SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

Vijay Hazare Trophy: வரலாற்று சாதனை படைத்த பீகார் அணி; மாஸ் காட்டிய சூர்யவன்ஷி

விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்கியது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடரில் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றிருகின்றனர். விஜய் ஹசாரே இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பீகார் - அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் பீகார் அணியில் களமிறங்கிய அனைவரும் தொடர்ச்சியாக அதிரடி காட்டியதால் அந்த அணி 50 ஓவர்களில் 574 ரன்களை குவித்து வரலாற்று சாதனையை படைத்தது. குறிப்பாக சூர்யவன்ஷி 84 பந்துகளில் 16 பவுண்டரி, 15 சிக்ஸர் உட்பட 190 ரன்களை குவித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார். இளம் வீரர் சூர்யவன்ஷியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை பீகார் அணி பெற்றிருக்கிறது. சூர்யவன்ஷி இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ரன்களை குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையைப் படைத்திருந்தது. இன்று அந்த சாதனையை பீகார் அணி முறியடித்திருக்கிறது.

விகடன் 24 Dec 2025 3:26 pm

நான் புல்லட் புரூஃப் கார் வச்சிருக்கேன், ஏன்னா..!- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தன்னிடம் புல்லட் புரூஃப் கார் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கிரிட்கெட்டில் முன்னணி வீரர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான். ரஷீத் கான் தனது சொந்த நாட்டு அணிக்காக மட்டுமல்லாது பிற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களிலும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார். குறிப்பாக, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் இதுவரை 136 போட்டிகளில் ஆடி, 158 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை நேர்காணல் எடுத்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய ரஷீத் கான், என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது. அதனால் புல்லட் புரூஃப் கார் வைத்திருக்கிறேன். பாதுகாப்பிற்காகத்தான் அந்தக் காரை வைத்திருக்கிறேன். ரஷீத் கான் - கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தானில் பெரும்பாலனோரிடம் புல்லட் புரூஃப் கார் இருக்கும். இது அங்கு சகஜம்தான் என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விகடன் 23 Dec 2025 3:35 pm

Rohit: கிரிக்கெட்டையே விடலாம்னு நினைச்சேன், ஏன்னா...- 2023 உலகக்கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா ஹரியானா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரோஹித் 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்துப் பகிர்ந்திருக்கிறார். 2023 உலக கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு, நான் மனதளவில் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். ரோஹித் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு எதுவும் இல்லாமல் விட்டுச் சென்ற கிரிக்கெட்டையே விட்டு விடலாம் என்று எண்ணினேன். சிறிது நேரம் தேவைப்பட்டது. நான் மிகவும் நேசித்தது என் கண்முன்னே இருந்த கிரிக்கெட் மட்டும்தான். அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க முடியவில்லை. மெதுவாக என்னைத் தேற்றிக் கொண்டு, வலுப்பெற்று மீண்டும் மைதானத்திற்குத் திரும்பினேன். எல்லாருக்கும் அந்தத் தோல்வி பெரும் ஏமாற்றமாக இருந்தது. எனக்கும் அது மிக கடினமான காலமாகத்தான் இருந்தது. ஏனென்றால் ஓரிரு மாதங்கள் இல்லை, நான் 2022ல் கேப்டன் ஆனதிலிருந்தே என் முழு உழைப்பை அந்த உலக கோப்பைக்காகத்தான் கொடுத்தேன். ஒரு விஷயத்திற்காக நான் அதிக உழைப்பைக் கொடுத்து நாம் எதிர்பார்க்காத தோல்வியைச் சந்திக்கும்போது அது கடினமாகத்தான் இருக்கும். ரோஹித் ஷர்மா இதுபோன்ற விஷயங்கள் எனக்கும் நடந்தது. ஆனால் இதன் மூலமாகத் தான் வாழ்க்கை இதோடு மட்டும் நின்றுவிடாது என்று உணர்ந்தேன். ஏமாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொண்டேன் என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 22 Dec 2025 3:51 pm

Messi: `அதை மெஸ்ஸி விரும்பவில்லை'- இந்தியா வருகைக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி ஊதியம்; வெளியான தகவல்கள்

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவரைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பலரும் அவர் வருகை தந்திருந்த ஸ்டேடியத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து டிக்கெட் குளறுபடி உள்ளிட்ட பல குழப்பங்கள் அங்கு எழுந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான சதாத்ரு தத்தாவை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்தனர். Lionel Messi கைதுக்குப் பிறகான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இந்த நிகழ்வின் பல விவரங்களும் வெளிவந்திருக்கின்றன. இந்திய வருகைக்காக மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது எனவும் சதாத்ரு தத்தா கூறியிருக்கிறார். இதில் 11 கோடி ரூபாயை வரியாக இந்திய அரசுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். இதற்கான 30 சதவிகிதப் பணத்தை ஸ்பான்சர்களிடமிருந்து அவர்கள் பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ள பணத்தை டிக்கெட் விற்பனை மூலமாகப் பெற்றிருக்கிறார்கள். மெஸ்ஸியைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் மைதானத்தில் மெஸ்ஸியைச் சுற்றி அதிகமானோர் கூடிவிட்டதால், கேலரியிலிருந்து அவரைப் பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து ஸ்டேடியத்தின் சில பகுதிகளை சேதப்படுத்தியிருக்கிறார்கள். ஆனந்த் அம்பானி - மெஸ்ஸி விசாரணை அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பாளர் சதாத்ரு தத்தா கூறுகையில், முதலில், மெஸ்ஸி பங்கேற்கும் நிகழ்வுக்கு வெறும் 150 டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. ஆனால் செல்வாக்கு மிகுந்த ஒருவர் ஸ்டேடியத்திற்கு வந்து ஆதிக்கம் செலுத்தியப் பிறகு மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்தது. அந்த செல்வாக்கு மிகுந்த நபரையும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே சமயம் ரசிகர்கள் தன்னை தொடுவதையும் மெஸ்ஸி விரும்பவில்லை.” எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 21 Dec 2025 5:56 pm