கிருஷ்ண ஜெயந்தி: ஆளுநர் வாழ்த்து
அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்திய நாட்டை ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுகின்ற பணியில் நம் நாடு அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப் பொற்காலத்தில், அறவாழ்விற்கான ஒரு வழியாக, முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
’இணைந்து செயல்பட வாய்ப்பில்லை; ஓபிஎஸ் அழைப்பை ஏற்க முடியாது’ - இபிஎஸ் திட்டவட்டம்
ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சிறந்த ஆலோசகர்களால் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: அமைச்சர் பிடிஆர் பேச்சு
நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் முதல் ஆளாக ஏற்போம் எனவும், சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை; பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி: வைகோ கண்டனம்
குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளதன்மூலம் பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை வங்கிக் கொள்ளை | அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
வங்கி கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேட்பாரற்று இருக்கும் தேசியக் கொடிகள்: கண்ணியமாக இறக்க நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?
75வது சுதந்திர தின நிறைவு தினத்தை முன்னிட்டு வீடுகள், கடைகள், தெருக்களில் ஏற்ப்பட்ட தேசியக் கொடிகள் தற்போது கேட்பாரற்று உள்ளது. இந்தக் கொடிகளை கண்ணியத்துடன் இறக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
“ஓபிஎஸ் கருத்தை சுயநலமற்றவர்கள் வரவேற்பர்” - டிடிவி தினகரன்
“ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | ''துணிவுடன் மேடையில் பேசும் ஆற்றல் மிக்கவர்'' - கி.வீரமணி
நெல்லை கண்ணன் மறைவினால் தமிழகம் ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | ”ஆழமான கருத்துகளை கூட நகைச்சுவையோடு பேசக் கூடியவர்” - கே.எஸ்.அழகிரி
தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்
'தேசப்பற்று பெயரில் மக்களை திசைதிருப்பிவிட்டு பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை' - சீமான்
தேசிய கொடி, தேசப்பற்று என்று அனைவரையும் திசை திருப்பிவிட்டு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினியவர் - முதல்வர் ஸ்டாலின்
நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'நடப்பவை அனைத்தும் நன்மைக்கே' - கீதா உபதேசத்தைக் குறிப்பிட்டு இபிஎஸ் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று கீதையில் கண்ணனின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர் நெல்லை கண்ணனின் தமிழ்ப் பணியும், சமூக பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
வரத்து அதிகம் விலை குறைவு – கொழி சாளை மீன்களை வாங்கிச் சென்ற கேரள வியாபாரிகள்
குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களில் மலை போல் குவிந்த 'கொழி சாளை' மீன்கள் 1 கிலோ கொழி சாளை மீன் ரூ 20-க்கு விலை போன நிலையில் மீன்களை கேரளா வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்இந்நிலையில், சுமார் 7-நாட்கள் முதல் 15-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் இரண்டு மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த வாரம் முதல் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனர் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் 'கொழி சாளை' மீன்கள் பிடிப்பட்டிருந்தனஇந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலை போல் குவித்து வைத்திருந்த நிலையில், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இந்த மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் ஆர்வம் காட்டி குவிந்தனர்ஒரு கிலோ கொழி சாளை மீன் சாதாரணமாக 50-ரூ முதல் 60-ரூ வரை விலை போன நிலையில் இன்று ரூ 20-க்கு விலை போனது.
தேனி: அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய கிராம மக்கள்
தேனி வாழையாத்துபட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்விச்சீரை கிராம மக்கள் வழங்கினர்.தேனி அருகே உள்ள பூதிபுரம் பேரூராட்சி வாழையாத்துபட்டி கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக அந்த பகுதியைச் சேர்ந்த பூதிப்புரம் பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பாக அப்பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கப்பட்டது.இந்த கல்விச் சீரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான டிவி, நாற்காலி, டேபிள், பீரோ உள்ளிட்ட பள்ளிக்குத் தேவை பெருட்களை வழங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். அரசு ஆரம்ப பள்ளியாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியை அரசு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு வரும் திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை!
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடியைச் சேர்ந்த சிறுமிக்கு திங்கள்கிழமை (ஆக.22) அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரைவயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியிருந்திருக்கிறது. சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது.இதனால் சிறுமிக்கு பள்ளியில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி குடும்பமே பல பிரச்னைகளை சந்தித்துள்ளது.ஒன்பது வயது சிறுமி இப்படியொரு உளவியல் தாக்குதலையும், மனநெருக்கடியையும் சந்தித்திருந்த நிலையில் அவர் தனது படிப்பையே தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்றைய தினம் உதவி கோரியிருந்தார்.அவர் உதவிய கோரியது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தியாக வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவக் குழுவினருடன் நேரில் சென்று டான்யாவின் குடும்பத்தை சந்தித்தார். தொடர்ந்து, சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் வைத்து உயரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து சிறுமிடான்யாவுக்கான முழு சிகிச்சையையும் கட்டணமின்றி செய்வதற்கு தண்டலத்தில் உள்ள மருத்துவமனை உத்தரவாதம் அளித்துள்ளது. இதையடுத்து சிறுமி டான்யா இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விரைந்து அவர் குணமாவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வரும் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. மேலும் திமுக சார்பில் கட்சியின் நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் சிறுமியின் குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம் - இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு
அதிமுக தலைமை கழக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஜூலை 11ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே வன்முறை ஏற்பட்ட நிலையில், கட்சி அலுவலகம் வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான உத்தரவை வழங்கி இருப்பதாகவும் ஆதலால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து முடிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவுன் தான் அதிமுக தலைமை அலுவல்கத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.ஆனால், வழக்கை தீர விசாரித்ததற்குப் பிறகு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் என கூறிய தலைமை நீதிபதி இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு வழக்கின் எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிப்பதாகக் கூறி வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
வற்றிப்போனது `தமிழ்க்கடல்’: உடல்நலக்குறைவால் காலமானார் நெல்லை கண்ணன்
தமிழறிஞர், `தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.77 வயதாகும் அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட சில உடல்நல சிக்கல்களால் கடந்த சில தினங்களாக பேசவே முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். மிகச் சிறந்த தமிழ் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லைக் கண்ணன், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த அயராது பணியாற்றியவர். தனது பேச்சாற்றலுக்காகவும், தமிழ் மீதான பற்றுக்காகவும் வாழும் நாள்களிலேயே அறிஞர்கள் பலரால் அவர் தமிழ்க்கடல் என்று போற்றப்பட்டவர்.நெல்லை கண்ணன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து `புதிய தலைமுறை’க்கு தெரிவித்த இரங்கல் செய்தியில், “சங்க இலக்கியம் முதல் எங்கள் இலக்கியம் வரை எல்லா இலக்கியங்களையும் நெஞ்சில் எழுதி தனது நா வன்மையால் சமகால சமூகத்துக்கு தமிழ் உணர்வை ஊட்டிக்கொண்டே இருந்தவர் அவர். நம் சம காலத்தின் பெரிய தமிழ்க்கடல், வற்றிவிட்டதென்றே இதை நினைக்கிறேன். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் கூட, அவருடைய மொழியை - அவருடைய உரையை- அவருடைய சொல் வன்மையை மறுத்ததோ வெறுத்ததோ இல்லை. அவரது இழப்பை தமிழ்ச்சமூகம் எப்படி ஈடு செய்யப்போகிறது என்று தெரியவில்லை. அவருடைய மொழியும் தமிழும் புகழும் எப்போதும் வாழும். நெல்லை கண்ணனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பின்தொடர்வோருக்கும் என் இரங்கல்கள்”என்றார்.குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லைக் கண்ணன். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றியிற்றியவர்.
'அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம், நாம் வேடிக்கை பார்ப்போம்' - சீமான்
அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம். அதனை நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சினருக்கும், ம.தி.மு.க-வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அவரது ஆதரவாளர்கள், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார்கள்.அந்த வழக்கில் சீமான் உள்ளிட்டோர் மீண்டும் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே போல அந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் தங்களை தாக்கியதாக ம.தி.மு.க-வினர் கொடுத்த வழக்கில் வரும் 25 ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டதுதான். காங்கிரஸ் கதர் ஆடை கட்டிய பாஜக. அதே போல பாஜக காவி ஆடை கட்டிய காங்கிரஸ்.சுதந்திர கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். அவரையும், சாகும் வரை தங்களுக்கு விஸ்வாசமாக இருப்பேன் என பிரிட்டிசாருக்கு கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கரையும், பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம்.அது எப்படி சரி, அவரை எப்படி வீரர் என கூறலாம்? இப்படி தான் அவர்கள் வரலாறை பல வகையில் திரித்து வருகிறார்கள். வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்தவரை வீரர் என எப்படி அழைப்பீர்கள்?.அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அது அவர்களின் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்னை பற்றி பேசுவோம். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை நடத்த முடியுமா? என கற்பனை செய்து பாருங்கள். அங்கு ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம் என்றார்.
`துரோக சிந்தனை உடைய கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது' - இபிஎஸ் மீது தினகரன் விமர்சனம்
`அதிமுகவில் நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, இன்றைய தினம் ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமன்றி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனும் தான் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் பேசுகையில் “அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமேதும் இல்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகள் பலவற்றை செய்தோம்.அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். ஆக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் நோக்கமும். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல. யாராக இருந்தாலும் சேர்த்துக்கொள்வோம். யாராக என்ற வார்த்தையில் சின்னம்மாவும் இருக்குறாங்க, டிடிவி தினகரனும் இருக்குறாங்க” என்று கூறியிருந்தார்.ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தக் கருத்துக்கு டிடிவி தினகரன் தற்போது எதிர்வினையாற்றியுள்ளார். அவர் பேசுகையில்,“தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று ட்வீட் செய்துள்ளார்.தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். (1/2)— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2022தனது இந்த ட்வீட்டின் மூலம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் இபிஎஸ்-க்கு எதிராகவும் உள்ள தனது நிலைப்பாட்டை டிடிவி தினகரன் வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
”சைக்கிள் கொடுப்பதை எப்படி இலவசம் என விமர்சிக்க முடியும்” - நிதியமைச்சர் தியாகராஜன்
மாணவர்களுக்கு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அரசு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து கேள்வி கேக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, சமுதாயம் நீதியோடு இருக்க, அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பது தான். பிறப்பால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட கூடாது, உழைப்பு மற்றும் கல்வி அடிப்படையில் அனைத்து மக்களும் முன்னேற முழு வாய்ப்பு அளிக்க வேண்டும், இதை தத்துவம் என்று கூட சொல்லலாம். அதில் முக்கிய பங்கு பெண்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமை கல்வியிலும், சொத்திலும், பொருளாதாரத்திலும் கிடைத்திட வேண்டும். மேலும் விலையில்லா பொருட்கள் வழங்குவதை உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும் இதெல்லாம் தவறு என்றும் செய்யக்கூடாது என்றும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த மாதிரி ஒரு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது.சமூக நீதிக்காக கல்வி முக்கியம், குறிப்பாக பெண்கள் கல்வி முக்கியம். அதற்கு எந்த வழியில் எல்லாம் ஊக்கம் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு அறிவோடு நிதியை ஒதுக்கி செயல்படுத்தக்கூடிய அரசு இது. இதெல்லாம் இலவசம் என்றும் தவறு என்றும் கூறினால் அதை விட சமுதாய துரோகம் இருப்பதாக என்னால் சிந்திக்க முடியவில்லை.தொகுதியில் இன்னும் பல பள்ளிகளுக்கு சைக்கிள் வரவில்லை. அதனை உடனடியாக வழங்குவதற்கு சென்னையில் துறை ரீதியாக ஆய்வு செய்து விரைவில் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி, மிக முக்கியமான திட்டம் அதிலும் பலவகையில் ஈடுபட்டு உள்ளவன் என்ற அடிப்படையில், நம் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது என்பது மிக்க மனநிறைவு அளிக்கிறது.இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை தேவையான நாள் வரை நீடிப்போம், எத்தனை நாள் வரை அது தேவையோ அதுவரை, எவ்வளவு நிதி வேண்டுமானாலும் சரி ஒதுக்கீடு செய்து அதனை நீடிப்போம் என்று தெரிவித்தார்.
”மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்து வருகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்துள்ள பேட்டியில், “கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. -ஆக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் பின்புலம் குறித்து ஆராயக் கூடிய பணி நடைபெற்று வருகிறது.அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களிலிருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது எந்த முடிவுக்கும் நாம் செல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றிய பின்புலம் முழுமையாக தெரிந்தப் பிறகு தான் முடிவு எடுக்கப்படும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டோம். இனி விரைந்து அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கும்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது, அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவர்.. ஆயுள் தண்டனையை குறைத்த நீதிமன்றம்!
குடிபோதையில் மனைவியை கொலைசெய்த நபருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை, 7ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள உள்ளூர் கிராமத்தில் அய்யாசாமி மற்றும் அவரது மனைவி மலர்விழி வசித்து வந்துள்ளனர். இவர்களின் இரண்டு மகன்களும் திருச்சி மற்றும் சென்னையிக் வேலை பார்த்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்காக இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அய்யாசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், அய்யாசாமிக்கும் மலர்வழிக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது அதில், ஆத்திரமடைந்த அய்யாசாமி, மலர்விழியை அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கியதால் மலர்விழி உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் மகிளா நீதிமன்றம் 2017ல் அய்யாசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அய்யாசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, மனுதாரர் தொடர்ச்சியாக குடிப்பழக்கம் உடையவர். மேலும் நேரில் கண்ட அவரது மகன்களின் சாட்சிகளின் அடிப்படையில், மனுதாரர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் மனுதாரர் இந்த சம்பவத்தின் போது, எவ்விதமான ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை. இதனால், கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் இச்ச சம்பவத்தை அய்யாச்சாமி செய்யவில்லை என்பது தெரியவருகின்றது.ஆகவே, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. முன்கூட்டிய விடுதலை இன்றி, 7 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
இளைஞர்கள் யோசிப்பதில் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் இப்பொழுது உள்ள உலகத்திற்கு வித்தியாசமாக தான் தேவைப்படுகிறது என வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி பல்கலைகழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு இன்றுடன் முடிவுரை எழுதப்படட்டும்: ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்றுடன் முடிவுரை எழுதப்படட்டும் என்று பாமக நிறுவர் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி உரிமம் பெறுவதை உரிமையாக கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
துப்பாக்கி உரிமம் பெறுவதை உரிமையாகக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசிப் பேருந்து மும்பையில் இயக்கம்
நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று துவக்கி வைத்தார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு: இபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் இன்று (ஆக.18) முறையீடு செய்யப்பட்டது.
எடப்பாடி - ஓபிஎஸ் பலப்பரீட்சையில் சிக்கிய அதிமுகவுக்கு இனி என்ன ஆகும்?
அதிமுகவில் ஜூன் - 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்றும், தற்காலிக அவைத்தலைவரால் பொதுக்குழுவை கூட்ட முடியாது எனவும் புதன்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த சிறு வெற்றி என்றும், ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு என்று கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்த தீர்ப்பு மூலம்
சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பில்கிஸ் பானு “பெண்ணா அல்லது முஸ்லிமா”? உள்ளத்தை உலுக்கும் திரிணாமூல் எம்பி மொய்த்ராவின் கேள்வி
கொல்கத்தா: பில்கிஸ் பானு ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்பதை இந்த நாடு சிறப்பாக முடிவு செய்துள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூன்றில் இரு பங்கு மூடியது மிகப்பெரிய அநீதி: அன்புமணி
விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றில் இரு பங்கு நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செப்.7-ல் ராகுல் வருகை: குமரியில் ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்குகிறார்
வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்த கொண்டு சென்றபோது மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வழக்கை தீவிரப்படுத்தினர். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், தங்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத்தொடர்பும் இல்லை என பள்ளி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சாந்தி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
’எங்களுடைய எண்ணம், செயல் எல்லாம் இணைப்பு மட்டுமே’ - ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு ப. சிதம்பரம் இரங்கல்
சென்னை: நெல்லை கண்ணன் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழையும், தேசியத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்நாள் முழுதும் ஓய்வில்லாமல் உழைத்துப் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற நண்பர் நெல்லை கண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுரானா குழுமத்தின் இயக்குனர் தினேஷ் சந்த் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
சென்னை: சுரானா குழுமத்தின் இயக்குனர் தினேஷ் சந்த் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கில் தினேஷ் சந்த், ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய பிரச்சனை! இது வேறயா? திடீரென உருமாற்றம் அடையும் குரங்கு அம்மை? WHO சொல்வது என்ன?
ஜெனீவா: கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸின் மரபணு மாற்றங்கள்தான் தொற்று வேகமாக பரவ காரணமாக உள்ளதா? எனும் கோணத்தில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார மையம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில்
சூடானில் வெள்ளம்: 77 பேர் பலி, 14,500 வீடுகள் சேதம்
சூடானில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14,500 வீடுகள் சேதமடைந்துள்ளன.
'அழைப்பு விடுத்த ஓபிஎஸ்; கண்டுகொள்ளாத இபிஎஸ்' மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு!
`இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுக்கூட்டத்துக்குப்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே புதிய நிர்வாகிகளை நியமித்தனர். ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இந்த நியமனங்கள் எதுவும் செல்லாததாகி இருக்கிறது.நேற்று இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம் அப்போது பேசிய அவர், `அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமேதும் இல்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகளை செய்தோம்.அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். ஆக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் நோக்கமும்” என்றார்.இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ள போதிலும்கூட, அவரது அழைப்பை இபிஎஸ் கண்டுகொள்ளவில்லை. தனது எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க இபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்
ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார்
‘பதவிவெறி பிடித்தாடும் துரோகக் கும்பல்’: ஈபிஎஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்
அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஓபிஎஸ்ஸின் கருத்தை வரவேற்றுள்ள டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
அதிமுகவினர் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: பொன். ராதா கிருஷ்ணன் கருத்து
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது அதிமுகவினர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
மே.வங்க பணி நியமன மோசடி: பாா்த்தா, அா்பிதாவுக்கு காவல் நீட்டிப்பு
மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, அவரது உதவியாளா் அா்பிதா முகா்ஜி ஆகியோருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி சரியாக பயன்படுத்த படவில்லை என்றும், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் அந்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1999 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இதில், 100 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. அங்குள்ள வீடுகள் பழுதடைந்துள்ளதால் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிதியை ஒதுக்கி உத்தரவிட்டார். ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் என மொத்தம் ரூ.20,00,000 லட்சம் வரை இதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்களான நிலையில் சில வீடுகளை தவிர மற்ற வீடுகளில் எந்த பணியையும் தொடங்காமல் ஒப்பந்ததாரர்கள் மெத்தனம் காட்டுவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வீடுகளை பழுது பார்க்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுகவினர் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: பொன். ராதா கிருஷ்ணன் கருத்து
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது அதிமுகவினர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
`அன்புச் சகோதரர் இபிஎஸ் உடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்”- ஓபிஎஸ் அழைப்பு!
`அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சில நிமிடங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தார்.அப்போது பேசிய அவர்,“தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கப்பட்டது அதிமுக. 30 ஆண்டுகாலம் அதிமுகவை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. அவர் தலைமையில் அதிமுக ஒன்றுபட்டபோது அதை வீழ்த்த யாராலும் இயலவில்லை. சொல்லப்போனால் அதிமுக ஒன்றுபட்டு ஜனநாயகரீதியில் தேர்தல்களை சந்தித்தபோது அதை வீழ்த்த இயலவில்லை என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அதன்படியே ஜெயலலிதா காட்டிய வழியில் நாங்களும் பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம். இடையில் ஏற்பட்ட பிரச்னையால் அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.வேற்றுமையை மனங்களில் இருந்து அகற்றி விட்டு அதிமுக ஒன்றுபட வேண்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும்.இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமில்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகளை செய்தோம்.அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகு தேர்தல் மூலம் ஈபிஎஸ்சும் நானும் அதிமுக நிர்வாகிகளாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். அப்படி தேர்வான அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்பதே விருப்பமும் நோக்கமும்” என்றார்.பேட்டியின் போது, `அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி’ என்று கூறி அவருக்கும் அவர் தரப்பு ஆதரவாளர்களும் அழைப்பு விடுத்தார் ஓ பன்னீர்செல்வம். மேலும் பேசிய அவர், “யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக்கொள்வோம். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணைக்கலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் சின்னம்மாவும், டிடிவி தினகரனும் இருக்கின்றனர்” என்றார்.தொடர்ந்து மதுரை சென்று சொந்த ஊரான பெரியகுளம் செல்கிறார் ஓபிஎஸ்.ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த இதே நேரத்தில், இபிஎஸ் தரப்பு நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்
ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார்
செப்.7-ல் ராகுல் வருகை: குமரியில் ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்குகிறார்
துப்பாக்கி உரிமம் பெறுவதை உரிமையாக கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
துப்பாக்கி உரிமம் பெறுவதை உரிமையாகக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
’எங்களுடைய எண்ணம், செயல் எல்லாம் இணைப்பு மட்டுமே’ - ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்தவர்கள் சசிகலா, டிடிவி தினகரன் உள்பட யாராக இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு: இபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் இன்று (ஆக.18) முறையீடு செய்யப்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூன்றில் இரு பங்கு மூடியது மிகப்பெரிய அநீதி: அன்புமணி
விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றில் இரு பங்கு நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி: ஆளுநர் வாழ்த்து
அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்திய நாட்டை ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுகின்ற பணியில் நம் நாடு அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப் பொற்காலத்தில், அறவாழ்விற்கான ஒரு வழியாக, முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
’இணைந்து செயல்பட வாய்ப்பில்லை; ஓபிஎஸ் அழைப்பை ஏற்க முடியாது’ - இபிஎஸ் திட்டவட்டம்
ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சிறந்த ஆலோசகர்களால் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: அமைச்சர் பிடிஆர் பேச்சு
நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் முதல் ஆளாக ஏற்போம் எனவும், சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை; பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி: வைகோ கண்டனம்
குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளதன்மூலம் பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை வங்கிக் கொள்ளை | அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
வங்கி கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேட்பாரற்று இருக்கும் தேசியக் கொடிகள்: கண்ணியமாக இறக்க நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?
75வது சுதந்திர தின நிறைவு தினத்தை முன்னிட்டு வீடுகள், கடைகள், தெருக்களில் ஏற்ப்பட்ட தேசியக் கொடிகள் தற்போது கேட்பாரற்று உள்ளது. இந்தக் கொடிகளை கண்ணியத்துடன் இறக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்
பிரபல தமிழ் அறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
“ஓபிஎஸ் கருத்தை சுயநலமற்றவர்கள் வரவேற்பர்” - டிடிவி தினகரன்
“ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் ஓபிஎஸ் கருத்தை வரவேற்கவே செய்வார்கள்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புகழஞ்சலி - நெல்லை கண்ணன் | ”ஆழமான கருத்துகளை கூட நகைச்சுவையோடு பேசக் கூடியவர்” - கே.எஸ்.அழகிரி
தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்
நீதிமன்றம் கட்சியை வழி நடத்த முடியாது: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கருத்து
நீதிமன்றம் கட்சியை வழிநடத்த முடியாது என, கோவில்பட்டியில் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ கூறினார்
நீதிமன்றம் கட்சியை வழி நடத்த முடியாது: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கருத்து
நீதிமன்றம் கட்சியை வழிநடத்த முடியாது என, கோவில்பட்டியில் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ கூறினார்
வரத்து அதிகம் விலை குறைவு – கொழி சாளை மீன்களை வாங்கிச் சென்ற கேரள வியாபாரிகள்
குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களில் மலை போல் குவிந்த 'கொழி சாளை' மீன்கள் 1 கிலோ கொழி சாளை மீன் ரூ 20-க்கு விலை போன நிலையில் மீன்களை கேரளா வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்இந்நிலையில், சுமார் 7-நாட்கள் முதல் 15-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் இரண்டு மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த வாரம் முதல் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனர் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களுக்கு வந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் 'கொழி சாளை' மீன்கள் பிடிப்பட்டிருந்தனஇந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுகங்களில் மலை போல் குவித்து வைத்திருந்த நிலையில், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இந்த மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் ஆர்வம் காட்டி குவிந்தனர்ஒரு கிலோ கொழி சாளை மீன் சாதாரணமாக 50-ரூ முதல் 60-ரூ வரை விலை போன நிலையில் இன்று ரூ 20-க்கு விலை போனது.
`அன்புச் சகோதரர் இபிஎஸ் உடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்”- ஓபிஎஸ் அழைப்பு!
`அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சில நிமிடங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தார்.அப்போது பேசிய அவர்,“தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கப்பட்டது அதிமுக. 30 ஆண்டுகாலம் அதிமுகவை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. அவர் தலைமையில் அதிமுக ஒன்றுபட்டபோது அதை வீழ்த்த யாராலும் இயலவில்லை. சொல்லப்போனால் அதிமுக ஒன்றுபட்டு ஜனநாயகரீதியில் தேர்தல்களை சந்தித்தபோது அதை வீழ்த்த இயலவில்லை என்பது பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அதன்படியே ஜெயலலிதா காட்டிய வழியில் நாங்களும் பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம். இடையில் ஏற்பட்ட பிரச்னையால் அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.வேற்றுமையை மனங்களில் இருந்து அகற்றி விட்டு அதிமுக ஒன்றுபட வேண்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும்.இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமில்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகளை செய்தோம்.அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். உறுப்பினர் சேர்க்கைக்குப் பிறகு தேர்தல் மூலம் ஈபிஎஸ்சும் நானும் அதிமுக நிர்வாகிகளாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். அப்படி தேர்வான அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்பதே விருப்பமும் நோக்கமும்” என்றார்.பேட்டியின் போது, `அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி’ என்று கூறி அவருக்கும் அவர் தரப்பு ஆதரவாளர்களும் அழைப்பு விடுத்தார் ஓ பன்னீர்செல்வம். மேலும் பேசிய அவர், “யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக்கொள்வோம். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.கட்சிக்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் இணைக்கலாம். யாராக இருந்தாலும் என்ற வார்த்தையில் சின்னம்மாவும், டிடிவி தினகரனும் இருக்கின்றனர்” என்றார்.தொடர்ந்து மதுரை சென்று சொந்த ஊரான பெரியகுளம் செல்கிறார் ஓபிஎஸ்.ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த இதே நேரத்தில், இபிஎஸ் தரப்பு நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
'அழைப்பு விடுத்த ஓபிஎஸ்; கண்டுகொள்ளாத இபிஎஸ்' மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு!
`இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுக்கூட்டத்துக்குப்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே புதிய நிர்வாகிகளை நியமித்தனர். ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இந்த நியமனங்கள் எதுவும் செல்லாததாகி இருக்கிறது.நேற்று இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம் அப்போது பேசிய அவர், `அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமேதும் இல்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகளை செய்தோம்.அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். ஆக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் நோக்கமும்” என்றார்.இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ள போதிலும்கூட, அவரது அழைப்பை இபிஎஸ் கண்டுகொள்ளவில்லை. தனது எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க இபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
`ஓபிஎஸ் உழைக்கமாட்டார்... ஆனா அவருக்கு பதவி மட்டும் வேணும்!’- ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி
`அதிமுகவில் நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, எடப்பாடி பழனிச்சாமி சில நிமிடங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், `இணைந்து செயல்பட ஓபிஎஸ் அடிக்கடி அழைப்பு விடுக்கிறார். அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் பதவி வேண்டும்... ஆனால்பதவிக்கேற்றபடி உழைப்பு போட மாட்டார் அவர்! யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை’ என்றார்.செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர்,“சுமார் 50 ஆண்டுகாலமாக அதிமுக-வை எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா வழிநடத்தியுள்ளனர். இப்போது இந்த இயக்கத்தை சிலர் தன்வசம் கொண்டு செல்ல நினைக்கின்றனர். அதை தடுக்க நாங்கள் நினைக்கிறோம். அதனால்தான் சில பிரச்னைகள் ஏற்படுகிறது.அதிமுகவில் சட்டவிதிகளை இயற்றவோ, மாற்றவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஏனெனில் பொதுக்குழு உறுப்பினர்களால்தான் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாகின. இதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களும் அதிமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால் இந்த வழிமுறை உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களால் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஆக 2,663 அதிமுகவில் சட்டவிதிகளை இயற்றவோ, மாற்றவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதற்காகவே பொதுக்குழு கூட்டப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தான் பொதுக்குழுவுக்கு வரவில்லை. தொண்டர்கள் ஆதரவை பெற்று பொதுக்குழுவுக்கு வந்து, எந்த விஷயத்தையும் அவர் செய்யட்டும். பொதுக்குழுவுக்கு வருவதை தவிர்த்துவிட்டு, பின் அவரேவும் நீதிமன்றத்தை நாடுவது எப்படி சரி?கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள அவரேவும், அநாகரிகமாக நடந்து கொண்டால், பின் அவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்? அன்றைய தினம் பொதுக்குழுவை நிராகரித்துவிட்டு, அவரும் அவரது ஆதரவாளர்களும் போய் அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து உதைத்தனர். சொல்லப்போனால் அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் திருடிச் சென்றனர். ரவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தையும் எங்கள் தரப்பினரையும் ஓபிஎஸ் தாக்கினார். பொதுக்குழுவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தபோது நிராகரித்த ஓபிஎஸ், பின் ஏன் நீதிமன்றங்களையே நாடிச் செல்கிறார்?அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே அதிமுக-வின் இன்றைய நிலைக்கு காரணம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இரண்டு அணிகளாக பிரிந்து, பின்னர் இரு அணிகளும் இணைந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் - இணை ஒருங்கிணைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்; பொது உறுப்பினர்களால் இல்லை. ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்” என்றார்.தொடர்ந்து இணைந்து செயல்பட ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்திருந்தார். அது குறித்து பேசிய அவர், “சசிகலாவை எதிர்த்து தானே ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தார்? அவர்களையே அழைப்பது ஏன்? ஓபிஎஸ்சிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை.ஓபிஎஸ் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்? ஒற்றைத் தலைமையே அதிமுக தொண்டர்கள் விருப்பம். ஒற்றைத் தலைமை வேண்டுமென அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தெரிவித்தனர்” என்றார்.
தேனி: அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய கிராம மக்கள்
தேனி வாழையாத்துபட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்விச்சீரை கிராம மக்கள் வழங்கினர்.தேனி அருகே உள்ள பூதிபுரம் பேரூராட்சி வாழையாத்துபட்டி கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக அந்த பகுதியைச் சேர்ந்த பூதிப்புரம் பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பாக அப்பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கப்பட்டது.இந்த கல்விச் சீரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான டிவி, நாற்காலி, டேபிள், பீரோ உள்ளிட்ட பள்ளிக்குத் தேவை பெருட்களை வழங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். அரசு ஆரம்ப பள்ளியாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியை அரசு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம் - இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு
அதிமுக தலைமை கழக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஜூலை 11ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே வன்முறை ஏற்பட்ட நிலையில், கட்சி அலுவலகம் வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான உத்தரவை வழங்கி இருப்பதாகவும் ஆதலால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து முடிக்கும் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவுன் தான் அதிமுக தலைமை அலுவல்கத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.ஆனால், வழக்கை தீர விசாரித்ததற்குப் பிறகு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் என கூறிய தலைமை நீதிபதி இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு வழக்கின் எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிப்பதாகக் கூறி வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
வற்றிப்போனது `தமிழ்க்கடல்’: உடல்நலக்குறைவால் காலமானார் நெல்லை கண்ணன்
தமிழறிஞர், `தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.77 வயதாகும் அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட சில உடல்நல சிக்கல்களால் கடந்த சில தினங்களாக பேசவே முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். மிகச் சிறந்த தமிழ் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லைக் கண்ணன், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த அயராது பணியாற்றியவர். தனது பேச்சாற்றலுக்காகவும், தமிழ் மீதான பற்றுக்காகவும் வாழும் நாள்களிலேயே அறிஞர்கள் பலரால் அவர் தமிழ்க்கடல் என்று போற்றப்பட்டவர்.நெல்லை கண்ணன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து `புதிய தலைமுறை’க்கு தெரிவித்த இரங்கல் செய்தியில், “சங்க இலக்கியம் முதல் எங்கள் இலக்கியம் வரை எல்லா இலக்கியங்களையும் நெஞ்சில் எழுதி தனது நா வன்மையால் சமகால சமூகத்துக்கு தமிழ் உணர்வை ஊட்டிக்கொண்டே இருந்தவர் அவர். நம் சம காலத்தின் பெரிய தமிழ்க்கடல், வற்றிவிட்டதென்றே இதை நினைக்கிறேன். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் கூட, அவருடைய மொழியை - அவருடைய உரையை- அவருடைய சொல் வன்மையை மறுத்ததோ வெறுத்ததோ இல்லை. அவரது இழப்பை தமிழ்ச்சமூகம் எப்படி ஈடு செய்யப்போகிறது என்று தெரியவில்லை. அவருடைய மொழியும் தமிழும் புகழும் எப்போதும் வாழும். நெல்லை கண்ணனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பின்தொடர்வோருக்கும் என் இரங்கல்கள்”என்றார்.குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லைக் கண்ணன். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றியிற்றியவர்.
'அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம், நாம் வேடிக்கை பார்ப்போம்' - சீமான்
அதிமுகவில் நடப்பது நகைச்சுவை நாடகம். அதனை நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சினருக்கும், ம.தி.மு.க-வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அவரது ஆதரவாளர்கள், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார்கள்.அந்த வழக்கில் சீமான் உள்ளிட்டோர் மீண்டும் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே போல அந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் தங்களை தாக்கியதாக ம.தி.மு.க-வினர் கொடுத்த வழக்கில் வரும் 25 ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டதுதான். காங்கிரஸ் கதர் ஆடை கட்டிய பாஜக. அதே போல பாஜக காவி ஆடை கட்டிய காங்கிரஸ்.சுதந்திர கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். அவரையும், சாகும் வரை தங்களுக்கு விஸ்வாசமாக இருப்பேன் என பிரிட்டிசாருக்கு கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கரையும், பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம்.அது எப்படி சரி, அவரை எப்படி வீரர் என கூறலாம்? இப்படி தான் அவர்கள் வரலாறை பல வகையில் திரித்து வருகிறார்கள். வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்தவரை வீரர் என எப்படி அழைப்பீர்கள்?.அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அது அவர்களின் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்னை பற்றி பேசுவோம். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை நடத்த முடியுமா? என கற்பனை செய்து பாருங்கள். அங்கு ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம் என்றார்.
`துரோக சிந்தனை உடைய கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது' - இபிஎஸ் மீது தினகரன் விமர்சனம்
`அதிமுகவில் நடந்த பொதுக்குழு செல்லாது’ என நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து, இன்றைய தினம் ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமன்றி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனும் தான் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் பேசுகையில் “அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இப்போதும், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, இரட்டை தலைமைக்கு எங்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கிறோம். அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதில் தயக்கமேதும் இல்லை. ஏனெனில் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பான பணிகள் பலவற்றை செய்தோம்.அதிமுகவில் `இரட்டைத் தலைமை’ என்பதெல்லாம் எனக்கு பிரச்னையில்லை. நாங்கள் கூட்டுத் தலைமையாக செயல்படுவோம். ஆக அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளோம். மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் நோக்கமும். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல. யாராக இருந்தாலும் சேர்த்துக்கொள்வோம். யாராக என்ற வார்த்தையில் சின்னம்மாவும் இருக்குறாங்க, டிடிவி தினகரனும் இருக்குறாங்க” என்று கூறியிருந்தார்.ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தக் கருத்துக்கு டிடிவி தினகரன் தற்போது எதிர்வினையாற்றியுள்ளார். அவர் பேசுகையில்,“தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று ட்வீட் செய்துள்ளார்.தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். (1/2)— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 18, 2022தனது இந்த ட்வீட்டின் மூலம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் இபிஎஸ்-க்கு எதிராகவும் உள்ள தனது நிலைப்பாட்டை டிடிவி தினகரன் வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
”சைக்கிள் கொடுப்பதை எப்படி இலவசம் என விமர்சிக்க முடியும்” - நிதியமைச்சர் தியாகராஜன்
மாணவர்களுக்கு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அரசு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து கேள்வி கேக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, சமுதாயம் நீதியோடு இருக்க, அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பது தான். பிறப்பால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட கூடாது, உழைப்பு மற்றும் கல்வி அடிப்படையில் அனைத்து மக்களும் முன்னேற முழு வாய்ப்பு அளிக்க வேண்டும், இதை தத்துவம் என்று கூட சொல்லலாம். அதில் முக்கிய பங்கு பெண்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமை கல்வியிலும், சொத்திலும், பொருளாதாரத்திலும் கிடைத்திட வேண்டும். மேலும் விலையில்லா பொருட்கள் வழங்குவதை உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும் இதெல்லாம் தவறு என்றும் செய்யக்கூடாது என்றும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த மாதிரி ஒரு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது.சமூக நீதிக்காக கல்வி முக்கியம், குறிப்பாக பெண்கள் கல்வி முக்கியம். அதற்கு எந்த வழியில் எல்லாம் ஊக்கம் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு அறிவோடு நிதியை ஒதுக்கி செயல்படுத்தக்கூடிய அரசு இது. இதெல்லாம் இலவசம் என்றும் தவறு என்றும் கூறினால் அதை விட சமுதாய துரோகம் இருப்பதாக என்னால் சிந்திக்க முடியவில்லை.தொகுதியில் இன்னும் பல பள்ளிகளுக்கு சைக்கிள் வரவில்லை. அதனை உடனடியாக வழங்குவதற்கு சென்னையில் துறை ரீதியாக ஆய்வு செய்து விரைவில் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி, மிக முக்கியமான திட்டம் அதிலும் பலவகையில் ஈடுபட்டு உள்ளவன் என்ற அடிப்படையில், நம் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது என்பது மிக்க மனநிறைவு அளிக்கிறது.இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை தேவையான நாள் வரை நீடிப்போம், எத்தனை நாள் வரை அது தேவையோ அதுவரை, எவ்வளவு நிதி வேண்டுமானாலும் சரி ஒதுக்கீடு செய்து அதனை நீடிப்போம் என்று தெரிவித்தார்.
”மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்து வருகிறோம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்துள்ள பேட்டியில், “கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. -ஆக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் பின்புலம் குறித்து ஆராயக் கூடிய பணி நடைபெற்று வருகிறது.அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால், ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களிலிருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது எந்த முடிவுக்கும் நாம் செல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது. அவரைப் பற்றிய பின்புலம் முழுமையாக தெரிந்தப் பிறகு தான் முடிவு எடுக்கப்படும்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டோம். இனி விரைந்து அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கும்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது, அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
’தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மரணம் - முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
உடல்நல குறைவுகாரணமாக இலக்கியவாதி, தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன் இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78.நெல்லை டவுன்அம்மன் சன்னதி தெருவில் வசித்து வந்தவர் தமிழ் இலக்கியவாதியும் பிரபல பேச்சாளரும்பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன். இவருக்கு வயது 78. தமிழ்நாட்டின்முக்கிய தலைவர்கள், ஆளுமைகள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கி பழகி நட்பாய் இருந்தவர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாக இருந்தவர்.தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜிகே மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி தங்க பாலு ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தவர். 1992 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அதிமுகவில் நீண்ட நாட்களாக பயணிக்க முடியவில்லை. ஒரு ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டவர். 78 வயதானாலும் இவரது பேச்சாற்றலும் நினைவாற்றலும் இலக்கிய நயமும் சிறப்பாக இருக்கும். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதி, காதல் செய்யாதவர்கள் கல்லறியுங்கள், திக்கணைத்தும் சடைவீசி, பழம் பாடல் புதுக்கவிதை உள்ளிட்ட புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவை இவரால் உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலின்:நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘’தமிழகத்தின் முதுபெரும்தலைவர்களுடன் நெருங்கி பழகிய நெல்லை கண்ணன் மறைவை அறிந்து வருத்தமுற்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.ஜி.கே.வாசன் எம்பிநெல்லைக் கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் சிறந்த அடைந்தேன். அவர் பேச்சாளராகவும் , பட்டிமன்ற தலைவராகவும் , இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர். நெல்லை கண்ணன் அவர்கள் தன் சிறுவயது முதல் பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் . சிறந்த தேசியவாதி. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் ஜி.கே.வாசன் எம்பி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.பாரிவேந்தர் எம்பிஅவருக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தாமிரபரணி பாயும் திருநெல்வேலியில் பிறந்த தமிழ்நதி நெல்லைக் கண்ணன். தாவிக் குதித்து வரும் தாமிரபரணி வெள்ளம்போல் இவரது நாவிலும் தமிழாறு வெள்ளமாய்ப் பெருகி கேட்போர் உள்ளங்களை எல்லாம் நனைத்ததுண்டு. “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற வள்ளுவன் குறளுக்கு உதாரணமாய் வாழ்ந்துக் காட்டிய பெருமகன் அவர்! கர்மவீரர் காமராசர் பாதம் தொடர்ந்து நடந்த அவர். கவியரசர் கண்ணதாசனின் கீதத்தின் கீர்த்தியை நாதமாய் முழங்கியவர். பேசாத இலக்கிய அரங்கம் இல்லை; இவர் புகழ் மணம். வீசாத இடம் தமிழகத்தில் இல்லை என்று வாழ்ந்த அந்த இலக்கியச் சிங்கத்தின் கர்ஜனை. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அரங்கிலும் இரண்டு முறை எதிரொலித்ததை எண்ணிப் பார்க்கிறேன். மேடையிலே வீசிய அந்த மெல்லிய பூங்காற்றின் இனிய ரீங்காரம் இன்று அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநெல்லை கண்ணன் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில்இரங்கல் தெரிவித்து கோள்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு செயலாளர் இரா.முத்தரசன் அக்கட்சி சார்பாக இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், ‘’இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் களத்தில் கர்மவீரர் காமாராஜரின் தலைமை ஏற்று, சுழன்று, சுழன்று பரப்புரை செய்த முன்னணி தலைவர். இவரது கலாய்ப்பு விமர்சனத்துக்கு உள்ளானோரையும் ரசிக்கச் செய்யும் ஒலி அலைக்கற்றில் நெல்லை கண்ணன் என்றென்றும் வாழ்ந்திருப்பார். நெல்லை கண்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது மகன்களுக்கும் இலக்கிய உலக நண்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆர்டிஓ வீட்டை சோதனை செய்யச் சென்ற பொருளாதார குற்றத் தடுப்பு நடவடிக்கைக் குழுவினருக்குத்தான் பெரிய சோதனையாக இருந்தது.
விபத்தில் காயம்பட்டு.. படுத்தப்படுக்கையான மாணவி.. சிகிச்சைக்கு உடனே உதவி செய்யுங்கள்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி மூலம் குடும்பத்தை உயர்த்த நினைத்த மாணவி தற்போது சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்பட்டு வருகிறார். ரம்யா எனும் 17 வயது மாணவி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பயின்று வந்துள்ளார். இவரது கனவு
தில்லியின் பள்ளி மாடலை பின்பற்ற விரும்பும் பிகார் அமைச்சர்: கேஜரிவால் வரவேற்பு
தில்லியின் பள்ளி மாதிரியைப் பின்பற்ற விரும்பும் பிகாரின் கல்வி அமைச்சர் சந்திரசேகருக்கு வரவேற்பு அளித்துள்ளார் முதல்வர் கேஜரிவால்.
ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை வழக்கு: 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்
ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
`முதல்வர் வழங்கிய எந்த உதவியுமே இப்போவரை கிடைக்கல'- நரிக்குறவ சமூக மக்கள் குற்றச்சாட்டு
தமிழக முதலமைச்சர் தங்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை தங்களுக்கு வழங்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் இப்பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு உதவிகள் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்திப் பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100 நபர்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண்ணொருவர் உள்பட சிலர் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை சாப்பிடுவதற்கு சென்றிருந்தனர். அங்கு அவர்களிடம் `முதல் பந்தியில் நீங்கள் அமரக்கூடாது’ என்றும், `சாப்பாடு இல்லை’ எனக்கூறி அனுப்பிவிட்டதாகவும்அம்மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அவர்களில் ஒருவரானஅஸ்வினி என்ற நரிக்குறவ பெண், இந்த குற்றச்சாட்டை சமூகவலைதளங்களில் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ, வைரலானது.வீடியோ வைரலானதை தொடர்ந்து, அப்பெண் மற்றும் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட அச்சமூகத்தை சேர்ந்த பிற மக்களின் இருப்பிடம் அறியப்பட்டது. அப்படியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் வசிக்கும்அஸ்வினி மற்றும் பிற நரிக்குறவ சமுதாய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு அரசு முடிவுசெய்தது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூஞ்சேரி பகுதிக்கு நேரில் சென்றிருந்தார். நரிக்குறவர் மற்றும் இருளர் மக்கள் என 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.இந்நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி எதையும் வங்கியினர் வழங்கவில்லை என்றும் தாங்கள் பட்டா, ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களை அளித்தும் கூட மேலும் சில ஆதாரங்கள் தேவை என அதிகாரிகள் கேட்பதாகவும் அம்மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர்கள், “கடற்கரை கோயில் அருகே நாங்கள் தொழில் செய்வதற்காக கடைகள் கேட்டிருந்தோம். அதையும் அதிகாரிகள் வழங்கவில்லை. குடியிருப்பு பகுதியில் கழிவறை போன்ற வசதிகள் இன்னும் செய்து தரவில்லை” என்றுகூறியுள்ளனர்.இதுதொடர்பாக முன்பு நடந்த நிகழ்வின் போது தங்களின் பிரச்னைகளை சரி செய்து தரக்கோரிய அஸ்வினி, தன் சமூகமக்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் நேற்றைய தினம் மனு அளித்துள்ளனர்.
பாஜக இதை செய்தால் இந்தியாவிற்கு பாகிஸ்தானின் நிலை வரும்: அசோக் கெலாட்
ஆளும் பாஜக இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற நினைத்தால் இந்தியாவிற்கு பாகிஸ்தானின் நிலை தான் உருவாகும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மனக்கசப்பை தூக்கி எறிவோம்; அதிமுக ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம்: ஓபிஎஸ் அழைப்பு
கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் செய்த தியாகங்களை சிந்தித்து அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஏன் பாலிவுட் படங்கள் தோல்வியடைகின்றன?: நடிகர் மாதவன் பதில்
பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து வயோதிகத்தால் ஒதுங்கியிருந்த நெல்லை கண்ணன் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் என்னும் முறையில் தமிழகம் முழுவதும் பயணித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார். மேலும், காமராஜரின் மீது தீவிர பற்றுக்கொண்ட இவர், அவரது புகழை மேடைதோறும் பேசிவந்தார். வயோதிகத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி காணப்பட்டார். இந்த நிலையில் இன்று, நெல்லையில் உள்ள அவரது இல்லத்திலேயே நெல்லை கண்ணன் உயிரிழந்தார். தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன். ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
கொப்பளம், அடுத்து வெள்ளை நிற சீல்.. கடைசியில் \எச்ஐவி\ பாதிப்பு! மங்கி பாக்ஸ் நோயாளிக்கு பகீர்
பெர்லின்: ஜெர்மனி நாட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மங்கி பாக்ஸ் பாதிப்பு உலகெங்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவுக்குள் மட்டுமே பரவிய மங்கி பாக்ஸ் எப்படி இந்தளவுக்கு வேகமாக உலகெங்கும் பரவியது என்பது ஆய்வாளர்களுக்கே தெரியவில்லை. இந்தியாவிலும்
ஓடும் ரயிலில் 12 சிறுவர்கள் மீட்பு; கடத்திச் சென்ற 7 பேர் கைது
பிகார் மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 12 சிறுவர்களை ரயில்வே காவலர்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிப்பது அவமான செயல்: சீமான்
பிறருக்கு வழங்கவேண்டியே விவசாயிளை வறுமைக்கு உள்ளாக்கி அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிப்பதுபோல அவமானமான செயல் வேறு எதுவுமில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
குஜராத் கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு குற்றவாளிகள் விடுதலை- வைகோ கடும் கொந்தளிப்பு
சென்னை : 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளின் போது இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த அம்மாநில பாஜக அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி என்றும், உடனே இந்த உத்தரவை திரும்பபெற வேண்டும்