரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கொலைக் குற்றவாளி ரௌடிகள், காலாப்பட்டு பகுதியிலுள்ள மூன்று தொழிற்சாலைகளுக்குள் நுழைந்து வேலை கேட்கிறோம் என்ற பெயரில் மிரட்டியிருக்கிறார்கள். தொழிற்சங்கத்தின் சிறப்புத் தலைவர் என்ற முறையிலும், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ என்ற முறையிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவம்பர் 13-ம் தேதி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்திருக்கிறேன். பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வெளியிட்ட வீடியோ காட்சி. மாஸ்க் அணிந்திருப்பவர் தட்டாஞ்சாவடி செந்தில் ஆனால் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யூனியன் தலைவர்கள் அனைவரும் ஹெச்.ஆர்-களுக்கு பெண்களை சப்ளை செய்வதாகக் கூறி, எங்கள் காலாப்பட்டு தொகுதிப் பெண் சகோதரிகளையும், தாய்மார்களையும் இழிவாகப் பேசியிருக்கிறார்கள். மேலும், `எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், ஜி.எம்-மாக இருந்தாலும் வெட்டுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அந்தக் கொலைக் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று புகாரளித்தேன். காவல்துறை அதை செய்யாததால், தற்போது துணைநிலை ஆளுநரிடம் புகாரளித்திருக்கிறேன். 2011 முதல் 2016 வரை காலாப்பட்டு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தேன். அப்போது தொகுதியில் ஒரு கொலை கூட நடந்தது கிடையாது. `ஒன்பது கொலைகளை செய்தவர் செந்தில்’ அதற்கடுத்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப், சந்திரசேகர் இருவரும் கொலை செய்யப்பட்டார்கள். தற்போது தொழிற்சாலைக்குச் சென்று மிரட்டிய, ஒன்பது கொலைகளை செய்த குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்தில் மீதுதான் புகாரளித்திருக்கிறேன். அவருடன் 50-க்கும் மேற்பட்ட கொலைக் குற்றவாளிகள் இருந்தனர். இரண்டு நாட்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதே ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார். செய்தியாளர் சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் அதையடுத்து அன்றைய தினமே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளையின் தலைவருமான செந்தில், ``மக்களுடன் நான் அந்த தொழிற்சாலைக்குச் சென்றது உண்மைதான். காலாப்பட்டு தொகுதியில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்து வந்துவிட்டோம். அப்போது தொழிற்சாலை நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய பேச்சு வார்த்தையை, முத்து என்ற ஐ.ஆர்.பி.என் காவலர் சிவில் உடையில் வந்து வீடியோ எடுத்தார். அப்போது `ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?’ என்று கேட்ட எங்கள் ஆதரவாளர்கள் இருவரை, முத்து தாக்கினார். அதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் நாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐ.ஆர்.பி.என் பிரிவிலும் முத்து மீது புகார் தெரிவித்திருக்கிறோம். இதுதான் தொழிற்சாலையில் நடந்த விவகாரம். `அமைச்சராக இருந்தபோதே தலைமறைவானவர் கல்யாணசுந்தரம்’ ஆனால் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் சொல்வது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோற்றுவிடுவார் என்ற பயத்தில்தான் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார். அதேபோல பெண்களைப் பற்றி நான் தவறாக பேசுவதாக கூறியிருக்கிறார். எந்த சூழலிலும் நான் அப்படிப் பேசியதில்லை. பிள்ளைச்சாவடி பகுதியில் கட்டப்பட்டு வரும் விநாயகர் கோயிலுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என்று நாங்கள் கேட்டதற்கு, `நாங்கள் ஏற்கெனவே எம்.எல்.ஏ-விடம் கொடுத்துவிட்டோம்’ என்றார்கள் தொழிற்சாலை தரப்பில். அந்தப் பணத்தை நேற்றுதான் கோயில் நிர்வாகிகளிடம் கொடுத்தார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். நாங்கள் கேட்கவில்லை என்றால் அந்தப் பணமே வந்திருக்காது. நான் குற்றம் செய்தவன் என்று சொல்கிறார் கல்யாணசுந்தரம். செய்தியாளர் சந்திப்பில் தாதா தட்டாஞ்சாவடி செந்தில் ஆனால் என் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இவர் அமைச்சராக இருக்கும்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். ஒன்பது கொலை வழக்கு என் மீது இருப்பதாக இவர் சொல்வதெல்லாம், காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான். அதற்கு காரணம், காலாப்பட்டு மக்கள் தற்போது அவருடன் இல்லை. அந்த விரக்தியில்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு கல்யாணசுந்தரம் என்ன தொழில் செய்து கொண்டிருந்தார் என்பது ஒட்டுமொத்த புதுச்சேரிக்குமே தெரியும். இந்தியாவிலேயே அமைச்சராக இருக்கும்போது தலைமறைவான குற்றவாளி என்றால் அது இவர்தான். அதேபோல, `கருவடிக்குப்பம் உமா சங்கரை கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்துவிடுவேன். சி.பி.ஐ வந்து என்ன புடுங்கிவிட்டது?’ என்று என்னுடைய ஆதரவாளர்களை மிரட்டுகிறார். `ஜோசப், சந்திரசேகர் இருவரையும் கொலை செய்ததே எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்தான்’ மேலும் எனக்கு ஆதரவாக இருக்கும் மூன்று பேரில் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறார். அதற்காக இவர் யாரிடம் பேசினாரோ, அதை அவர்களே என்னிடம் வந்து சொல்லிவிட்டார்கள். சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையில், காலாப்பட்டு காவல் நிலையத்திற்கே சென்று போலீஸாரை மிரட்டியிருக்கிறார். அப்போது பெண்களை வைத்து தொழில் செய்த ஒருவரும் உடன் இருக்கிறார். பெண்களை வைத்து தொழில் செய்தவர்களைத்தான் தன்னுடன் வைத்திருக்கிறார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். பெண்களைப் பற்றி நாங்கள் தவறாகப் பேசுவதாகக் கூறுகிறார். பெண்களை நீ என்னவெல்லாம் செய்தாய் என்று நான் சொல்லவா ? பெண்கள் தொடர்பான குற்றங்களில் அதிகம் தொடர்புடையவன் நீதான். தட்டாஞ்சாவடி செந்தில் இவர் ரௌடிகள் என்று சொல்பவர்கள் அனைவரும், அவருக்கு வாக்களித்த மக்கள்தான். அவர்களை ரௌடிகள் என்கிறாரா ? அவர் எந்தக் குற்றச் செயல்களையும் செய்தது இல்லையா ? எம்.எல்.ஏ ஆனபிறகு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு ஆள் வைக்கிறேன் என்று சொல்லி எத்தனை கோடி வாங்கியிருக்கிறாய் என்று மக்களுக்குத் தெரியும். என்னை கொலைக் குற்றவாளி என்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப், சந்திரசேகர் இருவரையும் கொலை செய்ததே எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்தான். ஏனென்றால் அவர்கள் உயிரோடு இருந்தால் இவரால் அரசியல் செய்ய முடியாது. இது அனைவருக்கும் தெரியும். தற்போது சாதாரணமாகப் பேசுகிறேன். அடுத்த முறை போஸ்டர் அடித்து ஒட்டுவேன்” என்றார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்பதற்காக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தை தொடர்புகொண்டோம். நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைகளுக்குப் பிறகு பிரசுரிக்கப்படும். புதுச்சேரி: பிரபல தாதா தெஸ்தான் மகன் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை! - பின்னணியை விவரிக்கும் போலீஸார்

விகடன் 20 Nov 2025 9:53 pm

Kashmir Times: பத்திரிகை அலுவலகத்தில் ரெய்டு; துப்பாக்கி பறிமுதல்? - அரசை விமர்சிக்கும் ஆசிரியர்!

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு நிறுவனம் (SIA) புதன்கிழமையன்று ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் அலுவலகத்தை சோதனை செய்தது. காஷ்மீர் டைம்ஸ் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக ஏழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. அங்கே ஏ.கே ரக துப்பாக்கிகள், வெவ்வேறு வகை வெடிமருந்துகள், பிஸ்டல் ரவுண்ட்கள் மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதா பாசின் பத்திரிகையின் அலுவலகத்திலும் கனிணிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். விசாரணையின் அடுத்தகட்டமாக செய்தித்தாளுடன் தொடர்புடைய நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த நடவடிகைக் குறித்து காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சிங் சவுத்ரி, அவர்கள் எதாவது தவறு செய்திருந்தால் மட்டுமே நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். வெறுமனே அழுத்தம் கொடுப்பதற்காக மட்டுமே நடந்திருந்தால், இது மிகவும் தவறான ஒன்று எனப் பேசியுள்ளார். SIA Kashmir Times 1954ம் ஆண்டு வேத் பாசின் என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்ட இந்த செய்தித்தாள் பிரிவினைவாத ஆதரவு பத்திரிகையாக கருதப்படுகிறது. காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராகச் செயல்பட்ட வேத் பாசின் மறைவுக்குப் பிறகு அவரது மகள் அனுராதா பாசின் ஜம்வால் மற்றும் பிரபோத் ஜாம்வால் பத்திரிகையை நடத்தி வருகின்றனர். பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல் அனுராதா மற்றும் பிரபோத் ஆகியோர் நடைபெற்ற இந்தச் சோதனை, சுயாதீன பத்திரிகையை மௌனமாக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி எனக் கருதுகின்றனர். மேலும், அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு ஒரு வலுவான, கேள்வி கேட்கும் பத்திரிகை அவசியம். எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எனக் கூறியுள்ளனர். அத்துடன் பத்திரிகை நடத்துவது குற்றமல்ல என்றும் என்ன சோதனை நடந்தாலும் உண்மைகளை வெளிக்கொணருவதற்கான அர்ப்பணிப்பு தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

விகடன் 20 Nov 2025 7:42 pm

`மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்; ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம்!' - திமுக அறிவிப்பு

மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வருகின்ற 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதுரை மாவட்ட திமுக அறிவித்துள்ளது. பி.மூர்த்தி, கோ.தளபதி மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் முயற்சியால் மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பெரும் எதிர்பார்ப்பான மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது ஆனால் தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் முடக்கி வஞ்சித்துள்ளது இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதுரை மாவட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகிற 21.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாவட்ட அவைத் தலைவர்கள் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம், மா.ஒச்சுபாலு, நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது மெட்ரோ இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழகத்தினர், கூட்டணி கட்சியினர் என அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விகடன் 20 Nov 2025 7:36 pm

``பாஜக கூட்டணியால் மட்டும் SIR-ஐ ஆதரிக்கவில்லை - ஜெயக்குமார் சொன்ன விளக்கம்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. எனினும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து SIR நடவடிக்கையை ஆதரித்து வருகிறது. SIR நடவடிக்கையில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையரை கண்டித்து இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். SIR - சிறப்பு தீவிர திருத்தம் அவர் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பொதுவாகவே வந்து சுருக்க முறை திருத்தம் செய்வாங்க. ஆனால் இந்த திருத்தத்தின் போது பொதுவாகவே இறந்தவர்கள் நீக்கப்படுறது கிடையாது, குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படுவது கிடையாது, சிலர் இரண்டு தொகுதியில் ஓட்டு வைத்திருப்பார்கள் அதை நீக்குவது கிடையாது. இதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இறந்தவர்கள் 15 ஆண்டுக்கும் மேலாக வாக்குப் பட்டியலில் இருப்பார்கள், தமிழ்நாட்டை விட்டே வெளியேறியவர்கள், விலாசமே இல்லாதவர்கள் எல்லாம் இருப்பார்கள். இதற்கு நிரந்த முடிவுகட்ட நாங்கள் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தை அணுகினாலும் அதில் அவர்கள் கவனம் செலுத்துவது இல்லை. இப்போது SIR மூலம் இதற்கு ஒரு முடிவு வரும். இப்போது இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடையாது. ஆனால் இறந்தவர்களுக்கு வாக்குகள் இருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஆவரேஜா 20ல இருந்து 25,000 ஓட்டு இறந்தவர்கள், விலாசம் தெரியாதவர்கள், குடியேறியவர்கள் இப்படிப்பட்டவர்கள். அவை நீக்கப்பட்டு வெளிப்படையான வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாராக வேண்டும். எங்களை பொறுத்தவர நியாயமான ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும். திமுக இறந்தவர்களையும், குடிபெயர்ந்தவர்களையும், கள்ள ஓட்டையும் நம்பியிருக்கிறது. இன்று தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு திமுகவுக்கு வேப்பங்காய் போல கசக்கிறது. SIR - தேர்தல் ஆணையம் - திமுக நான் ஸ்டாலினை கேட்கிறேன், SIR நடவடிக்கை வேண்டாம் எனச் சொல்லும் திமுக அரசு களத்தில் கட்சிக்காரர்களை இறக்கிவிட்டு, இறந்தவர்களை பட்டியலில் வைத்திருக்கவும், கள்ள ஓட்டுகளை வைத்திருக்கவும் சொல்வது ஏன்? நீங்க புறக்கணிச்சிட்டு போங்க. ஒப்புக்காக SIRஐ எதிர்த்துவிட்டு இதில் அதிகம் ஈடுபாடுகாட்டுவது திமுகதான். நாங்கள் 15 ஆண்டுகளாக இறந்தவர்களை நீக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டு வருகிறோம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தால் என்ன செய்வது. இப்போது பாஜக ஆதரிப்பதனால் மட்டும் நாங்க SIR பணிகளை ஆதரிக்கவில்லை. வெளிப்படையான வாக்காளர் பட்டியல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஆதரிக்கிறோம். அதுமட்டுமல்ல இது இதோடு முடிந்துவிடாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அப்போது அபீல் செய்யலாம். இதில் மாநகராட்சி ஆணையர் கடைமையை செய்ய வேண்டும். திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுகவினர் மிரட்டினாலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அஞ்சக் கூடாது. மேற்பதவி கிடைக்கும், அதிக (பணம் ஈட்டும் செய்கையை காண்பிக்கிறார்) கிடைக்கும் என்பதற்காக நாக்கை தொங்க போட்டு வேலை செய்யக் கூடாது. நாங்க யாரையும் மிரட்டல அவர்களது கடைமையைச் செய்ய சொல்கிறோம். எனப் பேசினார். முத்துவேலர் பணத்தில் திட்டம் கொண்டுவந்தால் இன்பநிதி பெயரைக் கூட வையுங்கள் - ஜெயக்குமார் காட்டம்!

விகடன் 20 Nov 2025 5:39 pm

திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய் - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

திமுக தலைமையிலான தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளில் தொடர்ந்து ஊழலும், பொய்யான அறிவிப்புகளை அறிவித்து வருவதாக பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 'திமுக'வின் தொழில்நுறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பதுதான் பா.ம.க.வின் வெற்றி என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அன்புமணி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட அமைச்சர், இது பாமகவின் வெற்றி அதில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் என்ற பெயரில் திமுக அரசு நடத்தி வரும் மோசடிகளை அம்பலப் படுத்தும் வகையில் சென்னையில் நேற்று நான் வெளியிட்ட, திமுக அரசின் தொழில் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தில் இடம்பெற்றுள்ள உண்மைகளை மறுப்பதாகக் கூறி தொழில்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆனால், பாவம்... பா.ம.க.வின் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவை அனைத்தையும் அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இது பாமகவின் வெற்றி. தி.மு.க. அரசின் மீது பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து முன்வைத்து வந்த குற்றச்சாட்டும், வழங்கி வந்த அறிவுறுத்தலும் என்னவென்றால், தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்றப்பட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்கள் எத்தனை? அவற்றின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் எவ்வளவு? என்பதை மூடி மறைக்காதீர்கள் என்பதும், அந்த விவரங்களை முழுமையாக வெளியிடுங்கள் என்பதும் தான். ஆனால், திமுக அரசும், அதன் முதலமைச்சராகிய டி.ஆர்.பி.ராஜா பாமக: அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன் - ராமதாஸ் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன்மூலம் 34 லட்சத்து 2998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் பச்சைப் பொய்யை கூறி வந்தனர். அவர்கள் கூறுவது பொய் என்பதால் தான் தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்தது. ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், தங்களின் பொய்மூட்டைகள் அம்பலமாகிவிடும் என்பதால் பல்வேறு காரணங்களைக் கூறி அதற்கு திமுக அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. திமுக அரசின் பொய் முதலீடுகள் இத்தகைய சூழலில் தான் திமுக அரசின் பொய் முதலீடுகளை அம்பலப்படுத்தும் நோக்குடன், திமுக அரசின் தொழில் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை சென்னையில் நேற்று நான் வெளியிட்டேன். அதில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்த உண்மை என்னவெனில், ரூ.11.32 லட்சம் கோடிக்கு திமுக அரசு கையெழுத்திட்டிருப்பது அனைத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தான்; அந்த முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்பது தான். மேலும், 2021-ஆம் ஆண்டு முதல் திமுக அரசு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கும் குறைவு; விழுக்காடு அடிப்படையில் அது 8.8% மட்டும் தான் என்பதை அந்த ஆவணத்தில் ஆண்டுவாரியான ஆதாரங்களுடன் நான் விளக்கியிருந்தேன். அன்புமணி அதன் பயனாக, நேற்று முன்நாள் வரை ரூ.11.32 லட்சம் கோடி முதலீடும் வந்து குவிந்து விட்டதைப் போலவும், அதன் காரணமாக 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதைப் போலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வந்த தொழில்துறை அமைச்சர், நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதன்முறையாக, 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 விழுக்காடும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 16 விழுக்காடும் வணிக உற்பத்தியை தொடங்கியிருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். மொத்த ஒப்பந்தங்களில் 80 விழுக்காடும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஒப்பந்தங்களில் 77 விழுக்காடும் செயலாக்கம் பெற்று விட்டதாக அவர் கட்டி வைத்த பொய்கோட்டையை இதன் மூலம் அவரே தகர்த்துள்ளார். தொழில் துறை அமைச்சர் கூறியவாறு 2021 முதல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23% முதலீடுகள் கூட முழுமையாக வரவில்லை என்பது தான் உண்மை. அதற்கு இரு சான்றுகளை மட்டும் இங்கு முன்வைக்கிறேன். அமைச்சரின் கூற்றுப்படி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்திய நிறுவனங்களில் ஹூண்டாய், வின்ஃபாஸ்ட் மகிழுந்து நிறுவனங்கள் முதன்மையானவை. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 11.05.2022-ஆம் நாள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ரூ.20 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், சுமார் ரூ.500 கோடி அளவுக்கு தான் முதலீடு செய்துள்ளது. அரசின் கணக்குப்படி அந்த ஒப்பந்தம் செயலாக்கம் பெற்று விட்டது. ஆனால், அதில் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 2.5% மட்டும் தான் வந்துள்ளது. இதை எவ்வாறு முழுமையான செயலாக்கமாக எடுத்துக் கொள்ள முடியும்? அடுத்ததாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 07.01.2024 ஆம் நாள் தமிழக அரசுடன் செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி வின்ஃபாஸ்ட் மகிழுந்து நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்யவும், அதன் மூலம் 3500 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் ஒப்புக்கொண்டது. அதன்படி வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் அதன் ஆலையை அமைத்து 04.08.2025ஆம் நாள் மகிழுந்து உற்பத்தியை தொடங்கி உள்ளது. ஆனால், அந்த நிறுவனம் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் ரூ.4000 கோடியை, அதாவது 25% மட்டுமே முதலீடு செய்துள்ளது; 400 பேருக்கு, அதாவது 11.5% மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. அன்புமணி ஐஐடியில் 28 அரசுப் பள்ளி மாணவர்கள்: திராவிட மாடல் அரசின் பொய் - என்ன சொல்கிறார் அன்புமணி? இதேபோல், செயலாக்கம் பெற்று விட்டதாக தொழில்துறை அமைச்சர் குறிப்பிடும் 23% ஒப்பந்தங்களிலும் அரைகுறையாகவே முதலீடுகள் வந்துள்ளது. செயலாக்கம் பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விழுக்காட்டைக் கூறிய அமைச்சர், அவற்றின் மூலம் கிடைத்த முதலீட்டின் மதிப்பைத் தெரிவித்தால், அது பாட்டாளி மக்கள் கட்சியால் தெரிவிக்கப்பட்ட 8.8% (ரூ.1 லட்சம் கோடி) என்ற அளவுடன் ஒத்துப் போகும். வேண்டுமானால், தொழில்துறை அமைச்சர் கூட்டிக் கழித்துப் பார்க்கட்டும்... பா.ம.க.வின் கணக்கு சரியாகவே இருக்கும். இரண்டாவதாக, புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பாக குறிப்பிட்டு வந்த தொழில் துறை அமைச்சர், இப்போது முதன்முறையாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, MoU என்பது முதலீட்டு 'உறுதிமொழிகள்' தான் (Commitments) என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்தத் தொகையும் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது. முதலீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி அடிப்படை புரிதல் இல்லாதவர்கள் மட்டுமே இத்தகைய அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் தொழில்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள், அளித்த பேட்டிகள் ஆகியவற்றையும், தொழில்துறை அமைச்சரே கடந்த காலங்களில் வெளியிட்ட அறிக்கைகளையும் அவர் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் கடந்த காலங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாளிலேயே ஒட்டுமொத்த முதலீடும் தமிழ்நாட்டு வந்து விட்டதாக கூறி வந்த அவர்கள் இருவரும் தான் அரைவேக்காட்டுதனமான அனுமானங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதும், அவர்களின் நினைப்பு தான் குழந்தைத்தனமானது என்பதும் அனைவருக்கும் உறுதியாக தெரியவரும். தொழில் முதலீடுகள்: திமுக கட்டமைத்த பொய் கோட்டைகளை தொழில் அமைச்சரே தகர்த்திருப்பது தான் பா.ம.க.வின் வெற்றி! @CMOTamilnadu pic.twitter.com/Wk7qzfgChQ — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 20, 2025 மாநிலத்தின் நலனில் அக்கறையும், நேர்மையும் இருக்க வேண்டும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிய வேண்டும்; முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உயர வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகள் வந்தால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாகத் தான் இருப்பேன். ஆனால், திமுக ஆட்சியில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான் குறைகளை சுட்டிக் காட்டுகிறேன். தொழில்துறை அமைச்சராக இருப்பவருக்கு மாநிலத்தின் நலனில் அக்கறையும், நேர்மையும் இருக்க வேண்டும். அவை இல்லாத தொழில்துறை அமைச்சரால் நிர்வகிக்கப்படும் துறையில் முதலீடுகள் வராது, மோசடிகளும், பொய்களும் தான் வரிசை கட்டி வரும். தமிழ்நாடு இப்போது இதைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திரத்திற்கும், தெலுங்கானாவுக்கு செல்வதற்கு காரணம் தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் தான். தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் தொடங்கி, நிலம் ஒதுக்குவது வரை அனைத்திலும் திமுக அரசின் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷனை தாங்கிக் கொள்ள முடியாததால் தான் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றன. இவை அனைத்தும் இன்னும் 3 மாதங்களுக்குத் தான். அதன்பிறகு அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் ஆட்சியில், தொழில்துறை தூய்மையாக்கப்படும். பிற நாடுகளும், பிற மாநிலங்களும் தொழில் முதலீடு செய்ய தேடி வரும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும். என்று அறிக்கையில் திமுக மீதான குற்றாச்சாட்டுகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

விகடன் 20 Nov 2025 5:04 pm

'10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டைக்கட்டை போடுவதாக மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “பாஜக ஆளும் மாநிலங்களில் திட்ட அறிக்கைக்கு 5 மாதங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி ஆனால், தமிழகத்திற்கு மட்டும் அற்பமான காரணங்களை கூறி நிராகரித்துள்ளனர். விளக்கங்கள் கேட்டிருந்தால் தமிழக அரசு பதிலளித்திருக்கும். கோவை மக்களை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணியை தான் மக்கள் வெற்றி பெற வைத்தனர். அப்படிப்பட்ட மக்களுக்கு கூட மெட்ரோ திட்டத்தை கொடுக்க மோடி அரசுக்கு மனமில்லை. விரிவான திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால் அதை கேட்க 15 மாதங்கள் அவகாசம் தேவையில்லை. செந்தில் பாலாஜி பாஜக அரசு மூன்றாவது முறையாக அமைந்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்கள் என்ன. மெட்ரோ ரயில் திட்டம் நமக்குத் தேவை. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதிமுக நீட் தேர்வு  மசோதாவை வருட கணக்கில் மறைத்தார்கள். அப்படி நாங்கள் எதையும் மறைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அவர்கள் ஏன் எடுக்கவில்லை. 15 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் இந்த காரணத்தை கண்டறிந்து நிராகரித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவார். இங்கு மெட்ரோ ரயில் வந்தே தீரும். திமுக போராட்டம் இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கான விரிவான அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்கிற குறுகிய மனநிலை தான் காரணம். இதனால்தான் நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் கணக்கு ஜீரோவாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலிலும் அதே கணக்கு தொடரும்.” என்றார்.

விகடன் 20 Nov 2025 4:43 pm

'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் சுமார் 257 சதுர கிமீ தூரம் வரவுள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தவறான தரவுகளை வைத்து விண்ணப்பித்துள்ளனர். பிரதமர் மோடி நமக்கு எதிராக உள்ளார் என்ற பரப்புரை செய்வதே இவர்கள் நோக்கமாகும். வானதி சீனிவாசன் மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கு சில வரையறைகள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளாமல் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தெளிவான விளக்கங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிடவில்லை. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பட்டுள்ளதாக பொய் பரப்புரை செய்கிறார்கள். திமுக அரைகுறை செய்தியை மக்களிடம் பரப்புவதில் கைதேர்ந்தவர்கள். டெல்லியில் இருந்து வந்த அறிக்கையை அரைகுறையாக எடுத்துள்ளார்கள். சுற்றுலா மற்றும் தலைநகர் என்ற அடிப்படையில் சில மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மெட்ரோ மெட்ரோ வேண்டும் என்பதற்காக அடிப்படை ஆய்வுகள் செய்யவில்லை. திமுக போராட்டம் செய்து நாடகமாடுகிறது. 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று,  எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவோம். அறிக்கையில் கடைசி இரண்டு பக்கங்களை மட்டும் வெளியிட்டும் ஐயய்யோ என்று பேசுகிறார்கள். கோவையில் முக்கிய வணிக கட்டிடங்களை இடிக்கும் நோக்கில் மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஒழுங்காக ஹோம் வொர்க் செய்யாமல் சமர்ப்பித்தது தான் பிரச்னை. கோவையில் திமுகவுக்கு 10 தொகுதிகளிலும் தோல்வியை தந்த மக்களை பழி வாங்கும் நோக்கில் திட்டம் வரக்கூடாது என்பதற்காக இப்படி செய்துள்ளனர்.  எடப்பாடி பழனிசாமி ஜெயிலில் இருந்தவரை அமைச்சராக்கியது தான் திமுக செய்த சாதனை. 40 எம்பிக்களை வைத்து ஏன் திட்டத்தை கொண்டு வர முடியவில்லை. நாங்கள் கோவைக்கு உறுதியாக மெட்ரோ ரயில் கொண்டு வருவோம்.” என்றார்.

விகடன் 20 Nov 2025 4:21 pm

'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்த சிலர். இந்த முடிவின் பின்னணி என்ன? 2024 பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கினார் விஜய். அப்போது ஆரத்தழுவி வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து விஜய்யின் நடவடிக்கைகளை வரவேற்று பேசிவந்தார். 2024 அக்டோபரில் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாட்டில் `நா.த.க-வை நட்பு சக்தியாக விஜய் முன்நிறுத்துவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய். சீமான், விஜய் 2024 நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் இதற்கு எதிர்வினையாற்றிய சீமான், திராவிடம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு. தமிழர்களுக்குத் திராவிடம் அயலமை. இரண்டும் ஒன்று எனக் கூறுவது அடிப்படை தவறு. இது கொள்கை அல்ல… கூமுட்டை. அழுகிய கூமுட்டை. இது நடுநிலை அல்ல… கொடுநிலை. கொடும் சிறையிலிருந்து ரத்தம் சிந்தி வந்தவன் நான். சத்தமா பேசுகிறேனா? ஆமாம், சரக்கு இருக்கு, கருத்து இருக்கு. அதனால்தான் சத்தமா பேசுறேன்” என விளாசினார். இதிலிருந்து தொடங்கிய நா.த.க – த.வெ.க வார்த்தை போர், கரூர் சம்பவத்தின்போது உச்சத்தைத் தொட்டது. ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்? நம்மிடம் பேசிய நா.த.க கொள்கை பரப்புச் செயலாளர்கள் “நா.த.க-வின் இளைஞர் வாக்குகளையும், அ.தி.மு.க-வின் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளையும் குறிவைத்தே வியூகம் அமைத்தார் ஜான் ஆரோக்கியசாமி. ஆகையால் விஜய்யை இளைஞர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கடுமையாக விமர்சித்தோம். அதில் நாங்கள் வெற்றிப் பெற்றதாகவும் நினைக்கிறேன். களச் செயல்பாடுகள் இன்றி கரூர் விவகாரத்துக்கு பின் தவெக பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணிகள்மீது கவனத்தை திருப்பி அவர்களை டார்கெட் செய்வதே நம் வேலை என சீமான் முடிவு செய்துள்ளார்.” என்றனர். கரூர், விஜய் சீமான் இந்த முடிவை எடுக்க சில சம்பவங்களும் இருக்கின்றன எனப் பேசத் தொடங்கினார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள் சிலர், சென்னையில் முத்துராமலிங்க தேவர் நினைவு பொதுக்கூட்டமும், திருவாரூரில் நடந்த தண்ணீர் மாநாட்டு பொதுக்கூட்டத்திலும் சீமான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அதே நேரத்தில் விஜய்மீதும் லேசான விமர்சனங்களை வைத்தார். ஆனால் கூட்டத்தின் நோக்கத்தை விட ‘விஜயை சாடிய சீமான்’ எனும் பகுதி மட்டும் வைரலாக்கப்பட்டது, அதனை அண்ணன் சீமான் விரும்பவில்லை. களச் செயல்பாடுகளற்ற கட்சியை தொடர்ந்து பேசிக் கொண்டே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டாம்; தி.மு.க பாணியில் ‘கில்லிங் இன் சைலன்ஸ்’ வியூகத்திலேயே எதிர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.” என்றனர். சீமான், ரஜினி இதன்பின்னே சில அரசியல் கணக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் ஒருசிலர் விஜயின் அரசியலை அம்பலப்படுத்தினால் அவரது அபிமானிகள் நா.த.க-வுக்கு திரும்புவார்கள் என்பது நா.த.க-வின் கணக்கு. ஆனால் கடுமையான விமர்சனங்களும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளின் மோசமான குற்றச்சாட்டுகளும் விஜய் ரசிகர்களைத் கொதிப்படைய செய்துவிட்டன. ஒருவேளை விஜய் அரசியலை விட்டே போனாலும், ‘சீமானுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்ற மனநிலைக்கு விஜய் ரசிகர்கள் வந்துவிட்டனர் என்பதை நா.த.கவினர் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். இதை சரிகட்டவே விஜய் விமர்சனத்தை குறைக்க சீமான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது கடுமையாக விமர்சித்த சீமான், ரஜினி ‘கட்சி தொடங்கவில்லை’ என அறிவித்தபின், ‘அரசியல் ரீதியாக வைத்த விமர்சனங்கள் ரஜினியையோ அவரது ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறினார். அதேபாணியில் விஜய் ரசிகர்களை கையாளும் வியூகமாகக்கூட இருக்கலாம்.” என்றனர் ‘ஆவேச’ சீமான்... ‘இக்னோர்’ விஜய்... முடிவுக்கு வந்த அண்ணன்-தம்பி உறவு!

விகடன் 20 Nov 2025 3:17 pm

பீகார்: 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் - இரு துணை முதல்வர்கள் பதவியேற்பு

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. இதையடுத்து நேற்று பாட்னாவில் கூடிய பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டமன்ற தலைவராக நிதீஷ் குமாரை தேர்ந்தெடுத்தனர். இன்று பாட்னா காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடந்தது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நிதீஷ் குமாருக்கு மாநில ஆளுநர் ஆரிப் மொகமத் கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பா.ஜ.கவின் சாம்ராட் செளதரி, விஜய் குமார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல்வரையும் சேர்த்து மொத்தம் 20 பேர் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். நிதீஷ் குமார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் சட்டமேலவை உறுப்பினராக இருக்கிறார். அவர் தற்போது 10வது முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். விழாவை காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அணிவிக்கப்பட்ட சால்வையை எடுத்து அதனை கொடி அசைப்பது போன்று அசைத்தார். கூட்டத்தினரும் தங்களிடம் இருந்த கொடியை அதே போன்று காட்டினர். அமைச்சரவையில் லோக் ஜன்சக்தி கட்சி, ராஷ்ட்ரீய லோக் மஞ்ச், மதசார்பற்ற அவாமி மோர்ச்சா கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி கிடைத்து இருக்கிறது. தற்போது சிக்கிம் தலைவர் பவன் தான் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற பெயருடன் இருக்கிறார். நிதீஷ் குமார் 5 ஆண்டுகள் முதல்வராக இருநதுவிட்டால் நாட்டில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெயர் நிதீஷ் குமாருக்கு கிடைக்கும்.

விகடன் 20 Nov 2025 2:46 pm

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார்.

தி ஹிந்து 20 Nov 2025 1:43 pm

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார்.

தி ஹிந்து 20 Nov 2025 1:32 pm

ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு ஆதரவாகவும் திமுக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசையும் சென்னை மாநகராட்சி ஆணையரையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதிமுக ஆர்ப்பாட்டம் ஜெயக்குமார் பேசியதாவது, ``2002 இல் பாஜக ஆட்சியில் திமுக அவர்களோடு கூட்டணியில் இருந்தது. அப்போதும் தீவிர திருத்தத்தை நடத்தியிருந்தார்கள். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்குள்ளவர்கள் என 49 லட்சம் பேரை பட்டியலிலிருந்து நீக்கினார்கள். அப்போதெல்லாம் ஸ்டாலின் அமைதியாகத்தான் இருந்தார். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த தீவிர திருத்தத்தை செய்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதை செய்ய தவறிவிட்டது. அதிமுக சார்பில் நாங்களும் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து ஓய்ந்துவிட்டோம். இறந்தவர்கள், விலாசம் மாறியவர்களின் பட்டியலை திமுக வைத்திருக்கிறது. அதிமுக ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு இறந்தவர்கள்தான் கைகொடுக்கின்றனர். திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதில் மேதமை வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களுக்கு SIR என்றால் கசக்கிறது. ஒரு பக்கம் SIR யை எதிர்ப்பது போல எதிர்த்துக் கொண்டு, இன்னொரு பக்கம் B.L.O க்களுடன் கட்சி ஆட்களை அனுப்பி வைக்கிறார் ஸ்டாலின். திருத்தத்தை எதிர்க்கும் நீங்கள் அதை புறக்கணிக்க வேண்டியதுதானே. சென்னை மாநகராட்சி ஆணையர் திமுக மாவட்டச் செயலாளரை போல செயல்படுகிறார். அலைபேசியில் தொடர்புகொண்டால் கூட எடுப்பதில்லை. எழுத படிக்கத் தெரியாதவர்களை B.L.O க்களாக நியமித்து தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைத்து வருகிறார். அதிகாரிகள் நியாயமாக செயல்பட வேண்டும். இல்லையேல் இன்னும் 4 அமாவாசைதான். ஆட்சி மாறியவுடன் உங்களுக்கான தண்டணை கிடைக்கும்.' என்றார். SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' - திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!

விகடன் 20 Nov 2025 1:00 pm

கழுகார் : டெல்லி அசைன்மென்ட்; கன்ஃபியூஸ் ஆன நயினார் டு டெல்லி வழி சிபாரிசு; கடம்பூர் ராஜூ டென்ஷன்!

டென்ஷனாகும் கடம்பூர் ராஜூ! டெல்லி வழியாக சிபாரிசு... 2026 சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து சந்திக்க ஏற்பாடாகிவருகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு குறித்து இரு தரப்புக்குமிடையே இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ஆனால், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கான தொகுதிகளில் வேலைகளைத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றிபெற்ற கோவில்பட்டி தொகுதியை அவருக்குக்கென ஒதுக்கிவிட்டது அ.தி.மு.க மேலிடம். அவரும் தொகுதிக்குள் வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆனாலும், 'அந்தத் தொகுதி எனக்கு வேண்டும். நீங்கள்தான் சிபாரிசு செய்து பெற்றுத்தர வேண்டும்' என்று ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணிடம் சிபாரிசு கேட்டிருக்கிறாராம், பா.ஜ.க-வில் சமீபத்தில் இணைந்திருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இது கடம்பூர் ராஜூவை ஏகத்துக்கும் டென்ஷனாக்கியிருக்கிறதாம். கடம்பூர் ராஜூ அதேபோல, தி.நகர் தொகுதி சத்யாவுக்குத்தான் என்பது அ.தி.மு.க-வில் ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஆனாலும், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ரூட்டில், அந்தத் தொகுதியைக் கேட்கிறாராம் பா.ஜ.க-வின் வினோஜ் பி.செல்வம். இப்படி, ஆளாளுக்கு சிபாரிசுப் பத்திரங்களுடன் படையெடுக்க ஆரம்பித்திருப்பதால், அ.தி.மு.க-வுக்குள் அனல் பறக்கிறது! முறுக்கி நிற்கும் சேனாபதி! இறங்கி வந்த சாமிநாதன்... தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்ட பிறகு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் மு.பெ.சாமிநாதனோ, வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியத்தின் தலைவரான கார்த்திகேய சிவசேனாபதியின் வீட்டுக்கே சென்று சந்தித்திருக்கிறார். 'உங்கள் இருவருக்கும் இடையே நடந்துவரும் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்' என்று தலைமை அறிவுறுத்தியதன் பேரில்தான் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இறங்கி வந்து, சேனாபதி வீட்டுக்குச் சென்றிருக்கிறாராம். ஆனால், 'காங்கேயம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு அமைச்சருக்குக் காரியம் ஆக வேண்டியிருக்கிறது. மு.பெ.சாமிநாதன் அதனால்தான் இறங்கி வருகிறார்...' என்று அவரின் ஆதரவாளர்கள் திரித்துவிடுகிறார்கள். அதை உண்மையென நம்பி, சேனாபதியும் சமாதானம் ஆகாமல் முறுக்கிக்கொண்டு நிற்கிறார் என்கிறார்கள் சாமிநாதனின் ஆதரவாளர்கள்! கன்ஃபியூஸ் ஆன நயினார்! டெல்லி கொடுத்த அசைன்மென்ட்... சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில், வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்திருக்கிறது. அதில் பங்கேற்ற நயினாருக்கு, பீகார் மாநிலத் தேர்தலில் பா.ஜ.க கையாண்ட வியூகங்கள் குறித்து கிளாஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, தி.மு.க- வின் வாக்குவங்கியை உடைப்பதற்கான வியூகங்களை அமைத்து, அதைச் செயல்படுத்த நயினாருக்குச் சில அசைன்மென்ட்டுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். மீட்டிங்கில் எல்லாவற்றுக்கும் `ஓ.கே.., ஓ.கே...’ என்று நயினார் தலையாட்டினாலும், உண்மையில் அவருக்கு எதுவுமே புரியவில்லையாம். மீட்டிங்கில் பங்கேற்ற முக்கியமான சிலரைத் தொடர்புகொண்டு பேசப்பட்ட விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார். எவ்வளவு முக்கியமான விஷயம் பேசப்பட்டிருக்கிறது... இப்படி கன்ஃபியூஸ் ஆகி நிற்கிறாரே..? என்று நொந்துகொள்கிறார்கள் அவருக்கு விவரம் சொன்ன புள்ளிகள்! புலம்பலில் கடன் கொடுத்தவர்கள்! வீதிக்கு வந்த அப்பா - மகன் மோதல்... தலைநகரின் 'விரு'விறுப்பான தொகுதியில், வணிகப்புள்ளியின் வாரிசுதான் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தேர்தல் சமயத்தில் வாங்கிய கடன், இடையிடையே வாங்கிய கடன் என்று எதையுமே திருப்பிக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துவருகிறாராம் எம்.எல்.ஏ. அதனால் கடன் கொடுத்தவர்கள், செழிப்பான வணிகப்புள்ளியைச் சந்தித்து விவரத்தைச் சொல்லியிருக்கிறார்கள். 'எனக்கும் என் மகனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவனை நம்பி நீங்க ஏன் பணம் கொடுத்தீங்க...' என வந்தவர்களையும் மகனையும் வசைபாடியதோடு, 'அவன் வாங்கிய கடனைக் கேட்டு இனிமே என்னிடம் வராதீர்கள்' என்றும் சூடானாராம். விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்.எல்.ஏ., 'பணத்தைக் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க... அதை விட்டுட்டு என்னை வசைபாடும் வேலையெல்லாம் வேண்டாம்' என்று வணிகப்புள்ளியைத் திட்டித் தீர்த்திருக்கிறார். மிஸ்டர் கழுகு: “வந்தா கூப்பிட்டுக்கோங்க...” - எடப்பாடி கிரீன் சிக்னல்! 'அப்பாவை நம்பித்தானே மகனுக்குப் பணம் கொடுத்தோம். திடீர்னு இவங்க பிரிஞ்சா நாம என்ன பண்றது... திருப்பிக் கேட்டா இப்படி அடிச்சுக்கிறாங்களே... கொடுத்த பணத்தை எப்படி வாங்கப்போறோம்னே தெரியலையே...' என்று புலம்புகிறார்கள் பணத்தைக் கொடுத்தவர்கள்! ஜெட் வேகத்தில் நடக்கும் விகித விவகாரங்கள்! தொடங்கியது டெண்டர் மேளா... 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அதற்குள் முக்கியமான டெண்டர்களையெல்லாம் முடித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிவருகிறார்களாம் அமைச்சர்கள். அந்த வகையில், ஊரக உள்ளாட்சி, நகராட்சி, வீட்டு வசதி வாரியம், உணவு பாதுகாப்புத்துறை போன்ற முக்கியமான துறைகளில் 'டெண்டர் மேளா'வை அன்-அஃபீஷியலாக அறிவித்திருக்கிறார்களாம் அதிகாரிகள். அதாவது, ஒரு டெண்டரில் 'பேசவேண்டிய விகித விவகாரங்களை' பேசி இறுதி செய்வதற்கு, குறைந்தது மூன்று மாதங்கள் ஆகிவிடும். ஆனால், இப்போது அந்த அளவுக்கு நேரமில்லை என்பதால், நிறுவனங்கள் சொல்லும் 'விகிதங்களுக்கு' ஓ.கே சொல்லி, டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுவருகின்றனவாம். அந்த வகையில், நவம்பர் மாதத்தில் மட்டும் ஒவ்வொரு துறையிலும் சுமார் 20 பெரிய டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டிருக்கின்றனவாம்! `ஒரு மாநிலத்துக்கு இரு அதிகார அமைப்புகளை ஏற்க முடியாது’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

விகடன் 20 Nov 2025 12:41 pm

தி ஹிந்து 20 Nov 2025 12:31 pm

மெட்ரோ விவகாரம்: `பெருந்தன்மையான ஒப்புதலை மதிக்காமல்.!' - மனோகர் லால் கட்டார் விளக்கம்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் NO METRO என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தன் எக்ஸ் பக்கத்தில், ``மெட்ரோ ரயில் அமைப்பு போன்ற விலையுயர்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள், பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மையை கொடுக்க வேண்டும் என்ற மெட்ரோ கொள்கை 2017-ஐ பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டவை. மனோகர் லால் கட்டார் மெட்ரோ அமைப்பு அந்தக் கொள்கையை பயன்படுத்துவதை தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து, சர்ச்சையை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது. 2024 அக்டோபர் 3 அன்று மத்திய அரசால் சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டமாக 119 கி.மீ. நீளத்திற்கு ரூ. 63,246 கோடி வழங்கியது. மத்திய அரசின் இந்தப் பெருந்தன்மையான ஒப்புதலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அரசியல் செய்கிறார். கோயம்புத்தூர் மற்றும் மதுரை திட்டங்களில் பின்வரும் முரண்பாடுகள் உள்ளன: கோயம்புத்தூரில் உள்ள பாதையின் நீளம், சென்னை மெட்ரோ அமைப்பின் பாதையின் நீளத்தை விடக் குறைவாக இருந்தும், சென்னையை விட அதிகமான போக்குவரத்துத் திட்ட மதிப்பீடுகள் (traffic projections) வழங்கப்பட்டுள்ளன. இது முதல் பார்வையிலேயே தவறாகத் தெரிகிறது. திட்டமிடப்பட்ட சராசரி பயண தூரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கும் மெட்ரோவுக்கும் இடையேயான வேக வேறுபாடுகள் (speed differentials) ஆகியவை, போக்குவரத்து முறை மெட்ரோவுக்கு மாறுவதைத் தாங்குவதாக இல்லை. மெட்ரோ ரயில் நிலையம் 3. கோயம்புத்தூர் விரிவான திட்ட அறிக்கையின்படி (DPR), 7 மெட்ரோ ரயில் நிலைய இடங்களில் போதுமான நிலவசதி (right of way) இல்லை. மதுரைக்கான விரிவான போக்குவரத்துத் திட்ட ஆவணம் (Comprehensive Mobility Plan) தற்போதைய பயணிகள் எண்ணிக்கையின்படி பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) மட்டுமே பொருத்தமானது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. கோயம்புத்தூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 2011-ல் 15.85 லட்சம். அதே சமயம் 2011 கணக்கெடுப்பின்படி உள்ளூர் திட்டமிடல் பகுதி மக்கள் தொகை 7.7 லட்சம். போக்குவரத்து மாற்றத்திற்கான பயணிகள் எண்ணிக்கை மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ அமைப்புக்கு எவ்வளவு பெரிய போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பதற்கான நியாயமான விளக்கம் தேவை. மேலும், பல்வேறு நகரங்களுக்கு 10,000 குளிர்சாதன வசதி கொண்ட இ-பேருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் PM e-bus Sewa திட்டத்தின் பலனைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்த மறுத்துவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், பேருந்துகளுக்கு மத்திய நிதி உதவி, டிப்போ உள்கட்டமைப்பு மற்றும் 'பிஹைண்ட் தி மீட்டர்' வசதிகளுக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி? - எதிர்க்கட்சிகள்

விகடன் 20 Nov 2025 12:13 pm

`ஒரு மாநிலத்துக்கு இரு அதிகார அமைப்புகளை ஏற்க முடியாது’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 தேதி, ``தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம். ஸ்டாலின் - ஆளுநர் ரவி அந்த 10 மசோதாக்களும் உடனடியாகச் சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” எனக் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மே 13-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்ந்து 10 நாள் விசாரிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் உள்ளிட்டோரும், மத்திய அரசு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்றம் இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்தனை. அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் கீழே.. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: 1. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது. 2. மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதற்கான காரணங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். 3. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு கால வரம்பை நிர்ணயித்திருந்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. 4. ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடலாம். 5. இருப்பினும் ஆளுநருக்கு நீதிமன்றங்களால் எந்த உத்தரவையும் போட முடியாது. மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என கேட்டுக் கொள்ளத்தான் முடியும். 6. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது.

விகடன் 20 Nov 2025 11:56 am

கோவை: விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து தற்போது பதிவிட்டிருக்கிறார். மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. பிரதமர் மோடி கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? ``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று! - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? மு.க ஸ்டாலின் உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

விகடன் 20 Nov 2025 11:32 am

கோவை: விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசைக் கண்டித்து தற்போது பதிவிட்டிருக்கிறார். மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. பிரதமர் மோடி கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? ``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று! - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? மு.க ஸ்டாலின் உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகை; வேளாண் மாநாட்டில் பங்கேற்பு, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

விகடன் 20 Nov 2025 11:32 am

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார்.

தி ஹிந்து 20 Nov 2025 11:32 am